இது தாய்குலத்துக்குண்டான பதிவில்லை. அல்லாரும் விலகிருங்க (அப்பத்தான் விடாப்பிடியா படிப்பிங்கன்னு ஒரு நப்பாசை. இதுல வில்லங்கமேதுமில்லிங்கக்கா தைரியமா படிக்கலாம். )
ஆண்கள்ள காதலிக்காதவன்னு எவனும் கிடையாது. இவன் ஊர்ல இருக்கிறவன் அக்கா தங்கச்சியையெல்லாம் கலாய்க்கலாம். ரவுசு பண்ணலாம். லவ் பண்ணலாம். ஆனால் இவன் அக்கா தங்கச்சிய மட்டும் எவனும் லவ் பண்ண கூடாது. இதெங்கத்தி நியாயம்?
எனக்கு கூடப்பிறந்த அக்கா, தங்கச்சின்னு யாரும் கிடையாது. எல்லாம் கசின் சிஸ்டர்ஸ் தான். கோவிந்த சித்தப்பா பொண்ணு பாவம் கலர் நல்லாவே இருந்தாலும் சோமாலியா மாதிரி இருக்கும். எவனும் லவ் பண்ணல்ல. சித்தப்பாவே ஒரு ஆர்.எம்.பிக்கு கண்ணாலம் கட்டிக்கொடுத்துட்டாரு. திருப்பதி கேஸு என்னை விட சீனியர் . எனக்கே 43 வயசு. பானுபிரியா மாதிரி கண்ணிருக்கும். கூடவே நிறமும்.
இன்னைய தேதிவரை கண்ணாலமாகலே.
சத்திய வேடுல எங்க மணி சித்தப்பு பொண்ணு மட்டும் ஒரு தலித்தை லவ்வுச்சு. நாமதான் முண்டாசு கட்டாத பாரதியாச்சே .பெருசா வில்லங்கமில்லாம ஸ்ரீ கிருஷ்ணர் மாதிரி சதியெல்லாம் பண்ணி கண்ணாலத்துல கொண்டு முடிச்சுட்டன்.
ஆமா திடீர்னு இந்த செனேரியோ ஏன் வந்ததுன்னு பார்க்கறிங்களா. தெலுங்குல ஒரு சூப்பர் பாட்டு கேட்டேன். (ஏற்கெனவே கேட்டதுதான்.. இப்ப மறு ஒலிபரப்பு). எழுதினவரு வேட்டூரி சுந்தரராமமூர்த்தி உங்க ஊரு பட்டுக்கோட்டை, கண்ணதாசன்,வாலி,வைரமுத்து, இப்ப யாரோ சொத்தக கவி சாரி வித்தக கவின்னு யாரோ வந்திருக்காராமே இவிகளையெல்லாம் ஒரே ஒரு பல்லவில தூக்கி சாப்பிடற பார்ட்டி. சாதில அய்யருதான். ஆனால் பாரதி மாதிரி தப்பிப்போய் அந்த சாதில பிறந்துட்டவரு.
முதல்ல சிச்சுவேஷன். அண்ணன் லாரி ட்ரைவர். தங்கச்சி கண்பார்வையில்லாதவள். ஒரு பார்ட்டி தங்கச்சிய லவ் பண்ற விசயம் அண்ணங்காரனுக்கு தெரிஞ்சுருது.
அண்ணனோட என்கொய்ரில மச்சான் மிஸ்டர் க்ளீனுன்னு தெரியுது. மச்சான் எப்படின்னு தங்கச்சிக்கு ( கண்பார்வையில்லாத ) அண்ணன் வருணிக்கிறார். இப்ப பாட்டுக்கு போயிரலாமா?
"ஏமனி வர்ணிஞ்சனூ ஏமனி வர்ணிஞ்சனூ ஊ......."
என்னன்னு வர்ணிப்பேன்
"நீ கன்ட்டி வெலுகுனு,வெண்ணன்ட்டி மனசுனு வெண்ணெல நவ்வுனு நீ இலவேல்ப்புனு"
உன் கண்ணின் ஒளிய ( அவளுக்கு கண்ணொளி தான் டாப் ப்ரியாரிட்டி அதனால இந்த உவமையை உபயோகிக்கிறார் கவிஞர்) , வெண்ணை மாதிரி மனசை (படக்குனு உருகிரும்ல) வெண்ணிலா போன்ற சிரிப்பை.. (இங்கதான் தலைவரு லேசா சறுக்கறார். கண்ணில்லாத பெண் வெண்ணிலாவை எப்படி கெஸ் பண்ணமுடியும்(எப்படி வர்ணிப்பேன்)
இந்த வரில கடைசி வரியா நீ இல வேல்ப்புனுங்கற வார்த்தை வருது. இதுக்கு எப்படி அர்த்தம் சொல்றது? ஒரு இனம் அடிமைப்பட்டு கிடக்கிறப்ப அந்த இனத்தை தட்டி எழுப்பி போராட வச்சி அடிமைத்தனத்துல மீட்கிற பார்ட்டிய என்னன்னு சொல்லுவோம்? அதான் இந்த வார்த்தைக்கு அர்த்தம். ஒரு பாராவை ஒரு வார்த்தைல அடக்கிட்டாரு பாருங்க. அதான் வேட்டூரி. பாரதிராஜா கூட ஒரு பட கேசட்ல வைரமுத்துவை பத்தி சொல்றச்ச "சொல்லுக்குள் வாக்கியத்தை சுருக்கி வைத்து"ன்னு ஏதோ சொல்வாரு. வைரமுத்து வாக்கியத்தை தான். ஆனால் வேட்டூரி ஒரு பாராவையே. அதனால தான் சொன்னேன் தூக்கி சாப்பிடற பார்ட்டின்னு.
"பைர காலிலாகா சல்லகா உண்ட்டாடு
தெல்லாரி வெலுகுலா வெச்சகா உண்ட்டாடு"
தென்றலை போல ஜில்லுனு இருப்பான்.
காலை வெயில் மாதிரி இதம்மா இருப்பான்
கண்பார்வையில்லாத தங்கச்சிக்குன்னு எழுதற பாட்ல கவிஞர் அவளுக்கு புரியற மொழியையே உபயோகிக்கிறார் பாருங்க.
"தீர்ச்சின பொம்மலா தீரைனவாடு
தீரனி ருணமேதோ தீர்ச்சுக்கோ வச்சாடு"
வரைஞ்சு வச்ச பொம்மை மாதிரி நீட் டா இருப்பான்.(இங்கயும் சறுக்கறாரு)
தீராத கடனெதையோ தீர்க்க வந்திருக்கான்
(ஏமனி)
"ராமுடு காடம்மா நிந்தலு நம்மடு
கிருஷ்ணுடு காடம்மா சவத்துலு உண்டரு
நுவ் பூஜிஞ்சு தேவுள்ள லோபாலு லேனி வாடூ ஊ
நீ பூஜ பலியிஞ்ச்சி நீ தேவுடைனாடு"
ராமன் கிடையாது பழி சொல்லை நம்பமாட்டான்
கிருஷ்ணன் கிடையாது சக்களத்திங்க இருக்க மாட்டாய்ங்க
நீ பூசிக்கிற எந்த சாமியோட குறையும் இல்லாதவன்
பாருங்க சாதில அய்யரா இருந்தாலும் தான் கவிஞ சாதின்னு நிரூபிக்கிறார்.
நீபண்ண பூசையெல்லாம் ஒர்க் அவுட் ஆகி உன் கடவுளா ஆகியிருக்கான்.
கடவுளை பத்தி ஆரம்பிச்சு கடவுளோட தொடர்புடைய பூஜைல முடிக்கிறார் பாருங்க. இது ஒரு டெக்னிக்.
இப்ப நம்ம தமிழ் பாட்ல இந்த மாதிரி செயின் லிங்கெல்லாம் பார்க்கவே முடியாது
அண்டங்காக்கா கொண்டைக்காரின்னு ஆரம்பிச்சா அந்த பாரா முடியறச்ச பூவோ,ஹேர் க்ளிப்போ, ஹேர் டையோ ஏதோ ஒரு இழவு கொண்டைக்கு தொடர்புள்ள ஐட்டம் வரனும். வரலியே.........(வரலியேங்கற வார்த்தைய சிவாஜி ஸ்டைல்ல படிங்க)
(ஏமனி)
"கள்ளு லேவனீ நீக்கு கலத்திங்க்க வலதம்மா
த்தன கண்ட்டிதோ ஜகதி சூபிஞ்ச கலடம்மா"
கண்ணில்லன்னு கலங்காதேம்மா தன் கண்களாலயே உலகத்தை உனக்கு காட்டுவான்.
ஒரு கோணத்துல பார்த்தா பெண்ணிய வாதிகள் தன் பார்வைய தன் மனைவி மேல திணிக்கிற ஆணாதிக்க வாதின்னு சொல்ல வாய்ப்பிருக்கு. ஆனால் கவிதைக்கு பொருள் அகராதில இல்லையே ( நன்றி: வைரமுத்து) வாழ்க்கைலன்னா இருக்கு. கண்ணில்லாத மனைவியோட ஒரு எக்ஸிபிஷனுக்கு போறான்னு வைங்க அவள் அதென்னங்க மணி சத்தம், அதென்னங்க பாட்டு சத்தம்னு கேட்டுக்கிட்டே வரான்னு வைங்க. அப்ப ரொட்டீன் கணவனா இருந்தா என்ன சொல்வான்? குருட்டுப்பொணமே சொம்மா வாம்பான். ஆனால் இந்த பாட்ல வர்ர பார்ட்டி தன் கண்களால உலகத்தை காட்டக்கூடியவனா இருக்கான்.