கலகலக்கும் குடும்ப அமைப்பு
விவாகரத்து நிபந்தனைகளில் தளர்வு, ஹோமோ செக்ஸுவல் லீகல் தான் என்ற கருத்து, திருமணத்துக்கு முந்தி செக்ஸு இம்மாரல் தான் இல்லீகல்னு சொல்ல முடியாது இதெல்லாம் சமீப காலத்துல கோர்ட்டுகள் உதிர்த்த முத்து. குடும்ப அமைப்புங்கறது ஏன் ஏற்பட்டுது? சஞ்சாரிகளா இருந்த மனித கூட்டம் ஸ்திரவாசம் ஏற்படுத்திக்கிட்டப்ப ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி ஏற்பட்டுது. தான் செத்து சுண்ணாம்பு ஆகி சீர்திருத்திய நிலம் தன் வாரிசுக்கே சேரணுங்கற எண்ணத்துல மனிதன் குடும்ப அமைப்பை கண்டு பிடிச்சான். இப்போதைக்கும் இந்தியாவுல 70 சதம் மக்கள் விவசாயத்தை சார்ந்துதான் வாழறாய்ங்க.இதுல எத்தனை சதவீதம் பேருக்கு நிலமிருக்கு? ( 70 சதம் பேருக்கும் நிச்சயமா கடன் உண்டு)
குடும்ப அமைப்புக்கு சொத்து ஒன்னுதானா காரணம்? இல்லே. தன் மரணத்துக்கப்புறமும் தன்னோட சாயல் இந்த பூமி மேல இருக்கனும்னு மனுஷன் உள்ளூற விரும்பறான். அதுக்குத்தான் குடும்பம்.
அது சரி குடும்ப அமைப்பை ஏற்படுத்திக்கிட்ட பிறகு சில மனுசங்களே ஏன் அதை குலைக்கிறாய்ங்க ( நாய் மாதிரியில்லிங்கண்ணா. அவிக அலையல் வேணம்னா அப்படி இருக்கலாம்) நல்ல கேள்வி.
செக்ஸ்ல பிறக்கிறான். மனுஷனுக்கு மூலம் ரெண்டு செக்ஸ் க்ரோமோசோம்தான். செக்ஸை நிர்ணயிக்கிற ஜீன் தான் மனுஷனோட குணங்களையும் நிர்ணயிக்குது . மனுஷ உடலுக்கு மனசுக்கு எல்லாம் மையம் செக்ஸ் தான். மனுஷனுக்கு மறுக்கப்படறதும் செக்ஸுதான்.
குழந்தை மரணங்கள், யங் விடோஸை தவிர்க்க சைல்ட் மேரேஜஸை தடைபண்ணினாங்க. சைல்ட் மேரேஜ் போய் ஓல்டேஜ் மேரேஜ் வந்துருச்சு. திருமணத்துக்கு ஏற்ற வயசு ஆணுக்கு அறுவது, பெண்ணுக்கு அம்பதுங்கற ஸ்லோகன் வர நாள் ரொம்ப தொலைவுல இல்லை.
தனிமை, சகட்டு மேனிக்கு கிளப்பி விடற வெஸ்டர்ன் கல்ச்சர் ,உள்ளடக்கி வச்ச செக்ஸ் எண்ணங்கள்,பாஸ்கலின் விதிப்படி அது வன்முறையா சீறிக்கிளம்பறது கன்ஸ்யூமரிசம், தேவைகளின் பெருக்கம், கமர்ஷியலைசேஷன் (தண்ணிய கூட காசு கொடுத்துத்தானே வாங்கறோம்), போட்டிகள் நிறைஞ்ச உலகம், கியாரண்டி இல்லாத லைஃப், என்னைக்கு புட்டுக்கும்னு தெரியாத வேலை இந்த என்விரான்மென்ட்ல காமம் எரிச்சுப்போட்ட சாம்பல் கூடுகள் தான் மண மேடைக்கு போகுது.
பெண்கள் விஷயத்துலன்னா அவிக ஜஸ்ட் ரிசீவர்தான். என்ன சில உணர்வுகள் பழகிப்போயிரலாம், மங்கி போயிரலாம். ஆனால் ஆண்கள் விஷயத்துல? மடி வத்திப்போன மாடு மாதிரி அடிமாடா கிடக்க வேண்டியதுதான்.
இந்த குடும்ப அமைப்பை குலைக்க அக்கம்பக்கம் மேயற பார்ட்டியெல்லாம் வத்த மாடுங்க. அங்கேன்னா நல்லா கறக்கும், இங்கேன்னா நல்லா கறக்கும்னு நக்கிக்கிட்டு திரியும்.சாப்பாட்டுக்கு ருசிய கொடுக்கிறது நாக்கும் இல்லே உணவும் இல்லே. பசி. அந்த பசியே மந்தமாயிட்ட பிறகு எந்த தீனியா இருந்தாலும் தண்டம்தான். ஆடத்தெரியாதவ கூடம் கோணல் என்ற கதைதான்.
பசியில்லாதவன் தான் அந்த ஓட்டல் இந்த ஓட்டல்னு அலைவான். பசி செத்துப்போனவனுக்கு என்னத்த பரிமாறினாலும் அது சவண்டி சோறுதான். நீங்க என்னதான் மறுத்தாலும் இயற்கை மனிதனுக்கு கொடுத்திருக்கிற முழு முதல் ட்யூட்டி செக்ஸும், இனப்பெருக்கமும்தான். எப்போ இனப்பெருக்கத்துக்கு தடை விதிச்சோமே (இயற்கையென்ன முட்டாளா) அங்கன இருந்தே இந்த பிரச்சினை ஆரம்பிச்சுருச்சு. இதுக்கு முந்தியிருக்கிற பிரச்சினை என்னன்னா சாதீயம் காரணமா குறுகிய வட்டத்துல கண்ணாலம் கட்டிக்கிட்டே போனதுதான்.
அதுக்கு பின்னாடி கொஞ்ச நஞ்சமிருந்த ஆண்மையையும் வெஸ்டர்ன் கல்ச்சர், சக்கை அரிசி சோறு, ஜங்க் ஃபுட், டின் ஃபுட் எல்லாம் சாப்பிட்டாச்சு. ஒரு ஆண் பெண்ணுக்கிடையில் பாசம், நேசம்,காதல்லாம் முக்கியம்னு ஜல்லியடிச்சாலும் இதையெல்லாம் தாண்டி சரீர தர்மம்னு ஒன்னிருக்கு.
பெண் தன் கணவன் கிட்டேருந்து "அந்த" ஒரே ஒரு அம்சத்தை தான் எதிர்பார்க்கிறாள்னு சொல்ல வரலை. அதுக்காக அந்த உயிர் தன்னோட பேசிக்கல் இன்ஸ்டிங்டை தியாகம் பண்ணனும்னு எதிர்பார்க்கிறது அமானுஷம். சரி சம்பந்தா சம்பந்தமில்லாத திடீர்னு இந்த மேட்டரையெல்லாம் எதுக்கு போட்டு தாக்கறிங்கனு கேட்கப்போறிங்க அப்படித்தானே. இதெல்லாத்துக்கும் காரணம் ஒரு மெயில்.
நான் ஏதோ ஒரு பதிவுல கணவனை இழந்த பெண்ணோட/டிவோர்சி/ஆர் செப்பரேட்டட் விமனோட உடலுறவு வச்சிக்கிட்டா அந்த கணவன் எப்படி செத்தானோ அதே மாதிரி சாக வாய்ப்பிருக்கு/ அவனோட நிலை உங்களுக்கு வந்துர வாய்ப்பிருக்குன்னு ஒரு பாயிண்ட் சொல்லியிருந்தேன்.
இது தொடர்பா ஒருத்தர் மெயில் அனுப்பியிருந்தார்
செக்ஸ் ஒர்க்கர்ஸோட விஷயத்துல இந்த விதி எப்படி வேலை செய்யும் அவிக தினசரி ஒரு விடோயரோடவாச்சும் படுக்கைய பகிர்ந்துக்க வேண்டி வருமே?ன்னு கேட்டிருந்தார். நான் சொன்னது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை . அவர் கேட்கிறது செக்ஸ் ஒர்க்கர்ஸை பத்தி.
ஆமா செ.ஒ. ஜாதகம் தான் என்ன? அதுல உள்ள சாதகம்தான் என்னனு பார்த்தா ?
விபசாரம்ங்கறது சட்டத்துக்கு அப்பாற்பட்டதுதான். ஆனால் இங்கே பணம் தரப்படுது. காஞ்சனம்னா பணம். காஞ்சனம் கர்ம விமோச்சனம். நீங்க அவிகளுக்கு காசு கொடுத்ததுமே கர்ம பந்தம் தெறிச்சுரப்போவுது. போலீஸ் வந்தா மூஞ்சி பல்லு கூட தெறிச்சுரலாம் அது வேற கதை. மேலும் ஒரு செக்ஸ் ஒர்க்கர் கிட்டே போறவனை அவ ஜாதகத்துல இருக்கிற லாபஸ்தானம்தான் காட்டுது. ஸோ அவ ஜாதகத்துல 1,2,4,7,8,12 பாவங்களில் உள்ள தோசங்கள் அவனை பாதிக்க வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி. (ஒரு வேளை இவன் தேடி தேடி போறதாவோ அல்லது அட்டாச் மெண்டோட போறதாவோ இருந்தா இவனை அவள் ஜாதகத்துல இருக்கிற 7 ஆமிடம் தான் பாதிக்கும்)
செ.ஒ கதை பத்திரிக்கைங்க நடத்தற அறிவுப்போட்டி மாதிரி தான். ஒருத்தருக்கு மேல சரியான பதில் கொடுத்தா பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்ங்கற மாதிரி அந்த செ.ஒ ஜாதகத்துல உள்ள தோஷம் ( 1,2,4,7,8,12 பாவங்களில் உள்ள) அவளை உபயோகிக்கிறவுங்களுக்கெல்லாம் சமமா பகிர்ந்தளிக்கப்பட்டுரும். ஸோ இறப்பு இருக்காதே தவிர தோசம் வேலை செய்யத்தான் செய்யும்.
அடுத்து அவரோட கேள்வி "ஒரு விதவை/டிவோர்சி/பிரிந்து வாழ்பவரோட ரெண்டு பேரும் மனமொப்பி படுத்துக்கிட்டா தப்பென்ன?" இங்கே பணம் தரப்படுவதுமில்லே. பெறப்படுவதுமில்லே. பை தி பை ஒரு அட்டாச் மெண்டும் ஏற்பட்டுருது.
ஏழாம் இடம் ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃபை காட்டற இடம். அந்த இடத்துல தோஷம் இருந்ததால தான் அவிகளுக்கு அப்படி ஆச்சு ( வைதவ்யம், டைவோர்ஸ் அ பிரிவு) இப்ப நீங்க புதுசா கோர்த்துக்கிட்டா ஒரு ஃப்ரெண்டாவோ, ஒரு காதலனாவோ அவிக ஜாதகத்துல 7 ஆவது இடத்துல இருக்கிற தோசத்தை அனுபவிக்க வேண்டியதுதான்.
நான் என்ன சொல்லவர்ரேன்னா ..ஆங் அதான் அதே தான் வெறுமனே செக்ஸை மட்டும் வேண்டி கண்ணாலம் கட்டிக்கிற பார்ட்டிக்கெல்லாம் நாலஞ்சு வருஷத்துலயே பேட்டரி ஃபணாலாயிருது. அதனால அவிகளுக்கு அந்த நாலஞ்சு வருஷத்துக்கு ஒரு ஏற்பாடா பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கிரனும். அதுவரை என்ன பண்ண?
அதான் கோர்ட்டே சொல்லிருச்சுல்ல..
பி.கு: கோர்ட்டே சொன்னாலும் அடாது செய்தால் படாது படவேண்டி வந்துரும். இயற்கை தன் வேலைய காட்டாம விடாது. இயற்கையின் உந்துதல் இயற்கை. அதுக்காக நடைபாதைலயும், அடுத்தவன் வீட்டு கழிவறைலயும் கழியறது தப்புல்லிங்களா? குறைஞ்ச பட்சம் அரசாவது கட்டண கழிப்பறைகளை ஏற்படுத்தலாமே (சாரி ..இருக்கிற கழிவறைகளுக்கு லைசென்ஸ் கொடுத்து தொலைக்கலாமே)
காஞ்சனம் கர்ம விமோச்சனம்.