Friday, June 25, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 8

கடந்த அத்யாயத்தில் பாபா வியாழக்கிழமைகளில் பிரச்சினைல  உள்ள  தன் பக்தர்களை எனக்கு எண்டார்ஸ் செய்துவந்தார் என்றும் கடைசியில் தன் பக்தரான எங்க ஊரு எம்.எல்.ஏ சி.கே பாபுவுக்கு உதவும்படி  தொடர்ந்து என்னில் எண்ண அலைகளை தோற்றுவித்தார் என்றும் சொல்லியிருந்தேன்.

இந்த சூழல் 2003ல ஏற்படுதுன்னா 1997லயே அவரோட உருவத்தை தன் படத்துல நிழலாட வைச்சாருன்னும் சொல்லியிருந்தேன். எம்.எல்.ஏவுக்கு என்ன பிரச்சினை? ஒரு பொறியியல் கல்லூரி மாணவரோட கொலைல இவரை முத குற்றவாளியா சேர்த்திருந்தாய்ங்க. அந்த மாணவரோ தாய் தெலுங்கு தேசம் மகளிரணி தலைவி. இன்னம் கேட்கனுமா? கையோட கையா எம்.எல்.ஏ வை  கைது பண்ணி சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்னு கடப்பா மத்திய சிறைக்கு கொண்டு போயிட்டாய்ங்க.

கொலையான இளைஞரோட பிணத்தை ஆளுங்கட்சிக்காரங்க ஒரு வேன்ல வச்சு மூணு மந்திரிங்க புடை சூழ தெருத்தெருவா ஊர்வலமா கொண்டு போனாய்ங்க.

இந்த பதிவுல வழக்குக்குள்ள போக நான் விரும்பலை. இந்த வழக்குக்கு மூலமே இவரு காங்கிரஸ்காரரா இருந்து  மூணு தரம் தொடர்ந்து எம்.எல்.ஏ ஆனவருங்கறதுதான். இவரு இருக்கிற வரை தொகுதில  தெ.தேசம் பேர் சொல்லமுடியாதுங்கற ஆளும்கட்சியோட பயம்தான் இந்த வழக்குக்கே மூலம். ஆனால் எம்.எல்.ஏ தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை சாதாரண கிரிமினல் வழக்கா நடத்திக்கிட்டிருந்தாரு. காங்கிரஸ் கட்சி உடனடியா இவரை கட்சிலருந்து நீக்கிருச்சு.

இந்த மாதிரி சூழல்ல ஒரு சாதாரண குடிமகனுக்கு கிடைக்க கூடிய உரிமைகள், பாதுகாப்பு கூட அவருக்கு கிடைக்கலை. இதையெல்லாம் லாயர் பாயிண்ட் அவுட்
பண்றாப்லயே இல்லை. உடனே நான் எனக்கு தோணின பாயிண்ட்ஸையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணி லாயருக்கு கூரியர் மூலமா லெட்டர் அனுப்பினேன். அவரு அதை ரெஃப்யூஸ் பண்ணிட்டாரு. என்னங்கடா இது இம்சைன்னு ஆர்டினரி போஸ்ட்ல அனுப்பிட்டு கடப்பா ஜெயிலுக்கு ஒரு லெட்டர் போட்டு லாயருக்கு போட்ட  கடித விவரத்தை தெரிவிச்சுட்டன். என் கடிதத்துல நான் தெரிவிச்சிருந்த சில பல யோசனைகள் உடனே அமல்படுத்தப்பட்டதுதான் அதிசயம்.

எங்க எம்.எல்.ஏ சிறைல இருந்த நேரம் கடப்பா சிறைல கட்டப்பட்டுக்கிட்டிருந்த ஷீரடி  பாபா கோவிலுக்கு உடலுழைப்பை நல்கி வந்தது உபரி தகவல்.

கண்ணை மூடி கண்ணை திறக்கறதுக்குள்ள தேர்தல் (2004)வந்துருச்சி. ( இது ஆன்மீக தொடர்ங்கறதால அரசியலுக்குள்ள ஆழமா போகவேணாம்ணே) தெலுங்கு தேச அரசை வீட்டுக்கு அனுப்புங்கன்னு 10 ஆயிரம் பாம்லெட் போட்டு  நானே டிஸ்ட் ரிப்யூட் பண்ணேன்.  எங்க எம்.எல்.ஏ வாழ்க்கைல முதல் முறையா சொற்ப வாக்குகள் வித்யாசத்துல வெற்றி வாய்ப்பை இழந்தாரு. ஆனால் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டி இடங்களை பிடிச்சு ஆட்சிக்கு வந்தது. ஒய்.எஸ்.ஆர் முதல்வரானாரு. ஆறுமாசத்துல நகராட்சி தேர்தல் வந்தது . எம்.எல்.ஏ கட்சியோட தொகுதி  பொறுப்பாளரா  கோதாவுல இறங்கினாரு. எதிர்கட்சிக்கு சிங்கிள் டிஜிட். 2009 தேர்தல்ல
நாலாவது முறையா ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆனாரு. அவரு நாலாவது முறையா எம்.எல்.ஏ ஆன அக்கேஷனை வச்சுத்தான் ஷீர்டி பாபா சத நாமாவளி பாக்கெட் சைஸ் புக்ஸ் ஒரு லட்சம் பிரதி அச்சிட்டுக்கிட்டிருக்கேன்.


இந்த 6 வருசத்துல பாபாவுக்கும் நமக்கும் இடையில என்ன நடந்ததுன்னு அடுத்த பதிவுல பார்க்கலாம்.