Sunday, June 27, 2010

ஆளவந்தான் விமரிசனம்

வறுமை தரும் பல பரிசுகளில் ஒன்று தமிழ் ,தெலுங்கு சினிமாக்களில் இருந்து பாதுகாப்பு. அதே சமயம் ஆ.வ மாதிரி படங்களை மிஸ் பண்ணுவது சோகம் தான். சோகம் என்றது ஆ.வ ஏதோ ஆதர்ச சினிமா என்ற நோக்கில் அல்ல. சிந்தனையை, நமக்குள்ளான கிரியேட்டிவிட்டியை கிளறிவிடக்கூடிய சரக்கு உள்ள சினிமா என்ற எண்ணத்தில் தான்.

"தொங்கலு  பட்ட வாரானிக்கி  குக்கலு மொரிகினட்டு"ன்னு ஒரு சொலவடை உண்டு. திருட்டு போன வாரம் கழிச்சு நாய் குரைச்ச மாதிரின்னு இதுக்கு அர்த்தம். ஆ.வ வந்து பல காலமான பிறகு இந்த விமர்சனத்தை எழுதறதும் அப்படித்தான்னு நான் சொல்ல மாட்டேன். ஏன்னா ஆளவந்தான் எல்லாம் டெக்னிக்கலா பார்த்தாலும், சப்ஜெக்ட் வைஸ் பார்த்தாலும் இன்னம் 20 வருசம் தாங்க கூடிய சினிமா. அதை எப்பவாச்சும் விமர்சிக்கலாம். இதனால விமர்சிக்கிறவுகளுக்கும் பலன் உண்டு. அதை படிக்கிறவுகளுக்கும் லாபம் உண்டு.

கதைன்னு பார்த்தா தேவர் கேட்ட மாதிரி,பாக்யராஜ் சொன்ன மாதிரி ரெண்டு வரில சொல்லலாம். ஒரு சிக் ஃபேமிலியோட இம்பாக்ட் இரட்டைகுழந்தைங்க மேல எப்படி இருக்கும்? ரெட்டைல ஒன்னு கமாண்டோ, ஒன்னு சைக்கோ.

கமல் மேல எனக்கு எப்பவுமே ஒரு சிம்பதி உண்டு.( சேம் போல்ஸ் அட்ராக்ட்ஸ் நெவர்ங்கற மாதிரி சின்ன வயசுல கமல்னா கெட்ட வார்த்தை மாதிரி. இருந்தாலும் அப்பவும் அவர் மேல சிம்பதி உண்டு).

எனக்கு கலைப்படங்களும் பிடிக்காது. விலைப்படங்களும் பிடிக்காது. பேர்லல் மூவிம்பாங்களே அந்த மாதிரி ரகத்துக்குத்தான் என் ஓட்டு. நீ எந்த படம் எடுத்தாலும் அதை மக்கள் தான் பார்க்கனும். மக்களுக்காகத்தான் எடுத்தாகனும்.  உன் சினிமால வர்ர பாத்திரங்களை, பிரச்சினைகளை சாமானியன் தன் வாழ்க்கைல சந்திச்சுருக்கனும்.

மக்களுக்காகத்தான் சினிமா.. சோடா புட்டிக் கண்ணாடிகளுக்காகவோ ஆ.வி, கல்கி மாதிரி பிராமண பத்திரிக்கைகளுக்காகவோ அல்ல. சினிமாங்கறது தலை வாழை இலைல பரிமாறப்பட்ட விருந்து மாதிரி இருக்கனு. அதுல ஏ டு ஜெட் இருக்கனும்.
கொஞ்சம் போல நரகல் கூட ஒரு மூலைல வைக்கலாம். தப்பில்லை.

கமல் மேல சிம்பதிக்கு காரணம் ரெண்டு. ஒன்னு அவர் புதுசா எதையும் கூட்ட தேவையில்லை. (விமரிசனத்துக்கு காரணம் :  அவர் எதையும் குறைச்சுக்கவே இல்லை. கூட்டிக்கிட்டே போறார்) . காரணம் நெம்பர் 2: சினிமால வந்த பணத்தை சினிமாவுலயே இன்வெஸ்ட் பண்றார்.

ஆளவந்தான் பார்த்ததுல எனக்கு ஸ்ட் ரைக் ஆன சமாசாரங்கள்:

1.சப்ஜெக்டே சாமானியனுக்கு அன்னியமான சப்ஜெக்டுங்கறதால நேட்டிவிட்டி மேல கான்சட்ரேட் பண்ணியிருக்கனும். ரசிகனுக்கு ஐடென்டிட்டி ப்ராப்ளம் வராம எட்க்க பார்த்திருக்கனும். ஆனா ஆ.வ படத்துல வர்ர அப்பா, வைப்பாட்டி கேரக்டரெல்லாம் இங்கிலீஷ் சினிமாலருந்து இறங்கி வந்தமாதிரி இருக்காய்ங்க. கதை தமிழ் நாட்ல தான் நடக்குதா? கு.ப இந்தியாலதான் நடக்குதா? ங்கற சந்தேகம் வந்துருது.

2.கமல் கொஞ்சம் போல தியாகம் பண்ணி கமேண்டோ கேரக்டரை அர்ஜுன் மாதிரி ஆளுக்கு விட்டுக்கொடுத்திருந்தா  நந்து கேரக்டர் சரித்திரத்துல நின்னுருக்கும்.

3.ஃப்ளாஷ் பேக் காட்சி அவ்ளோ நீளமா? பேசாம +2 ஏஜ்ல நடக்கறாப்ல வச்சு ஏதாச்சும் தகிடுதத்தம் பண்ணி கமலை ஒல்லியா, மீசையில்லாம காட்டியிருக்கலாம்.

4.என்னதான் கிராஃபிக்ஸுன்னாலும்  இப்படியா அள்ளித்தெளிக்கிறது. சந்தனம் சாஸ்தியாயிருச்சுன்னு  எங்கயோ பூசிக்கிட்ட மாதிரி.

5.கமல் கிட்டே எனக்கு பிடிக்காத விஷயம் ஒன்னு இருக்கு.  சண்டை காட்சில கூட "அட்டு"வேலை காட்டிருவாரு. இந்த படத்துல ரெண்டு கேரக்டர்லயுமே காட்டியிருக்காரு.

6.நந்துவோட மேனரிசம்ஸ் சூப்பர். பாப் பாடகி, போதை மருந்து சமாசாரம், பாடகி கொலைல்லாம் தேவையில்லாத மேட்டர். 

நந்து கமலோட சுய சார்பில்லாத தன்மைய, மனக்குழப்பத்தை  காட்ட அவரு பலர் கிட்டே கலந்தாலோசிக்கிற மாதிரியான சீன் தூள். க்ளைமேக்ஸ்ல சாகடிக்காம குணமாகி வெளிய வராப்ல வச்சிருக்கலாம்.  மத்தபடி  நல்ல படமா, சூப்பர் ஹிட் படமா வந்திருக்க வேண்டிய ஆளவந்தான் அதிகப்படி கிராஃபிக்ஸ், அதிகப்படி பச்சை குத்தல், அதிகப்படி கார்ட்டூன் குழப்பங்கள், ட்ரை ஃப்ளாஷ் பேக், நேட்டிவிட்டி இன்மை, கமலின் இரண்டு கேரக்டருமே பெரிய வித்யாசமற்று இருப்பதால் யாருக்கும் திருப்தி தராத அறிவு ஜீவி படமா போயிருச்சுன்னு நினைக்கிறேன்.