Sunday, February 28, 2010

சாவின் நிழல்களுடனான யுத்தத்துல

பதிவுலகத்துல அனேக உத்தமருங்க, இனமான வீரனுங்க,ஆத்திக செம்மலுங்க, பகுத்தறிவு புயலுங்க இருக்காங்க. அவிக நம்மை பத்தி அதாவது என்னை பத்தி  "இவனுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்கானு தெரியலைப்பா.."ன்னு எழுதியிருக்காங்க பேசியுமிருப்பாங்க. ஆனால் எவனுக்கு இருக்குதோ இல்லியோ எனக்கு இருக்குங்க. என்னடா பிரச்சினைன்னா  என் புத்தி காரியம் முக்கியம், சொக்கத்தங்கத்துல நகை செய்யமுடியாது எதையாச்சும் கலக்கனும்னும்.. மனசாட்சி அக் மார்க் தர்ம சாஸ்திரத்தையெல்லாம் ஞா படுத்தி இம்சை பண்ணிக்கிட்டே இருக்கும். நானும் 2000 ஜூலை 23 ல இருந்து ம.சாட்சிப்படிதான்  வலைப்பூவுல எழுதிக்கிட்டிருந்தேன்.ஆனால் 2009 மே வரைக்கும் ஏதோ கோவி கண்ணன் மாதிரி மஹாத்மாக்கள் தான் படிச்சு கருத்து தெரிவிச்சிக்கிட்டிருந்தாங்களே தவிர..ஒன்னும் பெயரல.

நான் எதையாவது எழுதறேன்னா அது தானா வெளியேற்ற அபான  வாயு மாதிரி வெளியேர்ரதில்லை. தில்லானா மோகனாம்பாள்ள சிவாஜி சார் காட்டுவாரே முக பாவனைகள், பாடி லாங்குவேஜ் அந்த ரேஞ்சுக்கு இல்லாட்டியும் உயிரை கொடுத்துதான் ஊதறேன்.  பந்தி புரதமெச்சுனு பன்னீரு மெச்சுனாங்கற மாதிரி பலான ஜோக்குதான் பத்திக்குது. மத்தது ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


சரி மனசாட்சி கூட பேசி ரொம்ப காலமாச்சே அது என்னதான் சொல்லுது பார்க்கலாம்னிட்டு.. இந்த பதிவு.

மனசாட்சி:
என்னப்பா இது நீ சொல்லவந்ததை நேரிடையா சொல்லிட்டு போறத விட்டுட்டு இப்படி  சொதப்பறே. 800 பதிவு முடிஞ்சும் இந்த நிலைமையா?

நான்:
அடபோ மன சாட்சி !  உனக்கென்ன உபதேசமஞ்சரி கணக்கா அள்ளிவிடறே. நீ சொன்ன ஸ்டைல்ல 9 வருசம் மெயிண்டெயின் பண்ணேன்..மொத்த விசிட்டர்ஸே 2006 தான்  நானும் இதென்னடா அடவிலோ காச்சின வெண்னெலா, கடலில் பெய்த மழை கணக்கா போயிருதேனு என்னென்னவோ தகிடு தத்தம்லாம் பண்ணேன். ஹிட்ஸ் கூடட்டும் கிழிச்சுரலாம்னு பார்த்தேன். ஆனால் கொஞ்சம் சீரியஸ் சப்ஜெக்டை தொட்டா உடனே ஹிட்ஸ் சரிஞ்சுருதே

மனசாட்சி:
அதுக்குதான் சொல்றது நல்ல பாதை எத்தனை குறுகலா இருந்தாலும்,  நல்லதல்லாத பாதை எத்தனை விசாலமா இருந்தாலும்  நல்ல பாதைலயே நடக்கனும்னு. அப்போ 9 வருஷமா நாக்கு தள்ள கிழிச்சதெல்லாம் வீண் தானே

நான்:
என்ன நீ அப்பவே நீ சொன்ன மாதிரி எழுதியிருந்தா மொத்தமா 2006 பேர் படிச்சிருப்பாங்க அவ்ளதான். அதுல என் கருத்துக்களை எத்தனை பேர் அங்கீகரிச்சிருப்பாங்க. அங்கீகரிச்சவுங்கள்ள எத்தனை பேர் உற்சாக படுத்தியிருப்பாங்க. உற்சாக படுத்தினவங்கள்ள எத்தனை பேர் என் முயற்சில பங்கெடுத்திருப்பாங்க

மனசாட்சி:
சரி முருகேசா ! இந்த 9மாசமா எத்தனையோ வித்தையெல்லாம் காட்டினேன். ஒரு லட்சம் ஹிட்ஸ் வந்தது. ஒத்துக்கறேன். ஆனால் இதுல உன் கருத்துக்களை கருத்துக்களை எத்தனை பேர் அங்கீகரிச்சிருப்பாங்க. அங்கீகரிச்சவுங்கள்ள எத்தனை பேர் உற்சாக படுத்தியிருப்பாங்க. உற்சாக படுத்தினவங்கள்ள எத்தனை பேர் என் முயற்சில பங்கெடுத்திருப்பாங்க.. அதையும் தான் சொல்லேன் பார்ப்போம்.

முருகேசன்:
தா .. மனசாட்சி !  நீ ரொம்ப பேசறே..அதுவும் உண்மைகளை பேசறே.. உண்மைகள்  கசப்பா இருக்கும், நெருப்பா சுடும்.  அதோட கேள்வியெல்லாம் வேற கேட்கிறே.. இதெல்லாம் சரியில்லே..நான் பெரிய்ய எழுத்துல கெட் அவுட்னு கத்த வேண்டி வரும்..

மனசாட்சி:
அட என்னப்பா நீ ஏதோ நம்ம முருகேசன் ..அப்பப்ப நம்ம கூட டிஸ்கஸ் பண்ற ஆளு .. நாம  கொசு கடிச்சு  புரண்டு  படுத்தா கூட என்ன ஏதுன்னு விசாரிக்கிற ஆளாச்சே..பாதி ராத்திரில எழ்ப்பிவிட்டாலும் சலிக்காம சமாதானம் சொல்ற ஆளாச்சேனு பார்த்தா ஓம்கார் சீடர்கள்  மாதிரி கோச்சுக்கறே.. நீ என்ன இன்னைக்கே ஆழி சூழ் உலகமெல்லாம் உன் வழிக்கு வந்துரனும்னா துடிக்கிறே.. இன்டர் நெட்ல தான்  எத வச்சாலும் அது சிரஞ்சீவியாயிருதே.அடிச்சு விட வேண்டியது தானே.. அது பட வேண்டியவன் கண்ல ,பட வேண்டிய நேரத்துலபட்டு தானே தீரனும்

முருகேசன்:
இதுவும் நல்ல யோசனைதான்.. சனத்தை கிச்சு கிச்சு   மூட்டி தாஜா பண்ணி பிட்டு பிட்டா சொன்னதுல என் சித்தாந்தத்தோட சாரத்தையே மறந்துட்டன் போலிருக்கு
" கொஞ்சமா ரோசிச்சு பாருப்பா"
" வாழ்க்கை பற்றிய ஒரு தேடலை உருவாக்கனும்.."
"இந்தியா யுகம் யுகமா செய்துக்கிட்டு வந்தது இதைதானேப்பா?"

"அந்த தேடல்ல ஈடுபட்டது  லிமிட்டட் பாப்புலேஷன்.வர்ணாசிரம த்ர்மம், சாதீயம் காரணமா கல்வி மெஜாரிட்டி வர்கத்துக்கு மறுக்கப்பட்ருச்சு. கல்விய வச்சிருந்த வர்கத்துல கூட யாரோ விட்ட குறை தொட்ட குறையா இருந்தவுக தேடல்ல இறங்கினாங்களே தவிர மெஜாரிட்டி வர்கம் மட்டும் அந்த தேடல்ல இறங்கவே இல்லை.அங்கே ஒரு கண்ணப்பன், இங்கே ஒரு நந்தனார் இருக்கலாமே தவிர மத்தவுக பிரபஞ்ச வாழ்க்கைக்கான போராட்டம் அ காம்ப்ரமைஸ்ட் லைஃப்ல திருப்தியடைஞ்சுட்டாங்க"

" நீ சொல்ற  தேடலால மனித இனத்துக்கு என்ன கிடைச்சுருங்கற?"

"கிடைக்கிறது, கிடைக்காததை பத்தி அப்புறம் சொல்றேன். தேடல் ஆரம்பிக்கனும்னா வாழ்க்கையின் ஸ்தூல பிரச்சினைகள் தீர்ந்தாகனும். இல்லேன்னா  காலணா அரையணா ஸ்தூல பிரச்சினைகளோடவே, எந்த வித தேடலும் இல்லாம  வாழ்ந்து செத்துப்போயிருவான்"

"ஸ்தூல பிரச்சினைகள்னு எதை சொல்றே? அப்போ ஸ்தூலபிரச்சினைகளையெல்லாம் தீர்த்துரனுங்கறியா..

"உயிர் பாதுகாப்பு,செக்ஸ், ஃபுட்,க்ளாதிங், ஷெல்டர்,இதையெல்லாம் பெறமனுஷனுக்கு  செல்ஃப்  ரெஸ்பெக்டுக்கு பங்கம் வராத ஒரு தொழில்,வேலை வாய்ப்பு இதெல்லாம் தான் ஸ்தூல தேவைகள்.. இது தீர்ந்தாதான் லைஃப் போர்டம்மா மாறும் ..தேடல் துவங்கும். "

"என்னப்பா இது தேடல் அது இதுன்னு ஆன்மீகமா ஆரம்பிச்சே படக்குனு சோத்து பிரச்சினைக்குவந்துட்ட.."

"சோத்து பிரச்சினைன்னா உங்களுக்கு லேசான விஷயமா படறாப்ல இருக்கு மனுஷன் என்னைக்கு பிறந்தானோ அதே கணத்துல அவனோட இறப்பும் ஆரம்பமாயிருது, இறப்பு பத்தின பயம் அவன் மைண்ட்ல வேலை செய்ய ஆரம்பிச்சுருது. மனுஷன் 40 அ 50 நாள் சாப்பிடாம இருந்தா கூட சாகமாட்டான். ஆனால் ஒரு வேளை/ஒரு நாள் பட்டினிங்கறது அவனை டர்ராக்கிருது ஏன்?  செத்துப்போயிருவமோனு பயம். சாவு பத்தின நினைவுதான்  அவனை டர்ராக்குது. தன் மொத்த சக்தியையும் சாவு பத்தின நினைவுகளை துரத்தவும், சாவோட நிழல்களோட போராடவுமே மனுஷன் செலவழிச்சுர்ரான்"

"அதென்னப்பா சாவோட நிழல்கள்?"

"ம்.. தனிமை, நிராகரிப்பு, அன் ஐடென்டிஃபைட் கண்டிஷன்,இருட்டு,ஏழ்மை இப்படி கண்டதையும் சாவா நினைச்சு டர்ராயிர்ரான். அதனால தான் இதுகளை சாவின் நிழல்கள்னு சொன்னேன்."

'சரி .. மனுஷனுடைய மனசுல இருந்துக்கிட்டு அவனை ஆட்டிவைக்கிற  சாவு பத்தின ஞாபகங்களை எப்படி துரத்தறது..?"

"உனக்கு சாவே இல்லைடான்னு ருஜு படுத்தனும். இல்லேன்னா ஏற்கெனவே நீ செத்துக்கிட்டுத்தான் இருக்கே தலைவான்னு ஞா படுத்தனும்"

" நீ தான் சொன்னியே அவன் தன் மொத்த சக்தியையும்  சாவின் நிழல்களை ஜெயிக்கிறதுலயே ஸ்பெண்ட் பண்றான்னு..அவன் எங்கே  சாவுகிட்டே மோதறது?"

"சரியான கேள்வி.. பேய் ,பிசாசை பார்த்து பயப்படறவன் கிட்டே போய் சைன்ஸ் பேசி  அதெல்லாம் ஒன்னுமில்லேடான்னா அவன்  நம்ப மாட்டான். அப்படியா.. இதுக்கு ஆஞ்சனேயர் டாலர் ஒன்னு போட்டுக்க அதெல்லாம் ஒன்னும் பண்ணாதுன்னுதான் வழிக்கு கொண்டுவரனும்.."

"அப்போ மனிதன் மேற்கொள்ற சாவின்  நிழல்களுடனான யுத்தத்துல அவனுக்கு உதவனுங்கறே"

"ய்யாஆஆஆஆ.. அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000"

"சரிப்பா ..அவன் செய்ற நிழல் யுத்தத்துல அவனுக்கு உதவி பண்ணனுங்கறே.. வஸ்துவோட மோதினா ஜெயிக்கலாம். நிழலோட எப்படி மோதி எப்படி ஜெயிக்கறது?"

"அதை நாம அவனே அனுபவ பூர்வமா உணர்ர மாதிரி செய்யனும். அதுக்கு அவனோட ஸ்தூல தேவைகள் நிறைவேறியாகனும்"

"சரி சரி .. அடுத்த பதிவுல தொடர்ந்து பேசுவோம்"

"ஓகே பை .."

Saturday, February 27, 2010

நிர்வாணம் தெய்வீகமானது

கவர்னர் திவாரியோட லீலைகளை பத்தின அதிரடி வீடியோ க்ளிப்ஸ் ஒளிபரப்பு செய்து புகை வர வைத்த ஏ.பி.என்.ஆந்திர ஜோதியில் இந்த பதிவின் தலைப்பில் ஒரு விரிவான ஸ்டோரி ஒளிபரப்பானது. கடைசில பஞ்ச் என்னடான்னா " நீங்க நிர்வாணமா திரியாட்டியும் பரவாயில்லே.. நிர்வாணத்தை பார்த்து அருவறுப்படையாதிங்கங்கறது" தான் . அடங்கொப்புரானே.. திவாரி தாத்தா பண்ணது கூட அதை தானே.. அதை வெளிச்சம் போடற மோரல் ரைட் உனக்கேது.

சரி அது எக்கேடோ கெட்டு ஒழியட்டும். அவனவன் விரைக்கிறது தெரியக்கூடாதுன்னுதான் ட்ரஸ்ஸே போடறான்னும் ஒரு தகவல். ம‌த்திய படெஜ்ட் போட்டுட்டாய்ங்க. வழக்கம் போல விவசாயத்துக்கு கையில் கொடுத்துட்டாங்க (கப்பறைங்கண்ணா) அந்த விவசாயமே இல்லேன்னா புவ்வா இல்லே. பலான சமாச்சாரமெல்லாம் ஒடுங்கிபோயிரும்னா இதையும் படிச்சு வைங்கன்னா


"சத்யமேவஜெயதே"ன்னு ஸ்லோகன் வச்சிக்கிட்டு நம்ம அரசாங்கங்கள் அடிக்கிற

கூத்தை சொல்ல ஆரம்பிச்சா கலியுகம் முடிஞ்சு பிரளயமே வந்துரும். (அத்தனை

காலம் பிடிக்கும்னு சொல்ல வந்தேங்கண்ணா. நம்ம சனம் தோல் தடிச்சி போயி

கிடக்கு . ஆயிரம் நிஜங்கள் வெடிச்சாலும் பெண்கள் அழுகாச்சி

சீரியல்களையும்,ஆண்கள் சில்லறை பொறுக்கறதையும் விட்டு வெளிய வரவே

மாட்டாங்க, புரட்சி என்ன இழவு மாற்றம் கூட வராது ).

பொருளாதார சிறப்பு மண்டலங்கள் பேரால பொன் விளையற பூமியை பறிச்சிக்கிட்டு,

சிவப்பு நாடாத்தனத்தால அதை வருச கணக்கில வெத்தா விடறது, நிலத்தை

இழந்தவனுக்கு நஷ்ட ஈடு தராம பெப்பே காட்டறது. அந்த நிலம் ஒதுக்கப்பட்ட

கார்ப்போரேட் கம்பெனிகள் நோகாம ரியல் எஸ்டேட் வியாபாரம் பண்றது, நிலத்தை

இழந்த விவசாயி கூலியாகி, அல்லாடறது, தற்கொலை பண்ணிக்கிட்டு குடும்பத்தை

நட்டாத்துல விடறது அந்த குடும்பத்து இளைஞர்கள் வழிப்பறி

கொள்ளைக்காரர்களா மார்ரது, பெண்கள் விலைமாதர்களா மார்ரது இதெல்லாம் நம்ம

கண் முன்னாடி நடக்கிற நிஜங்கள்.

ஆந்திரத்துல சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமங்கள்ள ட்ரான்ஸ்மார்மர்களை

அடிச்சு தூள் பண்ணி அதிலிருக்கிற செம்பு கம்பிகளை ஒரு கூட்டம்

திருடிக்கிட்டிருந்தது. லேட்டா முழிச்சிக்கிட்ட போலீஸ் தந்தி பாஷைல வலை

வீசி தேடி பிடிச்சப்ப அவங்கல்லாம் பீகார்,உ.பி மானிலங்களில் விவசாய

குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள், லோக்கல் குவாரிகளில்,ஃபேக்டரிகளில்

வேலை பார்க்க வந்தவர்கள். குவாரி,ஃபேக்டரி ஓனர்களின் உழைப்பு

சுரண்டலால், கொத்தடிமைத்தனத்தில் வெறுப்பாகி கொள்ளைக்காரர்களானவர்கள்னு

என்று தெரிய வந்தது.

பாருங்க ஆட்சியாளர்கள் விவசாயம் லாபகரமா இல்லே. விளை நிலங்கள்ள பெரிய

பெரிய தொழிற்சாலைகளை கட்டி தொழில் மயமாக்கினா பொருளாதாரம் முன்னேறும்னு

நினைக்கிறாங்க. ஆனா நடக்கிறது என்ன?

எங்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு ரொம்பவே அறிவாளி. இப்போ விவசாயம்

பண்றவங்க ஓஞ்சு (ஒழிந்து) போட்டும். அவிக பசங்களாவது அதுல இறங்க கூடாது,

கம்ப்யூட்டர் கத்துக்கிடனும்னிட்டார். நம்ம ஆற்காடு வீராசாமி அந்தளவுக்கு

அறிவாளி இல்லேன்னாலும் ( பவர் சப்ளை ஒழுங்காயிருந்தாதானே அறிவாளி

ஆகமுடியும்) விவசாயிகள் விவசாயத்தோடவே வேற ஏதாச்சும் தொழிலும் பண்ணனும்னு

இலவச யோசனை தந்திருக்கார்.

பாவம் .. அந்த காலத்துல காந்தி தாத்தா விவரம் போதாம கிராமங்கள் உற்பத்தி

கேந்திரமா இருக்கனும். நகரங்கள் விற்பனை மையங்களா இருக்கனும்னு

சொல்லிட்டு போய் சேந்துட்டாரு.

இப்ப பாருங்க எல்லாமே தலை கீழா மாறிருச்சு. கிராமத்துல பசு வச்சிருக்கிற

குடும்பம் தங்கள் வீட்டு ஆளுங்க, குழந்தை குட்டி எல்லாம் குடிச்சபிறகு

அக்கம்பக்கத்து குடும்பங்களுக்கு கொடுப்பாங்க. இப்போ காசு மேல காசு வந்து

கொட்டனும்னு ஊசி மேல ஊசி போட்டு ஒட்டக்கறந்து டைரிக்கு ஊத்தறாங்க. அதே

பால் ப்ளாஸ்டிக் கவர்ல கிராமத்துக்கு வந்து சேருது. அதை காசு குடுத்து

வாங்கியாறது. அட ஒரு கல்யாணம்னு வச்சிக்கயேன் அதுக்கு தேவையான பொருட்கள்ள

எத்தினி கிராமத்துல கிடைக்குது எத்தினி டவுன்ல கிடைக்குது கூட்டி கழிச்சு

ஒரு கணக்கு போடுங்களேன்.

உப்பு மேல வரி போட்டதுக்காக தாத்தா பிரிட்டீஷ் காரனை காச்சு காச்சுனு

காச்சினாரு. இன்னைக்கு டாட்டா சால்ட் வாங்கினா லோக்கல் டாக்ஸஸ்

எக்ஸ்ட்ரா. லோக்கல் ட்ரிங்க்ஸ் காணாம போயிருச்சு. குக்குராமத்துல கூட

குண்டி கழுவ தண்ணி கிடைக்காத இடத்துல கூட பெப்சி,கொக்கோ கோலா.

தையல் காரங்க கதைய பாருங்க. எல்லாம் மெகனைஸ் ஆயிருச்சு. நீங்க தைய கூலியா

கொடுக்கிற காசுல முக்காவாசி மின்சாரத்துக்கும், ரா மெட்டீரியலுக்கும்,

மின் உபகரண தேய்மானத்துக்குமே சரியா போகுது. இதுல ஷகரான ஏரியால கடை

போடனும், பள பளானு இன்ட்டிரியர், ஜகஜ்ஜோதியா ஒளியலங்காரம்

எல்லாத்துக்கும் போக அவன் என்னத்த திங்கறது. இதுல ரெடி மேட்

கார்மென்ட்ஸோட போட்டி வேற. எந்த தொழிலை எடுத்தாலும் இந்த இழவுதான்.

உதவாத தீப்பெட்டிய எடுத்துக்கங்க.அதை கூட டாட்டா கம்பெனி தயாரிக்குது,

ஒரு காலத்துல ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை ஆயிரம் பேருக்காவது

நேரிடையாவும், மறைமுகமாவும் வேலை கொடுத்துக்கிட்டிருந்தது. இப்போ.

உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற ஒரே துறை விவசாயம்தான். ஒரு 54 இஞ்ச்

கலர் டிவியை புதைச்சி வச்சா ஒரே ஒரு எஃப்.எம். ரேடியோ கூட முளைக்காது.

டிவி தான் நாறிப்போயிரும்.

கால் நடை வளர்ப்பு, கோழி, வாத்து வளர்ப்பு கூட கன்வெர்ஷன் தான். பயிர்

பச்சைய பாலாவும், மாமிசமாவும் மாத்தி தருது (கன்வெர்ஷன்). ஆனால் விவசாயம்

ஜஸ்ட் இட் ப்ரொட்யூஸஸ்.

எல்லா தொழிற்சாலையும் ரா மெட்டீரியலை ப்ராடக்டா மாத்துது.(உ.ம் தகடை காரா

மாத்தறது) அவ்ளதான். பொல்யூஷனுக்கு இடமில்லாத ஒரே துறை விவசாயம் . (

நான் சொல்றது பயிரை தாக்குற பூச்சிகளுக்கு அமிர்தமாவும், விவசாயிக்கு

மட்டும் விஷமாவும் வேலை செய்யற பூச்சி மருந்து, செயற்கை உரங்களை டப்பா

டப்பாவா, மூட்டை மூட்டையா கொட்டி நிலத்தை ,நீரை , வயிறை, விஷமாக்கிற

விவசாயமில்லே தலைவா !).

இந்த நிர்வாண நிஜம் எப்பத்தான் இந்த கேடு கெட்ட அரசாங்கங்களுக்கு

உறைக்குமோ தெரியலை. விவசாயத்துக்கு தேவை ஜஸ்ட் பாசன நீர். வாட்டர்.

பானி.நீள்ளு . அத ஒழுங்கா கொடுக்க துப்பில்லே.

ஜஸ்ட் கன்வெர்ஷன் பண்ணிக்கிட்டு, கோடி கோடியா குவிச்சிக்கிட்டு, சில

ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குற ஃபேக்டரிக்கு லட்சகணக்கான காலன்

தண்ணி, சப்சிடில மின்சாரம், இலவச நிலம், வரி தள்ளுபடி எங்க

போயிட்டிருக்கோம்.

நீங்க ஒரு மாட்டுப்பண்ணை வச்சிருக்கிங்கனு வைங்க. ஒரு மாடு லிட்டர்

லிட்டரா பால் கொடுக்குது. ஒரு மாடு வெறுமனே கோமியம் விட்டுக்கிட்டு, சாணி

போட்டுக்கிட்டிருக்கு. நீங்க எந்த மாட்டுக்கு பருத்திக்கொட்டையும்

புண்ணாக்கையும் போடுவிக? பால் தர்ர மாட்டுக்குதானே.

விவசாயத்துறை வெறுமனே போஸ்டர்களை தின்னுட்டு பால் தர்ர மாடு மாதிரி

அல்லாடிக்கிட்டிருக்கு. ஆனால் காத்துல, தண்ணில, நிலத்துல விஷத்தை

கலந்துவிடற தொழில்துறைக்கு மட்டும் சிகப்பு கம்பள வரவேற்பு. அந்த சிகப்பு

கம்பளத்துல அதென்ன ராஜ நடையா போடுது. ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஒரு அரசாங்கமும் மாட்டுப்பண்ணை முதலாளி மாதிரி தான் செயல் படனும். எந்த

துறைல ப்ரொடக்டிவிட்டி அதிகம், எந்த துறை அதிகமான பேருக்கு வேலை வாய்ப்பை

வழங்குது, எந்த துறையால பொல்யூஷன் குறைவுன்னு பார்த்து அந்த துறைமேல

அக்கறை காட்டனும்.

இந்தியாவுல விவசாயம் 70 சதவீதம் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கறதா ஒரு

கணக்கு. அப்போ பட்ஜெட்ல 70 சதவீதம் விவசாயத்துக்கு தானே ஒதுக்கப்படனும்.

அரசாங்கங்கள் தொழில் துறை மேல அதீத அக்கறை காட்ட காரணம் கார்ப்போரேட்

கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதிதான் போலும்.

டூ வீலர் வாங்க கடன், ஆட்டோ வாங்க கடன், கார் வாங்க கடன். இதையெல்லாம்

வங்கிகள், அதிலும் அரசுத்துறை வங்கிகள், வழங்க காரணம் என்ன ? அந்த ஆட்டோ

மொபைல் கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதி அல்லன்னு உறுதியா

சொல்ல முடியுமா? வீட்டு வசதி கடன்கள் வழங்கப்பட காரணம் என்ன ? சிமெண்ட்,

ஸ்டீல் கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதி அல்லன்னு உறுதியா

சொல்ல முடியுமா?

விவசாயிகளுக்கு தரப்படும் அரை குறை கடன் வசதிகளுக்கு கூட இது போன்ற

விலங்கமான காரணங்கள் உண்டுன்னே சொல்லலாம்.(உர கம்பெனி, மோட்டார் கம்பெனி

, ட்ராக்டர் கம்பெனி, பூச்சி மருந்து கம்பெனி தர்ர கட்சி நிதி) ஒரு

அரசாங்கம் உண்மையிலேயே விவசாயத்துறையை முன்னேற்றனும்னு நினைச்சா எவ்வளவோ

செய்யலாம்.

விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிச்சு கூட்டுறவு பண்ணை விவசாயம்

அமலாக உதவலாம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வுங்கறத போல விவசாயிகள் ஒன்னு

சேர்ந்து சின்ன சின்ன செக் டேம், ஏரிகளின் இணைப்பு, ஏரிகளை தூர் வார்ரது

,, பாசன வாய்க்கால்களை வெட்றது சின்ன சின்ன உப நதிகளை இணைக்கறதுனு

செய்துக்கலாம். விவசாய உற்பத்திகளை நல்ல விலை வர்ர வரைக்கும்

பாதுகாக்க கிடங்குகள், கோல்ட் ஸ்டோரேஜ் இத்யாதி கட்டிக்கொள்ள மேற்படி

சங்கங்களுக்கு கடன் தரலாம். க்ராப் இன்ஷியூரன்ஸ் ஏற்பாடு செய்யலாம்.

விவசாய பொருட்களின் மதிப்பை கூட்டும் தொழிற்சாலைகள் அந்த சங்கங்களே

அமைத்து நிர்வகிக்க உதவலாம். (இதை பைலட் ப்ராஜக்டா ஆந்திர முன்னாள்

முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ஆர் அறிவிச்சாரு. விவசாயிகள் ஒப்புக்கிட்டா

செய்யலாம்னு சொன்னாரு. எங்க பிழைக்க விட்டாங்க. )

ஆனால் நம்ம அரசாங்கங்கள் இதையெல்லாம் செய்யாது ஏன்னா விவசாயிக்கிட்டே

இருக்கிறது ஒரு ஓட்டு. மிஞ்சிப்போனா அவனோட குடும்பத்து ஓட்டு. அவனென்ன

தேர்தல் நிதியா தரப்போறான். கார்ப்போரேட் கம்பெனிக குடுக்கிற ஃபண்ட்ஸ்ல

லட்சக்கணக்கான ஓட்டுக்களை விலைக்கு வாங்கிரலாமே..

தொழில் துறை, தகவல் தொழில் நுட்பத்துறை வளர்ச்சியெல்லாம் வெறும் வீக்கம்.

விவசாயி பயிர் செய்து, உற்பத்தி கைக்கு வந்தாதான், அது பணமாகி அவன்

கைக்கு போனாதான் மார்க்கெட்டுக்கே வாழ்வு .இல்லேன்னா சாவுதான்.

டிவி,மொபைல் தயாரிப்பாளர்கள் டீலர்கள் தம் வாடிக்கையாளர்களுக்கு தரும்

ஸ்பெஷல் ஆஃபர்ஸ் எல்லாம் அறுவடைகாலத்திலேயே வெளியாறத கூட்டிக்கழிச்சு

பாருங்க உண்மை தெரியும். எழுபது சதவீதம் மக்கள் விவசாயத்துறைய

சார்ந்து வாழற நாட்ல லட்ச ரூபாய்க்கு கார் வருது. ஏன் லட்ச ரூபாய்க்கு

ட்ராக்டர் தயாரிக்க கூடாது. எப்படியும் நகர மயமாக்கம் காரணமா, கிராமப்புற

வேலை வாய்ப்பு உறுதி திட்டம் , ஒரு ரூபா அரிசி திட்டம் இத்யாதி

காரணங்களால விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கிறது குதிரை கொம்பா போன காலத்துல

விவசாய வேலைகளுக்கு உதவக்கூடிய சிறு,குறு இயந்திரங்களை ஏன் குறைஞ்ச

விலைல தயாரிக்க கூடாது. மைல் கணக்குல வாய்க்கால்ல ஓடி வீணாகற பாசன நீரை

சூரிய வெப்பத்துக்கு ஆவியாகாம, நிலத்துல ஊறிப்போகாம , ஒரு சொட்டு

தண்ணியும் வீணாகிடாம பயிருக்கு கொண்டு சேர்க்க ஏன் நாடு தழுவிய ஒரு

திட்டத்தை கொண்டுவரக்கூடாது.

இந்தியா விவசாயத்துக்கு ஏதுவான சீதோஷ்ண நிலை , புவியியல் அனுகூலங்கள்

நீராதாரங்கள் கொண்ட நாடு. அரபு நாடுகள் வெறுமனே எண்ணெய் வளத்தை வைத்து

உலக மார்க்கெட்டை கட்டுப்படுத்தும்போது, நாம் ஏன் உணவு பொருள் உற்பத்தியை

வைத்து உலக மார்க்கெட்டை கட்டுப்படுத்தக்கூடாது.

ஒரு புடவைய சுத்தி விட்டா மரம் கூட ஏதோ ஒரு கோணத்துல மங்கையா

காட்சியளிக்கும். அதை உருவி பாருங்க..

நிர்வாணம் தெய்வீகமானது. நிஜமானது. போலிகளுக்கு இடமில்லாதது.

ஆட்சியாளர்களே நீங்கள் இந்திய பொருளாதாரத்துக்கு கட்டிவிட்ட ஆடைகள்

இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் காட்டி உங்களையும்

சேர்த்து குழப்புகிறது. நிலைமை கை மீறிப்போனா சனம் சாப்பிட

ரொட்டியில்லேன்னா கேக் சாப்பிடுங்கனு சொல்லக்கூடிய ஆளுங்க தான். ஆனால்

அப்படி சொன்ன ராணி என்ன ஆனாள்? அவள் ராஜ்ஜியம் என்னாச்சுனு ஒரு தடவை

நினைச்சு பாருங்க..

Friday, February 26, 2010

பவர் கட்டால் பயன்கள்

கேடு கெட்ட மனிதர்களை எம்.எல்.ஏ, எம்.பிக்களா தேர்ந்தெடுத்தபிறகு விலை வாசி ஏற்றம், பெட் ரோல் டீசல் விலையேற்றம்,பவர் கட் இப்படி என்னென்னமோ இழவெடுக்கும்.இதையெல்லாம் நினைச்சு கடுப்பானா, இதுகளால வர்ர நஷ்டங்களை நினைச்சு கொதிச்சா உடம்பு கெட்டு போயிரும். ஜி.ஹெச் போனா நாறிரும். கார்ப்போரேட் ஆஸ்பத்திரிக்கு போனா கிட்னி வித்து பில் கட்ட வேண்டியதுதான். அதுக்காகத்தான் இந்த பதிவு.

கெட்ட விஷயத்திலும் எத்தனையோ நல்ல விஷயங்க ஒளிஞ்சிருக்கும். அதை எல்லாம் நினைச்சு மனச தேத்திக்கிட்டா
1.பங்க்சுவாலிட்டி வருது.கரெக்டா காலைல எட்டு மணிக்கு பவர் போயிரும்.ஆறு மணிக்கெல்லாம் எந்திரிச்சு பர பரனு வேலைய முடிக்கிற வழிய பாருங்க. வேலையில வேகம் வருது ( சீக்கிரம் மிக்ஸில சட்னியை அரைச்சு எடு புடுங்கிர போறானுவ)
2.மின் வினியோகம் குறையுது மின் கட்டணம் குறையுது. அதே போல எம்.டி முதல் கொண்டுஊழியர்கள் வரை பவர் கட் ரேஷோவின் படி சம்பளமும் குறைச்சா நல்லாருக்கும்
3.பவர் புடுங்கின உடனே ஜனம் கான்கிரீட் காடுகளிலான தம் கூடுகளிலிருந்து மொட்டை மாடிகளுக்கோ , சாலைக்கோ வருகிறார்கள். இயற்கையுடன்,சக மனிதர்களுடன் கம்யூனிக்கேட் ஆகிறார்கள்
4.ஏழை பணக்காரன் வித்யாசம் குறையுது. செமை சவுண்ட் பார்ட்டிங்க ஜெனரேட்டர் போட்டுக்கறான் அது வேற கதை.
5.காலை நேரத்துல பவர் கட்டானா ஆஃபீஸ் போற தாய் குலம் மிக்ஸி,கிரைண்டரை உபயோகிக்கமாட்டாங்க,ஒன்னு வேலை குறையும். இல்லாட்டி அம்மி, உரல் உபயோகிப்பாங்க ஹெல்த் பிக் அப் ஆகும். ஹேர் ட்ரையர் உபயோகிக்கமாட்டாங்க தலை மயிர் பிழைக்கும்
6.விடியல்ல பவர் கட் ஆரம்பிச்சா புழுக்கத்தாலயாவது 9 மணிக்கு எழுந்துக்கற பார்ட்டிங்க வைகறை துயிலெழுவாங்க
7.கணவன் மாரு ( மனைவி "மாரு"னுதான் சொல்ல முடியாதுங்க) பண்ற ஆணாதிக்க அட்டகாசம் குறையும். இவரு நியூஸ் பேப்பர்ல மூழ்கி போயிருக்கிற நேரம் டீப்பாய் மேல காஃபியை வச்சா " என்ன அறிவில்ல உனக்கு கைல தரணும்னு தெரியாது"ங்கற பிசினஸெல்லாம் வேலைக்காகாது. "ஆமா! நீங்க கைய நீட்டற வரை காத்திருந்தா கரண்ட் புடுங்கிக்கும் .அப்புறம் இட்லிக்கு மிளகாய் பொடிதான் பரவாயில்லயானு ப்ளாக் மெயில் பண்ணலாம். ஆணாதிக்கம் குறையும். பெண்ணுரிமை காக்கப்படும்

மறுபடி அவள் : தொடர் கதை

காலியா போன ஆட்டோவை கை தட்டி கூப்டா .சரி ரூமுக்கு தான் போவா போலனு நினைச்சா பஜாருக்கு போக சொன்னா. சனம் ஒரு வாரம் கர்ஃப்யூக்கு அப்புறம் அப்பத்தான் கடைகளை திறந்த மாதிரி அலைபாஞ்சுக்கிட்டிருந்தாக. எவனோ ஊரை ஏமாத்தவே ரிச் ஃபேஷன்ஸுன்னு ஒரு கடை திறந்திருந்தான்.மாயா ஆட்டோவை அந்த கடை வாசல்ல நிறுத்தி மீட்டர் கட் பண்ணி கடை படியேறினாள். ஜீன், டீ ஷர்ட்டுன்னு இஷ்டத்துக்கு செலக்ட் பண்ணிக்கிட்டிருந்தா. நான் காதோரமா "இதெல்லாம் ஓவராயிருக்கு ..உன் ஸ்ட்ரக்சருக்கு செட்டாவாது கண்ணு ..சித்தூர் சனம் மேல உனக்கென்ன கடுப்பு"ன்னேன் முறைச்சு பார்த்துட்டு இதெல்லாம் உனக்குதான்" என்றாள்.

"அடப்பாவி மகளே! என்னா செலக்ஷனிது? பஞ்சுமிட்டாய் கலர்ல சுப்பர் மேன் பொம்மை, தெலுங்கு தேசம் கலர்ல பூனை பொம்மை.. என்னை என்ன எல்.கே.ஜி பையனு நினைச்சயா? சைஸை பார்ரா ரெண்டு முகேஷ் உள்ளார போறாப்ல.. டீ ஷர்ட்டுன்னா அப்படியே சிக்ஸ் பேக் பாடியையும், கட்ஸையும் காட்டனும்.. கைய மடிச்சு விட்டா அப்படியே கமல் மாதிரி இருக்கனும் ( கதை நடக்கறது 1987லிங்கண்ணா).. என்னை பழி வாங்கனும்னா அதுக்கு இதானா வழி ? இதைவிட ஒரு லாலி பாப் வாங்கி கொடு சப்பிக்கிட்டே வரேன்" என்று புலம்பவே ஆரம்பிச்சுட்டேன்.

" ஜான்தா நை" நீ இதைதான் போட்டுக்கனும். ஆமா இதென்ன தலை குருவிக்கூடு மாதிரி எப்படியும் வெயில் காலம் ஆரம்பிச்சுருச்சு..நல்லா சம்மரா ஹேர் கட் பண்ணிக்க.. புல் தடுக்கிபயில்வான் மாதிரி இருந்துக்கிட்டு சிக்ஸ் பேக்காம், கட்ஸாம்" பல் கடிச்சிக்கிட்டே ரகுவரன் ஸ்டைல்ல பேசிட்டு கவுண்டர்ல இருந்தவனை இதெல்லாம் "பேக் பண்ணிருங்க"ன்னிட்டா.

ராகி மால்ட்டு, ஹார்லிக்ஸ்,விவான்னிட்டு மார்க்கெட்ல இருக்கிற சத்து பானமெல்லாம் வாங்கி குவிச்சா. நந்தினில நெய் இட்லி ஆர்டர் பண்ணி சாப்பிட வச்சிட்டு அதோட விட்டாளா ?டவுன் இருக்கிறதலயே பயங்கர ஜிகாவா இருக்கிற சலூனுக்கு கூட்டிப்போயி "சார் ! போலீஸ் செலக்சனுக்கு போறாரு ஷார்ட்டா வெட்டிவிடுப்பா"ன்னிட்டா. நான் முறைக்கிறேன் முறைக்கிறேன் கண்டுக்கிட்டா தானே. பாவம் சலூன் காரன் கரண்ட் சார்ஜுக்கு கூட சிரைக்கலியேனு இருந்தானோ இல்லை திருப்பதில ட்ரெயின் ஆனவனோ " நக்கி "எடுத்துட்டான். அழுகை அழுகையா வந்தது.

மறுபடி ஆட்டோ " நேரு ஸ்ட்ரீட் போப்பா" ரூம் கதவு பூட்டை திறக்கறப்பவே முதல்ல குளிச்சுட்டு இந்த புது ட்ரஸ்ஸை போடு.. சூடா ஹார்லிக்ஸ் தரேன். குடி. சரி வராண்டால எதுக்கு வாக்கு வாதம்னிட்டு பேசாம உள்ள நுழைஞ்சேன். மூனு மணி நேரம் சிகரட் இல்லாம லங்க்ஸ் நிக்கோடின் நிக்கோடின்னு அரற்ற ஒன்னை பத்த வச்சேன்.

மாயா நான் சிகரட் பிடிக்கிற ஸ்டைலை ஒரு நிமிசம் பார்த்துட்டு "முகேஷ்! நான் சொன்னா தப்பா நினைக்கமாட்டியே"ன்னா. "என்ன"ன்னேன். " என்னதான் தொங்கு மீசை வச்சிருந்தாலும், இந்தியாவுல பரவிக்கிடக்கிற வறுமை மாதிரி கன்னமெல்லாம் தாடி முளைச்சாலும் நீ சிகரட் பிடிக்கிறப்பதான் கொஞ்சமாச்சும் ஆம்பளை மாதிரி தெரியறே"ன்னாள். அதுல வேற மாதிரிங்கற வார்த்தைய மா.....திரின்னு இழுத்தாப்ல உச்சரிச்சாப்பாருங்க நவத்வாரமும் எரிஞ்சு போச்சு.

'ஏய்! என்னதான் நினைச்சிருக்கே உன் மனசுல. பஞ்சு மிட்டாய் கலர்ல டீ ஷர்ட் வாங்கறே.. போலீஸ் கட் பண்ண வைக்கிறே ..இப்ப என்னடான்னா சிகரட் பிடிக்கிறப்பதான் ஆம்பள மாதிரி இருக்கேங்கறே.. என் ஆண்மைல உனக்கு சந்தேகம் இருந்தா மீனா,ரீனா,சீதா,கீதா,ராதா வேதான்னு யார் கிட்டே வேணம்னா கேட்டுக்க. ஹேர் கட் பண்ணிட்டா குளிச்சித்தான் ஆகனும், ட்ரஸ் மாத்தித்தான் ஆகனும்னு நினைக்கிறே போல. அதெல்லாம் நடக்காது கண்ணு.. காலைல ஹேர் கட் பண்ணிட்டு, அப்படியே டீ அப்படியே டிஃபன், அப்படியே லஞ்ச் அடிச்சு மதியம் 3 மணிக்கு டூர் வண்டிய அனுப்பிட்டு ஒரு பீர் அடிச்சுட்டு படுத்து தூங்கி ராத்திரி 10 மணிக்கு குளிச்ச பார்ட்டி நானு.. எப்டி எப்டி ஆம்பளை மா......திரி யா தேவைதான்"

என் கோபத்தை ஏதோ சுவாரஸ்யமான வீடியோ க்ளிப்பிங்க் பார்த்த தினுசுல பார்த்த மாயா " நான் சொன்னதுல தப்பே இல்லை. நீ இவ்ள அக்ரசிவா பேசறப்ப கூட உன் முகத்துல பால் வடியுதுரா' என்றாள்.

"வேணா மாயா .. நீ ஒரு முகேஷை தான் பார்த்திருக்கே.."
"அட உங்கப்பாவ பார்த்தா ரொம்ப நல்ல மாதிரியிருந்தது.. உனக்கு ரெட்டை வேற இருக்கா..கூப்டு கூப்டு"
"என்ன நக்கலா? ஆமா நான் அசல் விஷயத்தை விட்டுட்டு என்னென்னவோ கேட்டுக்கிட்டிருக்கேன்.. ஆமா நீ எதுக்கு எனக்கு ட்ரச் ப்ரசண்ட் பண்ணனும். ஓகோ அடியாள் மாதிரி உங்க வில்லேஜுக்கு போய் பேக்கு மாதிரி ஒதை வாங்கிகிட்டு வந்ததுக்கு மாமூலா? ஆமா என்னை பத்தி என்னதான் நினைச்சிருக்கே உன் மனசுல .. நான் ரோட்ல நடந்து வந்தா 40 வயசு ஆன்டி கூட முந்தாணைய சரி பண்ணிக்கும் தெரியுமா உனக்கு?"
மறுபடி மாயா முகத்தில் அதே வீடியோ க்ளிப்பிங் சுவாரஸ்யம்.

"த பாரு ! நீ என்னை என்னவோ செய்யப்பார்க்கிறே...எவளையாவது கணக்கு பண்றப்ப உன்னோட இந்த கமெண்ட் , பார்வையெல்லாம் ஞா வந்துருச்சுன்னா அப்புறம் நான் டாக்டர் மாத்ருபூதத்தை தான் பார்க்க வேண்டிவரும்.. நான் வரேன் தாயி ! அய்யயோ பொம்பளைலயே சேர்த்தியில்ல நீ" ன்னிட்டு எந்திரிச்சு தெருக்கதவு பக்கமா திரும்பினேன்.

ஒரே மூச்சுல என்னை நெருங்கின மாயா என் காதை பிடிச்சி " என்னடா.. நீ ஆம்பள சிங்கமா? உன் மூஞ்சியும் நீயும்.. ஃபீடிங் பாட்டில்தான் தெரியுதுரா உன் மூஞ்சில.. எப்டி எப்டி நான் போய் உன் லவர்ஸ்கிட்டே கேட்கனுமா உன் ஆண்மைய பத்தி அறுத்து எறிஞ்சிருவன். போய் ஒழுங்கா குளிச்சிட்டு நான் வாங்கி கொடுத்த ட்ரஸ்ஸ போட்டுக்கற வழியபாரு"ன்னா..

சாதாரணமா வேற யாராவது ஒரு பொம்பளை ,பொம்பளை என்ன கிழவியாவே இருந்தாலும் இந்த மாதிரி பேசியிருந்தா அப்படியே கமல் சார் மாதிரி இழுத்து ஒரு இங்கிலீஷ் கிஸ் கொடுத்திருப்பேன். அதென்னவோ தெரியல மாயா முகத்துல இருந்த ஒரு வித அலட்சியம், என் மேலான பரிபூரண நம்பிக்கை, தானேதோ இந்த பூமியில பிறந்த எல்லா குழந்தைக்கும் அம்மா மாதிரியான ஃபீலிங்க் அதை என்னன்னு சொல்ல தெரியலை ... என்னை சிலையாக்கிருச்சு, அடுத்த செகண்ட் தலைய உதறிக்கிட்டு சாதாரணமானேன். குளிச்சுட்டு மாயா வாங்கின ட்ரஸ்ஸ போட்டுக்கிட்டு ஸ்கூல் பையன் மாதிரி அட்டென்ஷன்ல நின்னு ' குட்மா ..........ர்னிங்க் டீச்சர்!"ன்னேன்.

மாயா சிரிச்சா பாருங்க ஒரு சிரிப்பு.. அதை சிரிப்புனு சொன்னா எனக்கு மொழியே தெரியாதுனு அர்த்தம். அந்த சிரிப்பு அப்படியே வெடிச்சது. க்ளைமோர் பாம் மாதிரி வெடிச்சது. சிரிச்சா சிரிச்சுக்கிட்டே இருந்தா அவளோட கண்கள்ள் கண்ணீர் மாலை மாலையா கொட்டுது சிரிச்சுக்கிட்டே இருக்கா.சிரிச்சுக்கிட்டே கிச்சனுக்கு போய் ஹார்லிக்ஸ் கலந்துக்கிட்டு வந்து கொடுத்தா.

நான் "மாயா ! எங்கம்மா 1984லயே செத்துட்டாங்க. கவர்ன்மென்ட் எம்ப்ளாயியா இருந்தாலும், ரிலீஸிங்க் அதாரிட்டியா இருந்தாலும் எங்கப்பா ஹானஸ்ட் மேன். பாவம் மாவட்டம் மாவட்டமா தூக்கியடிச்சாங்க. எங்க அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வாழ்ந்ததை என்னால பார்க்கவே முடியாம போயிருச்சு. அவரு சொந்த ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வரவும் எங்கம்மா யூட்ரஸ் கேன்சர் வந்து செத்துப்போகவும் சரியா இருந்தது. பேசாம எங்கப்பாவ கல்யாணம் கட்டிக்கிறியா ' என்றேன்.

பலான ஜோக்+ சைக்காலஜி

அய்யா ,
பலான ஜோக் படிந்தவரே ஒரு செகண்ட்.. இன்னைக்கு மறுபடிஅவள் தொடர்கதையோட புது அத்தியாயம், பவர் கட்டினால் நன்மைகள் என்று மேலும் 2 பதிவுகள் போட்டிருக்கேன். தவறாம படிங்க. உங்க கருத்தை தெரிவிங்க. ஓகே ஜூட் ...

நம்ம வெங்கடேஷுக்கு வயசாயிருச்சு. ( வெங்கடேஷை மறந்துட்டிங்களா நிறைய பலான ஜோக்ல இவன் தான் ஹீரோ.ஜொள்ளு பார்ட்டி. பணவிஷயத்துல கெட்டி,. ஆசை, ஆத்திரம் அதிகம்.அறிவும் கம்மி தாக்கத்தும் கம்மி.) பலான ஆட்டம் எல்லாம் க்ளோஸ் ஆயிருச்சு.

ஆனா தூக்கத்துல அசிங்க அசிங்கமா உளற ஆரம்பிச்சுட்டான். அவன் இம்சை தாங்க முடியாம சைக்கிரியாட்ரிஸ்ட் ஒருத்தர் கிட்டே கூட்டிப்போனாங்க. சைக்ரியாட்ரிஸ்ட் ஒரு சார்ட் பேப்பர்ல மார்க்கரால ஒரு புள்ளி வச்சாரு.

"இதை பார்த்தா என்ன தோணுது? "
"என்ன டாக்டர் இது 'அதை' போயி லாங் ஷாட்ல வரைஞ்சிருக்கிங்க"

சைக்கிரியாட்ரிஸ்ட் ஒரு வட்டத்தை "O" வரைஞ்சாரு.

"இதை பார்த்தா என்ன தோணுது? "
" இது போய் பெரிய விஷயமா ? எவளோ காலை அகட்டி தூங்கிக்கிட்டிருக்கா"

சைக்கிரியாட் ரிஸ்ட் சார்ட்ல ஒர் ப்ராக்கெட்" () " வரைஞ்சாரு"

"இதை பார்த்தா என்ன தோணுது? "
"குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கா"

சைக்கிரியாட்ரிஸ்டு கடுப்பாயிட்டாரு. மார்க்கரை டேபிள் மேல வீசியெறிஞ்சாரு
நம்மாளு அதை பார்த்ததும். இது தான் இதுவேதான் என் பிரச்சினைன்னான்.

சில காரியங்களை செய்யறத விட கற்பனை பண்ணிக்கிறது சுகம். உதாரணமா காதலியோட அடுத்த பிறந்த நாள். அதுக்கு நாம தரப்போற கிஃப்ட்.

சில காரியங்களை நினைச்சு பார்த்துக்கறது சுகம். நாம அரை ட்ராயர் போட்டு திரிஞ்ச சமயம் கனவுக்கன்னியா தோணின ..அக்கா.

சில காரியங்களை (அதாங்க பலான காரியத்தை மட்டும் ) கற்பனையும் செய்யக்கூடாது, நினைச்சும் பார்க்க கூடாது செய்துர்ரதுதான் பெட்டர். நம்ம வெங்கடேஷ் மாதிரி செய்யவேண்டிய காலத்துல நினைச்சு பார்த்துக்கிட்டும், கற்பனை செய்துக்கிட்டும் இருந்துட்டா சைக்கிரியாட்ரிஸ்டை பார்க்க வேண்டியதாயிரும்.

நம்ம வெங்கடேஷ் இளமைல கொஞ்ச நாள் திருடனா கூட வாழ்ந்திருக்கான். ஒரு நாள் ஒரு முன்னாள் நடிகையின் வீட்டில் திருடப்போனான். "கத்திய காட்டி பீரோ சாவி எங்கே"னு மிரட்டினான். அவள் " அட கருமமே ! இல்லாத இல்லாத ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ஆம்பளை என் வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கான். ஆனா என்ன புண்ணீயம் எடுத்துக்காட்ட கத்திய தவிர வேறெதுவும் இல்லாதவனா இருக்கானே" ன்னு கண்ணீர் விட்டா.

பெண்கள்ள நிறைய பேரு நான் பொம்பளை எனக்கு அழகுதான் அழகு, அழகுதான் பாதுகாப்புன்னு நினைக்கிறாங்க. ஆனால் ஜஸ்ட் அந்த அஞ்சு நிமிஷமோ , இல்லே அந்த எண்ணம் வந்த பிறகோ தான் ஆண் ஆணாவோ, பெண் பெண்ணாவோ ஃபீல் பண்றாங்க. மத்த நேரமெல்லாம் நாமெல்லாரும் மனித பிறவிகள். பயம், பசி,கண்ணீர், வலி, இயற்கை உந்துதல் எல்லாமே ஆண்,பெண்ணுக்கு பொதுவானவை. இந்த கான்செப்டை புரிஞ்சிக்காம "ஃபிலிம்" காட்டியே வாழற பொம்பளைங்க தலையெழுத்து இது மாதிரி தான் முடியும்.

நீங்க கவனிச்சிருக்கமாட்டிங்கனு நினைக்கிறேன் இளம் வயசுல எப்படி பால் வேற்றுமை இல்லாம பழகறோமே அதே நிலை நடுத்தர வயசை தாண்டின பிறகு வந்துருது. அப்போ முட்டிவலில இருந்து "சகலமும்" பரிமாறிக்கொள்ளப்படும். ஏண்டான்னா "விஷயம்" தீர்ந்து போவுதில்ல.

மேலும் வயசான பெண்களை பார்த்தா அவங்கள்ள ஆண்மை மிளிரும். வயசான ஆண்களை பார்த்தா அவிகள்ள பெண்மை மிளிரும். அதான் ஆண்மையும்,பெண்மையும் தீர்ந்து போச்சுல்லா. ஆண்கள்ள இளமைல வெளிப்படாம இருந்த பெண்மையும், பெண்கள்ள இளமைல வெளிப்படாம இருந்த ஆண்மையும் வயசான காலத்துல வெளிப்படும். பாட்டிகள்ள சில பேருக்கு தாடியெல்லாம் வருதுங்கோவ்.

ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல ஃப்யூஸ் போயிருச்சு. ஹாஸ்டல் வார்டன் ஃப்யூஸ் ஆஃப் காலுக்கு போன் பண்ணாங்க.துள்ளலா ஒரு லைன் மேன் வந்தாரு. வார்டனம்மா " ம் ம் ..உள்ள போங்க"ன்னு அனுப்பினாங்க. உள்ள போனவரு ஒரு மணி நேரம் வரைக்கும் வெளிய வரவேயில்லை . வார்டனம்மா ரூம் ரூமா தேடிக்கிட்டே போனாங்க.கடைசி ரூம்கிட்டே டஸ்ட் பின் கிட்டே குத்துயிரும் குலையுயிருமா விழுந்து கிடந்தாரு லைன் மேன். உடனே வார்டனம்மா ஃப்யூஸ் ஆஃப் காலுக்கு மறுபடி போன் போட்டாங்க " உடனெ இன்னொரு லைன் மேனை அனுப்பச்சொன்னாங்க"

அந்தப்பக்கம் அடிஷ்னல் இஞ்சினீர் "உங்க ஹாஸ்டலுக்கு லைன் மேனை அனுப்பி ஒரு மணி நேரமாச்சு.அவருக்கு என்ன ஆச்சு"ன்னாரு

வார்டனம்மா சொன்னாங்க " ஹெவி ஓல்டேஜ் காரணமா நீங்க அனுப்பின லைன் மேனுக்கு ஃப்யூஸ் போயிருச்சு"

இந்த வகைல ஏராளமான ஜோக்ஸ் செலாவணில இருக்கு. ஆனால் உண்மை நிலவரம் என்னடான்னா லெஸ்பியனா இருக்கக்கூடிய பெண்கள், லெஸ்பியனா மாறக்கூடிய ஊசலாட்டத்துல இருக்க கூடிய பெண்கள் வேணம்னா தங்களுக்குள்ள அப்படி இப்படி இருப்பாகளோ என்னமோ தவிர லைன் மேனுக்கு ஃப்யூஸ் பிடுங்கிற அளவுக்கெல்லாம் போகமாட்டாங்கனு தான் நினைக்கிறேன்.

மேலும் இந்த மாதிரி சமாச்சாரத்துல பெண், பெண்ணோட கூட்டு சேர்ரது அப்புறம் கதை. லவ்வுக்கு தூதா அனுப்பவே க்ரூப்ல இருக்கிறதிலயே டம்மி பீஸாதான் செலக்ட் பண்ணிக்குவாக. அப்படியிருக்க ஃப்யூஸ் பிடுங்கற அளவுக்கு போறதெல்லாம் அதீத கற்பனை தான்.

ஆண்கள் வேணம்னா " மச்சான்.. என் லவ்வு உனக்கு தங்கச்சி மாதிரி .. என்ன சொன்னேன் தங்கச்சி மாதிரி "ன்னு ப்ரெயின் வாஷ் பண்ணி லவ் மேட்டர்ல கூட ஃப்ரெண்ட்ஸை கட் பண்ணி விடாம மெயின்டெயின் பண்ணுவாங்களே தவிர பெண்கள் இந்த விஷயத்துல ரொம்பவே உஷார். அவிகளுக்கு தெரியும் தங்களுக்கு ஆப்பு வைக்கப்போறது யாருன்னு. ஒரு அரை முழம் பூவிலயோ, வதங்கி போன ஒரு டிசம்பர் பூ காரணமாவோ 10 வருசம் பேசாம இருந்த தோழிகளை கூட நான் பார்த்திருககேன்.

ஆண்கள் உலகம் பெண்களை கேவலம் மேடு,பள்ளமா மட்டும் பார்க்கிற காரணத்தால ஆண்கள் உலகத்துல இப்படிப்பட்ட ஜோக்கெல்லாம் பிரபலமாயிருக்கு.
ஆனால் ஒன்னுங்க எங்க ஊர்ல ஒரு இளந்தலைவர் தன்னோட முக்கிய ஆதரவாளர்கள் நாலஞ்சு பேரோட பெண்டாட்டிகளை பிக் அப் பண்ணிட்டதோட அந்த நாலஞ்சு பேரையும் க்ரூப்பா கூட்டிக்கிட்டு "தங்க" போன கதைய கேள்விப்பட்டிருக்கேன்.

Thursday, February 25, 2010

உன்னால தான் ! நோ நோ உன்னாலதான் !

இது ஏதோ கல்யாணமாகாத கன்னிப்பெண்ணும் அவளோட காதலனும் கர்பத்துக்கப்புறம் பேசிக்கிற டைலாக் மாதிரியிருந்தா ஐம் சாரி. நான் ஆந்திர மானிலத்துல நக்ஸல்ஸுக்கும், மத்திய  உள் துறை மந்திரி சிதம்பரத்துக்குமிடையில நடக்கிற விவகாரத்தை சொல்ல வந்தேன்.

கண்ணி வெடில சாகற போலீஸ் மேலயோ , என்  கவுண்டர்ல சாகற நக்சல்ஸ் மேலயோ நமக்கு ( ஹி ஹி எனக்கு) சிம்பதி கிடையாது. ஏன்னா நக்ஸல் அவனோட லட்சியத்துக்காக ஃபைட் பண்றான், போலீஸ் அவன் வயித்துபாட்டுக்காக ஃபைட் பண்றான். ஆனால் ரெண்டுப் பக்கமும் அடி வாங்கற மத்தளம் கதையா நாசமா போறது மக்கள் தான்.

என்.டி.ஆர், ஒய்.எஸ்.ஆர்  கூட இவிகளோட பேச்சு வார்த்தை நடத்தி பார்த்தாச்சு. அதாவது ஏதோ  மந்திரி பேசுவாரு, அவருக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிங்க ப்ளு ப்ரிண்ட் கொடுப்பாங்க. இந்த பேச்சு வார்த்தைங்கறதே ஒரு கலை. இது இந்த ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் பார்ட்டிகளுக்கு ஒரு ம...ரும் தெரியாது. இவிக கான்வென்ட்ல படிச்சுட்டு தன் முன்னே தெரியற புல் கட்ட திங்க தலைய அசைச்சு அசைச்சு முன்னுக்கு ஓடற பட்டை கட்டின குதிரைக மாதிரி . ஏதோ கொஞ்சம் சமுதாயத்தோட இருந்த கம்யூனிகேஷனும் ஏ.சி. ரூம்லவேலைன்னு போன பிறகு உசோ ஆயிருது. அவரு அவரு சேம்பர்ல இருக்கிற வரை பெருமாள் மாதிரி எல்லாரும் அவருக்கு ஆராதனை. மந்திரி வந்துட்டா இவர் அவருக்கு செருப்பு தூக்கனும்

செருப்புன்னா ஞா வருது   நீதி மன்றத்துல , கோர்ட் நடக்கிற நேரத்துல கர்னூல் நீதிபதியை அதே கோர்ட்ல வேலை செய்யற பெண் டைப்பிஸ்ட் செருப்பாலடிச்சிருக்காங்க. தங்களுக்கு  கீழ வேலை செய்யற  அதிகாரிகளை, ஊழியர்களை கொத்தடிமையா நடத்தறதுல போலீஸ் டிப்பார்ட்மென்டை விட  கோரமான டிப்பார்ட்மென்ட் நீதித்துறை. போலீஸ் டிப்பார்ட்மென்ட்லயாவது "ஐயா" பெரிய ஐயாவுக்கு சேவகம் பண்ண போனப்ப காம்பவுண்டுக்குள்ள சக ட்ரைவர் கிட்டே இதையெல்லாம் பேசி மனச ஆத்திக்கலாம். நீதித்துறைல அந்த இழவு கூட கிடையாது.

யாரோ சொன்னாங்க ஒரு பெண் நீதிபதி. அவிகளை புருசன் காரன் செமை இம்சை கொடுத்து விவாகரத்து வாங்கின கேஸு அந்தம்மா. அவிக கோர்ட்ல ஆம்பளைனு சொல்லிக்கிட்டு ஒரு புழு போய் பெயிலுக்கு அப்ளை பண்ணா கூட  பேராதாம். பொய் கேசா இருந்தா கூட அந்த ஆம்பளை ஜெயிலுக்கு போயே ஆகனும். இதே நீதிபதி கிட்ட நான் ஸ்டெனோவா இருந்திருந்தா என்னாயிருக்கும் ? உங்க கற்பனைக்கே விட்டுர்ரன்.

சரி ரொம்பவே டைவர்ட் ஆயிட்டம் விஷயத்துக்கு வந்துர்ரன். ஆங் ! நக்சல் பேச்சு வார்த்தை. தமிழ் நாட்ல எழுத்தாள பெருந்தகைகள் விஷயம் எப்படியோ எனக்கு தெரியாது. ஆந்திராவை பொருத்தவரை எழுத்தாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் ,மனித உரிமைகளுக்கான சுதந்திர அமைப்புகளுக்கெல்லாம் நக்சல்ஸ் மேலே நல்ல சிம்பதி இருக்கு.

அவிக எங்கயோ காட்டுக்குள்ளாற இருந்தாலும் இவிக அவிகளுக்கு வக்காலத்து வாங்கிகிட்டே இருப்பாக. (தமிழ் நாட்ல ஈன்னு சிரிச்சா கூட ஈழங்கறான்னு தூக்கி உள்ளாற போட்டுர்ராங்களாமே நிஜமா ?

சரி பழைய கதை எதுக்கு ..லேட்டஸ் டெவலப்மென்டை பார்ப்போம்.
ஆயுதங்களை கைவிட்டால் நக்சல்ஸுடன்  பேச்சு வார்த்தைக்கு தயார்னு - மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம் அறிவிச்சது நினைவிருக்கலாம்.

இதையடுத்து  நக்சல் தலைவர் கிஷன் ஜி "  72 நாட்களுக்கு துப்பாக்கி சூடு நிறுத்தம் அறிவிச்சு  பேச்சு வார்த்தைக்கு தயார்னு அறிக்கை  உட்டார். அப்புறமா தான் அசல் கதையே .. செமை காமெடிபோங்க..

(அஸ்கு புஸ்கு) அறிக்கை  எழுத்துப்பூர்வமா இருக்கனும். என் ஃபேக்ஸ் நெம்பருக்கு ஃபேக்ஸ் பண்ணுங்க
- மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம்

பண்றோம். இதோ இந்த நெம்பருக்கு கால் பண்ணுங்க
- நக்சல் தலைவர் கிஷன் ஜி

ஃபேக்ஸ் வரவேயில்லை.
- மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம்

நக்சல்ஸ் கொடுத்தது போலீஸ் கான்ஸ்டபிள்  நெம்பர் . யாரும் எடுத்து பேசவே இல்லை
- மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம்

இவிக எம்மாத்தம்  பொறுப்பா நடந்துகிடறாங்களோ பார்த்தியளா ? இவிகளை எல்லாம் நம்பி நடுக்கூடத்துல பாதி ராத்திரி வரை சீரியல் பாக்குதுங்களே அதுகளை சொல்லனும்.

தெலுங்கானாவில் இரண்டு மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களும் மானில சராசரியை விட அதிக வளர்ச்சி. இதர பகுதிகளில் 4மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன.
-ஜெயபிரகாஷ் நாராயண், தலைவர், லோக் சத்தா

மறுபடி அவள் ‍ தொடர் கதை

மாயா அந்த விடிஞ்சும்   விடியாத சமயத்துல  கெய்சர்ல தண்ணி போட்டு தந்தா குளிச்சேன். உடல் துவட்டி அவள் தந்த அவளோட வெள்ளை நிற சல்வார் கமீஸை உடுத்திக்கிட்டேன். சூடா ஒரு கப் பால் கொடுத்தா தூக்கம் கண்ணை சுழட்ட சோஃபாலயே படுத்துட்டன். ஜன்னல் வழியா வெயில் சுள்ளுனு அடிக்குது.  நேத்துபோட்டிருந்த பேண்ட் சட்டை அயர்ன் பண்ணி கிடக்கு.எடுத்து உடுத்திக்கிட்டேன். வாஷ் பேசின்ல வாய் கொப்பளிச்சு முகம் அலம்பிக்கிட்டிருந்தேன். கண்ணாடில பாத்ரூம் கதவு திறக்கறதும் மாயா டர்க்கி டவலை மட்டும் கட்டிக்கிட்டு வெளிய வர்ரதும் தெரிஞ்சது. நான் "க்கும்"னு கனைச்சேன். என்னை திரும்பி பார்த்த  அவளோ எள்ளளவும் டென்ஷனாகல. தலைக்கு கட்டியிருந்த டவலை பிரிச்சு உதறி தலை துவட்ட ஆரம்பிச்சா. சின்ன சிரிப்போட " என்ன நல்ல தூக்கமா?"ன்னு கேட்கிறா.

எனக்கு கில்ட்டியா இருந்தது. "மாயா நான் புறப்படறேன்"னேன். அவளோ நத்திங் டூயிங். உனக்காக ஸ்பெஷல் ப்ரேக் ஃபாஸ்ட் ரெடி பண்ணியிருக்கேன்.ரெண்டு பேரும் சாப்டுட்டு ஸ்ட் ராங்கா ஒரு காஃபி சாப்டுட்டு ஒரே ஆட்டோல ட்ராவல்ஸுக்கு போறோம். டைம் என்னாச்சு தெரியும்லன்னிட்டு கடிகாரத்தை காட்டினா.  நான் டிவி ரிமோட்டை எடுத்து கையில வச்சுக்கிட்டு சட்டை பாக்கெட்டை தடவினேன். அதை பார்த்த மாயா "என்ன சிகரட் பாக்கட்டை தேடறியா இந்தா"ன்னிட்டு சிகரட் பாக்கட்டையும் தீப்பெட்டியையும்  என் மேல வீசினா.   நான் சிகரட்டை பத்த வச்சிக்கிட்டு யோசிச்சேன்.

எனக்கும் மாயாவுக்கும் இடையில உள்ள விசித்திரமான உறவை எந்த கேட்டகிரில சேர்க்கிறதுன்னே புரியலை. மாயா எப்போ ட்ரஸ் மாத்தினா ,எப்போ மேக்கப் பண்ணிக்கிட்டா, எப்போ கிச்சனுக்குள்ள நுழைஞ்சா எப்போ டிஃபன் கொண்டு வந்தான்னு கூட  கவனிக்கல. என்னென்னவோ குருட்டு யோசனை. அப்போ என் தலைல " நங்" குனு ஒரு குட்டு. ஏய் முதல்ல டிஃபன்  வேலையாகட்டும் அப்புறம் யோசிக்கலாம்னா. மவுனமா சாப்பிட்டேன்.

"இதான் சாப்பிடற லட்சணமா? தட்டை பார்த்து சாப்பிட்டா என்ன.. இதென்ன அல்சர் பேஷண்ட் மாதிரி இட்லிக்கு சட்னியை காட்டி காட்டி சாப்பிடறே .  நல்லா தொட்டு சாப்பிடு" மாயாவின் அதட்டல்கள் என் சிந்தனைவலைய அறுக்க முடியவில்லை. அறையை லாக் செய்து ஹேண்ட் பாகுடன் படியிறங்க ஆட்டோ வந்து நின்றது. நான் ஆச்சரியமாக பார்க்க " ஏய் முகேஷ் ! என்ன தூக்க கலக்கம் போகலியா இன்னும் ஏறு ஆட்டோல" என்று என் தோளை பிடித்து தள்ளினாள் . மவுனமாய் ஆட்டோ ஏறினேன்.

மாயா  எங்கள் ட்ராவல்ஸ் ஆஃபீஸ் அருகே இறங்கிகொள்ள நான் பக்கத்திலிருந்த ஓனர் வீட்டுக்கு சென்று சாவி வாங்கி ஆஃபீஸ் திறந்தேன். சற்று நேரத்தில் முனியம்மா வர ஆஃபீஸ் சுத்தமானது.  சாமி படத்துக்கு ஊதுவத்தி கொளுத்த கண்ணாடி கதவுக்கு அந்த பக்கம் என் அப்பா நிற்பது தெரிந்தது. 


அந்த கால டைரக்டர் பாலசந்தர் மாதிரி காதோரம் நரைச்ச க்ராப், பட்டை ப்ரேம் கண்ணாடி, கம்பளி பூச்சி கணக்கா அடர்த்தியான புருவம். ஹிட்லர் மீசைக்கு ரெண்டு பக்கம் அரும்பு மீசை ஒட்டிவச்ச மாதிரியான மீசை , கொட்டிப்போன தலை முடி கொடுத்த கூடுதல் நெற்றியில் விபூதி பட்டை, இரண்டு புருவங்களுக்கும் நடுவே தீக்குச்சியின் மருந்து முனையளவே   குங்கும பொட்டு,  காதுகள்ள இருந்து கரப்பான் பூச்சி மீசைய மட்டும் ஆட்டிக்காட்டற மாதிரி புஸு புஸு முடி. வெள்ளை கலர் அரைக்கை சட்டை ,ப்ளாக்  கொரியா பேண்ட். அப்பாவை பார்த்ததும் சீரியசா ஸ்லோகமெல்லாம் சொல்லி சாமி படங்களுக்கு அனாவசியமா மறுபடி மறுபடி ஊதுபத்தி புஐ காட்டினாலும் அப்பா அசையறதா காணோம். ஊதுவத்திய அதுக்கான ஸ்டாண்ட்ல செருகிட்டு வெளியே வந்தேன். அவர் உள்ளயே இரு இதோ வந்துட்டேன்னு மூக்கை நல்லா சிந்திட்டு ஃப்ரஷ்ஷா  இன்னொரு  சிட்டிகை மூக்கு பொடியை ரெண்டு ஓட்டைலயும் பேக் பண்ணிக்கிட்டு கர்சீஃபை கயிறு மாதிரியாக்கி மூக்கு  முனைய ஒரு தேய் தேச்சுட்டு உள்ள வந்துட்டாரு.

மாயா தலை நிமிர்ந்து அவரை பார்த்துட்டு என்னை பார்த்தாள்.மாயாவுக்கு என் அப்பாவ பத்தி நிறைய சொல்லியிருக்கேனே தவிர அவள்  நேர பார்த்ததில்ல. சுருக்கமா "அப்பா"ன்னேன். உடனே எந்திரிச்சு நாடகத்தனமா கை கூப்பி " நமஸ்தே"ன்னா. அப்பா என்னதான் ஏகபத்தினி விரதனா இருந்தாலும் பொம்பளைங்க அதுவும் ச்சுமாரா இருக்கிற பொம்பளைங்களை பார்த்தா கொஞ்சம் அதிகமாவே பேசுவார். அதுலயும் அந்த சந்தர்ப்பத்துல என்னை காச்சனும்னா உபமானம், உபமேயமெல்லாம் ஏ.சி.பி ரெயிட்ல லஞ்சப்பணம் மாதிரி கொட்டும்.

"எங்கடா போயிருந்தே.. ஒரு நாளைப்போல ராத்திரி 12 ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்தே இப்போ வெளிய ராத்தங்க கூட ஆரம்பிச்சுட்டயா? அப்படி என்னடா புடுங்கற வேலை..ராத்திரியெல்லாம்  எவளோட இருந்த?"

என் அப்பா இதை விட மோசமாக தேவகவுடா ரேஞ்சில் எல்லாம் பேசினதுண்டு.  ஆனால் இப்ப மாயா எதிர்லன்னும் போது கொஞ்சம் சுர்ருன்னுச்சு. மாயாவோட முகத்தை பார்த்தேன். அதுல சின்ன கீறல் மாதிரி ஒரு சிரிப்பு. மாயா சகஜமா எடுத்துக்கிட்டாங்கறது கன்ஃபார்ம் ஆனதுமே அப்பா புலம்பலை கன்டின்யூ பண்ணிட்டார்.

"நான் தான் சொல்லியிருக்கேன் இல்லியா ராத்திரி எந்த நேரத்துக்குன்னாலும் சரி வீட்டை வந்து சேரு, பெல்லடிச்சா நான்  வந்து திறக்கறேன்னு சொல்லியிருக்கெனில்லயா..இன்னம் என்னடா கேடு உனக்கு? உண்மைய சொல்லு ராத்திரியெல்லாம் எங்கே இருந்தே?"

நான் அந்த நேரத்துக்கு  நல்ல  பிட்டா எதை  போடலாம்னு  யோசிச்சிட்டிருந்தப்போ மாயா , "அங்கிள் ! ராத்திரி முகேஷ் என்னோட தான் எங்க வில்லேஜுக்கு வந்திருந்தாப்ல. எங்க  சொந்தக்காரங்க திருமலால  கல்யாணத்துக்கு நம்ம கிட்டே தான் பஸ் புக் பண்ணியிருந்தாங்க. ட்ரைவருக்கு பக்கத்து வில்லேஜ்ல தான் வீடு.   பாவம் அவனுக்கு இந்த வாரமெல்லாம் ரெஸ்டே கிடையாது  .அவன் தான்  முகேஷு! வண்டிய  ராத்திரி வில்லேஜுக்கு கொண்டாந்துரு அப்பறம் நான் திருமலா போறேன்னு கெஞ்சிக்கிட்டான்" ன்னா.

என் அப்பாவுக்கு வந்ததே கோபம் " நல்லாருக்கும்மா நீங்க பண்றது. அசலே இவன் குரங்கு. இவனை நம்பி நான் டூவீலர் கூட வாங்கி தரலை நீங்க பஸ்ஸையே கொடுத்திருக்கிங்க. ஒரு நாள் என் டிவிஎஸ்ஸை எடுத்துக்கிட்டு போனான் . எவ்ளதான் ஸ்பீட் போனான்னு தெரியாது இஞ்சின் சீஸ் ஆயிருச்சு. இவனை போய் ட்ரைவரா போட்டு..  " தொடர்ந்து பேச வார்த்தைகள் வராம அவர் தவிக்க மாயா இடை மறிச்சு பேச ஆரம்பிச்சாள்.

" அதான்..அதேதான் ஒரு நாள் இவன் வண்டில ஏறினேன் அங்கிள் அய்யய்யோ வண்டில போறோமா ஏரோப்ளேன்ல போறமானு சந்தேகம் வந்துருச்சு.கண்ல தண்ணியா கொட்டுது .. அந்தமாதிரி ஓவர் ஸ்பீட் போய் எதுனா ஆயிரபோவுதுன்னு நானும் கூடப்போனேன் அங்கிள். கல்யாண கோஷ்டி எல்லாம் புறப்பட பாதி ராத்திரி ஆயிருச்சு. அந்த நேரத்துல எதுக்கு ஜர்னின்னு நான் தான் எங்க வீட்ல படுத்துக்க சொல்லிட்டன் அங்கிள். வீட்ல அக்காங்க, மாமாங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். பையன் அரவிந்த் சாமி மாதிரி க்ளாஸா இருக்கான். மாஸா டூர் பஸ்ஸ ஓட்டிக்கிட்டுவந்தனான்னு ராத்திரியெல்லாம் செம உபச்சாரம் முகேஷுக்கு"

குறைஞ்சது அரை மணி  நேரமாவது காச்சியிருக்க வேண்டிய மனுஷன்  சுதியிறங்கி போய் "சரிம்மா.. இந்த ஒரு தடவை சரி .இனி எப்பவும் இவனை நம்பி ஸ்டீரிங்கை கொடுக்காதிங்க"ன்னிட்டு எதிர்க்க நாயர் கடைல டீ வரவச்சு குடிக்க வச்சுட்டு இன்னொரு பாட்டம் மூக்குப்பொடி போட்டுக்கிட்டுத்தான் போனார்.

அவர் போனதும் மாயா சுத்தி முத்தி பார்த்துட்டு என் தொடைல கிள்ளி "படுவா ராஸ்கல் என் கிட்டே வரப்ப மட்டும் 9 ஆச்சு 9.10 ஆச்சுனு விவிதபாரதி மாதிரி டைம் சொல்வே . பாதி ராத்திரி வரை எங்கே போற  நீ.." என்றாள்.

" அதெல்லாம் நீ கேட்க கூடாது .. நான் சொல்லக்கூடாது."ன்னு கலாய்ச்சிக்கிட்டு இருந்தபப் ஒரு ஐயப்ப சாமி கோஷ்டி வந்தது. வியாபாரத்துல மூழ்கிட்டோம். ஒன்னு பின்னால ஒன்னு ஏதோ கமிட்மென்ட் ரோட் டாக்ஸ் கட்டறது, அடுத்த மாச டூருக்கு பாம்லெட் ,போஸ்டர் ரெடி பண்றதுன்னு  நேரம் ஓடிப்போச்சு.

வெள்ளிக்கிழமைகள்ள ராத்திரி  பூஜை போட்டுட்டு  7.30  மணிக்கே ஆஃபீஸ் க்ளோஸ் பண்றது வழக்கம். ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடக்கிறப்ப மாயா  "இன்னைக்கு  நீ 9 ஆச்சு 9.10 ஆச்சுனு சீன் போட்டு தப்பிக்க முடியாது. உங்கப்பா தான் ராத்திரி 2.30 மணிக்கு கூட வா கதவு திறக்கறேன்னிட்டாரே "ன்னிட்டு  கண் சிமிட்டி மர்மமா சிரிச்சா.

(தொடரும்

நவீன விக்கிரமாதித்தன் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் புளிய  மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை வெட்டி வீழ்த்தினான். அதை தன் தோளில் சுமந்தபடி நடந்தான்.அதுவரை மவுனமாக இருந்த வேதாளம் கல கலவென்று சிரித்தது. "மன்னனே ! அறிமுக எழுத்தாளன் எத்தனை முறை தன் படைப்புகள் திரும்பி வந்தாலும், எத்தனை ஆண்டுகளுக்கு கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தாலும் மீண்டும் மீண்டும் கதை எழுதி அனுப்புவதை போல் நீயும் சளைக்காமல் என்னை சுமந்து செல்லவே பார்க்கிறாய். சரி அலுப்பு தெரியாமல் இருக்க ஒரு கதை சொல்கிறேன் கேள். கதை முடிவில் நான் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிந்தும் சொல்லாவிட்டால் உன் தலை லேண்ட் மைன் மீது தலை வைத்து படுத்தாற்போல் சிதறிவிடும் ஓகேவா " என்றது.

 விக்கிரமாதித்தனும் " என்னடா இது லொள்ளா போச்சு நானும் என்.டி.ஆர், எஸ்.வி,ரங்கா ராவ் காலத்துல இருந்து இதையே செய்துட்டிருக்கேன். இந்த வேதாளம் கேள்வி கேட்குது பதில் க்ளிக் ஆகுது பதில் தெரிஞ்சும் சொல்லலன்னா தலை வெடிச்சுருமேனு சொல்லித்தொலைக்கிறேன்.வேதாளம் மவுனம் கலைஞ்சு மறுபடி பு.மரத்துக்கே போயிருது. மறுபடி அடியை பிடிடா பரதப்பட்டானு ஆயிருது." என்று சிந்தித்தபடி "அப்படியே ஆகட்டும் வேதாளமே" என்றான். வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது.

இந்தியாவுல .. ஒரு மானிலம். அங்கே ஒரு சுமார் டவுன். அங்கே ஒரு  விளம்பர ஏஜென்சி. வில்லேஜ்ல இருந்து வந்து வயித்துபாட்டுக்காக  டவுனுக்கு வந்த இளைஞன்  அதுல வந்து சேர்ந்துட்டான். அங்கே ஒரு குடிகார ஆர்ட்டிஸ்ட். வேலைல புலினு வை. ஆனால் மொடா குடியன். புதுப்பையன் வந்தானா அந்த குடிகார ஆர்ட்டிஸ்டுக்கு எங்கில்லாத வேகம் வந்துருச்சு. பையனை தன் சிஷ்யனா ஸ்வீகரிச்சிக்கிட்டான். காலப்போக்குல புதுப்பையன் நல்ல கமர்ஷியல் ஆர்ட்டிஸ்டா தயாராயிட்டான்.

தனியா போய் கடை போட்டான். தொழில் நல்லாவே சூடு பிடிச்சது கல்யாணமுமாச்சு. இரண்டு குழந்தைகளையும் பெத்துட்டான்.  மாசத்துல எப்பவோ ஒருதரம்னு இருந்த குடி வாரம் ஒரு தடவையாச்சு. அப்புறம் தினமும்னு ஆச்சு. அப்புறம் மதியம் ஒரு குவார்ட்டர், ராத்திரி  ஒரு குவார்ட்டர்னு ஆச்சு. வசதி ஜாஸ்தியானபிறகு பெண்டாட்டிய பார்த்தா வேலைக்காரி மாதிரி இருக்காளேனு தோணுச்சு. பார்ட்டிங்களை என்னதான் சத்தாய்ச்சாலும் வாரக்கணக்குல திரிஞ்சு வேலை செய்துகிட்டு போனாங்க.

அந்த நேரம் பார்த்து மாலா அறிமுகமானாள். இவனா ருசி கண்ட பூனை. அவளா பருவத்தின் வாசல்ல இருந்தா.பெட்ரோல் இல்லாமயே பத்திக்கிச்சு.அவள் கர்பமானாள். விஷயம் தெரிஞ்சு பொண்ணு வீட்டுக்காரங்க ரெண்டாமரம் தெரியாம சுத்தம் பண்ணி வீட்ல வச்சுக்கிட்டாங்க. இவனா சாதாரணமாவே அலைபாயற புத்தி. குடி வேற ஓவரா போயிட்டே இருக்கு. மறுபடி இவன் புத்தி அந்த பக்கம் திரும்புச்சு. அந்த பொண்ணு மறுபடி கர்பமானாள். இந்த முறை அவள் வீட்டுக்காரங்க ரோட்ல இறங்கிட்டாங்க. இவன் வீட்டுக்கும், கடைக்கும் பெரிய பூட்டா போட வச்சாங்க. இவனுக்கும் செமை மாத்து. ஊரை விட்டு ஓடினாதான் சாவின்னுட்டாங்க.  ஒருவாரம் அல்லாடினான். அவிக கால்ல விழுந்து ஏரியாவ விட்டு போயிர்ரதா சத்தியம் பண்ணி சாவி வாங்கினான்.

இதுக்கிடைல பெண்டாட்டி பிரச்சினை வேற. அவள் மனசு உடைஞ்சு போயி பிள்ளைகளோட பூச்சி மருந்து கடைக்கு போய் பூச்சி மருந்து கேட்க அந்த கடைகாரன் நல்லவன் போல. இந்த பொம்பள அவதாரத்தை பார்த்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி கடைக்கு வந்த கான்ஸ்டபிள் கிட்டே ஒப்படைச்சுட்டான்.  எஸ்.ஐ ஜாதில செட்டியாராம். இதுவரை ஒரு கெட்ட வார்த்தையால கூட எவனையும் திட்டினதில்லையாம். ஆனால் நம்மாளை பின்னி பெடலெடுத்துட்டார்.

இதெல்லாம் நடந்து 2 வருஷம் கூட ஆகலை. ஏதோ பத்து மணிக்கு கடைக்கு போனோமா, வந்ததை வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு வைன்ஸ் ஷாப் போனோமா மூக்கு பிடிக்க குடிச்சமா வீட்டுக்கு வந்து கவுந்தடிச்சு படுத்தமானு காலத்தை ஓட்டினான். பார்ட்டிங்களுக்கு போர்டு இத்யாதி சொன்ன நேரத்துல டெலிவரி தர்ரதில்லை. உதவியாளுகளுக்கு கூலி தர்ரதில்லை, போர்ட் அடிச்ச கார்பெண்டருக்கு கூலி தர்ரதில்லை. கூட மாட எழுதற பெயிண்டர்களுக்கு கூலி நை. இப்படி பேரை சுத்தமா கெடுத்துக்கிட்டான். அந்த நேரம் பார்த்து  டிஜிட்டல் யுகம் ஆரம்பமாச்சு. கதியில்லாத குறைக்கு இவனை பிடிச்சி தொங்கினவனெல்லாம் டிஜிட்டலுக்கு மாறிட்டான். வெறுமனே சுவத்துல "இவ்விடம் மூத்திரம் பெய்யாதீர் "னு எழுதர மாதிரியான வேலைகள் மட்டும் வர ஆரம்பிச்சது.கடைய காலி பண்ணிட்டான். வீட்டோட முடங்கிட்டான். ஏதோ மச்சான் காரன் தங்கச்சிக்கு வீட்டுசெலவுக்கு பணம் கொடுத்தா அதை கூட திருடி குடிக்க ஆரம்பிச்சான்.

ஒரு நாள் ரொம்ப நாளைக்கப்புறம்  ஜில்லுனு பீர் சாப்பிட்டான். மூத்திரம் வெள்ளமா போக ஆரம்பிச்சது. சரி பீர் சாப்டமில்ல அதான்னு நினைச்சிக்கிட்டான். இது வாரக்கணக்குல தொடரவே டாக்டர் கிட்டே போனான். ஷுகர்னிட்டாங்க. சப்த நாடியும் ஒடுங்கிபோச்சு. நாள்பட நாள்பட ஏற்கெனவே மினுக் மினுக்குன்னிருந்த பலான கெப்பாசிட்டியும் அதல பாதாளத்துக்கு போயிருச்சு. ஊரான் வீட்டு பொண்ணை காக்கா கடி கடிச்சே ரெண்டு தடவை கர்பம் பண்ண ஆண்மை சூடு ஆறிப்போச்சு. ஏற்கெனவே லாலா பழக்கத்தால இருந்த லேசான கையுதறல் இப்போ அதிகமாயிருச்சு. வீக்னெஸ். பேக் கிரவுண்ட் பெயிண்ட் அடிச்சாலே கையெல்லாம் விட்டுப்போவுது. புருவம் வரையப்போனா கை நடுங்கி ப்ரஷ் உதட்டுமேல வந்து நிற்குது.

லாலாவையா நிறுத்த முடியலை. ஷுகரா முத்தி முத்தி ப்ளட் ஷுகரா மாறிருச்சு. இந்த இழவுல ஆளில்லாத நேரம் ஒரு போர்டை நகர்த்த போக கால் விரல் நசுங்கி புண்னாகி அது புரையோடி ரெண்டு கால் விரலை எடுத்துட்டாங்க."

வேதாளம் மேலும் ஏதோ சொல்லப்போக விக்கிரமாதித்தன் " ஷிட் என்ன வேதாளம் என்னா கதை இது இழவு. சீக்கிரம் உன் கேள்விய கேளு"என்றான்.

வேதாளம் " விக்கிரமாதித்தா ! சைக்காலஜிஸ்டுங்க குடிப்பழக்கத்துக்கு        நிப்பிள் காம்ப்ளெக்ஸ், என்விரான்மென்டல் ஃபேக்டர், சப்ரெஸ்ட் செக்ஸுவல் அர்ஜ் அது இதுனு என்னென்னவோ சொல்றாங்கல்லியா. நம்மாளு கிராமத்துல பிறந்து வளர்ந்த பையன். சின்ன வயசுலயே தொழில் கத்துக்கிட்டு தொழில்ல  இறங்கிட்டான். காலாகாலத்துல கல்யாணமுமாச்சு. அப்புறம் எதுக்கு அவனுக்கு குடிப்பழக்கம் வந்தது? ஒரு கமர்ஷியல் ஆர்ட்டிஸ்டுக்கு கை உதற ஆரம்பிச்சா அப்புறம் அவன் பேக் கிரவுண்டு அடிக்கதானே லாயக்கு. வீட்ல பெண்டாட்டி இருக்கிறச்ச இன்னொரு கன்னிப்பொண்ணை அவன் ஏன் கெடுக்கனும்?, அவனுக்கு ஷுகர் வந்து ஏன் பிஸ்டன் வேலை செய்யாம போகனும். ஏன் கால் விரலை கட் பண்ணி எடுக்கனும் ?
இதுக்கெல்லாம் விடை தெரிஞ்சும் சரியான பதிலை சொல்லலன்னா உன் தலை க்ளைமோர் பாம் போட்ட மாதிரி சிதறிடும்" என்றது.

விக்கிரமாதித்தன் பதில் சொல்ல ஆரம்பித்தான். இந்த கேள்விகளுக்கு நான் பதில் சொல்றத விட சித்தூர் முருகேசன் பதில் சொன்னா பக்காவா இருக்கும். ஓவர் டு முருகேசன்.

"ஹலோ ! மிஸ்டர் வேதாளம் அண்ட் விக்கிரமாதித்தன் அவர்களே, கதைய கேட்டவரை  நான் என்ன நினைக்கிறேன்னா நீங்க சொல்ற ஆளுக்கு ஜாதகத்துல சுக்கிரன் வீக்கா இருக்கனும். அதனால தான் சோத்துக்கு கதியில்லாம வீடு வாசலை விட்டு டவுனுக்கு வந்தான். அவன் ஜாதகத்துல சுக்கிரன் வீக்கா இருந்தாலும் சுக்கிரன் காரகத்வம் வகிக்கிற கமர்ஷியல் ஆர்ட்ஸ்ல இறங்கினது முதல் தப்பு.

சோத்துக்கில்லாதப்ப சுக்கிர தோஷம் பரிகாரமாகி கலைல தேர்ந்தான். ஆனால் அதே தொழில்ல காசு புரள ஆரம்பிச்சதும் சுக்கிரன் வேலைய காட்ட ஆரம்பிச்சுட்டார். அதனாலதான் மனைவியிருக்க இன்னொரு பெண்ணை நாடற புத்தி வந்தது. ஜாதக பலன்கிறது  கரண்ட் அக்கவுண்ட் மாதிரி. கரண்ட் அக்கவுண்ட்ல  பணமில்லாத நேரம்   பந்தாவா ரப்பர் செக் விட்டாலும் அது ஹானர் ஆயிரும். ஆனால் அதுக்கு நாம வட்டி கட்ட வேண்டி வந்துரும். ஏதோ ஜொள் விடறதோட விட்டுருந்தாலும் பரவாயில்லே இன்னொரு கன்னிப்பெண்ணை வேற அனுபவிக்க ஆரம்பிச்சான். அதனால வெறியேறிப்போன சுக்கிரன் ஷுகரை கொடுத்து பிஸ்டன் வேலை செய்யாம பண்ணிட்டாரு.

சுக்கிரன் வீக்கா இருந்து சோத்துக்கு லாட்டரியடிக்கிற நேரத்துல ஆர்ட்ஸ் கத்துக்க வந்ததை கூட மன்னிக்கலாம். ஆனால் அதை குடிகாரனான குருகிட்டே கத்துக்கிட்டது பெரிய  தப்பாயிருச்சு. குருகிட்டே வித்தை கத்துக்கிடறோம். வெறும் வித்தை மட்டுமா வரும். அவரோட கர்மமும் சேர்ந்துவரும்.  அது வந்து சேராம இருக்கத்தான் குரு சேவை பண்ணி கருமத்தை தொலைக்கிறதும், குரு தட்சிணை வழங்கறதும் பண்றோம். இவனெங்கே குரு தட்சிணை கொடுத்தான். அதான் குருவோட கருமம் அதான் குடிப்பழக்கம் இவனுக்கு தொத்திக்கிச்சு."

சித்தூர் முருகேசனின் சரியான பதிலால் திருப்தியுற்ற வேதாளம் கிளம்பி மீண்டும் புளியமரத்திலேறிவிட்டது. தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்திலேற துவங்கினான்.

Wednesday, February 24, 2010

அதிகாலை டாட் காமில் எனது தொடர் கட்டுரை

அதிகாலை டாட் காமில் எனது தொடர் கட்டுரை வெளியாக இருப்பதை பணிவுடன் தெரிவிக்கிறேன். திரு நவீன் அவர்கள் பத்திரிக்கையுல பிரமுகர்களுக்கே (முக்கியமாய் எடிட்டர்கள்) உரிய  எவ்வித பந்தாவும் இன்றி ஃபேஸ்புக்கில் உங்கள் படைப்புகளை அதிகாலைக்கு அனுப்புங்கள் என்று கேட்டபோதே என் மனதில் இடம் பிடித்துவிட்டார். என்றாலும் அதிகாலைக்கு தொடர்ந்து என் படைப்புகளை அனுப்ப முடியாது போனது. நேற்று யாஹூ சாட்டில் அகஸ்மாத்தாய் "மாட்டி"னார் திரு நவீன். எடிட்டோரியல்லயே சேரலாமே என்று ஆஃபர் செய்தார். ஆனால் வளர்ச்சி என்பது படிப்படியாகவே அமைய வேண்டும் என்பது என் கொள்கை. அல்பாயுசு கேஸுகள் தாம் அலைந்து பறை சாற்றும் என்பது என் அனுபவம்.

எடிட்டோரியல் வாய்ப்புக்கு என் தகுதியின்மையை கூறி நளினமாக மறுத்து  தொடர் கட்டுரை எழுத விருப்பம் தெரிவித்தேன். தலைப்பை சொல்ல சொன்னார்.  நம்ம ப்ளாக் பேர் சொல்ல காரணமே பலான ஜோக்குகளும், பலான சாமாச்சாரங்களும் தானே அந்த நன்றியுணர்வுடன் " நிர்வாண  நிஜங்கள் " என்ற தலைப்பை சொன்னேன். இன்றே முதல் கட்டுரையை அதிகாலை டாட்காமுக்கு அனுப்புகிறேன்.

தொழில் துறையின் புடவை சுற்றில் மோகம் கொண்டு விவசாயத்துறையை அரசுகள் கண்டு கொள்ளாது இருக்கும் முட்டாள் தனத்தை நிர்வாண நிஜத்தை முதல் கட்டுரையில் கிழித்துள்ளேன்.

மேற்படி கட்டுரையின் முதல் பத்தி மட்டும் இங்கே தொடர்ந்து படிக்க சிரமம் பாராது அதிகாலை டாட் காம் செல்ல இங்கு அழுத்தவும்.  ப்ளீஸ் ! (இந்த அழுத்தற சமாச்சாரத்தை அரசு அலுவலகங்களில் மட்டுமில்லாம எங்கயும் தொடர்ர தமிழர் கலாச்சாரம் வாழ்க !)


நிர்வாண நிஜங்கள்
"சத்யமேவஜெயதே"ன்னு  ஸ்லோகன் வச்சிக்கிட்டு  நம்ம அரசாங்கங்கள் அடிக்கிற  கூத்தை சொல்ல ஆரம்பிச்சா கலியுகம் முடிஞ்சு பிரளயமே வந்துரும். (அத்தனை காலம் பிடிக்கும்னு சொல்ல வந்தேங்கண்ணா.  நம்ம சனம் தோல் தடிச்சி போயி கிடக்கு . ஆயிரம் நிஜங்கள் வெடிச்சாலும் பெண்கள் அழுகாச்சி  சீரியல்களையும்,ஆண்கள் சில்லறை பொறுக்கறதையும் விட்டு வெளிய வரவே மாட்டாங்க, புரட்சி என்ன இழவு மாற்றம் கூட வராது ).

பொருளாதார சிறப்பு மண்டலங்கள் பேரால பொன் விளையற பூமியை பறிச்சிக்கிட்டு, சிவப்பு நாடாத்தனத்தால அதை வருச கணக்கில வெத்தா விடறது, நிலத்தை இழந்தவனுக்கு நஷ்ட ஈடு தராம பெப்பே காட்டறது. அந்த நிலம் ஒதுக்கப்பட்ட கார்ப்போரேட் கம்பெனிகள்  நோகாம ரியல் எஸ்டேட் வியாபாரம் பண்றது, நிலத்தை இழந்த விவசாயி கூலியாகி, அல்லாடறது, தற்கொலை பண்ணிக்கிட்டு குடும்பத்தை நட்டாத்துல விடறது  அந்த குடும்பத்து இளைஞர்கள் வழிப்பறி கொள்ளைக்காரர்களா மார்ரது, பெண்கள் விலைமாதர்களா மார்ரது  இதெல்லாம் நம்ம கண் முன்னாடி நடக்கிற நிஜங்கள்.

ஆந்திரத்துல சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமங்கள்ள ட்ரான்ஸ்மார்மர்களை அடிச்சு தூள் பண்ணி அதிலிருக்கிற  செம்பு கம்பிகளை ஒரு கூட்டம் திருடிக்கிட்டிருந்தது. லேட்டா முழிச்சிக்கிட்ட போலீஸ் தந்தி பாஷைல வலை வீசி தேடி பிடிச்சப்ப அவங்கல்லாம் பீகார்,உ.பி மானிலங்களில்  விவசாய குடும்பங்களை சேர்ந்த   இளைஞர்கள், லோக்கல் குவாரிகளில்,ஃபேக்டரிகளில்  வேலை பார்க்க வந்தவர்கள். குவாரி,ஃபேக்டரி  ஓனர்களின் உழைப்பு சுரண்டலால், கொத்தடிமைத்தனத்தில் வெறுப்பாகி கொள்ளைக்காரர்களானவர்கள்னு என்று தெரிய வந்தது.

பாருங்க ஆட்சியாளர்கள் விவசாயம் லாபகரமா இல்லே. விளை நிலங்கள்ள பெரிய பெரிய தொழிற்சாலைகளை கட்டி  தொழில் மயமாக்கினா பொருளாதாரம் முன்னேறும்னு நினைக்கிறாங்க. ஆனா நடக்கிறது என்ன?

எங்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு ரொம்பவே அறிவாளி. இப்போ விவசாயம் பண்றவங்க ஓஞ்சு (ஒழிந்து) போட்டும். அவிக பசங்களாவது அதுல இறங்க கூடாது, கம்ப்யூட்டர் கத்துக்கிடனும்னிட்டார். நம்ம ஆற்காடு வீராசாமி அந்தளவுக்கு அறிவாளி இல்லேன்னாலும் ( பவர் சப்ளை ஒழுங்காயிருந்தாதானே அறிவாளி ஆகமுடியும்) விவசாயிகள் விவசாயத்தோடவே வேற ஏதாச்சும் தொழிலும் பண்ணனும்னு இலவச யோசனை தந்திருக்கார்.

Tuesday, February 23, 2010

பலான ஜோக் :மம்தா மேடம் படிக்காதிங்க !

கவிதை07 க்கு வருகை தந்துள்ள (ந)அன்பரே!
இப்பல்லாம் தினசரி இரண்டு பதிவுகள் போடறேன். ஒன்னு மறுபடி அவளை நாவலோட அத்தியாயம். இன்னொன்னு வழக்கமா போடற பதிவு. ரெண்டையும் படிச்சு பிரிச்சு மேஞ்சுரனும்ணா.. உங்க மறுமொழிக்காக காத்திருக்கேன்

முதல்ல இந்த பதிவுக்கு இளமை இதோ இதோ, என்றும் பதினாறு இப்படியெல்லாம் தலைப்பை வச்சி எழுதினேன்.
இந்த தலைப்பை பார்த்ததுமே சகலகலா வல்லவன் படத்துல வர்ர கமலோட பாட்டு ஞா வந்திருந்தா உங்களுக்கு வயசாயிருச்சுனு அர்த்தம்."என்றும் பதினாறு"பாட்டு ஞா வந்தா ஆடிப்போன வயசுன்னு அர்த்தம்


இளமைன்னா சொட்டைத்தலைல இருக்கிற நாலு மயிருக்கு டை போட்டுக்கறதோ ,தொப்பை பிதுங்க டீ ஷர்ட், புட்டம் பிதுங்க ஜீன்ஸ் அணியறதோ, பிளாட்பாரத்துல விக்கிற பத்து ரூபா கருப்பு கண்ணாடி போட்டுக்கறதோ இல்லே.

நாள் தவறாம பெண்டாட்டி மேல் பாயறது இல்லே. பாய முடியலியேனு கண்ட லாட்ஜு வைத்தியரை போய் பார்த்து லேகியம் வாங்கறது, எந்த ஃப்ரெண்ட் ஃபாரின் போறான்னு பார்த்து வயாக்ராவுக்கு முயற்சி பண்றதில்லே.

பின்னே எதுதான் இளமை? இளமைங்கறது உடலை பொருத்த விஷயமில்லை. அது மனசை பொருத்த விஷயம். மனிதனோட மனசு புது விஷயங்களை கிரகிச்சுக்கிற ஃப்ளெக்சிபிள் கண்டிஷன்ல இருக்கனும் . சில உணர்வுகள், ரசனைகள் தேஞ்சி போயிராத பார்த்துக்கனம் . அதான் இளமை.

மனம் என்பது என்ன ? நம் நினைவுகள். ஒரு ஹார்ட் டிஸ்க்ல இருக்கிற ஃபைல்ஸுக்கே எத்தனையோ பாதுகாப்பு ஏற்பாடுகளை வச்சிருக்காங்க. உம். பை மிஸ்டேக் டெலிட் பண்ணிட்டா கூட அது ரீ சைக்கிள்பின்ல இருக்கும். மறுபடி ரீஸ்டோர் பண்ணிக்கலாம். ஆனால் மனித நினைவுகளுக்கு இந்த மாதிரி ஒரு இழவு கியாரண்டியும் கிடையாது. அவன் என்ன சொல்லப்படுதோ அதை கேட்டு பதிவு பண்ணிக்கிறதில்லை. அவன் எதை பார்க்கிறானோ அதை மட்டும் ரிக்கார்ட் பண்ணிக்கிறதில்லை. சொல்லப்படறதுல அவன் எதை கேட்க விரும்பறானோ அதை மட்டும் கேட்டுக்கறான். காட்டப்படறதுல அவன் எதை பார்க்க விரும்பறானோ அதை மட்டும் பார்க்கிறான்.

ஒரு பலான ஜோக்

ஒரு பாடாவதி படம். முதல் நாள்ளயிருந்தே தியேட்டர்ல ஈ ஓடுது. ஆனால் ஒருத்தன் மட்டும் எவ்ரி ஷோ விடாம வந்துர்ரான். ஒரு நாள் மேனேஜருக்கு டவுட் வந்துட்டு கேட்கிறார்."அப்படி என்னதான் இருக்குப்பா இந்த படத்துல ?"

அதுக்கு அவன் பதில் சொல்றான். "

இதுல ஒரு பொம்பளை ரயில்வே ட்ராக்கை ஒட்டியிருக்கிற பம்பு செட்ல குளிக்கப்போறா. புடவை,ரவிக்கை எல்லாம் அவுக்கறா.உள்பாவாடைய அவுக்கற நேரத்துல ரயில் வந்து மறைச்சுருது. ஒர் நாள்னா அந்த ரயில் லேட்டா வராதானுதான் டெய்லி வரேன்"

மனிதர்களோட அப்சர்வேஷனும், க்ராஸ்பிங் தி இன்ஃபர்மேசனும் இப்படித்தான் இருக்கும்.

மனுஷனோட மெமரில ரெண்டு வகையிருக்கு. இதுல பர்மனன்ட் மெமரியும் இருக்கு. டெம்ப்ரரி மெமரியும் இருக்கு.

ஒதகாத விஷயங்களை எல்லாம் பர்மெனன்ட் மெமரிக்கு ஷிப்ட் பண்ணிட்டா அங்கே கஞ்செஷன் ஏற்பட்டுரும். இன்ஃபர்மேஷனை வடிகட்டித்தான் மூளைக்கு அனுப்பனும்.நானெல்லாம் அப்படித்தான் எதிராளிக்கு முதல்லயே சொல்லிருவன்.

"த பாரு எனக்கு நேரமில்லே. நீ சுருக்கமா ஸ்ட்ரெயிட்டா விஷயத்தை சொல்லிட்டா அப்படியே புடிச்சுக்குவன். ச்சும்மா வளவளனு சொல்லிட்டிருந்தா அசல் விஷயத்தை கோட்டை விட்டுருவன்"

வர்ர இன்ஃபர்மேஷனை அசெஸ் பண்ணனும்:

இது நமக்கு தேவையா ? இன்னைக்கோ நாளைக்கோ தேவையா ? வேறெங்கும் கிடைக்காதா? எழுதி வச்சிக்கிட்டா எதுனா வில்லங்கம் வருமா? செல் ஃபோன்ல ஃபீட் பண்ண முடியுமா?

தேவையில்லாததை ரிஜெக்ட் பண்ணிரனும். எப்பவோ ராம் நகர் காலனில நான் சைட் அடிக்க போனப்ப என்னை ஆள் வச்சு அடிச்ச ஆளுக்கு ஆக்சிடெண்ட் ஆச்சுன்னா "அப்படியா"ன்னு கேட்டுக்கலாம். ஸ்வாரஸ்யத்துக்காக அதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி எவனோட வயித்தெரிச்சலையாவது கொட்டிக்கிட்டானானும் தெரிஞ்சுக்கலாம். அதை விட்டுட்டு அதுக்கு முன்ன மாசம் என்ன செய்தான், முன் வாரம் என்ன செய்தான் இந்த இழவெல்லாம் குப்பை.

இதை எப்படி ஸ்டோர் பண்றது ?
இன்ஃபர்மேசன் என்பது உதிரி பூ மாதிரி. மனித நினைவு பூச்சரம் மாதிரி . இந்த பூவை பூச்சரத்துல வச்சி கட்டிரனும். (இதுக்கு முன்னாடி எவனெவன் என் வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டான். அதுல எவனெவன் பெண்டாட்டி ட்ரைவரோட ஓடிப்போய்ட்டாள், எவனுக்கு எயிட்ஸ் வந்து செத்தான் மாதிரி இன்ஃபர்மேஷனெல்லாம் மைண்ட்ல இருக்கும். அந்த இன்ஃபோவை ஓரு ஓட்டு ஓட்டிபார்த்தா இந்த இன்ஃபோ போய் பச்சக்குனு அதுல ஒட்டிக்கும்.

உணர்வுகளை பத்திரப்படுத்தனும்:

துணிச்சல், காதல், அழகியல்,இசை,கலா ரசனை, கற்பனை, தில்லு, எதிர்காலத்து மேல நம்பிக்கை இப்படி எத்தனையோ உணர்வுகள் இளமைல ச்சும்மா பீர் மாதிரி பொங்கும். ஆனால வயசாக வயசாக இதெல்லாம் தேஞ்சிக்கிட்டே வரும்.

தங்கள் வாழ்க்கைல இருந்தே ரெஃபரன்ஸ் குடுக்கிறது கிழவாடிகளோட லட்சணம் . என்ன செய்ய எனக்கும் 43 வயசாகுதே சின்ன ரெஃபரென்ஸ். (தந்தி பாஷைல)

1991 ல எனக்கு கலப்பு கல்யாணமாச்சு. முதல்ல எங்கப்பா குர்ருனு இருந்தாலும் அப்புறம் நான் பண்ண ஒரு எம்.ஜி.ஆர் வேலைக்கு ( சாக பிழைக்க இருந்த நம்ம சொந்த காரனுக்கு ஜொள் விட்டு நம்ம சைடுக்கு வந்துட்டார். கலப்பு திருமண தம்பதிகளுக்கு கவர்ன்மென்ட் கொடுக்கிற ஊக்கத்தொகைக்கு அப்ளை பண்ணேன். எங்கப்பா டிஸ்ட் ரிக்ட் ட்ரஷரி ஆஃபீசராயிருந்து அப்போதான் ரிட்டையர் ஆகியிருந்தார். நமக்கும் "இவன் ஒரு மாதிரி"ன்னு சின்ன இமேஜ். இத்தனையையும் வச்சிக்கிட்டு பத்து பைசா லஞ்சம் கொடுக்காம செக் எழுதற ஸ்டேஜ் வரைக்கும் விவகாரத்தை கொண்டு வந்துட்டன்.

செக் எழுதற நாய் என் ஃப்ரெண்டுக்கு மாமன் தான். என்ன இருந்து என்ன அம்பது ரூபா வெட்னாதான் செக்குன்னிட்டான். அந்த 3,000 ரூபாயை நம்பி புதுப்பெண்டாட்டிக்கு ( அதாங்க பழைய காதலி) என்னென்னவோ வாக்குறுதி கொடுத்திருக்கிற சந்தர்ப்பத்துல அவனை பத்தி கம்ப்ளெயின் பண்ணி , விசாரணை நடந்து எப்போ வேலையாறதுனு படக்கு அம்பது கொடுத்து செக் வாங்கிகிட்டு வந்துட்டன். அதுலயும் கடவுள் ஒரு வாய்ப்பை கொடுத்தார்.என் மனைவி பெயரை மாத்தி எழுதிட்டான் செக்ல. காச்சு காச்சுனு காச்சியெடுத்திருக்கலாம். ஆங்க்ரி யங்க்மேன் இமேஜுக்கு செமை பூஸ்ட் அப் கிடைச்சிருக்கும்.

ஆனா செய்யலை. அவன் தப்பா எழுதின பேர்லயே கை.எ. போடச்சொல்லி பாங்க்ல கேஷ் வாங்கிட்டன். வயசாறதுக்கு முத லட்சணம் இது. காரியம் பெரிசா வீரியம் பெரிசான்னா காரியம் தான் பெரிசுன்னு பூட்ஸு நக்கறது (இப்பல்லாம் 22 வயசுலயே இந்த கல்யாண குணம் நம்ம இளைய தலைமுறைக்கு வந்துட்டுது.






இதைத்தான் ஸ்ரீ ஸ்ரீ "கொந்த மந்தி குர்ரவாள்ளு புட்டுகத்தோ வ்ருத்துலு"ன்னாரு
அதாவது சில இளைஞர்கள் பிறப்புலயே கிழவாடிங்களாம். மனசை ஃப்ளெக்சிபிளா வச்சிக்கிடுங்க, உணர்வுகளை பத்திரமா வச்சிக்கிடுங்க அப்புறம் என்னா.. என்றும் 16 தான்..

மறுபடி அவளை ‍ 3

முன் கதை சுருக்கம்
மாயா என்னை விட 10 வயது மூத்தவ. டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல எனக்கு அசிஸ்டண்டா வந்து சேர்ந்தா. சவுண்ட் பார்ட்டி. ஒரு நாள் நான் அவள் ரூமுக்கு போக அவள் தற்கொலை முயற்சி செய்து கிடக்க போலி டாக்டர், ஹெட் நர்ஸ் உதவியுடன் காப்பாற்றி ரூம்ல விட்டுட்டு கிளம்ப பார்க்கிறேன். அவள் என் கைய இறுக பிடிக்கிறாள்


நான் மெதுவா அவள் கை மேல இன்னொரு கைய வச்சு லேசா அழுத்தி என் கைய உருவிக்கிட்டேன். அவளோட சின்ன கண்கள் தன்னால மூடிக்கிச்சு. என் வலது கைய அவள் உச்சந்தலைல வச்சி லேசா அழுத்தினேன். அவ கண்ணை திறந்து பார்த்தா(ள்) " நீ ஒன்னும் ஃபீல் பண்ணாதே, ஒன்னும் சொல்லாத, எதுவாயிருந்தாலும் நான் ஒருத்தன் இருக்கேன். எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்" இதெல்லாம் வாய் வார்த்தையா சொன்னதில்லை. ஒரு தரம் தலைய வலது இடதா அசைச்சு , என் கண்களை மூடி திறந்தேன்.

மறு நாள் ஆஃபீஸ் வந்தப்ப கொஞ்சம் சோர்வா இருந்தாலும் ஃஃப்ரெஷ்ஷாவே இருந்தாள். ஆஃபீஸ் விஷயம் தவிர எதுவும் பேசிக்கலை. மதியம் கர்ட் ரைஸ் கேட்டா வரவழைச்சேன். ராத்திரி 7 மணிக்கு போய்ட்டா. நான் எட்டரை வரை ஆஃபீஸ்ல இருந்துட்டு சாவிய ஓனர் வீட்ல கொடுத்துட்டு மாயா ரூமுக்கு போனேன். கதவு திறந்தே இருந்தது. எதிர்பார்த்திருப்பா போல.

"வா முகேஷ் !சாரி உனக்கு தேவையில்லாம ஸ்ட்ரெயின் கொடுத்துட்டன்"

"ஏமாத்திட்டு போயிருவயோனு பயந்துட்டன் சனியனே ! தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு என்ன நடந்துருச்சு. ப்ராத்தல் கேஸ்லயா மாட்டி பேப்பர்ல ஃபோட்டாவா வந்துருச்சு "

"ஏய் ! என்ன என்னவோ காதலிகிட்டே பேசற மாதிரி பேசறே.. என்ன லவ்வா?"

"கிழிஞ்சுது.. என் லவர்ஸோட எண்ணிக்கை தெரியுமில்லியா? அவளுகளுக்கு அப்பாயிண்ட்மென்ட் குடுக்க முடியாம நாக்க தள்ளுது. இந்த இழவுல இன்னொரு லவ்வா ஒன்னு கூட 18 கிடையாது எல்லாமே 14லருந்து 17 தான் "

"அட என் மம்மத ராசா.. பின்னே நான் செத்தா உனக்கென்னவாம்?"

"அந்த கான்செப்ட் இல்லாம நான் பழகிக்கிட்டிருக்கிற ஒரே பார்ட்டி நீதான்"

"அடப்பாவி .. நம்ம ஆஃபீஸை பெருக்கிற முனியம்மாவ கூடவா ட்ரை பண்றே"
"அவளுக்கென்ன கேடு தலைக்கு ஒரு ஷாம்பூ வாஷ், முகத்துக்கு ஒரு ப்ளீச், டூ பை டூ ப்ளவுஸெல்லாம் கழட்டி"

"சீ சீ வல்கரா பேசறே.."

" அட நீ வேற அதுக்கு பதிலா டெரிகோஸ்ல ப்ளவுஸு தச்சு போட்டா தூளா இருக்கும்னு சொல்ல வந்தேன்"

"சரி சரி எனக்கு பசி வயித்த கிள்ளுது உன் கதை என்ன நீ சாப்பிடறயா இல்லே டீ சாப்பிடறயா?"

"டீயா ? டீ சாப்டா தம்மடிக்கனும். உங்க ஏரியால என்னென்னவோ கிடைக்குமே தவிர சிகரட் மட்டும்கிடைக்காதே!"

"அப்ப சிகரட் இருந்தா டீ சாப்பிடறேனு சொல்றே"

"யா" என்றதும் தன் கைப்பையை திறந்து கோல்ட் ஃப்ளாக் கிங் சிகரட் பேக்கட்டை எடுத்து என் முன் போட்டாள். சமையலறைக்குள் சென்றாள். ராஜேஷ் குமார் நாவலில் ஹீரோவோ வில்லனோ உருட்டு கட்டையால் தாக்கப்பட்டால் மண்டைக்குள் நட்சத்திரம் தெறிக்குமே அது மாதிரி என் தலைக்குள்ளே ஸ்டார்ஸ்.

நான் வெளியே போய் தம்மடிச்சுட்டு வந்தாலே " என்ன மறுபடியா? இப்பத்தானே அரை மணி நேரம் முன்னாடி போய் வந்தே" என்று எரிந்து விழும் மாயா எனக்கு சிகரட் பாக்கெட் வாங்கி வைப்பதா?

வந்தவள் டீ கப்பை என் கையில் கொடுத்துவிட்டு கொஞ்ச நேரம் ஃபேனை நிறுத்திரு நான் அதுக்குள்ள சாப்டு வரேன் என்றாள். டீயா அது அமுதம். அதனோட டெம்பரேச்சர் ஆகட்டும், ஸ்ட் ராங்னெஸ் ஆகட்டும், இடை சிறுத்த கோவில் சிலை மாதிரி அளவான சர்க்கரை ஆகட்டும். நாக்கில் ஒட்டியது. ஒரு சிப். ஒரு பஃப் . ஸ்வர்கண்டா கண்ணா.. சிங்கில் ப்ளேட்டை கழுவும் சத்தம் கேட்டது. சின்ன டர்க்கி டவலில் கை துடைத்தபடியே வந்தவள். என்ன ஃபேனை போடவா என்று கேட்டபடி ஃபேனை போட்டாள்.
"அவளையே பார்த்தேன்..ஹார்லிக்ஸ் பேபி தனமான முகம், வெனீலா ஐஸ்க்ரீம் ஃபேமிலி பேக் தனமான உடல் இத்தனை இருந்தும் ஏதோ ஒன்று அவளில் செக்ஸ் அப்பீல் இல்லாது செய்துகொண்டிருந்தது. அது என்ன என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.

" ஏய் என்ன பார்க்கிறே?"
" ஆங் .. எந்த சர்க்கஸ்ல இருந்து இந்த யானைக்குட்டி தப்பிச்சு வந்துதானு பார்க்கிறேன்"
"முகேஷ்.. நிஜம்மா சொல்லு என்னை பார்த்தா யானைக்குட்டி மாதிரியா இருக்கு ?"
"சே அதெல்லாம் ஒன்னுமில்லே யானக்குட்டிக்கு அக்கா மாதிரி யிருக்கு"
பிரம்பு நாற்காலி பின்னிருந்த தலையணையை எடுத்து என் மீது எறிந்தாள். அவசரமாக அதிலிருந்து தப்பித்து " தபாரு நீ இப்படியே இருக்கனும். கான்ஃபிடன்டா, போல்டா ,சிரிச்சிக்கிட்டே , சந்தோஷமா இருக்கனும்.. இன்னொரு தடவை எதனா பை.தனம் பண்ணா மகளே.. கொன்னே போட்ருவன்"
"ஓகே டாடி.."
"அட போடி.. இப்பயாச்சும் சொல்லு எதுக்கு அந்த முயற்சி?"
"என் லவர் வந்துருந்தான்"
"அவனைத்தான் கட் அண்ட் ரைட்டா கழட்டி விட்டுட்டே இல்லியா?"
"இப்பவும் அப்படித்தான் . ஆனால் அவன் இன்னும் பழைய ஃபீலிங்க்ஸ்லயே இருக்கான்"
"பின்னே என்ன வந்தா வரட்டும்னு பேசி அனுப்ப வேண்டியதுதானே..இல்லாட்டி எனக்கு ஒரு ஃபோன் பண்ண வேண்டியதுதானே"
"இல்லே முகேஷ் ரொம்ப ஃபீல் பண்ணான்"
"எதுக்காம்"
"அவன் தங்கச்சிக்கு எதுவும் செட்டிலாகலையாம். ஆய்ட்டா நேர எங்க மாமன்ங்க கிட்டே போய் பேசிருவானாம்"
"ஒரு வைபரேட்டர் வாங்கித்தந்துர சொல்றதானே"
"சீ.. என்னை பண்ணிக்கனும்னு வெறியாம். பண்ணிக்க முடியலேனு ராப்பகலா ஒரே ஏக்கமாம்"
"அப்ப அந்த எண்ணத்துல ஆய் போயிட்டு கழுவாம வந்துர்ரானாமா?அவன் எக்கேடோ கெட்டுப்போகட்டும் .. உனக்கென்ன கேடுகாலம் வந்துச்சி"
"ஒரு உயிர் எனக்காக இப்படி தவிக்குதேனு"
"தபார்ரா.. அப்புறம்.. அதுக்கு அந்த உயிருக்கு உங்க உயிரை அர்ப்பணிச்சிங்களாக்கும். உண்மையிலயே உன் மேல அந்த நாய்க்கு லவ் இருந்தா தங்கச்சியா மயிரா என் லவ் எனக்கு முக்கியம்னு கல்யாணம் கட்டிக்கனும்"
'அய்யோ தங்கச்சிக்கு பண்ணாம இவன் பண்ணிக்கிட்டா கிராமத்துல அசிங்கமா பேசுவாங்க முகேஷ்"
"சரி மாயா.. இதெல்லாம் அவன் தலைவலி நீ எதுக்கு..ஃபீல் பண்ணனும்? அவன் பணம் கேட்டான்.."
"இதென்ன புது ட்விஸ்டு?"
" தன் தங்கச்சிக்கு நல்ல அல்லையன்ஸ் வந்துருக்கிறதாவும் ..வரதட்சிணை பணம் குறைவா இருக்கிறதாவும் சொன்னான். தங்கச்சிக்கு இந்த அல்லையன்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கிறதாவும் ஏறக்குறைய லவ்ஸ் மாதிரி ஆயிட்டதாவும் சொன்னான்.நான் குறையற பணம் வேணம்னா நான் தரேன். ஆனால் என்னை கல்யாணம் பண்ணிக்கிறது இத்யாதியெல்லாம் மறந்துருனு செக் எழுதி கொடுத்தேன்"
"சரி ஒழியட்டும். இருக்கப்பட்டவ தர்மம் பண்ணே...அப்புறம் என்ன இழவு ஆச்சுனு இந்த வேலை செய்தே "
" செக் வாங்கிக்கிட்டு போறச்ச கதவை வெளிப்பக்கம் தாள் போட்டுக்கிட்டு மாயா !என்னை நீ அவமான படுத்திட்டே.. இப்போ நான் கிராமத்துக்கு போய் இந்த செக்கை எல்லாருக்கும் காட்டி மாயா என்னை வச்சிருக்கா. செலவுக்கு செக் கொடுத்தானு சொல்லப்போறேன்னான்"
"அதுக்கு நீங்க பேதியாயிட்டிங்களாக்கும். உன் கேரக்டரை வெறும் மூனு மாசம் பழகின நானே புரிஞ்சிக்கிட்டேன். உங்க கிராமத்துல புரிஞ்சிக்கமாட்டாங்களா..அவன் மூஞ்சியும், சோடாபுட்டி கண்ணாடியும் அவனை ப்ராத்தல் ஹவுஸ்ல கூட உள்ளே விடமாட்டாங்க.."
"என்னமோ முகேஷ் கெட்ட பேரை பத்தின பயத்தை விட அவன் செய்த நம்பிக்கை துரோகம் என்னை உடைஞ்சு போக வச்சிருச்சு"
"ஆமா ..மனுஷ மனசு க்ளாஸ் டம்ளர் மாதிரிதானே பொள்ளுனு உடைஞ்சிருச்சாக்கும் .. தாளி விஷயத்தை சொல்லிட்டேல்ல .. அந்த நாயை என்னா கதி பண்றேன் பாரு" ன்னு கொதிச்சேன். மாயா எவ்வளவோ தடுத்தும் கொதிப்பு அடங்கலை.

மறு நாள் நேர பாபு ரெட்டிக்கிட்டே போனேன். அவரு கதை பெரிய கதை . தொகுதில 3 தடவை எம்.எல்.ஏவா ஜெயிச்ச பார்ட்டிய சி.எம்.முன்னாடியே பப்ளிக் ஸ்டேஜ்ல "டிச்"சடிச்ச பார்ட்டி. ( தலையால முட்டறதுங்கண்ணா) அவர் தம்பிக்கெ எம்.எல்.ஏ சீட் ட்ரை பண்ணாரு. வேலைக்காகலே. இருந்தாலும் தொகுதியில ரெண்டாவது ஆப்ஷன் பாபுரெட்டிதான். அவருக்கும் நமக்கும் எப்படி டச்சுன்னா ஒரு ஏரியால ஒரு குட்டி நமக்கு லைன் விட அவளோட அண்ணன் தங்கச்சிய நான் ஈவ் டீசிங் பண்ணினதா பாபுரெட்டி கிட்டே கம்ப்ளெயின் பண்ணிட்டான். குட்டிய வரவழைச்சாதான் பஞ்சாயத்தேனு அவர்கிட்டே செமர்த்தியா அடி வாங்கினேன். அப்புறம் குட்டிய வரவழைக்க அவள் விஷயத்தை போட்டு உடைக்க பாபுரெட்டி நமக்கு சாரி சொல்லி வீட்ல ட்ராப் பண்ண ஆளையும் அனுப்பினாரு. அப்பலருந்து அப்பப்ப போய் கண்டுக்கிட்டு வர்ரது வழக்கம்.

மாயாவோட தற்கொலை முயற்சி, செக் விஷயம், சோடாபுட்டியோட ப்ளாக் மெயிலிங்க் எல்லாம் சொன்னேன். பாபு ரெட்டி "இப்ப என்ன அவனை தூக்கிரலாமா" ன்னாரு. "இல்லே தலை ! அவனை புடிச்சி செக்கை பிடுங்கிரனும் . ஸ்ட் ரிக்டா வார்ன் பண்ணா போதும்"னேன்.

அவரு நாலு பசங்களை கூட அனுப்பினாரு. சுமோ ஒன்னை பேசிக்கிட்டு புறப்பட்டோம். கிராமமாச்சா.வெளியாளுக என்டர் ஆனதுமே சனம் நோட் பண்ண ஆரம்பிச்சுருச்சு. தடுக்கி தடுக்கி விசாரிச்சு மாயா சொன்ன சோடாபுட்டி கண்ணாடிய ட்ரேஸ் பண்ணீட்டோம். தே.மகன் ஒரு உயிருக்கு உலை வைக்க பார்த்துட்டு அசால்ட்டா கோழிப்பண்ணைல சூப்பர் வைஸ் பண்ணிக்கிட்டிருக்கான். பாபு ரெட்டி அனுப்பின ஆளுங்க கப்புனு அவன் கழுத்துல கத்திய வச்சிட்டாங்க. கிர்க்கா மர்க்காங்கலை அப்படியே தள்ளிக்கிட்டு சுமோ கிட்டே வந்தோம்.

சனம் சுத்திக்கிச்சு. எங்களை அப்படியே ஒரு மரத்துக்கு கட்டிட்டாங்க. பாபு ரெட்டி ஆளுங்கனு சொல்லியும் "கண்டவனுக்கும் அந்தாளு பேரை சொல்றதே பொழப்பா போச்சு பொளங்கடா"ன்னு எவனோ குரல் கொடுக்க. செமை காட்டு காட்னானுங்க. அந்த நேரம் பார்த்து பாபுரெட்டியை தெரிஞ்ச ஆள் ஒருத்தர் ஸ்பாட்டுக்கு வந்து சேர
கிராமத்து பெரியவங்கல்லாம் பேசி செக்கை வாங்கி கொடுத்துட்டாங்க. சோடாபுட்டிக்கும் நல்ல மண்டகப்படி. எப்படியோ சுமோவை கிளப்பிக்கிட்டு ஊரை வந்து சேர்ந்தோம்.

வெளிச்சத்துல பார்த்தா ஒரு லட்ச ரூபாய்க்கு செக் எழுதியிருக்கா மாயா. இந்த மேட்டர் முன்னாடியே தெரிஞ்சிருந்தா மவனை டவுன்ல வச்சி பிக்கப் பண்ணி செமை பெரடு எடுத்திருக்கலாமேனு ஆத்து ஆத்து போச்சு. அப்பத்தான் பொழுது விடிஞ்சிக்கிட்டிருக்கு. இந்த நேரம் வீட்டுக்கு போனா அப்பாகிட்டே பாடம் கேட்கனும். ஸோ.. அப்படியே மாயா வீட்டுக்கு போனேன்.

கன்னம் எல்லாம் கன்னி போய், உதடெல்லாம் வீங்கியிருந்த என்னை பார்த்ததும் பதறிப்போயிட்டா. செக்கை கொடுத்து விஷயத்தை சொன்னேன். நல்லா திட்டினா.. " கேஷ் செட்டில் பண்ணிட்டதால பர்ட்டிகுலர் செக் வந்தா ஹானர் பண்னாதிங்கனு பாங்க் மேனேஜருக்கு ஒரு லெட்டர் குடுத்துட்டா சரியா போற சமாச்சாரத்துக்கு இத்தனை வல்லடி ,வம்படி தேவையா அப்படியே ஒரு லட்சம் போனாலும் போறதுனு புலம்பிக்கிட்டே இருந்தா. காயங்களையெல்லாம் தடவி தடவி பார்த்தா.. ஷர்ட் பெண்டெல்லாம் ஒரே அழுக்கு , கெய்சர்ல ஹாட் வாட்டர் போடறேன்.முதல்ல குளி அப்பதான் ஃப்ரஷ் ஆகும்னா. நிஜமாவே உடம்பெல்லாம் பயங்கர வலி.



( To be cont..)

Monday, February 22, 2010

இதுதாண்டா ஜோதிடம்: 2

அனுபவ ஜோதிடம்-1
//உங்க லக்னாதிபதி யாரு, அவரு எங்க நின்னாரு,அங்கே அவரோட பலம் என்ன?  யாரோட சேர்ந்தாருங்கறதையெல்லாம் பொருத்து  பலன் மாறிக்கிட்டே போகும்.//னு கடந்த பதிவுல சொல்லியிருந்தேன்.   லக்னாதிபதியின் இருப்பை பொருத்து பொதுப்பலனையும் சொல்லியிருந்தேன்.
லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி லக்னத்திலேயே யிருந்தால்:
பொதுப்பலனில் சொன்ன நல்ல பலனோடு  மிதமிஞ்சிய தன்னம்பிக்கை, தூக்கமின்மை, ஒற்றைத்தலைவலி ஏற்படலாம்.,வலது கண், பல்,எலும்பு, முதுகெலும்பு தொடர்பான தொல்லைகள் வரலாம். தந்தையின் தொழிலை தொடர்ந்து செய்யலாம். லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்டில் பங்கெடுப்பான். லோ.செ.கவர்ன்மென்ட் காண்ட்ராக்டுகள் செய்யலாம். சுற்றி சுற்றி வந்து செய்யும் வேலைகள், சூப்பர் வைசிங்க், தரக்கட்டுப்பாடு, விளம்பரம், கிராமப்புற நிறுவனங்களில் வேலை, டீம் லீடர் போன்ற பொசிஷனில் இருக்கலாம். இவர் தன்னவர்கள் நல்வாழ்விற்காக அவர்களை உழைக்க தூண்டியபடியே இருப்பார். இதனால் பிறர் இவரை " நச்சு" கிராக்கிப்பா என்று நக்கலடிப்பார்கள்



லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  2லிருந்தால்:
வலது கண் சிவந்திருக்கலாம், சிறந்த விமர்சகராக இருக்கலாம். சொந்த உழைப்பில் பொருளீட்டு வார். மேற்சொன்ன துறைகள் கைகொடுக்கும். குடும்பம் சிறுத்து காணப்படும்.

லக்னம் சிம்மமாகிலக்னாதிபதி  3ல் இருந்தால்:
பொதுப்பலனில் கூறிய கெடுபலனோடு லேசான செவிடு ஏற்படலாம்.இவரே கடைசி வாரிசாக இருக்கலாம்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி 4ல் இருந்தால்:
ஜாதகர் பிறந்த வீடு  பாழடைந்து போகலாம். வீட்டின் நடுவே திறந்த வெளி இருக்கலாம். அவ்வீட்டின் வலது ,இடது புறம், எதிரில் வீடுகள் இல்லாதிருத்தல், ஒரு வேளை இருந்தால் அவ்வீடுகள் மூடப்பட்டு இருத்தலும் நடக்கலாம். அரசு வாகனயோகம் அமையலாம். ஆனால் வீட்டில் நிம்மதியிராது. தாய் விதவையாக இருக்கலாம். மேற்சொன்ன துறைகள் தொடர்பான கல்வி பயில்வார்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி 5ல் இருந்தால்:
முன் கோபமிருக்கும். பொறுமையிருக்காது. சிடு சிடுனு இருப்பாய்ங்க. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு ஆண் குழந்தை பிறக்கும்

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி 6ல் இருந்தால்:
லோக்கல் பாலிட்டிக்ஸ்ல முட்டி மோதிக்கிட்டே இருப்பாய்ங்க.  பல்,எலும்பு,முதுகெலும்பு,தலை,வலது கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும். பகல்ல பிறந்திருந்தா அப்பாவோட ஒத்து வராது.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  7ல் இருந்தால்:
மனைவி கற்புக்கரசியாக இருப்பார். அரசியல் தொடர்புள்ள குடும்பத்தில் பிறந்திருப்பார். ஒல்லியாக, சிவப்பாக இருப்பார். பெற்றோருக்கு ஒரே பெண்ணாக இருக்கலாம்

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  8ல் இருந்தால்
பொதுப்பலனில் கூறிய பலன் கள் 100 சதம் நடக்கும். இந்த தீமைகளுக்கு தந்தை தந்தை வழி உறவினர்கள், லோக்கல் பெரிய மனிதர்கள் காரணமாக இருப்பர்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  9ல் இருந்தால்:
தந்தை,தந்தை  வழி சொத்து,தந்தை  வழி உறவினராலும், சொந்த முயற்சியாலும் ஜாதகர் பெரும்பொருளீட்டி சொத்துக்கள் வாங்குவார் வாரிசு அரசியலில் கிராம சர்பஞ்ச் , வார்டு மெம்பர் பதவிகள் கிட்டலாம்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  10ல் இருந்தால்:
மேற்சொன்ன சூரிய தொடர்பான தொழில்களில் ஆர்வம் ஏற்படும்.மேலும் சமூக கொடுமைகள்,ஏற்றத்தாழ்வுகள்  குறித்தும் ஜாதகர் விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவார்.  பிற்படுத்தப்பட்டோர்,தாழ்த்தப்பட்டோர் நலம் நாடினாலும் அவர்கள் குறித்த ஏளன ஸ்வபாவம் இருக்கும். விக்கிரகாராதனை சாஸ்திர சம்பிரதாயங்கள் மீது பெரிதாய் நம்பிக்கை இருக்காது.ஆத்ம சாட்சியாக செயல்படுவார்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி 11 ல் இருந்தால்:
தந்தை  வழி சொத்து,தந்தை  வழி உறவினராலும், சொந்த முயற்சியாலும் மேற்சொன்ன சூரிய தொடர்பான தொழில்களினாலும்  ஜாதகர் பெரும்பொருளீட்டுவார்.


லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  12ல் இருந்தால்:
தூக்கமின்மை, அல்லல் அலைச்சல், அளவுக்கு மிஞ்சிய அகந்தை காரணமாக வீண்செலவுகளை இழுத்துவிட்டுக்கொள்வார்கள்.

அவளை மறுபடி: 2

முன் கதை சுருக்கம்
"மாயா அழகி. என்னை விட 10 வயது மூத்தவள். என் அப்பாவின் நண்பர் ஒருவரின் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் அலுவலகத்தில் எனக்கு  உதவியாளராக சேர்ந்தாள்.எங்களுக்குள்  மெல்ல மெல்ல நெருக்கம் ஏற்பட்டது"

மாயாவோட ப்ளானிங்கும், லாஜிக்கும், காமன் சென்ஸும் ( பலான சென்ஸில்லே தலை பொது அறிவுங்கண்ணா)  என்னை ரொம்பவே கவர்ந்தது. எங்க ஆஃபீஸ்ல வழக்கமா எதையுமே  ஒரு வாரம் தேடினா தான் கிடைக்காது.  எத எங்க வச்சிருக்குனு ஒரு நாள் பெரிய லிஸ்டே ப்ரிப்பேர் பண்ணிட்டன். மறு நாள் அந்த லிஸ்டே  காணாம போயிருச்சுங்கறதுதான் சோகம்.  ஆனா மாயா இந்த நிலைமையை ஸ்விட்ச் போட்டாப்ல மாற்றி தொலைச்சுட்டா கஸ்டமரெல்லாம் காய ஆரம்பிச்சுட்டான்.  புகைக்கு தடா போட்டாள், ஆஷ் ட்ரே காணாம போயிருச்சு. ரிகார்ட்ஸ் பக்கா, கணக்கு பக்கா, டெலிபோனுக்குனு தனி புக் வச்சி  இன் கமிங்க் அவுட் கோயிங்கெல்லாம் எழுதவச்சிட்டானா பார்த்துக்கங்க.

நான் ஏதோ பொம்பளைன்னா வெள்ளிக்கிழமை ஈர கூந்தலோட லேட்டா வந்து மன்னிப்பு கேட்கும். எல்லாத்தயும் தப்பு தப்பா பண்ணிட்டு "சாரி சார்னு கொஞ்சும்னு" நினைச்சிருந்தேன். ஆனால் மாயாவோட பங்க்சுவாலிட்டிக்கு முன்னே டப்பிங்க் சினிமால விஜயசாந்தி முன்னே வில்லனுக மாதிரி  நடுங்க ஆரம்பிச்சுட்டன்னா பார்த்துக்கங்க. 

அப்பப்போ பேச்சோட பேச்சா மாயா சொன்ன ஃப்ளாஷ் பாக் இதுதான். மாயாவோட  நேட்டிவ் ப்ளேஸ் மாவட்டத்துக்கு எல்லைல இருந்த குக்கிராமம். அப்பா சவுண்ட் பார்ட்டிதான். இவள் அவருக்கு 5 ஆவது பொண்ணு. 4 கல்யாணத்துல தேஞ்சி,ஓஞ்சி போயி மிச்சம் மீதி நிலத்தை எல்லாம் மாயா பேருக்கு எழுதி வச்சிட்டாரு. இவ பேர்ல ரெண்டு மூனு லட்சம் போல ஃபிக்ஸட் போட்டு வச்சிட்டாரு. மாரடைப்புல போய் சேர்ந்துட்டாரு. இந்த நிலம், பணம் எல்லாம் தமக்கே வரணும்னு மாமன்மாரு இவளுக்கு ப்ராக்கெட் போட , இவள் மறுக்க அவனுக இவள் அக்காமாரை கொடுமை படுத்த என்னடா இது லொள்ளுனு டவுனுக்கு வந்துட்டா . நேரு ஸ்ட்ரீட்ல அறையெடுத்துக்கிட்டு தங்கி, நிலத்துல இருந்தும், ஃபிக்ஸட் டிப்பாசிட்லருந்தும் வர்ரத வச்சிக்கிட்டு போது போக கரஸ்பாண்டன்ஸ்ல  எம்.ஏ . அடிஷ்னலா டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல ஜாப்.

தான் டிகிரி படிக்கறச்ச இவளை ஒரு கோயான் லவ் பண்ணியிருக்கான். இவளும் அந்த வயசுக்கே உரிய  அன் மெச்சூரிட்டியோட காதலுக்கு பச்சை கொடி காட்டி கல்யாணத்துக்கும்  ரெடி ஆயிருக்கா.  ஆனால் அவன் சரியான எஸ்கேப்பிஸ்ட் தன் தங்கச்சிகளுக்கு கல்யாணம் ஆனால் தான் நம்ம கல்யாணம்னிட்டு மாயாவோட அப்பா கொண்டுவர்ர அல்லையன்ஸ் எல்லாம் மொட்டை கடுதாசி போட்டு தடுத்துக்கிட்டிருந்திருக்கான். இவளுக்கு எரிஞ்சி போயி கட் அண்ட் ரைட்டா கட் பண்ணி விட்டிருக்கா.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணிக்கு  முதல் முறையா மாயா சொல்லியிருந்த விலாசத்தை  வச்சி அவளோட அறைக்கு போனேன். கதவு திறந்து கிடக்கு . கட்டில்ல மாயா. தமிழ் சினிமா மாதிரி வாய்ல நுரை , தரையில பூச்சி மருந்து பாட்டில். எனக்கு வெட வெடங்குது. இதே காட்சி சினிமால வந்திருந்தா "இப்போபாரேன் பாட்டில் மேல விஷம்னு எழுதியிருக்கிறத க்ளோஸப்ல காட்டுவான்னு கமெண்ட் அடிச்சிருப்பேன். சட்டசபைல சந்திரபாபு பேச ஆரம்பிச்சாலே காங்கிரஸ் எம்.எல்.ஏங்க காமெண்ட்ரி ஸ்டார்ட் பண்ணிர்ராங்களே அதுமாதிரி.

ஆனால் நிஜத்துல அதே காட்சி வந்தப்ப சுஜாதா கதை மாதிரி முழங்காலெல்லாம் பஞ்சு. பரபரனு வெளியே ஓடி வந்தேன். காலியா வந்த ஆட்டோவை நிறுத்தினேன். அட என் கிளாஸ் மெட் எஸ் ரமேஷ். தெய்வமேன்னிட்டு ஆட்டோவை மார்க்கெட் சவுக்குக்கு விடச்சொன்னென். அங்கேதான்  நம்ம பர்சனல் டாக்டரிருக்காரு.  டாக்டர் என்ன டாக்டர் அரசு ஆசுபத்திரில லேப் டெக்னீஷியன். தே.கிட்டே போறச்ச நோய் தொத்தாம இருக்க  ஊசி போட்டுவிடுவாரு. ஆட்டோல போய் இறங்கி அவருக்கு சமாச்சாரத்தை சொன்னேன். அவருக்கும் கைகால் நடுங்க ஆரம்பிச்சுருச்சு. எப்படியோ தைரியத்த வரவச்சிக்கிட்டு ஜி.ஹெச் ஹெட் நர்ஸுக்கு போன் போட்டு வரவச்சாரு. அந்தம்மாவ சும்மா சொல்லக்கூடாது. தேர் மாதிரி அசைஞ்சுவந்தாலும், மார் பால் பண்ணை சைஸுல இருந்தாலும் கை பம்பரமா சுழன்றது.  என்னையும், டாக்டரையும் வெளிய இருக்க சொல்லிட்டாங்க.

டாக்டர் பந்தாவா சிகரட்டை எடுத்து பத்த வச்சிக்கிட்டு 'என்னய்யா முகேஷு.. முடிச்சிட்டயா கர்பமாயிட்டாளா  முன் கூட்டியே நம்ம கிட்டே வந்திருந்தா வாஷ் பண்ணிருக்கலாம்ல  " என்று டாக்டன்  ஆரம்பிக்க வெறிச்சி பார்த்தேன். ரெண்டையும் மூடிக்கிட்டான். அவன் பாக்கெட்ல இருந்து சிகரட்டை எடுத்து பத்திக்கிட்டேன். வெறுப்பா இருந்தது. வெளியே வந்த ஹெட் நர்ஸ் "மஷ்டு எல்லாம் வெளிய வந்துருச்சு. சலைன் இருக்கான்னு கேட்டா. பாடாவதி டாக்டன் இல்லேங்கறான். இரைக்க இரைக்க ஓடி ஜி.ஹெச் கிட்டே இருந்த மெடிக்கல் ஸ்டோர்ல அதை வாங்கிக்கிட்டு வந்து கொடுத்தேன். ராத்திரி 7 மணி அளவுல மாயா எந்திரிச்சு உட்காருந்து தமிழ் சினிமா மாதிரியே " நான் எங்க இருக்கேன்னா" "வாழ்க்கைல அடி எடுத்து வைக்ககூடாத இடத்துல"ன்னு சொல்லி டாக்டனுக்கு பே பண்ணி,மாயாவ பேக் பண்ணி ஆட்டோல போட்டுக்கிட்டு அவள் அறைல சேர்த்தேன். சரி வீட்டை போய் சேரலாம்னு திரும்பினேன். மாயா என் கையை பிடிச்சிக்கிட்டாள்

Sunday, February 21, 2010

மறுபடி அவளை

மாயா யாருனு கேட்டா நான் என்னனு சொல்வேன். இத்தனை வருசத்துக்கப்புறம் மறுபடி அவளை இப்படி சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை. மாயா என்னைவிட 10 வயது மூத்தவ. 23 வருசத்துக்கு முந்தி 2 வருஷ காலம்  என் வாழ்க்கைய ஆக்கிரமிச்சவ.

அப்போ நான் ஒரு தனியார் பஸ் கம்பெனில வேலை செய்துக்கிட்டிருந்தேன். ஓனர் என் அப்பாவோட ஃப்ரண்டு." பையன் கெட்டி கீரை வழியாயிட்டிருக்கான்யா "ன்னு என் அப்பா புலம்ப சரி அவனை அனுப்பு நான் பார்த்துக்கறேனு சேர்த்துக்கிட்டாரு. ஓனருக்கு 3 டூர் வண்டியும் இருந்தது. அதுக்காக டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸும் வச்சிருந்தாரு அதை நான் பார்த்துக்கறாப்ல பேச்சு. நமக்கு தான் ஒரு இடத்துல இருப்பு கொள்ளாதே. ஓனர்  நம்ம கேரக்டரை கண்டுக்கிட்டாரு. இவன் வெளி வேலைக்குதான் லாயக்குனு வருசம் முழுமைக்கும் ஒரு அஜெண்டா ப்ரிப்பேர் பண்ணி விளம்பரம், ஃபோன் வந்தா வீட்டுக்கே போய் டிக்கெட் புக் பண்றது  கலெக்சனை பேங்கில கட்டறது இப்படி ட்ராக் மாத்தி ட்ராவல்ஸ பார்த்துக்க ஒரு பொண்ணை போட்டாரு. அதான் மாயா.

இதை பாருங்க மாயா பேரை எடுத்ததுமே என்னையே மறந்துட்டன். என் பேர் முகேஷ். டிகிரி டிஸ்கன்டின்யூட். ரெண்ட் அண்ணன் ஒரு தம்பி. அம்மா உயிரோட இல்லே. அப்பா ரிட்டையர்ட் கவர்ன்மென்ட் எம்ப்ளாயி. தொகுதி எம்.எல்.ஏவோட அப்பா இவருக்கு ஃப்ரெண்டுன்னா பார்த்துக்கங்க. ஆனால் வேலைல இருக்கும் போது லஞ்சம் வாங்கலை. ரிட்டையர் ஆனபிறகு கொடுக்கறதில்லை. நை நைனு உபதேசமஞ்சரி தனமா பேசுவாரு. வழக்கமா காலேஜ் முடிஞ்ச பசங்க என்ன செய்வாங்க அதை தான் நானும் செய்துகிட்டிருந்தேன். உடனே அப்பா ட்ராவல்ஸுல மாட்டிவிட்டுட்டாரு.

முத நாள் ஓனரே ட்ராவல்ஸுக்கு  வந்து சீட்ல உட்கார்ந்தாரு. உனக்கு உதவியா ஒரு பொம்பளைய போட்டிருக்கேன். நீதான்  அவளை வச்சு வேலை வாங்கனும் . நீ அவுட் டோர் ஒர்க் பார்த்துக்க. அவள் ட்ராவல்ஸ்லயே உட்காரட்டும். கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துக்கட்டும். ஆனால் நான் அவளை கேட்க மாட்டேன் உன்னைதான் கேட்பேன் அது இதுனு பேசிக்கிட்டிருந்தாரு.

குஷ்பு தனமான நல்ல புஷ்டியான தேக வாகு. வட்ட முகம். சின்ன மூக்கு. சன்ன மான உதடு, நல்ல நிறம். என்னோட  அந்த காலத்து  வயசுக்கு ஆன்டி ரேஞ்சுல மாயா என்ட்ரி. கொடுத்தா. ஓனர் கொஞ்ச நேரம் கம்பெனி விவகாரத்தையெல்லாம் சுருக்கமா சொல்லிட்டு கிளம்பிட்டாரு.

பேய்க்கு வேலை கொடுத்தமாதிரி ஓனர் வேலைல வச்சிக்கிட்டப்பயே பர பரனு ஆயிட்ட நான் மாயா வேலைக்கு சேர்ந்த பிறகு இன்னம் சுறு சுறுனு ஆய்ட்டன். ஓனரோட  3 பஸ்ஸுக்கும் மாசம் 30 நாளும் வேலை கொடுத்தோம். மாயாவும் நல்ல மெச்யூர்ட் பார்ட்டி. ( நான் புஷ்பவதியாவறத சொல்லலிங்கண்ணா) ரெண்டு பேருமா பேசி ப்ளான் பண்ண வேண்டியது. நான் வெளிவேலைய பார்க்க அவள் ஆஃபீஸ் வேலைய பார்க்க வியாபாரம் நல்லாவே பிக் அப் ஆச்சு.

ஓனர் குஜிலியாகி அவளுக்கு கெனட்டிக் ஹோண்டாவும், எனக்கு ஹீரோ ஹோண்டாவும் லோன்ல கொடுக்க ஏற்பாடு செய்தாரு. லோன் இன்ஸ்டால்மென்ட் கம்பெனியே கட்டும். பெட்ரோல் காசும் கம்பெனியே தரும்.


வெற்றி தந்த களிப்புல  வீக் எண்ட் ஏதாவது ஒரு ரெண்டாரண்ட்ல டிஃபன் சாப்பிடறது எப்பயாச்சும் ஒரு சினிமாபார்க்கிறதுனு நெருங்கினோம்.

தோஸ்துங்கல்லாம் "ஒதுங்க" புறப்பட்டாங்க

கூட்டி கழிச்சு பார்க்கிறேன்
ஒரு தரம் புத்தூர்ல ஒரு ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு போயிருந்தம். ராத்திரி ரிசப்ஷன் ஆயிருச்சு. மறு நாள் விடியல்ல தோஸ்துங்கல்லாம் "ஒதுங்க" புறப்பட்டாங்க. அந்த காலத்துல நமக்கு அந்த பிரச்சினையெல்லாம் கிடையாது. எப்போ வசதியோ அப்போ எனிமா எடுத்தா தான் விசயமே வெளிய வரும். காரணம் நம்ம "ராவுகள்" அப்படி. எனிவே தனியே என்னத்த பண்றது ச்சும்மா அப்டி காத்தாட போய் தம்மடிக்கலாமேனு கூட போனேன்.தண்டவாளத்து மேலயே நடந்து போறோம். நான் தான் கடைசியா நடந்துக்கிட்டிருக்கேன்.

தண்டவாளம் ஒரு சுரங்கத்துக்குள்ள போகுது. (அதை என்ன சொல்வாங்க?) நானும் போறேன். உள்ளே தண்டவாளத்துக்கு ஒரு புறம் திண்ணை மாதிரி இருக்கு. அதுல ஒரு தம்பதி. சஷ்டியப்த் பூர்த்தியானமாதிரி கல்யாண காஸ்ட்யூம், நகை நட்டுகூட அணிஞ்சிருந்தாப்ல ஞா . அவிக முகத்துல அப்படி ஒரு களை. உள்ளுக்குள்ள லேசா சிலீர்ங்கற மாதிரி ஒரு உணர்வு. இருந்தாலும் என்னை நான் ஈஸி பண்ணிக்க அந்த பெரியவர்கிட்டே போய் சிகரட்டை எடுத்து வாய்ல வச்சுக்கிட்டு தீப்பெட்டி கேட்டேன்.அவர் அந்தம்மா பக்கம் திரும்பி சுந்தர தெலுங்குல "குடு"ங்கறார். நான் வாங்கி சிகரட் பத்த வச்சிக்கிட்டு, பெட்டிய திருப்பி கொடுத்துட்டு நடக்கிறேன்.தோஸ்துகளோடபோய் சேர்ந்துக்கிட்டேன். விஷயத்தை சொல்றேன். சுரங்கம் இருந்தது நிஜம்தான். அது மாதிரி தம்பதியை பார்க்கவே இல்லேங்கறாங்க. வாய்ல சிகரட் புகைஞ்சிக்கிட்டு இருக்கு. யாரை நம்பறது?

இது நடந்தது 1990 லனு நினைக்கிறேன். இப்போ 20 வருசம் கழிச்சு 2010 ல வீடு தேடி அலையறேன். ரூ1,200 வரைக்கும் ப்ரிப்பேர் ஆனாலும் வீடு கிடைக்கல. அப்புறமா பெரிய வேப்ப மரம். அதனோட நிழல்ல இருக்கிற வீட்டுல ஒரு போர்ஷன் காலினு "சாந்தி"ங்கற பொம்பளை சொல்லுது. அது "சத்யா"ங்கற நண்பன் மூலமா அறிமுகம். போய் பேசறேன். ஆமா காலிதான்னு கன்ஃபார்ம் ஆகுது. ஒரு பொண்ணு வீடு திறந்து காட்டுது.அட்வான்ஸும் வாங்கிக்குது.அப்பா,அம்மா பலமனேர் போயிருக்காங்க. தாத்தா பாட்டி வீட்ல இருக்காங்க ஒரு தடவை பார்த்து அட்வான்ஸை அவிக கைலயே கொடுத்துருங்கங்குது. நான் என் மகளை நீ போய் பார்த்து கொடுத்துருப்பாங்கறன். என் மகள் போய் பார்த்து பேசி கொடுத்துட்டு வரா.

அந்த கிழ தம்பதிகளை வர்ணிக்கிறா. மைண்ட்ல எந்த ரெஸ்பான்சும் இல்லே ப்ளாங்காவே இருக்கு. சாமான் செட்டை எப்படி கட்டறது என்னாங்கற யோசனைதான்.பிப்ரவரி 6 ஆம் தேதி இந்த வீட்டுக்கு குடி வந்துட்டம். இன்னைக்கு தேதி என்ன? பிப்ரவரி 22. பதினாறு நாள் வரை தம்பதி பத்தி எந்த யோசனையும் இல்லே. இன்னைக்கு இந்த விடியல்ல டக்குனு ஸ்பார்க் ஆகுது. 1990 ல நான் பார்த்த தம்பதி வர்ணனையும், என் மகள் கொடுத்த வர்ணனையும் பச்ச்சக்குனு பொருந்துது.
1990 ல நான் அரை குறை . என் ஜாதகத்துல சூரிய சந்திரர்கள் பக்கத்து பக்கத்துல இருக்கிறதால அது சிவசக்தியோகம்னு படிச்சுட்டு பஞ்சாட்சரி ஜபிச்சிக்கிட்டிருந்த நேரம் அது.

வருசம் 2000, மாசம் டிசம்பர் தேதி 23 லருந்து சக்தி உபாசனை . இந்த வீட்டுக்கு வர்ரதுக்கு மாசம் முன்னாடிதான் சத்யா டிக்டேட் பண்ண பண்ண அம்மனுக்காக சாரி அம்மன் அருளுக்காக நான் எழுதின தெலுங்கு கவிதைகளை தட்டச்ச ஆரம்பிச்சதும் ஞா வருது. ஏதோ கணக்கிருக்கு. நானும் எனக்குள்ள கேள்விகள் எழ ஆரம்பிச்சப்பத்துலருந்து கூட்டி கழிச்சிக்கிட்டே இருக்கேன். டேலி ஆன மாதிரியே இருக்கு. அப்புறம் பார்த்தா ஆன்சர் தப்பு. பார்ப்போம்.

முந்தா நாள் பெரிய சைஸ் தீப்பெட்டி பத்து ரூ க்கு மூனுனு வாங்கினேன். கம்பெனி பேரு ஜோதி. இன்னைக்கு ஒரு க்ளையண்ட் தெலுங்கு ப்ளாகை பார்த்து ரெஸ்பாண்ட் ஆகி தெலுங்குல ப்ரிடிக்ஷன் கேட்டிருக்காங்க. எல்லாமே ரஸ்னா பவுடர் தனமா ஏற்கெனவே இருக்கும் போல. அப்பப்போ சந்தர்ப்பத்தை பொருத்து சர்க்கரை தண்ணி சேர்த்து ஆஃபர் பண்றா அவள்.