Saturday, June 12, 2010

நீங்க சிரிக்க நாங்க அழுவனுமாய்யா?

நீங்க சிரிக்க/ரசிக்க  நாங்க அழுவனுமாய்யா? ங்கறா இந்த  கேள்வியை டிவி ஷோஸ்ல கலந்துக்கிற குழந்தைகள் கூட  கேட்டுக்கிட்டிருந்தாய்ங்க. இந்த கேள்வி ஆந்திர மானில மனித உரிமைகள் கமிட்டி காதுக்கும் போச்சு. ஒடனே கமிட்டி ப்ரசிடென்ட் சுபாஷன் ரெட்டி மேற்படி ஷோக்களை தடை செய்து உத்தரவிட்டிருக்காரு.

இதை அடிப்படையா வச்சு   சமீப காலமா தமிழ் சினிமாக்கள்ள காமெடிங்கற பேர்ல தலித் மக்களை கேவலப்படுத்தறது அதிகமாயிட்டே போற விஷயத்தை ஸ்டேட் ஹ்யூமன் ரைட் கமிட்டி, மத்திய மனித உரிமை கமிஷன் பார்வைக்கு கொண்டு போக வேண்டிய நேரம் இது . இதை கிழிச்சு ஒரு பதிவு போட்டிருக்கேன். யாராச்சும் மகாத்மா இந்த மேட்டர் மேல கான்சன்ட்ரேட் பண்ணனும். சினிமாவாச்சும் எப்பயோ வந்து எப்பயோ டப்பாக்குள்ள போயிருச்சு. ஆனால் அந்த இழவை எல்லாம் தினம் தினம் நம்ம வீட்டு ஹால்ல, நம்ம பவர் கன்சம்ப்ஷன்ல காட்டறாய்ங்க . இதையும் ரசிக்கறோம்னா  இதை விட கேவலம் வேறு என்ன இருக்கு?

மேலும் சரத் குமார் நடிச்ச பஞ்சாயத்து சீன்ஸை நக்கலடிச்சு நிறைய பேரு காமெடி ட்ராக் பண்ணியிருக்காய்ங்க. பஞ்சாயத்து பண்றதா காட்டின பாத்திரம்  நான் ப்ராமின் (நடிச்சதும் நான் ப்ராமின்) . அதை நக்கலடிக்கிற பாத்திரத்தோட சாதி வேறன்னாலும் அதுல நடிக்கிறவன் ப்ராமின்.என்னங்கடா இதுன்னு கேட்டா டெக்னிக்கலா ஒரு பேரை சொல்வாய்ங்க. நாங்களும் ஒரு ஒரு படம் எடுத்து இவிக புத்ரகாமேஷ்டிங்கற பேர்ல  ராஜாவொட  மனைவிகளை கெட்டகாரியம் பண்ணது, ஓப்பியம் சாப்டது, குதிரைக்கறி,மாட்டுக்கறி சாப்டதையெல்லாம் காட்டினா இவிக ஒத்துக்கிடுவாங்களா?


காமெடி ட்ராஜெடிங்கற தலைப்பிலான  மேற்படி பதிவை படிக்க இங்கே அழுத்துங்க

பை தி பை பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்ங்கற தலைப்புல ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சிருக்கேன். இதை படிக்க இங்கே அழுத்துங்க.