Sunday, June 27, 2010

ஜெயா தோழிப்பைத்தியம் 2

இன்றைய ஸ்பெஷல்:
ஆளவந்தான் : திரை விமர்சனம்  
தீர்வில்லாத பிரச்சினைகளே கிடையாது. ( என்ன சில சமயம் தீர்வுகள் பிரச்சினையை விட கோரமா இருக்கும். உ.ம் மோகத்தை கொல்ல மேயப்போனா ஆளையே கொன்னுர்ராய்ங்க. எய்ட்ஸு, அல்லது பார்ட்டியோட புர்சன் காரன்).

ரெண்டு நாளைக்கு முந்தி கலைஞர் குடும்ப பைத்தியம்னு தலைப்பு வச்சி  ஹோல் சேலா மன்சங்கள்க்கு வர்ர பிரச்சினைகளை அனலைஸ் பண்ணியிருந்தேன். இதனோட தொடர்ச்சிய ஜெயா தோழிப்பைத்தியம்னு போட்டேன். இதனோட விளைவு என்னன்னா நீண்ட நெடுங்காலத்துக்கு பிறவு போஸ்ட் ஃபேமஸ் ஆச்சு (தமிலிஷ்ல), உலவு டாட்காம் ரேங்கிங்ல முதல்ல 17 லருந்த கவிதை07  3 ஆவது ரேங்குக்கு வந்துருச்சு. அதனால இந்த அனலைசிங்கை தொடரலாம்னு உத்தேசிச்சிருக்கன். என்ன மேட்டருக்கு போயிரலாமா? (குவார்ட்டர் இல்லிங்கண்ணா)

பிரச்சினைகள் ரெண்டுவிதம். தானா வர்ரது ஒன்னு, நாமா வெத்தலை பாக்கு வச்சு கூப்பிடறது ஒன்னுன்னு சொன்னேன். ரஜினி காந்த் ஒரு படப்பாட்ல சொல்ற மாதிரி   "நீயும் ( நீங்களும்) பத்து மாசம், நானு பத்து மாசம்" தான். எல்லாருக்கும் ஒரே காற்று, ஒரே சன் லைட், ஒரே மூன் லைட், ஒரே பூமி, பிரச்சினைகள்  எல்லாருக்கும்  வரத்தான் செய்யுது.

பின்னே எங்கே வித்யாசப்படறோம். பிரச்சினைன்னு வரும்போது ஏன் சிலர் தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க? ( சில சமயம் உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டருக்காக கூட)  ஏன் சிலர் கொலைல இறங்கறாய்ங்க? ( எங்க ஊர்ல ஒரு பார்ட்டி எவனோ பீடிக்கு நெருப்பு கொடுக்கலன்னு போட்டுத்தள்ளிட்டான். கவுன்சிலர் ரேஞ்சுக்கு போய், பத்து வட்டில செழிச்சு சாகிற காலத்துல ப்ளட் ஷுகர் வந்து பெத்த பையனே கழுத்து செயின்,ப்ரேஸ்லெட், வண்டியெல்லாம் பறிச்சிக்கிட்டு ஏறக்குறைய பைத்தியமா திரிஞ்சு செத்தான்)

ஏன் சிலர் கிரைம்ல இறங்கறாங்க? ஏன் சிலர் லஞ்ச லாவண்யத்துல இறங்கிராங்க? சிலர் ஏன் ஊரை விட்டு ஓடிப்போயிர்ராய்ங்க? ஏன் சிலர் வீட்டை விட்டு வெளியேர்ராங்க? (இந்த லிஸ்டு பெருசுங்கண்ணா. இப்ப இருக்கிற வீட்டுக்கு பின்னாடி வீட்டு பையன் வெளியேறி  இருபது வருசமாகுது, என் ஃப்ரெண்டோட அப்பா வெளியேறி 30 வர்சமாகுது)

அதே பிரச்சினைகளோட லட்சோப லட்சம் மக்கள் வாழ்ந்துக்கிட்டிருக்க ஏன் சில சதவீதம் பேர் மட்டும் விபரீத முடிவுகளுக்கு போயிர்ராய்ங்க?

தானா வர்ர பிரச்சினைகள் எல்லாருக்கும் வருது, அதை டேக்கிள் பண்றதுலதான் வித்யாசம் ஏற்படுது. இந்த வித்யாசத்துக்கு பல காரணங்கள் இருக்கு.

1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்: உ.ம் யோக சாதனையில் நாட்டம் கொண்டு இயங்க அதிலிருந்து டைவர்ட் செய்ய பூர்வ வினைகள் கூட்டணி அமைத்து ஆப்பு வைக்கலாம். அல்லது தொடர்பில்லாத தேவதா பூசனையில் ஈடுபடுவதால் பிரச்சினைகள் வரலாம்.

தானா வர்ர பிரச்சினைகளுக்கு மேற்சொன்ன காரணங்களல்லாது எத்தனையோ காரணங்கள் உண்டு. சரி பிரச்சினை வந்துருச்சு அதை டேக்கிள் பண்றதுல மக்களுக்கிடையில் ஏன் இத்தனை வித்யாசம்? இவிக தேடிப்போற சொல்யூஷன்ல இருந்தே ஆயிரத்தெட்டு பிரச்சினை வருதே ஏன்? சரி நிறைய பேரு பிரச்சினைகளை
தாங்களே வெத்தலை பாக்கு வச்சி கூப்பிடறாங்களே ஏன்?

இதுக்கெல்லாம்  ன்ன காரணம்னா மறுபடி மேற்சொன்ன அதே காரணங்களை லிஸ்ட் அவுட் பண்ண வேண்டியதுதான்.  கடவுள் எனக்கு நல்ல ஆயுசையும்,பொறுமை, சக்தி, வசதி,பணம் காசு கொடுத்தா மேற்சொன்ன 11 ஐட்டங்களை பத்தியும் பிரிச்சு மேஞ்சுர்ரன்.

நீங்களும் பாவம் நம்ம முருகேசன் சாரு.. சனங்க பிரச்சினைகளுக்கெல்லாம் சொல்யூஷன் தர முயற்சி பண்றாரு. அவருக்கு கடவுள் நல்ல ஆயுசையும்,பொறுமை, சக்தி, வசதி,பணம் காசு எல்லாத்தயும் கொடுக்கட்டும்னு நினைங்க. ஓகேவா.

சரி இப்ப ஒவ்வொரு ஐட்டத்தையும் பிரிச்சு மேஞ்சுருவமா?

1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? தாய்ப்புலி எட்டடி பாஞ்சா குட்டிப்புலி பதினாறடி பாயும். இதெல்லாம் நம்ம முன்னோர்  ஜெனட்டிக் இஞ்சினீரிங்ல ஆராய்ச்சி பண்ணி சொன்னாய்ங்கனு ஜல்லியடிக்க மாட்டேன். இதெல்லாம் அவிக அனுபவ சாரம். நூலைப்போல் சேலை, தாயை போல் பிள்ளை, விரையென்று போட்டால் சுரையொன்ரு முளைக்குமா ரேஞ்சுல இன்னம் பத்து பதினைஞ்சு பழமொழிகள் உண்டு. (இப்பவே மொக்கை ஜாஸ்தியாயிருச்சு. விட்டுருவம்) 

அந்த காலத்துல சாதிக்குள்ளாறவே கண்ணாலம் கட்டிக்கிட்டிருந்ததால இந்த ஜெனட்டிக் காஸசோட இம்பாக்ட் அதிகமா இருந்தது. (இப்ப மட்டும் என்ன வாழுதாம் பிராமண வரனுக்கு பிராமண பெண் தேவைன்னு தான் விளம்பரம் வருது. திருத்த முடியாதுங்கண்ணா..)  தெலுங்குல சொல்வாய்ங்க" ஜாம செட்டுக்கு ஜாமகாயலே காஸ்தாயி" ( கொய்யாமரத்துல கொய்யாதான் காய்க்கும்) . வமிசா வழியை வம்ச விருட்சம்னு கூட சொல்வாய்ங்க.

உதவாத மாஞ்செடியோட தரத்தை அதிகப்படுத்த ஒட்டுபோடறாய்ங்க. உதவாத மாடு,கன்னு விஷயத்துல கூட ஸ்விட்சர்லாந்துலருந்து காளையோட செமனை கொண்டு வந்து கருவாக்கறாய்ங்க. ஆனால் அடுத்த தலைமுறைய உருவாக்கிற மேட்டர்ல மட்டும் ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கட்டும்னு பார்க்கிறாய்ங்க.

இதனால என்ன ஆகுதுன்னா பத்து தலைமுறைக்கு முன்னாடி அந்த வமிசாவழில வந்தவுக என்ன விதமான பிரச்சினைகளை ஃபேஸ் பண்ண வேண்டி வந்ததோ அதே பிரச்சினைகளை இந்த தலைமுறைலயும் ஃபேஸ் பண்ண வேண்டி வருது.

மாதா செய்தது மக்களுக்கு, தன் வினை தன்னைச்சுடும், வீட்டப்பம் ஓட்டைச்சுடும்ங்கற மாதிரி எவனோ ஒரு பன்னாடை செய்ற பாவம் அந்த வமிசத்தை காஷ்மோரா மாதிரி துரத்துது. எனக்கு தெரிஞ்சு ஒரு எஸ்.ஐ பையன் குப்பைகாகிதம் பெருக்கறான். ஒரு எம்.எல்.ஏ பையன்     (55 )  ஒரு கால் வேலை செய்யாது,   வாடகை சைக்கிள்ல அலுமினியம் ஃபேப்ரிக்ல செய்த ஆக்சஸரிய மாட்டிக்கிட்டு   சர்க்கஸ் மாதிரி  திரிஞ்சுக்கிட்டிருக்கான். இத்தனைக்கும் அவிங்கப்பா எம்.எல்.ஏவா இருந்த காலத்துல இந்த அளவுக்கு லஞ்ச லாவணியமெல்லாம் கிடையாது.

இன்னைக்கு பிராமண குல வழித்தோன்றல்கள் என்னைக்கோ எங்க முன்னோர் செய்த பாவத்துக்கு எங்களுக்கு தண்டனையான்னு புலம்பறாய்ங்க. அய்யா.. உங்க முன்னோர் வழி வந்த ஜீன், இன்டலிஜென்ஸ், சாலாக்கு எல்லாம் வேணம். அவிக பண்ண பாவத்துக்கு தண்டனை மட்டும் வேணாம்னா எப்படின்னு நான் கேட்கிறதுவழக்கம்.

ஒரே கம்பெனி, மறுபடி மறுபடி படம் எடுக்கிறச்ச அதே டீம் மறுபடி மறுபடி ஒரு சில மாற்றங்களோட அடுத்தடுத்த படங்கள்ள இடம் பெறுவதைப்போல ஒரு வமிசத்தில் ஒரே மாதிரி கேரக்டர்கள் ஒவ்வொரு தலைமுறைல தோன்றுவதையும், ஒரே மாதிரி பிரச்சினைகளை ஃபேஸ் பண்றதையும் பார்க்கலாம்.

இதை  சனங்க ப்ராப்தம்னு சொல்றாய்ங்க. விஞ்ஞானிங்க ஜெனட்டிக்குங்கறாய்ங்க.

2.இரசாயனகாரணங்கள்:
ஒருத்தன் கோழையா இருக்க, ஒருத்தன் வீரனா இருக்க ,ஒருத்தன் சுய நலப்பேயா இருக்க, ஒருத்தர் தியாக செம்மலா இருக்க அவிக உடம்புல இருக்கிற சுரப்பிகள் சுரந்து ரத்தத்துல கலக்கிற ரசாயங்கள்தான்னு கண்டுபிடிச்சிருக்காய்ங்க. (தமிழ் சினிமால தமிழ் ரத்தம் ஓடுது அது இதுன்னு பீலா விடுவாய்ங்க அதையெல்லாம் நம்பாதிங்க) . மேற்படி சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போ தலாமஸ். அதை கட்டுப்படுத்தறது எண்ணம். நம்ம எண்ணம்.  இதனால தான் பெரியவுக எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வுன்னு சொன்னாய்ங்க. எண்ணம்னா நம்ம மனசுல மின்னி மறையற எண்ணங்கள சொல்லலை.மின்னி மறையற கணக்கில்லாத எண்ண அலைகளுக்கு காரணமான எண்ணம். ஒரு வகைல எண்ணங்களின் கருப்பை.  ஆதி எண்ணங்கள் இரண்டுதான். ஒன்று கொல்ல விரும்புதல் இரண்டு கொல்லப்பட விரும்புதல்.  இதுல நீங்க எதை சூஸ் பண்ணிக்கிறிங்கங்கறத பொருத்து உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் மாறும். அதை நீங்க டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். உங்க சொல்யூஷன்ஸ் மாறும்.

கொல்லுதல்,கொல்லப்படுதல் ஏன்னு ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கேன்.
( ஓருயிர் ஓருடலாயிருந்தோம் (அமீபா) - ஓருயிர் பல்லுடலா மாறினோம்.  மறுபடி ஓருடல் ஓருயிரா மார்ர துடிப்பு - இதுக்கு இந்த உடல் தான் தடைங்கற மடத்தனமான எண்ணம்- உடலை உதிர்த்துட்டா ஓருயிரா மாறலாங்கற நப்பாசை.)

உண்மை நிலை என்ன? நாமெல்லாம் பல உடல்களை கொண்டிருந்தாலும் நமக்குள்ள உள்ளது ஒரே உயிர்தான். நாமெல்லாம் இணைக்கப்படிருக்கோம். வித விதமான  தயாரிப்புகளா இருந்தாலும், உள்ளார  வித விதமான சிம் கார்டுகள் இருந்தாலும் எல்லா செல் ஃபோன் களும் கண்ணுக்கு தெரியாத நெட் ஒர்க்கால் இணைக்கப்படிருக்கிறதை போல நாமும் இணைக்கப்பட்டிருக்கோம்.

இந்த இணைப்பை உணர முடியாம போக காரணம் நம்ம ஈகோ. இந்த படைப்புல இருந்து நம்மை வேறுபடுத்திபார்க்கிற தன்மை. இந்த படைப்புக்கு நம்மை மையப்புள்ளியா எண்ணி பிரமிக்கிறதுதான். நம் உயிர்கள் இணைக்கப்பட்டிருக்கிறதை உணர முடிஞ்சிட்டா  கொல்லவும் தேவையில்லை. கொல்லப்பட விரும்பவும் தேவையில்லை.  நமக்கு வர்ர பிரச்சினைகளுக்கெல்லாம் ஆதியாரம்ப காரணம் இந்த ரெண்டு இச்சைகள் தான். இந்த இச்சைகளை விட்டொழிக்க அகந்தைய விட்டொழிக்கனும். அகந்தைய விட்டா இந்த படைப்போட, அனைத்து உயிர்களோட  நாம இணைக்கப்படிருக்கிறதை அனுபவ பூர்வமா உணரமுடியும். சரி ரெம்ப தியரிட்டிக்கலா போயிட்டம். இங்கே கொஞ்சமா சொந்த சரக்கு.


அடுக்கு மல்லின்னு ஒரு படம் .( எந்த வருசம்?)  அதை பார்க்கிற வரை எனக்குள்ள எந்த எண்ணமும் கிடையாது. அதுல பாசக்கார அண்ணன், பாசக்கார தம்பிகள், பாசமுள்ள அண்ணின்னு ஒரு காம்பினேஷன். அண்ணன் உசுரோட இருக்கிறச்ச ஏதோ விசேஷம் நடக்கும். அப்போ அண்ணன் தம்பிங்க மத்தில சிகரட்டுங்க கை மாறும். ஷாட் கட்

அண்ணன் செத்துப்போயிர்ராரு. தம்பிங்க படிப்பை நிப்பாட்டிட்டு ஃபேக்டரி வேலைக்கு போவாய்ங்க. அண்ணி அவிக சட்டைய துவைக்க எடுப்பாய்ங்க. சட்டைப்பைல பீடிங்க இருக்கும். ( டைரக்சன் கே.ஜி.கோபால கிருஷ்ணன் தானே).ஷாட் கட் பண்ணா மனித மனங்கள்ள இருக்கிற கொல்ல அ கொல்லப்பட விரும்பும் ஆதி எண்ணங்கள்ள  கொல்லப்பட விரும்பும் எண்ணம்  என் மனசுல உதிச்சது.

கொல்லுதல், கொல்லப்படுதல் இதான் எல்லாத்துக்கும் அடிப்படை. இது ரெண்டும் செக்ஸுல சாத்தியம்ங்கறதாலதான்  மனுஷனுக்கு இதுல இத்தனை ஈர்ப்பு. செக்சுக்கு ஆல்ட்டர்னேட்டிவ் தான் பணம், பதவி,வன்முறை எல்லாமே.

மேற்சொன்ன அடுக்கு மல்லி காட்சி கொல்லப்படும் இச்சைய தூண்டி விட்டாலும், இளமை, இயற்கை உந்தி தள்ள என்னுள் விதைக்கப்பட்ட கொல்லப்படும் ஆசை அதுக்கு பெண்ணை,செக்ஸை மார்கமா சூஸ் பண்ணிக்கிச்சு. பெண் என்பவள் "அதுக்கு"த்தான்னு ஒரு மடமை. அதுல  எவ்ள  தீவிரமா ஈடுபட்டா அவ்ள சீக்கிரமா சாகலாம்ங்கற மடமை. இதெல்லாம் உமனைசராக்கி "பிறந்த இடத்தையும், கறந்த இடத்தையும்" தேடி அலைய செய்த கால கட்டத்துல   1986 ஜனவரி 1 ஆம் தேதி ஒரு தெலுங்கு படம் பார்த்தேன்.  அதுல ஒரு காட்சி .. (தன்னை கடத்திக்கிட்டு வந்த ஹீரோவுக்கு ஹீரோயின் ப்ரெட் துண்டை தரும் காட்சி)  பெண்ணுக்குரிய மற்றொரு பரிமாணத்தை ஞா படுத்தி பக்குவப்படுத்திருச்சு. அங்கன இருந்து தாய்க்கான தேடல். இப்ப ஒட்டு மொத்தப் படைப்புக்கான உருவகமா ஆத்தா .

என்னை காப்பியடிக்க சொல்லி வற்புறுத்த மாட்டேன்.  ஆனால் உங்க பிரச்சினைகளுக்கு காரணம் மட்டும் இதான். அகந்தைய விட்டு உங்க உயிர் சகல உயிர்களோட இணைக்கப்படிருப்பதை உணர்விங்களோ? அல்லது அகந்தை காரணமா தனித்தீவாகி மற்ற உயிர்களுடன் இணைய இந்த உடல் தான் தடையா இருக்குன்னு நினைச்சு கொல்ல,கொல்லப்பட விரும்புவிங்களோ உங்க சவுகரியம்.

உங்க விருப்பமே ஆதி எண்ணம். அந்த எண்ணத்தை பொருத்துதான்  தான் உங்க மனம் இருக்கும். உங்க மனதை பொருத்துதான் பிரச்சினைகள் வரும். உங்க மனதை பொருத்துதான் நீங்க பிரச்சினைகளை எதிர்கொள்ற முறை இருக்கும். ஓகே உடுங்க ஜூட் .உங்க பிரச்சினைகளுக்கான காரணங்களில்

3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்: உ.ம் யோக சாதனையில் நாட்டம் கொண்டு இயங்க அதிலிருந்து டைவர்ட் செய்ய பூர்வ வினைகள் கூட்டணி அமைத்து ஆப்பு வைக்கலாம். அல்லது தொடர்பில்லாத தேவதா பூசனையில் ஈடுபடுவதால் பிரச்சினைகள் வரலாம்.

போன்ற  காரணங்களை அடுத்த பதிவுகள்ள பிரிச்சு மேய்வோம் ..