பாலகுமாரன் & சுஜாதாவுக்கு முந்தியும் நிறைய எழுத்தாளர்கள் இருந்தாக. நானும் சில பேரோட எழுத்துக்களை படிச்சிருக்கேன். பாலகுமாரன் & சுஜாதாவுக்கு அப்புறமும்
நிறைய எழுத்தாளர்கள் வந்திருக்காக. அவிக எழுத்துக்களையும் படிச்சிருக்கேன். ஆனால் இவிக ரெண்டு பேரோட எழுத்தும் என்னை பாதிச்ச அளவுக்கு வேறு யாரோட எழுத்துக்களும் என்னை பாதிச்சதில்லை. மறுபடி மறுபடி படிச்சிருக்கேன்.
சமீப கால எழுத்துலக சரித்திரத்துல இவிக எம்.ஜி.ஆர் சிவாஜி, ரஜினி கமல் மாதிரி வச்சுக்குவமே. சுஜாதா தான் பாலாவுக்கு ரைட்டிங் க்ராஃப்ட்னா என்னனு க்ளாஸ் எடுத்ததா பா.குமாரனே தன் சு.சரித்திரத்தில் சொல்லியிருக்கிறார் அதை அவர் கடைசி வரை ஒழுங்காவே கத்துக்கலைங்கறது வேறு சங்கதி.
இவர்களது படைப்புகள் எல்லாமே (விரல் விட்டு எண்ணக்கூடிய விதி விலக்குகள் உள்ளன. வேண்டுமென்றே அவற்றை குறிப்பிடாமலே இதை தொடர்கிறேன்) பிராமணீயத்தை பொத்தி காப்பாற்றுவதிலும், விஷ விதைகளை விதைப்பதிலும் ஒன்றுக்கொன்று இளைத்தவை அல்ல. என்ன சுஜாதா கொஞ்சம் ஆழத்தில் வைத்திருப்பார், பாலாவின் எழுத்துக்களில் இவை வெளிப்படையாக பல்லை இளிக்கும்.
சுஜாதா போகிற போக்கில் தன் காரியத்தையும் கவனிப்பார். பாலா அதே வேலையாக வரிந்து கட்டி எழுதியிருப்பார். இதான் வித்யாசம். மத்தபடி இன உணர்வில் இருவரும் சமம்தான். சுஜாதா என்னதான் தொங்கு மீசை ,ஸ்டெப் கட், வசந்த் ஜோக்ஸ் என்று தூள் பறத்தினாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
சுஜாதா கதைகள்ள எடுப்பு,தொடுப்பு,தொகையறா,வகையறால்லாம் தூளா இருக்கும். என்ன ஒரு சிக்கல்னா நல்லவிகல்லாம் பிராமணாளா இருப்பாய்ங்க. கெட்டவன் எல்லாம் நான் பிராமிணா இருப்பான்.
உ.ம்:1
மணி அய்யர் கெட்டு நொந்த ஓட்டல்காரர். இவர் ஓட்டலுக்கு லேட் அவர்ஸுல ஒருத்தன் வருவான். அய்யரு மனிதாபிமானமா ஆளனுப்பி ரவை கிவை வரவச்சு உப்புமா கிண்டி கொடுப்பாரு. வந்தவன் கத்தி காட்டி கல்லால இருக்கிற பணத்தையும் ரிஸ்ட் வாட்சை திருடிட்டு போவான். அய்யர் பின்னாடி இருந்து கூவுவாரு " வாட்ச் நின்னுப்போனா அப்பப்ப ஆட்டனும் .. ஆட்டினா ஓடும்"னுவாரு. ஓட்டல்காரரு அய்யருதான்.வந்தவர்க்கு சாதியில்லை. ஆனால் அவரோட பேச்சை வச்சே சுஜாதா அவரை நான் பிராமினா எஸ்டாப்ளிஷ் பண்ணியிருக்கிறதை புரிஞ்சிக்க மூளை கூட தேவையில்லே கிட்னி போதும்
உ.ம்:2
ஏரிகாத்த ராமர் சிலையை திருட வர்ரான் ஒருத்தான். அய்யரு விவரம் தெரியாம தன் வீட்லயே போர்டிங்க லாட்ஜிங் எல்லாம் ஏற்பாடு பண்றாரு. வந்தவன் அய்யரு பெண்ணையே கணக்கு பண்ண பார்க்கிறான். அய்யர் சிலையை காப்பாத்த தன் உயிரையே தர்ரார். அதாவது வந்தவன் அய்யரை போட்டுத்தள்ளிர்ரான். இந்த படுபாதக செயலை செய்யறவன் நான் பிராமின். கடைசில அவனை வவ்வால் கடிச்சுருது. சில தினங்கள்ள செத்துருவான்னு கதை முடியுது. இந்த கதைலயும் வில்லனை நான் பிராமினுன்னு சுஜாதா சொல்றதுல்ல. ஆனால் அவனோட பேச்சு ? அவன் நான் பிராமினுன்னு சொல்லாமயே சொல்லும்.
பாலகுமாரனும் என்னதான் தேவடியாளையே கண்ணாலம் கட்டிக்கொள்ளும், தே.ளுடன் இலக்கியம் சர்ச்சிக்கும் அத்தனை கேர் ஃப்ரீயான பாத்திரங்களை படைத்தாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
வர்ணாசிரம தர்மத்தை, மனு தர்மத்தை, தர்ம சாஸ்திரத்தை (இதுவும் மனு தர்மம் மாதிரி ஓரவஞ்சனை கொண்டதுதான்) வலியிறுத்தி பாரா பாராவா எழுதியிருக்கிறதால ஒரே உ.ம் காட்டறேன். மெர்க்குரி பூக்கள்ள ஃபேக்டரி ஓனர் ப்ராமின். ஸ்ட் ரைக் நடக்கும். தொழிலாளர்கள் ஃபேக்டரியை கொளுத்தறாய்ங்க. அப்ப அவரோட புலம்பலை பாருங்க..
இவர்கள் இருவருமே எழுத்தில் மிகச்சிறந்த க்ராஃப்ட்ஸ் மென்னாக இருக்கலாம். ஆனால் தமது ஹிடன் அஜெண்டாவை அமல் செய்வதில் இருவருமே வென்று தம் எழுத்து மற்றும் பொறுப்பில் முழுக்க முழுக்க தோற்றுப்போனவர்கள்தான்.
இவர்களின் கதைகளை ஒரு முறையோ இரு முறையோ படித்தால் எல்லாம் நிஜம் விளங்காது. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். கருத்தூன்றி படிக்க வேண்டும். உணர்ச்சி வசப்படாது ஆய்வு கண்ணோட்டத்துடன் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் ரத்தத்தில் ஊறிய பிராமணீயம் அவர்கள் எழுத்துக்களில் தரிசனமளிக்கும். பாலாவின் பிற்கால புராண இதிகாசங்களை தழுவிய பாக்கெட் நாவல்களில் இந்த பிரச்சினையில்லை. பாலா தன்னை உணர்ந்து , சுய தர்மத்துக்கு வந்துவிட்டார். இந்த பதிவு மேற்படி உன்னதர்களின் எழுத்திலான பிராமணீயத்தை பற்றியதல்ல. இன்னும் ஆழமானது அருவறுப்பானது.
சுஜாதாவின் கமிஷ்னருக்கு ஒரு கடிதம், பாலாவின் பலாமரம் நாவல்களை ஒரே நாளில் படித்திருக்கிறீர்களா? நான் படித்திருக்கிறேன்.
இரண்டு நாவலிலும் உள்ள பொதுவான அம்சங்கள்:
ஒரு காவல் துறை அதிகாரி. அவர் கடமை வீரர். திருமண வாழ்வில் சிக்கல். அவர் மீது அனுதாபம் காட்டும் மற்றொரு பெண்..
ஒரே ஆங்கில நாவலிலிருந்து உருவப்பட்டதா? அ அன்னிய தேசத்து திரைப்படம் ஒன்றின் தழுவலா ? இதை அவர்கள்தான் கூற வேண்டும்.(சாரி சுஜாதா அவர்கள் உயிருடன் இல்லை எனவே அவரது ரசிகர்கள் விளக்கலாம்)
பாலா, நிழல் உலக டானான தாத்தாவே காதல் திருமணத்தால் விலகிப்போன மகனை ஈர்க்க பேரனை கிட்னாப் செய்வது போல் ஒரு நாவல் எழுதியுள்ளார். இதே கதை முதலில் தாசரி நடிக்க வெளியானது. பின்பு நாகார்ஜுனா ,கிருஷ்ணா நடிக்க வெளியானது.
பெயர் போட்டு நாவல் வெளியிட்டாலே ( சன் மானம் கொடுக்காது) வெளியிட்டவரின் வமிசத்தை சபிக்கும் பாலா பெயர் கூட போடாது தன் கதையை படம் பிடித்தவர்களை சுட்டவர்களை எப்படி விட்டார். இவருடைய கதையும் சுட்ட கேஸ்தானா?
இதே போல் சுஜாதாவின் நாவல்களுக்கும்,எண்டமூரி நாவல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது.அவர் பணம்-பணம்-பணம் எழுதினால் இவர் அனிதாவின் காதல்கள்,அவர் ராட்சஸன் எழுதினால் இவர் செப்டம்பர் பலி. ஆனால் ஒருவரை ஒருவர் கண்டுக்கவே இல்லை. (ரெண்டு பேருக்கும் தெரியுமோ என்னவோ ரெண்டு பேரும் எங்கருந்து உருவினாய்ங்கனு)
பாலாவின் இரண்டாவது சூரியன், சினேகமுள்ள சிங்கம் இரண்டு நாவல்கள் அவரது சந்தர்ப்பவாதத்துக்கு அசைக்க முடியாத சாட்சியங்கள். சினேகமுள்ள சிங்கத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோ, கலைஞர் வில்லன். இரண்டாவது சூரியனில் எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் (வில்லன்) கலைஞர் தலைவர் ( ஹீரோ).காரணம் என்னடான்னா சினேகமுள்ள சிங்கம் எழுதறச்ச எம்.ஜி.ஆர் முதல்வர், இரண்டாவது சூரியன் எழுதறச்ச 13 வருஷ வனவாசத்துக்கு பின் கலைஞர் முதல்வராயிட்டார். இதான் பாலாவோட க்ரெடியபிலிட்டி.
இந்த விஷயத்தில் சுஜாதா தில்லு துரை ஏறக்குறைய கலைஞர் ,எம்.ஜி ஆர் கதையை பதவிக்காகனு குங்குமத்துல எழுதினாரு ( பாவம் கலைஞர் அப்போ எதிர்கட்சி தலைவர். எ.க.தலைவரா இருக்கிறச்ச கலைஞர் பாவம் ரொம்பவே ப்ராட் மைண்டடா இருப்பார்.மனித உரிமை காவலரா இருப்பார்.தமிழின தலைவரா இருப்பார். முதல்வராயிட்டா தான் பிரச்சினை.
ஆளும் வர்கத்துக்கு ஜால்ரா போடுவதில் இருவருமே புலிகள்தான். இதிலும் பாலகுமாரன் ஃபெய்ல். விசயம் என்னடான்னா பாலாவோட சால்ரா நாராசமா இருக்கும். சுஜாதா காரம்,மணம்,குணம் சுவை நிரம்பிய நடையில் விமர்சிக்கிற தொனிலயே நல்லாவே குளிப்பாட்டிடுவார்.
(எப்படியோ கொளுத்தி விட்டாச்சு .. நல்லாவே வெடிக்கும்னு நினைக்கிறேன். பார்ப்பனீய அறிவு ஜீவிகளின் பிடியில் இருக்கும் அப்பாவி சூத்திர செம்மல்களே அவர்தம் நிஜ ஸ்வரூபத்தை அறிந்து உதறுங்கள்)