Friday, June 11, 2010

20/7 முதல் 5/9 வரை ரெட் அலர்ட்

அண்ணே வணக்கம்ணே

இந்த  பயங்கரபதிவுக்கான தலைப்பை வச்சதுமே படக்குனு பவர் கட். ( வழக்கமா 7 லிருந்து 9 பவர் கட். இது போனஸ் பவர் கட்) பவர்ல இருக்கிற பார்ட்டிங்க ஷெட் கேஸுங்களா இருந்தா முப்பது நாளும் பவுர்ணமி மாதிரி 24 மணி நேரமும் பவர் கட் வராம என்ன ஆகும். ஒரே சீரியலை ஊர் உலகமெல்லாம் பார்க்க ஊர்பட்ட பவர் வீண். பேசாம வார்டு வார்டுக்கு வீடியோ  வந்த புதுசுல வச்ச வீடியோ காஃபி பார் மாதிரி டிவி காஃபி பார் வச்சுரலாம். சரி சரி மொக்கை போதும் விஷயத்துக்கு வாங்கறிங்க அவ்ளதானே வந்துட்டா போவுது மேற்படி தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்துல கன்னியில உள்ள சனியோட செவ்வாய் வந்து சேர்ரார். சனி செவ்வாய் சேர்க்கை காங்கிரஸ் பா.ஜ.க கூட்டு மாதிரி படு பயங்கரமானதுங்கண்ணா. இந்த சேர்க்கைய பத்தி ஏற்கெனவே டர் பதிவொண்ணை போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க.

சனி செவ்வாய் சேர்ந்தா  அப்படியென்ன விசேஷம்னு கேட்கலாம். செவ்வாய்னா ரத்தம் சனின்னா ஆசனம். ஆசனத்துல இருந்து குடம் குடமா ரத்தம் கொட்டும். செவ்வாய்னா ஆயுதம் சனின்னா ஒடுக்கப்பட்ட வர்கம். ஒடுக்கப்பட்ட வர்கம் ஆயுதம் தூக்கினா என்ன ஆகும்? பவர்ல இருக்கிறவுக ஆசனம் புண்ணாகும். குத புணர்ச்சிதான்.

சனின்னா நரம்பு மண்டலம், செவ்வாய்னா யுத்தம். கொலை,கொலை முயற்சி, வெடி விபத்து, தீக்குளிக்கறது, யுத்தம் எல்லாத்துக்கும் இவர் தான் காரகன். சனின்னா தாமதம். தப்பித்தவறி ஏதாச்சும் தகாத சம்பவம் துவங்கினா லாங் லைஃப் தான். இப்படி சனிக்கும் செவ்வாய்க்கும் எத்தனையோ லின்க் இருக்கு. இவிக சேர்க்கை 3,6,10,11 ல நடந்தா பிரச்சினையில்லேனு ஜோதிஷம் சொல்லுது. ஆனால் அனுபவத்துல பார்க்கிறச்ச  இந்த சேர்க்கை 3ல நடந்தா ஜாதகருக்கு காது காலி, ஜாதகரோட யங்கர் ப்ரதர்ஸ், சிஸ்டர்ஸ் காலி, ஷட்டில் பயணங்களில் விபத்து நடக்கலாம். இந்த சேர்க்கை 6 ல நடந்தா எதிரிகள் காலி, கடன் கொடுத்தவன் காலி, தாய் மாமன் காலி. (அவிக ஆயுள் பலமா இருந்தா திவால் தனயோகமும் இருந்தா ரிலேஷன் கட்)

பத்துல இருந்தா வேலை செய்யற இடத்துல ரத்தக்களறி நடக்கலாம். 11 ல சேர்ந்தா அண்ணன்,அக்கா, ரெண்டாவது பெண்டாட்டி காலி . இதெல்லாம் இந்த சேர்க்கை சிபாரிசு செய்யப்பட்ட இடங்கள்ள ( தனிப்பட்ட ஜாதகங்களை பொருத்து) இருந்தாலே நடக்கிற கேடு. இன்னம் இருக்க கூடாத இடத்துல இருந்தா என்ன கதின்னு கற்பனை பண்ணி பாருங்க.

அதுலயும் இந்த சேர்க்கை  ராசி சக்கரத்துல கன்னியில நடக்குது. 46 நாள் கன்டின்யூ ஆகுது. கன்னி 6 ஆவது ராசிங்கறதால இவிகளுக்கும் சத்ரு,ரோக ருண உபாதைகளுக்கும் அப்படி ஒரு லிங்க். இதுல ஜன்ம சனி வேற நடக்குது. இதுல செவ்வாய் வேற வந்து சேர்ராரு. உலக ஜனத்தொகைல கன்னி ராசிக்காரவுக 1/12 இருப்பாய்ங்க. அல்லாத்துக்கும் குத்துப்பழி கொலைப்பழி வரணும்னு சொல்லல. சாந்த மூர்த்திகள் கூட ருத்ர தாண்டவம் ஆடவேண்டி வந்துரலாம். விபத்து (சிறப்பா தீவிபத்து) அதிகரிக்கலாம். போலீஸ் அட்டூழியம் அதிகரிக்கலாம். கலவரங்கள் நடக்கலாம்.

இந்த சேர்க்கையால 12ராசிக்காரவுகளுக்கு என்ன நடக்கும்னும் சொல்லத்தான் போறேன். அதுக்கு முன்னாடி ஏதோ படத்துல வடிவேலு மாதிரி  உசாரய்யா உசாருன்னு பாட்டுப்பாடி உசார் பண்ண பார்த்த எனக்கே ஒரு அனாலோசித பவர் கட் ரூ 225 ஷவரம். எங்க ஊரு எம்.எல்.ஏ சி.கே பாபு 4ஆவது தடவையா எம்.எல்.ஏ ஆகி ஒரு வருஷம் ஆன அக்கேசனை வச்சு ஷீர்டி சாய்பாபாவோட சத நாமாவளியை ஒரு லட்சம் பிரதி அச்சிட்டு இலவசமா வினியோகிக்கனும்னு கமிட் ஆகி முத ஆயிரத்துக்கு மாஸ்டர் எடுத்திருந்தோம். ஒரு பக்கம் ப்ரிண்ட் ஆயிருச்சு. மறுபக்கம் ப்ரிண்ட் பண்ணா பக்கமெல்லாம் எகிறுதுன்னு ப்ரிண்டர் கிட்டருந்து போன். போய் தலை கீழ நின்னு ரசத்துல முகம் கழுவி பார்த்துட்டன். உனக்கும்  பே.பே உங்கப்பனுக்கும் பேபேங்குது. சரி ஓஞ்சு போகட்டும்.தப்பா ப்ரிண்ட்  ஆயிட்ட பேப்பரை  ஒன் சைடா யூஸ் பண்ணிக்கலாம்னு இன்னொரு தரம் மாஸ்டர் எடுத்து ,இன்னொரு செட் பேப்பருக்கு, ப்ரிண்டிங்குக்கு  காசு கொடுத்துட்டு வந்துதான் இதை கன்டின்யூ பண்றேன்.

உங்களுக்கு பேதிக்கு கொடுக்க இதையெல்லாம் சொல்றேனு நினைக்காதிங்க. சனி செவ்வாய் சேர்க்கை எவ்ள கொடுமையானதுன்னு தெரிஞ்சிக்கிடனும்னா நாலு பேருங்கற என் பதிவை படிங்க.

சேர்க்கை  நடக்க போறதென்னவோ ஒரு ராசிலதான். ஆனால் இந்த சேர்க்கை 3,6,10,11 தவிர இதர இடங்கள்ள நடக்கிற ராசிக்காரவுக 8 பாகம். அதாவது இந்த சேர்க்கை அனுகூலமா இருக்கிற ராசிக்காரவுக 12ல நாலு பேருன்னா, பிரதி கூலமா இருக்கிறவுக 8 பேருங்கண்ணா.

இந்த 8 பேரோட அந்த நாலு பேரு டச் ஆனா அவிங்களுக்கு பல்புதான். (டூவீலர்ல பின்னாடி  உட்கார்ந்து ட்ராவல் பண்றது, அடி தடிக்கு போறது எட்ஸெட் ரா)

யாருக்கு அனுகூலம்:
கடகம் ( 3 ஆவது ராசில சேர்ராய்ங்க),மேஷம் ( 6 ஆவது ராசில சேர்ராய்ங்க), தனுசு (10 ஆவது ராசில சேர்ராய்ங்க) விருச்சிகம் ( 11 ஆவது ராசில சேர்ராய்ங்க) . ஆரம்பத்துல சொன்ன மாதிரி இவிகளுக்கும் சில பிரச்சினைகள் வரலாம். ஆனா ப்ரிலிமினரியா பார்த்தா சேஃப். ஆனா மேஷம், விருச்சிக ராசிக்காரவுகளுக்கு செவ்வாய் ராசியாதிபதிங்கறதால் அவர் சனியோட சேர்ரதால பெருசா நல்லது நடக்கும்னு சொல்ல முடியாது. இன்னம் சொல்லப்போனா கெட்டது நடக்கவே வாய்ப்பு இருக்கு. தனுசுக்கு இவர் விரயாதிபதி 10ல  வர்ரதால செய்தொழில்ல நஷ்டம் நடக்கலாம்.   சேல்ஸ் லைன்ல இருக்கிறவங்களுக்கு பரவாயில்லை. உற்பத்தி லைன்ல இருக்கிறவங்களுக்கு லொள்ளுதான்.கடகத்துக்கு இவர் ஜீவனாதிபதி 3ல வர்ராரு இதனால தொழில் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கலாம். ஆசனத்துல கட்டி வரலாம். சீட் மேல டர்க்கி டவல் போட்டு உட்காருங்கப்பு.

யாருக்கு பிரதிகூலம்:
ரிஷபம்: இந்த சேர்க்கை 5 ல நடக்கறதால பைத்தியமே பிடிக்கிற மாதிரி இருக்கும். ரத்தம் கொதிக்கும். அவமானம் /விபத்து நிச்சயம்
மிதுனம்: இந்த சேர்க்கை 4 ல நடக்கறதால  தாய்,வீடு,வாகனம், கல்வி வகையறால அட்மோஸ்ட் டென்சன் ஏற்படலாம். வீட்டை விட்டே வெளியேற வேண்டியும் வரலாம். அம்மாவுக்கு ஏற்கெனவே ஏதாச்சும் ஹெல்த் ப்ராப்ளம் இருந்தா உசாரய்யா உசாரு
சிம்மம்: தொண்டை,கண்,வாய் பாதிக்கலாம். பேச்சால கலவரம் ஏற்படலாம். குடும்பத்துல கலகம். லாவாதேவில வெட்டு குத்து
கன்னி: 8 அ 9 வரை தையல் விழ வேண்டி வரலாம். மைனர் ஆப்பரேஷன், சின்ன விபத்துக்கு கூட சான்ஸ் இருக்கு டேக் கேர்
துலா:வீண் விரயம் அல்லல் அலைச்சல் ஏற்படும்,
மகரம்: இந்த சேர்க்கை 9 ல நடக்கறதால முழங்கால் சில்லு பத்திரம், சொத்து சேமிப்பு,அப்பா அப்பாவழி உறவுல  பெரு நஷ்டம், வில்லங்கம். ( ஜகன் கூட மகர ராசியா இருந்தா இந்த பீரியட்ல தான் தனிக்கட்சி அறிவிப்பாரு ஏன்.சி.பில சேர்ந்து பவார் கிட்டயும் முட்டிக்கிட்டு சாவாரு.
கும்பம்:இந்த சேர்க்கை 8 ல நடக்கறதால சாரிங்கண்ணா ஆஞ்சனேயர் கோவிலுக்கு போங்க. சனி செவ்வாய்க்கு சொல்லியிருக்கிற பரிகாரங்களை முழு மூச்சா சாக்கிரதையா செய்ங்க
மீனம்: இந்த சேர்க்கை 7 ல நடக்கறதால ஃப்ரண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப்,தொப்புள் வகையறால பிரச்சினைகள் வரும்.பிரிவும் ஏற்படலாம்.

இந்த பலன் எல்லாம் சனி செவ்வாய் சேர்க்கை எந்த இடத்துல நடக்குதுங்கறத மட்டும் வச்சி சொன்னது, இவிக பார்வை யுனைட்டடா விழற ராசிய வச்சும் பலன் கள் நடக்கும். ( சனி 3,7,10 ஐ பார்ப்பார், செவ்வாய் 4,7,8 ஐ பார்ப்பார். இவிகளோட கூட்டுப்பார்வை 3,6,10,11 ல விழுந்தா சமாளிக்கலாம் மத்த இடத்துல விழுந்தா பல்புதான்)

இந்த சேர்க்கையால நாட்டுல என்ன நடக்கும்:
அகால மரணங்கள், துர்மரணங்கள் அதிகரிக்கும், போராட்டங்கள், போலீஸ் வன்முறை துப்பாக்கி சூடு அதிகரிக்கும். விபத்துகள் /க்ரைம்ஸ் (ரெட் க்ரைம்ஸ்) அதிகரிக்கும். புற்று நோய் கேஸுங்க அதிகம் வெளிச்சத்துக்கு வரும். அணு உலைகள்ள கசிவு ஏற்படலாம். போலீஸுக்கும்/மிலிட்டரிக்கும் வியாபாரிகளுக்கும் மத்தில பிரச்சினைகள் வரலாம். உ.ம் அம்பானி லாக் அப் டெத்ல சாகிறது .வியாபாரம் தொடர்பான கொலை/தற்கொலை/கொலை முயற்சிகள் அதிகரிக்கலாம்.

எந்தெந்த துறைக்கு/துறையினருக்கு பிரச்சினை:
மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவுகளில் விற்பனை துறை/துறையினர்
போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு போன்ற துறைகள், துறையினர்.
பரிகாரம்:
சனி,செவ்வாய்க்குரிய பரிகாரங்களையும், சனி செவ்வாய் சேர்க்கை என்ற பதிவிலான பரிகாரங்களையும் செய்ய வேண்டும்.
கிரக நிலையையும் ,  நாட்டு நடப்பையும், கலந்து ரோசிச்சா:
1.ராணுவம்,உள் துறை தொடர்பான ஊழல் ஒன்னு வெளிப்படலாம்.இது தொடர்பா போராட்டம் இத்யாதி தீவிரமாகி துப்பாக்கி சூடு அண்ட் ஆல் தட்
2.மாவோ, டெர்ரரிஸ்ட் அட்டாக்ஸ் அதிகரிக்கலாம்
3. பெட்ரோல்,டீசல் விலை உயர  மமதா பேனர்ஜி,பவார்,யாதவ த்ரயம்,கம்யூனிஸ்டுகள்  கூட்டு சேர்ந்து மத்திய அரசை கவிழ்க்கலாம். சோனியா மீது ஒரு சாரிரிக தாக்குதல் நிகழலாம்
5.கலைஞரின்வாரிசுகளில் ஒருவரை அவர் பிரிய வேண்டி வரலாம் (ஸ்தூலமாவோ அ உறவு ரீதியாவோ).ஜெயலலிதா ஆக்டிவாயிருவாய்ங்க. கண்டதை பேசி வாங்கி கட்டிக்குவாய்ங்க. வழக்குகள் ,தாக்குதல்கள் கூட அரங்கேறலாம்.
6.ஆந்திரால தெ.தேசம், காங்கிரஸ் ரெண்டா உடையலாம். கே.சி.ஆர் செருப்படி வாங்கலாம். ரோசய்யாவுக்கு சின்ன சாலை விபத்தோ ஆப்பரேஷனோ தையலோ ,பதவியை தொலைப்பதோ நடக்கலாம்.
7.முக்கியமா நாட்டின் மேற்கு,தெற்கு பகுதிகளில் பிரச்சினை அதிகமா இருக்கும்
8.ராஜ பக்சேவுக்கும் ஒரு கண்டமிருக்கு.
9.அரசு கஜானாக்கள் காலியாகும். எகனாமிக்கல் எமர்ஜென்ஸி வந்தாலும் ஆச்சரிய பட முடியாது
10.தொழிற்சங்கங்கள்,கம்யூனிஸ்டுகளின் போராட்டங்கள் தீவிரமடையலாம்.