Showing posts with label spiritual. Show all posts
Showing posts with label spiritual. Show all posts

Wednesday, August 24, 2011

அவன் அவள் அது :20


கடந்த பதிவுல ஜகஜ்ஜால புரட்டனான ஒரு ரிப்போர்ட்டரோட மோத வேண்டி வந்தப்போ ஆத்தா எப்படியெல்லாம் ஹெல்ப் பண்ணினாங்கறதை சொல்றதா சொல்லியிருந்தேன். அப்பம் ஸ்டேட்ல சந்திரபாபுவோட உச்சா பெட்ரோலை விட வேகமா எரிஞ்சுக்கிட்டிருந்தது. அடுத்தும் சந்திரபாபு தான் சி.எம்னுட்டு 3 புதுப்பணக்காரவுக காசை தண்ணியா இறைச்சுக்கிட்டிருந்தாய்ங்க. அவிக கிட்ட அதிகமா குளிர்காய்ஞ்சது நிருபருங்கதேன். அவிகளுக்கு (பு.ப) ஸ்டேஷன்லயும் நல்ல வாய்ஸு.

அந்த நேரம் நம்ம தொகுதி எம்.எல்.ஏ ஆளுங்கட்சியோட பழிவாங்கலுக்கு டார்கெட் ஆகி இருந்தாரு. ஆனை படுத்தாலும் குதிரை மட்டம்தானே. இந்த தெலுங்கு தேசம் ஸ்கூலை பத்தி நமக்கு நல்லாவே அனுபவம். தாளி என்.டி.ஆர் ஃபேன் என்ற முறையில என்.டி.ஆர் காலத்துலருந்து உழைச்சிருக்கம்ல. கடேசியா 1999 தேர்தல் வரை ( சந்திரபாபு என்.டி.ஆருக்கு ஆப்படிச்ச பிற்காடும் கூட) தேர்தல் வேலையில எல்லாம் பார்ட்டிசிப்பேட் செய்திருக்கம். அவனுக (ஐ மீன் லோக்கல்) பவிசு நமக்கு நல்லா தெரியும்.

நம்ம எக்ஸ்பார்ட்டி போய் ஒரு ஆளை பிடிக்க நாமளும் அதே கட்சியில இன்னொரு ஆளை பிடிக்க குடுமிப்பிடியாயிரும்னு ஆந்திரபிரபா மேனேஜருக்கு நாம எம்.எல்.ஏ வை பார்க்கலாம்னு சஜஸ்ட் பண்ணேன். அவரு நீயே எதுனா சானலை பிடின்னாரு. ( நாம அவரு 3 தாட்டி ஜெயிச்சு ஹேட்ரிக் அடிச்சப்பல்லாம் அவருக்கு விரோதமாதான் வேலை செய்திருக்கம்)

எந்த சானலை பிடிக்கிற்துன்னு தலையை பிடிச்சுக்கிட்டம். முன்னாள் தி.தி.தே சேர்மன் பூமண கருணாகர் ரெட்டி (இப்பம் ஜகனோட முக்கிய தளபதிகள்ள ஒருத்தரு) ஞா வந்தாரு.

அவருக்கும் நமக்கும் என்ன லின்குன்னு கேப்பிக. சொல்றேன். ஆத்தா ஒவ்வொரு வேலையா செய்தா. வஷக் வஷக்னு ஜெபிச்சதுல ஆராரையோ வசியமாக்கி வச்சுட்டா. நம்மை பத்தி வார்த்தால செய்தி வந்ததை படிச்சுட்டு தன்னோட சர்க்கிள்ள நம்மை ரெம்ப ஸ்லாகிச்சு பேசினதா தகவல்.

அப்பம் நமக்கு ஆ.இ.2000 தவிர வேற வேலையே கிடையாது. உடனே டைரக்டரில அவரோட நெம்பரை பிடிச்சு பேசினம். அவரும் ரெம்பவே ஆர்வம் காட்டினாரா ஃபோன் தொடர்பு அப்படியே கன்டின்யூ ஆயிருச்சு.

நீங்க எங்க எம்.எல்.ஏவுக்கு சொல்லுங்கன்னு கேட்டா நல்லாவா இருக்கும்.அதனால பொதுவா மேட்டரை சொன்னம். அவரு " அவ்ளதானே நான் பாபுவுக்கு (எங்க தொகுதி எம்.எல்.ஏ) ஃபோன் போட்டு சொல்றேன்
நீங்க போயி அவரை பாருங்கன்னுட்டு ஃபோனை வச்சுட்டாரு.

எம்.எல்.ஏவை பொருத்தவரை அவரோட கட்சி பவர்ல இல்லைதான். ஆனால் ஆளுங்கட்சி டுபுக்குங்களை நம்பறதை விட இவரை நம்பினா நம்பினோர் கைவிடப்படார். அவரோட கேரக்டர் இது.

ஒடனே திருப்பதிக்கு ஃபோன் போட்டு மேனேஜர் அண்ட் கோவை வரச்சொன்னேன். ச்சொம்மா பார்த்தோம். அவரு " சி.ஐ கிட்டே போங்க என்னை பார்த்ததா சொல்லுங்க. தேவைப்பட்டா ஃபோன் போடுங்க நானே வர்ரேன்" னாரு அவ்ளதேன். அதுக்குள்ள தகவல் தீயா பரவ.. மறுபடி ஸ்டேஷன்ல இருந்து ஆளு. சுதி இறங்கிப்போயி " ஃப்ரீயா இருக்கிறப்ப ஒரு அஞ்சு நிமிஷம் சி.ஐ சாரை பார்த்துட்டு வந்துருங்க சார்"

நம்மை பேசவிட்டா போறாதோ வாத்தியார் படம் மாதிரி " எங் வகக்கை நானே வாகாடுகிறேன்"னுட்டு கிழிச்சு ஆறப்போட்டுர மாட்டோமா? போட்டுட்டம். சி.ஐ சுஸ்தாயிட்டாரு. நம்ம மேனேஜர் " எக்ஸ் பார்ட்டிய திருப்பதிக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணியாச்சு ஜாயின் பண்றதா இருந்தா பண்ணட்டும் சித்தூர்ல டிஸ்டர்ப் பண்ணா சிவியர் ஆக்சன் எடுப்பம்"னு சி.ஐக்கு சொல்ட்டாரு.

யுத்தம் தானே க்ஷத்திரிய தர்மம். அது முடிஞ்சதுமே நம்ம வேலை ஓவர். வெற்றியை அனுபவிக்க எங்கருந்தோ ஒரு பார்ப்பான் வந்துருவான் தானே. அப்படி திருப்பதி ஏடிவிடி பார்ப்பான் புத்தூர் பார்ப்பான் ஒருத்தனை ஸ்டாஃபரா ரெக்கமண்ட் பண்ண நாம வாய்ல விரல் போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதாயிருச்சு. அது வேற கதை.

நாம மட்டும் தெலுங்கு தேச க்ரூப்ல போய் வாய வச்சிருந்தம் தாளி ஊறப்போட்டே நாறடிச்சிருப்பானுவ.இது நம்ம லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட்.

எம்.எல்.ஏவோட இன்டர் ஆக்ட் ஆக தடையா இருந்தா 15 வருச கம்யூனிகேஷன் கேப் /அல்லது ஒரு தயக்கம் தூளாகிருச்சு. இன்னைக்கு ஜஸ்ட் எம்.எல்.ஏவோட அடிப்பொடிகளுக்காகவே லோக்கல்ல பத்திரிக்கை அதுவும் மல்ட்டிகலர் ந்டத்திக்கிட்டிருக்கம். அதுவும் வெற்றிகரமா.

அடுத்த வாரம் வினாயகர் சதுர்த்தி கம் ரம்ஜான் ஸ்பெஷலும் ரிலீஸ் ஆகப்போகுது. மல்ட்டி கலராக்கி ஒரு வருஷம் கம்ப்ளீட் ஆயிருச்சு. பத்திரிக்கை நடத்தி போன்டியானவுக எத்தீனி பேரு கீறாய்ங்கன்னு உங்களுக்கே தெரியும்.

ஆத்தா மனசு வச்சா பத்திரிக்கை நடத்தி கூட காசு பார்க்கலாமுங்கோ.


Monday, July 11, 2011

என் டெஸ்க் டாப்பில் பெரியார்!




பெரியாரை உங்களுக்கெல்லாம் ஒரு நாத்திகராத்தான் தெரியும். ஆனால் எனக்கு அவர் ஒரு குப்த யோகி என்பது என்னைக்கோ ஸ்பார்க் ஆயிருச்சு. பெரியார் ஒரு சித்த புருஷர்னு என்னைக்கோ பதிவு கூட போட்டுட்டன்.
நம்ம டெஸ்க் டாப்ல பெரியாருக்கு என்ன வேலைனு கேப்பிக .சொல்றேன். நம்முது கடகலக்னம்ங்கற மேட்டரு ஜகத் ப்ரசித்தம். ஏற்ற இறக்கம்ங்கறது உடன் பிறந்தது. இது ஆன்மீகத்துலயும் As it is ..தொடருது.
ஒரு கட்டத்துல " நானே அதுவோ?.. மாறுவேஷத்துல இங்கன வந்து -இவிக பண்ற லொள்ளுல நான் யாருங்கறதையே மறந்துட்டனோ"ங்கற சந்தேகம்லாம் வந்துரும்.
படிப்படியா ஷீர்டி பாபாவோட மறுபிறவி போலனு நினைக்கிறது - இன்னொரு கட்டத்துல அய்யய்யோ பாபா ரேஞ்சு என்ன நம்ம கேரக்டர் என்ன.. ஆளைவிடு.. நாம ஏதோ சம்மத்துல ஆத்தாளுக்காக தலை-கிலை வெட்டி கொடுத்திருப்போம் போலனு நினைப்பு ஓடும்.
ஒரு கட்டத்துல எல்லா சாமியும் வெறும் சாமிதேன். இதுகளுக்கு பக்தனோட " நாற பொழப்பு தெரியாது" நம்ம பாஸ் தான் டூ இன் ஒன் (ஆஞ்சனேயர்). இந்த கட்டத்துல நெத்தியில சந்தனம் - குங்குமம் - விபூதி எதையும் வைக்கமாட்டேன்.
ஆஞ்சனேயருக்கு வச்ச ஊதுவத்தி சாம்பலை மட்டும் நெத்திக்கு இட்டுக்குவன்.இந்த வரிசையில கிராஃப் படிப்படியா விழுந்துக்கிட்டே வந்து "தாளி.. பார்ப்பானுவ விட்டதெல்லாம் ரீலுதான் போல. நாமதான் பைத்தாரத்தனமா அதுல முத்துக்களை தேடி நாறிக்கிட்டிருக்கம். இஸ்லாம் - கிறிஸ்தவம் தான் உண்மையான மதம் போலங்கற ஸ்டாண்ட் வந்துரும்.
இந்த ரேஞ்சுல ஒரு கட்டத்துல தாளி தெய்வம் கிய்வம்லாம் ச்சொம்மா பீலா. சத்தியம் தேன் தெய்வம்னுட்டு ஆயிரும். அப்பம் "சத்யமேவ ஜெயதேங்கற ஸ்லோகனை மந்திரம் போல சொல்லிக்கிட்டு கிடப்பேன்.
இந்த மாற்றங்கள் லாங் ரன்னிலும் வரும்.ஷார்ட் ரன்லயும் வரும். பூமி தன்னை தானே சுத்திக்கிறது ஒரு வித சுழற்சி - சூரியனை சுத்திவர்ரது இன்னொரு விதமான சுழற்சி.
இப்படி ஒரு லாங் ரன் சுழற்சியில சத்தியத்தை உபாசிச்சிட்டிருந்தப்பதேன் சாமி,பூதம்,ஊரு உலகம்லாம் கைவிட்டுட்ட பிற்பாடு சத்யாங்கற நண்பன் காட் ஃபாதரா இருந்தான். ( இன்னைக்கும் சத்யாவுக்கு 108 நாமதேன்)
இடையில "தம்ம பதா" படிச்சுட்டு புத்தரை ஆதர்சமா கொண்டிருந்த காலகட்டத்துல அஷோக்ங்கற யங் ஃப்ரெண்ட் கொஞ்ச காலம் சகாயமா இருந்தான்.
இதெல்லாமே கை விட்டு ஆப்படிக்கிற சந்தர்ப்பத்துல நம்ம சகா / குரு/தெய்வம்/வழிகாட்டி எல்லாமே நம்ம பெரியார் தேன்.
ஆன்மீகம் தன் உச்சத்துக்கு போனா அங்கன தெய்வம் கிடையாதுங்கோ..அதுமாதிரி ஒரு சீக்வன்ஸ் நேத்து வந்துருச்சு.
ஸ் .. அப்பாடா ஒரு ரவுண்டு முடிஞ்சதுங்கற நிம்மதி மனசுல உருவாகிருச்சு. "ஆண் பெண் வித்யாசங்கள் " தொடர்ல என்னையும் அறியாம பல சாஸ்வத உண்மைகளை போட்டு உடைச்சுட்டாப்ல இருக்கு..
மன்சன் சாமியோட தயவை எதிர்பார்க்கிற பிச்சைக்காரனா இல்லாம சுயமரியாதையோட - தன் வாழ்க்கையை புரிஞ்சிக்கிட்டு -வாழ்க்கை துணையை சக போராளியா சேர்த்துக்கிட்டு வாழ்வின் மர்மங்களை ப்ரேக் பண்ணி வாழ்வாங்கு வாழ்வதற்கான டிப் ஏதோ இந்த தொடர்ல மாட்டிக்கிச்சு போல.
ஆத்தா மட்டும் "ஆங்காரி"இல்லிங்ணா. எல்லா ஜேஜிக்கும் அந்த அகங்காரம் சாஸ்தி. இவன் நம்மை மீறி போறதானு கட்டைய போட்டுரும். ( இது நம்ம நன்மைக்காகவே கூட இருக்கலாம்.அது வேற கதை)
இந்த தொடரை தொடர முடியாம இடையில சின்ன சின்னதா டிசைன் டிசைனா எத்தனையோ ஆப்பு.
சரி பதுங்கித்தான் ஆகனும்னு டீல்ல விட்டுட்டன். ( நாம புலினு ஒரு நெனப்புண்ணே) சிச்சுவேஷன் ஓரளவு கூல் ஆன பிற்பாடு இந்த தொடரை மறுபடி ஸ்டார்ட் பண்ணேன்.
அஷ்டம சனி+கேது புக்தி காம்பினேஷன்லாம் பிச்சை வாங்கற ரேஞ்சுக்கு லொள்ளு ஆரம்பிச்சுருச்சு.
நல்லவேளையா நமக்கோ - நம்மை சேர்ந்தவுகளுக்கோ ஆபத்து ஒன்னுமில்லைன்னாலும் நம்ம கம்ப்யூட்டருக்கு ஆப்பு வந்துருச்சு.
இந்த 3 நாள்ள 6 ஃபார்மட் - 12 அப்டேஷன். எல்லாம் ஓகேங்கற ஸ்டேஜ்ல ஆன்டி வைரஸ் போட்டா மறுபடி பல்பு.
இதெல்லாம் தாளி 2007 க்கு முந்தி நடந்திருந்தா எறும்பு கடிச்சாப்ல கூட இருந்திருக்காது. "ங்கோத்தா இவ்ளதானே"னு துடைச்சு விட்டிருப்பேன். அப்ப நாம காஞ்ச திராட்சை மாதிரி. ஈரம்தேன் ஆகாது. எத்தீனி கோடை வந்தாலும் - ஜுஜுபி.
ஆனா பாருங்க இப்பம் 2007 முதல் தந்தி - 2009 முதல் ஆன் லைன் ஜோதிட ஆர்வலர்கள் தயவுல நிலைமை மாறிப்போச்சு.
தோல்விகள் - அல்லாட்டங்களோட டச் விட்டு போச்சா பீதியில பேதியாயிருச்சு. கடுப்புல ங்கொய்யால இந்த சாமிங்களோட பேச்சே வேணாம். இதுகளுக்கு ஆசாமியோட கஷ்டம்னா என்னன்னே தெரியாது.
இதைவிட ராமசாமியே அதாங்க ராமசாமி நாயக்கரே பெட்டர் ஆஃபருன்னு டிசைட் பண்ணேன்.
"தாளி என்னடா இது நாற பொழப்பு.. இன்னைக்காச்சும் ஆருனா மனசுக்கு பிடிச்ச பார்ட்டியோட கண்ணன் காலேஜ் கிரவுண்டுல ஒரு மரத்தடியில மனசுக்கு பிடிச்ச விஷயங்களை பேசிக்கிட்டிருந்தா நல்லாருக்குமே.. இதுக்கு பெரியார்தான் வழி பண்ணனும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.
ஆச்சரியம் என்னடான்னா அதே செகண்டு மனசுக்கு பிடிச்ச ஃப்ரெண்டுகிட்டேருந்து ஃபோன்.
கண்ணன் காலேஜ் கிரவுண்ட்ல வெய்ட் பண்றேன் வா..
இதுக்கு இன்னா சொல்றிங்கணா? ஒப்பீனியன் ப்ளீஸ்..

Thursday, March 24, 2011

ஆன்மீக குரு +பிறவிகள் : 2

"ஜடி வானை குரிசானு மீலோ காசிந்த மானவத்வான்னி மொலக்கெத்திஞ்ச லேக போயானு"ன்னுட்டு தெலுங்குல கவிதை எழுதின பார்ட்டி நானு,

பொருள்:
அடை மழையென பொழிந்தேன். உங்களில் கொஞ்சமே கொஞ்சம் மனிதத்தை முளைவிட செய்ய முடியாமல் போனது

ஆனால் பாருங்க. இன்னைக்கு இத்தீனி பேரு படிக்கிறிங்க.. ரோசிக்கிறிங்க. நன்றி பாஸ். ஒகே மேட்டருக்கு வந்துருவம்.

குருவை பத்தி ஓரளவு விளக்கியாச்சு. முற் பிறவியை கண்டுக்க ஒரு குன்ஸ் கொடுத்திருந்தேன்.( சனியை பின் ராசிக்கு நகர்த்தி பார்க்கிறது - அதே சனியை முன் நோக்கி நகர்த்தி பாருங்க இது உங்க அடுத்த பிறவியை பற்றி ஒரு ஐடியாவ தரும்னு சொல்லியிருந்தேன் )  மேலும் தொடர்ந்து படிக்க

Saturday, November 20, 2010

இதான் நைனா சமாசாரம்

நானு 2000 ஜூலை 31லருந்து மாஞ்சி மாஞ்சி இன்னா இன்னாமோ எள்திக்கினு கீறேன். " இத்தினிக்கு நீ இன்னாதான் சொல்றேபா"னு ஆருனா கேட்டா இதான்பா சமாசாரம்னு சொல்லனுமில்லியா?

சின்னப்ப தேவர் தன் கிட்டே கதை சொல்ல வரவங்களை மூணு வரில சொல்லுனுவாராம். அது மாரி என்னை ஆர்னா கேட்டா நான் இன்னா சொல்றது?


இப்ப சொல்லிர்ரேன் நைனா. நாம எல்லாரும் என்னிக்கோ,எங்கனயோ ஒரே உடம்பா ஒரே உசுரா இந்து கீறோம். அந்த கியாபகம் மட்டும் அப்டியே கீது. மறுபடி ஒன்னா சேரனும்னு துடிக்கிறோம்.அதுக்கு இந்த பாடி தான் அட்டம்னு இதை தூக்கி கடாசத்தான் கொல்றோம்.கொல்லப்படறோம்.

மன்சன் இன்னா பண்ணாலும் அதும்பின்னாடி கீறது இந்த ஃபீலிங் தான்னிட்டு சைக்காலஜில சொல்றாங்கபா.

செக்ஸு, பணம்,பதவி ,பேரு ,புகள் எதுனா எட்த்துக்கோ அதை வச்சிகினு இன்னா பண்றோம். கொல்றோம் இல்லே கொன்னுக்கறோம்.

என் குன்ஸு இன்னாடான்னா நாம இப்பத்திக்கும் சேர்ந்துதான் கீறோம். அல்லா மொபைல் ஃபோனையும் டவருங்க மூலியாமா  சேட்டிலட்டு சேர்த்து புடிச்சு வச்சிக்கினு கீற மாதிரி இன்னாமோ ஒன்னு நம்ம நடுவுல கீதுபா.

அத்த நாம தான் பார்க்க மாட்டேங்கறோம் .ஃபீல் பண்ண மாட்டேங்கறோம். சைலன்சர்ல எலுமிச்சங்கா அட்ச்சிக்கின மாரி நான் வேறே இந்த ஒலகம் வேறேனு ஒரு ஃபீலிங் கீது. இத்தை தான் ஈகோன்றானுங்கோ.

நம்போ குடை எட்த்துகினு போறப்போதான் மளை வரனும், நாம ஏ.சி வச்சிக்கினப்பாறம் தான் வெய்ய காலம் வரனுங்கற மாரீ தான் ஃபீல் பண்றோம். ஆனால்  இந்த நேச்சருக்கு மின்னாடி ரஜினிகாந்தும் ஒன்னுதான். கிங்காங்கும் ஒன்னுதான்.

இந்த நேச்சர் ஒரு ப்ரி ரிக்கார்டட் சி.டி மாரி. அதும்பாட்டுக்கு ஓடிக்கினே கடக்கும். நீ பார்த்தாலும் அம்புட்டுதேன்..பார்க்காட்டாலும் அம்புட்டுதேன்.

இந்த லைஃப்ல உப்பு ஊறுகாய்க்கு ஒதகாத மேட்டர்லல்லாம் மீனிங் தேடிக்கினு லைஃபையே மீனிங்லெஸ் ஆக்கிட்டோம் பாஸு. எனக்கென்னவோ இந்த படைப்பே ஒரு விபத்துன்னுதான் தோணுது. அல்லாமே விபத்துதேன்.

ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனதும் விபத்துதேன். மன்சன் செக்ஸுலருந்து பணத்துக்கு தாவினதும் விபத்துதேன்.

இங்கே எது வேணம்னா பொய்யா பூடலாம்.ஆனால் சாவு மட்டும் சத்தியம். அந்த சாவை ஃபேஸ் பண்றதுக்கோசரம் டோட்டல் லைஃபையும் ஸ்பென்ட் பண்றதான் புத்திசாலித்தனம்னு தோனுது.

சாவை எப்டி ஃபேஸ் பண்றதுன்னா தூக்கம்ங்கறது ஸ்லைடு மாரி. தியானம்ங்கறது ட்ரெய்லர் மாரி. சாவுதான் மெயின் ஃபிலிமு.

நாம இன்னாதான் வாய்ந்தாலும் ஒரு நாளில்லை ஒரு  நால் இல்லாம பூடுவோம். நாம இருக்கறப்பயே இல்லாத மேரி இந்து பூட்டா பெரச்சினையே இல்லியோனு தோனுது.

இந்த ஒலகமே ஒரு பெரீ ஷூட்டிங் ஸ்பாட்டு. தாளி ஒரு பக்கம் நீலப்படம் எடுக்கறானுவோ,ஒரு பக்கம் க்ரைம் ,ஒருபக்கம் சோஷியல், ஒரு பக்கம் புராணம் . நான் எந்த யூனிட்லே கீறேன்னே தெரிலை. இர்ந்தாலும் டைரக்டர்னு ஒருத்தன் வந்து பிகில் ஊதி எதுனா சொன்னா செய்துட்டு போறேன்.

நேச்சரை பாரு ப்ரதர். மழைய எட்த்துக்கோ. அது பெய்யனுமே பெய்யனுமேனு டென்ஷன் ஆகுதா .. நோ. நான் பெய்ய கூடாது பெய்ய கூடாதுனு இறுக்கிக்கிதா நோ. அந்த  நேரம் அடிக்கிற காத்த பொருத்து அந்த திசைய பொருத்து அடிச்சிக்கினே பூடுது.

நேச்சர்ல பாரு பாஸு.. நீ தனி நான் தனிங்கற பாவத்தே இல்லே. அல்லாமே டீம் ஒர்க்.ஒரு  டைம் டேபிள் கீது.  அது அதும் பாட்டுக்கு அது அது   நடந்து போய்க்கினே கீது..

இவுனுக்காக ,அவுனுக்காக, இந்த சாதிக்காக அந்த சாதிக்காக, இந்த மதத்துக்காக அந்த மதத்துக்காக இந்த மதத்துக்காக , இந்த நாட்டுக்காக அந்த  நாட்டுக்காகங்கற விவஸ்தை எல்லால் கிடையாது.

அதுனாலதான் சனங்க இன்னானா சொல்லிக்கினு போவட்டும் அதும்பாட்டுக்கு போய்க்கினே கீது. அதுக்கு எந்த ஃபீலிங்கும் கடியாது (ரஜினி ஸ்டைல்!)

நாம ஏன் மளை மாரி இருக்க கூடாது.. அதுக்கான சின்ன முயற்சிதான் ஆப்பரேஷன் இந்தியா 2000.

ஆத்துக்கெல்லாம் காவா வெட்டி லிங்க் பண்ணனும், வெவசாயம் பண்ணோனம். பசி கூடாது. வறுமை கூடாதுங்கறேன். இது நடந்தா சந்தோசம்தேன். நடக்கலைன்னா கண்ண கசக்கப்போறது ஒன்னும் கிடையாது.

மளை மாரி இரு நைனா. காத்து மாரி இரு பாஸு நெருப்பு மாரி இரு ப்ரதர் அட கு.ப இந்த பூமி மாரி இரு துரை ..


நோ ஃபீலிங்.. நோ ஹீலிங்.. உடு ஜூட்

Sunday, September 26, 2010

உலக உருண்டை கை கொண்டு வாய் பொத்தித்தான் நகுமேடா?

அனுமன் வந்துன் மனம் நின்றால்
அகிலமும் அடங்கும் ஒரு சொல்லில்
சொல்லின் செல்வன் அவனன்றோ?
வில்லின் விலாசம் ஸ்ரீராமன் -அவன்
துன்பம் துடைத்தவன் அனுமனன்றோ?

அவன் கதையை ஏந்த கசடர்களின்
கதைகள் யாவும் கந்தல்தான்
ராம நாமம் ஜெபித்திட்டால்
வந்து குதிப்பான் ஏந்தல்தான்

ராம ராஜ்ஜியம் பூத்திடவே காற்றின் புதல்வன் இயங்குகிறான்
ஆள்பவரோடு ஆண்டைகளும் கெட்டுக்கிடக்க தயங்குகிறான்

மானச சரோவரம் சென்றிட்டால் இன்றும் அவனை கண்டிடலாம்
அபயம் கேட்டு அண்டிடலாம்
மானச சரோவரம் எங்கென்று  வரைபடம் எடுத்து தேடாதீர்
அகந்தை கொண்டே ஆன்மாவை மூச்சுத்திணற மூடாதீர்
சிந்தையை சிதைக்கும் சிடுக்கை அவிழ்த்தால்
மனசுக்குள்ளே  ஒரு ஓரம் வந்து அமர்வான் அனுமன் தான்.

எத்தனை யுகமோ எத்தனை பிறப்போ ?
என்றும் இந்த பாடாமோ?
படைப்பே படைப்பில் அங்கமென அழகுடன் இயைந்து இயங்குகையில்
வேறு பட்டு வேர் பட்டு கெட்டு ஒழிதல் ஏனோடா?

தங்கமானாம் மாயை அதுவே
அதனை வேண்டி அண்ணலையே பிரிந்து பட்டோம் பலபாடு
நாகம் ஒன்றே  படமெடுத்தாட அதன் நிழலில்
படுக்கை இட்டு பல கனவும் கண்டிருத்தல் தகுமோடா?
உலக உருண்டை கை கொண்டு  வாய்  பொத்தித்தான் நகுமேடா?

ராமனை எண்ண அனுமன் வருவான்
குருவாய் வந்தே அணைத்தெடுப்பான்

ராம ராம என்றிருப்போம்
ராம நாமம் தனையே தின்றிருப்போம்

அனுமன் நிழலென தொடர்ந்திடுவான்
அருகாய் உன் மனம் படர்ந்திடுவான்

Wednesday, September 15, 2010

தேவ ரகசியங்கள் :2

அண்ணே வணக்கம்ணே ,
நீங்க மனைவி அமைவதெல்லாம் சீரியலை படிக்கிற அவசரத்துல இருந்தா  Jump in to it.  மத்தபடி இந்த தேவ ரகசியங்கள் ரெம்ப தத்துவார்த்தமா போயிருச்சு. உங்களுக்குள்ள ஆன்மீக தேடல் இருந்தா படிங்க. ஓரளவுக்கு யூஸ் ஃபுல்லா இருக்கும். பை தி பை இளம் பதிவர்களுக்கு சில யோசனைகளை தெரிவிச்சிருக்கேன். அவிக படிச்சு ஃபாலோ பண்ணா புண்ணியம் புருஷார்த்தம்

Now let us jump in to .......... தேவ ரகசியங்கள் 

தேவ ரகசியங்கள் 2
எதையெல்லாம் வெளிப்படுத்தினா  நான்  சாபத்துக்காளாவேனோ, தரித்திரம் என்னை பிடுங்கி தின்னுமோ அற்பாயுசுல  செத்து போயிருவனோ அதையெல்லாம் வெளிப்படுத்திர்ரதா முடிவு பண்ணியிருக்கேன். நேத்து இதே மாதிரியான சிவராத்திரி  சந்தர்ப்பத்துல விழிப்பும் தூக்கமும் கலந்த நிலைல மனக்கண் முன்னாடி ஒரு கண்ணாடி தெரிஞ்சது. அதுக்குள்ள நான் பிணமா படுத்திருக்கிற மாதிரியான காட்சி தெரிஞ்சது. இன்னைக்கு அதே போன்ற நிலைல 15 நாள் தான்னு ஒரு குரல் கேட்டது. ( ஆடிட்டரி ஹெலூசினேஷன் இல்லை வாத்யாரே)

என்னை பை.காரன்னு டிசைட் பண்ணாலும் சரி,  நான் சொல்றதுல உள்ள சத்தியத்தை கிரகிச்சு மேலும் மேலும் இந்த சத்தியங்களை வெளிப்படுத்த எனக்கு ஆன்ம பலத்தை கூட்ட எனக்காக பிரார்த்தனை பண்ணாலும் சரி. சொல்ல வந்ததை சொல்ல முயற்சி பண்றேன்.

என்னதான் இந்த பதிவு  கடவுளுக்கு, படைப்புக்கு எதிரானதா இருந்தாலும் அவன் அருளாலே அவன் தாள் பணிந்துங்கற மாதிரி இதுக்கும் கடவுளோட அருள் தேவைப்படுது. பாண்டவருங்க பீஷ்மரை  கொல்ல  அவர்கிட்டேயே  க்ளூ  கேட்டுக்கலையா அது மாதிரி. இங்கே கடவுளை கொல்றது நம்ம உத்தேசமில்லே. கடவுள் பேரால இங்கன செலாவணில இருக்கிற பிரமைகளை, மூட நம்பிக்கைகளை ஒழிச்சுக்கட்டறதுதான்.

நிறைய பேரு என்ன நினைக்கிறாய்ங்கன்னா கடவுளை கும்புட்டா அவரு  அத்தை கொடுப்பாரு  இத்தை கொடுப்பாருன்னு  தான்.

அப்படி ஏதாச்சும் உங்களுக்கு கிடைச்சிருந்தா ஒன்னு நீங்க ஆன்மீகத்தோட டோர் ஸ்டெப்லயே இருந்திருப்பிங்க. அல்லது உங்க பிரார்த்தனைக்கான பலன் உங்க சொந்த இயற்கைலருந்தே வெளிப்பட்டிருக்கும் ( ஆதாரம்: விவேகானந்தர்).

கடவுளை ஹரிங்கறாய்ங்க. ஹரின்னா என்ன அர்த்தம் பிடுங்கறவன். ( பௌராணிகர்கள் உலக துன்பங்களையெல்லாம் பிடுங்கிறவன்னு இட்டு நிரப்பி சொல்வாய்ங்க அதையெல்லாம் நம்பாதிங்க) கடவுள் பிடுங்கறவருதான். உங்க பேர்,புகழ், உடல் வலிமை, மன வலிமை, புத்தி பலம் எல்லாத்தயும் பிடுங்கறவருதான். ஏன் பிடுங்கறாரு?

யத்பாவம் தத்பவதின்னிட்டு உங்களையும் தன்னை போல மாத்த பிடுங்கறாரு. அவர் அனாமி - பேரில்லாதவர் அதனால உங்க பேரை  நாஸ்தி பண்ணிருவாரு. அவர் அசரீரி - உருவமில்லாதவர் அதனால உங்க உருவத்தை குலைச்சுருவாரு. அவருக்கு அப்பா அம்மா அண்ணன் தம்பி பொஞ்சாதி, புள்ளைக்குட்டி யாருமில்லை. உங்களுக்கும் எதுவும் இல்லாம பண்ணிருவாரு.

இதெல்லாம் பிடுங்கப்பட்ட பிறவு இருக்கிற நீங்க தான் உண்மை . இதெல்லாம் சொம்மா கவரிங்.

"அய்.. என் ஃப்ரெண்டு பத்துவருஷமா சாமி கும்பிடறான் . நல்லாருக்கானே"
"அட எங்க சித்தப்பா 25 வருஷமா கோவிலுக்கு போய் வராம பச்ச தண்ணி கூட குடிக்கமாட்டாரு . நல்லாருக்காரே"ன்னெல்லாம் கிராஸ் பண்ணுவிக.

அவிக ஆன்மீக கோட்டையின் அகழியை கூட தாண்டியிருக்கமாட்டாய்ங்க அதனால தான் ஒரு இழவும் நடக்கலை.

ராமகிருஷ்ணர் விவேகானந்தரை ஒரு இடத்துல கேட்கிறார். " கடவுள் ஒரு அமிர்தம் நிறைஞ்ச பாத்திரம்னு வை நீ எப்படி சாப்பிடுவே?"

அதுக்கு விவேகானந்தர் சொல்றாரு " பாத்திரத்தோட உதட்டு மேல சாக்கிரதையா நின்னுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா சுவைப்பேன்" விவேகானந்தர் மாதிரி யோகியே உதட்டு மேல நின்னுன்னு சொல்றாரு.

நாம இந்த உலக வாழ்க்கைல ஆன அநியாயம்,அக்குறும்பு எல்லாம் பண்ணிக்கிட்டு  நடக்கிற அதர்மத்தையெல்லாம் சகிச்சிக்கிட்டு பாவ மூட்டைய சுமந்துக்கிட்டு கிடக்கோம் நாம என்னான்னு சொல்லனும்? அய்யய்யோ அந்த பக்கம் கூட திரும்ப மாட்டேம்பான்னுதானே சொல்லனும்.

நீங்க நினைக்கிற மாதிரி கடவுள் கருணைக்கடலெல்லாம் இல்லே. வில்லன் நெம்பர் ஒன்.  பயங்கர சாடிஸ்ட்.

நீங்க அந்தாள கண்டுக்காத இருக்கிற வரை  எல்லாமே உங்க கண்ட் ரோல்ல இருக்கிற மாதிரி ஒரு பிரமையை கொடுத்து வச்சிருப்பாரு. நீங்க அவரை கண்டுக்கனும்ங்கற நேரம் வந்ததும் ( இதை ஃபிக்ஸ் பண்ணதும் நீங்கதான். அப்போ நீங்க ஆன்ம ரூபத்துல இருந்திங்க. கடவுளுக்கு சமமா இருந்திங்க ) எல்லா சர்க்யூட்லயும் புகை வர வச்சிருவாரு. பைத்தியமா அடிப்பாரு.

ஒரு வழியா நீங்க ரூட்ல விழுந்து அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வச்சா போதும் மொதல்லஉங்களை கழட்டிவிட எத்தனை வழி இருக்கோ எல்லா வழியையும் பார்ப்பாரு. கோவில்,குளம், தானம்,தர்மம் இப்படி ஏதோ ஒரு ஸ்டாப்ல உங்களை இறக்கி விட்டுருவாரு. நீங்க உங்க டெஸ்டினேஷனை மறந்துட்டு மேற்படி ஐட்டங்க தான் உண்மையான ஆன்மீகம்ங்கற பிரமைல வாழ்க்கையை வீணாக்கிருவிங்க.

ஏன் இப்படி சூ காட்டி விட்டுர்ராருன்னா இந்த பாதையில தொடர்ந்து பயணம் பண்றவனுக்கு மேட்டர் புரிஞ்சு போவுது இந்த வாழ்க்கைங்கற திரைக்கதைக்கு ஆசிரியர் கடவுள் இல்லே. நாமதான். நாம நினைச்சா காட்சிகளை கூட்டலாம் குறைக்கலாம். ஒன் லைனையே மாத்தலாம்.

இது கடவுளுக்கு விருப்பமில்லே போலும். சரிய்யான ஈகோயிஸ்டுப்பா.

( ஆன்மீக பாதையெங்கும் லோட் லோடா  ஃபெவிக்கால் கொட்டி வச்சிருக்குங்கோ. காலை வச்சிங்க பச்சக்குனு ஒட்டிக்கும். தாளி ஒரு அடி எடுத்து முன்னே வைக்க முடியாது)

இப்போ என் கேஸையே பாருங்க  1967 முதல் 1984 வரை எனக்குள்ள எந்த வித கேள்வியும் கிடையாது. க்ளாக் வைஸ் லைஃப். 1986ல கூட ஏதோ இந்த செக்ஸ் செல்ஃப் ரெஸ்பெக்டுக்கு பங்கம் விளைவிக்கிறாப்ல இருக்கே இதை ஒரு கை பார்க்கனும்ங்கற எண்ணத்துலதான் சொம்மா வேடிக்கை பார்க்க ஆன்மீகத்துல  இறங்கினேன்.

பல்ப் மாட்டிக்கிச்சு. அங்கன இருந்து நாயடி பேயடி கொடுத்து இரும்பு பழுக்க காஞ்சு போச்சு. இன்னம் ஒரே அடிக்கு ஷேப் வந்துருங்கற ஸ்டேஜ்ல  2007 ல சின்ன டர்னிங் பாயிண்ட்.  அதாவது சூ காட்டி விட்டுர்ரது.

அதுக்கு முந்தி அடுத்த வேளை  சோத்துக்கு தவிர வேற எதுக்கும் ஸ்கெச் பண்ணாம சதா சர்வ காலம் அந்த ஆளையே  நம்பிகிட்டு அந்தாளையே தியானம் பண்ணிக்கிட்டு  நெருப்பு நெருப்பு மாதிரி இருந்தேன்.

என்ன பண்ணாரு தினத்தந்தியை சூ காட்டி டைவர்ட் பண்ணாரு. என்னடா சாக்கு கிடைக்கும்னு தேடி  தேடி சாக்கு கிடைச்சதும்  நான் அதை உதறித்தள்ளிட்டன். இருந்தாலும்  அன்னைக்கு பிடிச்ச சூடு இன்னை வரை ஆறலை. பொருளாதார ரீதியில பெருசா பிரச்சினை இல்லாம ஸ்லோ அண்ட் ஸ்டெடி டெவலப்மென்ட்ஸ்.

சனம் ஏன் இத்தனை மந்தமா இருக்காய்ங்க,  பணத்துக்கு ஏன்  இத்தனை இம்பார்ட்டன்ஸ் தராய்ங்கன்னு சமீப காலத்துல புரிஞ்சிக்கிட்டேன்.   பணம் வர வர பல மெல்லிய உணர்வுகள் காணாம போயிருது. பழைய ஞா மந்தப்பட்டு போகுது. மனுஷன் ஒரு கூட்டுக்குள்ள அடங்கிர்ரான்.

பசியா இருக்கிறவன் கண்ணுக்கு இட்லி ஒரு சுத்து பெருசா தெரியறாப்ல  பசி தீர்ந்துட்டவன் கண்ணுக்கு அது ஒரு சுத்து சின்னதா, எதிராளியோட பசி சில்லியா தோணும் போல.

தமிழமுதம் கூகுல் குழுமத்துல இந்தியாவுல வறுமையே இல்லேன்னவுக நிலையும் இதான் போல.  ஆனால் பை தி கிரேஸ் ஆஃப் காட் நமக்கு ஞா சக்தி கொஞ்சம் அதிகம். பழசை மறக்கறதா இல்லை. கொஞ்சமா முக்கினா  ஒட்டு மொத்தமா ஞா வந்துருது.

 (நம்ம விஷயத்துல பணம்  சேர சேர உணர்வுகள் மந்தமாகலிங்கண்ணா வர வரன்னு வேணம்னா வச்சிக்கலாம்.  இன்னைக்கும்  நாம ஏக் தின் கா சுல்தான் தான். 20 வருஷம் 100 சதம் ஆஸ்திகனா , இறை சக்தியையே நம்பி வாழ்ந்துட்டு கடைசி காலத்துல  நாஸ்திகனா  மாற விரும்பல்லே. நாம விதைக்கறதுமில்லே அறுக்கறதுமில்லே சேமிக்கிறதுமில்லே )

இது வரை இந்த சப்ஜெக்டுல சனங்க சொல்லி வச்சதெல்லாம் பாதி உண்மைகள் தான். முழு உண்மைய சொன்னா ஜேஜி கோச்சுக்கும்னு சொல்லவே இல்லை பயந்தாகொள்ளிங்க.

நாமதான் தற்கொலைப்படையாச்சே. அதான் போட்டு உடைச்சிக்கிட்டிருக்கோம். உண்மையான ஆன்மீகம் உங்களுக்குள்ள பூக்கனும்னா உங்க உடல்,மன,புத்தி பலங்களால தீர்க்க முடியாத பெரிய பிரச்சினை ஒன்னு வரனும். நீங்க மேற்படி உடல்,மன,புத்தி பலங்களால முழு மூச்சா முட்டி மோதி ஃபெயில் ஆகனும். அப்பத்தான் புது புது கதவுகள் திறக்குது.

அப்படி அந்த கதவுகள் திறந்ததன் விளைவா உங்க லௌகீக வாழ்க்கைல ஒரு சில சவுகரியங்கள் கூடும் அதுகள்ள மதி மயங்கிட்டா திறந்த கதவுகள் படக்குனு மூடிக்கும். இன்னைக்கு நான் எழுதற விஷயங்கள்ள சிலதை பல காலமா சலூன்லயும் டீக்கடையிலும் பல வருஷங்களா  சொல்லிக் கிட்டு  இருந்திருக்கேன்.இல்லேங்கலை. ஆனால் இப்போ எழுதிக்கிட்டிருக்கிற பல விஷயங்களோட ஃபார்ம், சாரம், வே ஆஃப் ப்ரசன்டேஷன் எல்லாம் அந்தந்த  நொடி ஸ்ட்ரைக் ஆனதுதான். ஆன் லைன் ஜோதிட ஆலோசனைக்காக தொடர்பு கொள்றவுகளுக்கு தர்ர பலன்,பரிகாரம் எல்லாமே  கடந்த கால சாதனைகளின் பலன். இந்த பலன் எக்ஸாஸ்ட் ஆயிட்டே வந்ததுன்னு வைங்க..  கதை கந்தலாயிரும்.

ஆன் லைன் ஜோதிட ஆலோசனை அறிவிப்பால பணம் வருது இல்லேங்கலை. ஆனா அவிகளுக்கு பலன் அனுப்பறதால என் ஆன்ம சக்தி விரயமாறதை என்னால உணரமுடியுது. இதையெல்லாம் ரீசார்ஜ் பண்ணனும்னா இன்னொரு 20 வருஷம் தேவைப்படுமோ என்னமோ?

என் அனுபவத்துல இந்த மேட்டர்ல நான் உங்களுக்கு சொல்ல விரும்பறது ஒன்னுதான். நீங்க பார்க்கிற உலகம் வேற . உங்க கண்ணுக்கு தெரியாத இன்னொரு உலகம் இருக்கு. அக உலகம் ,புற உலகம்னு வச்சிக்கலாம்.

புற உலகத்துல நீங்க எதை வளர்ச்சின்னு நினைக்கிறிங்களோ அதெல்லாம் அக உலக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைதான்.  ஆனால் அக உலக வளர்ச்சி  உங்க புற உலக வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வாரு உலக வாழ்க்கைங்கறது பலாப்பழம் மாதிரி. இதை பிளந்து சுளையெடுக்கிறதுக்கு முந்தி ஆன்மீகம்ங்கற விளக்கெண்ணையை பூசிக்கனும். அப்பத்தான் பிசின் ஒட்டாது.

அக உலகுல மட்டுமில்லை , புற உலகுலயும் எல்லாத்தயும் தீர்மானிக்கிறது உங்க எண்ணம் தான். ( ஆன்ம வடிவத்துல இருந்தப்ப நீங்க) அந்த எண்ணம் சுய நலம் கலக்காததா இருந்தா டூ இன் ஒன் கணக்கா தூள் கிளப்பலாம். இல்லேன்னா நாஸ்திதான்.

ஆன்மீக முன்னேற்றம்ங்கறது ஏதோ ஃபிக்ஸட் டிப்பாசிட் மாதிரின்னு ஒரு எண்ணமிருக்கு. அது கூட தப்புத்தான். நாம தேனிரும்பு துண்டு மாதிரி இதுல கடவுள் அருள்ங்கற மின்சாரம் பாயற வரைதான் நாம காந்தம். மின்சாரம் பாயலைன்னா ஷெட்டுதான்.

நான் பணம்,பவிசுக்கெல்லாம் எதிரி கிடையாது. அது எஸ்.பி அக்கவுண்ட்லருந்து ட்ரா பண்ண மாதிரி இருந்தா ஓகே. ஆனால் நிறைய பேர் விஷயத்துல அது கரண்ட் அக்கவுண்ட்ல வாங்கின ஓவர் ட்ராஃப்ட் மாதிரி இருக்கிறதுதான் இம்சை. 

வெற்றி கிரகங்களோட வேக்குவத்தை அதிகரிக்கும். தோல்வி குறைக்கும் . வெற்றி கருமத்தை கூட்டுது.  தோல்வி அதை தொலைக்குது. இந்த படைப்புல இருந்து தன்னை வேறா நினைக்கிறவன், சுய நலத்தோட செயல் படறவன்  கிரகங்கள் காலடில பந்து.  இந்த படைப்புல தன்னை பிரிக்க முடியாத பாகமா நினைக்கிறவன் பொது நலத்தோட செயல்படறவன் சுதந்திரன்.

வாழ்க்கையில எதை இழந்தும் காப்பாத்திக்க வேண்டிய அம்சம் சுதந்திரம். எதுக்காகவும் இழக்கக்கூடாததும் சுதந்திரமே.  கடவுளோட கட்டுப்பாட்டுலருந்து விடுபடனும்னா அதுக்கு ஒரே வழி அவரை பர்ஃபெக்டா புரிஞ்சுக்கறதுதான். அவர் தன்னை இயற்கையா வெளிப்படுத்தியிருக்காரு. இயற்கைய புரிஞ்சிக்கங்க. இயற்கையோட இயைந்து வாழும் வாழ்வை மேற்கொள்ளுங்க. சூரியனோடவே விழிதெழவும், சூரியனோடவே கூட்டிலடங்கவும் பழகுங்க. காற்றுக்கும்,மழைக்கும், வெயிலுக்கும் உங்க உடலை ஒளிக்காதிங்க. உங்க பாடியே ஒரு  செல் ஆண்டெனா மாதிரி. அது அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதத்துல நனைய விடுங்க. காய விடுங்க. காத்தாட விடுங்க.

காப்பவன் இழப்பான். இழந்தவன் பெறுவான். மரிப்பவன் பிறப்பான். தேடுபவன் தவற விடுவான். தவற விட்டவன் பிடிப்பான். என்ன.. ஒரு இழவும் புரியலையா? ஹும் நானும் ஏழேழு ஜன்மமா இதைத்தான் சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்களும் கேட்டுக்கிட்டுதான் இருக்கிங்க இதை அப்போ தவற விட்டுட்டு கடைசியா இன்னொரு தாட்டி கேட்கத்தான் பிறவியெடுத்து வந்திங்க.இருந்தாலும் ருசிக்கலை . நான் என்ன பண்ண?

அதுக்குத்தான் இஸ்லாம் கடவுளை மாகிர் ங்குது. மாகிர்னா சதிகாரர்களுக்கு சதிகாரன்னு அர்த்தமாம். பின்லாடனை கூட பிடிச்சுரலாம். கடவுளை தவற விடவே அதிகம் வாய்ப்புண்டு.

அந்தாளு உங்களுக்கு கடன் பட்டிருந்தாலும் நீங்க நவதுவாரத்துலயும் புகை வந்துக்கிட்டு கடிச்சு குதறிர்ர மூட்ல இருப்பிங்க பாரு அப்பத்தான்  இந்த மாதிரி பதிவை கண்ல பட வச்சு தூத்தேரிக்க ஒரு இழவும் புரியலைன்னு ஆல்ட் எஃப் ஃபோரை அழுத்த சொல்வாரு.

வீட்டு நிறைய கடவுள் படங்களை மாட்டி வச்சுட்டா ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டி கிடைக்கும்னு நினைக்கிறாய்ங்க. ஆனால் அதெல்லாம் ப்ளாக் ஹோல் மாதிரி உங்க சக்தியை எல்லாம் உறிஞ்சுக்கும். அப்பால உங்க கிட்ட இருந்து கிரகிச்சுக்கிட்ட சக்தியை வச்சே உங்கள்ள மிச்சம் மீதி இருக்கிற சக்தியையும் உறிஞ்சும். அப்பத்தான் அசலான உங்களை உங்களுக்கு அடையாளம் தெரியும்.

 (சொம்மா ஷோவுக்கு வச்சிருந்தா நோ ப்ராப்ளம் - பை மிஸ்டேக் பக்தியோட வணங்கறது தியானிக்கிறதுன்னு இருந்திங்கனா மட்டும் கதை கந்தல்தான்)

Wednesday, September 8, 2010

மனிதர்கள்

மனிதர்கள் ஏன் இத்தனை
பலவீனர்களாக இருக்கின்றனர்.
சதா சர்வ காலம் தம்மை பலவீனராய் கருதி
பரபலம், பண பலம் கூட்ட தம் பலத்தையெல்லாம்
இழந்து ..

மனிதர்கள் ஏன் இத்தனை
பலவீனர்களாக இருக்கின்றனர்.

ஒரு மனிதத்தாய் தன் மகவை
சுற்றுலா அனுப்புகையில்
அதன் தேவை யாவும் கணித்து
ஒரு கூடையில் இட்டு அனுப்ப

அந்த தெய்வத்தாய் உமை
வெறுமனே விரட்டிவிட்டாள்
இந்த விசுவத்துக்குள் என்று
எப்படி எண்ணப் போகும்?
பலவீனராய் எப்படி கருதப்போகும்?

மனிதர்கள் ஏன் இத்தனை
பலவீனர்களாக இருக்கின்றனர்.
அதிலும் பலவான்கள் ...
இத்தனை பலவீனர்களாக இருப்பது தான் வியப்பு.

இழப்பதற்கு ஏதும் இருப்பதே பலவீனமா?
முற்றிலும் இழந்து பார்ப்பதே பலமா?

காதலுக்குள் காணாமல் போன பின்பும்
மனிதன் மனிதனாகவே திரும்பிவருவது ஏன்?

காமத்துள் காணாமல் போன பின்பும்
மனிதன் மனிதனாகவே திரும்பிவருவது ஏன்?

ஒரு வேளை தியானத்துள் காணாமல் போன
பின்பும் மனிதன் மனிதனாகவே திரும்புவானோ?

ஏன் இப்படி ?

என்னை நான் கண்டுகொள்ள
நான் முழுக்க காணாமல் போனதே காரணமோ?
காதலில்..  காமத்தில் ..

இவர்கள் ஏன் எதையும் முழுக்க செய்ய மறுக்கிறார்கள்?
கொலை. ?  தற்கொலை ? காதல் ? காமம்?
எதிலும் எதிலும் அரைகுறை

நான் மட்டும் எப்படி காணாமல் போக முடிகிறது
இந்த கவிதையில் உட்பட.

நிரந்தரமாய் தொலைக்க ஏதுமில்லை
தொலைக்க முடிந்தது ஏதும்  நிரந்தரமில்லை
என்ற ஊகம் தான்
எனக்கு அந்த துணிச்சலை தந்ததோ?

இந்த ஊகத்தை என்னில்
விதைத்த ஊடகம் எதுவோ?

அது இவர்களை ஊடுருவுவதை தடுக்கும்
அம்சம் எதுவோ?

என்னில் திறந்தது எதுவோ?
இவர்களில் மூடிக்கிடப்பதெதுவோ?

இவர்களை சிதைப்பது  யாவும்
என்னை செதுக்குவது ஏனோ?

Sunday, August 8, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் : ?

இந்த தலைப்புல ஒரு தொடர்பதிவு போட்டுக்கிட்டிருந்தது ஞா இருக்கலாம்னு நினைக்கிறேன். 1986 , 1997 பீரியட்ல இருந்த நாவல்ட்டி இன்னைய தேதிக்கு இல்லிங்கண்ணா. அதனாலதான் இந்த ப்ரேக் எல்லாம்.



ஜஸ்ட் ஒரு ராம நாம ஜெபத்தால நடந்த அற்புதங்களை எடுத்துவிட்டா " சொம்மா பீலா உடற தலை !"ன்னிருவிங்க. ஆனா நடந்தது. ஒரு 3 மாசத்துக்கு முந்தின்னு நினைக்கிறேன் நித்யானந்த பாபாங்கற யோகியோட வா.வரலாறை படிச்சேன்.அதுக்கப்புறம் தான் சிற்சில சர்க்யூட் எல்லாம் வேலை செய்ய ஆரம்பிச்சுது. அதுவரை பேஸ்தடிச்ச மாதிரிதான் இருந்தது.



தமிழ் மணம் தடை பண்ணதுல கொஞ்சம் போல சலனம் . அண்டம்,பிண்டம் ரெண்டுலயும். அதனோட விளைவுதான் வாஸ்துரகசியங்கள் தொடரும், பூர்வ வைபவமும். சரிங்கண்ணா மொக்கை போதும் மேட்டருக்கு வருவம்.



ஏற்கெனவே சொன்னபடி பாபா சத நாமாவளி தொடர்ந்து அச்சிட்டு வினியோகம் நடந்துக்கிட்டே இருக்க நண்பர் ஒருத்தர் கூப்டு ஆளுங்கட்சிக்கு அனுகூலமான பேப்பர் ஒன்னுல ட்ரான்ஸ்லேட்டர் வேணுமாம்பா..தெலுங்கு டு தமிழ். ரெம்ப அர்ஜென்டாம்.. ரெண்டு மணி நேரம் வேலைதான். ஒரு ஆறு ரூ வரை தருவாய்ங்கன்னாரு. நம்ம மென்டாலிட்டிக்கு இன்னொருத்தன் கீழ வேலை பார்க்கறதே சிரமம். அதுலயும் ஒரு நிறுவனத்துலன்னா இன்னம் சிரமம். அதுலயும் ஆ.கட்சி பேப்பர்லாம் சீசனல். பவர் போயிட்டா மார்க்கெட்லருந்து காணாம போயிரும். சரி பார்ப்போம். ரூ 6 ஆயிரம் வருதுன்னா டீ சிகரட் செலவெல்லாம் போய் ரூ 5,400 மிச்சமாகும். கவிதை07 டாட் காம்னு சைட் வச்சுருவம்.ப்ரிண்ட் மீடியால விளம்பரம் பண்ணி தூள் கிளப்புவோம். அப்படியாச்சும் ஆப்பரேஷன் இந்தியாவுக்கு ஒரு விடிவு காலம் வரட்டும்னு நண்பர் கொடுத்த நெம்பருக்கு போட்டேன். அந்த பக்கமிருந்து பாபா காலர் ட்யூன். மேலும் பேசின பார்ட்டி இம்ப்ரெசிவா பேசுச்சு. இன்டர்வ்யூ கூட அட்டெண்ட் பண்ணிட்டு வந்திருக்கன் பார்ப்போம்.



பாபாதான் இப்படின்னுல்ல. இந்த படைப்புல ஆக்சனுக்கு ( ஏலமில்லிங்கோ) ஏத்த ரியாக்சன் நிச்சயமா இருக்கு. அதுலயும் ஜேஜி மேட்டர்லல்லாம் உடனடி லாட்டரிங்கண்ணா.



நாம தான் பட்ட கடனை எகிறடிக்க என்னென்னமோ மாய்மாலம் பண்றோம். ஆனால் தெய்வம் அப்படியில்லே. பட்ட கடன் தீர்க்க ( உங்க சின்சியாரிட்டியை ரெகக்னைஸ் பண்ண) எந்த ரேஞ்சுக்கு வேணம்னா இறங்கும். எந்த ரேஞ்சுக்கு வேணம்னா ஏத்திவிடும்.



பாபான்னா ஏதோ கஞ்சா அடிச்சிக்கிட்டிருந்த பார்ட்டி சனம் தான் யோகியாக்கிட்டாய்ங்கனு ஒரு சிலர் நினைச்சிருப்பாய்ங்க. ஓஷோ எழுதின ஞானத்துக்கு அப்பால் புஸ்தவத்தை நீங்க யாராச்சும் படிச்சிங்களா இல்லையா தெரியலை.



ஞானத்துக்கு அப்பால் என்ன நடக்கும்னு விளக்கற அற்புதமான புஸ்தவம். ஓஷோ நல்ல ஸ்காலர். அவர் ஸ்டடி பண்ணாத சப்ஜெக்டே கிடையாது. ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் மாதிரினு வச்சிக்கங்க. நம்ம பாபா இருக்காரே அவரை பார்த்தா கேல்குலேட்டர் கணக்கா "டொக்கா" இருப்பாரு. இன்னைய தேதிக்கு அவரு பிறந்திருந்தா/இருந்திருந்தா தாளி கவுன்சிலர் கூட கண்டுக்கிட்டிருக்கமாட்டான்.



பாபா சென்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி. சகட்டு மேனிக்கு எக்ஸ்ப்ரஸ், பேசஞ்சர், கூட்ஸுன்னு எல்லா ரயிலும் வரும். ஒரு தாட்டி ஒரு பண்டிதர் வரார். ஞானத்துக்கு அப்பால என்ன ? இதான் கேள்வி.



பாபா " சரிப்பா அதெல்லாம் நிதானமா பேசிக்கலாம். நீ பலான ஆளோட வீட்ல தங்கியிருங்கறார். பண்டிதரும் ஓகே. இவர் தங்க போற வீட்ல ஒரு வேலைக்கார சிறுமி. அவள் கிழிஞ்சு, நைஞ்சி ,சாயம்போன பாவாடை சட்டை அணிஞ்சிருக்கா. இதுல 24 மணி நேரம் ஒரு பாட்டு வேற . எதை பத்தி ? அழகான பட்டுப்பாவாடைய பத்தி.



பண்டிதருக்கு அவளோட நிலையை பார்த்து மனசு உருகிப்போச்சு. தனக்கு தங்க இடம் கொடுத்திருந்த ஆசாமிக்கு சொல்றார் " ஏம்பா பாவம் அந்த சிறுமிக்கு ஒரு பட்டுப்பாவாடை வாங்கி கொடுத்துருப்பா" பட்டுப்பாவாடை ரெடி.



அந்த சிறுமி ப.பா கட்டிக்கிட்டு பாட்டு பாடறாள். அதே பாட்டு. ப.பாவாடையோட அழகை,சரசரப்பை, ஜொலிப்பை வருணிக்கிற பாட்டு. ஆனால் அந்த குரல்ல துள்ளல்,துடிப்பு, குதூகலம், பரமானந்தம்.



மறு நாள் அவள் கிழிஞ்சு, நைஞ்சி ,சாயம்போன பாவாடை சட்டை அணிஞ்சி வேலை செய்துக்கிட்டிருக்கா. அதே பாட்டு. ஆனால் அவள் பட்டுப்பாவாடை அணிஞ்சி பாடினப்ப அவளோட குரல்ல இருந்ததே துள்ளல்,துடிப்பு, குதூகலம், பரமானந்தம்.



பண்டிதருக்கு தான் கேட்டு வந்த கேள்விக்கு பதில் கிடைச்சுருச்சு. உங்களுக்கு கிடைச்சதா? கிடைச்சவங்க போட்டு உடைங்க. கிடைக்காதவுகளும் தெரிஞ்சுக்கட்டும். ஞானத்துக்க் அப்பால் சாதகனோட நிலை என்ன? நாலு வரியில் பதில் கூறவும்.

Wednesday, June 30, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் : 11

கடந்த அத்யாயத்துல இரண்டு சம்பவங்களை சொல்றேன், சொல்றேனு  சொல்லாமயே முடிச்சுட்டன். அதனால இந்த அத்யாயத்துல சொல்லியே உடறேன்.வருஷம் 1998. நாலு பேருங்கற பதிவுல வர்ர வடிவேலு ஷிர்டி பாபா பத்தி சகட்டு மேனிக்கு பீலா விட நான் தரேண்டா பாபாவுக்கு அப்பாயிண்ட் மென்டுன்னு சவால் விட்டு ஷிர்டி போய் வந்த பிறகு நடந்த சம்பவம் இது. அவனோட  பழைய கடைதான் (சலூன்) என் ஆஃபீஸா இருந்தது.

ஒரு பக்கம் சலூன் சாமானுக இருக்க மறுபக்கம் ஜோசியம் சொன்ன ஒரே பார்ட்டி நான் தானு நினைக்கிறேன். இன்னுமொரு ஹிஸ்டரி ரிக்கார்ட் என்னன்னா கோழிக்கறிகடைல  கூட ஆஃபீஸ் போட்டிருக்கேன் ( ஆனா இது சென்னைல  3மாசத்துக்கொருதரம்  ரெண்டு மூணு நாளைக்குத்தான்)

தமிழ் பட விமர்சினங்கள்ள தவறாம இடம் பெற கூடிய வார்த்தை ஸ்டீரியோ டைப். என் ஆன்மீக பயணமும் ஸ்டீரியோ டைப்தான். ஒவ்வொரு கட்டத்துல ஒவ்வொரு சாமி/ஒவ்வொரு குரு. ஏதோ ஒரு புஸ்தவம் படிச்சோ அ சினிமா பார்த்தோ இன்ஸ்பைர் ஆக வேண்டியது. உடனே மேலதிக விவரங்களை பீராய வேண்டியது, பாட்டு கீட்டு இருந்தால் கேசட் வாங்க வேண்டியது. 

இந்த ப்ராசஸ்ல கிடைச்ச புளங்காகிதம், மயிர் கூச்செறிதல் எல்லாம் சில மாதங்கள் அ வருஷங்கள்ள தேசலாயிர்ரது வழக்கம். சில காலம் கழிச்சு மேற்படி ஞாபங்கள் தேவகுமாரான உயிர்த்தெழுவது வழக்கம். இந்த ஸ்டீரியோல ஒரு அம்சமா ஷிர்டி சாயி மஹத்யம் பட ஆடியோ கேசட் வாங்கினேன். ( படமே பார்த்திருக்கேன். ஆனால் அப்ப எந்த ஃபீலிங்கும் வரலைங்கறது ஆச்சரியம். )

சரி சரி மேட்டருக்கு வரேன். மேற்படி சலூன் கம் ஆஃபீஸ் நான் இருந்தாலும், இல்லன்னாலும் திறந்தே கிடக்கும். அப்படி ஒரு சந்தர்ப்பத்துல வடிவேலு மேற்படி பாபா கேசட்டை சுட்டுட்டான் போல. நானும் சில நாள் தேடி தேடி விட்டுட்டன்.

இத்தனைக்கும் வடிவேலு ஒன்னும் ஷேவிங்குக்க பார்ட்டி வந்தபிறகு அவங்க கிட்டே ஷேவிங் காசு வாங்கி ப்ளேடு வாங்கியார்ர நிலைல இல்ல. இன்னம் சொல்லப்போனால் சொந்த வீடு, நகை நட்டுன்னு வசதியான ஆளுதான்.  இருந்தாலும் அல்பமான வேலையெல்லாம் செய்வான். நானும் அல்பம் தான். ஆனால் நாலு பேருக்கு நல்லது கெட்டது சொல்ற நிலைல இருக்கிறதால " தத் விடு"ன்னு  விட்டுர்ரது வழக்கம்.

ஒரு நாள் என் கேசட் அவன் கடைல பாடிக்கிட்டிருந்தது. நானு ஒன்னம் தெரியாத பப்பா மாதிரி " நானும் வாங்கி வச்சிருந்தேம்பா ஏதோ ஒரு நாதாரி தூக்கினு பூட்டுக்கீது.. உன்னுதை கொடுப்பா ஒரு ராத்திரி பாபா கிட்ட பேசிட்டு கொடுத்துர்ரன்"ன்னேன். அப்பயாச்சும் ரியலைஸ் ஆகி "சாமி இது உன்னுத்தான்"னு சொல்லியிருக்கலாம்.சொல்லலை. நானும் சின்சியரா வாங்கிட்டு போய் மறு நாள் ரிட்டர் பண்ணிட்டன். அப்பயும் ஏதாச்சும் சினிமா காட்டி " தா சாமி இது உந்துதான் சாமீ.. அது கூட தெரியல உனக்கு ..ஹும் எல்லாம் வசதிதான் காரணம்னு " டயலாக் விட்டு சமாளிச்சிருக்கலாம். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இங்கே ஒரு தத்துவம். கெட்டவனை கெ(ப)ட்டுப்போக செய்யனும்னா அந்த கெட்டவனுக்கு நல்லதையே பண்ணிக்கிட்டிருக்கனும். அப்ப ஆண்டவன் கெட்டவனுக்கு கெட்டவனாயிர்ராரு

வடிவேலுவுக்கும் அவன் அண்ணனுக்கும் எப்பவும் வெட்டுப்பழி குத்துப்பழி. இவன் டீன் ஏஜ் போதைல திரிஞ்சிக்கிட்டிருந்தப்பயே அவங்கண்ணன் பண்டரியோட (போலி டாக்டர்+ லேப் டெக்னிஷியன்) கைய கால பிடிச்சு ஜி.ஹெச் ல வார்ட் பாயா சேர்ந்துட்டான். வீட்டை கட்டிக்கிட்டான். செட்டிலாயிட்டான். வட்டிக்கு திருப்பற ரேஞ்சுக்கு போயிட்டான். பார்க்க பஞ்சை பராரி மாதிரி விபூதி பட்டையும், பெரிய குங்கும பொட்டுமா வைட் அண்ட் வைட்ல  இருப்பான்.

நம்மாளுக்கு போறாது. டீன் ஏஜ் மயக்கத்துலருந்து மீண்டு வந்து கடைய தூக்கி நிறுத்தி கண்ணாலம் கட்டி ரெண்டை பெத்து போடறதுக்குள்ள பெண்டாட்டி இவன் வெத்துவேட்டுனு முடிவுபண்ணியாச்சு.இவனும் வெள்ளைக்கொடிய காட்டி சரண்டர் ஆஃப் இண்டியா. வீட்ல மதுரைதான்.

இந்த மாதிரி அண்ணன் தம்பிக்குள்ள எவனாச்சும் ஒருத்தன் டம்மி பீஸாயிருந்து,  அவன் பெண்டாட்டிக்கு பிரமணை ( சட்டிப்பானைகள் உருளாம இருக்க ஓலைலயோ, தாம்பு கயிற்று புரிகள்ளயோ ரிங் சைஸுக்கு சுத்தியிருப்பாங்க)  தூக்கிட்டு அலையற பார்ட்டியா இருந்தா அண்ணன் தம்பிக்குள்ள நிச்சயம் தகராறு வரும்.வந்துகிட்டே இருக்கும்.

இதுமாதிரி சந்தர்ப்பத்துல நம்மாளு நாலு பேர் பதிவுல வர்ர பண்டரி + பெரிய மனுசனையெல்லாம் கூட்டிக்கிட்டு போய் எதிர்வீட்டு திண்ணைல உட்கார வச்சுட்டான். பஞ்சாயத்துக்கு அண்ணனை கூப்டாங்க.அவனும்  வந்தான்.  நம்மாளுக்கு
பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்குதான் . இருந்தாலும் பஞ்சாயத்து பெரியமன்சன் எல்லாம் நம்மாளுதானேங்கற நெனப்புல அண்ணன் காரன் மூக்குல கப்புனு குத்திட்டான். குப்புனு ரத்தம் வந்திருச்சு. அவன் போட்டிருந்த வெள்ளை  கை பனியன், வேட்டி மொத்தம் ரத்தத்துல நனைஞ்சுருச்சு.

பஞ்சாயத்து பெரிய மன்சனெல்லாம் காணாம போயிட்டாய்ங்க. அண்ணன் காரன் நீட்டா ஜி.ஹெச் போய் அட்மிட் ஆகி போலீஸ்ல கேஸ் கொடுத்துட்டான். போலீஸ் ஸ்டேஷனே என் பாக்கெட்லன்னு சிலும்பின வடிவேலுவை ஸ்டேஷன்ல உட்கார வச்சுட்டாய்ங்க. அப்புறம் நானும் இன்னும் ரெண்டு ஃப்ரெண்ட்ஸும் போய் எக்ஸ்  பார்ட்டியையும், சப் இன்ஸ்பெக்டரையும் கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வந்தோம்.


இதென்ன அம்புலிமாமா கதை மாதிரி இருக்குன்னு நினைப்பிங்க. ஆனால் உண்மையில நடந்தது ராசா.  வடிவேலுக்காச்சும் அரை நாள் காவல். இன்னொரு பார்ட்டிக்கு?

1999 கையில இருந்த லட்சத்து ரெண்டாயிரமும் டம்ப் ஆகி மறுபடி ப்ரெட் ஹண்டர் அவதாரம் எடுத்த புதுசு. ஒவ்வொரு ஊர்லயும் பத்திரிக்கை வச்சு பொழப்ப நடத்தற க்ரூப் ஒன்னு இருக்கும். பத்திரிக்கை பதிவாளர் (www.rni.nic.in) வலைதளத்துல போய் பார்த்திங்கன்னா உங்க ஊர்லருந்து எத்தனை பத்திரிக்கை ரெஜிஸ்டர் ஆயிருக்குனு தெரிஞ்சிக்கலாம். ஆனால் இதுல வெளிவர்ரதென்னவோ அஞ்சுலருந்து பத்துக்குள்ள மேஜர் பத்திரிக்கைகள் மட்டும் தான். மற்றதெல்லாம் பதிவாகியிருக்கும். சில பல மொள்ளமாரி வேலைகளோட ரென்யூவல் ஆயிட்டிருக்கும். இவிக அரசு துறைகள்ள குழையடிச்சு விளம்பரம் வாங்கி விளம்பரம் கிடைச்சப்ப மட்டும் பத்து காப்பி போட்டு கணக்கு பண்ணி வயித்த கழுவிக்கிட்டிருப்பாய்ங்க .அல்லது ஓசி பஸ் பாஸோட திருப்திபடுவாய்ங்க.

(ரென்யூவலுக்கு இவிக பண்ற டுபாகூர் வேலைய சொல்லனும்னா தனிப்பதிவே போடனும்)

இந்த மாதிரி டுபுக்கு க்ரூப் மூலமா ஒரு பார்ட்டி இன்ட் ரட்யூஸ் ஆனான். ஷிர்டி பாபா பத்தின பாட்டுகளை  (ஆடியோ) வெளியிட போறதாவும்.. பாட்டு எழுதிக்கொடுக்கும்படியும் கேட்டான்.

நாமதான் ஆசுகவியாச்சே. உடனடி லாட்டரி மாதிரி அவன் கூப்ட லாட்ஜுக்கு போய் அவன் கேட்ட மாதிரியே பரபரனு (சுந்தர தெலுங்குங்கண்ணா) எழுதிக்கொடுத்தேன். உத்தமா பத்தினி மாதிரி அதை ஜெராக்ஸ் எடுக்கச்சொல்லி ஜெராக்ஸ் பிரதில கை.எ வேற போட்டுக்கொடுத்தான்.

மொத்தமா என்ன எழுதினேனு ஞா இல்லை. ஆனா ஒரே ஒரு வரி மட்டும் நல்லா ஞா இருக்கு.

"செட்டவாடனு கானயா செடின வாடனு நேனய்யா"

கெட்டவன் இல்லே கெட்டுப்போனவன்..னு அர்த்தம். பை பர்த் கெட்டவன்னா திருத்தவே முடியாது. கெட்டுப்போனவன்னா டபுள் மீனிங் வரும்.கெட்டுப்போனவனு ஒரு அர்த்தம். நலிஞ்சு போனவனு இன்னொர் அர்த்தம். நடுவுல கெட்டுப்போனவன் திருந்த வாய்ப்பிருக்கும். இப்படி நிறைய விளையாடி எழுதிக்கொடுத்தேன்.

அந்த நாதாரி என்ன பண்ணுச்சுன்னா நான் இல்லாதப்ப வீட்டுக்கு வந்து தான் கை.எ போட்டுக்கொடுத்த ஜெராக்ஸ் பிரதியை என் மனைவிய வாயடிச்சு பிக் அப் பண்ணிக்கிட்டு போயிருச்சு. அந்த நாள் முதல் இந்த நாள் வரை பிச்சை எடுத்துக்கிட்டே இருக்கு. உசுரோட இருக்கா இல்லையானு கூட தெரியாது. தெரிஞ்ச முகமா  யார்  தெரிஞ்சாலும் " இஃப் யு டோண்ட் மைண்ட் ஒரு டென் ருப்பீஸ் இருக்குமா?" கேஸு.

அப்பாறமா தான் தெரிஞ்சது அந்த பன்னாடையோட வைஃப் என் கிளாஸ் மெட்டுன்னு . இப்ப சொல்லுங்க பாபா பவர் ஃபுல்லா இல்லையா? பாபா பவரை புரிஞ்சிக்கனும்னா பா பா ப்ளாக் ஷீப் ஹேவ் யு எனி உல்லுனு ரைம்ஸ் பாடற ரேஞ்சுக்கு நீங்க குழந்தை தன்மையோட இருக்கனும். அப்பத்தான் அவரோட பவரை உணர முடியும்.

நேத்து  பதிவுல நான் குறிப்பிட்ட நித்யானந்த பாபா கூட சொல்வாராம் "குருவை சுதந்திரமா செயல்பட விடனும். அதுக்கு சம்பூரண சரணாகதிதான் மார்கம்"

Tuesday, June 29, 2010

தி க்ரேட் நித்யானந்தா

பெண்களுக்கு மட்டுமில்லே ஆண்களுக்கும் மெனோஃபஸ் வருமாம் ( நாற்பதுகளில் செக்ஸ் மீது அதீத ஆர்வம். பின் படக்கென்று சர்க்யூட் ஃபெயில் ஆதல்). செக்ஸ்ல மட்டுமில்லை ஆன்மீகத்துல கூட மெனோஃபஸ் வரும். இதைப்பத்தி "பாபாவும் பா பா ப்ளாக் ஷீப் :10 பதிவுல விவரமா  எழுதியிருக்கன். மனிதர்களுக்கு மெனோஃபஸ் வந்துட்டா அம்புட்டுதேங். பார்ட்டி செக்ஸ் லைஃபை ஒழுங்கா எஞ்ஜாய் பண்ணியிருந்தா அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துரலாம். இல்லன்னா வம்புதான். தாத்தாக்கள் ரெண்டாம் கண்ணாலம் கட்டிக்கிறது, ஆன்டீஸ் கார் ட்ரைவர் கூட ஓடிப்போயிர்ரதெல்லாம் இந்த ஸ்டேஜுலதான்.

ஆனால் ஆன்மீகத்துல வர்ர மெனோஃபஸ் கொஞ்சம் டிஃப்ரன்ட். திடீர்னு இன்னொரு பாதை விரியும். அந்த பாதையில ஆன்மீக பயணம் புது உற்சாகத்தோட தொடரும். ஆமா இந்த பதிவுக்கு " தி க்ரேட் நித்யானந்தா "ங்கற தலைப்பு ஏன்னு நீங்க கேட்கிறது எனக்கு கேட்குது.

மேற்சொன்ன ஆன்மீக மெனோஃபஸ்ல நான்  இருந்தப்ப தான் நித்யானந்தா விவகாரம் வெடிச்சது. நானும் கிழி கிழின்னு கிழிச்சன். ஆனா பாருங்க காரணம் இல்லாம எது ஒன்னுமே நடக்காது. ரஞ்சிதா புகழ் நித்யானந்தா பிறக்கறதுக்கு முந்தியே நித்யானந்தாங்கற பேரு  இருந்திருக்கு. அந்த பேர்ல எத்தனையோ லட்சம் பேர் பிறந்து,வாழ்ந்து முடிச்சிருப்பாய்ங்க.

நல்லதுக்கோ கெட்டதுக்கோ, திட்டவோ,புகழவோ நித்யானந்தாங்கற பேரை பல முறை பிரஸ்தாபிச்சதுக்கு பலன் கிடைச்சுருச்சுன்னுதான் நினைக்கிறேன்.அதுக்கும் ஒரு காரணம் இருந்திருக்கும்னு நம்பறேன்.

சுதந்திரம் வர்ரதுக்கு முந்தியே மகாராஷ்டிர மானிலத்துல கணேஷ் புரிங்கற ஊர்ல நித்யானந்த பாபானு ஒரு பட்சி வாழ்ந்திருக்கு. ஒரு தாட்டி பழனி கோவிலுக்கு கூட வந்திருக்கு. இந்த பார்ட்டியோட வாழ்க்கை வரலாறை படிக்கிற வாய்ப்பு கிடைச்சது.

பாலைவனத்துல நீண்ட தூரம் பயணம் பண்ணா தூரத்து வெயில் ஆறு கணக்கா தெரியுமாம். ஆனால் நித்யானந்த பாபா சமாசாரம் அப்படியில்லைனு நான் நம்பறேன். ஏன்னா அதை படிக்கிறச்ச பல்வேறு ஆன்மீக உணர்வுகள் , அதிர்வுகள் மூன்றாம் நாளைய ஏசு கணக்காய் உயிர்த்தெழுந்ததுங்கண்ணா.

இன்னைக்கு பணபலம் இருந்தா  மீடியா வெளிச்சத்தை விலைக்கு வாங்கி அ வாடகைக்கு எடுத்து தாளிச்சுரலாம். ஆனால் நித்யானந்தாவோட காலம் சுதந்திரத்துக்கு முந்தின காலம்.

அவருக்குள்ள ஏதோ ஒரு மலர் மலர்ந்து மணம் வீசியிருக்கனும்.இல்லாட்டி லட்சக்கணக்கான மக்களை ஈர்த்திருக்க முடியாது. இன்னைக்காச்சும் வரவு எட்டணா செலவு பத்தணா கேஸுங்க.. எதை தின்னா பித்தம் தெளியும்ங்கற பார்ட்டிங்க அதிகம். அது போதுமென்ற மனமே பொன் செய் மருந்துன்னு சனம் வாழ்ந்த காலம்.

இதற்கிடைல கட்டை ரெம்ப சேவேறி போச்சு .இதுக்கு மின்னாடியெல்லாம் இரவு 7 மணிக்கு மேல ஒரு டீ சாப்பிட்டா போதும் அன்னைக்கு தாளி சிவ ராத்திரிதான் இது நம்ம கேஸ் ஹிஸ்டரி. ஆனா பாருங்க சமீப காலமா ராத்திரி 9 மணிக்கு டிஃபன் அடிச்சுட்டு உடனே டீ சாப்பிட்டா கூட தூக்கம் சொக்க ஆரம்பிச்சிருச்சிங்கண்ணா. சரி விடியல்ல முழிப்பு வரும்னு படுத்தா எட்டு எட்டரை வரை தூக்கம். சரி இன்னைக்கு மதியம் கிழிச்சுரலாம்னு நினைச்சு சாப்டு முடிச்சா உடனே தூக்கம்.

சனத்துக்கும் எனக்கும் உள்ள வித்யாசங்கள்ள ஒன்னு அவிக விழிச்சிருக்கிற நேரத்துல நான் தூங்கிட்டு இருப்பேன். அவிக தூங்கற நேரத்துல நான்  வேலை செய்துக்கிட்டிருப்பேன். ஆயிரம் பதிவுகளை தாண்டியும் புதுசு புதுசா மேட்டர் கொட்ட இதுவும் ஒரு காரணம். ஆனா இந்த ப்ளஸ் பாயிண்டே ஃபணாலாயிருச்சு. ரொம்ப வேதனையா போச்சு.

நித்யானந்த பாபாவோட சரித்திரத்தை படிச்ச பிறவு கொஞ்சம் கொஞ்சமா நம்ம சுதர்மம் (ராத்திரியில பூனைகணக்கா சுறு சுறுப்பு) ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன்.  நித்யானந்த பாபாவோட ஸ்டைல் டிஃப்ரண்ட்.

மரத்து மேல,கூரை மேல உட்கார்ந்துக்குவாராம். கிராவிட்டி பவர்லருந்து ஓரளவு தப்பிச்சுக்கலாம். அதனால தான் வாஸ்துல கூட மாடில வசிக்கிறவனுக்கு அரைப்பலனுங்கறாய்ங்க. எங்க வீட்டு வாஸ்துவுக்கு அம்மா,அப்பா, ரெண்டு அண்ணன் காலி. தம்பி எங்கன இருக்கான்னே தெரியாது. நான் மட்டும் தப்பி பிழைச்சேன்னா அதுக்கு காரணம் மாடி அறைல வசிச்சது. நெக்ஸ்ட் 24 வயசுல ஸ்டெப் அவுட் ஆயிட்டதுதான்.

எப்பவும் கண்களை மூடியே இருப்பாராம். அதுலயும்  மூடின கண்கள் மேனோக்கியே ( ஆக்னா)  இருக்குமாம். மனித சக்தி வீணாகிறதே கண்கள் வழியாத்தான்.மூடின கண்கள் மேனோக்கி பார்க்குதுன்னா சுவாசம் கூட சுழுமுனைல நடக்கும்னு அர்த்தம்.

மிக மிக குறைவா பேசுவாராம். பேசியே அழிஞ்ச இனம் தமிழ் இனம். பேசியே அழிஞ்ச நாடு நம்ம நாடு.

ஒரு ஜாதகத்துல எல்லா கிரகமும் கேந்திர கோணங்கள்ள நின்னா அந்த ஜாதகனுக்கு எந்த கருமமும் ஒட்டாது ஹி ஈஸ் ஃப்ரீனு அர்த்தமாம். நம்ம ஜாதகத்துல 7 கிரகம் அப்படித்தான் உட்கார்ந்திருக்கு. ஆனால் சந்திரன் சுக்கிரன் மட்டும் வாக்கு ஸ்தானத்துல உட்கார்ந்து இப்படி செக்ஸையும் (சுக்ரன்),  சைக்காலஜியையும் (சந்திரன்)  போட்டு சொதப்ப வச்சிருக்காய்ங்க. நான் மட்டும் ஒரு 48 நாள்  ப்ளாக் எழுதறத விட்டுட்டு, மவுன விரதம் கடை பிடிச்சா அற்புதங்களே நடக்கும்.

இருந்தாலும் மனிதம் காக்க, மனித குலத்தை மீட்க பீசிக்கிட்டும், எளுதிக்கிட்டும் கிடக்கேன். ஹூம் பார்க்கலாம்.

எப்படியோ நித்யானந்தா டுபுக்கு பார்ட்டியா இருந்தாலும் ஜஸ்ட் அவரோட பேரை உச்சரிச்ச/எழுதின  புண்ணியத்துக்கு ஒரு உண்மையான சித்த புருஷரை பத்தி தெரிஞ்சிக்கிற வாய்ப்பு கிடைச்சது.

தி க்ரேட் நித்யானந்த (பாபா)

பி.கு: வாய்ப்பு கிடைக்கும் போது இந்த பாபாவோட வாழ்க்கை வரலாற்று சுருக்கத்தையாவது நம்ம ப்ளாக்ல எழுதப்பார்க்கிறேண்ணா.

Friday, June 25, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 8

கடந்த அத்யாயத்தில் பாபா வியாழக்கிழமைகளில் பிரச்சினைல  உள்ள  தன் பக்தர்களை எனக்கு எண்டார்ஸ் செய்துவந்தார் என்றும் கடைசியில் தன் பக்தரான எங்க ஊரு எம்.எல்.ஏ சி.கே பாபுவுக்கு உதவும்படி  தொடர்ந்து என்னில் எண்ண அலைகளை தோற்றுவித்தார் என்றும் சொல்லியிருந்தேன்.

இந்த சூழல் 2003ல ஏற்படுதுன்னா 1997லயே அவரோட உருவத்தை தன் படத்துல நிழலாட வைச்சாருன்னும் சொல்லியிருந்தேன். எம்.எல்.ஏவுக்கு என்ன பிரச்சினை? ஒரு பொறியியல் கல்லூரி மாணவரோட கொலைல இவரை முத குற்றவாளியா சேர்த்திருந்தாய்ங்க. அந்த மாணவரோ தாய் தெலுங்கு தேசம் மகளிரணி தலைவி. இன்னம் கேட்கனுமா? கையோட கையா எம்.எல்.ஏ வை  கைது பண்ணி சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்னு கடப்பா மத்திய சிறைக்கு கொண்டு போயிட்டாய்ங்க.

கொலையான இளைஞரோட பிணத்தை ஆளுங்கட்சிக்காரங்க ஒரு வேன்ல வச்சு மூணு மந்திரிங்க புடை சூழ தெருத்தெருவா ஊர்வலமா கொண்டு போனாய்ங்க.

இந்த பதிவுல வழக்குக்குள்ள போக நான் விரும்பலை. இந்த வழக்குக்கு மூலமே இவரு காங்கிரஸ்காரரா இருந்து  மூணு தரம் தொடர்ந்து எம்.எல்.ஏ ஆனவருங்கறதுதான். இவரு இருக்கிற வரை தொகுதில  தெ.தேசம் பேர் சொல்லமுடியாதுங்கற ஆளும்கட்சியோட பயம்தான் இந்த வழக்குக்கே மூலம். ஆனால் எம்.எல்.ஏ தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை சாதாரண கிரிமினல் வழக்கா நடத்திக்கிட்டிருந்தாரு. காங்கிரஸ் கட்சி உடனடியா இவரை கட்சிலருந்து நீக்கிருச்சு.

இந்த மாதிரி சூழல்ல ஒரு சாதாரண குடிமகனுக்கு கிடைக்க கூடிய உரிமைகள், பாதுகாப்பு கூட அவருக்கு கிடைக்கலை. இதையெல்லாம் லாயர் பாயிண்ட் அவுட்
பண்றாப்லயே இல்லை. உடனே நான் எனக்கு தோணின பாயிண்ட்ஸையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணி லாயருக்கு கூரியர் மூலமா லெட்டர் அனுப்பினேன். அவரு அதை ரெஃப்யூஸ் பண்ணிட்டாரு. என்னங்கடா இது இம்சைன்னு ஆர்டினரி போஸ்ட்ல அனுப்பிட்டு கடப்பா ஜெயிலுக்கு ஒரு லெட்டர் போட்டு லாயருக்கு போட்ட  கடித விவரத்தை தெரிவிச்சுட்டன். என் கடிதத்துல நான் தெரிவிச்சிருந்த சில பல யோசனைகள் உடனே அமல்படுத்தப்பட்டதுதான் அதிசயம்.

எங்க எம்.எல்.ஏ சிறைல இருந்த நேரம் கடப்பா சிறைல கட்டப்பட்டுக்கிட்டிருந்த ஷீரடி  பாபா கோவிலுக்கு உடலுழைப்பை நல்கி வந்தது உபரி தகவல்.

கண்ணை மூடி கண்ணை திறக்கறதுக்குள்ள தேர்தல் (2004)வந்துருச்சி. ( இது ஆன்மீக தொடர்ங்கறதால அரசியலுக்குள்ள ஆழமா போகவேணாம்ணே) தெலுங்கு தேச அரசை வீட்டுக்கு அனுப்புங்கன்னு 10 ஆயிரம் பாம்லெட் போட்டு  நானே டிஸ்ட் ரிப்யூட் பண்ணேன்.  எங்க எம்.எல்.ஏ வாழ்க்கைல முதல் முறையா சொற்ப வாக்குகள் வித்யாசத்துல வெற்றி வாய்ப்பை இழந்தாரு. ஆனால் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டி இடங்களை பிடிச்சு ஆட்சிக்கு வந்தது. ஒய்.எஸ்.ஆர் முதல்வரானாரு. ஆறுமாசத்துல நகராட்சி தேர்தல் வந்தது . எம்.எல்.ஏ கட்சியோட தொகுதி  பொறுப்பாளரா  கோதாவுல இறங்கினாரு. எதிர்கட்சிக்கு சிங்கிள் டிஜிட். 2009 தேர்தல்ல
நாலாவது முறையா ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆனாரு. அவரு நாலாவது முறையா எம்.எல்.ஏ ஆன அக்கேஷனை வச்சுத்தான் ஷீர்டி பாபா சத நாமாவளி பாக்கெட் சைஸ் புக்ஸ் ஒரு லட்சம் பிரதி அச்சிட்டுக்கிட்டிருக்கேன்.


இந்த 6 வருசத்துல பாபாவுக்கும் நமக்கும் இடையில என்ன நடந்ததுன்னு அடுத்த பதிவுல பார்க்கலாம்.

Tuesday, June 22, 2010

"பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் :8 "

பாபாவோட சரித்திரத்துக்கு உள்ள பவர் என்னன்னு (பாசிட்டிவ், நெகட்டிவ்) கடந்த பதிவுல பார்த்தோம். பாபா  என் மேல நம்பிக்கை வச்சு தன் பக்தர்களை எனக்கு எண்டார்ஸ் பண்ண கூத்தை இந்த அத்யாயத்துல பார்க்கலாம்.  தொழில் முறை  ஜோதிடன்னு  பெருமையா சொல்லிக்கிட்டாலும்  நம்ம ஆஃபீஸ்ல கூட்டம் ஒன்னும்  நெறியாது. ஒரு க்ரூப் வெளிய போய் இன்னொரு க்ரூப் வர்ரதுக்குள்ள டீக்கடைல டீ,தம்மு, சாக்ரடீஸ் மாதிரி பேச்சு. மறுபடி வந்து உட்கார்ந்தா தான் செகண்ட் இன்னிங்ஸ். சில சமயம் லஞ்ச் அவரே வந்துரும். மதியம் தூக்கம். மறுபடி சாயந்திரம்தான் பிராக்டீஸு. மத்த சோசியருங்களுக்கு பணம் வர்ர நேரம் வந்துட்டா க்ளையண்ட்ஸ் வந்துருவாய்ங்க. நம்ம கேஸ்ல க்ளையண்டுக்கு பிரச்சினை தீர்ர நேரம் வந்தாதான் நம்ம கிட்ட வருவாய்ங்க.

எனக்கு  என்னவோ சீரியசா, சைண்டிஃபிக்கா கணக்கு போட்டு பலன் சொல்றதாத்தான் நினைப்பு. ஆனால் வர்ரவங்க  ஆத்தா கனவுல சொன்னா. அவள் சொன்னதை நீங்க அப்படியே சொல்றிங்க. நேத்து என் கனவுல முகமெல்லாம் சேப்பா சாயம் பூசிக்கிட்டு சின்னப்பையன் வந்தான். (பால ஆஞ்சனேயர்?) - இப்படி என்னென்னமோ சென்டிமென்ட்
வசனமெல்லாம்   சொல்வாய்ங்க. நான் கடந்த காலத்தை சொல்ல அதை அவிக ஆமொதிக்கறச்ச எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கும் (த பார்ரா சோசியத்துல இவ்ளோ விசயம் கீதான்னு).

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா என்னைத்தேடிவர்ரவங்க போர்டை பார்த்து வர்ரதோ, குருட்டுத்தனமா வர்ரதோல்லாம் நடக்காது. எதோ ஒரு சக்தி அவிகளை தள்ளி விட்டாத்தான் வரமுடியும்.

நான் ஷீர்டி போய் வந்த பொறவு ஒவ்வொரு வியாழக்கிழமையும் யாரோ ஒரு பாபா பக்தர் என்னை என் ஆஃபீசுக்கு வர்ரதும் தீர்வோட திரும்பி போறதும் நடக்க ஆரம்பிச்சது.

நான் என்னவோ பாபாவுக்கும் எனக்கும் 1998 ஜனவரிக்கு மேலத்தான் தொடர்பு ஏற்பட்டதா நினைச்சு எழுத  ஆரம்பிச்சேன். ஆனால் 1997லயே இந்த லிங்க் ஆரம்பிச்சத இப்பத்தான் கெஸ் பண்ண முடியுது.  மினி வேன் நிறைய சாமான்களோட பாகாலா போன நான் ரெண்டு மூட்டை சாமான் , பாய் சுருட்டலோட சித்தூர் வந்தேன். அப்போ நான் ஏறக்குறைய வெளியூர் காரன் கணக்கு. அப்போ ஒரு கமர்ஷியல் ஆர்டிஸ்ட் அறிமுகமானான். பேரு புஷ்பா . சுமாரான ஆர்டிஸ்டுதான். ஆனால் பாபா படம் வரையறதுல ஸ்பெஷலிஸ்ட்னு பேரு.

அப்போ ஆஃபீஸ் போடற அளவுக்கு வசதியெல்லாம் கிடையாது (சோத்துக்கே லாட்டரி) . அதனால புஷ்பாவோட கடைலயே ஒரு பக்கமா சோசியம் சொல்லிக்கறாப்ல அரேஞ்ஜ்மென்ட். 

அந்த சமயம் ராஜரிஷிங்கற பத்திரிக்கைல நான் எழுதின  தொடர் கட்டுரை வெளிவந்திருந்தது. அதையெல்லாம் மென்ஷன் பண்ணி தமிழ் தெலுங்குல ஆயில் பெயிண்ட்ல போர்டெல்லாம் எழுதி நல்லா தான் ஆரம்பிச்சது.

எங்க ஊரு எம்.எல்.ஏ சி.கே பாபு ஷிர்டி பாபாவுக்கு கட்டமஞ்சில ஒரு கோவில் கட்டியிருந்தாரு. கட்டின புதுசுல  அந்த கோவில் வெளிப்புற சுவத்துல பாபா படத்தை புஷ்பா தான் வரைஞ்சிருந்தானாம். அதுக்கப்புறம்தான் தொழில் சூடுபிடிச்சதுன்னு அப்பப்ப சொல்வான். தன் பையனுக்கு கூட சாயின்னு பேரு வச்சிருந்தான்.அவ்ளோ பக்தி(?)

சாலை அகலப்படுத்தல் காரணமா மேற்படி கோவிலோட சுவரு இடிக்கப்பட்டுருச்சு.
மேப்பிங்கை உள்ளாற தள்ளி சுவர் கட்டி முடிச்சு பாபா படம் போடறதுக்காக இவனுக்கு ஆள் வந்தது. இவன் லாலா பார்ட்டியாகி பகல்ல தண்ணி போட்டு மதியத்துல தூங்க வீட்டுக்குப்போக ஆரம்பிச்ச  புதுசு. டைம் கீப் அப் பண்ண முடியாம தவிச்சிட்டிருந்தான். நான் அப்பப்போ ஞா படுத்திக்கிட்டே இருந்தேன்.

பார்ட்டி அசையற மாதிரி காணோம். யாரோ வந்து சொன்னாய்ங்க. வேற ஒரு ஆர்ட்டிஸ்ட் கமிட் ஆயிட்டான். க்ராஃப் எல்லாம் போட்டாச்சு. குழாயடில ஒரு குடத்துல தண்ணி குதிச்சிக்கிட்டிருக்கிற நேரம் இன்னொருத்தி வந்து அதை இடிச்சு கீழ தள்ளிட்டு தன் குடத்தை வைப்பாளே அது மாதிரி புஷ்பா புறப்பட்டு போய் நான் தான் வரைவேன்னு வாதம் பண்ணி, அழுது,ஆர்பாட்டம் பண்ணி வ்ரைய ஆரம்பிச்சான்.

நான் ரொம்பவே ரேஷ்னலா திங்க் பண்ணி "த பாரு அப்போ உனக்கு நல்ல நேரம் துவங்கியிருக்கும். அந்த  நேரம் பார்த்து பாபா படம் வரைய வாய்ப்பு வந்திருக்கும். உன் நல்ல நேரம் காரணமா தொழில் சூடு பிடிச்சிருக்கும். நீ பாபா படம் போட்டதாலதான் சூடு பிடிச்சதுன்னு நினைச்சிக்கிட்டிருக்கே. உன் எண்ணம் தப்பு.  அந்த ஆஃபர் உனக்குத்தான் முதல்ல வந்தது. நீ நெக்லெக்ட் பண்ணே. இப்போ எவனோ கமிட் ஆகி க்ராஃப் எல்லாம் போட்டுட்டான். இப்ப போயி நீ பூர்ரது  நல்லதில்லை. இதை உன் பாபா கூட சப்போர்ட் பண்ண மாட்டாரு"ன்னு சொன்னேன். பார்ட்டி கேட்டுக்கற மாதிரி இல்லை.

அலைஞ்சு பறை சாற்றி சாதிச்சான். சின்ன வயசுல எங்கம்மா கத்துக் கொடுத்தாய்ங்க."சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்"னு. நான் ஒன்னும் ஓவியன் கிடையாதுதான். ஆனால் ஒரு ஆர்ட்டை பார்த்ததுமே அதை வரைஞ்சவன் கத்துக்குட்டியா, கலைக்குட்டியான்னு சொல்லிருவன். இதுல புஷ்பா வரையறப்பல்லாம் பார்த்து பார்த்து  அவன் ஹேங்  ஓவர்லயோ,குடிக்க போற அவசரத்துலயோ ஏதாச்சும் தப்பு பண்ணிட்டா இதம்பதமா சொல்லி திருத்தற ரேஞ்சுக்கு வந்திருந்தேன்.  ஓரளவு கலர் சென்ஸ்,  கலரிங்கை வச்சு மேடு பள்ளம் காட்டறது,  எங்கே வெளிச்சம் வரனும் , எங்கே இருட்டு வரணும் இத்யாதி குன்செல்லாம் கத்திருந்தேன்.

இவன் உச்சி வெயில்ல சாரத்து மேல ஏறி வரைய ஆரம்பிச்சான். நான் டப்பா பிடிச்சிக்கிட்டிருந்தேன். (பெயிண்ட் டப்பாங்கண்ணா)  நான் என்னதான் முன் ஜாக்கிரதை முத்தண்ணா கணக்கா உஷார் படுத்திக்கிட்டே இருந்தாலும்  எம்.எல்.ஏ தன்னோட பூஜை அறைல வச்சிருக்கிற ஃபோட்டோவை மாடலுக்கு கொடுத்திருந்தும்  புஷ்பா சொதப்பித்தள்ளிட்டான். விதியில்லாம ஃபோட்டோவ என் கிட்ட கொடுத்து எங்க தப்பாயிருச்சு பாரு சாமீன்னான்.  இங்கன இருந்து பார்த்தா ஒன்னும் சொல்ல முடியாது. நான் கீழே போயி பார்க்கிறேன்னு ஃபோட்டோவோட இறங்கி வந்தேன்.

கையில பாபாவோட ஸ்டீல்  ஃப்ரேம் போட்ட படம். சுவத்துல புஷ்பா சொதப்பிட்ட படம்.  ரெண்டையும் பொறுமையா மேச் பண்ணி  பார்த்து பாயிண்ட்ஸ் நோட் பண்ணிக்கிட்டிருக்கேன். கையில இருக்கிற  பாபா படத்து மேல எம்.எல்.ஏ சாரோட உருவம் நிழலாடுது. நான் என்.டி.ஆர் ஃபேன். அவரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. எல்லா எலக்சன்லயும் அவருக்கு விரோதமா வேலை செய்திருக்கேன். அவரைபத்தி எத்தனையோ கதைகள். கற்பனைகள் செலாவணில இருக்கு. முதுகெலும்புக்குள்ள காத்து புகுந்தாப்ல ஒரு ஃபீலிங். இருந்தாலும் " அதை " சட்டை பண்ணிக்காம புஷ்பாவுக்கு கரெக்ஷன்ஸ் சொல்லிக்கிட்டிருந்தேன். எம்.எல்.ஏ சார் " தா ஒரு நிமிஷம் படத்தை கொடுப்பா" ன்னாரு. நான் அப்பத்தான் அவரை பார்த்தாப்ல சீன் போட்டு படத்தை கொடுத்தேன். ஒரு நிமிஷம் ரெண்டையும் பார்த்துட்டு ஃபோட்டோவ திருப்பி கொடுத்துட்டு போய்ட்டாரு.

பாபா அன்னைக்கே எங்க எம்.எல்.ஏவுக்கும் எனக்கும் ஒரு முடிச்சு போட்டுட்டாருன்னு நினைக்கிறேன்.  அந்த முடிச்சோட விளைவு தான் கடந்த வியாழக்கிழமை சி.கே பாபுவோட ஆதரவாளர்களோட ஸ்பான்சர்ஷிப்ல  நான் அச்சிட்ட  ஷிர்டி பாபாவோட சத நாமாவளி பாக்கெட் சைஸ் புத்தகத்தை சி.கே ரிலீஸ் பண்ணாருன்னு நினைக்கிறேன்.


பாபா அன்னைக்கு முடிச்சு போட்டது உண்மை இல்லேன்னா சந்திரபாபு ஏன் என்.டி.ஆருக்கு ஆப்பு வைக்கனும். என்.டி.ஆர் ஏன் சாகனும்? என் ஐடியல் ஹி யான என்.டி.ஆரை கொன்ன  சந்திரபாபுவ பழி வாங்கற உத்தேசத்துல அவரை வில்லங்கத்துல சிக்க வைக்கவே  நான் ஏன் அண்ணாருக்கு  ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை அனுப்பி வைக்கனும். அவரோட பி.ஏக்கள் ஏன் அதை குண்டி கீழ போட்டு சூடுபடுத்திக்கிட்டே 3 வருஷம் கழிக்கனும்.  நான் ஏன் அவரை தினசரிகள்ளயும், லோக்கல் டிவிலயும்  கிழி கிழின்னு கிழிக்கனும்.

மெல்ல மெல்ல எனக்குள்ள இருந்த காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வுகள் மங்கி ஒய்.எஸ்.ஆர்ல என்.டி.ஆரை பார்க்கிற ரேஞ்சுக்கு நான் ஏன் வரணும்?  2004 தேர்தல்லயாவது தெ.தேசத்தை வீட்டுக்கு அனுப்புங்கன்னு பாம்லெட் போட்டு சி.கே.பாப்வை இன்டைரக்டா சப்போர்ட் பண்ணேன். ஆனால் 2009 எலக்சன்ல அதிரடியா களம் இறங்கி தொகுதி மொத்தம் சுத்தி வந்து பிரச்சாரம் செய்தேன். இதெல்லாம் பாபாவோட திருவிளையாடல்தான்னு நான்  நினைக்கிறேன். இதையெல்லாம் பாபா ஒரு  குன்ஸா  சொல்ல முயற்சி பண்ணியிருக்காரு. நான் தான் அதை கரெக்டா டீ கோட் பண்ணிக்கல போல.

நான் ஷீர்டி போய் வந்த பொறவு ஒவ்வொரு வியாழக்கிழமையும் யாரோ ஒரு பாபா பக்தர் என்னை என் ஆஃபீசுக்கு வர்ரதும் தீர்வோட திரும்பி போறதும் நடக்க ஆரம்பிச்சது. அதாவது பாபா தன் பக்தர்களை எனக்கு என்டார்ஸ் பண்ண ஆரம்பிச்சாருன்னு சொல்ல ஆரம்பிச்சு ஒரு வருஷம் முன்னாடி போய் பாபா படத்துல எம்.எல்.ஏ உருவம் நிழலாடின சம்பவத்தையும் 2004,2009 தேர்தல்கள்ள அவருக்கு ஆதரவா பிரச்சாரம் செய்ததையும் சொன்னேன்.  சி.கேவும் பாபாவோட பக்தர்தான். திடீர்னு அவரை ஒரு கொலைவழக்குல தொடர்பு படுத்தி சந்திரபாபுவோட அரசு பந்தாட ஆரம்பிச்சது.

அன்னைய தேதிக்கு சி.கே.பாபு மேல  எனக்கு  எந்தவித பிரத்யேக அக்கறையோ சிம்பத்தியோ  கிடையாது. பாஸ்டுக்கும் அன்னைய தேதிக்கும் என்ன ஒரு வித்யாசம்னா 1999 தேர்தல்ல சந்திரபாபு பசைபோட்ட மாதிரி ஷேடோ பார்ட்டி அது இதுன்னு போலீஸை அவர் பின்னாடியே போட்டும் ஜெயிச்சு வந்துட்டாரு. எனி ஹவ்  உண்மையான பப்ளிக் சப்போர்ட் இருக்கிற ஆளுன்னு ஒரு அபிப்ராயம் வந்தது. அதுக்கு முன்னாடி தெ.தேசம் சர்க்கிள்ள சி.கே ஜெயிச்சப்பல்லாம் ரிக்கிங் நடந்துருச்சுப்பா, கள்ள ஓட்டு போட்டுட்டாங்கப்பா  என்று நடக்கும் பிரச்சாரத்தை நானும் நம்பி வந்தேன்.

சி.கே பாபு அரெஸ்ட் ஆன ராத்திரி எனக்கு சிவராத்திரியாயிருச்சு. ஏனோ மறுபடி மறுபடி அவருக்கு உதவனும் , அவருக்கு உதவனும்ங்கற எண்ணம் மறுபடி மறுபடி உதயமாச்சு.

விடியல்ல தான்  ஞானோதயம் ஆச்சு. ஓஹோ பாபா சி.கே பாபுவுக்கு உதவச்சொல்லி எண்டார்ஸ் பண்றாரு...  ப்ரெட் ஹண்டரான நான் சர்வ சக்தி வாய்ந்த ஒரு  மானில அரசுக்கு எதிரா ,ஒரு எம்.எல்.ஏவுக்கு எந்த விதமா உதவ முடியும்னு அப்ப யோசிக்கல.

ரஜினி காந்த் சொல்வாரே ஆண்டவன் சொல்றான். அருணாச்சலம் செய்றான்னு அந்த கதை. அவருக்கு எப்படி உதவ முடிஞ்சது. அதுக்கு பிரதிபலனா  பாபா எப்படி எனக்கு உதவினார்ங்கற சங்கதியெல்லாம் அடுத்த அத்யாயத்துல சொல்றேன்.

Sunday, June 20, 2010

கடவுள் ஒரு ட்ராகுலா

அண்ணே வணக்கம்ணே கடவுள் ஒரு ட்ராகுலான்னு தலைப்பு வச்சிருந்தாலும் இது பாபாவும் பா பா ப்ளாக் ஷீப்பும் தொடர்பதிவோட 7 ஆவது அத்யாயம். கூடவே சிரிக்க சிரிக்கங்கற தலைப்புல ஒரு நகைச்சுவை பதிவுக்கு ட்ரை பண்ணியிருக்கேன் .படிச்சுப்பாருங்க. உங்க கருத்தை தெரிவிக்க மறந்துராதிங்க‌

ஷிர்டி பாபா  மாதிரி அனேக  சாதுக்கள், சத்திய புருஷர்கள்  புண்ணிய புருஷர்களோட சரித்திரங்களை மானாவாரியா படிச்சிருந்த எனக்கு பாபா சரித்திரம் படிச்சதும் கன்ஃபார்ம் ஆனது என்னன்னா.. அவிக பித்தா இருந்திருக்காய்ங்க. இறையருள் ஒன்னே சொத்தா இருந்திருக்காய்ங்க. பணம்,காசுல்லாம் துச்சம்னு வாழ்ந்திருகாய்ங்க. பாபாவோட வாழ்க்கை வரலாறு என்னை ரொம்பவே இம்ப்ரெஸ் பண்ணுச்சு. இந்த சரித்திரத்தோட பவர் என்னன்னா.. அதுக்கு ஒரு உபகதை தேவையா இருக்கு.

நாலு பேருங்கற என்னோட பழைய பதிவு ஒன்னுல பரமேச்சுன்னு ஒரு கேரக்டரை பத்தி படிச்சிருப்பிங்க. அவிக குடும்பம் ரெம்ப நொந்து போயிருந்தப்பயே ஒரு ஜோசியனா நான் அவிகளுக்கு அறிமுகமாயிட்டன். சொல்லியுமிருக்கேன். ஆனா அந்த காலத்துலயே அவிக நினைக்கிறத நாம சொல்லனும்னு எதிர்பார்க்கிற பார்ட்டிங்க அவிக. அதனால நமக்கு செட் ஆகலை.

அவங்க எதிர் வீட்ல ஒரு சி.ஐ குடியிருந்தார். அவருக்கு ஜோசியம் சொல்லனும்னு பரமேச்சுவோட மூத்த பையன் என்னை கூட்டிட்டு போனான். நம்ம கிட்ட ஆர்டினரி,டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸு, உல்வா மாதிரி தர வாரியான ஜோசியம்லாம் கிடையாது. ரேஷன் ஷாப் க்யூல கேட்டாலும் அதே ஜோசியம் தான்.ஆயிரத்து ஒன்னு கொடுத்தாலும் அதே ஜோசியம்தான்.

அதென்னமோ சி.ஐக்கு சொன்ன ஜோசியம் அவிகளுக்கு ரெம்ப பிடிச்சிப்போனாப்ல இருக்கு பரமேச்சு அண்ட் கோ மறுபடி மறுபடி என்னை காண்டாக்ட் பண்ண ஆரம்பிச்சாய்ங்க.

முதல்ல மூத்த பையன் ஹோம் கார்டா அப்பாயிண்ட் ஆனான். (சி.ஐ. புண்ணியத்துல) .ஆட்டோகாரங்களுக்கு கிரோசின் ஆயில் விக்கிற ஸ்டோர் வச்சாய்ங்க. இவிக வண்டி மெல்ல பிக் அப் ஆச்சு.  வழக்கப்படி நான் கழண்டு கிட்டேன்.

ஓரளவுக்கு நல்லாவே முன்னுக்கு வந்து தலைகனத்துல ஆடிக்கிட்டிருந்த காலத்துல
மூத்தவன் வேற ஒரு சமாசாரத்துல நெருக்கமானான். மொதல்ல குடும்ப ஜோசியனா இருந்த  நான் மூத்தவனோட பர்சனல் ஜோசியனா அவதாரமெடுத்தேன்.

கெட்டு கீரை வழியா போக இருக்கிறவனுக்கு நம்மை வார்த்தை ருசுக்குமா என்ன? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். என்னென்னமோ ஆட்டம் போட்டு நாய் மேல ஏறி கோலம் வந்த் நொந்து   நூடுல்ஸா போயிட்டாய்ங்க. சபிக்கப்பட்ட குடும்பங்கள்ங்கற என்னோட பதிவை படிச்சிங்கன்னா ஒரு ஐடியா வரும். அந்த கண்டிஷனுக்கு அவிக குடும்பம் வந்துருச்சு. எத்தை தின்னா பித்தம் தெளியும்ங்கற ஸ்டேஜு. ஜோசியம்,பரிகாரம்லாம் வேலை செய்யாத நிலை.  அப்போ நான் பாபாவோட சரித்திரத்தை கொடுத்து இதை படிங்க நிலைமை மாறும்னு கொடுத்தேன். இதை கொடுத்த வருசம் 2003ன்னு  நினைக்கிறேன். அந்த விஷயத்தை நானே மறந்துட்டன்.

இந்த தொடரை எழுத ஆரம்பிச்ச பிறகுதான் பாபா சரித்திரத்தை அவிகளுக்கு கொடுத்ததே ஞா வந்தது. கொடுத்ததென்னவோ கொடுத்துட்டன். படிக்க வேண்டியது அவிக தானே. வர வர மாமி கழுதைப்போலானாள்ங்கற மாதிரி நாயடி பேயடி. மேற்படி பந்தா ,கிந்தால்லாம் போய் சகலத்தையும் வித்து தொலைச்சு இப்ப அடியை பிடிடா பரதப்பட்டான்னு காலம் ஓடுது.

அந்த திமிர் பிடிச்ச சனம் நிச்சயம் படிச்சிருக்காது. அதுக்குண்டான பலன் 7 வருஷமா பூலோக நரகம். அதுக்கொரு விடிவுகாலம் பிறக்கத்தான் எனக்குள்ள இந்த ஞா வந்திருக்கு. கூடிய சீக்கிரம் இதை அந்த சனத்துக்கு கன்வே பண்றேன். பாபா சரித்திரத்தை படிக்க சொல்றேன். அதுக்கு பின்னாடி என்ன நடந்துச்சுன்னும் சொல்றேன். இது பாபா பவர் நெகட்டிவ்ல வேலை செய்த அனுபவம்.

பாசிட்டிவா வேலை செய்த அனுபவத்தை கூட சொல்லனும்லியா?

நான் வெறும் விளம்பரங்கள் மேல டிப்பெண்ட் ஆகி ஒரு ஃபோர்ட் நைட்லி நடத்திக்கிட்டிருக்கிற விஷயம் உங்களுக்கு தெரியும். சித்தம் போக்கு சிவன் போக்கு மாதிரி ஒரு தாட்டி டபுள் டெமி, ஒரு தாட்டி சிங்கிள் டெமி, ஒரு தாட்டி ஏ3 ன்னு வித விதமான சைஸ்ல பேப்பரை போடறது வழக்கம்.

அப்பப்போ பேப்பரையே பாக்கெட் புக்காக்கி போடறதும் உண்டு. அப்படி  ஒரு தாட்டி "மினி ஜோதிட போதினின்னு ஒரு புக் போட்டோம். இதுல பாபாவோட கணக்கில்லாத அற்புதங்கள்ள ஒரே ஒரு அற்புதத்தை அதுவும் உதாரணம் காட்ட உபயோகிச் சிருந்தேன். அது வருமாறு:

பாபாவோட பக்தர் ஒருத்தருக்கு திடீர்னு வயித்து போக்கு ஆரம்பமாயிருது. உடனே பாபா வேர்கடலைய வறுத்து பொடி செய்து  கொடுக்கச்சொல்றாரு. வயித்துப்போக்கு நின்னுருது.

இன்னொருதரம் அதே பக்தருக்கு அதே பிரச்சினை வந்துருது. உடனே அவர் பாபா தான் சொல்லியிருக்காரேன்னு வேர்கடலைய வறுத்து பொடி செய்து  சாப்பிடறார். வ.போக்கு அதிகரிச்சு சாக பிழைக்க  ஆயிர்ராரு.  அப்புறம் விஷயம் தெரிஞ்சு பாபா காப்பாத்தறாரு.

இந்த சம்பவத்துல வேர்கடலைய பஞ்சாங்கம்+ ஜோதிட கிரந்த விதிகளுக்கும், நல்ல ஜோதிடரை பாபாவுக்கு ஒப்பிட்டு எழுதியிருந்தேன்.  வழக்கமா நாம போடற பேப்பர்/பாக்கெட் புக் எல்லாமே ஒன்னு அ ரெண்டாயிரம் போடுவம். தட்ஸால். இதை 2000 பிரதி போட்டதா ஞா.

ஆனால் ஒரே பார்ட்டி மினி ஜோதிட போதினிய 5000 காப்பீஸ் ஸ்பான்சர் பண்றதா ப்ரப்போஸ் பண்ணி ஸ்பான்சர் பண்ணதோட நியூஸ்  பேப்பர்ஸ்லயும் வச்சு விட்டாரு. இன்னைக்கு நாளைக்கு கூட அந்த பாக்கெட் புக்கை பார்த்துட்டு வர்ர க்ளையண்ட்ஸ் அதிகம்னா பார்த்துக்கங்க.

பாபாவோட சரித்திரத்துல ஒரு துணுக்கை எடுத்து போட்டதுக்கே இந்த பலன். இப்போ பாபா சத நாமாவளியை  ஒரு லட்சம் காப்பீஸ் போடறதா கமிட் பண்ணி செய்துக்கிட்டிருக்கேன். என்ன ஆகப்போகுதோ தெரியலை.

அது சரிப்பா எப்பயோ 1999ல ஷீர்டி போனே.. 20010ல சத நாமாவளி ஒரு லட்சம் பிரதி  போடப்போறே. இதுக்கு பிரதியா என்னமோ அற்புதம் நடக்கப்போவுதுன்னும் ஜொள் விடறே.  இந்த ப்ராசஸ்க்கு ஏன் இவ்ள காலம் பிடிச்சதுன்னு நீங்க  கேட்கலாம்

இந்த ஆன்மீக விஷயத்துல ஆரும் சொல்லாத மேட்டர் ஒன்னு சொல்றேன். உங்க அனுபவத்தை மறுமொழில சொல்லுங்க.

கடவுளை உண்மையா வணங்கறவங்களுக்கு என்னென்னமோ கிடைக்கும்னு சொல்றாய்ங்க. உண்மைதான் கிடைக்கும்தான். ஆனால் இதுக்கெல்லாம் பயங்கர விதிகள் இருக்கு.

உங்க பிரார்த்தனைக்கு உடனடி லாட்டரித்தனமா பலன் கிடைச்சா நீங்க வணங்கின சாமி உங்களுக்கு போன ஜன்மத்துல ஏதோ சில்லறை பாக்கி வச்சிருந்ததுன்னு அர்த்தம். படக்குனு எதையோ ஒன்னை கொடுத்து ருணத்தை தீர்த்துக்கிருச்சுன்னு அர்த்தம். இது மறுபடி மறுபடி நடக்காது.

ஆனால் நீங்க வணங்கற தெய்வம் உங்களுக்கு நிறையவே கடன் பட்டிருக்குன்னு வைங்க. பெருந்தொகைய நமக்கு பாக்கி வச்சிருக்கிற கடன் காரன்ங்கறவன் எப்பவும் கடனை எகிற அடிக்கத்தான் பார்ப்பான். அப்படி சாமி கூட உங்களுக்கு நிறைய்ய போக்கு காட்டும்.

அய்யயோ இந்த சாமிய கும்பிட ஆரம்பிச்ச பிறகுதாம்பா எனக்கு கஷ்டமே ஆரம்பிச்சுச்சுன்னு கூட சொல்ல வைக்கும்.

அப்படியும் விடாப்பிடியா கும்பிடற பார்ட்டிக்கு சாமியால என்ன கொடுக்க முடியும்? தன் கிட்டே இருக்கிறதை தான் கொடுக்க முடியும். சாமி கிட்டே என்ன இருக்கு?

சாமிக்கு பேர் கிடையாது . எனவே உங்க பேர் நாசமாகும். சாமிக்கு அப்பா,அம்மா கிடையாது. அதனால் உங்களுக்கும் அப்பா அம்மா இல்லாம போயிருவாங்க. ஸ்தூலமாவோ அ சைக்கலாஜிக்கலாவோ. சாமிக்கு உருவம் கிடையாது. அதனால உங்க ரூபமே குரூபமாயிரும்.

மேலும் சாமிங்கறது எங்கனயோ ஆகாசத்துல, சொர்கத்துல இல்லை. நீங்க பண்ற ஜபம் தபம் இத்யாதியால உங்க சங்கல்பத்தால தனக்குத்தானே உருவெடுத்து வருது.
ஒரு தாய் ஸ்தூல உடம்புல  சாதாரண குழந்தைய தாங்கும்போதே  நரக வேதனைய அனுபவிக்கிறா.

ஒரு சாதகன் தன் சூக்கும கருப்பைல தெய்வத்தை கருக்கொள்ளனும்னா என்னமா அவதிபடனும்னு பாருங்க. மேலும் கடவுளோட இருப்பை அங்கீகரிச்சு , இன்வைட் பணிட்டா அவரு சட்டமா வந்து உட்கார்ந்துருவாரு. அவருக்கு உண்டானதை நீங்க செய்தே ஆகனும்.(ஜபம்,தபம்,பூசை,புனஸ்காரம்) அவரு சகட்டுமேனிக்கு கண்ட கண்ட வேஷத்துல வருவாரு.என்னென்னமோ கோரிக்கையையெல்லாம் முன் வைப்பாரு எல்லாத்தயும் நிறைவேத்தனும். ஆடி மாசம் போவட்டும், அம்மாவுக்கு ஒடம்பு பெட்டராகட்டும்னெல்லாம் பெண்டிங்ல வச்சா பல்பு தான்.

உண்மையான நம்பிக்கையோட சாதனைல இறங்கிறவனோட உடல்,உள்ளம், புத்தி, செல்வம், நற்பெயர்,  நட்பு, உறவு, சகலத்தையும் தின்னுதான் கடவுள் அவனுக்குள்ள கருக்கொள்றார்.

அந்த சக்தியோட இயல்பு ஏறக்குறைய ட்ராகுலா மாதிரி இருக்கும். ட்ராகுலா ரத்தத்தை குடிக்கும். இந்த சக்தி உங்க சாதனையை இன்னும் இன்னும்னு தீவிரப்படுத்த தோதா சூழலை மாத்திக்கிட்டே இருக்கும்.

உ.ம் பணம் தான் உங்க சாதனையை மந்தப்படுத்துதுன்னா பணமெல்லாம் காலி. பெண்டாட்டி மோகம் தான் உங்க சாதனையை மந்தப்படுத்துதுன்னா பெண்டாட்டி காலி அ டைவர்ஸு

விவேகானந்தரு ஒரு பாயிண்ட் சொல்லியிருக்காரு. நீ ஒரு கொள்கைய நம்பி சொல்றியா ? சொல்லு ! சொல்லிக்கிட்டே இரு .. 14 வருஷம் அதையே சொல்லிக்கிட்டிருந்தா அந்த வார்த்தைகளுக்கு மந்திர சக்தி  வரும். பேச்சு செயலாகும்.

ஆன்மீகத்துல எந்த விதையும் வீணாப்போறதில்லை. நீ போடற உரம், பாய்ச்சற தண்ணியோட அளவுக்கு முளைச்சே தீரும். யத்பாவம் தத்பவதி.. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறுகிறாய்.

பாபா எப்படி பிச்சையெடுத்து,தனக்கு  பிச்சை கொடுத்தவங்களோட கருமத்தை எல்லாம் வாங்கி அனுபவிச்சபடி   ஒரு சமஸ்தானத்தை நிர்வகிச்சாரோ அப்படி நானும் வாழ்ந்திருக்கேன்.

உஞ்ச விருத்தி பண்ணி வயித்த கழுவின (வயலோரத்தில் சிதறிக்கிடக்கும் தானியங்களை சேகரித்து அதை மட்டும் உண்ணுதல்) அந்த  காலத்து  பிராமணனை விட புனிதமா   நான் வாழ்ந்த காலம் ஒன்றுண்டு.

அதுக்கெல்லாம் காரண பூதர்கள் எத்தனையோ மகான்கள். "எந்தரோ மகானுபாவுலு.. அந்தரிக்கி வந்தனமு" . அந்த மகான்கள்ள ஷீரடி பாபாவும் ஒருத்தர்.

(தொடரும்

Thursday, June 17, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்:5

ஒரு பாபா பக்தன் கிட்டே பாபாவுக்கு நான் தரேண்டா அப்பாயிண்மென்டுன்னு சவால் விட்டுட்டு கலங்கிகிட்டிருந்தப்ப தர்காதீதமா ஒரு கடன் காரர் வந்து ஷீர்டிக்கு வராமாதிரியிருந்தா ஃபேர் உங்கணக்கு செலவெல்லாம் என் கணக்கு. பணமா கேட்டா இப்ப இல்லைன்னு சொன்னதையும்,சவாலுக்கு காரணமான பக்தன் வடிவேலுவும் பேக்கேஜ் டூர்ல வரவேண்டியதா போனதையும் கடந்த பதிவுல சொல்லியிர்ந்தேன்.



இப்ப ஷிர்டி யாத்ரா விசேஷங்களை ரொட்டீனா சொல்லி ஜல்லியடிக்கபோறேன்னு நினைச்சா ஏமாந்துருவிங்க. யாத்ரா விவரமெல்லாம் இன்னைக்கு வெளி வர்ர நாலணா பக்தி புஸ்தவங்கள்ள அக்கு வேறு ஆணி வேறா கொடுத்திருப்பாய்ங்கள்ள.



பஸ்ஸுல திருப்பதி போய் அனந்தபூர் எக்ஸ்பிரஸ் பிடிச்சோம். அனந்த பூர்லருந்து ரயில்ல ஷீர்டிக்கு முந்தின ஸ்டாப் வரை போறதாவும் அங்கருந்து ஷேர் ஆட்டோ கணக்கா வாகனவசதி இருக்கிறதாவும் பேசிக்கிட்டாய்ங்க. ரயில்ல ஒரு சம்பவம் நடந்தது. அந்த நேரம் நான் ஏற்கெனவே சொன்னபடி ஏழுமலையானோட ரசிகன். அன்னமாச்சாரி கீர்த்தனைகளை எஸ்.பி குரல்ல கேட்டு மோகிச்சு போய் அதை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம்னு கனவு கண்டேனோ அப்படியெல்லாம் அனுபவிச்ச காலமது.



இன்னம் ஒருபடி முன்ன போய் அந்த கீர்த்தனைகளோட இசைக்கு நவீன அன்னமாசாரியார் கணக்கா தமிழ்ல எழுதிக்கூட பார்த்தகாலம் அது. பெருமாளோட க்ஷேத்திரத்துல ஷிர்டி பாபா படம் வந்து சேர்ந்தாப்ல ஷிர்டி யாத்திரைல பெருமாள் மூக்கை நீட்டின அற்புதம் இது.



இந்த எக்ஸ்பிரஸ் ட்ரெயின்ல மத்தில கிச்சன் இருக்கும் போல. கிச்சனுக்கு ரெண்டு பக்கமும் போகீஸ். ட்ரெயின்ல சீட் போட்ட அவசரத்துல க்ரூப்பு ரெண்டா பிரிய வேண்டியதாயிருச்சு. ஒரு க்ரூப் புத்தியளவுல ஊனமுற்றோர் குழுவா போச்சு. அதுல நான் மாட்டிக்கிட்டேன். ஓரளவு நமக்கு செட் ஆகிற பார்ட்டிங்க இன்னொரு க்ரூப்ல இருக்காய்ங்க. மெல்ல மெல்ல தத்தி தத்தி போகி டு போகி போயிட்டே இருந்தேன். அடுத்த க்ரூப்போட ஐக்கியமாறது என் உத்தேசம்.



சென்டருக்கு வந்துட்டன். கிச்சனுக்குள்ள நுழைஞ்சிட்டன். நுழைஞ்ச அதே நிமிசம் வெளிய இருந்து எவனோ கதவை பூட்டிட்டான். கொஞ்சமா டர்ரானாலும் சரி நம்ம க்ரூப் அடுத்தடுத்த போகில எங்கனாச்சும் இருக்கும் .சேர்ந்துக்கலாம்னு நடைய போட்டேன். கிச்சன்லருந்து வெளிய வரப்போறேன். அதே நிமிசம் எவனோ வெளிய இருந்து கதவை பூட்டிட்டான். பேசேஜ் முழுக்க வெஜிட்டபிள் வேஸ்ட். சொதசொதன்னு ஈரம். நேரம் ராத்திரி 10 அ 10.30 இருக்கலாம். ரயிலா சொம்மா பறக்குது. சத்தமா டி.டி.எஸ் ரேஞ்சுல செவுள பிய்க்குது. நான் டென்சனாயிட்டன். படபடன்னு கதவை தட்டறேன்.



நம்ம ப்ளாக்ல மருமொழி போடற பார்ட்டிங்க யூஸ் பண்ற வொக்காபிலரியெல்லாம் ஃபவுண்டென் கணக்கா வருது. அந்த வேகத்துல,சத்தத்துல , காத்துல எவன் கவனிக்க போறான். கூண்டுல மாட்டின எலி என்ன நினைக்கும்னு அப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டன்.



அன்னமாசாரி கீர்த்தனை ஒன்னு ஞா வந்தது.



"சம்ப பிலிச்சின வேளா.. சங்கேள்ளு பெட்டின வேளா வெங்கடேஸு நாமமே திக்கு மரி லேது"



"வாடா போட்டுத்தள்ளீர்ரன்னு கூப்பிடற சமயத்துல, கைல விலங்கு மாட்டின வேளை பெருமாள் பெயர்தான் திக்கு" ன்னு அர்த்தம். கண்ல மாலை மாலையா தண்ணி. ராமதாஸ (பா.ம.க இல்லிங்கோ ..பக்த ராமாதாசு) செயில்ல போட்டப்ப அவரு செயில்ல எப்படி பாடியிருப்பாரோ அந்த ரேஞ்சுல மனசுக்குள்ள மேற்படி வரி ஓடுது.



கதவை தட்டறது, சகட்டு மேனிக்கு கூவி திட்டறது எல்லாத்தயும் விட்டுட்டன். மேற்படி வரிதான் ரீப்ளே ஆயிட்டிருக்கு, அப்ப கதவுக்கு அந்தப்பக்கம் யாரோ நடந்துவர சத்தம். மவுனமாவே இருந்தன். படக்குனு கதவு திறக்கப்பட்டது. நாலடி வச்சிருப்பேன். படக்குனு ஞா வந்தது ஆப்கா நாம் க்யானு (உங்க பேர் என்ன?) கேட்டேன். திறந்த கேண்டீன் தொழிலாளி "பாலாஜி"ன்னாரு. மயிர் கூச்செறிந்தது. புல்லரித்தது. புளகாகிதம் ஏற்பட்டதுன்னு எத்தனை வார்த்தை இருக்கோ அத்தனையையும் அன்னைக்கு அனுபவிச்சேன். ஓடற ரயில்ல தத்தி தத்தி நடந்து க்ரூப் 2 வை பிடிச்சுட்டன். சனம் சீட்டுக்கச்சேரில இருக்காய்ங்க. நமக்கு ஆடத்தெரியும். ஆனால் ஆட ஆள் கிடைச்சதில்லை. கிடைச்சாலும் ஆடறதில்லை. வெறுமனே வேடிக்கை பார்க்கிறதுதான்.



சீட்டுக்கச்சேரில ஒரு அற்புதம் நடந்தது. அதை அடுத்த பதிவுல சொல்றேன்.





பி.கு: இதை நான் தட்ட ஆரம்பிச்ச நேரம் வியாழக்கிழமை அதிகாலை 4.15 . முடிச்ச நேரம்: 4.35. இந்த தூங்காத இரவுக்கு காரணம் கூட பாபா தான் . கடந்த பதிவுல சொன்னேனே பாபா ஸ்தோத்திர மாலை லட்சம் பிரதி மேட்டர். அதுல மொத 2000 பிரதி ரெடியாயிருச்சு. அதை பேக் பண்ணி தயாரா வச்சிருக்கேன். நாளை யூத் காங்கிரஸ் லீடரோட போய் எம்.எல்.ஏ கிட்ட காட்டி யூ.கா.லீ கையால ப்ரஸ் மீட்ல ரிலீஸ் பண்ண போறதா இன்ஃபார்ம் பண்ணனும். மதியம் 3.30க்கு ப்ரஸ் மீட் .தூக்கம் கெடுத்தான் ஆக்கம் கொடுத்தான்னு வள்ளலாருது ஒரு வாக்குண்டு. அதுக்கான அர்த்தம் தான் இன்னைக்கு நான் போட்டிருக்கிற பதிவுகள்.

Sunday, June 13, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 3

கடந்த chapter ல சொன்ன வடிவேலு பாபா பக்தனா செமை பில்டப் கொடுத்துக்கிட்டிருப்பான். பேச்சு மட்டும் வெல்லமா இருக்கும். ஆப்பு வச்சான்னா ரத்தம் வெள்ளமா வரும். அவனை பத்தி சொல்ல ஆரம்பிச்சா இன்னொரு அத்யாயமும் வீணாப்போயிரும். அதனால ஒரு தாவு தாவிரலாம். வடிவேலு சந்துல ஒரு கடை வச்சிருந்தான்.(வாடகைக்குத்தான்.)

 அந்த கடை ஓனர் பத்தி சொன்னா சிரிச்சி சிரிச்சு வயிறே புண்ணாயிரும்.அது தனி கதை.லீஸுக்கு வாங்கின தியேட்டர் தன்னுதுதான்னு கேஸ் போட்டதென்ன, ஊரெல்லாம் கடன் வாங்கி திவாலாகிப்போன முஸ்லீம் குடும்பங்களோட சொத்தையெல்லாம் வாங்கி குவிச்சதென்ன, இதுல இன்னொரு தியேட்டரும் அடக்கம். இதுவும் லீசுக்கு வாங்கி கோர்ட்டுக்கு போன கேசுதான்.  வயது வந்த  பிள்ளைங்க  இருக்கறச்ச வீட்டு வேலைக்காரியோட கும்மாளம் அடிச்சதென்ன, இத்தனைக்கும் பார்ட்டி பாக்கெட் ட்ரான்ஸிஸ்டர் மாதிரி தான் இருக்கும். பி.பி பேஷண்ட் . அந்தாளோட வேலை என்னன்னா காலைல வாக்கிங்கிளம்புவாரு. தன்னோட பிலிடிங்ஸ் எங்கெல்லாம் இருக்கோ அந்த ரூட் வழியா அல்லாத்தயும் பார்த்துக்கிட்டே  வாக்கிங் போவாரு. தினசரி எங்கனயோ ஒரு இடத்துல கண்ணு சுத்தி விழுந்துருவாரு. உடனே யாரோ தெரிஞ்ச ஆட்டோக்காரன் கொண்டு போய் வீட்ல சேர்ப்பான். இன்னம் நிறைய மேட்டர் இருக்கு  அதனால பின்னொரு சமயம் பார்ப்போம்).

சந்துல கடை வச்ச வடிவேலு கொஞ்சமா வசதி வந்ததும் ( வந்துருச்சுனு நினைச்சதும்) மெயின் ரோட்ல ஒரு கடைய பார்த்து மாறிக்கிட்டான். பழைய கடைய சென்டிமென்ட்டுன்னு காலி பண்ணாம வச்சிருந்தான். ஃபைனான்ஸும் ஓடிக்கிட்டிருந்தது. அண்ணன் தம்பி தகராறுல இருந்த கோவணமளவு இடத்தை ரெண்டா பிரிச்சு வீட்டை கட்டிட்டான். கைல இருந்த இருப்பெல்லாம் காலி.  அண்ணன் தம்பில எவனாச்சும் ஒருவன் பெண்டாட்டி ............... ஐ முகர்ந்துக்கிட்டிருக்கிற கேஸாயிருந்தாதான் அண்ணன் தம்பி தகராறெ வருது. நம்ம வடிவேலு இந்த ரகம்.

இதெல்லாம் நமக்கும் தெரியும். இருந்தாலும் அதை  (சந்து கடைய) ப்ரிஃபர் பண்ணல.

நம்ம வடிவேலு ஏரியாவுக்கே ஒரு பி.ஆர்.ஓ   மாதிரி.  யாரை தேடியார் வந்தாலும் கரெக்டா அட்ரஸெல்லாம் சொல்லுவான். நாம தேடற பார்ட்டி சின்ன வீட்ல இருப்பானா பெரிய வீட்ல இருப்பானான்னும் சொல்வான். எவன் எவளை வச்சிருக்கான்னும் கரெக்டா சொல்லுவான்.( என்னடான்னா சில சமயம் நம்மை உதைக்க வர்ரவன், பிடிக்க வந்த கான்ஸ்டபிள், கடன் காரனுக்கும் கரெக்டா போட்டு கொடுத்துருவான்) அந்த ஹோதால "யப்பா வடி வேலு ! பணம் காசெல்லாம் காலி  ஆயிருச்சு. சோத்துக்கு பிரச்சினையில்லை.வட்டி வந்துரும் பொழுது போவனும். சின்னதா ரூம் எதுனா காலியிருந்தா சொல்லேன். சோசியம் சொல்லி நாலு காசு பார்ப்பேன். அட்வான்ஸ் கிட்வான்ஸெல்லாம் தர்ர அளவுக்கு வசதி கிடையாது. சீப் அண்ட் பெஸ்டா சொல்லு"ன்னேன்.

ஜனரஞ்சகமா போயிட்டிருக்கிற இந்த பதிவுல மசாலா இல்லைன்னா எப்படி? ( பாபா! எக்ஸ் க்யூஸ் மீ)


வடிவேலு தான் என்னவோ  பெரிய்ய மதன காமராஜன் மாதிரி பயங்கர பீலா விடுவான். தற்சமயம் அல்லாத்தயும் விட்டுட்ட மாதிரியும் ஒரு காலத்துல கட்டைய போடாத இடமே இல்லன்னும் இஷ்டத்துக்கு சுத்துவான். ஒரு நா அவன் மனைவி அம்மா வீட்ல இருந்து ஆட்ட்டோல வந்து கடையண்ட ஆட்டோவை நிறுத்தினா.   இவனை  ஒரு விரல் காட்டி கூப்டா. கலெக்டரம்மாவ ரிசீவ் பண்ணிக்கிற டஃபேதான் கணக்கா அப்படி ஒரு வினயம் .அவள் வந்த ஆட்டோவுக்கு காசு கொடுத்துகட் பண்ணி அனுப்பிட்டு இன்னொரு ஆட்டோவ கூப்டு சீட்டை தட்டி சுத்தம் பண்ணி வழியனுப்பிட்டுதான் கடைக்குள்ளாற வந்தான்.

வடிவேலுவுக்கு செட்டியார் பசங்களோடதான் டீலிங் சாஸ்தி. பாவம் இவனுக்கு தான் பலான சாதின்னு இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் போல. அவன் மனைவிய பார்த்தா ஜஸ்ட் ஒரு செட்டியாரம்மாவை பார்த்தமாதிரியே இருக்கு. ஒரு நாள் இவன் கட்டின வீட்டை பார்க்க போனேன். டிட்டோவா பஜார்ல கடையோட சேர்த்து செட்டியாருங்க கட்டுவாங்களே குகை மாதிரி வழி , ஃப்ளோர் டிக்கெட் க்யூ மாதிரி வராண்டா வாயு கூட வெளியேறாத மாதிரி வீடு அதே தான். அப்பத்தான் நினைச்சேன். தாளி..இவன் செட்டியார்ங்க காசை சாப்டு சாப்டு அவிக கருமமெல்லாத்தயும் மூட்டைக்கட்டி இப்படி ஆயிட்டான் போலன்னு.

சரி சரி ரெம்ப டைவர்ட் ஆயிட்டாப்ல இருக்கு. மேட்டருக்கு வருவம். எங்க விட்டோம். ஆங் .. வாடகைக்கு கடை பாருன்னேன்.

உடனே வடிவேலு தன்னோட வழக்கமான ஓவர் டெசிபல், ஓவர் பாடி லேங்குவேஜோட,ஒக்காபிலரியோட தன் கடைய எடுத்துக்கசொன்னான். ஒரு சீப்பு கூட வைக்காம மொத்தத்தையும் காலி பண்ணி தரேன்னான். அட்வான்ஸ் வேணவே வாணாம். செட்டியார்( பில்டிங் ஓனர்)  கிட்டே நான் பேசிக்கிறேன்னான்.

நேரம் நல்லாருக்கு, ஓப்பன் பண்ணிரலாம்னு ஒரு நா கடைய க்ளின் பண்ண சொன்னேன். தன்னோட சிஷ்ய பிள்ளையான ஒரு எஸ்.சி. பையனை விட்டு க்ளின் பண்ண சொல்லிட்டான்.(அவனுக்கு பத்து பைசா தரமாட்டான்.)  நான் சாயந்திரம் சுத்தமா குளிச்சு முழுகி போறேன்.  அந்த கடையோட பரப்பளவே பத்துக்கு பத்துதான் இருக்கும். அதுல பத்துக்கு ரெண்டரைல ஒரு சலூனையே திணிச்சி வச்சிருந்தான்.  நான் அரண்டு போய் "என்னய்யா இது" ன்னேன் .ஒரு வாரம் சாமி மொத்தத்தையும் தூக்கிரலாம்னான். (ஒரு மயித்த கூட தூக்கலை) . நானு விதியேன்னு  பெண்டாட்டியோட ஒரு பழம்புடவைல ஒரு ஸ்க்ரீன் தயார் பண்ணி சலூனை மறைச்சு தொழிலை துவங்கிட்டன்.

அவனோட சேஷ்டைகள் எல்லாம் முன்னாடியே தெரியும்னாலும் இப்ப கிட்டக்க பார்க்கிற சான்ஸு கிடைச்சது.   பொதுவாவே நமக்கு இர்ரிடேசன் அதிகம். அதுலயும் இவன் பண்ற அட்டூழியம் இருக்கே சகிக்கவே சகிக்காது.  எறும்புகளை ஃப்ரை பண்ணி ஆனைக்கு ஸ்னாக்ஸ் பண்ற பார்ட்டி. இதுல பாபா புராணம் வேற. திங்கள் கிழமைலருந்தே ஆரம்பிச்சுருவான். போன வியாழக்கிழமை குளிச்சுட்டு வர வீட்டுக்கு போனேனா,,

நாளுக்கு நாள் அவனோட  எக்ஸ்ப்ளாய்டேஷன் அதிகரிச்சிக்கிட்டே போனது. அட்வான்ஸே வேணாம்னவன் ஒரு நா வீட்டுக்கு வந்து கேஸ் வந்துருச்சி பணம் வேணம்னு கடனா கொடுன்னு தாலியறுத்து வாங்கிட்டு போனவன் போனானடின்னு ஆயிருச்சு. பணம் போனது கூட பெருசுல்லை. என்னை என்னவோ அவனோட ஃபாலோயர் மாதிரி ட்ரீட் பண்ண ஆரம்பிச்சான். கமாண்ட் பண்ண மிகவும் விரும்பினான்.

இதுல பொருத்தமே இல்லாம இடையிடையில பாபா புராணம். வடிவேலு மேல கடுப்பு பாபா மேல கடுப்பா மாறிருச்சு. ஒரு நாள் கடுப்பாகி,வடிவேலுவை கடுப்பாக்க "என்னத்த..பாபா.. எங்கனயோ கஞ்சா அடிச்சிக்கிட்டிருந்த பார்ட்டி. ஊர்ல இருக்கிற கொலைகாரனெல்லாம் பாபாவத்தான் கும்பிடறான். பத்து வட்டி வாங்கிறவன், அப்பா அம்மாவுக்கு சோத்தப்போடாதவன்லாம் பாபாவ கும்பிடறான். இதுக்கெல்லாம்  பாபா எங்க போய் முட்டிக்கிறது ஒரு வேளை அவரு தெய்வமாவே இருந்தாலும் இவிக இம்சை தாங்க முடியாம  மத்த சாமிங்க மாதிரி இவரும் ஓடிப்போயிருப்பாரு. மொத்தத்துல  பாபா பேரை சொல்லி உங்க இமேஜை பூஸ்ட் அப் பண்ணிக்கிற முயற்சில அவரை நாஸ்தி பண்றிங்க. "ன்னு கடிக்க ஆரம்பிச்சேன் 

பாவம் வடிவேலு பெண்டாட்டிக்கு சரண்டர் பார்ட்டி. அவளுக்கு பயந்து அம்மாவை திண்ணை தாழ்வாரத்துலயே வச்சி மெயின்டெய்ன் பண்றான்.(இது அப்ப தெரியாது அப்பாறமா தெரியும் )  உடனே வெடிச்சு கிளம்பினான்.

அவன் என்னவோ அய்யரு மாதிரியும் , நான் என்னவோ   கல்லுக்கு ஏஞ்சாமி பாலபிசேகம்னு கேட்ட தலித் மாதிரியும்  சீன் மாறிப்போச்சு.

"இன்னா இன்னா பேசறே நீ ..பாபான்னா தமாசா கீதா உனக்கு அவரு  அவரா நெனச்சாத்தான் அவரோட பார்டர்லயே என்டர் ஆகமுடியும் நானெல்லாம்  எப்படியெல்லாம் இருந்தவன் தெரியுமா? ஏதோ அவரா பார்த்து இஸ்துக்கினாரு " இப்படி பாபா மகிமை பத்தி சொற்பொழிவே ஆற்ற ஆரம்பிச்சுட்டான்.


நம்ம ஆன்மீக வாழ்க்கை துவங்கி 11வருடம் முடிஞ்சி கடவுளுக்கே நான் தான் கள்ளக்காதலிங்கற ஃபீலிங்ல இருந்த நேரம். வடிவேலுவோட  ஓவர் ஆக்சனுக்கு புகையே வந்துருச்சி. " த பாரு நிப்பாட்டு   நீ சொல்ற பாபா மட்டும் உண்மையிலயே சாமின்னாலோ, சாமியோட நினைப்புலயே வாழ்ந்த ஆசாமின்னாலோ இன்னைக்கே பேசறேன். அடுத்த வியாழக்கிழமை பாபாவுக்கு நான் தரேன் அப்பாயிண்ட்மென்ட் வென்யூ : ஷீர்டி வருட்டா"ன்னிட்டு   வந்துட்டன்.

கையிலயா காணி கிடயாது. (எல்லாத்தயும் தத்தம் பண்ணியாச்சு) வட்டி காசு வந்தாலும் ஆயிரம் கமிட்மென்டு.ஒரு வேளை காசே கிடைச்சும் பாபா தெய்வமா இருந்து அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கலன்னா? அய்யய்யோ இந்த வடிவேலு ப்ரைவேட் டிவி சேனலை விட மோசமானவனாச்சே. ஏதோ படத்துல வடிவேலுவோட பேக்கரி மேட்டர் மாதிரி ஊரெல்லாம் நாறடிச்சுருவானேனு பயங்கர டென்சன்.

மார்கெட் சவுக் சனங்க சைக்காலஜியே வேற. முன்னொரு பதிவுல நாலு பேரு பத்தி எழுதியிருந்தேனே .. அது மாதிரி நாப்பது பேரை பத்தி எழுதனும். ஒவ்வொரு கேரக்டரையும் வச்சி ஒரு  சினிமாவே எடுக்கலாம்.  குளிக்கவே குளிக்காத காதர், தாத்தா பரணைல அண்டால சேர்த்து வச்சிருக்கிற  நகைகளை சுட்டுக்கிட்டு வந்து தினசரி சூத்திர பசங்களோட தண்ணி போட்டு சீயா சாப்பிடற செட்டியார் பையன், ஆக்சிடென்ட்ல காலொடிஞ்சு பேஸ் பெருத்துப்போய் திண்ணைல உட்கார்ந்துகிட்டே அரசியல் பண்ற பண்டரியோட அம்மா, அண்ணன் எம்பியா இருக்க தான் மட்டும் சாதாரண சிமெண்ட் டீலரா கெனட்டிக் ஹோண்டால திரியற  ஆசாமி ( இந்த பார்ட்டிய ஆட்டத்துல சேர்த்துக்கிடவே மாட்டாய்ங்க. இத்தனைக்கும் சாடைல பார்த்தா எம்பியும் இவரும் ரெட்டை மாதிரி இருப்பாய்ங்க)   கேரக்டர்ல எத்தனை வித்யாசமிருந்தாலும் அக்கப்போர்ல பயங்கர டேஸ்டு. அதுலயும் எல்லாருமே வடிவேலுவோட ஹெவி டெசிபல் செய்தி வாசிப்புக்கு அடிமையானவுக.

1986ல இருந்து சாமிங்களோட நம்ம டீலிங்கெல்லாம் ஞா வந்துருச்சி. சாமிங்க கை கொடுத்த சந்தர்ப்பங்கள். கை விட்ட சந்தர்ப்பங்கள். நான் வாழ்க்கைல  முத முறையா சுய புத்தியோட வணங்கின ஆஞ்சனேயர் அவரு என் லைஃப்ல நடத்தின அற்புதங்கள்.ஆஞ்சனேயரோட ப்ரசன்னத்துக்காக  நான் ஜெபிச்ச  ராம நாமம். ஒவ்வொன்னா திறந்துக்கிட்ட ரகசிய கதவுகள் எல்லாம் ஞா வந்துருச்சி.

கடவுளையும்,அவரோட லீலைகளையும்  புரிந்துகொள்வது எப்படின்னு  குடும்ப பத்திரிக்கைல ஒரு  தொடரே எழுதற அளவுக்கு அனுபவம் உண்டு. (இதனோட சாரமா நான் எழுதின கவிதைய படிக்க இங்கே அழுத்துங்க) இருந்தாலும் இருந்தாலும்..

தெய்வங்கள் என் விதியிடம் என்னை ஒப்படைச்சுட்ட சந்தர்ப்பங்களும் இல்லாம இல்லை. ஆனால் அதுவும் என் நன்மைக்குத்தான்னு அப்பாறம் புரிஞ்சிக்கிட்டதுண்டு.  க்டக லக்னம்ங்கறதால வளர்பிறைல ஒரு வாழ்க்கை, தேய்பிறைல ஒரு வாழ்க்கைன்னு ரெண்டையும் பார்த்தவன் தான். இருந்தாலும் அவசரப்பட்டு சவால் விட்டுட்டமோன்னு சம்சயம் அதிகரிச்சுக்கிட்டே போச்சு.

என்னதான் தியானம், யோகம்னு நிறைய படிச்சு நிறைய அனுபவங்கள் ஏற்பட்டிருந்தாலும் எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளி ஹனுமானும், ராம நாம ஜெபமும்தான். அதுக்கு மிஞ்சி நம்மோட சாதனைன்னு ( ஸ்பிரிச்சுவல் எக்ஸர்சைஸ்) பார்த்தா பொது நலம் கருதிய சிந்தனைய சொல்லலாம். தினம் தினம் மரணம் பத்தி சிந்திக்கிறதையும், அதை வச்சு வாழ்க்கையை கூர் தீட்டிக்கிறதையும் சொல்லலாம்.

இத்தனை இருந்தாலும் இறை தேடும் பயணத்துல நம்ம முறை ஜஸ்ட் நாம ஜபம்தான். ரிசல்ட் என்னவோ ஓஹோ தான். ஒரு தரம் இப்படித்தான் அஷ்டம சனி  நடக்கறச்ச கதவை கழட்டி நம்ம குடிசை வீட்டுக்கு வெளிய போட்டுக்கிட்டு அது மேல படுத்து சவாசனத்துல ராம நாம ஜெபம் பண்ணிட்டிருந்தப்போ சாட்சாத் ஹனுமானே காட்சி கொடுத்தார். அதுவும் எப்படி?

உடம்பெல்லாம் வெள்ளை வெளேர்னு முடி. வால் முடிவுல மணி. பேக் கிரவுண்ட்ல ஹனுமான் சாலீஸா ப்ளஸ் மணி சத்தம்.  சாம்பிராணி புகை . அதோட வாசம் போனஸ். ஹனுமான் சாலீஸா கம்ப்ளீட்டா ஓடிமுடியறவரை தரிசனம்.( உண்மைல அது வரை ஹனுமான் சாலீஸாவை கேட்டதே கிடையாது.  நம்ம ஜாதகத்துலயெ சந்தேகம்ங்கற கான்செப்டுக்கு முக்கிய இடம் உண்டு. தியானம்னா சாட்சியாக இருந்து கவனித்தல்னு சொல்வாய்ங்க.

என்னா செய்தாலும் "என்னப்பா முருகேசா இதெல்லாம் தேவைதானா? உன் லட்சியத்துக்கும் இதுக்கும் என்னப்பா லின்குன்னு  ஒரு குரல் விஜாரிச்சிக்கிட்டே இருக்கும்ல"

அதே குரல் ஸ்டார்ட் ஆயிருச்சு. என்னப்பா இதென்ன ஆடிட்டரி ஹெலூசினேஷனா இல்லே இல்யூஷனான்னு கேள்வி ஆரம்பமாயிருச்சு. படக்குனு கண்ணை திறந்துட்டன். ஆஞ்சனேயரு..? அசையற மாதிரி  காணோம். தூத்தேறி.. கேள்வியாவது ஒன்னாவது காசு பணமில்லாம கிடைக்கிற இந்த சுகானுபவத்தை ஏன் இழக்கனும்னு கண்ணை மறுபடி மூடிக்கிட்டேன் .

ஆனால் பாபா அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கலன்னா? நீ என்னடா எனக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கிறதுன்னு ரிவர்ஸ் ஆயிட்டா?  இப்படி ஆயிரம் கேள்விகளோட ராம நாம ஜெபத்தோட தூங்கிட்டன்.


போகிக்கு எப்படி விழிப்பும் தூக்கமாவே இருக்கோ , யோகிக்கு தூக்கமும் யோகமாவே இருக்கும்னு எங்கனயோ படிச்சதா ஞா. சாட்சியா இருந்து கவனிக்க ப்ராக்டீஸ் பண்ண கனவுகளை விலகி நின்னு  கவனிக்கிறதும் ஒரு வழின்னு ஓஷோ சொல்லியிருக்காருங்கோ. நானெல்லாம் கனவுலயே பொய் சொல்வேன். அந்த அளவுக்கு விழிப்புங்கண்ணா. ஆனா பாருங்கண்ணா சமீப காலமா கனவே வர்ரதில்லிங்கண்ணா. காரணம் என்னன்னு புரியலிங்கண்ணா.

ஒன்னை மட்டும் கன்ஃபர்ம் பண்ணிட்டு இந்த அத்யாயத்தை முடிக்கிறேன்.அன்னைக்கு ராம நாம ஜெபத்தோட தூங்கிட்டன்னு சொன்னேனே அந்த ராத்திரியும் கனவு ஏதும் வரலிங்கண்ணா. ஸ் அப்பாடா..

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் 2

நேரு கிட்டே செக்ரட்டரி ரேஞ்சுல குப்பை கொட்டின ஐ.ஏ.எஸ்ஸுக்கு ஜோசியம் சொல்லி டப்பிங் ப்ராஜக்ட் வாங்கின கதையை கடந்த பதிவுல பார்த்தோம். இப்போ சப்ஜெக்டுக்கு போயிருவமா?




அந்த நேரத்துல இந்த நேரத்து தெளிவெல்லாம் கிடையாது (ஜோதிஷத்துல). அய்யரு ஜாதகத்தை பார்த்து அவருக்கு என்ன சொன்னேனோ அது பாபாவோட அருள்னு தான் நினைக்கிறேன்.



சரி ..1997 நவம்பர் 9 ஆம் தேதி வரை சாரி 10 ஆம் தேதி மதியம் 3 மணி வரை சிங்கிள் டீக்கு அடச்சீ ஒரு பீடிக்கு கூட கதி கிடையாது. ஆனால் 3 மணி 1 நிமிஷத்துக்கு ஒரு லட்சத்து ரெண்டாயிரம் ரூபா கொடுத்தாய்ங்க. அப்பா கட்டின வீட்டை வித்து வந்த பங்குபணமுங்கோ.



அந்த நேரம் செமர்த்தியான கெட்ட நேரம். அஷ்டமத்துல சனி. 1/7 ல ராகு கேது போதாததுக்கு கேது புக்தி வேற. அந்த நேரம் பார்த்து ஏன் பணம் வந்ததுன்னு கேட்டா அதுக்கு ஒரே பதில் கிரகம் எல்லாம் இறைவனோட படைப்பு. வட்டிக்கிறவன் நம்மாளா இருந்தா எந்த பந்தியா இருந்த என்னானு ஒரு சொலவடை உண்டு.அதுமாதிரி இறைவன் நினைச்சுட்டா இந்த கிரகமெல்லாம் என்ன செய்யமுடியும்?



அந்த நேரத்து என் ஆத்யாத்ம சாதனைகளை சொல்லனும்னா அதுக்கு ஒரு தொடர்பதிவு போடனும். (ஸ் அப்பாடா தவளைப்பாய்ச்சல்னா இதான்பா) எப்படியோ 1.2 லட்சம் வந்துருச்சு.



அந்த நேரத்துல உசுரு பிழைச்சதே ஒரு சாதனை. இதுல காசு பணம் வேற. என்னதான் அந்த நேரம் நமக்கும் பெருமாளுக்கு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்தாலும் அப்ப இருந்த நேரத்துக்கு ஒரு சாதுவை வணங்கினா படக்குனு பரிகாரம் கிடைக்கும். இந்த மேட்டர் நமக்கு அப்பறமா தானே தெரியும்.பாபாவுக்கும்,பக்தவத்சலருக்கும் மின்னாடியே தெரியுமே. அவிக ஏதோ பேச்சுவார்த்தை நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுட்டாப்ல இருக்கு.



கைல காசு வந்தது. கூடவே அதை சேர்த்து வச்ச எங்கப்பனோட கருமம்,புத்தி,அவருக்கிருந்த ஃபேட்டல் வீக்னெஸ், வியாதி (கேஸ் ட்ரபிள்) எல்லாமே வந்துருச்சு. பழைய பாக்கிஎல்லாம் ஒழிச்சு, புதுக்குடித்தனத்துக்கு (அதுவரை அப்பன் செத்த 3 வருஷம் வரை எங்கண்ணே குடித்தனம் பண்ணோம்.. ஏதோ காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தோம். ஜஸ்ட் வெயிட்டிங் ஃபார் ஆஃபர்ஸ்) தேவையான சாமான் செட்டெல்லாம் வாங்கி ஒரு பார்ட்டிக்கு 35 ரெண்டு பார்ட்டிகளுக்கு தலா 10 , ஒரு நாய்க்கு அஞ்சு கடன் கொடுத்து ( எல்லாம் ரெண்டு வட்டிக்குத்தேன். அப்ப மார்க்கெட்ல பத்து வட்டி ஓடுது. இப்பல்லாம் நாப்பது வட்டிதான். )



இப்படி வேட்டுவிட்டுட்டு பேங்க் அக்கவுண்ட்ல ஜஸ்ட் 3000 வச்சிருக்கேன். அப்பத்தான் மார்க்கெட் சவுக்குக்கு போனேன். நாலு பேருங்கற பதிவுல வர்ர டாக்டர்(?) பண்டரி, மிலிட்டரி ஓட்டல் மகேந்திரன், ஸ்லேட் வியாபாரி பரமேச்சு , மென்ஸ் ப்யூட்டி பார்லர் வடிவேலுல்லாம் அங்கனதான் டச்.



வடிவேலு பாபா பக்தன்.பாபா எப்படி அவனுக்கு டச் ஆனாரு? அவன் பக்தி எப்படிப்பட்டது? ங்கற மேட்டரை ஒரு பாரால முடிச்சுருவம்.



சாதாரணமா ஐயருங்க, செட்டியாருங்க, நாயுடு வீட்டு பசங்கல்லாம் என்னதான் ட்யூப் லைட்டுங்களா இருந்தாலும் அப்பன் ஆயி சொத்து, பதவி ,ஃபேமிலி பில்டப்புக்காகவாச்சும் கு.பட்சம் இண்டர் , அதிக பட்சம் டிகிரிய எட்டி பிடிச்சுருவாய்ங்க.



கெட்டுக்கீரை வழியா போறதெல்லாம் யாருன்னா ரெட்டி, நாயக்கர் பசங்க. இவிக கெட்டுப்போறதுமில்லாம இன்னபிற சாதி பசங்களையும் ஜமா சேர்த்துக்கிட்டு ஒரு நாலஞ்சு வருசம் ரவுசு விட்டுக்கிட்டிருப்பாய்ங்க. ஃபேமிலி பேக் கிரவுண்டை பொறுத்து ரெட்டி பசங்க சிமெண்ட் டீலரோ, ஹார்ட் வேரோ, பவுல்ட் ரி ஃபார்மோ பார்த்துக்கிட்டு செட்டில் ஆயிருவாய்ங்க. (இதுலயும் கெட்டுப்போன வமிசமா இருந்தா எங்கன குவார்ட்டர் கிடைக்கும்னு அலைஞ்சிகிட்டே கிடக்க வேண்டியதுதான்) நாயக்கர் பசங்க கதை வேற ஏறினா ரயில் இறங்கினா ஜெயில், இதுல நாறிப்போறதெல்லாம் யாருன்னா எஸ்.சி பசங்களும், வடிவேலு சாதி பசங்களும்தான். இவிக முழிச்சிக்கிறதுக்குள்ளாறவே இளமை இறங்கி போயிருக்கும். யதார்த்தம் கழுத்தை நெறிக்கும். இதுலயும் சிலர் ரியலைஸ் ஆகி புலி மேல இருந்து இறங்கி ரொட்டீனுக்கு வந்துர்ராய்ங்கனு வைங்க.



நம்ம வடிவேலு எந்த காலத்துலயுமே புலி மேல சவாரி பண்ணவன் கிடையாது. ஜஸ்ட் பிகில் ரவுடிதான். ( எதிர் க்ரூப் விசிலடிச்சா வீட்டுக்கு ஓடி வந்துர்ர பார்ட்டிக்கு இப்படி ஒரு பேரு). அண்ணன் பண்டரிய பிடிச்சு வார்ட் பாயா சேர்ந்துட்டான். வடிவேலு டென்த் ஃபெயிலாகி டைட் ஃபிட்டிங் பேண்ட், உடம்பை கவ்வி பிடிக்கிற டீ ஷர்ட்டு,முகமெல்லாம் லோக்கல் டால்க்கம் பவுடருமா ஹை ஸ்கூல், இண்டர் குட்டிகளை சைட் அடிச்சிக்கிட்டு கிடப்பான். வாய் உதாருன்னு கேள்விப்பட்டிருப்பிங்கள்ள. அந்த வாய் உதாருக்கு இருப்பிடம்,பிறப்பிடம்,கழிப்பிடம் எல்லாம் வடிவேலுதான்.



அண்ணன் ஜி.ஹெச் லயும் வேலை செய்துக்கிட்டு கடைல வேலையும் செய்திக்கிட்டு கண்ணாலம் கட்டிக்கிட்டு (ரியாலிட்டிய புரிஞ்சிக்கிட்டு) அம்மன் பக்தனா ப்ரயோஜகனா (யூஸ் ஃபுல் ) மாறிட்டான். வடிவேலுக்கு டப்பா டான்ஸ் ஆட ஆரம்பிச்சது. இவனோட சுத்தின ரெட்டி, நாயுடு, நாயக்கர் பசங்கல்லாம் லைஃப்ல செட்டிலாயிட்டாய்ங்க. மேல கீழ காஞ்சு போயி ஒரு வித க்ரைசிஸ்ல சொசைட்டில தனக்கிருந்த இமேஜை மாத்திக்கவோ அல்லது ஊர்ல இருக்கிற கொலைகாரன் எல்லாம் பாபா பக்தனாகி காண்ட்ராக்டர், கவுன்சிலருன்னு செட்டில் ஆயிட்டதாலயோ வடிவேலுவும் பாபா பக்தனாயிட்டான் போல.



அவன் கிட்டே ஒருத்தன் வேலை செய்துட்டிருந்தான். பேரு முத்து. ரெம்ப சின்ஸியர் ஃபெல்லோ. வியாழக்கிழமைன்னா கடை மொத்தத்தயும் க்ளீன் அண்ட் க்ரீன் பண்ணி சாமி படம்லாம் துடைச்சி ,சந்தனம்,குங்குமம் வச்சி. ஊதுவத்தி,கற்பூரம்லாம் தயாரா வச்சி, லோக்கல் ஸ்வீட் ஸ்டால்ல இருந்து 50 கிராம் பூந்தி வாங்கியாந்து வச்சிருப்பான். நம்ம வடிவேலு 6 மணிக்கு இரவல் டூ வீலர்ல வீட்டுக்கு போய் ரெண்டு மணி நேரம் குளிச்சு முழுகி மூஞ்சிக்கி ஃபேர் அண்ட் லவ்லி, மீசைக்கு ஐ லைனர் எல்லாம் போட்டுக்கிட்டு ( வயசு 40) கடைக்கு வருவான் பட படன்னு இருக்கிற ஊதுவத்தியெல்லாம் கொளுத்திட்டு பூந்தி பொட்டலத்தை பிரிச்சு கற்பூர ஹாரத்தி காட்டிருவான். முட்டை கண்ணை திறந்து வச்சிக்கிட்டு ஒரு ரெண்டு நிமிஷம் என்னவோ முணு முணுப்பான் .இது முடிஞ்சதுமே ரெம்ப டயர்டாயிட்ட மாதிரி வெளிய வந்து ஒரு ரெட் வில்ஸ் பத்த வச்சுப்பான். இதான் அவனோட பூஜா விதானம்.



கேரக்டர் வைஸ் பார்த்தா பயங்கர டகுலு.பயங்கர பீலா.ஃபால்ஸ் ப்ரஸ்டிஜ்,ஜொள்ளு பார்ட்டி, செல்ஃபிஷ், ஒரு பீரு கிடைக்குதுன்னா என்ன வேணம்னா செய்வான்

அநியாயத்துக்கும் ரெடி.டாக்டர் பண்டரியோட சிஷ்யன் (எடு பிடி). பண்டரி ஏட்டு, ஏ.எஸ்.ஐ ரேஞ்சுல பண்ற அநியாயத்தை எல்லாம் இவன் கான்ஸ்டபிள் ரேஞ்சுல பண்ணுவான். போலீஸ் நாய்களுக்கு லஞ்சம் கலெக்ட் பண்ணி கொடுக்கிறது இவன் வேலை. காயிதம் பொறுக்கிறவனை பத்தி கூட போலீஸுக்கு போட்டு கொடுத்து லஞ்சம் கலெக்ட் பண்ணுவான், சென்டர்ல அமுக்குவான். அதை வச்சி கான்ஸ்டபிள்களை குளிப்பாட்டுவான்.



(இத்தனை செய்தும் ஒரு நாள் நாங்கதான் அவனை ஸ்டேஷன்ல இருந்து மீட்டுக்கிட்டுவரவேண்டியதாயிருச்சு அது வேற கதை)



காரியம் பெரிசா வீரியம் பெருசான்னா காரியம் தான் பெருசுன்னு பூட்ஸ நக்கவும் தயாராயிருவான். இதான் வடிவேலுவோட செனோரியா.என்ன தான் சாதில வேறயா இருந்தாலும் எல்லாமே அய்யரு புத்தி.



ஆனால் பாபா என்னை தன் பேட்சுல சேர்த்துக்க இந்த வடிவேலுவைத்தான் உபயோகிச்சாரு. அவன் பண்ண அட்டூழியங்களுக்கு அவனுக்கு தண்டனை வழங்க, என் காசை அவன் விழுங்கி என் கருமத்தையெல்லாம் அவன் அனுபவிக்க, என் உயிரை காப்பாத்த பாபா சூப்பர் ஸ்கெட்ச் போட்டாரு. அந்த விவரத்தையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்.

Tuesday, June 8, 2010

டென்டெக்ஸ் மாடர்ன் ஆர்ட்

எனது ஆன்மீகம்
என்னங்கடா இது ஆன்மீகம்னு கேள்விப்பட்டிருக்கமே தவிர என் ஆன்மீகம்,உன் ஆன்மீகம்னு தனியா இருக்குமானு கேள்வி எழலாம். நாரதர் பக்தி சூத்திரத்துல பலவகையான பக்திகளை டிஃபைன் பண்ணிக்கிட்டே வந்து அலுத்து போய் இன்னைக்கு எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை பக்தி முறை உண்டுனு நாரதர் சொல்றாராம். நாரதர்னதுமே கொண்டை, தம்புரா, நாராயண நாராயணல்ல்லாம் ஞா வந்துரும்.அந்த     நினைவுகளையெல்லாம் கழட்டி வச்சிருங்க.

நாரதர்ங்கறவர் உண்மையிலயே வாழ்ந்திருக்கலாம். பலப்பலப்பேருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கலாம். அவருக்கு பிறகு பல நூறு பேர் அந்த பேரை உபயோகிச்சிருக்கலாம். யாரோ விஷயம் தெரிஞ்ச பார்ட்டி  நாரதர்ங்கற பேர்ல எழுதியிருக்கலாம்னு நினைங்க. ஓகே. ஆக பக்தியிலயே அத்தனை ரகம் இருக்கிறச்ச ஆன்மீகத்துலயும்  பல ரகங்கள்  இருக்கலாம்லியா?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆன்மீகம் இருக்கு. அவிகளுக்கும் ஒரு வலைப்பூ இருந்திருந்தா அவிகளும் எழுதியிருப்பாய்ங்க. ஆக்சிடென்டலா எனக்கு இந்த வலைப்பூ  இருக்கிறதால நான் எழுதறேன் தட்ஸால். ஓகே வுடு ஜூட்

என் ஆன்மீக வாழ்க்கை 1986லயே துவங்கிருச்சு. 2000 ஜூலை 31ஆம் தேதியே ஆரம்பிச்சுட்ட இந்த வலைப்பூவுல 2010 மே வரை இந்த சமாசாரத்தை எழுதாம தள்ளிப்போட காரணம் என்ன?

என்னைப்பொருத்த வரை ஆன்மீகம்ங்கறது காலைக்கடன் மாதிரி அதை ரகசியமாதான் வச்சிக்கனும். பின்ன ஏன் பகிரங்க படுத்தறேனு சனம் கேட்கலாம்.. ஜஸ்ட் மேக்சிமம் ஒரு ஐ  நூறு பேருக்கு சொல்றது பகிரங்க படுத்தறதா ஆகாதுனு நினைக்கிறேன்.

இவிகளுக்கு இப்பத்திக்கே  ஓரளவுக்கு என்னை பத்தி, என் வே ஆஃப் திங்கிங் பத்தி என் லைஃபை பத்தி தெரிஞ்சிருக்கும். அதனால என் ஆன்மீக வாழ்க்கையில் நான் மேற்கொண்ட பரிசோதனைகளையும் என் அனுபவங்களையும் அதுக்கு உண்டான தியரியையும் ஒரு தொடர்பதிவா போட்டுப்பார்ப்போம்னு ஒரு ஐடியா.

எழுதனும்னா எத்தனையோ கிடக்கு. ஆனா நான் எழுதி ஆகப்போறது ஒரு ம..ருமில்லை. இதுவாச்சும் ஆன்மீகம். ஒரே ஒரு பார்ட்டி என் எழுத்துக்களை படிச்சு கோதாவுல இறங்கினாலும் போற காலத்துக்கு புண்ணியம்.

சரி விஷயத்துக்கு போயிருவம். மொதல்ல ஆன்மீகம்னா என்ன? மனிதனுக்கு உடல்,மனசு,புத்தி இதையெல்லாம் தாண்டி இன்னொரு டைமன்ஷன் இருக்கு. அதை ஷார்ப்பன் பண்றதுக்காக மனுஷன் பண்ற முயற்சி தான் ஆன்மீகம். அதை ஆன்மா,ஆத்மாங்கறாய்ங்கல்ல அதனால ஆன்மீகம். ஆ.........த்..........மா சாக்கிரதையா சொல்லுங்க.  ஆஸ்மான்னிர போறிங்க. ஆஸ்மாவுக்கு ஹைதராபாத்ல மீன்ல வச்சி ஒரு மருந்து தாராய்ங்கன்னு கூட்டம் அலை மோதுது. இது 20 ஆம் நூற்றாண்டுன்னா
கெட்ட வார்த்தைய கேட்டாப்ல இருக்கு.

எங்கப்பா முருக பக்தர். 40 க்கு மேல அம்மன் பக்தர். (இடையிடைல எந்த சாமிக்கு வேணா ஜே சொல்ற பார்ட்டி அவரு டச் பண்ணாத சாமியில்லை,சாமியாரில்லை  சந்துல சாக்குல பெரியார் புஸ்தவங்களையும் படிப்பாரு). 1967ல பிறந்த எனக்கு 1986 வரை ஆஸ்மாவும் தெரியாது .. ஆத்மாவும் தெரியாது. சின்ன வயசுல எங்கப்பா தன்னோட பர்சனல் பூசை அறைல பூசை  பண்றச்ச புக் ஆயிட்டா பட்டை போட்டு அனுப்புவாரு. வேண்டுதல் அது இதுன்னு ராமாபுரம் , திருத்தணி,திருப்பதிலயெல்லாம் மொட்டை போட்டுவிட்டிருக்காய்ங்க. இதெல்லாம் ஆன்மீகத்துல சேர்த்தியில்லை.

1984ல இண்டர் முதல் வருஷம் பரீட்சை முடிஞ்சு  லீவ்ல இருக்கிறச்ச சரோஜா தேவி புஸ்தவமெல்லாம் சகட்டு மேனிக்கு படிச்சு (  நான் 4 ஆம் கிளாஸ்லயே பருவம் படிச்சவன்)  எக்குதப்பா ஆகிப்போயி அதுலயே மூழ்கிகிடந்த காலம் அது. சரிய்யா 2 வருஷம் 1986 வரை இதே பிழைப்புத்தான். இதற்கிடைல இண்டர் முதல் வருஷத்துல அக்கவுண்ட்ஸ்ல 23 மார்க் வாங்கி  குண்டு. சப்ளிமென்டரி எக்ஸாம்ல அதே  சப்ஜெக்ட்ல  72 வாங்கி அதுர்ஸ். 1986ல டிகிரி முத வருஷம் படிக்கிறேன்.

என்னதான் பல பட்டறையா மேஞ்சாலும் உள்ளுக்குள்ள ஒரு கேள்வி மட்டும் இருந்துக்கிட்டே இருக்கும். ஸ்கலிதத்துக்கு அப்புறம் ஒரு வித ரிலீஃப் அதே சமயத்துல எதையோ இழந்துட்ட உணர்வு எல்லாம் கலந்துகட்டியா பொங்கும்.  சின்ன வயசுல நம்ம கம்பேனியன்ஸ் எல்லாம் லேடீஸ்தான். அவிக கூடவே பூக்கட்டி,அவிக கூடவே தீப்பெட்டி ஒட்டி, அவிக கூடவே நோம்பு தட்டு போட்டு (மணில)  அதுலயும் டீச்சரம்மானு ஒரு பெண் (பாருங்க அசல் பேரு கூட ஞா வரலை. ) ரொம்ப க்ளோஸு.

அந்த லைஃபும், இந்த லைஃபும் பெரிய காண்ட்ராடிக்சன். ஒரு சமயம் தத் என்னடா இந்த இழவெல்லாம்னு தோணும். கொஞ்சம் போல கேப் விழுந்துருச்சுன்னா மனசு வேற எதுலயும் லயிக்காது. இந்த மாதிரி  ஒரு பொசிஷன்ல ஒரு படம் பார்த்தேன். பாடாவதி படம். பக்கா கமர்ஷியல். தெலுங்குல டப் ஆகி வந்தப்ப கல்கில விமர்சனம் கூட போட்டிருந்தாய்ங்க. அதை சிரஞ்சீவி ரசிகருங்க படிச்சா நாக்கை பிடுங்கிக்கிட்டு செத்து போயிருவாய்ங்க.

ஆனா பாருங்க. அதுல ஒரு சீன். ஹீரோவுக்கு அப்பன் பிசி மேன். அம்மா காலி. பார்ட்டி பாசத்துக்கு ஏங்கற கிராக்கி. ஒரு கடைல அம்மா குழந்தைக்கு பால் குடுக்கற பொம்மைய வாங்க நினைப்பான். அதை ஹீரோயின் வாங்கிட்டிருப்பா. உடனே ஹீரோ அந்த கடைய அடிச்சு நொறுக்கிருவாரு.போலீஸ் வந்துரும். ஹீரோ ஹீரோயின் கழுத்துக்கு கத்தி வச்சு கிட்னாப் பண்ணிக்கிட்டு போயிருவார். அவளை ஒரு இடத்துல அடைச்சு வச்சுட்டு கடைக்கு போய் மாத்து புடவை ,ப்ரெட் எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு ஒரு குன்று மேல உட்கார்ந்து தம்மடிச்சிட்டிருப்பார். அப்போ க்ளோசப்ல ஹீரோயினோட கை/ அந்த கைல ஒரு ப்ரெட் பீஸ். இதான் சீன். இது தான் என் லைஃப்ல ஒரு டர்னிங் பாயிண்டை கொடுத்தது. இதை கொஞ்சம் அனலைஸ் பண்ணி பார்த்துருவம்.

தாய் பொம்மை:
எதிர்காலத்துல நான் புவனேஸ்வரி அன்னையோட தத்து சாரி தத்தாரி புத்திரனாக போறேங்கறதுக்கு ஒரு ஹின்ட்
ஹீரோ சிரஞ்சீவி:
இது ஆஞ்சனேயருடைய பெயர்கள்ள ஒன்னு
ஹீரோயின்:
ஒரு பிராமண பெண். நம்ம ஜாதகத்துல தான் குரு உச்சமாச்சே.
சினிமா: ராகு தொடர்புடையது ராகு கேது சம சப்தகத்துல இருப்பாய்ங்க. கேது பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான செவ்வாயோட  சேர்ந்து  நால்ல இருக்காரு.  கேதுங்கறவர் ஞானகாரகன். நாலுன்னா இதயம்.


விட்ட குறை தொட்ட குறைம்பாங்களே அந்த மாதிரி மைண்ட்ல ஏதோ ஃப்ளாஷ் ஆச்சு. அடடா................பெண் குறித்த  பார்வைல  இந்த மாதிரி ஒரு கோணமிருக்கான்னு ஒரு ஊற்று கிளம்புச்சு.ஆனால் செக்ஸுக்கே வழக்கப்பட்டு போன மனசும்,உடம்பும் ஒத்துழைக்கனுமே என்னங்கடா பண்றதுன்னு ரோசிச்சப்ப ஆஞ்சனேயர் ஞா வந்தாரு. வீட்டுக்கு வந்த உடனே பொம்மைகொலு பொம்மைங்க வைக்கிற அட்டை பெட்டிகளை இறக்கி குடாய்ஞ்சு  ஆஞ்சனேயர் பொம்மையை எடுத்தேன். குளிச்சு முழுகி காட் ரெஜ் பீரோல மேலறைய காலி பண்ணி அவரை அங்கே செட்டில் பண்ணிட்டேன். கடைக்கு போய் ரெண்டு ரூபா கொடுத்து ஒரு ஆஞ்சனேயர் டாலர். காலைல ஒரு ஊதுபத்தி ,மாலைல ஒரு ஊதுபத்தி இரு வேளை குளியல். போதும் போதாதுக்கு ஜிம் வேற. அங்கே கேர் டேக்கரா இருந்த கேரளா பார்ட்டி ஒருத்தரு ஒரு வில்லங்கமான வைத்தியத்தை சொல்ல அதையும் செய்து தொலைச்சேன். அந்த வைத்தியத்தை இன்னய பிஞ்சுல பழுத்த பான் பராக் பார்ட்டிங்க செய்துக்கிட்டா பேட்டரி க்ளோஸ்.  ஆட்டம் க்ளோஸ்.

ராம நாமம் ஜெபிக்கப்படற இடத்துல ஆஞ்சனேயர் ஆஜராயிருவாருன்னு எங்கனயோ படிச்சிருந்தேன்.அது ஸ்பார்க் ஆக ராம நாம ஜபம் ஸ்டார்ட். இன்ஸ்பிரேஷனுக்கு ஒரு பக்கம் என்.டி.ஆர் மறுபக்கம் சிரஞ்சீவி கூடவே ரஜினி படங்கள். அந்த சமயம் பார்த்து ரஜினியோட ராகவேந்திரர் வேற ரிலீஸு, நெத்தில பட்டை, கழுத்துல ருத்ராட்ச கொட்டை, கையில பித்தளை பட்டை.  எந்த நேரத்துல வேண்டாத நினைவுகள் வருது? மதியத்துல.. (அப்பல்லாம் கவர்ன்மென்ட்ல காலேஜுல ஒரு வேளைதான் வாத்யாரே..) அந்த நேரத்துல சமையலறைல நுழைஞ்சு சமையல் மேடை,அலமாரி,கியாஸ் ஸ்டவ் எல்லாம் கழுவறது. அஞ்சறை டப்பா முதற்கொண்டு விம் போட்டு கழுவி வைக்கிறது. பரணைல இருக்கிற பித்தளை ,செம்பு குண்டானையெல்லாம் இறக்கி செம்மண்,புளி போட்டு துலக்கிறது. வீட்ல அப்பாவோட லைப்ரரில இருந்த பக்தி பரவசமான புஸ்தவத்தையெல்லாம் படிக்கறதுனு டைவர்ட் பண்ணிக்கிட்டேன்.

இப்படியே ஒரு 3 மாசம் சமாளிச்சேன். ரெண்டு வருஷ ஆட்டம் அதுல நடந்த நட்டம் எல்லாம் பேலன்ஸ் ஆக ஜஸ்ட் 3 மாசம்தான் பிடிச்சது. சின்ன வயசு தானே. இந்த மூணு மாசத்துல ஒரு லெவலுக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமண மகரிஷி மாதிரி புனிதர்களோட சரித்திரங்கள், அவர்களோட உபதேசங்கள்ள எல்லாம் ஓரளவு கமாண்ட் ஏற்பட்டுது.

பிரம்மச்சரியம் செக்ஸுக்கு தயார் படுத்தும்ங்கறது சாதாரண லாஜிக். இதுவும் தெரியும் தான். இருந்தாலும் எவளுக்காகவும், எங்கனயும் வெய்ட் பண்ண வேண்டிய அவசியமில்லாத நிலை, ஒரு பக்கம் செல்ஃப் ரெஸ்பெக்டை காப்பாத்திக்கிட்டு ஃபிகர்களை மடிக்கிற வேலையையும் பார்க்க வேண்டிய இக்கட்டு இதெல்லாம் இல்லாம அவுத்த விட்ட மாடு மாதிரி இருந்த நிலை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தாலும் உடம்பு லேசா தொல்லை கொடுக்க ஆரம்பிச்சது.

இருந்தாலும் புதிய வாழ்க்கையால, தீட்டப்பட்ட புலன்கள், ஆழமான அப்சர்வேஷன், உடலோட செயல்பாடுகள் மேல கமாண்ட் ( கூல் பண்ணவும், ஓவரா கூலாயிட்டா பேலன்ஸ் பண்ணவும் அனேக வித்தைகள் கை வந்தது) ஞா சக்தி இதெல்லாம் சபலத்தை ஏற்படுத்த டக் அஃப் வார் மாதிரி லைஃப் போயிட்டிருந்தது.

ராம நாமம் சொல்லி சொல்லி அதனோட எஃபெக்ட் காரணமாவோ என்னவோ  துண்டு துண்டா புதுக்கவிதை எழுதிக்கிட்ட இருந்த என்னிலிருந்து படக்குனு ஒரு நாள் ஆசுகவி பிறந்தது. ( நினைச்ச மாத்திரத்துல எந்த ப்ரிப்பரேஷனுமில்லாம சொல்ற கவிதை. சந்தம் எதுகை மோனை நிறைஞ்ச கவிதைங்கோவ்) 

அதுக்கு இன்ஸ்பிரேஷன் குற்றால குறவஞ்சில வர்ர வரிகள் ( மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்)  ஒரு நாள் மதியம் ( எல்லாருக்கும் மாலைல மயக்கம் ஏற்படும் நமக்கு மதியம்) கடுப்பாகி மறுபடி கன்னி வேட்டைக்கு புறப்பட்டுர வேண்டியதுதான்னு ஷேவ் பண்ணிக்க புகை கூண்டு மேல கண்ணாடி வச்சுட்டு ப்ரஷ் சோப் எடுக்க அறைக்குள்ளே போனேன். திரும்பி வர்ரச்ச புகை கூண்டு மேல ஒரு குரங்கு. குரங்கு கைல கண்ணாடி.  நம்ம ராசி சிம்மம்ங்கறதால மிருகங்கள் மேல நமக்கு கொஞ்சம் கமாண்ட் உண்டு. மெல்ல பேச்சு வார்த்தை ஆரம்பிச்சேன். "கொடுத்துரு கண்ணு ஷேவ் பண்ணிட்டி கிளம்பனும்"

அந்த குரங்கு கண்ணாடிய தூக்கு பின்னாடி வச்சிக்கிச்சி.அப்பத்தான் ஸ்பார்க் ஆச்சு . அய்யய்யோ இது சாதாரண குரங்கு இல்லே பிரம்மச்சரியத்தை தொடரச்சொல்லி ஆஞ்சனேயரே வந்துருக்காரு.

படக்குனு குளிச்சுப்போட்டு வெளிய கிளம்பிட்டேன் (ஷேவ் பண்ணிக்காமயே) இந்த சம்பவத்துக்கப்புறமும் 3 மாசம் பிரம்மச்சரியத்தை கன்டின்யூ பண்ணேன். இயற்கைன்னு ஒன்னிருக்கில்ல. ஒரு நாள் டென்டெக்ஸ் முழுக்க மாடர்ன் ஆர்ட். தத் என்னங்கடா இதுன்னு .. ஒரு விதி செய்தேன். மாதர் போகம் மாதம் இருமுறை..

இந்த அல்லாடல் அலைபாய்தலுக்கிடைல ஸ்தூல வாழ்க்கைல எத்தனையோ தோல்விகள். எத்தனையோ வெற்றிகள். என் வெற்றிகள் வேறு டைமன்ஷனில் எனக்கு மட்டும்  காட்சியளிக்க, தோல்விகள் ஊருக்கே சர்வதரிசனம். இதெல்லாம் நடந்தது 1986 முதல் 1989 வரை .

 2000 ஆம் வருசம் இறந்து போன ஒரு சாதகர் ( சீக்கர்) குருவாகி தன்னோட க்ரூப் மூலமா எனக்கொரு பீஜாக்ஷரத்தை கொடுக்க செய்து வழி காட்டி வழி நடத்தினது,    அதனால என் லைஃப்ல நடந்த அதிசயங்கள் ஏற்பட்ட இழப்புகள் இதை யெல்லாம் அடுத்த பதிவுல விவரமா பார்ப்போம் . உடு ஜூட்