ஏற்கெனவே ஒரு பதிவில் சொன்னதாக ஞா. இங்கே எல்லாமே பொய். மரணம் ஒன்றுதான் சத்தியம். அந்த மரணத்தை தாண்டி நிலைக்க கூடியவை நம் எண்ணங்களே. எனவே தான் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு சொல்லியிருக்காய்ங்க. எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வு. மனித எண்ணங்கள் நல்லெண்ணங்களாக இருக்க மனிதனின் குறைந்த பட்ச அத்யாவசிய தேவைகள் கட்டாயம் நிறைவேற்ற ப்படவேண்டும். உணவு,உடை,இருப்பிடம் ஆகியவற்றுடன் செக்ஸையும்
அத்யாவசிய தேவைகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். செக்ஸ் கல்வி கட்டாயமாக்கப்படவேண்டும். மனிதன் தன் அத்யாவசிய தேவைகளை உழைப்பின் மூலமே வென்றெடுக்க வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.
முக்கியமாக அகால மரணங்கள் ( 45 வயதுக்குள்ளான மரணங்கள்), துர்மரணங்கள் (விபத்து,கொலை,தற்கொலை, வியாதிகள்)தடுக்கப்பட்டாக வேண்டும்.
சாதி,மதம், இனம், நிறம்,பால்,பிராந்திய வேறுபாடுகளை மீறி மகத்தானது,மதிப்பு மிக்கது மனித உயிர். உயிர் இருந்தாத்தான் எதுவுமே .. அதுவே போயிருச்சுன்னா என்ன செய்ய முடியும். மனித உயிருக்கு உலை வைக்கிற விஷயங்கள் அனேகமிருக்கு.
அதுல சில விஷயங்களை பற்றியாவது எழுதனும் எழுதனும்னு தள்ளிப்போய் கிட்டே இருக்கு.
ஹோல்சேலா மனித உயிரை பறிக்கிற விஷயம் போர் . இதை பத்தி நிறைய எழுதியிருக்கேன். ரொட்டிக்கில்லாத, சோத்துக்கில்லாத நாடெல்லாம் ராணுவத்துக்கு வெட்டியா செலவழிச்சுக்கிட்டு இருக்கு. போர் நடக்கனும்.கு.பட்சம் போர் சூழலாவது இருக்கனும். நாடுகளுக்கிடையில் பதட்டம் நிலவனும். அப்பத்தான் அமெரிக்காவுக்கு பொழப்பு ஓடும்.
நம்ம நாட்டோட பொருளாதாரம் எப்படி விவசாயத்தை சார்ந்து இயங்குதோ அதை போல அமெரிக்காவோட பொருளாதாரம் யுத்த தளவாட உற்பத்தியை நம்பி இயங்குது. நமக்கு பொழப்பு ஓட மழை பெய்யனும். அவிகளுக்கு யுத்தம் நடக்கனும்.
இந்த இழவெடுத்த பொழப்பாலத்தான் வியட்னாம்லருந்து, ஈரான் - ஈராக், குவைத்-ஈராக் யுத்தங்கள் நடந்தது. ஈராக் சூறையாடப்பட்டது உலகத்தின் ஒரே ஆண்பிள்ளை சதாம் ஹுசேன் தூக்கிலிடப்பட்டார். ஆப்கானிஸ்தான்,காபூல், இலங்கை - தமிழ் ஈழம் இப்படி ஒன்னு ரெண்டில்லை அனேக யுத்தங்கள் நடந்தது. நடக்குது.
யுத்தம் நடந்தா என்னனு சோடாபுட்டிகண்ணாடிகள் கேட்கலாம்.யுத்தத்தோட கதை அப்புறம் முதற்கண் ராணுவத்தை ஊருக்குள்ள விட்டா என்ன நடக்கும் தெரியுமா? இலங்கைல கட்டுப்பாட்டுக்கு பேர் போன நம்ம இந்திய ராணுவத்தினரே 90 வயது பாட்டியை கூட விடாம கற்பழிச்சுட்டாய்ங்க.
இன்னைக்கு யுத்தம்னா வாள்,வேல் தூக்கிக்கிட்டு வெற்றி வேல் வீரவேல்னு ஓடற யுத்தமில்லை. அப்பாவி மக்கள் மேல க்ளெஸ்டர் பாம், கிருமி பாம், ஆட்டம் பாம் போட்டு துடைச்சி விட்டுர்ரதுதான் யுத்தம்.
தீவிர வாதம்:
ஸ்தூலமா பார்த்தா தீவிரவாதத்துக்கு பசி,சுரண்டல் தான் காரணம்னு சொல்லிரலாம்.ஆனால் மனித மனம் விசித்திரமானது. பல நேரங்கள்ள ஸ்தூலமான விஷயங்களை விட மானசிக விஷங்களுக்கே முக்கியத்துவம் தர்ர சாதி. ராம் மந்திர் மேட்டரையே எடுத்துக்கங்களேன். இந்துக்களை பொருத்தவரை இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பாங்கறாய்ங்க. அப்ப எதுக்கு அயோத்தியையே கட்டி அழனும். இஸ்லாமிரை கூட பாருங்க. அவிகள பொருத்தவரை ஓரிறை கொள்கை தான் ஆணி வேர். அந்த ஒரே இறைவனுக்கும் உருவம் கிடையாது,பெயர் கிடையாது. ஆனால் என்னாச்சு?
இன்னைக்கும் தேர்தல்ல நிக்கிற வேட்பாளர்கள் ஒரு ஏரியா ஓட்டை வளைக்கனும்னா அந்த ஏரியால இருக்கிற கோவிலுக்கு லம்பா ஒரு டொனேஷன் கொடுத்துட்டா போதுங்கற நிலைமை இருக்கு. இதுக்கு என்ன காரணம்னா..
காலம் காலமா மக்கள் மனசுல கூடாரம் அடிச்சி கிடக்கிற எண்ணங்கள், நம்பிக்கைகள். இதுக்கு காரணம் என்னன்னா.. பிறர் உழைப்பில் வாழும் இனங்கள். (இங்கே நானு பிராமணர்களை மட்டும் குறிப்பிடல ..ஒவ்வொரு நாட்டிலயும் இப்படி ஒரு க்ரூப் உண்டு. அதே குணம், அதே புத்தி, அதே ஹிடன் அஜெண்டா)
இந்த விவகாரத்துல மக்கள் ப்ராக்டிக்கலைஸ் ஆகனும்னா வளர்ச்சி இருக்கனும். செல்வம் பெருகனும். செல்வம் பெருக்க எல்லாருக்கும் சம வாய்ப்பு இருக்கனும். பெருகிய செல்வம் சமூகத்தின் அடித்தட்டு வரை பகிரப்படனும். இதெல்லாம் நடக்கிற வரை மக்களோட நம்பிக்கைகளை கௌரவிச்சுத்தான் ஆகனும்.
வேதம்,உபனிஷதம்லாம் சோறு போடாது ( சுய மரியாதைக்கு பங்கமில்லாத வகைல), மதராஸா கல்வி சோறு போடாதுனு இப்பவே தெரிஞ்சிருக்கு. விழிப்புணர்ச்சி இருக்கு. இதை அரசும் உணரனும். உணர்ந்து செயல்படனும். அரசு நிர்வாகம்ங்கறது க்ராஸ் ரூட் லெவல்ல இருக்கனும். மத்திய மானில அரசுகள் தங்களோட அதிகாரத்தை 70 சதவீதம் தியாகம் செய்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை வழங்கனும்.
ஸ்தூல வாழ்க்கைல இருக்கிற சாரமற்ற தன்மை தான் மனிதனை நம்பிக்கை,மூட நம்பிக்கை இத்யாதிக்கு தள்ளுது. ஸ்தூல வாழ்க்கை நம்பிக்கை தருவதா இருக்கனும். அப்போ தீவிரவாதம்லாம் பக்கவாதம் வந்து படுக்கைல விழுந்துரும்.
எங்கெல்லாம் நக்ஸல்ஸ் பிடி இறுகியிருக்கோ.. அங்கெல்லாம் அரசாங்கம் வள்ர்ச்சிக்குனு ஒதுக்கற நிதிய நேரடியா நக்ஸல் அமைப்புகளுக்கோ இல்லை நக்ஸல்ஸ் கைக்காட்டற அமைப்புகளுக்கோ ஒதுக்கிரலாம். இதனால அவிக ஆயுதம் வாங்கிருவாய்ங்க,ஜல்சா பண்ணிருவாய்ங்கன்னா பண்ணட்டும். மக்கள் ஆதரவை மொத்தமா இழந்துருவாய்ங்க. இல்லையா உண்மையான வளர்ச்சி சாத்தியமாகு்ம்.
அடுத்து இந்த பட்டியல்ல வர்ரது க்ரைம். க்ரைம் ரேட் பெருக காரணம் ஏற்கெனவே க்ரைமில் ஈடுபட்டவனுக்கு தண்டனை கிடைக்காததும், தாமதமாகிறதும்தான். போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல இப்போ இருக்கிற ஸ்டாஃபுக்கு அடிஷ்னலா ரெண்டு மடங்கு ஸ்டாஃபை அப்பாயிண்ட் பண்ணனும். ஷிஃப்ட் சிஸ்டம் கொண்டுவரனும்.
போலீஸோட வேலை வழக்கு பதிவுபண்றதோட முடிஞ்சுரனும். தண்டனை வாங்கி கொடுக்கிறதுக்கு வேற ஒரு அமைப்பை கன்ஸ்டிட்யூட் பண்ணனும்.
க்ரைமுக்கு முக்கிய காரணம் செக்ஸ். பாதிக்கு மேல செக்ஸ் க்ரைம்ஸ்தான். திருமணம், விவாகரத்து சட்டத்தை எளிமையாக்கனும். செக்ஸ் கல்வி, செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு லைசென்ஸ் இத்யாதி மூலமா இந்த பிரச்சினையை தீர்க்கலாம்.
க்ரைமுக்கான காரணங்கள்ள முக்கிய காரணம் வேலையின்மை,வறுமை, பசி,சுரண்டல் , சாதீயம் .இதையெல்லாம் பக்காவான நிர்வாகத்தை வச்சே சரி பண்ணிரலாம். நிர்வாகம்னா என்னமோ ஏதோன்னு பயந்துராதிங்க. ஜஸ்ட் மாவட்ட லெவல்ல ஒரு சரிய்யான எஸ்.பி, சரிய்யான கலெக்டர். மண்டல அளவுல நீதிமானான தாசில்தார், ஒரு சி.ஐ இருந்தா போதும்.
அரசாங்கம் ஒரு பட்டியலை தயாரிக்கனும். க்ரைமுக்கு( முக்கியமா கொலை,கொலை முயற்சி) காரணமாக கூடிய எந்த மேட்டரா இருந்தாலும் எந்த வித அரசியல் தலையீடும் இருக்காதுனு சட்டம் கொண்டு வரனும். அப்படி எவனாச்சும் தலையிட்டா அவனை தூக்கி உள்ள போட்டுரனும்.
மேற்படி பட்டியல்ல இதெல்லாம் இருக்கனும்:
நில ஆக்கிரமிப்பு, தேர்தல் தகராறு, நிலத்தகராறு, சாதி தகராறு, வரதட்சிணை கொடுமை, வன் கொடுமை, வன் புண்ர்ச்சி, கள்ளக்காதல்
உயிர் பலிக்கு காரணமான இன்னொரு பாயிண்ட் விபத்துக்கள். தாளி இந்த ஆட்டோ மொபைல் கம்பெனி காரவுக பொலிட்டிக்கல் பார்ட்டிகளுக்கு எலக்சன் ஃபண்டை கொட்டிக்கொடுத்துர்ரதால வங்கிகள் வகை தொகை இல்லாம கடனை வாரிகொடுக்குது. வாகனங்களோட எண்ணிக்கை அதிகரிச்சுட்டே போவுது. அதுக்கேத்த மாதிரி சாலை வசதிகள் பெருகலை.
நேஷ்னல் ஹை வே மாதிரி ஒட்டு மொத்த நாட்டையும் இணைக்கிற ஒரு தேசீய நதியை உருவாக்கனும். ( 4 ட்ராக் அகலத்துக்கு ஒரு கால்வாய்ங்கண்ணே) . எங்கெங்கே நதிகளோட உபரி நீர் கடல்ல கலக்குதோ அங்கெல்லாம் அந்த உபரி நீரை திருப்பி விட்டாலே தேசீய நதி ரெடி. இதையாச்சும் டெண்டர்,காண்ட் ராக்ட் முறையில இல்லாம சிறப்பு ராணுவம் ஒன்னு அமைச்சு போர்கால அடிப்படைல வெட்டனும்.
இருக்கிற மிலிட்டரி எல்லாம் சீனாக்காரன், பாக்கிஸ்தான் காரணோட ஏகவே சரியா இருக்கு. தகராறுக்குட்பட்ட நிலப்பகுதிகளை ஐ. நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்கி கொடுத்துட்டு (அதோட பாதுகாப்பை ஐ . நாவின் பாதுகாப்பு சபை ஏத்துக்கிடறாப்ல செய்யனும்) மிலிட்டரியோட பெரும்பகுதியை இந்த வேலைக்கு உபயோகிக்கலாம்.
இப்படி செய்தா நீர் வழி போக்கு வரத்து பெருகி நேஷ்னல் ஹை வே மேல வாகனங்களோட ப்ரெஷர் குறையும். (It is not mine. Read somewhere) மேலும் வர்ஜியா வர்ஜியமில்லாம வாகன கடன் கொடுக்கிறதை விட்டொழிக்கனும். இந்த சனங்க கடன் கொடுக்கிறானேனு வாகனங்களை வாங்கிர்ராய்ங்க. ட்ரைவரை வச்சா சம்பளம் தரணுமேனு பூச்சி பூச்சினு ஓட்டறாய்ங்க.பக்கத்துல மச்சினி இருந்தா ஓவர் ஸ்பீட். ஷாட் கட் பண்ணா குடும்பமே காலி.
சமீபத்துல ஏதோ சர்வே எடுத்து ராத்திரி 12 ல இருந்து விடியல் 3 வரை தான் விபத்து நடக்குது. அதுவும் ஹெவி வெஹிக்கிள்ஸ் மூலமா தான் விபத்து நடக்குதுனு கண்டுபிடிச்சு மேற்படி நேரத்துல ஹெவி வெஹிக்கிள்ஸை எல்லாம் ரோட்டோரம் நிறுத்தி போடனும்னு முடிவு செய்திருக்காய்ங்க.
நின்னிருக்கிற வாகனத்து மேல மோதி செத்தவன் எத்தினி லட்சம் பேரு. விபத்துக்கு முக்கிய காரணம் ட்ரைவிங் லைசென்ஸ் வழங்கறதுல கோல் மால். தூக்கமின்மை. மதுப்பழக்கம். ட்ரைவிங் லைசென்ஸ் தர்ரதுக்கு முந்தி அவனோட மானசிக ஸ்திதியை எக்ஸாமின் பண்ணனும்ங்கறது என் கருத்து.
மனித உயிர்களுக்கு ஆப்பு வைக்கிற பட்டியல்ல அடுத்து வர்ரது தற்கொலை. ஒவ்வொரு தாலுக்கா, மாவட்ட மையத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சைக்கிரியாட் ரிஸ்ட் இருக்கனும். கவுன்சிலிங்க தரக்கூடிய சேவை நிறுவனங்களை என் கரேஜ் பண்ணனும். எதையும் மனசுல பூட்டி வைக்க தேவையில்லைங்கற சமூக நிலைய கொண்டு வரனும். இதுக்கு மேற்சொன்ன எல்லா அம்சமும் அமலாகனும். இதெல்லாம் நடக்கிறதா .. போறதாங்கறிங்களா..
ஆட்சியாளர்களோட காதுகள்ள ஊதுற சங்கை ஊதி வைப்போம். திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்னு சனம் பொங்கி எழுந்தா வீட்டுக்கு போயிர போறாய்ங்க. அவ்ளதானே..