Thursday, June 17, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்:5

ஒரு பாபா பக்தன் கிட்டே பாபாவுக்கு நான் தரேண்டா அப்பாயிண்மென்டுன்னு சவால் விட்டுட்டு கலங்கிகிட்டிருந்தப்ப தர்காதீதமா ஒரு கடன் காரர் வந்து ஷீர்டிக்கு வராமாதிரியிருந்தா ஃபேர் உங்கணக்கு செலவெல்லாம் என் கணக்கு. பணமா கேட்டா இப்ப இல்லைன்னு சொன்னதையும்,சவாலுக்கு காரணமான பக்தன் வடிவேலுவும் பேக்கேஜ் டூர்ல வரவேண்டியதா போனதையும் கடந்த பதிவுல சொல்லியிர்ந்தேன்.



இப்ப ஷிர்டி யாத்ரா விசேஷங்களை ரொட்டீனா சொல்லி ஜல்லியடிக்கபோறேன்னு நினைச்சா ஏமாந்துருவிங்க. யாத்ரா விவரமெல்லாம் இன்னைக்கு வெளி வர்ர நாலணா பக்தி புஸ்தவங்கள்ள அக்கு வேறு ஆணி வேறா கொடுத்திருப்பாய்ங்கள்ள.



பஸ்ஸுல திருப்பதி போய் அனந்தபூர் எக்ஸ்பிரஸ் பிடிச்சோம். அனந்த பூர்லருந்து ரயில்ல ஷீர்டிக்கு முந்தின ஸ்டாப் வரை போறதாவும் அங்கருந்து ஷேர் ஆட்டோ கணக்கா வாகனவசதி இருக்கிறதாவும் பேசிக்கிட்டாய்ங்க. ரயில்ல ஒரு சம்பவம் நடந்தது. அந்த நேரம் நான் ஏற்கெனவே சொன்னபடி ஏழுமலையானோட ரசிகன். அன்னமாச்சாரி கீர்த்தனைகளை எஸ்.பி குரல்ல கேட்டு மோகிச்சு போய் அதை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம்னு கனவு கண்டேனோ அப்படியெல்லாம் அனுபவிச்ச காலமது.



இன்னம் ஒருபடி முன்ன போய் அந்த கீர்த்தனைகளோட இசைக்கு நவீன அன்னமாசாரியார் கணக்கா தமிழ்ல எழுதிக்கூட பார்த்தகாலம் அது. பெருமாளோட க்ஷேத்திரத்துல ஷிர்டி பாபா படம் வந்து சேர்ந்தாப்ல ஷிர்டி யாத்திரைல பெருமாள் மூக்கை நீட்டின அற்புதம் இது.



இந்த எக்ஸ்பிரஸ் ட்ரெயின்ல மத்தில கிச்சன் இருக்கும் போல. கிச்சனுக்கு ரெண்டு பக்கமும் போகீஸ். ட்ரெயின்ல சீட் போட்ட அவசரத்துல க்ரூப்பு ரெண்டா பிரிய வேண்டியதாயிருச்சு. ஒரு க்ரூப் புத்தியளவுல ஊனமுற்றோர் குழுவா போச்சு. அதுல நான் மாட்டிக்கிட்டேன். ஓரளவு நமக்கு செட் ஆகிற பார்ட்டிங்க இன்னொரு க்ரூப்ல இருக்காய்ங்க. மெல்ல மெல்ல தத்தி தத்தி போகி டு போகி போயிட்டே இருந்தேன். அடுத்த க்ரூப்போட ஐக்கியமாறது என் உத்தேசம்.



சென்டருக்கு வந்துட்டன். கிச்சனுக்குள்ள நுழைஞ்சிட்டன். நுழைஞ்ச அதே நிமிசம் வெளிய இருந்து எவனோ கதவை பூட்டிட்டான். கொஞ்சமா டர்ரானாலும் சரி நம்ம க்ரூப் அடுத்தடுத்த போகில எங்கனாச்சும் இருக்கும் .சேர்ந்துக்கலாம்னு நடைய போட்டேன். கிச்சன்லருந்து வெளிய வரப்போறேன். அதே நிமிசம் எவனோ வெளிய இருந்து கதவை பூட்டிட்டான். பேசேஜ் முழுக்க வெஜிட்டபிள் வேஸ்ட். சொதசொதன்னு ஈரம். நேரம் ராத்திரி 10 அ 10.30 இருக்கலாம். ரயிலா சொம்மா பறக்குது. சத்தமா டி.டி.எஸ் ரேஞ்சுல செவுள பிய்க்குது. நான் டென்சனாயிட்டன். படபடன்னு கதவை தட்டறேன்.



நம்ம ப்ளாக்ல மருமொழி போடற பார்ட்டிங்க யூஸ் பண்ற வொக்காபிலரியெல்லாம் ஃபவுண்டென் கணக்கா வருது. அந்த வேகத்துல,சத்தத்துல , காத்துல எவன் கவனிக்க போறான். கூண்டுல மாட்டின எலி என்ன நினைக்கும்னு அப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டன்.



அன்னமாசாரி கீர்த்தனை ஒன்னு ஞா வந்தது.



"சம்ப பிலிச்சின வேளா.. சங்கேள்ளு பெட்டின வேளா வெங்கடேஸு நாமமே திக்கு மரி லேது"



"வாடா போட்டுத்தள்ளீர்ரன்னு கூப்பிடற சமயத்துல, கைல விலங்கு மாட்டின வேளை பெருமாள் பெயர்தான் திக்கு" ன்னு அர்த்தம். கண்ல மாலை மாலையா தண்ணி. ராமதாஸ (பா.ம.க இல்லிங்கோ ..பக்த ராமாதாசு) செயில்ல போட்டப்ப அவரு செயில்ல எப்படி பாடியிருப்பாரோ அந்த ரேஞ்சுல மனசுக்குள்ள மேற்படி வரி ஓடுது.



கதவை தட்டறது, சகட்டு மேனிக்கு கூவி திட்டறது எல்லாத்தயும் விட்டுட்டன். மேற்படி வரிதான் ரீப்ளே ஆயிட்டிருக்கு, அப்ப கதவுக்கு அந்தப்பக்கம் யாரோ நடந்துவர சத்தம். மவுனமாவே இருந்தன். படக்குனு கதவு திறக்கப்பட்டது. நாலடி வச்சிருப்பேன். படக்குனு ஞா வந்தது ஆப்கா நாம் க்யானு (உங்க பேர் என்ன?) கேட்டேன். திறந்த கேண்டீன் தொழிலாளி "பாலாஜி"ன்னாரு. மயிர் கூச்செறிந்தது. புல்லரித்தது. புளகாகிதம் ஏற்பட்டதுன்னு எத்தனை வார்த்தை இருக்கோ அத்தனையையும் அன்னைக்கு அனுபவிச்சேன். ஓடற ரயில்ல தத்தி தத்தி நடந்து க்ரூப் 2 வை பிடிச்சுட்டன். சனம் சீட்டுக்கச்சேரில இருக்காய்ங்க. நமக்கு ஆடத்தெரியும். ஆனால் ஆட ஆள் கிடைச்சதில்லை. கிடைச்சாலும் ஆடறதில்லை. வெறுமனே வேடிக்கை பார்க்கிறதுதான்.



சீட்டுக்கச்சேரில ஒரு அற்புதம் நடந்தது. அதை அடுத்த பதிவுல சொல்றேன்.





பி.கு: இதை நான் தட்ட ஆரம்பிச்ச நேரம் வியாழக்கிழமை அதிகாலை 4.15 . முடிச்ச நேரம்: 4.35. இந்த தூங்காத இரவுக்கு காரணம் கூட பாபா தான் . கடந்த பதிவுல சொன்னேனே பாபா ஸ்தோத்திர மாலை லட்சம் பிரதி மேட்டர். அதுல மொத 2000 பிரதி ரெடியாயிருச்சு. அதை பேக் பண்ணி தயாரா வச்சிருக்கேன். நாளை யூத் காங்கிரஸ் லீடரோட போய் எம்.எல்.ஏ கிட்ட காட்டி யூ.கா.லீ கையால ப்ரஸ் மீட்ல ரிலீஸ் பண்ண போறதா இன்ஃபார்ம் பண்ணனும். மதியம் 3.30க்கு ப்ரஸ் மீட் .தூக்கம் கெடுத்தான் ஆக்கம் கொடுத்தான்னு வள்ளலாருது ஒரு வாக்குண்டு. அதுக்கான அர்த்தம் தான் இன்னைக்கு நான் போட்டிருக்கிற பதிவுகள்.