Tuesday, August 25, 2015

சத நாமாவளி விளக்கவுரை: 51-75

அண்ணே வணக்கம்ணே !
என்னடா இந்தாளு ஒரு பக்கம் ஜோதிடம்ங்கறான் -இன்னொரு பக்கம் பெரியார்ங்கறான் -இப்ப பார்த்தா "அவா" கணக்கா உபன்யாசம் ஆரம்பிச்சுட்டான்னு கன்ஃபீஸ் ஆயிராதிங்க. நமக்கு மன்சன் முக்கியம். மன்சனோட பிரச்சினைகளுக்கு சொல்யூஷன் பெரியார்கிட்டே கிடைக்கிறாப்ல இருந்தா பெரியார் ( உ.ம் குரு+ராகு/கேது/சனி சேர்க்கை இருக்குன்னு வைங்க .பெரியார் தான் ஒரே வழி)

ஜோதிடத்துல தீர்வு கிடைக்குதுன்னா ஜோதிடம்.  அதுலயும் தீர்வு கிடைக்கலின்னா ஆத்தா . இதான் நம்ம ஸ்ட்ராட்டஜி. சர்வே ஜனா சுக்கினோ பவந்து .

சொந்த வாழ்க்கைய பொருத்தவரை ஜோதிடத்தை தாண்டி வந்துட்டம். ஆகே பீச்சே மூடிக்கிட்டு நடக்கறத  நடக்க விட்டுட்டா எந்த கிரகத்தாலயும் எந்த பிரச்சினையும் வரதில்லை . ஆத்தா மேட்டர்ல கூட சொந்த மேட்டர்ல -சொந்த வேலை  வரைக்கும் பார்த்துக்கறாப்ல இருந்தா ஹாய் சொல்ட்டு போயிக்கினே இருக்கலாம்.

எங்கே என்ன மிஸ்டேக் ஆயிருச்சோ தெரியல.. நம்ம லட்சியம் சொந்த ஊரு ,மானிலம்,நாடுன்னு எக்ஸ்டென்ட் ஆயிட்டே போயிருச்சு .விட்டா ஐ.நா.சபையில ஒரு நாள் க்ளாஸ் எடுக்கிற சான்ஸ் கிடைச்சா கொய்யால உலகத்தையே மாத்திரலாங்கற அளவுக்கு மதிமயக்கம். தப்பித்தவறி ஆத்தா ஏமாந்தா இந்த உலகத்தையே மாத்திரலாமேன்னு ஒரு நப்பாசை .
இந்த இழவுக்குத்தேன் சத நாமாவளி அது இதுன்னு ஆத்தாவுக்கு சோப் ஃபேக்டரியே இறக்கிக்கிட்டிருக்கன். நிற்க. சத நாமாவளி விளக்கவுரைக்கு போயிரலாமா?

51.மார்க்கண்டேய வரப்ரதாயை
மார்கண்டேயனுக்கு வரம் கொடுத்தவளே -மார்க்கண்டேயன் கதை தெரியுமில்லை? அது சரி மார்க்கண்டேயனுக்கு வரம் கொடுத்தது சிவன் தானே. இதுல ஆத்தாவ மார்கண்டேயனுக்கு வரம் கொடுத்தவளேன்னு எப்படி சொல்றது? இதானே கேள்வி. அய்யா சாமி மாரே.. அர்த நாரீஸ்வரர்னா என்ன? 50-50 .ஐயா கொடுத்தாலும் அது அம்மா கொடுத்தமாதிரி.அம்மா கொடுத்தாலும் அது அய்யா கொடுத்தமாதிரி ஓகேவா உடுங்க ஜூட்டு.

52.மஹா மாயா ஸ்வரூபின்யை
மாயா..ங்கற வார்த்தைக்கு பொருள் சொல்லனும்னா இருக்கிறாப்லயே இருக்கும்.ஆனால் இருக்காது- இருக்காது ஆனால் இருக்கிறாப்லயே ஒரு ஃபீல் ஆகும்னு சொல்லலாம்.. இந்த விதிக்கு சம கால உதாரணம் சொல்லனும்னா தமிழகத்துல நிர்வாகம்.

சாதாரணமா மாயாங்கற வார்த்தைய ஜேஜிக்கும் -பக்தனுக்கும் இடையில் தடையா இருக்கக்கூடிய வஸ்துவா சொல்வாய்ங்க.
இங்கே பார்த்தா அந்த மாயா ரூபத்துல இருக்கிறதே ஆத்தாதான். மாயா ஸ்வரூபினியும் அவளே ! ஞான ஸ்வரூபினியும் அவளே! தெய்வம் என்றால் அது தெய்வம் -வெறும் சிலை என்றால் அது சிலைதான்னு கண்ணதாசன் சொல்வாரே அந்த மோமென்ட்.

மாயான்னு புரிஞ்சுக்கிட்டா அவளே ஞான ரூபிணி . புரிஞ்சுக்கலின்னா மாயா ஸ்வரூபிணி . அவளே அவளை மறைக்கும் மாயாவாகவும் இருக்கிறாள்.அவளே அந்த மாயாவை கிழித்தெறியும் ஞானமாகவும் இருக்கிறாள்.

53.மோஹின்யை
இதன் வேர் சொல் மோகம். மோகிக்க செய்பவள் மோகினி. ஆதி யோகி சிவன். மரணம் கோலோச்சும் இடுகாட்டில் வசிப்பவன். பிணங்களை எரித்த சாம்பலையே பூசி ,பாம்புகளை அணி கலனாய் அணிந்து பேயாட்டம் போடும் பேயாண்டி.அவரையே ஜொள் விடவைக்கனும்னா என்னா மாதிரி கவர்ச்சி இருக்கனும்.

54.மீனாக்ஷ்யை
மீன் போன்ற கண்கள் கொண்டவள் . தூங்காத கண்களை கொண்டது மீன். ஆத்தாவும் BPO கணக்கா நைட் ட்யூட்டி பார்க்கிறவளாச்சே. ( நன்றி: வாரியார்)

55.மஹோதர்யை
பெரிய வயிறு கொண்டவள். அத்தனை உயிர்களையும் பெறுபவளும் அவளே. விழுங்கி முடிப்பவளும் அவளே.

56.மணி த்வீப பாலிகாயை
த்வீபம் = தீவு ,பாலிகா = ஆள்பவள். எல்லாம் சரி மணி த்வீபம் எங்க இருக்கு? மணி பூரக சக்கரமா?

57.மஹிஷாசுர மர்த்தினியை
மஹிஷம் =எருமை எருமை தலை கொண்ட அசுரனை கொன்றவளே.எருமைத்தலைங்கறது உருவகம். எருமை போன்ற அசமஞ்சனா இருந்த பார்ட்டிய போட்டுதள்ளியிருக்கலாம். ( நமக்குள்ளயும் ஒரு எருமை இருக்குங்கோ..அதான் ஈகோ -அதை சம்ஹாரம் பண்ண சொல்லி கேட்போமே)

58.நித்யாயை
புனரபி மரணம் -புனரபி ஜனனம் . உறங்குவது போலும் சாக்காடு -உறங்கி விழிப்பது போலும் பிறப்பு -இதெல்லாம் நமக்குத்தேன்.ஆனால் ஆத்தா ? நெவர் . அதனாலதேன் அவள் நித்யா.

59.ஓம்கார ரூபின்யை
இதை பத்தி எழுதனும்னா ரெம்ப கஷ்டம்.சொம்மா.. ஓஷோ சொன்ன ஒரு வரியை சொல்லி அம்பேல்.“ஓம் உங்களால் உச்சரிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. உங்களில் ஒலிப்பது. கேட்கப்பட வேண்டியது”
அந்த ஓம் என்ற ஒலிக்கு உருவம் கொடுத்தா அதான் ஆத்தா. ஓங்கார நாத ஸ்வரூபினியும் அவளே

60.பாசாங்குச தாரின்யை
பாசம் =(எம) பாசம் , அங்குசம் = ஆனைய ஹேண்டில் பண்றாய்ங்களே அது பாஸூ. இதை எல்லாம் கையில வச்சிருக்கறவள்.

61. பஞ்ச தசாக்ஷர்யை
சமஸ்கிருதத்துல உள்ள அம்பது எழுத்துக்களாவும் இருக்கிறவள்னு அருத்தம். சகலத்திலும் இருப்பவள்,சகலமாக இருப்பவள். (தெலுங்குல சகலம்னா-உடைந்த-முறிந்த- பாகங்கள்னும் ஒரு அர்த்தம் வருது) நாம நம்ம பேட்சுல உள்ள உதவாக்கரைய ஸ்க்ராப் னு சொல்றமே அந்த ஸ்க்ராபும் ஆத்தாவோட உருவம் தான்.

62.பூர்ணாயை
பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை தின்னிருப்பிங்க. அரிசி மாவுல கன்டெய்னர்.அதுக்குள்ளாற ஷுகர் லெவல்ஸை விலைவாசி கணக்கா உயர்த்தக்கூடிய இனிப்பு.அதை கூட பூரணம்னு சொல்றாய்ங்க. அதுவும் சேர்ந்ததுதான் கொழுக்கட்டை.

சகலத்திலும் -சகலமாவும் இருக்கிற ஆத்தா கொழுக்கட்டைக்குள்ள பூரணமா இருக்கமாட்டாளா என்ன?பாய்ண்டுக்கு வந்தா பூரணம்னா முழுமைன்னு அருத்தம். இங்கே உள்ள ஆண்,பெண் எல்லாமே அரைகுறை . ஆணில் பெண்மை குறைவு ,பெண்ணில் ஆண்மை குறைவு .

ஆனால் ஆத்தாவுல டெஃபிஷியன்சிங்கற பேச்சே கிடையாது. முழுமைன்னா சாதா முழுமை இல்லிங்கோ. முழுமைன்னா அதுலருந்து எதையாச்சும் பிச்சுட்டா அது முழுமையா தொடர முடியாது.

ஆனா ஆத்தா அப்டி இல்லை. கச்சா முச்சான்னு அவளோட மகோதரத்துலருந்து கோடி கோடியா உசுருங்க வந்துக்கிட்டே இருந்தாலும் முழுமையாவே தொடரும் முழுமை.

ஓம் | பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே | பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே ||

63. பரமந்த்ர சேதினி
பர = பிறரின்  ; மந்த்ர =மந்திரங்கள் ; சேதினி =அழிப்பவள்.அதாவது பிறரின் மந்திரங்களை தாக்கி அழிப்பவளேனு அருத்தம் சொல்லலாம்.
மந்திரத்துல மாங்கா விழாதும்பாய்ங்க. மனம் ஒன்றானால் மந்திரம் தேவையில்லைம்பாய்ங்க. இது ரெண்டையும் க்ளப் பண்ணி ரோசிங்க. அலைபாயும் மனம் மந்திரம் ஜெபிச்சாலும் மாங்காய் விழாது. அதே நேரத்துல மனம் குவித்து சிந்திப்பவர்கள் மந்திரம் சொல்லாவிட்டாலும் மாங்காய் விழும்.

ஒரு வேளை மனம் குவித்து சிந்திக்கக்கூடியவர்கள் மந்திரமும் ஜெபித்தால் ?
ஆக மந்திரம்ங்கறது ஒரு ஃபோர்ஸ்/சோர்ஸ் . பிறர் நம்மை காரணமே இல்லாம வெறுக்கலாம் – நாம நாசமா போகனும்னு நினைக்கலாம். அட மந்திரமே கூட ஜெபிக்கலாம். அப்ப நம்ம நிலைமை என்ன?
அவிக மந்திரங்களை ஆத்தா அட்டாக் பண்ணி ஒன்னும் இல்லாம பண்ணிருவா. இங்கே ஒரு விஷயத்தை ஞா படுத்தனும்..

நீங்க தப்பான ஆளு – எக்ஸ் பார்ட்டி சரியான ஆளுன்னு வைங்க .ஆத்தா பரமந்த்ர சேதினியா உங்களுக்கு வேலை செய்யாம போகலாம். ஆனால் எக்ஸ்பார்ட்டிக்கு கட்டாயமா ஒர்க் அவுட் பண்ணிருவா. ஆகவே சரியான ஆளா மாற பாருங்க.

64.பரபல விமர்த்தின்யை
பிறருடைய பலத்தை அழிப்பவள் . மேற்படி நாமாவுக்கு கொடுத்த விளக்கமே போதும்னு  நினைக்கிறேன்.

65.பரப்ரம்ஹ ஸ்வரூபினி
பிரம்மனுக்கும் பிரம்மாவுக்கும் வித்யாசம் தெரியுமில்லை.பிரம்மான்னா மும்மூர்த்திகளில் ஒருத்தரு. ப்ரம்ஹம்னா இந்த மும்மூர்த்திக்கெல்லாம் தாத்தா. பிரம்மத்துக்கு உருவம் -நோக்கம் -செயல் இப்படி பலதும் கிடையாது.படைப்பின் மூலம் – அசைவு -முடிவு எல்லாத்துக்கு காரணமான பவரை பிரம்மம்னு சொல்றாய்ங்க. அந்த பரபிரம்மத்தின் உருவாகவும் அவளே இருக்கிறாள்.

66.ராஜ ராஜேஸ்வர்யை
ராஜாவுக்கெல்லாம் ராஜா ஆரோ அந்த ராஜாவுக்கும் ஈ ஸ்வரி  ஆத்தாதான். Eswar(i) ங்கற வார்த்தையில swar ங்கறதை மட்டும் ஆராய்ச்சி பண்ணா பதவி ஏற்றுக்கொள்/பட்டம் சூடிக்கொள்னு அருத்தம் சொல்லனும்.ஆமாவா? இல்லையா?

67.சச்சிதானந்த ஸ்வரூபினி
சத்+சித்+ஆனந்தம். சத் =நல்ல/பாசிட்டிவ் ; சித் =மனம் . நல்ல மனதில்  திகழும்  ஆனந்தமும் அவளே.

68.சூக்ஷ்ம்னா த்வார மத்யாயை
மூக்கோட ரெண்டு துவாரங்கள் தெரியுமில்லையா? இதுல சுவாசம் நடக்கிறதை வலது  புறம்னா சூரிய நாடி -இடது புறம்னா சந்திர நாடின்னு சொல்றாய்ங்க. (இடா,பிங்களான்னும் சொல்வதுண்டு). மனம் எண்ணங்களால் நிறைந்திருக்கும் போது அந்த எண்ணங்களின் தன்மைக்கேற்ப சுவாசம் மாறும் . எண்ணமே இல்லாத நிலையில சுவாசம் நின்னுரும். (டிக்கெட் இல்லிங்கோ)

ஆனால்  முதுகெலும்புக்குள்ளாற ஒரு பாதை இருக்கு. அந்த பாதை வழியா சுவாசம் நடக்கும்னு யோக சாஸ்திரம் சொல்லுது. அந்த பாதைக்கு சூக்ஷ்ம்ணா நாடின்னு பேரு .த்வாரம் =துளைன்னும் சொல்லலாம் , வாசல்னும் சொல்லலாம்.  தலைவாசலை சிம்ஹத்வாரம்னு சொல்லுவாய்ங்க.

இதையே வேறு வார்த்தைகளில் சொல்ல ட்ரை பண்றேன்.
சுவாசம் இது ரெண்டுலயும் மாறி மாறி நடக்கும். மனசு அலைபாய்வது குறைய குறைய சுவாசத்தின் வேகம் குறையும்.மனசு ஒரே பாய்ண்ட்ல “ஜாம்”ஆயிருச்சுன்னு வைங்க. சுவாசமே நின்னுரும். அந்த நேரம் சுவாசம் இன்னொரு வழிக்கு பை பாஸ் ஆயிருது.அதான் சூக்ஷ்ம்னா நாடின்னு சொல்றாய்ங்க.

எட்டுங்கற எண்ணை தலையில தட்டி மல்லாக்க போட்டு ,காலால  லெஃப்டுக்கு ஒரு உதைவிடுங்க. இப்படியே மேல மேல  நிறைய எட்டுக்களை  ஒன்னு மேல ஒன்னா  லேண்ட்  ஆக செய்தாச்சுன்னா அதான் முதுகெலும்பு.
எட்டுல இருக்கிற ரெண்டு பூஜ்ஜியங்கள் வழியா நிறைய கேபிள் கனெக்சன்லாம் இருக்கு. ஒன்னு அவுட் கோயிங் -அடுத்தது இன் கமிங்குனு அனாட்டமி சொல்லுது.

யோக சாஸ்திரத்துல மேற்படி 2 பூஜ்ஜியத்துக்கும் இடையில ரெம்ப மைன்யூடா ஒரு பூஜ்ஜியம் இருக்கிறதாவும் அதுவழியாத்தான் குண்டலி ட்ராவல் பண்ணுதுன்னும் சொல்றாய்ங்க. இதான் சூக்ஷ்ம்னா துவாரம். துவாரம்னா துளைன்னு அருத்தமில்லிங்ணா. கதவுன்னு அருத்தம். மனசிலாயி?

69.சர்வ ஸ்வதந்த்ரா
100% சுதந்திரமானவளேனு அருத்தம்.. காற்றுக்கென்ன வேலி,கடலுக்கென்ன மூடிங்கற மாதிரி இதுவரை பட்டியலிட்ட நாமாக்களோ -இனி விளக்கப்போற நாமாக்களோ அவற்றுக்கான விளக்கங்களோ அவளை பைண்ட் ஓவர்பண்ண முடியாது.

அனாமிகான்னாலும் அவள் தான். நூறு பேரால ,ஆயிரம் பேரால ஸ்தோத்திரம் பண்ணாலும் அவள் தான். (லலிதா சஹஸ்ர நாமம்) கன்யாகாயைன்னாலும் அவள் தான் ,குமார ஜனனி,கணேச ஜனனின்னாலும் அவள் தான்.

70. ஸ்ரீ சக்ர வாசினி.
இந்த சக்கரங்களை பொருத்தவரை பலர் பலவிதமான வியாக்யானங்கள் கொடுத்திருக்கலாம். நானே கூட மாயா பீஜம் ஜெபிக்க ஆரம்பிச்ச புதுசுல ஸ்ரீ சக்ரம்லாம் வச்சு ட்ரை பண்ணியிருக்கன்.

கடைகள்ள கண்ட சக்கரங்களை வச்சு பூஜை பண்ற சனங்களை “கொய்யால இதெல்லாம் எம்ப்டி சிடி மாதிரி . இதுக்குண்டான மந்திரத்தை நீ லட்சம் தடவை ஜெபிச்சா தான் அந்த மந்திரத்தை சொல்றா தகுதி ஏற்படும். அதுக்கு பிறவு லட்சம் தடவை ஜெபிச்சா வேணம்னா இந்த சக்கரம்லாம் ஒர்க் அவுட் ஆகலாம். இல்லின்னா இதுகள வச்ச இடம் வேஸ்ட்,காசு வேஸ்ட், ஊதுவத்தி வேஸ்டுன்னு பெரியார் தனமா பகுத்தறிவு (?) பிரச்சாரம்லாம் செய்திருக்கன்.

எனக்கென்னமோ போக போக இந்த சக்கரம்லாம் ஸ்தூலமான மேட்டர் இல்லை. குண்டலி எழுச்சி பெற்று ஒவ்வொரு சக்கரத்தை டச் பண்ணும் போது இந்த சக்கரம் போன்ற காட்சிகள் கலர் எஃபெக்டோட  சாதகனுக்கு தெரிஞ்சிருக்கலாம். அந்த சமயம் அவனோட உடல் சில பல அதிர்வுகளை உணர்ந்திருக்கலாம்.

ஞாபகத்துக்கோ அல்லது பிறரின் பால் கருணை காரணமாவோ ஞாபகத்துலருந்து இந்த சக்கரங்களை வரைஞ்சிருக்கலாம். தகட்டுல கீறி கொடுத்திருக்கலாம்ங்கற மாதிரி ஹஞ்ச் வந்துருச்சு. எப்படியோ ஸ்ரீ சக்கரம் தான் எல்லா சக்கரங்களுக்கும் தாத்தா. ஒரு வேளை குண்டலி சஹஸ்ராரத்தை தொடும் போது இதன் வடிவம் சாதகர்களுக்கு மனக்கண் முன்னேதோன்றியிருக்கலாம்.

இந்த ஸ்ரீ சக்கரத்துல வசிப்பவள் ஸ்ரீ சக்கர வாசினி. ஓகேவா.

71.ஸ்வயம் ப்ரகாசாயை
சந்திரன் சூரியனோட ஒளிய கடன் வாங்கி பிரகாசிக்கிறாப்ல இல்லாம சுயமாகவே பிரகாசிப்பவள்.

72.சுர பூஜிதாயை
அசுரன்னா தெரியும் இதுக்கு எதிர்பதம் சுரன். தேவர்களால் பூஜிக்கப்படுபவள். கச கசாவை ப்ராசஸ் பண்ணி ஒரு திரவம் தயாரிச்சு அதை அவாள் குடிப்பாளாம்.அதுக்கு சுரபானம்னு பேரு. சுர பானத்தை அருந்துவோர் சுரர்கள்.அருந்தாதவர்கள் அசுரர்கள்னு கூட சொல்லலாம். சுரபானம் அருந்துபவர்களால் பூஜிக்கப்படுபவள்ங்கறது இந்த  நாமாவோட பொருள்.

73.சுந்தர்யை
சுந்தரம்னா அழகுனு அருத்தம். ஆத்தாவ விட அழகான குட்டி வேற ஆரா இருக்க முடியும்? சிவனை ஆதியோகிம்பாய்ங்க. சுடுகாட்ல பிணத்தை எரிச்ச சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கிட்டு ,பூத கணங்களோட க்ரூப் டான்ஸ் ஆடற பார்ட்டி ஈஸ்வரன். அந்த ஈஸ்வரனே கவுந்துட்டாருன்னா ஆத்தா எப்பேர்கொத்த பர்சனாலிட்டியா இருக்கனும். ரோசிங்க.

74.சுக தாயின்யை
சுகத்தை தருபவளே.

75.சனகாதி முனி ஸ்துதாயை
 சனகர் முதலான முனிவர்களால் போற்றிப்புகழப்படுபவளேனு அருத்தம்.

Monday, August 24, 2015

ஜெ'வுக்கு அனுப்பிய மெயில்

ஐயா !
இது மாண்புமிகு தமிழக முதல்வருக்கு அவர் வேட்பு மனுவில் அளித்ததாய் சொல்லப்படும் மெயில் ஐடிக்கு அனுப்பிய மெயில் . தயவு செய்து இதை முதல்வர் அம்மா கவனத்துக்கு கொண்டு செல்ல  தங்கள் இதழில்/தளத்தில்/டைம்லைனில் வெளியிட்டு பெரிய அளவில் பரப்பவும்.


____________
சித்தூர்,
விடுனர்
சித்தூர் முருகேசன்,
17-201,கும்மரா தெரு,
சித்தூர் ஆ.பி
பெறுனர்
மாண்பு மிகு தமிழக முதல்வர்
சென்னை

மதிப்பிற்குரிய அம்மா  !
வணக்கம்.  உங்களுக்கு தலைமை செயலகம், கட்சி அலுவலகம், கார்டன்
இல்லம்,பரப்பண அக்கிரஹாரா சிறைகளுக்கு அனுப்பியே பதில் இல்லாத நிலையில் -சபா நாயகர் பெயருக்கு 234 பிரதிகள் கூரியர் மூலம் அனுப்பியும் பதில் இல்லாத நிலையில்
ஏதோ "சாஸ்திரத்துக்கு" தரப்பட்ட இந்த மெயில் ஐடிக்கு மெயில் அனுப்புவதால்
பதில் கொடுத்துவிடப்போகிறீர்கள் என்று நம்ப நான் குழந்தை இல்லை.

அதே நேரம் என் முயற்சியில் நான் குறை வைப்பதே இல்லை.  நான் தங்களுக்கு
பல்வேறு முகவரிகளுக்கு  நான் அனுப்பிய மடல்களை கீழ் காணும் தொடுப்பில்
காணலாம்.

https://archive.org/details/swamy7867_gmail

இப்போது என்னை பற்றிய சிறு அறிமுகம்:

 நான் ஆந்திரத்தில் வாழும் தமிழன். என்னைப்பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல
வேண்டுமானால்  நான் ஒரு கனவு காண்பவன்.

என் கனவுகள் என்னை பற்றியவை அல்ல. இந்த நாட்டை பற்றியவை. நாட்டு மக்களை
பற்றியவை. அவர் தம் நல்வாழ்வு குறித்தவை.

என் கனவுகள் நிறைவேற ஆட்சியாளர்கள்/ நீங்கள்  மனம் வைக்க வேண்டும்.

கனவு காண்பதை 1986 லும் ,கனவுகளை ஆட்சியாளர்கள் பார்வைக்கு கொண்டு
செல்வதை 1998 லும் துவக்கி விட்டவன் நான்.

இவை தொடர்பாக நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அவற்றை விலக்கி வைத்து
லேட்டஸ்ட் அப்டேட் மட்டும் கீழே  தருகிறேன்.

மோடி பிரதமர் ஆகி 100 நாட்கள் நிறைவடைந்த தினம் ஒரு பிரதமர் நினைத்தால்
என்னெல்லாம் செய்யலாம் என்று ஒரு பதிவு போட்டேன்.

அதை ஆங்கிலப்படுத்தி மோடி அவர்களுக்கு தபால் மூலம் அனுப்பினேன்.
ஆரம்பத்தில் பதில் இல்லை.

பிறகு ஆர்.டி.ஐ மூலம் விண்ணப்பிக்க " we acknowledge the receipt of your
letter and it is kept on record" என்று ஒரு பதில் வந்தது.

இவற்றை (என் கனவுகள் -மற்றும் பிரதமர் அலுவலக பதில்) சிறு நூலாக
அச்சிட்டு தமிழ்/தெலுங்கு மக்களுக்கு இலவசமாக வினியோகித்து வருகிறேன்.

மோடிக்கு நான் அளித்த யோசனைகளை  கீழ் காணும் தொடுப்பில் காணலாம்
https://www.change.org/p/sri-narendramodi-suggestions-to-modi-for-skill-india
இவற்றில் மானில அளவில்  அமல் படுத்தக்கூடிய விஷயங்களை தாங்களே அமல் படுத்தலாம்.
மத்திய அரசு அமல் படுத்த வேண்டிய விஷயங்களை அதன் கவனத்துக்கு கொண்டு செல்லலாம்.

-

Friday, August 21, 2015

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி விளக்கம் (26 -50)

அண்ணே வணக்கம்ணே !
ஸ்ரீ அம்மன் சத நாமாவளி விளக்கம் தொடருது .

26.திவ்யாயை
கொளந்தை ஆடினா திவ்யமா இருக்கும் – மாமி ! காஃபி திவ்யமா இருக்கு
இது அவா  ஒக்காபிலரி.இதுல திவ்யம் ங்கற வார்த்தைக்கு ” நல்லா இருக்கும்”ங்கற  நீர்த்து போன அருத்தம் தான் வருது. அமானுஷ சக்திகளுக்கு தெலுங்குல திவ்யசக்தின்னு சொல்வாய்ங்க. இங்கே திவ்யங்கற வார்த்தைக்கு “அதிசயம்”ங்கற அருத்தம் வருது.
ஆத்தாவே ஒரு அதிசயம் தானே. செயலும் அவளே , செயல்படுபவளும் அவளே, செய்யப்படும் வினையும் அவளே. லாஜிக் உதைக்குதுன்னாலே அது அதிசயம் தானே.

27.ஈஸ்வர்யை
ஓனர் ,தலைவின்னு சொல்லலாம். இந்த படைப்புக்கு ஓனர் அவள் தானே.. இன்னைக்கு செலாவணியில உள்ள தலைவியரோட லொள்ளை பார்க்கிறோம். அவிக இருப்புக்கும் வரவுக்கும்  சனம் கொடுக்கிற அலப்பறைய பார்க்கிறோம்.
வெந்ததை தின்னு விதி வந்தா சாகப்போற இந்த தலைவிகளுக்கே இம்மாம் பில்டப்புன்னா ஆத்தாளுக்கு எம்மாம் பில்டப் கொடுக்கனும்.
ஆனா ஆத்தா அப்படியில்லை. ஸ்தோத்திர பிரியைன்னு ஒரு நாமா இருந்தாலும் – தன்னை கழுவி கழுவி ஊத்தினாலும்  டென்சன் ஆறதில்லை, அவதூறு வழக்கு பாயறதில்லை, கைது பண்ணி ஜில்லா ஜில்லாவா சுத்தல்ல விடறதில்லை.
க.க ஊத்தறதை கூட நிந்தா ஸ்துதின்னு ஏத்துக்கிட்டு ஃபேவர் பண்ணிர்ரா. ( நம்ம மேட்டர்ல இதான் ஒர்க் அவுட் ஆச்சு. சீன் மாறிப்போச்சு.அன்னைக்கு பிடிச்ச சூடு ..இதோ  8  வருசமாகியும் ஆறவே இல்லை. வண்டி ஓடிக்கிட்டிருக்கு.

28 குண.த்ரய சம்யுக்தாயை :
தமோ..ரஜோ,சத்வ - இதை திரிகுணங்கள்னு சொல்வாய்ங்க. (திரி=3 ) சம்யுக்தா என்றால் அனைத்தையும் உள்ளடக்கி இருப்பவள்னு அருத்தம்.

29.கௌரி மாத்ரே..
மாத்ரே =அம்மா ,கௌரி ? கௌரிங்கற வார்த்தைக்கு”ப்ரைட்”னு அருத்தம் வருதுங்கோ. க்ளோ,க்ளோரிங்கற வார்த்தைக்கும் கௌரிங்கற வார்த்தைக்கு என்னா ஒத்துமை?
ஆனால் கௌரிங்கற வார்த்தையோட வேர் சொல் கிரியா இருக்கும்னு ஒரு ஹஞ்ச்.  இன்னொரு  நாமா கிரி ராஜ ஸ்துதாயைனு வருது. கிரிராஜனோட மகள் அல்லவா அவள். அப்பா பேரை வச்சு இன்னும் சில பேர் எல்லாம் உண்டு. ஹைமாவதி ,கிரிஜா

30.காயத்ரி மாத்ரே
தமிழ் க்யூப் டாட்காம் அடிச்சு பார்த்தா Mother of the Vedas , Goddess Saraswati னு வருது.காயத்ரி மந்திரத்தையும் மென்ஷன் பண்ணியிருக்காய்ங்க. காயத்ரின்னாலே அது ஏதோ அவாளோட பேடன்ட் ரைட் மாதிரி ஒரு ஃபீல் வரும். பிராமணாள்னா காயத்ரி மந்திரம் செபிச்சே ஆகனும். ஆனால் ஒரு முரண் என்னனா காயத்ரியை தந்தவனே ஒரு சத்திரியன், விஸ்வாமித்திர மகரிஷி .

31.கணேச ஜனன்யை
கணேசனுக்கு அம்மானு அருத்தம். கணேசன்ங்கற வார்த்தைக்கு கணங்களின் தலைவன்னு அருத்தம்.  பூத கணங்களின் தலைவன் சிவன் தானே. அது செரி அங்கயும் வாரிசு அரசியல் போல.

32.கிரி ராஜ ஸ்துதாயை
திருவிளையாடல் படம் பார்த்திருப்பிங்க. சாவித்திரியம்மா அப்பா பண்ற யாகத்துக்கு போறேன்னு அடம்பிடிப்பாய்ங்க.சிவாஜி வேணாம்னுவாரு. ஞா வருதா. அந்த அப்பா தான் கிரிராஜன். சாதாரணமா குழந்தை தான் பெத்தவுகளை துதிக்கும். இங்க அவள் என்ன வெறும் குழந்தையா? அத்தனை உயிர்களையும் பிரசவிக்கும் மகோதரி அல்லவா? ( மகா+உதரம் =மகோதரம் :பெரிய வயிறு கொண்டவள் -இதையே நெகட்டிவா பார்த்தா எல்லா உயிர்களையும் விழுங்கும் பெரு வயிறு படைத்தவள்னும் சொல்லலாம்). ஆகவே பெத்த தகப்பனே துதிக்கும் மகள் இவள் (தாய்)

33.ஹ்ரீங்கார பீஜாக்ஷர்யை
மொதல்ல பீஜம்னா என்ன? நேரடி அருத்தம் விதை . மந்திரம்ங்கறது செடின்னா -பீஜம்ங்கறது விதை . மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லைம்பாய்ங்க. மனசு செம்மையா இல்லாதவன் தானே ஆன்மீகம் அது இதுன்னு அல்லாடறம். அதனால மந்திரம் தேவை தான். மந்திரம் என்ன பண்ணும்னா .. மனசை செம்மையாக்கும்.
மனதுக்கு வியாதி வரும் (மேற்கத்திய சித்தாந்தம்) மனமே வியாதி (கிழக்கத்திய சித்தாந்தம்)  மனசுக்கு பின்னாடி இருக்கிற ஐட்டம் நமக்கு அவெய்லபிள் ஆகனும்னா மனசு ஒழியனும்.
மனசுன்னா என்ன?  நினைவுகளின் தொகுப்பு. அது எந்த வடிவத்துல இருக்கு? சொல்.சொல்வடிவத்துல இருக்கு. கொளந்தைங்க மைண்ட்ல வேணம்னா விஷுவலா இருக்கும். ஒரு கட்டத்துல விஷுவல் எல்லாம் ஃபணால் ஆகி வெறும் சொற்கள் தான்.
ஒரு ஆடியோ கேசட்ல என்னென்னமோ இழவெல்லாம் ரிக்கார்ட் ஆகியிருக்கு . அதை ஒழிக்கனும்னா ரெண்டு வழி . ஒன்னு ஏ.சி ரூமுக்குள்ள உட்கார்ந்து -சவுண்ட் ப்ரூஃப் - ரிக்கார்ட் +ப்ளே பட்டனை அழுத்திரனும். அதுக்கு வசதியில்லின்னா ? வேற எதையாவது பதிவு பண்ணிரனும். ஆனால்  அது ஒரே ஒரு எழுத்தாவோ -மிஞ்சிப்போனா ஒரு வரியாவோ இருக்கனும். அதுக்கு பெருசா அருத்தம்-உள்ளருத்தம்லாம் இருக்க கூடாது .அதையே மறுபடி மறுபடி ரிக்கார்ட் பண்ணிரனும். இந்த டெக்னிக் தான் மந்திரம். (ஒரு வரி)
பீஜம்ங்கறது பெரிய சப்ஜெக்ட். சமஸ்கிருதத்துல இருக்க கூடிய அம்பது எழுத்துக்களில் எந்த எழுத்துக்கு  மிந்தி "ம்" சேர்த்தாலும் அது பீஜம்.  உ.ம் GAM - இது கணபதி பீஜம்.
பீஜத்தை உச்சரிக்கும் போது உதடுகள் ஒட்டுது. வாயும்-ஆசனமும் ஒரே குழாயின் ஆரம்பமும் முடிவுமா இருக்கு. மூலாதாரம் ஆசனத்துக்கு சற்று மேல இருக்குங்கறாய்ங்க. வினை-எதிர்வினை ஆக்சன்-ரியாக்சன்ங்கற விதிப்படி பீஜம் உச்சரிக்கப்படும் போது என்னமோ நடக்குது .மூலாதாரத்துல அதிர்வுகள் ஏற்படுது .இதனால    குண்டலி ஆக்டிவேட் ஆகுது .
இந்த விதிப்படி ஹ்ரீம்ங்கறது ஒரு பீஜம். (சூரியன் -கிட்ணரு-ஆத்தா இப்படி பலரையும் டார்கெட் பண்ற பீஜம் இது) .  நாமி -நாமா விதியை நம்ம முன்னுரைல படிச்சிருப்பிங்க. பெயருக்கே அந்த பவர்னா பீஜத்துக்கு? ஆகவே ஆத்தா இந்த பீஜமாவே இருக்காளாம்.
ஹ்ரீம் மாயா பீஜம். புவனேஸ்வரிக்கு உரிய பீஜம். இதன் பெசாலிட்டி செத்துப்போனதுக்கு உசுரு கொடுக்கிறது.மேலும் இந்த ப்ராசஸ் எப்படி நடந்ததுன்னு ஜெபிச்சவனுக்கே தெரியாதுன்னா சுத்து வட்டாரத்துல உள்ளவிகளுக்கு ? ஊஹூம்.ஒன்னமே புரியாது.கன்ஃபீஸ் ஆயிருவாய்ங்க.
கையில காலணா இல்லாம ஹ்ரீம்கார் பப்ளிகேஷன்ஸுன்னு ஆரம்பிச்சு ஒரே நேரத்துல 4 புஸ்தவம் போட்டு 419+419 செட் ஆஃப் புக்ஸ் வித்தம்னா -அதுவும் அந்த நேரம் மவளோட கண்ணால நேரம்  கடந்த 15 வருசமா இந்த பீஜத்தை ஜெபிச்சதோட மகிமை இதுன்னு புரிஞ்சுக்கோங்க.

34.ஹ்ரீம் மயீ தேவினே
ஹ்ரீம் = பீஜம் , மயீங்கற வார்த்தை  ……மயமா இருக்கிறவளேங்கற பொருளை கொடுக்குது. நாம லேசா பட்டைய போட்டு (விபூதிய சொன்னேன் பாஸ்) வெளிய வந்தாலே என்னப்பா “பக்தி மயமா “இருக்கேம்பாய்ங்க.
இங்கே இந்த மந்திர ஜெபம் பத்தி சின்ன க்ளேரிஃபிகேஷன்.  அந்த காலத்துல கை பம்பு இருக்கும். தண்ணிய மேல இழுக்கனும்னா மொதல்ல கொஞ்சம் தண்ணிய பம்புல விட்டு அடிப்பாய்ங்க. அதை போன்றது தான் நாம மேன்யுவலா ஜெபிக்கிறதும்.
ஆக்சுவலா மந்திர ஜெபம் நமக்குள்ளே ஏற்கெனவே நடந்துக்கிட்டிருக்கும் பாஸு.ஆனா நாமதேன் உணர்ரதில்லை .ஏ.ஆர் ரஹ்மான் மியூசிக்கை கேட்டுக்கிட்டிருக்கும் போது காற்றில் வரும் கீதம் செவிக்கு உறைக்குமா என்ன?
ஆக மேன்யுவலா மந்திரங்களை ஜெபிக்க ஆரம்பிச்ச சில காலத்துல அந்த மந்திர ஜெபம் “தானா” நடக்கனும். காலாகாலத்துக்கும் நான் தான் “வலிந்து” ஜெபிக்கிறேன் என்றால் இத்தனை கால மந்திர ஜெபத்தின் போது  உங்க மனசு அங்க இல்லைனு அருத்தம்.

35.ஹேம பூஷித விக்ரஹாயை
தமிழ்ல இமயமலைங்கறம். ஆக்சுவல் உச்சரிப்பு ஹிமாலயம். ஹிமம் -ஹேமம்ங்கறதெல்லாம் ஒரே பொருளை தரும் சொற்கள். ஹிமம் =பனினு அருத்தம்.  பூஷணம் = அணி கலன். பனியை அணிந்திருப்பவளேனு அருத்தம்.  இங்கன விக்ரகம்னா சிலைனு புரிஞ்சுக்கப்படாது. விக்ரஹம்னா பாடி.
ஆத்தா ரெசிடன்ஸு இமயம்ங்கறாய்ங்கல்ல -இமயத்துல பனி தானே பாடி மேல படரும். அதனால ஹேம பூஷித விக்ரஹாயை.
சென்னையில வசிக்கிறவுக தூசியை அணிகலனா அணியலையா, காட்டன் மில்லுல பஞ்சை அணியலியா? அப்படித்தான் இதுவும்.

36.ஹூம்கார ஐங்கார ஸ்வரூபிண்யை
ஏற்கெனவே சொன்னேன். அம்பது எழுத்தும் ஆத்தாதா. அந்த எழுத்தோடு “ம்” சேர்ந்து உருவாகும் பீஜங்களும் ஆத்தாதா. இதுல ஹும் , ஐம் ஆகியவையும் பீஜங்களே. அந்த பீஜங்களின் வடிவானவளேன்னு அருத்தம்.
ஹும் – இது ரெம்ப பவர் ஃபுல்லுங்ணா.  நாம ஆருக்குனா ஆப்படிச்சு -அவனால எதுவும் பண்ண முடியாத சந்தர்ப்பமா இருந்து நம்மை – நாம செய்த துரோகத்தை நினைச்சுக்கறப்பல்லாம் அந்த சிந்தனையை உதற “ஹும்”னு பெருமூச்சு விடுவான்.
ஒரு கட்டத்துல என்னென்னமோ நடந்து குண்டலி எக்கு தப்பா ரெய்ஸ் ஆயிருச்சுன்னு வைங்க நம்ம  வம்சமே காலி.ஆகவே ஆருக்கும் துரோகம் பண்ணிராதிங்க. ஒரு துரோகம் பல பிறவிகளின் ஜப தபங்களை ஸ்வாஹா பண்ணிரும்.
மக்களுக்கு துரோகம் பண்ற அரசியல் வாதில்லாம் நல்லாதானே இருக்கான்னு எதிர்வாதம் பண்ணாதிங்க. கிட்டக்க போயி பார்த்தாதானே தெரியும்.
ஐம் சரஸ்வதி பீஜம். இன்னைக்கு நமக்கு தெரிஞ்ச  காலணா தெலுங்கை வச்சு இந்த சத  நாமாவளிக்கு பொருள் விளக்கம் தந்துக்கிட்டிருக்கம்னா இதுக்கு  காரணம் ஐங்கார பீஜ ஜெபம் தானு நினைக்கிறேன்.

37.ஜனன்யை
ஜனகன் =தந்தை ,ஜனனி =தாய் , நம் அன்னையரை பெற்ற அன்னைங்கறதால பாட்டின்னு சொல்லலாமுங்கோ. அதே சமயம்  நாம பண்ற அழிச்சாட்டியத்தை எல்லாம் பொருத்துக்கிட்டு இருக்கிறதால நாம அல்லாருக்குமே தாய் தான் அவள். தாயை தவிர வேறு ஆரால இவ்ள பொறுமையா இருக்க முடியும்.

38.ஜகத் காரிண்யை
ஜகம் = உலகம் ; காரிணி : காரணமானவள் சேர்த்து படிக்கும் போது உலகம் உருவாக- நிலைக்க காரணமானவள்.

39.ஜ்யோதிர்மயீ
ஜோதி வடிவானவள். கண்ட கண்ட சோப்பு,களிம்பு ,வாசனாதி திரவியங்களை போட்டு நம்ம பாடியோட நேச்சுரல் ஸ்மெல் காணாம போயிட்ட மாதிரி பளீர் வெளிச்சங்களை பார்த்து இருட்டின் வெளிச்சத்தை பார்க்க முடியாம ஆயிட்டம்.
ஹை டெசிபல்ஸ்ல சவுண்ட்ஸ் கேட்டு கேட்டு நம்ம பாடிக்குள்ள ஏற்படற சத்தங்களை கேட்க முடியாம ஆயிட்டம். கவனத்தை ஆக்னாவில் வைத்து ( நடு நெற்றி) தியானம் செய்யும் போது தேசலா ஒரு ஜோதி தெரியும். இதை வெளிக்கொணர கை பம்புல தண்ணி ஊத்தி அடிச்சாப்ல நெய் தீபம் ஏற்றி அதை தொடர்ந்து பார்த்து தியானிக்கும் முறையும் ஒன்று உண்டு. அந்த ஜோதி அவள் வடிவம் தான். ஆன்மீகத்துல புறவுலகில் நாம என்ன செய்தாலும் அதெல்லாம் நம்ம அக உலகில் உள்ளதை நினைவுப்படுத்தத்தான். உ.ம் மணியோசை ,பூவலங்காரம், நெய் தீபம் ,கற்பூர ஜோதி .
கண்ணதாசன் டப்பிங் தியேட்டருக்கு வந்ததும் ஊதுவத்தில்லாம் அணைச்சுர சொல்லுவாராம். “பொம்பள,பூ தவிர எல்லாமே அலர்ஜி ஆயிருச்சுப்பா”ம்பாராம். அப்பத்தேன் பாட்டு வரும்.
அதை போல மேற்படி ஜோதி சமாசாரம்லாம் ஒர்க் அவுட் ஆகனும்னா இருட்டை பழகிக்கோனம். உள்ளாற இருக்கிற வெளிச்சத்தை பரிச்சயம் பண்ணிக்க பார்க்கோனும்.

40.ஜ்வாலா முகே
ஜ்வாலா =ஜ்வாலை முகே =முகம். லேட்டஸ்டா மொகர புஸ்தவத்துல ஒரு மேட்டரை பார்த்தேன். நெருப்புக்கு நிழல் கிடையாதாம்.  நெருப்போட பெசாலிட்டி என்னன்னா அதை தலை கீழா பிடிச்சாலும் மே நோக்கி தான் எரியுமாம். யோகக்கனல் கூட்டிம்பாய்ங்க.  நெற்றிக்கண்ணில் இருந்து 6 பொறிகள் கிளம்பிருச்சும்பாய்ங்க. இதெல்லாம் உருவகங்கள் குண்டலி மே நோக்கி பாய இதெல்லாம் சாத்தியமே. யோகினியான ஆத்தா ஜ்வாலா முகியா இருக்கிறதுல ஆச்சரியம் என்ன?

41.காளிகாயை
நாம தமிழ்,தெலுங்குல தான் காளினு சொல்றம். சமஸ்கிருத்துல “காலி”  “காலி மா” .தமிழ்ல காலிங்கற வார்த்தைய வசவா உபயோகிக்கிறோம். காலிங்கற வார்த்தையின் வேர் சொல் “கால்” இதற்கு காலம், காலன் என்ற இரண்டு அருத்தம் வருது.
சூல் = கரு , சூலி = கருவுற்றவள், சூலம் =ஆயுதம், சூலி = சூலம் தாங்கியவள். இதை போல காலத்தை காலனை தரித்தவள், தாங்குபவள் காளி.
காலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவள் காளி. ராமகிருஷ்ணர் காளி உபாசகர். “சாதகனின் சாதனையின் தீவிரத்தை பொருத்து  அவனது சூழல்,உற்றார் பெற்றோர் ஏன் அரசர்களின் மனம் கூட மாறும்”னு சொல்றாரு.
அடிக்கடி “ஹும்..கலிகாலம்” ” ஹும் கலி  முத்திப்போச்சுங்கறாய்ங்க. ஆனால் காளி நினைச்சா சாதகனை பொருத்தவரை கலியுகத்தை கூட திரேதாயுகமாவோ ,திரிஷாயுகமாவோ மாத்திர்ராள்.

42.காமாக்ஷ்யை
காம =விரும்பத்தக்க , க்ஷ/க்ஷி =கண்கள் உடையவன்/உடையவள்.விசாலாக்ஷி =அகலமான விழிகளை கொண்டவள் ,மீனாக்ஷி = மீனை போன்ற கண்களை கொண்டவள் .
வேணம்னா  தமிழ்ல காமாட்சின்னு தானே சொல்றம். அதனால காம+ஆட்சி = காமத்தை ஆட்சி செய்பவள்/காமத்தை கொண்டு ஆட்சி செய்பவள்னும் அடிச்சு விடலாம்.

43.கன்யகாயை
ஜஸ்ட் 7 பெயர்களுக்கு மிந்தி தான் ஜனன்யைனு படிச்சம். ஜனனி =தாய்.  ஒருத்தி தாயாகிறாள்னா தன் கன்னித்தன்மையை இழந்தாத்தான் தாயாக முடியும். ஆனால் கோடானு கோடி உயிர்களை பெற்ற ஜகத் ஜனனி அதெப்படி கன்னியா இருக்க முடியும்? கன்னியெனில் தாயாக முடியாது – தாய் எனில் கன்னியாக இருக்க முடியாது . என்ன ஒரு அழகான முரண். அரசியல்ல எதிரியை தூற்ற “முரண் பாடுகளின் மொத்த உருவம்”னு சொல்வாய்ங்க.
ஓஷோ சொல்லும் நொடிக்கு நொடி வாழ்தல் சாத்தியமானால் தாயானபின்னும் கன்னியாவே தொடரமுடியும். பல ஆன்டிங்க  இன்னமும் ஸ்டெல்லா மெரீஸ் கணக்கா கொஞ்சி கொஞ்சி பேசறதை பார்க்கிறிங்களா இல்லையா?
ஸ்ரீ தேவி ஆஃப்டர்  ஆல் மனிதப்பிறவி . ஒரு படத்துல என்டிஆருக்கு பேத்தியா நடிச்சு பிறவு அவருக்கே சோடியாவும் நடிச்சாய்ங்க.
நாகேஸ்வர்ராவுக்கு சோடியா நடிச்சதும் அதே ஸ்ரீ தேவி தான். பிறவு நாகார்ஜுனாவுக்கு சோடியா நடிச்சதும் அதே ஸ்ரீ தேவி தான்.
ஒரு மனிதப்பிறவிக்கே இது சாத்தியம்னா  அந்த ஸ்ரீதேவிக்கு பாட்டியை எல்லாம் படைச்ச ஆத்தாவுக்கு எது தான் அசாத்தியம்.  லூஸ்ல உடுங்க.
44.குமார ஜனன்யை
குமாரன்/குமரன் = முருகன் , முருகனை பெற்றவள்

45.காலாயை
கால்= காலம்/எமன் ( ஏற்கெனவே பார்த்திருக்கம்). மனிதனை மகானாக்கிறது காலம், மகானை குற்றவாளி கூண்டுல ஏத்தறது காலம். ராமராஜனை 10 வருசத்துக்கு புக் பண்ண வச்சது காலம். கலைஞரை 13 வருசம் வனவாசம் செய்ய வச்சது காலம். இப்பம் புரியுதா காலம் எவ்ளோ பவர் ஃபுல்னு. அந்த காலமாகவும் இருக்கிறது ஆத்தா தான்.

46.காலாதீதாயை
காலமாகவும் இருக்கிறா. காலனாகவும் இருக்கிறா. இவற்றிற்கு அதீதமானவளாவும் இருக்கா.

47.கர்ம ஃபல ப்ரதாயை
நம் செயல்களுக்கான பலனை தருபவள்.

48.காம கோடி பீடஸ்தாயை
காமம் =விருப்பம்;   கோடி விருப்பங்களை பீடமாய் கொண்டு வீற்றிருப்பவள். நம் ஒவ்வொரு விருப்பத்தின் மீதும் பீடமிட்டு அமர்ந்திருப்பவள் அவளே. விருப்பங்கள் உழைக்க தூண்டுகின்றன. கருமம் (வினை) செய்ய தூண்டுகின்றன.அதற்கான பலனை தருபவளும் அவளே. அதே சமயம்  விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள நாம எடுக்கிற “ஸ்ட்ரெய்ன் “நம்  பூர்வ கருமங்களை  ஒழிக்கிறது. விருப்பத்தின் உருவில் நம்மை தூண்டி -பூர்வ கருமங்களை ஒழிக்கவும் அவளே உதவுகிறாள்.(பாசிட்டிவ் அப்ரோச் )

49.லலிதா பரமேஸ்வர்யை
நாம தமிழ்ல கலைகளை  நுண்கலைகள், மென் கலைகள்னு சொல்றமில்லையா அதை போல தெலுங்குல லலித களலுன்னு சொல்வாய்ங்க. லலிதம் ங்கற வார்த்தைக்கு மென்மையான,அழகான இப்படி அர்த்தம் சொல்லலாம்.
பரம =அல்ட்டிமேட்? முழுமையான (பரம திருப்தி -பரமானந்தம்) இகம்-பரம்ங்கற கோணத்துல பார்த்தா அவ்வுலக/இவ்வுலகத்துக்கு வெளியிலான , ஈஸ்வரி = தலைவி
ஆக மென்மையான பரலோக தலைவி?

50.லீலா வினோதின்யை
லீலா = ஒரு நோக்கமும் அற்ற செயல்? வினோதம் =புதுமை /பொழுது போக்கு . இந்த படைப்புக்கோ -படைப்பின் போக்கிற்கோ எதாவது நோக்கம் இருக்குனு நம்பறிங்களா? ஊஹூம். எல்லாமே ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கில் – போய்க்கிட்டே இருக்கு. பிறவிச்சக்கரத்தை பொருத்தவரை என்னை மாதிரி பார்ட்டிங்க.. எல்லாமே ஒரு பர்ஃபெக்சனை நோக்கி போயிட்டிருக்குன்னு சொல்றம். இந்த பிறவிச்சக்கரத்தின் இலக்கு முக்தின்னு சொல்றம்.
ஆனா  எது எப்பம் வேணம்னா யு டர்ன் எடுத்துக்கலாம்.சொல்லவே முடியாது. ஒரு ஃபேக்டரிய எடுத்துக்கங்க. ஒரு ப்ராடக்ட் ஃபினிஷ் ஆகனும்னா எத்தனையோ ஸ்டேஜை தாண்டவேண்டியிருக்கு. எங்கயோ ஒரு இடத்துல பல்பு வாங்கிட்டா மறுபடி அது ஸ்க்ராபுக்கு போயிருது. அடியை பிடிடா பரதப்பட்டான்னுஆயிருது.
இதெல்லாம் நமக்கு வேணம்னா  வேதனையா இருக்கலாம்,சாதனையா தோனலாம்.ஆனால் ஆத்தாவுக்கு? இதெல்லாம் ஜஸ்ட் ஒரு ஃபன். லீலா.வினோதம் தான்.

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி :விளக்கம் (1-25)


அண்ணே வணக்கம்ணே !

எச்சரிக்கை:
இந்த விளக்கம் எனக்கு நானே கொடுத்துக்கிட்டது . இதை ஏற்பவர்கள் ஏற்கலாம்.ஏற்காதவர்கள் தங்கள் விளக்கத்தை கமெண்ட்ல தரலாம் .
நோ ப்ராப்ளம் !

1.அம்பிகாபுர வாசின்யை ஸ்வாஹா
சிவாஜி வசித்த சாலை சிவாஜி கணேசன் சாலையாகிறது , ஒய்.எஸ்.ஆர் வாழ்ந்த  மாவட்டம்  ஒய்.எஸ்.ஆர் மாவட்டம் ஆகிறது .அம்பிகை வசிக்குமிடம் அம்பிகாபுரம்.
அம்பரம் = வான். அம்பிகா = வானில் வசிப்பவள்? வான் போல் உயர்ந்த உள்ளங்களில் வசிப்பவள்னும் சொல்லலாமா?  நிலாவை அம்புலின்னு சொல்றம் .அம்பிகாங்கற வார்த்தைக்கு நிலவின் தேவதைன்னு கூகுள் சொல்லுது.
மனித உடலில் சூரிய மண்டலம் சந்திர மண்டலம்னு இருக்கு . இதெல்லாம் பின்னாடி விரிவா வருது அப்ப பார்த்துக்கலாம். இப்ப பாய்ண்டுக்கு வந்துருவம் .அம்பிகை வசிக்குமிடம் அம்பிகாபுரம். அம்பிகாபுரத்தில் வசிப்பவள் அம்பிகாபுர வாசினி .

2.அன்ன பூர்ணேஸ்வர்யை ஸ்வாஹா
கேடு கெட்ட அரசாங்கம், மனிதமற்ற பொருளாதார நிபுணர்கள் கூட உணவுப்பொருள் குறியீடு குறைஞ்சு போச்சுன்னு பதர்ராய்ங்க. உணவுப்பாதுகாப்பு ,இலவச அரிசி .ஏன்னா அன்னம் இல்லின்னா எமன் கன்னம் வச்சு உயிரை ஆட்டைய போட்டுக்கிட்டு போயிருவான்.
காந்தி,சசி பெருமாள் எல்லாம் எத்தனையோ நாள் உண்ணாவிரதம் இருந்தாய்ங்களேம்பிங்க. அந்த சக்திய கொடுத்தது மனோசக்தி. (சக்தி அண்டர்லைன்)
பூரணம் =முழுமை ,அன்ன பூரணம் பூரணமான அன்னம் .அதாங்க முழுமையான சத்துணவுங்கறாய்ங்களே.. அதுக்கு ஈஸ்வரி  ஆத்தா.
ஈஸ்வரன்னா பாஸ். ஈஸ்வரின்னா லேடி பாஸ். காசிருக்கேன்னு  365 நாளும் - 3 வேளையும்  அரிசி சோறு  சாப்டு ஷூகரு,பீசா பர்கரு சாப்டு  நெஞ்சுல எரிச்சல்,பைல்ஸ் வாங்கறதுல்ல. திட்டமிட்ட சரிவிகித சம உணவு . இதுக்கு பேருதான் முழுமையான உணவு . இந்த முழுமையான  உணவுக்கு  தலைவி ஆத்தா.

3.அகிலாண்டேஸ்வரி
அண்டம்னா உலகம், அகிலாண்டம் சகல உலகங்கள். சகல உலகங்களுக்கும் பாஸ்.

4.அம்ருத்தாயை
அம்ருதம் =அமுதம் , சாகாவரம் கொடுக்கிற லிக்விட்.  டீ சாப்பிடறவனோட நட்பு கிடைச்சா டீ கிடைக்கும். சரக்கு பார்ட்டியோட சேர்ந்தா சரக்கு கிடைக்கும்.ஆத்தா கூட டீல் வச்சுக்கிட்டா அமுதம் கிடைக்கும் பாஸ்.
அதுக்காவ 120 பூர்ணாயுசு  இருப்பம், சாவே வராதுன்னெல்லாம் கனவு காணாதிங்க. நொடிக்கு நொடி செத்து பிழைக்கிறோமே அந்த “பாவத்து” இருக்காது.  நம்ம பிறப்புக்கு முன்னே -இறப்புக்கு பின்னே எந்த டைமன்ஷன்ல இருந்தமோ -இருக்கப்போறமோ அந்த டைமன்ஷனை ஒரு தாட்டி அனுபவிச்சுடா சாவாவது இன்னொன்னாவது?

ஆக ஆத்தாள “கவர் பண்ணி “வச்சுக்கிட்டா உங்க எண்ணத்துல அமுதம் இருக்கும், எண்ணமெல்லாம் செயலாகும். உங்க  பேச்சுல அமுதம் இருக்கும், உங்க பேச்சு கவர்ன்மென்ட் ஜீ.ஓ வை விட பக்காவா அமலாகும். பிணத்துக்கு உயிரூட்டும்னு பீலா விட மாட்டேன்.ஆனால் செத்தவன் போல இருந்தவன் கூட துள்ளி எழுவான். வாக்கு பலிதம் உண்டாகும்.

5.ஆர்த்த ஜன ரக்ஷின்யை
ஆர்த்த = உதவி நாடி வந்த சனங்களை சேஃப் பண்றவ. அன்னார்த்துலு = சோத்துக்கு இல்லாதவுக

6.ஆத்யந்த சிவ ரூபாயை
ஆதி =ஆரம்பம், அந்தம் =முடிவு ,டாப் டு பாட்டம் சிவ ரூபமாக இருக்கிறவள். சிவம்னா ஒரு கேரக்டர் மட்டுமில்லிங்ணா. சிவம்னா மங்களம்/சுபம்/பாசிட்டிவ் இப்படி பல அருத்தம் இருக்கு. ஆத்தாவுல நெகட்டிவ்னு எதுனா இருக்குமா? டாப் டு பாட்டம் பாசிட்டிவ் எனர்ஜிதான்.
புருசன் பொஞ்சாதிகளை கவனிச்சு பாருங்க. கண்ணாலமான 6 மாசத்துலயே புருசன் கேரக்டர் பொஞ்சாதிக்கும் -பொஞ்சாதி கேரக்டர் புருசனுக்கும் லேசா ட்ரான்ஸ்ஃபர் ஆக ஆரம்பிச்சிருக்கும்.
அய்யனும் ஆத்தாளும் ஆதி தம்பதிகளாச்சே. அதான் சிவ ரூபமா இருக்கா ஆத்தா.

7.அஷ்டைஸ்வர்ய ப்ரதாயின்யை
ப்ரதாயினின்னா தருபவளேன்னு அருத்தம். எதை தருபவள்? அஷ்ட ஐஸ்வர்யங்களை தருபவள். அஷ்ட லட்சுமின்னு ஒரு கான்செப்ட் இருக்கில்லை. வித்யா லட்சுமி,தன லட்சுமி,வீர லட்சுமி,சந்தான லட்சுமி எட்செட்ரா..( ஷோடச லட்சுமின்னு ஒரு கான்செப்ட் கூட இருக்குப்போ – 16 லட்சுமியாம் -16 ம் பெற்று பெரு வாழ்வு வாழசொல்றாய்ங்களே அதுதான் போல)

லட்சுமியை படைச்சதே ஆத்தா தானே. நிலக்கரித்துறைக்கு அமைச்சரை போட்ட மன்மோகனார் நினைச்சா கோல் ப்ளாக் டைரக்டா அலாட் பண்ணலாம் தானே.

8.அபய வரத ஹஸ்தின்யை
அபயம்னா என்ன பயத்துக்கு எதிர்பதம். பயமில்லா நிலை. பயத்துல உள்ளவனுக்கு அபயம் கொடுத்தா பயமற்ற நிலை ஏற்படும். இப்படி அபயம் கொடுக்கிற கைக்காரி ஆத்தா.
வரதம்னா வரம் கொடுக்கிறன்னு அருத்தம்.

9.அனாமிகா
பெயரற்றவள். கொய்யா.. இந்த சத நாமாவளியிலயே 100 பேர் இருக்கு. இன்னம் சஹஸ்ர  நாமம்னா ஆயிரம் பேரு. ஆனால் அனாமிகான்னு ஒரு நாமம்.  மனித மூளை தர்கத்தின் அடிப்படையில இயங்கும். ஆனால் ஆன்மீகத்துல தர்கத்துக்கு "தாவே" கிடையாதுங்கோ.

10.அங்காள பரமேஸ்வர்யை
அம்=குளிர்ந்த ,காள (மேகம்?) மழைதரும் கரிய மேகங்களுக்கு தலைவி?

11.அனந்தமயீ
அந்தம் =முடிவு ,அனந்தம்= முடிவற்றவள்

12.ஆத்யந்த ரஹிதாயை
ஆரம்பமும் -முடிவும் அற்றவள்.

13.அருணாயை
அருணன் =சூரியன் இதுக்கு இன்னொரு அர்த்தமும் கொடுக்கலாம்.ருணம் =கடன் ,அருணா =எவனுக்கும் ஆத்தா பாக்கி கிடையாதுங்கோ.
நாமெல்லாம் ஆருக்கோ கடன் பட்டுத்தான் – அந்த கடனை தீர்க்கத்தான் பிறந்து வரோம்.  ஆனால் கடனை கூட்டிக்கிட்டே போறோம்.ஆனால் ஆத்தாவுக்கு கடனே கிடையாது. போனா போறதுன்னு பிச்சை போடறா தட்ஸால். ஆத்துக்காரருக்கே பிச்சை போட்ட கிராக்கியாச்சே.

14.பால பீட அதிரோஹின்யை
தச வித்யானு ஒரு சப்ஜெக்ட் இருக்கு.காளி , தாரா ,பகளாமுகி ,கமலாத்மிகா ,சின்னமஸ்தா, தூமாவதி, திரிபுரா, பைரவி ,சுந்தரி ,புவனேஸ்வரினுட்டு  பத்து ரூபங்கள்ள ஆத்தாளை வழிபடறது தான் கான்செப்ட்.
இதுல ஒரு  பெண் குழந்தையை அம்மனா பாவிச்சு வணங்கறதும் ஒரு மெத்தட். ( இந்த டாப்பிக் பத்தி பாலகுமாரன் ரெம்ப டீட்டெய்ல்டா ஒரு நாவல் எழுதியிருக்காரு படிச்சிருக்கிங்களா?) அந்த பெண் குழந்தையை உட்கார வைக்கிற மனைக்கு பெயர் பால பீடம். அதிரோஹணம்னா ஏறுவது. பால பீடத்தின் மீது ஏறுபவளேனு அருத்தம்.

15.பஹளா முக்கே
Net ல ப்ரவுஸ் பண்ணா வேற தகவல் கிடைக்கும். ஆனால் நமக்கு மாயா பீஜத்தை உபதேசம் பண்ண பார்ட்டி ,ஆத்தாவோட இந்த வடிவம் பேங்க்ல டெல்லர் மாதிரி. நாம எந்த சாமியை கும்பிட்டாலும் அதுக்கான பலனை தர்ரது இந்த உருவத்துலதான்னு சொன்னாரு.
பஹளா =பல ,முக்கே =முகங்கள். பல முகங்களை உடையவளே

16.பில்வ வன ப்ரியே
ஆத்தாவோட ஆத்துக்காரரு சிவனார். சிவனாருக்கு ரெம்ப பிடிச்சது வில்வம். மேலும் அர்த்த நாரீஸ்வர தத்துவம் தெரியுமில்லையா? திருவிளையாடல்ல சிவன் தன் பாடியிலயே இடபாகத்தை அலாட் பண்ணி மகளிர் ஒதுக்கீட்டுக்கு பிள்ளையார் சுழி போடறாரே ஞா வல்ல?
இதனால வில்வ மரங்கள் அடர்ந்த வனத்தை விரும்புபவள்னு அருத்தம்.

17.புவனேஸ்வர்யை
புவனம் =உலகம் ஈஸ்வரி =தலைவி

18.பிந்து ஸ்வரூபின்யை
ஆழ்ந்த தியானத்துல ஒரு ஒளி புள்ளி தெரியும் இதை பிந்துன்னு சொல்வாய்ங்க. அந்த பிந்து ஸ்வரூபமானவளே

19.சண்டிகாயை
சண்டன் ங்கற ராட்சனை போட்டு தள்ளியவளே.  நம்ம வீட்ல தாய்க்குலம் குழந்தைகளை "சண்டித்தனம் பண்ணாதே"ம்பாய்ங்களே ஞா வருதா?  ஆத்தாவுக்கு சண்டித்தனம் உண்டு.  ஆத்தா மேட்டர்ல எதுனா கமிட் ஆகி அதை டீல்ல விட்டாச்சுன்னா அது ஞா வர்ர வரை லைனுக்கே வராம சண்டித்தனம் பண்ணுவோ.

20.சாமுண்டேஸ்வர்யை
சாமுண்டன் ங்கற ராட்சனை போட்டு தள்ளியவளே

21.சந்திர மண்டல வாசின்யை
பால்வெளியில உள்ள சந்திரமண்டலத்துல இருப்பவளேன்னா அது ரெம்ப அற்பமா இருக்கும். ஹ்யூமன் பாடியில ஆண்களை பொருத்தவரை வலது பாகம் சூரிய மண்டலம், இடது பாகம் சந்திர மண்டலம். பெண்கள் விஷயத்துல இதுல உல்ட்டா.
ஆக ஒவ்வொரு பாடியில ஒரு பார்ட் ஆஃப் தி பாடியை கேப்சர் பண்ணி வச்சிருக்கிறவன்னு சொல்லலாம்.
ஆண்கள் தம் இடது  நாசியில் சுவாசம் நடக்கும் போது ஆத்தாவ தியானிக்கலாம். சுவாசத்தை அடுத்த பகத்துக்கு மாத்தற டெக்னிக் தெரிஞ்சவுகளுக்கு  பிரச்சினையே இல்லை.தூள் பண்ணுங்க.

22.சதுர் சஷ்டி கலாத்மிகா
சதுர் =4 , சஷ்டி =ஆறு நாலாறு 24 ஆ? 4+6 =10 ஆ? பண்டிதர்கள் ஆராவது க்ளாரிஃபை பண்ண கடவர்.. ஆக 24 /10 கலைகளின் ஆத்மாவாக இருப்பவளே

23.துர்காயை
துர்கா =கோட்டை , கோட்டைக்குள்ள எப்படி சேஃபா இருப்பமோ அப்படி ஆத்தா கஸ்டடிக்கு போய்ட்டா ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டில்லாம் தேவையே இல்லிங்ணா. பாதுகாப்பை தரும் கோட்டையே

24.தர்ம ரூப்பிண்யை
தர்மத்தின் வடிவானவள். தர்மம்னா நாலணா எட்டணா பிச்சை போடறது தர்மமில்லை. இந்து தர்மம்,புத்த தர்மம்னு வாய்ங்க அதெல்லாம் டுபுக்கு.கீதையில கிருஷ்ணர் சொல்றார் பாருங்க ஸ்வதர்மம்,பரதர்மம்னு அதை கூட என் மதம்,பிற மதம்னு அர்த்தப்படுத்திக்க கூடாது.
தர்மம்னா இயல்புன்னு அருத்தம். பள்ளத்தை நோக்கி பாய்வது ஜல தர்மம் . தலை கீழாய் பிடித்தாலும் மேல் நோக்கியே எரிவது நெருப்பின் தர்மம்.
ஆக உங்கள் இயல்பு எதுவோ அதுவாக இருப்பவளும் ஆத்தா தான்.

25.தேவ்யை
தேவனுக்கு பெண் பால் தேவி.

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி விளக்கம் (அசலான கன்டென்ட்)

அண்ணே வணக்கம்ணே !
மொதல்ல ஸ்ரீஅம்மன் சதா நாமவளி கன்டென்டை கொடுத்துர்ரன். அவசர அடியா ஜெபிக்க ஆரம்பிக்கிறதா இருந்தா சின்ன டிப் .

ஒவ்வொரு நாமத்துக்கு  முன்னும்  ஓம்  சேர்க்கவும் .. " ஓம் " என்னும்  பிரணவத்தை அடுத்து பிரபஞ்ச மாயையிளிருந்து வெளிப்படக் கோருவோர்  " ஹ்ரீம் " பீஜத்தையும் , அச்சத்தில் இருந்து வெளிப்படக் கோருவோர் க்லீம் பீஜத்தையும் -காதலில்,மணவாழ்வில்  ஒற்றுமை , செல்வம் கோருவோர் " ஸ்ரீம்" பீஜத்தையும் சேர்த்து ஜெபிக்கவும் . இறுதியில்  நம அல்லது  ஸ்வா ஹா உசிதம்  போல் சேர்த்து உச்சரிக்கவும் .


அம்பிகாபுர வாசின்யை   நம :
அன்ன பூர்ணேஸ்வர்யை   நம :
அகிலாண்டேஸ்வர்யை  நம :
அம்ருத் தாயை  நம :
ஆர்த்த ஜன  ரக்ஷின்யை  நம :
ஆத்யந்த சிவரூபாயை  நம :
அஷ்ட  ஐஸ்வர்ய ப்ரதாயின்யை  நம :
அபய வரத ஹஸ்தின்யை  நம :
அனாமிகாயை  நம :
அங்காள பரமேஸ்வர்யை  நம :
ஆனந்த மயே  நம :
ஆத்யந்த ரஹிதாயை  நம :
அருணாயை  நம :
பால பீட அதிரோஹின்யை  நம :
பகளா முக்கே  நம :
பில்வ வன ப்ரியாயை  நம :
புவனேஸ்வர்யை  நம :
பிந்து ஸ்வரூபின்யை  நம :
சண்டிகாயை  நம :
சாமுண்டேஸ்வர்யை  நம :
சந்த்ர மண்டல வாசின்யை  நம :
சதுர் சஷ்டி கலாத்மிகாயை  நம :
துர்காயை  நம :
தர்ம ரூபின்யை  நம :
தேவ்யை  நம :
திவ்யாயை  நம :
ஈஸ்வர்யை  நம :
குண த்ரய சம்யுக்தாயை  நம :
கௌரி மாத்ரே  நம :
காயத்ரி மாத்ரே  நம :
கணேச ஜனன்யை  நம :
கிரிராஜ ஸ்துதாயை  நம :
ஹ்ரீங்கார பீஜாக்ஷர்யை  நம :
ஹ்ரீம் மயீ தேவினே  நம :
ஹேம பூக்ஷித விக்ரஹாயை  நம :
ஹீங்கார ஐங்கார ஸ்வரூபின்யை  நம :
ஜனன்யை  நம :
ஜகத் காரிண்யை  நம :
ஜ்யோதிர்மயே  நம :
ஜ்வாலா முகே  நம :
காளிகாயை  நம :
காமாக்ஷ்யை  நம :
கன்யகாயை  நம :
குமார ஜனன்யை  நம :
காலாயை  நம :
காலாதீதாயை  நம :
கர்மஃபல ப்ராதையை  நம :
காம கோடி பீடஸ்தாயை  நம :
லலிதா பரமேஸ்வர்யை  நம :
லீலா விநோதின்யை  நம :
மார்கண்டேய வர ப்ராதையை  நம :
மஹா மாயா ஸ்வரூபின்யை ஸ்வாஹா:
மோஹின்யை  நம :
மீனாக்ஷ்யை  நம :
மஹோதர்யை  நம :
மணி த்வீப   பாலிகாயை  நம :
மஹிசாசுர மர்த்தின்யை  நம :
நித்யாயை  நம :
ஓம்கார ரூபின்யை ஸ்வாஹா:
பாசாங்குச தாரின்யை  நம :
பஞ்ச தசாக்ஷர்யை  நம :
பூர்ணாயை  நம :
பரமந்த்ர சேதின்யை  நம :
பர பல விமர்தின்யை   நம :
பரப்ரம்ஹ ஸ்வரூபின்யை ஸ்வாஹா:
ராஜ ராஜேஸ்வர்யை  நம :
சச்சிதானந்தா ஸ்வரூபின்யை ஸ்வாஹா:
சூக்ஷ்ம்னா த்வார மத்யாயை  நம :
சர்வ ஸ்வதந்த்ராயை  நம :
ஸ்ரீ  சக்ர வாசின்யை  நம :
ஸ்வயம் ப்ரகாசாயை    நம :
சுரபூஜிதாயை   நம :
சுந்தர்யை  நம :
சுக தாயின்யை  நம :
சனகாதி முனி ஸ்துதாயை  நம :
சிவானந்த சாகா ராயை  நம :
சிவ மானஸ ஹம்சின்யை  நம :
சகல சௌபாக்ய ப்ரதாயை  நம :
சர்வ ஜன வசங்கர்யை  நம :
ஸ்வ மந்த்ர பல ப்ரதாயை  நம :
சர்வாரிஷ்ட நாஸின்யை  நம :
சர்வ பாப ஹரின்யை  நம :
சர்வ சங்க்ஷோப பரிஹாராயை  நம :
சர்வ  ஸ்தம்பின்யை ஸ்வாஹா
சர்வ துக்க விமோசன்யை   நம :
சர்வ துஷ்ட பயங்கர்யை  நம :
த்ரி விக்ரம பத கிராந்தாயை   நம :
த்ரி கால ஞான ப்ரதாயை  நம :
துரிதா பஹாயை  நம :
தேஜோ ப்ரதாயை  நம :
வைஷ்ணவ்யை  நம :
விமலாயை  நம :
வித்யாயை  நம :
வாராஹி மாத்ரே  நம :
விசாலாக்ஷ்யை   நம :
விஜய  ப்ரதாயை  நம :
விஸ்வ ருபின்யை  நம :
விஜய சாமுண்டேஸ்வர்யை  நம :
யோகின்யை  நம :
யத்ன கார்ய சித்தி   ப்ரதாயை  நம :





ஸ்ரீ அம்மன் சத நாமாவளி விளக்கம் : முன்னுரை (அடியேன்)

அண்ணே வணக்கம்ணே !
வலைப்பூ ,வலை தளம்,முக நூல் வழியா  ஏற்கெனவே அறிமுகமான   நாம  இப்போ திரு சொக்கலிங்கம் ராம நாதன் தொகுப்பில் வெளியாகும் இந்த மின்னூல் வழியா  சந்திக்கிறோம். சாதாரணமா திருமணமான பெண் பெயருக்கு மிந்தி ஸ்ரீமதி தான் வரும். ஆனால் நாம ஸ்ரீ மட்டும் தான் கொடுத்திருக்கம்.

ஏன்னா ஆத்தா டூ இன் ஒன். அவனும் அவளே.அவளும் அவளே ! டூ இன் ஒன்  மட்டுமில்லை த்ரீ இன் ஒன். அவனும் -அவளும் -அதுவும் அவளே ! இது மட்டுமா?  எதுவும் யாவும் அவளே தான்.

சதம் = 100 , நாமம் =பெயர் , ஆவளி =வரிசை . (தீபங்களின் வரிசை தீபாவளி - 100 நாமங்களின் வரிசை சத நாமாவளி . நியூஸ் பேப்பர்ல கொடும்பாவி எரிப்புன்னு செய்தி போடுவாய்ங்க. அந்த படத்துல பார்த்திங்கனா சோள கொல்லை பொம்மை மாதிரி ஒரு பொம்மை இருக்கும். அதன் நெஞ்சுல பலானவரோட பேரை கம்ப்யூட்டர் ப்ரிண்ட் அவுட் எடுத்து ஒட்டியிருப்பாய்ங்க. ஒடனே அந்த பொம்மை பலானவரோட உருவ பொம்மையாயிருது . இதான் பேருக்கு இருக்கக்கூடிய பவர்.

ஒரு ஏரியா. அந்த ஏரியாவோட தாதா நமக்கு ஏற்கெனவே அறிமுகம்னு வைங்க. அந்த ஏரியாவுல ஆரோ "பில்லக்கா" பசங்க வந்து நம்ம சட்டைய பிடிச்சுர்ராய்ங்க. அப்போ  நாம அந்த தாதாவோட பேரை சொன்னா என்னாகும்? ஒரு தாதா பேருக்கே அந்த பவர். ஆத்தாவோட பேருக்கு எம்மாம் பவர் இருக்கும்?

செரி பெயருக்கு இருக்கும் பவரை  கொஞ்சம் சீரியஸா  பார்ப்பமா?
ஆன்மீகத்துல நாமம் - நாமி ( பெயர் - பெயருக்குடையவர்) ரெண்டுக்கும் வித்யாசம் கிடையாது. ரெண்டுமே சமம். அதாவது ராமனால் முடியற வேலை எல்லாமே ராம நாமத்தாலயும் முடியும். (ஒரு சந்தர்ப்பத்துல ராம நாமம்  ராமனையே ஜெயிச்ச கதையும் நடந்திருக்கு )

நாம ஜபத்துக்கு நான் விரோதி இல்லை. ஆனால் நாமங்களை அவற்றிற்குரிய அர்த்தங்களோடு , தாத்பரியங்களோடு, ரெஃபரென்ஸ் டு தி கான்டெக்ஸ்டோடு சொல்ல வேண்டும் என்பது என் கருத்து, அனுபவம்.

சில சந்தர்ப்பங்கள்ள அர்த்தம் தெரியாம சொல்லிக்கிட்டிருக்கிற  நாமங்கள் கூட பலன் தர்ரதுண்டு. உதாரணமா ஆஞ்சனேயருக்கு ஸ்ரீ ப்ரதாயானு ஒரு பேர் உண்டு. இதற்கு  செல்வத்தை வழங்குபவனேனு அர்த்தம் அதை படிக்கிறப்பல்லாம் லட்சுமிக்கும் அனுமாருக்கும் என்னப்பா சம்பந்தம்னு நினைச்சிட்டே படிக்கிறது வழக்கம்.

சோத்துக்கு லாட்டரி அடிச்சிட்டிருந்த எனக்கு ஓரளவு மினிமம் கியாரண்டி கிடைச்சு இன்னைக்கு ஓரளவு செட்டில் ஆக  காரணம் ஆஞ்சனேயர் தான்னு சில வருஷங்களுக்கு முன்னாடிதான் ஸ்ட்ரைக் ஆச்சு. சீதை செல்வத்துக்கு அதி தேவதையான லட்சுமியோட அம்சம். ராமர் சீதைய தொலைச்சுட்டு அவதிப்பட்டப்போ சீதைய மறுபடி அடைய  ஆஞ்சனேயர் தானே உதவினார். ஆக அனுமார் செல்வத்தை வழங்குபவர்னுதானே அர்த்தமாகுது . அனுபவமாகுது.

என்னைக்கேட்டா எந்த ஒரு நூதன அனுபவமும் போக போக இயந்திரத்தனமா ஆயிரும். உங்க காதலி முதல் முதலா உங்க காதலிய அங்கீகரிச்சப்ப உங்களுக்கு ஏற்பட்ட புல்லரிப்பு, புளங்காகிதம், மயிர் கூச்செறிதலையெல்லாம் இப்ப உங்களால ஞா படுத்திக்க கூட முடியாது.

இந்த நாமாவளிகளும் அப்படித்தான்.  நாமாவளிகளை இயந்திரத்தனமா  சொல்லிக்கிட்டிருக்கிறதால ஒரு புண்ணியமும் கிடையாது. ஏற்கெனவே சொன்னபடி அந்த நாமங்களை, அவற்றின் பொருளை, உட் பொருளை, தாத்பர்யத்தை அறிந்து சொல்லனும். வெறுமனே சொல்லிட்டு மறந்துர்ரதுல்ல. அவற்றை அடிக்கடி சிந்திக்கனும்.

நாமங்கள் ஜஸ்ட் கான்ஷியஸ் மைன்டை தான் டச் பண்ணும். நாமாக்களோட பொருள் சப் கான்ஷியஸ் வரை போகும். அந்த பொருளை குறித்த நிறைவு பெறாத சிந்தனை -சிந்தனையின் தொடர்ச்சி சப் கான்ஷியஸை தாண்டியும் போகும்.  இந்த நிலை வரும் போது கிடைக்கும் பலன் டூ இன் ஒன்னா இருக்கும். ஐ மீன்.. லோகாயதம்+ஆத்யாத்மிகம்.

இந்த நாமாவளியில் உள்ள நாமங்கள் நானே  தொகுத்தவை . நானே வரிசை படுத்தியவை ( ஆல்ஃபபடிக்கல் ஆர்டர்) . எனக்கே எனக்குன்னு உருவாக்கினதாலயா? அல்லது தொடர்ந்து படிச்சுக்கிட்டிருந்ததாலயா தெரியல .. இந்த நாமாக்கள் குறித்த மறை பொருள் எல்லாம் ஸ்பார்க் ஆக ஆரம்பிச்சது . (மறை பொருள் = மறைந்திருக்கும் பொருள் ; மறை =வேதம்??)
ஒவ்வொரு நாமத்துக்கும் பிட்டு பிட்டா ஸ்பார்க் ஆன  விளக்கங்களை அப்பப்போ நம்ம தளத்துல அவுத்து விட்டுக்கிட்டிருந்தம். இதை எல்லாம் நண்பர் சொக்கலிங்கம் ராம நாதன் பொறுமையா தேடிப்பிடிச்சு தொகுத்திருக்காரு அன்னாருக்கு நன்றி . இதை படிக்க போற ஷேர் பண்ண போற உங்களுக்கும் தான்.

-சித்தூர்.முருகேசன்
அனுபவஜோதிடம் டாட் காம்

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி ( விளக்கம்) : 1

அண்ணே வணக்கம்ணே !
எந்த வித அப்டேட்ஸும் இல்லாம தினசரி 400+ ஹிட்ஸ் கொடுக்கிற ப்ளாக் இது . ஆகவே தான் இந்த  தொடரை அனுபவஜோதிடம் சைட்ல போடாம இங்கே போடறேன்.

ஆக்சுவலா இது மின் நூலா வெளி வரப்போகுது. அதுக்கு மிந்தி 6  பதிவுகளா இதை இங்கே தர்ரன்.

மொதல்ல இதுக்கு நண்பர் திரு.சொக்கலிங்கம் ராம நாதன் தந்திருக்கிற முன்னுரைய பார்த்துரலாம்.

அடுத்த பதிவுல நம்ம முன்னுரை .கடைசி 4 பதிவுகள்ள தலா 25 நாமாக்களுக்கான விளக்கம் வரும்.ஓகேவா.

இந்து சமயத்தில் இறைவனைத் தந்தையாக, தலைவனாக, தோழனாக,  தனயனாக என்று பல வழிகளில் அடியார்கள் அன்பு பாராட்டினாலும் இவற்றில் தலைசிறந்ததும், அந்நியோன்மானதுமான அன்பு முறை தாய்-பிள்ளையாகும். இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடு சக்தி வழிபாடாகும்.
பிள்ளையானவன் நன்றே செய்கினும், தீதே செய்திடினும் மாறாத தாய் அன்புக்கு; ஒப்பானது தெய்வத்தின் அன்பு, கூடவே தாயின் தன்மையுடைய  தெய்வத்தை வழிபடுவது யாருக்கும் எளிதாகிறது.

சக்தி என்பது என்ன? சக்திக்கும் சிவத்துக்கும் இடையே என்ன தொடர்பு? இதனை விளக்குவதே இந்து மதம். சிவம் என்பது மெய்ப்பொருள். பிரியாது இதனிடத்திலிருந்து நிலைத்துள்ள தொடர்புக்கு சக்தி என்று பெயர்.
சிவத்தினின்று சக்தியைப் பிரிக்க முடியாது. உலகம் யாவும் சிவசக்தி மயமானது. சக்தி பல்வேறு தொழில்களைப் புரியவும் பல்வேறு தத்துவங்களை விளக்கவும் பல்வேறு வடிவங்களை எடுக்கிறாள்.முத்தொழில்களை செய்யும் போது பிரம்மாணி, வைஷ்ணவி, உருத்ராணி என்று  பெயர் பெறுகிறாள். சிவத்திற்கு ஒப்பிடும்போது துர்க்கை என்றும், தீமையை அழிக்கும் போது காளியுமாகிறாள். வித்தை- கல்வியின் வடிவெடுக்கும் போது சரஸ்வதி என்றும், தனதானிய-செல்வம் என்று வடிவெடுக்கும் போது இலக்குமியாகவும் பெயர் பெறுகிறாள்.

பக்தி  வழிபாட்டு முறையில்  " சதநாமாவளி " ...பெயரை சொல்லி வேண்டி / வழிபடும் முறை முக்கியமானது .நாமாவளியில் வரும் 100 நாமங்களும் சாட்சாத் வழிபடும் தெய்வத்தை  குறிப்பது .

மனிதர்களின் பெயர்களே மட்டுமே ஒருவரை பிரதிநிதித்துவ படுத்துகின்றன .  திருவள்ளுவர் குறித்த செவி வழிக்கதைகள் முதல் அவர் எழுதிய 1330 குறள்கள் வரை அவர் பெயர் ஒன்றே  பிரதி நிதித்துவ படுத்துகிறது .
சிம்பிள் ஆக சொல்லணும்னா ...ரோட்டில் போறோம்  / ஒரே கூட்டம் ..எவனோ .. டேய்  தம்பி ன்னா..!!!  யாரையோ  கூப் பிடுறாங்கன்னு  நாம் பாட்டுக்கு  போய்டுவோம்  / டேய்  சொக்கா ன்னு கூப்பிட்டா ..( நம்ம பேருங்க) யாரடா அது நம்மை  பேரு சொல்லி கூப் பிடுறாங்கன்னு டக்குன்னு   திரும்பி பார்ப்போம் .30 - 40 வருடம் பழக்க பட்ட நம் பெயருக்கே  இந்த பவர் என்றால்  அனாதியா -அதாவது ஆரம்பம்னு ஒன்னே இல்லாத -எப்பவுமே இருக்கிற   " அன்னையின்" நாமங்ககளுக்கு என்ன  பவர்  இருக்கும்ன்னு  எண்ணி பாருங்கள் ..

சில விசயங்களை  அனுபவித்தால் தான் அதன் அருமை தெரியும் . வாழ்வியல் / ஆன்மீக நியதிகளை   அனுபவ/ அறிவியல்  பூர்வமாக சிந்திப்பவர் அண்ணன்  சித்தூர் S .முருகேசன். அவர் வாழ்வில்  " ஆத்தா "   நிகழ்த்திய லீலைகளை  பல கட்டுரைகளாக  " அவன் .அவள்.அது " என்ற  தலைப்பில் தான் வலைப்பூவில்  பதிவிட்டுள்ளார் . இன்றைய கார்ப்பரேட்  கலியுகத்தில்  ஆன்மிகம்  வியாபார பொருள் ஆகி விட்டது . காசு இல்லை  என்றால் கடவுளை கூட பற்றி தெரிந்துகொள்ளமுடியாத  ஒரு கையறு நிலை இன்னைக்கு இருக்கு.

 ஆனால் தான் கண்ட  / அனுபவித்த " ஆத்தாவின் " லீலைகளை  அவள் பாதம் பற்றி அனைவரும்  நன்மை அடைய வேண்டும் என்ற நோக்கில் தனது கட்டுரைகளில் அவர் பதிவிட்டுள்ளார் . அந்த வரிசையில்  தனது பக்தி மார்க்கத்தில் "ஆத்தா " வை  தினமும் அவளது நாமங்களின் மூலம் தொழுவதற்கு அவர் தொகுத்த ஒரு தொகுப்பு " ஸ்ரீஅம்மன் சதநாமாவளி ".   இந்த வழிபாடு அவர் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை தான் " அவன் அவள்  அது"  வரிசை வலைபதிவுகளில் குறிப்பிட்டு உள்ளார் .

எந்த  ஒரு  விசயத்திலும் யதார்த்த / அனுபவ  ரீதியான  அணுகுமுறை கருத்துக்கள் , இவரது எழுத்துக்கள் மீதான ஆர்வத்தை  எனக்கு ஏற்படுத்தின .
" அவன் , அவள் , அது "  இந்த தலைப்பை முதலில் அவர் வலைபதிவில் பார்த்தபோது  எதோ கில்மா  மேட்டர் போல  தோணிச்சு .  அந்த விசயத்துக்கு  நானும் விதி விலக்கல்ல ... நாக்க தொங்க போட்டுகொண்டு படித்தேன்

....என்னுள் உள்ள / உலகத்தின்   " சக்தியை " உணர்ந்தேன் .
சின்ன வயசில் விளையாடுவது கூட  " சாமி" வைச்சு தான் . ஒரு சூட டப்பா பிள்ளையார் . கோவிலில் கூட அப்படி அபிசேகம் பண்ணி இருக்க மாட்டாங்க... அந்த பிள்ளையாருக்கு  அப்படி பண்ணி .... கொஞ்சம்  வாலிப  வயதில்  வீட்டுக்கு  எதிரில் உள்ள அம்மன் கோவிலில் பூசாரிக்கு வெள்ளி / செவ்வாயில்  நேரம் கிடைக்கையில்  எடுபிடி வேலை .... மனசுக்கு  கஷ்டம்னா  அருகில் உள்ள முகாம்பிகை கோவிலில் அம்மன் கிட்ட" எல்லாத்தையும் "மனசால்  சொல்லி வேண்டுவது ..   இப்படி தொடரும்  என் ஆன்மீக பயணத்தில்  " அம்மன் சதநாமாவளி"  ஏற்படுத்திய வாழ்வியல் தெளிவுகள்  இத்தொகுப்பு  உருவாக காரணமாக அமைந்தது .

" வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே"  -

என்று  அபிராமி அந்தாதியில் வரும் . எந்த  ஒரு நிகழ்விற்கும்  "அவள்" அருளே காரணம்.

படிக்கிறப்ப  வாத்தியார்களும் சரி / வீட்டிலும்  சரி  வெறுமனே  மனப்பாடம் பண்ணாம  புரிஞ்சு படி ... படி... ன்னு சொல்லுவாங்க .அது இந்த நாமாவளிகளுக்கும் பொருந்தும் .  நாமாவளிகளை இயந்திரத்தனமா சொல்லிக்கிட்டிருக்கிறதால ஒரு புண்ணியமும் கிடையாது.பொருள் தெரிஞ்சு சொல்லுறப்ப  அது பற்றிய சிந்தனை எழும்  / சிந்தனையின் தொடர்ச்சி  அருள் நிலை அடைய செய்யும் .

அந்த  வகையில்  திரு .சித்தூர் முருகேசன்  தான்  தொகுத்த அன்னையின் நாமவளிக்கு  உரிய பொருள் விளக்கங்களை  அனுபவ ரீதியில்  எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் தன் வலைப்பூவில்  அளித்துள்ளார். அந்த வலைபதிவுகளின்  தொகுப்பே  இந்த  மின் நூல்.

பிறப்பு முதல்  / இறைநிலை வரை  அனைத்தையும் ஆட்கொண்டவள்  " சக்தி ". அம்மாவாக , அக்காவாக ,பாட்டியாக ,அக்காவாக ,தங்கையாக ,காதலியாக ,மனைவியாக நம் வாழ்வின்  ஓவ்வொரு பெண்ணின்  அம்சமும் " அவளே ".
சக்தியில்லைன்னா  சிவம்  இல்லைன்னு சொல்லுவாங்க ...எந்த ஒரு  நிலைக்கும்  " அவள் " அருள் அவசியம். அவள் அருளால்  அவள் அருள் வேண்டியே  இந்த மின்னூல் பகிர்வு.

" பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் " ன்னு சொல்லுவாங்க  ...நல்ல விசயங்களை  நாம மட்டும் அனுபவிச்சா போதுமா ...நான் மட்டும்  "ஆத்தாவின் " பிள்ளையில்லை ...நீங்களும் தானே ...அதனால்  தான் இந்த பகிர்தல் .

இந்த நூலை தொகுத்து வழங்க வாய்ப்பு அளித்த அண்ணன் .திரு .முருகேசன் அவர்களுக்கு நன்றி.

" அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே"

--- அம்மாவை  வணங்கி  அவள் அருள் பெறுவோம் .

அன்புடன்
சொக்கலிங்கம் இராமநாதன்