Tuesday, June 22, 2010

"அம்மாவின் அழகை"

அண்ணே வணக்கம்ணே,
நேத்து  உனக்கென்ன நித்ய யவ்வனம்ங்கற தலைப்புல துவக்கின காவியத்தோட (?)  இரண்டாம் பகுதியை "அம்மாவின் அழகை" என்ற வில்லங்க தலைப்போடு கொடுத்திருக்கேன். மேலும்
"பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் :8    
 "மழை" ,   "கனவு"  என்ற தலைப்புகளில் இரண்டு கவிதைகள்,
அந்த கால கலைஞர் வசனம் போன்ற நடைல 
"அம்மாவுக்கு ஒரு கடிதம்"
எல்லாம் போட்டிருக்கேன். முடிஞ்சவரை எல்லாத்தையும் படிச்சுப்பாருங்க இல்லாட்டி முடிஞ்சதை படிங்க. உங்க கருத்தை சொல்ல மறக்காதிங்க‌

அம்மாவின் அழகை

உனக்கென்ன அம்ருத சேவனம்
நித்ய யவ்வனம்
போதாதற்கு வாக்தேவியும் நீதான்

என் வாக்கில் நீ நின்றாய்.
என் அழகை பாடு என்றாய்.
நானோ விதிப்போக்கில் சென்றேன்.

இன்று என்னைப்பார்.. உன் அருள் போல் ஊறி, சீறிகிளம்பிய
கவிதை ஊற்றை கண்டவளுக்காகவெல்லாம்
விரயமாக்கிவிட்டு உலர்ந்து போய்
கட்டுரைக்கே வார்த்தைகள் சிக்காது திகைக்கிறேன்.

அம்மாவின் அழகை ரசிக்க கூடாதென்பது சட்டமா?
கணேசன் உனை ரசிக்காமலேயா உன் போல்
மனைவி வேண்டும் என்று ஆற்றங்கரையோரம்
அரசமரத்தடியில் உட்கார்ந்திருக்கிறான்.

அம்மா !
உனக்குத்தான் எத்தனை பெயர். எத்தனை வடிவம்.

வேசியர்க்கு  நித்யகல்யாணி என்று ஒரு பெயர் உண்டாம்.
இதை சஹஸ்ர நாமத்தில் படித்து பதைத்தேன்.
வேசியர் கனவில் வந்தால் நீ வந்ததாய் பொருளாம்.
அந்த கனவே உன் அருளாம்.

பெண்வடிவில் தானா நீ.
இல்லை ஒவ்வொரு ஆணுடலிலும் இட பாகத்து அமர்ந்தவளாயிற்றே.

மகாவெடிப்புக்கு பின், ஜலமயமாய் கிடந்த பூமிபந்தின் மேல் ஏதோ நட்சத்திரத்திலிருந்து ஏதோ ஒரு ஒளி பாய்ந்து முதல் உயிர் உயிர் தரித்திருக்கலாம்
என்று விஞ்ஞானிகள் அனுமானித்திருக்கிறார்கள்.

நட்சத்திரம் என்பதை  நின் மூக்குத்தியாக நான் கற்பித்துக்கொள்வதை
மூட நம்பிக்கை என்று சிலர்  சொல்லட்டும்.
என் மூல நம்பிக்கை அது என்று சொல்லிவிட்டுபோகிறேன்.

என் நம்பிக்கை செக்கோ சிவலிங்கமோ அல்ல
அதன் மீது மூட நம்பிக்கை சிலந்திகள் வலை பின்ன முடியாது
அதில் என் மனதை சிக்க வைக்க முடியாது

என் நம்பிக்கை அக்னி ஊற்று.
அதில் என்  அகந்தை அகர்பத்தியாக எரிந்து ஞான மணம் வீசுகிறது.
வெறும் சாம்பலாய்  இந்த கவிதை

(தொடரும்)