Tuesday, June 22, 2010

நானும் ஒரு குடிகாரன்

அண்ணே வணக்கம்ணே, நானு ஒரு குடிகாரன்ங்கற இந்த பதிவோட "உனக்கென்ன நித்ய யவ்வனம்"  ங்கற தலைப்புல‌ மெனோஃபஸ் தாக்காத, நித்ய யவ்வனம் கொண்ட , ஒரு பேரழகிய பத்தி ஜொள் விட்டு ஒரு கவிதை எழுதியிருக்கேன்.படிச்சு பாருங்கண்ணா
ரெம்ப நாளா எழுதனும் எழுதனும்னு நினைச்சு எழுத  முடியாத போன விஷயம் இது. பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். பாட்டில் குறைகண்டே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்ங்கறத போல என் பதிவுகள்ள பலவும்,பலதையும்,பலரையும் குறை சொல்ற பதிவாவே இருக்கிறத பார்த்திருப்பிங்க.

என்ன செய்ய இது என் குறையல்ல  நான் வாழும் காலத்தின் குறை. நல்லவை அருகி, அல்லவை பெருகிப்போன காலம் இது.

அல்லவைகள்ள தலையாயது சுரண்டல் . சுரண்டலின் விளைவு பசி. எல்லா அல்லவைகளுக்கும், இல்லாமைகளுக்கும்  குற்றங்களுக்கும் ஆதி இதுவே. ஆனால் மனித குல வரலாற்றுல இந்த குடிப்பழக்கம் எங்கன எப்ப ஆரம்பிச்சதுன்னு தெரியலை.( வேத காலத்துல அவாளே குடிச்சிருக்காய்ங்க).

மனித உடலில்,மனதில் மறைந்துள்ள இயற்கை மதுவின் ஊற்று வற்றிப்போன பின் மனித மனம்  செயற்கை போதைக்கு அலை பாய்கிறது போலும். சுக ஜீவனம், அதிகாமம் ஆகியன நரம்பு மண்டலத்தை நலியச்செய்ய தற்காலிக உத்சாஹம் தேடித்தான் மனிதன் மதுவை நாடினான் போலும்.

சின்னவயசுல இதோ பார் கள்ளுகடைன்னு போர்டு பார்த்திருக்கேன். கள்ளுக்கடை,சாராயக்கடைல்லாம் ஊருக்கு வெளிய இருக்கும். அதை நடத்தறவன்லாம் அந்த கால சமூகத்துல தீண்டத்தகாதவனா இருந்தான்.  நானும் குடிச்சிருக்கேன். என்ன இன்டர்ல பீரு. அதுக்காக மெசானிக்கல் கிரவுண்டு போகனும். அங்கே பீர் சாப்பிட்டுட்டு, சிகரட்டு அடிச்சு, அது மேல ஸ்வீட் பீடா போட்டு குதப்பி ஏரிக்கரை மேலயே சைக்கிள் ஓட்டிக்கிட்டு ஆனந்தாலயோ, வெங்கடேஸ்வராலயோ ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துட்டுத்தான் வீட்டுக்கு வரமுடியும்.

டிகிரி எல்லாம் முடிச்சு, மாவட்ட கருவூலத்துல எம்.ஓ ரைட்டரா வேலைக்கு சேர்ந்து 3 மாசத்துக்கொருதரம் வர்ர ரெம்யூனரேஷன்ல  ஒரு அம்பது ரூபாவை அதுக்கு ஒதுக்கி ஒரு குவார்ட்டர் வாங்கி  சாப்பிட்டது உண்டு. அப்ப என்ன ஒரு அம்பது ரூபா இருந்தா டிஃபன்,சிகரட்,சினிமா எல்லாமே முடிஞ்சுரும் .இப்ப அப்படியா?
1987 வாக்குல   (வயசு 20) வைன் ஷாப் மாடிக்கு குடிக்க போற முகூர்த்தம்  மதியம் 3 மணியா இருக்கனும்  அப்பத்தான்  அங்கன ஈ காக்கா கூட இருக்காது.

இப்பத்தான் வைன் ஷாப்பெல்லாம்  24 ஹவர்ஸ் ஹாஸ்பிட்டல் மாதிரி  நிரம்பி வழியுதே. அண்ணன் தம்பி, அப்பா புள்ளை, மாமன் மச்சான்லாம் ஒரே கடைல சாப்பிட ஆரம்பிச்சுட்டாய்ங்க. கலிகாலம்.

ஆனா ஒன்னுங்கண்ணா நல்லதுக்கோ ,கெட்டதுக்கோ அது பீராகட்டும், பிராந்தி,விஸ்கியாகட்டும், வைனாகட்டும் அந்த நாத்தம் நமக்கு  ஒம்பவே இல்லிங்கண்ணா. குடிக்கறச்சயாச்சும்,சர்க்கிள்ள மாப்புக்காக  சகிச்சுக்கிட்டு குடிச்சு தொலைச்சுரலாம். ஆனால் ஏப்பம் முதல் வாயு வெளியேற்றம் வரை நார்ரதை சகிச்சிக்கவே முடியாத பட்சத்துல சக குடியர்களோட லொள்ளு தாங்க முடியாத பட்சத்துல 1991ல நிப்பாட்டிட்டன்.

இத்தனைக்கும் அதுக்கு முன்னாடி  கள்ளுக்கடையிலயெல்லாம் போய் கள்ளுப்பானை மேல குப்புனு மொய்க்கிற ஈக்களை சகிச்சுக்கிட்டு மக்ல வாங்கி குடிச்ச பார்ட்டி நானு. குடிச்சதெல்லாம் சர்க்கிள் மெச்சத்தான். ஆனால் அதுக்கு பின்னாடி  நான் பட்ட இம்சை இருக்கே.. மறு நா கக்கா போகும் போது கூட அதே நாத்தம் . தூத்தேறிக்க . சரி விட்டுத்தொலைச்சதை பத்தி இப்ப என்னான்னு கேட்கிறிங்க அப்படித்தானே. சொல்றேன். சொல்றேன். சொல்றேன்.

குடிப்பழக்கத்துக்கு  நிப்பிள் காம்ப்ளெக்ஸும் ஒரு காரணம்னு சைக்காலஜி சொல்லுதுங்க. அதாவது பிள்ளைங்களுக்கு சீக்கிரமா தாய்ப்பால் மறக்கடிச்சா  அவிக வளர்ந்து பெரியவங்களாகி முலைக்காம்புக்கு பதில் சிகரட்டோட ஃபில்ட்டரையும், மது பாட்டிலையும் நாடுவாய்ங்களாம்.

சின்ன வயசுல எங்க பக்கத்து மைதானதுல விஜி விஜின்னு ஒரு பையன் இருந்தான் கிட்டி புள் ஆடற வயசுல அம்மா ஞா (முலைப்பால்) வந்துட்டா படக்குனு ஓடிப்போய் அம்மாகிட்ட ஒரு மூச்சு பாச்சி குடிச்சிட்டு வந்துதான் ஆட்டத்தை கன்டின்யூ பண்ணுவான்.

இப்ப குடிகாரங்களோட எண்ணிக்கை எகிறி கிடக்கிறத பார்த்தா  க்டந்த காலத்துல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு  நியாயமான கால அளவுக்கு முலைப்பால் கொடுக்கலயோன்னு தோணுது.

சகஜமாவே மனுஷங்களுக்கு எந்த காலத்துலயுமே நிகழ்கால அரசியல்,சமூக,பொருளாதார அமைப்புகள், அதுகளோட செயல்பாடுகள் குறித்த திருப்தி இருந்தது  கிடையாது. உச்ச பட்ச அதிருப்தி உண்டு. எந்த மனுஷனுமே தன் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தை மறக்க விரும்பறான்.  இந்த வெறி எதிர்காலத்தையே எரிச்சு போடற மதுப்பழக்கத்துக்கும் மனுஷனை தள்றது தான் சோகம்.

மது ,குடி, கள்,சாராயம், டாஸ்மாக்,லாலா ,தண்ணீ இப்படி எந்த வார்த்தைல சொன்னாலும் அதுல ஆல்கஹால் இருக்கு. இந்த ஆல்க்கஹால் மனுஷனோட உடம்பை என்ன பண்ணுது? அவன் மனசை என்ன பண்ணுது? அவனோட குடும்பத்தை என்ன பண்ணுதுங்கற கேள்விகளுக்கெல்லாம்  பதில் அடுத்த பதிவுல (தொடரும்)