Monday, June 7, 2010

பெண்கள் 9 வகை - 3

9 வகை பெண்கள்ங்கற தலைப்புல ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சு பாதில விட்டுட்டம். அதை தம் கட்டி முடிச்சுருவம்.

ஒவ்வொரு ஜாதகத்துலயும் லீடிங் ப்ளேனட்னு (இது நம்ம வொக்காபிலரி) ஒன்னிருக்கும். அதாவது ரெம்ப பாதிப்பை (  மைனஸ் மட்டுமில்லிங்கண்ணா ப்ளஸ்ஸையும் சேர்த்து தான் சொல்றேன்)ஏற்படுத்தும் நிலையில இருக்கோ அதான் லீடிங் ப்ளானெட். மத்த கிரகங்களோட இம்பாக்ட் இருந்தாலும் லீடிங் ப்ளானெட்டோட இம்பாக்ட் அதிகமா இருக்கும். இந்த லீடிங் ப்ளானெட் எதுங்கறத வச்சித்தான் பெண்கள் 9 வகைங்கற பதிவை எழுதினேன். சூரியன்,சந்திரன், செவ்வாய்,ராகு,சனி லீடிங் ப்ளானெட்டா இருந்தா அந்த பெண்ணோட கேரக்டர் இத்யாதி என்னவா இருக்கும்னு கடந்த பதிவுகள்ள சொல்லியிருந்தேன் இந்த பதிவுல புதன் தொடர்பான பெண்கள்,
கேது தொடர்பான பெண்கள் , சுக்கிரன் தொடர்பான பெண்களோட கேரக்டரை பார்ப்போம்.

புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி  ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் பேர் கொண்ட நபர்கள் நெருங்கி பழகுவார்கள். ( தோழிகளானால் பெருமாளின் மனைவி பெயர் கொண்டவர்கள்) .ஜாதகர் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறை தொடர்பான கல்வி பயில்வர். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.அண்டம், ஜாயிண்ட்ஸ் ,தொடர்பான பிரச்சினைகள் வரலாம். தோல் பிரச்சினை தரலாம்.
கேது தொடர்பான பெண்கள்:
சர்ப்ப தோஷம் பற்றிய என் பதிவை பார்க்கவும்.
சுக்கிரன்  தொடர்பான பெண்கள்::
நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமையும். ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு தரும் அதீத முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டோர் நெருங்கி பழகுவர். பிராமண இளைஞர்கள் நட்பு பாராட்டுவர்.

குறிப்பு:
ஜஸ்ட் லீடிங் ப்ளேனட்டை வச்சு சொன்ன இந்த பலனே ஃபைனல் கிடையாதுங்கோ. இன்னம் நிறைய கான்செப்ட் எல்லாம் இருக்கு. அதை எல்லாம் இன்னொரு சமயம் பார்ப்போம். ஓகே ஜூட்.