தனியார் மயம், உலக மயம்னு ஆரம்பிச்ச புதுசுலயே திவாலாகி, கரன்சிகளை ட்ரக்ஸ்ல கொண்டு போய் ஊருக்கு வெளியே எரிச்சாய்ங்களே மெக்சிகோ நாடு ஞா இருக்குங்களா? அதை நம்ம நாடு ஓவர் டேக் பண்ணி அழிவு பாதைல வேகமா போயிட்டிருக்குங்கண்ணோய் ! எதுலங்கறிங்களா? வேற எதுல உலகவங்கி கிட்டே கடன் வாங்கற மேட்டர்ல தான். ஆக அன்று மெக்சிக்கோவுக்கு ஏற்பட்ட கதி .. நாளை இந்தியாவுக்கு ஏற்பட போகுது பாஸு.. செல்ஃபோனை ஆஃப் பண்ணிட்டு இந்த பதிவை சாக்கிரதையா படிங்க..
இல்லைன்னா கொஞ்ச நாள்ள மத்திய அரசு சனங்க கிட்ட கைமாத்து கேட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பற ஸ்டேஜு வந்துரும். ஆமா சொல்லிப்புட்டேன்.
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பன் எழுதினான். பொட்டி கடைலயெல்லாம் கடன் உடன் பகைன்னு எழுதி வச்சிருக்காய்ங்க.
நம்ம நாட்டு நிலைமை கடனுக்கு அட்டிகை வாங்கி, வட்டிக்கு அட்டிகைய வித்த கதையா போய்க்கிட்டிருக்கு.
உலகவங்கிகிட்டேருந்து இந்தியா வாங்கின கடன் (இந்த 2010ஜூனுடன் முடிந்த ஃபைனான்ஷியல் இயர்) 900 கோடி டாலர்கள் ( 40,500 கோடி ரூ). கடந்த வருடம் இது 220 கோடி டாலர் மட்டுமே (ரூ.9,900 கோடி)
உலக வங்கி உலக நாடுகளுக்கு தரும் கடனில் இது 15 சதவீதம். தாராள மயமாக்கம், தனியார் மயம், உலக மயம்னு ஆரம்பிச்ச புதுசுலயே திவாலாகி, கரன்சிகளை ட்ரக்ஸ்ல கொண்டு போய் ஊருக்கு வெளியே எரிச்சாய்ங்களே மெக்சிகோ அது கூட 11 சதவீதம் தான். ஆனால் நாம 15 சதவீதம்.
ஆட்டை தூக்கி மாட்ல போடற பார்ட்டிங்கள "கொஞ்சம் பார்த்து போப்பா"ன்னு நாம சொன்னா அவிக " ஒரு நாடே இன்னொரு நாடு கிட்டே கடன் வாங்குதுண்ணே! நாமெல்லாம் ஒரு கணக்காம்பான்"
நாடுன்னா கண்ணு, மூக்கு வச்ச இண்டியாமேப்பா கடன் வாங்குது? "தேசமன்டே மட்டி காதோய். மனுஷுலோய்" ( நாடுன்னா மண்ணில்லடா மக்கள்)னாரு குருஜாடாங்கற கவிஞர்.
கடன் வாங்கிட்டா பிரச்சினை தீர்ந்து போச்சா? இல்லை அடுத்த வருசம் பட்ஜெட்ல அதுக்கு வட்டி கட்ட நிதி ஒதுக்க வேணா? அப்ப வேற எதுக்கோ ஒதுக்க வேண்டிய நிதில வெட்டு விதிக்க வேண்டியதுதான். அது வழக்கமா அரசாங்கம் பண்ற குஷ்டத்துக்கு அவில் மாத்திரை கொடுக்கிற மேட்டரா இருந்தா சரி.ஒரு வேளை அத்யா வசியமான மேட்டரா இருந்தா?
ஒரு தனி மனிதன் தன் சம்பளத்துல இத்தனை சதவீதம் வரை கடன் வாங்கலாம்னு பொருளாதார நிபுணர்கள் சொல்றாய்ங்க. கடன் எதுக்கு வாங்கனும்? தன்னோட வருமானத்தை அதிகரிச்சுக்க வாங்கலாம். அதுக்கு வாங்கின பணத்தை ஒழுங்கு மரியாதையா முதலீடு பண்ணனும். ஆனால் நம்ம பட்ஜெட்டை பார்திங்கனா அதுல பெரும்பகுதி ராணுவத்துக்கு, பழைய கடனுக்க்கான வட்டிக்கு வட்டி கட்ட, நிர்வாக செலவுக்கே போறதை பார்க்கலாம்.
திட்டச்செலவுகள், திட்டம் சாரா செலவுகள்னு ஒரு பிரிவு இருக்கிறதை பார்த்திருப்பிங்க. இவிக போடற திட்டமே உதவாக்கரை திட்டமாத்தான் இருக்கும். இந்த மயித்துல திட்டச்செலவுக்கான ஒதுக்கீட்டை விட திட்டம் சாரா செலவுக்கான ஒதுக்கீடுதான் அதிகமா இருக்கும். இந்த நிலைல இவிக போடற பட்ஜெட் எப்படி உருப்படும்?
அரசாங்கம் மக்கள் கிட்டருந்து ஒத்த ரூபா வசூலிக்கனும்னா
நிர்வாக செலவு : 10 பைசா
ஊழல்: 10பைசா
மேற்பார்வை: 10 பைசா
ஆடிட்டிங்/சரிபார்ப்பு: 10 பைசா
ஓஞ்சு போவுது. கைக்கு வர்ரது 60 பைசா. இதை மறுபடி மக்களுக்கு செலவு பண்ண இறங்கினா
திட்டம்+ நிர்வாக செலவு: 10 பைசா
ஊழல்: 10 பைசா
மேற்பார்வை: 10பைசா
ஆடிட்டிங்+சரிபார்ப்பு: 10 பைசா
ஓஞ்சு போவுது. மக்களுக்கு சேர்ரது 20 பைசா.
நான் என்ன சொல்றேன்னா "சுண்டக்கா கால் பணம் சுமைக்கூலி முக்காப்பணம்"ங்கற இந்த இழவை ஒழிச்சு கட்டுங்க. இப்பத்தான் ஐ.டி. புரட்சியே நடக்குதே. அரசுக்கும்,மக்களுக்கும் இடையில் உள்ள பாலங்களை தகர்த்து போடுங்க. இடைத்தரகர்களை ஒழிச்சு கட்டுங்க. குடிமகன் தான் செலுத்த வேண்டிய காசை மத்திய/ மாநிலஅரசுக்கு நேரடியா செலுத்தட்டும்.(ஊராட்சி, பஞ்சாயத்து, நகராட்சி, மா நகராட்சிக்கு செலுத்த வேண்டியதை இன்று போலவே அந்தந்த அமைப்புகளுக்கு நேரடியா செலுத்தட்டும்) அரசு குடிமகனுக்கு/மக்களுக்கு செலவழிக்க வேண்டிய காசை நேரடியா அதுக்குரிய கிராமம்/வார்டு அதிகாரியோட கணக்குக்கு நேரடியா ட்ரான்ஸ்ஃபர் பண்ணட்டும். இந்த தகவல் இன்டர் நெட்ல முன் கூட்டியே வெளியிட்டுருங்க. அந்த கிராம மக்கள், வார்டு மக்கள் டிசைட் பண்ணட்டும்
எந்தெந்த காரியத்தை வார்டு/கிராம அளவுல சொந்தமா செய்துக்க முடியும், எந்தெந்த காரியத்தை பஞ்சாயத்து/முனிசிபாலிட்டியோட இணைஞ்சுதான் செய்யமுடியும்னு அவிக டிசைட் பண்ணட்டும்.
இது ஒரு பக்கம்னா பட்ஜெட் தொகைல கடனுக்கு, கடனுக்கான வட்டிக்கு, ராணுவத்துக்கு, நிர்வாக செலவுக்கு போறது கிரிமினல் குற்றம். பல பதிவுகள்ள சொன்ன மாதிரி எல்லை தகராறு உள்ள நிலப்பகுதிகளை ஐ . நா நடவடிக்கைகளுக்காக ஒதுக்கி அதுகளுக்கான பாதுகாப்பை சர்வ தேச ராணுவம் ஏத்துக்கறாப்ல செய்துரனும்.
உலகம் மெச்ச கொள்கை, கோக்குனு கொழுப்பெடுத்த வேலைகள் செய்து உலக நாடுகளோட விரோதத்தையும், உள்ளூர் தீவிர வாதை அமைப்புகளோட விரோதத்தையும் வளர்த்துக்க கூடாது. உ.ம் தலாய் லாமா, ஈரானுக்கு எதிரா அமெரிக்காவுக்கு சால்ரா போடறது, வெளி நாட்டு மல்ட்டி நேஷ்னல் கம்பெனிகளுக்காக மண்ணின் மைந்தர்களை அப்புறப்படுத்தறது
வேலையோட வேலையா அரசு இயந்திரத்தை பார்ட் பார்ட்டா கழட்டி கிரோசின் வாஷ் பண்ணி பூட்டனும். துருப்பிடிச்சது, வளைஞ்சு போனது,தேஞ்சு போனதெல்லாம் தூக்கி கடாசனும்.
உலக வங்கி,ஆசிய வங்கி இத்யாதிக்கு செலுத்த வேண்டிய வட்டிகளுக்கு பதிலா ஏதாச்சும் தகிடு தத்தம் பண்ணி நம்ம நாட்டுக்கும் உபயோகமா எதுனா ஆஃபர் பண்ணலாம். சரிய்யா ஸ்கெச் பண்ணா உலக வங்கி கடனையே உலக அளவிலான டாப் டென் கார்ப்போரேட் நிறுவனங்கள் தலைல தூக்கி வச்சுரலாம்.
உ.ம் நதிகள் இணைப்பு, நாடெங்கிலும் உள்ள நதிகளின் உபரி நீரை திருப்பிவிட ஒரு தேசீய நதி உருவாக்கம் மாதிரி மேட்டரை க்ளோபல் டெண்டர்ல விட்டு பில்ட்,ஆப்பரேட்,ட்ரான்ஸ்ஃபர் மெத்தட்ல செய்ய ஏற்பாடு பண்ணி இதை செய்யற நிறுவனம்/ நிறுவனங்களே உலக வங்கி கடனை திருப்பி செலுத்தற மாதிரி செய்யலாம்.
கூடவே பட்ஜெட் நிதியை துறைகளுக்கு அலாட் பண்ணும்போது அந்த துறை தர்ர வேலை வாய்ப்பை அளவுகோலா கொள்ளனும். ( அதனால ஏற்படற பொல்யூஷன் இத்யாதியையும் கணக்குல எடுத்துக்கனும். அப்பத்தான் பட்ஜெட்டை நாம போட முடியும். இல்லைன்னா உலக வங்கியும், ராணுவமும் போடற நிலைம வந்துரும்.
சரி உடு ஜூட்.