Wednesday, June 16, 2010

மனைவியையே சுற்றி சுற்றி

அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு இந்த பதிவை கேள்வி பதில்வடிவத்துல தந்திருக்கேன். கூடவே செக்ஸ் பவர் அதிகரிக்கங்கற  வில்லங்க தலைப்புல வில்லங்கமில்லாம பொறுப்பா ஒரு பதிவையும் போட்டிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்கண்ணா

பாடாவதி பத்திரிக்கைகள்ல கூட "கேள்வி பதில்"னு ஒரு  பகுதி நிச்சயம் உண்டு. வாசகனுக்கு தெரியாததை ஆசிரியன் சொல்லிரப்போறது ஒன்னுமில்லை. பத்திரிக்கை தலையங்கத்துல ஹோல்சேலா சொல்ற மேட்டரை உடைச்சி உடைச்சி ரிடெய்லா சொல்ல கேள்வி  பதில் ஒரு சாக்கு. நம்ம ப்ளாக்ல என்னென்னமோ குரங்கு வேலையெல்லாம் பண்ணியாச்சு. கேள்வி பதில் இல்லன்னா எப்படி? அதனால நீங்க மென்டலா ப்ரிப்பேர் ஆற மாதிரி முதல்ல லேசான கேள்விகளுக்கும் பொறவு கனமான கேள்விகளுக்கும் பதில் கொடுத்திருக்கேன். இதுக்கான வரவேற்பை பார்த்து தொடர்ரதா ,விட்டுர்ரதா பார்க்கலாம்.

1.முதலிரவு?
கவிதை தொகுப்புகள் கழுதைகளுக்கு தின்னக்கொடுக்கப்படும் வேளை

2.கல்யாணம்?
இதுவரை கண்ணாலம் கட்டிக்கிட்டவங்க அவிக பெண்டாட்டிங்களை சேஃப் பண்ணிக்க பண்ற ஏற்பாடு.

3.மனைவி?
தெனாலிராமன் பூனைக்கு வச்ச கொதிக்கற பாலு. மேரீட் மென்னெல்லாம் பெண்கள்னாலே அலர்ராப்ல செய்துர்ர தெரஃபி

4..பெண்ணோட தொப்புளுக்கு சினிமால ஏன் இத்தனை ப்ராமினன்ஸ்?
இவன் தன் அம்மாவோட வயித்துல இருந்தப்ப ஃபுட் சப்ளை கொடுத்ததுல்லிங்களா? அந்த ஞா. பெண்ணோட மார்பு, தொப்புள், யோனி மேல இருந்து கவனத்தை திருப்ப முடியாதவனுக்கெல்லாம் மானசிக வயசு நாலு அஞ்சுக்கு மேல இருக்காது. ஹி இஸ் ஜஸ்ட் சைல்டிஷ். இம்மெச்சூர்ட்.  என்ன ஒரு வம்புன்னா இவன் உடம்பு வள்ர்ந்துட்டதால இவனோட செயல்பாடு அதுக்கடுத்த   ஸ்டேஜை கற்பனை பண்ணிக்குது வாய்ப்பு கிடைச்சா தக்ஜம். தட்ஸால்

6.என் நண்பன் மனைவியையே சுற்றி சுற்றி வருகிறான்?
உங்க மனைவிய  சுத்தி வராத வரை சேஃப். ( பெண்ணுக்கு ஆண் ஏன் தன்னை சுத்தி வரான்னு தெரியும். வாய்ப்பே கிடைச்சாலும் அவன் ஒரு ம..ரும் கிழிக்க போறதில்லன்னும் தெரியும். அவரு எந்தளவுக்கு சப்பை பார்ட்டியோ அந்த அளவுக்கு அவளுக்கு எரிச்சல்தான் வரும்.  நீங்க ஸ்தூலமா பார்க்கிற  பெண்ணோட கேரக்டரே பொய்.வெளி வேஷம். மேம்போக்கானது. அவளுக்குள்ள ஒரு தேவதையும் இருக்கிறா. ஒரு சாத்தானும் இருக்குது. அதுல எதை நீங்க தட்டி எழுப்பறிங்கங்கறதுலதான் உங்க வாழ்க்கையோட வெற்றி தோல்வியெல்லாம் அடங்கியிருக்கு) 

இனி கொஞ்சம் விரிவான பதில்களுடன் கூடிய கேள்விகள்:


1.கே: உனக்கு  22 எனக்கு 32 ன்னு ஒரு தொடரை ஆரம்பிச்சிங்க அதை அப்டியே டீல்ல விட்டுட்டிங்களே

ப: அதுவா அண்ணாத்த.. அது ஆரம்பத்துல நல்லாதான் டேக் ஆஃப் ஆச்சு. தேவையில்லாம அதுல அரசியலை கொண்டு வந்து டப்பிங் சினிமா ரேஞ்சுக்கு போயிருச்சு. எப்படியோ அதை ஒடைச்சி மாயாவுக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக்கெல்லாம் வரவச்சு பெண்டிங்ல வச்சிருக்கேன். சீக்கிரத்துல தொடரும்

2.கே: அது ஏங்க அதுக்குள்ள மைல்ட் ஹார்ட் அட்டாக் ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டிங்க

ப:நம்ம கேரக்டரும் வடிவேலு மாதிரி தான் எல்லாம் நல்லா போயிட்டிருக்கும் போது  எதையும் கண்டுக்க மாட்டோம். எதுனா நடக்க கூடாதது நடந்தாதான் " நல்லாத்தானே போயிக்கிட்டிருந்தது"ன்னு யோசிக்க ஆரம்பிப்போம். மாயா  நல்ல ஆரோக்கியத்தோட இருந்தப்ப முகேஷு அரசியல் சதுரங்கத்துலயும், கேங் வார்லயும் பிசி. மாயாவுக்கு அட்டாக் வந்த பொறவு முழிச்சுக்கறான்.

3.கே:சரிங்கண்ணா மேற்படி கதைய சனம் இத்தனை நாளு சகிச்சி படிக்க காரணம் என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்?

ப:வேறென்ன ஆண் பெண் உறவை பிரிச்சு மேஞ்சோமில்லை அதான்..

4.கே: நாட்ல எத்தனையோ பிரச்சினை சனங்க கழுத்தை நெறிக்கறச்ச இப்படி ஒரு  தொடர் எழுதிக்கிட்டிருக்கமேன்னு தோணலிங்களா?
ப: தோணினதாலதான் ப்ரேக் போட்டு வச்சிருக்கம்

5. கே: அப்ப ஏன் எழுத ஆரம்பிச்சிங்க?
உலக சனத்தொகைல சரி பாதி பெண்கள் சரி பாதி ஆண்கள். இவிக மத்தில சரியான புரிதல் ஏற்பட்டுப்போச்சுன்னா அப்பாறம் ஆத்திகம், நாத்திகம், கம்யூனிசம்,கேப்பிடலிசத்துலருந்து சாதி,மாதம், ஏரியா  மாதிரி எந்த பிரச்சினையும் ஒன்னும் செய்ய முடியாதுங்கண்ணா.. நீங்க எந்த பிரச்சினைய வேணம்னா எடுங்க அதுக்கு மூலம் ஆண் பெண் உறவுல இருக்கிற சிக்கலாதான்  இருக்கும். இந்திரா காந்தி  ஃபெரோஸ் காந்தியோட தாம்பத்ய வாழ்க்கை சரியா அமைஞ்சிருந்தா இந்தியாவோட வரலாறே மாறியிருக்கும்.

6.கே: அது சரி திடீர்னு ஏன் பாபா புராணத்தை ஆரம்பிச்சிங்க?
ப: அது வந்துங்கண்ணா திடீர்னு 16 பக்கத்துல பாபா ஸ்தோத்திர புஸ்தவம் 1 லட்சம் காப்பி போட்டு வினியோகிச்சா என்னன்னு ஒரு எண்ணம் வந்தது. பரபரன்னு வாண்டட் ஸ்பான்சரர்ஸுன்னு ஒரு பாம்லெட் போட்டு  வினியோகம் பண்ணிட்டோம். ( பாபா பக்தரான எங்கள் எம்.எல்.ஏ சி.கே பாபு 4 ஆவது முறையா எம்.எல்.ஏ ஆகி ஒரு வருஷம் நிறைஞ்சதை முன்னிட்டு) 1000 காப்பீஸுக்கு ரூ. 816 /-ந்னு ஃபிக்ஸ் பண்ணினேன்.  படபடன்னு  ஸ்பான்சரர்ஸ் முன் வர ஆரம்பிச்சுட்டாய்ங்க. முதல் 1000 காப்பீஸ் போட பக்கத்துக்கு 8  பேஜுன்னு ரெண்டு பக்கம்  மாஸ்டர் எடுத்து ப்ரஸ்ஸுக்கு அனுப்பறேன். மொதல் பக்கம் ப்ரிண்ட் ஆனபிறகு ஃபோன் வருது பக்கங்கள் சேரமாட்டேங்குதுன்னு .அங்கே கொஞ்சம் டர்ராயிட்டன். (பேப்பர்,பிரிண்டிங் காஸ்ட் எல்லாம் லாஸுதான்) பாபாவுக்கும் நமக்கும் என்ன டீலிங் ஏன் இப்படி ஆயிருச்சுன்னு ரோசிக்க ஆரம்பிச்சேன். சிந்தனை எழுத்தாச்சு

7.கே: அதுசரி.. ஆன்மீக அனுபவங்கள்ங்கற பேர்ல என்னென்னவோ பீலா விடறிங்களே நம்பற மாதிரியே இல்லையே..

ப:  நம்ப முடியாம நீங்க மட்டுமா தவிக்கிறிங்க.. நானும் தான் தவிக்கிறேன். என்னங்கடா இது அப்போ நடந்தது என்ன? இப்போ நடக்காம போறதென்னன்னு

8.கே:இந்த தொடராவது தொடருமா?

ப: நீங்கல்லாம் என்னைப்பத்தி என்ன நினைக்கிறிங்கன்னா நம்ம முருகேசுக்குள்ள  ஒரு பிசாசு இருக்கு அதான் பக்கம் பக்கமா தட்டிக்கொடுத்துருது.இவரு நோகாம பென் ட்ரைவ்ல போட்டுக்கிட்டு வந்து அப்லோட் பண்ணிர்ராருன்னு நினைக்கிறிங்க.
ஆனா மனசுல ஒரு ஸ்பார்க் வர்ரதும், அதுக்கு ஒரு ஃபார்ம் அமையறதும், கம்ப்யூட்டர்ல எழுத்தா மார்ரதும் ஒவ்வொரு நாளும் ஒரு அற்புதம் மாதிரிதான் நடக்குது.பல கண்டங்களை தாண்டி,பாலகிரக தோஷங்களையெல்லாம் தாண்டித்தான் ஒவ்வொரு பதிவும் வலையேறுது. இந்த ப்ராசஸையெல்லாம் முத ஆளா பார்க்கிறதால  இதையெல்லாம் ஒரு சாதனைன்னு சொல்லிக்கவோ  பெருமை பட்டுக்கவோ ரொம்ப தயக்கமா இருக்கு. தொடர்  அங்கே (ரஜினி ஆகாயத்தை காட்டற ஷாட்) தொடர்ந்தா இங்கனயும் தொடருங்கண்ணா

9.கே:ரெம்ப ப்ரோக்ரசிவா யோசிக்கிறிங்க ஆனா ஒய்.எஸ்.ஆர் ஜகனுன்னு சால்ரா போடறிங்களே

ப: ரோசிக்கிறது ஆரு வேணம்னா ரோசிச்சுரலாங்க. நான் கூட டாஸ்மாக்கை நம்பாம அரசுகள் சில்லறை தேற்றன்னு 40க்கு மேல யோசனை தெரிவிச்சு கலைஞர் ஸ்டாலினுக்கு லெட்டர் அனுப்பியிருக்கேன். எங்க ஊர்ல ஜெயபிரகாஷ் நாராயணன்னு ஒரு முன்னாள் ஐ.ஏ,.எஸ் லோக் சத்தான்னு ஒரு அமைப்பை நடத்திக்கிட்டிருந்தார். (அவர் சர்வீஸ்ல இருக்கிறச்ச அவரோட டிப்பார்ட்மெண்ட்ல எத்தனை அரி புரி நடந்திருக்கும் .அப்பல்லாம் ஆகே பீச்சே மூடிக்கிட்டு குப்பைய கொட்டிட்டு வெளிய வந்த பிறகு பீசு பீசுன்னு பீசனாரு.) அதை அரசியல் கட்சியாக்கினாரு. என்ன ஆச்சு? அவரு மட்டும் ஜெயிச்சாரு.

ராஜசேகர் ரெட்டி 100% உத்தமர்னு சொல்லல. ஆனால் அவரு ரொட்டீன் கஸ்டம்ஸ், கான்ட்ரா டிக்ஷன்ஸையெல்லாம்  சமாளிச்சுக்கிட்டும் எத்தனையோ செய்தாரு.  நான் லட்சிய வாதியா இருக்கலாம். ஆனால் லட்சியம்  யதார்த்தத்துல ரியலைஸ் ஆகனுமே. அது நடக்கறதெப்போ சனத்துக்கு நல்லது   நடக்கறது எப்போ? ஒரு ஜகன் சி.எம்மா வந்தா புதுசா ஒன்னத்தையும் கிழிக்கலன்னாலும் ஒய்.எஸ்.ஆரோட நல திட்டங்களை தொடர்வாரில்லையா?

ரோசய்யா எதுக்கெடுத்தாலும் கைய பிசைஞ்சிக்கிட்டு தில்லி பக்கம் கைய காட்டிக்கிட்டு பன்னாடை மாதிரி கண்டதுக்கும் வெட்டு விதிச்சுக்கிட்டிருக்காரு.. வென் தேர் ஈஸ் நோ பெஸ்ட் சாய்ஸ் ஐ ஹேவ் டு ஆப்ட் பெட்டர் சாய்ஸ் இல்லையா? சந்திரபாபுவோட 9 ஆண்டுகால ஆட்சியை நேர்ல பார்த்தவன் நானு. பதவி இழந்து 6 வருஷம் நிறைய போகுது இப்ப கூட அவர்ல எந்தவித மாற்றமும் கிடையாது. என்னை என்ன பண்ன சொல்றிங்க?

10.கே: மீடியாவே அவாள் கையில இருக்குன்னு சொல்றிங்க.. அவிகளையும் மீடியாவையும் கிழி கிழின்னு கிழிக்கறிங்க. ஒரு எழுத்தாளரா உங்க வளர்ச்சிக்கு இது தடை ஆயிராதா?

ப:ஆயிராதான்னு ஃப்யூச்சர் டென்ஸ்ல கேட்கிறிங்க. பாஸ்டும் இதான்.ப்ரசண்டும் இதான் .ஃப்யூச்சர்ல எதுனா  ஒரு  அற்புதம்  நடக்காமயா போயிரும். இசையே எங்க பஞ்ச கச்சத்துலயும், மடிசார்லயும்தான் இருக்குன்னு அவாள் அலட்டிக்கிட்டாய்ங்க. என்ன ஆச்சு? ஒரு தலித் மேஸ்ட்ரோ ஆகலையா ஒரு இசைவேளாள குல மங்கை சங்கீத சரஸ்வதியா கோலோச்சலியா ( எம்.எஸ் அம்மாவ சொல்றேன். நிறையா பேரு அவிகளும் ப்ராமின் தான்னு நினைச்சிட்டிருப்பிங்க. இதாங்க அவாளோட சதி)


மீடியா எத்த தின்னா பித்தம் தெளியுங்கற ஸ்டேஜுக்கு வந்துருச்சு ஒரு பத்திரிக்கைல என்ன வரனும்ங்கறத எடிட்டோரியலோ, நிர்வாகமோ தீர்மானிக்கிற காலம் போயிருச்சு. விளம்பரத்துறைதான் அந்த வேலைய செய்யுது. சனத்துக்கு படிக்கிற வழக்கமே காலாவதியாயிருச்சு. இருக்கிற கொஞ்ச நஞ்சம் ரீடர்ஷிப்புக்கும் கண் டப்ஸாயிட்டாலோ அல்லது அவிக ரிட்டையர் ஆகி கிம்பளம், சம்பளம் எல்லாம் நின்னு போயிட்டாலோ மீடியா ஃபணாலாயிரும். குதிரைய அடக்க ஒரு டெக்னிக் உண்டு. அதை ஓட விட்டு களைச்சு போன நேரத்துல கடிவாளத்தை இழுத்து பிடிக்கனும். நம்ம எழுத்து ஒரு புதுவெள்ளம். இதுல பிராமணீயம்லாம் அடிச்சுட்டு போயிரும். ( என்ன? எனக்கும் ஒரு பார்ப்பாத்திய கட்டிக்கொடுக்க பார்ப்பாய்ங்க. நாமதான் ஏற்கெனவே வீரவன்னிய மங்கைய மண முடிச்சாச்சே) அட்லீஸ் என்னையும் ஒரு பார்ப்பானாக்கிர முயற்சி பண்ணுவாய்ங்க. நமக்குத்தான் அவிக வித்தை மொத்தம் மனப்பாடமாச்சே. மாட்ட மாட்டேனே.. அவிக சர்க்குலேஷனை உயர்த்திக்க என் எழுத்து தேவைப்படற ஒரு காலம் வரும். அதுவரை .. ஜஸ்ட் வெயிட் அண்ட் சீ தான்.

11.கே: ஒரு அரசாங்கம்  நாட்டு நிர்வாகத்துல எதுக்கு ப்ரியாரிட்டி தரணும்னு நினைக்கிறிங்க?

ப:
அ) மக்கள் உயிர் காத்தல் (விபத்து,கொலை, தற்கொலை,தீவிர வாதம்)
ஆ) அவிகளோட பேசிக்கல் நீட்ஸை கவுரவமான முறைல (வேலை வெட்டி) தீர்த்துக்க வழி வகுத்தல் ஒவ்வொரு குழந்தையும் 18 வயசு முடிஞ்சதும் தன் பிழைப்பை தானே பார்த்துக்கறாப்ல அவிக மைண்ட், பாடிய ட்யூன் பண்ணனும். அட்லீஸ்ட் காலேஜ்லருந்து ஸ்கில்ட் லேபரா வெளிய வராப்ல செய்யனும்
இ) இதுக்கு விவசாயம் தான் பெஸ்ட் சாய்ஸ். 70% மக்கள் விவசாயத்தை சார்ந்து வாழறாய்ங்க.ஸோ பட்ஜெட்ல 70 சதவீதம் நிதிய நீர்பாசனத்துக்கு செலவழிக்கனும்
ஈ)மக்களை நேரிடையா பாதிக்க கூடிய விஷயங்கள்ளயாவது அரசியல் பார்க்காம துரித நடவடிக்கை சட்டம் ஒழுங்கு,குடி நீர்,வேலை வாய்ப்பு

12.
கே: ஆமா நாடு நாடுன்னு பினாத்தறிங்களே.. நெஜம்மா சொல்லுங்க.. நாட்டுமேல உங்களுக்கு என்ன அக்கறை?
ப: என் மேல மட்டும் அக்கறை காட்டி வாழ்ந்த வாழ்க்கை (1967 முதல் 1987 வரை)  எனக்கு கற்றுத்தந்த எதுவும்  1987 முதல் 2007 வரை நான் சந்தித்த வாழ்க்கை போராட்டத்துல உதவலை. அப்பப்போ அவசர அடியா நானா உருக்கி ஊத்தி எடுத்த ஆயுதங்கள் தான் உதவுச்சு. அந்த மன உறுதிய தந்தது என் செயல்கள்ள சுய நலம் இல்லேங்கற எண்ணம் தான்.  முதல் 20 ல வாழ்ந்த வாழ்க்கைய பிடிவாதமா  தொடர நினைச்சிருந்தா செத்துப்போயிருப்பேன். (கு.ப தற்கொலை) . புதுசா எதிர்பட்ட வாழ்க்கைய ஏத்துக்கிட்டேன் உசுரோட இருக்கேன். இந்த உசுரு பொது நலம் போட்ட பிச்சை. எங்க என் மேல அக்கறை காட்டி என் வாழ்க்கைய சீரழிச்சுருவனோங்கற பயத்துல என் ஒட்டு மொத்த கவனத்தையும் நாட்டு மேல திருப்பிட்டேன். இதுவும் ஒரு சுய நலம்தான். என்ன பண்ண?