ஹரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில் மண்ணு என்பது பிரபலமான சொலவடை. ஆனால் நான் இன்னும் ஒரு படி மேலே போய் நாத்திகமும் ஆத்திகமும் ஒன்னு என்று அறிவிக்க விரும்புகிறேன்
ஒரு பக்கம் ஆத்தாளே பாத்துப்பான்னு ஆத்திகம் ( சாக்தேயம்) பேசிக்கிட்டு மறுபக்கம் பெரியாருக்கும் ஜால்ரா போட வெட்..கமா யில்லேன்னு நிறைய பேர் கேட்கிறாங்க. ஓஷோ இறைவனை தந்தையா தாயா உருவகிச்சிக்கிறதெல்லாம் இம்மெச்சூர்ட் மைண்ட்ஸுன்னு சொல்றாரு. சைக்காலஜிப்படி பார்த்தா சாக்தேயர்கள் எல்லாம் ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் உள்ளவுக.
ஓஷோவுது ஒரு சூப்பர் கொட்டேஷன் இருக்கு " சரியான ஆளு தப்பான வழில போனாலும் சரியான இடத்துக்கு போய் சேர்ந்துர்ரான் தப்பான ஆளு சரியான வழில போனாலும் தப்பான இடத்துக்கே போய் சேர்ந்துர்ரான்"
ஆத்திகமோ நாத்திகமோ அதுக்குள்ளாற பூந்து புல்லெட் மாதிரி துளைச்சிக்கிட்டு போகனும். அப்பத்தான் அதோட மறுமுனைய அடைய முடியும். நாத்திகத்தோட மறுமுனை ஆத்திகம். ஆத்திகத்தோட மறுமுனை நாத்திகம்.
அதை விட்டுட்டு எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்னு கும்பல்ல கோவிந்தா போட்டுக்கிட்டிருந்தா ஆத்திகன் ஆத்திகத்துலயே நின்னுர்ரான். நாத்திகன் நாத்திகத்துலயே நின்னுர்ரான்.
ஆத்திகம் என்ன சொல்லுது? ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா , மானவ சேவா மாதவ சேவா.
நாத்திகம் என்ன சொல்லுது? எங்கடா இருக்கான் கடவுள்? இல்லாத கடவுளை பத்தி கதைச்சு இருக்கிற மனுஷனை எப்படிய்யா நெக்லெக்ட் பண்ணப்போகும்?
ரெண்டு கொள்கையுமே மனிதனுக்குத்தான் ஐ மீன் சக மனிதனுக்குத்தான் இம்பார்டென்ஸ் தருது. இதுல ரெண்டு கொள்கையிலயுமே ஆரம்ப நிலைல இருக்கிற பார்ட்டி கடவுளை பிடிச்சுக்கிட்டு தொங்குவான். நாத்திகன் இல்லவே இல்லைன்னு சாதிப்பான். ஆத்திகம் எல்லாம் அவன் செயல்னு நிரூபிக்கத்துடிப்பான்.
ஆத்திகமோ , நாத்திகமோ உச்சத்துல இருக்கும்போது ரெண்டும் மனிதனையும், மனிதத்தையும் தூக்கிப்பிடிக்கறதையும் ரெண்டும் ஒன்னாவே காட்சியளிக்கறதையும் அனுபவ பூர்வமா உணர்ந்திருக்கேன்.
எத்தனையோ சாமியாருங்க எங்கயோ இருக்கிற , இருக்குதோ இல்லையோ ருசுவாகாத சாமிய ஞானக்கண்ணால/சில பேரு ஊனக்கண்ணாலயே பார்த்துட்டோம்னு பீலா விட்டு மக்களை முட்டாளடிச்சாங்க.அடிச்சிக்கிட்டிருக்காங்க. /சில பேரு இன்னம் கொஞ்சம் முன்னேறி நான் தான் கடவுள் கேஸாவும் எஸ்டாப்ளிஷ் பண்ணிக்கிட்டாங்க. எங்கயோ ஒரு ராமகிருஷ்ணர் தான் உனக்கும் காட்டறன்னு விவேகானந்தருக்கு காட்டினாரு.
உலகத்துல எத்தனையோ மேதைங்க, ஞானிங்க நாத்திகர்களா வாழ்ந்திருக்காய்ங்க.மூட நம்பிக்கைகளை சாடியிர்க்காய்ங்க. ஆனால் ஒரு பெரியார்தான் ஞானக்கண்ணுக்கே கண்ணாமூச்சி காட்டற சாமிய சாடினாப்ல சாடி சற்றே தள்ளியிரும் பிள்ளாய்னிட்டு ஊனக்கண்ணுக்கு தெரியற ஆசாமிய ஆராதிச்சாரு. அதுலயும் சாமிகளாலும், சாமியார்களாலும், ஆசாமிகளாலும் அலட்சியப்படுத்தப்பட்ட ஆசாமிகளுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிச்சாரு.
என்ன ஆத்திக மகாசனங்க ஒரு நாராயணனுக்கு வெறுமனே சால்ரா போட்டு சொர்கலோக பதவி வாங்கிரலாம்னு கட்சிக்காரங்க மாதிரி ஸ்கெச் பண்ணாய்ங்க. பெரியார் பல கோடி தரித்திர நாராயணர்கள் வாழ்வில் விளக்கேற்றி வச்சார்.
மார்க்ஸோட சித்தாந்தம் உலகத்தின் பெரும்பகுதியை ஆண்டாப்ல பெரியாரோட சித்தாந்தங்கள் உலகத்தை ஆளப்போற காலம் நெருங்கி வந்துக்கிட்டிருக்கு.
வெல்லம் இருக்கிற வரை தான் ஈ மொய்க்கும். தட்சிணை, சம்பாவனை,குருதட்சணை இத்யாதிக்கு வழி இருக்கிற வரைதான் அவாள் ஆத்திகம் பேசுவா.. போலி ஆத்திகம் போபால் விஷ வாயுவா பரவும்.
வரிசையா நாடுகள்ளாம் திவாலாயிட்டு வருது. உலக அளவுல பொருளாதார தேக்கம் பரவிக்கிட்டிருக்கு.
அறைக்குள்ள மாட்டிக்கிட்ட பூனை மாதிரி மக்கள் தவிக்கிறாய்ங்க. ஓட வழியிருக்கிற வரை பல வழிகள்ள பூனை ஓடப்பார்க்கும். அதுல ஆத்திகமும் ஒரு வழி. ஆனா ஆத்திகம்ங்கறது ( இன்னைய தேதிக்கு செலாவணில இருக்கிற) கானல் நீருன்னு தெரிஞ்சுக்கிட்டா பூனை புலியாயிரும். எதிர்த்து தாக்க ஆரம்பிக்கும்.
இத்தனை நாள் நம்மை ஆட்டுமந்தையாக்கி சாமி பேரால ஒரு கூட்டம் ஆட்டைய போட்ட சரித்திரமெல்லாம் தோண்டி எடுக்கப்படும். தூசு தட்டப்படும். அப்பத்தான் தெரியும் கண்ணன் சொன்னதா செலாவணில இருக்கிற கீதைய விட பெரியார் காட்டின பாதை க்ரேட்டுன்னு.
உண்மையான ஆத்திகம் முளை விடனும்னா அதுக்கு ஒரே வழி நாத்திகம் தான். அதுலயும் பெரியார் முன்னெடுத்து சென்ற சமூக பொறுப்பு, தூர திருஷ்டியுடன் கூடிய, மனிதம் மிளிரும் நாத்திகம் தான்.
சனங்க அப்பப்போ என்னை கேட்கிறாய்ங்க. நீ கம்யூனிஸ்டா? பெரியாரிஸ்டா? சோசியலிஸ்டா? நான் எந்த லிஸ்ட்லயும் அடக்கமாயிர விரும்பலை. நான் எல்லா இசத்துலயும் புகுந்து வெளியவர்ர ஹ்யூமேனிஸ்ட்.
மனிதனுக்குள்ள ஒரு மகோன்னத சக்தி ஒளிஞ்சிருக்கு.அதை தட்டியெழுப்பி தீட்டி வெளிக்கொணர மலினப்பட்டுப்போன, பொல்யூட்டட் ஆத்திகம் உதவாத ஒரு நிலை வந்த பிறகு அந்த வேலைய மனிதம் மிளிரும் நாத்திகம் செய்யமிடியும்ங்கற போது நாத்திகம் செழிச்சா என்ன? பூனை கருப்போ வெள்ளையோ எலிய பிடிக்கட்டும்பா.
மனம் மரத்த ,மனிதம் மறந்த ஆத்திகத்தை விட நாத்திகமே உங்கள் சாய்ஸா இருக்கட்டும். உண்மையான ஆத்திகனா வளர நாத்திகம்தான் முதல் படி. என் அனுபவத்தின்படி.