Friday, June 25, 2010

குடிக்கிறத பத்தி மணிக்கணக்கா

மது மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பலப்பல. கிட்னி காலி.லிவர் என்று சொல்லப்படும் கல்லீரல் காலி. ஊளைச்சதை,  குழந்தைகளுக்கு  முகத்துல பால் வடியறாப்ல இவிகளுக்கு பீரும் பிராந்தியும் வழியும். கண்களோட நிறம் மாறும். யாரையும் நேரப்பார்க்க மாட்டாய்ங்க. குடிக்கிறத தவிர வேற எதுலயும் ஆர்வமிருக்காது. குடிக்கிறத பத்தி மட்டும் மணிக்கணக்கா பேசுவாய்ங்க. ஆரம்ப கட்டத்துல பசியின்மை, அல்லது அகோர பசி, ஜாண்டிஸ்,குற்ற மனப்பான்மை இப்படி ஒன்னுன்னு இல்லாம பலதும் தலை காட்டும்.  டோட்டலா டாப் டு பாட்டம் பாடில இருக்கிற நெர்வஸ் சிஸ்டத்துல இருந்து , ஜீரண மண்டலம், இனபெருக்க மண்டலம் இப்படி சகலமும் தங்களோட செயல்திறனை இழந்துரு. இது எப்படி நடக்குதுன்னு ஒரு ஓட்டு ஓட்டிரலாம்.


வயித்துக்குள்ள போன ஆல்கஹாலை  உடம்பு  நேரடியா   க்ராஸ்ப் பண்ணிக்கும். மத்த உணவு வகைன்னா அது ரத்தத்துல சேர அரசு அலுவலகத்து ஃபைல் டேபிள் டேபிளா நகர்ராப்ல ப்ராஸஸ்ல நடக்கும். க்ளூக்கோஸ்,ஆல்கஹால் எல்லாம் உடனடி லாட்டரித்தனமா முத்துசாமி தி,மு,கல சேர்ந்த மாதிரி சேர்ந்துக்கும்.

இதனால ரத்தத்துல ஆல்கஹால் சதவீதம் அதிகரிச்சுட்டே போகும்.கிட்னி அதை க்ளியர் பண்ணிக்கிட்டே இருக்கும். ரத்தத்துல ஆல்கஹால் குறைய குறைய குடிக்கனுங்கற எண்ணம் வந்துட்டே இருக்கும். (இதே விதியை நீங்க சிகரட்டுக்கும் பொருத்தி பார்க்கலாம். அங்கே ஆல்கஹால்னா இங்கே நிக்கோடின். அங்கே சுத்தப்படுத்தறது கிட்னி, கல்லீரல்ன்னா இங்கே நுரையீரல்.

ஆல்கஹாலை சுத்தப்படுத்த கல்லீரல், கிட்னி டபுள் ட்யூட்டி பார்க்க வேண்டி வருது. நிகோடினை சுத்தப்படுத்த நுரையீரல் டபுள் ட்யூட்டி). இந்த க்ளீனிங் ப்ராசஸ்ல  கிட்னி,கல்லீரல் இறங்கும் போது லாலா பார்ட்டிங்களுக்கு ஏதோ சுறுசுறுப்பு சாஸ்தியாய்ட்டாப்ல ஒரு ஃபீலிங் வரும். ( தம்மடிக்கிற கேஸுங்க வார்ம் அப் ஆன மாதிரி ஃபீல் பண்ண காரணம் கூட இதான். உபரியா நிக்கோடினோட எஃபெக்டால  ரத்தக்குழாய்கள் கொஞ்சம் போல சுருங்கும். அப்ப ரத்த ஓட்டம் (பி) பீய்ச்சிக்கிட்டு நடக்கும்.

ஆரோக்கியமான உடம்பா இருந்தா கொஞ்ச நாழில ஆல்கஹாலோ, நிக்கோடினோ ஓரளவுக்கு க்ளீன் ஆயிட்டா பாடி  மறுபடி பழைய ஸ்திதிக்கு  வந்துரும். இன்னொரு 3 அவுன்ஸ் போடலாமா? இன்னொரு தம்மு போடலாமாங்கற எண்ணம் வந்துரும்.

சனம் செயின் ஸ்மோக்கர்ஸா, மது அடிமைகளா மாற இதான் காரணம். நீங்க பாடிய நாஸ்தி பண்ண, பாடி ஓடி ஓடி சுத்திகரிக்க இந்த ப்ராசஸ் தொடர்ந்து நடக்கும். இந்த போட்டில நுரையீரல் சலிச்சு போனா தம்மு பார்ட்டிகளுக்கு இருமல்,மார்ச்சளி, ப்ராங்கடைஸ், வீசிங், லங்க் கேன்சர்ன்னு வரும். லாலா பார்ட்டிங்களுக்கு மறுபடி சொல்லனுமா? ( கிட்னி, கல்லீரல் காலி)

ஆல்கஹாலை நேரடியா  உறிஞ்சி பழக்கப்பட்டுப்போற உடம்பு படிப்படியா சீரண சக்தியை இழந்துருது. மாவு மிஷன்ல போடப்பட்ட தானியம்.   பவுடரா வந்து கொட்டறாப்ல உள்ளாற போன தீனி கக்காவா வெளிய வந்து விழுந்துரும். சத்துக்கள் ரத்தத்துல சேரவே சேராது. 

லாலா போடறச்ச ச்சியா,மசாலா சாப்பிடாதவுகளை விரல் விட்டு எண்ணிரலாம். இதெல்லாம் ஒன்னு சேர்ந்து இரைப்பையோட உள்பக்கமா இருக்கிற கவர்ல ( பசங்க பபுள் கம்மை மென்னு  ஊதினா வருமே குட்டி பலூன். அது மாதிரியான கவர். இது ஸ்டீலோ ,தாமிரமோ அல்ல)  ஓட்டைப்போட ஆரம்பிச்சுரும். தீனில இருக்கிற காரம், சீரணத்துக்குன்னு உற்பத்தியாகிற ஹைட் ரோ க்ளோரிக் அமிலம்லாம் இந்த ஓட்டை வழியா இரைப்பைய தொட்டா  கடவுள் தெரிவார். நீங்க தான் வயிற்று வலில துடிக்கனும்.  அதான் அசிடிட்டி,  அல்சர்.  இது முத்தினா பெப்டிக் அல்சர். அப்பப்ப கொஞ்சம் போல ரத்தம் கக்குவிங்க தட்ஸால்.

தம்மு, தண்ணி ரெண்டுத்துக்கும் உள்ள ஒற்றுமை என்னன்னா பலான விஷயத்துல கெப்பாசிட்டி , ஆர்வம் குறைஞ்சிட்டே வரும். தண்ணி போடறச்ச நடக்கிற முக்கியமான  மேட்டர் என்னன்னா சிறுமூளை வேலை செய்ய மறுத்துரும். ரிஃப்ளெக்ஸ் ஆக்ட்ஸ்ல வேகம் குறையும். (எந்த நாதாரிப்பயலோ அணைக்காம போட்டசிகரட் துண்டை வெறும் காலோட மிதிச்ச உடனே உதர்ரோமே அதான் ரிஃப்ளெக்ஸ்). கை,காலை கண்ட்ரோல் பண்ற மோட்டார் சிஸ்டம் மந்தமாயிரும்.

ட்ரங்க் அண்ட் ட்ரைவ் கேஸ்ல விபத்து நடக்க இதான் காரணம். ட்ரைவிங்கல முக்கியம் டெசிஷன் மேக்கிங். ரிஃப்ளெக்ஸ்தான். லாலா போட்ட பார்ட்டிக்கு இது ரெண்டுமே மந்தமாயிரும். உசுரு எமனுக்கு சொந்தமாயிரும். நம்ம உசுருக்கெல்லாம் மூலம் ஆதி உயிரான அமீபா. ஒரே செல்.ஒரே உடம்பு.ஒரே உயிர். அந்த அமீபாதான் ஜஸ்டிஸ் பார்ட்டி மாதிரி. அதுல இருந்து பல கட்சிகள் வந்தாப்ல பல்லுயிர் (பல உயிருனு அர்த்தம் .. நீங்க பாட்டுக்கு பல்லுல இருக்கிற பாக்டீரியானு நினைச்சுரப்போறிங்க)

ஓருடல் ஓருயிரா இருந்தப்ப காலம்,தூரம்,இன்செக்யூரிட்டி,கம்யூனிகேஷன் பிரச்சினைகள் இல்லே. நி...........ம்...................ம..........தியா இருந்தோம். பல்லுயிர்,பல்லுடலா பிரிஞ்சப்பறம்தான் காலம்,தூரம்,இன்செக்யூரிட்டி,கம்யூனிகேஷன் பிரச்சினைகள் வந்து தாலியறுக்குது. இதுக்கு காரணம் பிரிஞ்சிகிடக்கிற நம்ம உடல்கள் தான்னு ஒரு ஃபீலிங்க் அடிமனசுல இருக்கு. இந்த உடலை உதிர்த்துட்டா மீண்டும் ஓருடல் ஓருயிரா மாறமுடியுங்கற ஹட்ச் மனித மனங்கள்ள இருக்கு போல.

அதனாலதான் மனிதர்கள் என்னாஆஆஆஆஆ செய்தாலும் அதுக்கு பின்னணி கொலை அ தற்கொலை இச்சைதான்னு சைக்கிரியாட் ரிஸ்டுங்க சொல்ற விதி பச்சக்குனு பொருந்துது. மனிதர்கள் மதுவை விரும்ப இன்னொரு காரணம் அது உடம்பை ப்ளர்ராக்குது. எடைய குறைக்குது (அப்படி ஒரு ஃபீலிங்குதான்.  லாலா,மசாலா போட்டு போட்டு ப்ளட்ஷுகர் வந்துட்டா  நெஜம்மாலுமே பாக்கெட் ட்ரான்ஸிஸ்டர் மாதிரி ஆயிருவம்ணோய் சாக்கிரதை).

விஷம் குடிச்சு தற்கொலை செய்துக்க தில் இல்லாத பார்ட்டிங்க லாலா போட்டு தங்களோட தற்கொலை இச்சைய நிறைவேத்திக்கிறாய்ங்க. (கையோட கையா தங்கள் குடும்பத்தை/ இவிக ட்ரைவிங்ல இருக்கிறச்ச எதிர்க்க வர்ர வாகன ஓட்டி/பாதசாரிய கொல்ற இச்சையையும் நிறைவேத்திக்கிறாங்க) .

இது போதும்னு நினைக்கிறேன். மது மனித மனங்களின் மேல் ஏற்படுத்தும் பாதிப்பை அடுத்த பதிவுல பார்ப்போம்.

ஓகே உடு ஜூட்.