கலைஞருக்கு குடும்ப பைத்தியம்ங்கற தலைப்புல இந்த தொடர ஆரம்பிச்ச பிறகுதான் உலவு டாட் காமோட ரேங்க் பட்டியல்ல 17 ஆவது ரேங்குல இருந்த நம்ம ப்ளாக் நெம்பர் ஒன்னாச்சு. இதை எதுக்கு சொல்றேன்னா இதுல மேட்டர் கீது நைனா.
ஒரு நாதாரி முட்டாத்தனமா பிஹேவ் பண்ணி ஊர்ல இருக்கிற சனத்தையெல்லாம் பிரச்சினைக்குள்ள தள்ளுது.( ஒரு சிட் ஃபண்ட் காரனையே எடுத்துக்கங்க அந்த நாய் மட்டும் இந்த தொடரை முன் கூட்டியே படிச்சு தெளிஞ்சிருந்தா?அதுல பணம் போட்டு ஏமாந்த பார்ட்டிங்க மட்டும் இந்த தொடரை முன் கூட்டியே படிச்சு தெளிஞ்சிருந்தா? பத்திரிக்கைங்களுக்கு கால்பக்கம்,அரைப்பக்கம் விளம்பரங்களும் கிடைச்சிருக்காது. தலைப்பு செய்திகளும் கிடைச்சிருக்காது.
"கூசே காடித மேசே காடிதனு செடிப்பிந்தன்டா" ன்னு ஒரு சொலவடை உண்டு. அதாவது ரெண்டு கழுதைங்க ஒரு நிலத்துல மேஞ்சுக்கிட்டிருந்தது. திடீர்னு ஒரு கழுதைக்கு நமீதா ஞா வந்து கூவ ஆரம்பிச்சுருச்சாம். உடனே நெலத்துக்காரன் வந்து அடி பின்னிட்டான். மேயற கழுதைய கூவுற கழுதை கெடுத்ததாங்கறது இதுக்கு அர்த்தம்.
ஒரு பன்னாடை ஓசில கிடைச்சதுன்னு ரெண்டு ப்ளேட் பிரியாணி, சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ், பீ ,புண்ணாக்குனு மேஞ்சுட்டு ட்ரைவ் பண்ணுதுனு வைங்க. என்னாகும்? சீரண கிரியை ஆரம்பிச்சுட்டதால ரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதில கான்சன்ட் ரேட் ஆகும். மூளைக்கு ரத்தம் எட்டாது, மிதப்பா இருக்கும், மதர்மதர்ப்பா இருக்கும்.எப்படா வீட்டுக்கு போவம் தூங்குவம்னு இருக்கும். கை எக்ஸலேட்டரை முடுக்கிக்கிட்டே இருக்கும். முன்னாடி போற வண்டி காரன் திடீர்னு ஸ்லோ பண்ணானு வைங்க இந்த அலிகிரியால படக்குனு ப்ரேக் போட முடியாது. இவன் அவன் மேல மோத, அவன் தன் முன் வாகனத்தை மோத .. தேவையா?
இந்த நிலைம மாறனும்னா அல்லாரும் விழிப்பா இருக்க கத்துக்கனும். வயித்து வலியா ஜில்லுன்னு பீர் அடிங்கன்னு வெட்டி சஜஷன் கொடுக்கிறது இந்த தொடரோட உத்தேசமில்லை. பிரச்சினையோட முடி,அடிகளை (தலை,பாதம்) தரிசிக்க வச்சு, பிரச்சினைங்கற குழந்தையே பிறக்காம கு.க பண்றதெப்படின்னு கத்துக்கொடுக்கிறது தான் இந்த தொடர் பதிவோட நோக்கம்.
கடந்த அத்யாயத்துல " தானா வர்ர பிரச்சினைகள் எல்லாருக்கும் வருது, அதை டேக்கிள் பண்றதுலதான் வித்யாசம் ஏற்படுது. இந்த வித்யாசத்துக்கு பல காரணங்கள் இருக்கு"ன்னு சொல்லி
1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்:
என்று ஒரு பட்டியலையும் தந்து 1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்), 2.இரசாயன
காரணங்க ஆகிய ரெண்டு கேட்டகிரியை பத்தி விளக்கமும் கொடுத்திருந்தேன்.
இன்னைக்கு 3.உணவு முறை, 4.என்விரான்மென்டல் காரணங்கள்ஆகிய ரெண்டு கேட்டகிரிய விளக்க முயற்சி பண்றேன்.
1986 ஒரு பாடாவதி தெலுங்கு படத்துல ஒரு சீன் ஒரே ஒரு சீன் என்னென்னமோ செய்துருச்சி. பெண்ணோட இன்னொரு பரிமாணத்தை (தாய்மை) காட்டுச்சு. அதுவரை பலான உத்தேசங்களோடவே பார்த்த பெண்ணை வேறு ஒரு கோணத்துல பார்க்கிற தெளிவு ஏற்பட்டுது. இருந்தாலும் அப்பப்ப தலை தூக்கின காமப்பேயை தலைல தட்டி வைக்க ஜெய் ஆஞ்சனேயா. ரீ சேனலைசேஷனுக்காக உடற்பயிற்சி. ஆன்மா ஆமைவடைன்னு ப்ராட் கேஜ்ல போன வண்டி சிக்ஸ் பேக் மேலான வெறில படக்குனு மீட்டர் கேஜுக்கு டைவர்ட் ஆக மாட்டுக்கறியெல்லாம் சாப்பிட ஆரம்பிச்சேன். (இதனோட விளைவா யாருக்கும் எந்த தீங்கும் பண்ணாம எல்லாருக்கும் உபயோகமா இருக்கிற பசு எப்படி அகாரணமா வெட்டப்படுதோ அப்படி நானும் பல முறை வெட்டப்பட்டேன்)
சரி சம்ப்வத்துக்கு வரேன். டிகிரி ஃபைனல் இயர்ல க்ளாஸ் மேட் ஒருத்தன்.காலேஜ் யூனியன் எலக்சன் மேட்டர்ல என்னை கும்ம தேடறதா தகவல் வர வீட்ல பழம் வெட்ட வச்சிருந்த ஜெர்மன் கத்தியை தூக்கிக்கிட்டு அந்த பார்ட்டியோட வீட்டுக்கே போயிட்டன். விடியல்ல போனதால கேட்டு பூட்டியிருக்க அவன் என்னை சீற, நான் அவனை சீற அவனை அவங்கப்பா அடக்கி உள்ள கூட்டிப்போக சீன் ரத்தமில்லாம முடிஞ்சு போச்சு.
2004க்கு பிறகு:
1997 க்கு முந்தி கலப்பு திருமணம், அப்பாவோட மரணம் தந்த வறுமையாலயும், 1999க்கு பிறகு வந்த சீதேவிய நானா தொலைச்சதால வந்த வறுமையாலும் முட்டையே லக்சரியா இருக்க, மட்டன்,சிக்கனுக்கெல்லாம் டாட்டா. ஏதோ என் மனைவி வீர வன்னிய பரம்பரையா இருக்க அப்பப்ப வாசனைக்காக ஏதாச்சும் செய்வாள். அதையும் தொடறதில்லை.
( சைவம், கொல்லாமை இத்யாதி காரணங்களால் அல்ல. நான் மனோபலத்துல வாழறவன். என் பலம் மனசுல இருக்கு. அவளுக்கு இந்த இழவெல்லாம் கிடையாதே சரி ஃபிசிக்கல் ந்யூட்ரிஷனாச்சும் கிடக்கட்டும்னு " இன்னா இது... பார்க்கவே சரியா இல்லை .. எடு தூர எடு"ன்னு ரிஜெக்ட் பண்ணிர்ரது வழக்கம். 2007க்கு பிறகு பிரியாணிக்கு தொட்டுக்க தயிர் பச்சடி இல்லன்னா மட்டும் ஈரல் ரெண்டு மூணு பீஸ் சைட் டிஷ்ஷா உபயோகிச்சிட்டிருந்தேன். போக போக அதுவும் ஸ்டாப். காரணம் என்னன்னே தெரியாது)
நான் எங்க எம்.எல்.ஏனு அப்பப்ப பெருமையா சொல்ற சி.கே வெற்றி வாய்ப்பை இழந்து இருக்க தெ.தேசத்தை சேர்ந்தவர் எம்.எல்.ஏவா இருந்த காலம். அவர் பேர் ஏ.எஸ். மார்க்கெட் சவுக்ல ஒரு வைசிய செயற்கை கல் வியாபாரி . இவர் சி.கே ஆதரவாளர். அவிக பக்கத்து வீட்ல ஒரு பஜாரி கும்பல். அந்த வீட்டு நந்தூர்னி ஏ.எஸ்ஸோட ஆதரவாளன். இந்தியா பாக்கிஸ்தான் மாதிரி படக்கு படக்குனு சண்டை வந்துரும்.
ஒரு நா சீன் ரிப்பீட்டு. சி.கே ஊர்ல இல்லை. செட்டியார் ரெம்ப புலம்ப ஆரம்பிச்சிட்டார். "யோவ் என் மேல நம்பிக்கை இருந்தா உன் பையனை என்னோட அனுப்புன்னேன்" அனுப்பிட்டாரு. கூட்டிக்கிட்டு எங்க போனேன்? ஏ.எஸ் வீட்டுக்கு. அங்கன வில்லங்கம் பண்ணின பக்கத்து வீட்டு நந்தூர்னியும் இருக்கு.
நீங்க நம்பினா நம்புங்க. இல்லாட்டி போங்க. ஏ.எஸ்ஸோட ஆஃபீஸ் ரூமுக்குள்ள நுழைஞ்சதுமே விஷயத்தை சுருக்கமா சொல்ட்டு தர்ம சாஸ்திரத்துலர்ந்து ஒரு பாரா எடுத்து விட்டேன்.
" பாருங்க சார்.. சி.கே சத்ரியர். நீங்களும் சத்ரியர். உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கலாம். எத்தனை கோரமான யுத்தம் நடந்தாலும் ஐயருங்களுக்கு, வைசியர்ங்களுக்கு டேமேஜ் பண்ணக்கூடாதுன்னு தர்ம சாஸ்திரம் சொல்லுது. இனி இந்த ஃபேமிலிய டிஸ்டர்ப் பண்ண விடாதிங்க. வெற்றிய தர்ரது தர்மம் ஒன்னுதான்"
ஆச்சரியம் என்னடான்னா ஏ.எஸ் உடனே கன்வின்ஸ் ஆகி அந்த பக்கத்து வீட்டு நந்தூர்னிக்கு சொல்ட்டாரு " தபாருப்பா டோன்ட் ரிப்பீட்டு.. லீவ் இட்"
1986க்கும் 2004 க்கும் எப்படி இத்தனை வித்யாசம் வந்ததுன்னா அசைவத்தை விட்டதுதான்னு பீலா விடமாட்டேன். ஆனால் வித்யாசத்துக்குண்டான பல காரணங்கள்ள இதுவுமொரு காரணம்.
ஜகதீஷ் சந்திரபோஸ் தாவரங்களுக்கு உயிரிருக்குன்னு சொல்ட்டாரு. பூட்டாரு. இந்த சமாசாரத்தை பசங்களுக்கு நிரூபிக்க சைன்ஸ் வாத்யாருங்க நீர் தாவரத்தை கலர் தண்ணில வச்சி மறு நாள் வெட்டி காட்டுவாய்ங்க. அந்த தாவரத்தோட தண்டுலருந்து மேற்படி கலர் தண்ணி கசியும்.
சர்வ நிச்சயமா நீங்க சாப்பிடற உணவோட இம்பாக்ட் உங்க டெம்பர்மென்ட் மேல இருக்கும். கோபம் -பாவம் - சண்டாளம். கோபம்ங்கறது பலவீனத்தோட அடையாளம். சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி. ( DTS இல்லிங்கண்ணா) .
நாம சாப்பிடற சாப்பாடு உடலுக்கு பலத்தை கொடுக்கனும். ஆனால் இன்னைய தேதிக்கு சனம் திங்கற தீனி ஊளைச்சதை, தொந்தி,பிட்டம்,ஷுகரு,பி.பி மாதிரி நோய்களைத்தான் தருது.
இயற்கையோட நியதிப்படி எந்த உணவு பொருளா இருந்தாலும் அதுக்கு ஒரு எக்ஸ்பைரி டேட் இருக்கு. ஆனால் இன்னைக்கு இருக்கிற வியாபார போட்டில எக்ஸ்பைரி ஆனதை தூக்கி எறிய முடியாது. ஃப்ரெஷ்ஷாவும் விக்க முடியாது. அதனால ப்ரிசர்வர்ஸ் உபயோகிக்கிறாய்ங்க.இந்த விளம்பர யுகத்துல சரக்கை விட சரக்கோட நிறந்தான் முக்கியமாயிருச்சு. அதனால கலர் சேர்க்கிறாய்ங்க.
எப்போ நாம இயற்கைலருந்து விலகறமோ அதுக்குண்டான விலைய கொடுத்தே ஆகனும். பீட்ஸா, கேக்,ஐஸ்க்ரீம் முத கொண்டு டின் ஃபுட், ஜங்க் ஃபுட் எல்லாத்துலயும் ப்ரிசர்வர்ஸ் உண்டு.
வயித்துக்கு போன உணவே அழுக ஆரம்பிச்சுரும்னு தான் ஹெச்.சி.எல் சுரக்குது.
நிலைம இப்படி இருக்க கண்டதையும் கண்ட நேரத்துல திங்க நினைக்கிற சமுதாயத்துக்கு, நோய் தான் பரிசு.
உணவு பற்றாக்குறையால சத்துக்குறைவால சாகிறவங்கள விட அமித தீனியால சாகறவங்கதான் சாஸ்தி.
பல பேரு சாப்பிடற சாப்பாட்டுலருந்து அதை செரிக்க உடல் செலவழிச்ச சக்தி கூட திருப்பி கிடைக்கிறதில்லை. பச்சையா சாப்பிட்டா 100% கியாரண்டின்னுகூட சொல்லமுடியாது (இரசாயண உரங்கள்,பூச்சி மருந்து) வேகவச்சு சாப்பிட்டா 75% (குக்கர்ல பெட்டர்) தாளிச்சு சாப்பிட்டா 50% , பொறிச்சு, தீச்சு (அதாங்க வதக்கி) சாப்பிட்டா அது விஷம்.
அறுசுவை உணவுங்கறோமே தவிர நம்ம உணவுல உப்பு,காரம்,புளிப்புதான் சிம்மபாகம் வகிக்குது. கசப்பு,துவர்ப்புல்லாம் கிடையவே கிடையாது.
1999ல ஜீனோன்னு ஒரு நாயை வளர்த்துக்கிட்டிருந்தோம். அது உடம்பெல்லாம் உண்ணி. அதுக்கு ட்ரீட் பண்ணவோ, மருந்து மாயம் வாங்கவோ வசதி கிடையாது. பக்கத்துல வேப்ப மரம் இருந்தது. ரெண்டு மண்டை வேப்பிலை ஒடிச்சிட்டு வந்து கொதிக்கவச்சு அதனோட உடம்பை நன்னா நனைச்சோம்.
அப்பவும் கஷாயம் மிச்சமிருந்தது. எரிபொருள் வீணாயிரக்கூடாதுன்னு (கொதிக்க வச்சோம்ல) அதை ஒரு செம்புல ஊத்தி மனசை கல்லாக்கிக்கிட்டு ஒரு தம்முல குடிச்சி தொலைச்சிட்டன். அதுக்கு முந்தின்னா வருஷத்துக்கு ஒரு தாட்டி டைஃபாயிடோ, காமாலையோ, ஏதோ ஒரு இழவு வந்து இழவெடுக்கும். 1999லருந்து 2010 வரை நோ டிசீஸ். சமீபத்துல ஜன்மத்துல செவ்வாய் ஸ்தம்பனம் ஆகியிருந்ததை கவனிக்காம விட்டதுல சன் ஸ்ட்ரோக் வேற கூட்டு சேர்ந்து கொஞ்சமா ட்ரபுளாயிருச்சே தவிர .. ஐம் ஹேல் அண்ட் ஹெல்த்தி.
இந்தியர்கள்/முக்கியமா தென்னிந்தியர்கள் பண்ற தப்பு என்னன்னா 365 நாளும் அரிசிச்சோறு சாப்பிடறதுதான். அரிசி கார்போ ஹைட் ரேட் ஆகும். கா.ஹை க்ளூகோஸாகும். அதிகப்படி க்ளூகோஸ் சேர்ந்தா க்ளைக்கோஜனா மாத்தி ஸ்டாக் வைக்க இன்சுலின் சுரக்கனும். சுரக்கலன்னா ஷுகர் வரும்.
வேளை அறிந்த உணவு:
மனுஷ உடம்புல ஒரு கடியாரம் இருக்கு. உயிர் கடியாரம்ங்கறாய்ங்க. அது சூரிய,சந்திர உதயங்களை அடிப்படையா கொண்டு வேலை செய்யுது. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. சூரிய சந்திர உதயங்கள் ஆகாயத்துல மட்டுமில்லே நம்ம உடல்லயும் நடக்கு.
மேற்படி உயிர் கடிகாரம் கரெக்டா வேலை செய்யனும்னா வைகறை துயிலெழு, Early to bed early to rise, மாதிரியான பொன்மொழிகளையெல்லாம் ஃபாலோ பண்ணியாகனும். அப்பத்தான் பசி,தூக்கம்,சீரணம், ஸ்டூல்ஸ் எல்லாம் வேளைக்கு நடக்கும். "இனியொரு விதி செய்வோம் .அதை எந்த நாளும் காப்போம்"னு பாரதியார் சொன்ன மாதிரி உணவெடுக்கன்னு ஒரு டைமிங் சார்ட்டை ப்ரிப்பேர் பண்ணிக்கிட்டு அதை ஃபாலோ பண்ணனும்.
நீங்க தின்னப்போறிங்களா இல்லையான்னெல்லாம் உடல் வெயிட் பண்ணாது . நேத்து நீங்க சாப்பிட்ட நேரத்துக்கு வயித்துல அமிலம் சுரக்க ஆரம்பிச்சுரும். அந்த நேரம் நீங்க தீனிய உள்ள அனுப்பலன்னா இரைப்பையை சீரணம் பண்ண ஆரம்பிச்சுரும்.
என்.டி.ஆர் விடியல் 2.30 மணிக்கு எந்திரிச்சு யோகா,தியானம்லா செய்துட்டு 4 மணிக்கு ஆடு,கோழியோட ஃபுல் மீல்ஸ் அடிப்பாராம். இதனோட விளைவு என்னாச்சு? ஹார்ட் அட்டாக், பைபாஸ் பண்ண அமெரிக்கா போனார். பாஸ்கர் ராவ் ஆப்பு வச்சாரு.
நாம இந்த பூமியின் குழந்தைகள். பூமி சூரியனின் குழந்தை. ( நன்றி: ஓஷோ) நாம சூரியனை அனுசரிச்சுத்தான் வாழணும். ஒரு 48 நாள் மட்டும் சூரியன் உதிக்கறச்ச நாளை துவக்கி, சூரியன் அஸ்தமிக்கறச்ச வூட்டை சேந்து குளியல் போட்டு தின்னு 7க்கெல்லாம் தூங்கப்பாருங்க.லைஃபே மாறிரும். பிரச்சினைகளே மாறிரும். அதுகளை நீங்க ஃபேஸ் பண்ற விதமே மாறிரும். இந்த சோதனைய ஆரம்பிகறதுக்கு மிந்தி ஒரு மெடிக்கல் டெஸ்ட், 48 ஆவது நாள் ஒரு மெடிக்கல் டெஸ்ட் எடுத்துப்பாருங்க.
வேலை அறிந்த உணவு:
சேல்ஸ் ரெப் சாப்பிட வேண்டிய உணவு வேற, சுழல் நாற்காலிலயே காலத்தை கழிக்கிற சேல்ஸ் மேனேஜர் சாப்பிட வேண்டிய உணவு வேற. மாத்தி சாப்பிட்டா பல்புதான். மறுபடி என்.டி.ஆர் உணவு முறைய பாருங்க.
சரீர தன்மையறிதல்:
உங்க சரீரத்தோட தன்மைய அறிஞ்சு சாப்பிடனும். பொதுவா உஷ்ண த்ரேகம், சீதள த்ரேகம்னுவாய்ங்க. இதல்லாது பித்த உடம்பு, வாத உடம்புன்னு ரெண்டு வெரைட்டி இருக்கு. இதை பத்தியெல்லாம் நோண்டி நுங்கெடுத்து அதுக்கேத்த தீனிய திங்கனும்.
நொறுங்க தின்றால் நூறு வயது:
சீரணம் ஆக்சுவலா மனசுல ஆரம்பமாகுதுன்னு சொல்லனும். நீங்க பசியை உணர்ந்து, சாப்பிடனும்னு நினைச்ச உடனே ப்ராசஸ் ஆரம்பமாயிருது. வாய்ல உமிழ் நீர் சுரக்குது. உணவுக்குழாய், இரைப்பை ,இரைப்பைல அமிலம் எல்லாமே ப்ரிப்பேர்டா இருக்கும்.
சிலர் பாம்பு மாதிரி அப்படியே விழ்ங்குவாய்ங்க. சிலர் அழகர் மலை குரங்கு மாதிரி கொறிப்பாய்ங்க. இதெல்லாமே ராங்கு. டார்வின் தன் பரிணாம தத்துவத்தை விளக்கி எழுதியிருக்கிற புஸ்தவத்துல மன்சாளோட குணங்கள் எல்லாம் எந்த பிராணிக்கிட்டருந்து வந்ததுன்னு விலாவாரியா எழுதியிருக்காராம். சதி எந்த பிராணிக்கிட்டருந்து வந்தது தெரியுமா? சிம்பன்ஸி கிட்டருந்து வந்ததாம். கைகலப்புன்னு துவங்கினா வாரக்கணக்குல நடக்குமாம். அதனால ஒரு சிம்பன்ஸி தூங்கும்போது நாலு சிம்பன்ஸி சேர்ந்து ஒரு பெரிய கல்லை தூக்கி தலைல போட்டுருமாம்.
உணவை நன்னா மென்னு அரைச்சு விழுங்கனும். இடையிடையில தண்ணி சாப்பிட கூடாது.மொதல்லயே ஒரு விழுங்கு தண்ணி சாப்டுரனும். டைனிங் டேபிள்ள உட்கார்ந்து சாப்பிடறதாலதான் அரை டிக்கெட்டுங்களுக்கு கூட ஏட்டு ரேஞ்சுல தொப்பை விழுதோன்னு ஒரு சம்சயம் உண்டு. (லோ ஹிப் சாரி, லோ ஹிப் ஜீன் , அரணா கயிறு கட்டாம இருக்கிறதுல்லாம் கூட தொந்திக்கு காரணம்னா நம்ப மாட்டிங்க. )
நீங்க மணைலயோ,பாய் மேலயோ சப்பணம் கட்டி உட்கார்ந்து ஒரு முறம் எண்ணெய், ஆடு,கோழி ,பொறியல், கால் கிலோ உருளை கிழங்குன்னு சாப்பிட்டாலும் தொந்தி வந்துதான் தீரும் சொல்ட்டேன்.
புதுமைங்கறதாலயே அது தூள் ! பழமைங்கறதாலயே அது பாழ்ங்கற மென்டாலிட்டிய மாத்திக்கனும். அனுபவத்துக்கு மிஞ்சின ஆசிரியன் கிடையாது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவுங்கண்ணா..
உணவு குறித்த விழிப்புணர்வு இருந்தா நிறைய பிரச்சினைகளை தவிர்த்துரலாம். அப்படியே பிரச்சினைகள் வந்தாலும் அதை டேக்கிள் பண்ற ஸ்டைலே நாசூக்கா இருக்கும்.
மீதி அடுத்த பதிவில்