Thursday, March 28, 2013

நவகிரகங்களுடன் பேட்டி : குரு

அண்ணே வணக்கம்னே !
அமாவாசை இருட்ல  பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழிங்கறாப்ல இந்த தொடர்  போயிட்டிருக்கு. எப்படியோ ஆரம்பிச்சுட்டம். எப்படியோ ஒன்னு முடிச்சுட்டா போதுங்கற நிலைக்கு வந்துட்டன். ஆருனா புண்ணியாத்மாக்கள்  நாம போட்டுக்கிட்டிருக்கிற பதிவுகளை சாதி பிரிச்சு தலைப்பு -சுட்டினுட்டு கொடுத்தா புண்ணியமா போகும்.

நண்பர் தான்  துவக்கின கன்னிமரா லைப்ரரி வலைதளத்தோட டொமைனை ரென்யூவல் பண்றதுல அக்கறை காட்டலியா நாம அதை சொந்தமாக்கிக்கலாங்கற முடிவுக்கு வந்துட்டம். கடந்த பாராவுல சொன்னாப்ல தலைப்பும் -சுட்டியுமா தொகுத்து இந்த வலைதளத்துல ஷோ பண்ணலாம்னு உத்தேசம். ஆத்தா உத்தரவு எப்படியோ தெரியலை.

குருவை பற்றி தெரிஞ்சுக்கனும்னா நம்ம வாழ்க்கைய ஒரு க்ளான்ஸ் திரும்பி பார்த்தாலே போதும்.  நாம நாசமா போக எத்தீனி வாய்ப்புகள் தேவையோ எத்தீனி சூழல் தேவையோ அத்தனையும்  நமக்கு இருந்தது. லக்னம் கடகமாகி லக்னத்துல புதன் -சூரியன் .புதன் 3-12 க்கு அதிபதி .  புதன் 3 க்கு அதிபதிங்கறதால எதையுமே சாலஞ்சிங்கா எடுத்தக்கறது ,அண்ணன் தம்பிகளோட வெட்டுப்பழி -குத்துப்பழி .

சாலஞ்சிங்குன்னா ஒங்க வீட்டு எங்க வீட்டு சாலஞ்சிங் இல்லிங்கோ ஒரு தாட்டி ஒரு குட்டிய கணக்கு பண்ண அவிக ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வரவழைச்சோம் - அந்த வீட்டு கிணறு ரெண்டு வீட்டுக்கு பாகம். ரெண்டு ராட்டினம் -ரெண்டு கயிறு  போட்டு குறுக்கால கதவிருக்கும்.

எதுனா அசந்தர்ப்பம்னா இந்த பக்கம் நுழைஞ்சு அடுத்த வீட்டுக்குள்ளாற போயிரலாம்னு ப்ளான். (அடுத்த ஊட்டுல நமக்கு ஃபுல் லைசென்ஸூ)  சுஜாதா கதையில வசந்த் கணக்கா குட்டியை மூலையில தள்ளி வாசனை பார்க்கிற தூரத்துக்கு கூட போகலை. அவளோட அம்மா இந்த ஊட்டுக்குள்ள நுழைஞ்சிட்டிருக்கா.

காவலுக்கு வச்சிருந்த இந்த ஊட்டு பையன் பே பேங்கறான். அம்மாக்காரிக்கு இன்னம் டவுட்டு சாஸ்தியாயிருச்சு.

நேர உள்ளாற வந்துக்கிட்டிருக்கா.வராந்தா ..ஹாலு ..கிச்சன். அடுத்தது பாத்ரூம் தான். அங்கன தான் கிணறு.அம்மாக்காரி முன்னேறி வர வர நாம அப்டியே பேக் டு தி பெவிலியன். கிணத்தாண்டை பார்க்கிறோம். கொய்யால ..கிணத்துக்கு குறுக்கால இருக்கிற கதவு அந்த பக்கம்  லாக் ஆகியிருக்கு.

என்னா பண்றது? ஒரே செகண்டுதான். படக்குனு ஸ்பார்க் ஆச்சு. கவுறை தூக்கி ராட்டினத்துல ஒரு முடிச்சை போட்டு கயிறை புடிச்சிக்கிட்டு பட படன்னு உள்ளாற இறங்கியாச்சு.  அம்மாக்காரிக்கு சந்தேகம் இன்னம் தீரலை. கக்கூஸு வரை போயிட்டு தான் ஒரு போய் தொலைஞ்சா.  அன்னைக்கேதோ நம்ம வெயிட்டு 48 கேஜிங்கறதால ஓகே. இன்னைக்குன்னா (120 கேஜி) மணிக்கட்டே கழண்டிருக்கும்.

இப்படி ஒன்னில்லை ரெண்டில்லை. புதனோட ராசிகள் எவை? மிதுனம் - கன்னி . மிதுனம்னா என்ன? மைதுனம். மைதுனம்னா என்ன? வேறென்ன கில்மா தான். கன்னி? ராசிச்சக்கரத்துல ஆறாவது ராசி. சத்ரு ரோகம் ருணம். இதான் நம்ம வாழ்க்கைய ஒட்டு மொத்தமா ஆக்கிரமிச்சிருந்தது.

லக்ன சூரியனை டீல்ல விட்டுட்டமா? வரேன். சூரியன்  உலகத்துக்கெல்லாம் ஒளி தராரு. பெட் ரமாக்ஸ் லைட்டுக்கு கூட பாடிகை தராய்ங்க. சூரியனுக்கு ?
சூரியன் ஒலகத்தையே தட்டி எளுப்பறாரு. அவரு தூங்க முடியுமா? ஊஹூம்.

அதுலயும் அவருக்கு சொந்த வீடு சிம்மம். சிம்மத்துக்கு மிந்தின வீடு கடகம். நீங்க காலையில ரெடியாகி வேலைக்கு போறிங்க.  நாளெல்லாம் மாரடிச்சுட்டு வீடு திரும்பறிங்க. அந்த சந்தர்ப்பத்துல உங்க வீட்டு கிராஸுக்கு மிந்தின கிராஸுல உங்க மன நிலை எப்படி இருக்கும்? எப்படா ஊட்டை போயி சேருவம்னு தான் இருக்கும்.

அந்த மினிட்ல உங்களால எதையாவது டிசைட் பண்ண  முடியுமா? டிக்ளேர் பண்ண முடியுமா ?ஊஹூம். இந்த நிலையில உள்ள சூரியன் லக்னத்துல இருந்தா எப்டி இருக்கும்? ரோசிச்சு பாருங்க.

எந்த காரியத்தை எடுத்தாலும் முடிக்கிறதை பத்திதான் மைண்டு ரோசிக்கும். ஒன்னை ஆரம்பிக்கும் போதே இதை எப்படி முடிச்சு வைக்கிறதுன்னு தான் யோசிக்கும். இந்த வரிகளை டைப் பண்ணும் போது கூட ஆன் லைன் ஜோதிட ஆலோசனை - பதிவுகள் போடறது இது ரெண்டையும் எப்படி முடிச்சு வைக்கிறதுன்னு தான் எண்ணம் ஓடுது.

எதுனா சீரியல்ல மாமா, சித்தப்பா மாதிரி ஒரு ரோல் கிடைச்சா ரெண்டு வருசம் தாங்கும். லைஃப்ல செட்டிலாயிர்ரது,  வாரத்துல ஒரு நாள் இலவ ஜோதிட ஆலோசனை (மட்டும்) - நாளிதுவரை நாம எழுதின பதிவுகளை எல்லாம் ஒழுங்கு படுத்தி கன்னிமராலைப்ரரி டாட் கோ டாட் இன்ல வச்சுர்ரது .
இதையெல்லாம் மீறி .. எங்கன உருப்படறது? அதுலயும் சூரியன் பாப கிரகம் - பாபனோட சேர்ந்த புதனும் பாவி. லக்னத்துல ரெண்டு பாபிகளை வச்சுக்கிட்டிருந்தா என்ன ஆகும்? நோ பீஸ் ஆஃப் மைண்ட் னுட்டு பாட்டு பாடவேண்டியதுதான். மைண்டு ஒரு பக்கம்னா பாடி என்னத்துக்காகும்.

குருவை சூரியன் கண்ட்ரோல் பண்றாரு. சூரியனை புதன் கண்ட்ரோல் பண்றாரு. ஆக லக்னத்துல ஆக்டிவா இருக்கிறது புதன் தான்.புதன் விரயாதிபதி. என்னா இழவு இது? குரு மட்டும் யோக்கியமா என்ன? டபுள் ஆக்டு . இந்த பக்கம் பார்த்தா ரோகாதிபதி -அந்த பக்கம் பார்த்தா பாக்யாதிபதி.
குரு நின்ற இடத்தை விட பார்க்கும் இடம் விருத்தியாகும். குருவுக்கு 5-7-9 ஆம் பார்வைகள் உண்டு. இதில் 5-7 பார்வைகள் விசேஷம்ங்கறது விதி.கடகத்துல குரு உச்சங்கறது தெரிஞ்ச கதைதானே.

ஜஸ்ட் லக்னத்துல மட்டும் இத்தீனி ஓட்டை. இன்னம் லக்னாதிபதி வாக்குல நின்னு எட்டை பார்க்கிறது.. ரெண்டாமிடத்துல பாதகாதிபதியான சுக்கிரன் நிக்கிறது, நாலாமிடத்துல செவ் கேதுல்லாம் எக்ஸ்ட்ரா. இதையெல்லாம் மீறி டப்பு இருந்தாலும் -இல்லின்னாலும் , ஜெபம்,தியானம்,யோகா இத்யாதி தெரியாத காலத்துலயும் சரி - ஓரளவு தெரிஞ்ச இந்த காலத்துலயும் சரி  வண்டி ஓடிக்கிட்டுத்தான் இருக்கு. கொஞ்சம் மருவாதி, ஸ்விம் சூட் மாதிரியாச்சும் சிக்கனமா புகழ் எல்லாம் இருக்கு.

இதையெல்லாம் கொடுத்துக்கிட்டிருக்கிறது லக்ன குருவும் அவரோட அஞ்சு -ஒன்பதாம் பார்வைகளும் தான். ஹி ஹி இந்த சொந்த கதையை முன்னுரையா வச்சுக்கங்க. நாளையிலருந்து ஜரூரா குருவை படம் வரைஞ்சு பாகங்கள் குறிக்கலாம்.ஓகேவா உடுங்க ஜூட்டு.

Friday, March 22, 2013

ராகு கேதுக்கள் : ஆழமான பார்வை : 3

அண்ணே வணக்கம்ணே !
செவ்வாயை பத்தி தான் ஜவ்வா இழுத்திட்டிங்க. இந்த ராகு கேது சமாசாரத்தையாவது பட்டுன்னு முடிக்க கூடாதான்னு சிலர் நினைக்கிறது கேட்குது.ஆனால் பாருங்க மேக்ரோ லெவல்ல ரோசிக்கும் போது செவ்வாயே பெட்டர்.
எதிராளிக்கு கோபம் வருது. அது வர்ரது நமக்கு தெரியுது. திருப்பி தாக்கவோ -ஓடி ஒளியவோ சான்ஸ் இருக்கு.ஆனால் ராகு ? ஆனால் கேது? ஊஹூம்.
அடி தடிக்கு, குத்து கொலைக்கு கூட சாட்சியை பிடிக்க முடியும்.ஆனா சதிக்கு?
எவனோ நம்மை பிடிக்காதவன் நம்ம மேல பொய் புகார் கொடுத்துர்ரான். போலீஸ்கார் ..போலீஸ்கார் ! நான் உத்தமன்னு கன்வின்ஸ் பண்ண சான்ஸ் இருக்கு. இல்லையா சாராயம் காச்சற கவுன்சிலர் அல்லது பலான தொழில் பண்ற கவுன்சிலரை பிடிச்சு ராஜி பண்ணிக்கலாம்.
எவனாச்சும் விசம் வச்சுட்டான்னு வைங்க? என்ன பண்ண முடியும்? இதனால தான் சொல்றேன். செவ்வாய் கொடுக்கிற பல்பை விட ராகு -கேதுக்கள் கொடுக்கிற பல்பு கொடுமைடா சாமி.
 உலகமக்கள் எல்லாரோட ஜாதகத்துலயும் ராகு கேதுக்களால பிரச்சினையே இல்லைன்னு வைங்க. இந்த ஒலகம் எவ்ளோ ப்ளெசன்டா இருக்கும் தெரியுமா?
இத்தனைக்கும் என் ஜாதகத்துல தோஷம் கூட கிடையாது.  4 ஆமிடத்துல தான் கேது.ஆனால் விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து  வீட்டுல நம்மை சுத்தி எத்தீனி சதி ? அம்மாவுக்கு கான்சர் - எத்தீனி சைக்கிள் நாசம்?
பத்தாமிடத்துல தான் ராகு.ஆனால்  நம்ம கொலிக்ஸ்ல எத்தீனி சதிகாரவுக. ஸ்..யப்பா ..வேண்டான்டா சாமீ. ராகு -கேதுன்னா புதியவர்கள் . முன்னே பின்னே தெரியாதவன் கூட லாஜிக்கே இல்லாம ஆப்படிச்சிட்டிருந்தா  ஒரு மன்சனுக்கு மனித குலத்து மேல என்னத்தை பிடிப்பு இருக்கும்?
ஜா.ரா கேஸையே எடுத்துக்கங்க. வரப்பு தகராறா? வாய்க்கா தகராறா?  நாம என்ன செய்துட்டம்? பலன் கேட்டாரு. காசு அனுப்பறேன்னாரு. காசு வேணாம்யா அனுப்பறேன்னு சொன்னம். கொஞ்சம் தாமதமாயிருச்சு போல. 
நான் எல்லாம் அந்தந்த வேளை சோத்துக்காசை எடுத்து ஆ.இ 2000 த்துக்கு கூரியரும் ,ஃபேக்ஸும் அனுப்பியிருக்கன். நான் கூட அந்தளவுக்கு கடுப்பானதில்லை. நம்மாளு அந்த நாள் முதல் இந்த நாள் வரை ஒற்றெழுத்தை விட கேவலமான மேட்டரை எல்லாம் கமெண்ட்ல கொட்டி குவிச்சுக்கிட்டிருக்காரு.
பஸ் ஸ்டாண்ட்ல கடை பார்த்து வச்சிருக்கன். பஸ் ஸ்டாண்டுல ஹைஜினிக் கக்கூஸு,பாத்ரூம்லாம் இருக்கு. வந்துருய்யா. கை நிறைய வேலை தரேன். காசு தரேன்.வேலை வெட்டி இல்லாம ஏன் சிண்டை பிச்சுக்கறேன்னு சொல்லிட்டே இருக்கம் கேட்டாதானே? ஊஹூம்.
உலக மக்கள் அனைவரின் ஜாதகங்களிலும் ராகு கேதுக்கள் நெல்ல இடத்துல இருந்திருந்தா மத துவேஷங்கள் இல்லை, காற்று,தண்ணீர்,மண் விசமாகியிருக்காது.கள்ளக்கடத்தல் இல்லை,பொய்க்கணக்கு இல்லை.கருப்பு பணம் இல்லை, டாஸ்மாக் இல்லை. கள்ள காதல்கள் இல்லை. எத்தீனி இல்லைகள்.
இதனாலதேன் ராகு கேதுக்களையும் அலார்ட்டா ஆதியோடந்தமா டீல் பண்ண வேண்டியதா இருக்கு.ஓகே பதிவுக்கு போயிரலாம்.
கடந்த பதிவுல ராகு -கேதுக்கள் 3-9 ல இருந்தா என்ன பலன்னு பார்த்தோம். இன்னைக்கு 4-10 காம்பினேஷனை பார்ப்போம். ஆக்சுவலா இங்கன ரா -கே இருந்தா தோஷமில்லை தான்.ஆனாலும் ஒரு சில பாதிப்புகள் உண்டு.
4 ல் ராகு / கேது:
தாயின் நிறம் மங்கிப்போகலாம். உடல் நலிவு ஏற்படலாம். வீடு மேட்டர்ல ரகசிய ஆப்புகளை எதிர்கொள்ள நேரிடலாம். கல்வின்னு வரும் போது அகடமிக் ஸ்டடீஸை விட உலக ஞானத்தை (?) பெறுவதில் தான் ஆர்வம் அதிகமா இருக்கும். படிக்கிற வயசுல ராகு தசை/கேது தசை மாட்டிக்கிச்சினா கல்வியில் தடை கூட ஏற்படலாம். வாகன மேட்டர்ல வண்டி திருடு போகலாம், வாங்கினது திருட்டு வண்டியா இருக்கலாம். ஆருக்காச்சும் இரவல் கொடுக்க அவிக கிரைம் பண்ணிட்டு நாம ஜவாப் சொல்ல வேண்டியதாயிரலாம்.
10 ல் ராகு /கேது:
தொழில் எதுவா இருந்தாலும் அதுல புதுமைய புகுத்த தவிப்போம்.  நமக்கு சம்பந்தமே இல்லாட்டியும் எல்லா விஷயத்துலயும் அடிப்படையான சில விஷயங்களை தெரிஞ்சு வச்சுக்கிட்டு,அதுக்கே எல்லாத்துலயும்  சாதிச்சுரனும்னு ஒரு தவிப்பு இருக்கும். மக்கள் நாம சொல்றதையும் -செய்றதையும் நம்பவும் முடியாம ஏமாத்துன்னு குற்றம் சாட்டவும் முடியாம தவிப்பாய்ங்க. ஆரம்ப காலத்துல சனத்தை -அவிக டேஸ்டை புரிஞ்சுக்க முடியாம தொடர் தோல்விகள் ஏற்படலாம்.
நம்ம ஆட்டிட்யூடை பார்த்து பயந்து போயி - சம்பிரதாயப்படி தொழில் நடத்தறவன்லாம் எதிரியா மாறிருவான்.
5-11 காம்பினேஷன்:
ராகு கேதுக்கள் 5-11 ல இருக்கிறது ஒரு டிஃப்ரன்ட் சிச்சுவேஷனை ஏற்படுத்தும். முட்டாளா இருப்பான். லாட்டரியில அடிச்ச மாதிரி பணம் குவியும். அல்லது நல்ல ஞானம் இருக்கும். ஆனால் தொடர்ந்து அவமானங்களையே சந்திப்பான்.
மொத கேஸ்ல தான் முட்டாள் என்ற உண்மை தனக்கு தெரிஞ்சிருந்தா பிரச்சினையில்லை. வெற்றிகளை பார்த்துட்டு தான் அறிவாளின்னு மயங்க ஆரம்பிச்சா சீக்கிரத்துலயே பல்பு வாங்கவேண்டியதுதான். அதாவது குழந்தைகள் இல்லாம போயிரலாம். வெத்தலைய வச்சு பித்தலைய எடுக்க நினைச்சு மொத்தமா ஏமாந்துரலாம்.
ரெண்டாவது கேஸ்ல அவமானங்களை கணக்குல வச்சுக்காம தொடர்ந்து ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டே இருந்தா ஒரு நாளில்லை ஒரு நாள் உலகப்புகழ் கியாரண்டி.ஆனால் அந்த சமயம் பார்த்து வாரிசுகளுக்கு பெருந்தீங்கு விளையவும் சான்ஸ் இருக்கு.
அடுத்தபதிவுல  6-12 காம்பினேஷனை பத்தி பார்ப்போம்.

Sunday, March 17, 2013

தாம்பத்யத்தை தகர்க்கும் படுக்கையறை அமைப்பு

அண்ணே வணக்கம்ணே !
தாம்பத்யம்னா அது  படுக்கையறையில மட்டும் தானான்னு கேட்கிறவுக ஆசீர்வதிக்கபட்டவுக. ஆனாலும் என்னைக்கோ ஒருக்கா - பெட் ரூம்லயும் வச்சுக்கத்தானே போறிங்க.அதனால நீங்களும் இந்த பதிவை படிக்கலாம்.
உடலுறவுங்கற வார்த்தைய அதனோட சரித்திர மதிப்பு கருதி அப்படியே வச்சுக்கலாம்.ஆனால் இது வெறுமனே உடல் தொடர்பான சமாசாரம் மட்டுமில்லைன்னு டயரியில எழுதி ரெட் இங்க்ல அண்டர் லைன் பண்ணி வச்சுக்கங்க.
அட ..வெறுமனே உடல் சம்பந்தப்பட்டது மட்டும் தான்னு வச்சுக்கிட்டாலும் அந்த உடல் தொடர்பான இயக்கத்துக்கு தேவையான அமைப்பு இருக்கனுமில்லையா?  அந்த காலத்து கட்டில்களை பார்த்திருப்பிங்கன்னு நினைக்கிறேன். பக்கத்துல சின்னதா ஏணி கூட இருந்திருக்கலாம்.
சனம் அந்த அளவுக்கு ஒசரமா இருந்திருப்பாய்ங்கன்னு நினைக்கவும் வாய்ப்பில்லை. அமிதாப்பச்சன் கூட அந்த கட்டில்கள்ள ஏறிப்படுக்க கொஞ்சம் கஷ்டப்படனும். பின்னே எதுக்கு அம்மாம் உசரம்?
புவியீர்ப்பு சக்தின்னா தெரியுமில்லை. துரித ஸ்கலிதத்துக்கு இதுவும் ஒரு காரணமா இருக்கலாம். ஆரம்பத்துல ரத்தத்தை ஈர்க்குது. இது சௌகரியம் தான்.ஆனால் விந்துவையும் ஈர்க்கிறது ? ஒரு வேளை இதை ஓவர் கம் பண்ணத்தான் அத்தனை உசரமா கட்டில் செஞ்சு வச்சாய்ங்களோ? விவரமானவுக தங்கள் கருத்தை சொல்லலாம்.
எல்லாம் சரீ...திடீர்னு ஏண்ணே ட்ராக் மாறிட்டிங்க. செவ்வாய்க்கும் படுக்கையறைக்கும் என்ன சம்பந்தமுன்னு கேப்பிக. சொல்றேன்.
நேத்திக்கு செவ் 12 ல் இருந்தா என்னெல்லாம் பிரச்சினை வரும்னு சொல்லியிருந்தேன்.அதுக்குண்டான பரிகாரத்தை  சொல்லத்தான் இந்த பீடிகை.
வீடு கட்டிக்கிட்டிருக்கிங்களா? பெட் ரூம் நைருதி மூலையிலயே வராப்ல ப்ளான் பண்ணிக்கங்க. சுவத்துக்கு பூச்சு வேலையே செய்யாதிங்க.தரைக்கு  கிரானைட் போடறவசதி இருந்தாலும் அந்த காலத்து ரெட் ஆக்சைடு ஃப்ளோரிங் போட்டுக்கங்க.
அட கட்டி முடிச்சுட்டிங்களா? பரவாயில்லை.
பெயின்டிங் பாக்கி இருக்கில்லை. பார்க்கவும் ப்ளெசன்டா இருக்கிறாப்ல பாக்கு நிறத்தை ப்ளான் பண்ணுங்க. பெட் ஸ்ப்ரெட்,பில்லோ கவர் எல்லாம் டார்க் ப்ரவுன் நிறத்துல இருந்தா நல்லது.
வசதி இருந்தா அந்த காலத்து சரித்திர படம் கணக்கா சுவத்துல வாள்,கேடயம் வச்சுக்கங்க. வசதி இல்லின்னா யுத்த காட்சிகள் -முக்கியமா பீரங்கி - விமான வழி குண்டு வீச்சு இத்யாதி கொண்ட - கொண்ட போஸ்டரை வச்சுக்கங்க.
பர்ஸும் பாக்கு  நிறத்துல இருக்கனும்.அதுல பன்னிரு கையரின் படம் ஒன்னு வச்சுக்கங்க. அட சாப்பிடற ப்ளேட்டும் கலர் கலரா கிடைக்குதுல்ல. ப்ரவுன் நிற ப்ளேட்டை ச்சூஸ் பண்ணிக்கங்க.
படுக்கையறையின் அக்னி மூலையில சின்னதா ஒரு  ஸ்டவ் வச்சுக்கிட்டு பெட் காஃபிய அங்கயே ப்ரிப்பேர் பண்ணி குடிங்க.
ஸ்..அப்பாடா செவ் கதை க்ளோஸு . நாளைக்கு ராகுவை சந்திப்போம். உடுங்க ஜூட்டு.
கில்மா டிப்ஸ்:
அந்த காலத்துல ஒரு க்ரூப் ஆஃப் பெண்களை தனிய ஒதுக்கி வச்சு பரதம்ங்கறது அவிகளுக்கு மட்டும் தான்னு வச்சிருந்தாய்ங்க. அவிகளை ஊர் பெருசுங்க தங்கள் அரிப்புக்கு உபயோகிச்சு  நாசப்படுத்தினது வேற கதை.
ஆனால் இங்கே ஒரு பலான சமாசாரம் ஒளிஞ்சிருக்கு. அது இன்னாடான்னா நடனம், நாட்டியம்லாம் காம உணர்வுகளை அதிகரிக்க செய்யுமாம். முக்கியமா பெண்களுக்கு.
சம்பந்தா சம்பந்தமில்லாம இந்த டிப்பை இங்கே கொடுக்க காரணம் இருக்கு. நம்ம பவர் ஸ்டார் கொடுத்த தகிரியத்துல டான்ஸு மாதிரி எதையோ ட்ரை பண்ணி அதை வீடியோவா இங்கே போட்டிருக்கன்.
பலவீன இதயர்கள் தயவு செய்து பார்க்காதிங்க..

Wednesday, March 6, 2013

கணவன்/மனைவியை கொல்பவர் யார்?

அண்ணே வணக்கம்ணே !
2013, ஜனவரி 8 ஆம் தேதிக்கு பிறகு   இன்னைக்கு நம்ம நிர்வாண உண்மைகள் வலைப்பூ மூலமா உங்களை சந்திக்கிறேன்.ஏறக்குறைய ரெண்டு மாசம் காலம் அதாவது 60 நாள் - இந்த வலைப்பூவோடு அனுபவஜோதிடம்   வலைப்பூவையும்  ஏறக்குறைய பூட்டி வச்சிருந்தேன்.( ஃபார் இன்வைட்டட் ரீடர்ஸ் ஒன்லி)

ஏன்னா வெளிச்சம் அதிகமாயிருச்சுங்கற ஃபீலிங்கு ஓவராயிட்டே போச்சு. பாடி ,மைண்டு எல்லாமே உதற ஆரம்பிச்சிருச்சு. இப்பம் மட்டும் ஏன் திறந்து விட்டுட்டேன்னு  கேப்பிக. சொல்றேன்.

ஜேஜிக்கும் நமக்கும் இருந்த அக்ரிமென்டே என்னடான்னா "ஜேஜி ! ஜேஜி ! ! நீ என்னை பார்த்துக்க நான் இந்த நாட்டை பார்த்துக்கறேன்"ங்கறதுதான்.ஆனால் 2004 ல் இருந்து நாட்டை ஏறக்குறைய டீல்ல விட்டுட்டம். அதனால வந்த கு.ம தான் இந்த நிலைக்கு காரணம்னு கண்டு பிடிச்சுட்டு காரியத்தை துவங்கிட்டம்ல.

மொத கட்டமா தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்பிக்களுக்கும் வாங்க இந்தியாவை பணக்கார நாடாக்கலாம்னு அழைப்பு விட்டிருக்கம்ல ( ஆ.இ.2000)

மேலும் தெலுங்கு திரையுலகத்துல பிராமணீயத்தை கிழி கிழின்னு கிழிச்சிக்கிட்டிருக்கம். பிராமணியத்துல நம்மை ரெம்ப கடுப்பாக்கிற  மேட்டர் வித்தைய ஒளிச்சுவைக்கிறதுதேன். ப்ளாகை பூட்டி வைக்கிறதும் வித்தைய ஒளிச்சு வைக்கிற மாதிரி தானே அதனலாதேன் பப்பரப்பேன்னு திறந்துவிட்டுட்டன். ஜா.ரா உட்பட வந்து போவட்டுமே..ஜா.ராவின் இன்னொரு  ஸ்கான்டல்  நம்ம பார்வைக்கு வந்தது. ( ஒரு பார்ட்டிக்கு டி.ஏல்லாம் கொடுத்து சேலத்துக்கே அனுப்பி விஜாரிச்சுட்டு வந்துட்டம்.ஆனால் அது படு சீக்ரெட்டாக்கும். நேரம் வரும் போது வெளிய விடுவம்ல)

சரீ..இ அனுபவஜோதிடம் வலைதளத்துல லேட்டஸ்டா என்னத்தை எழுதிட்டம் ???? ஆங் .. கணவன்/மனைவியை கொல்பவர் யார்? இந்த கேள்விக்கான பதிலை சைக்காலஜி அடிப்படையிலயே விவரிச்சுட்டன். இன்னைக்கு ஜோதிட கோணத்துல பார்ப்போம் ஓகேவா?

ஜாதகத்துல 7ங்கறது வாழ்க்கை துணையை காட்டும். 8ங்கறது மரணத்தை காட்டும். செவ் உடனடி மரணத்தை -திடீர் மரணத்தை கொடுத்துர்ர கிரகம்.அதனாலதேன் செவ் 7 -8 ல இருக்கிறதை பார்த்ததுமே சோசியருங்க டர்ராயிர்ராய்ங்க.

செவ் எட்டிலிருக்கிறதாலயோ .. ஏழிலிருந்து லக்னத்தை பார்க்கிறதாலயோ மரணம் தானா வந்தாலும் பரவால்லை. திடீர்னு வந்தாலும் பரவால்லை. (குழந்தை குட்டின்னு ஆகி அவிகளை அனாதையா விட்டுட்டு போகாம போய் சேர்ந்திரலாம். தந்தியில புதுப்பெண் மரணம்னு ஒரு டிசி அளவுல செய்தி வரும் அவ்ளதேன்.

ஆனால் பிரச்சினை இதோட முடியலை. செவ் எதிரிக்கு காரகர். பெண்ணுக்கு எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம். இங்கன செவ் நின்னு மணாளனே மங்கைக்கு மரணத்தை தந்துட்டா?
அல்லது மணமகனின் எதிரிகள் அவருக்கு குறி வைக்க அதுல மனைவியும் மாட்டிக்கிட்டா?

பையன் ஜாதகத்துல ஏழுல இருக்கிற செவ் பொஞ்சாதிய எதிரியா பாவிக்க வச்சு அ அவளை எதிரியாவே மாத்தி தொலைச்சு போட்டு தள்ள வச்சுட்டா? இந்த மாதிரி கேஸுனங்களுக்காகவே காட்டமான பரிகாரங்களை இன்னைக்கு தந்துர்ரன்.

ஏதோ படத்துல (சுந்தரா டிராவல்ஸ்?) வடிவேலு இடம்,பொருள்,ஏவல்னு சகலத்தையும் மறந்து ஒரு எலியை விரட்டிக்கிட்டு போயிருவாரு. அதை பார்த்து நான் கூட சிரிச்சிருக்கன். இந்த எலிகள் பண்ற கூத்திருக்கே.. நம்மையும் வடிவேலு ஆக்கிரும் போல.

சிபியு வை மூடி வச்சா குஞ்சு வச்சுருதுன்னு திறந்து வச்சம். கொய்யால விளக்கு எரியுது. நான் ஒரு மன்சன் டொக்கு டொக்குன்னு தட்டச்சிக்கிட்டிருக்கன். அதும்பாட்டுக்கு ஹீரோ கணக்கா பைப் பிடிச்சு ஏறி வந்து சன்னல் வழியா எட்டிப்பார்த்து சிபியுக்குள்ள போகுது.

எக்கு தப்பா எதையாச்சும் ஒயரை கடிச்சு வச்சுட்டா கோவிந்தா. ஜஸ்ட் இர்ரிடேட் ஆகி ..டப்பா மேல சின்ன தட்டு தட்டினேன் அவ்ளதான். ஏதோ கார்ட் லூஸ் கான்டாக்ட்  ஆயிட்டாப்ல இருக்கு. மானிட்டர் பவர் கட் கணக்கா இருண்டு போச்சுது.

அப்பாறம் நம்ம ஜேம்ஸு சொன்னது ஞா வரவே எல்லாத்தையும் பிடுங்கிட்டு செருகினபிறவு அஜீஸ் ஆயிருச்சு. எலில்லாம் ராகு காரகம் . நமக்கு நால்ல செவ் மட்டும் இருந்திருந்தா ஃப்ளேமே வந்திருக்கும் போல. கூட கேது இருந்ததால எலி -லூஸ் காண்டாக்ட்டோட முடிஞ்சது.

எதுக்கு சொல்ல வரேன்னா எல்லா தீ்ர்வையும் கொடுத்துரனுங்கற துடிப்பு நமுக்கு இருந்தாலும் தீர்வுகளை பெற்று பலன் பெறும் யோகம் சனத்துக்கு இல்லை போல. அல்லது ஜேஜி ..தாளி நீ பாட்டுக்கு பரிகாரத்தை கொடுத்துட்டு போயிருவ.  அப்போ நான்  படைச்ச கிரகம்லாம் டம்மியாயிரும்லன்னு சீப்பை ஒளிச்சு வைக்கிறாப்ல இருக்கு.

இந்த மேட்டர்ல கடவுளுக்கு நான் எப்பமோ சொல்லிட்டன். த பாருங்க பாஸூ.. நான் பரிகாரம் கொடுத்த மாத்திரத்துல இந்த சனம் ஃபாலோ பண்ணிருமா என்ன?  அப்பம் விதி அவ்ள சப்பையா? ஃப்ரீயா உடுங்க. நான் பாட்டுக்கு சொல்லிட்டு போறேன்னு கன்வின்ஸ் பண்ணி வச்சிருக்கன்.

கடவுளுக்கு கஜினி சூரியா கணக்கா மெமரி லாஸ் கீறாப்ல இருக்கு. அப்பப்போ சீப்பை ஒளிச்சு வைக்க பார்க்குது.

மேட்டருக்கு வந்துரலாம் . மேற்  சொன்ன விதமாக செவ் டிக்கெட் போட பார்த்தாலும் ரெண்டு பேருல ஒருத்தருக்கு தீர்காயுசு இருந்தாலும் அந்த  சோடி பிரிஞ்சுரும். இதான் ஆறுதல்.

இதுக்கு என்னதான் பரிகாரம்னா......

ஏழில் செவ்:
1.போலீஸ் ,மிலிட்டரி,ரயில்வே துறையை சேர்ந்தவரை மணக்கனும்
2.அல்லது ஏதேனும் விபத்தில் அங்க ஹீனம் ஏற்பட்டவரை மணக்கலாம். அல்லது ஏற்கெனவே மேஜர் ஆப்பரேஷன் நடந்தவரை .
3.சுமார் 9 வயது இளையவர் - அல்லது அவ்வாறான  இளைய தோற்றம் உள்ளவரை மணக்கலாம்.
4.தம்பதி இருவரும் கராத்தே ,குங்ஃபூ போன்ற மார்ஷல் ஆர்ட்ஸ் கற்கலாம்.
5.இருவரும் சமைக்கனும். முக்கியமா அசைவம் .ஆனால் திங்க கூடாது.
6.வேல் பூசை செய்யலாம்.
7.செம்பு நகைகள் அணியலாம்.
8.கலாய் பூசப்பட்ட செம்பு பாத்திரங்களில் சமைக்கலாம்.
9.செவ் கிழமை அ மிருகசீர்ஷம், சித்திரை,அவிட்டம் போன்ற  நட்சத்திரங்களில் உண்ணாவிரதம்+ மவுன விரதம் மேற்கொள்ளலாம்.
10. ரத்த தானம் கட்டாயம் செய்யவும். ரத்த தானம் செய்யவே ரத்தவிருத்திக்கான உணவு வகைகளை தேடி தேடி சாப்பிடுங்கள்.
உபரியாக லக்ன செவ்வாய்க்கு தரப்பட்ட பரிகாரங்களையும் செய்யனும்.

எட்டில் செவ்:
இந்த கிரகஸ்திதிக்கு ஆண் பெண்களுக்கு வெவ்வேறான பரிகாரங்களை சொல்லனும். நாளைக்கு சொல்றேனே..