Sunday, June 20, 2010

சிரிக்க சிரிக்க..

"சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது அடக்க முடியலே" ன்னு ஒரு பாட்டை கேட்டிருப்பிங்கனு நினைக்கிறேன். இதுல ஒரு தத்துவம் ஒளிஞ்சிருக்கு சிரிக்க சிரிக்கத்தான் சிரிப்பு வரும். அப்படி சிரிப்பு வரும்போது அடக்கவே முடியாது.   நினைச்சு நினைச்சு சிரிக்கற சமாசாரம் வேற. எதையோ மறக்க சிரிக்க முயற்சி பண்றது வேற.

ஒரு புகழ் பெற்ற ஆனால் பெயரளவு கட்டணம் மட்டும் வசூலிக்கிற ஒரு ஜோதிடரை சந்திச்சேன். அப்போ பாக்யால தொடர்ந்து ( அதாங்க 2 மாசத்துக்கு ஒன்னாச்சும்)  கிச்சு கிச்சு மூட்டற கதைங்க எழுதிக்கிட்டிருந்தேன். (1987 முதல் 1990 ஜனவரி  வரைன்னு நினைக்கிறேன்) 

அவரு சோக ரசம்  நிறைஞ்ச கதைகள் எழுதுங்க.. பெயரும் புகழும் வரும்னாரு. அப்பல்லாம் சோகம்னாலே என்னன்னு தெரியாது. கண்டபடி செலவழிக்க  பாக்கெட்ல பைசா இல்லையேங்கற குறை உண்டு தட்ஸால். அவரு என் எதிர்காலத்தை கணிச்சுத்தான் சொன்னாரு போல. (சோகமயமாயிரும்னு)

நான் அசால்ட்டா விட்டுட்டன். என்னதான் பசி,பட்டினி ,சொறி,சிரங்குன்னு  (சத்துக்குறைவால சொ.சி ஏற்படும்ங்க) அவதிப்பட்டாலும் சோகம்ங்கற கதையெல்லாம் கிடையாது. நான் பிச்சைக்காரனாவே வாழ்ந்தாலும் மாறு வேஷத்துல இருக்கிற இளவரசனாத்தான் ஃபீல் பண்ணேனே தவிர என்னை நான் படிப்பிச்சைக்காரன்னு நினைச்சு அடித்த படி பிச்சைக்காரன் கூட தகராறுக்கு இறங்கினதில்லை.

ஆனால் நான் சிரிக்க கூடாது, சிரிக்க வைக்க கூடாதுங்கறது என் விதி போலும். ஆனால் ஒரு காலத்துல நான் எங்க நின்னாலும் சுத்தி பத்துப்பேராச்சும் வாய் விட்டு சிரிச்சிக்கிட்டிருப்பாய்ங்க. அதுக்காக இப்ப நான் பேசினா அழுவறாய்ங்கன்னுல்ல.

நான் இர்ரிட்டேட் ஆகி எவனையாச்சும் திட்ட ஆரம்பிச்சேன்னா பேசிக்கலா நான் ஒரு பொயட். அதனால என் பேச்சுகள்ள உவமைகள் கொட்டும். அதும் திட்டறச்ச அசால்ட்டா வந்து விழும். மெலும் முகத்துக்கு நேரா திட்டாம ஊர்,பேர் சொல்லாம திட்டறதுதான் நம்ம வழக்கம்.அதனால சபைல எல்லாருமே நன்னா சிரிப்பாய்ங்க. என் வயிறு என்னமா எரிஞ்சா அன்னமா (அந்த அளவுக்கு) சனம் சிரிக்கும்.ஆனால் உண்மைல பார்த்தா வாழ்க்கைல சிரிக்கன்னு  எதுவும் கிடயாது. சதா சர்வ காலம் மரணம் ஒரு நிழலா ஒரு தொடர்ந்துக்கிட்டிருக்கிற இந்த வாழ்க்கைல எதைப்பார்த்து சிரிக்கிறது. சிரிக்கனும்னா மரணத்தை மறக்கனும்.

மரணத்தை மறந்துட்டா வாழ்க்கையே மரணமாயிரும். வாழ்க்கை உயிர்ப்போட இருக்கனும்னா ஒரு கணம் கூட மரணத்தை மறக்க கூடாது.

சரி  நவரசம்ங்கறாய்ங்களே. நாம ஹாஸ்ய ரசத்தை மட்டும் கண்டுக்காத விட்டுட்டமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி வந்தது.  உடனே உங்களை சிரிக்க வைக்கலாம்னு சில பாரா எழுதினேன். ஃபார்ம் நல்லாருக்கு நாளைக்கு கன்டின்யூ பண்ணலாம்னு ஷட்டவுன் பண்ணிட்டு தூங்கினேன் .காலைல எழுந்து சிஸ்டத்தை ஆன் பண்றேன் டிஸ்க் ரீட் எர்ரார்னு வருது. ரி ஸ்டார்ட் பண்ண சொல்லுது. எத்தனை தடவை  ரி ஸ்டார்ட் பண்ணுங்குது. சரின்னு அதுக்குண்டான ஆள வரவச்சு   அவருக்கு ஒரு அம்பது ரூபா கொடுத்தபிறவுதான் சிஸ்டம் இயங்க ஆரம்பிச்சுது.

இதுலருந்து நான் கத்துக்கிட்ட பாடம் என்னன்னா சிரிக்க வைக்கிறதெல்லாம் என் வேலை இல்லை. அதுக்கு வேற ஆளிருக்கு.

சரி தலைப்பை ஜஸ்டிஃபை பண்றாப்ல அந்த மேட்டரை கீழே  தரேன். படிங்கண்ணா. உங்க கருத்தை சொல்லுங்கண்ணா.

என் ஃப்ரெண்டு ஒருத்தன் இருக்கான் கை மணின்னு பேரு ( காரண பெயர்). ஒரு தரம் அவனை நாய் கடிச்சுருச்சு. அப்ப நடந்த உரையாடல் :

" என்னடா நேத்து ஆளே காணோம்"
" நாய் கட்சிச்சிப்பா"
"தத் நாயை போய் நாய் கடிக்குமாடா"
"நக்கலெல்லாம் வேணாம்பா நெஜமாவே கடிச்சிருச்சு"
"அதான் கடிச்சிருச்சுல்ல .. நீ அதை திருப்பி கடிக்க வேண்டியதுதானே"
"நானே நொந்து போயிருக்கன்.. ஜி.ஹெச் ல டி.டி. போட்டு அனுப்பிட்டானுங்கப்பா. எதுனா வைத்தியமிருந்தா சொல்ப்பா"
" உன்னை கட்ச நாய் எங்கருக்கு?"
"அது அங்கயேதான் இருக்கு..ஏன் கேட்கிறே?"
"த பாரு நம்ம புராணங்கள்ள வேல்யுபிள் சைண்டிஃபிக் ட்ரூத் எல்லாம் இருக்கு. ஒரு தரம் பீமனை கொல்ல துரியோதனாதிங்க சோத்துல விஷம் வச்சிர்ராய்ங்க. எதுக்குனா நல்லதுன்னு மயங்கி விழுந்தவனை கொண்டு போய் விஷ சுனைல போட்டுட்டாய்ங்க. ஆனா பீமன் சாகலை. அசால்ட்டா மயக்கம் தெளிச்சு வீட்டை பார்க்க போயிட்டான்.. எப்பீடி? விஷம் விஷத்தை முறிச்சுருச்சு"
"டேய் என்னை என்னத்தான் பண்ண சொல்றே?"
"நேர போய் அதே  நாயை இன்னொரு தடவை அதை கடிக்கச்சொல்லு"
"தபார்ரா வேண்டாண்டா என்னதான் ஒருத்தனுக்கு நேரம் கெட்டதா இருந்தாலும் இப்டி லந்து பண்ணக்கூடாது"
"சரிப்பா.. ஒன்னு பண்ணு நல்ல கைரேகை ஜோசியனா பார்த்து உன் கைய காட்டு சாரி அதெல்லாம்தான் எப்பவோ தேஞ்சு போயிருச்சே  இப்ப அந்த ரேகைகள் இருக்கிற இடமே வேற .. பாம் ஹிஸ்ட் ரி தெரிஞ்ச கைனகாலஜிஸ்டை தான் பார்க்கனும்"

இந்த உரையாடல் இதோட முடியலை. அன்னைக்கு ஜமா கலையற வரை இதே டெம்போல கன்டின்யூ ஆச்சு. ஆனால் அதையெல்லாம் ப்ளாக்ல வைக்க முடியாது..

ஆக ஒருத்தனை மொக்கை பண்றது தான்  சிரிப்புக்கான் சோர்ஸ். ஆனால் இந்த 43 வயசுக்கு ஆரையும் மொக்கை பண்ண மனசு வர்ரதில்லை. ஆனா யாரோ யாரையோ மொக்கை பண்ணி லந்து பண்ணா ரசிக்கமுடியறது வருத்தமா இருக்கு.(இன்னம் வளரனும்ணே! )

அதானால இந்த பதிவுல யாரோ யாரையோ என்னமோ பண்ண சிரிப்பு  வெடிச்ச கதைகளை சொல்லலாம்னு பார்க்கிறேன்.

எங்க சின்ன அண்ணன் பட்டப்படிப்பெல்லாம் முடிச்சுட்டு எத்தனை வேலை வாங்கிதந்தாலும் அதுல தொடராம  வேலை வெட்டியில்லாத தண்டத்தீனியா இருந்த காலம்.அப்பா ஜேபியை அப்பப்ப தடவிக்கிட்டே இருப்பான். கிடைச்சதை கிடைச்ச மாதிரி சுட்டுருவான்.

ராத்திரி 12 க்கு மேலதான் வீட்டுக்கே வருவான். ஆனா திரும்பி வரும்போது  எங்க தெருமுனை வரைதான்  நடந்து (அண்டர் லைன்)  வருவான். அதுக்கப்புறம் ஒரே ஓட்டமா ஓடி வந்து காலிங் பெல் மேல வச்ச கைய எடுக்காம நிப்பான். (பயமாம்). கக்கூசுல உட்கார்ந்தா கதவை தாள் போட்டுக்கமாட்டான். குவார்ட்டரோ ஹாஃபோ விட்டுக்கிட்டு வந்துருவான் . அஞ்சு தலைகாணிய தலைக்கு வச்சு படுப்பான் (வாந்தி வந்துராத இருக்க) அப்பா கச்சா முச்சான்னு திட்டிக்கிட்டே இருப்பாரு. அப்ப நான் இண்டர் படிக்கிறேன்.

ஒரு நாள் எல்லாரும் சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். ( என்னைக்கும் இல்லாத திரு நாளா
அண்ணனும் சாப்பிட்டுக்கிட்டிருந்தான்.). அப்பா "அர்ச்சனையை" துவங்கிக்கிட்டே இருந்தான். கலைஞர் பாராட்டுவிழால சனங்க பேச்சை ரசிக்கிற மாதிரி அண்ணன் ரசிச்சு கேட்டுக்கிட்டே சாப்பிட்டுக்கிட்டிருக்கான். அப்பாவுக்கு பி.பி எகிறிப்போச்சு.

"என்னடா .. நான் பாட்டுக்கு பேசிக்கிட்டிருக்கேன். எருமாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி இருக்கே. தூத்தேறி மானங்கெட்டவனே எந்திரிச்சு போடா.. இந்த வீட்டுக்கும் உனக்கும் ருணம் தீர்ந்து பொச்சு எந்திரிடா ..ஒழிடா என் வீட்டை விட்டு"ன்னு கத்தினார்.

அண்ணன் மட்டும் கூலா இன்னைய வடிவேலு கணக்கா " சாப்பிட்டுக்கிட்டிருக்கேன்ல சாப்டுட்டு போறேன்"ன்னான்.

சரிங்கண்ணா உடு ஜூட். முதலும் கடைசியுமா போடற காமெடி பிட் இதான். அம்பேல்.ஆளை விடுங்க.