பெண்களுக்கு மட்டுமில்லே ஆண்களுக்கும் மெனோஃபஸ் வருமாம் ( நாற்பதுகளில் செக்ஸ் மீது அதீத ஆர்வம். பின் படக்கென்று சர்க்யூட் ஃபெயில் ஆதல்). செக்ஸ்ல மட்டுமில்லை ஆன்மீகத்துல கூட மெனோஃபஸ் வரும். இதைப்பத்தி "பாபாவும் பா பா ப்ளாக் ஷீப் :10 பதிவுல விவரமா எழுதியிருக்கன். மனிதர்களுக்கு மெனோஃபஸ் வந்துட்டா அம்புட்டுதேங். பார்ட்டி செக்ஸ் லைஃபை ஒழுங்கா எஞ்ஜாய் பண்ணியிருந்தா அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துரலாம். இல்லன்னா வம்புதான். தாத்தாக்கள் ரெண்டாம் கண்ணாலம் கட்டிக்கிறது, ஆன்டீஸ் கார் ட்ரைவர் கூட ஓடிப்போயிர்ரதெல்லாம் இந்த ஸ்டேஜுலதான்.
ஆனால் ஆன்மீகத்துல வர்ர மெனோஃபஸ் கொஞ்சம் டிஃப்ரன்ட். திடீர்னு இன்னொரு பாதை விரியும். அந்த பாதையில ஆன்மீக பயணம் புது உற்சாகத்தோட தொடரும். ஆமா இந்த பதிவுக்கு " தி க்ரேட் நித்யானந்தா "ங்கற தலைப்பு ஏன்னு நீங்க கேட்கிறது எனக்கு கேட்குது.
மேற்சொன்ன ஆன்மீக மெனோஃபஸ்ல நான் இருந்தப்ப தான் நித்யானந்தா விவகாரம் வெடிச்சது. நானும் கிழி கிழின்னு கிழிச்சன். ஆனா பாருங்க காரணம் இல்லாம எது ஒன்னுமே நடக்காது. ரஞ்சிதா புகழ் நித்யானந்தா பிறக்கறதுக்கு முந்தியே நித்யானந்தாங்கற பேரு இருந்திருக்கு. அந்த பேர்ல எத்தனையோ லட்சம் பேர் பிறந்து,வாழ்ந்து முடிச்சிருப்பாய்ங்க.
நல்லதுக்கோ கெட்டதுக்கோ, திட்டவோ,புகழவோ நித்யானந்தாங்கற பேரை பல முறை பிரஸ்தாபிச்சதுக்கு பலன் கிடைச்சுருச்சுன்னுதான் நினைக்கிறேன்.அதுக்கும் ஒரு காரணம் இருந்திருக்கும்னு நம்பறேன்.
சுதந்திரம் வர்ரதுக்கு முந்தியே மகாராஷ்டிர மானிலத்துல கணேஷ் புரிங்கற ஊர்ல நித்யானந்த பாபானு ஒரு பட்சி வாழ்ந்திருக்கு. ஒரு தாட்டி பழனி கோவிலுக்கு கூட வந்திருக்கு. இந்த பார்ட்டியோட வாழ்க்கை வரலாறை படிக்கிற வாய்ப்பு கிடைச்சது.
பாலைவனத்துல நீண்ட தூரம் பயணம் பண்ணா தூரத்து வெயில் ஆறு கணக்கா தெரியுமாம். ஆனால் நித்யானந்த பாபா சமாசாரம் அப்படியில்லைனு நான் நம்பறேன். ஏன்னா அதை படிக்கிறச்ச பல்வேறு ஆன்மீக உணர்வுகள் , அதிர்வுகள் மூன்றாம் நாளைய ஏசு கணக்காய் உயிர்த்தெழுந்ததுங்கண்ணா.
இன்னைக்கு பணபலம் இருந்தா மீடியா வெளிச்சத்தை விலைக்கு வாங்கி அ வாடகைக்கு எடுத்து தாளிச்சுரலாம். ஆனால் நித்யானந்தாவோட காலம் சுதந்திரத்துக்கு முந்தின காலம்.
அவருக்குள்ள ஏதோ ஒரு மலர் மலர்ந்து மணம் வீசியிருக்கனும்.இல்லாட்டி லட்சக்கணக்கான மக்களை ஈர்த்திருக்க முடியாது. இன்னைக்காச்சும் வரவு எட்டணா செலவு பத்தணா கேஸுங்க.. எதை தின்னா பித்தம் தெளியும்ங்கற பார்ட்டிங்க அதிகம். அது போதுமென்ற மனமே பொன் செய் மருந்துன்னு சனம் வாழ்ந்த காலம்.
இதற்கிடைல கட்டை ரெம்ப சேவேறி போச்சு .இதுக்கு மின்னாடியெல்லாம் இரவு 7 மணிக்கு மேல ஒரு டீ சாப்பிட்டா போதும் அன்னைக்கு தாளி சிவ ராத்திரிதான் இது நம்ம கேஸ் ஹிஸ்டரி. ஆனா பாருங்க சமீப காலமா ராத்திரி 9 மணிக்கு டிஃபன் அடிச்சுட்டு உடனே டீ சாப்பிட்டா கூட தூக்கம் சொக்க ஆரம்பிச்சிருச்சிங்கண்ணா. சரி விடியல்ல முழிப்பு வரும்னு படுத்தா எட்டு எட்டரை வரை தூக்கம். சரி இன்னைக்கு மதியம் கிழிச்சுரலாம்னு நினைச்சு சாப்டு முடிச்சா உடனே தூக்கம்.
சனத்துக்கும் எனக்கும் உள்ள வித்யாசங்கள்ள ஒன்னு அவிக விழிச்சிருக்கிற நேரத்துல நான் தூங்கிட்டு இருப்பேன். அவிக தூங்கற நேரத்துல நான் வேலை செய்துக்கிட்டிருப்பேன். ஆயிரம் பதிவுகளை தாண்டியும் புதுசு புதுசா மேட்டர் கொட்ட இதுவும் ஒரு காரணம். ஆனா இந்த ப்ளஸ் பாயிண்டே ஃபணாலாயிருச்சு. ரொம்ப வேதனையா போச்சு.
நித்யானந்த பாபாவோட சரித்திரத்தை படிச்ச பிறவு கொஞ்சம் கொஞ்சமா நம்ம சுதர்மம் (ராத்திரியில பூனைகணக்கா சுறு சுறுப்பு) ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன். நித்யானந்த பாபாவோட ஸ்டைல் டிஃப்ரண்ட்.
மரத்து மேல,கூரை மேல உட்கார்ந்துக்குவாராம். கிராவிட்டி பவர்லருந்து ஓரளவு தப்பிச்சுக்கலாம். அதனால தான் வாஸ்துல கூட மாடில வசிக்கிறவனுக்கு அரைப்பலனுங்கறாய்ங்க. எங்க வீட்டு வாஸ்துவுக்கு அம்மா,அப்பா, ரெண்டு அண்ணன் காலி. தம்பி எங்கன இருக்கான்னே தெரியாது. நான் மட்டும் தப்பி பிழைச்சேன்னா அதுக்கு காரணம் மாடி அறைல வசிச்சது. நெக்ஸ்ட் 24 வயசுல ஸ்டெப் அவுட் ஆயிட்டதுதான்.
எப்பவும் கண்களை மூடியே இருப்பாராம். அதுலயும் மூடின கண்கள் மேனோக்கியே ( ஆக்னா) இருக்குமாம். மனித சக்தி வீணாகிறதே கண்கள் வழியாத்தான்.மூடின கண்கள் மேனோக்கி பார்க்குதுன்னா சுவாசம் கூட சுழுமுனைல நடக்கும்னு அர்த்தம்.
மிக மிக குறைவா பேசுவாராம். பேசியே அழிஞ்ச இனம் தமிழ் இனம். பேசியே அழிஞ்ச நாடு நம்ம நாடு.
ஒரு ஜாதகத்துல எல்லா கிரகமும் கேந்திர கோணங்கள்ள நின்னா அந்த ஜாதகனுக்கு எந்த கருமமும் ஒட்டாது ஹி ஈஸ் ஃப்ரீனு அர்த்தமாம். நம்ம ஜாதகத்துல 7 கிரகம் அப்படித்தான் உட்கார்ந்திருக்கு. ஆனால் சந்திரன் சுக்கிரன் மட்டும் வாக்கு ஸ்தானத்துல உட்கார்ந்து இப்படி செக்ஸையும் (சுக்ரன்), சைக்காலஜியையும் (சந்திரன்) போட்டு சொதப்ப வச்சிருக்காய்ங்க. நான் மட்டும் ஒரு 48 நாள் ப்ளாக் எழுதறத விட்டுட்டு, மவுன விரதம் கடை பிடிச்சா அற்புதங்களே நடக்கும்.
இருந்தாலும் மனிதம் காக்க, மனித குலத்தை மீட்க பீசிக்கிட்டும், எளுதிக்கிட்டும் கிடக்கேன். ஹூம் பார்க்கலாம்.
எப்படியோ நித்யானந்தா டுபுக்கு பார்ட்டியா இருந்தாலும் ஜஸ்ட் அவரோட பேரை உச்சரிச்ச/எழுதின புண்ணியத்துக்கு ஒரு உண்மையான சித்த புருஷரை பத்தி தெரிஞ்சிக்கிற வாய்ப்பு கிடைச்சது.
தி க்ரேட் நித்யானந்த (பாபா)
பி.கு: வாய்ப்பு கிடைக்கும் போது இந்த பாபாவோட வாழ்க்கை வரலாற்று சுருக்கத்தையாவது நம்ம ப்ளாக்ல எழுதப்பார்க்கிறேண்ணா.