Wednesday, June 30, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் : 11

கடந்த அத்யாயத்துல இரண்டு சம்பவங்களை சொல்றேன், சொல்றேனு  சொல்லாமயே முடிச்சுட்டன். அதனால இந்த அத்யாயத்துல சொல்லியே உடறேன்.வருஷம் 1998. நாலு பேருங்கற பதிவுல வர்ர வடிவேலு ஷிர்டி பாபா பத்தி சகட்டு மேனிக்கு பீலா விட நான் தரேண்டா பாபாவுக்கு அப்பாயிண்ட் மென்டுன்னு சவால் விட்டு ஷிர்டி போய் வந்த பிறகு நடந்த சம்பவம் இது. அவனோட  பழைய கடைதான் (சலூன்) என் ஆஃபீஸா இருந்தது.

ஒரு பக்கம் சலூன் சாமானுக இருக்க மறுபக்கம் ஜோசியம் சொன்ன ஒரே பார்ட்டி நான் தானு நினைக்கிறேன். இன்னுமொரு ஹிஸ்டரி ரிக்கார்ட் என்னன்னா கோழிக்கறிகடைல  கூட ஆஃபீஸ் போட்டிருக்கேன் ( ஆனா இது சென்னைல  3மாசத்துக்கொருதரம்  ரெண்டு மூணு நாளைக்குத்தான்)

தமிழ் பட விமர்சினங்கள்ள தவறாம இடம் பெற கூடிய வார்த்தை ஸ்டீரியோ டைப். என் ஆன்மீக பயணமும் ஸ்டீரியோ டைப்தான். ஒவ்வொரு கட்டத்துல ஒவ்வொரு சாமி/ஒவ்வொரு குரு. ஏதோ ஒரு புஸ்தவம் படிச்சோ அ சினிமா பார்த்தோ இன்ஸ்பைர் ஆக வேண்டியது. உடனே மேலதிக விவரங்களை பீராய வேண்டியது, பாட்டு கீட்டு இருந்தால் கேசட் வாங்க வேண்டியது. 

இந்த ப்ராசஸ்ல கிடைச்ச புளங்காகிதம், மயிர் கூச்செறிதல் எல்லாம் சில மாதங்கள் அ வருஷங்கள்ள தேசலாயிர்ரது வழக்கம். சில காலம் கழிச்சு மேற்படி ஞாபங்கள் தேவகுமாரான உயிர்த்தெழுவது வழக்கம். இந்த ஸ்டீரியோல ஒரு அம்சமா ஷிர்டி சாயி மஹத்யம் பட ஆடியோ கேசட் வாங்கினேன். ( படமே பார்த்திருக்கேன். ஆனால் அப்ப எந்த ஃபீலிங்கும் வரலைங்கறது ஆச்சரியம். )

சரி சரி மேட்டருக்கு வரேன். மேற்படி சலூன் கம் ஆஃபீஸ் நான் இருந்தாலும், இல்லன்னாலும் திறந்தே கிடக்கும். அப்படி ஒரு சந்தர்ப்பத்துல வடிவேலு மேற்படி பாபா கேசட்டை சுட்டுட்டான் போல. நானும் சில நாள் தேடி தேடி விட்டுட்டன்.

இத்தனைக்கும் வடிவேலு ஒன்னும் ஷேவிங்குக்க பார்ட்டி வந்தபிறகு அவங்க கிட்டே ஷேவிங் காசு வாங்கி ப்ளேடு வாங்கியார்ர நிலைல இல்ல. இன்னம் சொல்லப்போனால் சொந்த வீடு, நகை நட்டுன்னு வசதியான ஆளுதான்.  இருந்தாலும் அல்பமான வேலையெல்லாம் செய்வான். நானும் அல்பம் தான். ஆனால் நாலு பேருக்கு நல்லது கெட்டது சொல்ற நிலைல இருக்கிறதால " தத் விடு"ன்னு  விட்டுர்ரது வழக்கம்.

ஒரு நாள் என் கேசட் அவன் கடைல பாடிக்கிட்டிருந்தது. நானு ஒன்னம் தெரியாத பப்பா மாதிரி " நானும் வாங்கி வச்சிருந்தேம்பா ஏதோ ஒரு நாதாரி தூக்கினு பூட்டுக்கீது.. உன்னுதை கொடுப்பா ஒரு ராத்திரி பாபா கிட்ட பேசிட்டு கொடுத்துர்ரன்"ன்னேன். அப்பயாச்சும் ரியலைஸ் ஆகி "சாமி இது உன்னுத்தான்"னு சொல்லியிருக்கலாம்.சொல்லலை. நானும் சின்சியரா வாங்கிட்டு போய் மறு நாள் ரிட்டர் பண்ணிட்டன். அப்பயும் ஏதாச்சும் சினிமா காட்டி " தா சாமி இது உந்துதான் சாமீ.. அது கூட தெரியல உனக்கு ..ஹும் எல்லாம் வசதிதான் காரணம்னு " டயலாக் விட்டு சமாளிச்சிருக்கலாம். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இங்கே ஒரு தத்துவம். கெட்டவனை கெ(ப)ட்டுப்போக செய்யனும்னா அந்த கெட்டவனுக்கு நல்லதையே பண்ணிக்கிட்டிருக்கனும். அப்ப ஆண்டவன் கெட்டவனுக்கு கெட்டவனாயிர்ராரு

வடிவேலுவுக்கும் அவன் அண்ணனுக்கும் எப்பவும் வெட்டுப்பழி குத்துப்பழி. இவன் டீன் ஏஜ் போதைல திரிஞ்சிக்கிட்டிருந்தப்பயே அவங்கண்ணன் பண்டரியோட (போலி டாக்டர்+ லேப் டெக்னிஷியன்) கைய கால பிடிச்சு ஜி.ஹெச் ல வார்ட் பாயா சேர்ந்துட்டான். வீட்டை கட்டிக்கிட்டான். செட்டிலாயிட்டான். வட்டிக்கு திருப்பற ரேஞ்சுக்கு போயிட்டான். பார்க்க பஞ்சை பராரி மாதிரி விபூதி பட்டையும், பெரிய குங்கும பொட்டுமா வைட் அண்ட் வைட்ல  இருப்பான்.

நம்மாளுக்கு போறாது. டீன் ஏஜ் மயக்கத்துலருந்து மீண்டு வந்து கடைய தூக்கி நிறுத்தி கண்ணாலம் கட்டி ரெண்டை பெத்து போடறதுக்குள்ள பெண்டாட்டி இவன் வெத்துவேட்டுனு முடிவுபண்ணியாச்சு.இவனும் வெள்ளைக்கொடிய காட்டி சரண்டர் ஆஃப் இண்டியா. வீட்ல மதுரைதான்.

இந்த மாதிரி அண்ணன் தம்பிக்குள்ள எவனாச்சும் ஒருத்தன் டம்மி பீஸாயிருந்து,  அவன் பெண்டாட்டிக்கு பிரமணை ( சட்டிப்பானைகள் உருளாம இருக்க ஓலைலயோ, தாம்பு கயிற்று புரிகள்ளயோ ரிங் சைஸுக்கு சுத்தியிருப்பாங்க)  தூக்கிட்டு அலையற பார்ட்டியா இருந்தா அண்ணன் தம்பிக்குள்ள நிச்சயம் தகராறு வரும்.வந்துகிட்டே இருக்கும்.

இதுமாதிரி சந்தர்ப்பத்துல நம்மாளு நாலு பேர் பதிவுல வர்ர பண்டரி + பெரிய மனுசனையெல்லாம் கூட்டிக்கிட்டு போய் எதிர்வீட்டு திண்ணைல உட்கார வச்சுட்டான். பஞ்சாயத்துக்கு அண்ணனை கூப்டாங்க.அவனும்  வந்தான்.  நம்மாளுக்கு
பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்குதான் . இருந்தாலும் பஞ்சாயத்து பெரியமன்சன் எல்லாம் நம்மாளுதானேங்கற நெனப்புல அண்ணன் காரன் மூக்குல கப்புனு குத்திட்டான். குப்புனு ரத்தம் வந்திருச்சு. அவன் போட்டிருந்த வெள்ளை  கை பனியன், வேட்டி மொத்தம் ரத்தத்துல நனைஞ்சுருச்சு.

பஞ்சாயத்து பெரிய மன்சனெல்லாம் காணாம போயிட்டாய்ங்க. அண்ணன் காரன் நீட்டா ஜி.ஹெச் போய் அட்மிட் ஆகி போலீஸ்ல கேஸ் கொடுத்துட்டான். போலீஸ் ஸ்டேஷனே என் பாக்கெட்லன்னு சிலும்பின வடிவேலுவை ஸ்டேஷன்ல உட்கார வச்சுட்டாய்ங்க. அப்புறம் நானும் இன்னும் ரெண்டு ஃப்ரெண்ட்ஸும் போய் எக்ஸ்  பார்ட்டியையும், சப் இன்ஸ்பெக்டரையும் கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வந்தோம்.


இதென்ன அம்புலிமாமா கதை மாதிரி இருக்குன்னு நினைப்பிங்க. ஆனால் உண்மையில நடந்தது ராசா.  வடிவேலுக்காச்சும் அரை நாள் காவல். இன்னொரு பார்ட்டிக்கு?

1999 கையில இருந்த லட்சத்து ரெண்டாயிரமும் டம்ப் ஆகி மறுபடி ப்ரெட் ஹண்டர் அவதாரம் எடுத்த புதுசு. ஒவ்வொரு ஊர்லயும் பத்திரிக்கை வச்சு பொழப்ப நடத்தற க்ரூப் ஒன்னு இருக்கும். பத்திரிக்கை பதிவாளர் (www.rni.nic.in) வலைதளத்துல போய் பார்த்திங்கன்னா உங்க ஊர்லருந்து எத்தனை பத்திரிக்கை ரெஜிஸ்டர் ஆயிருக்குனு தெரிஞ்சிக்கலாம். ஆனால் இதுல வெளிவர்ரதென்னவோ அஞ்சுலருந்து பத்துக்குள்ள மேஜர் பத்திரிக்கைகள் மட்டும் தான். மற்றதெல்லாம் பதிவாகியிருக்கும். சில பல மொள்ளமாரி வேலைகளோட ரென்யூவல் ஆயிட்டிருக்கும். இவிக அரசு துறைகள்ள குழையடிச்சு விளம்பரம் வாங்கி விளம்பரம் கிடைச்சப்ப மட்டும் பத்து காப்பி போட்டு கணக்கு பண்ணி வயித்த கழுவிக்கிட்டிருப்பாய்ங்க .அல்லது ஓசி பஸ் பாஸோட திருப்திபடுவாய்ங்க.

(ரென்யூவலுக்கு இவிக பண்ற டுபாகூர் வேலைய சொல்லனும்னா தனிப்பதிவே போடனும்)

இந்த மாதிரி டுபுக்கு க்ரூப் மூலமா ஒரு பார்ட்டி இன்ட் ரட்யூஸ் ஆனான். ஷிர்டி பாபா பத்தின பாட்டுகளை  (ஆடியோ) வெளியிட போறதாவும்.. பாட்டு எழுதிக்கொடுக்கும்படியும் கேட்டான்.

நாமதான் ஆசுகவியாச்சே. உடனடி லாட்டரி மாதிரி அவன் கூப்ட லாட்ஜுக்கு போய் அவன் கேட்ட மாதிரியே பரபரனு (சுந்தர தெலுங்குங்கண்ணா) எழுதிக்கொடுத்தேன். உத்தமா பத்தினி மாதிரி அதை ஜெராக்ஸ் எடுக்கச்சொல்லி ஜெராக்ஸ் பிரதில கை.எ வேற போட்டுக்கொடுத்தான்.

மொத்தமா என்ன எழுதினேனு ஞா இல்லை. ஆனா ஒரே ஒரு வரி மட்டும் நல்லா ஞா இருக்கு.

"செட்டவாடனு கானயா செடின வாடனு நேனய்யா"

கெட்டவன் இல்லே கெட்டுப்போனவன்..னு அர்த்தம். பை பர்த் கெட்டவன்னா திருத்தவே முடியாது. கெட்டுப்போனவன்னா டபுள் மீனிங் வரும்.கெட்டுப்போனவனு ஒரு அர்த்தம். நலிஞ்சு போனவனு இன்னொர் அர்த்தம். நடுவுல கெட்டுப்போனவன் திருந்த வாய்ப்பிருக்கும். இப்படி நிறைய விளையாடி எழுதிக்கொடுத்தேன்.

அந்த நாதாரி என்ன பண்ணுச்சுன்னா நான் இல்லாதப்ப வீட்டுக்கு வந்து தான் கை.எ போட்டுக்கொடுத்த ஜெராக்ஸ் பிரதியை என் மனைவிய வாயடிச்சு பிக் அப் பண்ணிக்கிட்டு போயிருச்சு. அந்த நாள் முதல் இந்த நாள் வரை பிச்சை எடுத்துக்கிட்டே இருக்கு. உசுரோட இருக்கா இல்லையானு கூட தெரியாது. தெரிஞ்ச முகமா  யார்  தெரிஞ்சாலும் " இஃப் யு டோண்ட் மைண்ட் ஒரு டென் ருப்பீஸ் இருக்குமா?" கேஸு.

அப்பாறமா தான் தெரிஞ்சது அந்த பன்னாடையோட வைஃப் என் கிளாஸ் மெட்டுன்னு . இப்ப சொல்லுங்க பாபா பவர் ஃபுல்லா இல்லையா? பாபா பவரை புரிஞ்சிக்கனும்னா பா பா ப்ளாக் ஷீப் ஹேவ் யு எனி உல்லுனு ரைம்ஸ் பாடற ரேஞ்சுக்கு நீங்க குழந்தை தன்மையோட இருக்கனும். அப்பத்தான் அவரோட பவரை உணர முடியும்.

நேத்து  பதிவுல நான் குறிப்பிட்ட நித்யானந்த பாபா கூட சொல்வாராம் "குருவை சுதந்திரமா செயல்பட விடனும். அதுக்கு சம்பூரண சரணாகதிதான் மார்கம்"