Tuesday, June 8, 2010

டென்டெக்ஸ் மாடர்ன் ஆர்ட்

எனது ஆன்மீகம்
என்னங்கடா இது ஆன்மீகம்னு கேள்விப்பட்டிருக்கமே தவிர என் ஆன்மீகம்,உன் ஆன்மீகம்னு தனியா இருக்குமானு கேள்வி எழலாம். நாரதர் பக்தி சூத்திரத்துல பலவகையான பக்திகளை டிஃபைன் பண்ணிக்கிட்டே வந்து அலுத்து போய் இன்னைக்கு எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை பக்தி முறை உண்டுனு நாரதர் சொல்றாராம். நாரதர்னதுமே கொண்டை, தம்புரா, நாராயண நாராயணல்ல்லாம் ஞா வந்துரும்.அந்த     நினைவுகளையெல்லாம் கழட்டி வச்சிருங்க.

நாரதர்ங்கறவர் உண்மையிலயே வாழ்ந்திருக்கலாம். பலப்பலப்பேருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கலாம். அவருக்கு பிறகு பல நூறு பேர் அந்த பேரை உபயோகிச்சிருக்கலாம். யாரோ விஷயம் தெரிஞ்ச பார்ட்டி  நாரதர்ங்கற பேர்ல எழுதியிருக்கலாம்னு நினைங்க. ஓகே. ஆக பக்தியிலயே அத்தனை ரகம் இருக்கிறச்ச ஆன்மீகத்துலயும்  பல ரகங்கள்  இருக்கலாம்லியா?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆன்மீகம் இருக்கு. அவிகளுக்கும் ஒரு வலைப்பூ இருந்திருந்தா அவிகளும் எழுதியிருப்பாய்ங்க. ஆக்சிடென்டலா எனக்கு இந்த வலைப்பூ  இருக்கிறதால நான் எழுதறேன் தட்ஸால். ஓகே வுடு ஜூட்

என் ஆன்மீக வாழ்க்கை 1986லயே துவங்கிருச்சு. 2000 ஜூலை 31ஆம் தேதியே ஆரம்பிச்சுட்ட இந்த வலைப்பூவுல 2010 மே வரை இந்த சமாசாரத்தை எழுதாம தள்ளிப்போட காரணம் என்ன?

என்னைப்பொருத்த வரை ஆன்மீகம்ங்கறது காலைக்கடன் மாதிரி அதை ரகசியமாதான் வச்சிக்கனும். பின்ன ஏன் பகிரங்க படுத்தறேனு சனம் கேட்கலாம்.. ஜஸ்ட் மேக்சிமம் ஒரு ஐ  நூறு பேருக்கு சொல்றது பகிரங்க படுத்தறதா ஆகாதுனு நினைக்கிறேன்.

இவிகளுக்கு இப்பத்திக்கே  ஓரளவுக்கு என்னை பத்தி, என் வே ஆஃப் திங்கிங் பத்தி என் லைஃபை பத்தி தெரிஞ்சிருக்கும். அதனால என் ஆன்மீக வாழ்க்கையில் நான் மேற்கொண்ட பரிசோதனைகளையும் என் அனுபவங்களையும் அதுக்கு உண்டான தியரியையும் ஒரு தொடர்பதிவா போட்டுப்பார்ப்போம்னு ஒரு ஐடியா.

எழுதனும்னா எத்தனையோ கிடக்கு. ஆனா நான் எழுதி ஆகப்போறது ஒரு ம..ருமில்லை. இதுவாச்சும் ஆன்மீகம். ஒரே ஒரு பார்ட்டி என் எழுத்துக்களை படிச்சு கோதாவுல இறங்கினாலும் போற காலத்துக்கு புண்ணியம்.

சரி விஷயத்துக்கு போயிருவம். மொதல்ல ஆன்மீகம்னா என்ன? மனிதனுக்கு உடல்,மனசு,புத்தி இதையெல்லாம் தாண்டி இன்னொரு டைமன்ஷன் இருக்கு. அதை ஷார்ப்பன் பண்றதுக்காக மனுஷன் பண்ற முயற்சி தான் ஆன்மீகம். அதை ஆன்மா,ஆத்மாங்கறாய்ங்கல்ல அதனால ஆன்மீகம். ஆ.........த்..........மா சாக்கிரதையா சொல்லுங்க.  ஆஸ்மான்னிர போறிங்க. ஆஸ்மாவுக்கு ஹைதராபாத்ல மீன்ல வச்சி ஒரு மருந்து தாராய்ங்கன்னு கூட்டம் அலை மோதுது. இது 20 ஆம் நூற்றாண்டுன்னா
கெட்ட வார்த்தைய கேட்டாப்ல இருக்கு.

எங்கப்பா முருக பக்தர். 40 க்கு மேல அம்மன் பக்தர். (இடையிடைல எந்த சாமிக்கு வேணா ஜே சொல்ற பார்ட்டி அவரு டச் பண்ணாத சாமியில்லை,சாமியாரில்லை  சந்துல சாக்குல பெரியார் புஸ்தவங்களையும் படிப்பாரு). 1967ல பிறந்த எனக்கு 1986 வரை ஆஸ்மாவும் தெரியாது .. ஆத்மாவும் தெரியாது. சின்ன வயசுல எங்கப்பா தன்னோட பர்சனல் பூசை அறைல பூசை  பண்றச்ச புக் ஆயிட்டா பட்டை போட்டு அனுப்புவாரு. வேண்டுதல் அது இதுன்னு ராமாபுரம் , திருத்தணி,திருப்பதிலயெல்லாம் மொட்டை போட்டுவிட்டிருக்காய்ங்க. இதெல்லாம் ஆன்மீகத்துல சேர்த்தியில்லை.

1984ல இண்டர் முதல் வருஷம் பரீட்சை முடிஞ்சு  லீவ்ல இருக்கிறச்ச சரோஜா தேவி புஸ்தவமெல்லாம் சகட்டு மேனிக்கு படிச்சு (  நான் 4 ஆம் கிளாஸ்லயே பருவம் படிச்சவன்)  எக்குதப்பா ஆகிப்போயி அதுலயே மூழ்கிகிடந்த காலம் அது. சரிய்யா 2 வருஷம் 1986 வரை இதே பிழைப்புத்தான். இதற்கிடைல இண்டர் முதல் வருஷத்துல அக்கவுண்ட்ஸ்ல 23 மார்க் வாங்கி  குண்டு. சப்ளிமென்டரி எக்ஸாம்ல அதே  சப்ஜெக்ட்ல  72 வாங்கி அதுர்ஸ். 1986ல டிகிரி முத வருஷம் படிக்கிறேன்.

என்னதான் பல பட்டறையா மேஞ்சாலும் உள்ளுக்குள்ள ஒரு கேள்வி மட்டும் இருந்துக்கிட்டே இருக்கும். ஸ்கலிதத்துக்கு அப்புறம் ஒரு வித ரிலீஃப் அதே சமயத்துல எதையோ இழந்துட்ட உணர்வு எல்லாம் கலந்துகட்டியா பொங்கும்.  சின்ன வயசுல நம்ம கம்பேனியன்ஸ் எல்லாம் லேடீஸ்தான். அவிக கூடவே பூக்கட்டி,அவிக கூடவே தீப்பெட்டி ஒட்டி, அவிக கூடவே நோம்பு தட்டு போட்டு (மணில)  அதுலயும் டீச்சரம்மானு ஒரு பெண் (பாருங்க அசல் பேரு கூட ஞா வரலை. ) ரொம்ப க்ளோஸு.

அந்த லைஃபும், இந்த லைஃபும் பெரிய காண்ட்ராடிக்சன். ஒரு சமயம் தத் என்னடா இந்த இழவெல்லாம்னு தோணும். கொஞ்சம் போல கேப் விழுந்துருச்சுன்னா மனசு வேற எதுலயும் லயிக்காது. இந்த மாதிரி  ஒரு பொசிஷன்ல ஒரு படம் பார்த்தேன். பாடாவதி படம். பக்கா கமர்ஷியல். தெலுங்குல டப் ஆகி வந்தப்ப கல்கில விமர்சனம் கூட போட்டிருந்தாய்ங்க. அதை சிரஞ்சீவி ரசிகருங்க படிச்சா நாக்கை பிடுங்கிக்கிட்டு செத்து போயிருவாய்ங்க.

ஆனா பாருங்க. அதுல ஒரு சீன். ஹீரோவுக்கு அப்பன் பிசி மேன். அம்மா காலி. பார்ட்டி பாசத்துக்கு ஏங்கற கிராக்கி. ஒரு கடைல அம்மா குழந்தைக்கு பால் குடுக்கற பொம்மைய வாங்க நினைப்பான். அதை ஹீரோயின் வாங்கிட்டிருப்பா. உடனே ஹீரோ அந்த கடைய அடிச்சு நொறுக்கிருவாரு.போலீஸ் வந்துரும். ஹீரோ ஹீரோயின் கழுத்துக்கு கத்தி வச்சு கிட்னாப் பண்ணிக்கிட்டு போயிருவார். அவளை ஒரு இடத்துல அடைச்சு வச்சுட்டு கடைக்கு போய் மாத்து புடவை ,ப்ரெட் எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு ஒரு குன்று மேல உட்கார்ந்து தம்மடிச்சிட்டிருப்பார். அப்போ க்ளோசப்ல ஹீரோயினோட கை/ அந்த கைல ஒரு ப்ரெட் பீஸ். இதான் சீன். இது தான் என் லைஃப்ல ஒரு டர்னிங் பாயிண்டை கொடுத்தது. இதை கொஞ்சம் அனலைஸ் பண்ணி பார்த்துருவம்.

தாய் பொம்மை:
எதிர்காலத்துல நான் புவனேஸ்வரி அன்னையோட தத்து சாரி தத்தாரி புத்திரனாக போறேங்கறதுக்கு ஒரு ஹின்ட்
ஹீரோ சிரஞ்சீவி:
இது ஆஞ்சனேயருடைய பெயர்கள்ள ஒன்னு
ஹீரோயின்:
ஒரு பிராமண பெண். நம்ம ஜாதகத்துல தான் குரு உச்சமாச்சே.
சினிமா: ராகு தொடர்புடையது ராகு கேது சம சப்தகத்துல இருப்பாய்ங்க. கேது பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான செவ்வாயோட  சேர்ந்து  நால்ல இருக்காரு.  கேதுங்கறவர் ஞானகாரகன். நாலுன்னா இதயம்.


விட்ட குறை தொட்ட குறைம்பாங்களே அந்த மாதிரி மைண்ட்ல ஏதோ ஃப்ளாஷ் ஆச்சு. அடடா................பெண் குறித்த  பார்வைல  இந்த மாதிரி ஒரு கோணமிருக்கான்னு ஒரு ஊற்று கிளம்புச்சு.ஆனால் செக்ஸுக்கே வழக்கப்பட்டு போன மனசும்,உடம்பும் ஒத்துழைக்கனுமே என்னங்கடா பண்றதுன்னு ரோசிச்சப்ப ஆஞ்சனேயர் ஞா வந்தாரு. வீட்டுக்கு வந்த உடனே பொம்மைகொலு பொம்மைங்க வைக்கிற அட்டை பெட்டிகளை இறக்கி குடாய்ஞ்சு  ஆஞ்சனேயர் பொம்மையை எடுத்தேன். குளிச்சு முழுகி காட் ரெஜ் பீரோல மேலறைய காலி பண்ணி அவரை அங்கே செட்டில் பண்ணிட்டேன். கடைக்கு போய் ரெண்டு ரூபா கொடுத்து ஒரு ஆஞ்சனேயர் டாலர். காலைல ஒரு ஊதுபத்தி ,மாலைல ஒரு ஊதுபத்தி இரு வேளை குளியல். போதும் போதாதுக்கு ஜிம் வேற. அங்கே கேர் டேக்கரா இருந்த கேரளா பார்ட்டி ஒருத்தரு ஒரு வில்லங்கமான வைத்தியத்தை சொல்ல அதையும் செய்து தொலைச்சேன். அந்த வைத்தியத்தை இன்னய பிஞ்சுல பழுத்த பான் பராக் பார்ட்டிங்க செய்துக்கிட்டா பேட்டரி க்ளோஸ்.  ஆட்டம் க்ளோஸ்.

ராம நாமம் ஜெபிக்கப்படற இடத்துல ஆஞ்சனேயர் ஆஜராயிருவாருன்னு எங்கனயோ படிச்சிருந்தேன்.அது ஸ்பார்க் ஆக ராம நாம ஜபம் ஸ்டார்ட். இன்ஸ்பிரேஷனுக்கு ஒரு பக்கம் என்.டி.ஆர் மறுபக்கம் சிரஞ்சீவி கூடவே ரஜினி படங்கள். அந்த சமயம் பார்த்து ரஜினியோட ராகவேந்திரர் வேற ரிலீஸு, நெத்தில பட்டை, கழுத்துல ருத்ராட்ச கொட்டை, கையில பித்தளை பட்டை.  எந்த நேரத்துல வேண்டாத நினைவுகள் வருது? மதியத்துல.. (அப்பல்லாம் கவர்ன்மென்ட்ல காலேஜுல ஒரு வேளைதான் வாத்யாரே..) அந்த நேரத்துல சமையலறைல நுழைஞ்சு சமையல் மேடை,அலமாரி,கியாஸ் ஸ்டவ் எல்லாம் கழுவறது. அஞ்சறை டப்பா முதற்கொண்டு விம் போட்டு கழுவி வைக்கிறது. பரணைல இருக்கிற பித்தளை ,செம்பு குண்டானையெல்லாம் இறக்கி செம்மண்,புளி போட்டு துலக்கிறது. வீட்ல அப்பாவோட லைப்ரரில இருந்த பக்தி பரவசமான புஸ்தவத்தையெல்லாம் படிக்கறதுனு டைவர்ட் பண்ணிக்கிட்டேன்.

இப்படியே ஒரு 3 மாசம் சமாளிச்சேன். ரெண்டு வருஷ ஆட்டம் அதுல நடந்த நட்டம் எல்லாம் பேலன்ஸ் ஆக ஜஸ்ட் 3 மாசம்தான் பிடிச்சது. சின்ன வயசு தானே. இந்த மூணு மாசத்துல ஒரு லெவலுக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமண மகரிஷி மாதிரி புனிதர்களோட சரித்திரங்கள், அவர்களோட உபதேசங்கள்ள எல்லாம் ஓரளவு கமாண்ட் ஏற்பட்டுது.

பிரம்மச்சரியம் செக்ஸுக்கு தயார் படுத்தும்ங்கறது சாதாரண லாஜிக். இதுவும் தெரியும் தான். இருந்தாலும் எவளுக்காகவும், எங்கனயும் வெய்ட் பண்ண வேண்டிய அவசியமில்லாத நிலை, ஒரு பக்கம் செல்ஃப் ரெஸ்பெக்டை காப்பாத்திக்கிட்டு ஃபிகர்களை மடிக்கிற வேலையையும் பார்க்க வேண்டிய இக்கட்டு இதெல்லாம் இல்லாம அவுத்த விட்ட மாடு மாதிரி இருந்த நிலை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தாலும் உடம்பு லேசா தொல்லை கொடுக்க ஆரம்பிச்சது.

இருந்தாலும் புதிய வாழ்க்கையால, தீட்டப்பட்ட புலன்கள், ஆழமான அப்சர்வேஷன், உடலோட செயல்பாடுகள் மேல கமாண்ட் ( கூல் பண்ணவும், ஓவரா கூலாயிட்டா பேலன்ஸ் பண்ணவும் அனேக வித்தைகள் கை வந்தது) ஞா சக்தி இதெல்லாம் சபலத்தை ஏற்படுத்த டக் அஃப் வார் மாதிரி லைஃப் போயிட்டிருந்தது.

ராம நாமம் சொல்லி சொல்லி அதனோட எஃபெக்ட் காரணமாவோ என்னவோ  துண்டு துண்டா புதுக்கவிதை எழுதிக்கிட்ட இருந்த என்னிலிருந்து படக்குனு ஒரு நாள் ஆசுகவி பிறந்தது. ( நினைச்ச மாத்திரத்துல எந்த ப்ரிப்பரேஷனுமில்லாம சொல்ற கவிதை. சந்தம் எதுகை மோனை நிறைஞ்ச கவிதைங்கோவ்) 

அதுக்கு இன்ஸ்பிரேஷன் குற்றால குறவஞ்சில வர்ர வரிகள் ( மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்)  ஒரு நாள் மதியம் ( எல்லாருக்கும் மாலைல மயக்கம் ஏற்படும் நமக்கு மதியம்) கடுப்பாகி மறுபடி கன்னி வேட்டைக்கு புறப்பட்டுர வேண்டியதுதான்னு ஷேவ் பண்ணிக்க புகை கூண்டு மேல கண்ணாடி வச்சுட்டு ப்ரஷ் சோப் எடுக்க அறைக்குள்ளே போனேன். திரும்பி வர்ரச்ச புகை கூண்டு மேல ஒரு குரங்கு. குரங்கு கைல கண்ணாடி.  நம்ம ராசி சிம்மம்ங்கறதால மிருகங்கள் மேல நமக்கு கொஞ்சம் கமாண்ட் உண்டு. மெல்ல பேச்சு வார்த்தை ஆரம்பிச்சேன். "கொடுத்துரு கண்ணு ஷேவ் பண்ணிட்டி கிளம்பனும்"

அந்த குரங்கு கண்ணாடிய தூக்கு பின்னாடி வச்சிக்கிச்சி.அப்பத்தான் ஸ்பார்க் ஆச்சு . அய்யய்யோ இது சாதாரண குரங்கு இல்லே பிரம்மச்சரியத்தை தொடரச்சொல்லி ஆஞ்சனேயரே வந்துருக்காரு.

படக்குனு குளிச்சுப்போட்டு வெளிய கிளம்பிட்டேன் (ஷேவ் பண்ணிக்காமயே) இந்த சம்பவத்துக்கப்புறமும் 3 மாசம் பிரம்மச்சரியத்தை கன்டின்யூ பண்ணேன். இயற்கைன்னு ஒன்னிருக்கில்ல. ஒரு நாள் டென்டெக்ஸ் முழுக்க மாடர்ன் ஆர்ட். தத் என்னங்கடா இதுன்னு .. ஒரு விதி செய்தேன். மாதர் போகம் மாதம் இருமுறை..

இந்த அல்லாடல் அலைபாய்தலுக்கிடைல ஸ்தூல வாழ்க்கைல எத்தனையோ தோல்விகள். எத்தனையோ வெற்றிகள். என் வெற்றிகள் வேறு டைமன்ஷனில் எனக்கு மட்டும்  காட்சியளிக்க, தோல்விகள் ஊருக்கே சர்வதரிசனம். இதெல்லாம் நடந்தது 1986 முதல் 1989 வரை .

 2000 ஆம் வருசம் இறந்து போன ஒரு சாதகர் ( சீக்கர்) குருவாகி தன்னோட க்ரூப் மூலமா எனக்கொரு பீஜாக்ஷரத்தை கொடுக்க செய்து வழி காட்டி வழி நடத்தினது,    அதனால என் லைஃப்ல நடந்த அதிசயங்கள் ஏற்பட்ட இழப்புகள் இதை யெல்லாம் அடுத்த பதிவுல விவரமா பார்ப்போம் . உடு ஜூட்