Sunday, June 13, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 3

கடந்த chapter ல சொன்ன வடிவேலு பாபா பக்தனா செமை பில்டப் கொடுத்துக்கிட்டிருப்பான். பேச்சு மட்டும் வெல்லமா இருக்கும். ஆப்பு வச்சான்னா ரத்தம் வெள்ளமா வரும். அவனை பத்தி சொல்ல ஆரம்பிச்சா இன்னொரு அத்யாயமும் வீணாப்போயிரும். அதனால ஒரு தாவு தாவிரலாம். வடிவேலு சந்துல ஒரு கடை வச்சிருந்தான்.(வாடகைக்குத்தான்.)

 அந்த கடை ஓனர் பத்தி சொன்னா சிரிச்சி சிரிச்சு வயிறே புண்ணாயிரும்.அது தனி கதை.லீஸுக்கு வாங்கின தியேட்டர் தன்னுதுதான்னு கேஸ் போட்டதென்ன, ஊரெல்லாம் கடன் வாங்கி திவாலாகிப்போன முஸ்லீம் குடும்பங்களோட சொத்தையெல்லாம் வாங்கி குவிச்சதென்ன, இதுல இன்னொரு தியேட்டரும் அடக்கம். இதுவும் லீசுக்கு வாங்கி கோர்ட்டுக்கு போன கேசுதான்.  வயது வந்த  பிள்ளைங்க  இருக்கறச்ச வீட்டு வேலைக்காரியோட கும்மாளம் அடிச்சதென்ன, இத்தனைக்கும் பார்ட்டி பாக்கெட் ட்ரான்ஸிஸ்டர் மாதிரி தான் இருக்கும். பி.பி பேஷண்ட் . அந்தாளோட வேலை என்னன்னா காலைல வாக்கிங்கிளம்புவாரு. தன்னோட பிலிடிங்ஸ் எங்கெல்லாம் இருக்கோ அந்த ரூட் வழியா அல்லாத்தயும் பார்த்துக்கிட்டே  வாக்கிங் போவாரு. தினசரி எங்கனயோ ஒரு இடத்துல கண்ணு சுத்தி விழுந்துருவாரு. உடனே யாரோ தெரிஞ்ச ஆட்டோக்காரன் கொண்டு போய் வீட்ல சேர்ப்பான். இன்னம் நிறைய மேட்டர் இருக்கு  அதனால பின்னொரு சமயம் பார்ப்போம்).

சந்துல கடை வச்ச வடிவேலு கொஞ்சமா வசதி வந்ததும் ( வந்துருச்சுனு நினைச்சதும்) மெயின் ரோட்ல ஒரு கடைய பார்த்து மாறிக்கிட்டான். பழைய கடைய சென்டிமென்ட்டுன்னு காலி பண்ணாம வச்சிருந்தான். ஃபைனான்ஸும் ஓடிக்கிட்டிருந்தது. அண்ணன் தம்பி தகராறுல இருந்த கோவணமளவு இடத்தை ரெண்டா பிரிச்சு வீட்டை கட்டிட்டான். கைல இருந்த இருப்பெல்லாம் காலி.  அண்ணன் தம்பில எவனாச்சும் ஒருவன் பெண்டாட்டி ............... ஐ முகர்ந்துக்கிட்டிருக்கிற கேஸாயிருந்தாதான் அண்ணன் தம்பி தகராறெ வருது. நம்ம வடிவேலு இந்த ரகம்.

இதெல்லாம் நமக்கும் தெரியும். இருந்தாலும் அதை  (சந்து கடைய) ப்ரிஃபர் பண்ணல.

நம்ம வடிவேலு ஏரியாவுக்கே ஒரு பி.ஆர்.ஓ   மாதிரி.  யாரை தேடியார் வந்தாலும் கரெக்டா அட்ரஸெல்லாம் சொல்லுவான். நாம தேடற பார்ட்டி சின்ன வீட்ல இருப்பானா பெரிய வீட்ல இருப்பானான்னும் சொல்வான். எவன் எவளை வச்சிருக்கான்னும் கரெக்டா சொல்லுவான்.( என்னடான்னா சில சமயம் நம்மை உதைக்க வர்ரவன், பிடிக்க வந்த கான்ஸ்டபிள், கடன் காரனுக்கும் கரெக்டா போட்டு கொடுத்துருவான்) அந்த ஹோதால "யப்பா வடி வேலு ! பணம் காசெல்லாம் காலி  ஆயிருச்சு. சோத்துக்கு பிரச்சினையில்லை.வட்டி வந்துரும் பொழுது போவனும். சின்னதா ரூம் எதுனா காலியிருந்தா சொல்லேன். சோசியம் சொல்லி நாலு காசு பார்ப்பேன். அட்வான்ஸ் கிட்வான்ஸெல்லாம் தர்ர அளவுக்கு வசதி கிடையாது. சீப் அண்ட் பெஸ்டா சொல்லு"ன்னேன்.

ஜனரஞ்சகமா போயிட்டிருக்கிற இந்த பதிவுல மசாலா இல்லைன்னா எப்படி? ( பாபா! எக்ஸ் க்யூஸ் மீ)


வடிவேலு தான் என்னவோ  பெரிய்ய மதன காமராஜன் மாதிரி பயங்கர பீலா விடுவான். தற்சமயம் அல்லாத்தயும் விட்டுட்ட மாதிரியும் ஒரு காலத்துல கட்டைய போடாத இடமே இல்லன்னும் இஷ்டத்துக்கு சுத்துவான். ஒரு நா அவன் மனைவி அம்மா வீட்ல இருந்து ஆட்ட்டோல வந்து கடையண்ட ஆட்டோவை நிறுத்தினா.   இவனை  ஒரு விரல் காட்டி கூப்டா. கலெக்டரம்மாவ ரிசீவ் பண்ணிக்கிற டஃபேதான் கணக்கா அப்படி ஒரு வினயம் .அவள் வந்த ஆட்டோவுக்கு காசு கொடுத்துகட் பண்ணி அனுப்பிட்டு இன்னொரு ஆட்டோவ கூப்டு சீட்டை தட்டி சுத்தம் பண்ணி வழியனுப்பிட்டுதான் கடைக்குள்ளாற வந்தான்.

வடிவேலுவுக்கு செட்டியார் பசங்களோடதான் டீலிங் சாஸ்தி. பாவம் இவனுக்கு தான் பலான சாதின்னு இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் போல. அவன் மனைவிய பார்த்தா ஜஸ்ட் ஒரு செட்டியாரம்மாவை பார்த்தமாதிரியே இருக்கு. ஒரு நாள் இவன் கட்டின வீட்டை பார்க்க போனேன். டிட்டோவா பஜார்ல கடையோட சேர்த்து செட்டியாருங்க கட்டுவாங்களே குகை மாதிரி வழி , ஃப்ளோர் டிக்கெட் க்யூ மாதிரி வராண்டா வாயு கூட வெளியேறாத மாதிரி வீடு அதே தான். அப்பத்தான் நினைச்சேன். தாளி..இவன் செட்டியார்ங்க காசை சாப்டு சாப்டு அவிக கருமமெல்லாத்தயும் மூட்டைக்கட்டி இப்படி ஆயிட்டான் போலன்னு.

சரி சரி ரெம்ப டைவர்ட் ஆயிட்டாப்ல இருக்கு. மேட்டருக்கு வருவம். எங்க விட்டோம். ஆங் .. வாடகைக்கு கடை பாருன்னேன்.

உடனே வடிவேலு தன்னோட வழக்கமான ஓவர் டெசிபல், ஓவர் பாடி லேங்குவேஜோட,ஒக்காபிலரியோட தன் கடைய எடுத்துக்கசொன்னான். ஒரு சீப்பு கூட வைக்காம மொத்தத்தையும் காலி பண்ணி தரேன்னான். அட்வான்ஸ் வேணவே வாணாம். செட்டியார்( பில்டிங் ஓனர்)  கிட்டே நான் பேசிக்கிறேன்னான்.

நேரம் நல்லாருக்கு, ஓப்பன் பண்ணிரலாம்னு ஒரு நா கடைய க்ளின் பண்ண சொன்னேன். தன்னோட சிஷ்ய பிள்ளையான ஒரு எஸ்.சி. பையனை விட்டு க்ளின் பண்ண சொல்லிட்டான்.(அவனுக்கு பத்து பைசா தரமாட்டான்.)  நான் சாயந்திரம் சுத்தமா குளிச்சு முழுகி போறேன்.  அந்த கடையோட பரப்பளவே பத்துக்கு பத்துதான் இருக்கும். அதுல பத்துக்கு ரெண்டரைல ஒரு சலூனையே திணிச்சி வச்சிருந்தான்.  நான் அரண்டு போய் "என்னய்யா இது" ன்னேன் .ஒரு வாரம் சாமி மொத்தத்தையும் தூக்கிரலாம்னான். (ஒரு மயித்த கூட தூக்கலை) . நானு விதியேன்னு  பெண்டாட்டியோட ஒரு பழம்புடவைல ஒரு ஸ்க்ரீன் தயார் பண்ணி சலூனை மறைச்சு தொழிலை துவங்கிட்டன்.

அவனோட சேஷ்டைகள் எல்லாம் முன்னாடியே தெரியும்னாலும் இப்ப கிட்டக்க பார்க்கிற சான்ஸு கிடைச்சது.   பொதுவாவே நமக்கு இர்ரிடேசன் அதிகம். அதுலயும் இவன் பண்ற அட்டூழியம் இருக்கே சகிக்கவே சகிக்காது.  எறும்புகளை ஃப்ரை பண்ணி ஆனைக்கு ஸ்னாக்ஸ் பண்ற பார்ட்டி. இதுல பாபா புராணம் வேற. திங்கள் கிழமைலருந்தே ஆரம்பிச்சுருவான். போன வியாழக்கிழமை குளிச்சுட்டு வர வீட்டுக்கு போனேனா,,

நாளுக்கு நாள் அவனோட  எக்ஸ்ப்ளாய்டேஷன் அதிகரிச்சிக்கிட்டே போனது. அட்வான்ஸே வேணாம்னவன் ஒரு நா வீட்டுக்கு வந்து கேஸ் வந்துருச்சி பணம் வேணம்னு கடனா கொடுன்னு தாலியறுத்து வாங்கிட்டு போனவன் போனானடின்னு ஆயிருச்சு. பணம் போனது கூட பெருசுல்லை. என்னை என்னவோ அவனோட ஃபாலோயர் மாதிரி ட்ரீட் பண்ண ஆரம்பிச்சான். கமாண்ட் பண்ண மிகவும் விரும்பினான்.

இதுல பொருத்தமே இல்லாம இடையிடையில பாபா புராணம். வடிவேலு மேல கடுப்பு பாபா மேல கடுப்பா மாறிருச்சு. ஒரு நாள் கடுப்பாகி,வடிவேலுவை கடுப்பாக்க "என்னத்த..பாபா.. எங்கனயோ கஞ்சா அடிச்சிக்கிட்டிருந்த பார்ட்டி. ஊர்ல இருக்கிற கொலைகாரனெல்லாம் பாபாவத்தான் கும்பிடறான். பத்து வட்டி வாங்கிறவன், அப்பா அம்மாவுக்கு சோத்தப்போடாதவன்லாம் பாபாவ கும்பிடறான். இதுக்கெல்லாம்  பாபா எங்க போய் முட்டிக்கிறது ஒரு வேளை அவரு தெய்வமாவே இருந்தாலும் இவிக இம்சை தாங்க முடியாம  மத்த சாமிங்க மாதிரி இவரும் ஓடிப்போயிருப்பாரு. மொத்தத்துல  பாபா பேரை சொல்லி உங்க இமேஜை பூஸ்ட் அப் பண்ணிக்கிற முயற்சில அவரை நாஸ்தி பண்றிங்க. "ன்னு கடிக்க ஆரம்பிச்சேன் 

பாவம் வடிவேலு பெண்டாட்டிக்கு சரண்டர் பார்ட்டி. அவளுக்கு பயந்து அம்மாவை திண்ணை தாழ்வாரத்துலயே வச்சி மெயின்டெய்ன் பண்றான்.(இது அப்ப தெரியாது அப்பாறமா தெரியும் )  உடனே வெடிச்சு கிளம்பினான்.

அவன் என்னவோ அய்யரு மாதிரியும் , நான் என்னவோ   கல்லுக்கு ஏஞ்சாமி பாலபிசேகம்னு கேட்ட தலித் மாதிரியும்  சீன் மாறிப்போச்சு.

"இன்னா இன்னா பேசறே நீ ..பாபான்னா தமாசா கீதா உனக்கு அவரு  அவரா நெனச்சாத்தான் அவரோட பார்டர்லயே என்டர் ஆகமுடியும் நானெல்லாம்  எப்படியெல்லாம் இருந்தவன் தெரியுமா? ஏதோ அவரா பார்த்து இஸ்துக்கினாரு " இப்படி பாபா மகிமை பத்தி சொற்பொழிவே ஆற்ற ஆரம்பிச்சுட்டான்.


நம்ம ஆன்மீக வாழ்க்கை துவங்கி 11வருடம் முடிஞ்சி கடவுளுக்கே நான் தான் கள்ளக்காதலிங்கற ஃபீலிங்ல இருந்த நேரம். வடிவேலுவோட  ஓவர் ஆக்சனுக்கு புகையே வந்துருச்சி. " த பாரு நிப்பாட்டு   நீ சொல்ற பாபா மட்டும் உண்மையிலயே சாமின்னாலோ, சாமியோட நினைப்புலயே வாழ்ந்த ஆசாமின்னாலோ இன்னைக்கே பேசறேன். அடுத்த வியாழக்கிழமை பாபாவுக்கு நான் தரேன் அப்பாயிண்ட்மென்ட் வென்யூ : ஷீர்டி வருட்டா"ன்னிட்டு   வந்துட்டன்.

கையிலயா காணி கிடயாது. (எல்லாத்தயும் தத்தம் பண்ணியாச்சு) வட்டி காசு வந்தாலும் ஆயிரம் கமிட்மென்டு.ஒரு வேளை காசே கிடைச்சும் பாபா தெய்வமா இருந்து அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கலன்னா? அய்யய்யோ இந்த வடிவேலு ப்ரைவேட் டிவி சேனலை விட மோசமானவனாச்சே. ஏதோ படத்துல வடிவேலுவோட பேக்கரி மேட்டர் மாதிரி ஊரெல்லாம் நாறடிச்சுருவானேனு பயங்கர டென்சன்.

மார்கெட் சவுக் சனங்க சைக்காலஜியே வேற. முன்னொரு பதிவுல நாலு பேரு பத்தி எழுதியிருந்தேனே .. அது மாதிரி நாப்பது பேரை பத்தி எழுதனும். ஒவ்வொரு கேரக்டரையும் வச்சி ஒரு  சினிமாவே எடுக்கலாம்.  குளிக்கவே குளிக்காத காதர், தாத்தா பரணைல அண்டால சேர்த்து வச்சிருக்கிற  நகைகளை சுட்டுக்கிட்டு வந்து தினசரி சூத்திர பசங்களோட தண்ணி போட்டு சீயா சாப்பிடற செட்டியார் பையன், ஆக்சிடென்ட்ல காலொடிஞ்சு பேஸ் பெருத்துப்போய் திண்ணைல உட்கார்ந்துகிட்டே அரசியல் பண்ற பண்டரியோட அம்மா, அண்ணன் எம்பியா இருக்க தான் மட்டும் சாதாரண சிமெண்ட் டீலரா கெனட்டிக் ஹோண்டால திரியற  ஆசாமி ( இந்த பார்ட்டிய ஆட்டத்துல சேர்த்துக்கிடவே மாட்டாய்ங்க. இத்தனைக்கும் சாடைல பார்த்தா எம்பியும் இவரும் ரெட்டை மாதிரி இருப்பாய்ங்க)   கேரக்டர்ல எத்தனை வித்யாசமிருந்தாலும் அக்கப்போர்ல பயங்கர டேஸ்டு. அதுலயும் எல்லாருமே வடிவேலுவோட ஹெவி டெசிபல் செய்தி வாசிப்புக்கு அடிமையானவுக.

1986ல இருந்து சாமிங்களோட நம்ம டீலிங்கெல்லாம் ஞா வந்துருச்சி. சாமிங்க கை கொடுத்த சந்தர்ப்பங்கள். கை விட்ட சந்தர்ப்பங்கள். நான் வாழ்க்கைல  முத முறையா சுய புத்தியோட வணங்கின ஆஞ்சனேயர் அவரு என் லைஃப்ல நடத்தின அற்புதங்கள்.ஆஞ்சனேயரோட ப்ரசன்னத்துக்காக  நான் ஜெபிச்ச  ராம நாமம். ஒவ்வொன்னா திறந்துக்கிட்ட ரகசிய கதவுகள் எல்லாம் ஞா வந்துருச்சி.

கடவுளையும்,அவரோட லீலைகளையும்  புரிந்துகொள்வது எப்படின்னு  குடும்ப பத்திரிக்கைல ஒரு  தொடரே எழுதற அளவுக்கு அனுபவம் உண்டு. (இதனோட சாரமா நான் எழுதின கவிதைய படிக்க இங்கே அழுத்துங்க) இருந்தாலும் இருந்தாலும்..

தெய்வங்கள் என் விதியிடம் என்னை ஒப்படைச்சுட்ட சந்தர்ப்பங்களும் இல்லாம இல்லை. ஆனால் அதுவும் என் நன்மைக்குத்தான்னு அப்பாறம் புரிஞ்சிக்கிட்டதுண்டு.  க்டக லக்னம்ங்கறதால வளர்பிறைல ஒரு வாழ்க்கை, தேய்பிறைல ஒரு வாழ்க்கைன்னு ரெண்டையும் பார்த்தவன் தான். இருந்தாலும் அவசரப்பட்டு சவால் விட்டுட்டமோன்னு சம்சயம் அதிகரிச்சுக்கிட்டே போச்சு.

என்னதான் தியானம், யோகம்னு நிறைய படிச்சு நிறைய அனுபவங்கள் ஏற்பட்டிருந்தாலும் எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளி ஹனுமானும், ராம நாம ஜெபமும்தான். அதுக்கு மிஞ்சி நம்மோட சாதனைன்னு ( ஸ்பிரிச்சுவல் எக்ஸர்சைஸ்) பார்த்தா பொது நலம் கருதிய சிந்தனைய சொல்லலாம். தினம் தினம் மரணம் பத்தி சிந்திக்கிறதையும், அதை வச்சு வாழ்க்கையை கூர் தீட்டிக்கிறதையும் சொல்லலாம்.

இத்தனை இருந்தாலும் இறை தேடும் பயணத்துல நம்ம முறை ஜஸ்ட் நாம ஜபம்தான். ரிசல்ட் என்னவோ ஓஹோ தான். ஒரு தரம் இப்படித்தான் அஷ்டம சனி  நடக்கறச்ச கதவை கழட்டி நம்ம குடிசை வீட்டுக்கு வெளிய போட்டுக்கிட்டு அது மேல படுத்து சவாசனத்துல ராம நாம ஜெபம் பண்ணிட்டிருந்தப்போ சாட்சாத் ஹனுமானே காட்சி கொடுத்தார். அதுவும் எப்படி?

உடம்பெல்லாம் வெள்ளை வெளேர்னு முடி. வால் முடிவுல மணி. பேக் கிரவுண்ட்ல ஹனுமான் சாலீஸா ப்ளஸ் மணி சத்தம்.  சாம்பிராணி புகை . அதோட வாசம் போனஸ். ஹனுமான் சாலீஸா கம்ப்ளீட்டா ஓடிமுடியறவரை தரிசனம்.( உண்மைல அது வரை ஹனுமான் சாலீஸாவை கேட்டதே கிடையாது.  நம்ம ஜாதகத்துலயெ சந்தேகம்ங்கற கான்செப்டுக்கு முக்கிய இடம் உண்டு. தியானம்னா சாட்சியாக இருந்து கவனித்தல்னு சொல்வாய்ங்க.

என்னா செய்தாலும் "என்னப்பா முருகேசா இதெல்லாம் தேவைதானா? உன் லட்சியத்துக்கும் இதுக்கும் என்னப்பா லின்குன்னு  ஒரு குரல் விஜாரிச்சிக்கிட்டே இருக்கும்ல"

அதே குரல் ஸ்டார்ட் ஆயிருச்சு. என்னப்பா இதென்ன ஆடிட்டரி ஹெலூசினேஷனா இல்லே இல்யூஷனான்னு கேள்வி ஆரம்பமாயிருச்சு. படக்குனு கண்ணை திறந்துட்டன். ஆஞ்சனேயரு..? அசையற மாதிரி  காணோம். தூத்தேறி.. கேள்வியாவது ஒன்னாவது காசு பணமில்லாம கிடைக்கிற இந்த சுகானுபவத்தை ஏன் இழக்கனும்னு கண்ணை மறுபடி மூடிக்கிட்டேன் .

ஆனால் பாபா அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கலன்னா? நீ என்னடா எனக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கிறதுன்னு ரிவர்ஸ் ஆயிட்டா?  இப்படி ஆயிரம் கேள்விகளோட ராம நாம ஜெபத்தோட தூங்கிட்டன்.


போகிக்கு எப்படி விழிப்பும் தூக்கமாவே இருக்கோ , யோகிக்கு தூக்கமும் யோகமாவே இருக்கும்னு எங்கனயோ படிச்சதா ஞா. சாட்சியா இருந்து கவனிக்க ப்ராக்டீஸ் பண்ண கனவுகளை விலகி நின்னு  கவனிக்கிறதும் ஒரு வழின்னு ஓஷோ சொல்லியிருக்காருங்கோ. நானெல்லாம் கனவுலயே பொய் சொல்வேன். அந்த அளவுக்கு விழிப்புங்கண்ணா. ஆனா பாருங்கண்ணா சமீப காலமா கனவே வர்ரதில்லிங்கண்ணா. காரணம் என்னன்னு புரியலிங்கண்ணா.

ஒன்னை மட்டும் கன்ஃபர்ம் பண்ணிட்டு இந்த அத்யாயத்தை முடிக்கிறேன்.அன்னைக்கு ராம நாம ஜெபத்தோட தூங்கிட்டன்னு சொன்னேனே அந்த ராத்திரியும் கனவு ஏதும் வரலிங்கண்ணா. ஸ் அப்பாடா..