யாராச்சும் வில்லங்கம் பண்ணா அகராதி பிடிச்ச பயங்கறாய்ங்க. ஏன்? அகராதின்னாலே அகராதி பிடிச்சதுதான். பகம் என்ற சொல்லுக்கு யோனி என்றும் ஒரு பொருள் உண்டாம். அப்போ பகவான் என்றால் என்ன பொருள்? பொருள் விளங்காத சொற்களுக்கு பொருள் தர்ரதே அகராதியோட வேலைன்னா பொருள் விளங்காத சொற்களையெல்லாம் இவிக ஏன் உபயோகிச்சாய்ங்கன்னு ஒரு சந்தேகம் வருது. எந்த மொழிய வேணம்னா பாருங்க அதுல ரெடு பிரிவு இருக்கு. ஒன்னு பண்டிதர்களுக்கானது. அடுத்தது பாமரர்களுக்கானது. பச்சையா சொன்னா உயர்சாதிக்காரவுகளுது ஒரு மொழி. அவர்களால ஒடுக்கப்பட்டவுகளோடது ஒரு மொழி. பண்டித மொழி எப்பயுமே நிலத்தில கால் பாவாத சமாசாரங்களை பேசும். ஒடுக்கப்பட்டவுகளோட மொழி மண், மனிதனோட பிரச்சினைகளை பேசும்.
சரி வெடி வச்சாச்சு. வெடி சிரிப்புக்கு வழி பண்ணவேணாமா அதான் நம்ம பங்குக்கு வலையுலக அகராதி
ப்ளாக் :
பத்திரிக்கை என்ற காதலியின் மடியில் இடம் கிடைக்காதவர்கள் அனுபவிக்கும் சுய இன்பம்
ப்ளாகர்:
பல நேரம் தன் சொந்த ப்ளாகிலும் சில நேரம் அடுத்தவர் ப்ளாகிலும் அசிங்கம் பண்ணுபவர்
பதிவு:
கூட்டம் சேர்க்க காட்டப்படும் செப்படி வித்தை (ஓவரா போனா செருப்படியும் கிடைக்கும்)
மறுமொழி இடுவோர்:
ப்ளாகரின் உழைப்பில் பெயர் தேடுவோர்
பார்ப்பனீயம்:
கடந்த காலத்தை மறைத்து நிகழ்காலத்தை மட்டும் பூதக்கண்ணாடியில் காட்டுவது
பெரியாரியம்:
நிகழ்கால வாய்ப்புகளை பயன்படுத்தி எதிர்காலத்தை பேசாது கடந்த காலத்தை மட்டுமே பேசி மாய்வது
பிரபல பதிவர்:
தனக்கென்று ஒரு கூட்டத்தை வைத்திருப்பவர்
ஈழம்:
புதுப்பட விமர்சனம் போல் பதிவுக்கு விஷயம் கிடைக்காத போதெல்லாம் கை கொடுப்பது
ராஜ பக்ஸே:
தமிழின துரோகங்களை , புலிகளின் தவறுகளை அழிக்க உதவும் ரப்பர் கட்டி
வலைப்பக்கத்தை பார்க்க அழைப்பு:
எத்தனை நாள் தான் என்னுத நானே பார்த்து இம்சை படறது நீங்களும் வந்து பாருங்களேன்
பதிவுக்கு ஓட்டு:
பரஸ்பர ஒப்பந்தம். எனக்கு நீ போடு உனக்கு நான் போடறேன்