Wednesday, September 14, 2016

ஆசைகளின் மூலம்

அண்ணே வணக்கம்ணே !

உலக துன்பங்களுக்கு ஆசையே காரணம்னு புத்தர் சொன்னார். எந்த பிரச்சினையா இருந்தாலும் அதனோட மூலம் என்னன்னு தெரியாம தீர்த்து வைக்கவே முடியாது .இந்த பதிவுல ஆசைகளின் மூலம் என்னனு சொல்லப்போறேன்.

ஆசை  வெட்கமறியாது ! காமாதுரானாம் நா பயம் நா லஜ்ஜானு சொல்லியிருக்காங்க. அதாவது காம வயப்பட்டவனுக்கு பயமோ வெட்கமோ இருக்காதாம். காமம்ங்கறது உயிரின் அடிப்படை -அடி நாதம். அதை நாம என்னைக்குமே எதிர்த்ததில்லை. இன்னம் சொல்லப்போனா பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதியே வழங்கிரனுங்கறதுதான் நம்ம ஸ்டாண்ட். அதை விடுங்க..

காமம்ங்கற வார்த்தைக்கு வெறுமனே செக்ஸ் மட்டும் பொருளில்லை . ஆசைகளும் தான். ஆசைன்னா ஸ்பைஸ் வச்சுக்கறதுலருந்து - ஏரியாவுக்கு ஒரு ஃப்ளாட் வாங்கறது வரை ஆசைதான். "அந்த"ஆசை தீராத சன்மங்க தான் /அதுக்கு குவாலிஃபைடா இல்லாத சனம் தான்/ அதுக்கான வேலிட்டிட்டி தீர்ந்து போன சன்மங்க தான் இப்படி அலையுதுங்கறதுதான் என் ஹஞ்ச்.

நம்ம ஆசைகளை எல்லாம் 3 கேட்டகிரியா பிரிச்சுக்கலாம் மொத கேட்டகிரி  "அதுக்கு" ப்ரிப்பேர் ஆறதுக்குண்டா ஏற்பாடுகள் (கல்வி/வேலை /சம்பளம்/ஃப்ளாட்/க்யாஸ் சிலிண்டர்) . அடுத்தது அது கிடைச்ச பிறவு பலகீனமடையும் உடலுக்கு/மனசுக்கு  ஒத்தாசையா /இதம்மா சில ஏற்பாடுகள். அடுத்த கேட்டகிரியில தான் அவலை நினைச்சு உரலை இடிக்கிற காரியங்கள்ளாம் வருது .

இதுல உள்ள சோகம் என்னடான்னா எந்தவித ப்ரிப்பிரேஷனும் இல்லாம இயற்கை ஒரு கொடை போல /பம்பர் பரிசு போல செக்ஸ் பவரை கொடுத்திருக்கு .அது பொங்கி சீறும் போது வடிகால் கிடையாது . காளை மாட்டுக்கு புல்லை காட்டி ரேக்கி விட்டே வேலை வாங்கறாப்ல படிப்பை முடிச்சாச்சுன்னா வேலை -வேலை கிடைச்சதுமே பலாந்து பலாந்துனு குடும்பம்/சமூகம் எல்லாமே ட்ரில் வாங்குது .

எப்ப இவன் குவாலிஃபைட் ஆகிறானோ அதுக்குள்ளயே இயற்கை தன் கொடையை அளந்து கொடுக்க ஆரம்பிச்சிருது . இவன் எதுக்கு குவாலிஃபைடாகனும்னு ஒர்க் அவுட் பண்ணானோ அந்த ஒர்க் அவுட்லாம் சேர்ந்து அந்த அசலான மேட்டருக்கே ஆப்பு வச்சிருது .

இப்ப அந்த அசலான மேட்டர்ல உள்ள டெஃப்சிட்டை ஈடு கட்ட என்னென்ன இழவையோ இட்டு கட்ட வேண்டியதாயிருது. ஒரு கட்டத்துல ஈடு கட்டவே முடியாதுங்கற தெளிவு வந்தோன்ன இவரு வேட்டைக்கு புறப்படுறாரு. தங்க வேட்டை /பண வேட்டை .ஜஸ்ட் எஸ்கேப்பிசம்.

யதார்த்தம் என்னன்னா பலான மேட்டரு மட்டும் பக்காவா இருந்தா எந்த டெக்கரெஷனும் தேவையில்லை. பலான மேட்டரு புட்டுக்குச்சின்னா எந்த டெக்கரேஷனும் ஒர்க் அவுட் ஆகாது.

பொஞ்சாதிக்கு செக்ஸ் கொடுக்க முடியாதவன் அவ பெத்ததுக்கு சொத்து சேர்க்கறதா பம்மாத்து பண்றான். என்னா லாஜிக்கு?

ஆசைகளின் சில்லி வேரை பிடிச்சுக்கிட்டு சில்லியா ஜல்லியடிச்சுக்கிட்டிருந்தா ஆசைகளுக்கு முடிவே இல்லை .
ஆசையோட ஆணி வேரை கெல்லி எடுத்து பார்த்தாச்சுன்னா ஆசைகளுக்கு அர்த்தமே இல்லை ..


Friday, September 9, 2016

மோடியின் நிஜமுகம் -ஜெ'வின் கோரமுகம்






#கவர்ஸ்டோரி #அதிரிபுதிரிதகவல்கள் #ஜெஅரசின்கோரமுகம் #மோடியின்நிஜமுகம்






பாஸ் !


இந்த மேட்டரு கோர்வையாவே இல்லாம உதிரியா இருக்கிறதா தோனினாலும் ஒரு கவர் ஸ்டோரிக்குண்டான "தாக்கத்" இதுல இருக்கு. அதுக்கு நான் கியாரண்டி.


இருந்தாலும் இதை மீடியா முதல் முக நூல் பிரபலங்கள் வரை யாரும் கண்டுக்கறதே இல்லை. அதான் இந்த ஸ்லாங் மற்றும் அலட்சியத்துக்கு காரணம்.


நீங்க இதை பொதுவெளியில போட்டு உடைக்கிறதா இருந்தா எந்த டீடெய்ல் /எத்தனை ஆதாரம் வேணம்னாலும் தரேன்.


ஜன நாயகம்/மக்களாட்சின்னா என்ன? மக்கள் தங்களை தாங்களே ஆள்வது .இந்தியாவுல சனத்தொகை சாஸ்தி. ஸ்விஸ் மாதிரி நேரிடையா ஆள முடியாதுங்கறதால மக்கள் தங்கள் பிரதி நிதிகளை அனுப்பி வைக்கிறாய்ங்க.


அவர்கள் தான் மக்கள் கருத்தை பிரதிபலிக்கனும். மக்கள் நலன் நாடும் சட்டங்கள் செய்யனும்.


அதுக்காவ மக்கள் தங்கள் கருத்தையே சொல்ல கூடாதுன்னும்/மக்கள் கருத்தை மேற்படி பிரதி நிதிகள் பிரதிபலிக்காவிட்டாலும் அடுத்த தேர்தலுக்காக வெய்ட் பண்ணனும்ங்கறதும் கயவாளித்தனம்.


மக்கள் தங்கள் கருத்துக்களை நேரடியா தங்கள் பிரதி நிதிகளுக்கோ /அவர்களை வழி நடத்தும் சபா நாயகர்களுக்கோ அனுப்ப முடியும். அவர் தம் கட்சி தலைமைக்கும் அனுப்ப முடியும்.


அவற்றை பரிசீலிக்க வேண்டியது அவர்களின் கடமை . ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் தலை எழுத்து. கு.பட்சம் நிராகரிக்கவாவது செய்யனும்ல?


சுய புத்திதான் இல்லை. சொல் புத்தியாவது இருக்கும்னு நினைச்சது தப்பா? இப்படி நினைத்துதான் இந்த நாடும்,இந்திய மானிலங்களும் உருப்பட திட்டம் தயாரிச்சு அனுப்பினம்.ஆனால் எவனும் கண்டுக்கல. கண்டுக்காட்டியும் பரவால்ல. கொய்யால ஃப்ராடு பண்றானுவ.


பிரதமர் அலுவலகம் என்னடான்னா 2014 ஜூலை முதல் 2015 மார்ச் வரை டைம் எடுத்துக்கிட்டு -அதுவும் ஆர்.டி.ஐல கேட்ட பிறவு " ரிசீவ்ட் கெப்ட் ஆன் ரிக்கார்ட்"ங்குது . ரிக்கார்ட்ல வச்சு என்ன பண்ணுவானுவன்னு நமக்கு தெரியாதா என்ன? (லேசு பாசா சுடவும் ஆரம்பிச்சுட்டாய்ங்க) இதை எல்லாம் இந்த வீடியோவுல சொல்லியிருக்கன்.

https://youtu.be/LVbSriWmZBQ







தமிழ் நாடு முதல்வர் சிறப்பு பிரிவு என்னடான்னா டாஸ்மாக் எம்.டிக்கு ஃபார்வர்ட் பண்ணுது . டாஸ்மாக் எம்டி தான் பதில் தராரு.


வக்கணையா கேள்வி கேட்டு வீடியோ போட்டு வீடியோவோட தொடுப்பையும் கொடுத்து  தனிப்பிரிவுக்கு எழுதினா......... மறுபடி டாஸ்மாக் எம்.டி.தான் பதில்கொடுக்கிறாரு .


தமிழகத்தை ஆள்றது முதல்வரா? அல்லது டாஸ்மாக் எம்.டியா? இந்த கேள்வியை கேட்டு முக நூல்ல அலப்பறை பண்றம் -கலைஞர்/ஸ்டாலினுக்கெல்லாம் புகார் அனுப்பறம். முக நூல்ல அப்டேட் பண்றம்.
திடீர்னு டாஸ்மாக் எம்.டியும் -முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியும் "மாற்றல்" ஆனால் வெளி உலகத்துக்கு இந்த மாற்றலுக்கு பின்னானா காரணம் தெரியாது. சோகம் !


திமுகவுக்கு நீதிபோதனை செய்யும் சபா நாயகர் வருச கணக்கா நம்ம திட்ட பிரதிகளை டிக்கி கீழே வச்சு சூடுபடுத்திக்கிட்டே இருக்காரு ..


செரி ஆளுங்கட்சிதான் கண்டுக்கலன்னா எதிர்கட்சி தலைவர்கள் நிலையும் இதுவே.


கலைஞர்,ஸ்டாலின்,ஜகன் மோகன் ரெட்டி இப்படி ஆருமே ரெஸ்பான்ட் ஆகமாட்டேங்கிறாய்ங்க.

தாளி உன் திட்டம்லாம் சின்ன புள்ளத்தனமா இருக்குன்னு சொல்லி களட்டி விட்டுட்டாலும் பரவால்ல. ஊற வச்சு ஊறுகா போடுறாய்ங்க. அதான் கடுப்பாகுது.. தூத்தேறி ..

முக நூலில் பட்டையை கிளப்பும் .................... போன்றவர்கள் இந்த சப்ஜெக்டை கண்டுக்கிட்டா பத்திக்கும்.


(புள்ளியிட்ட இடத்தை உங்கள் ஆதர்ச பதிவரின் பெயர்கொண்டு நிரப்பி கொள்ளவும்). அவர்கள் பார்வைக்கு செல்ல இன் பாக்ஸ் வழியே சொல்விங்களோ?

சகட்டுமேனிக்கு ஷேர் பண்ணுவிகளோ உங்க விருப்பம்


என் திட்டங்கள் சுருக்கமாக:



தேச கனவுகள் (இந்தியாவின் முன்னேற்றத்துக்கான ப்ளூ ப்ரிண்ட்)


http://kavithai07.blogspot.in/p/blog-page.html



மானிலகனவுகள் (மானில அரசுகளின் நிர்வாக செலவை குறைத்து -மக்கள் மேல் பாரம் சுமத்தாமல் உபரி வருவாய் ஈட்ட யோசனைகள்)


http://kavithai07.blogspot.in/2016/09/2016.html



நரேந்திர மோடிக்கு அனுப்பிய யோசனைகள்


http://anubavajothidam.com/?p=12051



ஜெ'வை கிளிச்சு போட்ட வீடியோ


https://youtu.be/1kTric-nCcg



இதை எல்லாம் எப்படியாவது பொதுவெளிக்கு கொண்டு போகனும்னு துடிக்கிறேன். எப்பலருந்து? கடந்த 16 வருசமா.


நீங்களாவது உங்க டைம்லைன்ல/உங்க வலைப்பூவில்/வலைதளத்தில் போடுங்க. தகிரியமான ரிப்போர்ட்டர்ஸ் ஆருனா உங்க வட்டத்துல இருந்தா அவியளுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க ப்ளீஸ் ..






தங்கள் உண்மையுள்ள,


சித்தூர்.முருகேசன்









வாட்சப்: 9397036815

Thursday, September 8, 2016

மானிலகனவுகள் (அப்டேட்டட்2016)

அண்ணே ! வணக்கம்ணே !

மக்கள் மேல் பாரம் சுமத்தாமல்  மானில அரசின் வருவாயை கூட்டி /நிர்வாக செலவுகளை குறைத்து /அப்படியே சனத்துக்கும் பெட்டர் கவர்னென்ஸ் கிடைக்க வழி செய்யும் யோசனைகள்.

1.அரசு -அரசு சார்  நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ சோதனைகள் -  உடல் பருமன் மற்றும் அவர் தம் வேலை திறனுக்கு பங்கம் விளைவிக்கும் சுகவீனம் இருந்தால் கட்டாய ஓய்வு (பாதிசம்பளத்துடன்) ஆல்கஹால் இருந்தால் டி-அடிக்சன் சிகிச்சைக்கு அனுப்பவேண்டும். ஃபிட்னஸ் சர்ட்டிஃபிக்கேட்டுடன் வந்த பிறகு அடுத்த வரிசை எண்ணில் விவரித்திருக்கும்  அப்டேஷன் டெஸ்ட்.

2.உடல் ரீதியான தேர்வில் தேறியவர்களுக்கு கடந்த ஐந்தாண்டுகளில் உலக/தேசீய/மானில அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் /தனியார் துறை தாக்கம் + அரசு  நிறுவனங்கள் தம்மை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் -அதற்கான வழி முறைகள் குறித்து பயிற்சி -தேர்வு .தோற்றவர்களுக்கு பாதி சம்பளத்துடன் கட்டாய ஓய்வு -பிறகு மறு தேர்வு -அதிலும் தோற்றால் கோல்டன் ஷேக் ஹேண்ட்.

3.மேற்படி அரசு ஆணை வெளியிடும் முன்பாக தற்போதுள்ள காலியிடங்கள் + மேற்படி தேர்வுகளில் தோற்கும் வாய்ப்புள்ள ஊழியர்களின் பணியிடங்களை ரீ ஃபில் செய்யும் வகையில் தேவையான குறைந்த பட்ச தகுதி+ எதிர்பார்க்கும்  அதிகபட்ச லீஸ்ட் சேலரி அடிப்படையில் ஆண்/பெண்களை  தேர்வு செய்து /பயிற்சி கொடுத்து ரிசர்வில் வைத்துக்கொள்ள வேண்டும்.

4.கு.பட்சம் டிகிரி படித்து முடித்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகாத - நிருத்யோகர்களாய் இருக்கும் இளைஞர் இளைஞியரை  11 மாத காலத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்து உர்ய பயிற்சி தந்து அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் துறைகள்/அவை  சார்ந்த அலுவலகங்கள்/அவற்றை நாடி வரும் பொதுமக்களை பேட்டி கண்டு எங்கெல்லாம் லீக்கேஜ் இருக்கிறது /அதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று அறிக்கை வாங்கலாம். (வீடியோக்களாக)

5.மக்களில் பத்தாம் வகுப்பு படித்து 18-35 வயதுக்குள் திருமணம் இன்றி /விவாகரத்தாகி /மனைவியை இழந்து வாழும் அனைவருக்கும் போலீஸ் பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும். இவர்களை ஸ்டான்ட் பையில் வைத்து ஹானரோரியம் போல ஒரு தொகையை வழங்கலாம்.

குற்றங்கள்/குற்றவாளிகள்  குறித்த தகவல்களை சேகரித்தல் உள் துறை அமைச்சகத்துக்கு தருதல் இவர்கள் வேலையாக இருக்க வேண்டும்.
(எச்சரிக்கை: 4,5 வரிசை எண்களில் சொன்ன நியமனங்களுக்கு முன் கட்டாயம் மருத்துவ பரிசோதனை +அப்டேஷன் டெஸ்ட்  நடந்தேற வேண்டும்)

5.பொதுமக்கள் தாமாக முன் வந்து தம்மை குறித்த விவரங்களை ஆன்லைன் வழியே கொடுக்கும் ஏற்பாடு .அதன் ப்ரிண்ட் அவுட்டுடன் ஒரு அஃபிடவிட் கட்டாயம் .(தகவல்கள் உண்மை.தவறெனில் கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம்)  உடனடியாக எந்த சரிப்பார்ப்பும் இன்றி இந்த விவரங்களின் அடிப்படையில் நல திட்டங்கள் /வளர்ச்சி திட்டங்களில் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். பிறகு  ரேண்டமா கிராஸ் செக் பண்ணி பத்து பேரை உள்ளே வச்சா தவறான தகவல் கொடுத்தவன்லாம் திருத்திருவான்/கழண்டுக்குவான்.

6.அரசு விளம்பரங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமான தினசரியில் மட்டுமே வெளியாக வேண்டும் . இந்த தினசரிக்கு வளரும் எழுத்தாளர்கள் கு.பட்ச ஊதியத்துக்கு ஜம்ப்ளிங் முறையில் எடிட்டர் ஷிப் வகிக்கலாம்.

7.அரசு கட்டிடங்களை டைம் ஷேர் முறையில் தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடலாம். அதிக பட்ச காப்பு தொகையுடன்.

8 இதற்கு முன் அரசு கட்டிடங்களை நல்ல வெளிச்சம்/காற்று வரும்படி ஆல்ட்டர் செய்யலாம்.தாமே ஆல்ட்டர் செய்து உபயோகித்துக்கொள்ள முன் வரும் தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை.

9.இது மட்டுமல்ல அரசு கட்டிடங்களை உபரி வருவாய் ஈட்டித்தரும் வகையில் திட்டமிட வேண்டும். பொருத்தமான இடங்களில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்/பயோகியாஸ்/சோலார் பவர்/காற்றாலை/மரம் நடுதல் (பலன் தரும்)

10. பாழடைந்த அரசு கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்டி டைம் ஷேர் முறையில் உபயோகித்துக்கொள்ள முன் வரும் தனியார் நிறுவனங்களுக்கு உரிய காப்பு தொகையுடன் உடனடி அனுமதி .

11.அரசு பேருந்து நிலையங்களில்  சுற்றிலும் பில்லர் அமைத்து பறக்கும் பாலம் கணக்காய் கட்டி அதன் மேல் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் . BOT முறையில்.
_____________________

12.வாரத்துல ஒரு நாளை மாசு எதிர்ப்பு தினமா கடை பிடிக்கனும். பேருந்துகள் தவிர மற்ற அனைத்து வாகனங்களுக்கும் தடை (பாதுகாப்பு - தீயணைப்பு - மருத்துவ அத்யாவசிய தேவைகளுக்கான வாகனங்களுக்கு விதி விலக்கு ) சைக்கிளுக்கு வரி விலக்கு . டூ வீலர்ஸ்/கார்/வேன் களுக்கு மாசு வரி.வார நாட்களில் தில்லி கேஜ்ரிவால் ஃபார்முலாவை அமல் படுத்தலாம்.

13.போலீஸ் உட்பட அனைத்து துறைகளுக்கும் மக்கள் அளிக்கும் மனுவுடன் அஃபிடவிட் சேர்த்து தர உத்தரவு . 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மனுதாரருக்கு உடனடியாக ரூ.500. தவறான மனு /புகார் அளித்தவர்களுக்கு ரூ.1000 அபராதம்.

14.பஞ்சாயத்து  கூட்டம் நடக்கும் மீட்டிங் ஹால் முதல்  சட்டமன்ற ஹால் வரை ஓய்வு நாட்களுக்கு வாடகைக்கு தருதல் ( உச்சபட்ச காப்பு தொகையுடன்)

15.அரசு போக்குவரத்து ஊழியர்கள்,முன்னாள் ஊழியர்கள்,பயணிகள் இவர்கள் அனைவரையும் உள்ளடக்கி ஒரு கூட்டுறவு சங்கம். என்ட் ரன்ஸ் ஃபீஸ்/ வருடாந்திர சந்தா உள்ளிட்ட தொகைகளை அரசு போக்கு வரத்து கழகத்துக்கு வட்டியில்லா கடனாக தர ஏற்பாடு .  உறுப்பினர்களுக்கு அவர்தம் பயணங்களில்  உரிய தள்ளுபடி .இதனால் அ.போ.கழகம் தன்னை அப்டேட் செய்து கொள்ளும். உறுப்பினர்களுக்கு இது நம்முடையது என்ற ஃபீல் வரும் (எரிக்க மாட்டாய்ங்க)

16.பாதுகாப்பு தேவைப்படும் அரசு வி.ஐபிக்களுக்கான வாகனங்கள் தவிர மற்ற அரசு வாகனங்கள் அனைத்தையும் க்ளோபல் டெண்டர்  அழைத்து விற்று தொலைத்தல் .(அதான் ஓலா கீலான்னு ஆயிரம் ஆப்ஷன் இருக்குல்ல?)

17.அரசு அலுவலகங்களின் வேலை நேரத்தை காலை 6.00 முதல் மதியம் 2 வரை என்று மாற்றி விட வேண்டும். அனைத்து அலுவலக நடவடிக்கைகளையும் நெட் காஸ்டிங் செய்ய /மக்கள் பார்வையிட வாய்ப்பு தரப்பட வேண்டும்.

18.ஆடி/மார்கழி இத்யாதி மாதங்களில் நடக்கும் பத்திர பதிவுகளுக்கு தாராளமாக சலுகை வழங்குதல் .

19.ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஜப்பான் மாதிரி சின்ன சைஸ் சூட்ஸ் ஏற்பாடு செய்தல் இஸ்லாமியர்கள் வெளியூர் செல்லும் போது அந்தந்த ஊர் மசூதிகளில் தங்குவது போல் அரசு பணி நிமித்தம் வரும் அரசு ஊழியர்கள் மேற்படி சூட்ஸில் மட்டுமே தங்க உத்தரவு .

20.தினசரிகளில் அரைப்பக்கத்துக்கு மிஞ்சி விளம்பரம் தரும் நிறுவனங்களுக்கு சிறப்பு வரி (எலக்ட் ரானிக் மீடியா  விளம்பரத்துக்கும்  இதே போல் ஒரு சீலிங்)

22.  வீடு /அப்பார்ட்மென்ட்/கடைகளுக்கான வாடகை அக்ரிமென்ட் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். முன் பணம் அரசு  சேமிப்பு பத்திரங்களாக மட்டுமே கொடுக்க/வாங்க படவேண்டும்.   பழைய வாகன விற்பனை /கொள்முதல் விஷயத்திலும் பத்திர பதிவை  கட்டாயமாக்கலாம்.
______________

23.லைசென்ஸ் /சர்ட்டிஃபிகேட்ஸ் வழங்கும் விவகாரத்தில் அர்ஜெண்ட் ஆர்டினரி முறை . ஆர்டினரி 15 நாட்களில் .அவசரம் 24 மணி நேரத்தில் . அவசர சேவைக்கு ஒரு கட்டணம் வசூலிக்கலாம்.

24. மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் நிரந்தர தீர்வை அமல் செய்யும் வரை /தம்மால் ஏற்படும் மாசை பேலன்ஸ் செய்யும் வகையில் எத்தனை மரங்கள் நடவேண்டுமோ அத்தனை மரங்களை கட்டாயம் நட்டு/பரமாரிக்கும் சட்டம் கொண்டு வரவேண்டும்.

25.திருமண மாகாதவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், வாழ்க்கை துணையை இழந்தவர்கள், தாம்பத்ய வாழ்க்கைக்கு தகுதியற்றவரை வாழ்க்கை துணையாக பெற்றவர்கள் இணைந்து சமூக சேவை ஆற்றும் களம் ஒன்றை அமைக்க வேண்டும்.

26 ஒவ்வொரு சின்ன ஊருக்கும் ஒரு கம்யூனிட்டி ஹால் வாடகை/ மின் கட்டணம் சேர்த்து ரூ.500 க்கு கூடுதலாக இருக்க கூடாது .

மெயின்டெய்னென்ஸ் அந்த ஏரியா மகளிர்  சுய உதவி குழுக்களுக்கு தரப்பட வேண்டும். அரசு விருந்தினர் பங்களாக்களின் மெயின்டெய்னென்ஸும் இவர்களுக்கே.

27. திருமணமின்றி சேர்ந்து வாழ கோருபவர்களுக்கான பிரத்யேக சட்டம். தற்காலிக பதிவு

28. ஐம்பது பேருக்கு மேல் உணவு உண்ண கூடிய மெஸ்/ஹோட்டல்/திருமண மண்டபங்கள் பயோ கியாஸ் யூனிட் வைப்பது கட்டாயமாக்க படவேண்டும்.
29.வணிகவரி வசூல் அந்தந்த ஏரியா வணிகர் சங்கங்களுக்கு ஒப்படைக்க பட வேண்டும். உரிய பேங்க் கியாரண்டியுடன் .

30. நோய் தடுப்பு/ நோய் கட்டுப்பாடு/சிகிச்சைகள் , குற்றத்தடுப்பு ,மனித உறவுகள், தாம்பத்ய வாழ்க்கை ,கர்ப தடுப்பு போன்ற விஷயங்களை கருவாக கொண்டு ஷார்ட் ஃபிலிம்ஸ் தயாரிக்க ஏற்பாடுகள் . திரையுலக பிரபலங்கள் ஒத்துழைக்க உத்தரவு .ஸ்க்ரிப்ட் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். இதற்காக போட்டிகளும் நடத்தலாம். இவற்றை திரையரங்குகள்/லோக்கல் கேபிள் நிறுவனங்கள் கட்டாயம் ஒளிபரப்ப ஏற்பாடு.

44. அரசு ஊழியர்களுக்கு யூனிஃபார்ம் - சம்பிரதாய உடைகள் - கதர் ஆடைகள் கட்டாயம். தலைமை அதிகாரியின் சேம்பர்களுக்கு கண்ணாடி கதவுகள்.

45.பாலியல் தொழிலாளிகளுக்கு  பால்வினை  நோய் தடுப்பு குறித்து  உரிய பயிற்சி அளித்து ஒர்க் பர்மிட்.

46.மானிலம் தழுவிய மேன் பவர் டேட்டா பேஸ் ஒன்று கிரியேட் செய்து அதை கணிணி மயமாக்க வேண்டும். இதில் பயிற்சி தேவைப்படுவோர்க்கு பயிற்சி /தொழில் துவங்க கடன்/மார்க்கெட்டிங் உதவி .கிராமபுற வேலை வாய்ப்பு திட்டம் போல் நகர்புற வேலை வாய்ப்பு திட்டம்.

47.சிறைக்கைதிகளை வெட்டியாய் வைத்து சோறு போடுவதை விட அவர்களை நகர் புற உள் கட்டுமான அபிவிருத்தியில் பங்கேற்க வைக்கலாம். கு.பட்சம் மரம் நடுதல் /அரசு நிலங்களை சீராக்குதல் /ஏரி குளங்களை தூர் வாருதல் இத்யாதி பணிகளுக்கு உபயோகிக்கலாம்.