Tuesday, June 1, 2010

பெண் சாமியார் கொலை பீடாதிபதி விரைவில் கைது?

பெண் சாமியார் சாவு பீடாதிபதி விரைவில் கைது?
விசாகா (பட்டினம்)  சிருங்கேரி பீடத்தின் பீடாதிபதி ஸ்வாமி சுவரூபானந்தேந்திரா.
சில வருடங்களுக்கு முன்  இந்த  பீடத்தில் ஒரு சாமியாரிணி சந்தேகத்திற்கிடமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததாகவும் அந்த வழக்கை சாமியார் தமது அரசியல் பின் புலத்தை வைத்து மழுப்பி விட்டதாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு  நிலங்களை ஆக்கிரமித்ததாகவும் பரபரப்பு எழுந்துள்ளது.

தெலுங்கு தனியார்   தொலைக்காட்சி  சேனல்  என். டிவி மற்றும் ஏபிஎன் ஆந்திர ஜோதி சானல்களில் கடந்த  செவ்வாய் கிழமை   காலை முதல் வுக்கு அனுகூலமாகவும், எதிராகவும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன.ஏபிஎன் பற்றி உங்களுக்கு ஓரளவு ஞா இருக்கலாம். (ஆந்திர கவர்னரின் அருவருப்பான ராஸ லீலைகளை ஒளிபரப்பிய சேனல்) .

இதெல்லாம் சானல் யுத்தம் என்று தள்ளிவிட முடியாது. ஸ்வரூபானந்தேந்திரா பரதேசி கிடையாது. நினைத்தால் விமானத்தில் பறக்கக்கூடியவர். இவர் தலைமை வகிக்கும் பீடத்துக்கு நாடெங்கும் கிளைகள் உள்ளன. பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன.

இவரை முன்னாள் தி.தி.தேவஸ்தானம் சேர்மனும்  காங்கிரஸ் எம்பியுமான  டி.சுப்பராமி ரெட்டி ,  இந்நாள் தி.தி.தேவஸ்தானம் சேர்மன் டி.கே ஆதிகேசவுலு ,சித்தூர் மாவட்ட தெலுங்கு தேசம் துணைத்தலைவர் ராவூரி ஈஸ்வர்ராவ்  போன்றவர்கள் உட்பட பல வி ஐ பிக்கள் இவரை தாங்கோ தாங்கு என்று தாங்கி வந்திருக்கிறார்கள்.

குண்டூர், நெல்லூர்,ஏலூர்,மட்டுமல்ல ஹரித்வாரிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்களை ஆக்கிரமித்ததாய் ஹெச்.என்.டிவி பிரதானமாய் குற்றம் சாட்டியது.சாமியார் இளமையில் நரசிம்மன் என்ற பெயரில் ப்ளாக் டிக்கெட் விற்றுவந்தவர் என்றும், ஓட்டை சைக்கிளில் திரிந்துகொண்டிருந்த சாமியாருக்கு இத்தனை சொத்து சுகம் வந்தது எப்படி என்று  பல சாட்சிகள் என். டிவியில் தோன்றி வாக்கு மூலம் அளித்தனர். 

சாமியாருக்கு அரசியலிலும் ஆர்வம் அதிகம். அவரது சீடரான ராவூரி ஈஸ்வர்ராவ் 2004 தேர்தல்களின் போது தான கர்ணனாக அவதாரம் எடுத்து காசு,பணம், ஆட்டோ ட்ரைவர்களுக்கு காக்கி சட்டை என்று வாரி இறைத்தார். தெலுங்கு தேசம் கட்சியில் சித்தூர் எம்.எல்.ஏ டிக்கெட்டுக்கு ஆவேசமாய் முயன்றார். இந்த முயற்சியில் ஒரு பாகமாக ஈஸ்வர்ராவ் தமது யுவ சேனையை துவங்கிய போது மேடையில் தோன்றி ஆசீர்வதித்தவர்தான் இந்த ஸ்வாமி. ஒவ்வொரு முறை இவர் சித்தூர் வரும்போதும் ஈஸ்வர்ராவ் பல லட்சம் ரூபாய்களை செலவழித்து வரவேற்பு அளிப்பது வழக்கம்.
ஆனால் அவருக்கு அந்த தேர்தல்களில் சீட் வரவில்லை. பொருளாதார ரீதியிலும் நொடிந்து போனார்.

சமீபத்தில் சித்தூர் வந்த ஸ்வாமி  ஈஸ்வர்ராவின் அரசியல் எதிரியான டி.கே.ஆதிகேசவுலு வீட்டில் தங்கி ஈஸ்வர்ராவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தார்.இதெல்லாம் சாமியாரின் மனப்போக்கை , சிந்தனை போகும் திசையை குத்து மதிப்பாய் காட்டியிருக்கும் .

ஒரு காலத்தில் சாமியார் அரசு நிலங்களை ஆக்கிரமித்ததாய்  சாமியாரை கிழி கிழி என்று கிழித்த ஏ.பி.என் ஆந்திர ஜோதி சானல் திடீர்  என்று சாமியாருக்கு ஆதரவாய் ஸ்டிங் ஆப்பரேஷனில் இறங்கியது. என்.டிவியை சேர்ந்தவர்களாய் கருதப்படும் சிலர் ஸ்வாமியுடன் நடத்திய டெலிஃபோன் உரையாடல்களை வெளியிட்டது. என்.டிவி சார்பில் துவங்க இருக்கும் பக்தி சானலுக்கு சாமியாரின் உபதேசங்களை ஸ்பான்ஸர்ட் ப்ரோக்ராமாய் ஒளிபரப்ப இவ்ள ஆகும் அவ்ள ஆகும் என்று உரையாடல் போகிறது.

இதையெல்லாம் கூட ஏதோ பங்காளி காய்ச்சல் என்று சமாதானப்படுத்திக்கொள்ளலாம்.ஆனால் ஆந்திர ஜோதி விஸ்வ ஹிந்து பரிசத் தலைவர்களை ஸ்டுடியோவுக்கு வரவழைத்து உட்கார வைத்து இதெல்லாம் அன்னிய மதத்தினரின் சதி - இந்துக்கள் பொறுக்க மாட்டார்கள், பொங்கி எழுவார்கள் என்றெல்லாம் பேசவைத்ததுதான் அதிர்ச்சியை தந்தது.

மொத்தத்தில் சாமியார் என்றாலே வில்லங்கம்தான் போலும்.