அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு இந்த பலான பதிவல்லாது
பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 10
நித்யானந்தா தி க்ரேட்
என்ற இரண்டு தனிப்பதிவுகளும் போட்டிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை தெரிவிங்கண்ணா.
(அக்கா,தங்கச்சி,தம்பி, மாமூ, மச்சானுங்களுக்கும் இதே அப்பீல்தான்.. அடி தூள்!)
மனித வாழ்விலான பிரச்சினைகள் குறித்த ஹோல் சேல் அனலைஸ் இந்த பதிவுலும் தொடருது. கடந்த பதிவுல நமக்கு வர்ர பிரச்சினைகளுக்கு நம்ம உணவு முறையும் ஒரு காரணமா இருக்கிறதை குறிப்பிட்டிருந்தேன். அவ்ளோ மேட்டர் படிச்சும் " ஹ.. சொம்மா விடாதிங்க முருகேசன்!" ங்கற பார்ட்டிகளும் இருப்பாய்ங்க.
உதாரணத்துக்கு ஒரு சின்ன மேட்டரை பாருங்க.ஒரு ஃப்ரெண்டு. அலுமினியம் ஃபேப்ரிக் ஒர்க் பண்றவன். காண்ட் ராக்டர் ரேஞ்சுதான். இவன் வேலை கத்துக்கும்போது ஃபேப்ரிக் ஒர்க்னாலே சனத்துக்கு என்னனு தெரியாது. பெருசா படிப்பெல்லாம் கிடையாது. வேலை தெரியும் அவ்ளதான். கஷ்டப்படற குடும்பத்துல பிறந்து கை வேலை காரணமா முன்னுக்கு வந்தான். ஏதோ கல்யாணமாச்சு. ரெண்டு பசங்க. மொதல்ல ஃபீல்ட் ஒர்க். இவனும் வேலையாட்களோட சேர்ந்து வேலை செய்துக்கிட்டிருந்தான். போக போக வெறுமனே மேஸ்திரி மாதிரி கார்வார் பண்றதுதான்.
ஃபீல்ட் ஒர்க்ல இருக்கும்போது பயங்கர பசி இருக்கும். நானெல்லாம் சித்தூர் வேலூர் ரூட்ல ப்ரைவேட் பஸ் கம்பெனில செக்கிங்கா வேலை செய்த காலத்துல ரெண்டு டிஃபன், ரெண்டு லஞ்ச், ரெண்டு டின்னர் அடிப்பேன். சித்தூர் பஸ் ஸ்டாண்ட்ல சனத்தை " வேலூர் வா வேலூர் வான்னு கத்தி கூப்டு ஏத்தி ரெட்டிகுண்டா செக் போஸ்ட் தாண்டறதுக்குள்ள காலைல சாப்ட டிஃபன் பஸ்மமாகி வேலூர் போனதும் ரெண்டு இட்லி ஒரு வடையாச்சும் சாப்பிடனும்பானு தோணிரும். வேலூர்ல சாப்ட டிஃபன் மதியம் 12 க்கெல்லாம் பஸ்மம்.
(ஆனால் இப்படி அல்லாடி, தின்னு, செத்து சுண்ணாம்பானாலும் ராத்திரில தூக்கம் வந்து தொலையாது, இதனால அஜீரணத்துல ஆரம்பிச்சு அது வீசிங்ல கொண்டு விட்டுட்டது வேற கதை. அதை எப்படி க்யூர் பண்ணிக்கிட்டேங்கறது உபகதை)
நிற்க ஏழ்மைல, கடும் உழைப்புக்கு நடுவுல நல்லா தின்னுக்கிட்டிருந்த ஃப்ரெண்டு வெறுமனே கார்வார் வேலைய பார்க்கிறச்ச தீனிய குறைச்சிருக்கனும். குறைக்கலை. இதனால பிள்ளையார் மாதிரி தொந்தி, கோவில் சிலை மாதிரி பிட்டம், வேத்து வழிய, மூச்சு வாங்க அவன் திங்கறதை பார்த்தாலே பரிதாபமா இருக்கும். மதியம் அளவுக்கு மீறி தின்னா தூக்கம் வரும். ராத்திரில அளவுக்கு மீறி தின்னா ஒன்னு தூக்கம் வராது, இல்லாட்டி பாதி ராத்திரி முழிப்பு தட்டும். இதெல்லாம் கேஸ் கேஸுக்கு மாறும்.
சிலருக்கு சாப்பிட்டதும் வயிற்றுப்பகுதில அதிகரிக்கிற ரத்த ஓட்டம் இன்னம் கொஞ்சம் டவுன் ஆகி வீரியம் புரளும். உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்ங்கற தொடர்புல இது பத்தி விவரமா சொல்லியிருக்கன். இருந்தாலும் அதனோட சுருக்கம் இங்கே.
மனித உடல்ல இரண்டு மண்டலங்கள் இருக்கு. ஒன்னு சீரண மண்டலம்,அடுத்தது . இனப்பெருக்க மண்டலம் . ஒன்னு வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்யாது. உதாரணமா சாப்பிடறச்ச காமக்கிளர்ச்சி இருக்காது. காமக்கிளர்ச்சியோட சாப்டா பசி மெட்டாஷ். சாப்பிட்டதும் சீரண மண்டலம் தன் வேலைய துவங்கிரும் . அந்த நேரத்துல கசமுசால இறங்கினா "அந்த" வேலைலயும் சூடு இருக்காது. சீரண கிரியையும் நின்னுரும். இரைப்பைல இருக்கிற உணவு அழுக ஆரம்பிக்கும். கேஸ் ஃபார்ம் ஆகும். இது தொடர்ந்தா அல்சர்.
அதனால ஒன்னு "கசமுசா"வையெல்லாம் முடிச்சுட்டு அப்பாறமா தின்னுங்க. இல்லாட்டி தின்னு 6 மணி நேரம் கழிச்சு "அதுல"இறங்குங்க ஓகே. இல்லை. அமாவாசை இருட்டில பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழியேங்கற மாதிரி மதியம் 2 மணிக்கு தீனி . 2.15க்கு ட்ரிபுள் எக்ஸுன்னா நாறிர்ரும். அதுவும் 2.30க்கு ட்ரெயினை பிடிக்க வேண்டியிருந்தா செமை நாறல் தான். டிக்கெட்டை மறந்துர்ரது, பணம் பிக்பாக்கெட் ஆயிர்ரது, போர்ட்டர் கிட்ட சண்டையெல்லாம் இந்த மாதிரி சந்தர்ப்பத்துலதான் நடக்கும்.
சரி உபகதைக்கு வந்துருவம்.
நான் சொன்ன ஃப்ரெண்டு மதியத்துல தூங்க ஆரம்பிச்சான். மதியம் தூங்கி எழுந்தா பசிக்கிறாப்ல ஒரு ஃபீலிங் இருக்கும். அதை நம்பி சாயந்திரம் வேற வெளுத்து வாங்க ஆரம்பிச்சான். மதியத்துல இவன் வரவே மாட்டானு தெரிஞ்சுக்கிட்டு வேலைக்காரங்க வேலை காட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்க. திருட்டு, வேலைல சுணக்கம், பார்ட்டிங்களை டைரக்டா டீல் பண்ணிக்கிறதுன்னு போச்சு .இவன் கீழே வேலை செய்தவன்ல நாலு பேர் தனியே போய் கடை போட இவன் வியாபாரம் நொண்ட ஆரம்பிச்சுருச்சு.
நம்ம ஃப்ரெண்டு லேசா முழிச்சுக்கிட்டு மிச்சம் மீதி இருக்கிற வேலைக்காரங்களோட இன்டராக்ட் ஆகறேனு அவிகளோட தண்ணி போட ஆரம்பிச்சான். லேட் நைட் வீட்டுக்கு போறது. காலைல ஹேங் ஓவர். அதை கண்ட்ரோல் பண்ண பெட் காஃபி மாதிரி ஒரு மூணு அவுன்ஸ் போட ஆரம்பிச்சான்.
ஷாட் கட் பண்ணா இப்ப வேலை வெட்டி வியாபாரம்லாம் போய் , புதையல் எடுக்கிற க்ரூப்போட சேர்ந்து சுத்திக்கிட்டிருக்கான். இத்தனைக்கும் காரணம் என்ன?
அவனுக்கேத்த, அவன் வேலைக்கேத்த உணவு முறைக்கு மாறாததுதான்.
சிலர் வீட்ல ஒரு முறம் எண்ணெய் ஊத்தி சமைப்பாய்ங்க. அந்த வீட்டு ஆம்பளைகளுக்கு தண்ணி குடிக்கவும், மூச்சா போகவுமே நேரம் சரியா இருக்கும். இந்த மாதிரி பார்ட்டிங்க தண்ணி கிடைக்காம தாகத்துல தவிக்கறச்ச எதையாவது நின்னு நிதானமா ரோசிக்க முடியுமா?
பிரச்சினையை கூலா டீல் பண்ண முடியுமா? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்
சிலர் வீட்ல தாளிக்கறச்ச மானாவாரியா கடுகு போட்டுருவாய்ங்க. இதனால பி.பி வருது. இடுப்பு வலி, முதுகு வலி வருது. இப்படி ஆயிரம் சொல்ல முடியும். என்னதான் கச்சா முச்சானு தின்னுக்கிட்டிருந்தாலும் ஒரு பீரியட் வரை உடம்பு சமாளிக்குது. கடைக்கால பொருத்து 20 லருந்து 30 வயசு வரை சமாளிக்குது. அதுக்கப்புறம்?
செரிப்பு திறன் மங்க ஆரம்பிச்சுரும். உணவு செரிக்காட்டி வாயு கோளாறு வளரும். சரியா சாப்பிட முடியாது. அகாலத்துல பசிக்கும். இவன் பசிக்குதே, ரெண்டு வடை சாப்பிடலாம்னு கடைக்கு போவான். அந்த நேரம்தான் ஆஃபீசர் சர்ப்ரைஸ் விசிட் அடிப்பாரு, கண்ட நேரத்துல திங்கறவனுக்கு கண்ட நேரத்துல வயித்த கலக்கும் . இதைத்தான் வேலை வர நேரத்துல ...ல வர்ரதும்பாய்ங்க.
இப்போ ஒரு மவுஸ் வாங்கறோம். அது இத்தனை க்ளிக்ஸ் வரை வேலை செய்யும்னு தான் போட்டிருப்பான். அதுமாதிரி ஒவ்வொரு உடம்புக்கும் இத்தனை ஆயிரம் இட்லி, இத்தனை ஆயிரம் வடைனு டார்கெட் இருக்கும். அதை நீங்க பத்து வருசத்துலயும் முடிக்கலாம். 60 வருசத்துலயும் முடிக்கலாம். அது உங்க வசதி.
சில சனம் பண்ற இன்னொரு தப்பு என்னண்ணா டயட்ல இருக்கேனு காக்காசோறு திம்பாய்ங்க. இது தேவையில்லாத வேலை. 5 கிலோ அரைக்கிற கிரைண்டர்ல 100 கிராம் போட்டு அரைச்சா என்ன ஆகும்? எல்லாம் கிரைண்டர்லயே ஒட்டிக்கிட்டு போயிரும். இப்படி சீன் போடறத விட வாரத்துல ஒரு நாள் ரெண்டு நாள் உண்ணாவிரதம் ட்ரை பண்ணலாம்.
ஒன்னு கிரைண்டர் கெப்பாசிட்டிக்கு அரை. இல்லையா கழுவி கவுத்துரு. (சர்க்கரை பார்ட்டிங்களுக்கும், அல்சர் கிராக்கிகளுக்கும் இது பொருந்தாது)
இன்னொரு உதாரணம். வீட்ல சோறு வடிக்கிற பாத்திரங்களை பார்த்திருப்பிங்க.(இப்ப அல்லாத்துக்கும் குக்கர்தான். ஒரு காலத்துலனு சேர்த்து படிங்க ) ரொட்டீனா சமைக்க அரை கிலோ வடிக்க ஒரு பாத்திரம், விசேஷத்துல வடிக்க 5 கிலோ வடிக்கிற பாத்திரம்னு வச்சிருப்பாய்ங்க. அரை கிலோ வடிக்கிற பாத்திரத்துல 5 கிலோ அரிசி போட்டா என்னாகும்? வேகாது.
அஞ்சு கிலோ பாத்திரத்துல அரை கிலோ வடிச்சா என்னாகும்? தண்ணி வேஸ்டு. ஃப்யூயல் வேஸ்டு.
குக்கர்,பாத்திரம்லாம் உயிரில்லாத வஸ்துக்கள். ஆனால் மனுஷன் உயிருள்ள வஸ்து. தன் தலைல மூளைய தாங்கற ஜீவன். இவன் வயித்துல நடக்கிற ஒவ்வொரு கிரியையும் மூளையையும் பாதிக்குது. பிரச்சினைகளை க்ரியேட் பண்றதும் மூளைதான். அதுகளை தீர்க்க வேண்டியதும் மூளைதான். அதனாலதான் பிரச்சினைகளும் தீர்வுகளும்ங்கற தலைப்புல உணவு முறை காரணங்கள் ரெண்டாவது அத்யாயத்தையும் கடந்து போகுது..
வள்ளுவர் யாகாவாராயினும் நா காக்கன்னாரு. இது டூ இன் ஒன். பேச்சு விஷயத்துல மட்டுமில்லை தீனி விஷயத்துலயும் சாக்கிரதையா இருக்கனும். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் (லைன் மேன்) இவனும் வறுமைலருந்து பிக் அப் ஆனவன் தான். தீனிப்பைத்தியம். பானி பூரி, மிளகாய் பஜ்ஜி, ஆப்பம்னு வெளுத்துக்கட்டுவான். அந்த ஆப்பத்துல ஊர்பட்ட சோடா மாவ போட்டு வச்சிருப்பாய்ங்க. அப்பத்தானே அது நல்லா உப்பும். கண்டதையும் தின்னுட்டு (வயசு 30 ப்ளஸ் தான்) பேசிட்டே இருக்கிறச்ச காலை பிரிச்சு நீளமா வாயு வெளியேத்துவான். கண்டபடி திட்டுவேன். இன்னைக்கு பாவம் பார்ட்டிக்கு டி.பி ப்ளஸ் ஷுகர். டி.பி வந்தவன் நன்னா சாப்பிடனும். ஷுகர் வந்தவன் வாயை வயித்தை கட்டனும். இது ரெண்டுல எதை செய்தாலும் அடுத்த வியாதி அதிகமாயிரும்.தேவையா இதெல்லாம்.
வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதனோட சுருக்கம்:
ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவும் தான் வாயும் ஆசன துவாரமும். வாய்ல உணவுக்குழாய்ல , இரைப்பைல ,சிறுகுடல்,பெருங்குடல்ல ஏற்படற அசைவுகள் இன உறுப்புலயும் அதிர்வுகளை ஏற்படுத்துது. செக்ஸ் கிடைக்காதவங்க தான் தீனி பண்டாரங்களா மாற வாய்ப்பு அதிகம்.சோகம் என்னன்னா மனிதனோட ஆதியாரம்ப கோரிக்கையான கொலை, தற்கொலையும் இந்த அமித தீனில நிறைவேறுது. என்.வி சாப்பிடறவங்களுக்கு கொல்லும் இச்சையும் நிறைவேறுது. அமித தீனியால தற்கொலை இச்சையும் நிறைவேறுது.
ஏற்கெனவே இன்னொரு பதிவுல சொன்ன மாதிரி மனிதனோட ப்ரக்ஞை குழந்தையா இருக்கிறச்ச ஆசன துவாரத்து மேலயே இருக்கும். (இதுக்கு சற்று மேலேதான் மூலாதார சக்கரம் இருக்கு) இதனாலதான் குழந்தைகள் கழிவறைல அதிக நேரம் எடுத்துக்கும். நாளடைவுல இந்த ப்ரக்ஞை இன உறுப்புக்கு மாறனும்(உயரனும்). மாறுது. ஆனால் பெற்றோரும் சமுதாயமும் இதை கடுமையா எதிர்க்கிறதால அந்த அடலசன்டோட மனம்/ப்ரக்ஞை மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிருது. ( சைக்கலஜில வர்ர வொக்காபிலரி)
குண்டலி மூலாதாரத்துல இருக்கிறச்ச மனித மனம் மாற்றங்களை எதிர்க்கும். சுய நலம் அதிகமா இருக்கும். பிடிவாதம் இருக்கும். பொசசிவ் நெஸ் இருக்கும்.( மன்சங்களுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு இதைவிட அடிஷ்னலா என்ன காரணம் இருக்கு சொல்லுங்க)
குண்டலி மேனோக்கி பயணிக்கனும். (உடலியல் ரீதில சொன்னா ஆசனத்துல இருந்து இன உறுப்புக்கு மாறனும்) அப்படி மாறும்போது மேற்சொன்ன குணாம்சங்கள் எல்லாம் குறையும்.
குண்டலி மூலாதாரத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. ஸ்வாதிஷ்டானத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. மனுஷன் அதுகள டேக்கிள் பண்ற ஸ்டைல்ஸே டிஃபரண்டா இருக்கும்.
அந்தந்த கால கட்டத்துல மனுஷனோட மைண்ட் செட்/ கான்ஷியஸ் மெச்சூர் ஆகிட்டே வரனும். இந்த ப்ராசஸ்ல செக்சுக்கு முக்கிய இடமிருக்கு. முதல்ல ஆசனப்பருவம். அதற்கடுத்து இன உறுப்புக்கு டைவர்ட் ஆகனும். அப்படி ஆயிட்டா பிரச்சினை இல்லை. சரக்கு தீர மாயை விலக வயித்துப்பாட்ட பார்ப்பான். ( மணி பூரகம்) ஓரளவு தன்னிறைவு எய்திட்டா அவனோட கான்ஷியஸ் இதயத்துக்கு வரும்
( அனாஹதம்). அதாவது சக மனிதன்பால் ஈவு இரக்கம்லாம் தோணும்.
நீங்க இதுல எந்த ஸ்டேஜுல இருக்கிங்கனு பாருங்க. அதை பொருத்து உங்க பிரச்சினைகள் மாறிரும். பிரச்சினைகளை டேக்கிள் பண்ற ஸ்டைலும் மாறிரும்.
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டும்பாங்க. (ரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதில அதிகமாகி மூளைக்கு சப்ளை குறையறதால) . இந்த மாதிரி நேரத்துல வசதி வாய்ப்பை பொறுத்து குட்டித்தூக்கம் போடுங்க. இல்லாட்டி கண்ண மூடிக்கிட்டு ஒரு 15 நிமிஷம் இருங்க. அதை விட்டு செக் எழுதவோ, ட்ரைவ் பண்ணவோ இறங்கினா ஏறு மாறா நடக்கும்.
இவ்ள எதுக்கு உங்க வயிறு நிறைஞ்சிருக்கா இல்லையா? நீங்க என்ன தின்னிங்கங்கறத பொருத்து ( அது சீரணம் கூட ஆகவேணா) அநியாங்கள் மீதான உங்க எதிர் வினை, கருணை, பாசம் ,பரிவு, எதிரியுடனான டீலிங் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிட்டி எல்லாமே மாறிரும்.
வயிறு நிறைஞ்சிருக்கிறப்ப எதிரியை பத்தி திங்க் பண்ணுங்க. ஓஞ்சு போறான் நாயின்னு தோனும். பசில இருக்கிறச்ச உதவி கேட்டு கடிதம் எழுதின நண்பனை பத்தியோ விதவை தங்கச்சிய பத்தியோ திங்க் பண்ணுங்க நல்ல முடிவா எடுப்பிங்க.
கன்ஸ்யூமர்ஸ் சர்ப்லஸ்னு ஒரு கான்செப்ட் இருக்கு. அதாவது நீங்க ஒரு பொருளை பார்க்கறிங்க. வாங்கனும் போல இருக்கு. விலை விசாரிக்கிறிங்க.வாங்கறிங்க. விலை நூறு ரூபானு வைங்க. உங்க மனசுல பரவால்லப்பா நூத்தம்பது ரூபா கூட கொடுக்கலாம்னு தோணினா ரூ 150 மைனஸ் 100 = ரூ.50 தான் கன்ஸ்யூமர் சர்ப்லஸ். நீங்க வியாபாரியா இருந்தா நீங்க விக்கிற பொருள்ள வாங்கறவனுக்கு கன்ஸ்யூமர் சர்ப்லஸ் கிடைக்கனும். நீங்க சர்வீஸ் ப்ரொவைடரா இருந்தா உங்க சர்வீஸ்ல உங்க க்ளையண்டுக்கு க.சர்ப்லஸ் கிடைக்கனும். இப்படி ஒரு தொழில் அமைஞ்சு, இப்படி ஒரு கான்செப்டோட நீங்க வியாபாரம் பண்ண முடிஞ்சா, தொழில் நடத்த முடிஞ்சா நீங்க கல்லையே தின்னாலும் செரிக்கும், கள்ளே குடிச்சாலும் லிவர் வீங்காது.
அதை விட்டுட்டு ஏமாந்தவன் தலைல மிளகாய் அரைக்கிறது, ஏமாந்தவன் தொடைல கயிறு திரிக்கிறதுன்னு இருந்தா நீங்க சாப்பிடறது அமுதமாவே இருந்தாலும் விஷமாத்தான் வேலை செய்யும். கஞ்சி குடிச்சாலும் செரிக்காது.
ஆயிரம் ஹெல்த் ரூல் ஃபாலோ பண்ணாலும் ரோகம் தான் வரும். கர்ணன் செஞ்சோற்று கடன் தீர்த்த கதை தெரியுமில்லை..
ஒர்ரீஸ் அ கவலைகள் பத்தி முதல் அத்யாயத்துலயே சொல்லியிருக்கன் தலைப்பு கலைஞர் குடு்ம்ப பைத்தியம். கவலைகளோட திங்கற அறுசுவை நிறைஞ்ச ஆரோக்கிய கரமான உணவும் பிரச்சினைகளைதான் கொண்டு வரும். ஒன்னு தின்னு, ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு கவலைப்படுங்க. இல்லாட்டி கவலைப்பட்டு முடிச்சுட்டு தின்னுங்க. தின்னுக்கிட்டே கவலைப்படாதிங்க. கவலையோட திங்காதிங்க.
நீரின்றி அமையாது உலகு மட்டுமில்லை உங்க பாடியும் தான். நம்ம பாடில 90% வாட்டர் கன்டென்ட். இதனோட கெமிக்கல் காம்பினேசன் கடல் நீரை ஒத்தது. கடல் நீர் மேல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ் அதிகம். சந்திரன் மனோகாரகன். உங்க மனோ சம்பந்தப்பட்ட அப் அண்ட் டவுன்ஸுக்கு காரணம் இதுதான். அதனால சுத்தமான தண்ணீர் நிறைய சாப்பிடுங்க. சாப்பாட்டுக்கு இடைல சாப்பிடாதிங்க. தாகம் எடுக்கறப்பல்லாம் பாட்டில் பாட்டிலா உள்ள தள்ளுங்க.
உணவுக்கு ருசியை தர்ரது பசி. பசி மந்தப்பட்டுப்போனா மசாலாவையோ, ஆடு,கோழ்யையோ, ஸ்னாக்ஸையோ நாடாதிங்க. உண்ணாவிரதம் இருங்க. நம்ம பசியெல்லாம் பழக்க தோஷத்துல வர்ர பசி. உண்மையான பசியை நாம சந்திக்கனும்னா 12 நாளாச்சும் உண்ணாம இருக்கனும். இதுக்கு தேவை ஜஸ்ட் மனோபலம் தான். காட்டடியா 12 நாள்ள ஆரம்பிக்காதிங்க. மொதல்ல ஒரு நாள் ரெண்டு நாள்னு ட்ரை பண்ணுங்க. உ.வி ஆரம்பிக்கிறதுக்கு முந்தி எனிமா எடுத்துக்கங்க. முக்கியமா உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க. (உங்க பாடி தாங்குமான்னு)
தவறான உணவு முறையால கவனம் சிதறடிக்கும் நோய்கள் வரும். இது பிரச்சினைகளை ஐடென்டிஃபை பண்ண கூட முடியாத நிலையை ஏற்படுத்திரும். பிரச்சினைகள் முத்திப்போக வாய்ப்பிருக்கு. முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் நோய்கள் கூட வரலாம். இதுவும் பிரச்சினைகளை கொண்டு வந்து குவிக்கும் அம்சம்.
மேற்படி வியாதிகள் இருக்கையில் நீங்க தேடிப்போற் தீர்வுகளே பிரச்சினைகளுக்கு ஸ்டீராயிட் (ஊக்க மருந்து) போல ராட்சச பலத்தை கொடுத்துரும். டேக் கேர்!
அடுத்த பதிவுல பிரச்சினை ஏற்படுத்தும் என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம். உடுங்க ஜூட் !