Monday, October 31, 2011

நாம அல்லாருமே தற்கொலை விரும்பிகள் தான்


நாம அல்லாருமே தற்கொலைய விரும்பறவுகதான்.என்ன பலருக்கு தைரியம் போதாம சுத்தி வளைச்சு -தவணையில செய்துக்கறோம். உஜிலா தேவில குருஜி தற்கொலை செய்துக்கறவுகளை காச்சு காச்சுன்னு காச்சியிருந்தாரு.

ஒரு ஜாதகர்.அவருக்கு ஜாதகத்துல சனி சரியில்லை. கால் வலி. ஒரு குருஜியை போய் சந்திச்சாரு. அதைபோக்க சாந்தி பண்ணனும் அதுக்கு ரூ.42 ஆயிரம் செலவாகும்னு அந்த குருஜி சொன்னாராம் ( நான் இந்த குருஜியை சொல்லலை) அந்தாளு ரூ.42 ஆயிரத்தை சாந்திக்கு கொடுத்திருந்தா அது தற்கொலை இல்லியா? அதை வாங்கிக்கிட்ட குருஜியின் செயல் கொலைக்கு கம்மியானதா?

இந்த மாதிரி அனேக வில்லங்க விஷயங்களை ஆடியோவுல சொல்லியிருக்கேன். ஹெட் ஃபோன்ல கேளுங்க - இல்லாட்டி தனிமையில கேளுங்க. பதிவை கேட்க வழக்கம் போல கீழ்காணும் ப்ளேயரின் ப்ளே பட்டனை அழுத்துங்க.

Sunday, October 30, 2011

ராதாவின் (40) ராவுகள்

ராதா இப்படி ஒரு வில்லங்கத்தை கொண்டு வந்து தன் தலையில் சுமத்துவாள் என்று எதிர்ப்பார்க்காத ராம நாதனுக்கு அவளுக்காக தான் போலீஸ் ஸ்டேஷன் படியேறப்போவதும் அங்கு திரவுபதி வஸ்த்ராபரணம் கணக்காய் அவமானம் நடக்கப்போவதும் தெரியாது போனது. எல்லாவற்றுக்கும் மேல் மனைவியின் மரணத்துக்கு பிறகு இத்தனை வருடம் புதைத்து வைத்திருந்த காமப்பேய் ஒரே இரவில் தலைவிரித்தாடப்போகிறது என்று சத்தியமாய் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் நேரம் கெட்ட நேரத்தில் வந்த ராதாவை தன் அறையில் அனுமதித்திருக்கவே மாட்டார்.

ராம நாதன் ஒரு தனியார் சாக்லெட் கம்பெனியில் அக்கவுண்டன்டாக இருந்து ரிடையர் ஆனவர். மகளுக்கு வந்த வரன்கள் அவளுக்கு பொருந்துகிறதா என்று பார்க்க கற்றுக்கொண்ட ஜோசியம் ஃபெவிகாலாய் ஒட்டிக்கொள்ள மனைவியின் மறைவு , மகளின் பிரிவுக்கு பிறகு ஜோசியராகிவிட்டார்.
பிறப்பு கொடுத்த தகுதியோடு காலப்போக்கில் கை வந்த தொழில் நுணுக்கங்களும் அவரை வெற்றி கரமான ஜோதிடராக்கிவிட்டன.


ராதா இவருக்கு ராஜ போஷகர் மாதிரி. இவர் சொந்த ஊர் விட்டு சென்னையில் வந்து தொழில் ஆரம்பித்து ஈ ஓட்டிக்கொண்டிருந்த சமயம் முதல் முதலாய் வந்து ஜாதகம் பார்த்துக்கொண்டு போனது ராதா தான் . வாரத்துக்கு நாலு பேரையாவது அழைத்துக்கொண்டு வந்து விடுவாள். இப்படி வந்தவர்கள் மூலம் கேள்விப்பட்டு வந்தவர்களால் ராம நாதனின் தொழில் செழித்தது.

ராதா கணவனை இழந்தவள் . இரண்டு மகன்கள், ஒரு மகள். மூத்தவன் திருமணத்துக்கு பின் வைப்பாட்டி ஒருத்தியை சேர்த்துக்கொண்டு, வைப்பாட்டியை பெண்டாட்டி கணக்காய், பெண்டாட்டியை வைப்பாட்டி கணக்காய் வைத்துக்கொண்டு ஆட்டம் போட நொந்து கிடந்த ராதா சின்னவனாவது உருப்படுவானா, மகளுக்கு ஒரு நல்ல வழி கிடைக்காதா என்றுதான் ராம நாதனிடம் வந்து பலன் கேட்டுப்போவது வழக்கம்.

வீடென்னவோ சொந்த வீடு, கணவர் எஸ்.ஐ ஆக இருந்தவர் . பென்ஷன் தொகையயும், தெரிந்தவர்களுக்கு கடனாய் கொடுத்த தொகைகளின் பேரில் வரும் வட்டியையும் வைத்து வீட்டிலிருந்தே ஆள் அம்பு வைத்து வித விதமான வடாம், வற்றல், ரசம் பொடி ,சாம்பார் பொடி என்று தயாரித்து கடைகளுக்கு போட்டபடி காலம் தள்ளி வந்தாள். இந்நிலையில் தான் அகாலமாய் ராம நாதனை தேடி அவரது ரூமுக்கு வந்தாள்

ராதா. ராம நாதனின் ஒரே மகளுக்கு திருமணமான இரண்டாம் மாதமே அவர் மனைவி எந்த தேர்தலிலும் நிற்காமலே வைகுண்ட பதவி பெற்றுவிட்டாள். ஃபாரின் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு ஆண்டுக்கு ஒரு முறை லீவுக்கு குழந்தைகளோடு வந்து போகும் மகள்,மருமகனை தவிர்த்து அவருக்கு வேறு யாரும் உறவென்று கிடையாது. தனிக்கட்டை. விடியலில் எழுந்து குளித்து பட்டை பட்டையாய் விபூதி தரித்து மணிக்கணக்காய் கந்தர் சஷ்டி கவசம் முதல் திருப்புகழ் வரை ஓதி மகிழ்ந்து பத்து மணியளவில் முன்னறையில் வந்து அமர்வார். அதுதான் அவருடைய அலுவலகம்.

ராம நாதனை தேடி ராதா வந்தபோது நன்றாகவே இருட்டியிருந்தது. கடைசி கிளையண்ட் எழுந்து போயிருக்க தன்னிச்சையாய் நேரம் பார்த்த ராம நாதன் மணி 8க்கு மேல் ஆவதை பார்த்து வியந்தார்.

"என்னம்மா இது எல்லாத்தயும் கணக்கா ப்ளான் பண்ணி செய்ற ஆளு இப்படி நேரங்கெட்ட நேரத்துல வந்திருக்கிங்க"

"என்ன பண்றது சார். எல்லா நேரமும் நம்ம நேரமாவாயிருக்கு. நாம நினைச்ச மாதிரி நடக்க. போலீசுக்கு பயந்து இங்க வந்திருக்கன். இன்னி ராத்திரி இங்கேதான் தங்கனும்"

ராம நாதனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவர் ஒன்றும் தொண்டு கிழமில்லை.வயது ஐம்பதை நெருங்கிக்கொண்டிருந்தாலும், உடலளவிலும், உள்ள அளவிலும் காமம் என்பது நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வந்தது அதை கட்டுப்படுத்த இன்றளவும் அவர் போராடிக்கொண்டுதான் இருந்தார்.

ராதாவும் அப்படி ஒன்றும் பாட்டி வயதில் இருப்பவளல்ல.. காதோரம் லேசாய் நரைத்திருக்கிறதே தவிர , நெற்றி வெறுமையாய் இருக்கிறதேதவிர, தள தளவென்றுதான் இருக்கிறாள் .ஒரு நொடியில் இத்தனை விசயங்கள் ராம நாதன் மனதில் மின்னி மறைய அவற்றை மறைத்துக்கொண்டு "என்னம்மா இது போலீசுக்கு நீங்க பயப்படறதாவது.. இங்க தங்கறதாவது" என்றார்.

"நீங்க முதல்ல ஒரு தம்ளர் தண்ணீ கொடுங்க " என்று கேட்டு வாங்கி குடித்தவள் . தன் மனதில் இருந்தவற்றை கொட்ட ஆரம்பித்தாள்.

"ராம நாதன் ! நான் இப்ப ரொம்ப பதட்டத்துல இருக்கேன். நான் இப்ப என்ன பேசினாலும் நீங்க மனசுல வச்சுக்கக்கூடாது. இந்த நிலைமையில் என்ன பண்ணலாம்னு நீங்க தான் சஜஸ்ட் பண்ணனும் . ஓகேவா"

"நான் அப்படி நீங்க என்னத்த பேசிரப்போறிங்க அப்படியே பேசினாலும் நான் ஏன் அதை மனசுல வச்சுக்கபோறேன்"

" என் பெரிய பையன்பத்தி சொல்லியிருக்கேனில்லையா . சின்னவன் மேல எவ்வளவோ ஹோப் வச்சிருந்தேன். இப்பத்தான் தெரிஞ்சது அவன் கல்யாணமான ஒரு பாப்பாத்திய வச்சிருக்கான்னு"

ராம நாதனுக்கு கடுப்பானது. எவளையோ வச்சிருக்கான் என்று சொன்னால் போதாதா? அவளோட சாதியை வேறு குறிப்பிட்டு சொல்ல வேண்டுமா? வேறு சாதிக்காரி எவளும் பேச்சிலரை வச்சுக்கறதே இல்லையா?
என்றாலும் ராதாவால் தான் அடைந்துள்ள அனுகூலங்களை நினைத்து எரிச்சலை அடக்கிக்கொண்டார்.

எதையாவது சொல்லவேண்டுமே என்று "அட கிரகச்சாரமே" என்று அனத்தினார் ராம நாதன்.

"வச்சிருந்தாலும் பரவாயில்லை. அந்த லோலாயி வீட்டன்டை போய் அவளுக்கு ஏதோ சைகை பண்ணியிருக்கான். அதை அவன் அப்பங்காரன் பார்த்துட்டு நேர ஸ்டேஷனுக்கு போய் ஈவ் டீசிங்குனு கேஸை கொடுத்துட்டான்'

"கல்யாணமானவன்னு சொன்னிங்க. அப்பங்காரன் கேஸ் கொடுத்தாங்கறிங்க"

"அவள் புருசன் வெளி நாடு போயிருக்கான். இவள் அப்பன் வீட்ல தான் இருக்கா"

"அப்ப சரியா போச்சு"

"என்னத்த சரியா போச்ச்''

"அவள் வயசு பொண்ணு. ருசிகண்ட பூனை . உங்க பையனும் வயசுப்பையன். காஞ்ச மாடு"

"என்னசார் பேசறிங்க நீங்க..அப்படி உனக்கு வெறி இருந்தா அதுக்குன்னே இருக்காளுகள்ள அஞ்சு பத்துனு கொடுத்து அவளுககிட்டே போய் வரவேண்டியதுதானே..இப்படி கல்யாணமாகி ,பெத்து வச்சிருக்கவளை போய் ''

"நீங்க பேசறது கொஞ்சம் கூட நல்லால்ல. பெத்த பையனை ப்ராஸ்டிட்யூட் கிட்டே போகட்டும் பரவால்லங்கறிங்களா?"

"அய்யோ.. உங்க மகன் இப்படி ஒரு காரியத்தை பண்ணி போலீஸ் காரன் லத்திய சுழட்டிகிட்டு வீட்டண்டை வந்து ரவுசு பண்ணியிருந்தா நீங்களும் இதைதான் பேசுவிங்க..இதுவே அவன் ஒரு ப்ராஸ் கிட்டே போயிருந்தானுவைங்க ..என் வீட்டண்டை போலீஸ் வராதுல்லயா ..எல்லாம் என் தலையெழுத்து"

"போலீஸ் வந்து என்ன கேட்டாங்க?"

"ராத்திரி 9 மணிக்குள்ள உங்க பையனை கூட்டிட்டு வாங்க .இல்லாட்டி நீங்க வந்து எஸ்.ஐ கிட்டே பேசிட்டு போங்கனு சொல்றான்.இவன் கொழுப்பெடுத்து அலைஞ்சதுக்கு நான் போலீஸ் ஸ்டேஷன் போய் என்ன தலை எழுத்து இதெல்லாம் . நான் ஒரு ரிட்டையர்ட் எஸ்.ஐயோட மனைவி எனக்கே இந்த நிலை. நாலு வீட்ல பத்து பாத்திரம் தேச்சு வயித்தை கழுவறவ நிலை என்ன? நான் போகப்போறதில்லே.போலீசே அவனை தேடிப்பிடிக்கட்டும் . எலும்பை முறிக்கட்டும்."

"என்னங்க இது இப்படி பேசறிங்க ..பையன் எதிர்காலம் என்ன ஆகறது?"

"ஹய்யோ..உங்களுக்கு எப்படி சொல்வேன். இது இன்னிக்கு நேத்தி சமாச்சாரமில்லே. இவன் அப்பங்காரன் கூட இப்படித்தான். நான் வீட்ல கொட்ட கொட்ட முழிச்சிக்கிட்டு காத்திருப்பேன். எவகூடவோ உருண்டுட்டு வந்து மல்லாந்து படுத்துக்கிட்டு கொர்ர் கொர்ர்ர், ஏன் ..இவனுங்களுக்குதான் உணர்ச்சியா எனக்கில்லயா. அப்பனுக்கு தப்பாத பிறந்திருக்கானுங்க பாருங்க.பெரியவனும் இப்படித்தான் கிளி மாதிரி பெண்டாட்டி வீட்ல தேவுடு காத்துக்கிட்டிருந்தா இவன் தேவடியா வீட்டு முன்னே தவமா இருந்து அவளோட கூத்தடிச்சுட்டு விடியல்ல வந்து படுத்துக்கிட்டு பத்து மணிவரை தூங்குவான். ஒரு பெண்ண பெத்து வச்சிருக்கனே அது மூஞ்சுறு மாதிரி இருந்துக்கிட்டு குடித்தனக்காரன் ஒருத்தனோட படுத்துட்டு பாதிராத்திரி வந்து படுக்குது. அவனுக்கு ஏற்கெனவே கல்யாணமாகி ரெண்டு குழந்தை இருக்கு. ஏன் இதுகளுக்குதான் உணர்ச்சி உண்டா ? எனக்கு இல்லயா என்ன? உங்களை எனக்கு பத்து வருசமா தெரியும் .. ஒரு நாளாவது தப்பா பேசியிருப்பமா"


ராம நாதனுக்குள் ஒரு தீபாவளி. கூடவே என்னடா இது தேவையில்லாத வம்பு என்றும் ஒரு எண்ணம். மேலுக்கு "ச்சே ச்சே.. உங்க கம்பீரமென்ன..உங்க ஸ்ட்ரெயிட் ஃபார்வோர்ட்னெஸ் என்ன" என்று உச்சு கொட்டினார். பின்பு எப்படியோ ராதாவை சம்மதிக்க வைத்து உப்புமா கிண்டி கொடுத்து சாப்பிட வைத்து ஸ்டேசனுக்கு அழைத்து சென்றார். எஸ் ஐ யிடம் ராதா குடும்பத்துக்கு தூரத்து உறவு என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.

"ஆண்பிள்ளை இல்லாத வீடு ..அகாலத்தில் ஸ்டேஷனுக்கு கூப்பிட்டால் எப்படி ? தப்பு பண்ணினவனை பிடிச்சு நெல்லி கழட்டுங்க. பாவம் இந்தம்மா விடோ. பெரிய பையனும் சரியில்லே. பெண்ணுக்கு அலையன்ஸ் பார்க்கிறாங்க " அது இது என்று எஸ்.ஐ மனதை கரைக்க பார்த்தார்.

ஆனால் எஸ்.ஐ. "யோவ் ! நீ என்ன இவளுக்கு வக்காலத்தா? இந்த பொம்பளைய வச்சிருக்கயா ? அதான் பையன் கூட அப்டியே தயாராயிருக்கான். மரியாதையா நாளைக்கு சாயந்தரத்துக்குள்ள அந்த பையனை கொண்டுவந்து சரண்டர் பண்ணு.இல்லேன்னா உன்னை கூட தூக்கியாந்து உள்ள வச்சிருவேன்" அது இது என்று கண்டமேனிக்கு பேசிவிட்டார். ராம நாதனுக்கு முகமெல்லாம் சிவந்துவிட்டது. கோபத்தால் உடல் சூடேறியது. நாக்கு வறண்டது. சரி எப்படியோ நாளை சாயந்திரம் வரை வாய்தா கொடுத்தானே மகராசன் என்று பெரிதாய் கும்பிடு போட்டுவிட்டு ராதாயை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

வெளியே வந்த ராதா காலியாக சென்ற ஆட்டோவை நிறுத்தி ராம நாதன் வீட்டுக்கே விடச்சொன்னாள். சரி ட்ராப் செய்கிறாள் போல என்று மவுனமாக இருந்தது தவறாகிப்போனது. அவளும் இறங்கினாள். சரி சாலையில் வாக்குவாதம் எதற்கு என்று உள்ளே அழைத்து சென்றார்.

ராதா எஸ்.ஐ பேச்சை நினைத்து நினைத்து பொங்கினாள். என்னதாவது பெத்தபாவம் நீங்க என்ன பாவம் பண்ணிங்க என்று கண்ணீர் விட்டாள். நாளை சாயந்திரம் வரை கூட மகன் வராவிட்டால் என்ன செய்ய ? என்று மருகினாள்.

ராம நாதனின் மூளையில் ஒரு பெயர் மின்னியது. ஆங் ! முகேஷ். உடனே முகேஷுக்கு போன் போட்டார். அவன் ஒரு பிரபல பத்திரிக்கையில் நிருபனாக இருக்கிறான். ஜோதிடத்தில் ஆர்வம் உண்டு. ராம நாதனுக்கும் அவனுக்கும் இடையில் வயது வித்யாசத்தை கடந்த ஒரு நட்பு. பத்து நிமிடத்தில் வந்தான் முகேஷ்.

யார் என்ன என்று விசாரித்தான். "அட அந்த பொண்ணா அது சரியான பஸ் ஸ்டாப்பாச்சே. காலேஜ்ல படிக்கறப்பவே பத்துகை மாறின கேசு அது.அவள் அப்பன் இன்னும் திருந்தலியா அந்த காலத்துலயும் அப்படித்தான். புசுக் புசுக்குனு போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்துருவான். சரி சரி.. டூடவுன் தானே . அங்கே நம்ம சுப்ரமணியம் ரெட்டிதான் ஏ.எஸ்.ஐ பழைய ஆளு . அவள் வண்டவாளமெல்லாம் தெரியும்.அவருக்கு விசயத்தை ஊதிவிட்டா போதும் . உங்க பையனை கூட சில இடங்கள்ள பார்த்திருக்கேன். அவனுக்கும் அவனோட ஃப்ரெண்ட்ஸ் மூலமா கன்வின்ஸ் பண்ண பார்க்கிறேன். அவனை நானே ஸ்டேஷன் கூட்டிப்போய் செட்டில்மென்ட் பண்ணிர்ரன் .இனிமே ஸ்டேஷன்லருந்து எந்த பிரச்சினையும் வராது" என்று சொல்லி தன் செல்ஃபோனை டயல் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

ராம நாதன் பால் சுடப்பண்ணி கொடுக்க சாப்பிட்டு விட்டு கிளம்பினான் முகேஷ். ராதா "ஹும்.. எனக்கும் இருக்கு புள்ள.. எல்லாம் நான் செய்த பாவம்" என்று பெருமூச்சு விட்டாள்.

ராம நாதன் மெல்ல அவளை வீட்டுக்கு கிளப்ப பார்க்க "இல்லே சார்.. எனக்கு மனசு சரியில்லை. நான் இங்கே படுத்துட்டா ஒன்னும் குடிமுழுகிராது. என் பெரிய பையன் விடியல்ல வர்ரதுக்கு பதில் மறு நாள் பத்து மணிக்குவரப்போறான். என் பொண்ணு பக்கத்து போர்ஷன் காரன் கூட படுத்துட்டு பாதி ராத்திரில வரது .. விடியல்ல வரப்போறா. அவ்ளதானே.. எப்படியோ ஒழிஞ்சு போகட்டும். பீரோ சாவி என் கிட்டே தான் இருக்கு. இந்த காலத்துல நிஜமான புருஷன் நிஜமான உதவி பணம், நகைதான்.. நான் இங்கயே படுத்துக்கறேன்" என்று சொல்லிவிட்டாள்.

ராம நாதன் சட்டை மாட்டிக்கொள்ள " நீங்க எங்கே போறிங்க?" என்றாள் ராதா. "எப்பயாச்சும் டென்ஷனா இருந்தா ஒரு சிகரட் பிடிப்பேன்..அதுக்குத்தான்" என்றார் ராம நாதன். "இது உங்க வீடு நீங்க ஏன் வெளிய போகனும். இங்கயே புடிங்க " என்றாள் ராதா.

சிகரட் பிடிக்கும் ராம நாதன் யாரோ போல் தோன்றினார். ராம நாதனுக்கும் ராதா யாரோ போல் தோன்றினாள்.

"இது மட்டும் தானா இதுக்கு மேலயும்"

"ச்சே சே.. அதெல்லாம் பழக்கமில்லேம்மா.. "

"அதுக்கு மேல "

"அய்யோ ..அதெல்லாம் கிடையவே கிடையாது. எல்லாம் பெண்டாட்டியோட போச்சு"

"அதிர்ஷ்ட சாலி அவங்க. ஆமா உங்க மனைவி செத்து பத்து வருசம் ஆகுமில்லிங்களா? எப்படி சமாளிக்கிறிங்க"

"ஹும்.. எல்லாம் சுயம்பாகம்தான்"

" நான் சாப்பாட்டை சொல்லலே"

"நானும் சாப்பாட்டை சொல்லலே"

"ச்சீய்..இந்த வயசுலயா?"

"என்ன செய்ய ..எவள் மேலயாவது பாய்ஞ்சுட்டா மறு நாள் தினத்தந்தில செய்தியா வந்துருவன். ஆமா உங்களவரும் போய் ரொம்ப காலமாகறாப்ல இருக்கே"

"ஹும்.. எனக்கு பதினாறு வயசுல கல்யாணமாய்ருச்சு.. பத்து வருச திருமண வாழ்க்கைல இவர் தேடிப்போன தேவடியாளுக்கு பீரியட்ஸ் டைமா இருந்தப்ப மாத்திரம்தான் நானு"

"என்னங்க உங்களுக்கென்ன குறைச்சல்?"

"அளந்து பார்த்திருந்தா நிறை குறை எல்லாம் தெரிஞ்சுருக்கும். அளைஞ்சு போட்டு போற ஆசாமிக்கு என்னா தெரியபோகுது?"

"அப்போ இருபது வருசமா நீங்க எப்படி சமாளிக்கிறிங்க?"

"அந்த மனுஷன் செத்து ஒரு ஆறு மாசம் மனசுல ஒரு குரூர திருப்தி. என்னை தனிமைல விட்டுட்டு நீ கூடிகுலவினேல்ல இப்போ மண்ணுக்குள்ள குலவுன்னு. ஆறு மாசத்துக்கப்புறம் உடம்புல இருந்த உணர்ச்சி, மனசுக்குள்ள இருந்த உணர்ச்சிய மங்க வச்சிருச்சு. இருந்திருந்தானு நினைக்க ஆரம்பிச்சுருச்சு"

"அடப்பாவமே !"

"அப்போ உங்களுக்கு எல்லாம் நிறைவா கிடச்சது போல"

"என்ன நிறைவு போங்க..அவள் ஏதோ பாதம்கீர் ஊத்தி வச்ச சாஸர் போலவும் .. நான் ஏதோ நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலையுற நாய் போலவும்"

"நீங்க சொல்றது ? "

"ஆமாங்க ஒன்னு பெத்து இறக்கிறவரைக்கும் "அது"க்குன்னா போதும் வலிக்குது வலிக்குது புராணம்தான்.

மனைவியின் மறைவுக்கு பிறகு எப்போதோ புத்தி வக்கரித்தபோது ராம நாதன் நாலாந்தர செக்ஸ் புத்தகங்களை படிப்பது வழக்கம். அதில் வரும் காட்சிகள் நம்பத்தகாதவையாக ரொம்ப செயற்கையாக இருப்பதாக நினைத்துக்கொள்வார். ஆனால் ராதா இவர் அமர்ந்திருந்த சோஃபாவுக்கு வந்து தொடை மேல் கைவத்து அவர் கழுத்தில் சூடான மூச்சை விட்ட போது நிசத்திலும் இப்படியெல்லாம் நடக்கும் போல என்று நினைத்துகொண்டார்.

ராதா பாலுக்காக பசு மடியை முட்டும் கன்று மாதிரி முட்டினாள் . நிறை மாத கர்பிணி போல் நிலை கொள்ளாமல் தவித்த மழை மேகம் ஒன்று கோடை மழை கணக்காய் பொழிந்து தீர்த்தது.

மறு நாள் ராதா விடியலில் எழுந்து குளித்து ராம நாதனின் மனைவி பீரோவில் அடுக்கி வைத்திருந்த சேலை ஒன்றை உடுத்தி ஃப்ரிட்ஜில் இருந்த பாலில் காபி போட்டு பெட் காஃபியுடன் ராம நாதனை எழுப்பினாள். பின் நான் வீடு வரைக்கும் போய் வரேன் என்று கிளம்பினாள். அவள் இப்படி கிளம்பி போனது இவருக்கு சற்று நிராசையாக இருந்தாலும் , சற்று ரிலீஃபாகவும் இருந்தது.

குளித்து பூஜை முடித்து முன்னறையில் வந்து உட்கார்ந்தார். சற்று நேரத்தில் முகேஷ் வந்தான். அவனுடன் ஒரு இளைஞன். "ராம நாதன் சார் ! இவன் தான் ராதா மேடத்தோட பையன். ஸ்டேஷன்ல பேசி வச்சிருக்கேன். எஸ்.ஐயும் ஸ்டேஷன்ல இருக்கார்.பேசி முடிச்சுட்டு வந்துருவம் . கிளம்புங்க" என்றான் முகேஷ்.

ஸ்டேஷன் சம்பிரதாயங்கள் முடிய மதியம் இரண்டாயிற்று.

எஸ்.ஐ.வாங்க வேண்டியதையும் வாங்கிக்கொண்டு பத்தினித்தனமாய் ராதாவின் மகனை பளீர் பளீர் என்று அறைந்து "இன்னொரு தடவ கம்ப்ளெயிண்ட் வந்தா மவனே என் கவுண்டர்தான்" என்று எச்சரித்தார்.

அடுத்த மூன்று மாதங்களில் ராதாவும் ராம நாதனும் மனசளவிலும் நெருங்கி விட்டனர். ராம நாதன் மட்டும் "பாருங்க நான் நாலு பேருக்கு நல்லது கெட்டது சொல்ற ஸ்தானத்துல இருந்துக்கிட்டு இதை தொடர்ரது கொஞ்சம் கூட நல்லதில்லை. நான் என் கடமைகளை முடிச்சுட்டன். நீங்களும் உங்க கடமைகளை முடிச்சுட்டா இதை லீகலைஸ் பண்ணிரலாம்" என்று சொல்ல ஆரம்பித்தார்.

" நான் என் கடமைகளை முடிக்கனும்னா முதலில் பெரிய பையனை திருத்தி ஆகனும். மகள் கதை காம்பவுண்டுக்குள்ளேயே இருந்தாலும் அவன் கதை ஊரெல்லாம் நாறியிருக்கு. இதை தெரிஞ்சவன் எவனும் சம்பந்தமுனு வீட்டுப்படியேற மாட்டான்"

முகேஷுடன் கலந்து பேசி ராதா மகளுடன் தொடர்பு வைத்திருந்தவன் குடும்பத்தை ஏதோ நொண்டி சாக்கு வைத்து காலி செய்வித்தனர். மேரீட் பர்சனோட காண்டாக்ட்னா அது நிச்சயம் உடலளவு தொடர்பாதான் இருக்கும் என்று முகேஷ்தான் தெரியம் கொடுத்து இதை பைசல் செய்தான்.

பெரிய பையன் கதையை வேறு மாதிரி முடித்தார்கள். அவன் நகராட்சி அலுவலக ஊழியன் என்பதால் முகேஷ் மூலம் தொகுதி அளவில் டான் ரேஞ்சில் இருந்த எம்.எல்.ஏவிடம் சொல்லி அவர் மூலம் சேர்மனுக்கு சொல்லி வெளி தொடர்பை துண்டித்து தனிக்குடித்தனம் அனுப்பியாயிற்று.

இது தீரவும் மகளுக்கு சம்பந்தம் பார்க்க ஆரம்பித்தாள் ராதா நல்ல சம்பந்தமாய் அமைய சிம்பிளாய் முடித்தார்கள். சின்னவன் கதை கொஞ்சம் நொண்டியடித்தாலும் முகேஷ் மூலம் ஒரு கிரானைட் ஃபேக்டரியில் சூப்பர் வைசராக சேர்த்து அவனுக்கும் ஒரு கல்யாணத்தை செய்து முடித்தனர்.

ராம நாதனும் தனக்கு ஃபேக்டரியிலிருந்து வரவேண்டிய பெனிஃபிட்ஸ் இத்யாதிக்கு ரிமைண்டர் மேல் ரிமைண்டர் போட்டு முகேஷ் மூலம் ப்ரஷர் கொடுத்து பணம் கைக்கு வந்ததும் ராதாவுடன் சேர்ந்து ஊருக்கு வெளியே ஃபேக்டரி மாதிரி ஏற்படுத்தி ,மார்க்கெட்டிங்கை பலப்படுத்தி அவள் செய்து வந்த வடாம்,வற்றல், சாப்பாட்டு பொடிகள் தயாரிப்பை விரிவு படுத்தினார். ராதா ஃபேக்டரிக்கு போக வர கஷ்டமா இருக்கு என்று ஒரு ஸ்கூட்டி வாங்கினாள். ராம நாதனை தன் காம்பவுண்டுக்குள்ளேயே குடிவைத்து விட்டாள். ராதா ஸ்கூட்டியை ஓட்ட , ராம நாதன் பின்னால் உட்கார்ந்து ஃபேக்டரிக்கு செல்வது வழக்கமான காட்சியாயிற்று.

பெரியவன், சின்னவன்,மகள் எல்லோருக்கும் இவர்களிடையிலான உறவு அரசல் புரசலாக தெரிந்தாலும் "கர்மம்! கர்மம்!" என்று தலையில் அடித்துக்கொண்டார்களே தவிர மேலுக்கு ஏதும் பேசவில்லை. இந்த விவகாரம் அமெரிக்காவிலிருந்த ராம நாதன் மகள் வரை எட்ட அவள் மட்டும் " டாடி ! பேசாம அவங்களை மேரேஜ் பண்ணிக்கோயேன்" என்றாள். "இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் தாயி " என்றார்

ராம நாதன். ராதாவின் ஆஸ்மா பிரச்சினை தன்னையும், தனது கேஸ் ட்ரபுள் ராதாவையும் " அந்த "நேரத்தில் அருவறுக்க செய்வதையும் - அதே சமயம் "அந்த" அவுட் லெட் நிச்சயம் தேவைப்படுவதையும் பெற்ற மகளிடம் எப்படி சொல்ல முடியும்?

பற்றி எரியும் பிரச்சினைகளுக்கு மூலம் செக்ஸ்



( முந்தா நாளு தாய்குலத்தின் மிரட்டல் மெயில்னு ஒரு பதிவை போட்டிருந்தம். ஒரு தாய்க்குலம் நாம சகட்டுமேனிக்கு ப்ளாக்ல எழுதினதையெல்லாம் படிச்சுட்டு தொடர்ந்து எடக்கு மடக்கா நம்மை மடக்கி மெயில் போட்டதையும் சொல்லியிருந்தம் . அந்த மகராசிக்கு பதில் கொடுக்கிறதுக்குள்ள உன்னைப்பிடி என்னைப்பிடின்னு ஆயிப்போச்சு. இப்பம் தேவையில்லாத மேட்டரையெல்லாம் வடிக்கட்டி கேள்வி பதில் கணக்கா மாத்தி இங்கன தந்திருக்கோம். வெறுமனே படிச்சுட்டு போயிராம நம்ம வாதத்துல தப்பு தவறு இருந்தா குட்டி சொல்லுங்க. )

1. நாட்ல எத்தனையோ பிரச்சினைகள் பத்தி எரியறச்ச வெறுமனே ஆண் -பெண் , செக்ஸாலஜி,சைக்காலஜின்னு ஜல்லி அடிக்கிறிங்களே.. இதெல்லாம் எஸ்கேப்பிசமில்லையா?

வரேன்.வரேன். இன்னைக்கு மனித குலத்தை பாதிக்கும் பிரச்சினைகள் எல்லாமே ஒரே பிரச்சினையின் விளைவுகளே.

அந்த ஒரே பிரச்சினை எதுன்னா மனிதகுலம் இயற்கையிலிருந்து விலகிவிட்டது தான். அடிப்படையில் பார்த்தா மனிதன் கூட ஒரு மிருகம் தான்.ஆனால் அவன் மனிதனா நடிக்கிறான்.

ஒவ்வொரு மன்சனுக்குள்ளவும் ஒரு மிருகம் லேசான சங்கிலியால் பிணைக்கப்பட்டு எந்த கணமும் அது தெறிச்சு -வெளிய வந்துர்ர நிலையில இருக்கு. மனிதன் ஒரு மிருகம் இது இயற்கையின் விதி. ஆனால் அவன் மனிதனா நடிக்கிறான். இது சமுதாயத்தின் சதி.

சரி ஒழிஞ்சு போவட்டும் அட்லீஸ்ட் அந்த மிருகத்தை ரெண்டு நாளைக்கொருதரமாச்சும் காலாற நடக்கவிட்டு கக்கா,உச்சா போக வச்சு சீசன் சீசனுக்கு கிராசிங் அனுப்பி வச்சு மறுபடி கட்டி வச்சாலும் பரவால்லை.

அது பாவம் மூத்திரப்பை நிரம்பி, மூத்திரம் முட்ட,மலக்குடல் கனத்து ,விந்துப்பை பிதுங்கி யோனி உதடுகள் லூப்ரிக்கேட் ஆகி மினு மினுத்து கனிஞ்சு ,க்ளிட்டோரிஸ் விரைத்து ஏங்கி தவிச்சிட்டிருக்கு.

அதை இந்த சமூகத்தை போலவே தனிமனிதனும் கண்டுக்கிடறதில்லை. இதன் விளைவு ? செக்ஸுக்கு மாற்றா வன்முறை -பணம் -பதவின்னு தவிக்குது. எத்தனை உசரத்துக்கு போனாலும் அடியை பிடிடா பரதப்பட்டான்னு மறுபடி செக்ஸுலயே வந்து முட்டி நிக்குது.

மனிதர்களில் பலருக்கு வன்முறைக்கான உடல் வலிமையோ ,பணம் சம்பாதிக்கிறதுக்கு தேவையான திறமை , தகுதி ,சாலாக்கு, மானங்கெட்ட தனம் ,பதவியை பெறுவதற்கான தலைமை பண்புகள்,தியாகம் ,கூட்டி/காட்டி கொடுக்கும் கயவாளித்தனம் இல்லாம இருக்கலாம்.

ஆனால் கொஞ்சமே கொஞ்சம் பேரை தவிர அல்லாருக்கும் செக்ஸை பெறுவதற்கான தகுதியை இயற்கை தந்திருக்கு. இவிகளுக்கு செக்ஸ் மட்டும் எவ்வித குற்ற உணர்வோ ,பக்கவிளைவு குறித்த அச்சமோ (எய்ட்ஸ்/கர்பம்/கல்யாணம்) இல்லாம கிடைச்சுட்டா இவிக வன்முறை -பணம் -பதவியை நினைச்சுக்கூட பார்க்கமாட்டாய்ங்க.

இன்னைக்கும் மனிதனை இயற்கையோடு இணைக்கும் வல்லமை பெற்றிருப்பது செக்ஸ் ஒன்னுதான். ஆனால் அது எவ்வித குற்ற உணர்வுமில்லாம -குறிப்பிட்ட இடைவெளியில கிடைக்கனும் -எப்போதைக்கும் அவெய்லபிளா இருக்கனும். இது மட்டும் சாத்தியமாகி போனா நீங்க சொல்ற பற்றி எரியும் பிரச்சினைகள் எல்லாம் தானா அணைஞ்சு போயிரும்.

உதாரணத்துக்கு ஒன்னை மட்டும் டச் பண்றேன்.

மின்சார பற்றாக்குறைய ஓவர் லுக் பண்றதுக்கு அணுமின்சாரத்தை உற்பத்தி செய்ய அவுட் டேட்டட் ஃபார்முலாவை கொண்டு அணு உலைகளை ஸ்தாபிக்க துடிக்கிறாய்ங்க. லேட்டஸ்டா பிரதமரே அணு உலை எதிர்ப்பாளர்கள் வன்முறைய தூண்டுவதா புகார் சொல்லியிருக்காரு.அடுத்தது என்ன? அடக்குறைதேன்.

மின்சாரம். இதன் உபயோகங்கள் பலப்பலவா இருந்தாலும் அம்பானி முதல் கிறிஸ்டியான் பேட்டை அம்புரோஸ் வரை மின்சாரத்தை தேடறது ஒளி மற்றும் ஒலிக்காக.

ஒளியில்லேன்னா இருட்டு மண்டும். இது மரணத்தை ஞா படுத்தும். ஒலி இல்லேன்னா பேரமைதி நிலவும். இதுவும் மரணத்தை ஞா படுத்தும். செல் ஃபோனை சார்ஜ் பண்ண முடியாது. கம்யூனிகேஷன் பாதிக்கும். தனிமை மரணத்தை ஞா படுத்தும்.

மன்சன் அரண்டு போயிர்ரான். என்ன வேணம்னா செய்துக்க எனக்கு மின்சாரத்தை கொடுங்கற நிலைக்கு வந்துர்ரான்.

செக்ஸிலான உச்சத்தை அடையும் வாய்ப்பு பெற்றவன் /தன் செக்ஸ் பார்ட்னருக்கும் உச்சத்தை தரும் திறம் படைத்தவன் மரணத்தையே தரிசிச்சவனாயிர்ரான். அவன் மரணத்தின் நிழல்களான அமைதிக்கோ ,தனிமைக்கோ, இருட்டுக்கோ அஞ்சவே மாட்டான்.

நான் வேணம்னா சேலஞ்ச் பண்ணி சொல்றேன். பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரத்தை கொடுக்க சொல்லுங்க. மின் உபயோகம் பாதிக்கு மேல குறைஞ்சுரும்.

மின்சாரத்தை வச்சு உற்பத்தி செய்யறாய்ங்க. ஏன்? இயற்கை அவனுக்கு தந்த ஆணை உருவாக்கம் -பரவுதல் . இதை செக்ஸுவலா செய்யமுடியாத குறைக்கு உற்பத்தி.

அந்த உற்பத்திகளை வாங்கி வீட்டை நிறைக்கறாய்ங்க.ஏன்? அவிகளுக்குள்ள ஒரு வெற்றிடம். இயற்கையின் முழுமுதல் எதிர்ப்பார்ப்பு உருவாக்கம் - பரவுதல். இதை நிறைவேற்ற முடியாத காரணத்தால் சப்காஷியஸா அவிக இன்ஃபிரியரா ஃபீல் ஆகறாங்க. கில்ட்டியா ஃபீல் பண்றாங்க.

அதனால தான் ப்ளாஸ்டிக்,எலக்ட்ரானிக் குப்பைகள் ஹாட் கேக்கா சேல் ஆகி வீடுகளை நிறைக்குது. இந்த குப்பைகள் வீட்டை குப்பை மேடாக்க முடியுமே தவிர மனிதனில் உள்ள வெற்றிடத்தை நிரப்பவே முடியாது.

அது சரி மின்சாரம் போதலின்னா காற்றாலை, கடல் அலைன்னு என்னென்னமோ சொல்றாய்ங்களே அது எதையாவது ட்ரை பண்ணாம ஆட்சியாளர்கள் எதுக்கு அணுமின்சாரத்தை ஆப்ட் பண்றாய்ங்கன்னு கேப்பிக. சொல்றேன்.

மனிதர்கள் ஸ்தூலமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை உந்துவது இரண்டு இச்சைகளே. ஒன்று : கொல்வது இரண்டு: கொல்லத்துடிப்பது.

இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம் . மக்களை போலவே ஆட்சியாளர்களுக்கும் செக்ஸ் நாட் அவெய்லபிள். ஆகவே அவிகளோட கொல்லும்-கொல்லப்படும் இச்சை செக்ஸ்ல நிறைவேற வாய்ப்பில்லாததால நேரடியா கொல்லப்பார்க்கிறாய்ங்க. தேர்தல் வந்தா அரசியல் ரீதியா கொல்லப்பட துடிக்கிறாய்ங்க.

இப்படி ஒவ்வொரு பிரச்சினைக்கும் மூல காரணம் செக்ஸ் செக்ஸ் செக்ஸ். செக்ஸ் தவிர வேறில்லை. அதனாலதான் நான் செக்ஸை பத்தி எழுதறேன்.

பிரச்சினைகளோட சில்லிவேர்களை பிடிச்சுக்கிட்டு சில்லியா ஊசலாட நம்மால முடியலிங்க. சாரி..

Saturday, October 29, 2011

ராசிக்கல் -கில்மா - தற்கொலைகள் : ஒரு எக்ஸ்ரே பார்வை


நேற்று கண்ணாலமானவுகளே ஏன் அதிகமா தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க? பெண்கள் ஏன் உணர்வு பூர்வமான சொந்த பிரச்சினை காரணமா (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க? ஆண்கள் ஏன் சமூகம் ,பொருளாதாரம் தொடர்பான காரணங்களுக்காக (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன்னு சொல்லியிருந்தேன்.

ஆனால் இன்னைக்கு சம்பந்தா சம்பந்தமில்லாம ராசிக்கற்களான்னுட்டு ஃபீல் பண்றவுகளுக்கு ஒரு வார்த்தை. சொல்லப்போற மேட்டர் நெஜமாலுமே நாட்டுக்கு தேவையான மேட்டர். இதை எத்தீனி பேரு அடிஷ்னலா படிச்சா அத்தீனி நன்மைகள் கிடைக்கும்.(1000+)

அதனாலதான் மேற்படி கவர்ச்சி தலைப்பு. தலைப்பு மட்டுமில்லை ராசிக்கற்களை பற்றிய மேட்டரும் தரதா இருக்கேன். மொதல்ல ராசி கற்களை பார்ப்போம். பிற்காடு தற்கொலை மாதிரி சொத்தை மேட்டர்.

வானவில் பத்தி தெரியும். நம்ம கவிஞர்கள் அதை விரயமா ஹீரோவுக்கு அரைஞான் கயிறா , ஹீரோயினுக்கு உள்பாவாடை நாடாவா சகட்டுமேனிக்கு உபயோகிச்சிருக்காய்ங்க. அதெல்லாம் நமக்கு தேவையில்லாத விசயம். விசயத்துக்கு வருவம்.

வானவில்லுல 7 நிறம். ராகு கேது தவிர்த்து பார்த்தா 7 கிரகம். 7 நிறம். இந்த 7 நிறங்களை ஞா வச்சுக்க வெப்கயாரோ என்னமோ சொல்வாய்ங்க.

மேற்படி 7 நிறமும் உருவாகறது சூரிய ஒளியிலருந்துதேன்ங்கறதை சுட்டிக்காட்டவே இந்த பாய்ண்டு. . நீங்க கலைஞர் போட்டிருக்கிற துண்டு மஞ்ச நிறமுன்னு எப்டி கண்டுக்கறிங்கன்னா சூரிய ஒளியில உள்ள 7 நிறங்கள்ள மஞ்சள் நிற ஒளி அந்த மஞ்சத்துண்டு மேல விழறதில்லை.

இந்த லாஜிக் தான் நீங்க உபயோகிக்கிற ஆடை அணிகலன்களின் நிறத்துலயும் வேலை செய்யுது. அது சரி மற்ற ஜோதிடர்கள் ஜாதகத்துல எந்த கிரகம் நல்ல நிலையில் இருக்கோ அந்த கிரகத்தோட நிறம் கொண்ட ஆடை அணிகலனை அதிகம் உபயோகிக்க சொல்றாய்ங்க.

நீங்களோ எந்த கிரகம் சரியில்லையோ அந்த கிரகத்தோட நிறமுள்ள ஆடை அணிகலன்களை தானே அதிகமா உபயோகிக்க சொல்றிங்க ( இது நம்மிடம் ஆன் லைன் ஜோதிட ஆலோசனை பெற்ற பார்ட்டிகளுக்கு மட்டும் தான் தெரியும்)

இந்த இரண்டு கருத்துக்கும் பின்னால் உள்ள லாஜிக் என்ன? இதுல எது கரீட் ? எது தவறு? சொல்ல முடியுமா?

சொல்றேன். ( இன்னாபா ராசிக்கல்லை பத்தி சொல்றேன்னுட்டு நிறத்தை பத்தி சொல்றேன்னு கோச்சுக்காதிங்க. நிறம்ங்கறது ஒரு டம்ளர் ரஸ்னா மாதிரி. ராசிக்கல்லுங்கறது ரஸ்னா பவுடர் பாக்கெட் மாதிரி /கான்சன்ட்ரேட் மாதிரி. வெய்ட் அண்ட் சீ பாய்ண்டுக்கு வந்துருவமில்லை ) .

மற்றவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் (பலர் கிளிப்பிள்ளைகள் தான்) சின்னதா லாஜிக் இருக்கக்கூடும். அது என்னன்னு நமக்கு புரியுது. இருந்தாலும் ஜல்லியடிகளுக்கு நாம ஏன் ஸ்டஃப் தரனும்.அதனால நம்முதை மட்டும் நாம கவனிப்போம்.

ஒரு கிரகம் ஜாதகத்துல காங்கிரஸ் கணக்கா சுயேச்சைய விட மோசமா தேஞ்சு போயிருக்குன்னு வைங்க. உங்க பாடியில சூரிய ஒளியிலான அந்த கிரகத்தோட நிறத்தை கிரகிச்சுக்க கூடிய சக்தி மிக அதிகமா இருக்கும். அதே போல சீக்கிரமா வெளிப்படுத்திடக்கூடிய இயல்பும் இருக்கும்.

உதாரணமா வாயிதா போன செல் ஃபோன் பேட்டரியை சார்ஜ்ல போட்டிங்கன்னா பத்து நிமிசத்துல பேட்டரி ஃபுல்லுன்னு காட்டும். ஆனால் ஒரு கால் பேசிமுடிக்கிறதுக்குள்ள பேட்டரி நில் ஆயிரும்.

ஆனா உருப்படியான பேட்டரி நிதானமாதான் சார்ஜ் வாங்கும் . அதே போல நிதானமாதான் சக்தியை வெளிப்படுத்தும்.

பலமிழந்த கிரகம் - சூரிய ஒளியிலான அதனோட நிறத்தை க்ராஸ்ப் பண்ணிக்கற மேட்டர்ல உங்க பாடியை வாயிதா போன பேட்டரியாக்கிரும்.

உதாரணமா உங்க ஜாதகத்துல சூரியன் பல்பு வாங்கியிருக்காருனு வைங்க .அப்பம் உங்க பாடி சூரிய ஒளியில் உள்ள ஆரஞ்சு நிற ஒளியை கப கபன்னு கிரகிச்சுக்க துவங்கும். இதனால உங்களுக்குள்ளே ஈகோ தலைவிரிச்சாட ஆரம்பிச்சுரும்.

தகுதி உடைய மனிதர்கள் மேட்டர்லயே அவிகளை அவிக ஈகோ குழி தோண்டி புதைச்சுருது. இதுல தகுதியில்லாத ஆசாமி ஈகோயிஸ்டா பிஹேவ் பண்ணா என்ன ஆகும்னு ரோசிங்க.

இதுக்குத்தேன் நாம எந்த கிரகம் ஜாதகத்துல வீக்கா இருந்தா அந்த கிரகத்தோட நிறம் கொண்ட ஆடை அணிகலைனை அதிகமா யூஸ் பண்ண சொல்றோம்.

உ.ம் மேற்படி சூரிய பலமில்லாத மனிதர் ஆரஞ்சு நிற ஆடை அணிகலனை அதிகம் யூஸ் பண்ணா சூரியனில் உள்ள ஆரஞ்சு நிற கதிர்களை அவிக பாடி கிரகிக்காது.ஏன்னா ஆரஞ்சு நிற கதிர்கள் அவிக பாடி மேல விழவே விழாதே. ( அப்படி விழாததாலதான் அதை ஆரஞ்சு நிற ஆடைன்னு நம்மால சொல்ல முடியுது)

இந்த மேட்டர்தான் ராசிக்கற்கள் மேட்டர்லயும் வேலை செய்யுது. ராசிக்கல்லுங்கறது இதுவரை சொன்ன அதே மேட்டரை இன்னம் கொஞ்சம் ஸ்ட் ராங்கா பண்ணுது.

ஒரே கிரகம் நன்மை & தீமை செய்யக்கூடிய நிலையில இருக்கலாம்.

உ.ம் 1
மிதுனத்துக்கு சனி 8 -9 க்கு அதிபதி. இவிக நீலக்கல் அணியலாம்.
உ.ம் 2
கடகத்துக்கு குரு 6 ,9 க்கு அதிபதி இவிக புஷ்பராகம் அணியலாம்

இதே போல நன்மையே செய்யக்கூடிய கிரக்மா இருந்தாலும் கொஞ்சம் தீமையையும் சேர்த்து தரும்.

உ.ம் 1
சனி யோக காரகனாகும்போது ஏழு தலைமுறைக்கு அழியாத செல்வத்தை தருவாரு.ஆனால் கூடவே அதை நீங்க கிழவாடி ஆன பிற்காடு தருவாரு. கூடவே கஞ்சத்தனம், சோம்பல் இதையெல்லாம் சேர்த்து தருவாரு. மேற்படி சைட் எஃபெக்ட்சை குறைக்க நீலம் அணியலாம்.

( என்ன பாஸ் .. மேட்டர் ஓகேவா? தற்கொலை மேட்டருக்கு போயிரலாமா?)

கேள்வி1:

கண்ணாலமானவுகளே ஏன் அதிகமா தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க?

மனிதர்கள் ஸ்தூலமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை உந்துவது இரண்டு இச்சைகளே. ஒன்று : கொல்வது இரண்டு: கொல்லத்துடிப்பது.

இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம் .

ஆண் பார்வையில்:
விந்து வெளியேறும் வரை அவளை கொல்லுவதாய் உணர்கிறான். பற்குறி பதித்தல், தட்டுதல், கிள்ளுதல், உறுப்பை திணித்தல் ,முரட்டுத்தனமாக இயங்குதல் இத்யாதி மூலம் அவனது கொல்லும் வெறி நிறைவேறுகிறது. விந்து வெளியேறும்போது ஆண் தான் செத்து போவதாய் (குட்டி மரணம்) உணர்கிறான். காலச்சக்கரம் நிற்கிறது.

பெண்பார்வையில்:
ஆரம்பத்தில் கொல்லப்படும் இச்சை நிறைவேறுகிறது. க்ளைமேக்சில் (விந்து வெளிப்படும்போது) அவனை தான் கொன்றுவிட்டதாய் உணர்ந்து (அடி மனதில்) திருப்தியடைகிறாள்.அவளது கொல்லும் இச்சை நிறைவேறுகிறது.

உடலுறவு என்பது ஆண் -பெண் இருவரின் கொல்லும் -கொல்லப்படும் இச்சைகளை ஒரு சேர தீர்த்து வைக்கவேண்டும். இதற்கு ஆண் தன் உச்சத்தை சற்றே தாமதித்து பெண் உச்சம் பெறுவதை துரிதப்படுத்த வேண்டும்.ஆனால் இது எந்த அளவுக்கு நடைமுறையில் இருக்கிறது என்பதை அவரவர் மனசாட்சி அறியும்.

ஆக ஆண் பெண்களின் அடிப்படை இச்சைகள் செக்ஸில் நிறைவேறாத சந்தர்ப்பத்தில் உள்ளடக்கி வைக்கப்பட்ட இச்சைகள் வெடித்து தம் சுயரூபத்தில் வெளிப்படுகின்றன.

பெண் உச்சம் பெற்றாலும் பெறாவிட்டாலும் ஆண் உச்சம் பெற்றுவிடுகிறான். நாளடைவில் இது ஆணில் குற்ற உணர்ச்சியையும் -பெண்ணில் வன்முறையையும் தூண்டுகிறது.

திருமணத்துக்கு முன்னாவது ஆண்,பெண்களின் அடிமனதில் தம் அடிப்படை இச்சைகளுக்கு ஒரு வடிகால் கிட்டும் என்ற கனவாவது மிச்சமிருக்கிறது. திருமணத்துக்கு பின்னோ அந்த கனவும் கலைந்துவிடுகிறது.

பெண்ணுக்கு செக்ஸில் ஆர்வம் குறைகிறது - பெண் செக்ஸை தவிர்க்க ஆரம்பிக்கிறாள். ஆண் தவிக்க ஆரம்பிக்கிறான் இருவரிலும் நிறைவேறாத செக்ஸ் இச்சைகள் வன்முறையாக வெடிக்கின்றன. வன்முறையை செயல்படுத்தும் வாய்ப்பு வலிமை இருக்கும்போது அது கொலையில் முடிகிறது.

வன்முறையை செயல்படுத்தும் வாய்ப்பு இல்லாத போது அது தற்கொலையில் முடிகிறது.

கேள்வி:2

பெண்கள் ஏன் உணர்வு பூர்வமான சொந்த பிரச்சினை காரணமா (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க?

பெண்கள் வீக்கர் செக்ஸ். ( உடலளவில்) இதனால் அவள் தன் வட்டத்தை சிறிதாக்கிக்கொள்கிறாள். ( கேமராவை ஜூம் பண்ண மாதிரி) இதனால் சொந்த பிரச்சினை மட்டுமே பூதாகரமாக மாறுகிறது. தற்கொலைக்கு தூண்டுகிறது.

கேள்வி:3

ஆண்கள் ஏன் சமூகம் ,பொருளாதாரம் தொடர்பான காரணங்களுக்காக (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க.

ஆண் ஸ்ட்ராங்கர் செக்ஸ்.அவனோட வட்டம் பெரிது. அவன் வேட்டையாட வேண்டியிருக்கு.அதற்காக சமூக பொருளாதார அமைப்புகளுடன் உறவாட வேண்டியிருக்கு. அதனால தான் சமூகம் ,பொருளாதாரம் தொடர்பான காரணங்கள் அவனை தற்கொலைக்கு தூண்டுது.

Friday, October 28, 2011

பெருகி வரும் தற்கொலைகள்: திகீர் ரிப்போர்ட்

தமிழ் திரைக்கவிஞர்களை பொருத்தவரை ஒவ்வொருத்தருது ஒவ்வொரு ஸ்டைல் . ஆனால் எல்லாரோட ஸ்டைலயும் முளை கட்டி காய வச்சு சத்து மாவு கணக்கா அரைச்சு , அல்லாரும் விரும்பக்கூடிய ஒரு ஃப்ளேவரை கலந்து கவர்ச்சியான டின்ல அடைச்சா அதான் தெலுங்கு திரைக்கவிஞர் வேட்டூரி சுந்தரராமமூர்த்தியோட ஸ்டைல்.

உலகத்தோட எந்த மூலையில மனித வாழ்வில் எந்த சம்பவம் நடந்தாலும் -அவனுக்குள்ள எந்த உணர்வு கிளர்ந்தெழுந்தாலும் அந்த சிச்சுவேஷனுக்கு வேட்டூரியோட ஒரு பாட்டாவது சிக்குனு பொருந்தும்.

தற்கொலைகள் பற்றிய புதிய சர்வேக்கும் வேட்டூரிக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக .சொல்றேன். பொதுவா சனம் ரிட்டையர் ஆகிற வயசுலதான் அவரு பாட்டு எழுதவந்தாரு. அதை போல நமக்கு வலையுலகத்துல ஒரு பெரிய ரவுண்டு முடியற இந்த சமயம் நம்மோட டாப் ப்ரியாரிட்டில என்டர் ஆறோம். நம்ம டாப் டென் ப்ரியாரிட்டி என்னனு தெரிஞ்சுக்க அவா உள்ளவர்கள் இங்கே அழுத்தவும்.

சமீபத்துல - தேசிய குற்ற பதிவு துறை தற்கொலைகளை பற்றி தயாரித்த அறிக்கையோட முக்கிய அம்சங்களை - அவை உணர்த்தும் உண்மைகளை இங்கன பார்ப்போம்.

நம்ம நாட்ல ஒரு மணி நேரத்துக்கு 15 பேர் தற்கொலை செய்துக்கறாய்ங்க. ஒரு மணி நேரத்துக்கு 15 பேருன்னா நெம்பர் சின்னதா தெரியும்.

24 மணி நேரத்துக்கு - ஒரு நாளைக்கு 360 பேரு. ஒரு வாரத்துக்கு 2,520 பேரு ஒரு மாசத்துக்கு 10 ஆயிரத்து 80 பேரு. ஒரு வருசத்துக்கு 1 லட்சத்து 20 ஆயிரத்து 960 பேரு.

இதே விகிதத்துல அடுத்த பத்து வருசத்துக்கு தற்கொலைகள் தொடர்ந்தா 12 லட்சத்து 9 ஆயிரத்து 600 பேர் தற்கொலை செய்துக்கிடுவாய்ங்க.

எவனோ செத்தால் எனக்கென்ன போச்சுன்னு நீங்க நினைக்கலாம். ரோபோ படத்துல க்ளைமேக்ஸ்ல ரோபோ ரஜினி லட்சக்கணக்கான ரோபோக்களை உருவாக்கியிருக்க அந்த ரோபோக்கள் எல்லாம் ஒரு மெகா ரோபோவா ரோட்ல நடந்து வரும்.

அப்பம் சைன்டிஸ்ட் ரஜினி கம்ப்யூட்டர்ல ஏதோ தகிடுதத்தம் பண்ண மெகா ரோபோல இருந்து ரோபோக்கள் புளியம்பழம் கணக்கா உதிரும்.

இந்த தற்கொலைகளும் ஏறக்குறைய இதே எஃபெக்டை தரும். நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கிடலைன்னாலும் இந்த உலக உயிர்கள் அனைத்தும் ஒரு மர்மமான முறையில இணைக்கப்பட்டிருக்கு.

சமீபத்துல தமிழ் நாட்ல நடந்த சட்டமன்ற ,உள்ளாட்சி தேர்தல்கள்ள கூட்டணியில நின்னாலும் -தனிய நின்னாலும் திமுகவுக்கு ஆப்படிக்கனும் - அம்மாவுக்கு லைஃப் கொடுக்கனும்னு சனம் எப்படி டிசைட் பண்ணாய்ங்க?

அவிகல்லாம் டிவிட்டர் -ஃபேஸ்புக்ல மெம்பராயிருந்து பேசி முடிவு பண்ணாய்ங்களா? இல்லையே. பின்னே எப்படி இது சாத்தியம்?

நாமெல்லாம் ஏதோ ஒரு மோட்ல இணைக்கப்பட்டிருக்கோம். நம்மிடையில் இத்தீனி காலம் வாழ்ந்திருந்து அடுத்த பத்து வருஷ காலத்துல 12 லட்சத்து 9 ஆயிரத்து 600 பேர் தற்கொலை செய்து செத்துப்போயிட்டாய்ங்கன்னு வைங்க.

அந்த தற்கொலைகள் நம்மையும் நிச்சயமா பாதிக்கும். விபத்துல கை ,காலை இழந்தவுகளுக்கு பல காலத்துக்கு அந்த உறுப்புகள் தம் உடலோடு ஒட்டியிருப்பதாகவே ஒரு ஃபீலிங் இருக்குமாம். இது இன்னாடா கூத்து எவனோ தற்கொலை பண்ணா அது எப்படி என்னை பாதிக்கும்னு கேப்பிக. சொல்றேன்.

சுற்றுச்சூழலை அட்மாஸ்ஃபியர்னு சொல்றாப்ல மக்களின் எண்ணங்களால் உருவாகும் சூழலை நூஸ்ஃபியர்னு சொல்றாய்ங்க. எவனோ ஒரு டயரை கொளுத்திவிட்டா அந்த ஏரியாவே நாறிப்போறாப்ல ஆரோ ஒருத்தரு தற்கொலை செய்தா அந்த வட்டாரமே - அந்த வட்டாரத்து நூஸ்ஃபியர் கடுமையா பாதிக்கப்படும்.

ஒரு அப்பார்ட்மென்ட்ல ஒரு தற்கொலை நடந்தா வருசத்துக்கு ஒரு தற்கொலையாவது அந்த அப்பார்ட்மெண்ட்ல நடந்துக்கிட்டே இருக்கும். எத்தீனி குடுமி அய்யர் வந்து எத்தீனி யாகம் பண்ணாலும் அந்த நூஸ்ஃபியரை சரி செய்யவே முடியாது.

இது மட்டுமில்லை ஒரு குடும்பத்துல ஒரு தலைமுறையில ஆரோ ஒருத்தர் சூசைட் பண்ணிக்கிட்டா அடுத்தடுத்த தலைமுறையில ஆரோ ஒருத்தர் தற்கொலை செய்துக்கிட்டே இருப்பாய்ங்க.

இது மட்டுமா? இப்படி தற்கொலை நடந்த குடும்பத்துல பெண்ணெடுத்தாலோ - பெண் கொடுத்தாலோ உங்க குடும்பத்துலயும் அந்த தற்கொலைகள் நடக்க வாய்ப்பிருக்கு.

இதெல்லாம் தொற்று நோய் மாதிரி . ஒரு கோழிபண்ணையில ஒரு கோழிக்கு நோய் வந்தா அல்லாங்கோழிகளும் பாதிக்கப்படும். அதே போல ஒரு ஆட்டு மந்தையில ஒரு ஆட்டுக்கு நோய் வந்தா அல்லா ஆடுகளும் பாதிக்கப்படும்.

என்ன மிருகங்களுக்கு ஈகோ ரெம்ப குறைச்சல் அதனால சீக்கிரமா பாதிக்கப்படும். மன்சன்ல ஈகோ கொஞ்சம் அதிகம் அதனால லேட்டா பாதிக்கப்படுவான்.

மேலும் நம்மோட ஈகோ எல்லாம் கன்னித்திரை மாதிரி காலம் தக்ஜம் பண்ணா ஒரு நொடியில கிழிஞ்சுரும். அதனாலதான் சொல்றேன். அட்லீஸ்ட் சுய நலம் கருதியாவது தற்கொலைகளை தடுக்க ஒவ்வொருத்தரும் முயற்சி எடுத்துக்கனும்.

இப்பம் இந்த தற்கொலை விஷயத்துல ஒரு சில புள்ளிவிவரங்களை பாருங்க..

2010 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்துக்கிட்டாய்ங்க

மொத்த தற்கொலைகளில் மேற்கு வங்காளம் 11.9 சதம் ( முதல் இடம்)
ஆந்திரம் 11.08 சதம் (இரண்டாவது இடம்)

ஆந்திரம், கர்னாடகா ,கேரளா,மகாராஷ்டிரா மானிலங்களில் அதிகம் (51.7)

தற்கொலைசெய்தவர்களில் 55.9 சதம் பேர் மத்திய பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்காளம், கர்னாடகா ,தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்.

2009 ஆண்டுடன் ஒப்பிட்டால் 2010 ல் தமிழ் நாட்ல தற்கொலைகள் அதிகரிச்சிருக்கு. 2009 ல் 14 ஆயிரத்து 424 பேர் தற்கொலை

2010 ல 16 ஆயிரத்து 561 பேர் தற்கொலை செய்திருக்காய்ங்க

ஒட்டு மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பீகார் ( 23) கேரளா (22) மத்திய பிரதேசம் (21) ஆந்திரா (20)

இப்பம் கீழ்காணூம் 3 அம்சங்களை படிச்சதும் "ஏன் ஏன் ஏன்"னு பல கேள்விகள் உங்க மைண்ட்ல ரெய்ஸ் ஆகும். அந்த கேள்விகளை அப்படியே மனசுல வைங்க அடுத்த பதிவுல நோண்டி நுங்கெடுத்துருவம்ல.


தற்கொலை செய்துக்கறவுகள்ள கண்ணாலம் கட்டினவுக அதிகம்.69.2 சதவீதம். தற்கொலை செய்து கொள்பவர்களில் ஐந்தில் ஒருவர் இல்லத்தரசி.

ஆண்கள் : சமூக ,பொருளாதார காரணங்கள்
பெண்கள் விஷயத்துல மானசிக உணர்வு பூர்வ தனிப்பட்ட பிரச்சினைகளே காரணம்

நகரங்களில் தற்கொலை அதிகம். நகரங்களை பொருத்தவரை 30 பெரு நகரங்களில் பார்க்கும்போது பெங்களூர்,சென்னை, தில்லி,மும்பை முதலிடத்தில் உள்ளன.

Thursday, October 27, 2011

ஒரு தாய்குலத்தின் மிரட்டல் மெயில்


நெஜமாலுமே நமக்கு மிரட்டல் மெயில் தான் வந்திருச்சு போலன்னு பயந்துக்காதிங்க. மிரட்டலா ஒரு மெயில் அதுவும் தாய்குலத்துக்கிட்டேருந்து வந்ததை அவிக பர்மிசனோட இங்கன பப்ளிஷ் பண்றேன். போஃபர்ஸ் ஊழல் சீப்பட்டுக்கிட்டிருந்தப்ப ராம்ஜெத்மலானி ராஜீவ் காந்தியை தினசரி பத்து கேள்வி கேட்டு மிரட்டிக்கிட்டிருந்தாரு.அதைப்போல பல நாட்களா மெயில்ல கேள்விகள் மூலமா கலங்கடிச்ச கதை இது.

மெயிலுங்கறதால சுத்தி வளைக்கிறது, அனாவசிய மன்னாப்புகள் இத்யாதி யதேஷ்டமா இருந்ததால அதையெல்லாம் எடிட் பண்ணி பாய்ண்ட் டு பாய்ண்டா இங்கன தரேன்.,

1 பெண்கள் விஷயத்துல .நிஜமாவே இந்த உலகம் - சனம் மாறும்னு நம்பறிங்களா?

என்னங்க இது என்னென்னவோ கச்சா முச்சான்னு கேட்டு கலங்கடிக்கப்போறேன் - பேஜார் பண்ணப்போறேன்னுட்டு அரதப்பழசான கேள்வியை கேட்கறிங்க. சனம் மாறியிருக்காய்ங்க. நிச்சயமா மாறுவாய்ங்க. மொதல்ல புருசன் செத்ததும் உடன் கட்டை ஏற்றி கொன்னாய்ங்க - அப்பாறம் மொட்டை போட்டு இருட்டு மூலையில இருத்தினாய்ங்க - அப்பாறம் பூவைக்காதே,வெள்ளை புடவை மட்டும் உடுத்துன்னாய்ங்க - அப்பாறம் சின்னதா பூ போட்ட புடவை மட்டும் கட்டுன்னாய்ங்க. இப்பல்லாம் விதவையான 6 ஆவது மாசமே "இப்படியே இருந்தா எப்படி "ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாய்ங்க. மாறுவாய்ங்க.மாறியே தீருவாய்ங்க.

என்ன கொஞ்சம் டைம் வாங்கும். என்னைப்போன்ற சாமானியர்கள் சொல்வதை விட அரசாங்கம் சட்டம் போட்டு சொன்னா சீக்கிரம் மாறுவாய்ங்க.


2.பெண்களை ஒரேயடியா தூக்கோ தூக்குன்னு தூக்கி எழுதறிங்க. உங்க அசலான நோக்கம் என்ன?

மொதல்ல ஒரு மேட்டரை க்ளியர் பண்ணிரனும். என்னோட அஜெண்டா வித்யாசமானது. ரெண்டே கால் நாள்ளயும் முடியும் - அஞ்சு வருசத்துலயும் முடியும் - மிஞ்சிப்போனா 15 வருசம். எங்க ஊரு ஒய்.எஸ்.ஆர் சொன்னாப்ல 60 வயசுல நிச்சயம் ஜகா வாங்கிப்பன்.

தாய்குலத்தை புகழ்ந்து பேசி ஓட்டுவாங்கனும்ங்கற அவசியம் எனக்கில்லை. நேரிடை ஜன நாயகம் அமலாகி பிரதமரை மக்களே டைரக்டா எலக்ட் பண்ற நாள் வர்ரச்ச தேர்தல்ல நின்னா நிக்கலாம். ஆனால் இதெல்லாம் ந........ட..க்கிற காரியமான்னு எனக்குள்ளயே ஒரு பட்சி சொல்லுது.

சரி.. பெண்களை உசத்தி எழுதினா அவிகல்லாம் வந்து என் ப்ளாகை படிச்சு ஹிட்ஸ் கொடுத்து - பிரபலமாக்குவாய்ங்கன்னும் நான் நினைக்கலை. ஏன்னா அவிகளுக்கு மெகாசீரியல் பார்க்கவே நேரம் போதலை. இதுல ப்ளாக் படிக்க வந்தாலும் கோவில்,குளம்,சமையல்னு எத்தனை டைவர்ஷன்ஸ் இருக்கு.

பெண் வீக்கர் செக்ஸ் நேரடி- அதிரடி உண்மைகளை படிச்சாலே ஜூரம் வந்துரும். நம்முது எக்ஸ்ரே ரேஞ்சு.ஆக சான்ஸே இல்லை.

சரி ஆன்லைன்ல சோசியம் கேட்டுக்கிட்டு என் வங்கி அக்கவுண்டை புஷ்டியாக்குவாய்ங்களான்னா அதுவும் கடியாது. நம்ம க்ளையன்ட்ஸுல பெண்களை விரல் விட்டு எண்ணிரலாம்.

பின்னே என்னாத்துக்கு இந்த இழவுன்னா பெண்களால ஒரு ஆணுக்கு உடலுறவை தவிர்த்து உபரியா என்னல்லாம் தரமுடியும் - அதை பெற்றால் ஒரு ஆண் எந்த அளவுக்கு சாதிக்கமுடியும்ங்கறதுக்கு நானே ஒரு உதாரணம்.

ஒரு குடும்பத்தலைவி அகாலமா போயிட்டா அந்த இடத்தை வேறு ஒரு பெண் (மருமகளாவோ-மூத்த மகளாவோ) அந்த குடும்பம் எந்த கதியாகும்ங்கறதுக்கு எங்க குடும்பம் ஒரு உதாரணம்.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ரெண்டு பெண்கள் இருக்காய்ங்க. 1. தினசரி வாழ்க்கையில நாம பார்க்கிற பெண் 2. இயற்கையின் பிரதியா - நிதியா - பிரதி நிதியா இந்த உலகத்தையே ஒரு சொர்கமாக்கக்கூடிய பெண்.

துரதிர்ஷ்டவசமா அந்த இரண்டாவது பெண்ணை நூத்துக்கு 99.99 சதவீத ஆண்களால சந்திக்கவே முடியாம போயிருது.

சின்ன மேட்டர். ஆனால் டோட்டலா ஹ்யூமன் லைஃபே பிட்டர் ஆயிருது. முக்கியமா மனிதம் செத்துப்போகுது.

தனி மனிதன் செத்துப்போனான்ங்கற சேதிக்கு நான் என்னைக்குமே கவலைப்பட்டதில்லை.( சாக கிடக்காய்ங்கன்னா கொஞ்சம் டென்ஷன் ஆயிருவன் - அதுவேற மேட்டர்)

ஆனால் மனிதம் செத்துப்போச்சுன்னு தெரிஞ்சா மட்டும் கலங்கிருவன். இந்த மண்ணுலகில் மனிதம் சாகாம இருக்கனும்னா பெண்ணுக்குள் ஒளிஞ்சிருக்கிற அந்த ரெண்டாவது பெண் வெளிய வரனும்.அப்பத்தேன் மனிதம் பிழைக்கும்.


3.மனிதத்தை காப்பாத்தறதுல உங்களுக்கு என்ன இன்டரஸ்ட்?

நான் பலகீனன். இந்த பூமியில மனிதம் வாழும் வரைதான் என்னால வாழமுடியும். சர்வைவல் ப்ராப்ளம்ங்க.. இந்த கோணத்துல பார்க்கும் போது பெண்ணுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கு. மெல்ட் ஆறப்பத்தான் சிக்கலே வருது. மெல்ட் ஆகாம இருக்க முடியலை. பெண்களை பற்றி எழுதும்போது என்னை பற்றியும் எழுதறதா ஒரு சப் காஷியல் தாட் இருக்கும் மைண்ட்ல.

4.பெண்ணை பற்றி இவ்ள உயர்வா எழுதறிங்க. ஆனால் செக்ஸை நுழைக்கிறிங்க.ஏன்?

பெண்ணுக்கு செக்ஸ் தேவையில்லைங்கறிங்களா? அ பெண் இல்லாமயே செக்ஸ் சாத்தியம்ங்கறிங்களா? புரியலை

5.பெண்ணுக்கு செக்ஸ் முக்கியமே இல்லை..

இதை நானே பல தடவை சொல்லியிருக்கேன். இது நல்லதில்லை. அவள் அதுக்கு மாற்றா எதிர்பார்க்கிற அன்பு ,பாசம், சமூக பாதுகாப்பெல்லாம் தர்ர நிலையில இந்த சமூகம் இல்லை. அவள் தனக்கு செக்ஸ் முக்கியமில்லைன்னு இருக்கிறது டெம்ப்ரவரி . எனக்கும் செக்ஸ் தேவைன்னு அவள் எந்த வயசுல வேணா தன் நினைப்பை மாத்திக்கலாம். அது 30 வயசுல நடக்கலாம், 40 வயசுல நடக்கலாம்.ஏன் 50 வயசுல கூட நடக்கலாம்.அவள் பெண்ணுக்குள் ஒளிஞ்சிருக்கிற 3 ஆவது பெண். அவளை தாங்கற சக்தி ஆண் புழுக்களுக்கு இல்லை.

இந்த நிலையெல்லாம் வரதுக்கு மிந்தியே -அவள் தனக்கும் தேவைன்னு நினைக்கறதுக்கு மிந்தியே ஒழுங்கு மரியாதையா செக்ஸும் கிடைச்சா அந்த பெண்ணுக்குள்ள ரெண்டாவது பெண் வெளிவருவாள். அவள் வரனும்னு தான் செக்ஸை பத்தி எழுதறேன்.


அதையும் ஆண்களை முன்னிலைப்படுத்தித்தான் எழுதறேன். ஏன்னா செக்ஸ்ல கூட ஆண் தான் கமாண்டர்.

சமீப காலத்துல செக்ஸ்ல திருப்தி கிடைகக்லேங்கற ஒரே காரணத்தை காட்டி விவாகரத்துக்கு அப்ளை பண்ற பெண்களோட நெம்பர் அதிகரிச்சிருக்கிறதா ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. ஆணுக்கு சமமா வரணும்னு பெண்ணை ஆணாக்கிட்டாய்ங்க. அதனோட விளைவு தான் இது.

( கேள்வி பதில் தொடரும்)

Tuesday, October 25, 2011

நான் படித்த பலான கதை


சொல்லப்போற கனமான மேட்டரை உங்க மைண்ட் ஏத்துக்கறதுக்காக - ஜஸ்ட் ரிலாக்ஸ் பண்ணிக்க நான் படித்த பலான கதையோட சுருக்கத்தை உங்களுக்கு சொல்லிர்ரன்.

பலான கதைன்னதும் ஏதோ பஸ் ஸ்டாண்டுல இருட்டு மூலையில திருட்டுத்தனமா வாங்கி படிச்ச கதைன்னு நினைச்சுராதிங்க. லீடிங் தமிழ் பத்திரிக்கையின் தீபாவளி மலர்ல படிச்சேன். ஒரு ஹையர் மிடில் க்ளாஸ் ஃபேமிலிய எழுத்தாளர் படம் பிடிச்சு காட்டறாரு. மம்மி,டாடி ரெண்டு பேரும் பிசியோ பிசி. பாட்டிய கழட்டி விட்டுட்ட ஃபேமிலி. ஒரே மகள். மகளோட கைப்பையில மம்மி காண்டோமை கண்டெடுக்கிறாள். என்ன ஏதுன்னு கேட்டா மகள் " நான் தான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே .. நீ பார்த்த பையனை நான் கல்யாணம் பண்ணிக்குவன் - மத்த மேட்டரையெல்லாம் கண்டுக்கப்படாது "ங்கறாள். உடனே அம்மாக்காரி பாட்டிக்கு ஃபோன் போட்டு "அம்மா.. நீ ஒடனே வந்துரு"ங்கறா. இதான் கதை.

எத்தீனி பெண்கள் இப்படி கைப்பயில காண்டோமோட அலையறாய்ங்கன்னு நமக்கு தெரியலை. மேலும் இந்த மேட்டர்ல பாட்டி வந்து என்னத்தை கழட்டறதுன்னும் புரியலை. உங்களுக்கு புரிஞ்சா சொல்லுங்க. கேட்டுக்கறேன்.

இந்த கதை சொல்லும் நீதி:

இளைய தலைமுறை ஊர் மேயப்போனாலன்றி முதியோர் ஆசிரமங்கள் ஹவுஸ் ஃபுல்?
தாய்மாரெல்லாம் பெண்ணோட ஹேண்ட் பாகை குடையனும். அப்பத்தேன் காண்டோம் இருந்தா கிடைக்கும்?
குடும்பத்தலைவி வேலைக்கு போனா மகள் பாக்ல காண்டோம்தான் வரும்?

இந்த கதை வெளிவந்த தீபாவளி மலர் ..................பத்திரிக்கையோடது. சரி சொல்லவந்த கனமான மேட்டருக்கு வந்துர்ரன்.


இப்பம் நான் சொல்லப்போறதெல்லாம் வெத்தலையில மை போட்டு பார்த்த சமாசாரம் கிடையாது, ஞான திருஷ்டி இத்யாதி மேட்டரும் கடியாது. நம்முது கடகலக்னமாச்சா லக்னத்துலயே குருவேற கீறாரா இயற்கைக்கும் -இறைவனுக்கும் நெருக்கமான ராசி/லக்னம் கடகம்தேன்.

அதனால நாம வள்ளாட்டு பராக்கா ரோசிச்சா கூட அசலான மேட்டர்லாம் நம்ம மைண்ட்ல ஃப்ளாஷ் ஆகும். அப்படி ஃப்ளாஷ் ஆன மேட்டருதேன் இந்த பதிவுல வரப்போவுது. அல்லா கிரகங்களும் கேந்திர கோணங்கள்ள இருந்தா அதுக்கு பரிவ்ராஜக யோகம்னு பேரு. அவிகளுக்கு கர்மாவே அண்டாது - மறு பிறவி கடியாதுன்னு ஒரு தியரி.

நம்ம ஜாதகத்துல சந்திர,சுக்கிரன் தவிர மத்த கிரகமெல்லாம் கேந்திர கோணம்தேன். சந்திர சுக்கிரன் கூட வாக்குஸ்தானத்துலதேன் இருக்காய்ங்க. தாளி அன்னா ஹசாரே மாதிரி காலவரையற்ற மவுன விரதம் ஆரம்பிச்சுட்டா இதுவும் ஓகே ஆயிரும்.

இந்த ரெண்டு பாய்ண்டையும் கொலைட் பண்ணி முக்கி ரோசிச்சப்ப நமக்கு ஸ்பார்க் ஆன மேட்டர் அபத்தமா இருந்தாலும் மறுபடி மறுபடி ஸ்பார்க் ஆயிட்டே இருக்கு. கு.பட்சம் 1986 லருந்து. கேவலத்திலும் கேவலமா ரோசிச்சாலும் முன்னொரு காலத்துல நான் ஒரு தேவனா இருந்திருக்கனும். அதான் வாக்காளர் பட்டியல் கணக்கா முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்காய்ங்களாமே.அதுல ஒரு கிராக்கின்னு வச்சுக்கங்க.

ஒரு தாட்டி ஏதோ மாநாடு கணக்கா கூட்டி பேசிக்கிட்டிருக்காய்ங்க. அப்பம் நாம எந்திரிச்சு பழைய படத்துல ரஜினி கணக்கா "இன்னாபா விதி விதி... விதி . பொல்லாத விதி. மன்சங்களோட வாழ்க்கை . விதிப்படி தான் நடக்கும் - நடக்கனும்னா அப்பாறம் நாமெல்லாம் இங்கன இருந்து என்னத்தை கழட்டறோம். மொதல்ல விதின்னா என்னன்னு சனத்துக்கு தெரியமாணாமா? ஆட்டத்தோட விதி என்னன்னு எக்ஸ் பார்ட்டிக்கு தெரியாம இருக்க்ச்சொல்ல விதிங்கற பேர்ல டார்ச்சர் பண்ற விளையாட்டு இன்னா விளையாட்டு? இந்த ஆட்டத்துக்கு நான் வரலை."ன்னு சொல்ட்டாப்ல கீது..

அப்பம் மத்த தேவருங்கல்லாம் இவன் இன துரோகி இவனை பாய்க்காட் பண்ணுங்க. இவன் விதியோட ரகசியத்தையெல்லாம் சனத்துக்கு போட்டு உடைச்சு ஸ்ருஷ்டி தர்மத்தையே தாறுமாறாக்கிருவான் போலனு ப்ரொட்டெஸ்ட் பண்ணாய்ங்க போல.

அப்பம் கல்கி பகவான் ,அம்மா பகவான் ரேஞ்சுல மேடையில உட்கார்ந்திருந்த சிவ+ சக்தி நம்மை கூப்டு கொஞ்சம் போல காம்ப்ரமைஸ் பண்ணாய்ங்க போல.

அந்த உரையாடல்:

"மகனே! சனத்துக்கு தேவையான டேட்டா மொத்தம் அவிக மைண்ட்ல ஸ்டோர் பண்ணித்தானே அனுப்பறோம். அதுல விதியின் மர்மங்களும் அடக்கம்"

"யம்மா .. கம்ப்யூட்டர்ல ஹிடன் ஃபைல்னு ஒரு ஆப்ஷன் இருக்கு. அதை பார்க்கனும்னா ஃபோல்டர் ஆப்ஷன்ல போய் மாத்தனும். அப்பத்தேன் கண்ணுக்கு தெரியும். அந்த மாதிரிதானே அந்த டேட்டால்லாம் சப் கான்ஷியஸ் மைண்ட்ல புதைஞ்சு கிடக்கு"

"அதை தோண்டி எடுக்கிற கடப்பாறையும் கொடுத்துத்தானப்பா அனுப்பறோம்."

"அந்த கடப்பாறைய எங்கன சார்த்தி வச்சுருக்குன்னு தெரியனுமே"

(தேவர்கள் "வெட்கம்.. வெட்கம்.. உட்கார் உட்கார்"னுட்டு கோஷம் போடறாய்ங்க)

"இதையெல்லாம் சனத்துக்கு சொல்ல எத்தனையோ மகான்களை அனுப்பினோம்பா"

"யம்மா .. அதெல்லாம் அந்தக்காலம் இப்பம் காலம் மாறிப்போச்சு. நெல்ல விஷயத்தை கூட கெட்ட விசயம் கணக்கா சொன்னாதான் ரீச் ஆகுது. பலான ஜோக் சொல்லிக்கிட்டு உபதேசம் பண்ண ஓஷோவையே அவரு செத்த பிற்காடுதேன் தீபாவளி மலர்ல எல்லாம் அவரோட உபதேசங்களை தொட்டுக்க ஆரம்பிச்சாய்ங்க .. எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க. நான் சொல்றேன் சனத்துக்கு விதியோட சூட்சுமத்தை"

"சொல்..சொல்..சொல்லிப்பார்"

"உங்க மாடுலேஷனே சரியில்லை. உங்க உத்தேசம் என்ன? கலிலியோவை கல்லாலடிச்ச மாதிரி அடிப்பாய்ங்கங்கறிங்களா?"

"பார்க்கத்தானே போகிறாய்.. செல்..செல்..சென்று பார்"

"ஆனா ஒரு கண்டிஷன் "

"அதையும் சொல்.."

"என் பேச்சால் நன்மை மட்டும் தான் நடக்கனும்"

"அது ஸ்ருஷ்டி தருமத்துக்கு விரோதம். நோக்கத்துடனான செயல்னு இறங்கினா நன்மை தீமை கலந்தே வரும் "

"நோக்கம்னா சுய நல நோக்கம் தானே"

"பொது நல நோக்கமானாலும் இதுவே விதி"

"உங்க விதியில இடி விழ.. சரி மானுட குலம் வாழ நான் போய் வருகிறேன்"

"போகலாம்.. ஆனால் வரமுடியாது"

"ஏன்?"

"நோக்கத்துடனான செயல் கருமமூட்டையை சேர்க்கும் "

"சூப்பர் ரின் போட்டு வெளுத்துக்கறேன் வரேன்.."

"சூப்பர் ரின்னா ? அது எது?"

"ச்சொம்மா பேச்சுக்கு சொன்னேன். உங்களை மறக்காம இருக்கிறதே .. சதா மனசுல நிறுத்தறதே கருமமூட்டைய வெளுக்கும்னு சொன்னேன்"

"நோக்கம் பிறந்தால் .. மனம் தடுமாறும்"

"ஸ்டெடி பண்ணிக்குவம்ல"

"ஒழி .. உன் பேச்சால் ஒரே புல்லுக்கு கூட விதியின் மருமத்தை உணர்த்தமுடியாது"

"அதையும் பார்த்துர்ரன்"

( இப்படித்தேன் இங்கன வந்து அல்லாடறதா ஒரு சம்சயம். )


கொசுறு:
நம்ம நல்ல நேரம் சதீஷுக்கும் தமிழ்மணத்தில் கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அவரை கட்டணசேவைக்கு மாறும் படி கேட்டதாகவும் -தன்னிச்சையாக க.சேவுக்கு மாற்றியதாகவும் குமுறியிருக்கிறார்.

நல்லவேளை (அல்லது நம்ம காட்டடிக்கு பயந்தோ என்னமோ ) நம்மை க.சேவுக்கு கூப்பிடலை. பொய்யா ஏன் புழுதி வாரி இறைக்கிறது.

சோதிடப்பதிவுகளைமட்டும் நீக்கினதா தகவல் கொடுத்து தொடர்ந்து சோ.பதிவுகள் போட்டா நீக்கிருவம்னு வார்ன் பண்ணாய்ங்க. " காண்டோமை ஒளிச்சு வச்சா முதலிரவு நிக்காது "ன்னு பஞ்ச் பேசிட்டு கழண்டுக்கிட்டோம். த.கருவிப்பட்டையையும் நீக்கிட்டம்.

இதுல சவூதி அரேபியால தடை - தமிழ்மண நிர்வாகியின் அ நாகரிக கமெண்டுன்னு ஏதேதோ கண்ல படுது எதுவும் நல்லா இல்லை.

தப்பு செய்யறது தப்பே இல்லை. தப்பை திருத்திக்கமாட்டேன்னு அடம் பிடிக்கிறதுதேன் தப்பு.

Monday, October 24, 2011

ஒரு அனுபவம் - சில பாடங்கள்


சின்னவயசுல சித்தி வீட்டுக்கு போறச்ச -மூட்டை முடிச்சை இறக்கிவச்சுட்டு நாம வாய திறந்தா அந்த வீட்ல எந்த வேலையும் ஓடாது. அல்லாரும் நம்ம வாய பார்த்துக்கிட்டு கிடப்பாய்ங்க. அந்த வீட்ல நமக்கு ஒரு அக்கா, நாலு தங்கச்சினு ஞா. சித்தி மட்டும் என்னவாம் ஒரு பக்கம் திட்டித்தீர்த்துக்கிட்டே கரண்டியும் கையுமா சமையலறைக்கும் ஹாலுக்கும் ரன் எடுத்தபடி இருப்பாய்ங்க. நம்ம வாய் சாலம் அப்படி.

அந்த வயசுல முக்கியமா பட்ட மேட்டர்லாம் இப்பம் சப்பை மேட்டராயிருச்சு. அதனால வயசு பிள்ளைங்க கிட்ட எதையாவது பேசனும்னா ரோசிக்க வேண்டியதாயிருக்கு. துருக்கி பூகம்பம்தேன் நம்மை அதிகமா பாதிக்குது. இப்பம் கேரளா ,தமிழகத்துல 3.5 வருசத்துல பூகம்பம் கியாரண்டின்னு சொல்றாய்ங்க.

பூகம்பத்தை விட அதை ஃபேஸ் பண்ணக்கூடிய நிலையில இல்லாத அரசு இயந்திரம்தேன் பேதியாக்குது.பசங்க கிட்டே இடையில என்னப்பா போரடிக்கிறேனா? ச்சொம்மா என் திருப்திக்கு சொல்லாதே..போரடிச்சா சொல்லிருன்னு பேசவேண்டியதாயிருக்கு.

நியூஸ் பேப்பரை எடுத்தா சில பிள்ளைங்க கிரிக்கெட் -சினிமா மட்டும் பார்த்துட்டு (அண்டர்லைன்) போட்டுர்ராய்ங்களா பகீருங்குது. அத்வானியோட மொத ரதயாத்திரையின் போது ஹின்டுவை கூட படிக்கவேண்டியதாயிருந்ததுன்னா பார்த்துக்கங்க. இதனால வீட்ல சின்ன உலகயுத்தமே நடக்கும்.

ஆனால் நம்ம பசங்க ஊஹூம்.. தெலுங்கு பேப்பர்ல தாய்குலத்துக்குன்னு ஒரு இணைப்பு வச்சிருப்பாய்ங்க. வாழைப்பழத்துல அழுகின பாகத்தை கிள்ளிபோடறாப்ல அதை கழட்டி வீசினப்பறம் தான் நாம பேப்பரையே படிக்க ஆரம்பிப்போம்.ஆனால் அதை என்னமோ எஸ்.எஸ்.சி ரிசல்ட் வந்த பேப்பர் மாதிரி என் பொண்ணு வாரிக்கிட்டு போறதை பார்த்தா பகீருங்குது.

நம்ம வாய் சாலத்து மேல நம்பிக்கைய வச்சு ஒரு மேட்டரை சொல்லலாம்னுதேன் இந்தபதிவை ஆரம்பிச்சோம். ரெம்ப சாதாரணமான சம்பவங்கதேன்.ஆனால் இந்த சம்பவங்களை இயற்கை கோர்க்கிற விதமிருக்கே ச்சொம்மா சொல்ல கூடாது நெசமாலுமே தூள் தான்.

நாம விளம்பரத்தையே உள்ளடக்கமா கொண்டு ஒரு பத்திரிக்கை நடத்தறது உங்களுக்கு ஞா இருக்கலாம். ஆரம்பத்துல டிடிபி,டிசைன்னு ரெம்பவே அல்லாட வேண்டியிருக்கும்.

இடையில மக டிசைன்ல விளையாட ஆரம்பிச்சபிறகு இம்சை குறைஞ்சது. ( நம்ம சுகுமார்ஜி அவளோட டிசைனை பார்த்துட்டு கண்ணு வலிக்குதுன்னுட்டாரு - அப்படி சொன்னதோட நிக்காம கலர் செலக்சனுக்கு ஒரு சூட்சுமத்தையும் சொல்லிக்கொடுத்து புண்ணியம் கட்டிக்கிட்டாரு.) இப்பம் தீபாவளி ஸ்பெஷல் டிசைன் பண்ணிக்கிட்டிருக்கம்.

நாம வாழறது தெலுங்கு தேசத்துலயாச்சே அதனால என்னதான் வெறுமனே விளம்பரம்னாலும் சுந்தரதெலுங்குலயும் மேட்டர் வரும். வந்தே தீரும். இந்தபிரச்சினைய ராம்பாபு சாஃப்ட்வேரை வச்சு சமாளிச்சிட்டிருந்தோம். சிஸ்டத்தை ஃபார்மட் அடிக்கிறப்ப பேக் அப் எடுக்காம கோட்டை விட்டாச்சு.

நெட்ல தேடு தேடுன்னு தேடறோம். ஒன்னும் பெயரலை. தேடலின் சமயம் மாலை 4.30 முதல் 7 வரை. பொஞ்சாதி டிவி ரிமோட்டை தேட நொந்து போயிட்டம். கொய்யால தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்ங்கறதெல்லாம் பீலாவா? எவனோ ஒருத்தனுக்கு அம்பதோ நூறோ கொடுத்து அடிச்சுவிடாம இந்த ஸ்ட்ரெய்ன் தேவையான்னு ஆயிருச்சு.

சில அட்வர்டைசர்ஸை சந்திக்கவேண்டியிருந்ததால தேடும் பணியே பணியா கொள்ளாம வெளிய புறப்பட்டாச்சு. ஒரு பார்ட்டி ஃபோட்டோ கொடுக்க அதை ஸ்கான் பண்ணியாகனும். வீட்ல மெகாசைஸ் ஸ்கானர் இருந்தாலும் அதை கனெக்ட் பண்ணா தாளி கீ போர்ட் வேலை செய்யாது அ மௌஸ் வேலை செய்யாது அ ரெண்டும் வேலை செய்யாது.

இந்த லொள்ளை தாங்கமுடியாமயே ஸ்கான் பதிவுக்கெல்லாம் லாங் லீவ் விட்டாச்சு.அதனால ஓரளவு பழக்கமான நெட் சென்டருக்கு போய் ஸ்கான் பண்ண சொன்னேன்.

கொக்குக்கு ஒன்னேமதிங்கற மாதிரி டொக்கா நெட் ஆசாமிய தெலுங்கு சாஃப்ட்வேர் பற்றி விஜாரிச்சேன். அவரு அங்குர் சாவ்ட் வேரை சிபாரிசு பண்ணதோட சி.டி.கொண்டாங்க லோட் பண்ணித்தரேன்னாப்ல.

ரூ.25000 ஐ ஒரே நாள்ள செலவழிச்ச ரிக்கார்டுக்கு சொந்தக்காரங்கற பயத்துல வெளியவர்ரச்ச ரூ30க்கு மேல கொண்டு வர்ரதில்லை. அந்த ரூ30 செலவழியற வரை வீடு திருமபறதில்லை. செலவழிஞ்சுட்டா வெளிய நிக்கறதில்லை.

பையில பார்த்தா சிடிக்கு தான் தேறும் போல.என்னதான் சாஃப்ட் வேர் ஓசின்னாலும் ரைட்டிங் சார்ஜாச்சும் தரனும்னு வீட்டுக்கு ஃபோன் அடிச்சு சில்லறை கொண்டுவரச்சொன்னேன். அம்பதா கொண்டுவந்தாய்ங்க.

சரி இருக்கட்டும்னு வச்சுக்கிட்டு நெட் ஆசாமிக்கு ரைட்டிங் சார்ஜு கொடுத்துட்டு ரூ40 ஐ பையில வச்சுக்கிட்டு பஜாருக்கு போனேன்.

ம்னசுல எல்லையில்லாத தகிரியம் தாளி எவனையும் போய் கெஞ்சத் தேவையில்லை. தன் கையே தனக்குதவின்னு அடிச்சு தூள் கிளப்பலாம்.( நம்முது சிம்மராசி -சனி ரெண்டுலருந்து மூணை பார்க்கிறாரு)

அங்கருந்து நேர சத்யாவோட நகைக் கடை. ச்சொம்மா இருந்தவனை தீபாவளி பூஜைக்கு ஆந்தை வாகனத்தோட லட்சுமி சிலை வச்சு செய்யுன்னு ஜும் ஏத்தி விட்டாச்சு. ஆனா ஆர்டர் கொடுக்கிற சமயம் இன்னொரு ஆசாமி சத்யாவுக்கு டபுள் டோஸா வினோலாக்ஸ் கொடுக்க ஆந்தை வாகனம் கான்சல். ஆனாலும் சிலை ஓகே.

அன்னைக்கப்பாறம் சத்யாவுக்கு கான்டாக்டல போகலை. இந்த கேப்ல சென்னை போய் பர்ச்சேஸ் எல்லாம் முடிச்சு வந்திருக்காரு போல. நம்மை பார்த்ததும் கண்ணனை பார்த்த ராதை கணக்கா வா வா ..னுட்டு கடைய விட்டு இறங்கி வண்டியேறிட்டாப்ல ( அவரோட வண்டிதான்)

ஷகரான கடை பூஜை முடிக்க பகல் 12 ஆகும் (இடையிடையில வியாபாரம்) டிஃபன் 2 மணிக்கு சோறு நாலு மணிக்கு ராத்திரி சோறு பன்னெண்டு மணிக்குத்தேன்.

வண்டி நேர புக்ஸ்டோர் போயிருச்சு. அங்கன பூஜைக்கான இன்விட்டேஷனை போட பந்தா கவர் (டிசைன்+ப்ரிண்டிங் நம்ம மகதேன்) , ரெண்டு மார்க்கர்லாம் வாங்கியாச்சு. பையில கைய விடறாரு காசை காணோம் . கொஞ்ச நா இடைவெளிக்கப்பாறம் நம்மை பார்த்த உணர்ச்சி வேகத்துல கல்லாவுல இருந்து காசை எடுக்காமயே கிளம்பிட்டாப்ல.

சித்தூரு ஊரு சின்னதா இருந்தப்ப வேற கதை. ஒவ்வொரு கடைகாரருக்கும் தன்னோட ஒவ்வொரு கிராக்கியோடவும் பர்சனல் டச் இருக்கும். இப்பம் எவன் முகத்தை பார்க்கிறான்? அந்த நிமிசத்துல சத்யாவோட மன நிலைய வர்ணிக்கனும்னா தனிப்பதிவே போடனும். தீபாவளி பர்ச்சேஸ் மட்டும் ஒரு லட்சத்து அம்பதாயிரத்துக்கு செய்துட்டு வந்திருக்கிற பார்ட்டி. என்னமா ஃபீல் பண்ணியிருப்பாருன்னு நினைச்சுப்பாருங்க.

பில்லு எவ்ளோங்கறிங்க? கரீட்டா நாப்பது ரூவா. நாம படக்குனு எடுத்து நீட்ட சத்யாவுக்கு ஒரே ஆச்சரியம் . ( இவன் முப்பதுக்கு மேல வச்சிருக்க
மாட்டானே..அதுலயும் நேரம் இப்ப ராத்திரி எட்டாகுதே)

ராத்திரி எட்டுங்கறது சத்யாவோட டீ டைம். கடைலருந்து "டுப்கி"அடிச்சாவது டீ குடிக்கிற கிராக்கி.ஆனால் அவர் கையிலயும் கால் காசில்லை. நம்ம கையிலயும் காசில்லை.

புஸ்தவ கடைக்கும் - சத்யா கடைக்கும் மிஞ்சிப்போனா 100 அடி தூரமிருக்கலாம் அவ்ளதான்.ஆனால் கையறு நிலை.

சத்யாவுது மீனராசி.சனி எட்டை பார்க்கிறாரு. ரெண்டு மூனு வாரத்துக்கு மிந்திதான் 407 வேன் காரன் ரைட்ல பூந்து வண்டியோட டேஞ்சர் லைட்ஸ் காலி, நெம்பர் ப்ளேட் வளைஞ்சு போச்சு. இப்பம் இந்த மாதிரி.

இப்பம் சொல்லுங்க .ஜோதிடம் மூட நம்பிக்கையா?

Sunday, October 23, 2011

சனிப்பெயர்ச்சி பலன் ( 2011 -2013)


அண்ணே வணக்கம்ணே!
நீங்க இந்த வலைப்பூ/வலைதளத்துக்கு புதுசு - வெறுமனே இன்னொரு ராசிபலனின்னுட்டு நீங்க வந்திருந்தாலும் நோ ப்ராப்ளம் உங்க ராசிய தேடி மேய்ஞ்சுட்டு போயிரலாம். மற்றபடி பழைய பறவை போல வந்த " நம்மாளுங்க " ளுகளுக்கு ஒரு விருந்தே காத்திருக்கு. பன்னெண்டு ராசிகளுக்கான பலனை அடுத்து சனியோட ஜாதகத்தையே தந்திருக்கம்ல.. உடுங்க ஜூட்.

1.மேஷ ராசி:

இவிகளுக்கு சனி 10,11 க்கு அதிபதி. இவர் 7 ல நின்னது பொதுவிதிப்படி நாட் ஓகேன்னாலும் சிறப்புவிதிகளின் படி சில நல்ல பலன்களை பெறமுடியும். செய் தொழிலில் ஒரு பார்ட்னர் அமைய வாய்ப்பிருக்கு. அவரு கருப்பா பயங்கரமா அ பயங்கர கருப்பா இருக்கலாம். ஒரு தலித்தா கூட இருக்கலாம்.

கண்ணாலமாகாத பார்ட்டிங்க தங்கள் தகுதிக்கு பல படி தாழ்ந்த பெண் மீது காதல் கொள்ளலாம். வெகு சிலர் வேலைக்காரி மேட்டர்ல ஜொள்ளு விட்டு ஜோட்டடி வாங்கலாம். அல்லது அப்படி ஒரு அபவாதம் வரலாம். டேக் கேர்.

மூத்த சகோதரர்/ரி வகையில தாமதமாகவேனும் உதவிகள் கிடைக்கலாம். என்ன ஒரு லொள்ளளுன்னா 7 ல உள்ள சனி ஜன்மத்தை பார்க்கிறதால கால், நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினைகளும் வரலாம்.

குறிப்பு: லக்னாதிபதியான செவ் வக்ரம் பெறுவதால் 2012 ,ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை கொஞ்சம் கேர் ஃபுல்லா இருக்கனும்.

2.ரிசப ராசி:

இவிகளுக்கு 9 ,10 க்கு அதிபதியான சனி 6 ல நின்னது பொதுவிதிப்படி ஓகோ. ஆனால் சிறப்பு விதிப்படி பார்த்தா அஞ்சுல சனி இருக்கிறச்ச எதிர்கொண்ட அவமானங்கள், புத்ரஹானி, புத்தி ஹீனம்லாம் இவிகளை இப்பம் சாடிஸ்டிக்கா மாத்திரும். இந்த ரெண்டரை வருசம் சனங்களை டார்ச்சர் பண்றதே வேலையா ஆயிரலாம். அப்பா நோய் வாய் படலாம் அவரோட விரோதம் வரலாம். சொத்து தகராறு,சேமிப்பு ,முதலீடுல தக்ராறு,தூர தேச தொடர்புகளில் மனகிலேசம் ஏற்படலாம். செய்தொழிலில் கடன் வாங்க வேண்டி வரலாம்.போட்டி சாஸ்தியாயிரும். ஒரு சிலருக்கு தொழில் தொடர்பான வியாதி கூட வரலாம்.

3.மிதுன ராசி:

இவிகளுக்கு 8 , 9 க்கு அதிபதியான சனி 5 ல வர்ரது பொதுவிதிப்படி ரெம்ப கெட்டது. அவமானங்கள், புத்ரஹானி, புத்தி ஹீனம்னு ஃபேஸ் பண்ணவேண்டி வரும். சிலருக்கு தற்கொலை எண்ணமே கூட வரலாம். செத்துப்போனவன்லாம் கனவுல வருவான்.

ஆனால் ஒரு கட்டத்துல அதிர்ஷ்ட வசமா குறைஞ்ச விலைக்கு ஒரு சொத்து அமையலாம். அப்பா,சேமிப்பு ,முதலீடு ,தூர தேச தொடர்பு/பயணத்தில் இருந்த தங்கு தடை திடீர்னு விலகிரும்.

4.கடக ராசி:
இவிகளை பொருத்தவரை சனி 7 ,8 க்கு அதிபதி. இவரு 4 ல வர்ரது பொதுவிதிப்படி நல்லதில்லை. இதனால தாய்க்கு கால் , நரம்பு ,ஆசனம் தொடர்பான உடல் நல பாதிப்பு/பிரிவு , வீடு மாற்றம், வாகன வகையில் நட்டம், மாணவர்களுக்கு கல்வியில் பின்னடைவு, உத்யோகஸ்தர்களுக்கு சீட் சேஞ்ச், ட்ரான்ஸ்ஃபர் இத்யாதி நடக்கலாம்.

ஆனா திருமணமாகாதவர்களுக்கு தாய்வழி உறவுல பொருளாதார ரீதியா பிற்பட்ட குடும்பத்து பெண் மனைவியாகவும் வாய்ப்பிருக்கு.

5.சிம்ம ராசி:
இவிகளுக்கு சனி 6,7க்கான அதிபதி. இவர் 3 ஆமிடத்துக்கு வர்ரது பொதுவிதிப்படி நல்லதுதேன். இதனால் மனோ தைரியம் கூடனும். பிரயாணங்களால்,சகோதரவர்கத்தால் அனுகூலம் ஏற்படனும். அதே நேரம் மனைவியை காட்டும் ஏழாமிடத்து அதிபதியாக இவர் 3 ஆம் பாவத்துக்கு வர்ரதால மனைவிக்கு அல்லல் அலைச்சல் அவிகளுக்கும் உங்களுக்கும் இடையில் உரசல் ஏற்படலாம்.

சகோதரம் நோய் வாய்ப்படுதல் அ அவிகளோட முட்டல் மோதல் ஏற்படலாம்.கடன் வாங்கி பயணம் செய்யவேண்டியும் வரலாம். சவுண்ட் பாக்ஸ்ல பிரச்சினை வரலாம்.

6. கன்னி ராசி:
இவிகளுக்கு சனி 5 ,6 க்கு அதிபதி . இவர் ரெண்டாமிடத்துக்கு வர்ரது பொதுவிதிப்படி நல்லதில்லை. ஆனால் 5 - 2 பாவங்களுக்கிடையில் தொடர்பு திடீர் தனயோகத்தையும் தரலாம். அதே போல 6 -2 பாவங்களுக்கிடையில் தொடர்பு திடீர் தன நஷ்டத்தையும் தரலாம். மேலும் இது உச்ச சனி என்பதால் லாப நஷ்டம் ரெண்டுமே ஹை பட்ஜெட்ல நடக்குமுங்கோ. வாய் பேச்சால விரோதம் வரலாம் (காரியமும் நடக்கலாம்) குடும்பத்துல மெம்பர்ஸ் சாஸ்தியாகலாம் ,

பழைய சோறு/ஆறின சோறு சாப்பிடவேண்டி வரலாம்.( சில காலம்தேன்) சிலருக்கு நரம்பு தொடர்பான கண் நோய் வரலாம்.

7.துலா ராசி:

இவிகளுக்கு சனி 4 ,5 க்கு அதிபதி .இவர் ஜன்மத்துக்கு வர்ரது பொதுவிதிப்படி நல்லதில்லை. இதனால கண்ணாலமாகாத பார்ட்டிங்க தங்கள் தகுதிக்கு பல படி தாழ்ந்த பெண் மீது காதல் கொள்ளலாம். வெகு சிலர் வேலைக்காரி மேட்டர்ல சில்மிஷம் பண்ணி சீப்பட வாய்ப்பிருக்கு. அல்லது அப்படி ஒரு அபவாதம் வரலாம். டேக் கேர்.

ஆனால் கொஞ்சம் உன்னிப்பா பார்த்தா வாரிசுகள், தாய்,வீடு,வாகனம்,கல்வி ஆகியவற்றில் சிரத்தை கூடலாம்/கவனம் தேவைப்படலாம். சிரத்தை -கவனத்துக்கு ஏற்ற பிரதிபலனும் கிடைக்கலாம். எதிர்காலம் குறித்த கவலை உங்களை சரியான ரூட்டுக்கு திருப்பலாம். இப்பம் நீங்க எடுக்கிற முடிவு உழைப்புக்கு அஞ்சாததா இருக்கலாம்.

8.விருச்சிக ராசி:

இவிகளுக்கு சனி 3 ,4 க்கு அதிபதி. இவர் 12க்கு வர்ரது ( ஏழரை ஆரம்பம்) பொது விதிப்படி நல்லதில்லை. ஆனால் சகோதரர்கள்,பயணங்கள், தாய் ,வீடு,வாகனம், கல்வி வகையில் வரும் செலவுகளுக்கு அஞ்சாது செய்துகிட்டு வந்தா தப்பிச்சுரலாம். அந்த செலவு தண்டச்செலவாயிராம பார்த்துக்கங்க.

சுப செலவுகள் தாமதமாகலாம், தூக்கக்குறைவு ,தாம்பத்யத்தில் ஈடு பாடு குறையலாம். இரும்பு பொருள் ஏதாவது தொலைந்து போகலாம், கெட்டுப்போகலாம்.

குறிப்பு: லக்னாதிபதியான செவ் வக்ரம் பெறுவதால் 2012 ,ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை கொஞ்சம் கேர் ஃபுல்லா இருக்கனும்.

9.தனுசு ராசி:

இவிகளுக்கு சனி 2, 3 க்கு அதிபதி. இவர் 11 க்கு வர்ரது பொது விதி/சிறப்பு விதி ரெண்டு விதிப்படியும் நல்லதுதேன். டபுள் தமாக்கான்னா இதான்னு விசில் அடிக்காதிங்க - இன்னொரு கோணத்துல பார்த்தா உங்க லக்னாதிபதியான குருவுக்கும் சனிக்கும் பகை இருக்கிறதால சனி கொடுக்கிற பலன் எல்லாம் "ஒரு மாதிரியா" இருக்கும்.

ஐ மீன் தாமதமா கிடைக்கும் -அது ஏலத்துல வர்ர சொத்தாவோ - சோற்றுக்கில்லாத நிலையில் விற்கப்படும் சொத்தாவோ -கொலை /தற்கொலை நடந்த சொத்தாவோ -லாக் அவுட்ல இருந்த தொழிற்சாலையாவோ இருக்கலாம்.

குறிப்பு:

லக்னாதிபதியான குரு டிசம்பர் 25 வரை வக்ரமா இருக்கிறதால அதுவரை கண்ணாலம் கட்டியும் பிரம்மச்சாரி கதைதேன்.

10.மகர ராசி:

இவிகளுக்கு சனி 1 ,2 பாவங்களுக்கு அதிபதி. இவரு 10 ல் வர்ரது சிறப்போ சிறப்பு. பொதுவிதி,சிறப்பு விதிப்படி பார்த்தாலும் , சனி லக்னாதிபதிங்கறதாலயும் தொட்டுக்காட்ட ஒரு குறையும் இல்லாத நன்மைகள் ஏற்படும்.
கொஞ்சம் போல உடல் உழைப்பு தேவைப்படலாம், சுத்தம் பத்தம் பார்க்கமுடியாது. (கர்மயோகியான உங்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா?)

மிதபாஷியான நீங்க பேச்சுக்கு முக்கியத்வமுள்ள துறை/செக்சன்லயும் கலக்குவிங்கன்னா பார்த்துக்கங்களேன். ஆனால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கொடுக்கல் வாங்கல்ல மட்டும் இறங்காதிங்ணா.
மீறி இறங்கினா பாடி ட்ரபுள் கொடுக்க ஆரம்பிச்சிரும். குடும்பத்தை பிரிஞ்சிருந்தவுக ஒன்னு சேருவிங்க.

11.கும்ப ராசி:

இவிகளுக்கு சனி 1 , 12 பாவங்களுக்கு அதிபதி. இவர் 9 ல வர்ரது 50:50 ரேஞ்சுல நன்மை தீமைகளை கலந்து தரக்கூடிய அமைப்பு. லக்னாதிபதியா இவர் 9 ல வர்ரது நல்லதுதேன். இதனால அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனிங்கற மாதிரி "லாக்" ஆகியிருந்த நிலை மாறி மேற்கு திசை நோக்கி இடம் மாற வாய்ப்பிருக்கு. சொத்து,முதலீடு,சேமிப்புன்னு மனசு டைவர்ட் ஆகும்.

அதே நேரம் இவருக்கு விரயாதிபத்யமும் இருக்கிறதால ஆரம்பத்துல அப்பா,அப்பாவழி உறவு,சொத்து,
சேமிப்பு,முதலீடு வகைகளில் வீண் விரயம் /தாமதம் அலைக்கழிக்கும். தீமைகள் சனி துலாத்தில் தங்கும் ரெண்டரை வருட காலத்தில் முதல் ஒன்னேகால் வருசத்துலயும் - நன்மைகள் அடுத்த ஒன்னேகால் வருசத்துலயும் நடக்கலாம்.

12.மீனராசி:

இவிகளுக்கு சனி 12 , 11 பாவங்களுக்கு அதிபதி. இவர் எட்டுல வர்ரது பொதுவிதிப்படி ரெம்ப ரெம்ப கெட்டது. இதற்கான பலனை சுருக்கமா சொன்னா இவிக சொத்தை அடுத்தவன் அனுபவிக்க , அடுத்தவன் கடனுக்கு இவிக பதில் சொல்லவேண்டி வந்துரும். போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி, கோர்ட் ,சுடுகாடுல்லாம் கூட பார்க்கவேண்டி வரலாம். ஹனுமான் டாலர் அணியவும். ( டி.வியி வரும் விளம்பர டாலர் அல்ல. கடைகளில் விற்கும் சாதாரண டாலர்) நிரந்தரமாக ராம நாமம் ஜெபிக்கவும். ராம நாமம் ஒலிக்குமிடத்தில் அனுமனுடைய சான்னித்தியம் ஏற்படும். பிராணபயம் உள்ளவர்களுக்கு/ அஷ்டம சனி பாதிப்பில் உள்ளவர்களுக்கு அபயம் தர வல்லவர் ஹனுமான் ஒருத்தருதேன்.

லாபாதிபதியாக இவர் எட்டில் மறைவது லாப நோக்குடன் செய்யும் வேலைகளில் சிக்கலை தரலாம். அதே நேரத்துல இவருக்கு விரயாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகமும் ஏற்படலாம். தீமைகள் சனி துலாத்தில் தங்கும் ரெண்டரை வருட காலத்தில் முதல் ஒன்னேகால் வருசத்துலயும் - நன்மைகள் அடுத்த ஒன்னேகால் வருசத்துலயும் நடக்கலாம்.

சனி பெயர்ச்சி என்றாலே நம்மவர்களுக்கு மனத்தளர்ச்சி ஏற்பட்டு விடுவது சகஜம். அதிலும் நம் ஜோதிடதிலகங்கள் ( ஹி ஹி.. நாம உட்பட) பேதிக்கு கொடுத்து ஒரு வழி பண்ணிவிடுகிறார்கள்.

சனிப்பெயர்ச்சி என்றால் சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதாகும். சனிப்பெயர்ச்சி 2012 னு தலைப்பை கொடுத்திருந்தாலும் திருக்கணித பஞ்சாங்கப்படி 2011, நவம்பர் 17 ஆம் தேதியே சனி கன்னியிலருந்து துலாமுக்கு மாறிர்ராரு.

ராசிச்சக்கரத்துல துலாம் 7 ஆவது ராசி. இதனால உலக மக்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்,லவர்ஸ்,பார்ட்னர்ஸ்,
மனைவி(கள்) தொடர்பான பிரச்சினையே அதிகமா இருக்கும். துலாமுக்கு அதிபதி சுக்கிரன். இதனால் பெண்களுக்கு பிரச்சினை அதிகரிக்கும்.( வரதட்சிணை கொடுமை சட்டத்தை வாபஸ் வாங்கிருவாய்ங்களோ?) ஆண் பெண்களுக்கு கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். ( இம்பொட்டன்ஸி?)

சுக்கிர காரகம் கொண்ட தொழில்கள் எல்லாம் பாதிக்கப்படும். உ.ம் ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ், பூக்கள் ,கனிகளை பயிர் செய்வோர் நஷ்டமடையலாம். ஹோட்டல் தொழில் பாதிக்கும்.கள்ள உறவுகள் ,கலப்பு மணங்கள் அதிகரிக்கும். தொழிலாளர் வர்கத்தின் கை ஓங்கும். இப்படி இன்னும் பல விஷயங்களை சொல்லலாம்.

சனி அவரவர் ராசிக்கு 3,6,10,11 ராசிகளில் இருந்தால் நன்மையை தருவார் என்பது பொதுவிதி.தற்போது சனி வந்து அமர உள்ள துலாம் சிம்மத்துக்கு 3 ஆமிடம் , ரிஷபத்துக்கு 6 ஆமிடம்,ம்கரத்துக்கு 10 ஆமிடம், தனுசுக்கு 11 ஆமிடம்.

ஆக துலா சனி மேற்படி 4 ராசியினருக்கு நன்மை தரும் நிலயில் உள்ளார். மற்ற ராசியினருக்கு தீமை செய்யு நிலையில் உள்ளார் என்று கொள்கை அளவில்(?) கூறலாம்.

ஆனால் நடைமுறையில் பார்க்கும் போது இது மிக மிக தவறானதாகும்.பொது விதி எனும்போதே சிறப்பு விதியும் இருப்பதாகத்தான் பொருள்.சிறப்பு விதியின் படி பார்க்கும் போது பலன் தலை கீழாய் மாறவும் வாய்ப்புள்ளது.

சனிப் பெயர்ச்சி பலன்கள் என்றதுமே ஒவ்வொரு ராசிக்கும் தனி தனியாக பலன் எழுதிவிடுவது தான் வழக்கமாக உள்ளது. அப்படி எழுதும்போது ஒவ்வொரு வாசகரும் 12 ல் ஒரு பாகத்தை மற்றுமே படிக்கிறார். மற்ற 11 பாகங்களை அலட்சியப்படுத்திவிடுகிறார்.

ஆகவே அனைவரும் சனி குறித்து தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களை பொதுவில் சொல்லி விட்டு பிறகு வேண்டுமானால் ராசி வாரியாக பலன்களைப் பார்ப்போம்.

நம் நாட்டில் நிமிடத்துக்கு 4 குழந்தைகள் பிறக்கின்றனர். சுமார் 120 நிமிடங்களுக்கு அதாவது 2 மணி நேரத்துக்கு ஒரே லக்னம் தான். அதாவது ஒரே ஜாதகம். அதாவது பெரியார் பிறந்த அதே ஜாதகத்தில் பிறந்த 120 x 4 = 480 மைனஸ் 1 குழந்தைகள் என்னாச்சு ?

ஒரே ஒருபெரியார் தான் பஞ்சக்கச்சங்களை எதிர்த்து ஏறக்குறைய செஞ்சுரி அடிக்க முடிகிறது. ( நானும் அப்படித்தான் பெரியார் என்ற நினைப்பில் என் தெலுங்கு வலை தளத்தில் ஐயர்களுடன் மோதி ஆப்பு வைத்துக்கொண்டேன். ஒரு கட்டத்தில் அங்கன இருந்த ஒரே திரட்டியிலும் என் வலைப்பூ தடை செய்யப்பட்டுவிட்டதென்றால் பாருங்களேன்)

ஜாதகமே ஒன்று என்றாலும் - கிரக ஸ்திதிகள் ஒன்றே என்றாலும் இயற்கை மனித யத்தனத்துக்கும் வாய்ப்பு வைத்து தான் செயல்படுகிறது. இந்த அழகில் இரண்டே கால் நாட்களுக்கு ஒரே ராசி தான் எனும்போது , ஒவ்வொரு ராசியிலும் எத்தனை கோடி பேரை அடைக்கிறார்கள் பாருங்கள். ( நாம கணக்குல வீக்கு ஆருனா கணக்கு போட்டு சொல்லுங்கப்பு)

இதுவே முடிவான உண்மை என்றால் இந்திய மக்களின் வாழ்வுக‌ள் 12 விதமாகத்தானே இருக்க முடியும். உண்மை நிலை அப்படியா இருக்கு? நோ ! ஒவ்வொரு வாழ்க்கை ஒவ்வொரு விதம்.

ஜாதகம் என்பது வாகனம் மாதிரி. ஜாதகப்படி நடக்கும் தசாபுக்திகள் ரோடு மாதிரி , இவர்கள் கூறும் சனி/குரு/ராகு/கேது பெயர்ச்சி எல்லாம் அவ்வப்போது ட்ராஃபிக்கில் ஏற்படும் சிறுமாற்றங்கள் போன்றது. (முதல்வர் வரும்போது ட்ராஃபிக்கை நிறுத்தலியா அது மாதிரி. )

சரி நான் எதற்கு குறுக்கே . 12 ராசிக்காரவுகளும் தெரிஞ்சுக்க வேண்டிய சமாசாரங்களை சனி பகவானையே உங்களுடன் பேசச்சொல்லி விடுகிறேனே.

உங்கள் ஜாதகமே இல்லாமல், பிறப்பு விவரங்களும் இல்லாமல் உங்கள் ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் உள்ளாரா இல்லையா என்று தெரிந்து கொள்ளுங்கள். நல்ல நிலையில் இலை என்றால் குறிப்பிட்டுள்ள பரிகாரங்களை செய்துகொள்ளுங்கள்

ஹலோ சனி ஸ்பீக்கிங்:

செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய். 19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன்.

கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன்.1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும். எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள்.

சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்-அந்த 4 x ரெண்டரை வருடங்களில் தான் நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன்.

இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன்.

நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன்.

ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ் போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.

என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன். இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.


பரிகாரங்கள்

1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது

ஓகே முன்னுரையே பதிவு அளவுக்கு போயிருச்சு. இப்பம் உங்க ராசிக்கு துலா சனி என்னமாதிரியான பலனை தருவாருன்னு பார்த்துருவம்.

( இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலமா பிரதிகூலமான்னு மொத்தமா படிச்சுட்டு கடேசியில முடிவு பண்ணுங்க)

சனி அனுகூலமானால்:
நீங்கள் சுதந்திரர் - அடிமைத்தொழிலில் இருந்தாலும் உங்களை கண்டுக்கற நாயே இருக்காது. மலச்சிக்கல் இருக்காது. நீங்க ஆரம்பிக்கிற வேலை ஒன்னு பத்தா டெவலப் ஆகும். ( நல்ல +கெட்டவேலைகள்) உ.ம் ஒரு கடன் வாங்கினா அது இன் டைம் பைசலாகும் பத்து கடன் வாங்குவிங்க. ஒரு பொய் கேஸு போட்டா பத்து கேஸு போடுவிங்க.

ஆப்போசிட் செக்ஸ் அட் ராக்ட் ஆகும் அவிக கோ ஆப்பரேஷன் கிடைக்கும். சிஸ்டர் டைம் என்னனு கேட்டதுக்கு ஈவ் டீசிங் கேஸெல்லாம் தரமாட்டாய்ங்க. அகால போஜனம்,அகால நித்திரை,முகத்துல எண்ணெய் வழியறது, முடி உதிர்ரது மாதிரி லொள்ளெல்லாம் இருக்காது. என்றும் 16 கணக்கா வலம் வருவிக. நிமிர்ந்த நடை பழகும். நீங்க சம்பளமே தரலின்னாலும் தொழிலாளர்கள் கோ ஆப்பரேட் பண்ணுவாய்ங்க.

சனி பிரதிகூலமானால்:

சொந்த தொழிலிலே இருந்தாலும் கண்ட நாய்க்கு பயந்து நடக்கவேண்டியதாயிரும். வேலைகாரவுகளே ஆப்புவச்சிருவாய்ங்க. துவங்கின வேலை ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு நின்னுரும். ஆப்போசிட் செக்ஸால லோள்ஸ். அகால போஜனம் -அகால நித்திரை -பகல் கொட்டாவில்லாம் உண்டு.குடல் கல் குடலாயிரும். முகத்துல எண்ணெய் வழியும் முடி உதிரும் .சின்னவயசா இருந்தாலும் வெள்ளை முடி வரும். முகத்துல கிழட்டுத்தனம் வந்துரும். கூன் போட ஆரம்பிச்சிருவிக.

Saturday, October 22, 2011

பதிவர்கள் பார்வைக்கு ( அவசரம்)

அண்ணே!
இந்தியாவுல நேரிடை ஜன நாயகம் அமலாகி - பிரதமரை மக்களே நேரிடையா தேர்ந்தெடுக்கற காலம் வந்தா அந்த தேர்தல் தவிர எந்த தேர்தல்லயும் ஓட்டு கேட்க கூடாதுன்னு இருந்தேன்.

ஆனால் ஒரு நாதாரி ( பேரை சொல்லனுமா என்ன?) டஜன் கணக்கா மெயில் ஐடி வச்சுக்கிட்டு தமிழ்10 திரட்டியில நம்ம பதிவை Bury பண்ணிக்கிட்டிருக்கு.

இதனால நம்ம பதிவு உடனே தெரியாது. நேரம் பிடிக்கும்.அதனால கீழெ உள்ள வாக்களிப்பு பட்டையை க்ளிக் பண்ணி பதிவுக்கு ஓட்டு போடுங்கண்ணே..

இப்பம் பதிவு:

பதிவுலகமும் ஒரு உலகம்தான். வேணம்னா குட்டி உலகம்னு சொல்லிரலாம். ( என்னைப் போன்றவுக போடற கில்மா பதிவுகளை வச்சு ஆருனா "குட்டிகள்" உலகம்னு சொன்னா நம்பாதிங்க) பதிவர்களும் மன்சங்கதான்.

வெளியுலகத்துல எப்படி மன்சங்க உள்ளதையெல்லாம் மிஸ்யூஸ் பண்ணிட்டு பார்ட்னர்கள் மேல,அரசாங்கம் மேல, பக்கத்து வீட்டுக்காரன் மேல, ஜாதகம் மேல ,ஜோசியர்கள் மேல பழி போடறாய்ங்களோ அப்படியே பதிவர்களாகிய நாமும் இந்த உன்னதமான மீடியாவை மிஸ்யூஸ் பண்ணிக்கிட்டிருக்கமோன்னு என் மனசுல ஒரு சம்சயம் உருவாயிருச்சு.

என்னை பொருத்தவரைக்கும் ஹை டெசிபல்ஸ்ல இப்படி உரத்த சிந்தனை செய்ய ஒரு காரணம் இருக்கு. அது என்னன்னா என் வலை எழுத்துக்களால எனக்கு பைசா புரளுது. மத்தவுகளுக்கு எப்படியோ தெரியாது.
புரள்ற பைசாவை சின்னதா பீர் அடிக்கவோ , குட்டி போடவோ , பார்ட்டி கொடுக்கவோ உபயோகிக்கிற அளவுக்கு கேடு கெட்ட கேரக்டரா இல்லைன்னாலும் நானும் சராசரி மனிதனா ரோசிக்க ஆரம்பிச்சுட்டனோன்னு ஒரு ஃபீலிங் வந்துருச்சு.

நம்ம ஆப்பரேஷன் இந்தியா அமலுக்கு என்னென்னவோ செய்து போண்டியாகி தாளி பொளப்ப பார்க்கவேண்டியதுதாங்கற நிலைக்கு வந்துட்ட சமயம் வலையுலகம் அறிமுகமாச்சு. ஆரம்பத்துல இதையும் ஆ. இ திட்ட பிரச்சாரத்துக்கு யூஸ் பண்ண பார்த்து அதெல்லாம் வேலைக்காகாதுன்னு முடிவு பண்ணி ( ஹிட்ஸ் சதம் போடவே நான் ததிங்கணத்தோம் போடவேண்டியதாயிருச்சு)

ஹிட்டை கூட்ட சூப்பர் ஹிட் சப்ஜெக்டான ஜோதிடத்தை கில்மா கலந்து கொடுக்க ஆரம்பிச்சேன். பக்க வாத்தியமா சைக்காலஜி. கச்சேரி களை கட்டிருச்சு. நாலு பேரை படிக்க வச்சே ஆகனும்னு நாம பண்ண சர்க்கஸ் சனத்தை கவர பைசாவும் புரள ஆரம்பிச்சது.

2009 மே முதல் இந்த 2011 நவம்பர் வரை ஹிட்டை கூட்டவும் கட்டிக்காக்கவும் -ஆன் லைன் ஜோதிட ஆலோசனை பணிகளை செய்யவுமே ரவுண்ட் தி க்ளாக் வேலை செய்யற மாதிரி ஆயிருச்சு. ஆப்பரேஷன் இந்தியாவை பத்தி பேச்செடுத்தாலே மெஜாரிட்டி சனம் காணாம போயிர்ராய்ங்க. நமக்குள்ளயா குற்றமனப்பான்மை நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே போகுது.

இதுக்கெல்லாம் என்னதான் தீர்வுன்னு ரோசிச்சிட்டிருந்தப்ப பழைய பதிவு ஒன்னு கண்ல பட்டது.
( நம்முதுதேன்) ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலாயிட்டா ஓவர் நைட்ல இல்லின்னாலும் சீக்கிரமே சால்வ் ஆயிர கூடிய பிரச்சினைகளை - சனத்தை உடனடியா பாதிக்க கூடிய பிரச்சினைகளை லிஸ்ட் அவுட் பண்ணி இந்த விஷயங்களை பத்தி பதிவு போடுங்கன்னு கெஞ்சியிருந்தேன்.

அன்றைய நிதி நிலைமைக்கு என் ப்ளாக்ல எழுதுங்க பதிவு பிடிச்சிருந்தா பரிசு ரூ.100 ன்னு ஆசை கூடகாட்டியிருந்தேன்.ஆனால் ஒன்னும் பேரலை. அதனால ஒரு தற்கொலை முயற்சி கணக்கா - ஒரு பரிகாரம் ரேஞ்சுல என் ப்ரியாரிட்டிஸ் பற்றியே பதிவுகள் போடலாம்னு இருக்கேன்.

2000 பேருக்காக ஜோதிடப்பதிவுகள் போட்டா ஹிட்டும் குறையாது . நம்ம கல்லா பெட்யும் நிரம்பும். கீழே தந்திருக்கிற ப்ரியாரிட்டி படி பதிவுகள் போட்டா ஹிட்டு புட்டுக்கும். வருமானமும் பாதிக்கும். ஆனாலும் சரி விடறதா இல்லை.சன் டிவியில அந்த வாரம் - இந்த வாரம்னு அலப்பறை பண்றாப்ல இது ப்ரியாரிட்டி வாரம்.

ஞாயிற்று கிழமைன்னாலே பதிவுலகம் ஈயடிக்கும். இதுல இந்த விஷபரீட்சை வேற. நோ ப்ராப்ளம். இந்த லைன் அப் பிடிக்காதவுக பழைய பதிவுகளை ரிவிஷன் பண்ணிக்கிட்டிருங்க. அடுத்த வாரம் ஜாயின் பண்ணிக்கலாம்.

எழுதறது நெல்ல விஷயம்னு மொக்கையா எழுதறதெல்லாம் நமக்கு பிடிக்காதுங்கோவ். இந்த மேட்டர்லயும் கில்மா,சைக்காலஜி,அஸ்ட்ராலஜி,செக்ஸாலஜி எல்லாம் உண்டு. பதிவுக்கு போயிரலாமா?


1.மனித உயிர்களுக்கு பெருகி வரும் ஆபத்தை சுட்டிக்காட்டும் பதிவுகள், தீர்வுகளை முன் வைக்கும் எழுத்துக்கள்

2.உணவுப்பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்கள் - சத்துக்குறைபாடு, அதனால் எழும் பிரச்சினைகள் - உணவுப்பொருட்களில் கலப்படம் -பதுக்கல் - ஆன் லைன் ட்ரேடிங்- ரேஷன் கடைகளின் கோல்மால்கள் முதல் அரசின் கொள்கை முடிவுகள் வரை

3. நிற்க நிழலில்லாத ஜீவன்கள், பிளாட்பார வாசிகள்,குடிசை வாசிகள்,ஒண்டு குடித்தன வாசிகள், வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகள்

4.கல்வி துறையின் மாயாஜாலங்கள் தனியாரின் கொள்ளை - அரசியல் சக்திகளின் தனி/கூட்டு கொள்ளைகள் - கல்வித்தரம்

5.வேலையின்மை, சுய வேலை வாய்ப்பு, சுய தொழில் , குடிசைத்தொழில், சிறு தொழில் அதிபர்களின் பிரச்சினைகள்.

6. காதல் -காமம் -குழந்தை பிறப்பு இத்யாதி தொடர்பான பிரச்சினைகள் -தீர்வுகள்

7.சுற்றுச்சூழல் - பொல்யூஷன் -காரணங்கள் - விளைவுகள்- தீர்வுகள். தனி மனித அக்கறையின்மையிலிருந்து உலகவங்கி வரை எல்லாருக்கும் இதுல பங்கு இருக்கு. இந்த உண்மைய புரிந்த அ புரிய வைக்கிற பதிவுகள்.

8.மக்கள் பிரச்சினைகளை பேசி - தீர்வுகளை முன் வைக்கும் கலை -இலக்கியம்- பண்பாடு - ஹ்யூமன் வேல்யூஸ்

9. மிஸ்டிக் சைன்ஸஸ் - ஜோதிடம் -வாஸ்து -கைரேகை முதல் டெலிபதி வரை

10. ஆன்மீகம் - தியானம் -யோகா

குறிப்பு: என்னங்கடா இது பதிவர்கள் பார்வைக்குங்கற தலைப்புக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமே இல்லியேன்னு கடுப்பாயிராதிங்ணா .மேற்கண்ட பத்து விஷயங்களை சக பதிவர்களும் டச் பண்ணா புண்ணியமா போகும்ங்கற வேண்டு கோளைத்தான் உங்க பார்வைக்கு கொண்டு வந்திருக்கேன்.

ஏற்கெனவே நீங்க இந்த விஷயங்களை டச் பண்ணி பதிவுகள் போட்டிருந்தா கமெண்ட்ல சுட்டியை கொடுங்க. அல்லாத்தையும் திரட்டி படிச்சு சிறப்பு பதிவே போட்டுருவம். உடுங்க ஜூட்..

Friday, October 21, 2011

2011, அக்டோ.30 முதல் 2012,மார்ச் ,22 க்குள் ???????


அண்ணே வணக்கம்ணே !

நேத்து 45 நாள்ள ஒரு ராசிய விட்டு காலி பண்ண வேண்டிய செவ் அக்டோ 30 முதல் 158 நாள் சிம்மத்துல கேம்ப் அடிக்கிறாரு. இதுல 2012 ஜனவரி 23 வரை சாதா சஞ்சாரம், மார்ச் 22 வரை வக்ர சஞ்சாரம்.

இதனோட எஃபெக்ட் மேஷம் முதலான 12 ராசியினருக்கு எப்படியிருக்கும்னு இந்த பதிவுல சுருக்கமா பார்ப்போம்.

பொதுவா செவ் பாபகிரகம் என்பதால் 3,6,10,11 ல இருந்தா நல்லதுங்கறது ஒரு விதி. இதன் படி மிதுனத்துக்கு 3 ல் , மீனத்துக்கு 6 ல் , விருச்சிகத்துக்கு 10 ல் ,துலாமுக்கு 11 ல் செவ் நிற்பார் என்ற வகையில் இவிகளுக்கு நல்லதுன்னு சொல்லனும். மத்தராசிக்காரங்க கொஞ்சம் போல எச்சரிக்கையாத்தான் இருக்கனும்னும் சொல்லனும். இருந்தாலும் இன்னம் கொஞ்சம் டீப்பா பார்க்கறச்ச இந்த பலன் தலைகீழா மாறவும் வாய்ப்பிருக்கு.

அதனால டீப்பா பார்த்து ஒவ்வொரு ராசிக்கும் ரெண்டு காலகட்டத்துக்கான பலனை தனித்தனியா கொடுக்க வேண்டியிருக்கு. சாக்கிரதையா படிச்சு ஃபாலோ ஆயிக்கங்க. பெஸ்ட் ஆஃப் லக்.

ORU SOL:

செவ்வாய்னா ஏதோ ஆயா ராம் கயாராம்னு நினைச்சுராதிங்க. செவ் சரியில்லைன்னா தோஷ ஜாதகம்னு தனியா தூக்கிவச்சுர்ராய்ங்க. ஏன்னா அந்த அளவுக்கு செவ்வாய்ல மேட்டர் கீது. ராசி சக்கரத்துல எந்த கிரகம் செவ்வாயை பீட் பண்ணமுடியாம பின் தங்கி இருக்கோ அந்த கிரகத்தை கிரகயுத்தத்தில் தோற்ற கிரகம்னு சொல்வாய்ங்க. அது ஏறக்குறைய நம் மன்மோகனார் மாதிரி சோனியா இருக்கும்.

செவ்வாயை பத்தி சொல்லனும்னா இன்னைக்கெல்லாம் சொல்லலாம். அவரே சொல்றதை கேட்க இங்கே அழுத்துங்க.

1.மேஷம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

செவ் உங்களுக்கு 1/8 க்கான அதிபதி. சிம்மம் உங்களுக்கு அஞ்சாவது இடம் . ஆகவே செவ் காரகத்வத்துல யோக பலனையும் எதிர்பார்க்கலாம். அதே சமயம் சின்ன அவமானம், கோபம், அதி உஷ்ணம் இத்யாதியையும் ஃபேஸ் பண்ண வேண்டியதுதான். குறிப்பா குறை பிரசவம் நடக்க சான்ஸ் இருக்கு. சம்பந்தமே இல்லாம ஏதோ நினைப்புல தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா கதையா நெருப்பு,மின்சாரம்,கூர்மையான ஆயுதத்தால் அபாயம் கூட நேரலாம். டேக் கேர்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
மேற்கண்ட யோக பலனும் கோவிந்தா. அபாயம்,ஆபத்துகளும் பைபாஸ் ஆயிரும்.லக்னாதிபதியே வக்ரமாறதால உங்க இயல்புக்கு மாறா வாழ் நாள்ள நெனச்சு கூட பார்க்காத காரியத்தை எல்லாம் செய்ய துணிஞ்சுருவிங்க. காரியம் நல்லதா இருந்தா சரி. இல்லின்னா ஆப்புதேன்.

2.ரிஷபம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

செவ் உங்களுக்கு 12/7 க்கான அதிபதி. சிம்மம் உங்களுக்கு நாலாவது இடம். தாய்,வீடு வாகனம்,கல்வி வகையறாவில் பிரிவு, சிக்கல்,நஷ்டம் வரலாம். இதய நோய் உள்ளவர்கள் ஜாக்கிரதை. வறுமை தாக்கலாம். ஒரு சிலருக்கு ஒரு சில தகராறுகளுடன் திருமணம் ஏற்பாடாகலாம். அதிலும் ஒரு சிலருக்கு தாய்வழியில் ஏற்கெனவே விரோதமுள்ள உறவில் பெண் அமையலாம்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

மேற்படி திருமணம் தொடர்பான வில்லங்கங்கள் முடிவுக்கு வந்து சுபகாரியம் நடக்கலாம்.


3.மிதுனம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

உங்களுக்கு செவ் 11/6 க்கு அதிபதி. சிம்மம் 3 ஆவது ராசி. சகோதர வர்கம் பாதிப்படையும்,அவர்களுடனான உங்கள் கம்யூனிகேஷன் பாதிப்படையலாம். உங்களுக்கு குருட்டு தைரியத்தால் கடன் கூடலாம், விரோதம் ஏற்படலாம். வில்லங்கத்தில் சிக்கலாம்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

மேற்படி கெடுபலன் மாறும். சகோதரவகையில் உதவி கிட்டலாம்.

4.கடகம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)
உங்களுக்கு செவ் 10/5 க்கு அதிபதி. இவர் ரெண்டுல வர்ரது விசேஷம் தான். இதனால் தொழில் முன்னேற்றம் காணும். வாக்குத்திறமை பளிச்சிடும். சிலருக்கு வாக்பலிதமும் உருவாகலாம். செவ் காரகத்தில் அதிர்ஷ்டம் வரிக்கும். உங்களையும் அறியாம சுடு சொல் வந்துராம பார்த்துக்கங்க. இதனால குடும்பத்துல சினன் கலகம் வந்து போகலாம். கண்கள் சிவக்கும்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

யோகத்துக்கு லீவு. மேற்சொன்ன தீயபலனும் பைபாஸ் ஆயிரும்.


5.சிம்மம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)
உங்களுக்கு செவ் 9/4 க்கு அதிபதி. இவர் ஜன்மராசியிலயே வர்ரது நல்லதுதான். பெற்றோரால் நன்மை ஏற்படும். சில சமயம் ப்ரஷரை ஏத்தி விடுவாய்ங்க. அஜீஸ் பண்ணிக்கனும்.நெருப்பு,மின்சாரம்,கூர்மையான ஆயுதம், முன் கோபத்தால் கஷ்ட நஷ்டங்கள் வரலாம்.

முதலீடு,சேமிப்பு குறித்த சிந்தனை அதிகரிக்கும். நல்ல முடிவா எடுப்பிங்க.மனை,வீடு தொடர்பான வேலைகளும் நடக்கலாம்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
மேற்சொன்ன நற்பலன் குறையலாம். தீயபலன் பை பாஸ் ஆயிரும்.

6.கன்னி:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)
செவ் உங்களுக்கு 8 /3 க்கு அதிபதி .சிம்மம் விரயஸ்தானம். 8 க்கு அதிபதி -12ல் மறையறது நல்ல அம்சம்தேன். இது உங்களுக்கு பிராண ஹிம்சையா இருந்த அனேக விஷயங்களை செட் ரைட் பண்ணும். ஒரு சிலர் வீடு அ மனையை விற்று இந்த வேலைய செய்யவேண்டி வரலாம். சகோதர வர்கத்துக்கு கொஞ்சம் செலவழிக்கவேண்டி வரலாம். போட்டி சேலஞ்சுன்னு போகாதிங்க விரயம் தப்பாது.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
மேற்சொன்ன நல்ல பலன் குறையும். தீய பலன் பை பாஸ் ஆயிரும்.

7.துலா:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

7/2 க்கு அதிபதி 11 ல வர்ராரு. நல்லதுதான். இதனால் பூமி லாபம் ,பூமியால் லாபம்லாம் ஏற்பட வாய்ப்பிருக்கு.செவ் காரகம் நல்லாவே கை கொடுக்கும். ஆனா 7 -11 தான் வில்லங்கமானது. கண்ணாலமாகாத பார்ட்டின்னா பரவால்லை. கண்ணாலமான பார்ட்டியா இருந்தா சின்னவயசு பொண்ணு ஒன்னு ரெம்பவே டிஸ்டர்ப் பண்ணும் அவாய்ட் பண்ணிருங்க.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

மேற்கண்ட பலன்களில் வேகம் மெத்தகுறையும். டிஸ் அப்பாய்ண்ட் ஆயிராதிங்க. ஃப்ரீயா உடுங்க.


8.விருச்சிகம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)
6/1 க்கு அதிபதியான செவ் 10 ல வர்ராரு. தொழில்,உத்யோகம் வியாபாரத்து மேல ஆர்வம் அதிகரிக்கும். கடனோ ஒடனோ வாங்கிப்போட்டு கூட ஃபாஸ்ட் அப் பண்ண ட்ரை பண்ணுவிங்க .பெஸ்ட் ஆஃப் லக். அதே நேரம் உடம்பையும் பார்த்துக்கங்க. இல்லாட்டி முடக்கிரும். ( முக்கியமா ரத்தம்,எரிச்சல்,கோபம் தொடர்பான வியாதிகள்)

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
தொழில் ஆர்வம் -கடன் குறையும். அதே நேரம் ஹெல்த் ட்ரபுள் கொடுத்துரலாம். லக்னாதிபதியே வக்ரமாறதால உங்க இயல்புக்கு மாறா வாழ் நாள்ள நெனச்சு கூட பார்க்காத காரியத்தை எல்லாம் செய்ய துணிஞ்சுருவிங்க. காரியம் நல்லதா இருந்தா சரி. இல்லின்னா ஆப்புதேன்.


9.தனுசு:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

5/12 க்கு அதிபதியான செவ் 9 ல வர்ராரு. பூர்விக சொத்தை விற்கமுடியாம இருந்தவுக - ஃபிக்சட் உடைக்கலாமா வேணாமான்னு ரோசிச்சிட்டிருந்தவுக துணிஞ்சி ஒரு முடிவை எடுப்பிங்க. ஆனால் டிசம்பர் 25 வரை உங்க லக்னாதிபதியான குருவும் வக்ரம். அதனால் நாலு தாட்டி - நாலு கோணத்துல ரோசிச்சு டிசைட் பண்ணுங்க. சிலர் குறைஞ்ச விலைக்கு ஒரு சொத்தை வாங்கலாம். சிலர் பழைய வீட்டை இடிச்சு கட்டலாம். சிலர் வாங்கிப்போட்டிருந்த மனையில வீடு கட்ட ஆரம்பிக்கலாம்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

அகல கால் வச்சுட்டமோன்னு ரெம்பவே நொந்துக்கற கால கட்டம்.



10 .மகரம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

4/11 க்கு அதிபதியான செவ் 8 ல வர்ராரு. தாய்,வீடு,வாகனம்,கல்வி வகையறாவுல நோய் விரோதம்/ கலகம், நஷ்டம்,வீண் விரயம்/ சிறு விபத்து /தடை வர வாய்ப்பிருக்கு டேக் கேர். மூத்த சகோதரர்/சகோதிரிக்கும் தீங்கு நேரலாம். அ அவிகளால உங்களுக்கு.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)

மேற்கண்ட தீய பலன் மாறும்.ரிலீஃப் கிடைக்கும்.


11.கும்பம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

3/10 க்கு அதிபதி செவ் . இவர் 7 க்கு வர்ராரு. இது மனைவிக்கு/மனைவியால் அல்லல் அலைச்சலை தரலாம். சகோதர வர்கம் உதவிக்கரம் நீட்டலாம். தொழில் உத்யோகம் வியாபாரத்துல புதிய தொடர்புகள், ஒத்துழைப்பு கிடைக்கலாம். அந்த தொடர்பு போலீஸ்/மிலிட்டரி./ரயில்வே தொடர்பானதா இருந்தா குறுகிய கால ப்ராஜக்ட்னா ஓகே. அதாவது ஜன 22 க்குள்ள ஐசா பைசா தீர்ந்துரனும். இல்லாட்டி இமிசை தான்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
மேற்சொன்ன தொடர்பு / ஒத்துழைப்பு தேய ஆரம்பிக்கும்.

12.மீனம்:

ஸ்தம்பன பலன்: ( அக்டோ 30 முதல் ஜனவரி23)

2/9 க்கு அதிபதி செவ். இவர் 6 க்கு வர்ராரு. கடன் வாங்க வேண்டி வரலாம், உங்க பேச்சுல சூடு கூடும். குடும்பத்துல சலசலப்பு வரும். கண் நோய் வரலாம். சொத்து/ முதலீட்டின் மேல் கடன் வாங்க வேண்டி வரலாம். தூர பயணம் தள்ளிப்போகலாம். அ அது வீண் விரயமாக முடியலாம். தூர தேச தொடர்புகளால் கடன் விரோதம் ஏற்படலாம். ஒரு சிலர் சொத்தை அடகு வச்சும் கடன் வாங்கலாம்.

வக்ர சஞ்சார பலன்: ( ஜனவரி 24 முதல் மார்ச் 22 வரை)
மேற்சொன்ன தீய பலன் குறையும்.டிசம்பர் 25 வரை உங்க லக்னாதிபதியான குருவும் வக்ரமா இருக்கிறதால உசாரய்யா உசாரு .ஓரஞ்சாரம் உசாரு.

Thursday, October 20, 2011

2012,மார்ச் 22 க்குள் உலகளாவிய புரட்சி?


நம்ம நாட்ல அசாரே தாத்தா உ.விரதம் , அட்வானிஜி ஜன சேதன் யாத்ரா இத்யாதியால எல்லாம் புரட்சி வரவே வராது. இது சர்வ நிச்சயம். இதுக்கு ஜோதிட ஞானம்லாம் தேவையில்லை. கிட்னியால ரோசிச்சாலே போதும்.

"பழைய நினைப்புடா பேராண்டி ..பழைய நெனப்புடா" ரேஞ்சுல அட்வானி வேட்டி வரிஞ்சு கட்டி / அடடே கீப்பாஸை இழுத்து செருகி புறப்பட்டுட்டாரு. வாழ்க்கையில எதுவுமே ஒரு முறை தான் . முதலிரவாகட்டும் , ரத யாத்திரையாகட்டும்.

தெலுங்கானா போராட்டத்தையே எடுத்துக்கங்க. முதல் கோனை முற்றும் கோனை.சேரமாட்டோம்னவுகளை சேர்த்தாய்ங்க. சேர்த்தது சேர்த்தாச்சு ஒயுங்கா நடத்தினாய்ங்களா? இல்லை. ஸ்பெஷலா அவிகளை வதைச்சது ஏதுமில்லை. அவிக கூவுனப்பல்லாம் சகட்டு மேனிக்கு வாக்கு தத்தம் பண்றது. சூடு ஆறினதும் காத்துல விடறது.

ஆந்திரா ராயலசீமால நிர்வாக சீர்கேட்டால் என்னெல்லாம் இழவெடுத்தாய்ங்களோ அதே இழவுதான் அங்கனயும்.ஆனால் கம்யூனிகேஷன் கேப். மோட்டிவேஷன் . சரியான தலை இல்லாமை காரணமா புரட்சின்னு எதை எதையோ செய்து கடேசியில கே.சி.ஆருக்கு தேவையான ஆளுக்கு போலவரம் டென்டர் கிடைச்சது . புரட்சி அம்பேல். ( விவரம் கடைசியில்)

இந்திய அளவுல எடுத்தா ஊழல் ஊழல் ஊழல்.ஊழலை விட ஊழலை எதிர்க்கிறவுகளோட லொள்ளு தாங்க முடியலை. எங்க பக்கம் சந்திரபாபு.

விலைவாசியா அண்டைவெளியை எல்லாம் தாண்டி சூனியத்துல எங்கனயோ போய் மாட்டிக்கிச்சு. நம்மாளுங்க ராக்கெட் விடறதே அந்த விலைவாசிய தேடிப்பிடிச்சு இறக்கதான்னும் ஒரு வதந்தி. இதுல வறுமைக்கோட்டை தீர்மானிக்கிறதுல கேலிக்கூத்து வேற.

நிற்க. உலகளாவிய புரட்சி வருமா?ங்கற கேள்விய நமக்குள்ள எழுப்பினது நியூயார்க் வால் ஸ்ட்ரீட்டை நோக்கிய சனங்களின் புறப்பாடுதேன். அதுலயும் அவிக எழுப்பின கோஷங்கள் தேன்.

நாமளும் நாலெழுத்து படிச்ச கேஸுதேன்.ஆனாலும் தாளி பங்கு மார்க்கெட் தாண்டி குதிக்குது - தனி நபர் வருமானம் உசந்து போச்சு -வாங்கும் சக்தி ஏறிப்போச்சு மாதிரி பீலாவையெல்லாம் நம்பறதே இல்லை. நம்ம ஊரை சுத்தி கிராமங்கதேன்.

ஒயுங்கா மழை பேஞ்சா தாளி பத்து வட்டிக்கு கூட கடன் வாங்கி பயிர் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. வைன் ஷாப்ல , களி, போட்டி விக்கிற கடையில எல்லாம் ஈ ஓடுது. மளை இல்லைன்னா அக்குள்ள ஈ நாடு பத்திரிக்கையை செருகிக்கிட்டு டவுன் பக்கம் டைம் பாஸுக்கு வந்துர்ராய்ங்க. வைன் ஷாப்பெல்லாம் ஹவுஸ் ஃபுல், 12 மணிக்கே களி இல்லை. போட்டி இல்லை.

இந்த ஷேர் மார்க்கெட்டு ஷேர் மார்க்கெட்டுன்னு அலட்டிக்கிறாய்ங்களே. இது வயாக்ரா சாப்பிட்ட கணக்கா ஒரே தூக்கா தூக்கினா தேசம் சுபிட்சமாயிருமா என்ன? ஷேர் மார்க்கெட்டுங்கறது சில நூறு லிஸ்டட் கம்பெனிகளோட விவகாரம். அந்த கம்பெனிகளோட ஷேரை வாங்கி விக்கிற சூதாடிகளோட விவகாரம்.

அதுலயும் ஒரு கம்பெனிக்காரன் இன்னொரு கம்பெனியோட ஷேரை வாங்கறான்னா " நாலும்" ரோசிச்சு நாலும் கவனிச்சு வாங்குவான். கவனிச்சிக்கிட்டே இருப்பான். அவனால இவனுக்கு லாபம். இவனால அவனுக்கு லாபம்.

இப்பம் என்னடா ஆச்சுன்னா வேலைக்கு போற பொஞ்சாதி கிடைச்ச சோடா புட்டியெல்லாம் ஷேர் வாங்கறேங்கறான்.இவனுக்கென்ன மசுரா தெரியும்? நீச்சல்டிப்பது எப்படினு புஸ்தவம் விடறாப்ல ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது எப்படின்னு புஸ்தவங்க வருது.

இந்த சோடா புட்டிகளாலயே ஷேர் மார்க்கெட் நாமம் போட்டுக்கிச்சினு நினைக்கிறேன். ஹர்ஷத் மேத்தா இவனுகளோட "அதி மேதாவித்தனத்தை" முதலீடா வச்சு கிரிமினலா ப்ளான் பண்ணி கழிசடை ஷேரையெல்லாம் விலை ஏற வச்சு - படக்குனு ஒரு கட்டத்துல வித்து ஏமாத்தினான்.

இந்த பன்னாடைங்க அப்படியும் திருந்தலை. ஏறுது ஏறுது ஏறுது - வித்துரு. இறங்குது இறங்குது வாங்கிரு இதான் இவிக தாரகமந்திரம். இந்த இழவுல மார்க்கெட் விழுதுன்னா ஒடனே நிதி மந்திரி முட்டு கொடுக்கனும். ஆன தகிடு தத்தம்லாம் பண்ணனும்.

( ஷேர் மார்க்கெட்டை பற்றி ஆதி காலத்துலயே நிறைய கிறுக்கியிருக்கம் - அப்பம் கண்டுக்கிடாதவுக கீழ்காணும் தொடுப்புகளை சொடுக்கி படிச்சு வைக்கலாம்- முக்கியமா பதிவு போடப்பட்ட தேதிகளை கவனிங்க - எந்தளவுக்கு அட்வான்ஸா ரோசிச்சிருக்கன்னு புரியும்.)

1. ட்ரிங்கிங் வாட்டர் ஃப்ரம் அலாஸ்கா

http://kavithai07.blogspot.com/2010/09/blog-post_08.html

2.கருந்துளை (Black Hole)நோக்கி விரைந்து செல்லும் இந்திய பொருளாதாரம்

http://kavithai07.blogspot.com/2007/12/black-hole.html


உலகமே - உலக அரசாங்கங்களே ஷேர் மார்க்கெட்டை சுத்தி வராப்ல ஆயிருச்சு. இதுல சனத்தோட பிரச்சினையை எவன் கவனிச்சான். சனம் பூனை மாதிரி . அதை அடிக்க அடிக்க ஒளிஞ்சுக்க /தப்பி ஓட வழி இருக்கிற வரை அலை பாயும். அப்படி ஒரு சாய்ஸ் இல்லேன்னா தாளி புலிப்பாய்ச்சல்தேன்.

சனத்துக்கு இப்பம் தப்பி ஓட வழியே இல்லை பாய ஆரம்பிச்சுட்டாய்ங்க. இத்தீனி நாளு கார்ப்பரேட் நிறுவனங்களோட கவசமா செயல் பட்ட அரசாங்கங்கள் இனி குத்துதே குடையுதேன்னு அலற வேண்டியதுதேன்.

புரட்சி வருமான்னு குத்து மதிப்பா பார்ப்போம். உழைக்கும் வர்கத்துக்கு காரகன் சனி. இவரு நவம்பர் 17 ஆம் தேதி கன்னியிலருந்து துலாத்துக்கு வரப்போறாரு. இது அவருக்கு உச்ச ராசி. ஆக அடுத்த இரண்டரை வருசத்துக்கு தொழிலாளிகளோட கை ஓங்கனும். அதுக்கு புரட்சி தானே வழி. பார்ப்போம்..

மேலும் 2011 ,செப் ,10 லருந்தே கடகத்துல நீசமாகிக்கிடக்காரு. யுத்தகிரகமான செவ் நீசமான போதெல்லாம் "இமிசை" தேன். இது இத்தோட முடியலை.

நெருப்பு கிரகமான சூரியனோட ராசி சிம்மம். இந்த சிம்மத்துக்கு நெருப்பு கிரகமான செவ்வாய் அக்டோபர் 31 ஆம் தேதி வர்ராரு,( 45 நாள்ள ராசி மாற வேண்டிய கிரகம் இது) 2012 ஜனவரி 23 வரைக்கும் சிம்மத்துலயே கேம்ப். இது மட்டுமா ஜனவரி 24 முதல் வக்ரமாகிறாரு.மார்ச் 22 வரைக்கும் வக்ரமே .( பஞ்சாங்கம் முடிஞ்சு போச்சு - அடுத்த பஞ்சாங்கம் கடைக்கு வந்ததும் எதுவரைக்கும் வக்ரம்னு கரீட்டா சொல்றேன்.

சூரியன் ராஜாவை ( பிரதமர்/அதிபர்) காட்டும் கிரகம். செவ் ராணுவத்தை காட்டும் கிரகம். ராஜா வீட்டுக்கு ராணுவம் வரலாம். ஏதோ நல்லது கெட்டது நடக்கறச்சா நாலு நாள் காவலுக்கிருந்துட்டு கழண்டுக்கனும்.ஆனால் இங்கன பார்த்தா 98 நாள் ஹால்ட் ஆயிர்ராரு. ( வக்ர காலத்தை சேர்த்தா 98+60 = 158 நாள்.

செவ் சாதாரணமா சஞ்சரிச்சாலே ஆப்பு. இதுல தன் இயல்புக்கு மாறா அதிக காலம் சஞ்சரிக்கப்போறாரு. இதுல வக்ரம் வேற .

செவ் வக்ரமாறதுக்கு மிந்தி வேணம்னா அரசாங்கங்களுக்கு ராணுவங்களின் மேல கண்ட்ரோல் இருக்கலாம். வக்ரமாகி தொலைச்சா?

ராணுவ புரட்சி கணக்காவும் எதுனா நடக்கலாம். எங்கே நடக்கும்னு கேப்பிக .ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு ராசி இருக்கு இதன் படி ஜப்பான் சிம்ம ராசி . புரட்சி ஜப்பான்ல மட்டும் நடக்கும் - அல்லது ஜப்பான்ல புரட்சிதான் நடக்கும்னுல்ல.

ஜப்பான்ல எரிமலை வெடிக்கலாம்/அணு உலை வெடிக்கலாம் /வரலாறு காணாத தீ விபத்து நடக்கலாம். அதே நேரத்துல மேஷம், விருச்சிகத்தை ராசியா கொண்ட நாடுகள்ள புரட்சி/ மேற்சொன்ன பலன்கள் நடக்கலாம்.

சூரியன் நடு பாகத்தை குறிக்கும் கிரகம் அதனால உலகத்தின் மையப்பகுதியில் உள்ள நாடுகள்ள நடக்கலாம். செவ்வாய்னா தெற்கு திசை ஆக தெற்கு திசையில் உள்ள நாடுகள்ளயும் நடக்கலாம்.

சூரியன்னா லீடர். அதனால உலகப்புகழ் பெற்ற தலைவர்கள் டிக்கெட் கூட வாங்கலாம். அல்லாம் செரி தலை .. இந்த செவ்வாயோட ஸ்தம்பனம் ( வழக்கத்தை விட அதிககாலம் தங்குவது) வக்ரம் - அதிலும் சிம்மத்துல வக்ரமாறதால நம்ம ராசிக்கு என்ன நடக்கும்னு சொல்லவே இல்லையேன்னு கேப்பிக.

சொல்றேன். இன்னொரு நாள் ஆடியோ ஃபைல்ல அக்கு வேறு ஆணி வேறா சொல்லிர்ரன்.

கொசுறு:

1.தனித்தெலுங்கானா கேட்டு அதகளம் செய்த கே.சி.ஆர் மேல ஒரு திடுக்கிடும் புகாரை எழுப்பியிருக்காய்ங்க. போலவரம் அணை டெண்டரை தன் ஆளூங்களுக்கு வாங்கிக்கிட்டு சைடு கொடுத்துட்டாருங்கறாய்ங்க.

(இத்தனைக்கும் போலவரம் கூடவே கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் ஸ்டே வாங்கினவுக அவிக - கொய்யால கொள்கை வேற வியாவாரம் வேறன்னு அலார்ட்டா இருக்காய்ங்க)

2.சோனியாகாந்தி 2004 ஆந்திர சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துல தெலுங்கானா தருவோம்னு டிக்ளேர் பண்ணாய்ங்க. 2009 நவம்பர் 9 ஆம் தேதி தெலுங்கான மானில ஏற்பாட்டுக்கான நடைமுறைகள் துவக்கப்படுகின்றனனு சிதமப்ரத்தை வச்சு அறிக்கையும் விட்டாய்ங்க.ஆனால் இப்பம் தெலுங்கானா மேட்டரை திராட்ல விட்டுட்டாய்ங்க. சோனியா வாக்கு கொடுத்து நிறை வேற்றாத காரணத்தால 800 பேருக்கு மேல தற்கொலை செய்துக்கிட்டாய்ங்க - இதனால இவிகளை தற்கொலைக்கு தூண்டினதா சோனியா மேல வழக்கு பதிவு செய்யனும்னு ஹைதராபாதை சேர்ந்த அருண் என்ற லாயர் பெட்டிஷன் போட்டார்.( பாட்டியாலா கோர்ட்ல) . இதை விசாரணைக்கு ஏத்துக்கிட்ட நீதிபதி வழக்கை நவம்பர் 15 க்கு தள்ளி வச்சிருக்காராம். கனி, ராசா அண்ட் கோ வும் இந்த கோர்ட்டுக்கு தானே வந்து போறாய்ங்க.

3.ஏழுமலையானுக்கு ரஜினி எடைக்கு எடை கல் கண்டு கொடுத்தாராம். தன்னோட உசுரோட மதிப்பு அவருக்கு நெல்லாவே தெரிஞ்சிருக்கு. சனங்களுக்கு அல்வா .ஏழுமலையானுக்கு கல்கண்டு.

Wednesday, October 19, 2011

இனத்தையே இழிவு படுத்திட்டியே!

அண்ணே வணக்கம்ணே!

சனம் விஷுவல் மீடியாவுக்கு தாவிக்கிட்டிருக்கிறதால ப்ரிண்ட் மீடியாவும் விஷுவலாக ட்ரை பண்ணுதுன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். குங்குமம் கூட இதுக்கு விதிவிலக்கில்லை.ஒரு காலத்துல சாவி ஆசிரியரா இருந்தப்ப குங்குமத்தோட ரேஞ்சே வேற .ஹும்.. அது அந்த காலம்.

இன்னைக்கு பத்துப்பக்கங்களை வெறுமனே ஜோக்ஸை போட்டு நிரப்பறான். அதை எல்லாம் படிக்கிறச்ச நமக்கும் சிலது தோணும். அப்படி தோனின ஜோக் ஒன்னை சொல்லி இன்றைய பதிவை ஆரம்பிக்கிறேன்.

தொண்டன் 1: நம்ம தலீவரு ஆனாலும் ரொம்ப மோசம்பா

தொண்டன்:2: எப்படி சொல்றே?

தொண்டன்:1 வறுமை கோட்டை அழிக்க எரேசர் (ரப்பர் ) சப்ளை பண்ண காண்ட்ராக்ட் எடுத்து கோடி கோடியா சுருட்டுயிருக்காரு

ப்ரிண்ட் மீடியாகாரவுகளுக்கு நான் சொல்றது என்னனா விஷுவல் மீடியா காரன் "வெறுமனே பார்க்கிறவனை" பார்த்துக்கட்டும். நீங்க கொஞ்சம் போல ரோசிக்கிறவனை டார்கெட் பண்ணுங்கப்பு.

சரி பதிவுக்கு போயிரலாம்.

ரேஷன் கார்டுல பேரில்லைன்னாலும், ஆதார் கார்டுல பேரை சேர்க்கலின்னாலும் ஸ்வீட்டியும் எங்க வீட்ல ஒரு மெம்பருதேன்.(பாமரேனியன்- பெண் நாய் - இப்பம் 3 வயசு -குட்டின்னு சொல்லலாமானு சம்சயம் ).

பெத்த பொண்ணு,பொஞ்சாதியோட ஒப்பிட்டா லொள்ளு கம்மிதேன். மன்சாளை விட நம்ம பிரச்சினை என்னன்னு புரிஞ்சு வச்சிருக்கிற ஜீவன். நாம ஜோதிடபலன் களை மொபைல்ல ரிக்கார்ட் பண்றச்ச மூச்சு காட்டாம இருக்கும்னா பார்த்துக்கங்க.

நள்ளிரவு ( விடியல்னு சொன்னா கரீட்டா இருக்கும்) வரை கம்ப்யூட்டர்ல வேலை செய்துக்கிட்டிருக்கிறச்ச கட்ன பொஞ்சாதி கணக்கா காலை தூக்கி சேர் கை மேல வச்சு கொஞ்சிக்கிட்டிருக்கும். "படுத்துக்கப்பா.. ஒடம்பு என்னத்துக்காகும்" ங்கற மாதிரி

நம்ம வீட்டு பால்கனிய ஒட்டின சன் ஷேடுக்கு குரங்கு கூட்டம் விசிட் அடிக்கிற நேரம் தவிர மத்த எல்லா நேரத்துலயும் நம்ம பேச்சுக்கு கட்டுப்படும். குரங்கு கூட்டம் விசிட் அடிச்சுட்டா தாளி.. ஏழுமலையானே சங்கு சக்கரத்தோட வந்து நிறுத்துன்னாலும் நிறுத்தாது. மண்டை தெறிக்க குலைச்சுக்கிட்டே இருக்கும்.ஆனால் வால் பாட்டுக்கு ஆடிக்கிட்டே இருக்கும். அது என்ன சைக்காலஜியோ தெரியாது.

ஒரு நாளு மாடி போர்ஷன்ஸ்ல ஆருமில்லை. கு.கூ விசிட் அடிச்சுருச்சு. குறுக்கால க்ரில் இருக்கிறதால என்னதான் நடக்குது பார்த்துரலாம்னு ஸ்வீட்டியை கழட்டிவிட்டேன்.

இன்னா ஆச்சுன்னு கேப்பிக. சொல்றேன். அந்த பக்கம் செமை புஷ்டியான கர்பிணியான பெண் குரங்கு+ கண்டன ஊர்வல தொண்டர்கள் கணக்கா குரங்கு கூட்டம்.. இந்த பக்கம் ஸ்வீட்டி. இதனோட குலைப்பு குலைப்பு மாதிரியே தெரியலை. நாம எப்படி நீட்டி முழக்கி பேசுவமோ அப்படியிருந்தது. என்னதான் பேசியிருக்கும்னு ரோசிக்கிறேன். ஊஹூம் ஸ்பார்க் ஆகலை.

நாய் புராணம் போதும் மேட்டருக்கு வாங்கறிங்க. வந்துர்ரன். வந்துர்ரன். ஸ்வீட்டி குரங்கு கிட்டே பேச்சுவார்த்தை நடத்தின மாதிரி நாமும் நடத்த வேண்டி வ்ந்துருச்சுங்கண்ணா.

ஒரு குரங்கின் சுயசரிதைன்னு ஓரு பதிவை போட்டது ஞா இருக்கலாம். நான் என்னமோ அது தமிழ் சிறுகதை வரலாற்றுல மைல் கல்லாயிரப்போகுதுங்கற ஃபீலிங்ல அந்த சிறுகதைய வீராவேசமா அடிச்சு போட்டேன். ஆனாஆரும் கண்டுக்கிடலை.

நாம எழுதற எதையும் எழுதின தினம் ஆரும் படிக்கிறதில்லைங்ணா. ஆனால் தடுக்கி தடுக்கி என்னைக்கோ ஒரு நா படிச்சுர்ராய்ங்க. இன்னைக்கு நாம பீத்திக்கிற ஹிட்ஸ் எல்லாம் பழைய பதிவுகளை அன்னன்னைக்கு பீராய்ஞ்சு படிச்சவுகளோட் எண்ணிக்கைதேன். ஓல்ட் ஈஸ் கோல்டுன்னு நினைக்கிறாய்ங்களோ அ நம்ம பதிவுகள் எல்லாம் வைன் கணக்கா பழசாக பழசாகத்தேன் போதையேத்துதோ என்னமோ தெரியலை.

நிற்க . நல்லவேளையாக . குரங்கின் சுயசரிதை செனேரியோல டஜன் கணக்கா சிறுகதைகள் அடிச்சுரலாம் போல மனசுல ஒரு உற்சாக நீரூற்று பீறிட்டாலும் வயசு (45) கொடுத்த "நரித்தனத்தால" ஒரு கதையோட அடக்கிவாசிச்சுட்டன். பிழைச்சேன்.

கதை போட்டதென்னவோ போட்டாச்சு. ஆனால் மறு நாள் விடியல்ல ஒரு கனா . குரங்கு கூட்டமே என்னை அட்டாக் பண்ணுது.

இன்னாங்கடா இது நாம ஆஞ்சனேயரோட நல்ல அண்டர்ஸ்டாண்டிங்லதானே இருக்கோம். தப்பு தண்டாவுக்கு போயி பல காலம் ஆகுது. தலீவருக்கு இன்னா கோவம்னு ரெம்பவே குழப்பிக்கிட்டேன். அப்பாலதான் ரீசன் ஸ்பார்க் ஆச்சு.

அதனால ஒரு குரங்கின் சுயசரிதைங்கற சிறுகதையில வந்த மதி என்ற குரங்கிடம் மேட்டரை பேசி தீர்த்துக்கத்தேன் இந்த பதிவு.

இனி மதி Vs முருகேசன் :

முருகேசன்:

வாங்க மதி.. உங்களை நம்ம கதையில கேரக்டராக்கினது உங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.

மதி:

போய்யா பொங்கி.. அது ஒன்னும் உன் கதையில்லை. ஏற்கெனவே பல காலமா செலாவணியில இருக்கிற கதைதானே

முருகேசன்:

பின்னே என்ன கோவம்?

மதி:

நீ ஒரிஜினல் கதைய அப்படியே சொல்லிட்டு போ -வேணம்னா நீதி -சீத பேதின்னு பீலா விட்டுட்டு போ அதை விட்டுட்டு சனங்களோட பிஹேவியரை எல்லாம் எனக்கு ஒட்ட வச்சு எழுதியிருக்கே..

முருகேசன்:

மதின்னா புத்தினு ஒரு அருத்தம் இருக்கு. மன்சங்க புத்தி குரங்கு மாதிரின்னு சொல்வாய்ங்க. அதனாலதேன் . அந்த கேரக்டருக்கு மதின்னு பேரை வச்சேன். மேலும் மதின்னா நிலவுன்னும் ஒரு அருத்தம் இருக்கு. சந்திரன் தான் மனோகாரகன். நம்ம கதையில மதிங்கறது குரங்கா சித்தரிக்கப்பட்டாலும் அது உளுவுளா காட்டிக்குத்தேன். அது ஒரு அன் எம்ப்ளாய்ட் யூத்துங்கறது அல்லாருக்கும் புரியும்ங்க

மதி:

என்னா..து உங்க மனசு - புத்திக்கு நாங்க ஒரு குறியீடுன்னு சொல்றயா?

முருகேசன்:

அய்யோ மறுபடி வில்லங்கமாவே பேசறிங்க.. இது கூட நான் புதுசா சொன்னது கிடையாது.ஏற்கெனவே ஞானிங்கல்லாம் சொல்லிவச்சிருக்காய்ங்கப்பா


மதி:

அது சரி வெள்ளி தம்ளர் திருடறாப்லல்லாம் எளுதியிருக்கே

முருகேசன்:

ஷோளிங்கர் மலை ஏறியிருக்கன். அப்பன் ஏமாந்தவுக கிட்டேருந்து கண்டதையும் சனங்க கிட்டேருந்து உங்காளுங்க பிடுங்கிக்கிட்டு போறதை பார்த்திருக்கேன். சில திருடங்க உங்களை பழக்கி திருட்டுத்தொழிலுக்கு கூட உபயோக்கிறாய்ங்கனு கேள்வி.

மதி:
முண்டம் முண்டம்.. எங்கயாச்சும் நாங்க எங்களுக்காவ திருடினதை பார்த்திருக்கியா? திங்கற பொருளை தவிர..

முருகேசன்:

சாரிப்பா இதுவும் வாபஸ்..

மதி:

ஆமாம் பீர் எல்லாம் குடிக்கிறாப்ல எழுதியிருக்கே..

முருகேசன்:

இதுவும் ஞானிகள் சொன்னதுதாம்பா. மனுஷனோட மனசு எப்படியா கொத்ததுன்னு சொல்ல குரங்குக்கு பைத்தியம் பிடிச்சு -அதுக்கு மேல கள் குடிச்சு - அதுக்கு மேல தேள் கொட்டினது கணக்கா அலைபாயும்னு சொல்லியிருக்காய்ங்க

மதி:
கிளிஞ்சது போ.. குரங்கு தண்ணி போட்டதை பார்த்திருக்கியா?

முருகேசன்:
ராம நாராயணன் சினிமாவுல போட்டிருக்கும்னு நினைக்கிறேன். இதெல்லாம் சின்ன மேட்டருங்க . இதுக்கெல்லாம் கூட அப்ஜெக்சன் பண்ணா எமெர்ஜன்சி பீரியட்ல நியூஸ் எழுதினது போல பதிவு சப்பையாயிரும்பா.

மதி:
சரி எங்கயோ சில குரங்காட்டி குடிகாரனா இருந்து தண்ணிக்கு பதில் தண்ணீய வச்சா எங்காளுங்க குடிச்சாய்ங்கனே வச்சுக்க ..உங்களை மாதிரி அரசாங்கத்தையே டாஸ்மாக் நடத்த விடலியே

முருகேசன்:
வலிக்குது..

மதி:
ஒனக்கு மட்டும் வலிக்கும் எங்களுக்கு வலிக்காதா? சரிய்யா எல்லாமே எக்ஸ்க்யூஸ் பண்ணிர்ரன். அதெப்படி நீ நான் ஒரு கில்மா பார்ட்டிய தேடி -அதுவும் காசுக்கு வரவளை தேடி காசு கொடுக்கிறாப்ல எழுதலாம்.

முருகேசன்:

குற்றால குறவஞ்சின்னு ஒரு மேட்டர் ஞா வருதுப்பா. அதுல "மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்" னு ஒரு லைன் வருது

மதி:

என்ன நீ புரியாத பாசைல திட்டறாப்ல இருக்கு

முருகேசன்:
அய்யய்யோ இல்லிங்க.. பெண் குரங்குகள் உதிர்க்கிற பழங்களுக்காக ஆண் குரங்குகள் கெஞ்சும்னு அருத்தம்.. எல்லாம் கணக்கு பண்ணத்தேன் - பட்லியை கவர் பண்ண இதுவும் ஒரு வழி. கெஞ்சல்,கொஞ்சல்ல வேலை நடக்கலின்னா காசால வேலை நடக்கும்னா அதையும் கொடுக்கத்தானே செய்விங்க..

மதி:

தூத்தேறி .. மன்ச புத்திய காட்டிட்டியே.. எங்க இனத்தையே கேவலப்படுத்திட்டியே..

முருகேசன்:

ஹலோ ரெம்ப அலட்டிக்காதப்பா. எங்களுக்குள்ள எதுனா கேவலமான புத்தியிருந்தா அது உங்க கிட்ட இருந்துதான் வந்திருக்கனும். டார்வின் எவால்யூஷன் தியரி தெரியும்ல.. எங்க அரசியல்வாதிங்க கட்சி விட்டு கட்சி தாவ உங்க கிட்டேருந்து வந்த ஜீன்ஸ் தான் காரணம்னு நான் சொல்வேன். நீ இன்னா சொல்லமுடியும்.

மதி:

இருந்த காட்டையெல்லாம் அழிச்சு கழனியாக்கினிங்க. அந்த கழனிங்களையெல்லாம் அழிச்சு வீட்டுமனைகளாக்கிட்டிங்க. மலைகளை எல்லாம் குவாரின்னு குதறிப்போட்டுட்டிங்க. அங்கன எங்களுக்கு சோறு தண்ணி கிடைக்காம ஊருக்குள்ள வந்து அல்லாட வேண்டியதாயிருச்சு.. இதுல எங்களை கேவலப்படுத்தி எழுதினதில்லாம - வக்கணையா வாதடவேற செய்யறே.. மவனே அடுத்த பிறவியில அரசியல்வாதியா பிறந்து உன் ப்ளாகை தடை செய்யாம விடமாட்டேன்..

முருகேசன்:

சார் சார்..

மதி:
போடாங்கொய்யால..