Tuesday, January 8, 2013

பாலியல் தொழிலாளியுடன் ஓரிரவு

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டி தொடரை தொடரலாம்னு பார்த்தா ஊஹூம் .. ஒன்னும் வேலைக்காகற மாதிரியில்லை.
ஏன்னா சனத்தொகையில பாதியா இருந்து அடுத்த பாதியை இன்ஸ்பைர் பண்ற -டாமினேட் பண்ற -கண்ட் ரோல் பண்ற ரேஞ்சுல உள்ள பெண்ணினத்தை உடனடியா  நேரடியா பாதிக்கக்கூடிய சமாசாரத்தை அலசாம செவ் தோஷத்தை பத்தி எழுதிக்கிட்டே போறது துரோகம். அதனால இன்னிக்கு ஒரு நா விட்டுருங்க. நாளையிலருந்து நூல் பிடிச்சாப்ல செவ் தோஷம் ஓகேவா?

தில்லி வன்புணர்வு நிகழ்ச்சிக்கு அப்புறம் ஒட்டு மொத்த இந்தியாவும் ப்ளேடோட அலையறாப்ல இருக்கு. ஆளுக்கு ஆள் இந்த மாதிரி சம்பவங்களை தடுக்க ஐடியா  மேல ஐடியாஅள்ளி விட்டுக்கிட்டிருக்காய்ங்க. எங்கப்பக்கத்துல குண்டூர் எஸ்.பி மாணவிகளுக்கு மிளகாய் தூள் பாக்கெட் கூட சப்ளை பண்ணியிருக்காரு..

வன்புணர்வுகளுக்கு பின்னான மனோதத்துவத்தை இந்த பதிவுல அலசலாம்னு  நினைக்கிறேன்.   இந்த பதிவுக்கு இன்ஸ்பிரேஷனே கேள்வியும் நானே பதிலும் நானே  வலைப்பூவில் வெளியாகியிருக்கிற ஒரு பதிவுதான். அதில் உள்ள சில பாராக்களை இங்கன கோட் பண்ணப்போறேன்.
( நன்றி:புரட்சிமணி)

//வன்புணர்வுகள் சமீபகாலமாக அதிகரிப்பதாக தெரிந்தாலும் அது உண்மையல்ல. ஊடகத்துறை வளர்ச்சி பெற்றுள்ளதால் நமக்கு அவ்வாறு தெரிகின்றது.//

இது 100 சதம் அட்சர சத்தியம். வன்புணர்வுகள் குறித்த புகார்கள் எதேனும் ஒரு நிலையில் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடுகின்றன. ஸ்டேஷன் வரை போன புகார்கள் தான்  மீடியாவில் பல்லை இளிக்குது.

//காலம் காலமாக வன்புணர்வுகள் என்பது நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதற்க்கு என்ன காரணம் என்று பார்த்தால் மனிதர்கள் மிருகங்கள் என்ற ஒரு விடைதான் கிடைக்கும். மிருகத்திலிருந்து பரிணமித்த மனிதர்களுக்கு இன்னும் மிருகக்குணம் குறையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். //

புரட்சிமணி ரெம்ப பெரிய மனசு பண்ணி "மிருக குணம் குறையவில்லை"ங்கறாரு. நம்மை பொருத்தவரை மிருகம் தான்.மிருகம் தான்.மிருகம் தான். மன்சனை மன்சனா நினைச்சு சட்டம் போடறதாலதேன் சட்டம்லாம் தோத்துப்போகுது. மன்சனை மிருகமா நினைச்சு சட்டம் போட்டா தான் வேலைக்காகும்.

பதிவர் வயிற்றுப்பசியையும் -உடல் பசியையும் ஒரே தராசில் நிறுத்து உழைச்சு திங்கறதை  - முறையான திருமண உறவுக்கும், திருடி திங்கறதை காதல்/கள்ளக்காதல் இத்யாதிக்கும் - பிடுங்கி தின்றதை   வன்புணர்வுக்கும் ஒப்பிடறாரு.

//ஒரு மனிதனின் உணவு,உடை, உறைவிட தேவைகளை நிறைவேற்றுவது எப்படி அரசாங்கத்தின் கடமையோ அவ்வாறே ஒரு மனிதனின் உடலுறவு தேவைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.//னு புரட்சிகரமா ஆரம்பிக்கிற புரட்சிமணி படக்குன்னு யுடர்ன் எடுத்து // அனைவருக்கும் குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறுமாறு அரசாங்கம் பார்த்துக்கொள வேண்டும்.//னு முடிக்கிறாரு.

// மனிதனின் உடலுறவு தேவைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்//ங்கறதுதேன் நம்ம ஸ்டாண்டு. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் ஆசைகளே வன்முறையாக வெடிக்கின்றனங்கறது சைக்காலஜி. வன்முறைய தடுக்க வேண்டியது அரசின் கடமை.

காளை மாட்டை அடக்கனும்னா அதனோட மூக்கணாங்கயிறை பிடிச்சு நிப்பாட்டனும்.அதை விட்டுட்டு வாலை பிடிச்சுக்கிட்டு ஓடறது முட்டாத்தனம். அரசு எப்படி பொறுப்பேத்துக்க  முடியும்னு கேப்பிக. சொல்றேன்.

அதுக்கு மிந்தி புரட்சிமணி என்ன சொல்றாருன்னு பார்ப்போம்:
//எனவே திருமண வயதை அரசாங்கம் குறைக்க வேண்டும்.தற்ப்பொழுதைய சூழ்நிலையில் 16 என்பது சரியான வயதாக இருக்கும் என எண்ணுகிறேன். //

மேம்போக்கா பார்த்தா ..ஆஹா இதுதாண்டா தீர்வுன்னு தோனும். அந்தகாலத்துல மருத்துவத்துறை செரியா வளராததால குழந்தை மரணம் அதிகமா இருந்தது. இப்ப என்ன கேடுன்னு கூட தோனும்.

திருமணங்கற  ஏற்பாடே ஆணின் செக்ஸ் பவருக்கு அடிக்கப்பட்ட ஆணி. பழகப்பழக பாலும் புளிக்கும்னு பழமொழியா சொன்னாலும் - தி லா ஆஃப் டிமினிஷிங் மாரிஜினல் யுட்டிலிட்டின்னு எக்கனாமிக்ஸ்ல சொன்னாலும் மேட்டர் ஒன்னுதான். திருமணம் என்பது ஆணின் காமத்தை தின்று விடுகிறது.

மன்சன்ல இருக்கிறது ஒரே சக்தி.அதன் நோக்கம் படைத்தல் - இருத்தல்- பரவுதல்.இதெல்லாம் செக்ஸ்ல பாரிஷியலா அச்சீவ் ஆறதாலதான் மன்சனுக்கு செக்ஸ் மேல ஒரு இது. திருமணம் காரணமா -அவனுக்குள்ள இருந்து பொங்கும் சக்தி ஓய ஆரம்பிச்சுட்டா நாஸ்தி.

அந்த சமயத்துல நம்ம மாதிரி பார்ட்டி யாராவது கிராஸ் ஆகி "  நைனா! படைத்தல் - இருத்தல்- பரவுதலுக்கெல்லாம் இன்னம் நிறைய வழி இருக்கு.. கார்ல்  மார்க்ஸ் டாஸ் காப்பிட்டல் படைச்சாரு .இன்னம் இருக்காரு. உலகமெல்லாம் பரவியிருக்காரு. ஒரு தமிழன் இ மெயில் கண்டுபிடிச்சான். இன்னம் இருக்கான். இருப்பான்.உலகமெல்லாம் பரவியிருக்கான்"னு  கைட் பண்ணா மேட்டர் ஓகே.

இல்லாட்டி மன்சன் பணம் பின்னாடி ஓட ஆரம்பிச்சுருவான்.உலகத்துல முக்கியமா இந்தியாவுல 60 சதவீதம் பேரு பணத்தை துரத்த ஆரம்பிச்சுட்டாய்ங்க. மிச்சம் மீதி உள்ள 40 சதவீதம் தான் பணம் பக்கமா டைவர்ட் ஆகாம இன்னம் செக்ஸையே சுத்தி வந்துக்கிட்டிருக்காய்ங்க. அதனாலதேன் அவிக ஏழைகளா இருக்காய்ங்களோ என்னமோ?

புரட்சிமணி சொல்றாப்ல திருமண வயதை குறைச்சு தொலைச்சா நாறிரும். படைத்தல் - இருத்தல்- பரவுதலுக்கெல்லாம் செக்ஸ் ஒன்றே போதுமானதல்லங்கற யதார்த்தம் புரிஞ்சுரும். அடுத்து பணம் ஒன்றே இதுக்கெல்லாம் வழின்னு ஆயிரும். பணத்துல செயிச்சுட்டா கொய்யால இதுலயும் ஒன்னுமில்லடான்னு தெளிஞ்சுரும்.மறுபடி செக்ஸுக்கு யு டர்ன் எடுப்பாய்ங்க.

இப்பமே லைஃப் டோட்டலா கமர்ஷியலைஸ் ஆயிருச்சு. பின்னே என்னதான் வழின்னா பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம். பாஸ் போர்ட் விசாவுக்கு போனா எப்படி அம்மை குத்தியிருக்கான்னா பார்க்கிறாய்ங்களோ அப்படி ட்ராஃபிக்ல ஓவர் ஸ்பீட்ல மாட்டினா கூட  பாலியல் தொழிலாளியை சந்திச்சிங்களான்னு கேட்கிற நிலை வரனும்.

வெகு சிலர் இந்த வாய்ப்பை கூட பயன்படுத்திக்காம "மடியா' இருக்கலாம். அவிகளுக்காவ எஜாக்குலேட்டர்ஸ் அமைக்கலாம். இதெல்லாம் ஃபிசிக்கல். உடனடியா ஓரளவு பலன் தரலாம்.ஆனால் இங்கே தேவை சைக்கலாஜிக்கல் ரெமிடி.

ஹ்யூமன் பாடி ஒரு கம்ப்யூட்டர் சிபியுன்னா மைண்டுதான் ஹார்ட் டிஸ்க்.  ஹார்ட் டிஸ்கை காப்பாத்தா கம்ப்யூட்டருக்கோ - கீ பேடுக்கோ -மவுசுக்கோ பூட்டுப்போட நினைக்கிற முட்டாத்தனம். கம்ப்யூட்டருன்னு இருந்தா
கண்டவன் கண்டதை செருகுவான் (கார்ட் ரீடரு - பென் ட்ரைவ் -டேட்டா கார்டு  எட்ஸெட்ரா) கண்ட டேட்டா உள்ளாற வரும். ஹார்ட் டிஸ்க் டேட்டா கரப்ட் ஆகும்.  இதுக்கு என்னதான் தீர்வு?

ஹார்ட் டிஸ்க்ல உள்ள ஓ.எஸ் கரீட்டா இன்ஸ்டால் ஆகியிருக்கனும். ஐ மீன் பெண் குறித்த புரிதல் இருக்கனும்.  ஒரு பவர் ஃபுல்  ஒரு ஆன்டிவைரஸ் இருக்கனும். டிஃப்ரீஸ் மூலமா ஓ.எஸ் போட்டிருக்கிற ட்ரைவ் லாக் பண்ணப்பட்டிருக்கனும்.

இது இல்லாத பட்சத்துல எல்லாமே தப்பாத்தான் போகும்.  மீண்டும் புரட்சிமணி:

//உடல்தேவைக்கு மனைவி இருந்தாலும் சிலர் தகாத உறவுகளிலும்,வன்புணர்விலும்  ஈடுபடத்தான் செய்கின்றனர்.
இவர்களை கொலை கொள்ளை செய்பவர்களோடு ஒப்பிடலாம். அதாவது தேவைக்கு  அதிகமான பணம் இருந்தாலும் அதீத ஆசையால் ஊழல், கொள்ளைகளில் ஈடுபடுபவனும் உடல் தேவைக்கு மனைவி இருந்தும் தகாத உறவில், வன்புணர்வில் ஈடுபடுபவன் மனநிலையும் ஒன்றுதான்//

ஏற்கெனவே நான் சொன்னாப்ல திருமணங்கறதே ஆணின் செக்ஸ் பவர் மீது அறையப்படும் ஆணி. இதை கண்டறிந்து கொள்ளும்  அவன் உள்ளுணர்வு வேலி தாண்டச்சொல்கிறது.  "நிழலின் அருமை வெயிலில்". ஒரு பாலியல் தொழிலாளியுடன் ஒரு இரவையாவது கழித்தவனுக்குத்தான் குடித்தனக்காரியின் அருமை புரியும்.  ஒரு ஆண் பாதுகாப்பான திருமண உறவில் சீக்கிரமே சலிப்படைகிறான்.அலுப்படைகிறான்.அவனுக்கு மாற்றம் தேவைப்படுகிறது. பாலியல் தொழிலாளியை அணுகுபவன் திரும்பிவர வாய்ப்பிருக்கிறது. கள்ளக்காதல் இத்யாதிக்கு டைவர்ட் ஆறவன் கதை கோவிந்தா கோவிந்தா..

ஏன்? ஏன்? ஏன் அவன் டைவர்ட் ஆகனும்னு கேப்பிக .. சொல்றேன்.

எல்லா உயிருக்கும் மூலம் அமீபா. ஒரு செல் அங்கஜீவி - அது கொழுத்து செல் காப்பிமூலமா ரெண்டாச்சு - செல் காப்பியிங்ல நடந்த எதிர்பாராத - விபத்து மாதிரியான -தவறு காரணமா புது ஜீவராசிகள் உருவாச்சு - குரங்கு வந்தது - குரங்குலருந்து மனிதன் வந்தான் .

ஒரே உடல் ஒரே உயிரா இருந்த காலத்துல உயிர்களுக்கு தூரம் ,கம்யூனிகேஷன் ட்ரபுள், இன்செக்யூரிட்டி இப்படி எந்த பிரச்சினையும் கிடையாது - ரெண்டாவது உயிர் உருவானதுமே இதெல்லாம் ஸ்டார்ட் ஆயிருச்சு.

ஆனால் ஓருயிர் ஓருடலா இருந்த நினைவுகள் மட்டும் செல் டு செல் காப்பியிங் மூலமா ஒவ்வொரு மனித மூளைலயும் ஃபீட் ஆயிருக்கு. மறுபடி ஓருயிர் ஓருடலாகனும்ங்கற துடிப்பு இருக்கு.

ஆனால் இந்த ஓருயிர் ஓருடலா மாற இந்த உடல்தான் தடைங்கற ஒரு தவறான நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கு. இன்னொரு பக்கம் இன்னொரு உயிரோட கலக்கனும்னா மறுபடி ஓருயிரா மாறனும்னா அந்த உயிரோட செக்ஸ் வச்சுக்கனும் .அதான் ஒரே வழிங்கற மிக மிக தவறான நம்பிக்கை இன்னொரு பக்கம் இருக்கு.

இந்த உடலை உதிர்க்க கொல்றது ரெண்டு கொல்லப்படறதுங்கற ரெண்டே ரெண்டு வேலைகளை வித விதமான காரிங்கோட செய்றாய்ங்க.

மன்சங்க இன்னா நெல்ல வேலை பண்ணாலும், என்னா கேப்மாரி வேலை பண்ணாலும் அதும்பின்னாடி இருக்கிறது ரெண்டே ரெண்டு ஆசை தானாம்.

ஒன்னு கொல்றது ரெண்டு கொல்லப்படறது. இதை நான் சொல்லலை . சைக்காலஜி சொல்லுது. இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம். அதனால தான் சனங்க செக்ஸுக்கு சரண்டர். மனைவியுடனான செக்ஸில் கொல்லுதல் -கொல்லப்படுதல்ங்கறதெல்லாம் படிப்படியா குறைஞ்சு போயிருது.அதனாலதேன் அலுப்பு -சலிப்பு.

இதனாலதேன் ஆண் -பெண் வேலி தாண்டுகிறார்கள்.

ஒரு பெண் வேண்டுவது தந்தையை . ஒரு ஆண் வேண்டுவது தாயை.  ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் மறுக்கப்பட்டா - ஒடைச்சு சொன்னா முலைக்காம்பு மறுக்கப்பட்டா அவன் செயின் ஸ்மோக்கராகிறான்.  குடிகாரனாகிறான். நிப்பிள் காம்ப்ளெக்ஸ். ஒரு பெண்ணுக்கு தந்தைப்பாசம் மறுக்கப்பட்டால் அவள் காதலிக்கிறாள். அவன் தந்தை அவளது தாயை துன்புறுத்தியிருந்தா இவள் சக ஆண்களை தன் பின்னால் அலைய விட்டு பழிவாங்கறா.

ஓருடல் ஓருயிர் நிலை மாறி பல்லுடல் பல்லுயிரா மாறினாலும் நம்ம உயிர்களெல்லாம் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. (செல் ஃபோன்கள் டவர்களால் இணைக்கப்பட்ட மாதிரி) ஆனால் அகந்தை காரணமா பிரிஞ்சிருக்கம். நோக்கமென்னவோ சக உயிர்களோட இணையறது. ஆனால் நாம செய்றதென்ன.. நம்ம இளைஞர்கள் இளைஞியர் செய்வதென்ன?

ஒரே ஒரு நபரோடு இலக்கில்லாம்  அலைய மத்த அனைவரோட உறவுகளையும் நாஸ்தி பண்ணிக்கிறதுதேன். ஏற்கெனவே  தங்களோடு இணைஞ்சிருக்கிற ஒரு சில உயிர்களிடமிருந்தும் பிரிஞ்சுர்ரதுதான். பை.தனமா இல்லே?

இந்த ஒரே ஒரு யதார்த்தத்தை புரிஞ்சிக்கிட்டா போதும். மனிதன் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவோ (சர்வைவல்) - படைக்கவோ - பரவவோ ( குழந்தை பேறு)  செக்ஸ் ஒன்னு மட்டுமே வழியல்ல.

ஓருயிர் ஓருடலாய் இருந்த நிலையை மீண்டும் அடைய உடல்களை உதிர்ப்பதோ - அதற்காக கொல்வதோ கொல்லப்படுவதோ வழியல்ல -

ஓருயிர் ஓருடலாய் இருந்த நிலையை மீண்டும் அடைய உடல்களால் கலப்பது வழியல்ல. அதற்காக உடலுறவின் ஈடுபடுவது மட்டும் வழியல்ல.  ஏற்கெனவே நம் உயிர்கள் இணைக்கப்பட்டிருப்பதை உணரவேண்டும்.

வன்புணர்வுகளை தவிர்க்க புரட்சிமணி தரும் ஆலோசனைகளை பாருங்க:

//மனிதத்தை பற்றிய கல்வியும் அதில் ஒழுக்கத்தின் அவசியத்தையும் மக்களுக்கு எடுத்து கூற  வேண்டும்.பிறந்ததிலிருந்து இவற்றை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே உண்மை,நேர்மை,ஒழுக்கம்,மனித நேயம் போன்றவற்றை பின்பற்றும்படி கலை,கல்வியை அமைக்க வேண்டும்.//

தன் உயிர் உலகின் அனைத்து உயிர்களோடும் பிணைக்கப்பட்டிருப்பதை ஒரு குழந்தை தெ(பு)ரிந்து கொண்டு - அதை அனுபவத்தில் உணர்ந்து கொள்ளவேண்டும்.

ஏற்கெனவே இணைக்கப்பட்டிருக்கும் தான் இன்னொரு உயிருடன் இணைய உடல் உதவாது என்பதையும்  - உடல்களை உதிர்ப்பது தன்னை இவ்வுலகின் பல்லுயிரோடு இணைக்காது என்பதையும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இது மட்டும் சாத்தியமானால்  கவைக்குதவாத சாகசங்கள் , காதல்,கத்திரிக்காய், பணப்பித்து அதிகார பித்து வன்முறை ஆகியவற்றை அக்குழந்தை கனவிலும் விரும்பாது. புரட்சிமணி எதையெல்லாம் குழந்தைகளின் மனதில் செயற்கையாய் விதைக்கவேண்டும் என்று பட்டியலிடுகிறாரோ அவையெல்லாம் இயற்கையாய் முளைத்து - பூத்து குலுங்கி மணம் வீசும்.

புரட்சிமணியாரின் வலைப்பூவில் அவ்வப்போது இந்துத்வா வாடை மூக்கை துளைக்கும். இந்த மேட்டர்லயும்
// ஆபாசமான உடைகளை தவிர்த்தல் நல்லது//ங்கறாரு.

இன்னைக்கு கர்ச்சீஃப் மட்டும் கட்டிக்கிட்டு போடற ஆட்டத்தை எல்லாம் பார்த்தா நமக்கு ஒன்னும் ஆறதில்லை.ஆனால் இந்த முரசு டிவியில 16 முழ புடவைய சுத்திக்கிட்டு வர்ர கருப்பு வெள்ளை சமாசாரங்கதான் பயங்கரமா கலக்குது .இதுக்கு என்ன பண்றதுன்னு புரட்சிமணியார் சொல்லனும்.

வன்புணர்வுங்கறது ஒரு வக்கிர  மனதின் - வக்கிர கணத்து  வெடிப்பு. இதுல ஆடை ,அணிகலன்லாம் ஒரு பொருட்டே இல்லை.  நல்லவேளையா புரட்சிமணியார் அடுத்த பத்தியிலயே ஜகா வாங்கறாரு.

//.மூன்று வயது குழந்தை  முதல் அறுபது வயது கிழவி வரை கற்ப்பழிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு எந்த ஆடை கொடுப்பது?  காம கொடூரர்களுக்கு ஆடை ஒரு தடை அல்ல.//

மன்னிக்கவும்:
இந்த வன்புணர்வு பின்னான மனோதத்துவத்தை அலசவே இந்த பதிவை ஆரம்பித்தேன்.ஆனால் அலசல் காதல்,கல்யாணம் ,கள்ள உறவுகளோடே நிற்கிறது.இன்னொரு சந்தர்ப்பத்துல அலசலை தொடர்வோம்.