Saturday, June 5, 2010

நாலு பேரு

நாலு பேருங்கற வார்த்தைய நம்ம வாழ்க்கைல அடிக்கடி கேட்டுக்கிட்டிருக்கோம்.வாத்தியார் கூட நாலு பேருக்கு நன்றின்னு ஒரு பாட்டு பாடியிருக்காரு .கூடி வாழ்ந்தால் கோடி நன்மையாம். அது யாருக்கு? அம்பானி ப்ரத்ர்ஸ் மாதிரி பார்ட்டிகளுக்கு.  நடுத்தர குடும்பங்கள்ள இந்த நாலு பேரு மேட்டர் அடிக்கடி வரும். பையன் கம்மல் போட்டா, பெண் மாடர்ன் ட்ரஸ் போட்டா " நாலு பேர் என்ன நினைப்பாய்ங்க?"

எவனாச்சும் போர் போட்டு ஃபெயில் ஆயிட்டா ஏம்பா நாலு பேரை கலந்து பேசி நல்லது கெட்டது தெரிஞ்சிக்கிட்டு இறங்கியிருக்கனும்பா நீ பாட்டுக்கு எடுத்தேன் கவிழ்த்தேனு பண்ணிட்டே

யாராச்சும் பெண்ணை கட்டிக்கொடுத்த இடத்துல பிரச்சினைன்னா உடனே நாலு பேர் மேட்டர் வந்துரும் .ஆமாங்கண்ணா யாரிந்த நாலு பேரு? தாளி என்னதான் பெண்டாட்டி தாசனா இருந்தாலும், சோடாபுட்டி கண்ணாடியா இருந்தாலும் அவனும் நாலு பேரோட பழகறான். நாலு பேரோட இருக்கறச்ச கொஞ்சம் தைரியமா உணர்ரான். ஆனால் உள்ளார  நுழைஞ்சி பார்த்தா அந்த நாலு பேருக்கு நடுவுல 40 பாலிடிக்ஸ் இருக்கும்.

இத்தனை ஏன் கலைஞர் கூட நாலு பேரோடத்தான் பழகறார் ஆற்காடு, துரைமுருகன் அண்ட் கோ. இந்த நாலு பேரோட த(தே)ங்கிட்டா மனுஷன் நிலை கோவிந்தா.. இந்த நாலு பேரு சேர்ந்து என்னதான் பண்றாய்ங்க? உலகத்தை விமர்சிக்கிறாங்கண்ணா. எதை உலகத்தை. அவிகளே உலகம்னு பிரமிச்சி போயிர்ராய்ங்கண்ணா. நாலு பேர் ஒன்னாயிருக்கிற தைரியத்துல நாற்பது பேர் சொத்தை கொள்ளையடிக்க பார்க்கிறாய்ங்கண்ணா. 4000 பேரை விரோதம் பண்ணிக்கிராங்கண்ணா..

இப்படி ஒரு நாலு பேர் கொண்ட குழுவை பத்தி இந்த பதிவுல எழுதலாம்னு இருக்கேன். இதுல வர்ர ஒரே ஒரு பார்ட்டிய வச்சி எங்க ஊரு வடிவேலுன்னு எழுதலாம்னுதான் இருந்தேன். அப்பத்தான் நாலு பேர் கான்செப்ட் ஸ்ட்ரைக் ஆச்சு. ஒன்னு நாலா இருக்கட்டுமேனு நினைச்சிட்டன்.

நாலு பேரை பத்தி சின்னதா ஒரு அறிமுகம்.முதல் பார்ட்டி பண்டரி ஆர்.எம்.பி டாக்டர் (சந்தேகாஸ்பதமா ஒரு சர்ட்டிஃபிகேட்டை ப்ளாஸ்டிக் லேமினேஷன் பண்ணி வச்சிருப்பாரு) அரசு மருத்துவமனைல லேப் டெக்னீஷியன். கலைஞர் மாதிரி பெரிய்ய குடும்பம். பந்து ப்ரீதி அதிகம்..இவரோட முக்கிய  இலக்கு  பலான இடங்களுக்கு போய் பலான வியாதி வந்துருச்சோங்கற சந்தேகத்துல ரகசிய சிகிச்சைக்கு வர்ர தேர்ட் க்ரேட் உத்யோகஸ்தருங்க(முக்கியமா காவல் துறை), சில்லறை ரவுடிங்க, இரவுராணிங்கதான்.

சிகிச்சைன்னெல்லாம் பெரிசா ஒன்னுமில்லை .. ஆன்டிபயாடிக்கை ஹெவி டோசேஜ்ல கொடுத்து விட்டுர்ரதுதான். இவருக்கு ஒரு மெடிக்கல் ஷாப்போட லிங்க். டாக்டரோட ஹெவி டோசேஜ் ஃபார்முலாவை கண்டுகிட்ட அந்த மெ.ஷாப் காரனே ட்ரீட்மென்டை ஆரம்பிச்சுட்டான். இதனால வெட்டுப்பழி குத்துப்பழி. ஒரு தரம் மெ.ஷாப் காரன் கொடுத்த ட்ரீட்மென்ட்ல சலவைதொழிலாளி ஒருத்தர் டிக்கெட் வாங்கிட்டாரு. பண்டரிக்கு ஆனந்தமானந்தம் ஆயெனே தான்.

அதென்ன முகராசியோ  பண்டரிக்கு ஊர்ல சகட்டு மேனிக்கு பேரு வந்துருச்சு. ஊர்ல இருக்கிற நத்தம், நாடோடி, அரை டிக்கெட்டு, கால் டிக்கெட்டு, ஃபோர் ட்வன்டி, முடிச்சவிக்கி, மொள்ளமாரியெல்லாம் பண்டரி க்ளினிக்ல வந்து குமிஞ்சாங்க. ஆஸ்பத்திரில இவருக்கு பதில் வேலை செய்ய ஆளை போட்டிருந்தாரு. ஆஸ்பத்திரிக்குனு போனா சம்பளம் வாங்கத்தான் இருக்கும்.

பண்டரியோட டைமிங்கே வித்யாசமா இருக்கும். பன்னெண்டு  மணிக்கு மேலதான் க்ளினிக் வருவாரு.  சனம் தேவுடு காத்துக்கிட்டிருக்கும். இவருக்குனு அம்மைவார்த்த முகத்தோட ஒரு அசிஸ்டண்ட். (இவருக்கும் டாக்டருக்கும் முட்டிக்கிட்ட சந்தர்ப்பம் கூட உண்டு.அதை பின்னொரு சந்தர்ப்பத்துல சொல்றேன்).  டெஸ்டிங்க் ரூமுன்னு ஒன்னு தனியா இருக்கும். அதுக்குள்ள போய் ஜன்ய பாகங்களை பார்த்து வர்ணிச்சிக்கிட்டே என்னடா இது பூவாளி கணக்கா ஆகியிருக்கு. எவ கிட்டே போனே.. என்ன எட்டணா கொடுத்தயா?"

பண்டரிக்கு சகோதிரிகள் அதிகம். ஒரு சகோதரி மகனையும் க்ளினிக்லயே போட்டு வச்சிருந்தாரு.  ஃபீஸு எவ்ள இருக்குங்கறிங்க? ரூ 200 ல ஆரம்பிச்சு ஐ நூறு ஆயிரம் வரை போகும். இதில்லாம க்ளினிக்லயே வச்சு சலைன் ஏத்தறது, மைனர் ஆப்பரேஷன் வரை போனதெல்லாம் உண்டு. மேலும் முத்திப்போன கேஸ்களை கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி டாக்டருங்களுக்கு ரெஃபர் (?) பண்ணி அவிக கிட்டயும் பங்கு வாங்கறதுண்டு.

இதெல்லாம் ஒரு பங்குன்னா போலீஸ் ஸ்டேஷன்ல சொம்மா ஏ.எஸ்.ஐ ரைட்டர்  ரேஞ்சுல அறிமுகம் வச்சிக்கிட்டு ஒரே ஒரு மெடிக்கல் ஏஜென்ஸி விஷயத்துல  லட்ச கணக்கா வாங்கி சாப்பிட்டதும் உண்டு. அது பெரிய்ய கதை.  இருந்தாலும் ஒரே ஒரு தடவை கூட ஸ்டேஷனுக்கு போயோ எஸ்.ஐ கிட்டே ஃபோன்ல பேசியோ பார்த்ததில்லை.

( நானெல்லாம் காலணா ரிப்போர்ட்டனா இருந்துக்கிட்டு எஸ்.ஐ, சி.ஐ, டி.எஸ்.பி , எஸ்.பிகிட்டேல்லாம் ஃபோன்ல வாக்கு வாதமே பண்ணியிருக்கேன். ஆனா பண்டரிக்கு அமைஞ்ச மாதிரி நாலு பேர் அமையலிங்கண்ணா)


இவரோட  அம்மா ஒரு டூர் போனாய்ங்க. டூர் பஸ் ஆக்சிடெண்ட் ஆயி பண்டரியோட அம்மாவுக்கு கால் போச்சு. உடனே கிடுக்கி பிடி  போட்டு மத்தவுக கதை எனக்கு தேவையில்லை வைடா நஷ்ட ஈட்டைனு கட்டை பஞ்சாயத்து பண்ணி வசூல் பண்ணிட்டாரு.

இன்னொரு அக்கா மகனுக்கு ஸ்கூட்டர்ல ஆக்சிடெண்ட் ஆயி கால் நசுங்கி போச்சு அதுக்கும் நஷ்ட ஈட்டை கறந்துட்டாரு. பெத்த பையன் ஆக்சிடென்ட்ல போய் சேர்ந்துட்டான். அதுக்கும் நஷ்ட ஈடு வந்துருச்சி. இப்படி நஷ்ட ஈடா வந்துகுவிய என்ன காரணம்னு நீங்க கேட்கலாம். பண்டரிக்கு ஒரு பொண்ணு. கும்ப லக்னம் லக்னாதிபதி எட்டுல செவ்வாயோட சேர்க்கை.

டவுன்ல ரெண்டு க்ரூப்பு ரெண்டு க்ரூப் தலைவனும் பண்டரி க்ளினிக்குக்கு வந்து போவாய்ங்க. அவசரத்துக்கு ஒரு க்ரூப் தலைவனுக்கு சோறு கொண்டு போறவனை இன்னொரு க்ரூப் தலைவனுக்கு செக்யூரிட்டியா போட்டு அனுப்பினதெல்லாம் உண்டு..(ஹூம்.. அது அந்த காலம்)

பண்டரி போட்ட ஆட்டத்துக்கெல்லாம் கோ ஆப்பரேட் பண்ணது அவரோட பாடி, ட்ரஸ் அப் ,கெட்டப், பாடி லேங்குவேஜ், 555 சிகரட்டு தாங்கறது என் கருத்து. விசயம் தெரியாதவுக பார்த்தா பார்த்த அதே க்ஷணம் டபுள் ஓகே பண்ணிருவாய்ங்க.

இப்படியே போலி வைத்தியம், கட்டை பஞ்சாயத்து, ரவுடிகளுக்கு ராஜி பண்ணி வைக்கிறது, லேப் டெக்னீஷியனா சம்பளம் இதையெல்லாம் வச்சிக்கிட்டு எப்படியோ வாழ்ந்திருக்கலாம்.ஆனால் என்ன பண்ண நண்டு கொழுத்தா வளையில தங்குமா?

ஏற்கெனவே சொன்ன ரெண்டு க்ரூப்புக்கும் பயங்கரமா முட்டிக்கிச்சு. ஒரு க்ரூப் லீடர் (அந்த காலத்துலயே) பொலிட்டிக்கல் லைன பிடிச்சுட்டான். நல்ல க்ரோத். இவன் பேரை  சூர்யானு வச்சிக்குவம்.  பண்டரிக்கு சூரியாவோட லைன் கட்டாயிருச்சு.  "என்னைக்கோ ஒரு நாள் என்னைத்தேடி வந்துதான் ஆகனும் வரட்டும் வரட்டும்"னு காத்திருந்தாரு பண்டரி.

நாலு பேருனு சொன்னேனே அதுல ரெண்டாவது பார்ட்டி மகேந்திரன்(40). ஒரு சுமாரான மிலிட்டரி ஓட்டல் வச்சி நடத்திக்கிட்டிருந்தாரு. சூரியாவோட ஆட்கள் மகேந்திரனோட ஓட்டல்ல சாப்பிட வந்தாய்ங்க. ஏதோ வாய் தகராறு. இவிக போய் சூரியா கிட்டே இல்லாததும் பொல்லாததும் சொல்ல அவன் துப்பாக்கிய தூக்கிக்கிட்டு வந்துட்டான். ஓட்டல்லயே  வேலை செய்யற மகேந்திரனோட மாமன் என்ன என்னனு முன்னாடி வந்திருக்கான் தள்ளு முள்ளூ. துப்பாக்கி வெடிச்சுருச்சு. மாமன் காலி. இனி ஷாட் கட் பண்ணா ராஜி தானே ( சமாதானமா போறது) பண்டரி மறுபடி செம்பை கையிலெடுத்தார் (பஞ்சாயத்து பண்ண)  நாலுக்குள்ள ஒன்னான மகேந்திரனுக்கு என்னதான் சொல்லி கன்வின்ஸ் பண்ணாரோ தெரியாது,  சூரியா கிட்டேருந்து  எவ்ளதான் கறந்துக்கினாரோ தெரியாது. கேஸ் ராஜி ஆயிருச்சு. கொலை கேஸு ராஜி ஆயிருச்சு.

இந்த கெத்துல பண்டரி வீடு கட்ட ஆரம்பிச்சாரு.பக்கத்து வீட்டுக்காரனோட பாகத்தையும் சேர்த்து.  எக்ஸ் பார்ட்டி  சூரியா  கிட்டே பஞ்சாயத்துக்கு ஓடினான்.  ஹோட்டல் கொலை பஞ்சாயத்துல பண்டரி என்னதான் சூடு வச்சாரோ தெரியாது இந்த பஞ்சாயத்து சூரியா கோர்ட்டுல  ரிவர்ஸாயிருச்சு.

உடனே பண்டரி  சூரியாவை ஒழிச்சே தீருவேனு க்ரூப் சேர்க்க  ஆரம்பிச்சாரு. (அப்படி சீன் போடுவாரு அவ்ளதான். பண்டரி ஆச்சாரி மாதிரி தாய்க்கே தாலி பண்ணாலும் ராவாம விடாத பார்ட்டி) . சூரியாவுக்கு எதிரான க்ரூப் லீடர் மட்டும் வரப்போக இருந்தான். அவனையும்  சூரியாவோட  போட்டுத்தள்ளிட்டாய்ங்க. பண்டரிக்கு இன்செக்யூரிட்டி வந்துருச்சி. உடனே சாதி அஸ்திரத்தை எடுத்தாரு. சாதி ஆட்களை தேடி தேடி சந்திக்க ஆரம்பிச்சாரு. கோவில்ல சாதிக்காரவுக உற்சவம் வந்தப்ப அள்ளி விட ஆரம்பிச்சாரு.

பண்டரியோட ஜாதகசக்கரம் ரிவர்ஸ்ல சுழல ஆரம்பிச்சது. இதை பண்டரி உணரலை. பழைய நினைப்புலயே இருந்தாரு. வருமானம் குறைய ஆரம்பிச்சது. செலவை குறைக்க முடியலை. லேப் டெக்னீஷியன் உத்யோகத்துக்கும்,போலி வைத்தியர் தொழிலுக்கும் பொருத்தமே இல்லாம பந்தா.. வெட்டிச்செலவு. தீபாவளிக்கு மட்டும் ஏரியால இருக்கிற 100 சோம்பேறிக்கு தலா  நூறு ரூபா கவர்ல போட்டு தருவார். சாதிக்காரவுக ஸ்பான்சர் ஷிப்ல உற்சவம் நடக்கிற நாள்ளயும், தீபாவளிக்கும் அரை கிலோ மீட்டர் நீளத்துக்கு பட்டாசு.

கண்ணாலமா எட்றா போனை.. அடிடா ட்ராவல்ஸுக்கு.. அனுப்ப சொல்றா ட்ராக்ஸு, கருமாந்திரமா மறுபடி டிட்டோ. திங்கறதா ஓடறது, ஊர்ரது, உருள்றது கண்டதும் திங்கனும். பெண்டாட்டி நடமாடும் நகைக்கடை மாதிரி இருக்கனும். எப்படி தாங்கும்?

எவனோ காஞ்சான் மாட்டுவான் கறக்கற வரைக்கு கறக்க வேண்டியது. பக்கத்து வீடு குழந்தை குட்டியில்லாத விதவை டீச்சரோடது. அதை லவட்டியாச்சு. (வெள்ளிக்கிழமை க்ளினிக்ல பூஜை போட்டு பிரசாதம் கொடுத்தே கவுத்துட்டாய்க)  எதிர்ல செட்டியான் எவனோ காஞ்சத்தலையன் பஞ்சாயத்துக்கு வந்து  மாட்டினான்.  அதை சீப் அண்ட் பெஸ்டா அமுக்கியாச்சு. மாசத்துல எத்தனை தடவை தான் ட்ராவல்ஸ்ல வண்டி புக் பண்றது .பில்லுக்கு வாய்தா சொல்லிக்கிட்டே இருக்கிறதுனு சொந்தமா ஒரு செகண்ட் ஹேண்ட் வண்டி (ஃபோர் வீலருங்கண்ணா) வாங்கியாச்சு. அதை இஷ்டத்துக்கு மிஸ் யூஸ் பண்றது .ட்ரைவரை பிழிஞ்சு எடுக்கிறது. இவிக வேலைய இவிக காட்டினா ட்ரைவன் தன் வேலைய தான் காட்ட வாங்கின விலைக்கு பாதி வில்லைக்கு வித்து தொலைச்சாச்சு.

கவர்ன்மென்டு ஆஸ்பத்திரில புதுசா வந்த சூப்பிரணன்டு பண்டரிக்கு சகட்டுமேனிக்கு  தார்குச்சி போட ஆரம்பிச்சாரு. நம்மாளு வாலண்டரி ரிட்டையர்மென்ட் வாங்கிக்கினு ஊட்டுக்கு வந்துட்டாரு. இந்த சமயம் பார்த்து க்ரூப்ல இருந்த இன்னொரு பார்ட்டி ( பேரு பரமேச்சுனு வச்சிக்குவம்) கொஞ்சம் கொழுக்க ஆரம்பிச்சது. அதை பதம் பார்க்க ஆரம்பிச்சாரு பண்டரி. இதுக்கு பண்டரி விரிச்ச வலை என்ன தெரியுமா? பரமேச்சுவுக்கு 555 சிகரட்டை ஆஃபர் பண்ணதுதான். கேவலம் 555 சிகரட் பெட்டிய அலட்சியமா தூக்கி முன்னால போட்ட பந்தால மயங்கி போய் பரமேச்சு கொட்டி கொடுத்த தொகை எவ்ளதெரியுமா? அம்பது லட்சம். ஒரு பாண்டு பத்திரம் கிடையாது, கையெழுத்து காலெழுத்து கிடையாது. ரெண்டு வட்டிக்குன்னு அழுதுட்டு பரமேச்சு பட்ட பாடிருக்கே. யப்பா.........ஆஆஆஆஆஅ

பரமேச்சுவோட லைஃப் இன்னொரு ரகம். முத பெண்டாட்டி செத்துப்போய் ரெண்டாவதா ஒன்னை கட்டிக்கிட்டாரு. வரிசையா 4 ஆம்பளை பசங்க ஒரு பொம்பளை பொண்ணு. பார்ட்டி அதிரி புதிரியா சேலைய கண்டா துரத்துர கேஸு. பெண்டாட்டி புள்ளை பெத்து பச்சி உடம்பா சாக பிழைக்க கிடக்கிறப்ப வீட்டு நடைல ஒன்றைரையணா கிராக்கிய கொண்டு வந்து படுக்கப்போட்டு  திக்ஜம் பண்ண பார்ட்டி. ஸ்லேட் கம்பெனி விற்பனை பிரதி நிதிங்கற ஹோதால மாசத்துல பாதி நாள் டூர். ஜல்சா. வீட்ல பெண்டாட்டி பசங்க எதிர் வீட்டு சி.ஐ வீட்ல ஃப்ரீ சர்வீஸ் பண்ணிட்டிருப்பாய்ங்க. அம்மாக்காரி அரிசி ஜலிச்சு கொடுத்து விழற நொய்யை கொண்டு வந்து  பசங்களுக்கு ஆக்கிக்கொடுக்கனும். ஏதோ பசங்க  தலையெடுத்து கிரோசின் டீலரானாய்ங்க.

ஏதோ ஒன்னு ரெண்டு லோட் கிரோசின் பணத்தை ரொட்டேசன் பண்ணா பரவாயில்லை.கிரோசின்  வித்த ஒவ்வொரு காசையும் வேட்டு விட்டுக்கிட்டு இருந்தா கிரோசின் சப்ளை பண்ணவன் சொம்மா இருப்பானா என்ன? பரமேச்சுவோட  மூத்த பையனை கேரளாவுக்கு கிட்னாப் பண்ணிக்கிட்டு போன கதையெல்லாம் கூட நடந்தது. பண்டரி இந்த விவகாரத்துல என்னத்த கிழிச்சாருன்னா ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

டீலருக்கு கட்ட வேண்டிய பணத்தை பரமேச்சு பண்டரியோட ....ல விட்டுட்டு பட்ட அவதியிருக்கே அப்பப்பா. பண்டரிக்கு பணத்தை திருப்பி தர்ர உத்தேசமே இல்லையோ என்னமோனு பயம் வந்த பிறகு பரமேச்சு மெள்ள மெள்ள சர்க்கிளுக்குள்ள நியாயம் கேட்க ஆரம்பிச்சாரு. (புலம்ப) . இது பண்டரி காதுக்கும் வந்துருச்சி.

என்னடா இது இத்தனை நாள் கட்டிக்காத்த பந்தால்லாம் பசுமமாயிர்ராப்ல இருக்கேனு டர்ரான பண்டரி தான் கட்டின வீட்டை , லவட்டின டீச்சரம்மா வீட்டையெல்லாம்  வித்து பரமேச்சுக்கு செட்டில் பண்ணிட்டாரு.

ஆபெஸ்டாஸ் போட்ட வீடு கம் க்ளினிக்குல பண்டரி பட்ட அவதி கொஞ்ச நஞ்சமில்லே. பாவம் பெரிய சரீரமாச்சா  ஃபேனுக்கு அந்த பக்கம் ஒருக்களிச்சு படுத்தா இந்த பக்கம் நனைஞ்சுரும். இந்த பக்கம் ஒருக்களிச்சு படுத்தா அந்த பக்கம் ஜில். இந்த பக்கம் வியர்வை வெள்ளம்.

பண்டரி மனசுல கொஞ்சமா இன்செக்யூரிட்டி வரவும் தன் செல்ல மகளை, டிகிரி படிச்ச மகளை கால் நசுங்கின நாலாங்கிளாஸ் மட்டுமே படிச்ச அக்கா மகனுக்கு கட்டிக்கொடுத்துட்டாரு.

லாலா, மசாலா, பெருத்த சரீரம், ஹெவி டோசேஜ் ஆன்டிபயாடிக்ஸ் காரணமா கிட்னில ஏதோ பிரச்சினை வந்துருச்சி. சிகிச்சைக்காக திருப்பதி போன பண்டரி பெருமாள் திருவடிய சேர்ந்துட்டார். பண்டரியோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா லைஃப்ல எத்தனை தான் கஷ்டம் நஷ்டம் வந்தாலும் தாளி அந்த பந்தாவை மட்டும் விடவே இல்லை. கடைசி வரை  அதே பந்தா தான். பண்டரி சம்பாதிச்ச காசு பணம், சொத்து சுகம் எல்லாம் பொச்சு. ஆனால் பண்டரி மூட்டை கட்டிக்கிட்ட பாவம் மட்டும் இன்னைக்கு அந்த குடும்பத்தை நாறடிச்சிக்கிட்டிருக்கு. இன்னைக்கும்  க்ளினிக் இருக்கு, லேப் இருக்கு. மெடிக்கல் ஷாப் இருக்கு. சனம் இல்லே. பண்டரியோட வெடிச்சிரிப்பும் , நக்கலும்  இல்லே.

நாலு பேர்ல பண்டரிக்கே இந்த பதிவு சரியா போச்சு. அடுத்த பதிவுல மிலிட்டரி ஹோட்டல் மகேந்திரன், பரமேச்சு, எங்க ஊரு வடிவேலுவோட கதைய பார்ப்போம்.

பி.கு:
இதையெல்லாம் நான் நேர்ல பார்த்து அனுபவிச்சுத்தான் எழுதறேன். நிறைய எழுதாம விட்டிருக்கேன். உ.ம் பண்டரி சலூன்ல ( இதனோட ஓனர் தான் எங்க ஊரு வடிவேலு.)  சிரைச்சுக்கிட்டு கை பனியனோட கடைக்கு  வெளிய வந்து நிப்பாரு. வடிவேலு சட்டைய உதறி கொண்டு வந்து  கொடுப்பான். அதை போட்டுக்கிட்டே ரோட்ல எவளாச்சும் பொம்பளை போனா "டேய் இவளை இப்ப யார்ரா .............க்கிறான்"பார். இன்னைக்கு பண்டரியோட மனைவி சொம்மா தள தளனு இருக்காய்ங்க. அவிகளை யார் .....க்கிறானு கேட்டா பண்டரியோட ஆத்மா என்னாகும்?

இந்த சரித்திரங்களையெல்லாம் பார்த்து வளர்ந்ததாலதான் அடக்கியோ அடக்கி வாசிச்சுக்கிட்டு போதுமென்ற மனமே பொன் செய் மருந்துனு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். மத்த ஜோதிடர் எல்லாம் 5 கேள்விக்கு பதில் தந்து ஆயிரமாயிரமா ஃபீஸ் வாங்கறச்ச பார்ட்டி பொதுப்பலன் எல்லாம் வேணாம்யா என் கேள்விக்கு பதில் கொடு போதும்னு காசு அனுப்பினாலும் ( ரூ.250/) இடுப்பு நோக, கண் எரிய 100 கேபி வரைக்கும் பொதுப்பலனையும், ஆயிரம் கேள்வி கேட்டாலும் பதிலையும் அனுப்பிட்டிருக்கேன்.

எதுவொன்னுமே அதுவா வந்தா அது மட்டும்தான் வரும். நாமா கட்டி இழுத்தோம்னா அது பின்னாடியே கருமமும் வரும். கெட்ட நேரம் வரும்போது  வந்தது போயிரும் . கருமம் மட்டும் போகாது. எத்தனை சன்மம் எடுத்தாலும்.

சரி ஜூட்டுங்கண்ணா அடுத்த பதிவுல இன்னம் விளக்கமா பார்ப்போம். மனம் மாறுவோம். மனிதம் காப்போம்.