அண்ணே வணக்கம்ணே ! பெருமாள் நகைய உருக்கிட்டானுவ என்ற இந்த வில்லங்க பதிவோடவே கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட தலைப்புல பிரச்சினைகள்+ தீர்வுகள் குறித்த அனலைஸ் தொடருது. மனுஷ்ய புத்திரனின் இரட்டைவேடம் தலைப்புல தனிப்பதிவும் இருக்கும். படிச்சு கமெண்ட் அடிச்சு தூள் கிளப்புங்க
"பொன்மேனி உருகுதே " பாட்டை மறக்க முடியுமா ? சில்க் @ விஜய லட்சுமியம்மா செத்து எந்த லோகத்துல இருக்கோ. அவிக மேனி பொன்மேனியோ இல்லையோ.. அது உருகுச்சோ இல்லையோ.. திருப்பதி ஏழுமலையான் நகை மட்டும் உருகிப்போச்சு. ஆமாங்கண்ணா அய்யரு அடகு வைத்தது நேற்று .உருக்கியது இன்று நல்லாவே டெவலப் ஆகிறாய்ங்கப்பா..
ஏழுமலையான் சொத்தையும் நகைகளையும் பிடித்த சனி விடுவதாயில்லை.
சமீபத்தில் கோர்ட்டு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் 7 தவணைகளில் ஏழுமலையானுக்கு கொடுத்த நகைகளை கொண்டு ஒரு கண்காட்சி நடத்தும்படி தி தி தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டது. நாள் நெருங்க நெருங்க புருஷனை பார்த்து தாலிய தொட்டுப்பார்த்துக்கிட்ட பதிவிரதை கணக்கா ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ஏழுமலையானுக்கு கொடுத்த நகைகள் கைவசமில்லை. உருக்கி விட்டோம் என்று தேவஸ்தானம் விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த மாதிரி ஆர்னமென்ட்ஸ் விஷயத்துல தங்கத்தை விட அதுல பதிச்சிருக்க கூடிய விலை உயர்ந்த கற்களுக்கும், மேற்படி நகையின் பழமைக்கும் தான் மதிப்பு.
இந்த மேட்டர் லாலி பாப் சாப்பிடற பப்பாவுக்கு கூட தெரியும். ஹும்.. கழுதைக்கு தெரியுமா கந்த பொடி வாசனை?
மிராசிகள்ங்கற பேர்ல "அவாள்" பண்ணிக்கிட்டிருந்த அட்டூழியத்தை ஒழிக்கத்தான் என்.டி.ஆர் மிராசி முறைய தூக்கி கடாசினார். மிராசின்னா கோவில் நகை உட்பட கோவில் நாட்டாமை "அவாள்"கிட்டே இருக்கும். பரம்பரை பரம்பரையா சத்ரியங்க, வைசியங்க ,சூத்திரங்க கொட்டிக் கொடுத்த நகைகள் மேல இந்த நரிங்களுக்கு நாட்டாமை பிறப்புரிமையா வந்துக்கிட்டிருந்தது. நரிக்கு நாட்டாமை கிடைச்சா கிடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம் அது மாதிரி புகுந்து விளையாடியிருக்காய்ங்க.
மேற்படி உருக்கல் சம்பவம் கூட மிராசி காலத்துல தான் நடந்ததா ப்ரிலிமினரி இன்ஃபர் மேஷன். இந்த அழகுல மறுபடி மிராசி முறைய கொண்டுவரனும்னு
திருமலை தேவஸ்தானத்தில் இது போன்ற திடுக் சம்பவங்கள் நடப்பது புதிதல்ல. சில வருடங்களுக்கு முன் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொற் காசுகள் காணமல் போயின. ஏழுமலையானுக்கு சுளையாக கட்டணம் செலுத்தி விசேச பூஜைகள் ,சேவைகளில் பங்கு கொள்வோருக்கு கொடுக்க தேவஸ்தானம் வைத்திருந்த இந்த காசுகளை டாலர் சேஷாத்ரி தமது பந்தா,அல்டாப்,பில்டப், மாஃபுக்காக வி.வி.ஐ.பிக்களுக்கு வாரி இறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது இதற்கு பொறுப்பான டாலர் சேஷாத்திரி என்ற பிராமணோத்தமரை கோர்ட்டு உத்தரவை மீறிக்கூட பொத்தி பொத்தி காப்பாத்தினாய்ங்க. எப்படியோ ஒரு வழியா பீடை ஒழிஞ்சது.
திருமலை தலைமை அர்ச்சகரான இன்னொரு பிராமணோத்தமர்
( தி.தி.தேவஸ்தான தலைமை அர்ச்சகர் ரமண தீட்சித்துலு பி.ஹெச்.டி பார்ட்டி) தேவஸ்தான இணை நிர்வாக அலுவலரை படுத்திய பாட்டை பத்தி ஒரு பதிவு கூட போட்டிருந்தேன். அந்த பார்ட்டி மிராசி முறைய மறுபடி கொண்டுவரனும்னு குரல் கொடுத்ததையும் பதிவு பண்ணியிருந்தேன். பாவம் மிச்சம் மீதி நகைகளை உருக்கற வேலை பெண்டிங் ஆயிருச்சுல்ல. முடிச்சுரலாம்னு உத்தேசம் போல.
இந்த சந்தர்ப்பத்துல கடந்த வருடம் தி தி தே நிர்வாகத்துக்குட்பட்ட திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமி நகைகள் சேட்டுக்கடையில் அடகு வைக்கப்பட்டதையும் ஞா படுத்திக்கங்க.