Saturday, September 27, 2014

உடனடி தேவை: திராவிட இயக்கங்கள் இடையில் ஒருங்கிணைப்பு

அண்ணே வணக்கம்ணே !
ஜெ.சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துருச்சு. ஏதோ 4 வருசம் சிறை -100 கோடி அபராதம்-சொத்து பறிமுதலாம். அக்டோபர் 5 வரை கோர்ட் விடுமுறைன்னாலும் -திங்கள் கிழமை எதாச்சும் அற்புதம் நடக்கலாம். அம்மா பெயில்ல வெளிய வந்துருவாய்ங்க.

இது ஏதோ ஜெயலலிதா ஒருவர் தொடர்பான வழக்கு -இது அவருக்கு கிடைச்ச தீர்ப்பு .அடுத்து ஜெ என்ன செய்வார்னு ஹேஷ்யங்களை சொல்றது இந்த பதிவின் நோக்கமில்லை.

தீர்ப்புக்கு பின்னணி குற்றம், குற்றத்துக்கு காரணம்? நம் அரசியல் களம். இன்று எல்லா விலைவாசிகளையும் போலவே கட்சி  நடத்துவதும் காஸ்ட்லி ஆயிருச்சு. ஆந்திர சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது ஒருத்தர் சொன்னாரு (பேர் மறந்துட்டன்) செயிச்சவன் வீட்டுக்கு போய் அழுவான்.தோத்தவன் அங்கயே அழுவான்.

ஏன்னா அவனவன் பொஞ்சாதி தாலிய கூட வித்து செலவழிச்சான். இது தேவையா? நேத்திக்கு லல்லு - இன்னைக்கு ஜெயலலிதா. நாளையிலருந்து வரிசையா மத்த அரசியல் தலைவர்கள்.

நான் என்ன சொல்லவரேன்னா அரசியல் என்பது நேரத்தை மட்டும் செலவழிக்க கேட்பதாய் இருக்கவேண்டும். அந்த மாதிரி மாற வேண்டும்,மாற்ற வேண்டும்.

எங்க ஊருல ஜெராக்ஸ் கடை வச்சிருந்தவுக போட்டி போட்டுக்கிட்டு அம்பது பைசா,நாலணாவுக்கெல்லாம் எடுத்து கொடுத்துக்கிட்டிருந்தாய்ங்க. ஒரு ஆள் இந்த போட்டி யாவாரத்தை சமாளிக்க சகட்டு மேனிக்கு கடன் தொல்லையில சிக்கி தற்கொலை பண்ணிக்கிட்டான். ஒடனே மத்தவுகல்லாம் அரண்டு போய்  ஒரு யூனியன் ஃபார்ம் பண்ணி ஒரு காப்பி 2 ரூபான்னு ஆக்கிட்டாய்ங்க.
ஜெராக்ஸ் கடைக்காரர்களை விட மோசமா அரசியல் கட்சிகள்?

கூடி பேசலாமே ? நல்ல முடிவா எடுக்கலாமே!  தங்களுக்குள்ள ஒரு ஒப்பந்தம் செய்து அளவா செலவழிக்கலாம். செலவுக்காக ஊழல் பண்றத தவிர்க்கலாம். இது தற்காலிக ஏற்பாடுதான். மத்தபடி தேர்தல் சீர்திருத்தம் முக்கியம்.
அடுத்து தமிழக அரசியலை கொஞ்சம் ஜூம் போட்டு பார்க்கனும். திமுக-அதிமுக இடையிலான பிளவுல ஆப்பை செருகி கேப்புல கிடா வெட்ட பார்க்குது பி.ஜே.பி.

திராவிட சக்திகள் ஒன்றுபட வேண்டிய கால கட்டம் -காலத்தின் கட்டாயம் வந்திருச்சு. இப்பமே கவர்னர் ஹோம் செக்ரட் ரி கிட்டே ரிப்போர்ட் கேட்கிறாரு, மத்திய உள் துறை மந்திரி கவர்னர் கிட்டே ரிப்போர்ட் கேட்கிறாரு. ஜனாதிபதி ஆட்சிய கொண்டு வந்து கொட்டைய நசுக்கி , வேட்டி அவுத்து ஓட ஓட உதைச்சாலும் திமுக காரனை அடிச்சா அதிமுக காரன் சந்தோசப்படுவான். அதிமுக காரனை அடிச்சா திமுக காரன் சந்தோசப்படுவான்.

பெரியார் ,அண்ணான்னு வசனம் மட்டும்  விட்டுக்கிட்டிருந்தா சமஸ்கிருதம் முன்னாடி சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ண வேண்டி வந்துரும். இந்தி பந்தி வைக்கப்படும். அமித் ஷா தமிழக முதல்வர் ஆனாலும் ஆச்சரிய படமாட்டேன்.

கலைஞர் வீழ்ச்சியை எதிர் நோக்கியிருந்த கடைசி வருசத்துலனு ஞா யாரோ ஒரு சாமியார் கலைஞர் தலைய கொண்டு வர சொன்னப்பவே எழுதினேன்.
"தாத்தா ! சோனியாவுக்கு சொம்படிச்சது போதும்,பகையாளிய விட பங்காளி பெட்டர் .ஜெவை சந்திச்சு பேசுங்க. திராவிட இயக்கங்களை ஒரு குடை கீழே கொண்டு வரப்பாருங்கன்னேன்" கேட்கல.

சமீபத்துல ஜெ வை கெஞ்சினேன் "யம்மாடி ! தலைக்கு மேல கத்தி தொங்குது. அப்பர் ஹேண்ட்ல இருக்கிங்க. இப்பமே கலைஞரை சந்திச்சு பேசுங்க. திராவிட இயக்கங்களை ஒரு குடை கீழே கொண்டு வரப்பாருங்கன்னேன். உங்களுக்கு பிறகு உங்க அடிமைகள் உங்கள் நினைவு நாள்ள ஒரு மலர் வளையம் கூட வைக்க மாட்டாய்ங்க. திமுக வோட இணைஞ்சுட்டா கலைஞர் காவியமே பாடுவாரு .முப்பெரும் விழா நாற்பெரும் விழாவா கொண்டாடப்படும்"  கேட்கலை. (உங்க பிறந்த நாளையும் சேர்த்து)

இப்பமும் காரியம் மிஞ்சி போகல. மத வாத ஒட்டகம் தலைய தான் நுழைச்சிருக்கு. கூடாரத்தை அடிச்சு தூக்கறதுக்குள்ள எதாச்சும் செய்ங்க.
திராவிட இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவே. வேணம்னா அண்ணா எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்ற கழகம்னு கூட பேரை வச்சுக்கங்கப்பா..

கவுரவ தலைவர் ஜெ, தலைவர் கலைஞர், செயல் தலைவர் ஸ்டாலின்,உப தலைவர்கள் ? வை.கோ, விஜய்காந்த் .சின்னம்? அண்ணா தந்த உதய சூரியன் .ஜனதா பீரியட் போல ரெட்டை உறுப்பினர் அட்டை வச்சுக்கலாம். ஒழுங்கா உட்கட்சி தேர்தல் நடத்தலாம். பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் தேர்வாகி வரட்டும் . கட்சி வேட்பாளர்களையும்டாப் டென் ப்ரியாரிட்டி வச்சுக்கிட்டு செயல்படுங்க.

அவசரம்:
 நாளை நடை பெற உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சீக்ரட் பாலட் வைத்து முதல்வரை தேர்ந்தெடுக்கவேண்டும்.

இனியாவது டாப் ப்ரியாரிட்டிஸ் வச்சுக்கிட்டு வேகமா செயல்படனும்.

எச்சரிக்கை:
ஜெ வழக்கு விவகாரத்தில் நாம ஆரூடத்தை அடிப்படையா வச்சு சொன்ன கணிப்புகள் உண்மையானதை அடுத்து ஜோதிட ஆலோசனைக்கு இன் பாக்ஸுல கூட்டம் அம்முது.
அவிகளுக்கு நான் சொல்லிக்க வேண்டியது ரெண்டு மேட்டர்.
1.உணர்ச்சி வசப்பட்டு டிசைட் பண்ணாதிங்க. சோசியத்துல நாம ஒன்னும் பெரிய ஜூரி கிடையாது. சின்சியரா கணக்கு போட்டு பார்க்கறம் அவ்ளதான்.
2.மோடி மேட்டர்ல இதைவிட அடிச்சு சொன்னம். வரமாட்டாருன்னு - ஜட்ஜு கணக்கா இருக்கவேண்டிய சோசியருக்கு விருப்பு வெறுப்பு இருந்தா என்னாகும்னு புரிஞ்சுக்கிட்டம்.
3.இப்பம் பைப் லைன்ல உள்ள ஜாதகங்களை பைசல் பண்னனும்னாலே கு.பட்சம் ஒரு வாரம் ஆகும். இப்பமே நீங்க அனுப்பினாலும் ஒரு வாரம் கழிச்சு தான் கையில எடுப்பம்.அதனால நன்னா ரோசிச்சு ஒரு வாரம் கழிச்சே அனுப்புங்க.
4.அவசரம்னா உங்க ஊர்லயே நம்மை விட அனுபவஸ்தரான -ஜூரியான சோசியர் இருக்க கூடும் .விஜாரிச்சு அவரையே அணுகப்பாருங்க.
5.இன்பாக்ஸுல வராதிங்க.மெயில் பண்ணுங்க. swamy7867@gmail.com