மது மனித மனங்களின் மேல் ஏற்படுத்தும் பாதிப்பை அடுத்த பதிவுல பார்ப்போம்னு சொல்லியிருந்தேன். அதை இப்ப பார்ப்போம். இன்னைய தேதிக்கு எந்த மன்சனுக்கும் இன்றைய சமுதாயத்து மேல நல்ல அபிப்ராயம் கிடையாது. ஒவ்வொரு மன்சனும் இந்த சமுதாயத்துக்கு எதிரா புரட்சி பண்ணத்தான் நினைக்கிறான். தகிரியம் பத்தாம பண்றதில்லை. ஒவ்வொரு மன்சனும் இந்த சமுதாயத்தை மறுக்க நினைக்கிறான். எதிர்க்க நினைக்கிறான். அதுலயும் சக்தியின் ஊற்றுக்கண் உயிர்ப்பா இயங்கறச்ச, அந்த சக்தி செக்ஸ் பவரா வெளிப்பட துடிக்கிறச்ச செக்ஸ் தடை செய்யப்பட்டுள்ள சமுதாயத்தை இளைஞர்கள் மறுக்க எதிர்க்க துடிக்கிறது சகஜம். தங்கள் எதிர்ப்பை பல வகைல பதிவு பண்றாய்ங்க. பான்,பீடா,பீடி,சிகரட்,கலர் பார்க்கிறது, ஈவ் டீசிங் எல்லாமே சின்ன சைஸ் புரட்சிகள் தான்.
தண்ணீ சமாசாரமும் இந்த புரட்சில ஒரு பாகம்தான். மேலும் நிப்பிள் காம்ப்ளெக்ஸும் குடிப்பழக்கத்துக்கு ஒரு காரணம்ங்கறத மறக்க கூடாது. பிறந்த குழந்தை கறந்த பாலா இருக்கு. ஆனால் பெற்றோர், உறவுகள், ஆசிரியர்கள், சமுதாயம் எல்லாருமா சேர்ந்து அந்தப்பாலை ரோஸ் மில்க்கா, பாதம் மில்க்கா, மில்க் ஷேக்கா, தூத் பேடாவா மாத்தறாய்ங்க. இவிக என்னதான் அந்த குழந்தைங்கற கறந்த பாலை பல விதமா மாத்தினாலும், தான் கறந்த பாலா இருந்த நினைவுகளை அந்த குழந்தை இழக்க மறுக்குது. அந்த நினைவுகளை பொத்திப்பாதுகாக்க துடிக்குது/
செக்ஸ் கூட மறுபடி குழந்தைகளா மார்ரதுக்கான ஒரு முயற்சின்னுகூட சொல்லலாம்.( நிர்வாணம், மார்பு சுவைத்தல், கருப்பைக்குள் மீண்டும் நுழைய முயற்சித்தல்) .தியானம், யோகம் எல்லாமே மீண்டும் குழந்தையா மார்ரதுக்கான ஒரு முயற்சித்தான்.
ஒன்னையே நினைச்சு, அதையே பேசி, அதையே செய்து, அதையே சொல்லக்கூடிய நிலை ஒரு மனிதனுக்கிருந்தா அவன் மனசுல எந்தவித காம்ப்ளெக்ஸுகளும் இருக்காது. சைக்கிரியாட் ரிஸ்டுங்களுக்கு வேலையே இருக்காது. ஆனால் சமுதாய நிலை இப்படி இல்லை.
நினைக்கிறது ஒன்னு, சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு, செய்ததா சொன்னது ஒன்னு. இதனால மனுஷனோட நினைவுகள் சிதறிப்போகுது. அந்த நினைவுகளை நொடிக்கு நொடி ரீ கன்ஸ்ட்ரக்ட் செய்துக்க வேண்டியிருக்கு. ரகசியம் காக்க வேண்டியதாகுது. இதனால மனசுல முடிச்சுகள் விழுது. தனக்குள்ள நடக்கிற கருத்து மோதல்களை , கலவரங்களை ஒரு ஸ்டேஜ்ல தாங்க முடியாம தன்னை தான் மறக்க விரும்பறான். மைண்டுங்கற கம்ப்யூட்டருக்கு ஒரு ரீசெட் பட்டன் தேவைப்படுது.
இளைஞர்கள் சுய இன்பத்துல ஈடுபட காரணம் அதுல கிடைக்கிற இன்பத்தை விட ஹேங்க் ஆயிட்ட மைண்டுங்கற கம்ப்யூட்டரை ரீ செட் பட்டன் அழுத்தி வழிக்கு கொண்டுவர்ர டெக்னிக்கோங்கற சந்தேகமும் எனக்குண்டு. லாலா பார்ட்டிங்க தண்ணீ போட கூட இதான் காரணமோன்னு ஒரு சம்சயம். நிற்க..
தண்ணி போடக்கூடாது, போட்டா சமுதாயத்துல மரியாதை இருக்காதுங்கற எண்ணம்லாம் எல்லாருக்கும் இருக்கும். இன்னைய தேதிக்கும், அரசாங்கமே கூவி கூவி சரக்கு விக்கிற இந்த நாள்ளயும் குடிக்கிறவன் கேவலமானவன்னு நினைக்கிற குடும்பங்கள் நம்ம நாட்ல கோடிக்கணக்குல இருக்கு.
ஆனாலும் குடிக்கிறாய்ங்கன்னா என்ன அர்த்தம் .அவிக இந்த போலித்தனமான சமுதாயத்தை வெறுக்கறாய்ங்க. தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பறாய்ங்க. கொஞ்ச நாழியாவது பெரியவங்க உலகத்தை விட்டு குழந்தையா மாற விரும்பறாய்ங்க.
லாலா போட்டதுமே சிறுமூளையோட செயல்பாடு மங்குது, கை,கால்களை இயக்குற மோட்டார் சிஸ்டம் மங்குது, உடல் குறித்த நினைவு மங்குது, ரிஃப்ளெக்ஸ் மங்குது, சாக்கிரதை உணர்வுகள் மங்குது. ரத்தத்துல கலந்துட்ட ஆல்க்கஹாலை சுத்தப்படுத்த ரத்த ஓட்டம் வேகமாகுது. சமூகத்துக்கு பயந்து சப் கான்ஷியஸ்ல புதைச்சு வச்சிருந்த காமம், கோபம், வன்முறை எல்லாம் வெளிப்படுது. (ஆக்சுவலா அதை கண்ட்ரோல் பண்ணிக்கிற கெப்பாசிட்டி மங்குதுன்னு சொல்லனும்) . இந்த மாற்றம் ஒரு வித சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ தருது. எல்லாம் ஓகேதான். ஆனால் மனித உடல்ங்கற அற்புதமான இயந்திரம்