Sunday, December 15, 2013

முன்பதிவு செய்ங்க ! விலையில் 24% மிச்சம் பிடிங்க !!

அண்ணே வணக்கம்ணே !

கடந்த முறை முன் பதிவு திட்டத்தில் ஜோதிடம் 360 புக் வெளியிட்டது   ஞா இருக்கலாம்.

இந்த முறை பொங்கலுக்கு நான்கு புத்தகங்கள் விடப்போறோம். இதுலயும் முன் பதிவு உண்டு.

பொங்கலுக்கு முன்னால முன்பதிவு செய்பவர்களுக்கு 24% தள்ளுபடி-பொங்கலுக்கு பிறகு ஆர்டர் பண்ணா 24% கூடுதல் விலை.

என்ன எப்படி முன் பதிவு பண்றதுன்னு கேட்கிறிங்களா? இங்கே அழுத்துங்க. முழு விவரம் தந்திருக்கன்.

எச்சரிக்கை:

இத்தனை நாளா இந்த ப்ளாகை சொடுக்குவிங்க.அதும்பாட்டுக்கு அ.ஜோ சைட்ல கொண்டு விட்டுரும். நீங்க ரெம்ப கடுப்பாயிருப்பிங்க.

ஏன்னா இந்த ப்ளாக்ல உள்ளதெல்லாம் பழைய பதிவுகள். புதிய பதிவுகள் அ.ஜோவுல தான் பப்ளிஷ் ஆயிட்டிருக்கு.

Monday, September 2, 2013

பதிவர் சந்திப்பு Vs செல்ஃப் ஷேவ்



அண்ணே வணக்கம்ணே !
ஏசு ஞானம் பெற்று சொந்த ஊருக்கு வந்தப்போ ஊர்காரவுக நம்ம கார்ப்பெண்டர் பையன்பா என்று தான் சொல்லியிருப்பார்கள். அதைப்போல நாம என்னதான் மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ் கணக்கா அலப்பறை பண்ணாலும் சனம் நம்ம கிட்டே எதிர்ப்பார்க்கிறது சோதிட பதிவுகளை த்தேன். அதுக்காவத்தேன் எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிட்டீஸ்லாம் விட்டுட்டு ஒ.மருவாதியா சோதிட தொடர்களை எழுதிக்கிட்டு வர்ரம்.

இந்த வரிசையில ஆரம்பமானதுதேன் தொழிலும் கில்மாவும். ஆனால் ட்ராக் மாறி இன்னபிற பதிவுகளை போட்டுக்கிட்டிருக்க காரணம் ..இவற்றை எக்ஸாஸ்ட் செய்தால் அன்றி மூளை பழைய ட்ராக்குக்கு திரும்பாது.

ஒன் கென் நாட் ரெய்ட் டூ ஹார்சஸ் - ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்ங்கற மாதிரில்லாம் வித்தை காட்ட நமக்கு தெரியாதுங்ணா. நம்முது கடகலக்னமாச்சா ( இது எத்தனையாவது தபா?) எதையும் மனப்பூர்வமா செய்யதான் விருப்பம். நம்ம வேலையில/கள்ள எதுனா மொக்கையா தெரிஞ்சா அது ஏதோ கட்டாயத்தின் பேரில் செய்தப்பட்டதுன்னு நீங்க ஈஸியா கெஸ் பண்ணலாம்.

"தம்பீ! வடை  இன்னும் வரலை"ங்கறாப்ல " அண்ணே..இன்னம் விஷயத்துக்கே வரலை"ங்கறிங்க.புரியுது.வந்துட்டேன்.
பதிவர்கள்னா ஆகாசத்துலருந்து குதிச்சவுக இல்லை. ஒவ்வொரு மனிதனும் அவன் வாழும் அரசியல் ,பொருளாதார,சமூக அமைப்பின் எச்சங்களே. ஒவ்வொரு மனிதனும் அவனது பெற்றோரின் நகல்களே. முருகேசனாகிய அடியேன் பதிவெழுதுவதால் பதிவராகலாமே தவிர பதிவர்ங்கற முகமூடியோட  செயல்படறது சாட்சாத் முருகேசன் தான்.
பதிவுங்கறது ஒரு வெளிப்பாடு. அந்த வெளிப்பாட்டுக்கு பின்னாடி இருக்கிறது நம்ம அரசியல்,பொருளாதார,சமூக அமைப்புகள் மற்றும் அவற்றின் தாக்கங்களே.

இந்த தெளிவு நமக்குள்ள இருக்கிறதால பெருசா எதையும் எதிர்ப்பார்க்கிறதில்லை.2012 பதிவர்கள் சந்திப்புக்கு பிறவு இது மாதிரி ஒரு டீட்டெய்ல்ட் பதிவை போட்டிருந்தா - இந்த 2013 சந்திப்பை கிழி கிழின்னு கிழிச்சிருப்பம்.

என்ன பண்ண? உலகத்துலயே வேலை வெட்டியில்லாம -திண்ணை தாத்தா மாதிரி ஒலக நன்மைக்கு குரல் கொடுத்துக்கிட்டிருந்த ஒரே பார்ட்டி நாமதேன். கடவுள் நமக்கும் ஒரு வேலைய கொடுத்து பிசியாக்கிட்டாரு.

இன்னைக்கு நாளைக்குன்னு தள்ளிப்போய் இன்னொரு ப.ச வே  நடந்து முடிஞ்சுருச்சு.  கு.ப ப.சவுக்கு பத்து பதினைஞ்சு நாள் மிந்தி "இப்படி நடந்தா பெட்டர்"னுட்டு ஒரு பதிவு போட்டிருந்தாலும்இப்பம் கொறை சொல்லி எழுத ஒரு தகுதி இருந்திருக்கும்.

ப.சந்திப்புக்கு வரவே அடிச்சு பிடிச்சு வரவேண்டியதாயிருச்சு. அதனால நோ நெகட்டிவ் பாய்ண்ட்ஸ். அடுத்த பதிவர் சந்திப்பு எப்பூடி நடந்தா நெல்லா இருக்கும்னு சொல்லிர்ரன்.

பதிவுங்கறது ஒரு வெளிப்பாடுதேன். இதுக்கு அடிப்படை சிந்தனை. பதிவர்கள் வெளிப்பாட்டில் தப்பு செய்றாய்ங்கன்னு சொல்லவே முடியாது. (ஏதோ சில ,எழுத்து இலக்கண பிழைகள் இருக்கே தவிர) தூள் பண்றாய்ங்க.அதுலயும் தலைப்பு  வைக்கிறதுலயும் படிக்க வைக்கிறதுலயும் ஜூரிங்கப்பு.

பதிவர்கள் மொதல்ல வரலாறு குறித்த அறிமுகத்தையாவது /வரலாறு குறித்த வேறு பட்ட பார்வைகள்ள சிலவற்றையாவது உள்வாங்கனும். அப்பத்தேன்  நிகழ்காலம் குறித்த ஒரு புரிதல் ஏற்படும்.

சோனியா -ராகுலை பி.எம் ஆக்கப்பார்க்கிறாய்ங்க. அதுக்காவ எத்தனை எத்தனை இழவெடுத்த வியூகங்கள்? இது என்ன சரித்திரத்துல மொத தடவையா நடக்குதா? இல்லை.

தமிழ் சினிமாக்கள்ள  அடிக்கடி ரிப்பீட் ஆற சீனை   "க்ளீஷே"ம்பாய்ங்க. அதைப்போல இதுவும் ஒரு க்ளீஷே தான். வரலாறு குறித்த அறிமுகம் இருந்தா பெட்டர். இதுக்கெல்லாம் ஷாக் ஆகாம மேற்கொண்டு தீர்வுகளையோ விளைவுகளையோ கிளிக்கலாம்.

அடுத்தது பொருளாதார அமைப்பு. நீங்க என்னதான் நான் சுதந்திரன் - நான் ஆகாயத்துலருந்து குதிச்சவன்னு அலட்டிக்கிட்டாலும் பொருளாதார அமைப்பு உங்களை மட்டுமில்லை -உங்க சிந்தனைகளையும் அடிமைப்படுத்தி வச்சிருக்கு.

காலை பல் தேய்க்கிற டூத் பேஸ்ட்லருந்து - ராத்திரி பேட்டரி வீக் ஆன பார்ட்டிகள் உபயோகிக்கிற வயாக்ரா தனமான மருந்து மாயங்கள் வரை எல்லாமே இறக்குமதி. இருந்த விளை நிலங்களை எல்லாம் அபகரிச்சோ -விவசாயிகள் முதுகெலும்பை நொறுக்கியோ விளையாம செய்துட்டு - உணவு தானியங்களை கூட இறக்குமதி பண்றோம்.

இதன் விளைவு ? டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொங்கிக்கிடக்குது. இவிக வெத்து பந்தாவுக்கு - தப்பு தப்பா விடற ராக்கெட்டுகளை விட விலைவாசி பர்ஃபெக்டா லாஞ்ச் ஆகி உச்சி வானில் வெயிட்டிங்.

சமூகம். ஒரு பதிவனோ எழுத்தாளனோ தான் வாழ்ந்துட்டிருக்கிற சமூகத்தை பத்தி ஒரு பார்வை வச்சிருக்கனும். இதன் எதிர்காலம் குறித்த கணிப்பு இருக்கனும்.

உலகின் பல்வேறு சமூகங்கள் பற்றிய அறிமுகம் இருக்கனும். ஒப்பீடு இருக்கனும்.மாற்றத்துக்கான உந்துதல் இருக்கனும். அப்பத்தேன் நாம போடற பதிவுகள் இருட்டை விரட்டலின்னாலும் ஒரு மின்னல் மாதிரி மின்னி மறையும்.

இதெல்லாத்தையும் விட மனவியல் தெரியனும். மனித மனம் கூட சமூக,பொருளாதார,அரசியல் அமைப்புகளின் விளைவுதான்.
எங்கெங்கயோ முக நூல்,டிவிட்ட போன்ற சமூக வலைதளங்களின் உதவியோட புரட்சியே நடக்குது. ஆனால் இங்கே?  ஏன் நடக்கலை? எப்போ நடக்கும்? ஏன் நடக்காது?ங்கற தெளிவு  இருக்கனும்.

இதையெல்லாம் ஒரு பதிவர் சந்திப்பு பதிவனுக்கு தந்தாகனும். சரித்திரத்தை கி.பி,கிமுன்னு பிரிக்கிறாப்ல பதிவர்களின் சரித்திரத்தை சந்திப்புக்கு முன் சந்திப்புக்கு பின் என்று பிரிக்கும் அத்தனை இரசாயன மாற்றம் ஒரு பதிவர் சந்திப்பில் நடக்கனும்.

இல்லின்னா?  சந்திப்பில் வீணாகும் அந்த நேரத்துல  செல்ஃப் ஷேவ் பண்ணிக்கலாம். நேரம் மிச்சம்,காசும் மிச்சம்.


Friday, April 26, 2013

anubavajothida: செவ்வாயுடன் இதர கிரகங்களின் சேர்க்கை

இன்றைய பதிவு:
செவ்வாயுடன் இதர கிரகங்களின் சேர்க்கைக்கு பலன். படிக்க கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்.
anubavajothida

Tuesday, April 23, 2013

கிரக சேர்க்கை பலன்: நாளை முதல் anubavajothida

அனுபவஜோதிடம் டாட் காம் தளம் முடங்கியுள்ளதால் இந்த பதிவு இப்படி உங்கள் பார்வைக்கு. கீழே உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க.படிங்க
anubavajothida

Sunday, April 21, 2013

லாப விரயாதிபதிகள் நின்ற பலன்

அண்ணே வணக்கம்ணே !
ஜாதகத்துல லாப ,விரய பாவாதிபதிகள் நின்ற பலனை பாய்ண்ட் -டு -பாய்ண்ட் சொல்லியிருக்கேன். படிக்க இங்கே அழுத்துங்க ப்ளீஸ்

Friday, April 19, 2013

காவல்துறை மேம்பாட்டுக்கு யோசனைகள்

1.காவலர் தேர்வு என்பது போட்டியற்றதாகி விட வேண்டும். அதற்கு இப்போதுள்ள காவல் துறை அதிகாரிகள்,காவலர் எண்ணிக்கையை 3 மடங்காக்கி விடவேண்டும்.

2.காவலர் தேர்வு என்பது இயந்திரங்களால்,கணிணிகளால் ந்டத்தப்படவேண்டும்.

3.தேர்வான காவலர்களுக்கு விலை வாசியே தெரியவராத வகையில் அவர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தாருக்கும் தேவையான உயிர் பாதுகாப்பு,உணவு,உடை,இருப்பிடம்,செக்ஸ்,காப்பீடு,சேமிப்பு எல்லாவற்றுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு தரப்படும் சம்பளம் என்பது அத்தியாவசிய,விபரீத சூழல்களில் மட்டுமே பயன் படவேண்டும்.(கிட்னாப்புக்குள்ளாதல் Etc.,)

4.காவலர்களின் உடல் நிலை,மன நிலை,பொருளாதார நிலை,(தாம்பத்திய வாழ்க்கை உட்பட) 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது அன்னிய நாட்டு சேவை நிறுவனங்களால் பரிசீலிக்கப் படவேண்டும்

5.காவலர்களுக்கான பதவி உயர்வு,இடமாற்றம்,பணிமாற்றம்,விடுப்பு,சகலமும் கணிணிகளால் நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலதிகாரிகளின் தயவை எதிர்ப்பார்க்கும் துரதிர்ஷ்டமான நிலை மாறவேண்டும்.(இவர்கள் மேலதிகாரிகளின் இம்சையால் மசாக்கிஸ்டுகளாகி, மக்கள் விஷயத்தில் வரும்போது சாடிஸ்டுகளாகி விடுகிறார்கள்.

6.எந்த அதிகாரியும்,எந்த காவலரும் எக்காரணம் கொண்டும் 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக்கூடாது.

7.அனைத்து மானில போலீஸ் துறையையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.((IAS & IPs, மாதிரி) நாடெங்கிலும் உலகத்தரத்தில் போலீஸ் குவார்ட்டர்ஸ் ,அவர்களின் பிள்ளைகள் படிப்புக்கான கல்வி நிலையங்கள்,ஹாஸ்டல்கள் கட்டப்பட வேண்டும்.பணிமாற்றம் என்பது அகில இந்திய அளவில் நடைபெறவேண்டும். பணிமாற்றம் என்பது காவலரை பாதிக்காத வண்ணம் நாடெங்கிலும் ஒரே பணிச்சூழல்,ஒரே விதி ஏற்படுத்த வேண்டும்

8.காவலன் என்பவன் மக்களுக்கு காவலனாக இருக்கும் வரை நாடு அவனுக்கு காவலாக இருக்க வேண்டும். அவன் அரசியல் விபச்சாரிகளின் தரகனாய் மாறிவிட்டால்............வேணாம் பாஸ் கெட்ட வார்த்தையெல்லாம் வருது நான் அம்பேல்

Tuesday, April 2, 2013

ஹை அலர்ட் : மேஷம் TO கன்னி


அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுல ஏப்ரல் 12 முதல் மே 23  சனி செவ்வாய்க்கிடையில் பார்வை ஏற்படப்போறதாவும்  அல்லாரும் ஹை அலர்ட்ல இருக்கிறது நல்லதுன்னும் சொல்லியிருந்தேன்.
இந்த பதிவுல மேஷம் டு கன்னி ராசிக்காரவுகளுக்கு டீட்டெய்ல்ட் ப்ரிடிக்சன்ஸ் கொடுத்திருக்கேன். கன்னி டு  மீனம் நாளைக்கு தரேன். உடுங்க ஜூட்டு.

1.மேஷம்:
இவிகளுக்கு செவ் 1/8 க்கு அதிபதி . இவரு இவிக ஜன்ம ராசியிலயே நிக்கப்போறாரு.  ஒரிஜினாலிட்டி, உற்சாகம் ,செல்ஃப் கான்ஃபிடன்ஸ் எல்லாம் ஓகே தான். ஆனால் கூடவே கொஞ்சம் கோவம் சாஸ்தியாயிரும். சூட்டுக்கோளாறு வரும். கூர்மையான ஆயுதங்களோட,மின்சாரத்தோட  டீல் பண்ணும் போது ரத்த சேதம் நடக்கலாம். டேக் கேர்.
இவர் 7ல வக்ரமா இருக்கிற சனிய பார்க்க போறாரு. 7 ல சனியிருந்தா காதலி/மனைவி மேட்டர்ல சொதப்பும். அவர் வக்ரமானது பெட்டர் சாய்ஸ் தான். பேட் அப்புக்கு சான்ஸ் இருக்கும். ஆனால் ஒரு வக்ர கிரகம் ஜன்மத்தை பார்க்கும் போது வக்ர சிந்தனை ஏற்படலாம். சிந்தனைக்கு ப்ரேக் போட வாராஹி அம்மன், வராஹ மூர்த்தி அ கிராமதேவதையை தியானம் செய்யவும்.
சிலருக்கு கட்டி,கொப்புளம் ,ரணம் ஏற்பட்டு  வயிறு, முக பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். 10-8 அதிபதிகள்  பார்வை காரணமா வேலையில் அழுத்தம் ஏற்படும். 11-8 அதிபதிகள் பார்வை காரணமா மூத்த சகோதரம் பாதிக்கலாம். வேட்டை பொருளை வீட்டுக்கு கொண்டு வர்ரதுல சிக்கல் ஏற்படலாம்.
2.ரிஷபம்:
செவ் இவிகளுக்கு 7-12 க்கு அதிபதி .இவரு தான்  நிற்கக்கூடாத 12 ஆமிடத்துல ஆட்சியா  வர்ராரு. டெம்ப்ரரியா செவ் தோஷம் ஏற்பட்டாப்லதான். பூமி,கோபம், மின்சாரம், கூர்மையான ஆயுதங்களால்,அதி உஷ்ணத்தால் பிரச்சினை ஏற்படும்.ரத்தம்,எரிச்சல் தொடர்பான நோய் கூட பாதிக்கலாம். செலவுகள் கழுத்தை நெறிக்கும். "முக்கியமான" நேரத்துல பொஞ்சாதியோட முட்டிக்கும். மாமனார் என்னம்மா சத்தம்னு கேட்க "ச்சொம்மா பேசிக்கிட்டிருக்கம் மாமா"ன்னு கூட சொல்லவேண்டி வரலாம்.
காதலி,மனைவி மேட்டர்ல அடக்கி வாசிங்க. பிரிவுக்கும் வாய்ப்புண்டு. கு.ப உப்புமாவாச்சும் செய்ய தெரியுமா? டீ ,காபி?
சனியா 9,10 க்கு அதிபதி இவர் 6 ல வக்ரம். ஒரு வகையில இது நல்லதுதான். அப்பா,சொத்து,முதலீடு,சேமிப்பு வகையறாவுல  லைன் க்ளியராகும் .என்ன நீங்க கொஞ்சம் வளைஞ்சு கொடுக்க வேண்டி வரும். தொழில்,உத்யோகம்,வியாபார வகையிலும் இதே தான் நிலை.
7-9 பார்வை காதலி,மனைவிக்கு டென்ஸ் கூட்டும். அவிக திடீர்னு உங்க அப்பா கிட்டே காச் மூச்னு  கத்தி சண்டை கூட போடலாம். 7-10 பார்வை காரணமா மனைவி உங்க தொழில்,உத்யோகம்,வியாபாரத்துல மூக்கை நுழைக்கலாம்.12-10 பார்வை காரணமா நீங்க சேல்ஸ்  லைன்ல இருந்தா பிழைச்சிங்க. இல்லின்னா அவசரத்துக்கு எதை விக்கலாங்கற யோசனைல்லாம் வந்துரும்.

3.மிதுனம்:
செவ் உங்களுக்கு 6-11 க்கு அதிபதி .இவர் 11ல் ஆட்சி பெறுவதால் கடன் அதிகமாகும்.  செவ் காரக நோய் தலை காட்டலாம்.( ரத்தம்,உஷ்ணம்,எரிச்சல்). மூத்த சகோதரத்தின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். அதுக்காகவும் நீங்க கடன் பட வேண்டி வரலாம்.
சனி 8-9 க்கு அதிபதி. இத்தனை காலம் இந்த நாற பொளப்புக்கு இருக்கிறதை விட போய் சேர்ந்தா நல்லாருக்கும்னு கூட புலம்பற  நிலையில இருந்த நீங்க ஒரு கை பார்த்துரவேண்டியதுதான்னு கோதாவுல குதிப்பிங்க.
சமீபத்துல சொத்து, வெளி நாடு பயணம், அல்லது ஒரு முதலீடு விஷயமா தேவர் ஃபிலிம்ஸ் படம் போல "வெற்றி வெற்றி"ன்னு இருந்தது தலை கீழா போயி அடியை பிடிடா பரதப்பட்டான்னு மாறும்.
6-8 பார்வை காரணமா சாரி சாரியா கிளம்பிட்டிருந்த சத் ரு,ரோக ,ருண உபாதைகளுக்கு ரெட் சிக்னல். அடிச்ச ஜாக்பாட்டை ட்ரா பண்ண கிளம்பினப்போ ஏடிஎம் காணாம போன மாதிரி ஒரு நிலை வரலாம் அப்பா மேட்டர்ல திடீர்னு காபரா ஆயிரும். ஒரு அட்வான்ஸ் ஜெனரல் செக்  அப் நல்லது.
4.கடகம்:
செவ் உங்களுக்கு 5/10 க்கு அதிபதி .இவர் 10 ல வர்ரது நல்லதுதான். உங்க எதிரிகளோட திட்டங்களே உங்க வெற்றிக்கு உதவியா இருக்கும். பிசியாயிருவிங்க.அதே நேரம் அந்த டென்ஸ் காரணமா உங்களை சேர்ந்தவுகளே உங்களை வெறுக்க வச்சிருவிங்க.அடக்கி வாசிங்க. செய்தொழில்ல எப்பவோ செய்த முயற்சிகளுக்கான பலன்லாம் இந்த ஒன்னரை மாசத்துல கதவு தட்டி வந்து சேரும். மகள்/மகன் உங்களுக்கு உதவியா இருப்பாய்ங்க.
சனி உங்களுக்கு 7-8 க்கு அதிபதி. இவர் 4 ஆமிடத்துல வக்ரமாறதால "என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" "என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா"னு சந்தோசம் கொண்டாட ஆரம்பிச்சுருவிங்க. ஜில்லுனு ஒரு பீர் ,ஒரு பலான படம்னா பரவால்லை .வேற மேட்டர்லாம் மாணாம். மாட்டிக்குவிங்க.
வீடு,வாகனம்,கல்வி தொடர்பாக இருந்த டெட் லாக்  காபரே கணக்கா படக்குனு அவுந்து விளுந்துரும். மனைவியின் பிஹேவியர் ரெம்ப டிஃப்ரன்டா இருக்கும். கலீஞரு அண்ணா கிட்டே இரவல் வாங்கின இதயம் கிடைச்சா பாருங்க. நேர் மறை எண்ணங்கள் அதிகமாகும்.
5.சிம்மம்:
செவ் உங்களுக்கு 4/9க்கு அதிபதி இவர் 9 ஆம் இடத்துல ஆட்சி பெறுவது நல்லதுதான். ஆனால் கடந்த கால மிஸ்மேனேஜ்மென்ட்ஸ் காரணமா ஒரு எஃப்.டியோ ,சொத்தோ பைசலாயிரக்கூடிய வாய்ப்புமிருக்கு. அப்பா /மாமனார் எரிஞ்சு  விழுவாரு. அவருக்கு செவ் காரக நோய் பாதிக்கலாம். தூர பயணத்துல சின்ன ..மிக சின்ன  விபத்து நடக்கலாம். மேலதிகாரி/பெரிய மனிதர் ஒருவரோடு உரசல் ஏற்படலாம்.
இந்த காலகட்டத்துல உங்க அம்மா ஃபாதர்லி குணங்களை வெளிப்படுத்துவாய்ங்க. அது உதவிகரமா கூட இருக்கும். ஒரு சிலர் வீடு /வீட்டு மனை வாங்குவிங்க.
சனி 6/7 க்கு அதிபதி .இவர் 3 ல் இருப்பது நல்லதில்லை தான்.ஆனால் இவர் வக்ரம் பெற்றதால ப்ரதர்ஸோட இருந்த கிரைசிஸ் செட்டில் ஆகலாம். சின்ன சின்ன பயணங்களையும் தள்ளிபோட்டுக்கிட்டிருந்த நிலை மாறும். மனைவிக்கு இருந்த அல்லல் அலைச்சல் குறையும்.
4- 6  அதிபதிகளிடையிலான  பார்வை காரணமாக தாய்க்கு நோய் பாதிப்பு,கடன் தொல்லை ஏற்படலாம்.அவிக நல்லதுக்கு சொல்றதை நீங்க புரிஞ்சுக்காம காச் மூச்சுன்னு கத்தலாம். 9-6 அதிபதிகளிடையிலான  பார்வை காரணமாக தந்தைக்கும் மேற்சொன்ன சத்ரு ரோக உபாதைகள் அவருடன் முட்டல் மோதல் ஏற்படலாம்.
அதே நேரம் இந்த முட்டல் மோதல் அவிகளுக்கும் உங்களுக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகர்க்கும்.
6.கன்னி:
செவ் உங்களுக்கு 3/8க்கு அதிபதி.இவர் எட்டாமிடத்தில ஆட்சி  பெறுவது இளைய சகோதரத்துக்கும் -உங்க சவுண்ட் பாக்ஸுக்கும் ஆப்பு. சிலர் தம்பி அ தங்கையோடு முட்டிக்க வேண்டி வரலாம்.
மேலும் பூமி,கோபம், மின்சாரம், கூர்மையான ஆயுதங்களால்,அதி உஷ்ணத்தால் பிரச்சினை ஏற்படும்.ரத்தம்,எரிச்சல் தொடர்பான நோய் கூட பாதிக்கலாம்.
சனி 5-6 க்கு அதிபதி.இவர் ரெண்டாமிடத்துல நின்னதால ஏறக்குறைய ஒரு சூதாடி போலவே மாறியிருப்பிங்க. அதாவது பணம் எப்ப வரும் -எவ்ள வரும் -எப்ப போகும் எவ்ள போகும்னு தெரியாத நிலை. ஆனால் இந்த நிலை இப்பம் மாறும் பேச்சு,கொடுக்கல் வாங்கல்,குடும்பம் இப்படி எல்லா மேட்டர்லயும் ஒரு நெதானம் வந்துரும்.டோன்ட் ஒர்ரி.
3-5 அதிபதிகளிடையில் பார்வை ஓகே. லாஜிக்கே இல்லாம இளைய சகோதரத்தால நல்லதும் நடக்கலாம்.கெட்டதும் நடக்கலாம். ஆனால் ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு பஞ்ச் பேசிக்கிட்டு சலம்பாதிங்க. லோக்கல்ல ட்ரைவிங்ல சாக்கிரதையா இருங்க.
6-8 அதிபதிகளிடை பார்வை காரணமா ஒரு எதிரியை வெற்றிகரமா ஃபேஸ் பண்ணுவிங்க. ஒரு கடன் பைசலாகும். ஒரு உடல் நல பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

Monday, April 1, 2013

ஏப்ரல் 12 முதல் மே 23 : ஹை அலர்ட்?

அண்ணே வணக்கம்ணே !
நாம ஒன்னு சீப் மினிஸ்டரும் இல்லை, பிரைமர் மினிஸ்டரும் இல்லை. நமக்கு உளவுத்துறை ரிப்போர்ட் எல்லாம் வர்ரதில்லை. நாம பிரகடனப்படுத்தற இந்த ஹை அலர்ட்டுக்கு காரணம் சனி செவ் பார்வை .

 நவகிரகங்கள்ள செவ் எந்தளவுக்கு புலி - சனின்னா   நமக்கு எந்தளவுக்கு கிலின்னு பல சந்தர்ப்பத்துல சொல்லியிருக்கன்.  நவீன பரிகாரம்னு கெரகங்களுக்கு டேக்க கொடுக்க கத்து கொடுக்கிற  நமக்கே  செவ் மட்டும் கொஞ்சம் பீதிய கிளப்புற கெரகம் தான்னும் விலாவரி சொல்லிகீறேன். அதுலயும் இந்த சனி செவ் சேர்க்கை -பரஸ்பர பார்வைன்னா  நமக்கு அஸ்தியில சுரம் கண்டுரும்.

சோசியத்தை பத்தி தெரியாதவுக என்னாத்துக்கு இந்த ஆளு இப்படி பீதிய கிளப்பறாருன்னு சலிச்சுக்கலாம் கூட. ஆனால் என்ன பண்றது பாஸூ.. சோசியல் லைஃப்ல ஒவ்வொருத்தன் பிஹேவியருக்கும் ஒவ்வொரு கெரகம் காரணமா இருந்து நம்மை கடுப்பாக்கி கன்வின்ஸ் பண்ணுதே.
ஜாதகத்துல சூரியன் செரி இல்லாதவன் ஈகோவால , சந்திரன் செரி இல்லாதவன்  சஞ்சலத்தால ,செவ் செரி இல்லாதவன் கோவத்தால ,ராகு -கேது செரி இல்லாதவன் ஈசி மணி மேல பாசத்தால +  மத துவேசத்தால  நாசமா போறாய்ங்க.

ஒரு காரியத்தை ஒருத்தன் கிட்ட சொல்லி செய்ய சொல்றோம்னு வைங்க. குரு செரியில்லாதவன் லேட்டா செய்வான், சனி செரியில்லாதவன் ரெம்ப லேட்டா செய்வான், புதன் செரியில்லாதவன் சொதப்பிருவான்,சுக்கிரன் செரியில்லாதவன் பட்லிகிட்டே கொஞ்சறதுல மூழ்கி  அட்டெம்ப்டே பண்ண மாட்டான்

இதெல்லாம் ஒரு பக்கம்னா சனி செவ் சரியில்லாம -ரெண்டு பேரும் சேர்ந்திருந்தாலோ - அல்லது ஒருத்தரை ஒருத்தர் பார்த்தாலோ கை,கால் சேதாரத்தோட திரும்புவானே. இதுக்கு இன்னா பண்றதாம்?

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போல கெடும்னு பாரதியார் ச்சொம்மாவா சொன்னாரு..(????) இந்த சனி செவ் மேட்டரு 2013 ஏப்ரல் 12 ஆம் தேதியிலருந்து மே 23 ஆம் தேதிவரை ஒர்க் அவுட் ஆகப்போவுது. சனி துலாம்ல இருக்க செவ் மேஷத்துல இருக்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க போறாய்ங்க.

இந்த கிரக நிலை 12 ராசிகளுக்கும் என்னவிதமான எஃபெக்டை கொடுக்கும்னு விவரிக்கத்தேன் இந்த பதிவு. சனி செவ்வாய் ரெண்டு பேர்ல சனி வக்கிரத்துல இருக்கிறது ஒரு வகையில ப்ளஸ் ஒரு வகையில மைனஸ்.இது சில ராசிக்காரவுகளுக்கு ப்ளஸ் சில ராசிகளுக்கு மைனஸ். அதை எல்லாம் விரிவா பார்க்கத்தான் போறோம். 

மொதல்ல பொதுவா  நாட்டுக்கு - நாட்டு மக்களுக்கு என்ன நடக்கும்னு பார்ப்போம்.

சனி துலாம்ல உச்சம்.ஆனால் வக்ரம். இது தொழிலாளர்களுக்கு ,விவசாயிகளுக்கு,தலித்துகளுக்கு  நல்லதில்லை.

சுரங்கம்,குவாரி,ஐரன்,ஸ்டீல் துறைகளுக்கும் நல்லதில்லை. குறிப்பா அரசு ஊழியர்களில் யூனிஃபார்ம் போடறவுகளுக்கும் நல்லதில்லை. சனி மேற்குதிசைக்கு காரகர். இதனால நாட்டின் மேற்கு பகுதி மக்களுக்கு பிரச்சினை வரலாம்.

சனி செவ்வாய்க்கு பார்வை இல்லைன்னா பிரச்சினைய ஊறப்போட்டா சரியா போயிரும். ஆனால் இந்த செவ் பார்வை கிடைக்கிறதால பத்திக்கும் (செவ் = நெருப்பு ) போலீஸ் எல்லாம் அனுப்ப வேண்டி வரும்.துப்பாக்கி சூடு வரை போகும்.

ஆயுதம் தாங்கிய கொள்ளைகள் நடக்கலாம். தீவிபத்து (அதுலயும் ஆயில் நிறுவனங்கள் -பெட் ரோல் பங்கு, கேஸ் ஃபில்லிங் யூனிட்ல எல்லாம் அலார்ட்டா இருக்கனும்)

போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே ,மின்சாரத்துறைக்கும் இது போதாத காலம் தான். சனங்களுக்கு  கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான வியாதிகள், கோபம்,ரத்தம்,மஜ்ஜை தொடர்பான பிரச்சினைகள் அதிகமா வரலாம்.
செவ் = தெற்கு திசை .இதனால் தென் இந்தியாவுல பிரச்சினைகள் க்ளைமேக்ஸுக்கு போகலாம். நான் இதுக்கெல்லாம் கூட பெருசா கலங்கலை.
வட கொரியா -தென் கொரியா பஞ்சாயத்துல எதுனா சாஸ்தி கம்மியாகி வார் ஆரம்பிச்சுருச்சுன்னா ஓலகமே நாறிரும்.

எல்லா நாடுமே பஞ்ச பரதேசிக, அன்னாடங்காய்ச்சிங்க மாதிரி அல்லாடற இந்த காலத்துல ஒரு யுத்தம் வேற மாட்டிக்கிச்சினா நினைச்சாலே பயம்மா இருக்கு.

சாந்தி காலத்துலயே கிளியுது. இதுல யுத்தம் வேற வந்து தொலைச்சா ?
அதுக்கு மிந்தி பதிவுக்கு போயிரலாமான்னு கேட்டு 12 ராசிகளுக்கும் பலனை சொல்லனும். இன்னாடா மேட்டருன்னா பவர் கட் ஒரு பக்கம்  ஆஞ்சனேயர்  வானர சேனைய அனுப்பி டெலிஃபோன் வயரை பிடுங்கி விட்டுட்டாரு. ப்ளான் பண்ண மாதிரி பலனை போட முடியலை நாளைக்கு கட்டாயம் போட்டுர்ரன். 
ஓகேவா உடுங்க ஜூட்டு.

Thursday, March 28, 2013

நவகிரகங்களுடன் பேட்டி : குரு

அண்ணே வணக்கம்னே !
அமாவாசை இருட்ல  பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழிங்கறாப்ல இந்த தொடர்  போயிட்டிருக்கு. எப்படியோ ஆரம்பிச்சுட்டம். எப்படியோ ஒன்னு முடிச்சுட்டா போதுங்கற நிலைக்கு வந்துட்டன். ஆருனா புண்ணியாத்மாக்கள்  நாம போட்டுக்கிட்டிருக்கிற பதிவுகளை சாதி பிரிச்சு தலைப்பு -சுட்டினுட்டு கொடுத்தா புண்ணியமா போகும்.

நண்பர் தான்  துவக்கின கன்னிமரா லைப்ரரி வலைதளத்தோட டொமைனை ரென்யூவல் பண்றதுல அக்கறை காட்டலியா நாம அதை சொந்தமாக்கிக்கலாங்கற முடிவுக்கு வந்துட்டம். கடந்த பாராவுல சொன்னாப்ல தலைப்பும் -சுட்டியுமா தொகுத்து இந்த வலைதளத்துல ஷோ பண்ணலாம்னு உத்தேசம். ஆத்தா உத்தரவு எப்படியோ தெரியலை.

குருவை பற்றி தெரிஞ்சுக்கனும்னா நம்ம வாழ்க்கைய ஒரு க்ளான்ஸ் திரும்பி பார்த்தாலே போதும்.  நாம நாசமா போக எத்தீனி வாய்ப்புகள் தேவையோ எத்தீனி சூழல் தேவையோ அத்தனையும்  நமக்கு இருந்தது. லக்னம் கடகமாகி லக்னத்துல புதன் -சூரியன் .புதன் 3-12 க்கு அதிபதி .  புதன் 3 க்கு அதிபதிங்கறதால எதையுமே சாலஞ்சிங்கா எடுத்தக்கறது ,அண்ணன் தம்பிகளோட வெட்டுப்பழி -குத்துப்பழி .

சாலஞ்சிங்குன்னா ஒங்க வீட்டு எங்க வீட்டு சாலஞ்சிங் இல்லிங்கோ ஒரு தாட்டி ஒரு குட்டிய கணக்கு பண்ண அவிக ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வரவழைச்சோம் - அந்த வீட்டு கிணறு ரெண்டு வீட்டுக்கு பாகம். ரெண்டு ராட்டினம் -ரெண்டு கயிறு  போட்டு குறுக்கால கதவிருக்கும்.

எதுனா அசந்தர்ப்பம்னா இந்த பக்கம் நுழைஞ்சு அடுத்த வீட்டுக்குள்ளாற போயிரலாம்னு ப்ளான். (அடுத்த ஊட்டுல நமக்கு ஃபுல் லைசென்ஸூ)  சுஜாதா கதையில வசந்த் கணக்கா குட்டியை மூலையில தள்ளி வாசனை பார்க்கிற தூரத்துக்கு கூட போகலை. அவளோட அம்மா இந்த ஊட்டுக்குள்ள நுழைஞ்சிட்டிருக்கா.

காவலுக்கு வச்சிருந்த இந்த ஊட்டு பையன் பே பேங்கறான். அம்மாக்காரிக்கு இன்னம் டவுட்டு சாஸ்தியாயிருச்சு.

நேர உள்ளாற வந்துக்கிட்டிருக்கா.வராந்தா ..ஹாலு ..கிச்சன். அடுத்தது பாத்ரூம் தான். அங்கன தான் கிணறு.அம்மாக்காரி முன்னேறி வர வர நாம அப்டியே பேக் டு தி பெவிலியன். கிணத்தாண்டை பார்க்கிறோம். கொய்யால ..கிணத்துக்கு குறுக்கால இருக்கிற கதவு அந்த பக்கம்  லாக் ஆகியிருக்கு.

என்னா பண்றது? ஒரே செகண்டுதான். படக்குனு ஸ்பார்க் ஆச்சு. கவுறை தூக்கி ராட்டினத்துல ஒரு முடிச்சை போட்டு கயிறை புடிச்சிக்கிட்டு பட படன்னு உள்ளாற இறங்கியாச்சு.  அம்மாக்காரிக்கு சந்தேகம் இன்னம் தீரலை. கக்கூஸு வரை போயிட்டு தான் ஒரு போய் தொலைஞ்சா.  அன்னைக்கேதோ நம்ம வெயிட்டு 48 கேஜிங்கறதால ஓகே. இன்னைக்குன்னா (120 கேஜி) மணிக்கட்டே கழண்டிருக்கும்.

இப்படி ஒன்னில்லை ரெண்டில்லை. புதனோட ராசிகள் எவை? மிதுனம் - கன்னி . மிதுனம்னா என்ன? மைதுனம். மைதுனம்னா என்ன? வேறென்ன கில்மா தான். கன்னி? ராசிச்சக்கரத்துல ஆறாவது ராசி. சத்ரு ரோகம் ருணம். இதான் நம்ம வாழ்க்கைய ஒட்டு மொத்தமா ஆக்கிரமிச்சிருந்தது.

லக்ன சூரியனை டீல்ல விட்டுட்டமா? வரேன். சூரியன்  உலகத்துக்கெல்லாம் ஒளி தராரு. பெட் ரமாக்ஸ் லைட்டுக்கு கூட பாடிகை தராய்ங்க. சூரியனுக்கு ?
சூரியன் ஒலகத்தையே தட்டி எளுப்பறாரு. அவரு தூங்க முடியுமா? ஊஹூம்.

அதுலயும் அவருக்கு சொந்த வீடு சிம்மம். சிம்மத்துக்கு மிந்தின வீடு கடகம். நீங்க காலையில ரெடியாகி வேலைக்கு போறிங்க.  நாளெல்லாம் மாரடிச்சுட்டு வீடு திரும்பறிங்க. அந்த சந்தர்ப்பத்துல உங்க வீட்டு கிராஸுக்கு மிந்தின கிராஸுல உங்க மன நிலை எப்படி இருக்கும்? எப்படா ஊட்டை போயி சேருவம்னு தான் இருக்கும்.

அந்த மினிட்ல உங்களால எதையாவது டிசைட் பண்ண  முடியுமா? டிக்ளேர் பண்ண முடியுமா ?ஊஹூம். இந்த நிலையில உள்ள சூரியன் லக்னத்துல இருந்தா எப்டி இருக்கும்? ரோசிச்சு பாருங்க.

எந்த காரியத்தை எடுத்தாலும் முடிக்கிறதை பத்திதான் மைண்டு ரோசிக்கும். ஒன்னை ஆரம்பிக்கும் போதே இதை எப்படி முடிச்சு வைக்கிறதுன்னு தான் யோசிக்கும். இந்த வரிகளை டைப் பண்ணும் போது கூட ஆன் லைன் ஜோதிட ஆலோசனை - பதிவுகள் போடறது இது ரெண்டையும் எப்படி முடிச்சு வைக்கிறதுன்னு தான் எண்ணம் ஓடுது.

எதுனா சீரியல்ல மாமா, சித்தப்பா மாதிரி ஒரு ரோல் கிடைச்சா ரெண்டு வருசம் தாங்கும். லைஃப்ல செட்டிலாயிர்ரது,  வாரத்துல ஒரு நாள் இலவ ஜோதிட ஆலோசனை (மட்டும்) - நாளிதுவரை நாம எழுதின பதிவுகளை எல்லாம் ஒழுங்கு படுத்தி கன்னிமராலைப்ரரி டாட் கோ டாட் இன்ல வச்சுர்ரது .
இதையெல்லாம் மீறி .. எங்கன உருப்படறது? அதுலயும் சூரியன் பாப கிரகம் - பாபனோட சேர்ந்த புதனும் பாவி. லக்னத்துல ரெண்டு பாபிகளை வச்சுக்கிட்டிருந்தா என்ன ஆகும்? நோ பீஸ் ஆஃப் மைண்ட் னுட்டு பாட்டு பாடவேண்டியதுதான். மைண்டு ஒரு பக்கம்னா பாடி என்னத்துக்காகும்.

குருவை சூரியன் கண்ட்ரோல் பண்றாரு. சூரியனை புதன் கண்ட்ரோல் பண்றாரு. ஆக லக்னத்துல ஆக்டிவா இருக்கிறது புதன் தான்.புதன் விரயாதிபதி. என்னா இழவு இது? குரு மட்டும் யோக்கியமா என்ன? டபுள் ஆக்டு . இந்த பக்கம் பார்த்தா ரோகாதிபதி -அந்த பக்கம் பார்த்தா பாக்யாதிபதி.
குரு நின்ற இடத்தை விட பார்க்கும் இடம் விருத்தியாகும். குருவுக்கு 5-7-9 ஆம் பார்வைகள் உண்டு. இதில் 5-7 பார்வைகள் விசேஷம்ங்கறது விதி.கடகத்துல குரு உச்சங்கறது தெரிஞ்ச கதைதானே.

ஜஸ்ட் லக்னத்துல மட்டும் இத்தீனி ஓட்டை. இன்னம் லக்னாதிபதி வாக்குல நின்னு எட்டை பார்க்கிறது.. ரெண்டாமிடத்துல பாதகாதிபதியான சுக்கிரன் நிக்கிறது, நாலாமிடத்துல செவ் கேதுல்லாம் எக்ஸ்ட்ரா. இதையெல்லாம் மீறி டப்பு இருந்தாலும் -இல்லின்னாலும் , ஜெபம்,தியானம்,யோகா இத்யாதி தெரியாத காலத்துலயும் சரி - ஓரளவு தெரிஞ்ச இந்த காலத்துலயும் சரி  வண்டி ஓடிக்கிட்டுத்தான் இருக்கு. கொஞ்சம் மருவாதி, ஸ்விம் சூட் மாதிரியாச்சும் சிக்கனமா புகழ் எல்லாம் இருக்கு.

இதையெல்லாம் கொடுத்துக்கிட்டிருக்கிறது லக்ன குருவும் அவரோட அஞ்சு -ஒன்பதாம் பார்வைகளும் தான். ஹி ஹி இந்த சொந்த கதையை முன்னுரையா வச்சுக்கங்க. நாளையிலருந்து ஜரூரா குருவை படம் வரைஞ்சு பாகங்கள் குறிக்கலாம்.ஓகேவா உடுங்க ஜூட்டு.

Friday, March 22, 2013

ராகு கேதுக்கள் : ஆழமான பார்வை : 3

அண்ணே வணக்கம்ணே !
செவ்வாயை பத்தி தான் ஜவ்வா இழுத்திட்டிங்க. இந்த ராகு கேது சமாசாரத்தையாவது பட்டுன்னு முடிக்க கூடாதான்னு சிலர் நினைக்கிறது கேட்குது.ஆனால் பாருங்க மேக்ரோ லெவல்ல ரோசிக்கும் போது செவ்வாயே பெட்டர்.
எதிராளிக்கு கோபம் வருது. அது வர்ரது நமக்கு தெரியுது. திருப்பி தாக்கவோ -ஓடி ஒளியவோ சான்ஸ் இருக்கு.ஆனால் ராகு ? ஆனால் கேது? ஊஹூம்.
அடி தடிக்கு, குத்து கொலைக்கு கூட சாட்சியை பிடிக்க முடியும்.ஆனா சதிக்கு?
எவனோ நம்மை பிடிக்காதவன் நம்ம மேல பொய் புகார் கொடுத்துர்ரான். போலீஸ்கார் ..போலீஸ்கார் ! நான் உத்தமன்னு கன்வின்ஸ் பண்ண சான்ஸ் இருக்கு. இல்லையா சாராயம் காச்சற கவுன்சிலர் அல்லது பலான தொழில் பண்ற கவுன்சிலரை பிடிச்சு ராஜி பண்ணிக்கலாம்.
எவனாச்சும் விசம் வச்சுட்டான்னு வைங்க? என்ன பண்ண முடியும்? இதனால தான் சொல்றேன். செவ்வாய் கொடுக்கிற பல்பை விட ராகு -கேதுக்கள் கொடுக்கிற பல்பு கொடுமைடா சாமி.
 உலகமக்கள் எல்லாரோட ஜாதகத்துலயும் ராகு கேதுக்களால பிரச்சினையே இல்லைன்னு வைங்க. இந்த ஒலகம் எவ்ளோ ப்ளெசன்டா இருக்கும் தெரியுமா?
இத்தனைக்கும் என் ஜாதகத்துல தோஷம் கூட கிடையாது.  4 ஆமிடத்துல தான் கேது.ஆனால் விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து  வீட்டுல நம்மை சுத்தி எத்தீனி சதி ? அம்மாவுக்கு கான்சர் - எத்தீனி சைக்கிள் நாசம்?
பத்தாமிடத்துல தான் ராகு.ஆனால்  நம்ம கொலிக்ஸ்ல எத்தீனி சதிகாரவுக. ஸ்..யப்பா ..வேண்டான்டா சாமீ. ராகு -கேதுன்னா புதியவர்கள் . முன்னே பின்னே தெரியாதவன் கூட லாஜிக்கே இல்லாம ஆப்படிச்சிட்டிருந்தா  ஒரு மன்சனுக்கு மனித குலத்து மேல என்னத்தை பிடிப்பு இருக்கும்?
ஜா.ரா கேஸையே எடுத்துக்கங்க. வரப்பு தகராறா? வாய்க்கா தகராறா?  நாம என்ன செய்துட்டம்? பலன் கேட்டாரு. காசு அனுப்பறேன்னாரு. காசு வேணாம்யா அனுப்பறேன்னு சொன்னம். கொஞ்சம் தாமதமாயிருச்சு போல. 
நான் எல்லாம் அந்தந்த வேளை சோத்துக்காசை எடுத்து ஆ.இ 2000 த்துக்கு கூரியரும் ,ஃபேக்ஸும் அனுப்பியிருக்கன். நான் கூட அந்தளவுக்கு கடுப்பானதில்லை. நம்மாளு அந்த நாள் முதல் இந்த நாள் வரை ஒற்றெழுத்தை விட கேவலமான மேட்டரை எல்லாம் கமெண்ட்ல கொட்டி குவிச்சுக்கிட்டிருக்காரு.
பஸ் ஸ்டாண்ட்ல கடை பார்த்து வச்சிருக்கன். பஸ் ஸ்டாண்டுல ஹைஜினிக் கக்கூஸு,பாத்ரூம்லாம் இருக்கு. வந்துருய்யா. கை நிறைய வேலை தரேன். காசு தரேன்.வேலை வெட்டி இல்லாம ஏன் சிண்டை பிச்சுக்கறேன்னு சொல்லிட்டே இருக்கம் கேட்டாதானே? ஊஹூம்.
உலக மக்கள் அனைவரின் ஜாதகங்களிலும் ராகு கேதுக்கள் நெல்ல இடத்துல இருந்திருந்தா மத துவேஷங்கள் இல்லை, காற்று,தண்ணீர்,மண் விசமாகியிருக்காது.கள்ளக்கடத்தல் இல்லை,பொய்க்கணக்கு இல்லை.கருப்பு பணம் இல்லை, டாஸ்மாக் இல்லை. கள்ள காதல்கள் இல்லை. எத்தீனி இல்லைகள்.
இதனாலதேன் ராகு கேதுக்களையும் அலார்ட்டா ஆதியோடந்தமா டீல் பண்ண வேண்டியதா இருக்கு.ஓகே பதிவுக்கு போயிரலாம்.
கடந்த பதிவுல ராகு -கேதுக்கள் 3-9 ல இருந்தா என்ன பலன்னு பார்த்தோம். இன்னைக்கு 4-10 காம்பினேஷனை பார்ப்போம். ஆக்சுவலா இங்கன ரா -கே இருந்தா தோஷமில்லை தான்.ஆனாலும் ஒரு சில பாதிப்புகள் உண்டு.
4 ல் ராகு / கேது:
தாயின் நிறம் மங்கிப்போகலாம். உடல் நலிவு ஏற்படலாம். வீடு மேட்டர்ல ரகசிய ஆப்புகளை எதிர்கொள்ள நேரிடலாம். கல்வின்னு வரும் போது அகடமிக் ஸ்டடீஸை விட உலக ஞானத்தை (?) பெறுவதில் தான் ஆர்வம் அதிகமா இருக்கும். படிக்கிற வயசுல ராகு தசை/கேது தசை மாட்டிக்கிச்சினா கல்வியில் தடை கூட ஏற்படலாம். வாகன மேட்டர்ல வண்டி திருடு போகலாம், வாங்கினது திருட்டு வண்டியா இருக்கலாம். ஆருக்காச்சும் இரவல் கொடுக்க அவிக கிரைம் பண்ணிட்டு நாம ஜவாப் சொல்ல வேண்டியதாயிரலாம்.
10 ல் ராகு /கேது:
தொழில் எதுவா இருந்தாலும் அதுல புதுமைய புகுத்த தவிப்போம்.  நமக்கு சம்பந்தமே இல்லாட்டியும் எல்லா விஷயத்துலயும் அடிப்படையான சில விஷயங்களை தெரிஞ்சு வச்சுக்கிட்டு,அதுக்கே எல்லாத்துலயும்  சாதிச்சுரனும்னு ஒரு தவிப்பு இருக்கும். மக்கள் நாம சொல்றதையும் -செய்றதையும் நம்பவும் முடியாம ஏமாத்துன்னு குற்றம் சாட்டவும் முடியாம தவிப்பாய்ங்க. ஆரம்ப காலத்துல சனத்தை -அவிக டேஸ்டை புரிஞ்சுக்க முடியாம தொடர் தோல்விகள் ஏற்படலாம்.
நம்ம ஆட்டிட்யூடை பார்த்து பயந்து போயி - சம்பிரதாயப்படி தொழில் நடத்தறவன்லாம் எதிரியா மாறிருவான்.
5-11 காம்பினேஷன்:
ராகு கேதுக்கள் 5-11 ல இருக்கிறது ஒரு டிஃப்ரன்ட் சிச்சுவேஷனை ஏற்படுத்தும். முட்டாளா இருப்பான். லாட்டரியில அடிச்ச மாதிரி பணம் குவியும். அல்லது நல்ல ஞானம் இருக்கும். ஆனால் தொடர்ந்து அவமானங்களையே சந்திப்பான்.
மொத கேஸ்ல தான் முட்டாள் என்ற உண்மை தனக்கு தெரிஞ்சிருந்தா பிரச்சினையில்லை. வெற்றிகளை பார்த்துட்டு தான் அறிவாளின்னு மயங்க ஆரம்பிச்சா சீக்கிரத்துலயே பல்பு வாங்கவேண்டியதுதான். அதாவது குழந்தைகள் இல்லாம போயிரலாம். வெத்தலைய வச்சு பித்தலைய எடுக்க நினைச்சு மொத்தமா ஏமாந்துரலாம்.
ரெண்டாவது கேஸ்ல அவமானங்களை கணக்குல வச்சுக்காம தொடர்ந்து ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டே இருந்தா ஒரு நாளில்லை ஒரு நாள் உலகப்புகழ் கியாரண்டி.ஆனால் அந்த சமயம் பார்த்து வாரிசுகளுக்கு பெருந்தீங்கு விளையவும் சான்ஸ் இருக்கு.
அடுத்தபதிவுல  6-12 காம்பினேஷனை பத்தி பார்ப்போம்.

Sunday, March 17, 2013

தாம்பத்யத்தை தகர்க்கும் படுக்கையறை அமைப்பு

அண்ணே வணக்கம்ணே !
தாம்பத்யம்னா அது  படுக்கையறையில மட்டும் தானான்னு கேட்கிறவுக ஆசீர்வதிக்கபட்டவுக. ஆனாலும் என்னைக்கோ ஒருக்கா - பெட் ரூம்லயும் வச்சுக்கத்தானே போறிங்க.அதனால நீங்களும் இந்த பதிவை படிக்கலாம்.
உடலுறவுங்கற வார்த்தைய அதனோட சரித்திர மதிப்பு கருதி அப்படியே வச்சுக்கலாம்.ஆனால் இது வெறுமனே உடல் தொடர்பான சமாசாரம் மட்டுமில்லைன்னு டயரியில எழுதி ரெட் இங்க்ல அண்டர் லைன் பண்ணி வச்சுக்கங்க.
அட ..வெறுமனே உடல் சம்பந்தப்பட்டது மட்டும் தான்னு வச்சுக்கிட்டாலும் அந்த உடல் தொடர்பான இயக்கத்துக்கு தேவையான அமைப்பு இருக்கனுமில்லையா?  அந்த காலத்து கட்டில்களை பார்த்திருப்பிங்கன்னு நினைக்கிறேன். பக்கத்துல சின்னதா ஏணி கூட இருந்திருக்கலாம்.
சனம் அந்த அளவுக்கு ஒசரமா இருந்திருப்பாய்ங்கன்னு நினைக்கவும் வாய்ப்பில்லை. அமிதாப்பச்சன் கூட அந்த கட்டில்கள்ள ஏறிப்படுக்க கொஞ்சம் கஷ்டப்படனும். பின்னே எதுக்கு அம்மாம் உசரம்?
புவியீர்ப்பு சக்தின்னா தெரியுமில்லை. துரித ஸ்கலிதத்துக்கு இதுவும் ஒரு காரணமா இருக்கலாம். ஆரம்பத்துல ரத்தத்தை ஈர்க்குது. இது சௌகரியம் தான்.ஆனால் விந்துவையும் ஈர்க்கிறது ? ஒரு வேளை இதை ஓவர் கம் பண்ணத்தான் அத்தனை உசரமா கட்டில் செஞ்சு வச்சாய்ங்களோ? விவரமானவுக தங்கள் கருத்தை சொல்லலாம்.
எல்லாம் சரீ...திடீர்னு ஏண்ணே ட்ராக் மாறிட்டிங்க. செவ்வாய்க்கும் படுக்கையறைக்கும் என்ன சம்பந்தமுன்னு கேப்பிக. சொல்றேன்.
நேத்திக்கு செவ் 12 ல் இருந்தா என்னெல்லாம் பிரச்சினை வரும்னு சொல்லியிருந்தேன்.அதுக்குண்டான பரிகாரத்தை  சொல்லத்தான் இந்த பீடிகை.
வீடு கட்டிக்கிட்டிருக்கிங்களா? பெட் ரூம் நைருதி மூலையிலயே வராப்ல ப்ளான் பண்ணிக்கங்க. சுவத்துக்கு பூச்சு வேலையே செய்யாதிங்க.தரைக்கு  கிரானைட் போடறவசதி இருந்தாலும் அந்த காலத்து ரெட் ஆக்சைடு ஃப்ளோரிங் போட்டுக்கங்க.
அட கட்டி முடிச்சுட்டிங்களா? பரவாயில்லை.
பெயின்டிங் பாக்கி இருக்கில்லை. பார்க்கவும் ப்ளெசன்டா இருக்கிறாப்ல பாக்கு நிறத்தை ப்ளான் பண்ணுங்க. பெட் ஸ்ப்ரெட்,பில்லோ கவர் எல்லாம் டார்க் ப்ரவுன் நிறத்துல இருந்தா நல்லது.
வசதி இருந்தா அந்த காலத்து சரித்திர படம் கணக்கா சுவத்துல வாள்,கேடயம் வச்சுக்கங்க. வசதி இல்லின்னா யுத்த காட்சிகள் -முக்கியமா பீரங்கி - விமான வழி குண்டு வீச்சு இத்யாதி கொண்ட - கொண்ட போஸ்டரை வச்சுக்கங்க.
பர்ஸும் பாக்கு  நிறத்துல இருக்கனும்.அதுல பன்னிரு கையரின் படம் ஒன்னு வச்சுக்கங்க. அட சாப்பிடற ப்ளேட்டும் கலர் கலரா கிடைக்குதுல்ல. ப்ரவுன் நிற ப்ளேட்டை ச்சூஸ் பண்ணிக்கங்க.
படுக்கையறையின் அக்னி மூலையில சின்னதா ஒரு  ஸ்டவ் வச்சுக்கிட்டு பெட் காஃபிய அங்கயே ப்ரிப்பேர் பண்ணி குடிங்க.
ஸ்..அப்பாடா செவ் கதை க்ளோஸு . நாளைக்கு ராகுவை சந்திப்போம். உடுங்க ஜூட்டு.
கில்மா டிப்ஸ்:
அந்த காலத்துல ஒரு க்ரூப் ஆஃப் பெண்களை தனிய ஒதுக்கி வச்சு பரதம்ங்கறது அவிகளுக்கு மட்டும் தான்னு வச்சிருந்தாய்ங்க. அவிகளை ஊர் பெருசுங்க தங்கள் அரிப்புக்கு உபயோகிச்சு  நாசப்படுத்தினது வேற கதை.
ஆனால் இங்கே ஒரு பலான சமாசாரம் ஒளிஞ்சிருக்கு. அது இன்னாடான்னா நடனம், நாட்டியம்லாம் காம உணர்வுகளை அதிகரிக்க செய்யுமாம். முக்கியமா பெண்களுக்கு.
சம்பந்தா சம்பந்தமில்லாம இந்த டிப்பை இங்கே கொடுக்க காரணம் இருக்கு. நம்ம பவர் ஸ்டார் கொடுத்த தகிரியத்துல டான்ஸு மாதிரி எதையோ ட்ரை பண்ணி அதை வீடியோவா இங்கே போட்டிருக்கன்.
பலவீன இதயர்கள் தயவு செய்து பார்க்காதிங்க..

Wednesday, March 6, 2013

கணவன்/மனைவியை கொல்பவர் யார்?

அண்ணே வணக்கம்ணே !
2013, ஜனவரி 8 ஆம் தேதிக்கு பிறகு   இன்னைக்கு நம்ம நிர்வாண உண்மைகள் வலைப்பூ மூலமா உங்களை சந்திக்கிறேன்.ஏறக்குறைய ரெண்டு மாசம் காலம் அதாவது 60 நாள் - இந்த வலைப்பூவோடு அனுபவஜோதிடம்   வலைப்பூவையும்  ஏறக்குறைய பூட்டி வச்சிருந்தேன்.( ஃபார் இன்வைட்டட் ரீடர்ஸ் ஒன்லி)

ஏன்னா வெளிச்சம் அதிகமாயிருச்சுங்கற ஃபீலிங்கு ஓவராயிட்டே போச்சு. பாடி ,மைண்டு எல்லாமே உதற ஆரம்பிச்சிருச்சு. இப்பம் மட்டும் ஏன் திறந்து விட்டுட்டேன்னு  கேப்பிக. சொல்றேன்.

ஜேஜிக்கும் நமக்கும் இருந்த அக்ரிமென்டே என்னடான்னா "ஜேஜி ! ஜேஜி ! ! நீ என்னை பார்த்துக்க நான் இந்த நாட்டை பார்த்துக்கறேன்"ங்கறதுதான்.ஆனால் 2004 ல் இருந்து நாட்டை ஏறக்குறைய டீல்ல விட்டுட்டம். அதனால வந்த கு.ம தான் இந்த நிலைக்கு காரணம்னு கண்டு பிடிச்சுட்டு காரியத்தை துவங்கிட்டம்ல.

மொத கட்டமா தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்பிக்களுக்கும் வாங்க இந்தியாவை பணக்கார நாடாக்கலாம்னு அழைப்பு விட்டிருக்கம்ல ( ஆ.இ.2000)

மேலும் தெலுங்கு திரையுலகத்துல பிராமணீயத்தை கிழி கிழின்னு கிழிச்சிக்கிட்டிருக்கம். பிராமணியத்துல நம்மை ரெம்ப கடுப்பாக்கிற  மேட்டர் வித்தைய ஒளிச்சுவைக்கிறதுதேன். ப்ளாகை பூட்டி வைக்கிறதும் வித்தைய ஒளிச்சு வைக்கிற மாதிரி தானே அதனலாதேன் பப்பரப்பேன்னு திறந்துவிட்டுட்டன். ஜா.ரா உட்பட வந்து போவட்டுமே..ஜா.ராவின் இன்னொரு  ஸ்கான்டல்  நம்ம பார்வைக்கு வந்தது. ( ஒரு பார்ட்டிக்கு டி.ஏல்லாம் கொடுத்து சேலத்துக்கே அனுப்பி விஜாரிச்சுட்டு வந்துட்டம்.ஆனால் அது படு சீக்ரெட்டாக்கும். நேரம் வரும் போது வெளிய விடுவம்ல)

சரீ..இ அனுபவஜோதிடம் வலைதளத்துல லேட்டஸ்டா என்னத்தை எழுதிட்டம் ???? ஆங் .. கணவன்/மனைவியை கொல்பவர் யார்? இந்த கேள்விக்கான பதிலை சைக்காலஜி அடிப்படையிலயே விவரிச்சுட்டன். இன்னைக்கு ஜோதிட கோணத்துல பார்ப்போம் ஓகேவா?

ஜாதகத்துல 7ங்கறது வாழ்க்கை துணையை காட்டும். 8ங்கறது மரணத்தை காட்டும். செவ் உடனடி மரணத்தை -திடீர் மரணத்தை கொடுத்துர்ர கிரகம்.அதனாலதேன் செவ் 7 -8 ல இருக்கிறதை பார்த்ததுமே சோசியருங்க டர்ராயிர்ராய்ங்க.

செவ் எட்டிலிருக்கிறதாலயோ .. ஏழிலிருந்து லக்னத்தை பார்க்கிறதாலயோ மரணம் தானா வந்தாலும் பரவால்லை. திடீர்னு வந்தாலும் பரவால்லை. (குழந்தை குட்டின்னு ஆகி அவிகளை அனாதையா விட்டுட்டு போகாம போய் சேர்ந்திரலாம். தந்தியில புதுப்பெண் மரணம்னு ஒரு டிசி அளவுல செய்தி வரும் அவ்ளதேன்.

ஆனால் பிரச்சினை இதோட முடியலை. செவ் எதிரிக்கு காரகர். பெண்ணுக்கு எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம். இங்கன செவ் நின்னு மணாளனே மங்கைக்கு மரணத்தை தந்துட்டா?
அல்லது மணமகனின் எதிரிகள் அவருக்கு குறி வைக்க அதுல மனைவியும் மாட்டிக்கிட்டா?

பையன் ஜாதகத்துல ஏழுல இருக்கிற செவ் பொஞ்சாதிய எதிரியா பாவிக்க வச்சு அ அவளை எதிரியாவே மாத்தி தொலைச்சு போட்டு தள்ள வச்சுட்டா? இந்த மாதிரி கேஸுனங்களுக்காகவே காட்டமான பரிகாரங்களை இன்னைக்கு தந்துர்ரன்.

ஏதோ படத்துல (சுந்தரா டிராவல்ஸ்?) வடிவேலு இடம்,பொருள்,ஏவல்னு சகலத்தையும் மறந்து ஒரு எலியை விரட்டிக்கிட்டு போயிருவாரு. அதை பார்த்து நான் கூட சிரிச்சிருக்கன். இந்த எலிகள் பண்ற கூத்திருக்கே.. நம்மையும் வடிவேலு ஆக்கிரும் போல.

சிபியு வை மூடி வச்சா குஞ்சு வச்சுருதுன்னு திறந்து வச்சம். கொய்யால விளக்கு எரியுது. நான் ஒரு மன்சன் டொக்கு டொக்குன்னு தட்டச்சிக்கிட்டிருக்கன். அதும்பாட்டுக்கு ஹீரோ கணக்கா பைப் பிடிச்சு ஏறி வந்து சன்னல் வழியா எட்டிப்பார்த்து சிபியுக்குள்ள போகுது.

எக்கு தப்பா எதையாச்சும் ஒயரை கடிச்சு வச்சுட்டா கோவிந்தா. ஜஸ்ட் இர்ரிடேட் ஆகி ..டப்பா மேல சின்ன தட்டு தட்டினேன் அவ்ளதான். ஏதோ கார்ட் லூஸ் கான்டாக்ட்  ஆயிட்டாப்ல இருக்கு. மானிட்டர் பவர் கட் கணக்கா இருண்டு போச்சுது.

அப்பாறம் நம்ம ஜேம்ஸு சொன்னது ஞா வரவே எல்லாத்தையும் பிடுங்கிட்டு செருகினபிறவு அஜீஸ் ஆயிருச்சு. எலில்லாம் ராகு காரகம் . நமக்கு நால்ல செவ் மட்டும் இருந்திருந்தா ஃப்ளேமே வந்திருக்கும் போல. கூட கேது இருந்ததால எலி -லூஸ் காண்டாக்ட்டோட முடிஞ்சது.

எதுக்கு சொல்ல வரேன்னா எல்லா தீ்ர்வையும் கொடுத்துரனுங்கற துடிப்பு நமுக்கு இருந்தாலும் தீர்வுகளை பெற்று பலன் பெறும் யோகம் சனத்துக்கு இல்லை போல. அல்லது ஜேஜி ..தாளி நீ பாட்டுக்கு பரிகாரத்தை கொடுத்துட்டு போயிருவ.  அப்போ நான்  படைச்ச கிரகம்லாம் டம்மியாயிரும்லன்னு சீப்பை ஒளிச்சு வைக்கிறாப்ல இருக்கு.

இந்த மேட்டர்ல கடவுளுக்கு நான் எப்பமோ சொல்லிட்டன். த பாருங்க பாஸூ.. நான் பரிகாரம் கொடுத்த மாத்திரத்துல இந்த சனம் ஃபாலோ பண்ணிருமா என்ன?  அப்பம் விதி அவ்ள சப்பையா? ஃப்ரீயா உடுங்க. நான் பாட்டுக்கு சொல்லிட்டு போறேன்னு கன்வின்ஸ் பண்ணி வச்சிருக்கன்.

கடவுளுக்கு கஜினி சூரியா கணக்கா மெமரி லாஸ் கீறாப்ல இருக்கு. அப்பப்போ சீப்பை ஒளிச்சு வைக்க பார்க்குது.

மேட்டருக்கு வந்துரலாம் . மேற்  சொன்ன விதமாக செவ் டிக்கெட் போட பார்த்தாலும் ரெண்டு பேருல ஒருத்தருக்கு தீர்காயுசு இருந்தாலும் அந்த  சோடி பிரிஞ்சுரும். இதான் ஆறுதல்.

இதுக்கு என்னதான் பரிகாரம்னா......

ஏழில் செவ்:
1.போலீஸ் ,மிலிட்டரி,ரயில்வே துறையை சேர்ந்தவரை மணக்கனும்
2.அல்லது ஏதேனும் விபத்தில் அங்க ஹீனம் ஏற்பட்டவரை மணக்கலாம். அல்லது ஏற்கெனவே மேஜர் ஆப்பரேஷன் நடந்தவரை .
3.சுமார் 9 வயது இளையவர் - அல்லது அவ்வாறான  இளைய தோற்றம் உள்ளவரை மணக்கலாம்.
4.தம்பதி இருவரும் கராத்தே ,குங்ஃபூ போன்ற மார்ஷல் ஆர்ட்ஸ் கற்கலாம்.
5.இருவரும் சமைக்கனும். முக்கியமா அசைவம் .ஆனால் திங்க கூடாது.
6.வேல் பூசை செய்யலாம்.
7.செம்பு நகைகள் அணியலாம்.
8.கலாய் பூசப்பட்ட செம்பு பாத்திரங்களில் சமைக்கலாம்.
9.செவ் கிழமை அ மிருகசீர்ஷம், சித்திரை,அவிட்டம் போன்ற  நட்சத்திரங்களில் உண்ணாவிரதம்+ மவுன விரதம் மேற்கொள்ளலாம்.
10. ரத்த தானம் கட்டாயம் செய்யவும். ரத்த தானம் செய்யவே ரத்தவிருத்திக்கான உணவு வகைகளை தேடி தேடி சாப்பிடுங்கள்.
உபரியாக லக்ன செவ்வாய்க்கு தரப்பட்ட பரிகாரங்களையும் செய்யனும்.

எட்டில் செவ்:
இந்த கிரகஸ்திதிக்கு ஆண் பெண்களுக்கு வெவ்வேறான பரிகாரங்களை சொல்லனும். நாளைக்கு சொல்றேனே..

Tuesday, January 8, 2013

பாலியல் தொழிலாளியுடன் ஓரிரவு

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டி தொடரை தொடரலாம்னு பார்த்தா ஊஹூம் .. ஒன்னும் வேலைக்காகற மாதிரியில்லை.
ஏன்னா சனத்தொகையில பாதியா இருந்து அடுத்த பாதியை இன்ஸ்பைர் பண்ற -டாமினேட் பண்ற -கண்ட் ரோல் பண்ற ரேஞ்சுல உள்ள பெண்ணினத்தை உடனடியா  நேரடியா பாதிக்கக்கூடிய சமாசாரத்தை அலசாம செவ் தோஷத்தை பத்தி எழுதிக்கிட்டே போறது துரோகம். அதனால இன்னிக்கு ஒரு நா விட்டுருங்க. நாளையிலருந்து நூல் பிடிச்சாப்ல செவ் தோஷம் ஓகேவா?

தில்லி வன்புணர்வு நிகழ்ச்சிக்கு அப்புறம் ஒட்டு மொத்த இந்தியாவும் ப்ளேடோட அலையறாப்ல இருக்கு. ஆளுக்கு ஆள் இந்த மாதிரி சம்பவங்களை தடுக்க ஐடியா  மேல ஐடியாஅள்ளி விட்டுக்கிட்டிருக்காய்ங்க. எங்கப்பக்கத்துல குண்டூர் எஸ்.பி மாணவிகளுக்கு மிளகாய் தூள் பாக்கெட் கூட சப்ளை பண்ணியிருக்காரு..

வன்புணர்வுகளுக்கு பின்னான மனோதத்துவத்தை இந்த பதிவுல அலசலாம்னு  நினைக்கிறேன்.   இந்த பதிவுக்கு இன்ஸ்பிரேஷனே கேள்வியும் நானே பதிலும் நானே  வலைப்பூவில் வெளியாகியிருக்கிற ஒரு பதிவுதான். அதில் உள்ள சில பாராக்களை இங்கன கோட் பண்ணப்போறேன்.
( நன்றி:புரட்சிமணி)

//வன்புணர்வுகள் சமீபகாலமாக அதிகரிப்பதாக தெரிந்தாலும் அது உண்மையல்ல. ஊடகத்துறை வளர்ச்சி பெற்றுள்ளதால் நமக்கு அவ்வாறு தெரிகின்றது.//

இது 100 சதம் அட்சர சத்தியம். வன்புணர்வுகள் குறித்த புகார்கள் எதேனும் ஒரு நிலையில் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடுகின்றன. ஸ்டேஷன் வரை போன புகார்கள் தான்  மீடியாவில் பல்லை இளிக்குது.

//காலம் காலமாக வன்புணர்வுகள் என்பது நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதற்க்கு என்ன காரணம் என்று பார்த்தால் மனிதர்கள் மிருகங்கள் என்ற ஒரு விடைதான் கிடைக்கும். மிருகத்திலிருந்து பரிணமித்த மனிதர்களுக்கு இன்னும் மிருகக்குணம் குறையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். //

புரட்சிமணி ரெம்ப பெரிய மனசு பண்ணி "மிருக குணம் குறையவில்லை"ங்கறாரு. நம்மை பொருத்தவரை மிருகம் தான்.மிருகம் தான்.மிருகம் தான். மன்சனை மன்சனா நினைச்சு சட்டம் போடறதாலதேன் சட்டம்லாம் தோத்துப்போகுது. மன்சனை மிருகமா நினைச்சு சட்டம் போட்டா தான் வேலைக்காகும்.

பதிவர் வயிற்றுப்பசியையும் -உடல் பசியையும் ஒரே தராசில் நிறுத்து உழைச்சு திங்கறதை  - முறையான திருமண உறவுக்கும், திருடி திங்கறதை காதல்/கள்ளக்காதல் இத்யாதிக்கும் - பிடுங்கி தின்றதை   வன்புணர்வுக்கும் ஒப்பிடறாரு.

//ஒரு மனிதனின் உணவு,உடை, உறைவிட தேவைகளை நிறைவேற்றுவது எப்படி அரசாங்கத்தின் கடமையோ அவ்வாறே ஒரு மனிதனின் உடலுறவு தேவைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.//னு புரட்சிகரமா ஆரம்பிக்கிற புரட்சிமணி படக்குன்னு யுடர்ன் எடுத்து // அனைவருக்கும் குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறுமாறு அரசாங்கம் பார்த்துக்கொள வேண்டும்.//னு முடிக்கிறாரு.

// மனிதனின் உடலுறவு தேவைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்//ங்கறதுதேன் நம்ம ஸ்டாண்டு. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் ஆசைகளே வன்முறையாக வெடிக்கின்றனங்கறது சைக்காலஜி. வன்முறைய தடுக்க வேண்டியது அரசின் கடமை.

காளை மாட்டை அடக்கனும்னா அதனோட மூக்கணாங்கயிறை பிடிச்சு நிப்பாட்டனும்.அதை விட்டுட்டு வாலை பிடிச்சுக்கிட்டு ஓடறது முட்டாத்தனம். அரசு எப்படி பொறுப்பேத்துக்க  முடியும்னு கேப்பிக. சொல்றேன்.

அதுக்கு மிந்தி புரட்சிமணி என்ன சொல்றாருன்னு பார்ப்போம்:
//எனவே திருமண வயதை அரசாங்கம் குறைக்க வேண்டும்.தற்ப்பொழுதைய சூழ்நிலையில் 16 என்பது சரியான வயதாக இருக்கும் என எண்ணுகிறேன். //

மேம்போக்கா பார்த்தா ..ஆஹா இதுதாண்டா தீர்வுன்னு தோனும். அந்தகாலத்துல மருத்துவத்துறை செரியா வளராததால குழந்தை மரணம் அதிகமா இருந்தது. இப்ப என்ன கேடுன்னு கூட தோனும்.

திருமணங்கற  ஏற்பாடே ஆணின் செக்ஸ் பவருக்கு அடிக்கப்பட்ட ஆணி. பழகப்பழக பாலும் புளிக்கும்னு பழமொழியா சொன்னாலும் - தி லா ஆஃப் டிமினிஷிங் மாரிஜினல் யுட்டிலிட்டின்னு எக்கனாமிக்ஸ்ல சொன்னாலும் மேட்டர் ஒன்னுதான். திருமணம் என்பது ஆணின் காமத்தை தின்று விடுகிறது.

மன்சன்ல இருக்கிறது ஒரே சக்தி.அதன் நோக்கம் படைத்தல் - இருத்தல்- பரவுதல்.இதெல்லாம் செக்ஸ்ல பாரிஷியலா அச்சீவ் ஆறதாலதான் மன்சனுக்கு செக்ஸ் மேல ஒரு இது. திருமணம் காரணமா -அவனுக்குள்ள இருந்து பொங்கும் சக்தி ஓய ஆரம்பிச்சுட்டா நாஸ்தி.

அந்த சமயத்துல நம்ம மாதிரி பார்ட்டி யாராவது கிராஸ் ஆகி "  நைனா! படைத்தல் - இருத்தல்- பரவுதலுக்கெல்லாம் இன்னம் நிறைய வழி இருக்கு.. கார்ல்  மார்க்ஸ் டாஸ் காப்பிட்டல் படைச்சாரு .இன்னம் இருக்காரு. உலகமெல்லாம் பரவியிருக்காரு. ஒரு தமிழன் இ மெயில் கண்டுபிடிச்சான். இன்னம் இருக்கான். இருப்பான்.உலகமெல்லாம் பரவியிருக்கான்"னு  கைட் பண்ணா மேட்டர் ஓகே.

இல்லாட்டி மன்சன் பணம் பின்னாடி ஓட ஆரம்பிச்சுருவான்.உலகத்துல முக்கியமா இந்தியாவுல 60 சதவீதம் பேரு பணத்தை துரத்த ஆரம்பிச்சுட்டாய்ங்க. மிச்சம் மீதி உள்ள 40 சதவீதம் தான் பணம் பக்கமா டைவர்ட் ஆகாம இன்னம் செக்ஸையே சுத்தி வந்துக்கிட்டிருக்காய்ங்க. அதனாலதேன் அவிக ஏழைகளா இருக்காய்ங்களோ என்னமோ?

புரட்சிமணி சொல்றாப்ல திருமண வயதை குறைச்சு தொலைச்சா நாறிரும். படைத்தல் - இருத்தல்- பரவுதலுக்கெல்லாம் செக்ஸ் ஒன்றே போதுமானதல்லங்கற யதார்த்தம் புரிஞ்சுரும். அடுத்து பணம் ஒன்றே இதுக்கெல்லாம் வழின்னு ஆயிரும். பணத்துல செயிச்சுட்டா கொய்யால இதுலயும் ஒன்னுமில்லடான்னு தெளிஞ்சுரும்.மறுபடி செக்ஸுக்கு யு டர்ன் எடுப்பாய்ங்க.

இப்பமே லைஃப் டோட்டலா கமர்ஷியலைஸ் ஆயிருச்சு. பின்னே என்னதான் வழின்னா பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம். பாஸ் போர்ட் விசாவுக்கு போனா எப்படி அம்மை குத்தியிருக்கான்னா பார்க்கிறாய்ங்களோ அப்படி ட்ராஃபிக்ல ஓவர் ஸ்பீட்ல மாட்டினா கூட  பாலியல் தொழிலாளியை சந்திச்சிங்களான்னு கேட்கிற நிலை வரனும்.

வெகு சிலர் இந்த வாய்ப்பை கூட பயன்படுத்திக்காம "மடியா' இருக்கலாம். அவிகளுக்காவ எஜாக்குலேட்டர்ஸ் அமைக்கலாம். இதெல்லாம் ஃபிசிக்கல். உடனடியா ஓரளவு பலன் தரலாம்.ஆனால் இங்கே தேவை சைக்கலாஜிக்கல் ரெமிடி.

ஹ்யூமன் பாடி ஒரு கம்ப்யூட்டர் சிபியுன்னா மைண்டுதான் ஹார்ட் டிஸ்க்.  ஹார்ட் டிஸ்கை காப்பாத்தா கம்ப்யூட்டருக்கோ - கீ பேடுக்கோ -மவுசுக்கோ பூட்டுப்போட நினைக்கிற முட்டாத்தனம். கம்ப்யூட்டருன்னு இருந்தா
கண்டவன் கண்டதை செருகுவான் (கார்ட் ரீடரு - பென் ட்ரைவ் -டேட்டா கார்டு  எட்ஸெட்ரா) கண்ட டேட்டா உள்ளாற வரும். ஹார்ட் டிஸ்க் டேட்டா கரப்ட் ஆகும்.  இதுக்கு என்னதான் தீர்வு?

ஹார்ட் டிஸ்க்ல உள்ள ஓ.எஸ் கரீட்டா இன்ஸ்டால் ஆகியிருக்கனும். ஐ மீன் பெண் குறித்த புரிதல் இருக்கனும்.  ஒரு பவர் ஃபுல்  ஒரு ஆன்டிவைரஸ் இருக்கனும். டிஃப்ரீஸ் மூலமா ஓ.எஸ் போட்டிருக்கிற ட்ரைவ் லாக் பண்ணப்பட்டிருக்கனும்.

இது இல்லாத பட்சத்துல எல்லாமே தப்பாத்தான் போகும்.  மீண்டும் புரட்சிமணி:

//உடல்தேவைக்கு மனைவி இருந்தாலும் சிலர் தகாத உறவுகளிலும்,வன்புணர்விலும்  ஈடுபடத்தான் செய்கின்றனர்.
இவர்களை கொலை கொள்ளை செய்பவர்களோடு ஒப்பிடலாம். அதாவது தேவைக்கு  அதிகமான பணம் இருந்தாலும் அதீத ஆசையால் ஊழல், கொள்ளைகளில் ஈடுபடுபவனும் உடல் தேவைக்கு மனைவி இருந்தும் தகாத உறவில், வன்புணர்வில் ஈடுபடுபவன் மனநிலையும் ஒன்றுதான்//

ஏற்கெனவே நான் சொன்னாப்ல திருமணங்கறதே ஆணின் செக்ஸ் பவர் மீது அறையப்படும் ஆணி. இதை கண்டறிந்து கொள்ளும்  அவன் உள்ளுணர்வு வேலி தாண்டச்சொல்கிறது.  "நிழலின் அருமை வெயிலில்". ஒரு பாலியல் தொழிலாளியுடன் ஒரு இரவையாவது கழித்தவனுக்குத்தான் குடித்தனக்காரியின் அருமை புரியும்.  ஒரு ஆண் பாதுகாப்பான திருமண உறவில் சீக்கிரமே சலிப்படைகிறான்.அலுப்படைகிறான்.அவனுக்கு மாற்றம் தேவைப்படுகிறது. பாலியல் தொழிலாளியை அணுகுபவன் திரும்பிவர வாய்ப்பிருக்கிறது. கள்ளக்காதல் இத்யாதிக்கு டைவர்ட் ஆறவன் கதை கோவிந்தா கோவிந்தா..

ஏன்? ஏன்? ஏன் அவன் டைவர்ட் ஆகனும்னு கேப்பிக .. சொல்றேன்.

எல்லா உயிருக்கும் மூலம் அமீபா. ஒரு செல் அங்கஜீவி - அது கொழுத்து செல் காப்பிமூலமா ரெண்டாச்சு - செல் காப்பியிங்ல நடந்த எதிர்பாராத - விபத்து மாதிரியான -தவறு காரணமா புது ஜீவராசிகள் உருவாச்சு - குரங்கு வந்தது - குரங்குலருந்து மனிதன் வந்தான் .

ஒரே உடல் ஒரே உயிரா இருந்த காலத்துல உயிர்களுக்கு தூரம் ,கம்யூனிகேஷன் ட்ரபுள், இன்செக்யூரிட்டி இப்படி எந்த பிரச்சினையும் கிடையாது - ரெண்டாவது உயிர் உருவானதுமே இதெல்லாம் ஸ்டார்ட் ஆயிருச்சு.

ஆனால் ஓருயிர் ஓருடலா இருந்த நினைவுகள் மட்டும் செல் டு செல் காப்பியிங் மூலமா ஒவ்வொரு மனித மூளைலயும் ஃபீட் ஆயிருக்கு. மறுபடி ஓருயிர் ஓருடலாகனும்ங்கற துடிப்பு இருக்கு.

ஆனால் இந்த ஓருயிர் ஓருடலா மாற இந்த உடல்தான் தடைங்கற ஒரு தவறான நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கு. இன்னொரு பக்கம் இன்னொரு உயிரோட கலக்கனும்னா மறுபடி ஓருயிரா மாறனும்னா அந்த உயிரோட செக்ஸ் வச்சுக்கனும் .அதான் ஒரே வழிங்கற மிக மிக தவறான நம்பிக்கை இன்னொரு பக்கம் இருக்கு.

இந்த உடலை உதிர்க்க கொல்றது ரெண்டு கொல்லப்படறதுங்கற ரெண்டே ரெண்டு வேலைகளை வித விதமான காரிங்கோட செய்றாய்ங்க.

மன்சங்க இன்னா நெல்ல வேலை பண்ணாலும், என்னா கேப்மாரி வேலை பண்ணாலும் அதும்பின்னாடி இருக்கிறது ரெண்டே ரெண்டு ஆசை தானாம்.

ஒன்னு கொல்றது ரெண்டு கொல்லப்படறது. இதை நான் சொல்லலை . சைக்காலஜி சொல்லுது. இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம். அதனால தான் சனங்க செக்ஸுக்கு சரண்டர். மனைவியுடனான செக்ஸில் கொல்லுதல் -கொல்லப்படுதல்ங்கறதெல்லாம் படிப்படியா குறைஞ்சு போயிருது.அதனாலதேன் அலுப்பு -சலிப்பு.

இதனாலதேன் ஆண் -பெண் வேலி தாண்டுகிறார்கள்.

ஒரு பெண் வேண்டுவது தந்தையை . ஒரு ஆண் வேண்டுவது தாயை.  ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் மறுக்கப்பட்டா - ஒடைச்சு சொன்னா முலைக்காம்பு மறுக்கப்பட்டா அவன் செயின் ஸ்மோக்கராகிறான்.  குடிகாரனாகிறான். நிப்பிள் காம்ப்ளெக்ஸ். ஒரு பெண்ணுக்கு தந்தைப்பாசம் மறுக்கப்பட்டால் அவள் காதலிக்கிறாள். அவன் தந்தை அவளது தாயை துன்புறுத்தியிருந்தா இவள் சக ஆண்களை தன் பின்னால் அலைய விட்டு பழிவாங்கறா.

ஓருடல் ஓருயிர் நிலை மாறி பல்லுடல் பல்லுயிரா மாறினாலும் நம்ம உயிர்களெல்லாம் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. (செல் ஃபோன்கள் டவர்களால் இணைக்கப்பட்ட மாதிரி) ஆனால் அகந்தை காரணமா பிரிஞ்சிருக்கம். நோக்கமென்னவோ சக உயிர்களோட இணையறது. ஆனால் நாம செய்றதென்ன.. நம்ம இளைஞர்கள் இளைஞியர் செய்வதென்ன?

ஒரே ஒரு நபரோடு இலக்கில்லாம்  அலைய மத்த அனைவரோட உறவுகளையும் நாஸ்தி பண்ணிக்கிறதுதேன். ஏற்கெனவே  தங்களோடு இணைஞ்சிருக்கிற ஒரு சில உயிர்களிடமிருந்தும் பிரிஞ்சுர்ரதுதான். பை.தனமா இல்லே?

இந்த ஒரே ஒரு யதார்த்தத்தை புரிஞ்சிக்கிட்டா போதும். மனிதன் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவோ (சர்வைவல்) - படைக்கவோ - பரவவோ ( குழந்தை பேறு)  செக்ஸ் ஒன்னு மட்டுமே வழியல்ல.

ஓருயிர் ஓருடலாய் இருந்த நிலையை மீண்டும் அடைய உடல்களை உதிர்ப்பதோ - அதற்காக கொல்வதோ கொல்லப்படுவதோ வழியல்ல -

ஓருயிர் ஓருடலாய் இருந்த நிலையை மீண்டும் அடைய உடல்களால் கலப்பது வழியல்ல. அதற்காக உடலுறவின் ஈடுபடுவது மட்டும் வழியல்ல.  ஏற்கெனவே நம் உயிர்கள் இணைக்கப்பட்டிருப்பதை உணரவேண்டும்.

வன்புணர்வுகளை தவிர்க்க புரட்சிமணி தரும் ஆலோசனைகளை பாருங்க:

//மனிதத்தை பற்றிய கல்வியும் அதில் ஒழுக்கத்தின் அவசியத்தையும் மக்களுக்கு எடுத்து கூற  வேண்டும்.பிறந்ததிலிருந்து இவற்றை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே உண்மை,நேர்மை,ஒழுக்கம்,மனித நேயம் போன்றவற்றை பின்பற்றும்படி கலை,கல்வியை அமைக்க வேண்டும்.//

தன் உயிர் உலகின் அனைத்து உயிர்களோடும் பிணைக்கப்பட்டிருப்பதை ஒரு குழந்தை தெ(பு)ரிந்து கொண்டு - அதை அனுபவத்தில் உணர்ந்து கொள்ளவேண்டும்.

ஏற்கெனவே இணைக்கப்பட்டிருக்கும் தான் இன்னொரு உயிருடன் இணைய உடல் உதவாது என்பதையும்  - உடல்களை உதிர்ப்பது தன்னை இவ்வுலகின் பல்லுயிரோடு இணைக்காது என்பதையும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இது மட்டும் சாத்தியமானால்  கவைக்குதவாத சாகசங்கள் , காதல்,கத்திரிக்காய், பணப்பித்து அதிகார பித்து வன்முறை ஆகியவற்றை அக்குழந்தை கனவிலும் விரும்பாது. புரட்சிமணி எதையெல்லாம் குழந்தைகளின் மனதில் செயற்கையாய் விதைக்கவேண்டும் என்று பட்டியலிடுகிறாரோ அவையெல்லாம் இயற்கையாய் முளைத்து - பூத்து குலுங்கி மணம் வீசும்.

புரட்சிமணியாரின் வலைப்பூவில் அவ்வப்போது இந்துத்வா வாடை மூக்கை துளைக்கும். இந்த மேட்டர்லயும்
// ஆபாசமான உடைகளை தவிர்த்தல் நல்லது//ங்கறாரு.

இன்னைக்கு கர்ச்சீஃப் மட்டும் கட்டிக்கிட்டு போடற ஆட்டத்தை எல்லாம் பார்த்தா நமக்கு ஒன்னும் ஆறதில்லை.ஆனால் இந்த முரசு டிவியில 16 முழ புடவைய சுத்திக்கிட்டு வர்ர கருப்பு வெள்ளை சமாசாரங்கதான் பயங்கரமா கலக்குது .இதுக்கு என்ன பண்றதுன்னு புரட்சிமணியார் சொல்லனும்.

வன்புணர்வுங்கறது ஒரு வக்கிர  மனதின் - வக்கிர கணத்து  வெடிப்பு. இதுல ஆடை ,அணிகலன்லாம் ஒரு பொருட்டே இல்லை.  நல்லவேளையா புரட்சிமணியார் அடுத்த பத்தியிலயே ஜகா வாங்கறாரு.

//.மூன்று வயது குழந்தை  முதல் அறுபது வயது கிழவி வரை கற்ப்பழிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு எந்த ஆடை கொடுப்பது?  காம கொடூரர்களுக்கு ஆடை ஒரு தடை அல்ல.//

மன்னிக்கவும்:
இந்த வன்புணர்வு பின்னான மனோதத்துவத்தை அலசவே இந்த பதிவை ஆரம்பித்தேன்.ஆனால் அலசல் காதல்,கல்யாணம் ,கள்ள உறவுகளோடே நிற்கிறது.இன்னொரு சந்தர்ப்பத்துல அலசலை தொடர்வோம்.