"செக்ஸ் பவர் அதிகரிக்க"ன்னிட்டு தலைப்பை வச்சிட்டு அதை தவிர மத்த விஷயத்தையெல்லாம் வெளுத்துவாங்குவாருன்னு நினைச்சுராதிங்க. நெஜமாலுமே செக்ஸ் பவர் அதிகரிக்க ஐடியா தரப்போறேன்.
என்ன ஒரு வில்லங்கம்னா மனிதனோட செக்ஸ் பவர் அவனோட உடல்லதானே ஜெனரேட் ஆகுது? அவன் பாடி காட்பாடி ஆயிருச்சுன்னா ஆட்டோ மேட்டிக்கா செக்ஸ் பவரும் அதல பாதாளம்போய் சேர்ந்துரும்லியா.
அதனால ஜெனரல் ஹெல்த்தை பத்தி ஒரு சில பாரா பேசிட்டு அப்புறம் அசலான மேட்டருக்கு போவோம் .ஓகேவா?
செக்ஸ் பவரை அதிகரிக்க ஜெனரல் ஹெல்த்தை மெயின்டெய்ன் பண்ண வேண்டியது கட்டாயம். டீன் ஏஜ்ல சத்துக்குறைபாடு, ஜெனட்டிக்கலா வரகூடிய பிரச்சினைகள், மலச்சிக்கல், பசியின்மை, செரியாமை எல்லாத்தையும் மீறி சில காலம் பேட்டரி நல்லாவே வேலை செய்யும்.ஆனால் டீன் ஏஜ் முடிஞ்சதும் அதாவது 20 ஆவது வயசுல அடியெடுத்துவச்சதுமே பிரச்சினைகள் ஆரம்பமாயிரும்.
அந்த வயசுலயும் ( 13 டு 20 ன்னா புபர்ட்டி கிடைச்சி 7 வருஷம் முடிஞ்சும்) பேச்சலரா இருக்கிறதாலயும், காஞ்ச மாடுங்கறதாலயும் செக்ஸ் ரெகுலர் அவெய்லபிலிட்டில இல்லாத காரணத்தாலயும் அப்படி கிழிக்கலாம்,இப்படி கிழிக்கலாங்கற ஆவேச கற்பனைகள் இருக்கிறதால 30 வயசு வரை கூட சமாளிச்சுரலாம்.
சமாளிச்சுரலாங்கறத விட பிரச்சினைகள் உறைக்காதுனு சொல்லலாம்.வாய்ப்பு கிடைச்சு கோதாவுல இறங்கி வாந்தி எடுத்து அவமானப்பட்டாலும் அன்னைக்கு அதை சாப்பிட்டிருந்தேன்,இதை சாப்பிட்டிருந்தேன் டைம் இல்லைன்னு நான் தான் சீக்கிரமா முடிச்சேனு டகுலு விட்டுக்கலாம். இதுக்கு அப்புறம் தான் இருக்கு பிரச்சினையே.
13, 14 வயசுலருந்து 30 வரை ஒரு பக்கம் நோ ஹெல்த் ரூல்ஸ்,மறுபக்கம் நோ செக்ஸ் எஜுகேஷன், நோ விஜிலென்ஸ் ஆன் செக்ஸ் இர்ரெகுலர் அண்ட் இம்ப்ராப்பர் செக்ஸ் ( சுய இன்பம், ஹோமோ இத்யாதி) இப்படி எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் உடம்பு சொம்மா ரெண்டுபக்கமும் பத்த வச்ச காண்டில் ஜாஜ்வல்யமா இருக்கிறாப்ல தெரிஞ்சாலும் பெரும் பிரச்சினைக்கு ஃபவுண்டேஷன் விழுந்துக்கிட்டிருக்குனு புரிஞ்சிக்கிடனும். இந்த வயசுல கூட முழிச்சிக்கிடலன்னா இழந்த சக்தி வைத்தியர்களை அணுக வேண்டியதுதான்..
பின்னே செக்ஸ் பவர் குறையாம இருக்க என்னதான் பண்ணனும்? முதல்ல உங்க உடம்பை பத்தி நீங்க தெரிஞ்சிக்கனும். இதை எந்தளவுக்கு சிரமப்படுத்தினிங்கண்ணா அந்த அளவுக்கு இது ஸ்ட்ராங் ஆகும் . இதை எந்த அளவுக்கு சொம்மா விடிங்கண்ணா அந்த அளவுக்கு வீக் ஆயிரும். சிரமம்னா பலான சிரமமில்லிங்கோ.
இந்த பாடில ரெண்டு வேலை கரெக்டா நடக்கனும். ஒன்னு அசிமிலேஷன். ரெண்டு எலிமினேஷன். அசிமிலேஷன்னா ஆக்சிஜனை இழுக்கறது,லாலா குடிக்கிறது,புவ்வா சாப்பிடறதுல்லாம் இந்த லிஸ்டுதான். எலிமினேஷனுன்னா கார்பண்டை ஆக்சைடை வெளிய தள்றது,பூத்தா போறது,கக்கா போறதுல்லாம் இந்த லிஸ்டுல வரும்.
இந்த பாடியோட நேச்சர் இன்னொன்னு இருக்கு. இங்கன ஜீரண மண்டலம். இனப்பெருக்க மண்டலம்னு ரெண்டிருக்கு. ஒன்னு வேலை செய்யறச்ச இன்னொன்னு வேலை செய்யாது. மீறி செய்யவச்சா சிக்கல் வரும். உதாரணமா இப்ப சாப்டிங்கனு வைங்க. ஜீரண மண்டலம் வேலை செய்ய ஆரம்பிக்கும். அது முடிய ஒரு மூணு மணி நேரமாச்சும் ஆகும். அதுவரை சில்மிஷம் பண்ணாம இருக்கனும். மீறி பெண்டாட்டி மேல பாய்ஞ்சா ஜீரண மண்டலம் தன் வேலைய நிறுத்திக்கும். இதனால வவுறு நாறிப்போகும். செரிக்காது.
மேலும் உடல்,மனம், புத்திங்கற மூணு சமாசாரத்துக்கும் இடையில் உள்ள லிங்கை தெரிஞ்சுக்கனும். இது மூணுமே ஒரே பாயிண்ட்ல கான்சட்ரேட் ஆகிறது கஷ்டம். உடம்பு வேணும்ங்கும், மனசு வேணாப்பா அவிகளுக்கு உடம்பு சரியில்லைங்கும், புத்தி ரெண்டு மாத்திரைய விழுங்கி தொலைச்சா எல்லாம் சரியா போகுங்கும்.
இந்த உடல்ங்கறது சுவர். மனம்ங்கிறது பென்சில் ஆர்ட்டா போட்டுத்தள்ளும். புத்தி அதுல எந்த ஸ்கெச் சரியா வரும்னு பார்த்து அதை ஸ்கெச் பென்னால டார்க் பண்ணிரும்.
மனசுங்கறது வாக்காள பெருமக்கள் மாதிரி.புத்திங்கறது அவிக தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ மாதிரி. எம்.எல்.ஏ ஆகாயத்துலருந்து குதிக்கலை. வாக்காளர்கள் மத்திலருந்து வாக்காளர்களால தேர்ந்தெடுக்கப்படறாரு. மனம்னா என்ன? எண்ணங்கள் நினைவுகள். புத்திங்கறது என்ன? மேற்படி எண்ணங்கள்/ நினைவுகள்ளருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணங்கள், நினைவுகள்.
மனித மனம் ரொம்ப ஆழமானது. அதை மறுபடி கான்ஷியஸ்,சப் கான்ஷியஸ்,அன் கான்ஷியஸுன்னெல்லாம் பிரிக்கிறாய்ங்க. மூணாவதா சொன்ன அன் கான்ஷியஸ் மைண்ட் தான் ஸ்பேஸ் டைமன்சன், யூனிவர்சல் மைண்டு, போன ஜன்மத்து ஞாபகங்களுனு வித விதமா குறிக்கப்படுதோன்னு எனக்கு ஒரு சம்சயம் உண்டு.
இந்த எண்ணங்கள் உடலை ரொம்ப பாதிக்குது. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அண்ணை வளர்ப்பதிலேன்னு சினிமா கவிஞர் சொல்றாரு. ஆனா இதுக்கெல்லாம் மனித உடலிலான சுரப்பிகள் சுரந்து ரத்தத்தில் கலக்கும் சில கெமிக்கல்ஸ்தான் காரணம்னு விஞ்ஞானம் சொல்லுது. சுரப்பிகளுக்கெல்லாம் ராசா ஹைப்போதலாமஸ். அது சொல்றபடிதான் மத்த சுரப்பியெல்லாம் சுரக்கனும். அதுசரி ஹைப்போதலாமஸோட கண்ட் ரோல் எங்கன இருக்குன்னு கேட்கறிங்க ..
அதோட கண்ட்ரோல் உங்க கைல இருக்கு. அதாவது அதை கட்டுப்படுத்தறது உங்க எண்ணங்கள்தான். ரிப்பீட்.... எ...ண்....ண .........ங்கள்.
இதைத்தான் நம்ம பெரியவங்க சிம்பிளா ரெண்டாம் வாய்ப்பாடு மாதிரி எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வுன்னு சொன்னாய்ங்க.
இதெல்லாம் யதார்த்தம். விதின்னா விதிவிலக்குன்னு ஒன்னிருக்குமில்லயா. முதல்ல உப விதி. மேற்சொன்ன மூணு அம்சத்துல( மனம்,புத்தி,உடல்) எது வலிமையா இருக்கோ அது மத்த ரெண்டையும் கண்ட் ரோல் பண்ணும்.
உதாரணமா நீங்க ஆரோக்கியமா இருக்கிங்க. (அதாவது உங்க உடம்பு) ஸ்போர்ட்ஸ்ல ஆக்டிவா பார்ட்டிசிபேட் பண்றிங்க. நீங்க கிரவுண்ட்ல விளையாட போகும்போது உங்க க்ளாஸ் பெண்கள் எல்லாம் உங்க பேகையும், கிட்டையும் வச்சிக்க போட்டி போடறாய்ங்கனு வைங்க. ஃப்ரெண்டு பக்கத்து வீட்டு ஆன்ட்டி வீட்ல யாருமில்லடா ராத்திரி டெலிக்ராம்னு குரல் கொடுத்து உள்ளாற நுழைஞ்சின்னு ஸ்கெச்ச சொல்றப்ப " போடாங்கோத்தா.. ஆறாம் வகுப்புல இருந்து என் பேச்சு போட்டிக்கு அவிக தான் ஸ்க்ரிப்டு தெரியுமா"ம்பிங்க.
இங்கே வலிமையான ஆரோக்கியமான உடம்பு உங்க ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணுது. எதிர்பாலினரை உங்கள் பால் கவருது. உங்க மைண்டை புத்திய கண்ட் ரோல் பண்ணிருது.
இதுவே நீங்க ப்ளாக் பெயிண்ட் ட்ரம்ல தவறி விழுந்த செந்தில் மாதிரி நிறம், ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி பாடி, சுய இன்பம் , ஸ்வப்ன ஸ்கலிதம், வியர்வை நாத்தம், குளிக்க சோம்பல் , பல் விளக்க சோம்பல்னு இருக்கிங்கன்னு வைங்க அப்ப உங்க டெசிஷன் என்னவா இருக்கும்? இங்கே உங்க உடல் உங்க மைண்டை சறுக்கிர வைக்க வாய்ப்பிருக்கா இல்லியா?
இதைத்தான் சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடிம்பாங்க. ஒரு மனிதனோட உடலை,மனசை,புத்திய எத்தனையோ ஃபேக்டர்ஸ் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. "அதாண்டா இதாண்டா"ன்னு யாராச்சும் ஸ்பெஷலிஸ்டு சொன்னா நம்பாதிங்க.
ஒரு ரவுண்ட் டேபிள் கான்ஃப்ரன்ஸ் போட்டு டிசைட் பண்ண வேண்டிய விஷயம் இது.ஒரு டாக்டர்,ஒரு சைக்ரியாட்ரிஸ்ட், உங்க வம்ச விருட்சத்தோட வரலாறு தெரிஞ்ச ஒரு பார்ட்டி, (முக்கியமா உங்க அப்பா அம்மாவோட குடும்ப வாழ்க்கையோட லட்சணம் அவருக்கு தெரிஞ்சிருக்கனும்), ஒரு ஜோசியரு (ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவரா இருக்கனும்.புஸ்தவங்களை படிச்சு வாந்திபண்றவருன்னா வேஸ்டு) ,வாஸ்து தெரிஞ்சவரு இப்படி பல பேரு உட்கார்ந்து கலந்தாலோசனை பண்ணனும். இதுல நீங்களும் முழுக்க முழுக்க கோ ஆப்பரேட் பண்ணனும்.
இதெல்லாம் நடக்கிற வேலையான்னு அலுத்துக்காதிங்க. பிரச்சினை தீரனும்னா செய்துதான் ஆகனும். குறைஞ்ச பட்சம் மேற்படி துறைகள்ள பிரிலிமினரி நாலெட்ஜையாவது நீங்க பெற்றுத்தான் ஆகனும்.
சாதாரணமா சுவரை வச்சுத்தான் சித்திரம். ( உடம்பை வச்சித்தான் மன ஆரோக்கியம்) ஆனால் என்னய மாதிரி கடக லக்ன பார்ட்டி, ரெண்டாம் நெம்பர் பார்ட்டிக்கெல்லாம் அவிகளோட ரோல் மாடல் யாருங்கறத பொறுத்தும் அவிக மேல இவிகளுக்கிருக்கிற அட்மைரேஷனோட ரேஞ்சை பொறுத்தும் மனசு உடம்புலருந்து விலகி செயல்பட ஆரம்பிச்சுரும்.
இப்பயாச்சும் லேசா தொந்தி போட்டு, பிருஷ்டம் எல்லாம் பிதுங்கிக்கிட்டு , 58 கிலோ இருக்கேன். ஆனால் 1992 ல பார்த்திருந்திங்கனா இவனுக்கு உடனே அரை டஜன் ப்ளட் ஏத்துங்கப்பான்னு சொல்லியிருப்பிங்க. ஆனா நான் 1992 முதல் 2003 வரை வருசத்துக்கு ரெண்டு தரம் ரத்த தானம் பண்ணேன்.
பேனா பிடிச்சு 6 பக்கம் எழுதினா போதும் விரல் கண்ணிப்போயிர்ர உடம்பு என்னுது. ஆனால் ஃபீல்டுல இறங்கிட்டா ஒரு பிசாசு பூந்த கணக்கா கலக்குவேன். 1984ல எங்க வீட்டை கட்டறச்ச (1200 ச.அ) சித்தாளாவே மாறிட்டன். இதுல வேலை நடக்கிற இடத்துக்கெல்லாம் லைட் போடற எலக்ட் ரிஷியனும் நான் தான். நீச்சலடிப்பேன். ஃபேன் ,ட்யூப்லைட் ஃபிட் பண்ணுவேன்,கார்ப்பெண்டரிங்க் தெரியும், எழுத்து நடைல பனிரண்டு ஸ்டைல் இருக்கு நம்ம கிட்டே.
ஆனால் கடந்தவருசம் மே மாசம் ஒரே ஒரு பதிவை பேச்சுத்தமிழ்ல போட ஒரு தம்பி "அண்ணா நீங்க எழுதறதெல்லாம் நல்ல விசயம்னு தோணும். ஆனால் படிக்கத்தான் முடியாம போயிரும். இது நெல்லா புரியுதுங்கண்ணா"ன்னு கமெண்ட் போட்டுச்சு. அதுல இருந்து இந்த ஸ்டைலை பிடிச்சேன்.
இதெல்லாம் மனோபலம் செய்யற அற்புதம். ஆனால் 12ல ஒரு பாகம்தானே கடக ராசி.. அதுலயும் சந்திரன் சுப பலமா இருந்தாதான் இந்த ப்ளஸ்ஸெல்லாம் ஒர்க் அவுட் ஆகும் அவரு 6,8,12ல மாட்டிக்கிறது, ராகு, கேதுவோட சேர்ரதுல்லாம் இருந்தா மைனஸ்தான் ஒர்க் அவுட் ஆகும். அதனால மொதல்ல உடலை எப்படி நம்ம கண்ட் ரோலுக்கு கொண்டுவர்ரதுன்னு அடுத்த பதிவுல பார்ப்போம். பாட்டில்ல இருந்தாதானே க்ளாஸுல வரும். உடம்புல ஜீவ சக்தி ஜெனரேட் ஆனாதான் அது காம சக்தியா வெளிப்பட்டு கை கொடுக்கும். இல்லைன்னா ஃப்ரெண்ட்ஸ் வீட்ல குடும்பத்தோட வெளியூர் போறப்பல்லாம் கடைசி பெண்ணுக்கு காவலா உங்களை வச்சிட்டு போவாய்ங்க. (அப்படி ஒரு கேரக்டர் எல்லா க்ரூப்லயும் இருக்கும்... உங்க ட்ரூப்ல கூட இருக்கலாம்)
(தொடரும்)