Showing posts with label experiences. Show all posts
Showing posts with label experiences. Show all posts

Wednesday, August 24, 2011

அவன் அவள் அது :20


கடந்த பதிவுல ஜகஜ்ஜால புரட்டனான ஒரு ரிப்போர்ட்டரோட மோத வேண்டி வந்தப்போ ஆத்தா எப்படியெல்லாம் ஹெல்ப் பண்ணினாங்கறதை சொல்றதா சொல்லியிருந்தேன். அப்பம் ஸ்டேட்ல சந்திரபாபுவோட உச்சா பெட்ரோலை விட வேகமா எரிஞ்சுக்கிட்டிருந்தது. அடுத்தும் சந்திரபாபு தான் சி.எம்னுட்டு 3 புதுப்பணக்காரவுக காசை தண்ணியா இறைச்சுக்கிட்டிருந்தாய்ங்க. அவிக கிட்ட அதிகமா குளிர்காய்ஞ்சது நிருபருங்கதேன். அவிகளுக்கு (பு.ப) ஸ்டேஷன்லயும் நல்ல வாய்ஸு.

அந்த நேரம் நம்ம தொகுதி எம்.எல்.ஏ ஆளுங்கட்சியோட பழிவாங்கலுக்கு டார்கெட் ஆகி இருந்தாரு. ஆனை படுத்தாலும் குதிரை மட்டம்தானே. இந்த தெலுங்கு தேசம் ஸ்கூலை பத்தி நமக்கு நல்லாவே அனுபவம். தாளி என்.டி.ஆர் ஃபேன் என்ற முறையில என்.டி.ஆர் காலத்துலருந்து உழைச்சிருக்கம்ல. கடேசியா 1999 தேர்தல் வரை ( சந்திரபாபு என்.டி.ஆருக்கு ஆப்படிச்ச பிற்காடும் கூட) தேர்தல் வேலையில எல்லாம் பார்ட்டிசிப்பேட் செய்திருக்கம். அவனுக (ஐ மீன் லோக்கல்) பவிசு நமக்கு நல்லா தெரியும்.

நம்ம எக்ஸ்பார்ட்டி போய் ஒரு ஆளை பிடிக்க நாமளும் அதே கட்சியில இன்னொரு ஆளை பிடிக்க குடுமிப்பிடியாயிரும்னு ஆந்திரபிரபா மேனேஜருக்கு நாம எம்.எல்.ஏ வை பார்க்கலாம்னு சஜஸ்ட் பண்ணேன். அவரு நீயே எதுனா சானலை பிடின்னாரு. ( நாம அவரு 3 தாட்டி ஜெயிச்சு ஹேட்ரிக் அடிச்சப்பல்லாம் அவருக்கு விரோதமாதான் வேலை செய்திருக்கம்)

எந்த சானலை பிடிக்கிற்துன்னு தலையை பிடிச்சுக்கிட்டம். முன்னாள் தி.தி.தே சேர்மன் பூமண கருணாகர் ரெட்டி (இப்பம் ஜகனோட முக்கிய தளபதிகள்ள ஒருத்தரு) ஞா வந்தாரு.

அவருக்கும் நமக்கும் என்ன லின்குன்னு கேப்பிக. சொல்றேன். ஆத்தா ஒவ்வொரு வேலையா செய்தா. வஷக் வஷக்னு ஜெபிச்சதுல ஆராரையோ வசியமாக்கி வச்சுட்டா. நம்மை பத்தி வார்த்தால செய்தி வந்ததை படிச்சுட்டு தன்னோட சர்க்கிள்ள நம்மை ரெம்ப ஸ்லாகிச்சு பேசினதா தகவல்.

அப்பம் நமக்கு ஆ.இ.2000 தவிர வேற வேலையே கிடையாது. உடனே டைரக்டரில அவரோட நெம்பரை பிடிச்சு பேசினம். அவரும் ரெம்பவே ஆர்வம் காட்டினாரா ஃபோன் தொடர்பு அப்படியே கன்டின்யூ ஆயிருச்சு.

நீங்க எங்க எம்.எல்.ஏவுக்கு சொல்லுங்கன்னு கேட்டா நல்லாவா இருக்கும்.அதனால பொதுவா மேட்டரை சொன்னம். அவரு " அவ்ளதானே நான் பாபுவுக்கு (எங்க தொகுதி எம்.எல்.ஏ) ஃபோன் போட்டு சொல்றேன்
நீங்க போயி அவரை பாருங்கன்னுட்டு ஃபோனை வச்சுட்டாரு.

எம்.எல்.ஏவை பொருத்தவரை அவரோட கட்சி பவர்ல இல்லைதான். ஆனால் ஆளுங்கட்சி டுபுக்குங்களை நம்பறதை விட இவரை நம்பினா நம்பினோர் கைவிடப்படார். அவரோட கேரக்டர் இது.

ஒடனே திருப்பதிக்கு ஃபோன் போட்டு மேனேஜர் அண்ட் கோவை வரச்சொன்னேன். ச்சொம்மா பார்த்தோம். அவரு " சி.ஐ கிட்டே போங்க என்னை பார்த்ததா சொல்லுங்க. தேவைப்பட்டா ஃபோன் போடுங்க நானே வர்ரேன்" னாரு அவ்ளதேன். அதுக்குள்ள தகவல் தீயா பரவ.. மறுபடி ஸ்டேஷன்ல இருந்து ஆளு. சுதி இறங்கிப்போயி " ஃப்ரீயா இருக்கிறப்ப ஒரு அஞ்சு நிமிஷம் சி.ஐ சாரை பார்த்துட்டு வந்துருங்க சார்"

நம்மை பேசவிட்டா போறாதோ வாத்தியார் படம் மாதிரி " எங் வகக்கை நானே வாகாடுகிறேன்"னுட்டு கிழிச்சு ஆறப்போட்டுர மாட்டோமா? போட்டுட்டம். சி.ஐ சுஸ்தாயிட்டாரு. நம்ம மேனேஜர் " எக்ஸ் பார்ட்டிய திருப்பதிக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணியாச்சு ஜாயின் பண்றதா இருந்தா பண்ணட்டும் சித்தூர்ல டிஸ்டர்ப் பண்ணா சிவியர் ஆக்சன் எடுப்பம்"னு சி.ஐக்கு சொல்ட்டாரு.

யுத்தம் தானே க்ஷத்திரிய தர்மம். அது முடிஞ்சதுமே நம்ம வேலை ஓவர். வெற்றியை அனுபவிக்க எங்கருந்தோ ஒரு பார்ப்பான் வந்துருவான் தானே. அப்படி திருப்பதி ஏடிவிடி பார்ப்பான் புத்தூர் பார்ப்பான் ஒருத்தனை ஸ்டாஃபரா ரெக்கமண்ட் பண்ண நாம வாய்ல விரல் போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதாயிருச்சு. அது வேற கதை.

நாம மட்டும் தெலுங்கு தேச க்ரூப்ல போய் வாய வச்சிருந்தம் தாளி ஊறப்போட்டே நாறடிச்சிருப்பானுவ.இது நம்ம லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட்.

எம்.எல்.ஏவோட இன்டர் ஆக்ட் ஆக தடையா இருந்தா 15 வருச கம்யூனிகேஷன் கேப் /அல்லது ஒரு தயக்கம் தூளாகிருச்சு. இன்னைக்கு ஜஸ்ட் எம்.எல்.ஏவோட அடிப்பொடிகளுக்காகவே லோக்கல்ல பத்திரிக்கை அதுவும் மல்ட்டிகலர் ந்டத்திக்கிட்டிருக்கம். அதுவும் வெற்றிகரமா.

அடுத்த வாரம் வினாயகர் சதுர்த்தி கம் ரம்ஜான் ஸ்பெஷலும் ரிலீஸ் ஆகப்போகுது. மல்ட்டி கலராக்கி ஒரு வருஷம் கம்ப்ளீட் ஆயிருச்சு. பத்திரிக்கை நடத்தி போன்டியானவுக எத்தீனி பேரு கீறாய்ங்கன்னு உங்களுக்கே தெரியும்.

ஆத்தா மனசு வச்சா பத்திரிக்கை நடத்தி கூட காசு பார்க்கலாமுங்கோ.


Sunday, August 8, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் : ?

இந்த தலைப்புல ஒரு தொடர்பதிவு போட்டுக்கிட்டிருந்தது ஞா இருக்கலாம்னு நினைக்கிறேன். 1986 , 1997 பீரியட்ல இருந்த நாவல்ட்டி இன்னைய தேதிக்கு இல்லிங்கண்ணா. அதனாலதான் இந்த ப்ரேக் எல்லாம்.



ஜஸ்ட் ஒரு ராம நாம ஜெபத்தால நடந்த அற்புதங்களை எடுத்துவிட்டா " சொம்மா பீலா உடற தலை !"ன்னிருவிங்க. ஆனா நடந்தது. ஒரு 3 மாசத்துக்கு முந்தின்னு நினைக்கிறேன் நித்யானந்த பாபாங்கற யோகியோட வா.வரலாறை படிச்சேன்.அதுக்கப்புறம் தான் சிற்சில சர்க்யூட் எல்லாம் வேலை செய்ய ஆரம்பிச்சுது. அதுவரை பேஸ்தடிச்ச மாதிரிதான் இருந்தது.



தமிழ் மணம் தடை பண்ணதுல கொஞ்சம் போல சலனம் . அண்டம்,பிண்டம் ரெண்டுலயும். அதனோட விளைவுதான் வாஸ்துரகசியங்கள் தொடரும், பூர்வ வைபவமும். சரிங்கண்ணா மொக்கை போதும் மேட்டருக்கு வருவம்.



ஏற்கெனவே சொன்னபடி பாபா சத நாமாவளி தொடர்ந்து அச்சிட்டு வினியோகம் நடந்துக்கிட்டே இருக்க நண்பர் ஒருத்தர் கூப்டு ஆளுங்கட்சிக்கு அனுகூலமான பேப்பர் ஒன்னுல ட்ரான்ஸ்லேட்டர் வேணுமாம்பா..தெலுங்கு டு தமிழ். ரெம்ப அர்ஜென்டாம்.. ரெண்டு மணி நேரம் வேலைதான். ஒரு ஆறு ரூ வரை தருவாய்ங்கன்னாரு. நம்ம மென்டாலிட்டிக்கு இன்னொருத்தன் கீழ வேலை பார்க்கறதே சிரமம். அதுலயும் ஒரு நிறுவனத்துலன்னா இன்னம் சிரமம். அதுலயும் ஆ.கட்சி பேப்பர்லாம் சீசனல். பவர் போயிட்டா மார்க்கெட்லருந்து காணாம போயிரும். சரி பார்ப்போம். ரூ 6 ஆயிரம் வருதுன்னா டீ சிகரட் செலவெல்லாம் போய் ரூ 5,400 மிச்சமாகும். கவிதை07 டாட் காம்னு சைட் வச்சுருவம்.ப்ரிண்ட் மீடியால விளம்பரம் பண்ணி தூள் கிளப்புவோம். அப்படியாச்சும் ஆப்பரேஷன் இந்தியாவுக்கு ஒரு விடிவு காலம் வரட்டும்னு நண்பர் கொடுத்த நெம்பருக்கு போட்டேன். அந்த பக்கமிருந்து பாபா காலர் ட்யூன். மேலும் பேசின பார்ட்டி இம்ப்ரெசிவா பேசுச்சு. இன்டர்வ்யூ கூட அட்டெண்ட் பண்ணிட்டு வந்திருக்கன் பார்ப்போம்.



பாபாதான் இப்படின்னுல்ல. இந்த படைப்புல ஆக்சனுக்கு ( ஏலமில்லிங்கோ) ஏத்த ரியாக்சன் நிச்சயமா இருக்கு. அதுலயும் ஜேஜி மேட்டர்லல்லாம் உடனடி லாட்டரிங்கண்ணா.



நாம தான் பட்ட கடனை எகிறடிக்க என்னென்னமோ மாய்மாலம் பண்றோம். ஆனால் தெய்வம் அப்படியில்லே. பட்ட கடன் தீர்க்க ( உங்க சின்சியாரிட்டியை ரெகக்னைஸ் பண்ண) எந்த ரேஞ்சுக்கு வேணம்னா இறங்கும். எந்த ரேஞ்சுக்கு வேணம்னா ஏத்திவிடும்.



பாபான்னா ஏதோ கஞ்சா அடிச்சிக்கிட்டிருந்த பார்ட்டி சனம் தான் யோகியாக்கிட்டாய்ங்கனு ஒரு சிலர் நினைச்சிருப்பாய்ங்க. ஓஷோ எழுதின ஞானத்துக்கு அப்பால் புஸ்தவத்தை நீங்க யாராச்சும் படிச்சிங்களா இல்லையா தெரியலை.



ஞானத்துக்கு அப்பால் என்ன நடக்கும்னு விளக்கற அற்புதமான புஸ்தவம். ஓஷோ நல்ல ஸ்காலர். அவர் ஸ்டடி பண்ணாத சப்ஜெக்டே கிடையாது. ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் மாதிரினு வச்சிக்கங்க. நம்ம பாபா இருக்காரே அவரை பார்த்தா கேல்குலேட்டர் கணக்கா "டொக்கா" இருப்பாரு. இன்னைய தேதிக்கு அவரு பிறந்திருந்தா/இருந்திருந்தா தாளி கவுன்சிலர் கூட கண்டுக்கிட்டிருக்கமாட்டான்.



பாபா சென்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி. சகட்டு மேனிக்கு எக்ஸ்ப்ரஸ், பேசஞ்சர், கூட்ஸுன்னு எல்லா ரயிலும் வரும். ஒரு தாட்டி ஒரு பண்டிதர் வரார். ஞானத்துக்கு அப்பால என்ன ? இதான் கேள்வி.



பாபா " சரிப்பா அதெல்லாம் நிதானமா பேசிக்கலாம். நீ பலான ஆளோட வீட்ல தங்கியிருங்கறார். பண்டிதரும் ஓகே. இவர் தங்க போற வீட்ல ஒரு வேலைக்கார சிறுமி. அவள் கிழிஞ்சு, நைஞ்சி ,சாயம்போன பாவாடை சட்டை அணிஞ்சிருக்கா. இதுல 24 மணி நேரம் ஒரு பாட்டு வேற . எதை பத்தி ? அழகான பட்டுப்பாவாடைய பத்தி.



பண்டிதருக்கு அவளோட நிலையை பார்த்து மனசு உருகிப்போச்சு. தனக்கு தங்க இடம் கொடுத்திருந்த ஆசாமிக்கு சொல்றார் " ஏம்பா பாவம் அந்த சிறுமிக்கு ஒரு பட்டுப்பாவாடை வாங்கி கொடுத்துருப்பா" பட்டுப்பாவாடை ரெடி.



அந்த சிறுமி ப.பா கட்டிக்கிட்டு பாட்டு பாடறாள். அதே பாட்டு. ப.பாவாடையோட அழகை,சரசரப்பை, ஜொலிப்பை வருணிக்கிற பாட்டு. ஆனால் அந்த குரல்ல துள்ளல்,துடிப்பு, குதூகலம், பரமானந்தம்.



மறு நாள் அவள் கிழிஞ்சு, நைஞ்சி ,சாயம்போன பாவாடை சட்டை அணிஞ்சி வேலை செய்துக்கிட்டிருக்கா. அதே பாட்டு. ஆனால் அவள் பட்டுப்பாவாடை அணிஞ்சி பாடினப்ப அவளோட குரல்ல இருந்ததே துள்ளல்,துடிப்பு, குதூகலம், பரமானந்தம்.



பண்டிதருக்கு தான் கேட்டு வந்த கேள்விக்கு பதில் கிடைச்சுருச்சு. உங்களுக்கு கிடைச்சதா? கிடைச்சவங்க போட்டு உடைங்க. கிடைக்காதவுகளும் தெரிஞ்சுக்கட்டும். ஞானத்துக்க் அப்பால் சாதகனோட நிலை என்ன? நாலு வரியில் பதில் கூறவும்.

Wednesday, June 30, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் : 11

கடந்த அத்யாயத்துல இரண்டு சம்பவங்களை சொல்றேன், சொல்றேனு  சொல்லாமயே முடிச்சுட்டன். அதனால இந்த அத்யாயத்துல சொல்லியே உடறேன்.வருஷம் 1998. நாலு பேருங்கற பதிவுல வர்ர வடிவேலு ஷிர்டி பாபா பத்தி சகட்டு மேனிக்கு பீலா விட நான் தரேண்டா பாபாவுக்கு அப்பாயிண்ட் மென்டுன்னு சவால் விட்டு ஷிர்டி போய் வந்த பிறகு நடந்த சம்பவம் இது. அவனோட  பழைய கடைதான் (சலூன்) என் ஆஃபீஸா இருந்தது.

ஒரு பக்கம் சலூன் சாமானுக இருக்க மறுபக்கம் ஜோசியம் சொன்ன ஒரே பார்ட்டி நான் தானு நினைக்கிறேன். இன்னுமொரு ஹிஸ்டரி ரிக்கார்ட் என்னன்னா கோழிக்கறிகடைல  கூட ஆஃபீஸ் போட்டிருக்கேன் ( ஆனா இது சென்னைல  3மாசத்துக்கொருதரம்  ரெண்டு மூணு நாளைக்குத்தான்)

தமிழ் பட விமர்சினங்கள்ள தவறாம இடம் பெற கூடிய வார்த்தை ஸ்டீரியோ டைப். என் ஆன்மீக பயணமும் ஸ்டீரியோ டைப்தான். ஒவ்வொரு கட்டத்துல ஒவ்வொரு சாமி/ஒவ்வொரு குரு. ஏதோ ஒரு புஸ்தவம் படிச்சோ அ சினிமா பார்த்தோ இன்ஸ்பைர் ஆக வேண்டியது. உடனே மேலதிக விவரங்களை பீராய வேண்டியது, பாட்டு கீட்டு இருந்தால் கேசட் வாங்க வேண்டியது. 

இந்த ப்ராசஸ்ல கிடைச்ச புளங்காகிதம், மயிர் கூச்செறிதல் எல்லாம் சில மாதங்கள் அ வருஷங்கள்ள தேசலாயிர்ரது வழக்கம். சில காலம் கழிச்சு மேற்படி ஞாபங்கள் தேவகுமாரான உயிர்த்தெழுவது வழக்கம். இந்த ஸ்டீரியோல ஒரு அம்சமா ஷிர்டி சாயி மஹத்யம் பட ஆடியோ கேசட் வாங்கினேன். ( படமே பார்த்திருக்கேன். ஆனால் அப்ப எந்த ஃபீலிங்கும் வரலைங்கறது ஆச்சரியம். )

சரி சரி மேட்டருக்கு வரேன். மேற்படி சலூன் கம் ஆஃபீஸ் நான் இருந்தாலும், இல்லன்னாலும் திறந்தே கிடக்கும். அப்படி ஒரு சந்தர்ப்பத்துல வடிவேலு மேற்படி பாபா கேசட்டை சுட்டுட்டான் போல. நானும் சில நாள் தேடி தேடி விட்டுட்டன்.

இத்தனைக்கும் வடிவேலு ஒன்னும் ஷேவிங்குக்க பார்ட்டி வந்தபிறகு அவங்க கிட்டே ஷேவிங் காசு வாங்கி ப்ளேடு வாங்கியார்ர நிலைல இல்ல. இன்னம் சொல்லப்போனால் சொந்த வீடு, நகை நட்டுன்னு வசதியான ஆளுதான்.  இருந்தாலும் அல்பமான வேலையெல்லாம் செய்வான். நானும் அல்பம் தான். ஆனால் நாலு பேருக்கு நல்லது கெட்டது சொல்ற நிலைல இருக்கிறதால " தத் விடு"ன்னு  விட்டுர்ரது வழக்கம்.

ஒரு நாள் என் கேசட் அவன் கடைல பாடிக்கிட்டிருந்தது. நானு ஒன்னம் தெரியாத பப்பா மாதிரி " நானும் வாங்கி வச்சிருந்தேம்பா ஏதோ ஒரு நாதாரி தூக்கினு பூட்டுக்கீது.. உன்னுதை கொடுப்பா ஒரு ராத்திரி பாபா கிட்ட பேசிட்டு கொடுத்துர்ரன்"ன்னேன். அப்பயாச்சும் ரியலைஸ் ஆகி "சாமி இது உன்னுத்தான்"னு சொல்லியிருக்கலாம்.சொல்லலை. நானும் சின்சியரா வாங்கிட்டு போய் மறு நாள் ரிட்டர் பண்ணிட்டன். அப்பயும் ஏதாச்சும் சினிமா காட்டி " தா சாமி இது உந்துதான் சாமீ.. அது கூட தெரியல உனக்கு ..ஹும் எல்லாம் வசதிதான் காரணம்னு " டயலாக் விட்டு சமாளிச்சிருக்கலாம். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இங்கே ஒரு தத்துவம். கெட்டவனை கெ(ப)ட்டுப்போக செய்யனும்னா அந்த கெட்டவனுக்கு நல்லதையே பண்ணிக்கிட்டிருக்கனும். அப்ப ஆண்டவன் கெட்டவனுக்கு கெட்டவனாயிர்ராரு

வடிவேலுவுக்கும் அவன் அண்ணனுக்கும் எப்பவும் வெட்டுப்பழி குத்துப்பழி. இவன் டீன் ஏஜ் போதைல திரிஞ்சிக்கிட்டிருந்தப்பயே அவங்கண்ணன் பண்டரியோட (போலி டாக்டர்+ லேப் டெக்னிஷியன்) கைய கால பிடிச்சு ஜி.ஹெச் ல வார்ட் பாயா சேர்ந்துட்டான். வீட்டை கட்டிக்கிட்டான். செட்டிலாயிட்டான். வட்டிக்கு திருப்பற ரேஞ்சுக்கு போயிட்டான். பார்க்க பஞ்சை பராரி மாதிரி விபூதி பட்டையும், பெரிய குங்கும பொட்டுமா வைட் அண்ட் வைட்ல  இருப்பான்.

நம்மாளுக்கு போறாது. டீன் ஏஜ் மயக்கத்துலருந்து மீண்டு வந்து கடைய தூக்கி நிறுத்தி கண்ணாலம் கட்டி ரெண்டை பெத்து போடறதுக்குள்ள பெண்டாட்டி இவன் வெத்துவேட்டுனு முடிவுபண்ணியாச்சு.இவனும் வெள்ளைக்கொடிய காட்டி சரண்டர் ஆஃப் இண்டியா. வீட்ல மதுரைதான்.

இந்த மாதிரி அண்ணன் தம்பிக்குள்ள எவனாச்சும் ஒருத்தன் டம்மி பீஸாயிருந்து,  அவன் பெண்டாட்டிக்கு பிரமணை ( சட்டிப்பானைகள் உருளாம இருக்க ஓலைலயோ, தாம்பு கயிற்று புரிகள்ளயோ ரிங் சைஸுக்கு சுத்தியிருப்பாங்க)  தூக்கிட்டு அலையற பார்ட்டியா இருந்தா அண்ணன் தம்பிக்குள்ள நிச்சயம் தகராறு வரும்.வந்துகிட்டே இருக்கும்.

இதுமாதிரி சந்தர்ப்பத்துல நம்மாளு நாலு பேர் பதிவுல வர்ர பண்டரி + பெரிய மனுசனையெல்லாம் கூட்டிக்கிட்டு போய் எதிர்வீட்டு திண்ணைல உட்கார வச்சுட்டான். பஞ்சாயத்துக்கு அண்ணனை கூப்டாங்க.அவனும்  வந்தான்.  நம்மாளுக்கு
பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்குதான் . இருந்தாலும் பஞ்சாயத்து பெரியமன்சன் எல்லாம் நம்மாளுதானேங்கற நெனப்புல அண்ணன் காரன் மூக்குல கப்புனு குத்திட்டான். குப்புனு ரத்தம் வந்திருச்சு. அவன் போட்டிருந்த வெள்ளை  கை பனியன், வேட்டி மொத்தம் ரத்தத்துல நனைஞ்சுருச்சு.

பஞ்சாயத்து பெரிய மன்சனெல்லாம் காணாம போயிட்டாய்ங்க. அண்ணன் காரன் நீட்டா ஜி.ஹெச் போய் அட்மிட் ஆகி போலீஸ்ல கேஸ் கொடுத்துட்டான். போலீஸ் ஸ்டேஷனே என் பாக்கெட்லன்னு சிலும்பின வடிவேலுவை ஸ்டேஷன்ல உட்கார வச்சுட்டாய்ங்க. அப்புறம் நானும் இன்னும் ரெண்டு ஃப்ரெண்ட்ஸும் போய் எக்ஸ்  பார்ட்டியையும், சப் இன்ஸ்பெக்டரையும் கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வந்தோம்.


இதென்ன அம்புலிமாமா கதை மாதிரி இருக்குன்னு நினைப்பிங்க. ஆனால் உண்மையில நடந்தது ராசா.  வடிவேலுக்காச்சும் அரை நாள் காவல். இன்னொரு பார்ட்டிக்கு?

1999 கையில இருந்த லட்சத்து ரெண்டாயிரமும் டம்ப் ஆகி மறுபடி ப்ரெட் ஹண்டர் அவதாரம் எடுத்த புதுசு. ஒவ்வொரு ஊர்லயும் பத்திரிக்கை வச்சு பொழப்ப நடத்தற க்ரூப் ஒன்னு இருக்கும். பத்திரிக்கை பதிவாளர் (www.rni.nic.in) வலைதளத்துல போய் பார்த்திங்கன்னா உங்க ஊர்லருந்து எத்தனை பத்திரிக்கை ரெஜிஸ்டர் ஆயிருக்குனு தெரிஞ்சிக்கலாம். ஆனால் இதுல வெளிவர்ரதென்னவோ அஞ்சுலருந்து பத்துக்குள்ள மேஜர் பத்திரிக்கைகள் மட்டும் தான். மற்றதெல்லாம் பதிவாகியிருக்கும். சில பல மொள்ளமாரி வேலைகளோட ரென்யூவல் ஆயிட்டிருக்கும். இவிக அரசு துறைகள்ள குழையடிச்சு விளம்பரம் வாங்கி விளம்பரம் கிடைச்சப்ப மட்டும் பத்து காப்பி போட்டு கணக்கு பண்ணி வயித்த கழுவிக்கிட்டிருப்பாய்ங்க .அல்லது ஓசி பஸ் பாஸோட திருப்திபடுவாய்ங்க.

(ரென்யூவலுக்கு இவிக பண்ற டுபாகூர் வேலைய சொல்லனும்னா தனிப்பதிவே போடனும்)

இந்த மாதிரி டுபுக்கு க்ரூப் மூலமா ஒரு பார்ட்டி இன்ட் ரட்யூஸ் ஆனான். ஷிர்டி பாபா பத்தின பாட்டுகளை  (ஆடியோ) வெளியிட போறதாவும்.. பாட்டு எழுதிக்கொடுக்கும்படியும் கேட்டான்.

நாமதான் ஆசுகவியாச்சே. உடனடி லாட்டரி மாதிரி அவன் கூப்ட லாட்ஜுக்கு போய் அவன் கேட்ட மாதிரியே பரபரனு (சுந்தர தெலுங்குங்கண்ணா) எழுதிக்கொடுத்தேன். உத்தமா பத்தினி மாதிரி அதை ஜெராக்ஸ் எடுக்கச்சொல்லி ஜெராக்ஸ் பிரதில கை.எ வேற போட்டுக்கொடுத்தான்.

மொத்தமா என்ன எழுதினேனு ஞா இல்லை. ஆனா ஒரே ஒரு வரி மட்டும் நல்லா ஞா இருக்கு.

"செட்டவாடனு கானயா செடின வாடனு நேனய்யா"

கெட்டவன் இல்லே கெட்டுப்போனவன்..னு அர்த்தம். பை பர்த் கெட்டவன்னா திருத்தவே முடியாது. கெட்டுப்போனவன்னா டபுள் மீனிங் வரும்.கெட்டுப்போனவனு ஒரு அர்த்தம். நலிஞ்சு போனவனு இன்னொர் அர்த்தம். நடுவுல கெட்டுப்போனவன் திருந்த வாய்ப்பிருக்கும். இப்படி நிறைய விளையாடி எழுதிக்கொடுத்தேன்.

அந்த நாதாரி என்ன பண்ணுச்சுன்னா நான் இல்லாதப்ப வீட்டுக்கு வந்து தான் கை.எ போட்டுக்கொடுத்த ஜெராக்ஸ் பிரதியை என் மனைவிய வாயடிச்சு பிக் அப் பண்ணிக்கிட்டு போயிருச்சு. அந்த நாள் முதல் இந்த நாள் வரை பிச்சை எடுத்துக்கிட்டே இருக்கு. உசுரோட இருக்கா இல்லையானு கூட தெரியாது. தெரிஞ்ச முகமா  யார்  தெரிஞ்சாலும் " இஃப் யு டோண்ட் மைண்ட் ஒரு டென் ருப்பீஸ் இருக்குமா?" கேஸு.

அப்பாறமா தான் தெரிஞ்சது அந்த பன்னாடையோட வைஃப் என் கிளாஸ் மெட்டுன்னு . இப்ப சொல்லுங்க பாபா பவர் ஃபுல்லா இல்லையா? பாபா பவரை புரிஞ்சிக்கனும்னா பா பா ப்ளாக் ஷீப் ஹேவ் யு எனி உல்லுனு ரைம்ஸ் பாடற ரேஞ்சுக்கு நீங்க குழந்தை தன்மையோட இருக்கனும். அப்பத்தான் அவரோட பவரை உணர முடியும்.

நேத்து  பதிவுல நான் குறிப்பிட்ட நித்யானந்த பாபா கூட சொல்வாராம் "குருவை சுதந்திரமா செயல்பட விடனும். அதுக்கு சம்பூரண சரணாகதிதான் மார்கம்"

Friday, June 25, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 8

கடந்த அத்யாயத்தில் பாபா வியாழக்கிழமைகளில் பிரச்சினைல  உள்ள  தன் பக்தர்களை எனக்கு எண்டார்ஸ் செய்துவந்தார் என்றும் கடைசியில் தன் பக்தரான எங்க ஊரு எம்.எல்.ஏ சி.கே பாபுவுக்கு உதவும்படி  தொடர்ந்து என்னில் எண்ண அலைகளை தோற்றுவித்தார் என்றும் சொல்லியிருந்தேன்.

இந்த சூழல் 2003ல ஏற்படுதுன்னா 1997லயே அவரோட உருவத்தை தன் படத்துல நிழலாட வைச்சாருன்னும் சொல்லியிருந்தேன். எம்.எல்.ஏவுக்கு என்ன பிரச்சினை? ஒரு பொறியியல் கல்லூரி மாணவரோட கொலைல இவரை முத குற்றவாளியா சேர்த்திருந்தாய்ங்க. அந்த மாணவரோ தாய் தெலுங்கு தேசம் மகளிரணி தலைவி. இன்னம் கேட்கனுமா? கையோட கையா எம்.எல்.ஏ வை  கைது பண்ணி சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்னு கடப்பா மத்திய சிறைக்கு கொண்டு போயிட்டாய்ங்க.

கொலையான இளைஞரோட பிணத்தை ஆளுங்கட்சிக்காரங்க ஒரு வேன்ல வச்சு மூணு மந்திரிங்க புடை சூழ தெருத்தெருவா ஊர்வலமா கொண்டு போனாய்ங்க.

இந்த பதிவுல வழக்குக்குள்ள போக நான் விரும்பலை. இந்த வழக்குக்கு மூலமே இவரு காங்கிரஸ்காரரா இருந்து  மூணு தரம் தொடர்ந்து எம்.எல்.ஏ ஆனவருங்கறதுதான். இவரு இருக்கிற வரை தொகுதில  தெ.தேசம் பேர் சொல்லமுடியாதுங்கற ஆளும்கட்சியோட பயம்தான் இந்த வழக்குக்கே மூலம். ஆனால் எம்.எல்.ஏ தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை சாதாரண கிரிமினல் வழக்கா நடத்திக்கிட்டிருந்தாரு. காங்கிரஸ் கட்சி உடனடியா இவரை கட்சிலருந்து நீக்கிருச்சு.

இந்த மாதிரி சூழல்ல ஒரு சாதாரண குடிமகனுக்கு கிடைக்க கூடிய உரிமைகள், பாதுகாப்பு கூட அவருக்கு கிடைக்கலை. இதையெல்லாம் லாயர் பாயிண்ட் அவுட்
பண்றாப்லயே இல்லை. உடனே நான் எனக்கு தோணின பாயிண்ட்ஸையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணி லாயருக்கு கூரியர் மூலமா லெட்டர் அனுப்பினேன். அவரு அதை ரெஃப்யூஸ் பண்ணிட்டாரு. என்னங்கடா இது இம்சைன்னு ஆர்டினரி போஸ்ட்ல அனுப்பிட்டு கடப்பா ஜெயிலுக்கு ஒரு லெட்டர் போட்டு லாயருக்கு போட்ட  கடித விவரத்தை தெரிவிச்சுட்டன். என் கடிதத்துல நான் தெரிவிச்சிருந்த சில பல யோசனைகள் உடனே அமல்படுத்தப்பட்டதுதான் அதிசயம்.

எங்க எம்.எல்.ஏ சிறைல இருந்த நேரம் கடப்பா சிறைல கட்டப்பட்டுக்கிட்டிருந்த ஷீரடி  பாபா கோவிலுக்கு உடலுழைப்பை நல்கி வந்தது உபரி தகவல்.

கண்ணை மூடி கண்ணை திறக்கறதுக்குள்ள தேர்தல் (2004)வந்துருச்சி. ( இது ஆன்மீக தொடர்ங்கறதால அரசியலுக்குள்ள ஆழமா போகவேணாம்ணே) தெலுங்கு தேச அரசை வீட்டுக்கு அனுப்புங்கன்னு 10 ஆயிரம் பாம்லெட் போட்டு  நானே டிஸ்ட் ரிப்யூட் பண்ணேன்.  எங்க எம்.எல்.ஏ வாழ்க்கைல முதல் முறையா சொற்ப வாக்குகள் வித்யாசத்துல வெற்றி வாய்ப்பை இழந்தாரு. ஆனால் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டி இடங்களை பிடிச்சு ஆட்சிக்கு வந்தது. ஒய்.எஸ்.ஆர் முதல்வரானாரு. ஆறுமாசத்துல நகராட்சி தேர்தல் வந்தது . எம்.எல்.ஏ கட்சியோட தொகுதி  பொறுப்பாளரா  கோதாவுல இறங்கினாரு. எதிர்கட்சிக்கு சிங்கிள் டிஜிட். 2009 தேர்தல்ல
நாலாவது முறையா ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆனாரு. அவரு நாலாவது முறையா எம்.எல்.ஏ ஆன அக்கேஷனை வச்சுத்தான் ஷீர்டி பாபா சத நாமாவளி பாக்கெட் சைஸ் புக்ஸ் ஒரு லட்சம் பிரதி அச்சிட்டுக்கிட்டிருக்கேன்.


இந்த 6 வருசத்துல பாபாவுக்கும் நமக்கும் இடையில என்ன நடந்ததுன்னு அடுத்த பதிவுல பார்க்கலாம்.

Tuesday, June 22, 2010

"பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் :8 "

பாபாவோட சரித்திரத்துக்கு உள்ள பவர் என்னன்னு (பாசிட்டிவ், நெகட்டிவ்) கடந்த பதிவுல பார்த்தோம். பாபா  என் மேல நம்பிக்கை வச்சு தன் பக்தர்களை எனக்கு எண்டார்ஸ் பண்ண கூத்தை இந்த அத்யாயத்துல பார்க்கலாம்.  தொழில் முறை  ஜோதிடன்னு  பெருமையா சொல்லிக்கிட்டாலும்  நம்ம ஆஃபீஸ்ல கூட்டம் ஒன்னும்  நெறியாது. ஒரு க்ரூப் வெளிய போய் இன்னொரு க்ரூப் வர்ரதுக்குள்ள டீக்கடைல டீ,தம்மு, சாக்ரடீஸ் மாதிரி பேச்சு. மறுபடி வந்து உட்கார்ந்தா தான் செகண்ட் இன்னிங்ஸ். சில சமயம் லஞ்ச் அவரே வந்துரும். மதியம் தூக்கம். மறுபடி சாயந்திரம்தான் பிராக்டீஸு. மத்த சோசியருங்களுக்கு பணம் வர்ர நேரம் வந்துட்டா க்ளையண்ட்ஸ் வந்துருவாய்ங்க. நம்ம கேஸ்ல க்ளையண்டுக்கு பிரச்சினை தீர்ர நேரம் வந்தாதான் நம்ம கிட்ட வருவாய்ங்க.

எனக்கு  என்னவோ சீரியசா, சைண்டிஃபிக்கா கணக்கு போட்டு பலன் சொல்றதாத்தான் நினைப்பு. ஆனால் வர்ரவங்க  ஆத்தா கனவுல சொன்னா. அவள் சொன்னதை நீங்க அப்படியே சொல்றிங்க. நேத்து என் கனவுல முகமெல்லாம் சேப்பா சாயம் பூசிக்கிட்டு சின்னப்பையன் வந்தான். (பால ஆஞ்சனேயர்?) - இப்படி என்னென்னமோ சென்டிமென்ட்
வசனமெல்லாம்   சொல்வாய்ங்க. நான் கடந்த காலத்தை சொல்ல அதை அவிக ஆமொதிக்கறச்ச எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கும் (த பார்ரா சோசியத்துல இவ்ளோ விசயம் கீதான்னு).

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா என்னைத்தேடிவர்ரவங்க போர்டை பார்த்து வர்ரதோ, குருட்டுத்தனமா வர்ரதோல்லாம் நடக்காது. எதோ ஒரு சக்தி அவிகளை தள்ளி விட்டாத்தான் வரமுடியும்.

நான் ஷீர்டி போய் வந்த பொறவு ஒவ்வொரு வியாழக்கிழமையும் யாரோ ஒரு பாபா பக்தர் என்னை என் ஆஃபீசுக்கு வர்ரதும் தீர்வோட திரும்பி போறதும் நடக்க ஆரம்பிச்சது.

நான் என்னவோ பாபாவுக்கும் எனக்கும் 1998 ஜனவரிக்கு மேலத்தான் தொடர்பு ஏற்பட்டதா நினைச்சு எழுத  ஆரம்பிச்சேன். ஆனால் 1997லயே இந்த லிங்க் ஆரம்பிச்சத இப்பத்தான் கெஸ் பண்ண முடியுது.  மினி வேன் நிறைய சாமான்களோட பாகாலா போன நான் ரெண்டு மூட்டை சாமான் , பாய் சுருட்டலோட சித்தூர் வந்தேன். அப்போ நான் ஏறக்குறைய வெளியூர் காரன் கணக்கு. அப்போ ஒரு கமர்ஷியல் ஆர்டிஸ்ட் அறிமுகமானான். பேரு புஷ்பா . சுமாரான ஆர்டிஸ்டுதான். ஆனால் பாபா படம் வரையறதுல ஸ்பெஷலிஸ்ட்னு பேரு.

அப்போ ஆஃபீஸ் போடற அளவுக்கு வசதியெல்லாம் கிடையாது (சோத்துக்கே லாட்டரி) . அதனால புஷ்பாவோட கடைலயே ஒரு பக்கமா சோசியம் சொல்லிக்கறாப்ல அரேஞ்ஜ்மென்ட். 

அந்த சமயம் ராஜரிஷிங்கற பத்திரிக்கைல நான் எழுதின  தொடர் கட்டுரை வெளிவந்திருந்தது. அதையெல்லாம் மென்ஷன் பண்ணி தமிழ் தெலுங்குல ஆயில் பெயிண்ட்ல போர்டெல்லாம் எழுதி நல்லா தான் ஆரம்பிச்சது.

எங்க ஊரு எம்.எல்.ஏ சி.கே பாபு ஷிர்டி பாபாவுக்கு கட்டமஞ்சில ஒரு கோவில் கட்டியிருந்தாரு. கட்டின புதுசுல  அந்த கோவில் வெளிப்புற சுவத்துல பாபா படத்தை புஷ்பா தான் வரைஞ்சிருந்தானாம். அதுக்கப்புறம்தான் தொழில் சூடுபிடிச்சதுன்னு அப்பப்ப சொல்வான். தன் பையனுக்கு கூட சாயின்னு பேரு வச்சிருந்தான்.அவ்ளோ பக்தி(?)

சாலை அகலப்படுத்தல் காரணமா மேற்படி கோவிலோட சுவரு இடிக்கப்பட்டுருச்சு.
மேப்பிங்கை உள்ளாற தள்ளி சுவர் கட்டி முடிச்சு பாபா படம் போடறதுக்காக இவனுக்கு ஆள் வந்தது. இவன் லாலா பார்ட்டியாகி பகல்ல தண்ணி போட்டு மதியத்துல தூங்க வீட்டுக்குப்போக ஆரம்பிச்ச  புதுசு. டைம் கீப் அப் பண்ண முடியாம தவிச்சிட்டிருந்தான். நான் அப்பப்போ ஞா படுத்திக்கிட்டே இருந்தேன்.

பார்ட்டி அசையற மாதிரி காணோம். யாரோ வந்து சொன்னாய்ங்க. வேற ஒரு ஆர்ட்டிஸ்ட் கமிட் ஆயிட்டான். க்ராஃப் எல்லாம் போட்டாச்சு. குழாயடில ஒரு குடத்துல தண்ணி குதிச்சிக்கிட்டிருக்கிற நேரம் இன்னொருத்தி வந்து அதை இடிச்சு கீழ தள்ளிட்டு தன் குடத்தை வைப்பாளே அது மாதிரி புஷ்பா புறப்பட்டு போய் நான் தான் வரைவேன்னு வாதம் பண்ணி, அழுது,ஆர்பாட்டம் பண்ணி வ்ரைய ஆரம்பிச்சான்.

நான் ரொம்பவே ரேஷ்னலா திங்க் பண்ணி "த பாரு அப்போ உனக்கு நல்ல நேரம் துவங்கியிருக்கும். அந்த  நேரம் பார்த்து பாபா படம் வரைய வாய்ப்பு வந்திருக்கும். உன் நல்ல நேரம் காரணமா தொழில் சூடு பிடிச்சிருக்கும். நீ பாபா படம் போட்டதாலதான் சூடு பிடிச்சதுன்னு நினைச்சிக்கிட்டிருக்கே. உன் எண்ணம் தப்பு.  அந்த ஆஃபர் உனக்குத்தான் முதல்ல வந்தது. நீ நெக்லெக்ட் பண்ணே. இப்போ எவனோ கமிட் ஆகி க்ராஃப் எல்லாம் போட்டுட்டான். இப்ப போயி நீ பூர்ரது  நல்லதில்லை. இதை உன் பாபா கூட சப்போர்ட் பண்ண மாட்டாரு"ன்னு சொன்னேன். பார்ட்டி கேட்டுக்கற மாதிரி இல்லை.

அலைஞ்சு பறை சாற்றி சாதிச்சான். சின்ன வயசுல எங்கம்மா கத்துக் கொடுத்தாய்ங்க."சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்"னு. நான் ஒன்னும் ஓவியன் கிடையாதுதான். ஆனால் ஒரு ஆர்ட்டை பார்த்ததுமே அதை வரைஞ்சவன் கத்துக்குட்டியா, கலைக்குட்டியான்னு சொல்லிருவன். இதுல புஷ்பா வரையறப்பல்லாம் பார்த்து பார்த்து  அவன் ஹேங்  ஓவர்லயோ,குடிக்க போற அவசரத்துலயோ ஏதாச்சும் தப்பு பண்ணிட்டா இதம்பதமா சொல்லி திருத்தற ரேஞ்சுக்கு வந்திருந்தேன்.  ஓரளவு கலர் சென்ஸ்,  கலரிங்கை வச்சு மேடு பள்ளம் காட்டறது,  எங்கே வெளிச்சம் வரனும் , எங்கே இருட்டு வரணும் இத்யாதி குன்செல்லாம் கத்திருந்தேன்.

இவன் உச்சி வெயில்ல சாரத்து மேல ஏறி வரைய ஆரம்பிச்சான். நான் டப்பா பிடிச்சிக்கிட்டிருந்தேன். (பெயிண்ட் டப்பாங்கண்ணா)  நான் என்னதான் முன் ஜாக்கிரதை முத்தண்ணா கணக்கா உஷார் படுத்திக்கிட்டே இருந்தாலும்  எம்.எல்.ஏ தன்னோட பூஜை அறைல வச்சிருக்கிற ஃபோட்டோவை மாடலுக்கு கொடுத்திருந்தும்  புஷ்பா சொதப்பித்தள்ளிட்டான். விதியில்லாம ஃபோட்டோவ என் கிட்ட கொடுத்து எங்க தப்பாயிருச்சு பாரு சாமீன்னான்.  இங்கன இருந்து பார்த்தா ஒன்னும் சொல்ல முடியாது. நான் கீழே போயி பார்க்கிறேன்னு ஃபோட்டோவோட இறங்கி வந்தேன்.

கையில பாபாவோட ஸ்டீல்  ஃப்ரேம் போட்ட படம். சுவத்துல புஷ்பா சொதப்பிட்ட படம்.  ரெண்டையும் பொறுமையா மேச் பண்ணி  பார்த்து பாயிண்ட்ஸ் நோட் பண்ணிக்கிட்டிருக்கேன். கையில இருக்கிற  பாபா படத்து மேல எம்.எல்.ஏ சாரோட உருவம் நிழலாடுது. நான் என்.டி.ஆர் ஃபேன். அவரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. எல்லா எலக்சன்லயும் அவருக்கு விரோதமா வேலை செய்திருக்கேன். அவரைபத்தி எத்தனையோ கதைகள். கற்பனைகள் செலாவணில இருக்கு. முதுகெலும்புக்குள்ள காத்து புகுந்தாப்ல ஒரு ஃபீலிங். இருந்தாலும் " அதை " சட்டை பண்ணிக்காம புஷ்பாவுக்கு கரெக்ஷன்ஸ் சொல்லிக்கிட்டிருந்தேன். எம்.எல்.ஏ சார் " தா ஒரு நிமிஷம் படத்தை கொடுப்பா" ன்னாரு. நான் அப்பத்தான் அவரை பார்த்தாப்ல சீன் போட்டு படத்தை கொடுத்தேன். ஒரு நிமிஷம் ரெண்டையும் பார்த்துட்டு ஃபோட்டோவ திருப்பி கொடுத்துட்டு போய்ட்டாரு.

பாபா அன்னைக்கே எங்க எம்.எல்.ஏவுக்கும் எனக்கும் ஒரு முடிச்சு போட்டுட்டாருன்னு நினைக்கிறேன்.  அந்த முடிச்சோட விளைவு தான் கடந்த வியாழக்கிழமை சி.கே பாபுவோட ஆதரவாளர்களோட ஸ்பான்சர்ஷிப்ல  நான் அச்சிட்ட  ஷிர்டி பாபாவோட சத நாமாவளி பாக்கெட் சைஸ் புத்தகத்தை சி.கே ரிலீஸ் பண்ணாருன்னு நினைக்கிறேன்.


பாபா அன்னைக்கு முடிச்சு போட்டது உண்மை இல்லேன்னா சந்திரபாபு ஏன் என்.டி.ஆருக்கு ஆப்பு வைக்கனும். என்.டி.ஆர் ஏன் சாகனும்? என் ஐடியல் ஹி யான என்.டி.ஆரை கொன்ன  சந்திரபாபுவ பழி வாங்கற உத்தேசத்துல அவரை வில்லங்கத்துல சிக்க வைக்கவே  நான் ஏன் அண்ணாருக்கு  ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை அனுப்பி வைக்கனும். அவரோட பி.ஏக்கள் ஏன் அதை குண்டி கீழ போட்டு சூடுபடுத்திக்கிட்டே 3 வருஷம் கழிக்கனும்.  நான் ஏன் அவரை தினசரிகள்ளயும், லோக்கல் டிவிலயும்  கிழி கிழின்னு கிழிக்கனும்.

மெல்ல மெல்ல எனக்குள்ள இருந்த காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வுகள் மங்கி ஒய்.எஸ்.ஆர்ல என்.டி.ஆரை பார்க்கிற ரேஞ்சுக்கு நான் ஏன் வரணும்?  2004 தேர்தல்லயாவது தெ.தேசத்தை வீட்டுக்கு அனுப்புங்கன்னு பாம்லெட் போட்டு சி.கே.பாப்வை இன்டைரக்டா சப்போர்ட் பண்ணேன். ஆனால் 2009 எலக்சன்ல அதிரடியா களம் இறங்கி தொகுதி மொத்தம் சுத்தி வந்து பிரச்சாரம் செய்தேன். இதெல்லாம் பாபாவோட திருவிளையாடல்தான்னு நான்  நினைக்கிறேன். இதையெல்லாம் பாபா ஒரு  குன்ஸா  சொல்ல முயற்சி பண்ணியிருக்காரு. நான் தான் அதை கரெக்டா டீ கோட் பண்ணிக்கல போல.

நான் ஷீர்டி போய் வந்த பொறவு ஒவ்வொரு வியாழக்கிழமையும் யாரோ ஒரு பாபா பக்தர் என்னை என் ஆஃபீசுக்கு வர்ரதும் தீர்வோட திரும்பி போறதும் நடக்க ஆரம்பிச்சது. அதாவது பாபா தன் பக்தர்களை எனக்கு என்டார்ஸ் பண்ண ஆரம்பிச்சாருன்னு சொல்ல ஆரம்பிச்சு ஒரு வருஷம் முன்னாடி போய் பாபா படத்துல எம்.எல்.ஏ உருவம் நிழலாடின சம்பவத்தையும் 2004,2009 தேர்தல்கள்ள அவருக்கு ஆதரவா பிரச்சாரம் செய்ததையும் சொன்னேன்.  சி.கேவும் பாபாவோட பக்தர்தான். திடீர்னு அவரை ஒரு கொலைவழக்குல தொடர்பு படுத்தி சந்திரபாபுவோட அரசு பந்தாட ஆரம்பிச்சது.

அன்னைய தேதிக்கு சி.கே.பாபு மேல  எனக்கு  எந்தவித பிரத்யேக அக்கறையோ சிம்பத்தியோ  கிடையாது. பாஸ்டுக்கும் அன்னைய தேதிக்கும் என்ன ஒரு வித்யாசம்னா 1999 தேர்தல்ல சந்திரபாபு பசைபோட்ட மாதிரி ஷேடோ பார்ட்டி அது இதுன்னு போலீஸை அவர் பின்னாடியே போட்டும் ஜெயிச்சு வந்துட்டாரு. எனி ஹவ்  உண்மையான பப்ளிக் சப்போர்ட் இருக்கிற ஆளுன்னு ஒரு அபிப்ராயம் வந்தது. அதுக்கு முன்னாடி தெ.தேசம் சர்க்கிள்ள சி.கே ஜெயிச்சப்பல்லாம் ரிக்கிங் நடந்துருச்சுப்பா, கள்ள ஓட்டு போட்டுட்டாங்கப்பா  என்று நடக்கும் பிரச்சாரத்தை நானும் நம்பி வந்தேன்.

சி.கே பாபு அரெஸ்ட் ஆன ராத்திரி எனக்கு சிவராத்திரியாயிருச்சு. ஏனோ மறுபடி மறுபடி அவருக்கு உதவனும் , அவருக்கு உதவனும்ங்கற எண்ணம் மறுபடி மறுபடி உதயமாச்சு.

விடியல்ல தான்  ஞானோதயம் ஆச்சு. ஓஹோ பாபா சி.கே பாபுவுக்கு உதவச்சொல்லி எண்டார்ஸ் பண்றாரு...  ப்ரெட் ஹண்டரான நான் சர்வ சக்தி வாய்ந்த ஒரு  மானில அரசுக்கு எதிரா ,ஒரு எம்.எல்.ஏவுக்கு எந்த விதமா உதவ முடியும்னு அப்ப யோசிக்கல.

ரஜினி காந்த் சொல்வாரே ஆண்டவன் சொல்றான். அருணாச்சலம் செய்றான்னு அந்த கதை. அவருக்கு எப்படி உதவ முடிஞ்சது. அதுக்கு பிரதிபலனா  பாபா எப்படி எனக்கு உதவினார்ங்கற சங்கதியெல்லாம் அடுத்த அத்யாயத்துல சொல்றேன்.

Thursday, June 17, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்:5

ஒரு பாபா பக்தன் கிட்டே பாபாவுக்கு நான் தரேண்டா அப்பாயிண்மென்டுன்னு சவால் விட்டுட்டு கலங்கிகிட்டிருந்தப்ப தர்காதீதமா ஒரு கடன் காரர் வந்து ஷீர்டிக்கு வராமாதிரியிருந்தா ஃபேர் உங்கணக்கு செலவெல்லாம் என் கணக்கு. பணமா கேட்டா இப்ப இல்லைன்னு சொன்னதையும்,சவாலுக்கு காரணமான பக்தன் வடிவேலுவும் பேக்கேஜ் டூர்ல வரவேண்டியதா போனதையும் கடந்த பதிவுல சொல்லியிர்ந்தேன்.



இப்ப ஷிர்டி யாத்ரா விசேஷங்களை ரொட்டீனா சொல்லி ஜல்லியடிக்கபோறேன்னு நினைச்சா ஏமாந்துருவிங்க. யாத்ரா விவரமெல்லாம் இன்னைக்கு வெளி வர்ர நாலணா பக்தி புஸ்தவங்கள்ள அக்கு வேறு ஆணி வேறா கொடுத்திருப்பாய்ங்கள்ள.



பஸ்ஸுல திருப்பதி போய் அனந்தபூர் எக்ஸ்பிரஸ் பிடிச்சோம். அனந்த பூர்லருந்து ரயில்ல ஷீர்டிக்கு முந்தின ஸ்டாப் வரை போறதாவும் அங்கருந்து ஷேர் ஆட்டோ கணக்கா வாகனவசதி இருக்கிறதாவும் பேசிக்கிட்டாய்ங்க. ரயில்ல ஒரு சம்பவம் நடந்தது. அந்த நேரம் நான் ஏற்கெனவே சொன்னபடி ஏழுமலையானோட ரசிகன். அன்னமாச்சாரி கீர்த்தனைகளை எஸ்.பி குரல்ல கேட்டு மோகிச்சு போய் அதை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம்னு கனவு கண்டேனோ அப்படியெல்லாம் அனுபவிச்ச காலமது.



இன்னம் ஒருபடி முன்ன போய் அந்த கீர்த்தனைகளோட இசைக்கு நவீன அன்னமாசாரியார் கணக்கா தமிழ்ல எழுதிக்கூட பார்த்தகாலம் அது. பெருமாளோட க்ஷேத்திரத்துல ஷிர்டி பாபா படம் வந்து சேர்ந்தாப்ல ஷிர்டி யாத்திரைல பெருமாள் மூக்கை நீட்டின அற்புதம் இது.



இந்த எக்ஸ்பிரஸ் ட்ரெயின்ல மத்தில கிச்சன் இருக்கும் போல. கிச்சனுக்கு ரெண்டு பக்கமும் போகீஸ். ட்ரெயின்ல சீட் போட்ட அவசரத்துல க்ரூப்பு ரெண்டா பிரிய வேண்டியதாயிருச்சு. ஒரு க்ரூப் புத்தியளவுல ஊனமுற்றோர் குழுவா போச்சு. அதுல நான் மாட்டிக்கிட்டேன். ஓரளவு நமக்கு செட் ஆகிற பார்ட்டிங்க இன்னொரு க்ரூப்ல இருக்காய்ங்க. மெல்ல மெல்ல தத்தி தத்தி போகி டு போகி போயிட்டே இருந்தேன். அடுத்த க்ரூப்போட ஐக்கியமாறது என் உத்தேசம்.



சென்டருக்கு வந்துட்டன். கிச்சனுக்குள்ள நுழைஞ்சிட்டன். நுழைஞ்ச அதே நிமிசம் வெளிய இருந்து எவனோ கதவை பூட்டிட்டான். கொஞ்சமா டர்ரானாலும் சரி நம்ம க்ரூப் அடுத்தடுத்த போகில எங்கனாச்சும் இருக்கும் .சேர்ந்துக்கலாம்னு நடைய போட்டேன். கிச்சன்லருந்து வெளிய வரப்போறேன். அதே நிமிசம் எவனோ வெளிய இருந்து கதவை பூட்டிட்டான். பேசேஜ் முழுக்க வெஜிட்டபிள் வேஸ்ட். சொதசொதன்னு ஈரம். நேரம் ராத்திரி 10 அ 10.30 இருக்கலாம். ரயிலா சொம்மா பறக்குது. சத்தமா டி.டி.எஸ் ரேஞ்சுல செவுள பிய்க்குது. நான் டென்சனாயிட்டன். படபடன்னு கதவை தட்டறேன்.



நம்ம ப்ளாக்ல மருமொழி போடற பார்ட்டிங்க யூஸ் பண்ற வொக்காபிலரியெல்லாம் ஃபவுண்டென் கணக்கா வருது. அந்த வேகத்துல,சத்தத்துல , காத்துல எவன் கவனிக்க போறான். கூண்டுல மாட்டின எலி என்ன நினைக்கும்னு அப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டன்.



அன்னமாசாரி கீர்த்தனை ஒன்னு ஞா வந்தது.



"சம்ப பிலிச்சின வேளா.. சங்கேள்ளு பெட்டின வேளா வெங்கடேஸு நாமமே திக்கு மரி லேது"



"வாடா போட்டுத்தள்ளீர்ரன்னு கூப்பிடற சமயத்துல, கைல விலங்கு மாட்டின வேளை பெருமாள் பெயர்தான் திக்கு" ன்னு அர்த்தம். கண்ல மாலை மாலையா தண்ணி. ராமதாஸ (பா.ம.க இல்லிங்கோ ..பக்த ராமாதாசு) செயில்ல போட்டப்ப அவரு செயில்ல எப்படி பாடியிருப்பாரோ அந்த ரேஞ்சுல மனசுக்குள்ள மேற்படி வரி ஓடுது.



கதவை தட்டறது, சகட்டு மேனிக்கு கூவி திட்டறது எல்லாத்தயும் விட்டுட்டன். மேற்படி வரிதான் ரீப்ளே ஆயிட்டிருக்கு, அப்ப கதவுக்கு அந்தப்பக்கம் யாரோ நடந்துவர சத்தம். மவுனமாவே இருந்தன். படக்குனு கதவு திறக்கப்பட்டது. நாலடி வச்சிருப்பேன். படக்குனு ஞா வந்தது ஆப்கா நாம் க்யானு (உங்க பேர் என்ன?) கேட்டேன். திறந்த கேண்டீன் தொழிலாளி "பாலாஜி"ன்னாரு. மயிர் கூச்செறிந்தது. புல்லரித்தது. புளகாகிதம் ஏற்பட்டதுன்னு எத்தனை வார்த்தை இருக்கோ அத்தனையையும் அன்னைக்கு அனுபவிச்சேன். ஓடற ரயில்ல தத்தி தத்தி நடந்து க்ரூப் 2 வை பிடிச்சுட்டன். சனம் சீட்டுக்கச்சேரில இருக்காய்ங்க. நமக்கு ஆடத்தெரியும். ஆனால் ஆட ஆள் கிடைச்சதில்லை. கிடைச்சாலும் ஆடறதில்லை. வெறுமனே வேடிக்கை பார்க்கிறதுதான்.



சீட்டுக்கச்சேரில ஒரு அற்புதம் நடந்தது. அதை அடுத்த பதிவுல சொல்றேன்.





பி.கு: இதை நான் தட்ட ஆரம்பிச்ச நேரம் வியாழக்கிழமை அதிகாலை 4.15 . முடிச்ச நேரம்: 4.35. இந்த தூங்காத இரவுக்கு காரணம் கூட பாபா தான் . கடந்த பதிவுல சொன்னேனே பாபா ஸ்தோத்திர மாலை லட்சம் பிரதி மேட்டர். அதுல மொத 2000 பிரதி ரெடியாயிருச்சு. அதை பேக் பண்ணி தயாரா வச்சிருக்கேன். நாளை யூத் காங்கிரஸ் லீடரோட போய் எம்.எல்.ஏ கிட்ட காட்டி யூ.கா.லீ கையால ப்ரஸ் மீட்ல ரிலீஸ் பண்ண போறதா இன்ஃபார்ம் பண்ணனும். மதியம் 3.30க்கு ப்ரஸ் மீட் .தூக்கம் கெடுத்தான் ஆக்கம் கொடுத்தான்னு வள்ளலாருது ஒரு வாக்குண்டு. அதுக்கான அர்த்தம் தான் இன்னைக்கு நான் போட்டிருக்கிற பதிவுகள்.

Tuesday, June 15, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 4

கடந்த பதிவுல வடிவேலுவோட அல்டாப்பு தாங்க முடியாம நான் தரேண்டா பாபாவுக்கு அப்பாயிண்ட்மென்டுன்னு சவால் விட்டுட்டு வீட்டுக்கு வந்த கதைய படிச்சிருப்பிங்க. சாமிங்களுக்கும் நமக்கும் 1986ல இருந்து டீலிங். செமை அண்டர் ஸ்டாண்டிங். நல்லா போயிட்டிருக்கும்.  சினிமால வர்ர வடிவேலுக்கு  நடக்கிற  மாதிரி படக்குனு ட்ராக் மாறி " நல்லாதானே போயிக்கிட்டிருக்கு" னு திணற வைக்கும்.

கை கொடுத்த கையும் பகவானோடதுதான். கை விட்ட கையும் பகவானோடதுதான். கை கொடுத்தது என் நச்சரிப்பு தாங்காம. அப்படி கை கொடுத்ததால என்னெல்லாம் இழந்தேன்னு அப்பாறம் புரிஞ்சிக்கிட்டேன்.

அப்படி கைவிட்டதால என்னல்லாம் பெற்றேன்னும் அப்பாறமா தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

இன்னைய தேதிக்கு "ஆள விடு சாமி  நீ  கொடுத்தா பிரசாதம். எடுத்தா காணிக்கை "ன்னு தான் கிடக்கேன்.

தானா நடக்கிறது எதுவா இருந்தாலும் அது நன்மைல முடியறதையும், விடா முயற்சியால நடக்கிறதெல்லாம் தீமைல முடியறதையும் அனுபவத்துல பார்த்துட்டன்.

இருந்தாலும் சில நேரம் தமிழ் சினிமால வர்ர தங்கச்சி கேரக்டர்கள்  கணக்கா  வாழ்க்கைல வழுக்கி விழுந்துர்ரன் என்ன செய்ய. கர்மா துரத்தறது. (அதெல்லாம் ஒரு ம..ரும் இல்லிங்கண்ணா சபலம்தேங்)

மேற்படி சவால் சம்பவம் 1998 ல நடந்தது. 1986லர்ந்து 12 வருஷமா என்னெல்லாம் நடந்ததுன்னு மேண்டேஜ் ஷாட்ஸா ப்ரொஜெக்ட் ஆக ரெம்பவே நொந்து போயிட்டன்.

ராம நாமம்னா என்னை ராமனாவே ஆக்கிருச்சு. ராமர் எப்படி ஜஸ்ட் ஒரு குரங்கு படைய வச்சுக்கிட்டு ராவணனை எதிர்த்தாரோ அப்படி நான் ஒரே ஒரு குரங்கை வச்சிக்கிட்டு ( ஹி ஹி அந்த வயசுல என் மகளை சொல்றேன் .. அவளுக்கு 6 வயசு அப்போ.) சந்திரபாபுவை எதிர்த்தேன்.

(வாய்க்கா தகராறு விஷயமா இல்லிங்கண்ணா..இன்னைக்கு அவர் எதுக்கெல்லாம் குரல் கொடுக்கிறாரோ -விவசாயம், விளைபொருட்களுக்கு நியாயமான விலை,பவர் கட், படிப்படியா மதுவிலக்கு இப்படி ஒவ்வொன்னையும் டைல்யூட் பண்ணி தனி மனித வாழ்வை கூட நரகமாக்கிக்கிட்டிருந்தாருங்கண்ணா.இதெல்லாம் பின்னொரு சமயம் விவரமா பார்ப்போம்)

இதுல சபரி மாதிரி ஒரு கிழவி வேற  காசு எப்ப வரும் எப்ப தர முடியும்னே தெரியாது ஆனா ஒழுகுற குடிசைக்கு தார்ப்பால், என் மகளுக்கு ஒரு க்ளாஸ் பாலுன்னு ரெம்ப ஹெல்ப் ஃபுல். ( என்ன.. அண்ணன் தம்பிகதான் ஒரு வருசம் ஒரு வருசம் காத்திருந்தா இந்த நாய்க்கு சங்குதான். சொத்தை வித்து  நாமளே சுருட்டிரலாம்னு இருந்தாய்ங்க)

1986ல ராம நாம ஜெபம் ஆரம்பிச்சேன். அதேவருசத்துல ஆசுகவியானேன். சந்தம், ரித்தம் எதுகை மோனை அந்த காலத்து கார்ப்பரேஷன் குழாய் மாதிரி கொட்டும்.

உ.ம்:
கன்னியுன்னை எந்தனுள்ள நாளும் எண்ணி ஏங்குது
கனவில் கூட உனை கண்டே என்னுடலும் தூங்குது
உன்னை எண்ணி எண்ணி எந்தனுயிர் தேயுது
உன் பெயரே என் காதில் தேனாறாய் பாயுது
வானொலியில் கேட்கும் குரல் உனதாக மாறுது
வாணலியில் காய்களை போல் என் இதயம் வதங்குது

(இந்த சரக்கெல்லாம் கால வெள்ளத்துல அடிச்சிக்கிட்டு போயிருச்சுங்கண்ணா. ஏழுமலையான் மேல மட்டும் ஆயிரத்துக்கு மேல இந்த ப்ராண்ட்ல எழுதினென். ஏதோ ஆராய்ச்சிக்குன்னு தி.தி.தேவஸ்தானத்துக்கு அனுப்பினேன். அதை தேவஸ்தானம் சார்பா நடத்தின டாக்டர் ராகவாச்சாரி சூப்பரு கண்ணா இதை அச்சிட உதவி கேட்டு தேவஸ்தானத்தை அப்ரோச் பண்ணுன்னு அதுக்குண்டான அப்ளிகேசனை கூட அனுப்பினாரு. தேவஸ்தானம் கை தூக்கிட்டது வேற கதை. ஏதோ மூட்ல அந்த ஸ்க்ரிப்டை ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன்+ பணத்தை பத்தி இப்ப எழுதற சமாசாரத்தையும் ஒரு தொடராக்கி அனுப்பினேன். அவிக டஸ்ட் பின்ஸுக்கு ரெம்ப பசி போல ஜீரணம் பண்ணிருச்சிங்க

என்ன..ஒரு ரியாக்சனுன்னா அவிக ஸ்டைல்ல பணத்தை பத்தி ஒரு தொடரை ஆரம்பிச்சாய்ங்க. அதை அப்படியே டெவலப் பண்ணி நாணயம் விகடன்னு ஒரு புஸ்தவமே ஆரம்பிச்சிட்டாய்ங்க. இதெல்லாம் தனிக்கதை.

மேட்டருக்கு வரேன்.

ஆஞ்சனேயர்,ராமரோட கோர்த்துக்கிட்டதால முந்தின ரெண்டு வருஷத்துல கச்சா முச்சானு மேஞ்சதால நாறிப்போயி காட்பாடியாகிப்போன பாடி ஒரு கண்ட் ரோலுக்கு வந்துருச்சு. செக்ஸுவல் தாட்ஸை டைவர்ட் பண்றதுக்காக படிச்ச புஸ்தவங்க புது புது சன்னல்களை மட்டுமில்லை வாசல்களையே திறந்துவச்சிருச்சு.

1986ல போட்டியிடவே முடியாது போயிட்ட கல்லூரி தேர்தல்கள்ள 1987ல போட்டியிட்டு  எந்த பின்னணியும் இல்லாம எந்த சிண்டிகேட்லயும் இல்லாம ஜஸ்ட் ஒரு ஸ்பீச் உபயத்துல 468 ஓட்டு வாங்கினேன்.( மூணு வோட்ல தோத்துப்போனது வேற விசயம்)

சேர்மன் வேட்பாளர் தோத்துப்போக நான் தான் காரணம்னு நினைச்ச ஒரு வருங்கால யூத் லீடர் என் மேல அட்டாக் பண்ண வந்தாரு. அப்போ கூட கழுத்துல ஆஞ்சனேயர் டாலர் இருக்கிற வரை சமாளிச்சேன். அது அறுந்து விழுந்ததும் டர்ராகி முழிக்க மொத்து மொத்துன்னு மொத்திட்டானுவ.

புதுசு நவதான்னு தமிழ் தெலுங்குல முதல்ல 8 பக்கம் அப்பாறம் 16 பக்கத்துல பத்திரிக்கையே நடத்திட்டேன். எங்க லெக்சரர்ஸ் எழுதிக்கொடுத்த சமாசாரங்களை அவிக மனசு கோணாம அவிக அனுமதியோட எடிட் பண்ணி வெளியிட்டேன்.பெங்களூர் போய் சுஜாதாவை பேட்டியெடுத்து வெளியிட்டேன்னா பார்த்துக்கங்க.

அப்பாவுக்கிருந்த குட்வில் காரணமா அவர் மேல இருந்த மரியாதைல மாவட்ட கருவூல அலுவலகத்துல முதியோர் பென்சன் ,விதவைகள் பென்சனுக்கு எம்.ஓ எழுதற வேலை கிடைச்சது. அங்கேதான் உனக்கு 22 எனக்கு 32ல வர்ர மாயாவ சந்திச்சேன். அந்த டிபார்ட்மென்ட்ல நடந்த, நடந்துக்கிட்டிருந்த பெரிய்யா ஊழலை கண்டுபிடிச்சேன்.ஏழை சனத்துக்கு அனுகூலமா  ரூல்ஸெல்லாம் மாத்த வச்சேன்.மந்திரி மக்கள் பிரச்சினைகளுக்கு   ஸ்பாட் சொல்யூஷனுக்கு கூட்டம் நடத்தினப்போ மேற்படி டிப்பார்ட்மென்டுக்கு நான் தான் இன்சார்ஜா இருந்தேன்னா பார்த்துக்கங்க.

அங்கே பெண் ஊழியர்கள் அதிகம். எல்லா ஏஜ் க்ரூப்லயும்/சோஷியல் ஸ்டேட்டஸ்லயும்  இருப்பாய்ங்க.அப்போ நமக்கென்ன 22 வயசுதானே. அறியா புள்ளைன்னோ இல்லை பையன் துடியா இருக்கான்னோ எல்லாருமே நல்லா பழகுவாய்ங்க. அவிகளை கவர் பண்ண நியூமராலஜிய வச்சு பீலா விடறது வழக்கம். (இத்தனைக்கும் அது தொடர்பா  ஒரு புஸ்தவம் கூட படிச்சது கிடையாது. எல்லாமே கெஸ் பண்ணி சொல்றதுதான்.ஆனால் பச்சக்குனு பொருந்தும்.) அப்பறமா தான் தெரிஞ்சிக்கிட்டேன்.. ராம நாமத்தை ஜெபிச்சு ஜெபிச்சு வாக்பலிதமே ஏற்பட்டுப்போச்சுன்னு.

1989 வர்ரதுக்குள்ள சிம்பிள் லிவிங் ஹை திங்கிங் , கோ பேக் டு தி நேச்சர், ஹீரோ ஈஸ் ஒன் வூ லே டவுன் ஹிஸ் லைஃப் ஃபார் ஹிஸ் பீப்புள் மாதிரி கொட்டேஷனெல்லாம் என் மனசுல ஃபெவிக்கால் போட்ட மாதிரி ஒட்டிக்கிச்சு. என்னடா ஒரு லூப் ஹோல்ன்னா இதையெல்லாம் பேச்சலர் லைஃப்லயும் அப்ளை பண்ண முடியும்ங்கற யோசனை வரலை. ( வயசு அப்படிங்கண்ணா)  இதனால லவ். லவ் மேரேஜு, ஊருசனம் புண்ணியம் கட்டி பிரிச்சுப் போடறதுங்கற அத்யாயம்லாம் நடந்துருச்சு.

இதுல கூட ஆஞ்சனேயர் படம் என் கிட்ட இருக்கிற வரை என் மேல தூசு கூட படியலை. குப்பம் டு சித்தூர் வர்ரச்ச டீ சாப்பிட பலமனேர்ல இறங்கினேன். பஸ் விட்டது சவாரி. ஆஞ்சனேயர் பஸ்ஸோட போயிட்டாரு. சனம் விளையாடிக்கிருச்சு.

என்ன முருகேசு..ஷீரடி பாபா பத்தி சொல்றேன்னிட்டு முருகேசு பாபாவ பத்தி சொல்லிட்டே போறிங்கன்னு சலிச்சிக்கிராதிங்க. 12 வருஷ ஆன்மீகவாழ்வை ஒரு ஓட்டு ஓட்டிரலாம். தெய்வம் எப்பல்லாம் கை கொடுத்தது. எப்பல்லாம் கை விட்டுருச்சுங்கற மேட்டரையும்  அது ஏன் அப்படி நடந்ததுங்கறதையும் அனலைஸ் பண்ணி ஆன்மீகத்துல இருக்கிறவுகளுக்கு ஆன்மீகத்தை பத்தி ஒரு ஐடியா கொடுக்கலாமேன்னு சபலப்பட்டேன்.

ஓகே கடவுளோட கேரக்டரைசேஷன் பத்தின என் அனுபவ சாரமான ஒரு கவிதைக்கான தொடுப்பை ( கள்ள உறவை இல்லிங்கோ.. லின்கு லின்கு இங்கே தந்து சூ காட்டிட்டு கதைக்கு போயிர்ரன். (கடந்த பதிவுலயே தரேன்னு தரமுடியாம போயிருச்சு.. டென்சன்ல தலைவலியே வந்திருக்கும் . அவிக இங்கே அழுத்துங்க.

மேட்டருக்கு வந்துருவம். ஷிர்டிக்கு போயே ஆகணும். போகலைன்னா வடிவேலு ஜில்லா ஜில்லாவா மானத்தை வாங்கிருவான். இது பொசிஷன். சில்லறை புரளவே வாய்ப்பில்லை. புரண்டாலும் ஆயிரம் கமிட்மெண்டு.

இந்த மாதிரி ஒரு கையறு நிலைல மறு நாள்  ரெண்டு பார்ட்டிக்கு ரெண்டு வட்டிக்கு பத்தாயிரம் கொடுத்திருந்தேனே அதுல ஒரு  பார்ட்டி வந்து  ஒரு ஆஃபர் கொடுத்துச்சு. ஒரு அமவுண்ட் வந்திருக்கு. இது வந்தா ஷிர்டிக்கு வர்ரேன்னு வேண்டிக்கிட்டேன். வந்த அமவுண்டை போட்டு புரட்டினா தான் நான் நாலு காசு பார்க்க முடியும்.  உனக்கு தர வேண்டிய  காசை கொடுத்துட்டேன்னா எனக்கு துண்டு விழும். வேணம்னா நீயும் ஷீர்டி வா போக்குவரத்து உன் கணக்கு. மேல் செலவெல்லாம் என் கணக்கு.

இந்த சந்தர்ப்பத்துலதான் எனக்கு திருமலா போனப்ப ஷிர்டி பாபாவோட படம் வாங்க வேண்டி வந்தது ஞா வந்தது.  உடம்புல அப்படியே 12 வோல்ட் கரண்ட் பாய்ஞ்ச மாதிரி ஒரு எஃபெக்ட். மொத்தத்துல பாபா சாமியோ இல்லையோ.. சாமிங்களோட டீலிங் உள்ள பார்ட்டின்னு கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன்.

கரும்பு திங்க கூலியா? உடனே அந்த பார்ட்டிக்கு சம்மதம் சொல்லிட்டேன். ரெண்டு பேர் போறதா ப்ளான் பண்ண ட்ரிப் ஒரு க்ரூப்பே போற மாதிரி ஷேப் அப் ஆயிருச்சு. அந்த க்ரூப்ல வடிவேலுக்கும்  இடம். சரிங்கண்ணா மிச்சத்தை அடுத்த பதிவுல பார்ப்போம்.

Sunday, June 13, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 3

கடந்த chapter ல சொன்ன வடிவேலு பாபா பக்தனா செமை பில்டப் கொடுத்துக்கிட்டிருப்பான். பேச்சு மட்டும் வெல்லமா இருக்கும். ஆப்பு வச்சான்னா ரத்தம் வெள்ளமா வரும். அவனை பத்தி சொல்ல ஆரம்பிச்சா இன்னொரு அத்யாயமும் வீணாப்போயிரும். அதனால ஒரு தாவு தாவிரலாம். வடிவேலு சந்துல ஒரு கடை வச்சிருந்தான்.(வாடகைக்குத்தான்.)

 அந்த கடை ஓனர் பத்தி சொன்னா சிரிச்சி சிரிச்சு வயிறே புண்ணாயிரும்.அது தனி கதை.லீஸுக்கு வாங்கின தியேட்டர் தன்னுதுதான்னு கேஸ் போட்டதென்ன, ஊரெல்லாம் கடன் வாங்கி திவாலாகிப்போன முஸ்லீம் குடும்பங்களோட சொத்தையெல்லாம் வாங்கி குவிச்சதென்ன, இதுல இன்னொரு தியேட்டரும் அடக்கம். இதுவும் லீசுக்கு வாங்கி கோர்ட்டுக்கு போன கேசுதான்.  வயது வந்த  பிள்ளைங்க  இருக்கறச்ச வீட்டு வேலைக்காரியோட கும்மாளம் அடிச்சதென்ன, இத்தனைக்கும் பார்ட்டி பாக்கெட் ட்ரான்ஸிஸ்டர் மாதிரி தான் இருக்கும். பி.பி பேஷண்ட் . அந்தாளோட வேலை என்னன்னா காலைல வாக்கிங்கிளம்புவாரு. தன்னோட பிலிடிங்ஸ் எங்கெல்லாம் இருக்கோ அந்த ரூட் வழியா அல்லாத்தயும் பார்த்துக்கிட்டே  வாக்கிங் போவாரு. தினசரி எங்கனயோ ஒரு இடத்துல கண்ணு சுத்தி விழுந்துருவாரு. உடனே யாரோ தெரிஞ்ச ஆட்டோக்காரன் கொண்டு போய் வீட்ல சேர்ப்பான். இன்னம் நிறைய மேட்டர் இருக்கு  அதனால பின்னொரு சமயம் பார்ப்போம்).

சந்துல கடை வச்ச வடிவேலு கொஞ்சமா வசதி வந்ததும் ( வந்துருச்சுனு நினைச்சதும்) மெயின் ரோட்ல ஒரு கடைய பார்த்து மாறிக்கிட்டான். பழைய கடைய சென்டிமென்ட்டுன்னு காலி பண்ணாம வச்சிருந்தான். ஃபைனான்ஸும் ஓடிக்கிட்டிருந்தது. அண்ணன் தம்பி தகராறுல இருந்த கோவணமளவு இடத்தை ரெண்டா பிரிச்சு வீட்டை கட்டிட்டான். கைல இருந்த இருப்பெல்லாம் காலி.  அண்ணன் தம்பில எவனாச்சும் ஒருவன் பெண்டாட்டி ............... ஐ முகர்ந்துக்கிட்டிருக்கிற கேஸாயிருந்தாதான் அண்ணன் தம்பி தகராறெ வருது. நம்ம வடிவேலு இந்த ரகம்.

இதெல்லாம் நமக்கும் தெரியும். இருந்தாலும் அதை  (சந்து கடைய) ப்ரிஃபர் பண்ணல.

நம்ம வடிவேலு ஏரியாவுக்கே ஒரு பி.ஆர்.ஓ   மாதிரி.  யாரை தேடியார் வந்தாலும் கரெக்டா அட்ரஸெல்லாம் சொல்லுவான். நாம தேடற பார்ட்டி சின்ன வீட்ல இருப்பானா பெரிய வீட்ல இருப்பானான்னும் சொல்வான். எவன் எவளை வச்சிருக்கான்னும் கரெக்டா சொல்லுவான்.( என்னடான்னா சில சமயம் நம்மை உதைக்க வர்ரவன், பிடிக்க வந்த கான்ஸ்டபிள், கடன் காரனுக்கும் கரெக்டா போட்டு கொடுத்துருவான்) அந்த ஹோதால "யப்பா வடி வேலு ! பணம் காசெல்லாம் காலி  ஆயிருச்சு. சோத்துக்கு பிரச்சினையில்லை.வட்டி வந்துரும் பொழுது போவனும். சின்னதா ரூம் எதுனா காலியிருந்தா சொல்லேன். சோசியம் சொல்லி நாலு காசு பார்ப்பேன். அட்வான்ஸ் கிட்வான்ஸெல்லாம் தர்ர அளவுக்கு வசதி கிடையாது. சீப் அண்ட் பெஸ்டா சொல்லு"ன்னேன்.

ஜனரஞ்சகமா போயிட்டிருக்கிற இந்த பதிவுல மசாலா இல்லைன்னா எப்படி? ( பாபா! எக்ஸ் க்யூஸ் மீ)


வடிவேலு தான் என்னவோ  பெரிய்ய மதன காமராஜன் மாதிரி பயங்கர பீலா விடுவான். தற்சமயம் அல்லாத்தயும் விட்டுட்ட மாதிரியும் ஒரு காலத்துல கட்டைய போடாத இடமே இல்லன்னும் இஷ்டத்துக்கு சுத்துவான். ஒரு நா அவன் மனைவி அம்மா வீட்ல இருந்து ஆட்ட்டோல வந்து கடையண்ட ஆட்டோவை நிறுத்தினா.   இவனை  ஒரு விரல் காட்டி கூப்டா. கலெக்டரம்மாவ ரிசீவ் பண்ணிக்கிற டஃபேதான் கணக்கா அப்படி ஒரு வினயம் .அவள் வந்த ஆட்டோவுக்கு காசு கொடுத்துகட் பண்ணி அனுப்பிட்டு இன்னொரு ஆட்டோவ கூப்டு சீட்டை தட்டி சுத்தம் பண்ணி வழியனுப்பிட்டுதான் கடைக்குள்ளாற வந்தான்.

வடிவேலுவுக்கு செட்டியார் பசங்களோடதான் டீலிங் சாஸ்தி. பாவம் இவனுக்கு தான் பலான சாதின்னு இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் போல. அவன் மனைவிய பார்த்தா ஜஸ்ட் ஒரு செட்டியாரம்மாவை பார்த்தமாதிரியே இருக்கு. ஒரு நாள் இவன் கட்டின வீட்டை பார்க்க போனேன். டிட்டோவா பஜார்ல கடையோட சேர்த்து செட்டியாருங்க கட்டுவாங்களே குகை மாதிரி வழி , ஃப்ளோர் டிக்கெட் க்யூ மாதிரி வராண்டா வாயு கூட வெளியேறாத மாதிரி வீடு அதே தான். அப்பத்தான் நினைச்சேன். தாளி..இவன் செட்டியார்ங்க காசை சாப்டு சாப்டு அவிக கருமமெல்லாத்தயும் மூட்டைக்கட்டி இப்படி ஆயிட்டான் போலன்னு.

சரி சரி ரெம்ப டைவர்ட் ஆயிட்டாப்ல இருக்கு. மேட்டருக்கு வருவம். எங்க விட்டோம். ஆங் .. வாடகைக்கு கடை பாருன்னேன்.

உடனே வடிவேலு தன்னோட வழக்கமான ஓவர் டெசிபல், ஓவர் பாடி லேங்குவேஜோட,ஒக்காபிலரியோட தன் கடைய எடுத்துக்கசொன்னான். ஒரு சீப்பு கூட வைக்காம மொத்தத்தையும் காலி பண்ணி தரேன்னான். அட்வான்ஸ் வேணவே வாணாம். செட்டியார்( பில்டிங் ஓனர்)  கிட்டே நான் பேசிக்கிறேன்னான்.

நேரம் நல்லாருக்கு, ஓப்பன் பண்ணிரலாம்னு ஒரு நா கடைய க்ளின் பண்ண சொன்னேன். தன்னோட சிஷ்ய பிள்ளையான ஒரு எஸ்.சி. பையனை விட்டு க்ளின் பண்ண சொல்லிட்டான்.(அவனுக்கு பத்து பைசா தரமாட்டான்.)  நான் சாயந்திரம் சுத்தமா குளிச்சு முழுகி போறேன்.  அந்த கடையோட பரப்பளவே பத்துக்கு பத்துதான் இருக்கும். அதுல பத்துக்கு ரெண்டரைல ஒரு சலூனையே திணிச்சி வச்சிருந்தான்.  நான் அரண்டு போய் "என்னய்யா இது" ன்னேன் .ஒரு வாரம் சாமி மொத்தத்தையும் தூக்கிரலாம்னான். (ஒரு மயித்த கூட தூக்கலை) . நானு விதியேன்னு  பெண்டாட்டியோட ஒரு பழம்புடவைல ஒரு ஸ்க்ரீன் தயார் பண்ணி சலூனை மறைச்சு தொழிலை துவங்கிட்டன்.

அவனோட சேஷ்டைகள் எல்லாம் முன்னாடியே தெரியும்னாலும் இப்ப கிட்டக்க பார்க்கிற சான்ஸு கிடைச்சது.   பொதுவாவே நமக்கு இர்ரிடேசன் அதிகம். அதுலயும் இவன் பண்ற அட்டூழியம் இருக்கே சகிக்கவே சகிக்காது.  எறும்புகளை ஃப்ரை பண்ணி ஆனைக்கு ஸ்னாக்ஸ் பண்ற பார்ட்டி. இதுல பாபா புராணம் வேற. திங்கள் கிழமைலருந்தே ஆரம்பிச்சுருவான். போன வியாழக்கிழமை குளிச்சுட்டு வர வீட்டுக்கு போனேனா,,

நாளுக்கு நாள் அவனோட  எக்ஸ்ப்ளாய்டேஷன் அதிகரிச்சிக்கிட்டே போனது. அட்வான்ஸே வேணாம்னவன் ஒரு நா வீட்டுக்கு வந்து கேஸ் வந்துருச்சி பணம் வேணம்னு கடனா கொடுன்னு தாலியறுத்து வாங்கிட்டு போனவன் போனானடின்னு ஆயிருச்சு. பணம் போனது கூட பெருசுல்லை. என்னை என்னவோ அவனோட ஃபாலோயர் மாதிரி ட்ரீட் பண்ண ஆரம்பிச்சான். கமாண்ட் பண்ண மிகவும் விரும்பினான்.

இதுல பொருத்தமே இல்லாம இடையிடையில பாபா புராணம். வடிவேலு மேல கடுப்பு பாபா மேல கடுப்பா மாறிருச்சு. ஒரு நாள் கடுப்பாகி,வடிவேலுவை கடுப்பாக்க "என்னத்த..பாபா.. எங்கனயோ கஞ்சா அடிச்சிக்கிட்டிருந்த பார்ட்டி. ஊர்ல இருக்கிற கொலைகாரனெல்லாம் பாபாவத்தான் கும்பிடறான். பத்து வட்டி வாங்கிறவன், அப்பா அம்மாவுக்கு சோத்தப்போடாதவன்லாம் பாபாவ கும்பிடறான். இதுக்கெல்லாம்  பாபா எங்க போய் முட்டிக்கிறது ஒரு வேளை அவரு தெய்வமாவே இருந்தாலும் இவிக இம்சை தாங்க முடியாம  மத்த சாமிங்க மாதிரி இவரும் ஓடிப்போயிருப்பாரு. மொத்தத்துல  பாபா பேரை சொல்லி உங்க இமேஜை பூஸ்ட் அப் பண்ணிக்கிற முயற்சில அவரை நாஸ்தி பண்றிங்க. "ன்னு கடிக்க ஆரம்பிச்சேன் 

பாவம் வடிவேலு பெண்டாட்டிக்கு சரண்டர் பார்ட்டி. அவளுக்கு பயந்து அம்மாவை திண்ணை தாழ்வாரத்துலயே வச்சி மெயின்டெய்ன் பண்றான்.(இது அப்ப தெரியாது அப்பாறமா தெரியும் )  உடனே வெடிச்சு கிளம்பினான்.

அவன் என்னவோ அய்யரு மாதிரியும் , நான் என்னவோ   கல்லுக்கு ஏஞ்சாமி பாலபிசேகம்னு கேட்ட தலித் மாதிரியும்  சீன் மாறிப்போச்சு.

"இன்னா இன்னா பேசறே நீ ..பாபான்னா தமாசா கீதா உனக்கு அவரு  அவரா நெனச்சாத்தான் அவரோட பார்டர்லயே என்டர் ஆகமுடியும் நானெல்லாம்  எப்படியெல்லாம் இருந்தவன் தெரியுமா? ஏதோ அவரா பார்த்து இஸ்துக்கினாரு " இப்படி பாபா மகிமை பத்தி சொற்பொழிவே ஆற்ற ஆரம்பிச்சுட்டான்.


நம்ம ஆன்மீக வாழ்க்கை துவங்கி 11வருடம் முடிஞ்சி கடவுளுக்கே நான் தான் கள்ளக்காதலிங்கற ஃபீலிங்ல இருந்த நேரம். வடிவேலுவோட  ஓவர் ஆக்சனுக்கு புகையே வந்துருச்சி. " த பாரு நிப்பாட்டு   நீ சொல்ற பாபா மட்டும் உண்மையிலயே சாமின்னாலோ, சாமியோட நினைப்புலயே வாழ்ந்த ஆசாமின்னாலோ இன்னைக்கே பேசறேன். அடுத்த வியாழக்கிழமை பாபாவுக்கு நான் தரேன் அப்பாயிண்ட்மென்ட் வென்யூ : ஷீர்டி வருட்டா"ன்னிட்டு   வந்துட்டன்.

கையிலயா காணி கிடயாது. (எல்லாத்தயும் தத்தம் பண்ணியாச்சு) வட்டி காசு வந்தாலும் ஆயிரம் கமிட்மென்டு.ஒரு வேளை காசே கிடைச்சும் பாபா தெய்வமா இருந்து அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கலன்னா? அய்யய்யோ இந்த வடிவேலு ப்ரைவேட் டிவி சேனலை விட மோசமானவனாச்சே. ஏதோ படத்துல வடிவேலுவோட பேக்கரி மேட்டர் மாதிரி ஊரெல்லாம் நாறடிச்சுருவானேனு பயங்கர டென்சன்.

மார்கெட் சவுக் சனங்க சைக்காலஜியே வேற. முன்னொரு பதிவுல நாலு பேரு பத்தி எழுதியிருந்தேனே .. அது மாதிரி நாப்பது பேரை பத்தி எழுதனும். ஒவ்வொரு கேரக்டரையும் வச்சி ஒரு  சினிமாவே எடுக்கலாம்.  குளிக்கவே குளிக்காத காதர், தாத்தா பரணைல அண்டால சேர்த்து வச்சிருக்கிற  நகைகளை சுட்டுக்கிட்டு வந்து தினசரி சூத்திர பசங்களோட தண்ணி போட்டு சீயா சாப்பிடற செட்டியார் பையன், ஆக்சிடென்ட்ல காலொடிஞ்சு பேஸ் பெருத்துப்போய் திண்ணைல உட்கார்ந்துகிட்டே அரசியல் பண்ற பண்டரியோட அம்மா, அண்ணன் எம்பியா இருக்க தான் மட்டும் சாதாரண சிமெண்ட் டீலரா கெனட்டிக் ஹோண்டால திரியற  ஆசாமி ( இந்த பார்ட்டிய ஆட்டத்துல சேர்த்துக்கிடவே மாட்டாய்ங்க. இத்தனைக்கும் சாடைல பார்த்தா எம்பியும் இவரும் ரெட்டை மாதிரி இருப்பாய்ங்க)   கேரக்டர்ல எத்தனை வித்யாசமிருந்தாலும் அக்கப்போர்ல பயங்கர டேஸ்டு. அதுலயும் எல்லாருமே வடிவேலுவோட ஹெவி டெசிபல் செய்தி வாசிப்புக்கு அடிமையானவுக.

1986ல இருந்து சாமிங்களோட நம்ம டீலிங்கெல்லாம் ஞா வந்துருச்சி. சாமிங்க கை கொடுத்த சந்தர்ப்பங்கள். கை விட்ட சந்தர்ப்பங்கள். நான் வாழ்க்கைல  முத முறையா சுய புத்தியோட வணங்கின ஆஞ்சனேயர் அவரு என் லைஃப்ல நடத்தின அற்புதங்கள்.ஆஞ்சனேயரோட ப்ரசன்னத்துக்காக  நான் ஜெபிச்ச  ராம நாமம். ஒவ்வொன்னா திறந்துக்கிட்ட ரகசிய கதவுகள் எல்லாம் ஞா வந்துருச்சி.

கடவுளையும்,அவரோட லீலைகளையும்  புரிந்துகொள்வது எப்படின்னு  குடும்ப பத்திரிக்கைல ஒரு  தொடரே எழுதற அளவுக்கு அனுபவம் உண்டு. (இதனோட சாரமா நான் எழுதின கவிதைய படிக்க இங்கே அழுத்துங்க) இருந்தாலும் இருந்தாலும்..

தெய்வங்கள் என் விதியிடம் என்னை ஒப்படைச்சுட்ட சந்தர்ப்பங்களும் இல்லாம இல்லை. ஆனால் அதுவும் என் நன்மைக்குத்தான்னு அப்பாறம் புரிஞ்சிக்கிட்டதுண்டு.  க்டக லக்னம்ங்கறதால வளர்பிறைல ஒரு வாழ்க்கை, தேய்பிறைல ஒரு வாழ்க்கைன்னு ரெண்டையும் பார்த்தவன் தான். இருந்தாலும் அவசரப்பட்டு சவால் விட்டுட்டமோன்னு சம்சயம் அதிகரிச்சுக்கிட்டே போச்சு.

என்னதான் தியானம், யோகம்னு நிறைய படிச்சு நிறைய அனுபவங்கள் ஏற்பட்டிருந்தாலும் எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளி ஹனுமானும், ராம நாம ஜெபமும்தான். அதுக்கு மிஞ்சி நம்மோட சாதனைன்னு ( ஸ்பிரிச்சுவல் எக்ஸர்சைஸ்) பார்த்தா பொது நலம் கருதிய சிந்தனைய சொல்லலாம். தினம் தினம் மரணம் பத்தி சிந்திக்கிறதையும், அதை வச்சு வாழ்க்கையை கூர் தீட்டிக்கிறதையும் சொல்லலாம்.

இத்தனை இருந்தாலும் இறை தேடும் பயணத்துல நம்ம முறை ஜஸ்ட் நாம ஜபம்தான். ரிசல்ட் என்னவோ ஓஹோ தான். ஒரு தரம் இப்படித்தான் அஷ்டம சனி  நடக்கறச்ச கதவை கழட்டி நம்ம குடிசை வீட்டுக்கு வெளிய போட்டுக்கிட்டு அது மேல படுத்து சவாசனத்துல ராம நாம ஜெபம் பண்ணிட்டிருந்தப்போ சாட்சாத் ஹனுமானே காட்சி கொடுத்தார். அதுவும் எப்படி?

உடம்பெல்லாம் வெள்ளை வெளேர்னு முடி. வால் முடிவுல மணி. பேக் கிரவுண்ட்ல ஹனுமான் சாலீஸா ப்ளஸ் மணி சத்தம்.  சாம்பிராணி புகை . அதோட வாசம் போனஸ். ஹனுமான் சாலீஸா கம்ப்ளீட்டா ஓடிமுடியறவரை தரிசனம்.( உண்மைல அது வரை ஹனுமான் சாலீஸாவை கேட்டதே கிடையாது.  நம்ம ஜாதகத்துலயெ சந்தேகம்ங்கற கான்செப்டுக்கு முக்கிய இடம் உண்டு. தியானம்னா சாட்சியாக இருந்து கவனித்தல்னு சொல்வாய்ங்க.

என்னா செய்தாலும் "என்னப்பா முருகேசா இதெல்லாம் தேவைதானா? உன் லட்சியத்துக்கும் இதுக்கும் என்னப்பா லின்குன்னு  ஒரு குரல் விஜாரிச்சிக்கிட்டே இருக்கும்ல"

அதே குரல் ஸ்டார்ட் ஆயிருச்சு. என்னப்பா இதென்ன ஆடிட்டரி ஹெலூசினேஷனா இல்லே இல்யூஷனான்னு கேள்வி ஆரம்பமாயிருச்சு. படக்குனு கண்ணை திறந்துட்டன். ஆஞ்சனேயரு..? அசையற மாதிரி  காணோம். தூத்தேறி.. கேள்வியாவது ஒன்னாவது காசு பணமில்லாம கிடைக்கிற இந்த சுகானுபவத்தை ஏன் இழக்கனும்னு கண்ணை மறுபடி மூடிக்கிட்டேன் .

ஆனால் பாபா அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கலன்னா? நீ என்னடா எனக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கிறதுன்னு ரிவர்ஸ் ஆயிட்டா?  இப்படி ஆயிரம் கேள்விகளோட ராம நாம ஜெபத்தோட தூங்கிட்டன்.


போகிக்கு எப்படி விழிப்பும் தூக்கமாவே இருக்கோ , யோகிக்கு தூக்கமும் யோகமாவே இருக்கும்னு எங்கனயோ படிச்சதா ஞா. சாட்சியா இருந்து கவனிக்க ப்ராக்டீஸ் பண்ண கனவுகளை விலகி நின்னு  கவனிக்கிறதும் ஒரு வழின்னு ஓஷோ சொல்லியிருக்காருங்கோ. நானெல்லாம் கனவுலயே பொய் சொல்வேன். அந்த அளவுக்கு விழிப்புங்கண்ணா. ஆனா பாருங்கண்ணா சமீப காலமா கனவே வர்ரதில்லிங்கண்ணா. காரணம் என்னன்னு புரியலிங்கண்ணா.

ஒன்னை மட்டும் கன்ஃபர்ம் பண்ணிட்டு இந்த அத்யாயத்தை முடிக்கிறேன்.அன்னைக்கு ராம நாம ஜெபத்தோட தூங்கிட்டன்னு சொன்னேனே அந்த ராத்திரியும் கனவு ஏதும் வரலிங்கண்ணா. ஸ் அப்பாடா..

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் 2

நேரு கிட்டே செக்ரட்டரி ரேஞ்சுல குப்பை கொட்டின ஐ.ஏ.எஸ்ஸுக்கு ஜோசியம் சொல்லி டப்பிங் ப்ராஜக்ட் வாங்கின கதையை கடந்த பதிவுல பார்த்தோம். இப்போ சப்ஜெக்டுக்கு போயிருவமா?




அந்த நேரத்துல இந்த நேரத்து தெளிவெல்லாம் கிடையாது (ஜோதிஷத்துல). அய்யரு ஜாதகத்தை பார்த்து அவருக்கு என்ன சொன்னேனோ அது பாபாவோட அருள்னு தான் நினைக்கிறேன்.



சரி ..1997 நவம்பர் 9 ஆம் தேதி வரை சாரி 10 ஆம் தேதி மதியம் 3 மணி வரை சிங்கிள் டீக்கு அடச்சீ ஒரு பீடிக்கு கூட கதி கிடையாது. ஆனால் 3 மணி 1 நிமிஷத்துக்கு ஒரு லட்சத்து ரெண்டாயிரம் ரூபா கொடுத்தாய்ங்க. அப்பா கட்டின வீட்டை வித்து வந்த பங்குபணமுங்கோ.



அந்த நேரம் செமர்த்தியான கெட்ட நேரம். அஷ்டமத்துல சனி. 1/7 ல ராகு கேது போதாததுக்கு கேது புக்தி வேற. அந்த நேரம் பார்த்து ஏன் பணம் வந்ததுன்னு கேட்டா அதுக்கு ஒரே பதில் கிரகம் எல்லாம் இறைவனோட படைப்பு. வட்டிக்கிறவன் நம்மாளா இருந்தா எந்த பந்தியா இருந்த என்னானு ஒரு சொலவடை உண்டு.அதுமாதிரி இறைவன் நினைச்சுட்டா இந்த கிரகமெல்லாம் என்ன செய்யமுடியும்?



அந்த நேரத்து என் ஆத்யாத்ம சாதனைகளை சொல்லனும்னா அதுக்கு ஒரு தொடர்பதிவு போடனும். (ஸ் அப்பாடா தவளைப்பாய்ச்சல்னா இதான்பா) எப்படியோ 1.2 லட்சம் வந்துருச்சு.



அந்த நேரத்துல உசுரு பிழைச்சதே ஒரு சாதனை. இதுல காசு பணம் வேற. என்னதான் அந்த நேரம் நமக்கும் பெருமாளுக்கு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்தாலும் அப்ப இருந்த நேரத்துக்கு ஒரு சாதுவை வணங்கினா படக்குனு பரிகாரம் கிடைக்கும். இந்த மேட்டர் நமக்கு அப்பறமா தானே தெரியும்.பாபாவுக்கும்,பக்தவத்சலருக்கும் மின்னாடியே தெரியுமே. அவிக ஏதோ பேச்சுவார்த்தை நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுட்டாப்ல இருக்கு.



கைல காசு வந்தது. கூடவே அதை சேர்த்து வச்ச எங்கப்பனோட கருமம்,புத்தி,அவருக்கிருந்த ஃபேட்டல் வீக்னெஸ், வியாதி (கேஸ் ட்ரபிள்) எல்லாமே வந்துருச்சு. பழைய பாக்கிஎல்லாம் ஒழிச்சு, புதுக்குடித்தனத்துக்கு (அதுவரை அப்பன் செத்த 3 வருஷம் வரை எங்கண்ணே குடித்தனம் பண்ணோம்.. ஏதோ காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தோம். ஜஸ்ட் வெயிட்டிங் ஃபார் ஆஃபர்ஸ்) தேவையான சாமான் செட்டெல்லாம் வாங்கி ஒரு பார்ட்டிக்கு 35 ரெண்டு பார்ட்டிகளுக்கு தலா 10 , ஒரு நாய்க்கு அஞ்சு கடன் கொடுத்து ( எல்லாம் ரெண்டு வட்டிக்குத்தேன். அப்ப மார்க்கெட்ல பத்து வட்டி ஓடுது. இப்பல்லாம் நாப்பது வட்டிதான். )



இப்படி வேட்டுவிட்டுட்டு பேங்க் அக்கவுண்ட்ல ஜஸ்ட் 3000 வச்சிருக்கேன். அப்பத்தான் மார்க்கெட் சவுக்குக்கு போனேன். நாலு பேருங்கற பதிவுல வர்ர டாக்டர்(?) பண்டரி, மிலிட்டரி ஓட்டல் மகேந்திரன், ஸ்லேட் வியாபாரி பரமேச்சு , மென்ஸ் ப்யூட்டி பார்லர் வடிவேலுல்லாம் அங்கனதான் டச்.



வடிவேலு பாபா பக்தன்.பாபா எப்படி அவனுக்கு டச் ஆனாரு? அவன் பக்தி எப்படிப்பட்டது? ங்கற மேட்டரை ஒரு பாரால முடிச்சுருவம்.



சாதாரணமா ஐயருங்க, செட்டியாருங்க, நாயுடு வீட்டு பசங்கல்லாம் என்னதான் ட்யூப் லைட்டுங்களா இருந்தாலும் அப்பன் ஆயி சொத்து, பதவி ,ஃபேமிலி பில்டப்புக்காகவாச்சும் கு.பட்சம் இண்டர் , அதிக பட்சம் டிகிரிய எட்டி பிடிச்சுருவாய்ங்க.



கெட்டுக்கீரை வழியா போறதெல்லாம் யாருன்னா ரெட்டி, நாயக்கர் பசங்க. இவிக கெட்டுப்போறதுமில்லாம இன்னபிற சாதி பசங்களையும் ஜமா சேர்த்துக்கிட்டு ஒரு நாலஞ்சு வருசம் ரவுசு விட்டுக்கிட்டிருப்பாய்ங்க. ஃபேமிலி பேக் கிரவுண்டை பொறுத்து ரெட்டி பசங்க சிமெண்ட் டீலரோ, ஹார்ட் வேரோ, பவுல்ட் ரி ஃபார்மோ பார்த்துக்கிட்டு செட்டில் ஆயிருவாய்ங்க. (இதுலயும் கெட்டுப்போன வமிசமா இருந்தா எங்கன குவார்ட்டர் கிடைக்கும்னு அலைஞ்சிகிட்டே கிடக்க வேண்டியதுதான்) நாயக்கர் பசங்க கதை வேற ஏறினா ரயில் இறங்கினா ஜெயில், இதுல நாறிப்போறதெல்லாம் யாருன்னா எஸ்.சி பசங்களும், வடிவேலு சாதி பசங்களும்தான். இவிக முழிச்சிக்கிறதுக்குள்ளாறவே இளமை இறங்கி போயிருக்கும். யதார்த்தம் கழுத்தை நெறிக்கும். இதுலயும் சிலர் ரியலைஸ் ஆகி புலி மேல இருந்து இறங்கி ரொட்டீனுக்கு வந்துர்ராய்ங்கனு வைங்க.



நம்ம வடிவேலு எந்த காலத்துலயுமே புலி மேல சவாரி பண்ணவன் கிடையாது. ஜஸ்ட் பிகில் ரவுடிதான். ( எதிர் க்ரூப் விசிலடிச்சா வீட்டுக்கு ஓடி வந்துர்ர பார்ட்டிக்கு இப்படி ஒரு பேரு). அண்ணன் பண்டரிய பிடிச்சு வார்ட் பாயா சேர்ந்துட்டான். வடிவேலு டென்த் ஃபெயிலாகி டைட் ஃபிட்டிங் பேண்ட், உடம்பை கவ்வி பிடிக்கிற டீ ஷர்ட்டு,முகமெல்லாம் லோக்கல் டால்க்கம் பவுடருமா ஹை ஸ்கூல், இண்டர் குட்டிகளை சைட் அடிச்சிக்கிட்டு கிடப்பான். வாய் உதாருன்னு கேள்விப்பட்டிருப்பிங்கள்ள. அந்த வாய் உதாருக்கு இருப்பிடம்,பிறப்பிடம்,கழிப்பிடம் எல்லாம் வடிவேலுதான்.



அண்ணன் ஜி.ஹெச் லயும் வேலை செய்துக்கிட்டு கடைல வேலையும் செய்திக்கிட்டு கண்ணாலம் கட்டிக்கிட்டு (ரியாலிட்டிய புரிஞ்சிக்கிட்டு) அம்மன் பக்தனா ப்ரயோஜகனா (யூஸ் ஃபுல் ) மாறிட்டான். வடிவேலுக்கு டப்பா டான்ஸ் ஆட ஆரம்பிச்சது. இவனோட சுத்தின ரெட்டி, நாயுடு, நாயக்கர் பசங்கல்லாம் லைஃப்ல செட்டிலாயிட்டாய்ங்க. மேல கீழ காஞ்சு போயி ஒரு வித க்ரைசிஸ்ல சொசைட்டில தனக்கிருந்த இமேஜை மாத்திக்கவோ அல்லது ஊர்ல இருக்கிற கொலைகாரன் எல்லாம் பாபா பக்தனாகி காண்ட்ராக்டர், கவுன்சிலருன்னு செட்டில் ஆயிட்டதாலயோ வடிவேலுவும் பாபா பக்தனாயிட்டான் போல.



அவன் கிட்டே ஒருத்தன் வேலை செய்துட்டிருந்தான். பேரு முத்து. ரெம்ப சின்ஸியர் ஃபெல்லோ. வியாழக்கிழமைன்னா கடை மொத்தத்தயும் க்ளீன் அண்ட் க்ரீன் பண்ணி சாமி படம்லாம் துடைச்சி ,சந்தனம்,குங்குமம் வச்சி. ஊதுவத்தி,கற்பூரம்லாம் தயாரா வச்சி, லோக்கல் ஸ்வீட் ஸ்டால்ல இருந்து 50 கிராம் பூந்தி வாங்கியாந்து வச்சிருப்பான். நம்ம வடிவேலு 6 மணிக்கு இரவல் டூ வீலர்ல வீட்டுக்கு போய் ரெண்டு மணி நேரம் குளிச்சு முழுகி மூஞ்சிக்கி ஃபேர் அண்ட் லவ்லி, மீசைக்கு ஐ லைனர் எல்லாம் போட்டுக்கிட்டு ( வயசு 40) கடைக்கு வருவான் பட படன்னு இருக்கிற ஊதுவத்தியெல்லாம் கொளுத்திட்டு பூந்தி பொட்டலத்தை பிரிச்சு கற்பூர ஹாரத்தி காட்டிருவான். முட்டை கண்ணை திறந்து வச்சிக்கிட்டு ஒரு ரெண்டு நிமிஷம் என்னவோ முணு முணுப்பான் .இது முடிஞ்சதுமே ரெம்ப டயர்டாயிட்ட மாதிரி வெளிய வந்து ஒரு ரெட் வில்ஸ் பத்த வச்சுப்பான். இதான் அவனோட பூஜா விதானம்.



கேரக்டர் வைஸ் பார்த்தா பயங்கர டகுலு.பயங்கர பீலா.ஃபால்ஸ் ப்ரஸ்டிஜ்,ஜொள்ளு பார்ட்டி, செல்ஃபிஷ், ஒரு பீரு கிடைக்குதுன்னா என்ன வேணம்னா செய்வான்

அநியாயத்துக்கும் ரெடி.டாக்டர் பண்டரியோட சிஷ்யன் (எடு பிடி). பண்டரி ஏட்டு, ஏ.எஸ்.ஐ ரேஞ்சுல பண்ற அநியாயத்தை எல்லாம் இவன் கான்ஸ்டபிள் ரேஞ்சுல பண்ணுவான். போலீஸ் நாய்களுக்கு லஞ்சம் கலெக்ட் பண்ணி கொடுக்கிறது இவன் வேலை. காயிதம் பொறுக்கிறவனை பத்தி கூட போலீஸுக்கு போட்டு கொடுத்து லஞ்சம் கலெக்ட் பண்ணுவான், சென்டர்ல அமுக்குவான். அதை வச்சி கான்ஸ்டபிள்களை குளிப்பாட்டுவான்.



(இத்தனை செய்தும் ஒரு நாள் நாங்கதான் அவனை ஸ்டேஷன்ல இருந்து மீட்டுக்கிட்டுவரவேண்டியதாயிருச்சு அது வேற கதை)



காரியம் பெரிசா வீரியம் பெருசான்னா காரியம் தான் பெருசுன்னு பூட்ஸ நக்கவும் தயாராயிருவான். இதான் வடிவேலுவோட செனோரியா.என்ன தான் சாதில வேறயா இருந்தாலும் எல்லாமே அய்யரு புத்தி.



ஆனால் பாபா என்னை தன் பேட்சுல சேர்த்துக்க இந்த வடிவேலுவைத்தான் உபயோகிச்சாரு. அவன் பண்ண அட்டூழியங்களுக்கு அவனுக்கு தண்டனை வழங்க, என் காசை அவன் விழுங்கி என் கருமத்தையெல்லாம் அவன் அனுபவிக்க, என் உயிரை காப்பாத்த பாபா சூப்பர் ஸ்கெட்ச் போட்டாரு. அந்த விவரத்தையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்.

Thursday, October 22, 2009

விரைவில் ரிலீஸ்

விரைவில் வெளிவர இருக்கும் பதிவுகள்
1.மனிதன் மிருகமாகவே வாழ்ந்திருந்தாலும் சரியே
2.உலக அழிவு எப்போது ?
3.பிறன் மனை விழையாமை
4.தெலுங்கு கற்றுக்கொள்ளுங்கள்
5.விற்பனையை அதிகரிப்பது எப்படி?
6.விளம்பரங்கள் பிடிப்பது எப்படி ?
7. நான் ரசித்த வரிகள்
"முடியறவாளுக்கு எப்பவும் முடியும் முடியறவாளுக்கும் காலத்துக்கும் சம்பந்தமில்லே"
-லா.ச.ராமாமிருதம் (என் பிரியமுள்ள சினேகிதியே)
8 சரஸ்வதி சபதம் ( நாடகம்)

முகேஷ் ( என் பாத்திரம்) 21 ஆம் நூற்றாண்டுல கல்வி, வீரம், செல்வம் இதுக்கெல்லாம் அர்த்தம் மாறிப்போச்சு , மூனுமே நாறிப்போச்சு இதுக்கெல்லாம் ஒரு தேவதையாம் அதுக்கு பூஜையாம் புனஸ்காரமாம் என்று கண்ட மேனிக்கு கலம்பகம் , அறம் எல்லாம் வச்சு கவிதை பாட நாரதர் போய் முப்பெரும்தேவியருக்கு போட்டுக்கொடுக்க அவர்கள் பூலோகம் வந்து முகேஷுடன் வாதிட உலகத்துல கு.பட்சம் இந்தியாவுல மட்டுமாவது உபயோகமான கல்வி, நேர்மையான செல்வம், தியாகத்துக்கு தயாராக உள்ள வீரம் செழிக்க ஒர்க் அவுட் பண்ணுகிறார்கள். இந்த முயற்சியில் மலைமகள், மலர்மகள், கலைமகள் மூவருமே செல்வமிழந்து தோற்று தத்தம் உலகத்துக்கு போய்விடுகிறார்கள்
(To be continued

9.வெற்றியை விரும்புபவர்களின் ரோல் மாடல் ஸ்ரீராமன்
10.பங்காரு அடிகளாருக்கு 10 கேள்விகள்
11.எங்கே பாலகுமாரன்?
12. பெண் சுதந்திரத்தால் பெண்ணினத்துக்கு பேரிழப்பு
13. சில சிறு கதைகள்
அ) புதுமை வார இதழுக்கு தரமான படைப்புகள் பெற வழி குறித்து சர்ச்சை பத்திரிக்கை காரியாலய டஸ்ட் பின்களில் மட்டுமே கிடைக்கும் என்று முடிவு

(To be continued

14. சில துளிப்பாக்கள்
அ) கிழமே சுருக்கமாய் சொல் - சீறும் இளைஞன் முகத்தில்
முதுமையின் சுருக்கம்
இ)எனது எழுத்துக்களுக்கான உந்து சக்தி இன்றைய சமுதாயத்து சகதிகளே
ஆனால் பயணம் மட்டும் நாளைய ஆதர்ச சமுதாயம் நோக்கியே
ஈ ) நாளைய உலகின் விமர்சனத்தை எதிர்கொள்ள நாணி
இன்றைய உங்களை சாடி ஏற்கின்றேன் உங்கள் விமர்சனங்களை இன்று
உ) நில்லாது சுழலும் காலச்சக்கரம்
அது சொல்லாது சொல்லும் சேதி
எனக்கு புரிந்து போனதால் தான்
என்னை புரிந்து கொள்ள முடியாத உங்களை
புரிந்துகொள்ள முடிகிறது என்னால்
ஊ) இன்று நான் தருவன இலவசம்
நாளை இவற்றின் விலை ஒரு ஆயுட்காலம்.
இலவசம் மறுத்து விலை தந்தே பெறுவம் எனில் உம் வாழ்க்கை விதிவசம்

எ)அன்று என் தந்தையிடம் உமக்காய் வழக்காடி வெளி நடப்பு செய்து
உம்மிடை வந்து உரத்து குரல் கொடுக்கிறேன்.
நீங்களோ உம் கூடுகளிலிருந்தபடி நடத்துகின்றீர் உள்ளிருப்பு போராட்டம்

ஏ)உங்களுக்குள் வாழ்தல் என் தந்தைக்கே கடினம்
இதில் என் கருத்துக்கள் நுழைதல் எங்ஙனம்?
(To be continued

மாறிய வீடுகள் 28 (1991-2009)

1.1991 நவம்பரில் திருமணமான இரண்டு மூன்று நாட்கள் என் பாட்டியின் தங்கை மகன் லட்சுமணன் (மொடா ,படா குடியன் . ஐம்பதில் திருமணம் செய்து , லாரி விபத்தில் கிட்னியில் அடிப்பட்டு அகாலமாய் செத்தான். நான் செய்த முதல் ரத்த தானம் இவனுக்காகத்தான்) வீட்டில் ஒண்டியிருந்த பிறகு குதிர்ந்தது சித்தூர் வேப்பமரத்தெருவில் ஒரு வீடு. தெருப்பக்கம் ஒரு அறை. உள்............ளே ஒரு அறை அது சமையலறை.
இந்த வீட்டில் ரொம்பகாலமெல்லாம் வசிக்கவில்லை. 1992 ஜனவரி 1 க்கு சத்தியவேடில் இருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
2.சத்தியவேடில் சித்தி வீட்டில் சில காலம்
3. அங்கிருந்து கும்மிடி பூண்டியில் பாய் வீடு ஒன்றில் வாசம். செக்யூரிட்டி சார்ஜெண்டாய் வேலை.
(To be continued