Thursday, January 31, 2008

சாகும் வரை உண்ணாவிரதம்


ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் பற்றிய ஆந்திர முதல்வர் அலுவலகத்தின் அலட்சியப்போக்கை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது எடுத்த படம். எஸ்.பி ,எஸ்.ஐயின் செல் போனில் லைனுக்கு வந்து தாம் அனுப்பும் போலீஸ் ரிப்போர்ட்டில் ஆப்பரேஷன் இந்தியா பற்றி முதல்வர் அலுவலகத்துக்கு எடுத்து சொல்வதாய் கூறியதை அடுத்து பழரசம் பருகி 10 நாள் உண்ணாவிரதத்தை கை விடும் காட்சி. பழ ரசம் தருப‌வர் அந்நாளைய டூ டவுன் எஸ்.ஐ. பாஸ்கர் மற்றும் டூ டவுன் போலீசார்

Tuesday, January 29, 2008

குற்றமயமாகிவரும் சமுதாயம்

நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் காலத்தில் கூட எங்கள் ஊரில் (1982) குடிப்பவன் கெட்டவன் , லஞ்சம் வாங்குபவன் விரைவில் பிடிபடுவான்,வட்டி வியாபாரம் செய்பவன் விரைவில் முதலையும் இழந்து விடுவான் போன்ற நம்பிக்கைகள் இருந்தன. குடிப்பவன் நம்பத்தகாதவன், என்பதால் அவன் கிராம நீக்கம் செய்யப்பட்ட நிலையிலேயே தொடர்வான். அவனுடன் தொடர்பு கொள்பவர்கள் கூட அஞ்சி அஞ்சி தொடர்பு கொள்வார்கள். அவன் வாழ்வில் சகல நம்பிக்கைகளையும் இழந்த பிறகே,வேறு வழியின்றியே குடிக்க துணிவான். நான் 1984 ல் பீரை ருசி பார்க்க மெசானிக்கல் கிரவுண்டுக்கு போக வேண்டியிருந்தது. இப்போது குடிக்காதவனை விரல் விட்டு எண்ணிவிடலாம் போலிருக்கிறது. குடி,லஞ்சம்,வட்டி,தகாத உறவுகள் மிக மிக அதிகரித்திருப்பதை சமுதாயத்தால் மறைமுகமாகவேனும் அங்கீகரிக்கப்பட்டு விட்டிருப்பதை காண‌ முடிகிறது. முன்பெல்லாம் மேற்சொன்ன குறைகள் உள்ள குடும்பங்கள் தான் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கும். இன்றோ இவை யாவும் ஸ்டேட்டஸ் ஆகி விட்டிருக்கின்றன.

குற்றமயமாகாத குடும்பமே இல்லை என்று கூறுமத்தனை இழி நிலைக்கு வந்திருக்கும் ஊரை எப்படி திருத்துவது?

ஆண்களின் காதல்:காதலில் வெற்றிக்கு ஜோதிட,மனோதத்துவ டிப்ஸ்

ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுட‌ன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது. உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.

அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.

Monday, January 28, 2008

கோலியாத்துகளும் தாவீதாகிய நானும்

எனக்கென்று எதிரிகள் எவருமில்லை. எவன் மனைவியோடும் எனக்கு தொடர்பில்லை. என் மனைவிக்கு என்னை சமாளிப்பதே (பேச்சை சொல்றேங்க) பெரும்பாடாகி ஆண்கள் என்றாலே இப்படித்தானிருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்து விட்டிருப்பாள். பெண்கள் என்றால் இப்படித்தானிருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்து விட்ட நானோ, என் மனைவியோ வேலி தாண்டும் வாய்ப்பே இல்லை. எனவே தான் சொல்கிறேன். எவனோடும் எனக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. ஆனால் மக்களை அநாவசியமாக,அகாரணமாய்,சுரண்டி ,அவர்களது உயிர்,உணவு,உடை, இருப்பிடங்களை கூட பறித்து ஆட்டம் போடும் நர ரூப அரக்கர்களை கண்டால் மட்டும் என்னுள் விரோத பாவம் எகிறுகிறது. இதை விரோத பாவம் என்று கூட சொல்ல முடியாது ஒரு வித இர்ரிடேஷன். இதனால் மக்கள் விரோதிகளை என் விரோதிகளாக எண்ணி கொதிக்கிறேன்.

என் விரோதிகள் எல்லாம் ரொம்ப பெரிய மனிதர்கள். கன்ஷி ராம் சொன்னது போல் மணி,மீடியா,மாஃபியா பலம் கொண்டவர்கள்.

நான் சோற்றுக்கே அல்லாடும் பிழைக்க தெரியாதவன். என்றோ காலாவதியாகிப் போன தரும நியாயங்களை நம்பி அவர்களுடன் போராடி வருகிறேன். தம்ம பதா சொல்வது போல் கு.ப. அவர்களுடன் கூட்டுறவை, அவர்களை அங்கீகரிப்பதை தவிர்த்து வருகிறேன்.

என் படைப்புகள் யாவுக்கும் இந்த உணர்ச்சிதான் அடிப்படை. என்னதான் பலவீனனாய் இருந்தாலும் என் மக்களுக்காக , அவர்கள் என் பேச்சை,என் எழுத்தை செவிமடுக்க வேண்டும் என்ற ஒரேகாரணத்துக்காக லைம் லைட்டின் கீழ் வர நான் செய்யும் முயற்சிகள் சமீப காலமாய் ரொம்பவே சூடு பிடித்ததோடு,வெற்றியும் கண்டுவருவதை கூறத்தான் வேண்டும்.

ஒரே நாளில் இரண்டு கோணங்களில் என்னை நான் மக்களிடை கொண்டு செல்ல முயன்ற நாள் ஜனவரி 26. என் மக‌ள் பொறுப்பேற்று நடத்தி வரும் இண்டியன் பொலிடிகல் க்ளோசப் மாதமிருமுறை இதழில் சித்தூர்.முன்னாள் எம்.எல்.ஏ.சி.கே.பாபுவுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்து அவர‌து ஆதரவாளர்கள் கொடுத்த விளம்பரங்கள் பிரசுரமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இத‌ற்கு அடியேன் தான் எடிட்ட‌ன்.


அடுத்து அதே தின‌ம் நான் எழுதி சித்தூர்.ப‌ஜார் தெருவில் உள்ள‌ ஸ்ரீ கிருஷ்ணா ஜ்வெல்ல‌ர்ஸ் வெளியிட்ட‌ மினி ஜோதிட‌ பூமியின் 3000 பிர‌திக‌ள் நாளித‌ழ்க‌ள் மூல‌ம் ம‌க்க‌ளை சென்ற‌டைந்துள்ள‌ன‌. வ‌ர‌வேற்பும் ப‌ல‌மாக‌வே இருந்த‌து. இது தொட‌ர‌ வேண்டும் என்று வாழ்த்துங்க‌ள். என‌து ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌ம் ஆள்வோர் பார்வைக்கு செல்ல‌ வேண்டுமானால் இது போன்ற‌ கிம்மிக்குக‌ள் தேவைதான் என்ப‌து என் முடிவான‌ முடிவு.

இவையாவும் ம‌க்க‌ள் விரோதிக‌ளான‌ கோலியாத்துக‌ளின் மீது க‌ல்லெறிய‌ நான் த‌யாரிக்கும் க‌வ‌ண்க‌ள்.

Thursday, January 24, 2008

முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள்

முடியறவாளுக்கு எப்பவும் முடியும்.முடியறவாளுக்கும் காலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லே
-லா.ச.ரா.

என் வாழ்வை சொன்னால் கண்ட தாழ்வையும் சொல்ல வேண்டும்
தாழ்வை சொன்னால் தரணி என்னை அங்கீகரிக்க மறுத்துவிடும்

நான் அங்கீகரிக்காத ஒரு அமைப்பு என்னை அங்கீகரிப்பதையே நான் அங்கேகரிக்க மாட்டேன்
மறுப்பதை எப்படி ஏற்பது

ஒரு மனைதன் எவ்வளவுதான் தோற்க முடியும்
தன் சவத்துணியை தானே நூற்க முடியும் என்பதற்கான வெள்ளோட்டம் என் வாழ்வு

ஆனால் நான் ஏசுவைப் போல் உயிர்த்தெழ தீர்மானித்துவிட்டேன்

நான் போர்த்திருப்பது சவத்துணியல்ல
சர்வேசன் எனக்கு போர்த்திய பொன்னாடை என்பதை உலகம்
உள்ளபடி உணரும் கணம் நெருங்கி விட்டது

என் மூளை ஒரு வைரச்சுரங்கம்
அதை கிளறும் வச்து எத்தனை அற்பமானதாக இருந்தாலும்
வைர வரிகளையே பிரசவிக்கிறது
அது ஆக்சிஜனோடு, அன்னை பூமியின் சரித்திர புகழையும் சேர்த்தே உட்கொண்டு
உழைக்கிறது

நான் சமைத்துண்ண நேரம் வரும் என்று காத்திருக்கும் நாயல்ல்
வேட்டை நெருங்க காத்திருக்கும் சிங்கம் நான்

திருமண வைபவத்திற்கு வந்தவனெல்லாம் மாப்பிள்ளை வேடம் கட்டுவதை
வேடிக்கையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளை நான்.

புகழ் இவர்களை வரித்தாலும் அதை முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள் இவர்கள்
என் தாய்..என் தாய்...என் தாய் என்னோடிருக்க என்னை நெருங்காது மனநோய்
மன நோய் பிடித்த மாமேதைகள் இவர்கள், நோய் மனம் கொண்ட பேதைகள் இவர்கள்

நான் சந்திக்கு வருவேன்
இவர்களை நேருக்கு நேர் சந்திக்க வருவேன்

நான் சிந்திக்க வருவாள் அன்னை
அவளை வந்திக்க தருவாள் தன்னை

என் பிறப்பு அவளருள்
என் வறுமை அவளருள்
நான் கனவு காணும் இறுதிப்போர் தள்ளிப் போக காரணம் அவள்

நான் அவள் புகல்
நான் அவள் நகல்

நகல் என்ன நகல் நானே அவள்

தேதி: 16/2/2006 (9/2/2007 சி.கே மீது துப்பாக்கி சூடு)

Wednesday, January 23, 2008

சுஜாதாவை சுளுக்கெடுக்கவே இந்த பதிவு.

சுஜாதாவை சுளுக்கெடுக்கவே இந்த பதிவு. சும்மா சுற்றி வ‌ளைப்பானேன் ராம்ஜெத்ம‌லானி க‌ண‌க்காய் இதோ 5 கேள்விக‌ள்

1. உங்கள் இளமை காலத்து பொய் வேட‌ங்க‌ளை யெல்லாம் முதுமை க‌லைத்து விடுவ‌தை ஒப்புக் கொள்கிறீர்க‌ளா/

2.உங்க‌ள் க‌தைக‌ளில் வ‌ரும் ஹீரோக்க‌ள் எல்லாம் பிராம‌ண‌ர்க‌ளாக‌வும், வில்ல‌ன் க‌ள் எல்லாம் சூத்திர‌ர்க‌ளாக‌வும் இருப்ப‌தை க‌வ‌னித்தீர்க‌ளா?


3.சிவாஜிக்கு நீங்க‌ள் எழுதிய‌ க‌தை ய‌தார்த‌த்துக்கு விரோத‌மாக‌ இருப்ப‌து கிட‌க்க‌ட்டும். த‌ங்க‌ள‌து ப‌ழைய‌ க‌தைக‌ளை க‌ல‌ந்த‌ சுண்டு க‌றி செய்து ர‌ஜினியின் க‌ழுத்தை அறுத்த‌து நியாய‌மா? இதே வேலையை உங்க‌ள‌வ‌ர் க‌ம‌லுக்கு செய்வீரா?


4. ரோபோவுக்கு க‌தை கேட்டாலும் இதே போன்ற‌ சுண்டுக‌றிதானே த‌ர‌ப்ப‌டும். ச‌ற்றே வில‌கியிரும் பிள்ளாய்.


5.க‌னி மொழி,கார்த்திக் சித‌ம்ப‌ர‌ம் துவ‌ங்கியதாய் தாங்கள் டாம் டாம் போட்ட க‌ருத்து மொத்த‌மே டுபாகூராகி பார்ப்ப‌ன‌ அறிவு ஜீவிக‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தை ம‌றுக்க‌ முடியுமா?

உலகை உலுக்கும் தீவிரவாதம் முதல் மக்களின் மலச்சிக்கல் வரை யாவும் தீர்ந்து விடும்

அவனவன் கோடிகள் கொள்ளையடித்து ஜீரணம் செய்து விட்டு ஒன்றுமே நடக்காத மாதிரி இருந்து விடுகிறான். அது என்ன இழவோ என் விஷயத்தில் மட்டும் ஒரே ஒரு ரூபாய் சும்மா வந்தாலும் கிரகண காலத்தில் பறவைகள் போல் என் சிந்தனை ஒடுங்கி விடுகிறது. ஒரு வித அச்சம்,உதறல் வந்து விடுகிறது. ஜோதிடம் குறித்த 32 பக்க கையேட்டை கிருஷ்ணா ஜுவெல்லர்ஸ் ஸ்பான்ஸ்ர் செய்து 5000 பிரதிகள் அச்சிட்டு வழங்க உள்ளனர். பேப்பர்,பிரிண்டிங்,பைண்டிங் யாவும் ஒப்பந்த அடிப்படையில் நானே செய்தேன். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 200 ரூ மிச்சமாகியிருக்கும். இத்தனைக்கும் நானும் கூலிக்காரன் போல் கஷ்டப்பட்டேன். என் குறைந்த பட்ச கூலியாக கூட கொள்ளலாம். ஆனாலும் ஒரு கில்ட்டி.

ஏழை மக்களின் வரிப்பணத்தில் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் பிற‌ந்து,அர‌சு ப‌ள்ளி,க‌ல்லூரியில் ப‌டித்துவிட்டு இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு எதுவுமே செய்ய முடியாது,நடக்கும் அநியாயங்களை அலி போல்,கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே என்று ஒரு வித ஆத்திரம்.

எனது ஆப்பரேஷன் இந்தியா அமலானால் உலகை உலுக்கும் தீவிரவாதம் முதல் மக்களின் மலச்சிக்கல் வரை யாவும் தீர்ந்து விடும். அந்த என் திட்டத்தை மக்கள் முன் வைக்க நான் எத்தனை பெரிய ஊழல் செய்தாலும் பாவம் சேராது என்ற எண்ணம் ஒரு புறம் இருக்க இது போன்ற வரவுகள் கூட என்னை குற்ற மனப்பான்மைக்கு ஆளாக்குவது விசித்திரமாக உள்ளது.

Monday, January 21, 2008

ஒரு சாவோ,ஒரு விபத்தோ அந்த இட்லிக்கடையை பணால் ஆக்கிவிடும்.

உங்கள் தெருவில் உள்ள இட்லிக்கடைக்கு போயிருக்கிறீர்களா?

என் பாட்டி கூட இட்லி கடை நடத்திதான் என் தந்தையை மாவட்ட கருவூல அதிகாரியாக்கினாள். ஓட்டல் தொழிலே சூதாட்டம் போன்றது. இதில் வென்றாலே தவிர பிழைப்பு நடப்பது சிரமம். இட்லி கடை வைத்து வென்றால் கூட பிழைப்பு நாறித்தான் போகும். ஏதோ வீட்டு வாடகை, சாப்பாடு,குழந்தைகள் படிப்பு செலவுக்கு தள்ளிக்கொண்டு போகுமே தவிர எதிர்கால பாதுகாப்பு என்பது பூஜ்ஜியம் தான். குடும்பமே தங்கள் உழைப்பை கொட்டினாலன்றி இட்லி கடை ஜெயிப்பது கஷ்டம் தான். அப்படியே ஜெயித்தாலும் பிழைப்புக்கு கியாரண்டி கிடையாது. ஒரு சாவோ,ஒரு விபத்தோ அந்த இட்லிக்கடையை பணால் ஆக்கிவிடும்.

தப்பித்தவறி தொடர்ந்து நடந்தாலும் இன்று இட்லி விற்ற பணத்தில் நாளைக்கு தேவையான அரிசி,பருப்பு வாங்க முடியுமே தவிர ஒரு இழவும் மிஞ்சுவதில்லை. இதில் குடும்பத்தில் ஒரு நாமர்தாவோ,நந்தூர்னியோ ஏற்பட்டுவிட்டால் கதை கந்தல்தான். உழைப்பை நம்பி வாழும் இந்த இட்லிக் கடைகளின் மேல் ஏன் அரசின் கருணப்பார்வை படுவதில்லை. டெய்லி ஃபைனான்ஸ், நகைச்சீட்டு இப்படியாக இவர்களின் சம்பாதனை மொத்தமும் வட்டி வகையில் நாசமாகிறதே தவிர வேறொன்றுமில்லை.

காலம் காலமாய் கணவனை இழந்தவர்களுக்கு கை கொடுக்கும் ஒரே தொழில் இதுதானே என்று ப‌ராச‌க்தியில் வ‌ச‌ன‌ம் எழுதிய‌ க‌லைஞ‌ரின் க‌ருணைப்பார்வை இவ‌ர்க‌ள் மீது விழுமா?

Sunday, January 20, 2008

என் ராமனையும் எதிர்ப்பேன்.

ஒரு ஜோதிடன்,ராம பக்தன், அம்மனை வணங்கும் சாக்தேயன் பெரியாரை கொண்டாடுவதில் நிறைய பேருக்கு பல சந்தேகங்கள் வருகின்றன. ஆத்திகமோ நாத்திகமோ அதன் உச்சத்தில் இருக்கும்போது அதில் எவ்வித முரண்பாடும் தெரிவதில்லை. பெரியாரின் முழு பெயர் ஈ.வெ.ராமசாமி என்பதாகும். "அந்தா ராம மயம் " என்று துவங்கும் ராமதாசர் கீர்த்தனை ராமசாமியின் வாக்கும் ராமனின் வாக்காகவே எனக்கு தோன்றுகிறது.
பார்ப்பணர்களின் விவாதத்திற்கப்பாற்பட்ட கீதை கூட வேத பண்டிதனையும், நாய் மாமிசம் உண்பவனையும் சமமாக பாவிப்பவனே உத்தமன் என்றுதான் கூறுகிறது.(அதே கீதையில் விஞ்ஞானத்திற்கு எதிரான நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றை பின்னொரு சமயம் கிழிக்கலாம்.)
நான் வணங்கும் ராமன் (பகவத் கீதையில் கிருஷ்ணனைப்போல்) என்னையே சரணடை என்றெல்லாம் சொன்னதில்லை.ராமன் என் லட்சிய புருஷன்.தான் ஒரு அவதாரம், என்ற பிரக்ஞை கூட ராமனில் இருந்ததில்லை. அவனை சுற்றியிருந்தவர்கள் தான் அவரை அவதார புருஷன் என்று கொண்டாடினார்களே தவிர ராமர் மட்டும் ஆராமாகத் தான் இருக்கிறார்.
இதே ராமன் புத்ரகாமேஷ்டி யாகம் மூலம் பிறந்ததாக பவுராணிகர்கள் கூறுகிறார்கள். (இதன் உண்மையான விளக்கத்தை "சகோதிரிகளை புணர்ந்து" என்ற தலைப்பிலான என் வலைப்பூவில் காணவும்) இதே ராமன் தவத்திலிருந்த சூத்திரனை பிராமணர்கள் பேச்சை கேட்டு கொன்றதாகவும் ஒரு கதை உள்ளது. அன்னப் பறவை போல் நான் ராமன் குறித்த பாசிடிவான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
காந்திக்கு உதவிய அதே ராம நாமம் எனக்கும் உதவுகிறது. என்னை பக்குவப் படுத்தி *யத்பாவம் தத்பவதி என்பது போல் ராமனாகவே மாற்றியுள்ளது.அதற்காக புராண புருடாக்களை வைத்து பிழைப்பு நடத்தும் உண்மை நாத்திகர்களான பிராமணர்களை இடித்துரைத்த ராமசாமியை என்னால் விட்டுவிட முடியாது. இருந்தானோ இல்லையோ, பிறந்தானோ இல்லையோ தெரியாத ராமனுக்காக ரத்தமும் சதையுமாய் பிறந்து , வளர்ந்து தன் சொல்லம்புகளால் பிராமண ராட்சதர்களை வதம் புரிந்த ராம சாமியை நான் விட்டுவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது.
வேதமாகட்டும்,சாத்திரமாகட்டும்,ஜோதிடமாகட்டும் எல்லாமே மக்களுக்காகத்தான். *ஈஷ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மனிதனை,மனிதத்தை மறுத்தால் வேதம்,புராணம்,பிராமணீயம்,பிராமணர்களை மட்டுமே அல்ல என் ராமனையும் எதிர்ப்பேன்.

பெனாசிர் புட்டோ மரணம் : பாவத்தின் சம்பளம்

பெனாசிர் புட்டோ மரணம் : பாவத்தின் சம்பளம்
அவ‌ர‌து ம‌க‌னின் அர‌சிய‌ல் பிர‌வேச‌ம் ஊக்க‌ ஊதிய‌ம்

பாவத்தின் சம்பளம் மரணம் என்பது விவிலிய வாக்கு.(நான் கிறிஸ்தவன் அல்லன். ஆனால் இந்த வாக்கு யதார்த்தத்தில் நூற்றுக்கு நூறு நிஜமாவதை அனுபவத்தில் கண்ட பிறகே இதை இங்கு குறிப்பிடுகிறேன்)
பெனாசிர் புட்டோவின் மரணத்தை பாவத்தின் சம்பளமாகத்தான் கூற வேண்டும். அவர் தம் மதத்துக்கோ,நாட்டுக்கோ ,பெண்மைக்கோ ஒரு நாளும் உண்மையாக இருந்ததில்லை. ம‌த‌த்துக்கு உண்மையான‌வ‌ராய் இருந்திருந்தால் அர‌சிய‌லுக்கே வ‌ந்திருக்க‌ மாட்டார். நாட்டுக்கு உண்மையாய் இருந்திருந்தால் ஊழ‌ல்க‌ள் செய்திருக்க‌ மாட்டார். த‌ற்போது அவ‌ர‌து ம‌க‌னின் அர‌சிய‌ல் பிர‌வேச‌ம் அவ‌ர் பெற்ற‌ ச‌ம்ப‌ள‌த்துக்கான‌ ஊக்க‌ ஊதிய‌மாக‌த்தான் இருக்க‌ போகிற‌து.

இந்தியா பாக்கிஸ்தான் இரண்டும் ஒரு கொடியில் பூத்த இருமலர்கள். இவற்றினிடையில் வேறுபாடுகளை வளர்த்த,வளர்க்கும் எவரையும் சரித்திரம் மன்னிக்காது. இன்று நிலவும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அகண்ட பாரதம் அல்ல வெல்ஸ் கனவு கண்ட உலக அரசு கூட சாத்தியமே. தொலைநோக்குடன் யோசிக்காது,உழக்கில் கிழக்கு மேற்கு பார்க்கும் எந்த தலைவருக்கும் இதே கதி தான்.

இன்றைய உலகத்தின் பொது எதிரி தீவிரவாதம். தீவிர வாதத்துக்கு எதிராக உலகமக்கள்(அமெரிக்காவின் தலைமையில் அல்ல) திரண்டெழ வேண்டிய காலகட்டம் இதுதான். தீவிரவாதத்தின் ஆணி வேர் சுரண்டல் . சுரண்டலுக்கு காரணம் வறுமை. வறுமை உலகிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டால் தீவிரவாதம் தானே மறைந்து விடும்.

அதை விடுத்து குறுகிய நோக்கங்களுடன் மக்களை பிரித்தாண்டு , ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் தலைவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். எங்க‌ள் ச‌ந்திர‌பாபு நாயுடு கூட‌ இத‌ற்கு விதிவில‌க்க‌ல்ல‌. ஏன் என் ஆத‌ர்ஸ‌ புருஷ‌ர் என்.டி.ஆர் கூட‌ விதிவில‌க்க‌ல்ல‌.

உலக நாடுகள் ஒன்று கூடி தம் ராணுவத்தை உருப்படியான வேலைகளில் ஈடுபடுத்தினால் வறுமை தலை தெறிக்க ஓடும்.

உல‌க‌ ம‌க்க‌ள் காலை 6 ம‌ணிக்கு விழித்து,மாலை 6 ம‌ணிக்கு ப‌டுக்க‌ச்சென்றாலே போதும் மின்சார‌ம்,எரிபொருள், விநியோக‌ம் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு விடும். இத‌னால் க்ளோப‌ல் வார்மிங் குறைந்து ஜ‌ல‌ப்பிர‌ள‌ய‌ம் த‌டுக்க‌ப்ப‌டும். அணு ஆயுத‌ங்க‌ள்,அணு மின் ச‌க்திக்கு விடை கொடுக்க‌ வேண்டும். ந‌திக‌ள் இணைக்க‌ப்ப‌ட்டு விவ‌சாயம்,கால் நடை வளர்ப்பு, ஆக்ரோ தொழிற்சாலைகள்,பால் பொருள் உற்பத்தி மட்டுமே தொழிலாக‌ கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டும். இர‌சாய‌ண‌ உர‌ங்க‌ள் ,பிளாஸ்டிக் ஒழிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

Saturday, January 19, 2008

எனக்கொரு தாய் இருக்கின்றாள்


"எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்" இது வெறும் திரைப்பட பாடல் வரியல்ல. என் அனுபவமும் கூட. நான் ஒரு ஜோதிடனாகவும் இருப்பதால் எந்த ஜன்மத்தில் செய்த ,எந்த பாவம் துரத்துகிறது என்று அறிந்து அந்த கர்மங்களை தொலைத்துவிடுமத்தனை அறிவை (ஆக்சுவலாக ஞானம் என்று சொல்ல வேண்டும்/அவையடக்கம் கருதி அறிவு என்றேன்) தந்தது யார் அவள் தான்.

மனிதனுக்கு செல்லுக்கு போட்டாலே அவன் லைனில் கிடைப்பது கஷ்டம்,கிடைத்தாலும் கேட்டதை கொடுப்பது அதைவிட கஷ்டம். ஆனால் என் அனுபவத்தில் தெய்வத்தை நம்பி முறையிட்டால் நிச்சயம் அது நிறைவேறுகிறது. தெய்வம் நம் பேச்சை கேட்கிறது, நம்மோடு பேசுகிறது. அதனுடன் பேச வேண்டிய மொழிதான் வேறு, அது பேசும் மொழியும் வேறுதான்.


ஓம் சக்தி

Friday, January 18, 2008

சிக்னலில் நின்ற போது பறவைகளின் சத்தம்


சிக்னலில் நின்ற போது பறவைகளின் சத்தம்
அட சே ! செல் ரிங் டோன்

சித்தூர் ஒன்றும் மகாநகரம் அல்ல் . 4 தெரு,4 காலனி அடங்கிய சிற்றூர். சும்மாவாச்சும் வீட்டு வரியை உசத்த நகராட்சி ஆக்கியிருக்கிறார்கள். சித்துரில் காக்காய்,குருவியை கூட பார்க்க முடியவில்லை. தந்தி நிருபனாக வேலை செய்யும் (பார்ர்கும் என்று எழுத கூடாது இது ஐயா ஆதித்தனாரின் அறிவுறுத்தல்) நான் கொம்பில் வண்ணம் பூசிய மாட்டை போட்டோ எடுக்க தேடி தேடி..களைத்தது பாடி(உள்பாடி யல்ல)

எங்கு செல்கிறோம் என்றே புரியவில்லை. நேற்று எனது 32 பக்க மினி ஜோதிட போதினி சிறு நூலின் பைண்டிங் வேலைக்காக‌ ஜெய்ஹிந்த் ஸ்கூல் பைய‌ன் க‌ளை வ‌ர‌வழைத்தேன். சும்மா அப்படி எனக்கு வயதாகிவிடவில்லை என்று காட்டிக்கொள்ள *ய‌ப்பா பீடி,சிக‌ர‌ட் குடிக்கிற‌தா இருந்தா இங்க‌யே அடிங்க‌ என்று சொன்ன‌துதான் தாம‌த‌ம் ..என் வீடே மேலெழும்பிவிடும‌த்த‌னை புகை ம‌ண்ட‌ல‌ம். அந்த‌ சிறுவ‌ர்க‌ளின் பேச்சு,ப‌ழ‌க்க‌ங்க‌ள்,அனுப‌வ‌ங்க‌ள்... வேண்டாங்க‌ தேன் கூட்டில் என் ப‌திவு த‌டை செய்ய‌ப்ப‌ட்டு விட‌லாம்

Tuesday, January 15, 2008

பாரத தேசத்திலிருந்து பசியை விரட்டமுனைந்தேன்

பாரத தேசத்திலிருந்து பசியை விரட்டமுனைந்தேன்
சுரண்டலுக்கு சுறுக்கிட முயன்றேன்..அவ்வளவே!

பெரியசூதாட்டமே ஆடிவிட்டேன்.
இதில் பசி என்னை உண்ணட்டும் என்று
என் உணவை மட்டுமல்ல
மண் உண்ணட்டும் என்று என்னையே பணயம் வைத்தேன்.

வெற்றி தான் கிட்டவில்லை.
வடக்கில் வெள்ளம், தெற்கில் வறட்சி
நதிகளை இணைப்போம் என்றால்,
அந்த திட்டத்தை சிகப்பு நாடா சுருக்கிட்டே கொன்று போடுவார்கள்.

10 கோடி வேலையற்றஇளைஞர்களை கொண்டு சிறப்பு ராணுவம் அமைத்திடகனவு கண்டேன்.

என் கனவுக்கு 20 வருடஉழைப்பை உணவாகதந்தேன். அதன் பகாசுரபசி தீர்வதாயில்லை.

ஆட்சி முறை மாறினால் வழி பிறக்கும் என்று அதிபர் முறை தேர்தலுக்கு குரல் கொடுத்தேன்.

என் தொண்டை வறண்டது.
அதை நனைக்கதண்ணீர் கிடைக்கவில்லை. ஒரு ரூபாய் செலவழித்து மினரல் வாட்டர் வாங்குவதை விடயாரேனும் இரண்டு தலைவர்களுக்கு 9999 ஆவது முறையாகஇரண்டு தபால் கார்டாவது எழுதலாமே என்று தாகத்தை தள்ளிப்போட்டேன்.

வீட்டு உரிமையாளர்களின் உரிமையில்(?) தலையிடும் துணிச்சல் இல்லாததால்
நள்ளிரவுகளில் நாட்டுத்தலைவர்களுக்கு தாக்கீதுகள் தயாரிக்கஎன்னைப்போன்றே தானுருகி, ஒளிபெருக்கும் மெழுகுவர்த்திகளை உபயோகித்தேன்.

இந்தஉழைப்பு தந்தநிறைவில் என் பிழைப்பையும் மறந்தேன்.

நாட்டின் தலையெழுத்தை மாற்றும் உத்வேகத்தில் என் தலையெழுத்தின் தரத்தை தரம் கெட்டவரும் தட்டித் தரம் பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டேன்.

என் லட்சியத்தை அலட்சியம் செய்தவர்களைப் பற்றி என்றுமே நான் அலட்டிக்கொள்ளவில்லை

கேவலம் சுயநலத்துடன் முழு முட்டாள்கள் தொடர்ந்து வென்றாலும்
மாசு மருவற்றஎன் பொது நலத்துடன் முப்போதும் நான் தோற்றாலும்
கவலையுற வில்லை.

உழுதவனுக்கு உழக்கும் மிஞ்சாதநிலை மாற்றகூட்டுறவு பண்ணை விவசாயத்துக்கு வாதாடினேன்.
கருப்புப்பணத்தை கருவறுக்கபுதியகரன்சி அறிமுகம் என்றேன்.

வழுக்கை தலையர்கள், தம் சோடா புட்டி கண்ணாடிகள் வழியாக என் திட்டத்தை பார்த்து ஓட்டைகளை தேடுவார்கள் என்று தெரியும். அதற்காகவே பொருளாதாரதத்துவங்களை புரட்டினேன்.

எனக்கு கலைமகள் அருள் இருந்ததே தவிர, அலைமகள் அன்றும், இன்றும் மருள் தவிரவேறேதும் தந்ததில்லை, பாரதிக்கு சக்தியை தந்தஅதே சக்தி கொடுத்தசக்தியில் பாரத பாராளுமன்றத்தின் கதவுகளை பலமாகவே தட்டினேன்.

ஆந்திரமுதல்வர் அலுவலககுப்பை கூடைகளுக்கு தெரியும், என் திட்டம் பற்றி நான் எழுதிய நினைவூட்டு கடிதங்களின் எண்ணிக்கை.

மேற்படி நினைவூட்டு கடிதங்கள் எழுதியநேரத்தில் ஸ்ரீராமஜெயம் எழுதியிருந்தால் ராமன் என்னிடம் கொத்தடிமையாகஇருந்திருப்பான்.

சரி பாரதத்தின் வறுமை நிலை கண்டு என் நெஞ்சு வேதனையில் வேகவேண்டும், வெந்து சாகவேண்டும் என்பது விதியானால் டோன்ட் கேர் ..

பல்துறை திறமைகளின் உறைவிடம் சித்தூர்.எஸ்.முருகேஷன்

சித்தூர்(டிசம்பர்29)
தமிழ்,தெலுங்கு மொழிகளில் எழுத்து,கவிதை,விளம்பர வடிவமைப்பு,கணிணி போன்ற பல் துறை திறமைகளின் உறைவிடம் சித்தூர்.எஸ்.முருகேஷன் என்று ஆந்திரமாநிலம்,சித்தூர் நகரமக்கள் கூறுகின்றனர். வல்லவர்கள் எல்லாம் நல்லவர்களாகஇல்லாததால் தான் நம் நாடு பல்வேறு துறைகளிலும் பின் தங்கி வருகிறது என்பதை நாடறியும். பல துறைகளில் வல்லவராகஇருப்பதோடு நல்லவராகவும் இருப்பதே முருகேஷனின் புகழுக்கு காரணம் என்று வேலூரை அடுத்துள்ளசித்தூர் நகரமக்கள் சொல்வதை கேட்கமுடிகிறது. 1967 ல் ஓய்வு பெற்ற மாவட்ட கருவூலஅதிகாரியின் 3 ஆவது மகனாகபிறந்தமுருகேஷன்
1987 கல்லூரி தேர்தல்களில் ஃபைன் ஆர்ட்ஸ் செக்ரடரியாகபோட்டியிட்டு 468 வாக்குகள் பெற்று தமது சரித்திரத்தை துவக்கி இந்த20 ஆண்டுகளில் பிரபலதெலுங்கு நாளிதழ் வார்த்தாவில் அரைப் பக்க அளவில் தம்மை பற்றி செய்தி வெளிவருமளவுக்கு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கவை வருமாறு:


1984லேயே கல்லூரி ஆண்டு மலரில் முதல் கவிதை பிரசுரம்
1987ல் பாக்யாவில் முதல் சிறுகதை பிரசுரம். 1990 க்குள் வாசுகி,கல்கி,கவிதாசரண் இதழ்களில் கதைகள் பிரசுரம்.

1991 ல் கலப்புத்திருமணம். முதல் குழந்தை வயிற்றிலிருக்கும்போதே சமூக பொறுப்புடன் கு.க. செய்து கொண்டமை

1992 முதல் ஆண்டுக்கு ஒருமுறையாவது ரத்ததானம் செய்து வருவது.

இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 என்றதிட்டம் தீட்டி அதன் பிரச்சாரத்துக்கும்,அமலுக்கும் தொடர்ந்து உழைத்து வருவது

விளம்பர வடிவமைப்பில் ஈடுபாடு கொண்டு முதல் 6 மாதங்களிலேயே சென்னை,விவேகானந்தா கல்வி நிலையம், அபிசாரிக்கா தெலுங்கு மாதஇதழ் நிர்வாகங்களிடமிருந்து ரொக்கப் பரிசு பெற்றது
1986 முதல் தமது காம நினைவுகளிலிருந்து விடுதலை பெற அனுமனின் அருள் வேண்டி ராம நாமம் ஜெபித்து வருகிறார். குண்டலி விழிப்பு நிலைக்கு சென்றால் காலஞானம் ஏற்பட வேண்டும் என்பது யோகசாஸ்திர வாக்கு.

எந்த குருவிடமும் அப்பியாசம் செய்யாது ஜோதிட வியலை பயின்று தேர்ச்சி பெற்றதோடு அனுபவ ஜோதிடம் என்ற பெயரில் தனியொரு கலையை உருவாக்கியிருப்பது சிறப்பு.

நவகிரக தோஷங்களுக்கு சம்பிரதாய பரிகாரங்களோடு, தமது கண்டுபிடிப்பான நவீன பரிகாரங்களையும் பரிந்துரைத்து பேரும் புகழும் பெற்று வருகிறார்.

தமது ஆன்மீக வாழ்விலும் தொடர்ந்து முன்னேறி 2000 டிசம்பர் 23 முதல் ஹ்ரீம் என்ற மாயா பீஜத்தை ஜெபித்து வருகிறார். இறையருளை பொறிவைத்து பிடிப்பது எப்படி என்று நூல் எழுதுமத்தனை அனுபவங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவேங்கடன் தீந்தமிழ் பாமலர் மாலை என்ற தலைப்பில் எளிய,அழகு,பழகு தமிழில் காவியம் எழுதி திருப்பதி திருமலை தேவஸ்தான ஆய்வுக்குழு தலைவர் டாக்டர் . ராகவாச்சாரியின் பாராட்டைப்பெற்றது

ஒரே நேரத்தில் ஆன்மீகம்மாதஇதழில் 2 தொடர்கள் எழுதியமை.(நவகிரக தோஷங்களுக்கு நவீனபரிகாரங்கள்,ஸ்ரீ பிரம்மங்காரு)
ஜோதிட பூமி மாத இதழில் தமது கண்டுபிடிப்பான நவகிரகதோஷங்களுக்கு நவீனபரிகாரங்களை எழுதி முடித்து, அனைவருக்கும் தனயோகம் என்ற தொடரை ஜனவரி இதழில் துவக்க உள்ளார்.

தமிழனாய் இருந்து, தெலுங்கை கற்றுத் தேர்ந்து தெலுங்கிலும் இலக்கியங்கள் படைப்பதோடு 2 ஆண்டுகள் ஆந்திர பிரபா தெலுங்கு நாளிதழின் நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது தினத்தந்தி நாளிதழின் சித்தூர் நிருபராக பணியாற்றிவருகிறார்.

Sunday, January 13, 2008

ரஜினி உளறிக்கொட்டுவது புதிய விஷயம் அல்ல.

ரஜினி என்ற லெஜென்ட் இப்போது டிட்டர்ஜென்ட் போட்டு வெளுத்த ரேஞ்ஜில் உளறிக்கொட்டுவது புதிய விஷயம் அல்ல. ரங்கா படத்தில் ரஜினி பேசிய வசனம் (இதோ பார் குரு! உங்களை மாதிரி 100 வயசு வாழனும்னுல்லாம் நான் ஆசைப்பட மாட்டேன் என் இஷ்டப்படி 40 வயசு வரை வாழ்ந்துட்டு போறேன்) இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. நீண்ட ஆயுள் கொண்ட லெஜென்டுகளின் வாழ்க்கை இப்படி சந்தி சிரிப்பது சரித்திரத்தில் சகஜமான ஒன்று தான். லேட்டஸ்டாக அந்திமழை யில் அன்னார் உதிர்த்த முத்துக்களை படித்தேன். அரிக்குதுய்யா! புல்லரிக்குது..


இடம்:சிவாஜி பட வெள்ளி விழா

கபில முனி என்பவர் சொன்னாராம் (அதை ரஜினி எடுத்து கூறுகிறார்)

"ஆசைப்படு.ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை.அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை , சரியாக செயல்படுத்து...அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவி...அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள் . மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு "

இத‌ற்கும் யோக‌த்துக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? சாங்கிய‌ யோக‌ம் இதைத்தான் கூறுகிற‌தா? என்ன‌ இழ‌வு இது?

ஆசை என்ப‌து தோன்ற‌ கார‌ண‌ம் ம‌னித‌னையும் ,இந்த‌ ப‌டைப்பையும் வேறுப‌டுத்தும் அக‌ந்தைதான். நான் த‌னியில்லை. இந்த‌ ப‌டைப்பின் பிரிக்க‌ முடியாத‌ பாக‌ம் நான். என்ற‌ உண‌ர்வுட‌ன், ப‌டைப்பில் த‌ன்னையும், த‌ன்னில் ப‌டைப்பையும் பார்ப்ப‌வ‌ன் ம‌ன‌தில் ஆசை என்ப‌து தோன்றாது. என்.டி.ஆர் சினிமாவில் வில்லன் " டேய் இந்த ஊரே என‌க்கு சொந்தம் என்று சொல்வார் . அதற்கு என்.டி,.ஆர் "ஈ தேச‌மே நாதி"(இந்த‌ நாடே என்னுடைய‌து) என்று ப‌தில் சொல்வார். ஒரு நாட்டை என்னுடைய‌து என்ற‌ எண்ண‌மே இத்த‌னை பெருமித‌த்தை,திருப்தியை த‌ரும்போது இந்த‌ ப‌டைப்பே என்னுடைய‌து என்ற‌ உண‌ர்வும், அனுப‌வ‌மும் ஏற்ப‌ட்டு விட்டால் அந்த‌ உன்ன‌த‌ நிலையை த‌ங்க‌ள் க‌ற்ப‌னைக்கே விட்டு விடுகிறேன்.

இந்த‌ ப‌டைப்பே தான், தானே இந்த‌ ப‌டைப்பு என்று உண‌ர்ந்துவிட்ட‌ யோகி , அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு, இந்த பிண்டத்தில் உள்ளதை கொண்டு அண்டத்தை கட்டுப்படுத்தும் கலையறிந்த ஒரு யோகி "ஆசைப்படு" என்று சொன்னதாக ர‌ஜினி சொல்வ‌தை ப‌டித்த‌து சிரித்து விட்டேன். அடுத்து பாருங்க‌ள் க‌பில‌ முனி சொல்கிறாராம் ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை. எதை சேர்த்து வைப்ப‌து உண்மையிலேயே புரிய‌வில்லை. ஆசையையா இல்லை. ஆசைப்ப‌ட்ட‌தை அடைவ‌த‌ற்கு விஷ‌ய‌த்தை சேர்த்து வைக்க‌ வேண்டுமாம். (என் குறுகிய‌ மூளைக்கு ஆசை என்ற‌துமே பெண்ணும், விஷ‌ய‌த்தை சேர்த்து வைத்த‌ல் என்ற‌தும் பிர‌ம்ம‌ச்ச‌ர்ய‌மும் தான் ஸ்பார்க் ஆகிற‌து.(அபிஷ்டு..)

அப்புற‌ம் பாருங்க‌ ம‌றுப‌டி குழ‌ப்ப‌ம்.

அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை , சரியாக செயல்படுத்த‌ வேண்டுமாம். இவ‌ர் என்ன‌த்தை சொல்கிறார். ஒருவேளை ஓஷோ கூறும் காம‌த்திலிருந்து க‌ட‌வுளுக்கா ?

அப்புற‌ம் பாருங்க‌ ம‌றுப‌டி குழ‌ப்ப‌ம்.

அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவிங்கறார்....அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள் என்றும் சொல்கிறார். மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு என்று முடிக்கிறார்.

துன்ப‌ம் வ‌ருகையிலே சிரிங்க‌ என்ப‌து க‌ண்ண‌தாச‌ன் வாக்க‌ல்ல‌வா?

க‌பில‌ முனி(?) அழ‌கே இத்த‌னை அழ‌காக‌ இருக்கிற‌து. இதில் ர‌ஜினியும் கொட்டேஷ‌ன் விடுகிறார்.(என்ன‌ங்க‌டா இது த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்த் கேடு)

அடுத்து ர‌ஜினி கோட்டேஷ‌னை பார்ப்போம்

சாப்பிட்டதை எல்லாம் உடம்பில் வைத்துக் கொண்டால் , உடம்பு கெட்டுப்போய்விடும் . சம்பாதித்ததை எல்லாம் நாமே வைத்துக்கொண்டால் , வாழ்க்கை கெட்டுப்போய்விடும்.

இதை ரஜினி தனது டேபிள் கண்ணாடி கீழே தட்டச்சி வைத்திருந்தால் ரஜினி 25 விழாவில் 75 ரூபாய் வாட்ச் ர‌ஜினி ப‌ட‌ம் போட்டு 250 ரூபாய்க்கு விற்ற‌ கொடுமை ந‌ட‌ந்திருக்காதே...

ஜூ.வி. இதழை புரட்டினால் போதும்

சரோஜா தேவி நாவல்களுக்கு கரு தேடி எங்கோ போக வேண்டிய அவசியமில்லை. கடந்த ஜூ.வி. இதழை புரட்டினால் போதும்

கானிப்பாக்க வினாயகர் தாம் புரிந்த கீழ்காணும் அற்புதங்களை தொடர்ந்தால் தமிழ் புத்தாண்டில் எனது பதிவுகள் நூல் வடிவம் பெற்று வெளி வந்த எழுத்து வியாபாரிகளின் வயிற்றை கலக்கி வெளிக்கு வர வைப்பது சாத்தியம் தான்.

நிச்சயமாக கதா காலட்சேபம் செய்யும் எண்ணமில்லை. என்றாலும் எனது சென்டிமெண்ட் காரணமாய் எங்கள் கானிப்பாக்கம் கணபதியை பற்றி சில வரிகள்.
கடந்த பிள்ளையார் சதுர்த்திக்கு ஒரு நண்பன் தன் குட்டி கோவிலில் சதுர்த்தி சந்தர்ப்பமாக என் பேச்சை ஒலிபரப்ப விரும்பினான். பதிவு செய்தும் கொடுத்தேன்.(அதற்கான என் ஸ்க்ரிப்டை ஹேமந்த் என்ற பார்ட்டி ரீகாப்பி செய்து கொடுத்திருக்க அதை என் மகள் நடத்தும் இண்டியன் பொலிடிகல் க்ளோசப் மாதமிருமுறை இதழுக்கு கொடுத்தேன். அது 2 இதழ்கள் தொடர்ந்து வெளிவந்தது. வினாயகரை பற்றி எழுதி வெளியிட்ட புண்ணிய பலத்தால் எங்கள் மார்க்கெட் சவுக் வெங்கடேசன் ஒக்காபுலரியில் சொன்னால் பல்ப் மாட்டிக் கொண்டுவிட்டது.

சித்தூர் கிருஷ்ணா ஜுவெல்லர்ஸ் இண்டியன் பொலிடிகல் க்ளோசப் மாதமிருமுறை இதழின் சார்பாக முன்னர் வெளியிட்ட எனது மினி ஜோதிட போதினி என்ற 32 பக்க பாக்கெட் புத்தகத்தை ஸ்பான்ஸர் செய்தார்.(முதலில் 1000 பிரதிகள் என்றவர், பிறகு 5000 பிரதிகளுக்கு ரூ.3000 டவுன் பேமென்ட் கொடுத்து விட்டார். எனக்கு நாளை தான் சம்பளம். எது எப்படியோ வினாயகர் என் வினை தீர்த்து என்னை விளையாட விட்டிருப்பதாகவே எண்ணுகிறேன். இதுவல்லாது கானிப்பாக்கம் நிர்வாக அதிகாரி தினகரனுக்கு புத்தாண்டு விளம்பரம் கொடுத்து விட்ட பிறகும், முட்டி மோதி ரூ.20,100 க்கு விளம்பரம் பெற்றுவிட்டேன்,. இதில் 15 சத வீதம் என் கமிஷன். ஏற்கெனவே சேகரித்த ரூ.25,000 த்திலும் 15 சதம் கமிஷன் நிலுவையில் உள்ளது.

Saturday, January 12, 2008

பொய் சத்தியம் போட்டால் போட்ட பார்ட்டி காலியாகிவிடுவார்.


கானிப்பாக்க வினாயகரை தெரியுமா? உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் ஒரு கிணற்றில் சுயம்புவாக தோன்றி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இவரை தெலுங்கில் பிரமாணால தேவுடு என்று கூறுகிறார்கள். அதாவது இவர் சன்னிதானத்தில் வந்து பொய் சத்தியம் போட்டால் போட்ட பார்ட்டி காலியாகிவிடுவார். கானிப்பாக்கத்தில் வந்து பொய் சத்தியம் போடத் தயார் என்று சவால் விட்ட அரசியல் பிரபலங்கள் பலர் தம் பிராபல்யத்தை இழந்து தவிப்பது கண்கூடாக நடந்து வருகிறது.

நிற்க ஒரு ஜோதிடனாக இந்த கானிப்பாக்க வினாயகரை தரிசித்தால் ஏற்படக்கூடிய நன்மைகள், விலகக்கூடிய தோஷங்களை விளக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. பொதுவாகவே கேதுவினால் ஏற்படும் தீமைகளை விலக்கும் அதிகாரம் கணபதிக்குண்டு. கேது ஜாதகத்தில் கெட்டிருந்து,கேது தசை அல்லது கேது புக்தி நடந்தால் ஞானம் ஏற்படுவது உறுதி. அந்த ஞானம் மனிதனுக்கு கிடைப்பது தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவரும்போதுதான். அதே போல் மனிதன் வாழ்நாளில் செல்லக்கூடாது என்று நினைக்கும் 4 இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்போதும் ஞானம் கிட்டுகிறது. அந்த இடங்கள்: போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு. ஆக கேது மேற்சொன்ன இடங்களுக்கு நம்மை கொண்டு சென்று ஞானம் தருவது உறுதி. எனவே வினாயகரை வழிபட்டால் இந்த இழவெல்லாம் நடக்காமலே ஞானத்தை பெறலாம். கேதுவால் ஏற்படக்கூடிய தீமைகள் பல உள்ளன. அவை பின் வருமாறு: மறைமுக எதிரிகள்,இதர மதத்தவரால் தொல்லை,புண்கள்,வெளிநாடு செல்லும் மோகத்தால் பெரு நஷ்டத்துக்குள்ளாதல் இப்படி எத்த்னை எத்தனையோ. இவை யாவும் வினாயகரை வழிபடுவதால் கட்டுப்படும் . ராகு/கேதுக்கள் விஷத்துக்கு தொடர்புடையவர்கள். அருகம்புல் விஷத்தை முறிக்கக்கூடியது.எனவே அருகம்புல்லை கணபதிக்கு சார்த்தி ஜூஸ் போட்டு குடியுங்கள். விஷம் முறிக்கப்படும்

கானிப்பாக்க வினாயகரை வழிபட்டால்:

சிலைக்கு உயிரூட்டிய ஆலயத்தை தொழுவதையே சாலவும் நன்று என்பது நம் பண்பாடு. அதிலும் தானே தோன்றி நாளுக்கு நாள் வளரும் மூர்த்தம் எத்தகைய ஜீவசக்தியை கொண்டிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இது ஒருபுறம் என்றால் கிணற்றில் தோன்றியுள்ளதை வைத்து யோசிக்கும்போது மேலும் பல நன்மைகள் ஏற்படும் என்பதை உறுதியாக கூறலாம். சந்திரனுக்கு கடும் தோஷத்தை தருப‌வர் கேது.

ஜ‌ல‌ கார‌க‌ன் ச‌ந்திர‌ன். கேதுவுக்கு அதி தேவ‌தையான‌ வினாய‌க‌ர் , ச‌ந்திர‌ன் கார‌க‌த்துவ‌ம் வ‌கிக்கும் கிண‌ற்றில் தோன்றி வ‌ள‌ர்வ‌தால் கேதுவால் ஏற்ப‌டும் தோஷ‌ங்க‌ளை ம‌ட்டும‌ல்லாது ,ச‌ந்திர‌னால் ஏற்ப‌டும் தோஷ‌ங்க‌ளையும் நிவ‌ர்த்திக்க‌ வாய்ப்பு ஏற்ப‌ட்டுள்ள‌து. அடுத்த‌ப‌டியாக‌ ச‌ந்திர‌ கேது சேர்க்கை யால் ஏற்ப‌டும் கிட்னி ஃபெயிலிய‌ர்,க்ஷ‌ய‌ம்,பைத்திய‌ம் போன்ற‌ குறைபாடுக‌ளும் நீங்கும். ராகு கேதுக்க‌ள் ச‌தா ஒருவ‌ருக்கொருவ‌ர் 180 டிகிரியிலேயே ச‌ஞ்ச‌ரிப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தால் வினாய‌க‌ர் வ‌ழிபாடு ராகுவால் ஏற்ப‌டும் தோஷ‌ங்க‌ளையும் நீக்கும் என்று உறுதியாக‌ கூற‌லாம். ஆக‌ கானிப்பாக்க‌ம் வினாய‌க‌ரை வ‌ழிப‌டுவ‌தால் ராகு,கேது,ச‌ந்திர‌ன் ஆகியோர் கார‌க‌த்துவ‌ம் வ‌கிக்கும் ச‌மாச்சார‌ங்க‌ள் யாவும் அனுகூல‌மாகும். மேலும் மேற்ப‌டி கிர‌க‌ங்க‌ளால் ஏற்ப‌டும் தோஷ‌ங்க‌ளும் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌டும் என்ப‌து உறுதி.


இந்த‌ மூன்று கிர‌க‌ங்க‌ளை ப‌ற்றி ம‌ட்டும‌ல்லாது இத‌ர‌ 6 கிர‌க‌ங்க‌ளை ப‌ற்றியும் முழுமையாக‌ அறிய‌ கீழ் காணும் சுட்டியை க்ளிக் செய்ய‌வும்:

பொய் சத்தியம் போட்டால் போட்ட பார்ட்டி காலியாகிவிடுவார்.


கானிப்பாக்க வினாயகரை தெரியுமா? உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் ஒரு கிணற்றில் சுயம்புவாக தோன்றி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இவரை தெலுங்கில் பிரமாணால தேவுடு என்று கூறுகிறார்கள். அதாவது இவர் சன்னிதானத்தில் வந்து பொய் சத்தியம் போட்டால் போட்ட பார்ட்டி காலியாகிவிடுவார். கானிப்பாக்கத்தில் வந்து பொய் சத்தியம் போடத் தயார் என்று சவால் விட்ட அரசியல் பிரபலங்கள் பலர் தம் பிராபல்யத்தை இழந்து தவிப்பது கண்கூடாக நடந்து வருகிறது.

நிற்க ஒரு ஜோதிடனாக இந்த கானிப்பாக்க வினாயகரை தரிசித்தால் ஏற்படக்கூடிய நன்மைகள், விலகக்கூடிய தோஷங்களை விளக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. பொதுவாகவே கேதுவினால் ஏற்படும் தீமைகளை விலக்கும் அதிகாரம் கணபதிக்குண்டு. கேது ஜாதகத்தில் கெட்டிருந்து,கேது தசை அல்லது கேது புக்தி நடந்தால் ஞானம் ஏற்படுவது உறுதி. அந்த ஞானம் மனிதனுக்கு கிடைப்பது தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவரும்போதுதான். அதே போல் மனிதன் வாழ்நாளில் செல்லக்கூடாது என்று நினைக்கும் 4 இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்போதும் ஞானம் கிட்டுகிறது. அந்த இடங்கள்: போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு. ஆக கேது மேற்சொன்ன இடங்களுக்கு நம்மை கொண்டு சென்று ஞானம் தருவது உறுதி. எனவே வினாயகரை வழிபட்டால் இந்த இழவெல்லாம் நடக்காமலே ஞானத்தை பெறலாம். கேதுவால் ஏற்படக்கூடிய தீமைகள் பல உள்ளன. அவை பின் வருமாறு: மறைமுக எதிரிகள்,இதர மதத்தவரால் தொல்லை,புண்கள்,வெளிநாடு செல்லும் மோகத்தால் பெரு நஷ்டத்துக்குள்ளாதல் இப்படி எத்த்னை எத்தனையோ. இவை யாவும் வினாயகரை வழிபடுவதால் கட்டுப்படும் . ராகு/கேதுக்கள் விஷத்துக்கு தொடர்புடையவர்கள். அருகம்புல் விஷத்தை முறிக்கக்கூடியது.எனவே அருகம்புல்லை கணபதிக்கு சார்த்தி ஜூஸ் போட்டு குடியுங்கள். விஷம் முறிக்கப்படும்

கானிப்பாக்க வினாயகரை வழிபட்டால்:

சிலைக்கு உயிரூட்டிய ஆலயத்தை தொழுவதையே சாலவும் நன்று என்பது நம் பண்பாடு. அதிலும் தானே தோன்றி நாளுக்கு நாள் வளரும் மூர்த்தம் எத்தகைய ஜீவசக்தியை கொண்டிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இது ஒருபுறம் என்றால் கிணற்றில் தோன்றியுள்ளதை வைத்து யோசிக்கும்போது மேலும் பல நன்மைகள் ஏற்படும் என்பதை உறுதியாக கூறலாம். சந்திரனுக்கு கடும் தோஷத்தை தருப‌வர் கேது.

ஜ‌ல‌ கார‌க‌ன் ச‌ந்திர‌ன். கேதுவுக்கு அதி தேவ‌தையான‌ வினாய‌க‌ர் , ச‌ந்திர‌ன் கார‌க‌த்துவ‌ம் வ‌கிக்கும் கிண‌ற்றில் தோன்றி வ‌ள‌ர்வ‌தால் கேதுவால் ஏற்ப‌டும் தோஷ‌ங்க‌ளை ம‌ட்டும‌ல்லாது ,ச‌ந்திர‌னால் ஏற்ப‌டும் தோஷ‌ங்க‌ளையும் நிவ‌ர்த்திக்க‌ வாய்ப்பு ஏற்ப‌ட்டுள்ள‌து. அடுத்த‌ப‌டியாக‌ ச‌ந்திர‌ கேது சேர்க்கை யால் ஏற்ப‌டும் கிட்னி ஃபெயிலிய‌ர்,க்ஷ‌ய‌ம்,பைத்திய‌ம் போன்ற‌ குறைபாடுக‌ளும் நீங்கும். ராகு கேதுக்க‌ள் ச‌தா ஒருவ‌ருக்கொருவ‌ர் 180 டிகிரியிலேயே ச‌ஞ்ச‌ரிப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தால் வினாய‌க‌ர் வ‌ழிபாடு ராகுவால் ஏற்ப‌டும் தோஷ‌ங்க‌ளையும் நீக்கும் என்று உறுதியாக‌ கூற‌லாம். ஆக‌ கானிப்பாக்க‌ம் வினாய‌க‌ரை வ‌ழிப‌டுவ‌தால் ராகு,கேது,ச‌ந்திர‌ன் ஆகியோர் கார‌க‌த்துவ‌ம் வ‌கிக்கும் ச‌மாச்சார‌ங்க‌ள் யாவும் அனுகூல‌மாகும். மேலும் மேற்ப‌டி கிர‌க‌ங்க‌ளால் ஏற்ப‌டும் தோஷ‌ங்க‌ளும் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌டும் என்ப‌து உறுதி.


இந்த‌ மூன்று கிர‌க‌ங்க‌ளை ப‌ற்றி ம‌ட்டும‌ல்லாது இத‌ர‌ 6 கிர‌க‌ங்க‌ளை ப‌ற்றியும் முழுமையாக‌ அறிய‌ கீழ் காணும் சுட்டியை க்ளிக் செய்ய‌வும்:

எண்டமூரி வீரேந்திரநாத்துக்கு கல்தா !



எண்டமூரி வீரேந்திரநாத் யார் என்று கேட்டுவிடாதீர்கள். அவர் தற்கொலை செய்து கொண்டுவிடுவார். ஒரு காலத்தில் தெலுங்கில் பெண் எழுத்தாளர்கள் உயரமான,அழகான, தலை முடி நெற்றியில் விழுந்து கிடக்கும் ஆண்களைப்பற்றி நாவல் எழுதிக்கொண்டிருந்த போது சற்றே யதார்த்த வாழ்வை களமாக கொண்டு நாவல் எழுதிய ஆசாமி.

வீரேந்திரநாத் நாவல்கள் ஒரு இழவு என்றால் அதை தமிழில் மொழி பெயர்க்கும் சுசீலா கனக துர்காவின் தமிழ் ஒரு இழவு. சில நாவல்கள் படமாயின. சிரஞ்சீவி ஜுரத்தில் வெற்றியும் பெற்றன. அவ்ளதான் வீரேந்திரநாத்துக்கு எங்கில்லாத ஆணவம் வந்து விட்டது. தானே ஒருபடத்தை டைரக்ட் செய்தார். படத்தின் பெயர் பாரதம்லோ சீதாவா (அ)குருக்ஷேத்ரம்லோ சீதாவா நினவில்லை. படம் பப்படம்.

இதற்கிடையே இன்னொரு கூத்தும் நடந்தது. இதர தெலுங்கு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களையும் சுசீலா கனக துர்கா மொழிபெயர்க்க எண்டமூரி எழுதிய நாவல்களாக மார்க்கெட் செய்து விற்று காசும் பார்த்துவிட்டனர். இதை முதலில் அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்த வேலையற்றவன் நான் தான்.


இது குறித்து யுத்தன்ன பூடி சுலோச்சனா ராணி என்ற எழுத்தாளர் அவர் மீது வழக்கு போட்ட பின்பே வீரேந்திரநாத் கண்விழித்தார். இது இப்படியிருக்க எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தையும்,என் முயற்சிகளையும் ஆடியோ கேசட்டில் பதிவு செய்து அவருக்கு அனுப்பினேன். தமது நாவல்களில் உபயோகித்துக்கொள்ளுமாறு கோரியிருந்தேன்.அதற்கு அவர் தற்போது நாவல் எழுதும் யோசனை இல்லை என்று எழுதியிருந்தார்.

அவரது மெயிலுக்கு திட்டம் குறித்த விவரங்களை அனுப்பியதற்கு அவர் பதில் என்ன தெரியுமா?

நான் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேரவேண்டுமாம். இன்னொரு தடவை மெயில் அனுப்பினால் போலீசுக்கு புகார் செய்வாராம். அட‌ இழ‌வே உன‌க்கு வ‌ந்த‌ மெயில் தேவையில்லை என்றால் டெலிட் செய்து விடு (அ) ஸ்ப‌ம் என்று மார்க் செய்து விடு. அதை விட்டு பை.ஆஸ்ப‌த்திரியில் சேரனுமாம். பை.கார‌னை த‌விர‌ வேறு எவ‌ராவ‌து இது போல் ப‌தில் எழுதுவார்க‌ளா?

அட‌ இழ‌வே.. இத‌ற்கும் போலீசுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? நான் மாநில‌ முத‌ல்வ‌ர் மீதே மனித‌‌ உரிமைக‌ள் க‌மிஷ‌னுக்கு புகார் அனுப்பிய‌வ‌ன்.( ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌ப்ப‌ட்ட‌து ,நிச்ச‌ய‌ம் இது என் செல்வாக்குக்கு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ம‌ல்ல‌). போலீஸ் என்ன‌த்த‌ பிடுங்க‌ முடியும்? அதுவும் இந்த‌ விஷ‌ய‌த்தில்.


பி.கு: சித்தூர் கிருஷ்ணா ஜுவெல்ல‌ர்ஸ் கார‌ர்க‌ள் இந்த‌ ஆசாமியை சில‌ நிக‌ழ்ச்சிக‌ளுக்கு அழைத்து விட்டு பார்ச‌ல் செய்வ‌த‌ற்குள் ப‌டாத‌ பாடு ப‌ட்டுவிட்டு க‌ல்தா கொடுத்துவிட்ட‌து ஊர‌றிந்த‌ ர‌க‌சிய‌ம்.

Thursday, January 10, 2008

எப்ப‌டியோ என் பேச்சுக்கும் எழுத்துக்கும் என் மக்கள் செவி சாய்த்து என்னை ம‌க்க‌ள் த‌லைவனாக்கி

ராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுவார்: சாதகனின் சாதனையை பொறுத்து ஆள்வோர் மனம்,உட் பட யுகம் கூட மாறிவிடுமாம். அது நிஜம்தான் என்பதை என் அனுபவத்தை கொண்டே நிரூபிக்கமுடியும். (அதை பின்னர் பார்ப்போம்)

தெய்வங்களின் மொழி எனக்கு புரிய ஆரம்பித்து பல காலம் ஆயிற்று. நேற்று ஹோட்டல் குருவில் பார்ஸல் மாறி , 4 பரோட்டாக்கள் கிடைத்தததை கூட நான் தெய்வத்தின் திருவிளையாடலாகவே பார்க்கிறேன். ஹோட்டல் பெயர் குரு. மேலும் மேலும் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள குருக்களின் படங்களில் முதல் படமே பிரம்மங்காருவின் படம் தான்.

என் மகள் நடத்தும் சிறு பத்திரிக்கையில் அன்னாரின் உபதேசங்களை தொகுத்து எழுதினேன் . அதற்குண்டான கூலிதான் பரோட்டா பார்சல். அதே சமயம் பிராக்டிக்கலாகவும் சிந்திக்கிறேன். நான் அந்த கோட்டலின் ரெகுலர் கஸ்டமர். அதன் ஓனர் என் நண்பனின் நண்பன் நாளையே சென்று விஷயத்தை சொல்லி துண்டு விழும் பணத்தை கொடுத்து விடுவேன் அது வேறு விஷயம்.

ஆனால் தெய்வம் /குரு என் திருப்பணியை ஏற்று சன்மானமும் தருவது போன்ற உணர்வை நான் ஏன் இழக்க வேண்டும்.

எனக்கு எந்த விஷயத்தில் எந்த சந்தேகம் இருந்தாலும் இது என் கடைசி பிறவி என்பதில் மட்டும் சந்தேகமில்லை.இதில் நான் வசூலிக்க வேண்டிய யாவும் வசூலாகிவிடும். என்னிடம் வசூலிக்கப்படவேண்டியவை யாவும் வசூலிக்கப்பட்டுவிடும்.

என் வாழ்வு என் பிடியை விட்டு நழுவி எத்தனையோ காலமாகிறது. ஜங்ஷன் என்பார்களே அது போன்ற ஜங்ஷனில் தவறான பாதையை தேர்ந்தெடுத்துவிட்டேனோ என்ற சந்தேகம் இப்போதும் அவ்வாப்போது எழுவதுண்டு. ஆனால் ஓஷோ சொல்வது போல் சகலமும் ஒரு புள்ளியை நோக்கியே என்னை செலுத்தியிருப்பதை உணர முடிகிறது. என் வாழ்வு பிறர் கண்களுக்குமோசமாக எடிட் செய்யப்பட்ட படம் போல் தோன்றினாலும் என்னை பொறுத்தவரை இரண்டாம் வாய்ப்பாடு மாதிரி மிக சரியாக புரிகிறது.

இறைவனும் நானும் ஒரே கட்சி. எம்.ஜி.ஆர்/காளிமுத்து போல . நான் காளிமுத்து
த‌லைவ‌ன் த‌டுத்தாலும் விடேன் என்று ஆர்ப‌ரிப்ப‌து உண்மைதான். இதுவும் எம்.ஜி.ஆரின் அனும‌தி பேரில்தான் ந‌ட‌க்கிற‌து என்ப‌தை உண‌ர்ந்திருக்கிறேன். அவ‌ர் இந்த‌ உல‌கை அழிக்க‌ இருப்ப‌தும் உண்மை. நான் அதை த‌டுக்க‌/கு.ப‌. அத‌ன் விளைவுக‌ளை குறைக்க‌ எண்ணுவ‌தும் செய‌ல் ப‌டுவ‌தும் உண்மை . அதை இறைவ‌ன் வேடிக்கை பார்ப்ப‌தும், அவ்வ‌ப்போது த‌டைகளை உண்டாக்குவ‌தும் உண்மை. அழிவு உண்மை. என்னால் ஒரு ...ம் பிடுங்க‌ முடியாது என்ப‌தும் உண்மை.

எப்ப‌டியோ என் பேச்சுக்கும் எழுத்துக்கும் என் மக்கள் செவி சாய்த்து என்னை ம‌க்க‌ள் த‌லைவனாக்கி என் த‌லைவ‌னிட‌மிருந்து விலக்கிவிடாது மூட‌ ப‌க்த‌னாக‌வே தொட‌ர‌ச்செய்யும் என் விதிக்கு ந‌ன்றி

Wednesday, January 9, 2008

மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாது இந்திய மாநில அரசுகளின் நிர்வாக செலவுகளை பாதியாக குறைக்க புரட்சிகர திட்டம்

எகானமி பேக்கேஜ்

நிபந்தனை: இந்த யோசனைகள் எனக்கு மட்டுமே சொந்தம். எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட அமலுக்கு நிதி திரட்டவே தீட்டப்பட்ட திட்டம். அதற்காக அல்லாது சுயேச்சையாக இந்த யோசனைகளை அமல்படுத்த விரும்பும் மாநில அரசுகள் என் அனுமதியை பெற்ற பிறகே அமல் படுத்த வேண்டும்.

1.இந்த அரசு இயந்திரம் அமைக்கப்பட்டது ஆங்கிலேயர் காலத்தில். அவர்கள் வெளிநாட்டினர். சுதேசி உத்யோகஸ்தர்கள் மீது நம்பிக்கையின்றி அடுத்தடுத்த கட்டங்களில் மேற்பர்வை/மறு பரிசீலனை இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். இன்று நடப்பது சுதேசி ஆட்சி. எனவே மறுபடி மறுபடி மேற்பர்வை/மறு பரிசீலனைகள் இல்லாது அரசு இயந்திரத்தை வேகமாக செயல்பட செய்ய வேண்டும். இதற்கு சில பூர்வாங்க நடவடிக்கைகள் தேவை. அவை கீழ் வருமாறு:


அ)அரசு ஊழியர்களின் பல்வேறு தகுதிகளை மறு பரிசீலனக்குள்ளாக்க வேண்டும். இந்த மறு பரிசீலனை முற்றிலும் கம்ப்யூட்டரைஸ்ட் ஆக இருக்க வேண்டும். தகுதியிழந்தவர்களுக்கு தகுதிகளை வளர்த்துக்கொள்ள லாஸ் ஆஃப் பேயில் 3 மாதம் லீவு கொடுத்து மறுபடி சோதனைக்குட்படுத்தி அதிலும் தோற்றால் கட்டாய ஓய்வில் அனுப்பவேண்டும். ஏற்கெனவே உள்ள காலியிடங்களுக்கும், மேற்படி பார்ட்டிகளால் ஏற்படும் காலியிடங்களையும் டெண்டர் அடிப்படையில் (தேவையான தகுதியிருக்க வேண்டும்/குறைந்த சம்பளத்துக்கு பணியாற்ற முன் வர வேண்டும்) நிரப்ப வேண்டும்.

ஆ) பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவியருக்கு அரசு அலுவலகங்கள்,மருத்துவ மனைகள்,காவல் நிலையங்களை பார்வையிட்டு அறிக்கை தர டெண்டர் அடிப்படையில் நியமிக்க வேண்டும். ஆய்வு நடத்தவேண்டிய அலுவலகத்தை நிர்ணயிக்க ஜம்ப்ளிங் முறையை பின்பற்ற வேண்டும்.


இ)18 வ‌ய‌து நிறைந்த‌ அனைவ‌ருக்கும் போலீஸ் ப‌யிற்சி க‌ட்டாய‌மாக்க‌ ப‌ட‌வேண்டும்.

ஈ)வேலைய‌ற்றோர்/அர‌சு ஊழிய‌ர்க‌ளில் எவ‌ரை எந்த‌ ப‌ணிக்கு வேண்டுமானாலும் அர‌சு ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ வ‌ழி வ‌கை செய்ய‌ வேண்டும்.

உ)ம‌க்க‌ள் த‌ங்க‌ளை குறித்த‌ விவ‌ர‌ங்க‌ளை க‌ம்ப்யூட்ட‌ர் புரிந்து கொள்ளும் வ‌கையிலான‌ ,10 ரூ. முத்திரை தாளில் அச்சிட‌ப்ப‌ட்ட‌ ப‌டிவ‌த்தில் அர‌சுக்கு அளிக்க‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும். இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் அட‌ங்கிய‌ டேட்டா பேஸ் அடிப்ப‌டையில் அர‌சு திட்ட‌ங்க‌ள் வ‌குக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

(தொட‌ரும்)

யாஹூ ஆன்சரில் தேர்வு பெற்ற எனது சிறந்த பதில்களை(ஆங்கிலம்) இந்த பதிவில் காணலாம். ஆங்கிலம் தெரியாதவர்கள் மன்னிக்கவும்.

1.Should we be afraid of America or Americans ? See you tube link first below" Is ignorance bliss" discuss?
Best Answer - Chosen by Voters
we should afraid about the Americans first. Why because they are responsible for the inhuman activities of USA
1 month ago
***

2.Anything unusuall happen to you?accidentally my script kept in
nilacharal.com and I too created my site in tamil.
(learned unicode typing in a day )

www.truthteller.sampasite.com
4 months ago

***

3.I'm trying to write my own book but i it sounds to much like cinderella i keep running out of idea's

i've tried everything under the sun and it still doesn't work out everthing i've tried has been used before in other stories and now i don't know what to do at all i've tried to come up with something new and realistic but i can't think of anything what should i do to make my story come to life ?
Chosen by Asker
u please take down important points. Then u speak it out in tape recorder. Then u try to get it in writings. It is the formula I follow when ever I get writer's block.
5 months ago
***

5.In india the rate of interest for pvt credits are Rs.10 for Rs. 100 PM what do u feel?

As an indian I feel ashamed. In AP state govt is lending to self help groups for 25 Piece interest for 100/- . But in market Rs.10 for Rs. 100 PM is been collected. The self help groups are clearing their personal debts borrowed for huge interest. I cannot guess what the hell is going on in India. Agriculture is still feeding 70% of the families. But the govt is neglecting it. Logically 70% of the budget must be allotted to agricultural sector.
***

6.Can you sue a state/country without it's consent?
6 months ago

.No. u can sue only with its consent. I had sued on our state govt for not responding on my actionplan operation india 2000. CMs office responded at once and promised for appropriate usage. Again I am complaining that All the mail ids of the Present MPs are bogus.

Why because I had personally derived the ids from the Govt of india portal and sent mail to every body. But no mail was properly delivered. Every mail was returned

Herewith I am submitting few lines for clearing you why I had tried to mail the MPs.

Sir I had drafted a fine plan to solve all the problems of India. I had named it as operation India 2000. In 11th of June 1998 itself I had sent 200 printed copies of the plan to the Loksabha speaker and requested him to arrange for the distribution of the same to MPs.

In beginning they hadn’t responded on the receipt of the parcel. After the initiation taken by our MP Sri.N.Ramakrishna Reddy
Denied the receipt of the plan. I had sent them the proof of delivery. Then they wrote me that they couldn’t trace the parcel in their office. They had requested me to send a fresh copy and they would make many copies and disburse them to the MPs. I had sent on the same day. But they hadn’t done it even on this day.
I had communicated this plan to our cms office also. (From November of 97). But no response in spite of 1000s of reminders. According to the information act I had approached the District Information officer, Stae information officer with in the prescribed gape. But there was no information. Recently on 10th of July I had approached the information commission. It may pronounce its judgment with in days.

It is for ur kind information. Kindly publish/telecast the facts .If u want more details and evidences visit my sites: http//:www.geocities.com\ambapaluku

The main points of above said plan.
1.Implementing presidential form of govt.
2.Appointing a special army with 10 core unemployed youth.
3.Handing over the project of linking Indian rivers to them.
4.Abolishing present currency and introducing new one.
5.Undertaking all the agricultural lands after paying compensation in shape of bonds payable in double after five years.
6.Implementing co-operative farming.
1.Implementing presidential form of govt.
By this chief executive of the country will behaving power to implement the next coming points. There will be stability.
2.Appointing a special army with 10 cores unemployed youth.
By this all the unemployed will be given chance to contribute to the national income and have a share(precipitate income)
3. Handing over the project of linking Indian rivers to them.
The north part of the nation is suffering with floods and south part of the nation is suffering with drought. Linking all Indian rivers is the only solution. Anyhow the Indian economy is depended on agriculture. Irrigation is a fundamental need for successful agriculture.
If this project is handed to any pvt construction company it will take minimum 100 years. If it is handed to the special military formed with the 10crore unemployed youth it can be completed with in 5years.
4. Abolishing present currency and introducing new one
The black money prevailing in the Indian market is the only cause for hike in prices, falling govts etc. there is no other measure to root out the black money.
5. Undertaking all the agricultural lands after paying compensation in shape of bonds payable in double after five years.
Factors of productions are four. Land,labour,capital,and organization. In India there are two classes one is ruling and another is ruled. The 3factors of production ( land, capital and organization are in the hands of ruled class. only the labor is in the hands of ruled class. In this condition at least the land can be plucked by the govt from the hands of ruling class. To avoid violence the govt can give proper compensation. As there is no source it can give it in shape of Bond payable after 5 years.

6. Implementing co-operative farming
.By this the returns from the lands will go to the members and every member will work hard for the good result. Large scale production will be possible.
My trails to communicate this to the Indian govt:
On 11-6-98 I had sent 200 copies of the plan to the loksabha speaker and requested to distribute the MPs.First they denied the receipt then asked for fresh copy. I had sent but in vain. Finally I had sentRs.50/- through a postal order towards postage to return the plan copies. It was delivered. But still the plan copies are pending in the office of the speaker, Loksabha.
Bitter experience with the office of the CM of Andhra Pradesh:
From November of 1997 I am sending the copies of my plan. On 22nd of April 2002 I had sent mo for Rs.10towards postage to respond on my plan. It was delivered. I had complained to the CLP leader DR.YS (he is the present cm).
I think he had influenced the pahee. On 3rd ofAugest 2002 the Deputy Secretary to cm had sent me a note to send my proposals to place the same before thecm. I had sent. But no response in spite of many reminders. I had field a petition before the district consumer’s forum in chittoor. By knowing this through dailies the deputy secretary of cm had wrote me and promised for the appropriate usage of my plan. When my mo was delivered and cm office hadn’t responded I had wrote to the clip leader (Present cm) the office of the clip leader had responded in favour.Even though the regime of chandrababu was over the same officials are continuing in pahee. They are plan fully doing their best to hide my letters from the eyes of the cm.
Hunger strike for 10 days:
Only to communicate the problem to the cm I had sat on hunger strike from 2nd of October 2004. Media had covered well the issue. Revenue report gone. Police report gone. Intelligence report gone .The sp had conveyed regrets on the negligence of the cm pasheeand promised me that he will take this to the noticeof the cm. But invain. Responding to my emails the cmpashee sent a mail and instructed me to contact thecollector. I had contacted. But in spite of manyreminders there was no response.
Padhayathra to the capital:
Due to this I had announced a padhayathra to thestatecapital to meet the cm on 8th of april 2005.. Butthe leaders of BC,SC,Vaddara,Madhiga sangams hadrendered unconditional support to my plan operationIndia 2000 and requested me to go by bus if I do sothey will also accompany me. So that I had dropped and planning for a bus yathra to the state capital. Ifmy plan comes out. India will be prosperous and willcome out from the worldwide trap of USA.
Complained to the State Information commission on 10th of Julu2006:
I had complained to the state information commission.(as the district and state information officers hadnt responded with in the prescribed intervel). The commission is to give its openion likeely with in days
6 months ago
***


8.Would you vote for Osama Bin Laden if he was running for President?

7 months ago
sure. He is the only person with back bone to qustion the orrgance of USA. I think he is the person choosed by God to question USA.

9.Http://www.met.police.uk/fraud... website is a real one? i send lottary scam . no response?
u know no one is giving importance to mails. I had mailed each and every MPs of India suggesting below 6 things no one had replied

1.Implementing presidential form of govt.
2.Appointing a special army with 10 core unemployed youth.
3.Handing over the project of linking Indian rivers to them.
4.Abolishing present currency and introducing new one.
5.Undertaking all the agricultural lands after paying compensation in shape of bonds payable in double after five years.
6.Implementing co-operative farming.
10 months ago
****
10.Share market sensex is going up,GDP is growing.. But prostituion and selling body parts are spreading how ?

U had asked a fine question by which I can expose the Hippocratic financial administration of the PM and Finance Minister of India.

Share Market senses is going up . How it is been calculated ? some companies are been taken and the prices of the shares are analyzed . On the basis of the analyze the senses are announced.

The senses is related just to those companies listed not to the prosperity of the country or the common man . When the prices of the shares of those companies are going up the senses will also go up. Is it the growth.. Is it the prosperity? No .. strictly No.

Karl marks had proved that profit can be earned only by exploiting the labor. That means the so called companies had well exploited the labor and gained. What will be the betterment that reached the common man?

If the prices of the shares goes up only the company is gained. The people who have the shares gained . (the people who living by depending on those companies may be gained)

The other point is growth in GDP ..India is inviting multinational companies with red carpet and they are producing the things and GDP is going up. The gains will go only to those companies .

You see generally we judge the prosperity of a man with his monthly income. The prosperity of a country is judged with the per capital income . It is been calculated by dividing the national income with the population .( By this they are dividing the income of super stars and cricketers to the common men in papers) What is national income? the total value of goods and services produced in a year.

How the production is going on? It needs land ,labor, capital and organization. As in India there are two classes ruling and ruled all the three (land, capital and organization) are with the ruling class. Only the labor is with the ruled class. That too they are not in a demanding position.

If there are equal options to contribute to the national income a share in NI would reach the common man. But in fact majority of the population is far from production ..how they may get a share in NI and how there would be a growth in per capital income .

So that number of suicides, crimes, poverty, starvations, exploitation, prostitutes, beggars are going up in India. You just mail this answer to the PM and finance minister of India.. let them know the fact and awake from a day dream.
11 months ago
***

11.Manmohan ,chithambaram are both economical experts but India is still suffering why?

They are at AC rooms, They studied only books. If they come to roads and study the lives of ordinary people ..they will judge better. Every citizen must be given chance to contribute to the national income and to have a share in National income that is percapital income. Manmohan and chithambaram are dreaming that if they give chance to some global companies to contribute to the NI India will become prosperous. They are just draming ..Voters will kick on their heads and they will awake in the next elections.
***


12.Why indian president is has no option rather than sign the bill?

No the indian president have an option that is sending it back and ask to reconsider.. As the president is not been elected directly by the voters he hadnt been given much power. I am advocating for the direct election for the post of president from 1986 itself. Not only for it I advocate for the following also..
1.Implementing presidential form of govt.
2.Appointing a special army with 10 core unemployed youth.
3.Handing over the project of linking Indian rivers to them.
4.Abolishing present currency and introducing new one.
5.Undertaking all the agricultural lands after paying compensation in shape of bonds payable in double after five years.
6.Implementing co-operative farming.
11 months ago

கருவுற்ற பெண் நாயை ஆண் நாய் புண‌ராது.

மனிதன் எல்லா மிருகங்களைவிடவும் கேவலமானவன். ஏன் எப்படி என்பதற்கு சில உதாரணங்களை பார்ப்போம்.
1.நாய்:
கருவுற்ற பெண் நாயை ஆண் நாய் புண‌ராது. புணர்ச்சிக்கு முன்பு பெண் குறியை முகர்வதன் மூலம் கருவுற்றிருப்பதும்,இல்லாததும் தெரிகிறது.(தகவல்: வேலூர் டாக்டர்.அமரர்.கண்ணப்பர்). கருவுற்ற மனைவியிடம் உடல் உறவு கொள்வதற்கான பொசிஷனை பத்திரிக்கைகளிலேயே வெளியிடுகின்றனர்.
2.பறவைகள்:
மேப்,கூகுல் யர்த் உதவியின்றி கண்டம் விட்டு கண்டம் தாவுகின்றன. காட்டுப்பகுதிகளில் வெள்ளம் எந்த அளவுக்கு வரும் என்று சூட்சும உணர்வுடன் கணித்து வெள்ளம் தொட முடியாத உயரத்தில் மரங்களில் கூடு கட்டுகின்றன. மனிதர்களோ ஏரி,குளங்களில் வீடு கட்டி வெள்ளம் மூழ்கடித்தால் வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்கிறார்கள்.
3.புலி:
உண்ட உணவு செரிக்காது போனாலோ,அழுகிய மாமிசத்தை உண்டுவிட்டாலோ அருகம்புல்லை மென்று தின்று சுய வைத்தியம் பார்த்துக்கொள்கிறது.

Tuesday, January 8, 2008

நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு நறுக் கேள்வி,பா.ம.க. நிறுவனருக்கு பளீர் கேள்வி ஒன்று !




நக்கீரன் ஆசிரியர் அவர்களை நறுக்கென்று ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்
அவர் விருப்பம்.

ஐயா!

சில வருடங்களுக்கு முன்பு நாட்டின் 10 கோடி வேலையற்ற வாலிபர்களுக்கு வேலை கொடுக்க ஒரு திட்டம் உள்ளது, அனுப்பவா? என்று கேட்டு ரிப்ளை கார்டு எழுதினேன்.

தங்கள் அலுவலகத்திலிருந்து உடனே அனுப்பும்படி கடிதம் வந்தது. உடனே 10 கோடி வேலையற்ற வாலிபர்களைக் கொண்டு இந்திய நதிகளை இணைக்கும் எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை தங்களுக்கு அனுப்பினேன். அனுப்பி மாம‌ங்க‌ மாயிற்று. எத்த‌னை நினைவூட்டு க‌டித‌ங்க‌ள் எழுதினாலும் ப‌ல‌னில்லை. இந்த‌ ப‌திவை க‌ண்டாவ‌து உட‌னே ப‌தில‌ளிக்கும்ப‌டி கேட்டுக் கொள்கிறேன்.
(அர‌சு அலுவ‌க‌ங்க‌ளை போல் புதிய‌ பிர‌தி கேட்டாலும் அனுப்ப‌த் த‌யார்)


பா.ம.க. நிறுவனருக்கு பளீர் கேள்வி ஒன்று !

பாமக நிறுவனர் மருத்துவர்(?) ஐயா ராமதாசுக்கு பளீர் என்று ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் அவர் விருப்பம்.

ஐயா!

சில வருடங்களுக்கு முன்பு மாநில‌ அர‌சுக‌ளின் நிர்வாக‌ச்செல‌வை பாதியாக‌ குறைக்க‌ எகான‌மி பேக்கேஜ் என்ற‌ பெய‌ரில் மாநில‌ அர‌சுக்கு என் யோச‌னை க‌ளை தெரிவித்துள்ளேன் த‌ங்க‌ளுக்கு அத‌ன் பிர‌தி தேவையெனில் உட‌னே அனுப்புகிறேன் என்று ஒரு ரிப்ளை கார்டு எழுதினேன்.தங்கள் அலுவலகத்திலிருந்து உடனே அனுப்பும்படி கடிதம் வந்தது. உடனே என் யோச‌னைக‌ளின் பிர‌தியை அனுப்பினேன். அனுப்பி மாம‌ங்க‌ மாயிற்று. எத்த‌னை நினைவூட்டு க‌டித‌ங்க‌ள் எழுதினாலும் ப‌ல‌னில்லை. இந்த‌ ப‌திவை க‌ண்டாவ‌து உட‌னே ப‌தில‌ளிக்கும்ப‌டி கேட்டுக் கொள்கிறேன்.
(அர‌சு அலுவ‌க‌ங்க‌ளை போல் புதிய‌ பிர‌தி கேட்டாலும் அனுப்ப‌த் த‌யார்)

எழுத்து வியாபாரிக‌ள் பாடு ஜாலி..கொடுத்து வைத்த‌வ‌ர்க‌ள்.

வெற்றிப்பெற்ற மனிதரெல்லாம் என்னுள்ளே அடக்கம்
வழி காட்டி நிற்கும் முந்தையோர்க்கு சிந்தை குளிர் வணக்கம்
என்று கவிதை எழுதியவன் நான்.

ஊரே அஞ்சி நடுங்கும் சி.கே.பாபுவுக்கே இன்னும் 2.5 வருடங்களுக்கு உங்கள் உயிருக்கு ஆபத்திருக்கிறது என்று சுய விலாசத்துடன் கடிதம் எழுதியவன் நான்.

ஆனானப்பட்ட சந்திரபாபு முதல்வராயிருக்கும்போதே அவர் மீது நுகர்வோர் மன்றத்துக்கு புகார் கொடுத்தவன் நான்.

கடக லக்னத்தில் பிறந்ததாலோ என்னமோ இந்த சந்திரன் நீசம் பெறும் போது மட்டும் சற்றே தடுமாற்றம்.(உள்ளூறத்தான்)

அதே நேரம்" கைது பண்றோம்" என்று காவல் துறை வந்தால் "சோற்று பிரச்சினை தீர்ந்தது" என்பேன்,

"தூக்குல போடப்போறோம்" என்றால் "வாழ்க்கை பிரச்சினை தீர்ந்தது" தீர்ந்தது என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவேன் என்பதும் நிஜம்.

என் எழுத்துக்கள் இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றும் என்ற‌ ந‌ம்பிக்கையில் தான் வாழ்ந்து வ‌ருகிறேன். அந்த‌ ந‌ம்பிக்கை ந‌சிந்த‌ ம‌றுக‌ண‌ம் நான் வாழ்வ‌தே வீண் என்று முடிவு செய்து என் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதுவ‌து திண்ண‌ம்.


என்ன‌மோ..எழுத்து வியாபாரிக‌ள் பாடு ஜாலி..கொடுத்து வைத்த‌வ‌ர்க‌ள்.

Monday, January 7, 2008

என் க‌ன‌வு சினிமாவின் க‌தை :

ஒரு 99 ப‌ட‌ங்க‌ள் (ர‌ஜினி,க‌ம‌ல்,பாம்பு.ஐய‌ப்ப‌சாமி எல்லாம் க‌ல‌ந்து ) எடுத்த‌ பிற‌கு 100 ஆவ‌து ப‌ட‌மாக‌ எடுக்க‌ திட்ட‌மிட்ட‌ க‌தை இது. (யாரிட்ட‌யும் சொல்லிராதிங்க‌ சுட்டுற‌ போறாங்க‌)

ஒரு கிராம‌ம். கிராம‌ம‌த்த‌னை பெரிய‌ கோவில். வ‌ருச‌த்துல‌ 364 நாள் அந்த‌ கிராம‌ ம‌க்க‌ள்தான் போய் வ‌ருவாங்க‌ . ஒரு நாள் ம‌ட்டும் ஜ‌னாதிப‌தி,பிர‌தம‌ர் உட்ப‌ட‌ எல்லோரும் வ‌ருவாங்க‌(சும்மா அப்ப‌டி க‌தை தானே).

அந்த‌ கோவில் வாச‌ல்ல‌ ஒரு பிச்சைக்கார‌ன்,தேங்காய் விற்ப‌வ‌ன் ஒருத்த‌ன், ஒரு ரிட்டைய‌ர்ட் க‌வ‌ர்ன்மென்ட் உத்யோக‌ஸ்த‌ர் ஒருத்த‌ர். இவ‌ங்க‌ளை சுத்தி தான் க‌தை.
(சொல்ல‌வே இல்லையே ப‌ட‌ம் மொத்த‌ம் க‌ருப்பு வெள்ளை/திருவிழா ம‌ட்டும் க‌ல‌ர்)

ஒரு நாள் பிச்சைக்கார‌ன் செத்துர்ரான்.அவ‌ன் பிண‌ம் அநாதையா கிட‌க்கு. இதை பார்த்துட்டு தேங்காய் வியாபாரி த‌ன் நிலை இப்ப‌டி ஆக‌க்கூடாதுன்னு முடிவு க‌ட்றான்.
தினசரி கோவிலுக்கு வந்து போற ரிட்டைய‌ர்ட் க‌வ‌ர்ன்மென்ட் உத்யோக‌ஸ்தரை அவர் வீட்டுல போய் பார்த்து பேசறான். தனக்கு ஏதாவது ஆகிப்போச்சுன்னா தன் இறுதி சடங்கை அவர் நடத்தனும்னு கேட்டு கிட்டு பணம் தர்ரான்.

பத்து நாள் கழிச்சு தே.வியாபாரிக்கு ஒரு ஆக்ஸிடன்ட் நடக்குது. ஆஸ்பத்திரில அட்மிட். சுத்தி சுத்தி பார்க்கிறான். ரிட்டைய‌ர்ட் க‌வ‌ர்ன்மென்ட் உத்யோக‌ஸ்தரை காணோம். டிஸ்சார்ஜ் ஆனபிறகு நேரா அவர் கிட்ட போறான். வீட்டு முன்னாடி பந்தல்,
அவ‌ர் ம‌க‌ளுக்கு க‌ல்யாண‌ம் ந‌ட‌க்குது. இவ‌ன் போய் அந்தாளை ச‌ண்டை பிடிச்சு கொடுத்த‌ காசை திருப்பி கேக்கிறான். அவர் மகள் கையில இருக்கிற‌ ஒரு ஜோடி த‌ங்க‌ வ‌ளைய‌லை காட்ட‌றார். இவ‌ன் அதை பிடுங்கிகிட்டு வ‌ந்துர்ரான். வ‌ரும்போது கிராஃபிக்ஸ்ல‌ விளையாட‌றோம். அந்த‌ வ‌ளைய‌ல் பெரிசாகி கிட்டே போகுது. இவ‌ன் திண‌ர்ரான். ஒரு க‌ட்ட‌த்துல‌ அது கீழ‌ இவ‌ன் ந‌சுங்கி போறாப்ப‌ல‌ காட்ட‌னும். உட‌னே ரிட்ட‌ர்ன் ஆஃப் தி ட்ராக‌ன். வ‌ளைய‌லை திருப்பி கொடுத்துர்ரான்.

இனி 365 ஆவ‌து நாள் திருவிழா ந‌ட‌க்குது. ஸ்வாமிக்கு வெண்சாம‌ர‌ம் போட‌ற‌வ‌ன் காய்லா ப‌டுத்துர்ரான். அந்த‌ சேன்ஸு தே.வியாபாரிக்கு கிடைக்குது ,க‌டைய‌ ரிட்டைய‌ர்ட் க‌வ‌ர்ன்மென்ட் உத்யோக‌ஸ்த‌ர் பார்த்துக்க‌றார். தேர் மேல‌ ஸ்வாமி,ப‌க்க‌த்துல‌ தே.வியாபாரி சாம‌ர‌ம். உல‌க‌ டி.வி.,சேன‌ல் எல்லாம் அங்க‌யே கிட‌க்கு.(ஜ‌னாதிப‌தி,பிர‌த‌ம‌ர் எல்லாம் வ‌ராங்க‌ இல்ல‌).

திருவிழா முடியுது. அய்ய‌ர் இற‌ங்கிறார். தே.வியாபாரி இற‌ங்க‌லை. இவ‌ர் உசுப்புறார்.அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல் ச‌ரிகிற‌து. உட‌னே டைட்டில்ஸ் ஆர‌ம்ப‌ம் எப்ப‌டி யிருக்கு?

Note:

என்னக் கவர்ந்த படம் ஆனால் நிச்சயம் ப்ளாஃப் ஆகியிருக்கும் படத்தின் பெயர் கோகுலத்தில் சீதை என்று நினக்கிறேன். சம்பளம் வாங்க வேலூர் செல்லும்போது பஸ்ஸில் பார்த்தேன். தேவதை தனமான பெண் ஒருத்தி, கர்ஸ்ட் ஃபேமிலியை திருத்துவது அரத பழசான தீம். அதிலும் அவள் எதையோ பெற இதையெல்லம் செய்வதுபோல் காட்டுவதும் பழைய டெக்னிக் தான். இதே படத்தை ஜெயராமை விட சுமார் மர்க்கெட் உள்ள நடிகர் மற்றும் சிவாஜி,கு.ப. ராஜ் கிரணை போட்டு எடுத்திருந்தால் கூட பேர் சொல்லியிருக்கும் என்பது என் கருத்து. டைரக்டரின் சாலாக்குகள் யாவும் இந்த குறைபாட்டால் போனியாகவில்லை போலும். உங்கள் கருத்து?

இவை யாவும் 1987 முதல் 1991 வரை தெலுங்கு திரையிசை பாடல்களின் ட்யூனுக்கு என்னால் எழுதப்பட்ட (?) பாடல்கள்

இவை யாவும் 1987 முதல் 1991 வரை தெலுங்கு திரையிசை பாடல்களின் ட்யூனுக்கு என்னால் எழுதப்பட்ட (?) பாடல்கள்

அமுதமே புது வாசம் வீசும் குமுதமே
வானிலே பிறந்து வந்த நாதமே
மதனன் வரைந்த லிகிதமே
பூவில் பாரிஜாதமே (அமுதமே

கன்னம் கண்டு வந்த வண்டு அமரும் கண்ணே தாகம் கொண்டு
காதல் தாகம் தந்த மோகம் சொன்னேன் பாட்டு ராகம் போட்டு
காக‌ம் போன்ற‌ என்னிலே துள்ளி வ‌ந்த‌ ராக‌மே
மானே ம‌தியே ம‌தியின் ஒளியே (அமுத‌மே

(இது சிரஞ்சீவி,ஸ்ரீ தேவி நடித்த ஜக தேக வீருடு அதிலோக சுந்தரி படத்தில் "ப்ரியத்தமா " என்று துவங்கும் படலுக்கான ட்யூனுக்கு எழுதப்பட்ட பாடல்)


ராக‌ங்க‌ள் ர‌த‌மாகும் சிவிகை ஏந்திடும்
சோகங்க‌ள் ம‌லையேறும் மாலை வ‌ந்திடும்
***

பாச‌மில்லே ப‌ரிவுமில்லே என்ன‌ பெண்டாட்டி
தாலி க‌ட்டி போயிருப்பேன் உன்னோட‌ நான் திண்டாடி
சாவி கொடுத்த‌ பொம்மை போலே வ‌ந்திருக்கேண்டி முன்னாடி

***
முத்த‌மிழில் முத்தெடுத்து மாலையாக்கினேன்
மூடிவைத்த‌ சிப்பிக‌ளை திற‌ந்து வைக்கிறேன்
தேடி வ‌ந்த‌ வார்த்தைக‌ளை க‌விதையாக்கினேன்
அவ‌ள் பார்வைப‌ட்டு நானும் கூட‌ க‌விஞ‌னாகினேன்

ஆண்,பெண் என்ற ஒரே எண்ணம் உந்தி தள்ள ப்டுத்து கொள்கிறார்கள்.

ஆனந்த விகடனில் புரட்சி இலக்கியம். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஆணும் ,பெண்ணும் படுத்துக் கொள்கிறார்கள். ஜஸ்ட் ..எல்லாவற்றையும் மறந்து ஆண்,பெண் என்ற ஒரே எண்ணம் உந்தி தள்ள ப்டுத்து கொள்கிறார்கள். இது தான் கதை. தமிழ் கூறு நல்லுலகு இன்னும் இது போன்ற புரட்சி இலக்கியங்களுக்கு தயாராகவேண்டும். என்னடா இது தமிழ் இலக்கியத்துக்கு பிடித்த சனி. ஏதோ தொலக்காட்சி கலாச்சாரத்துடன் போட்டியிட படங்களாய் (அதுவும் ஃபேஷன் டி.வி.பிச்சை வாங்கணும் போல)வெளியிட்டு தள்ளுகிறார்கள் என்று மனதை ஆற்றிகொண்டால் இப்போது வெளியிடும் கதைகளிலும் புரட்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

மனிதனில் மனிதத்தை வளர்க்கத்தான் இலக்கியம் என்பதை இந்த புரட்டர்களுக்கு வேறு எந்த மொழியில் தான் சொல்வதோ?

மனிதனை மிருகமாக்க சரோஜா தேவி நாவல் போதும். அதற்கு பொன்விழா கண்ட விகடன் தேவையா?

Sunday, January 6, 2008

இந்து பூஜாரி சிறுமியை கற்பழித்தானாம். கத்தி,துப்பாக்கி,வெடி குண்டு போன்றதே செக்ஸ் வெறி.

சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு பதிவை பார்த்தேன். இந்து பூஜாரி சிறுமியை கற்பழித்தானாம். கத்தி,துப்பாக்கி,வெடி குண்டு போன்றதே செக்ஸ் வெறி. கத்தி,துப்பாக்கி,வெடி குண்டுகளுக்கு இந்து முஸ்லீம் வேறுபாடு கிடையாது. அடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் வெறி எதிர்க்க வழியில்லாத சிறுமிகளிடம் வெடிப்பது இயற்கையான ஒன்றே. இதற்கும் அந்த பூஜாரியின் மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
இந்து,முஸ்லீம்,கிறிஸ்தவ விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இது வெறும் அதிர்ச்சி மதிப்புக்காக எழுதப்படும் பதிவல்ல. உலக மயமாக்கம்,தனியார் மயமாக்கம், உள்நாட்டு,வெளிநாட்டு,பன்னாட்டு,அரசு நிறுவனங்களின் சதி வலையில் சிக்கி எல்லா மதத்தை சேர்ந்த ஆண்களும் திவாலாகி வருகின்றனர். கன்ஸ்யூமரிசத்துக்கு அடிமையாகிப்போன பெண்கள் பார்ட் டைம் விபச்சாரத்துக்கு துணிந்து விட்டனர். இந்த நிலையில் விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது ஒன்றே தீர்வு. மது விற்று ஆட்சி நடத்தும் போது ,விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தவறே கிடையாது.

**********************

சிறகின்றி பூமிக்கு வந்தவளோ?

இதழ்கள் பரிமாறும்
தேகம் பசியாறும்
பாவை இத‌ழோர‌ம் க‌விதை அர‌ங்கேறும்
மூங்கில் இலை மேல் பனி நீர் உறங்கிடும் வேளை
அங்கமிதா மின்னிடும் தங்கமிதா
பாவையிவள் வான் தேவதையா
துணையின்றி ,சிறகின்றி பூமிக்கு வந்தவளோ?
நூலாய் தோன்றிடும் கொடியிடை,பிடியிடையே
மின்ன‌ல் வெட்டுத‌ற்போலொரு தோற்ற‌ம் த‌ந்திடுதே

நெஞ்ச‌ள்ளும் வான‌வில்லே பெண்ணுருவில் வ‌ந்த‌ தா?

வ‌ந்திங்கு எந்த‌ன் நெஞ்சை கொள்ளைதான் கொண்ட‌தா?கொடி நீதான் ம‌ல‌ர் நீ தான் நான் வ‌ண்டுதான்

ஆறாது என் மனசு ப்தினாறு உன் வயசு வா வா

போகாது வசந்தம் மாறாது மந்த காசம்
மனதில் சிறகடிக்கும் பாடும் குயிலால் கவிதை புனலே

ஆறாது என் மனசு ப்தினாறு உன் வயசு வா வா
உதட்டு மேல உள்ள மச்சம் ஆளை மயக்குது உரிமம் இல்லாம உன் மேனி போதை வழங்குது ஆஹா போதை வழங்குது


காற்றோடு கதை பேசும் உன் கூந்தலை கார்கால மேகம் என்றெண்ணினேன்
மனசோடு ராகங்கள் நான் பாடினேன் மானே உன் மீது மையல் கொண்டேன்
உனையள்ளி சேர்க்கோனம்
இணை சேர்ந்து பார்க்கோனம்
பூவோடு நாராக ஆகோனம்

கண்ணாலே நோய் வந்ததே பக்கம் பார்த்து பாய் போடு

காலம் எனும் நதியில் ஓடும் வாழ்க்கை எனும் ஓடந்தன்னில்

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்

ஆகாய எல்லை தனை தாண்டும் எழுச்சி என் கீதம்
கீதம் கொண்ட ஒவ்வோர் எழுத்தும் அழகான நட்சத்திரம்

இதயமே நோகாதே இன்னல் கண்டு வேகாதே
உறவோடு பிரிவும் ஒரு காட்சி
ஒன்றோடு ஒன்றாய் தோன்றுமே

காலம் எனும் நதியில் ஓடும் வாழ்க்கை எனும் ஓடந்தன்னில்
யாரிருந்தும் என்ன லாபம் கல்லறைக்கு கொண்டு சேர்க்கும்

வெண்ணிலா வாழ்வது கன்னியுன் கண்ணிலா?

மீண்டும் மீண்டும் இந்த நாள் வராது எங்கு சென்றாய் கண்ணே தேன் தராது
நந்தவனம் மங்கை சொந்தமனம், தேறிவரும் இந்த மன்னன் மனம்
கண்ணே இந்த நேரமே கண்ணில் ஒரு தாகமே
பூவே உன்னைத் தொட்டால்
கன்னமெல்லாம் வர்ணஜாலம் கோலம் போடும்
கன்னியுன்னால் உள்ளம் பாடாதோ ஜீவனுள்ள புது கீதம்
கண்களில் காண்கிறேன் காந்தமே
கண்களில் காண்கிறேன் காந்தமே
(மீண்டும் மீண்டும்
பூக்கள் கோடி இருந்தால் என்ன‌
பாரிஜாதம் நீ எங்கே?
பாக்கள் கோடி யிருந்தால் என்ன
கம்பன் கவி நீயெங்கே?

வெண்ணிலா வாழ்வது கன்னியுன் கண்ணிலா?

(மீண்டும் மீண்டும்


க‌ண்க‌ளில் சுக‌ம் சுக‌ம் காத‌லில் வ‌ரும் வ‌ரும்

நீ எந்த‌ன் ஆகாய‌ம் நான் பாடும் பூபாள‌ம்
வாராயோ பொன் வ‌ண்ண‌மே !
காலால் கோல‌ம் போட்டு வா க‌ண்க‌ள் காணும் வேளையிலே

போட்டக்கோலம் மாறாது வானில் தாரை உள்ளவரை

க‌விதை பாடும்க‌ண்க‌ளில் க‌ட‌லின் துள்ள‌ல் க‌ண்டேன் வா

ஒன்னு ரெண்டு எண்ணிக்கோ
நானும் ஜெயிப்பேன் பார்த்துக்கோ
ஜெட்டை மிஞ்சும் வேக‌மிது பார‌டி
நீ வாழ‌ நானாச்சு

நீய‌றிந்த‌ ர‌க‌சிய‌ம் தான் என‌க்கும் ஒரு அதிச‌ய‌ம் தான் நீ காட்டு ஆகா உன் ம‌ன‌ச‌ திற‌ந்து காட்டு ப‌ரிச‌ம் போடுறேன்

வீடு,வீதி,காட‌டா.. இதுவே ம‌னித‌ன் வாழ்வ‌டா..
வாழ்வே சிறுக‌தைதான் இதில் துன்ப‌ம் தொட‌ர்க‌தை தான்
வாடா முற்றும் போட‌லாம் சுக‌ம் எங்கே நாமும் தேட‌லாம்

Saturday, January 5, 2008

" யோவ் நீங்கள்ளாம் யூனிஃபார்ம கழட்டிட்டு இவன் அக்கா கிட்டே போங்கயா"

" யோவ் நீங்கள்ளாம் யூனிஃபார்ம கழட்டிட்டு இவன் அக்கா கிட்டே போங்கயா" இந்த வார்த்தைகளை சொன்னது சாட்ச்சாத் ஒரு எஸ்.ஐ. இத்த‌னைக்கும் எதிரிலிருந்த‌ பைய‌ன் செய்த‌ ம‌காபாத‌க‌ செய‌ல் என்ன‌ வென்றால் ஏற்கென‌வே 4 கை மாறிவிட்ட‌ ஒரு ஆன்டியை தொட்டு விட்ட‌து தான். அந்த‌ ஆன்டியின் அப்பாவுக்கு அவ‌ள் மாண‌வியாக‌ இருந்த‌ கால‌த்தில் இருந்து அவ‌ள‌து பாய் ஃப்ர‌ண்டுக‌ள் மீது க‌ம்ப்ளெயிண்ட் கொடுப்ப‌து ஒரு ஹாபி. இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் எஸ்.ஐ உதிர்த்த‌ முத்துக்க‌ள் வ‌ருமாறு:

ஏண்டா டேய் பார்க்க‌ வ‌டிவேல் மாதிரியிருக்கே உன‌க்கு எப்ப‌டிடா அவ‌ள் ம‌ட‌ங்கிட்டா? என்னை பாரு க‌ல‌ரில்லையா? க‌ளையில்ல‌யா? ச‌ம்பாத்திய‌மில்லையா? என‌க்கு எவ‌ளும் விழ‌மாட்டேங்க‌றாளே?

பி.கு: ச‌த்திய‌ ஆவேச‌த்துட‌ன் சாக்க‌டை வார்த்தைக‌ளையெல்லாம் கொட்டிய‌ எஸ்.ஐ. 4 நாட்கள் ஸ்டேஷனில் வைத்துக் கொண்டு பின்னியெடுத்து விட்டும், ரூ.4000 பெற்று கொண்டுதான் பைய‌னை வீட்டுக்கு அனுப்பினார்.

எத்தனை சட்டங்கள் வந்தாலும்,எத்தனை மனித உரிமை கமிஷன் கள் வந்தாலும் இவர்க‌ளையெல்லாம் திருத்த‌வே முடியாதா?

Friday, January 4, 2008

ஆட்சியாளர்கள் அவசரமாக "மாத்தி" யோசிக்காவிட்டால் கதை கந்தல் தான்.

அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற ஆசாமிக்குத் தான் புத்தி மட்டாக இருக்க வேண்டும். இன்றுள்ள உலகமயமாக்கல்,தனியார்மயம்,கார்ப்போரேட் நிறுவங்களின் படையெடுப்பில், ஆட்சியாளர்கள் அவசரமாக "மாத்தி" யோசிக்காவிட்டால் கதை கந்தல் தான். பாக்கிஸ்தானில் பெனாசிரை போட்டுத் தள்ளிவிட்டார்கள். இது எந்த நாட்டிலும் எந்நேரமும் நடக்க வாய்ப்பிருக்கிறது. தீவிரவாதம் என்பது ஆகாயத்தில் இருந்து குதித்து வரவில்லை. வறுமையும் சுரண்டலும் பெற்று போட்ட குழந்தைதான் தீவிரவாதம். எவருக்குமே இன்றைய உலக போக்கில் உடன் பாடில்லை. தீவிரவாதி கூட இந்த ஆசாமி ஒழிந்தால் உலகம் மேலும் பிரகாசமாகும் என்றுதான் போட்டு தள்ளுகிறான்.

நாம் இந்த உலகத்தில் சில காலம் (அண்டர்லைன்) வாழந்து விட்டு போகத்தான் வந்தோம். அதை மறந்து விட்டதால் தான் இத்தனை தொல்லைகள். இன்றைய சாலை விபத்துகள்,எயிட்ஸ்,கொலைகள்,கலவரங்கள் வாழ்வின் நிலையாமையை வலியுறுத்துகின்றன. சுகாதாரமான குடிநீர்,வடிகால் வசதி,கழிவறை இல்லாத காரணத்தாலேயே லட்சக்கணக்கான மக்கள் செத்து போகிறார்கள். செக்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாததால் எத்தனை எத்தனை சாவுகள்,கொலைகள்,தற்கொலகள் .ஷிட் !

நாம் நாகரீகமடைந்துவிட்டோம் என்று சொல்ல வெட்கப் பட வேண்டும். உலகம் உடனடியாக திருந்தாவிட்டால் அதிரடியாக திருத்தப்படும். இங்கே முஷாரஃபா? ஷெரீஃபா ? என்பது கேள்வியில்லை. இந்துவா? முஸ்லீமா ? என்பது கேள்வியில்லை.உலகம் நிலைத்திருக்குமா? இல்லையா? என்பதே கேள்வி. க்ளோபல் வார்மிங் காரணமாய் ஜல பிரளயம் வருமோ? கோலா கம்பெனிகள் குடிநீரை ராட்சத இயந்திரங்களால் உறிஞ்சி எடுத்ததால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப ஏற்படும் வாயு சுழற்சியால் பூகம்பம் ஏற்படுமோ? அமெரிக்காவின் அரைவேக்கட்டு தனமான செய்ல்பாடுகளால் மூன்றாவது உல‌க‌ யுத்த‌ம் ஏற்ப‌ட்டு விடுமோ சொல்ல முடியாது.


ஆனால் நாம் மாற்றி யோசித்தால் இதையெல்லாம் த‌விர்க்க‌ முடியாவிட்டாலும் த‌ள்ளிப் போட‌லாம் என்ப‌தில் என‌க்கு எந்த‌ ச‌ந்தேக‌மும் கிடையாது.

தினகரன், தினத்தந்தி போட்டியில் தினத்தந்தி பின் த‌ங்கிவிட்டதா

தினகரன், தினத்தந்தி போட்டியில் தினத்தந்தி பின் த‌ங்கிவிட்டதா என்றால் இல்லை என்று அடித்து சொல்ல முடியும். அதிக சர்க்குலேஷனை கணக்கு காட்ட தினகரன் நிர்வாகம் செய்யும் தகிடுதத்தங்களால் ஏஜெண்டுகளின் டிப்பாஸிட் தொகை காலியாகி எத்தனை ஏஜெண்டுகள் ஆளைவிட்டால் போதும் என்று விலகிவிட்டனரோ அந்தந்த பகுதி பேப்பர் பாய்களை விசாரித்தால் தெரியும். அடிக்கடி தினகரன் ஏஜெண்டுகள் மாறுவதன் ரகசியம் இதுதான். தினகரன் மொத்த விற்பனையில் வாசகர்கள் வாங்கிப் படிப்பதை காட்டிலும் அன் சோல்ட் ஆக நின்று பழைய பேப்பர் கடைக்கு போகும் பிரதிகளின் எண்ணிக்கைதான் அதிகம். பில் ஆயிரத்துக்கு,விற்பனை 500 மீதி 500 பழைய பேப்பர் கடைக்கு இது தான் உண்மை நிலை.

முன் புத்தி,பின் புத்தி ஏதுமில்லாத போலீஸ் இருந்தென்ன லாபம்.

கண்ணிவெடி வெடி‌த்ததில் ஆந்திரமாநிலம், சித்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.சி.கேபாபு பயணம் செய்த கார் தூக்கி எறியப்பட்டு நசுங்கியது. இந்த கண்ணிவெடி சம்பவத்தில் ஒரு கன் மேன் செத்தார். மூன்று கன் மேன் கள், இரண்டு டிரைவர்கள்,காருடன் ஒட்டி டூ வீலரில் பயணம் செய்த இளைஞரணி தலைவர் தீவிர காயங்களுக்குள்ளாயினர்.

இத்தனைக்கும் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதிதான் மர்ம நபர்கள் சி.கே பாபுவை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றனர். இந்த சம்பவத்தில் ஒரு கன் மேன்,ஒரு நகராட்சி ஊழியர், கொலை செய்யவந்த கும்பலில் ஒருவர் செத்தனர்.மேலும் தொடர்ந்து சி.கே.பாபுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த படியே இருந்தது.

ஆனால் டிசம்பர் 31 ஆம் தேதி போக்கு வரத்து நிறைந்த சித்தூர்‍ திருப்பதி சாலையில் கட்டமஞ்சி, எஸ்.கே.திருமணமண்டபத்தின் எதிரில் உள்ள வடி நீர் கால்வாய் மேம்பாலத்தின் கீழ் ஜாக்கிகளை பொருத்தி அவ‌ற்றின் மீது வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு , சி.கே வின் கார் கிளைச்சாலையிலிருந்து, சித்தூர் திருப்பதி சாலைக்கு திரும்புகையில் ரிமோட் மூலம் வெடிக்கச்செய்துள்ளனர்.இதை பொருத்தியவர்கள் , வெடிக்கச்செய்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கு அந்த வாய்ப்பை அளித்தது மட்டும் சித்தூர் போலீசார்தான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

சித்தூர் நகராட்சியின் 26 ஆவது வார்டு கவுன்ஸிலருக்கும் , பிப்ரவரி 9 ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்திய வாட‌கை கொலையாளிகளுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டும் டிசம்பர் 31 வரை மேற்படி கவுன்ஸில‌ர் கட்டாரி மோகனையும், இதர குற்றவாளிகளையும் சுதந்திரமாக உலவ விட்ட குற்றம் போலீசாருடையதுதானே.

.சரி ஒழியட்டும் குற்றவாளிகளைத் தான் பிடிக்கவில்லை பாதுகாப்பு ஏற்பாடுகளையாவது ஒழுங்காக செய்திருந்தால் இந்த சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. வடி நீர் கால்வாய் மேம்பாலம் என்பது வெடி குண்டு வைக்க தோதான ஒன்று என்பதை பால் குடி குழந்தையும் அறியும் (டி.வி. சீரியல்கள் உபயத்தில்) மேலும் அது கிளைச்சாலையை முக்கியச்சாலையுடன் இணைக்கும் திருப்பத்தில் உள்ளது. அந்த இடத்தில் நிச்சயமாக வாகனம் மெதுவாகத்தான் செல்ல வேண்டியிருக்கும். அந்த இடத்தில் கு.ப. ஒரு ஹோம் கார்டை போட்டிருந்தால் கூட ரிமோட் மூலம் குண்டை வெடிக்கச்செய்த ஆசாமியை துரத்தி பிடித்திருக்க முடியும்.

சரி அதுவும் ஒழியட்டும். வெடித்தாயிற்று வாகனம் கவிழ்ந்தாயிற்று. சி.கே.பாபு வணங்கும் ஷிரடி சாய்பாபா மகிமையால் அவர் உயிர் பிழைத்தார். அவருக்கு முதலுதவி கொடுத்து பேசும் நிலைக்கு வந்ததுமே மீடியாவிடம் பேச வைத்திருக்கலாம். "ஆண்டவன் அருளாலும் ,மக்கள் ஆசியாலும் உயிர் பிழைத்தேன் எனக்கு எந்த ஆபத்துமில்லை, என் ஆதரவாளர்கள் புத்தாண்டு தினத்தன்று கோவில்களில் விசேஷ பூஜைகள் செய்யுங்கள், மக்கள் புத்தாண்டை வழக்கம் போல் கொண்டாடுங்கள்" என்று அறிவிக்கச் செய்திருக்கலாம்.

அதை செய்யவில்லை. இதனால் ஜனவரி 1 ஆம் தேதி முழுக்க பதட்டமும்,கலவரச்சூழலும் நிலவியது. முன் புத்தி,பின் புத்தி என்பார்களே அவற்றில் முன் புத்தி,பின் புத்தி ஏதுமில்லாத போலீஸ் இருந்தென்ன லாபம்.

சரி இந்த கொலைமுயற்சி விவகாரத்தில் கட்டாரி மோகனின் மைத்துனர் கிஷோரை போலீசார் பிடித்தனர்.(அந்த நேரம் கிஷோர் தம் வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார் என்று தகவல்) ரகசிய இடத்தில் விசாரித்தனர். எத்தனை நாள் திங்கள்,செவ்வாய்,புதன், வியாழக்கிழமை இரவு 7.55 வரை விசாரித்தனர். அட ..அந்த கிஷோரே வெடிகுண்டு வைத்து,அவரே ரிமோட் மூலம் வெடிக்கச் செய்து கூட இருக்கட்டும். பிடித்தீர்களா? கைது செய்யுங்கள், நேரே நீதிமன்றம் கொண்டு வந்து ஆஜர் படுத்துங்கள். அதை விட்டு விட்டு பல்வேறு வதந்திகளுக்கு வழி செய்தீர்கள்.

பீலேர் சப்ஜெயில் வளாகத்தில் வைத்து போலீசார் கிஷோரிடம் ரகசியமாக விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் பரவியதை அடுத்து அங்கு மீடியாவின் படையெடுப்பு,மக்கள் கூட்டம்.பரபரப்பு. இதெல்லாம் தேவையா?

மேலும் சித்தூர் மாவட்டம்,தவனம்பல்லி மண்டலம்,நல்லப்பரெட்டிபல்லியில் டாட்டா சுமோ கார் ஒன்று கேட்பாரின்றி கிடப்பதை மக்கள் தெரிவிக்க என்ன ஏது என்று கூட விசாரிக்காமல் சீஸ் செய்தீர்கள். கடைசியில் பார்த்தால் அது ட்யூ பெண்டிங் காரணமாய் எங்கே பறிமுதல் செய்யப்படுமோ என்று ஒளித்து வைக்கப் பட்ட வாகனம்.

இந்நிலையில் புதன் கிழமை ஸ்ரீதேவி சித்தூர் மூன்றாவது ஏ.டி.எம் (அடிஷ்னல் டிவிஷ்னல் மேஜிஸ்ட்ரேட்) நீதிபதியிடம் தம் கணவரை போலீசார் அழைத்துச் சென்று 2 நாட்கள் ஆகியும் விடுவிக்கவுமில்லை,நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுமில்லை என்று மனு கொடுத்தார். இது தொடர்பாக ஸ்ரீ தேவியும் மூன்றாவது ஏ.டி.எம். நீதிமன்றம் அருகில் காலை 10 முதல் மாலை 5 வரை கண்ணீரும் கம்பலையுமாய் காத்திருந்தார்.
க‌டைசியில் இர‌வு 7.45 ம‌ணிக்கு நீதிப‌தி இல்ல‌த்தில் அவ‌ர் முன் கிஷோரை ஆஜ‌ர் ப‌டுத்த‌ அவ‌ர் 15 நாட்க‌ள் ரிமாண்டில் வைக்கும்ப‌டி உத்த‌ர‌விட்டார்.

முன் புத்தி,பின் புத்தி ஏதுமில்லாத போலீஸ் இருந்தென்ன லாபம்.


கண்ணிவெடி வெடி‌த்ததில் ஆந்திரமாநிலம், சித்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.சி.கேபாபு பயணம் செய்த கார் தூக்கி எறியப்பட்டு நசுங்கியது. இந்த கண்ணிவெடி சம்பவத்தில் ஒரு கன் மேன் செத்தார். மூன்று கன் மேன் கள், இரண்டு டிரைவர்கள்,காருடன் ஒட்டி டூ வீலரில் பயணம் செய்த இளைஞரணி தலைவர் தீவிர காயங்களுக்குள்ளாயினர்.

இத்தனைக்கும் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதிதான் மர்ம நபர்கள் சி.கே பாபுவை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றனர். இந்த சம்பவத்தில் ஒரு கன் மேன்,ஒரு நகராட்சி ஊழியர், கொலை செய்யவந்த கும்பலில் ஒருவர் செத்தனர்.மேலும் தொடர்ந்து சி.கே.பாபுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த படியே இருந்தது.

ஆனால் டிசம்பர் 31 ஆம் தேதி போக்கு வரத்து நிறைந்த சித்தூர்‍ திருப்பதி சாலையில் கட்டமஞ்சி, எஸ்.கே.திருமணமண்டபத்தின் எதிரில் உள்ள வடி நீர் கால்வாய் மேம்பாலத்தின் கீழ் ஜாக்கிகளை பொருத்தி அவ‌ற்றின் மீது வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு , சி.கே வின் கார் கிளைச்சாலையிலிருந்து, சித்தூர் திருப்பதி சாலைக்கு திரும்புகையில் ரிமோட் மூலம் வெடிக்கச்செய்துள்ளனர்.இதை பொருத்தியவர்கள் , வெடிக்கச்செய்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கு அந்த வாய்ப்பை அளித்தது மட்டும் சித்தூர் போலீசார்தான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

சித்தூர் நகராட்சியின் 26 ஆவது வார்டு கவுன்ஸிலருக்கும் , பிப்ரவரி 9 ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்திய வாட‌கை கொலையாளிகளுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டும் டிசம்பர் 31 வரை மேற்படி கவுன்ஸில‌ர் கட்டாரி மோகனையும், இதர குற்றவாளிகளையும் சுதந்திரமாக உலவ விட்ட குற்றம் போலீசாருடையதுதானே.

.சரி ஒழியட்டும் குற்றவாளிகளைத் தான் பிடிக்கவில்லை பாதுகாப்பு ஏற்பாடுகளையாவது ஒழுங்காக செய்திருந்தால் இந்த சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. வடி நீர் கால்வாய் மேம்பாலம் என்பது வெடி குண்டு வைக்க தோதான ஒன்று என்பதை பால் குடி குழந்தையும் அறியும் (டி.வி. சீரியல்கள் உபயத்தில்) மேலும் அது கிளைச்சாலையை முக்கியச்சாலையுடன் இணைக்கும் திருப்பத்தில் உள்ளது. அந்த இடத்தில் நிச்சயமாக வாகனம் மெதுவாகத்தான் செல்ல வேண்டியிருக்கும். அந்த இடத்தில் கு.ப. ஒரு ஹோம் கார்டை போட்டிருந்தால் கூட ரிமோட் மூலம் குண்டை வெடிக்கச்செய்த ஆசாமியை துரத்தி பிடித்திருக்க முடியும்.

சரி அதுவும் ஒழியட்டும். வெடித்தாயிற்று வாகனம் கவிழ்ந்தாயிற்று. சி.கே.பாபு வணங்கும் ஷிரடி சாய்பாபா மகிமையால் அவர் உயிர் பிழைத்தார். அவருக்கு முதலுதவி கொடுத்து பேசும் நிலைக்கு வந்ததுமே மீடியாவிடம் பேச வைத்திருக்கலாம். "ஆண்டவன் அருளாலும் ,மக்கள் ஆசியாலும் உயிர் பிழைத்தேன் எனக்கு எந்த ஆபத்துமில்லை, என் ஆதரவாளர்கள் புத்தாண்டு தினத்தன்று கோவில்களில் விசேஷ பூஜைகள் செய்யுங்கள், மக்கள் புத்தாண்டை வழக்கம் போல் கொண்டாடுங்கள்" என்று அறிவிக்கச் செய்திருக்கலாம்.

அதை செய்யவில்லை. இதனால் ஜனவரி 1 ஆம் தேதி முழுக்க பதட்டமும்,கலவரச்சூழலும் நிலவியது. முன் புத்தி,பின் புத்தி என்பார்களே அவற்றில் முன் புத்தி,பின் புத்தி ஏதுமில்லாத போலீஸ் இருந்தென்ன லாபம்.

சரி இந்த கொலைமுயற்சி விவகாரத்தில் கட்டாரி மோகனின் மைத்துனர் கிஷோரை போலீசார் பிடித்தனர்.(அந்த நேரம் கிஷோர் தம் வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார் என்று தகவல்) ரகசிய இடத்தில் விசாரித்தனர். எத்தனை நாள் திங்கள்,செவ்வாய்,புதன், வியாழக்கிழமை இரவு 7.55 வரை விசாரித்தனர். அட ..அந்த கிஷோரே வெடிகுண்டு வைத்து,அவரே ரிமோட் மூலம் வெடிக்கச் செய்து கூட இருக்கட்டும். பிடித்தீர்களா? கைது செய்யுங்கள், நேரே நீதிமன்றம் கொண்டு வந்து ஆஜர் படுத்துங்கள். அதை விட்டு விட்டு பல்வேறு வதந்திகளுக்கு வழி செய்தீர்கள்.

பீலேர் சப்ஜெயில் வளாகத்தில் வைத்து போலீசார் கிஷோரிடம் ரகசியமாக விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் பரவியதை அடுத்து அங்கு மீடியாவின் படையெடுப்பு,மக்கள் கூட்டம்.பரபரப்பு. இதெல்லாம் தேவையா?

மேலும் சித்தூர் மாவட்டம்,தவனம்பல்லி மண்டலம்,நல்லப்பரெட்டிபல்லியில் டாட்டா சுமோ கார் ஒன்று கேட்பாரின்றி கிடப்பதை மக்கள் தெரிவிக்க என்ன ஏது என்று கூட விசாரிக்காமல் சீஸ் செய்தீர்கள். கடைசியில் பார்த்தால் அது ட்யூ பெண்டிங் காரணமாய் எங்கே பறிமுதல் செய்யப்படுமோ என்று ஒளித்து வைக்கப் பட்ட வாகனம்.

இந்நிலையில் புதன் கிழமை ஸ்ரீதேவி சித்தூர் மூன்றாவது ஏ.டி.எம் (அடிஷ்னல் டிவிஷ்னல் மேஜிஸ்ட்ரேட்) நீதிபதியிடம் தம் கணவரை போலீசார் அழைத்துச் சென்று 2 நாட்கள் ஆகியும் விடுவிக்கவுமில்லை,நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுமில்லை என்று மனு கொடுத்தார். இது தொடர்பாக ஸ்ரீ தேவியும் மூன்றாவது ஏ.டி.எம். நீதிமன்றம் அருகில் காலை 10 முதல் மாலை 5 வரை கண்ணீரும் கம்பலையுமாய் காத்திருந்தார்.
க‌டைசியில் இர‌வு 7.45 ம‌ணிக்கு நீதிப‌தி இல்ல‌த்தில் அவ‌ர் முன் கிஷோரை ஆஜ‌ர் ப‌டுத்த‌ அவ‌ர் 15 நாட்க‌ள் ரிமாண்டில் வைக்கும்ப‌டி உத்த‌ர‌விட்டார்.

Thursday, January 3, 2008

தினகரன், தினத்தந்தி போட்டியில் தினத்தந்தி பின் த‌ங்கிவிட்டதா

தினகரன், தினத்தந்தி போட்டியில் தினத்தந்தி பின் த‌ங்கிவிட்டதா என்றால் இல்லை என்று அடித்து சொல்ல முடியும். அதிக சர்க்குலேஷனை கணக்கு காட்ட தினகரன் நிர்வாகம் செய்யும் தகிடுதத்தங்களால் ஏஜெண்டுகளின் டிப்பாஸிட் தொகை காலியாகி எத்தனை ஏஜெண்டுகள் ஆளைவிட்டால் போதும் என்று விலகிவிட்டனரோ அந்தந்த பகுதி பேப்பர் பாய்களை விசாரித்தால் தெரியும். அடிக்கடி தினகரன் ஏஜெண்டுகள் மாறுவதன் ரகசியம் இதுதான். தினகரன் மொத்த விற்பனையில் வாசகர்கள் வாங்கிப் படிப்பதை காட்டிலும் அன் சோல்ட் ஆக நின்று பழைய பேப்பர் கடைக்கு போகும் பிரதிகளின் எண்ணிக்கைதான் அதிகம். பில் ஆயிரத்துக்கு,விற்பனை 500 மீதி 500 பழைய பேப்பர் கடைக்கு இது தான் உண்மை நிலை.

Wednesday, January 2, 2008

எழுத விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்

எழுத விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்

முதலில் நாட்டு நிலையை அறிந்து கொள்ளுங்கள்.

1.சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான
குடி நீர் இல்லை (நகரங்களில் மட்டுமென்னா வாழுது என்று கேட்டு விடாதீர்கள்/மினரல் வாட்டர் கிடைக்கிறதல்லவா?) கழிவறை வசதியில்லை. சாலை வசதி யில்லை, மேல் சாதியினரின் கொடுமை,தீண்டாமை, சாராயம்,கோழிப்பந்தயம்,சூதாட்டம், போலீஸ்/கோர்ட்டு எல்லாம் பேச முடியாது.

2.நாட்டின் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமை தான் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு காரணம்.

3.நாட்டின் 70 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். உடலை விற்கும் வேசிக்கு கூட தன் ரேட்டை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிக்கு தன் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தினம் தினம் விவசாயிகள் தற்கொலை நடந்த படியே இருக்கிறது.


4.நாட்டில் 10 கோடி வேலையற்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாமை காரணத்தால் சுய இன்பம் முதல், எல்லை கடந்த தீவிரவாதம் வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள், நாட்டையும் இலக்காக்கி வருகிறார்கள்.

5.ஒருவர் எம்.எல்.ஏ வாக (கட்சி டிக்கட்டில், சாதாரண தொகுதியில்) ஜெயிக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் செலவழித்தாக வேண்டும். 4 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கியது ஒரு எம்.பி தொகுதி. மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ, மொத்தம் எத்தனை எம்.பி, கணக்கிட்டு அதை 3 ஆல் பெருக்கிப்பாருங்கள் (கு.ப. மும்முனை போட்டி என்ற கணக்கில்) . இத்தனை பெரிய தொகை ஒரு தேர்தலில் செலவழிக்கப்படுகிறது. இதை திருப்பி எடுக்க அந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி செய்யும் தகிடுதத்தங்களுக்கு 10 சதவீதம் லஞ்சம் தர(பெற)ப்படுகிறது. இவர் 10 பைசா லஞ்சம் வாங்கினால் ஒரு ரூபாய் பணியும் நாசமாகிறது.


6.மார்க்கெட்டில் நூற்றுக்கு /ஒரு நாளைக்கு 10 வ‌ட்டி வ‌சூலிக்க‌ப்ப‌டுகிற‌து. ஒருவ‌ர் ச‌ம்பாதிக்க‌ குறைந்த‌து 1000 பேர் அவ‌ரை அண்டி,சுர‌ண்டி பிழைக்கிறார்க‌ள்.

இது மாதிரி இன்னும் 94 விஷ‌ய‌ங்க‌ள் கூற‌லாம். எழுத‌ வ‌ருப‌வ‌ர் இதையெல்லாம் ம‌ன‌தில் இருத்தி , த‌ன் எழுத்தை ப‌டிப்ப‌வ‌ர் இந்த‌ அமைப்பை மாற்ற‌ /சீர்திருத்த‌ முன் வ‌ரும் வ‌ண்ண‌ம், வாச‌க‌ரை மோட்டிவேட் செய்யும் வ‌ண்ண‌ம் எழுத‌ வேண்டும். இல்லாவிட்டால் பேசாம‌ல் ச‌ல‌வை க‌ண‌க்கு ம‌ட்டும் எழுதி கொள்வ‌து ந‌ல‌ம்.

Tuesday, January 1, 2008

ஆன‌ந்த‌ விக‌ட‌ன் நிர்வாக‌த்த்துக்கு : இனியாவ‌து என் விலாசத்துக்கு (மெயில் உட்பட) விள‌ம்ப‌ர‌ங்க‌ளை அனுப்புவ‌தை நிறுத்து

சில வருடங்களுக்கு முன்பு ஆன‌ந்த‌ விக‌ட‌ன் நிர்வாக‌த்த்துக்கு க‌டித‌ம் எழுதினேன்.
அதன் சுருக்கம் வருமாறு:
ஐயா ! உங்க‌ள் ப‌த்திரிக்கையை ஒரு வாச‌க‌ன் வாங்கிப் ப‌டிக்க‌ வேண்டுமென்றால் அவ‌ன‌து பொருளாதார‌ நிலை மேம்ப‌ட‌ வேண்டும். அது நிக‌ழ்ந்தால‌ன்றி விற்ப‌னை உய‌ராது. என‌வே வாச‌க‌ன் 10 ரூபாய் ச‌ம்பாதிக்க‌வோ,ச‌ம்பாதித்த‌தை பெருக்க‌வோ தேவையான‌ விஷ‌ய‌ங்க‌ளை பிர‌சுரிக்க‌ பாருங்க‌ள்.

ப‌ண‌ம் குறித்த‌ ம‌னோத‌த்துவ‌,அர‌சிய‌ல்,ச‌மூக‌,பொருளாதார‌,ஆன்மீக‌ உண்மைக‌ளை ப‌ற்றிய‌ என் தொட‌ரை இணைத்துள்ளேன் ப‌ரிசீலிக்க‌வும்.

முத‌லில் ப‌ண‌ம் ப‌ற்றிய‌ தொட‌ர் ஒன்று ஆர‌ம்ப‌மான‌து.( நான் எழுதி அனுப்பிய என் தொட‌ர் அல்ல‌) பின்பு ஜூனிய‌ர் விக‌ட‌னில் நாண‌ய‌ விக‌ட‌ன் என்று ஒரு ப‌குதியை ஆர‌ம்பித்தார்க‌ள். இன்று நாண‌ய‌ம் விக‌ட‌ன் த‌னி யித‌ழாக‌வே வெளிவ‌ருகிற‌து. இத‌ற்கு ஆர‌ம்ப‌ப்புள்ளி என் க‌டித‌ம். ஆனால் இதுவ‌ரை ஒரு வ‌ரி ந‌ன்றி தெரிவிக்கும் க‌டித‌ம் கூட‌ அனுப்பாத‌ விக‌ட‌ன் நிறுவ‌ன‌ம் தொட‌ர்ந்து த‌ன‌து பிட் நோட்டீஸ்க‌ளை என் விலாச‌த்துக்கு அனுப்பி என்னை க‌டுப்பேற்றி வ‌ருகிற‌து.

இனியாவ‌து என் விலாசத்துக்கு (மெயில் உட்பட) விள‌ம்ப‌ர‌ங்க‌ளை அனுப்புவ‌தை நிறுத்தும்ப‌டி கேட்டுக் கொள்கிறேன்.
பின் குறிப்பு:அம்மன் பாடல்களில் ஓங்காரி, ஆங்காரி என்ற வார்த்தைகள் வருவதை கவனித்திருப்பீர்கள்.ஓங்காரி என்ற வார்த்தைக்கு ஓம் என்னும் ஓங்கார வடிவம் கொண்டவள் என்று பொருள் கொள்ளலாம். ஆங்காரி என்ற வார்த்தைக்கு ஆம் என்ற பீஜ வடிவம் கொண்டவள் என்று பொருள் கொள்ளலாம். மேலும் அக‌ங்கார வடிவம் கொண்ட‌வ‌ள் என்றும் பொருள் கொள்ள‌லாம்.

சாக்தேய‌த்திற்கு திரும்பும் முன்னிருந்து எனில் அக‌ம் அதிக‌ம். அதையும் பாஸிட்டிவாக‌ உப‌யோகித்துக் கொள்வ‌து என் வ‌ழ‌க்க‌ம். நான் ஒருவ‌ன் இருக்கையில் என் நாடு ந‌லிவ‌டைந்து விட‌க்கூடாது என்ற‌ எண்ண‌த்தில் எழுந்த‌தே ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா. நான் இருக்கையில் என் மக்கள் நச்சு எழுத்துக்களுக்கு பலியாகிவிடக் கூடாது என்ற அகங்காரத்தில் எழுந்ததே என் எழுத்து.

இன்றைய‌ எழுத்துக்க‌ளில் ச‌மூக நோக்கத்தை விட வணிக நோக்க‌ம் தான் அதிகம் தென்ப‌டுகிற‌து.