பாபாவை போட்டு தள்ள காங்கிரஸ் சதி திட்டம் தீட்டியிருக்கு. அதுக்கான முன்னோட்டம் தான் பாபா உசுருக்கு ஆபத்து. அதனாலதான் உண்ணாவிரத பந்தலை தூக்கினோம்னு பீலா விட்டது. பாபா பின்னாடி பா.ஜ.க இருக்குங்கறது உலகறிந்த ரகசியம் . இப்பம் பூனைக்குட்டியும் வெளியவந்துருச்சு. அதுவேற மேட்டர்.
இது பரபரப்புக்காக போடும் வெத்து குண்டு இல்லிங்ணா. சோசிய கணிப்பு இல்லவே இல்லிங்ணா. ஆனால் பட்சி சொல்லுது. (சாதக பட்சி இல்லிங்ணா சகோர பட்சி ). எதை வச்சு சொல்றிங்கனு கேப்பிக சொல்றேன்.
இன்னம் 6 மாசத்துல பாராளுமன்ற தேர்தல் வராப்ல இருக்கு. எப்படின்னு கேப்பிக ? சொல்றேன்.
ஆந்திராவுல தெலுங்கானா காங்கிரஸ் எம்பிங்க வாயிதா போயி கிடக்காய்ங்க. தெலுங்கானா ஏரியாவுக்கு போனா மந்திரிகளுக்கே முட்டையடிதேன்.
அவிகளுக்கும் இது உறைச்சுருச்சு. ஜூன்30 க்குள்ள தெலுங்கானா கொடுக்கலின்னா கூண்டோட ராஜினாமான்னு அனவுன்ஸ் பண்ணியாச்சு. இந்த மேட்டர்ல பேக் அடிச்சா நெம்பர் 10, ஜன்பத்லயே சின்னதா வேலை தேடிக்கிட வேண்டியதுதேன்.
மானில அரசாங்கத்துக்கும் டெட் லைன் நெருங்கிக்கிட்டிருக்கு. தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துருச்சு. பத்து நாள்ள அதை பத்தி விவாதம், ஓட்டெடுப்பு நடந்தே ஆகனும். ஜகன் இப்பமே 29 எம்.எல்.ஏங்களை பீராஞ்சு வச்சிருக்காரு. டோட்டலா 55 பேரு டச்சுல இருக்கிறதா பீதிய கிளப்பறாய்ங்க. முந்தா நாள் டெலி கான்ஃபிரன்ஸு கூட நடத்தியிருக்காரு.
மானிலத்துல ஆட்சி போன பிற்பாடு எம்.பி பதவியை வச்சுக்கிட்டு நாக்கை வழிக்கறதா? இது ஒரு பாய்ண்ட். ஒரு வேளை ஜூன் 30 குள்ளே தெலுங்கானா வரலின்னா தெலுங்கானா எம்பிங்க ராஜினாமா. அட தெலுங்கானா கொடுத்து தொலைச்சு தெலுங்கானா எம்பிகளை சமாதானப்படுத்திட்டாலும் ஆந்திரா எம்.பிங்க ரேங்கிக்குவாய்ங்க.அவிக இன்னம் ரோசக்காரவுக. டெட்லைன் எல்லாம் கடியாது. டைரக்ட் ராஜினாமாதேன். ( இவிக சொத்து சுகம்லாம் ஹைதராபாத்ல மஸ்தா கீறதா ஸ்கூப்பு)
ஜகன் எம்.எல்.ஏவா நிக்காம எம்.பியா நின்னதுக்கு ஒரு பெரிய பின்னணி இருக்கு. ஜகனுக்கு சரத்பவார் காட் ஃபாதர் மாதிரி. சோனியா தனக்கு ஆப்பு வச்சப்ப தாளி சென்டர்ல பவர் இருக்கிறதாலதானே இந்த திமிரு. அதையே ஆஃப் பண்ணிர்ரன்னுதான் ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்கிறாப்ல. பா.ஜ.க பெல்ட்டுலயும் ஜகனுக்கு நல்ல கம்யூனிகேஷன் இருக்கு.(அதுக்குன்னு கூட்டெல்லாம் வராது -ஊசிப்போயிரும்ல - இந்த கம்யூனிகேஷன் சென்டர்ல காங்கிரஸை கருவறுக்கத்தேன் ) பவார் ஜஸ்ட் சமயம் பார்த்துக்கிட்டிருக்காரு. பாவம் அவரை ஸ்டவ் மேல உட்கார வச்சு கொத்து பரோட்டாவே போட்டுட்டாய்ங்க சோனியாஜி.
எது எப்படி போனாலும் தேர்தல் கியாரண்டி. ஒரு வேளை எவனும் கவுக்கலின்னாலும் சோனியா முன் கூட்டி தேர்தலுக்கு போக ரெடியாயிட்டது நல்லா தெரியுது. ( நாள் போக போக - ஒவ்வொரு ஊழலா வெளி வந்துக்கிட்டே இருக்கும். நேத்து அன்னா - இன்னைக்கு ராம் தேவ் - நாளைக்கு ஆரோ/ மொத்தத்துல காங்கிரசுக்கு ஆப்புதேன்)
காங்கிரசோட கவுண்டர் பார்ட் பா.ஜ.க கழுதை தேஞ்சு கட்டெறும்பான கணக்கா ஆயிருச்சு. காங்கிரஸா ஊழல் சேற்றுல மூக்கு வரை புதைஞ்சு போச்சு. அதனாலதான் காங்கிரஸ் வாதம்லாம் ஸ்க்ரம்ப்ளர் போட்ட போன் உரையாடல் மாதிரி கேட்குது.
இப்பம் தேர்தல்ல ஊழலா? ஊழலுக்கு ஆப்பாங்கற கேள்வி வந்தா காங்கிரஸு நிச்சயம் காணாம போயிரும்.
ஒரு வேளை செக்யுலர் (மதச்சார்பற்ற சக்திகள்) - நான் செக்யுலர்ங்கற ( மதவாத சக்திகள்) பேட்டர்ன்ல தேர்தல் நடந்தா விதியில்லாத குறைக்கு சனம் காங்கிரஸுக்கு போட்டு தொலைச்சுருவாய்ங்க.
அப்படி ஒரு சிச்சுவேஷன் வந்தா கம்யூனிஸ்டுகளும் - இன்னபிற காங்கிரஸ் எதிர்ப்பு அணிகளும் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க வாய்ப்பிருக்கு.
வரப்போற தேர்தல்ல ஊழல் அம்சத்தை பின்னுக்கு தள்ள காங்கிரஸ் என்ன வேணா செய்யும். இப்பம் ராம்தேவா மேட்டரையே பாருங்க. பின்னணியில பா.ஜ.க இருக்குன்னு தெரியும். பாபாவுக்கு வேட்டி உருவினா பா.ஜ.க தங்களுக்கு கோவணத்தையே உருவிரும்னு தெரியும். இருந்தாலும் பாபாவை தூக்கினாய்ங்கன்னா என்ன அர்த்தம்?
பா.ஜ.க வை இர்ரிடேட் பண்ணனும். இந்த காவிப்பட்டாளம் துப்பாக்கியில இருக்கிற புல்லெட் மாதிரி. ட்ரிக்கரை ஒரு தாட்டி அழுத்திட்டா அது எங்க போய் முடியும்னு தெரியாது. ட்ரிக்கரை அழுத்தப்போறது பா.ஜ.கவா? காங்கிரஸா?
பா.ஜ.க அழுத்தினாலே இது கதி . ஒரு வேளை வரும் தேர்தல்ல இருந்து ஊழல் அம்சத்தை பின்னுக்கு தள்ள காங்கிரஸ் அழுத்தினா என்னாகும்னு நினைச்சாலே குலை நடுங்குது.
நாட்டுக்கு நடக்கிறது சூரிய தசை ராகு புக்தி . நமக்கு சுதந்திரம் கிடைச்சப்போ ராகு கேது எந்த நிலையில இருந்தாய்ங்களோ அதே நிலையில இப்பம் இருக்காய்ங்க. ராகுவுக்கு சம சப்தகத்துல கேது.
கேதுன்னா சன்னியாசி. கேது மிதுனத்தில். மிதுனத்துக்கு அதிபதி புதன். புதன்னா வைணவம். பாபா பேரை பாருங்க ராம் தேவ் பாபா.
இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கற நம்ம ப்ரிடிக்சன் இப்படி மெட்டீரியலைஸ் ஆனா நாடு தாங்குமா?
ங்கொய்யால .. பாபா டுபுக்கு - பாபா யாவாரி - பாபா பலாந்து பலாந்துனு புலம்பறாய்ங்க. சரி பாபா ஈயா கூட இருக்கட்டும்.
இங்கன கழிஞ்சு வச்சது நீங்கதானேடா? லல்லுவுக்கு பீதியில பேதியே ஆயிருச்சு. ஆர்.எஸ்.எஸ் காரவுக சாந்தி காலத்துல வில்லங்கம் பண்ற பார்ட்டிங்கதேன் இல்லேங்கலை . ஆனால் எமர்ஜென்ஸி பீரியட்ல கள்ளுக்கடையில எல்லாம் கேம்ப் அடிச்சு பிரச்சாரம் பண்ணவுக.
எசன்ஷியாலிட்டி இஸ் தி மதர் ஆஃப் இன்வென்ஷன். காங்கிரஸ் ஊழல் அம்சத்தை பின்னுக்கு தள்ள இந்த மதவாத அம்சத்தை ஹைலைட் பண்ண இந்த மூவ் பண்ணியிருக்கு.
ஆனால் கடவுள் சதிகாரன். பஸ்மாசுரன் கதை தெரியும்ல. பாபாவுக்கு எதுனா நடந்தா காங்கிரஸ் தாபாவுக்கு டாப் என்ன ? பாட்டமும் இருக்காது.
ஆருப்பா அங்கே இத்தாலிக்கு ஃப்ளைட் டைம் விஜாரி.
Showing posts with label Baba. Show all posts
Showing posts with label Baba. Show all posts
Sunday, June 5, 2011
Monday, April 25, 2011
சத்ய சாய்பாபாவுக்கு கேன்சர்?
சத்ய சாய்பாபா கேன்சரால் அவதிப்பட்டதாக பிரபல மருத்துவர் ஒருவர் தனியார் தெலுங்கு சேனலில் சொன்னார்.அதுவும் ஆண்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய ப்ரோஸ்டட் சுரப்பியில் 17 வருடங்களுக்கு முன் கேன்சர் வந்ததாகவும் ஒரு அறுவை சிகிச்சையின் மூலம் அது நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் ப்ரோஸ்டட் சுரப்பி என்பது சிறு நீர்பாதையில் விந்துவை உந்தி தள்ள இயற்கை வைத்துள்ள ஏற்பாடு.
முதியவர்கள் விஷயத்தில் இந்த சுரப்பி தேவையின்றி வளர்ந்து கொண்டே போவதால் தான் அவர்களுக்கு அடிக்கடி சிறு நீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு இது கேன்சராகவும் பரிணமிப்பதுண்டு. யோகி ராம் சுரத்குமாரும் இதே நோயால் அவதிப்பட்டது நினைவிருக்கலாம்.
கேன்சர் என்பது தேவையற்ற வளர்ச்சி. அதி விரைவு வளர்ச்சி. மனித உடலில் எந்த பார்ட் எல்லாம் விரைவில் வளருதோ அந்த பார்ட்ல எல்லாம் கேன்சர் வர்ரது யதேச்சையானதுனு சொல்லமுடியாது. உ.ம் பெண்களில் மார்பகம், கருப்பை, ஆண்களில் ப்ரோஸ்டட்
இன்னம் டீப்பா தெரிஞ்சிக்கவிரும்பறவுக இங்கிலிபீஸ்ல படிச்சுக்கங்கப்பா!
Prostate is a glandular organ present only in males. It surrounds the neck of bladder & the first part of urethra and condributes a secretion to the semen. The gland is conical in shape and measures 3 cm in vertical diameter and 4 cm in transverse diameter.It has got five lobes anterior,posterior,two lateral and a median lobe.Since the first part of the urethra pass through it any lesion in the prostate will produce difficulty in passing urine.
சோர்ஸ்:www.findarticles.com
டாக்டர் மேலும் சொன்னதாவது:
மேற்படி கேன்சர் எலும்புக்கு பரவியிருக்கு. அதனால எலும்பு முறிவும் ஏற்பட்டிருக்கு. அதனாலதான் பாபா வீல் சேர்ல வாழவேண்டியதாயிருச்சு. இந்த வலியை சமாளிக்க டாக்டர்கள் ஸ்லீப்பிங் பில்ஸ் மற்றும் மயக்க மருந்துகளை ப்ரிஸ்க்ரைப் பண்ணியிருக்காய்ங்க. இதனாலதான் கிட்னி, கல்லீரல் எல்லாம் பாதிக்கப்பட்டது. பாபா ஒரு க்ரானிக் ஷுகர் பேஷண்ட்.

Friday, June 25, 2010
பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 8
கடந்த அத்யாயத்தில் பாபா வியாழக்கிழமைகளில் பிரச்சினைல உள்ள தன் பக்தர்களை எனக்கு எண்டார்ஸ் செய்துவந்தார் என்றும் கடைசியில் தன் பக்தரான எங்க ஊரு எம்.எல்.ஏ சி.கே பாபுவுக்கு உதவும்படி தொடர்ந்து என்னில் எண்ண அலைகளை தோற்றுவித்தார் என்றும் சொல்லியிருந்தேன்.
இந்த சூழல் 2003ல ஏற்படுதுன்னா 1997லயே அவரோட உருவத்தை தன் படத்துல நிழலாட வைச்சாருன்னும் சொல்லியிருந்தேன். எம்.எல்.ஏவுக்கு என்ன பிரச்சினை? ஒரு பொறியியல் கல்லூரி மாணவரோட கொலைல இவரை முத குற்றவாளியா சேர்த்திருந்தாய்ங்க. அந்த மாணவரோ தாய் தெலுங்கு தேசம் மகளிரணி தலைவி. இன்னம் கேட்கனுமா? கையோட கையா எம்.எல்.ஏ வை கைது பண்ணி சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்னு கடப்பா மத்திய சிறைக்கு கொண்டு போயிட்டாய்ங்க.
கொலையான இளைஞரோட பிணத்தை ஆளுங்கட்சிக்காரங்க ஒரு வேன்ல வச்சு மூணு மந்திரிங்க புடை சூழ தெருத்தெருவா ஊர்வலமா கொண்டு போனாய்ங்க.
இந்த பதிவுல வழக்குக்குள்ள போக நான் விரும்பலை. இந்த வழக்குக்கு மூலமே இவரு காங்கிரஸ்காரரா இருந்து மூணு தரம் தொடர்ந்து எம்.எல்.ஏ ஆனவருங்கறதுதான். இவரு இருக்கிற வரை தொகுதில தெ.தேசம் பேர் சொல்லமுடியாதுங்கற ஆளும்கட்சியோட பயம்தான் இந்த வழக்குக்கே மூலம். ஆனால் எம்.எல்.ஏ தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை சாதாரண கிரிமினல் வழக்கா நடத்திக்கிட்டிருந்தாரு. காங்கிரஸ் கட்சி உடனடியா இவரை கட்சிலருந்து நீக்கிருச்சு.
இந்த மாதிரி சூழல்ல ஒரு சாதாரண குடிமகனுக்கு கிடைக்க கூடிய உரிமைகள், பாதுகாப்பு கூட அவருக்கு கிடைக்கலை. இதையெல்லாம் லாயர் பாயிண்ட் அவுட்
பண்றாப்லயே இல்லை. உடனே நான் எனக்கு தோணின பாயிண்ட்ஸையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணி லாயருக்கு கூரியர் மூலமா லெட்டர் அனுப்பினேன். அவரு அதை ரெஃப்யூஸ் பண்ணிட்டாரு. என்னங்கடா இது இம்சைன்னு ஆர்டினரி போஸ்ட்ல அனுப்பிட்டு கடப்பா ஜெயிலுக்கு ஒரு லெட்டர் போட்டு லாயருக்கு போட்ட கடித விவரத்தை தெரிவிச்சுட்டன். என் கடிதத்துல நான் தெரிவிச்சிருந்த சில பல யோசனைகள் உடனே அமல்படுத்தப்பட்டதுதான் அதிசயம்.
எங்க எம்.எல்.ஏ சிறைல இருந்த நேரம் கடப்பா சிறைல கட்டப்பட்டுக்கிட்டிருந்த ஷீரடி பாபா கோவிலுக்கு உடலுழைப்பை நல்கி வந்தது உபரி தகவல்.
கண்ணை மூடி கண்ணை திறக்கறதுக்குள்ள தேர்தல் (2004)வந்துருச்சி. ( இது ஆன்மீக தொடர்ங்கறதால அரசியலுக்குள்ள ஆழமா போகவேணாம்ணே) தெலுங்கு தேச அரசை வீட்டுக்கு அனுப்புங்கன்னு 10 ஆயிரம் பாம்லெட் போட்டு நானே டிஸ்ட் ரிப்யூட் பண்ணேன். எங்க எம்.எல்.ஏ வாழ்க்கைல முதல் முறையா சொற்ப வாக்குகள் வித்யாசத்துல வெற்றி வாய்ப்பை இழந்தாரு. ஆனால் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டி இடங்களை பிடிச்சு ஆட்சிக்கு வந்தது. ஒய்.எஸ்.ஆர் முதல்வரானாரு. ஆறுமாசத்துல நகராட்சி தேர்தல் வந்தது . எம்.எல்.ஏ கட்சியோட தொகுதி பொறுப்பாளரா கோதாவுல இறங்கினாரு. எதிர்கட்சிக்கு சிங்கிள் டிஜிட். 2009 தேர்தல்ல
நாலாவது முறையா ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆனாரு. அவரு நாலாவது முறையா எம்.எல்.ஏ ஆன அக்கேஷனை வச்சுத்தான் ஷீர்டி பாபா சத நாமாவளி பாக்கெட் சைஸ் புக்ஸ் ஒரு லட்சம் பிரதி அச்சிட்டுக்கிட்டிருக்கேன்.
இந்த 6 வருசத்துல பாபாவுக்கும் நமக்கும் இடையில என்ன நடந்ததுன்னு அடுத்த பதிவுல பார்க்கலாம்.

Saturday, May 22, 2010
என் எதிரிகளும் லதா ரஜினி காந்தும்
இன்னாபா தத்துவமெல்லாம் சொல்றே. மனித குலம், மனிதம்னு பினாத்தரே. அப்பாறம் பார்த்தா எதிரிகளோட பட்டியலையே ரிலீஸ் பண்றேனு நீங்க கேக்கலாம். இவிகளை நான் அடையாளம் காட்டறதே மன்சங்க இவிகளை நம்பி என்னாட்டம் நொந்து போயிரகூடாதுன்னுதான். எதிரிங்களுக்கு என்னோட ட்ரீட் மெண்டை சொன்னா சிரிப்பிங்க.
நம்ம ஃபிலாசஃபி ஒன்னுதா:
கெட்டவனை கடவுளுக்கு கெட்டவனாக்கனும்னா அவனுக்கு நல்லதை செய்து விட்டுரனும். இன்னைக்கும் இந்த பதிவை போட காரணம் அது தான். எதிரிகளை அப்புறம் பார்க்கலாம். முதல்ல லதா ரஜினிகாந்த்
கடக லக்னத்துக்கு எமன் உமன் தான் இதை கலைஞருக்கு எடுத்துச் சொல்லி ஒரு தனி பதிவே போட்டிருக்கேன். என்னுதும் கடக லக்னம் தான் . இருந்தாலும் ஒரு தாய்குலத்தோட அதுலயும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் இல்லத்தரசியான திருமதி லதா ரஜினி காந்த் அவர்களுடன் இந்த பதிவில் மோத இருக்கிறேன்.
இதுக்காக ஏற்கெனவே அனுபவ ஜோதிடம் வலைப்பூவில் நான் எழுதியுள்ள எந்த நவீன பரிகாரத்தையும் செய்துக்க போறதில்லை . நவகிரகங்களில் இருந்து விடுதலைக்கு நான் உபதேசிச்ச எந்த மார்கத்தையும் பின்பற்ற போறதில்லை. இருந்தாலும் மோதப்போறேன்.
இதெல்லாம் ஜஸ்ட் கடவுளை டீஸ் பண்றதுதான். பகவத் கீதை ஒரு உட்டாலக்கடின்னு தொடர்பதிவே போட்டேன்." அவாள்" எதிர்ப்பார்ப்பின் படி , கணக்குப்படி கண்ணன் சக்கரம் விட்டு என் கழுத்தை சீவியிருக்கனும். சீவலை. என்ன காரணம்னா என் எழுத்துல சத்தியம் இருக்கு. அண்டைவெளியில் இன்றைக்கும் மிதக்கும் எண்ண அலைகளை ரேடியோ ரிசீவர் போல என் மூளை ஈர்க்கிறது. அது எப்படி பொய்யாக முடியும்.
நிற்க லதா ரஜினி காந்த் யார் ?ஒய்.ஜி. மகேந்திர அய்யரின் மைத்துனி. ரஜினி காந்தை சூப்பர் ஸ்டார் ஆக்கினது யாரு? சேரிப்பசங்க,சூத்திர பசங்க. இட்லி ,சாம்பார் எல்லாம் சின்ன சாம்பாருக்கு சேவை பண்ணிக்கிட்டிருந்தப்போ ரஜினிக்கு காவடி எடுத்தது மேற்படி பசங்கதான். ஆனால் ரஜினி சார் கைப்பிடிச்சது ( இதுக்கு பின்னாடி கூட பிராமண சதி இருக்கலாம். நம்மாளா ஜெயிக்கனும், ஜெயிக்கிறவன் எல்லாம் நம்மாளா இருக்கனும், அதும் முடியலியா ஜெயிச்சவனுக்கு பெண்ணை கொடுத்துரனும், தத் ஏற்கெனவே கல்யாணமாயிருச்சா அவனை அய்யராக்கிரனும் (இளைய ராசா மாதிரி) இதானே அவிக சித்தாந்தம்.
சரி விட்டுத்தொலைங்க .ராஜு மெச்சிந்தி ரம்பா. திருமணங்கள் சொர்கத்தில் சாரி அவாள் வீட்டு ரீடிங் ரூமுகள்ள நிச்சயமாகுது நமக்கென்ன. விஷயத்துக்கு வந்துர்ரன். நானும் ரஜினி ரசிகன் தான். எதுவரை ,மிஸ்டர் பாரத் வரை. அதுல என்னாச்சுன்னா தலைவர் ராஜீவ், காமராஜர் கெட் அப்ல யெல்லாம் வந்தாரா.. டீப்பாய்க்கெல்லாம் காங்கிரஸ் பார்டர் கொடுத்திருந்தாய்ங்களா முழிச்சிக்கிட்டேன்.
சரி ஓஞ்சு போவட்டும். அவிக பிரச்சினைக நமக்கு புரியறதில்லை. சாமானியன் எண்ண ஓட்டம் அவிகளுக்கு புரியறதில்லை.
ரஜினி காந்தோட மனைவி லதா ரஜினிகாந்த்:
பாபா ரிலீசான நேரம். படம் பயங்கர இழுவை,அறுவை. நாமதான் ஐடியா ஐயா சாமியாச்சே. ரெண்டு மூணு தடவை படத்தை பார்த்து எந்தெந்த சீனை கட் பண்ணிட்டா படத்துல கொஞ்சமாச்சும் டெம்போ வரும்னு ரோசிச்சு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி ரஜினிகாந்துக்கு கொரியர்ல அனுப்பினேன். பழக்க தோஷத்துல பழைய விலாசத்துக்கு அனுப்பிட்டேன். நெம்பர்:18,ராகவவீரா அவென்யூ, போயஸ் கார்டன். அங்கன இப்போ ஆஷ்ரம் ஸ்கூல் நடக்கிறதா கேள்வி, கொரியர் வாங்கின மகராசி யாரோ ஃபோன் நெம்பரையும் போட்டு வாங்கியிருக்காய்ங்க.
அப்பல்லாம் ரஜினிய நக்கலடிச்சு தாளி பிட் நியூஸ் கூட போட முடியாது அது ரேஞ்சு. எல்லா பத்திரிக்கையும் ரஜினி அவ்ளோ சிம்பிள், ரசிகர்களுக்கு அவ்ளோ மரியாதை அதுஇதுன்னு அள்ளிவிட்டுக்கிட்டிருந்தாய்ங்க.
நமக்கு ஒரு நப்பாசை ஃபோன் நெம்பர் போட்டு வாங்கினா ஃபோன் பண்ணச்சொல்லி அர்த்தமோனு ஒரு ஜொள்ளு. அதே நேரம் ஃபோன் நெம்பர் போட்டு வாங்கறது வழக்கமோன்னும் ஒரு சம்சயம். இந்த இழுபறில ஃபோனும் பண்ணலை ஒரு ..ரும் பண்ணலை.
கொஞ்ச நாள் கழிச்சு தேவி வார இதழ்ல பாபா படத்தோட நீளத்தை குறைக்க சில சீனையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணி தியேட்டருங்களுக்கு அனுப்பினாய்ங்க. தியேட்டர்ல அந்த சீனையெல்லாம் கட் பண்ணிட்டு ஓட்டறாங்கனு ஒரு செய்தி வந்தது. கொஞ்சமா நம்பிக்கை வந்து ஃபோனை போட்டேன்.
அந்த காலத்துல எஸ்.டி.டிங்கண்ணா. மினிமம் ரூ 3.50 . அது நாம சோத்துக்கு லாட்டரி அடிச்ச நேரங்கண்ணா. நான் போட்ட நெம்பர் ஆஷ்ரம் ஸ்கூல் ரிசப்ஷன் நெம்பர் போல. அம்மாவோட பி.ஏவை ஃபோன்ல பிடிக்க பத்து நாள் ஆச்சு. ஃபோனை போட வேண்டியது பாபா படத்தோட - இழுவைய குறைக்க - கட் பண்ண வேண்டிய சீன்ஸ லிஸ்ட் அவுட் பண்ணி லெட்டர் போட்டேன். பி.ஓ.டி.ல இந்த நெம்பர் இருந்ததுன்னு தேஞ்சுபோன ரிக்கார்டை போட வேண்டியது .அவிக ஒரு நிமிஷம்னு சொல்ல பாடாவதி மியூசிக் ஒலிக்கும். நாம கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.
இந்த ரேஞ்சுல லதா அம்மாவ ஃபோன்ல பிடிக்க பத்து நாளாச்சு. அவிகளோட நடந்த உரையாடல்.. அட அட அடடடடடடடடடடடடடடடடடடட வாழ் நாள்ள மறக்கவே முடியாதுங்கண்ணா.
விஷயம் மொத்தத்தையும் சொன்னேன். இடை இடையில அவிங்க ரியாக்சன் . "அப்படியா" " நல்லது" கடைசில கேட்டாங்களே ஒரு கேள்வி "இப்ப நீங்க என்ன எதிர்ப்பார்க்கிறிங்க? "
படக்குனு சொன்னேன். என்னத்த எதிர்ப்பார்க்கப்போறேங்க ஜஸ்ட் தேங்க் பண்ணி ஒரு போஸ்ட் கார்ட் அவ்ளதான்.
அதுக்கு அந்தம்மா சொன்ன பதிலிருக்கே அதையே எல்லாரும் ஃபாலோபண்ணாங்கன்னா உலகத்துல எந்த பிரச்சினையும் வராது. கீதாசாரமது.
"லெட்டர் தானே ..போட்டதா நினைச்சுக்கங்க"
இதுக்கு என் பதில் என்னனு ஆவலா எதிர்பார்ப்பிங்களே.. அப்போ நேரம் மதியம் 1.45.
"சாப்டிங்களா?" -இது நான்.
"இன்னும் இல்லை" - இது லதாம்மா
"சாப்டாதிங்க. சாப்டோம்னு நினைச்சுக்கங்க" - இது நான்.
இதான்யா வி.ஐ.பிங்களோட லட்சணம். அச்சுல வர்ரத நம்பாதிங்க. டிவில காட்டறதை நம்பாதிங்க. எல்லாமே பொய்.
கே.பாக்யராஜ்:
என்ங்கடா இது என் முதல் கதைய பிரசுரிச்ச பாக்யராஜ்னு பந்தாவா படம் கிடம்லாம் வச்சுட்டு எதிரிகள் பட்டியல்ல் முதல் பேரா கொண்டுவரான் மனுஷன்னு சிண்டை பிச்சுக்காதிங்க.
1984லயே என் சிறுகதை பிரசுரமாகிட்டதா பீலா விட்ட பார்ட்டி நானு. அப்போ எந்த வருஷத்துல/எந்த வயசுல எழுத ஆரம்பிச்சிருக்கனும்னு சின்னதா கணக்கு போடுங்க.
இந்த நிலைல என் முதல் சிறுகதைய பிரசுரிச்ச பாக்யாராஜ் அண்ட் கோவோட ரசனைக்கும் என் வயசுக்கும் ஜஸ்ட் 6 வருஷம் வரைதான் ஒத்துப்போச்சு. 1990 மார்ச்சுக்கெல்லாம் நம்ம ரசனை கல்கி ரேஞ்சுக்கு போயிருச்சு.
முதல் கதை முளைச்சு மூணு இலை விடலை அடுத்த கதை அருணாகவுரி அதையடுத்து கனகாவை காணவில்லை, அதையடுத்து அழைத்தேன் வந்தாய்
(பாக்யாவுல கதை பிரசுரமாகனும்னா நீங்க பண்ண வேண்டியதெல்லாம் ஒன்னுதான். ஒரு ஆம்பளை பொம்பளை ஏதோ கெட்ட காரியம் பண்ணப்போறாங்கங்கற மாதிரி கதைய கொண்டு போகனும் லாஸ்ட்ல உப்பு கேட்க வந்தாள், மிளகா கேட்க வந்தாள்னு முடிச்சுரனும் தட்ஸால்)
கல்கில புதியவள் னு ஒரு கதை வெளி வந்தது. ஷாட் கட் பண்ணா கவிதாசரண்ல படைத்தவன் கிடைத்தான்.
இப்ப சொல்லுங்க என் ஆரம்ப கால சிறுகதைகளை உற்சாகமாக பிரசுரித்து தன் ரசனையை வளர்த்துக் கொள்ளாமலே இருந்து என் பிற்கால கதைகளை பிரசுரத்துக்கு தேர்வு செய்யாத பாக்யராஜ் அண்ட் கோவை எதிரியா அறிவிக்கிறதுல என்ன தப்பு.
என் கதைகளை பற்றிய/ எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ பிரசுரிப்பது குறித்த முடிவுகளை அறிவிக்க தபால் செலவுக்கு அனுப்பிய ரூ.10 ஐ பெற்றுக்கொண்டும் முடிவு சொல்லாத ஆனந்த விகடன் ஆசிரியர். நான் காட்டமா போஸ்ட் கார்ட் எழுதினபிறகு ஜே.வி. நாதன்னு ஒரு ரிப்போர்ட்டரை என் கிட்டே அனுப்பி வச்சாரு. அவரும் அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் கொடுத்த மாதிரி என்னென்னமோ ஃபிலிம் எல்லாம் காட்டிட்டு போனார். போனவர் போனவர்தான். இவிகளை எதிரியா அறிவிக்கிறதுல என்ன தப்பு.
அவாளோட பிழைப்பு கெட்டுருங்கற ஒரே காரணத்துக்காக , தேர்வாகி பிரசுரமாகிக் கொண்டிருந்த எனது ஜோதிட ஆய்வு கட்டுரை, ஸ்ரீ பிரம்மங்காரு தொடரை பாதியில் நிறுத்திய ஆன்மீகம் மாத இதழின் ஆசிரியர்.
என் படைப்புகளை சுவற்றிலடித்த பந்தாக திருப்பியனுப்பிய கல்கி ஆசிரியர். (மறு தபால்ல கூட அனுப்பியிருக்காய்ங்க, புரட்ட கூட நேரம் இருந்திருக்காது தாளி.)
ப்ரைம் பாயின்ட் சீனிவாசன்:
இவர் ஏதோ ஒரு பார்ப்பன பத்திரிக்கைல ஏதோ சுயமுன்னேற்ற தொடர் எழுதினதா ஞா. ஆ.இ 2000 ஐ பொருத்தவரை பாதிரியார் மாதிரி. எதிராளிக்கு அவசரமா ஒன்னுக்கு வருதா, வயித்தை கலக்குதான்னெல்லாம் ரோசிக்க மாட்டேன்சுருக்கமாவாச்சும் சொல்லிட்டுதான் மறு வேலை பார்ப்பேன். ஒரு சமயம் யாஹூ சாட்ல கிராஸ் ஆனாரு.
வழக்கம் போல ஆ.இ. பத்தி நாலு வரி சொன்னேன். உடனே நானேதோ மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக்கை சொல்லிட்டாப்ல அசூயையா ஃபீலாகி எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. இவிங்களையெல்லாம் ஒரு நாளில்லை ஒரு நாள் சாமானிய வாசகனுக்கு அடையாளம் காட்டலைன்னா நான் வாழ்ந்ததே வேஸ்டு.
எண்டமூரி வீரேந்திர நாத்:
இந்தாளு தெலுங்குல ஒரு காலத்துல பிரபல நாவலாசிரியர். தெரியாத்தனமா இவர் கதைகளை சிரஞ்சீவிய போட்டு எடுக்க ஃபோர் ,சிக்ஸர் எல்லாம் அடிச்சுருச்சு. ஒரு மாஸ் ஹீரோவை போட்டு எடுத்தும் ஒரு கதை க்ளிக் ஆகுதுன்னா அது எப்படியாப்பட்ட கரம் மசாலாவா இருக்கனும்னு ரோசிங்க.
இந்தாளு எசன்ட்ரிக். உடனே இவிக எடுக்கிறதெல்லாம் படமே இல்லை. நான் எடுக்கறேன் பாருன்னு கோதாவுல இறங்கினார் .படம் பப்படம். (அந்த படத்தோட பேரு பாரதம்லோ சீதாவோ என்ன இழவோ)
இந்த பார்ட்டிக்கு ஆ.இ.2000 பத்தியும் , அது தொடர்பா ஏற்பட்ட டெவலப் மெண்ட் ஸையும் மெயில் மூலமா அனுப்பினேன்.
இந்த பார்ட்டி என்ன பண்ணாரு தெரியுமா மெயில் அனுப்பறத நிறுத்து இல்லன்னா கமிஷ்னருக்கு கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன். அடங்கோத்தா.. உனக்கு வர்ர மெயில பிடிக்கலன்னா ஸ்பம்னு மார்க் பண்ணிட்டு அடுத்த வேலைய பார்ப்பயா.. கமிஷ்னருக்கு கம்ப்ளெயிண்ட் பண்ணுவயா.
இத்தனைக்கும் இந்தாளோட கதைகளை தமிழ்ல டப் பண்ணிக்கிட்டிருந்த சுசீலா கனகதுர்கா யுத்தன்ன பூடி சுலோச்சனாராணிங்கற தெலுங்கு எழுத்தாளரோட கதைகளை எண்டமூரி லேபிள் போட்டு தமிழ்ல டப் பண்ணி காசு பண்ணப்ப முத முதலா உஷார் பண்ண பார்ட்டி நான் தான். அப்போ இந்தாளு அதை கண்டுக்கலை. இந்த மேட்டர் சுலோச்சனாராணிக்கு தெரிஞ்சு போய் அந்தம்மா எண்டமூரிக்கும் சேர்த்து லீகல் நோட்டீஸ் விட்டுட்டா. தெலுங்கு தினசரிலல்லாம் நாறிப்போச்சு.
இந்த லிஸ்ட் அனுமார் வால் மாதிரி ரொம்ப நீளங்கண்ணா. சமயம் கிடைக்கிறப்போ தொடரலாம்.
ஆர்னிகா நாசர்,வாணியம்பாடி டாக்டர்(?) அக்பர் கௌசர்,எங்கள் முன்னாள் முதல்வர் சந்திரபாபு, உங்கள் 'ஜெ' ,கலைஞர்,நக்கீரன் ஆசிரியர்,பா.ம.க. ராமதாசு,வாழைப்பாடி ,லோக் சபா சபாநாயகர் ஜி.எம்.சி பாலயோகி, ,திருமலை திருப்பதி தேவத்தானத்தார்,மதுரை மீனாட்சி கோவில் நிர்வாக அலுவலர், சென்னை வானொலி நிலையம், திருப்பதி எப்.எம்,கலியுக நாரதா, சைக்காலஜி டுடே ஆசிரியர்கள், நடிகர் கிருஷ்ணா, ஜனாதிபதிகள், தலைமை நீதிபதிகள்,மானில முதல்வர்கள்,கவர்னர்கள், பல நாட்டு பிரதமர்கள்,ஜனாதிபதிகள், என்.டி.ஆர் மகன் அரிகிருஷ்ணா, அவர் மகன் சின்ன என்.டி,ஆர்,லோக்கல் சாக்லெட்டு கம்பெனி,
மணிமேகலை பிரசுரம்,லிப்கோ பதிப்பகம், ராஜமன்ட்ரி கொல்லப்பூடி வீராசாமி அன்ட் சன், வேதவியாசர் (புராண பார்ட்டி இல்லிங்கோவ்!) இப்படி மஸ்தா கீதுங்கண்ணா..
சோதிடத்தில் ஒவ்வொரு லக்னத்துக்கும் ஒவ்வொருவிதமான பிழைப்பு கூறப்பட்டுள்ளது ஆனல் என்னோட கடக லக்னத்துக்கு மட்டும் சத்ருக்களால் ஜீவனம் என்று கூறப்பட்டுள்ளது. இது உண்மை தான் போலும். நண்பர்களுக்கு நான் செய்ய வேண்டியது எவ்வளவோ இருந்தாலும் சத்ருக்களை அதிலும் சமூக சத்ருக்களை விட்டு வைப்பதாயில்லை.
பாசிடிவ் திங்கிங்க் பற்றி நான் அறியாதவனில்லை. ஆனால் அல்ஜீப்ராவை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் சத்ருக்களை அடையாளம் காட்டினால் என் பின்னாடி அவிகளை காண்டாக் பண்ண விரும்பற பசங்களுக்கு நன்மை ஆட்டோமேடிக்காக நடந்து விடும் என்பது என் அனுபவம். ஓகே உடு ஜூட்.
Subscribe to:
Posts (Atom)