Saturday, June 12, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்

பாபான்னா ஏர்ல  மோதிரம் வரவச்சு  இயர்ல பூ வைக்கிற  புட்டப்பர்த்தி பார்ட்டி கிடையாதுங்கோ.  ஷீரடி பாபா. ஆரம்பத்துல நான் கூட என்னாத்த மனுசனை போய் கும்ப்டுக்கினுன்னு நக்கல் பண்ணவன் தான். ஞானம்ங்கறதே மயிர் எல்லாம் உதிர்ந்து போன பிறகு கிடைக்கிற சீப்புமாதிரிதானே.

( நல்ல காலம் இந்த 43 வயசுக்கு ஹேர் டை, ஹென்னா,நாலணா அம்பது பைசா ஷாம்பூக்கள மீறி இவ்ள மாத்திரம் முடி இருக்கிறச்சயே சீப்பு கிடைச்ச மாதிரி ஞானமும் டபுள் ப்ரமோஷன் மாதிரி கொஞ்சம் முன்னாடியே கிடைச்சுருச்சு. வாழ்க வளர்க. மனிதன் என்பவன் தெய்வமாகலாம். ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா யத்பாவம் தத்பவதி )

எங்க ஊர்ல வேற இருக்கிற கொலைகாரன், பிக்பாக்கெட் எல்லாம் பாபா பக்தன். வியாழ கிழமையானா கசாய் ( மீன் மார்க்கெட்டுங்கண்ணா) மார்க்ட் ஷேர் மார்க்கெட் மாதிரி  விழுந்துரும். நிலைமை இப்படி இருக்க நான் எப்படி பாபாவை சீண்டறது?

ஃப்ளாஷ் பேக்: 1

பொருளாதார ரீதியா எத்தை தின்னா பித்தம் தெளியும்னு இருந்த காலம் அது.  கேப்மாரியா இருந்த நானு சம்சாரியாகி என்னங்கடா இது தே. க்களுக்கெல்லாம் பிரியாணி வாங்கி கொடுத்தோம், பெண்டாட்டிக்கு வெஜிட்டபுள் பிரியாணி கூட வாங்கித்தரமுடியலியேனு சல்க் பண்ணிக்கிற  ஸ்டேஜ் அது. சின்ன ப்ரேக் கிடைக்காதா அட்லீஸ்ட் பைசா புரளாதான்னு கண்ட கதவையும் தட்டிக்கிட்டிருந்த  நேரம் அது.

அப்போ வேதவியாஸ்ங்கறவர் எழுதின கலியுக முடிவு 1999லயாங்கற புஸ்தவத்தை படிச்சேன்.(தெலுங்கு கண்ணா தெலுங்கு) பார்ட்டி நேரு காலத்து ஐ.ஏ.எஸ். "அந்த" இனம் தான். வேதிக் யூனிவர்சிட்டினு வச்சி வேதத்துல டிகிரி கொடுத்துக்கிட்டிருந்த ஆசாமி.

மேற்படி புஸ்தவத்தை படிச்சுட்டு வியாசருக்கு ஒரு லெட்டர் போட்டேன். புஸ்தவம் நல்லாதான் இருக்குது.ஆனால் சொல்ல வந்ததை நேரடியா சொல்லாம வக்கீலின் வாதம் போல எழுதியிருக்கிங்க. நம்பாதவுகளை நம்ப வைக்கிற முயற்சிதான் அதிகமா இருக்கே தவிர விஷயம் குறைவுதான். இதெல்லாம் கரெக்டா இல்லையான்னு முடிவு பண்ண வேண்டியது 1999 தான். இதை எடிட்  பண்ணி தமிழ்ல விட்டா நல்லாருக்கும். வேணம்னா நானே பெயர்த்து தரேன்னு எழுதியிருந்தேன்.

அதுக்கு அவரு பலான தேதில திருமலை வர்ரதாவும்  நேர்ல சந்திக்கனும்னும் பதில் போட்டதோட வழிச்செலவுக்கு எம்.ஓ கூட பண்ணியிருந்தார். சரி இதையும் பார்த்துருவம்னு போனேன். சித்தூர் டு திருப்பதி போயாச்சு. திருமலா போகனும்னா ப்ரைவேட் வெயிக்கிள் தான் கதி. அரசு பேருந்தெல்லாம் புளி மூட்டை கணக்கா சனம். கையில இருந்த  நூறு ரூ நோட்டை ட்ரைவர் கிட்ட கொடுத்தா சில்லறை கேட்கிறான். அந்த  நேரம் பார்த்து மார்ல மூங்கில் தட்டுல  ஃப்ரேம் போட்ட படங்களை வச்சிக்கிட்டு ஒருத்தன் வந்தான். இருந்த படங்கள்ளயே நம்ம டேஸ்டுக்கு ஏத்தமாதிரி இருந்தது ஷீரடி பாபாவோட படம் தான். அந்த சமயம் நாம ஏழுமலையானோட ஃபேன்.

இருந்தாலும் மனசுல ஒரு எண்ணம் ஃப்ளாஷ் அடிச்சது

"எல்லா பார்ட்டியும் ஒன்னுதானோ என்னமோ  ஜஸ்ட் ஈகோ காரணமா நம்மால இதை உணர முடியலியோ என்னவோ எந்த ரூபத்துல என்னை வணங்கினா அந்த ரூபத்துல அருள் புரிவேன்னு  கீதையில   கிட்ண பரமாத்மா கூட சொல்லியிருக்காரே ."

இந்த மாதிரி ஒரு எண்ணம் வந்ததுமே படக்கு பாபா படத்தை வாங்கி பைல வச்சிக்கிட்டு திருமலைக்கு ஜீப் ஏறிட்டன். மேற்சொன்ன வேதவியாஸ் கம்மியான ஆளில்லே. பொதுவாவே அரசு அதிகாரின்னா ஒரு கெத்து இருக்கும். சர்வீஸ்ல இருக்கிற வரை ஒரு விதமான இம்பார்ட்டென்ஸை அனுபவிச்சு பழக்கப்பட்டுருவாய்ங்க. அந்த  நேரத்துல குல தெய்வம்,குல வழக்கம்லாம்  டோன்ட் கேர். ( எல்லா இனத்துக்கும் இது பொருந்தும்.பொதுவான விதி)


ஒரு நா கவர்மென்டோ, தனியார் கம்பெனியோ நீ கிழவாடியாயிட்ட வீட்டைப்போய் சேருன்னிரும். அப்பத்தான் இந்த கிராக்கிக்கெல்லாம் ஆன்மீகம் சொம்மா பொத்துக்கினு வரும். ப்யூட்டி என்னடான்னா தாங்க சர்வீஸ்ல இருந்தப்ப கெவுர்மென்டு, கம்பெனி வேலைகளை எப்படி அலட்டலா பண்ணிட்டிருந்தாய்ங்களோ அப்படியே இந்த வேலைகளையும் செய்வாய்ங்க.

அஞ்சு ரூ நோட்டு திருச்சிலயும் அஞ்சு ரூபா தான் திருச்சூர்லயும் அஞ்சு ரூபாதான்.
மேலும் அவர் அய்யரு.  (இந்த நோய் அவாள்ள ரெம்ப அதிகம்) இந்த சைக்காலஜியெல்லாம் நமக்கும் தெரியுங்கறதால ஒரு மாதிரியா போட்டு வாங்கி "ராமானுஜ வைபவம்"னு அவரே எழுதின ஒரு புஸ்தவத்தை (பல பாகம்ணே..பொழப்பையே நடத்திரலாம்) டப் பண்ற ப்ராஜெக்டை வாங்கிக்கிட்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

அய்யரு டெப்ளாய்  பண்ண ப்ரோக்கர் இடையில வேலை காட்டினதால ப்ராஜெக்டை பாதில விட்டுட்டம்னு வைங்க. இருந்தாலும் கஷ்ட காலத்துல  பொளப்பு ஓடிச்சுல்லா.  முதல்ல பக்தவத்ஸலனான பெருமாள் தான் தன்னோட  க்ஷேத்திரத்துல பாபா ரூபத்துல வந்து அருள் புரிஞ்சதாதான் நினைச்சுக்கிட்டேன்.அதுக்கப்புறமா நடந்த சீனெல்லாம் பாபா பக்தவத்ஸலன் எல்லாம் ஒரே க்ரூப்பு, க்ரூப்பு என்னங்கண்ணா க்ரூப்பு இவிகல்லாரு ஒரே பார்ட்டி கெட்டப் தான் வேற வேறன்னு கொஞ்சம் லேட்டா புரிஞ்சிக்கிட்டேன்.

இத்தனைக்கும் வேதவியாசரு மேற்படி ப்ராஜக்டை கொடுக்க  முக்கியமான காரணம் என்ன தெரியுமா பேசிக்கலா அவரே ஒரு ஜோசியர், ஜோதிஷ பரிசோதகர்  ( அவருக்குனு ஒரு சொந்த பத்திரிக்கை இருக்கு அதுல என்.டி.ஆரோட டெத் டேட்டை கொடுத்திருந்தார்). சந்திச்சப்ப அவர்  கேட்ட முத கேள்வி நீங்க என்ன பண்றிங்க? பாரதியார் "எமக்கு தொழில் கவிதை" ன்னு சொன்னாப்ல ஜோசியம்னு சொன்னேன். ஒடனே ஒரு பேப்பரை கொடுத்து போட்டுக்க ராசி சக்கரம், சொல்லு பார்க்கலாம் பலனைன்னாரு.

நான் என்னதான் சொன்னேன்னு தெரியாது (ஞா இல்லை). பார்ட்டி தொபுக்கடீர். இங்க ஷாட்டை கட் பண்ணுவோம். பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர் பதிவுங்கறதால அடுத்த பதிவுல மத்த ஃப்ளாஷ் பேக்ஸ பார்ப்போம்.