Thursday, February 28, 2008

சுஜாதாவின் சில படைப்புகள் குறித்து காட்டமான விமர்சங்களை முன் வைத்தவன் நான்.

சுஜாதாவின் சில படைப்புகள் குறித்து காட்டமான விமர்சங்களை முன் வைத்தவன் நான். ஜோதிடம் குறித்து போகிற போக்கில் அவர் சொன்ன கருத்துகளை கண்டித்தவ‌ன் ,கிண்டலடித்தவன். ஆனாலும் அவரது பெரும்பாலான படைப்புகள் (கனவு தொழிற்சாலை,அன்று உன்னருகில்,வைரங்கள் முதலானவை) எனக்கு இன்றுவரை கூட இன்ஸ்பிரேஷனாக இருப்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இது சம்பிரதாயமான மரண அஞ்சலி அல்ல . என் உயிரிலிருந்து வரும் கருத்து. நாட்டு பொருளாதாரம்,அரசியல்,சினிமா குறித்த அவரது விமர்சனங்கள் கூட எனக்கு சம்மதமே. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் கூறியுள்ள 'சில' தீர்வுகள் எனக்கு சம்மதமில்லாமலிருக்கலாம்.


அதே நேரத்தில் சமூகம்,பொருளாதாரம்,அரசியல் குறித்த குறைந்த பட்ச விழிப்புணர்ச்சி கூட இல்லாத தத்து,பித்து பிராமண குழுவில் சுஜாதா மிகவும் வித்யாசமாக சிந்தித்தார். எழுதினார். தமிழ் நவீன படைப்பியலில் சுஜாதாவின் முத்திரை மறுக்க முடியாதது. இன்று வரை கூட நான் உட்பட ஆயிரக்கணக்கான இளைய படைப்பாளிகளின் எழுத்தில் அவரது பாதிப்பு இருப்பதை நினைத்து பார்க்கிறேன். பாரத பீஷ்மர் போல் தான் சார்ந்திருந்த குழுவின் கட்டாயங்களுக்கு,ஃபோபியாக்களுக்கு (உ.ம் இட ஒதுக்கீடு எதிர்ப்பு ) சுஜாதா அடி பணியாதிருந்திருந்தால் அவரது எழுத்து நிச்சயம் ஒரு ஒட்டு மொத்த புரட்சிக்கு அடிகோலி சரித்திரம் படைத்திருக்கும்.


பல்லாயிரம் சிற்றிதழ்களையும்,புதிய படைப்பாளிகளையும் மாஸ் மீடியாவுக்கு அறிமுகம் செய்த,புலமைக்காய்ச்சல் தீண்டாத அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாக!

இனியாவது மத்திய ,மாநில,அரசுகள் சுஜாதா சமூக அக்கறையுடன் தெரிவித்த யோசனைகளையும்,திட்டங்களையும்(கலைச்சொல்லாக்கம்,தமிழ் எழுதுகருவிகள் முதலானவை) உபயோகித்துக்கொண்டால் நல்லது.

Wednesday, February 27, 2008

தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு சில யோசனைகள்

க‌ன்ச‌ல்ட‌ன்ட்:
1999 முதலே பல்வேறு நிறுவங்களின் வளர்ச்சிக்கு யோசனைகள் தந்து,விளம்பரங்கள் வடிவமைத்து தந்து பணமும் பரிசும் பெற்ற சேல்ஸ் ப்ரமோஷன் கன்ஸல்டன்ட் என்றவகையில் தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு என் யோசனைகளை முன் வைக்கிறேன்.

1. நிர்வாகத்தில் சிவப்பு நாடாத்தனம்,முடிவெடுப்பதில் தயக்கம் ,தாமதம் கூடவே கூடாது. நிருபர்கள் அனுப்பும் ந்யூஸ் கவர் பிக் அப் செய்யும் ஆஃபீஸ் பையனில் கூட தன்னம்பிக்கை,முடிவெடுக்கும் திறமை,சிக்கல்களை சமாளிக்கும் திறமை இருக்க‌ வேண்டும். இல்லாவிட்டால் லொள்ளுதான்
2.போன்,செல்,மெயில் இத்யாதி இருக்கையில் கூட செய்திகளை அடிச்சு அனுப்புவோம்,/ லெட்டர் டைப்படிச்சு அனுப்புவோம் என்ன சொல்றாங்க பார்ப்போம் போன்ற வார்த்தைகள் ஒலிக்கவே கூடாது . இதை கட்டுப்படுத்தினால் நிர்வாகத்தில் இன்னும் வேகம் கூட்டப்படும், போட்டியாளர்களை மேலும் திறமையுடன் எதிர்கொள்ளலாம்.

2.ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு என்பது முக்கியம்தான். ஆனால் திறமையற்ற ஊழியர்களை கண்டறிந்து உரிய பயிற்சியோ,கல்தாவோ கொடுத்து சுத்தப்படுத்தினாலன்றி நிறுவனம் வேகமாக செயல்பட முடியாது. தேவைப்பட்டால் அனைத்து நிருபர்,செய்தி ஆசிரியர்கள் ,விளம்பர ஏஜெண்டுகளுக்கும் அவர்களின் திறமையை மறு பரிசீலனை செய்ய மறு தேர்வு ஒன்றை நடத்தினாலும் நலமே! தேர்வில் த‌வ‌றுப‌வ‌ர்க‌ளுக்கு 3 மாத‌ம் வ‌ரை டைம் கொடுத்து ம‌று தேர்வு நிக‌ழ்த்திப்பார்க்க‌லாம். அதிலும் த‌வ‌றினால் க‌ல்தா கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

3.நிறுவனத்துக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களின் ராம் ரொம்ப குறைவாக இருக்கும். இதனாலும் பணிகளில் தாமதம் குழப்பம் ஏற்படும். முடிந்தவரை எல்லாகிளைகளிலும், அனைவருக்குமே கணிணி அறிவு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். மேலும் நிர்வாக‌த்தில் வேலைக‌ளை பிரித்திருப்ப‌து நிர்வாக‌ வ‌ச‌திக்குத்தானே த‌விர‌ இன்னார் இன்ன‌ வேலைக‌ளைத்தான் செய்ய‌ வேண்டும், வேறு வேலைக‌ளை செய்ய‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ அல்ல‌. செய்தித்துறை என்ப‌து அத்யாவ‌சிய‌ பிரிவில் வ‌ருவ‌தாகும். இதில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ள் யாராயிருந்தாலும் எந்த‌ வேலையானாலும் செய்தாக‌வேண்டும். என‌வே அனைவ‌ருக்கும் அனைத்து வேலைக‌ளிலும் கு.ப‌. அறிமுக‌மாவ‌து இருக்க‌ வேண்டும்.

4.ஐயா ஆதித்தனார் அவர்கள் எழுதிய இதழாளர் கையேடு நூலில் உள்ள சில விசயங்கள் காலப்போக்கில் தேவையற்றவையாகிவிட்ட நிலையில் அதை அடிப்படையாக கொண்டு ,அப்டேட் செய்து அந்த நூலின் அடிப்படையில் ஒரு தேர்வையும் நடத்தினால் நல்லது. சோகம் என்ன வென்றால் இதழாளர் கையேட்டில் ஐயா கூறியுள்ள , இன்றைக்கும் பொருந்தக்கூடிய விசயங்களை கூட நிருபர்கள் பின்பற்றுவதில்லை.

5.தமிழ் நாளிதழ் ஊழியர்கள் பலரிலும் ஒருவிதஅசமஞ்சத்தனம் உள்ளது. (மிஞ்சி போனால் ட்ரான்ஸ்பர் தானே என்ற எண்ணம்) இவர்கள் 1970 களிலேயே தேங்கி விட்டுள்ளனர். இடைக்காலத்தில் ஜர்னலிசம் முழுமையாகமாறிவிட்டுள்ளது. நேற்று நடந்தது இரவு 11 மணிக்கு டி.வி.யிலேயே பார்த்து விடுகிறார்கள். இன்னமும் போலீசார் கூறியதாவது என்றுதான் ஜூனியர் விகடனில் கூட‌ செய்தி எழுதுகிறார்கள். வாசகன் போலீசார் கூறும் கட்டுக் கதைகளை கேட்டு திருப்தியடையும் நிலையில் இல்லை. என‌வே போலீசார் பார்வைக்கு செல்லாத‌ விச‌ய‌ங்க‌ளை கூட‌ நிருப‌ர்க‌ள் வாச‌க‌ர்க‌ளுக்கு துப்ப‌றிந்து தெரிவிக்க‌ வேண்டும். அப்போதுதான் போட்டியை ச‌மாளிக்க‌ முடியும்.


6.என்னைக்கேட்டால் புதியதலைமுறையை நிறுவனத்துக்குள் கொண்டுவரவேண்டும். அதே போல் தற்போதுள்ளதலைமுறைக்கு கணிணி, மாறிவிட்டஜர்னலிசம் குறித்தபயிற்சியை அளிக்கவேண்டும். புதுமையும்,பழமையும் கை கோர்க்கவேண்டும். நிருபர்கள் யூனிகோட் தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டுவிட்டால் அவரவர் இருந்தஇடத்திலிருந்தே செய்திகளை அனுப்பலாம்.(இதற்கு டெப்போ,கணிணி இத்யாதி தேவையில்லை தெருத் தெருவுக்கு இன்டர் நெட் சென்டர்கள் உள்ளன. நிருபர்கள் எழுதியதை செய்தி ஆசிரியர்கள் மீண்டும் எழுதுவதை விடதட்டச்சப்பட்டமேட்டரை கணிணியில் எடிட் செய்வது எளிது. இதனால் லேட் நைட் செய்திகளை கூடசேர்த்து வெளியிடவாய்ப்பு ஏற்படும். அந்தந்த நாளிதழ்களே ஸ்கூல் ஃபார் ஜர்னலிசம் ஒன்றை ஏற்படுத்தி தபால் மூலம் பயிற்சி அளித்து தேருபவர்களை அப்ரண்டிஸாக எடுத்து உபயோகிக்கலாமே.

7. ஆந்திரத்தில் பத்திரிக்கைகள் ரயில் மூலம் ,பஸ் மூலம் அனுப்புவதை நிப்பாட்டி பலகாலம் ஆகிறது.ஒப்பந்தஅடிப்படையில் தனியார் வாகனங்களில் தான் அனுப்புகிறார்கள். இதனால் தமிழ் பத்திரிக்கைகளில் ரயில் நேரத்துக்கு பக்கம் முடிக்கவேண்டியதலையெழுத்து இன்றும் இருக்கிறது.

8.மாவட்டஸ்பெஷல்கள் தெலுங்கு தினசரியில் சக்கை போடு போடுகின்றன. மெயினில் பாதி சைஸ் உள்ளஇந்தஸ்பெஷல்கள் 16 பக்கங்கள் வரை வெளியாகி வாசகர்களின் பேராதரவை பெற்றுள்ளன. மாவ‌ட்ட செய்திகளை கூட‌ ம‌ண்ட‌ல‌ம் வாரியாக‌ பிரித்து வெளியிடுகிறார்க‌ள். இத‌னால் குட்டித்த‌லைவ‌ர்க‌ளின் செய்திக‌ளுக்கும் இட‌ம் கிடைப்ப‌தோடு ,விள‌ம்ப‌ர‌ வ‌ருவாயும் பெருகும‌ல்லவா !


புகைப்படங்கள்:
தமிழ் நாளிதழ்களில் பிரசுரமாகும் படங்கள் போட்டோகிராஃபர் எடுத்தது எடுத்தபடியே வெளிவருகின்றன. அதை எடிட் செய்வதே இல்லை. கூட்டத்தை பெரிதாக காட்டி பேசும் தலைவரை உள்படத்தில் வைத்தல்,விபத்து காட்சியை பெரிதாக காட்டி காயமுற்றவரை உள்படத்தில் வைத்தல், ஒரே தலைவரிடம் பலர் பரிசு பெற்றால் தலைவர் படத்தை 1/8 பாகத்தில் வைத்து பரிசு பெற்றவர்களின் படத்தை 7/8 பாகத்தில் வரிசையாக வைக்கலாம். இதையெல்லாம் ஏன் செய்வதில்லையோ புரியவில்லை.


லே அவுட்:

லெட்டர் பிரஸ் கால‌த்தை போல் காலம் பிரித்து விடுகிறார்களே தவிர (மெயின் எடிஷன்) லே அவுட் என்பதே இல்லை. இண்டியா டுடேவில் போல தலைவர் கொலை இத்யாதி நடந்த போது கிராஃபிக்ஸ் படங்களை உபயோகிக்கலாமே. சிறப்பு பகுதிகள் போலவே மெயின் எடிஷனையும் லே அவுட் செய்து வெளியிட்டால் சூப்பராக இருக்கும்.


தமிழில் அடிப்படையே தகராறு:
மேலும் செய்திகளில் அசிங்க‌மான‌ எழுத்துப்பிழைக‌ள்,படிக்காதவன் கூட கண்டுபிடித்துவிடுமத்தனை இலக்கணப்பிழைகள் இடம் பெற்றுவிடுகின்றன. சொல் குற்றம்,பொருள் குற்றமும் அதிகம். நிருபர்களுக்கும்,செய்தி ஆசிரியர்களுக்கும் குறைந்த பட்சம் தமிழில் அடிப்படை அறிவையாவது கொடுத்தே ஆகவேண்டும்.

ஊழியர் தோற்றம்:

அலுவலக ஊழியர்கள்,நிருபர்கள்,செய்தி ஆசிரியர்கள் தோற்றப்பொலிவிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். எலக்ட்ரானிக் மீடியாவுடன் போட்டியிட வேண்டிய நிலை இருப்பதால் இது மிக அவசியமாகிறது. சீருடை அணிந்தாலும் நல்லதே. ஒரு நிருபன் தான் பத்திரிக்கை பெயரை மக்களிடையே எடுத்து செல்பவன் , செலவில்லாத ஹோர்டிங் என்பதை நினைவில் வைத்து யோசிக்கவும்

குறிப்பு:
என் யோச‌னைக‌ளை பின்ப‌ற்றும் நாளித‌ழ் அதிப‌ர்க‌ள்,ஆசிரிய‌ர்க‌ள் என‌க்கு 50 பைசா கார்டில் ஒரு ந‌ன்றி தெரிவித்தால் ம‌கிழ்வேன். என‌து விலாச‌ம்


எஸ்.முருகேச‌ன் (எ) முருக‌ன்,
7/85, பாணாலா தெரு,
சித்தூர் ஆந்திர‌மாநில‌ம்
517001
posted by chittoor.S.Murugeshan @ 7:09 AM

Tuesday, February 26, 2008

கடுப்பேற்றுவது என்றால்?

கடுப்பேற்றுவது என்றால்?

நான் தினத்தந்தி நிருபன் என்பது தங்களுக்கு தெரிந்தே இருக்கும். ப்ரசிடென்ட் ஆஃப் இண்டியா என்று சொல்லும் ரேன்ஜில் பலமுறை பல பதிவுகளில் சொல்லியிருப்பேன். 27 ஆம் தேதி தர்ணா நடத்துவதாய் ஒரு சாதியினர் 24 ஆம் தேதி அறிவித்தனர்.(பிரஸ் மீட் வைத்து). அந்த சாதியில் ஒரு இளைஞர் தினத்தந்தியில் விளம்பரதாரர். என் க்ளாஸ் மேட், என் அண்ணனுக்கு ஃப்ரண்டு எல்லாம் ஓகே. பிரஸ் மீட் நடந்த அன்று அவர் எனக்கு போன் செய்து "பார்த்துக்க முருகா" என்றார், ரொம்ப ஜோவியலாய்.

நானும் சென்றேன். செய்தி எழுதினேன் . தந்தியில் வரவில்லை. மறுநாள் வரும் என்று சமாளித்தேன். மறுநாளும் வரவில்லை. ( அய்யா ஆதித்தனார் எழுதிய இதழாளர் கையேட்டில் ஒரு விதி இருக்கிறது. பேச்சு செய்தியாகாது. தர்ணா நடக்கட்டும் போடலாம் என்று கூட முடிவு செய்திருக்கலாம்.) நானும் 4 முறை ரிமைண்ட் செய்தேன். எடிட்டர் டெஸ்க்ல பலானவர் இருப்பார்,நான் சொன்னேன்னு சொல்லுங்க என்றார், சொன்னேன். எல்லாம் ஆச்சு.

இதெல்லாம் லொள்ளு சமாச்சாரம் என்று முதலிலேயே தெரியும். அதனால் செய்தியை ஃபேக்ஸ் செய்துவிட்டு ரசீது,மேட்டரை அந்த இளைஞரின் டேபிளுக்கே அனுப்பிவிட்டேன்.

இந்த நிலையில் அதே சாதியை சேர்ந்த ஒரு பிரமுகர், எனக்கு டயல் செய்துவிட்டு பக்கத்திலிருக்கும் நபரிடம் பேசுகிறார்." இந்த பத்திரிக்கைகார பயலுவளுக்கு ஒரு ஃபுல்,ஒரு பிரியாணி பொட்டலம் ஏற்பாடு பண்ணிரனும்பா , ....கிட்ட சொல்லிருங்க" (நான் சொன்ன விளம்பர தாரர்)

க‌டுப்பேற்றுவ‌து என்றால் இதுதான் போலும்.

ஃபுல்லும்,பிரியாணியும் எத்தனை பேருக்கு,எத்தனை முறை போட்டார்,போட்டு எழுத‌வைத்து இவ‌ர் என்ன‌த்தை கிழித்தார். இவ‌ர் க‌தை நீண்ட‌ க‌தை.

ஒரு ச‌ம‌ய‌ம் காசாவ‌து இருந்த‌து. இப்போ அந்த‌ ...ம் கிடையாது." நா காக்க‌" என்று வ‌ள்ளுவ‌ர் சொன்ன‌து இது மாதிரி பார்ட்டிக‌ளுக்காக‌த்தான் போலும்.

அப்புற‌ம் பாருங்க‌ ..ம‌றுப‌டி ட‌ய‌ல் ப‌ண்ணி ராஜா ..க‌ண்ணுனு பேசுது பார்ட்டி.

இந்த‌ பார்ட்டியோட‌ க‌தையை நிச்ச‌ய‌ம் அடுத்த‌ ப‌திவுல‌ எழுதியே தீர்ர‌ன். இது மாதிரி கேர‌க்ட‌ர் எல்லா ஊர்ல‌யும் ஒன்னு இருக்கு.

வெளியாகும் படைப்புகளுக்கு குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை

பத்திரிக்கைகளில் வெளியாகும் படைப்புகளுக்கு சன்மான (90 சதவீதம்) தரப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சிற்றிதழ்கள் என்றில்லை குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை.(ஒரு தரம் ஜெயலலிதா அட்டை போட்ட குமுதம் இதழில்/1993 என்று ஞா. நான் எழுதிய ஜோக் ஒன்று பிரசுரமானது. அது வருமாறு:

" ஏண்டா மூட்டைப்பூச்சிக்கு அந்த பேர் வந்தது?"
"உனக்கு கூடத்தான் அறிவழகன்னு பேர் வச்சிருக்காங்க அதுக்கு என்ன பண்றது"


இந்த ஜோக்குக்கு எனக்கு சன்மானமே அனுப்பலை. இவன் என்ன ஆங்கிலேயர் காலத்துல மாதிரி லட்சியத்துக்கா நடத்த‌றான் என்று எரிச்சலாகி சன்'மானம்' கேட்டு கார்டு ஒன்று தட்டி விட்டேன். அதிலிருந்து என் படைப்புகள் குமுதத்தில் பிரசுரமாவதில்லை.

எனக்கு ஒரு சம்சயம் பத்திரிக்கைகளில் துணுக்கு,ஜோக் எழுதும் நபர்கள் சன்மானம் எதிர்பாராது, தர்மத்துக்கு எழுதுகிறார்களா என்று.

அதே மாதிரி சன்மானம் கேட்காத நபர்களின் படைப்புகளை மட்டும் ஆசிரியன் கள் தேர்வு செய்கிறான்க‌ளா என்றும் மற்றொரு சம்சயம்.

நீங்கள் காணும் இந்த வித்யாசங்கள் கதையும் தர்ம கேசு தான்.

கெட்டவனுக்கு கடவுளை கெட்டவனாக்கனும்னா

ஆன்மீகம் கூட ஒரு விஞ்ஞானமே..நான் ஒரு ஆராய்ச்சியாளன்.

1967 ல் பிறந்த நான் 1984 வரை தந்தை,மற்றும் அண்ணன் மார்களால் வளர்க்கப்பட்டேன். 1984 முதல் 1986 வரை எப்படி எப்படியோ வாழ்ந்தேன்..1986 முதல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று உணர்ந்தேன். அந்த ஆதர்ஸ் வாழ்வுக்கு தொடர்ந்து முயன்று வருகிறேன். இதற்கு உதவி அனுமனும் அவன் இடைவிடாது ஜபிக்கும் அண்ணலின் கன்னலொத்த" ராம்" என்ற நாமமும் தான்.

நான் யோகியோ,சுவாமிஜியோ அல்லன். இன்றளவும் ஒருவித வெள்ளோட்டமாகவே தான் என் பக்தி பயணம் தொடர்கிறது. இந்த வெள்ளோட்டத்திலேயே உள்ளங்க பீட்ஸா போல் தெள்ளென புரிகிறது.

இறை சக்தியிருக்கிறது. அது கேட்கிறது,பேசுகிறது. அதை அகந்தை மறைக்கிறது. தன்னம்பிக்கை என்ற பெயரில் அது சுதி தவறி அகந்தையாகிவிட முற்றிலும் அழிந்த நான் அதன் ஆபத்தை முழுக்க உணர்ந்துவிட்டதால் அது " முருகேசா ! உன் உள்ளத்துல வந்து உட்கார்ந்து ஒரு தம் போட்டுட்டு உடனே ஓடிர்ரன் " என்று கெஞ்சி கூத்தாடினாலும் நோ என்ட்ரி போர்டு போட்டு வைத்துவிட்டேன்.

இதனால் எதிர்காலம் என் (ஞான) கண் முன் விரிகிறது, இறை சக்தியின் படம் வரைந்து பாகங்கள் குறிக்குமத்தனை "திமிர்" பிறக்கிறது. அந்த திமிரால் நான் கண்டுகொண்ட ஒரே ஒரு ரகசிய விதியை பகிரங்கப் படுத்துகிறேன்.


"கெட்டவங்க உங்களுக்கு கெட்டது பண்ணா , அவங்களுக்கு நீங்களும் கெட்டது பண்ண முயற்சி பண்ணா கடவுள் நியூட்ரலாயிருவார். கெட்டவனுக்கு கடவுளை கெட்டவனாக்கனும்னா நாம கெட்டவனுக்கு கெட்டதை நினைக்கக் கூட கூடாது. அட் லீஸ்ட் செய்யக்கூடாது ..இப்படி 9 நாள் விட்டா போதும் கெட்டவனுக்கு ,கடவுள் கெட்டவனாகி வெண்ணை எடுத்துருவார்"

இது என் கண்டுபிடிப்பு மட்டுமல்ல ..அனுபவமும் கூட‌

Saturday, February 23, 2008

எம்.எல்.ஏ தூக்கிட்டு வாங்கடா என்றார் நான் எம்.எல்.ஏ. வை மிரட்டினேன்!

எம்.எல்.ஏ தூக்கிட்டு வாங்கடா என்றார் நான் எம்.எல்.ஏ. வை மிரட்டினேன்!

இப்போது நான் சொல்லப் போகும் விஷயங்களை நம்பவே முடியாது. ஆனால் அட்சர சத்தியம். இதற்கெல்லாம் நான் காரணமோ பொறுப்போ அல்ல ..யாவும் தெய்வாதீனம்.

இந்தியாவை பணக்கார நாடாக்க நான் திட்டம் தீட்டியதும்,சந்திரபாபுவுக்கு அனுப்பியது,அவர் அதை 5 வருடம் கிடப்பில் போட்டது,பதில் தர தபால் செலவுக்கு நான் ரூ 10 எம்.ஓ அனுப்பியது ,பிறகு கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு போட்டது,பத்திரிக்கைகள் மூலம் வழக்கு விவரம் அறிந்த சந்திரபாபு என் திட்டத்தை உரிய வகையில் உபயோகித்துக் கொள்வதாய் கடிதம் போட்டது / இந்த விசயமெல்லாம் தங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கலாம்.(என் பதிவுகள் மூலம்)

என்.டி,ஆர் சிங்கம். சந்திரபாபு நரி. முதலில் என்.டி.ஆருக்காக நரி வேலைகள் செய்தார்.பின்பு என்.டி.ஆருக்கே நரி வேலை காட்டி அல்வா கொடுத்து முதலில் வீட்டுக்கும்,பின் எமப்பட்டணத்துக்கும் அனுப்பிய நரி சந்திரபாபு. அவர் 4 காலையும் தூக்கி,கடிதம் போட்ட உடனேயே எனக்குள் புளி கரைக்க ஆரம்பித்து விட்டது.(ரசம் வைக்க இல்லிங்க)

முதல்வர் அலுவலகத்திலிருந்தே மாவட்ட அரசு இயந்திரத்துக்கு நான் சப்மிட் செய்யும் எந்த வித மனு,புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்று குறிப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். என்னதான் காந்தி,நேரு என்று இமேஜ் இருந்தாலும் எனக்குள்ளும் ஒரு ரஜினி இருக்கிறார். என்னை ரொம்பவே கடுப்படிக்க ஆரம்பித்து விட்டார்கள்.


என்னுடன் வந்து கொடுத்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு மிஸ்ஸிங் கம்ப்ளெயிண்ட் மீது நடவடிக்கை எடுக்க 6 மாதம் பிடித்தது. அதுவும் மனித உரிமைகள் கமிஷன் உத்தரவு பிறப்பித்த பிறகு.

ச‌ந்திர‌பாபு இடைத்தேர்த‌லுக்கு திட்ட‌மிட்டு ரேஷ‌ன் கார்டுக‌ளை அள்ளிவிட‌ உத்த‌ர‌விட்டார். ஊரில் ல‌ட்சாதிப‌தி,கோடீஸ்வ‌ர‌ன் எல்லாம் அரிசி கார்டு வாங்கிக் கொண்டிருக்க‌, ப‌ஞ்சை ப‌ராரியான‌ என‌க்கு அல்வா கொடுத்து விடுவார்க‌ளோ என்ற‌ அய்ய‌ம். அதுவும் ரேஷ‌ன் கார்டு என்ப‌து நாய்க்கு லைசென்ஸ் மாதிரி ஆகிவிட்ட‌ கால‌க‌ட்ட‌த்தில் நாட்டுக்காக‌ நாயாய் உழைக்கும் என‌க்கு கார்டு ம‌றுக்க‌ப் ப‌ட‌வே க‌டுப்பாகிவிட்டேன்.

எம்.ஆர்.ஓ வை பிடித்து எகிறினேன்.(1991 ந‌வ‌ம்ப‌ரில் காத‌ல் க‌டிம‌ண‌ம் கொண்ட‌ உட‌னேயே கார்டுக்கு ப‌திவு செய்த‌வ‌ன் நான். 2004 ல் கூட‌ ம‌றுத்தால் எப்ப‌டியிருக்கும்)
கோர்ட்டுக்கு போவேன் என்று மிர‌ட்டினேன். "அட‌ போய்யா" என்றார் அவ‌ர்.


கோர்ட்டுக்கு போக‌ ஆட்டோவுக்கே காசில்லாத‌ நான் வ‌க்கீல் பார்த்து ,வ‌ளைக்காப்பு ந‌ட‌த்துவ‌தெல்லாம் ந‌ட‌க்கிற‌ விஷ‌ய‌மா? லோக் அதால‌த்துக்கு த‌ட்டினேன் ஒரு புகார்.

அப்போது யாரோ க‌வுடு தான் மாவ‌ட்ட‌ நீதிப‌தி. பாவ‌ம் ம‌னுச‌ன் எங்கிருந்தாலும் வாழ்க‌ ரொம்ப‌வே ந‌க்க‌ல‌டித்தாலும் " கார்ட் கொடுத்துருங்க‌ப்பா' என்று க‌லெக்ட‌ருக்கு ஒரு க‌டித‌ம் அனுப்பினார், க‌லெக்ட‌ர் எம்.ஆர்,ஓ வை காய்ச்சினார். எம்.ஆர்.ஓ எம்.எல்.ஏ விட‌ம் ஓடி புகார் செய்தார்.

எம்.எல்.ஏ வுக்கு என்னை தெரியும். ப்ரைவேட் எலெக்ட்ரிக்க‌ல் வைர்மேன் ச‌ங்க‌ பி.ஆர்.ஓ வாக‌. உட‌னே சேர்ம‌னுக்கு போட்டார் போனை. " எங்க‌யா உங்க‌ பி.ஆர்.ஓ? ப‌த்து நிமிஷ‌த்துல‌ என் முன்னாடி இருக்க‌னும். இல்ல‌ தூக்கிட்டு வ‌ர‌ச்சொல்லுவேன்" என்றார். சேர்ம‌னுக்கு வ‌யிற்றில் மிள‌காய்(புளின்னே சொன்னா போர‌டிக்கும்ல‌).

"த‌ பாருப்பா நீ இல்ல‌ன்னா ச‌ங்க‌ம் ந‌ட‌க்க‌ற‌து க‌ஷ்ட‌ம். காசு த‌ர்ரேன். எங்க‌னா போயிரு. நான் பேசிக்கிறேன்" என்றார். வ‌ர்ர‌ ல‌ட்சுமிய‌ ஏன் விட‌னும்னு சில்ல‌றை வாங்கி கிட்டு ஹைய‌ர் சைக்கிள் ஒன்னு எடுத்துக் கிட்டு எம்.எல்.ஏ வீட்டுக்கு போனேன்.

பாருங்க‌ ந‌ம்ம‌ நேர‌ம். எம்.எல்.ஏ.ஆஃபீஸ்ல‌ ந‌ம‌க்கு 4/5 கும்பிடு விழுந்துருச்சு. எம்.எல்.ஏ வே பேஜார் ஆயிருக்க‌னும். சுதி இற‌ங்கி போச்சு. " என்ன‌யா நீ உன‌க்கு பிர‌ச்சினைன்னா என‌க்கு சொல்ல‌லாம்ல‌ " என்று இற‌ங்கி வ‌ந்தார்.

" அய்யா! என‌க்கு ஏதோ நால‌ணா த‌மிழ்,நால‌ணா தெலுங்கு ,ப‌த்து பைசா இங்கிலீஷ் தெரியும் பி.ஆர்.ஓ ஆகிட்டேன்,உங்க‌ளை தெரியும். ஒன்னுமே இல்லாத‌வ‌னையும் இப்ப‌டித்தானே சார் லொள்ளு ப‌ண்ணுவாங்க‌ எல்லாருக்கும் ரெக்க‌ம‌ண்ட் ப‌ண்ணி கார்டு வாங்கி த‌ந்துருவிங்க‌ளா " என்றேன் .

இவ‌ன் எங்க‌டா மாட்டினான் த‌மிழ் சினிமா மாதிரி பேசிக்கிட்டுன்னு எம்.எல்.ஏ. நினைச்சுருப்பாரு. " அட‌ நீ கூட்டிட்டு வாயா நான் வாங்கித் த‌ரேன்" என்றார். மேட்ச் ட்ராவில் முடிந்த‌து.

Friday, February 22, 2008

வாழ்க்கையில் மாற்றவே முடியாத ஒரு குரூர விதி

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
தோல்வியுற்ற மனிதரெல்லாம் முட்டாள்களில்லை

என்பது சந்திரபாபு திரைப்பட பாடல் வரி. ஆனால் யதார்த்தத்தில் ஆராய்ந்து பார்க்கும்போது வெற்றி பெற்ற மனிதரெல்லாம் முட்டாள்களில்லை என்பது தெரியவரும்.

வாழ்க்கையில் மாற்றவே முடியாத ஒரு குரூர விதியிருக்கிறது.

எதையாவது பெற வேண்டுமானால் எதையாவது (அதற்கு சமமானதை) இழந்து தான் ஆக வேண்டும்.

எல்லாவற்றையும் இழக்க துணிந்து விட்டால் எல்லாவற்றையும் பெறலாம்.

எதையும் இழக்க மாட்டேன் என்று எழுதி ரெட் இங்கில் அண்டர்லைன் செய்து வைத்து கொண்டு வாழ்ந்தால் ஒரு ....ம் பெற முடியாது.

வெற்றி பெற்றவன் சில சமயம் முட்டாளாக கூட இருக்கலாம். ஆனால் அறிவாளி இழக்க துணியாததை அவன் இழக்க துணிந்து விட்டான் என்பதால் தான் அவன் வென்றான்.

தோல்வியுற்றவன் சிலசமயம் அறிவாளியாக கூட இருக்கலாம். ஆனால் வெற்றிக்கு தடையாக பல அம்சங்கள் அவனில் இருக்கும்.


வெற்றி தோல்விக்கெல்லாம் அர்த்தம் வேறு.

பெரியார் சீடர் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து பிள்ளை பெற்றால் அது தோல்வி.

ஆத்திக நண்பர் ஒருவர் விஞ்ஞான முறைப்படி சோதனைக்குழாய் குழந்தை பெற்றுக் கொண்டால் அது அவருக்கு உறுத்தலை தான் தரும்.

வெற்றி தோல்விகள் என்பது இடம்,பொருள்,ஏவலை பொறுத்து தலை கீழாய் மாறிவிடும். நான் எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் பற்றி பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரசங்கம் செய்யாது வேறு வேலையே கூடாது என்று வாழ்ந்தேன். இது என் பார்வையில் வெற்றி.

இன்று என் சபதத்தை கை விட்டு தினத்தந்தியில் வேலை செய்கிறேன். இது மக்கள் பார்வையில் வெற்றி. என் பார்வையில்?

Thursday, February 21, 2008

ஆன‌ந்த‌ விக‌ட‌ன் கூட தன் பக்கங்களை அரை ஆடை அணங்குகளின் ப‌ட‌ங்க‌ளால் நிர‌ப்புகிற‌து.

பத்திரிக்கை தர்மம் என்றால் என்ன?

நம்ம பத்திரிக்கைய வாங்கறவங்களுக்கு அப்பப்போ டீ பொடி, மூக்கு பொடி தர்மம் பண்றது தான். இது சும்ம ஒரு ஜோக் என்று நினைத்து விடாதீர்கள். பத்திரிக்கை தர்மம் பற்றிய என் கருத்துக்களை முன் வைக்க இது தொகையறா மட்டுமே..

த‌ற்போது குமுத‌த்தில் "ப‌த்திக்கிச்சி" ப‌டிக்கிறீர்க‌ளா? எங்க‌ கால‌த்தில் (1967 முத‌ல்) இது போன்ற‌ செய்திக‌ளை வாசிக்க‌ ப‌ஸ் ஸ்டாண்டுக்கு போய் ,யாரும் பார்க்காத‌ ச‌ம‌ய‌ம் க‌டைக் கார‌ரிட‌ம் பேசி சரோஜா தேவி கதைகள் வாங்கியாகனும். இப்போதெல்லாம் குமுதத்திலேயே வருகிறது. நல்ல வளர்ச்சி தான்.

குமுதம் நிர்வாகம், இன்டர்நெட்டில் மூழ்கி கிட‌க்கும் இளைய‌ த‌லைமுறைக்கு அங்கு கிடைப்பவற்றை(?) தானும் வழங்க நினைப்பதை புரிந்து கொள்ள‌ முடிகிற‌து. ஆன‌ந்த‌ விக‌ட‌ன் கூட தன் பக்கங்களை அரை ஆடை அணங்குகளின் ப‌ட‌ங்க‌ளால் நிர‌ப்புகிற‌து. எங்க‌த்தான்யா போறிங்க‌? இன்னும் என்ன‌ தான் ப‌ண்ண‌ற‌தா உத்தேச‌ம்?

ப‌டிக்கிற‌ ப‌ழ‌க்க‌ம் குறைஞ்சி கிட்டே இருக்கு. இவ‌ங்க‌ என்ன‌மோ த‌ங்க‌ள் விற்ப‌னையே முழு முத‌ல் நோக்க‌மாய் செய‌ல்ப‌டுகிறார்க‌ள். இளைய‌ த‌லைமுறை இப்படி(அச்சு ஊடகம்) வ‌ருவ‌த‌ற்கு ப‌தில், கடந்த தலைமுறை அப்ப‌டி (இன்ட‌ர்நெட்) போய்கொண்டிருப்ப‌து உம‌க்கு உறைக்க‌ வில்லையா?

எங்க‌ள் ஊரில் கூட‌ இப்ப‌டித்தான் சில‌ தியேட்ட‌ர்கார‌ர்க‌ள் "பிட்" போட்டு ஓட்டி, நாலு காசு பார்த்தார்க‌ள். இப்போ..அந்த‌ ப‌க்க‌ம் த‌லை வ‌ச்சு ப‌டுக்க‌ ஆள் கிடையாது. அதே க‌திதான் இந்த பிரகிருதிகளுக்கும் ஏற்படப்போகிறதென்பதில் எனக்கு சந்தேகமே கிடையாது

வ‌ள்ளுவ‌ருக்கு தெரியாது பாவ‌ம். சிக்ம‌ன் ஃப்ராயிடுக்கு முன்னாடியே பிற‌ந்துட்டாரே

உதவி பெறுவது எப்படி? உதவி செய்வது எப்படி? உதவிகளால் மனித உறவுகள் ஏன் பாதிக்கப்படுகின்றன? உதவி செய்பவர்,பெறுபவர் இவர்களில் உயர்ந்தவர் யார்? இந்த‌ கேள்விக‌ளுக்கெல்லாம் ப‌தில் த‌ர‌ இந்த‌ ப‌திவில் முய‌ற்சி செய்ய‌ப்போகிறேன்.

உத‌வி பெறுவ‌து எப்ப‌டி?

நான் சொல்ல‌ப்போவ‌து எப்ப‌டி குழைய‌டித்து எப்ப‌டி எதிராளி த‌லையில் மிள‌காய் அரைப்ப‌து என்ற‌ யோச‌னைக‌ளை அல்ல‌. நாம் பெறும் உத‌வி ந‌ம‌க்கும்,ந‌ம்மை சேர்ந்த‌வ‌ர்க‌ளுக்கும், ந‌ம‌க்கு உத‌விய‌வ‌ர்க‌ளுக்கும், ந‌ம‌க்குப் பின் அவ‌ர்க‌ளை நாட‌ப்போகும் மாந்த‌ருக்கும் உத‌வியாக‌ இருக்க‌ வேண்டும்.

நாம் கோரும் உத‌வி முடிவான‌ உத‌வியாக‌ இருக்க‌ வேண்டும்:

என் ந‌ண்ப‌ன் ச‌ங்க‌ர் அர‌சுப் ப‌ள்ளி க்ள‌ர்க். மாத‌த்தில் ஒரு த‌ர‌மேனும் உத‌வி கேட்டு வ‌ருவான். எல்லா உத‌வியுமே வ‌ட்டிக்கு வட்டி க‌ட்ட‌வோ, அல்ல‌து ப‌ண‌ம் புர‌ட்ட‌ ஊர் செல்ல‌ ப‌ய‌ண‌ச்செல‌வுக்கு ப‌ண‌ம் கேட்டோத்தானிருக்கும். இப்ப‌டிப் ப‌ட்ட‌ உத‌விக‌ள் சீக்கிர‌ம் ந‌ட்பை,உறவை பாதித்து விடும்.


உதவி செய்வது எப்படி இருக்க வேண்டும்:

நாம் உதவி செய்வதாய் இறங்கி விட்டால் அது முழுமையான உதவியாய் இருக்க வேண்டும். சித்தூர் டு சென்னை செல்ல வேண்டி உதவி கேட்பவனுக்கு வேலூர் செல்ல பணம் கொடுத்து அங்கே போய் ஏதாச்சும் பார்த்துக்கப்பா என்று சொல்ல கூடாது. கோயம்பேடு வரை டிக்கட்டுக்கு பணம் கொடுத்து,சுங்குவார் சத்திரத்தில் சாப்பிட 4 இட்லி ஒரு வடை கூட கட்டி கொடுத்தனுப்ப வேண்டும்.அதை விட்டுவிட்டு அரை குறை உதவி செய்து விட்டு அவனுக்கு நன்றி இல்லை நன்னாரி இல்லை என்று கதை விடக்கூடாது.

மனித உறவுகள் பாதிப்படைவது ஏன்?

அபாத்திர‌ தான‌ம், அப‌த்திர‌ தான‌ம்,அரை குறை உத‌வி,ம‌ன‌ம் நோக‌ பேசி உத‌வி செய்வ‌து,த‌குதிக்கு மீறிச்செய்வ‌து,எதையோ எதிர்பார்த்து செய்வ‌து இப்ப‌டி எத்த‌னையோ கார‌ண‌ங்க‌ளால் மனித உறவுகள் பாதிப்படைகின்ற‌ன‌.

யார் உய‌ர்ந்த‌வ‌ர்:

ம‌னித‌ர்க‌ள் ப‌ல்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டை தான் . ஒன்று கொல்லுத‌ல், அடுத்த‌து கொல்ல‌ப்ப‌டுத‌ல். இந்த‌ விதியை பொருத்தி கூட்டி க‌ழித்து பாருங்க‌ள் ரிச‌ல்ட் ஆக்யுரேட்டாக‌ இருக்கும்.

உத‌வி பெற‌ வ‌ந்த‌வ‌ன்:
உத‌வி பெற‌ வ‌ந்த‌வ‌ன் ஏற‌க்குறைய‌ த‌ற்கொலை செய்து கொள்ள‌ வ‌ந்த‌வ‌ன் போல‌த்தான். எல்லாவித‌ மாற்று வ‌ழிக‌ளையும் சிந்தித்து முடியாத‌ ப‌ட்ச‌த்தில் த‌ன் அக‌ந்தையை கொன்று (ஆன்மாவை உண‌ராத‌வ‌ன் த‌ன்னை அக‌ந்தையாக‌த்தான் உண‌ர்கிறான், என‌வேதான் அக‌ந்தை சாகும் போது தானே செத்த‌து போல் துடிக்கிறான்)
உத‌வி கேட்டு வ‌ருகிறான்.

உத‌வி கேட்க‌ப்ப‌ட்ட‌வ‌னோ..*இவ‌னொருத்த‌ன் என்ன‌ சாக‌டிக்கிறான்.. அப்ப‌டி என்ன‌தான் தொலையாத‌ த‌ரித்திர‌மோ.. என்று புல‌ம்புகிறான்.

இவ‌ன் உத‌வினால் அவ‌ன‌ அக‌ந்தை சாகிற‌து,அக‌ந்தையை தானாய் எண்ணும் அவ‌னும் சாகிறான். உத‌வாவிட்டால் இவ‌ன் சாகிறான். உத‌வியை பெற்ற‌ பின் உத‌வி செய்தவ‌ன் மீது பெற்ற‌வ‌னுக்கு கொலை வெறி பிற‌க்கிற‌து. அவ‌னை கொல்ல‌ முடியாது ந‌ன்றியை கொல்லுகிறான்.

எந்ந‌ன்றி கொன்றார்க்கும்‌ உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந‌ன்றி கொன்ற‌ ம‌க‌ர்க்கு


என்றார் திருவ‌ள்ளுவ‌ர். ந‌ன்றியையாவ‌து கொல்லாவிட்டால், உத‌வி செய்த‌வ‌னையே கொல்ல‌ வேண்டியிருக்கும், என்ப‌து வ‌ள்ளுவ‌ருக்கு தெரியாது பாவ‌ம். சிக்ம‌ன் ஃப்ராயிடுக்கு முன்னாடியே பிற‌ந்துட்டாரே

தொலை தூர வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி !


தொலை தூர வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி ! (ஹி..ஹி.. ஜோசியம் கேட்க விரும்புபவர்களுக்குங்க)

இத்தனை நாள் ஆர்க்குட்,யாஹூ சாட்,ஜோதிட பூமி,நிலாச்சாரல்.காம், எனது வலைப்பூக்கள் மூலம் என் ஜோதிட வித்வத்தை(?) அறிந்து, தனிப்பட்ட பலன் களை அறியத் துடிப்பவர்கள் என் ஆலோசனை கட்டணத்தை எனக்கு அனுப்பி வைக்க படாத பாடு பட்டு வந்தனர். அதைப் பெற நானும் தான் பாடுற்றேன்.


ஒரு தரம் ஒரு யு.எஸ்.ஏ நண்பர் ரூ.3000 அனுப்ப தங்களுக்கு ஏதேனும் வங்கியில் கண‌க்கு உண்டா? உண்டெனில் எந்த பெயரில் உள்ளது என்று கேட்டார்.(மெயிலில் தான்) . அந்த நேரத்துக்கு ஒரு நண்பரின் கணக்கு எண்ணை கொடுத்தேன். அவன் பெயருக்கு செக் வந்தது. நண்பனிடம் கொடுத்தேன்.

ஒரு வாரம் கழித்து வரச்சொன்னான். சென்றேன். எவ்ள வேணும் என்றான். நானும் இ.வாயன் போல் நூறும் இரு நூறும் வாங்கி தீர்த்து விட்டேன்.


இன்று இறைவன் திருவருளால் ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியா (கிரீம்பேட்டை) கிளையில் சேமிப்பு கணக்கு துவக்கினேன். கணக்கு எண்: 30333022274 எனது அஃபிஷியல் பெயரான எஸ்.முருகன் என்ற பெயரில் கணக்கு துவங்கப் பட்டது. சித்தூர்.எஸ்.முருகேஷன் என்பது எனது புனைப்பெயராகும். எழுத்து வேலைகளை

சித்தூர்.எஸ்.முருகேஷன் என்ற பெயரிலும், இதர போக்கு வரத்துகளை அஃபிஷியல் பெயரான எஸ்.முருகன் என்ற பெயரிலும் தொடர்ந்து வருகிறேன். எழுத்தாளர்கள் தமது உண்மை மற்றும் புனைப்பெயர்களில் வங்கி கணக்கு துவங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆக எனது ஜோதிட ஆலோசனை பெற விரும்பும் தொலை தூர வாடிக்கையாளர்கள் மேற்சொன்ன எனது வங்கி கணக்கில் கட்டணத்தை கட்டி விட்டு மெயில் , சாட் மூலம் ஆலோசனை பெறலாம்.

Wednesday, February 20, 2008

இந்திய பிரதமர் போனில் பேசினார்

கி.பி.2020, புது தில்லி

இந்திய மனித வளத்துறை அமைச்சர் வீராசாமி, தன்னெதிரில் உட்கார்ந்திருந்த வெளி நாட்டு விஞ்ஞானிகளை "தயங்காது சொல்லுங்க" என்றார். ஒரு விஞ்ஞானி கூற ஆரம்பித்தார்.

"உங்க அண்டை நாடுகளான எங்கள் நாடுகளில் 13 வருசங்களுக்கு முன் ஜனத்தொகை பெருக்கத்தை சமாளிக்க ஆண்கள்,பெண்கள் ஒவ்வொருத்தருக்கும் கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்விச்சோம். அதுக்கு முன்னாடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்களோட விந்துவையும்,பெண்களோட முட்டைக் கருக்களையும் தனித்தனியே சேகரிச்சு ஃப்ரீஸ் பண்ணி புதச்சு வச்சுட்டம். ஜனத்தொகை குறைந்து பொருளாதாரம் நல்ல நிலைமக்கு வந்த பிறகு , இதுக்கு முன்னாடி புதைச்சு வச்ச விந்து,முட்டைக் கருக்களை இணைச்சு குழந்தைகளை பிறப்பிக்க முடிவு செய்தோம். எடுத்தப்புறம் தான் ரெண்டு ராட்சத சோதனைக்குழாய்களுமே நாசமாகியிருந்தது தெரிஞ்சது அதனால உங்க நாட்டு ஆண் பெண்களோட விந்து,முட்டைக் கருக்களை வாங்கி இணைச்சு குழந்தைகளை பிறப்பிக்க நினைக்கிறோம்."


அதே நேரம் இந்திய பிரதமர் போனில் பேசினார்" என்ன வீரா சாமி எதுனா பெயருமா?"
வீரா சாமி சொன்னார் " சார் ..நம்ம நிலையே தான் அவங்களுதும்"

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி என் போன் ஃப்ரண்ட்

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி என் போன் ஃப்ரண்ட் என்றால் அவரே கூட ஒப்புக்கொள்ளாது போகலாம். ஆனால் இது உண்மை.

வார்த்தா தெலுங்கு தினசரியில் என்னைப்பற்றி அரைப் பக்க அளவில் செய்தி வெளி வந்தது. எல்லாம் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றித்தான். அப்போது கருணாகர் ரெட்டி ப்ரதேஷ் காங்கிரஸ் காரிய கமிட்டி மெம்பர் . என்னைப்பற்றிய செய்தியை படித்து விட்டு தமது நண்பர்களிடம் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியது பொது நண்பர்கள் மூலம் என் காதுக்கு வந்தது.

ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் யார் உதவுவார்கள் என்று காத்திருந்த நேரம் அது. எனவே உடனடியாக டெலிபோன் டைரக்டரியில் அவர் விலாசம் போன் நெம்பர்களை பிடித்து கூரியரில் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம், அது குறித்த என் முயற்சிகள் , தெ.தேசம் அரசின் அலட்சியம் யாவற்றையும் விவரித்து அனுப்பி வைத்து லேண்ட் லைனுக்கு போன் போட்டேன். ரொம்ப பாசிட்டிவாக ரெஸ்பாண்ட் ஆனார்.

ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு ஜாயிண்ட் பிரஸ் மீட் போடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் சந்திரபாபுவைத் தான் நாம் கார்னர் செய்ய வேண்டும். இதை நான் செய்வதை விட சந்திரபாபுவுக்கு சமமான ஹோதா உள்ள டாக்டர் . ஒய்.எஸ் (இன்னாள் முதல்வர்)ரெஸ்பாண்ட் ஆகுமாறு செய்யலாம் என்றெல்லாம் கூறினார்.அதிலிருந்து போன் போட்டால் அவரே லைனுக்கு வருவார். பாத்ரூமில் இருக்கும் போது கூட போன் எடுத்து பேசியதுண்டு. ஹும் ! இதெல்லாம் ஒருகாலம்.

அவுசாரி என் மீது புகார் கொடுத்து ஹெட் கான்ஸ்டபிள் வீட்டுக்கு வந்ததும் நான் கருணாகர ரெட்டிக்கு போன் போட்டேன். அவர் "சரி சரி நீ போனை வச்சுரு" என்றார். எனக்கு பக் என்று ஆகிவிட்டது. என்னாடா இது மனுசன் கழட்டி விடறான் என்று நொந்து விட்டேன். பின் சேர்க்கையாக " நீ போனை வச்சுட்டா நான் பாபுவுக்கு போன் போட்டு என்டார்ஸ் பண்றேன்" என்றார்.


"சார்.. எந்த பாபுவ சொல்றிங்க"
" சி.கே.வைத்தான்பா"
" சார்.. நான் என்.டி.ஆர், ஃபேன்..சி.கே.வோட‌ அர‌சிய‌ல் எதிரிக‌ள் எல்லாம் என் ந‌ண்ப‌ர்க‌ள்.. இது ச‌ரியா வ‌ருமா?"

" அட‌ட‌... நீ போனை வைப்பா ..நான் பாபுவுக்கு சொல்றேன் .. நீ பாபுவை போய் பார்"

உள்ளூற‌ உத‌ற‌ல் தான். சி.கே.பாபு அப்போதும் எம்.எல்.ஏ தான், என்ன‌ ஒரு ச‌ங்க‌ட‌ம் என்றால் எதிர்க‌ட்சி, ச‌மீப‌த்தில் தான் கொலை வ‌ழ‌க்கு,க‌ட‌ப்பா சிறை வாச‌ம் எல்லாம் ந‌ட‌ந்திருந்த‌து.. இந்த‌ மாதிரி ச‌ம‌ய‌த்தில் ஊர் விவ‌கார‌த்தில் யாராவ‌து உத‌வுவார்க‌ளா என்றும் ச‌ந்தேக‌ம்.

இருந்தாலும் உட‌னே எங்க‌ள் ஆந்திர‌பிர‌பா மேனேஜ‌ர் மோக‌னுக்கு போன் போட்டு விஷ‌ய‌த்தை சொன்னேன். எங்க‌ள் எம்.டி.யும் காங்கிர‌ஸ் கார‌ர்தான். த‌ற்ச‌ம‌ய‌ம் காங்கிர‌ஸ் எம்.எல்.ஏ வாக‌வும் இருக்கிறார். என‌வே அவ‌ர் திருப்ப‌தியிலிருந்து ச‌ரியாக‌ ஒன்ன‌ரை ம‌ணி நேர‌த்தில் க‌ட்ட‌ம‌ஞ்சியில் வ‌ந்து இற‌ங்கினார் எங்க‌ள் மேனேஜ‌ர். நேரே சி.கே.பாபு வீட்டுக்கு போனோம்.

(மீதி அடுத்த‌ ப‌திவில்)

Tuesday, February 19, 2008

போலீஸ் அடக்குமுறை என்பது ஏழை,எளியவர்,தாழ்த்தப்பட்டோர் (இப்ப த.நா.என்னன்னு சொல்லனும்?)பெண்கள்,குழந்தைகள் மீதுதான் பாயும் என்று நீங்கள் நினைப்பவரானால்.

போலீஸ் அடக்குமுறை என்பது ஏழை,எளியவர்,தாழ்த்தப்பட்டோர் (இப்ப த.நா.என்னன்னு சொல்லனும்?)பெண்கள்,குழந்தைகள் மீதுதான் பாயும் என்று நீங்கள் நினைப்பவரானால்.. ஐம். சாரி !

போலீஸ் அடக்குமுறைக்கு முறைக்கு இந்த‌ பேத‌மெல்லாம் இல்லை. ஒரு ராணுவ‌ அதிகாரி.ஓய்வுக்கு பிறகு செக்யூரிட்டி ஏஜென்ஸி ந‌ட‌த்திவ‌ருகிறார். ப‌ய‌ங்க‌ர‌ ச‌வுண்ட் பார்ட்டி. வ‌ருட‌த்தில் 3 மாத‌ங்கள் தாம் புதிதாய் வாங்கும் சொத்துக்க‌ளை ரெஜிஸ்ட‌ர் செய்வ‌த‌ற்காக‌வே ஒதுக்கி வைத்திருப்ப‌வ‌ர். இவ‌ர் சித்தூர் வ‌ந்தார். ந‌ள்ளிர‌வு. சித்தூர் க்ரைம் போலீஸ் ஸ்டேஷ‌ன் எதிரில் உள்ள‌ நைட் டீ க‌டையில் டீ சாப்பிட்டார். அந்த‌ நேர‌ம் பார்த்து ஸ்டேஷ‌னில் வேலை பார்க்கும் ஹோம் கார்டு(த‌.நா.ல் ஊர் காவ‌ல‌ர்?)
கூட‌ அதே டீக்க‌டையில் டீ சாப்பிட‌ வ‌ந்தார். அவ‌ர் ஷூ ராணுவ‌ வீர‌ர் காலை மிதித்துக் கொண்டே இருந்த‌து. ரா.வீர‌ர், "வ‌லிக்குதுங்க‌ காலை எடுங்க‌ " என்றார். அவ்ள‌தான். சீன் சித்தார் ஆயிருச்சு. தின‌த்த‌ந்தி பாஷையில் சொன்னால் "முன்னாள் ரா.வீர‌ருக்கு அடி,உதை"

அந்த‌ ரா.வீர‌ருக்கு சித்தூரில் ஒரு அக்குப‌ஞ்ச‌ர் டாக்ட‌ர் ஃப்ர‌ண்டு. அவ‌ருக்கு குமார் ஃப்ர‌ண்டு. குமார் ந‌ம்ம‌ ஃப்ர‌ண்டு. உட‌னே சீன்ல‌ இற‌ங்கிட்ட‌ன். அப்போ ஆந்திர‌பிர‌பால‌ ரிப்போர்ட்ட‌ர் நான். டாக்ட‌ர் ப‌தி சாலையில் ரிக்ஷாக்கார‌ர்க‌ள் க‌ஞ்சா வாங்கும் அதே ச‌ந்தில் தான் மாடியில் பிர‌ஸ் க்ள‌ப். க‌ள‌ப்புக்கு ப‌க்க‌த்து க‌டைதான் ஆந்திர‌பி‌ர‌பா ஆஃபீஸ். நேரே ஸ்டேஷ‌னுக்கு சென்றேன். ரா.வீ யுட‌ன்.


"வ‌ண‌க்க‌ம் சார். நான் ஆந்திர‌பிர‌பா"
"ந‌ல்ல‌துப்பா"

"சார் ..இவ‌ர் மு.ரா.வீ. ஏதோ பிர‌ஸ் மீட் வைக்க‌னும்னு க்ள‌ப்புக்கு வ‌ந்திருந்தார்"
"ந‌ல்ல‌ விஷ‌ய‌ம் தானே..வைக்க‌ட்டும்"

"எங்க‌ளுக்கு ரொம்ப‌வே ந‌ல்ல‌ விஷ‌ய‌ம்தான் சார். உங்க‌ளுக்கு ந‌ல்ல‌தில்லைன்னு நினைச்சு பார்ட்டிய‌ இங்கே த‌ள்ளிட்டு வ‌ந்துட்டேன்"

"என்ன‌ப்பா சொல்றே"

/விஷ‌ய‌த்தை சொன்னேன்/

பிற‌கு பார்க்க‌னுமே சி.ஐ. ந‌டிப்பை. ம‌னித‌ உரிமை ஆர்வ‌ல‌ர்க‌ள் கூட‌ அந்த‌ அள‌வுக்கு ப‌த‌ற‌மாட்டார்க‌ள். காலை மிதித்த‌ ஹோம் கார்டை வ‌ர‌வைத்த‌தென்ன‌? அவ‌னுக்கு தான் சொல்லியிருந்த‌ வேலைக‌ள் எதுவ‌ரை ந‌ட‌ந்திருக்கின்ற‌ன‌ என்று விசாரித்த‌தென்ன‌? அவ‌னை பிடித்து ஏறு ஏறு என்று ஏறிய‌தென்ன‌?

ஒரு வேளை ரா.வீக்கு டாக்ட‌ர்,டாக்ட‌ருக்கு குமார்,குமாருக்கு நான் ஃப்ர‌ண்டாயில்லாதிருந்திருந்து ரா.வீ த‌னியே புகார் கொடுக்க‌ போயிருந்தால் என்ன‌ க‌தி..

Monday, February 18, 2008

பாகாலாவில் ரயில்வே எம்ப்ளாயியின் ஆசைநாயகி, தங்கள் காலனி லாரி ட்ரைவரின் மனைவி,Etc

வாழ்க்கைக்கு உங்கள் திட்டமிடல்கள் என்றால் அலர்ஜி

ஆம். நாம் அனைவருமே திட்டமிடுகிறோம். நம் திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்று துடிக்கிறோம். ஆனால் வாழ்க்கைக்கு உங்கள் திட்டமிடல்கள் என்றால் அலர்ஜி
எங்கள் சந்திரபாபு முதல்வராக இருந்த போது விஷன் 2020 என்று ஒரு உட்டாலக்கடியை பற்றி தொண்டை வறள பேசிக்கொண்டிருந்தார். கம்யூனிஸ்டுகள் அதை விஷன் 420 என்று கிண்டலடித்து வந்தனர்.

நிற்க என் நண்பன் ஒருவனின் திட்டமிடல் பற்றியும் வாழ்க்கை அவனை எப்படி லொள்ளு செய்தது என்பதை பற்றியும் சில வரிகள். அவன் பெயர் ..வேண்டாம். ஏடுகொண்டலு என்று வைத்து கொள்வோம். பட்சி தோஷம்(?) காரணமாய் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாத உருவம். பள்ளி ஆசிரியரான அப்பா. உப தொழில் இலவசமாய் வரன் பார்த்தல். அம்மா ஹவுஸ் வைஃப். அந்த காலத்து கலப்பு திருமண தம்பதி. கச்சாமுச்சான்னு பசங்க. நம்ம ஏடுகொண்டலு சின்ன வயசுலயே வறுமை நிலைக்கு பயந்துட்டான். திறமை இருக்குங்கறதை மறந்துட்டான்.

இதில் அவன் ராசி வேறு ரிஷப ராசியாச்சா.. பேச்சுன்னா வெல்லம். பெண்கள் என்றால் ஜொள், தீனிப்பண்டாரம்,கல்யாணம், காரியம் ஒன்னு விடமாட்டான். மேலும் வேலி தாண்டி மேய்வதில் ஒரு ருசி. பாகாலாவில் ரயில்வே எம்ப்ளாயியின் ஆசைநாயகி, தங்கள் காலனி லாரி ட்ரைவரின் மனைவி,(அந்த நேரம் நம் ஏடு கொண்டலு பிரைவேட் லைன் மேனிடம் உதவியாள்தான்),பாகாலாவிலேயே கோர்ட்டு குமாஸ்தாவின் மனைவி. அவன் மேய்வதும்,பிடிபட்டு அவதி படுதல்,உதைபடுதல் ஏதோ ஒரு வகையில் நான் காப்பாற்றியோ,ஒப்பேற்றியோ விடுதல் நடந்து வந்தது.

இதெல்லாம் ஒரு புறம் என்றால் அவன் திட்டமிடல் தான் எரிச்சலூட்டும் விஷயம். காலனிக்கு செல்லும் டவுன் பஸ்ஸின் நேரத்தை கூட தெரிந்து வைத்துக் கொண்டு பத்து முறை நேரம் பார்த்து பார்த்து பேசுவது நம்மை பைல்ஸ் நோயாளி போலாக்கிவிடும். சரி ஒழியட்டும்.

லாரி ட்ரைவ‌ர் ம‌னைவி விஷ‌ய‌த்தில் கால‌னிக்கே போக‌ முடியாத‌ நிலைமை ஆகிவிட்ட‌து. நான் பாகாலாவில் ஏடுகொண்ட‌லு குட் வில்லில் வீடு பிடித்து வாழ்ந்து வ‌ந்த‌ க‌ட்ட‌ம். ப‌ய‌ங்க‌ர‌மாய் சாமி கும்பிடுவான் . என்ன‌டா வேண்ட‌றே என்றால் லாரி ட்ரைவ‌ர் செத்துட‌னும்னு வேண்ட‌றேன் என்றான்.

"ச‌ரிப்பா நீ அவ‌ன் ம‌னைவியை அனுப‌விச்சே,அவ‌னுக்கு தெரிஞ்சு போய் வெட்ட‌ வ‌ந்தான் ஓடி வ‌ந்துட்டே..இப்போ அவ‌ன் சாக‌னும்னு சாமி கும்பிட‌றே, அவ‌ன் செத்துட்டா அவ‌ன் பெண்டாட்டிய‌ நீ க‌ட்டிக்க‌ற‌யா/இல்லை வ‌ச்சுக்க‌றயா/ச‌ரி போவ‌ட்டும் அவ‌ளுக்கு ப‌ச‌ங்க‌ வேற‌ இருக்காங்க‌ அதுல‌ யாரையாவ‌து த‌த்தெடுத்துக்க‌ற‌யா/ உன் டீல் என்ன‌ சொல்லு நானும் உன‌க்கு ச‌ப்போர்ட்டா வேண்டிக்கிறேன்."என்றேன்.

ஊஹூம் என்று விட்டான். இன்று மின் துறையில் வேலை வ‌ந்து,திரும‌ண‌மாகி ஒரு பெட்டை குட்டி போட்டு,சுக‌ர் வாங்கி க‌டைக‌ளில் தூசு த‌ட்டும் குச்சி மாதிரி ஆகிவிட்டிருக்கிறான். ஊரில் உள்ள‌ எல்.ஐ.சி. எல்லாம் க‌ட்டி (சாவு ப‌ய‌ம்?) குடும்ப‌ செல‌வுக்கு கூட‌ யோசிக்க‌ வேண்டிய‌ நிலை .


இந்நிலையில் திருவ‌ள்ளூரில் ஒரு திரும‌ண‌த்துக்கு போக‌ வேண்டிவ‌ந்த‌து. நான் ஒன்றும் கூகுள் எர்த் மேதை இல்லாவிட்டாலும் குன்ஸாக‌ ஒரு குன்ஸ் வைத்திருப்பேன். நாய‌க்க‌ரே! திருத்த‌ணி போயிட்டு ர‌யில் பிடிச்சுர‌லாம் என்றேன். த‌னியார் ப‌ஸ் நின்னு போவான் அர‌சு ப‌ஸ் அடிச்சுகிட்டு போயிடுவான் ,ரோடு ந‌ல்லாருக்காது அது இது என்று டூர் புரோக்ராம‌ர் ஆகிவிட்டான். என‌க்கு இதெல்லாம் ஒரு வேடிக்கை. நீதான் டீம் லீட‌ர் ,நீ சொல்லு நாய‌க்க‌ரே..நீ எப்ப‌டி சொன்னா அப்ப‌டி என்று விட்டேன். பிற‌கு பாருங்க‌ளேன் நாயடி.

வ‌யா திருத்த‌ணி சென்னை ப‌ஸ் என்றான்/பின் காட்பாடி போய் அர‌க்கோண‌ம் ட்ரெயின், அங்கிருந்து ப‌ஸ்ஸுல‌ திருவ‌ள்ளூர் என்றான். எல்லாத்துக்கும் ஓகே என்றேன். காட்பாடி ஸ்டேஷன் போனோம் ம‌ணி ம‌திய‌ம் 2.40. இனி 6 ம‌ணிக்குத்தான் ர‌யில் என்று விட்டார்க‌ள். பின் வேலூர் ப‌ஸ் ஸ்டாண்டு. அங்கிருந்து அர‌க்கோண‌ம் . ர‌யிலில் திருவ‌ள்ளூர். திரும‌ண‌ம‌ண்ட‌ப‌ம் சென்ற‌தும் மூக்குக்கு நேராய் ரூம் சாவி கேட்டு அரிக்க‌ ஆர‌ம்பித்து விட்டான். வாங்கியும் விட்டான்.ரிச‌ப்ஷ‌ன் ஆச்சு.விடிய‌ல்
திரும‌ண‌ம். நான் ந‌ள்ளிர‌வு வ‌ரை சென்னை ந‌ண்ப‌ரை வ‌ர‌வ‌ழைத்து வைத்துக் கொண்டு அவ‌ர் க‌தைக‌ளை கேட்டுக் கொண்டிருந்து விட்டேன்.

குடித்த‌ காப்பி தொண்டை குழிவ‌ரையாவ‌து இற‌ங்கிய‌தோ இல்லையோ..ர‌யில் ர‌யில் என்று ஜெபிக்க‌ துவ‌ங்கினான். அதென்ன‌மோ என‌க்கு ர‌யில் என்றாலே அல‌ர்ஜி. என்னைப்பொருத்த‌வ‌ரை அந்த‌ உல‌க‌மே புராதன‌மான‌து,ம‌ர்ம‌ம் நிறைந்த‌து. ஆப‌த்து நிறைந்த‌து.நம் செல்வாக்கு எதுவும் வேலை செய்யாத தீவு அது .

க‌டைசி பெட்டியில் ஒரு எக்ஸ் சிம்ப‌ல் இருக்கும் அது எத‌ற்கு தெரியுமா ஒவ்வொரு ஸ்டேஷ‌னிலும் டார்ச் அடித்து பார்க்கும் போது எக்ஸ் இல்லாவிட்டால் பெட்டி ஏதோ க‌ழ‌ன்டுகிச்சு என்று தேட‌ ஆர‌ம்பிப்பார்க‌ளாம்.இது போன்ற‌ ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளால் என‌க்கு ர‌யில் ப‌ய‌ண‌ம் என்றாலே வ‌யிறு க‌ல‌ங்கும் (அந்த‌ க‌ல‌க்க‌ம் இல்லிங்க‌)

நான் சொல்லி பார்த்தேன் நாய‌க்க‌ரே ரொம்ப‌ சுக‌ம் தேடாதே.. இண்டிய‌ன் ரோட்ஸ் எப்ப‌டி இருக்குனு தெரிஞ்சுக்க‌லாம் ப‌ஸ்ல‌யே போலாம் என்றேன் ப‌ல‌வீன‌ குர‌லில். ஊஹூம். அலைந்து ப‌றை சாற்றி டிக்க‌ட் வாங்கினான். சென்னை ந‌ண்ப‌ர் வில்லிவாக்க‌ம் செல்ல‌ ர‌யிலேறினார். அர‌க்கோண‌ம் செல்லும் ர‌யில் வ‌ந்த‌து. வில்லிலிருந்து புற‌ப்ப‌ட்ட‌ அம்பு மாதிரி ஏறிக்கொண்டு என்னையும் டென்ஷ‌ன்ப‌டுத்தி ஏற்றினான்.

ந‌ம‌க்கு ஏற்கென‌வே அல‌ர்ஜி. ர‌யில் உல‌க‌ ச‌மாச்சார‌ம்னாலே மூளை க‌த‌வு ஹ‌வுஸ் புல் போர்டு போட்டுரும். வ‌ந்தாருயா டிக்க‌ட் செக்க‌ர் நீ ஆர்டின‌ரிக்கு டிக்க‌ட் வாங்கி,எக்ஸ்பிர‌ஸ்ல‌ வ‌ந்துட்ட‌ வைய்யா ஆளுக்கு 265 னுட்டார். கூட‌ என் ம‌க‌ள் வேறு.

அவ‌ன் முக‌த்தை பார்க்க‌ வேண்டுமே அப்ப‌டியே பேஸ்த‌டித்து,க‌ருத்து..பே பே என் கிறான். பின் நான் க‌ள‌மிற‌ங்கி லாலு நமக்கு க்ளையண்டு,வேலு நமக்கு க்ளோஸ் அது இதுன்னு பேச்சு வார்த்தை ந‌ட‌த்தி ஒரு 265க்கு செட்டில் செய்து வெளி வ‌ந்தோம்.கையில் கால‌ணா இல்லை. அதுவ‌ரை அவ‌ன் காட்டிய‌ க‌ம்பீர‌ம்,த‌ன்ன‌ம்பிக்கை,திட்ட‌மிட‌ல்,அலைய‌ல் எல்லாமே புஸ் ஆகிவிட்ட‌து.

ந‌ம‌க்கு அட‌கு வ‌ச்சு காசு வாங்கிற‌துல‌ எக்க‌ச்ச‌க்க‌ அனுப‌வ‌மாச்சே ! கையில‌ செல் இருக்கு சேட்டு க‌டை யில்லாத‌ ஊர் எதுங்க‌ற‌து என் தைரிய‌ம். ஏடுகொண்ட‌லுவுக்கு பேதியாகிவிட்ட‌து. பின் எப்ப‌டியோ ஒரு பாவாவுக்கு (வைசிய‌ ந‌ண்ப‌ன்) போன் போட்டு அவ‌ன் அர‌க்கோண‌ம் பாவாவுக்கு போன் போட்டு 150 வாங்கி ஊர் வ‌ந்து சேர்ந்தோம். தாளி ..திட்ட‌மிட‌ற‌வ‌ன் நாஸ்திக‌ன். வாழ்க்கையைப் ப‌ற்றிய‌ புரித‌ல் இல்லாத‌வ‌ன் என்ற‌ என் க‌ருத்து உறுதிப்ப‌ட்ட‌து.


ரூ.150 கைக்கு வ‌ந்த‌துமே ஸ்டார்ட் ப‌ண்ணிட்டான்யா! க‌ணேஷ் ப‌வ‌ன்ல‌ 3 இட்லி ம‌ட்டும் சாப்பிட‌னுமாம். திருத்த‌ முடியாத‌ ஜ‌ன்ம‌ங்க‌ள்.

Friday, February 15, 2008

வங்கிகள் மேம்பட, கந்து வட்டி ஒழிய சில யோசனைகள்

வங்கிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. வங்கிகள் ஒருங்கிணைப்பு,ஆட்குறைப்பு,ஊழியர் வயிற்றிலடிப்பு இத்யாதி காரணங்களால் வங்கிகள் இயங்கி வருகின்றனவே தவிர எப்பவோ வாய்தா போச்சு. இன்று முதியோர் ஓய்வு தொகை,விதவை பென்ஷன் இத்யாதி கொடுக்க ஸ்மார்ட் கார்டு,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் இன்னபிற வருவாய்களை தேட வேண்டிய நிலை வந்துள்ளது.

எங்க ஊரை (சித்தூர்) அடுத்துள்ள‌ கானிப்பாக்கத்தில் பந்தாவாய் ஸ்டேட் பாங்க் கிளை துவங்கினார்கள். (கூட்டம் கூடும் இடத்தில் நரிக்கொம்பு விற்பதை போல) . இன்று கணக்குகளின் எண்ணிக்கையை கூட்ட கு.ப.இருப்பு இல்லாமலே கணக்கு துவங்கி வருகிறார்கள். இதற்கெல்லாம் பல காரணங்கள் உண்டு.

அதில் முக்கியமானது தனிப்பட்ட லாவா தேவிகள்,கந்து வட்டி தான். வங்கியை அணுக முடியாத நிலையில் இருக்கும் மக்கள் தான் கந்து வட்டி கும்பலின் இலக்கு என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மாதம் 20 ஆயிரம் சம்பாதிக்கும் அரசு தலைமை ஆசிரியர்கள் கூட சாதாரணமாய் 5 வட்டிக்கு கடன் வாங்கிவருகிறார்கள்.

வ‌ர‌வு எட்ட‌ணா செல‌வு ப‌த்த‌ணா நிலைக்கு ச‌முதாய‌ம் வ‌ந்து விட்ட‌ நிலையில் எல்.ஐ.சி,ஹ‌வுசிங் லோன் , பர்ஸனல் லோன்,க்ரெடிட் கார்டு ,ஸ்ரீராம் சிட்ஸ்,த‌னியார் சிட்ஸ்,எல்லாம் முடிந்து 5 வ‌ட்டி, விட்டால் 10 வ‌ட்டிக்கு வ‌ந்து விடுகின்ற‌ன‌ர்.

பார்ப்ப‌ன‌ர்க‌ள் அசைவ‌ம் உண்ண‌ ஆர‌ம்பித்த‌ பிற‌கு ஆட்டுக்க‌றி,மாட்டுக்க‌றி விலை கூடி விட்ட‌து போல‌வே அர‌சு ஊழிய‌ர்க‌ள் 5 வ‌ட்டிக்கு சித்த‌மாகிவிட்ட‌தால் 10 வ‌ட்டி நியாய‌ வ‌ட்டியாகி விட்ட‌து.

இத‌ற்கெல்லாம் சொல்யூஷ‌ன் 2 தான்:

வ‌ங்கிக‌ள் க‌ந்து வ‌ட்டிக் கார‌ர்க‌ளை காப்பிய‌டிக்க‌ வேண்டும். சிறு வியாபாரிக‌ளுக்கு டெய்லி லோன் த‌ர‌வேண்டும். (தின‌ச‌ரி க‌லெக்ஷ‌ன் வாங்க‌ வேண்டியிருப்ப‌தால் ச‌ர்வீஸ் சார்ஜை கூட்டி வட்டி போட‌லாம்) , அதே போல் மார்க்கெட்,ப‌ஸ் ஸ்டாண்டு ப‌குதிக‌ளில் காலையில் க‌ட‌ன் கொடுத்து ,மாலையில் வாங்க‌லாம். டுபாகூர் தொழில‌திப‌ர்க‌ளுக்கும், திவாலா பார்ட்டிக‌ளான‌ அர‌சு ஊழிய‌ர்க‌ளுக்கு ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் க‌ட‌ன் கொட்டிக் கொடுத்து கோர்ட்டுக்கு அலைந்த‌தில் என்ன‌ சாதித்தார்க‌ள். ஒரு த‌ட‌வை மாற்றி யோசியுங்க‌ப்பா!

இந்த‌ ஐடியாவை பின்ப‌ற்ற‌ விரும்பும் வ‌ங்கிக‌ள் என‌க்கு க‌ன்ஸ‌ல்ட் ஃபீஸாக‌ ரூ.1 த‌ர‌வேண்டியிருக்கும்.

நீதிபதிகளுக்கு கடிதம் எழுதிய அனுபவம் உண்டா?


எனக்கு நிறையவே உண்டு. நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையே ரிட் மனுவாக ஸ்வீகரித்து விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிபதிக்கு உண்டு என்பதை நினைவில் வைத்து இதை படிக்கவும். எங்கள் முன்னாள் முதல்வர் சந்திர பாபுவுக்கு ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை நான் அனுப்பிய கதை உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். தபால் செலவுக்காக அனுப்பிய எம்.ஓவை வாங்கிக் கொண்டது, நான் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடுத்தது யாவும் நீங்கள் அறிந்தவையே என்ற எண்ணத்தில் தவளைப் பாய்ச்சலில் தாண்டிச் செல்கிறேன். அறியாதவர்கள் சிரமம் பார்க்காது இந்த வலைப்பூவில் தேடி ஒரு பாட்டம் படித்து விடுங்கள். இந்திய சிகப்பு நாடாத் தனத்தின் சிகரம் இது.

நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடுத்த செய்தியை பத்திரிக்கைகள் மூலம் அறிந்தவுடனே முதல்வரின் அலுவலகம் 4 கால்களையும் தூக்கி விட்டது. தங்கள் ஆலோசனைகளை உரிய வகையில் உபயோகித்து கொள்கிறோம் என்று கடிதம் எழுதிவிட்டது.

என் நியாய போராட்டம் தொடர்ந்தது. மாவட்ட நுகர்வோர் மன்ற தலைவர் என் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார். அவர் கூறிய காரணம் இது பெயிடட் சர்வீஸ் அல்ல , டிஃபெக்டிவ் சர்வீசும் தென்படவில்லை. அடப்பாவிகளே ! பதில் தர தபால் செலவுக்கு நான் அனுப்பிய எம்.ஓ.வை முதல்வர் அலுவலகம் பெற்றுக்கொண்ட ரசீது டேபிள் மேலிருக்கிறது பெயிடட் சர்வீஸ் அல்ல என்று ஒரு நீதிபதி கூறுகிறார். சரி ஒழியட்டும், ஒரு தீப்பெட்டி வாங்கினால் கூட வரியோடு சேர்த்து தானே கடைக்காரனுக்கு 50 காசு கொடுக்கிறேன், நான் நுகர்வோன் இல்லையா?

அப்புறம் வந்த பாயிண்டு தான் தூள் பாயிண்டு.. அவருக்கு டிஃபெக்டிவ் சர்வீஸ் ஏதும் தெரியவில்லையாம். அட படு பாவிகளே ! 1997 நவம்பர் முதல் அனுப்பிய கடிதங்களுக்கு 2003 ஏப்ரல் வரை பதில் எழுதாதது டிஃபெக்டிவ் சர்வீஸ் அல்லவா?
வ‌ழ‌க்கு த‌ள்ளுப‌டியான‌து. மாநில‌ நுக‌ர்வோர் ம‌ன்ற‌த்துக்கு அப்பீல் செய்தேன். கீழ் கோர்ட்டில் கொடுத்த‌ தீர்ப்பின் ஒரிஜின‌ல் அனுப்ப‌ச்சொல்லி தாக்கீது அனுப்பினார்க‌ள். உட‌னே அனுப்பி வைத்தேன் . அவ்வ‌ள‌வுதான் நாளிதுவ‌ரை அந்த‌ மாநில‌ நுக‌ர்வோர் ம‌ன்றம் இருக்கிற‌தா? அல்ல‌து த‌னியார் ம‌ய‌ யுக‌ம் என்ற‌ கார‌ண‌த்தால் ஏதாவ‌து காப‌ரே மைய‌மாக‌ மாற்றிவிட்ட‌ன‌ரா? கூட‌ புரிய‌வில்லை. நான் "காண்டு"மாதிரி தொட‌ர்ந்து ரிமைண்ட‌ர்க‌ள் அனுப்பிக் கொண்டே இருந்தேன். ச‌ரி தேசீய‌ ‌ நுக‌ர்வோர் ம‌ன்றத்துக்கு அப்பீல் செய்தேன் அதுவும் இதே இழ‌வுதான்.


இதைய‌டுத்து தான் உய‌ர்நீதிம‌ன்ற‌ நீதிப‌திக‌ளுக்கு க‌டித‌ம் எழுதும் ஐடியா வ‌ந்த‌து. அந்த‌ அனுப‌வ‌ங்க‌ளை அடுத்த‌ ப‌திவில் கிழிப்போம்.

Thursday, February 14, 2008

பரிமளா குளித்து விட்டு பாவாடையை மார்பு வரை

"டேய் சோமு ! பக்கத்து விட்டு பரிமளா கிட்டே போய் 2 தக்காளி வாங்கிகிட்டு வாடா " என்றாள் அம்மா. "சே ! பத்தாங்கிளாஸ் படிக்கிற பையனுக்கு சொல்ல வேண்டிய வேலையா இது" என்று திட்டிக்கொண்டே புறப்பட்டேன்.

பரிமளாவுக்கு வயது 30க்கு மேல் கல்யாணம் ஆகவில்லை. தெருக்கதவு திறந்திருக்க உள்ளே நுழைந்தேன். பரிமளா குளித்து விட்டு பாவாடையை மார்பு வரை கட்டிக்கொண்டு டர்க்கி டவலால் தலை துவட்டிக் கொண்டிருந்தாள். "செமை கட்டை" என்ற வார்த்தை மூளையில் ஸ்பர்க்கியது. கஷ்டப்பட்டு அதை ஃபேட் செய்து தரையைப் பார்த்துக் கொண்டே "அம்மா 2 தக்காளி வாங்கிகிட்டு வரச்சொன்னாங்க என்றேன்.

பரிமளா காய்கறி கூடையில் தக்காளியை தேடிக் கொண்டிருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது.காதோரம் சூடு பரவியது. வாய் உலர்ந்து விட்டது. எப்போதோ பார்த்த பாடாவதி படம் எல்லாம் ஞாபகம் வந்துவிட்டது.


அந்த நேரம் பார்த்து பாழாய் போன பரிமளாவின் அம்மா வந்து விட்டாள். என்னையும் பரிமளாவையும் ஒரு பார்வை பார்த்த‌வ‌ள் " சீ..சீ..! என்ன‌டி இது வ‌ய‌சு பைய‌ன் முன்னாடி இந்த‌ கோல‌த்தில " என்று சீறினாள்.

ப‌ரிம‌ளா, " அட‌ போம்மா என‌க்கே காலாகால‌த்துல‌ க‌ல்யாண‌ம் ந‌ட‌ந்திருந்தா சோமு வ‌ய‌சுல‌ புள்ளை யிருந்திருப்பான்" என்றாள்.

யாரோ என்னை க‌ன்ன‌த்தில் ப‌ளார் என்று அறைந்த‌ மாதிரி இருந்த‌து

Wednesday, February 13, 2008

சி.கே.வுக்கு நான் எழுதிய கடிதங்கள்

சி.கே.பாபுவைப் பற்றி எதிர்கட்சியினர் செய்யும் அநேக பிரச்சாரங்களும் பொய் என்பதை அனுபவபூர்வமாக நான் அறிந்தேன். அதற்கும் எனக்கு உதவியது எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 தான். ஆம். ஐ.நா.சபை முதற்கொண்டு அனைவருக்கு என் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி கடிதம் மூலம் தெரிவித்து அலுத்துப் போன கால கட்டத்தில் சித்தூர் மாவட்ட அளவில் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த தலைவரான சி.கே.பாபுவுக்கு என் திட்டம் பற்றி தெரிவிக்க திட்டமிட்டேன். அன்று ராஜீவ் காந்தி நினைவு நாள்.ஃபிஷரீஸ் துறையில் பணிபுரியும் ஒரு நண்ப‌ர் சி.கே.பாபுவை அறிமுகம் செய்வதாய் உறுதியளித்ததை அடுத்து பிரகாசம் ரோடில் உள்ள ரெட் க்ராஸ் பில்டிங்ஸ் சென்றேன். நண்பர் என்னை அறிமுகம் செய்ய முனைந்தார். ஆனால் திடீர் என்று ஏதோ தகவல் வரவே குவாலீஸில் ஏறிவிட்டார் சி.கே.

சரி நம்ம வழிதான் சரி என்று என் திட்டம்,திட்டம் குறித்த என் முயற்சிகள் அனைத்தையும் ஒரு கடித‌ம் ஆக்கி குரியரில் அனுப்பி விட்டேன். சி.கே.வை பிடிக்காதவர்கள் செய்யும் பொய் பிரச்சாரங்கள் உண்மையானால் இன்று நான் இந்த பதிவை செய்ய விரல்களே இருந்திருக்காது.

என் கடிதத்தில் நான் என்.டி.ஆர் ரசிகன் என்பதையும்,அவரது அரசியல் விரோதிகளுடன் எனக்கு ஜோதிடன் என்ற வகையிலும்,நட்பு ரீதியிலும் தொடர்புகள் இருப்பதையும் குறிப்பிட்டிருந்தேன். இருந்தாலும் சி.கே.என் திட்ட விவரங்களை படித்ததையும்,கருத்து தெரிவித்ததையும் சில நண்பர்கள் மூலம் அறிந்து ஆச்சர்யப்பட்டேன்.

ஆனால் சி.கே ,என் திட்டத்தை அமுலாக்க நான் எம்.பிக்களின் உதவியை நாடியதை தம் நண்பர்கள் மத்தியில் வேதனையுடன் குறிப்பிட்டதை அறிந்து வியந்தேன் . நான் சிந்திக்காத கோணம் அது.

ஆப்பரேஷன் இந்தியாவில் முக்கிய அம்சம் தற்போதைய கரன்ஸியை ரத்து செய்து புதிய கரன்ஸியை அறிமுகம் செய்வதாகும்.

ஒவ்வொரு எம்.பி.யும் லட்சக்கணக்கிலாவது கருப்புப்பணம் வைத்திருந்தால் தான் தேர்தலில் ஜெயிக்க முடியும். யதார்த்தம் இப்படியிருக்க ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட அமலுக்கு பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த அவர்களுக்கு என்ன பைத்தியமா? என்ற ரீதியில் சி.கே கருத்து தெரிவித்ததாக அறிந்து நாக்கை கடித்து கொண்டேன்.

வேலூரை அடுத்துள்ள சித்தூர் தான் எங்க‌ள் ஊர்.

வேலூரை அடுத்துள்ள சித்தூர் தான் எங்க‌ள் ஊர். நான் பிறந்தது 1967 ல் ,ஸ்கூலில் சேர்ந்தது 1974ல். 1982 வரை 10 ஆம் வகுப்பு முடித்து இண்டர் வரும் வரை தமிழ் "பசங்களோடு" தான் டீலிங். இதற்கு காரணம் அப்போதைய 2 ஆசிரியன் கள். விடுங்க கழுதை கிடக்கட்டும். இண்டர் வந்து தெலுங்கு "பசங்களோட" பழக ஆரம்பிச்ச பிறகுதான் என் பார்வையே வைடன் ஆச்சு. 1987 வரை டிகிரி. டிகிரி 2 ஆம் வருடத்தில் செக்ரட்ரியாக நாமினேஷன் போட முயன்றபோது தான் சித்தூரின் சினேரியாவே புரிந்தது. அப்போது தலித் இனத்தவரின் டாமினேஷன் அதிகம். நாயுடு பங்களா காரர்கள் காங்கிரசுக்கு குட் பை சொல்லி என்.டி.ஆரின் தெலுங்கு தேசத்தை ஹைஜாக் செய்து விட்டிருந்தனர். செக்ரட்ரி ஆசையை விட்டாக வேண்டிய நிலை. காரணம் அத்தனை பிரஷர். அப்போதுதான் சித்தூர் மாஃபியா வரலாற்றின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. இப்போது கேளுங்கள் பக்காவாய் சொல்கிறேன்.

பழைய கதைகள் இப்போது எதற்கு? புதுசு, புதுசா நிறைய பதிவு பண்றேன். படிக்கலாம். தெலுங்கு டைரக்டர்ஸ் படிச்சா விடவே மாட்டாங்க சுட்ருவாங்க! அதனாலதான் இதை தமிழ்ல வைக்கிறேன். என்ன நான் ரெடி. நீங்க ரெடியா?
முத‌ல்ல‌ தேர்த‌ல் அர‌சிய‌லை பார்ப்போம். முக்கிய‌ க‌ட்சி 2. தெலுங்கு தேச‌ம்,காங்கிர‌ஸ். என்.டி.ஆர் அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌ புதுசுல‌ ஜான்சி ல‌ட்சுமி (நாயுடு ப‌ங்க‌ளா) எம்.எல்.ஏ வா ஜெயிச்ச‌தோட‌ ச‌ரி. சித்தூர் எம்.எல்.ஏ தொகுதி காங்கிர‌ஸுக்கு தான் என்று ஆகிவிட்ட‌து. க‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில் காங்கிர‌ஸ் வேட்பாள‌ர் சி.கே. பாபு குறைந்த‌ வாக்கு வித்யாச‌த்தில் வெற்றி வாய்ப்பை இழ‌க்க‌ கார‌ண‌ங்க‌ள் ப‌ல. விவரங்களுக்கு பார்க்கவும். (www.chittoortigerckbabu.blogspot.com)


தெ.தேச‌ம் சார்பில் சீட் கேட்க‌ இருந்த‌வ‌ர்க‌ளில் ஒருவ‌ர் சிர‌ஞ்சீவி (ஆர‌ம்பிக்க‌வே ஆர‌ம்பிக்காத) க‌ட்சிக்கு தாவி விட்டார். மிச்ச‌மிருப்ப‌து சிட்டிங் எம்.எல்.ஏ .ஏ.எஸ் ம‌னோக‌ர். இவ‌ருக்கு சீட் த‌ர‌ப்ப‌ட்டால் ஆச்ச‌ர்ய‌ப்ப‌டும் முத‌ல் ஆள் இவ‌ரே. கார‌ண‌ம் சித்தூர் மாவ‌ட்ட‌ தெ.தே.க‌ட்சியின் காட் ஃபாத‌ர் டி.கே.ஆதிகேச‌வுலுவின் ச‌கோத‌ர‌ர் ப‌த்ரி நாராய‌ண‌ நேர‌டி அர‌சிய‌லில் குதித்து விட்டிருப்ப‌தே. ப‌த்ரிக்கு தேவை இல்லையென்றால் தான் அடுத்த‌ சாய்சை பார்ப்பார்க‌ள். அடுத்து க‌ள‌த்தில் இருப்ப‌வ‌ர் ராவூரி ஈசுவ‌ர‌ராவ். இவ‌ர் ப‌ற்றி த‌னியே ஒரு ப‌திவே இட‌வேண்டும். இவ‌ருக்கான‌ வாய்ப்பு சூனிய‌ம்.

காங்கிர‌ஸ் சார்பில் சி.கே பாபுவுக்கு தான் டிக்க‌ட். பாதுகாப்பு கார‌ண‌ங்க‌ள் க‌ருதி அவரே த‌ன‌து அடிப்பொடிக‌ள் யாரையாவ‌து ப‌ரிந்துரைக்கும் வாய்ப்பும் இல்லாம‌ல் இல்லை. எது எப்ப‌டியானாலும் சித்தூர் ம‌ட்டும் அதிர்ஷ்ட‌க‌ட்டையாக‌வே இருக்கிற‌து. 1980 க‌ளில் த‌விர‌ வேறெப்போதும் மாநில‌த்தில் ஆளும் க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர் எம்.எல்.ஏ.வாக‌ இருந்த‌தே இல்லை.


த‌ற்போது வெற்றிவாய்ப்பை இழ‌ந்தாலும் முத‌ல்வ‌ருட‌ன் சி.கே பாபுவுக்கு இருக்கும் நெருக்க‌த்தால் சித்தூருக்கு யோக‌ம் அடித்திருக்க‌லாம். அத‌ற்கும் அடுத்த‌டுத்து சி.கே மீது நிக‌ழ்ந்த‌ தாக்குத‌ல்க‌ள் த‌டையாகிவிட்ட‌ன‌. பார்ப்போம்.

சித்தூருக்கு ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம் வ‌ர‌வேண்டும். தொழிற்சாலைக‌ள் வ‌ர‌வேண்டும். இந்த‌ ப‌த்து வ‌ட்டி க‌லாச்சார‌ம் ஒழிய‌ வேண்டும் அத‌ற்கு ஆண்ட‌வ‌ன் தான் ம‌ன‌சு வைக்க‌ வேண்டும்.

Tuesday, February 12, 2008

ஒரு பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டம் தான்

சத்தியமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும்!

இதெல்லாம் அரசு லெட்டர் ஹெட்டில் போட்டுக் கொள்ள (மட்டும்) சொல்லப்பட்டவையல்ல ! நான் ஒன்றும் மகானில்லை. அற்பன். ஆனால் என் வாழ்வில் நான் காப்பாற்றிய காலணா சத்தியமே என் எதிரிகளை எரித்துப் போட்டதை கண்கூடாக பார்த்து வருகிறேன். இத்தனைக்கும் கடந்த 3 வருடங்கள் முதல் இன்றைய நிமிடம் வரை என் கான்ஷியஸ் க்றிஸ்டல் க்ளியராக கூட இல்லை. இருந்தும் சத்தியம் எரிக்கிறது. சமயத்தில் என்னை கூட. என் கான்ஷியஸ் உச்சத்தில் இருந்தது என் உழைப்பை உறிஞ்சி ,என் ஜனநாயக உரிமையை பறிக்க பார்த்த ஒரு பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டம் தான்.நடந்ததை கூறினால் நம்ப கூட முடியாது. அவன் பெரிய டுபாகூர் பார்ட்டி. ஒவ்வொரு பத்திரிக்கையிலும் சில காலம் வேலை செய்ய வேண்டியது,லட்சக் கணக்கில் கையாட வேண்டியது பிறகு நிர்வாகத்தின் மீதே காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டியது , பின் மற்றொரு பத்திரிக்கையில் சேரவேண்டியது இது தான் அவன் வேலை.


ஈதிப்படியிருக்க அவன் என் க்ளையண்டாகி ஜோதிட ஆலோசனை பெறுவது வழக்க மாயிற்று. ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார ஒரு உதவியாளர் தேவை என்றும், மாதா மாதம் சம்பளம் தான் கொடுப்பதாகவும் கூறினான். எனக்கு ஏற்கெனவே எழுத்தில் ஆர்வம் அதிகம். நானே வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன்.(அந்த நிருபனை பற்றி மட்டுமல்ல பத்திரிக்கையுலக மோசடிகள் குறித்தும் தான்) அவ‌னே என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை. அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.

பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌து ஆச்சாரி,ஆச்சாரிக்கும் என‌க்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.
உட‌னே ஆந்திர‌பிர‌பால‌ருந்து போன்.." போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். ஆச்சாரி ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றொம்" என்றார் மேனேஜ‌ர்.

(தொட‌ரும்)

Monday, February 11, 2008

A site for CK.Babu




Please visit the site for CK Babu who is been praised as Chittoor Tiger. If u r the native of Chittoor Town and a fan of CK Babu U can contribute Ur ideas about CK Babu

நான் ஏன் பத்திரிக்கை ஆரம்பித்தேன்..!

நான் ஏன் பத்திரிக்கை ஆரம்பித்தேன்..!

பத்திரிக்கை என்று நான் ஆரம்பித்தது 1987 ல். அதன் பெயர் புதுசு. அதன் ஒரே போஷகர் என் தந்தை. இன்றைய பிரபல தெலுங்கு திரைக்கதாசிரியர் ஜனார்தன் மஹர்ஷி தெலுங்கிலும் ஆரம்பிக்கும்படி குழப்பி விட்டு விட் நவதா பிறந்தது. கோயில் நோட்டீஸ் தனமாய் ஆரம்பித்து கல்கண்டு சைஸுக்கு வளர்ந்து பரிதாபமாய் உயிர் விட்டது.

பின்பு எத்தனையோ குறை பிரசவங்கள்,தொடர்புகள் (மலையாள சினிமாத்தனமானதல்ல).அடுத்து ஆந்திரபிரபா நிருபனாக 2 வருடம் வேலை செய்ததில் பத்திரிக்கையுலகின் சகதிகள் அறிமுகமாகி, ஒரு வித அவுட்லெட்டு தேடி தான் பத்திரிக்கை ஆரம்பித்தேன்.

நான் இந்தியன் பொலிடிக்கல் க்ளோசப் என்ற பெயரில் ஒரு மாதமிருமுறை பத்திரிக்கையை ஆரம்பித்து 2 வருடங்களாக நடத்தி வருகிறேன்.(மகள் உதவியுடன்). கடந்த 2 வருடங்களாக என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம்,ஜோதிடம்,வாஸ்து,ஆன்மீகம் இத்யாதி மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த இந்த‌ பத்திரிக்கையில் சித்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.சி.கே.பாபுவின் ரசிகர்கள் கடந்த இதழில் 4 பக்கங்களுக்கும் ஒரேயடியாய் விளம்பரம் கொடுத்து அசத்தினர். இதையடுத்து இந்தியன் பொலிடிகல் க்ளோசப் தன் பெயருக்கு ஏற்ற விதத்தில் மாற்றம் பெற்று விட்டது. இது சர்வ நிச்சயமாக தெய்வச்செயல் தான். இந்த ப்ராசஸ் அடுத்த ஒன்னரை வருடங்களுக்கு தொடர்ந்தால் தூள் தான். பொருளாதார பிரச்சினைகள் இல்லாது மக்களுக்கு உண்மையிலேயே உபயோகமான விஷயங்களை தரலாம்.

Sunday, February 10, 2008

40 வ‌ய‌து முதிர்க‌ன்னியின் முத‌ல் கூட‌ல் இது.

இலக்கியம் என்பதே கேள்வி/பதில்தான்
எல்லா இலக்கியங்களும் ஒன்று கேள்வி எழுப்புகின்றன‌
அல்லது பதில் தருகின்றன.

இலக்கியம் என்பது வியப்பதாக இருக்கும்.
ஒன்று படைப்பின் நேர்த்தியை அல்லது
படைப்பின் அவலத்தை

ப‌திவு செய்வ‌தாய் இருக்கும்.
ஒன்று படைப்பின் நேர்த்தியை அல்லது
படைப்பின் அவலத்தை
ப‌திவு என்றால் உட‌லுற‌வுக்கு பின்
அந்த‌ பெண்ணின் முலை மீது முத்தாய் நின்ற‌
க‌ண்ணீர் துளியையும் சேர்த்தே!

க‌விதை சுருங்கினால் அழ‌கு
ம‌னித‌ர் ம‌ன‌ம் விரிந்தால் அழ‌கு

சாமானிய‌னாய் புற‌ப்ப‌ட்டு
ச‌ரித்திர‌மாய் ந‌டை போடுவ‌தை
என்னால் உண‌ர முடிகிற‌து.
என் வாழ்வில் அன்று தொட‌ர்ப‌ற்ற‌வையாய்

தோன்றிய‌ ச‌க‌ல‌த்துக்குமிடையே ஒரு
ஒத்திசைவை உண‌ர‌ முடிகிற‌து.
இந்த‌ ச‌ரித்திர‌ம் ஏற்கென‌வே எழுத‌ப்ப‌ட்டு
அர‌ங்கேறி வ‌ருவ‌தை
அறிந்து கொண்டேன்.

மிச்ச‌மிருப்ப‌து க்ளைமேக்ஸ் யுத்த‌ம்தான்.
அது முத‌ல் பானிப்ப‌ட் யுத்த‌மா?
அசோக‌னின் க‌லிங்க‌ போரா என்ப‌து தான் கேள்வி

நான் என் சுய‌விருப்ப‌த்தின் பேரில் இந்த‌ பூமி கிர‌க‌த்துக்கு
சுற்றுலா வ‌ந்த‌வ‌ன்.
முன்னொரு கால‌த்தில் நான் இந்த‌ கிர‌க‌த்தின் குடிம‌க‌னாய்
வாழ்ந்திருக்க‌லாம். அந்த‌ வாழ்வின் மிச்ச‌ங்க‌ள்
என் ஆழ்ம‌ன‌தில் எச்ச‌ங்க‌ளாக‌ இருக்க‌லாம் .
என்றாலும் என் த‌ன்னுண‌ர்வு உச்ச‌த்திலிருக்கும் இந்த‌ நொடியில் அடித்து சொல்கிறேன் நான் முடிக்க‌ வேண்டிய‌ க‌ண‌க்கு ஏதுமில்லை..
இங்கெவ‌ரோடும் பிண‌க்கும் ஏதுமில்லை.

நான் விருட்ச‌மாக‌ விஸ்வ‌ரூப‌ம் எடுக்கா விட்டாலும் வீணில்லை
நான் விதையாக‌த்தான் விழுந்திருக்கிறேன் என்று உண‌ர்ந்து கொண்டேன்
இது போதும் இந்த‌ பிற‌விக்கு.


அண்ட‌வெளியின் அக‌ன்ற‌ பாத்திர‌த்து அமுத‌ம்
என‌க்குள் சொட்டுவ‌தை உண‌ர்ந்த‌தே போதும்
ம‌று நொடி என் த‌ன்னுண‌ர்வு த‌ள்ளாட‌லாம்/
மீண்டும் அற்ப‌ எண்ண‌ங்க‌ள் என் ம‌ன‌தில் நிழ‌லாட‌லாம்.

இந்த‌ தின‌ம்,இந்த‌க‌ண‌ம் நான் என்னை ஒப்புக்கொடுத்தேன்
‌ ப‌டைப்பின் ப‌ர‌ம ர‌க‌சிய‌ங்க‌ள் குறித்து
என‌க்கு துப்பு கொடுத்த‌ தூய‌ மாயா ச‌க்திக‌ளுக்கு
என் வ‌ண‌க்க‌ம்.
ம‌றுக‌ண‌ம் ம‌றைய‌லாம் இந்த‌ இண‌க்க‌ம்.
நாளைய‌ என்னை இன்றைய‌ என்னுட‌ன்
ஒப்பிட்டால் கெட‌லாம் தூக்க‌ம்

இவ‌ர்க‌ளோடு என்னை ஒப்பு நோக்க‌ நானே இறைவ‌ன்.
அவ‌ன் அருள் நானே

நான் ம‌றை ஓதும் ம‌றை பொருள் நானே

நான் ஒரு க‌ன‌வு க‌ண்டேன்
அந்த‌ க‌ன‌வை ந‌னவாக்க‌ திட்ட‌மிட்டேன்.
உயிர்த்திருக்க‌வே உண‌வெடுத்தேன்
க‌ள‌வும் க‌ற்று ம‌ற‌ந்தேன்
ப‌ல‌வும் பார்த்து துறந்தேன்

அவ‌ன் இருப்ப‌தை க‌ண்டு கொண்டேன்
விண்ட‌வ‌ரில்லை என்ற‌ வாக்கை வாக் அவுட் செய்விக்க‌
க‌ண்ட‌தை சூச‌க‌மாய் க‌விதையில் கூற‌ முய‌ன்றேன்.

அப்ப‌ட்ட‌மாய் போட்டுடைக்க‌ நான் ரெடி
தாங்கிக் கொள்ள‌ இவ‌ர்க‌ள் ரெடியா?

இந்த‌ க‌ண‌ம் என் ம‌ன‌ம்
பிர‌ப‌ஞ்ச‌ ம‌ன‌த்தோடு சேர்ந்து பாடும் டூய‌ட் இந்த‌ க‌விதை

40 வ‌ய‌து முதிர்க‌ன்னியின் முத‌ல் கூட‌ல் இது.
உயிர்க‌ளின் பால் என்னில் வ‌ள‌ர்ந்த‌ கருணை
எவ‌ரையும் உயிர்ப்பிக்காதிருந்திருக்க‌லாம்.
ஆனால் அது என்னை உயிர்ப்புட‌ன் வைத்திருக்கிற‌து.

என் தாய் என் தாய் தானே த‌ர‌ணியாகி,
அத‌னை த‌ரித்த‌ தார‌ணியாய் கார‌ணியாய்
ஒற்றைக் கொசுவாய் ரீங்க‌ரிக்கும் ஓசை ஓங்கார‌மாய்
என் செவி சேர‌ என் உட‌ல் சோர்ந்திருப்பினும்
உயிரில் ஊறுது புது ச‌க்தி

Saturday, February 9, 2008

வெற்றிகரமான(?) 300 ஆவது பதிவு: ம‌னித‌ர்க‌ள் வெவ்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டைத்தான்

எனது தமிழ்வாசம், கவிதை07 வலைப்பூக்களில் பதித்த பதிவுகளின் எண்ணிக்கைப்படி இது 300 ஆவது பதிவு. எண்ணிக்கையில் இரு ...ம் கிடையாது. என் இத்தனை பதிவுகளுக்கும் அடிநாதம் ஒன்றே ! மேகிங் திஸ் ப்ளானட் சம் வாட் பெட்டர்..

இத்த‌னை ப‌திவுக‌ளில் நான் சொன்ன‌வ‌ற்றின் சாராம்ச‌த்தை இங்கு த‌ருகிறேன். இந்த‌ ப‌டைப்பே ஒரு விப‌த்து. ம‌னித‌ வாழ்வு அக்மார்க் விப‌த்து. ஒரு எல‌க்ட்ரானிக் உப‌க‌ர‌ண‌த்தில் ஆன்,ஆஃப் ஸ்விட்ச் இருப்ப‌து போல் ஒவ்வொரு உயிரிலும் உயிர் வாழும் இச்சையும்,த‌ற்கொலை இச்சையும் சேர்ந்தே உள்ள‌ன‌. ம‌னித‌ர்க‌ள் வெவ்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டைத்தான். 1.கொல்வ‌து 2.சாவ‌து. இவை இர‌ண்டுமே செக்ஸ்,மற்றும் ப‌ண‌த்தில் கைகூடுவ‌தால் தான் ம‌னிதனுக்கு செக்ஸ் ம‌ற்றும் ப‌ண‌த்தின் மீது இத்த‌னை காத‌ல்.

முக்தி என்ப‌து என்ன? எண்ண‌ங்க‌ள் இற‌த்த‌லே முக்தி. செக்ஸில் ஆர்காச‌ம் அடையும்போது எண்ண‌ங்க‌ள் இற‌க்கின்ற‌ன‌. ஒரு செக‌ண்ட் ப்ளாக் அவுட் ஏற்ப‌டுகிற‌து. இதை மீண்டும் மீண்டும் பெற‌த்தான் ம‌னித‌ன் செக்ஸில் ஈடுப‌டுகிறான்.

உயிர்வாழும் இச்சை ப‌டைப்புக்கு தூண்டுகிற‌து. ப‌டைப்பால் ம‌னித‌ன் பார்ஷிய‌லாக‌ இற‌க்கிறான். டூ இன் வ‌ன். ம‌னித‌ உட‌லில் இருப்ப‌து ஒரே ச‌க்தி தான். அது காம‌ ச‌க்தி. அவ‌ன‌து செய‌ல்பாடுக‌ளை பொருத்து அது யோக‌ ச‌க்தியாக‌ மாறுகிற‌து.

செக்ஸில்,பிள்ளைகள் பெறுவதில் முழுமையாக செல‌வ‌ழித்து விட‌ முடியாத‌ அள‌வுக்கு ஆண்மை உள்ள‌வ‌னே ப‌டைப்பு தொழிலுக்கு வ‌ருகிறான். அங்கும் முழுமையாக செல‌வ‌ழியாத‌ காம‌ ச‌க்தி தான் அவ‌னை முக்திக்கு தூண்டுகிற‌து.


ப‌ண‌ம்,செக்ஸ் உத‌வியால் ஒரு ம‌னிதன் முழுமையாக‌ சாக‌வும் முடியாது ,எதிராளியை முழுமையாக‌ கொல்ல‌வும் முடியாது. தியான‌த்தால் இவைஇர‌ண்டுமே சாத்திய‌ம். இந்த‌ உண்மையை அனைவ‌ரும் அறிய‌ முத‌ற்க‌ண் அவ‌ர்க‌ளுக்கு செக்ஸும்,ப‌ண‌மும் த‌ங்கு த‌டையின்றி கிடைக்க‌ வேண்டும். இவற்றை (ஒரு ஜோதிட ஆய்வாளனாக கிர‌க‌ங்க‌ளின் பாதிப்புகளை, அவை வேலை செய்யும் விதத்தை அறிந்த‌வ‌ன் என்ற‌ முறையில்) ம‌க்கள் முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் பெற‌ உத‌வுவ‌தே என் ப‌திவுக‌ளின் நோக்க‌ம்.

மனித‌னுக்கு ம‌ர‌ண‌ம் என்றால் ப‌ய‌ம். இருட்டு ம‌ர‌ண‌த்துக்கு சிம்ப‌ல். த‌னிமை ம‌ர‌ண‌த்துக்கு சிம்ப‌ல். இதனால் தான் ராத்திரியில் ப‌வ‌ர் க‌ட்டானால் கூட‌ மின் நிலைய‌ங்க‌ளுக்கு போன் மேல் போன். இத‌னால் தான் 6 முத‌ல் 60 வ‌ய‌து வ‌ரை ம‌னித‌ன் காத‌லித்துகொண்டே இருக்கிறான். நீயே உன் ஒளியாக‌ இரு என்றான் புத்த‌ர். எத்த‌னை பேரால் இப்ப‌டி வாழ‌ முடியும். ஏழ்மையும்,த‌னிமையும் ம‌னித‌னை வெருட்ட‌ ஆர‌ம்பிப்ப‌தால் தான் ம‌க்க‌ள் ப‌ண‌ம் ப‌ண‌ம் என்று ப‌ற‌க்கிறார்க‌ள்.ஈவ் டீசிங்,க‌ற்ப‌ழிப்புக‌ள்,க‌ள்ள‌ உற‌வுக‌ள் எல்லாமே இத‌ன் விளைவுதான்.

இத‌ற்காக‌த்தான் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்தை தீட்டினேன். அத‌ன் அம‌லுக்கு 1986 முத‌லாக‌ உழைத்து வ‌ருகிறேன். பாலிய‌ல் தொழிலுக்கு ச‌ட்ட‌ அங்கீகார‌ம் வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்று தொட‌ர்ந்து குர‌ல் கொடுத்து வ‌ருகிறேன்.

த‌ன‌து அடிம‌ன‌தில் உள்ள‌ ,அடிப்ப‌டை கோரிக்கைக‌ள் (சாவ‌து,சாவ‌டிப்ப‌து) செக்ஸிலோ,ப‌ண‌த்தாலே நிறைவேறாது, அது தியான‌த்தின் மூல‌ம் ம‌ட்டுமே சாத்திய‌ம் என்று ம‌னித‌ன் அனுபவ பூர்வமாக உண‌ர‌ வேண்டுமானால் ப‌ண‌ம்,செக்ஸ் முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் கிடைத்தாக‌ வேண்டும். என் நாடு சித்த‌ர்க‌ள் சூட்சும‌ வ‌டிவில் இன்றும் வாழும் பொன்னாடு. இந்நாட்டு ம‌க்க‌ள் அனைவ‌ருமே ஞான‌ம் பெற‌வேண்டும். அத‌ற்கு முத‌ல் ப‌டியாக‌
ப‌ணம் மற்றும் செக்ஸை முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் பெற‌வேண்டும்.
இத‌ற்காக‌த்தான் 300 ப‌திவுக‌ள்..

Friday, February 8, 2008

எம்.ஜி.ஆர் காங்கிர‌சுட‌ன் கூட்டு வைத்து தில்லிக்கு காவ‌டி எடுத்த‌வ‌ர். என்.டி.ஆர் ?ஊஹூம்.

ஆந்திர அரசியலும் தமிழக அரசியலும்

ஆந்திர அரசியல் பற்றிய ஆர்வம் எனக்கு ஏற்பட்டதே என்.டி.ஆர் அரசியல் பிரவேசத்திற்கு பிறகுதான். தமிழக பத்திரிக்கைகள் என்.டி.ஆரை ஆந்திர எம்.ஜி.ஆர் என்று குறிப்பிட்டாலும் என்.டி.ஆருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஆறு வித்யாசங்கள் ..இல்லையில்லை ஆறு நூறு வித்யாசங்கள் உண்டு. எம்.ஜி.ஆர் பற்றி நீங்கள் முழுக்கவே அறிந்திருப்பீர்கள் என்வே இந்த ஒப்பீட்டில் என்.டி.ஆர் குறித்த விஷயங்களை மட்டும் கூறுகிறேன் . நீங்கள் இவற்றை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

1.எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர்.(என்.டி.ஆர் தெலுங்கு தேசத்தின் மண்ணின் மைந்தர்)
2.எம்.ஜி.ஆர் நாடக நடிகராய் ஆரம்பித்து சினிமாவுக்கு வந்தவர். என்.டி.ஆர் டைரக்ட் சினிமா.
3.எம்.ஜி.ஆர் கைநாட்டு. என்.டி.ஆர் பி.ஏ ப‌ட்ட‌தாரி. வ‌ருவாய்த்துறையில் ரிஜிஸ்ட்ராராக‌ ப‌ணிபுரிந்த‌வ‌ர்.

4.எம்.ஜி.ஆர் ஆர‌ம்ப‌த்தில் காங்கிர‌ஸ் வாதி.என்.டி.ஆருக்கு அத‌ன் வாச‌னை கூட‌ கிடையாது. பி.வி. தெலுங்க‌ர் என்ற‌ ஒரே கார‌ண‌த்துக்காக‌ ஒரு எம்.பி தொகுதியை அவ‌ருக்கு பிச்சையிட்டார்.

5.எம்.ஜி.ஆர் பெரியார்,அண்ணா,க‌லைஞ‌ர் ஆகியோரின் த‌லைமையை ஏற்று செய‌ல்ப‌ட்ட‌வ‌ர்.(பின்பு க‌லைஞ‌ருக்கே ஆப்பு வைத்த‌து வேறு க‌தை). என்.டி.ஆர் சுய‌ம்புவாய் தோன்றிய‌வ‌ர்.

6.எம்.ஜி.ஆர் காங்கிர‌சுட‌ன் கூட்டு வைத்து தில்லிக்கு காவ‌டி எடுத்த‌வ‌ர். என்.டி.ஆர் ?ஊஹூம்.

7.எம்.ஜி.ஆர் நடிகராக இருந்த காலத்திலேயே நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர். அரசியலுக்கு வந்த பிறகும் இது தொடர்ந்தது. உம்.ஜெயலலிதா,லதா,வெண்ணிற ஆடை நிர்மலா. என்.டி.ஆர் ஊஹூம்.

8.எம்.ஜி.ஆரின் பேச்சுத்திற‌மை,வாக்குவ‌ன்மை யெல்லாம் க‌ட‌ன் வாங்கிய‌தே.ஆனால் , என்.டி.ஆர் சிங்கிள் ஹேண்ட் அட் எனி கார்ன‌ர்.

9.எம்.ஜி.ஆரின் இமேஜ் என்ப‌து ஆர‌ம்ப‌ம் முத‌லே க‌வ‌ன‌மாக‌,ஹிட‌ன் அஜெண்டாவுட‌ன் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்ட‌து. ஆனால் என்.டி.ஆர் த‌ம் திரைப்ப‌ட‌ங்க‌ளில் சிக‌ர‌ட்,த‌ண்ணி,க‌ஞ்சா,ஸ்ம‌க்ளிங்,க‌ற்ப‌ழிப்பு காட்சிக‌ளில் கூட‌ ந‌டித்திருக்கிறார். அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌ பிற‌கும் மொட்டை த‌லையுட‌ன் ப‌த்திரிக்கை கேமிராக்க‌ளுக்கு காட்சிய‌ளித்த‌வ‌ர்,

10.எம்.ஜி.ஆர்,ஜெய‌ல‌லிதா உற‌வு எந்த‌ வ‌கையான‌தோ அது எம்.ஜி.ஆருக்கே வெளிச்ச‌ம். ஆனால் என்.டி.ஆர் தான் விரும்பிய‌ ல‌ட்சுமி பார்வ‌தியை துணிவுட‌ன் ம‌ண‌ந்தார். ம‌க்க‌ளும் அதை அங்கீக‌ரித்து மீண்டும் முத‌ல்வ‌ராக்கினார்க‌ள். பெரியாரே ம‌ணிய‌ம்மையை ம‌ண‌ந்து பெரும் அவ‌திக்குள்ளான‌து இங்கு குறிப்பிட‌த்த‌க்க‌தாகும்.

13/4/1987

IPC 2 page

IPC 1 page

IPC 4 page

IPC 3 page


Indian political close up specail issue released on 26th of January 2008 sponsered by Chittoor Tiger CK Babu Fans

Our visiting card

ஒரு ..ம் செய்ய முடியாதுனு தெரிஞ்சிட்டா கழண்டுக்கறேன்

மக்கள் ஆதரவு எனக்கு கிட்டிய தருணங்கள் மிக்ச்சிலதான். முதல் முதலில் போட்டியிட்ட கல்லூரி தேர்தல்களில் 468 வாக்குகள் பெற்றது நினைவிருக்கிறது. வாக்குப் பதிவு ஆரம்பிக்க அரை மணி நேரம் இருக்கும் போது கல்லூரி ப்ரேயர் கிரவுண்டில் மைக்கில் பேச 5 நிமிடம் அவகாசம் தரப்பட்டது. அதுவரை வெற்றி இத்யாதியெல்லாம் என் மைண்டில் அறவே கிடையாது. ச்சும்மா அப்படி லொள்ளு பண்ணுவதற்காகவே நாமினேஷன் போட்டிருந்தேன்.அப்போதைய எம்.பி. வீட்டில் நீலப்படம் காட்டப்பட்டது, ஆடு ,கோழி,மது எல்லாம் பரிமாறப்பட்டது. ஆள் கடத்தல் சி.கே.பாபு வரை பஞ்சாயத்து எல்லாம் நடந்திருந்தது. நான் என்னவோ கல்லூரி கார்டனில் அனந்த சயனத்தில் படுத்த படி வாக்காளர்களை அழைத்து , மதித்து வந்தவர்களுக்கு மட்டுமே பாம்லெட் கொடுத்துக் கொண்டிருந்தேன். "எனக்கே போடுங்க" என்று கூட கேட்டதில்லை.

மைக்கை பிடித்தது தான் தாமதம். போடியம் உயரத்துக்கு நான் பார்வையாளர்களுக்கு தென்படுவது துர்லபம் என்று புரிந்து விட்டது. எனவே லொள்ளு செய்து மைக்கை தனியே நகர்த்த செய்து பிடித்து கொண்டு பேசினேன்.

அப்படி என்னதான் பேசினேன் என்றால் நினைவுக்கு வரும் பயிண்டுகளை பட்டியலிடுகிறேன்:

1. என்னடா வெய்ய காலத்துல 4 நாள்,குளிர் காலத்துல 4 நாள் தான் காலேஜுக்கு வந்திருப்பான் .இவெனெல்லாம் எலக்ஷன்ல நிக்கறதான்னு நினச்சுராதிங்க ,க்ளாஸுக்கு வரலன்னா என்ன கார்டன்வரைக்குமாவது வந்திருக்கேன்ல்

2.எனக்கு ஓட்டு போட்டா உங்களுக்கு அதை செய்வேன் இதை செய்வேன்னு டுமீல் விடமாட்டேன். பார்ப்போம் ஜெயிக்க வைங்க ..என்ன செய்ய முடியுது பார்த்து நிச்சயமா செய்யறேன். ஒரு ..ம் செய்ய முடியாதுனு தெரிஞ்சிட்டா கழண்டுக்கறேன்

ஆனால் பாருங்க 468 வோட்டு. வருடம் 1987. முதல் மாலை இன்றைய புகழ்பெற்ற ஆடிட்டர் ஆர்.ரமேஷ் பாபு. முடிவு?

3 வோட்டுல ..சத்தியமா 3 வோட்டுல தோத்துட்டன்.

செவ் தோஷ ஜாதகர் சுத்தஜாதகரை மணந்தால் மரணமா?

தோஷங்கள்:
தோஷங்களில் மிக முக்கியமானவை செவ்வாய்,நாக தோஷங்களாகும். செவ்வாய் தோஷத்தை தெலுங்கர் குஜ தோஷம் என்றும், ஆங்கிலத்தில் மங்கலிக் என்றும் குறிப்பிடுகிறார்கள். நாக தோஷத்தை சர்ப்ப தோஷம் என்றும் கூறுவர்.

செவ்வாய் தோஷம்:
ஜனன ஜாதகத்தில் லக்னம் முதற்கொண்டு எண்ணும்போது செவ்வாய்   2, 4, 7, 8, 12 ல் செவ் இருப்பதை தோஷம் என்று சொல்கிறார்கள்.

பரிகாரம்:
தங்கள் உடல் நிலையை பொருத்து ரத்ததானம் செய்யவும்.

ச‌ர்ப்ப‌தோஷ‌ம்:

ஜனன ஜாதகத்தில் லக்னம் முதற்கொண்டு எண்ணும்போது ராகு அல்லது கேது 3,6,10,11,4,12 தவிர வேறெங்கு இருந்தாலும் அது சர்ப்ப‌ தோஷம்.

ப‌ரிகார‌ம்:
வெளிநாட்டு மொழி ஒன்றை க‌ற்க‌வும்

ம‌ர‌ண‌ம்:
தோஷ‌முள்ள‌வ‌ர்க‌ள் தோஷ‌மில்லாத‌வ‌ர்க‌ளை ம‌ண‌ந்தால் ம‌ர‌ண‌ம் ஏற்ப‌டும் என்ப‌தெல்லாம் ஓவ‌ர்.ம‌ர‌ண‌த்தை நிர்ண‌யிப்ப‌து அவ‌ர‌வ‌ர் ஜாத‌க‌ங்க‌ளே. ம‌ண‌க்கும் பெண்,அல்ல‌து ஆணின் ஜாத‌க‌த்தில் உள்ள‌ தோஷ‌ங்க‌ள் ம‌ட்டுமே ம‌ர‌ண‌த்தை த‌ந்து விடாது.


திரும‌ண‌ப்பொருத்த‌ங்க‌ள்:
திரும‌ண‌ப்பொருத்த‌ங்க‌ளை 3 முறைக‌ளில் பார்க்கிறார்க‌ள். 1.ஆண்,பெண் ஜாத‌க‌ங்க‌ளை வைத்து பார்ப்ப‌து 2.ஆண் பெண் ஜ‌ன்ம‌ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளை வைத்து 3.ஆண்,பெண் பெய‌ர்க‌ளை வைத்து பார்ப்ப‌து.

இதில் முத‌ல் முறை அறிவிய‌ல் பூர்வ‌மான‌து. இதில் ஜாத‌க‌ங்க‌ளை பொருத்திப் பார்க்கும்போது குரு,சுக்கிர‌ ப‌ல‌ம் முக்கிய‌ம். ம‌றுதார‌ம் உள்ள‌தா என்றும் பார்க்க‌ வேண்டும்.தோஷ‌ங்க‌ள் இருந்தால் இருவ‌ருக்கும் இருக்க‌ வேண்டும். அல்ல‌து இருவ‌ருக்கும் இருக்க‌ கூடாது.(இது பெரிய‌வ‌ர்க‌ள் சொன்ன‌து.)

இர‌ண்டாவ‌து முறை 35 ச‌த‌வீத‌ம் அறிவிய‌ல் பூர்வ‌மான‌து.சாதார‌ண‌மாக‌ 10 பொருத்த‌ங்க‌ள் பார்க்க‌ப்ப‌டுகிற‌து. இதில் ர‌ஜ்ஜு,நாடி மிக‌ முக்கிய‌ம். ர‌ஜ்ஜு, நாடி உட்ப‌ட‌ பாதிக்கு மேற்ப‌ட்டால் திரும‌ண‌ம் செய்ய‌லாம் என்ப‌து பெரியோர் வாக்கு. என்னை பொருத்த‌வ‌ரை ஜாத‌ங்க‌ள் பொருந்தி,ர‌ஜ்ஜு,நாடி ம‌ட்டும் இருந்தாலும் போதுமான‌து.

மூன்றாவ‌து பெய‌ர்க‌ளை வைத்து பார்ப்ப‌து. அந்த‌ பெய‌ர்க‌ள் அவ‌ர‌வ‌ர் ஜாத‌க‌ப்ப‌டி வைக்க‌ப்ப‌ட்டிருந்தால‌ன்றி இந்த‌ முறை முட்டாள் த‌ன‌மான‌து. ஜாத‌க‌ பெய‌ர்க‌ளுக்கு பொருத்த‌ம் பார்க்கும் போது அது 35 ச‌த‌வீத‌ம் வ‌ரை ச‌ரியான‌தாகும். அவ்வாற‌ன்றி செல்ல‌ பெய‌ர்க‌ள்,அப்போதைக்க‌ப்போது வைத்து பார்க்கும் பெய‌ர்க‌ள் எல்லாம் 10 ந‌யா பைசாவுக்கு கூட‌ உத‌வாது.

Thursday, February 7, 2008

சிர‌ஞ்சீவி மீது ஆ.வி,.க்கு திடீர் பாச‌ம் கொட்டுவ‌து ஏன்?

சிர‌ஞ்சீவி மீது ஆ.வி,.க்கு திடீர் பாச‌ம் கொட்டுவ‌து ஏன்? ஆந்திர அரசியல் பற்றிய ஆனந்த விகடன் விமர்சனம்

ஆந்திர அரசியலுக்கு வக்காலத்து வாங்க இந்த பதிவை இடவில்லை. அதே நேரத்தில் சிரஞ்சீவிக்கு ஜால்ரா போடுவதானால் போட்டு விட்டு போக வேண்டும் அதை விடுத்து ஆந்திர அரசியல்,சினிமா எல்லாவற்றையும் வம்புக்கு இழுத்ததன் பின்னணி என்ன என்பதை ஆராய்வதே இந்த பதிவின் நோக்கம். புத்தக கண்காட்சியில் ஒதுக்கப்பட்ட ஸ்டால்களோடு தம் செல்வாக்கால் இன்ன பிற ஸ்டால்களையும் ஆக்கிரமித்த விகடனுக்கு, என் படைப்புகளை குறித்த உம் முடிவை தெரிவிக்காமல் உமது விளம்பரங்களை எனக்கு தபாலிலும்,இமெயிலிலும் அனுப்புவது மன உளைச்சலை தருகிறது அனுப்பாதீர் என்று பன் முறை கூறியும் திருத்திக் கொள்ளாத விகடனுக்கு ஆந்திர அரசியலை ,சினிமாவை விமர்சிக்கும் தகுதி உண்டா என்பதையும் இந்த பதிவில் ஆராயவேண்டி இருக்கிறது.

இந்திய அரசியலே கேடு கெட்டு போய் கொண்டிருக்கும்போது ஆந்திர அரசியல் மட்டும் மணக்கிறது என்று விதண்டாவாதம் செய்யும் விருப்பமில்லை. இருந்தாலும், நான் தமிழனாகவே இருந்தாலும்,ஆந்திரன் என்ற உணர்வில் எமது அரசியல் தமிழக அரசியலை விட தட்டு கெட்டு விடவில்லை என்று சொல்லியாக வேண்டியிருக்கிறது.

ஆந்திர சட்டமன்றத்தில் எந்த பெண்ணுக்கும் துகில் உரியப்படவில்லை, ஒரு தலைவரின் "ஆள்" என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பெண் அரசாண்டதுமில்லை. லட்சுமி பார்வதி என்.டி.ஆரின் சட்டப்பூர்வமான மனைவியாக இருந்தாலும் மக்கள் அவரை தலைவியாக அங்கீகரிக்கவில்லை. என்.டி.ஆரும் நடிகர் தான் . ஆனால் எம்.ஜி.ஆரை போல் மற்றொரு கட்சியின் நிழலில் வளர்ந்து முதல்வராக வில்லை. என்டிஆர் எம்ஜி ஆரை போல் முதல்வராக வேண்டும் என்ற ஹிடன் அஜெண்டாவுடன் இமேஜை பூஸ்ட் அப் செய்ததுமில்லை. சரி குப்பையை கிளறுவானேன். எல்லா அரசியலும் சாக்கடை தான் இதில் ஆந்திர அரசியல் ஒன்றும் விதிவிலக்கில்லை.

நடிகர் ராஜசேகர் தன் ரசிகர்களால் தாக்கப்பட்ட உடன் சிரஞ்சீவி அவர் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்டாராம். இது அரசியல் அற்புதமாம். அட‌ இழ‌வே! மேற்ப‌டி செய்தி வெளியான‌துமே சிர‌ஞ்சீவியின் த‌ம்பி "தாக்கிய‌வ‌ர்க‌ள் அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ர‌சிக‌ர்க‌ள் அல்ல‌ " என்று முத்து உதிர்த்தார். ராஜ‌சேக‌ரும்,ஜீவிதாவும் சிர‌ஞ்சீவியை மீடியாவில் கிழி கிழி என்று கிழித்த‌ன‌ர். ம‌க்க‌ள் க‌ருத்து ராஜ‌சேக‌ர்,ஜீவிதா த‌ம்ப‌திக்கு அனுகூல‌மாக‌ இருப்ப‌தை உண‌ர்ந்து,வேறு வ‌ழியில்லாம‌ல்,நாளைய‌ த‌ன‌து அர‌சிய‌ல் வியாபார‌ ந‌ல‌ம் க‌ருதி ராஜ‌சேக‌ர் வீட்டுக்கு சென்றார்,ம‌ன்னிப்பு கேட்டார்.

ராஜ‌சேக‌ர் என்ன‌வோ செந்தில் ரேஞ்ஜ் ந‌டிக‌ர் போல‌வும்,சிர‌ஞ்சீவி பெருந்த‌ன்மையை காட்டி ம‌ன்னிப்பு கேட்ட‌து போல‌வும் ஆ.வி லாலி பாடியிருக்கிற‌து. என்.டி.ஆர் ச‌ந்திர‌பாபுவின் துரோக‌த்தால் ப‌த‌வி இழ‌ந்த‌ போது ம‌ன‌ உறுதியுட‌ன் இறுதிவ‌ரை அவ‌ர் ப‌க்க‌ம் நின்ற‌ ஆண்மையின் சிக‌ர‌ம் ராஜ‌சேக‌ர். சிர‌ஞ்சீவியை போல் மாம‌னாரின் த‌ய‌வில் முன்னேறிய‌வ‌ர‌ல்ல‌. எந்த‌ ஒரு பின் புல‌மும்,ப‌க்க‌ ப‌ல‌மும் இல்லாது ஜெயித்து காட்டிய‌வ‌ர் ராஜ‌ சேக‌ர். சிர‌ஞ்சீவி ஓடோடி சென்று ம‌ன்னிப்பு கேட்டிருக்கா விட்டால் காங்கிர‌ஸ் அர‌சிய‌ல் சாண‌க்கிய‌ர்க‌ள் ராஜ‌சேக‌ரை வைத்து சிர‌ஞ்சீவியை ச‌டுகுடு ஆடி விட்டிருப்பார்க‌ள்.


என் கேள்வியெல்லாம் ஒன்றே.. சிர‌ஞ்சீவி மீது ஆ.வி,.க்கு திடீர் பாச‌ம் கொட்டுவ‌து ஏன்? எவ‌னேனும் ஓய்வு பெற்ற‌ பார்ப்ப‌ன‌ அதிகாரி சிர‌ஞ்சீவியின் கிச்ச‌ன் கேபின‌ட்டில் இட‌ம் பெற்றுவிட்டானா?

Wednesday, February 6, 2008

ஜெயலலிதா குமுதத்தில் எழுதிய ஒரு தொடர்கதை பாதியில் நிறுத்தப்பட்ட கதை

ஜெயலலிதா குமுதத்தில் எழுதிய ஒரு தொடர்கதை பாதியில் நிறுத்தப்பட்ட கதை தெரியுமா? இன்று எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசு யார் என்ற விவாதம் (நாட்டுக்கு ரொம்ப தேவை!) நடந்து வரும் நிலையில் எம்.ஜி.ஆர் எப்பேர்பட்ட வில்லன் என்பதை விவரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. முகமற்ற நான் அதை விளக்குவதை விட புரட்சி தலைவி ஜெயலலிதா எழுதி பேரம் குதிர்ந்ததாலோ,பயமுறுத்தலாலோ பாதியில் நிறுத்தப்பட்ட தொடர்கதையின் சுருக்கத்தை வெளியிடுகிறேன். இதை தொடர்கதை எழுதிய ஜெயலலிதாவோ, வெளியிட்ட குமுதம் வார இதழோ மறுக்கட்டும் பார்க்கலாம்.


தொடர்கதை சுருக்கம்:

ஒரு நடிகை,ஒரு நடிகர் இருவருக்கும் உறவு ஏற்படுகிறது. நடிகைக்கு ஒரு மகள் பிறந்து அவளும் நடிகையாகிறாள். நடிகர் தான் அவளுக்கு தந்தை என்ற விஷயத்தை கூட மறந்து, மிருகத்தனமாக அவளை அடைய முயல்கிறார்.

எம்.ஜி.ஆர் த‌மிழ‌ர்,த‌மிழ‌க‌ வ‌ர‌லாற்றில் ஒரு கறை போன்றவர். அதை ஜெயலலிதா மிக நன்றாக அறிவார். அதனால் தான் எம்.ஜி.ஆரின் பெயர்,மற்றும் உருவ படத்தை அமுக்கி வைத்தார். எங்கோ இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்து கேரளத்தில் வளர்ந்து ,சமுதாயம் கைவிட்ட வர்கத்துக்காகவே தான் பிறந்ததாக அவர்களை நம்பச்செய்து தமிழகத்தை ஆண்ட எம்.ஜி.ஆரின் மறுபக்கம் என்ன என்பது அவருடன் பழகிய அனைவரும் அறிவர்.ஆனால் காலத்தின் கட்டாயம் காரணமாய் அவற்றை மறைத்து வள்ளல் அது இது என்று மாய்மாலம் செய்து வருகின்றனர்.

முரசொலியில் எம்.ஜி.ஆரின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய கலைஞர் கூட தற்போது அடக்கி வாசிப்பது இறந்து விட்ட ஒரு மனிதரை அசிங்கப்படுத்திவிடக்கூடாது என்ற மனிதாபிமானத்தால் தான்.


இதில் நான் வைர‌முத்துவின் கட்சி, ஆம் அவ‌ர் க‌விதை இதோ..

உங்க‌ள் அச்ச‌க‌ம்
எது வேண்டுமானாலும் அச்சிடுங்க‌ள்.

ஆனால் கால‌த்தின் விம‌ர்ச‌ன‌ம் உங்க‌ள்
பிண‌ங்க‌ளை கூட‌ தோண்டி எடுத்து தூக்கில் போடும்

சிரஞ்சீவியின் ஆண்மை அப்படிப்பட்டதாம்.

சிரஞ்சீவி அரசியலில் குதித்தார் என்று எவரும் செய்தி வெளியிட முடியாது, காரணம் அவர் மீன மேஷம் பார்த்து குதிப்பதற்குள் இழுக்கப்பட்டுவிட்டார். சிரஞ்சீவி என்ற சாதனையாளரின் கிராஃபை 4 காலகட்டங்களாக பிரிக்கலாம்.

முதல் கட்டம்: என்.டி.ஆர்.,ஏ.என்.ஆர் போன்ற ஜாம்பவான் கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் திரைப்பட கல்வி நிறுவனத்தில் பாடம் படித்து போராடி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த கால கட்டம்.


2 ஆவது காலகட்டம்: அந்த காலத்து அரசர்கள் பாணியில் புகழ் பெற்ற தெலுங்கு திரையுலக காமெடியன் அல்லு ராமலிங்கையாவின் மகளை மணந்து கொண்டு தனக்கென்று ஒரு லாபி ஏற்படுத்திக் கொண்டு விட்ட காலகட்டம்.


3.என்.டி. ஆர். அரசியலில் குதித்ததனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியபடி அவரது தயாரிப்பாளர்கள்,அவரது இயக்குனர்களின்,அவரது ரசிகர்களின் ஆதரவை பெற்ற கால கட்டம்.


4.கால,தேச,வர்த்தமானங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாது இனி திரை வாழ்வுக்கு மங்களம் தான் என்று முடிவு கட்டி சினை பன்றி போல் தயாராகி, 5 தங்கைகளுக்கு அண்ணனாக நடிக்க முன் வந்து விட்ட கட்டம். வெறுமனே அண்ணனாக நடித்தாலும் பரவாயில்லை , வெற்றியே ஒரே நோக்கமாய் இரட்டை அர்த்த வசனங்கள்,உவ்வே காட்சிகளில் நடித்த காலமும் உண்டு. உதாரணத்திற்கு ஒரே ஒரு காட்சியை பார்ப்போம். பழம்பெரும் பார்ப்பன நடிகை லட்சுமி மாமியார். அவருக்கு இரண்டு மகள்கள்.சிரஞ்சீவிதான் மாப்பிள்ளை. திடீர் என்று பவர் கட்டாகிறது. மீண்டும் பவர் வரும்போது 2 மகள்களுடன் ,லட்சுமியும் ஆடை கலைந்து,நிலை குலைந்து தோன்றுவார். காரணம் சிரஞ்சீவியின் ஆண்மை அப்படிப்பட்டதாம்.

கூடப்பிறந்த தம்பிக்கு நல்ல வழி காட்ட துப்பில்லாமல் ,அவர் கட்டிய மனைவியை நட்டாற்றில் விட்டு விட்டு வேறு நடிகையுடன் சேர்ந்து வாழுகிறார்.

பெற்ற‌ ம‌க‌ளின் ம‌ன‌தில் என்ன‌ இருக்கிறது என்று முன் கூட்டி அறிய‌ துப்பில்லை அவ‌ர் தில்லி வ‌ழ‌க்க‌றிஞ‌ர் உத‌வியுட‌ன் காத‌ல் க‌டிம‌ண‌ம் புரிகிறார்.

இவ‌ர‌து ட்ர‌ஸ்டுக்கு ர‌த்த‌தான‌ம் கொடுத்த‌ ர‌சிக‌னுட‌ன் சிர‌ஞ்சீவி போட்டோ பிடித்து கொள்வார்.அந்த‌ போட்டோ பிர‌தியை பெற‌ ரூ.50 செலுத்த‌ வேண்டும். என்ன‌ங்க‌டா இது தெலுங்கு தேச‌த்துக்கு பிடித்த‌ கிர‌க‌ச்சார‌ம். வீட்டு சோற்றை(த‌ண்ட‌) தின்று கூத்தாடி பெய‌ர் வாங்க‌ அவ‌ன் ட்ர‌ஸ்டுக்கு ர‌த்த‌ம் கொடுத்து ,அவ‌னுட‌ன் பிடித்த‌ போட்டோவை பெற‌ ரூ.50 செலுத்தி ..இதெல்லாம் தேவையா?

எவ‌னோ ர‌சிக‌ன் ஏல‌ச் சீட்டு க‌ம்பெனியின் லொள்ளு தாங்க‌ முடியாது த‌ற்கொலை செய்கிறான். அந்த‌ ர‌சிக‌னின் இறுதிச் ச‌ட‌ங்குக்கு சிர‌ஞ்சீவியின் த‌ம்பி போகிறார்.


சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு சிர‌ஞ்சீவியின் அபிமான‌ டைர‌க்ட‌ர் விஜ‌ய‌ பாப்பினீடு ப‌த்திரிக்கைக‌ளில் ஒரு விள‌ம்ப‌ர‌ம் கொடுத்தார். சிர‌ஞ்சீவியின் ப‌ட‌த்துக்கு அவ‌ர‌து ர‌சிக‌ர்க‌ள் க‌தை எழுத‌ வேண்டுமாம். போட்டி முடிந்த‌து. க‌தை தேர்வான‌து.வ‌ருட‌ம் ப‌ல‌வான‌து. ப‌ட‌ம் ம‌ற்றும் வெளிவ‌ர‌வில்லை.


எங்க‌ள் ஊர் ப‌ஸ் அதிப‌ர்,ப‌ழ‌ம் பெரும் த‌யாரிப்பாள‌ர் ஷ‌ண்முக‌ம் செட்டியார் வ‌யிற்றெரிச்ச‌லை சிர‌ஞ்சீவி எப்ப‌டியெல்லாம் கொட்டிக் கொண்டார் என்ப‌தை வேறு ஒரு ப‌திவில் சொல்கிறேன்.

இந்த‌ பெரிய‌ ம‌னித‌ர் அர‌சிய‌லில் குதிப்பாராம். முத‌ல்வராவாராம். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் வாயில் விர‌ல் போட்டு கொண்டு வேடிக்கை பார்ப்பார்க‌ளாம்.

Monday, February 4, 2008

வித்யாசங்கள் சிறுகதையின் ஸ்கான்.


வித்யாசங்கள் சிறுகதையின் ஸ்கான். உதயம் இதழில் வெளி வந்தது.

மத்திய மந்திரி செயலர் எழுதிய கடிதம்


காலஞ்சென்ற திரு.வாழப்பாடி ராம மூர்த்தி அவர்கள் மத்திய மந்திரியாக இருந்த காலத்தில் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி அவரது செயலர் எழுதிய கடிதம்

லோக்சபா ஸ்பீக்கர் அலுவலகம் எனக்கு எழுதிய கடிதம்


ஆப்பரேஷன் இந்திய 2000 பற்றி லோக்சபா ஸ்பீக்கர் அலுவலகம் எனக்கு எழுதிய கடிதம்

சமீபத்தில் ஜோதிட பூமியில் வெளிவந்த பரிகாரங்கள் தொடர்


சமீபத்தில் ஜோதிட பூமியில் வெளிவந்த பரிகாரங்கள் தொடர்

மணிமேகலை பிரசுரம் எனக்களித்த


மணிமேகலை பிரசுரம் எனக்கு எழுதிய கடிதம். இதில் திரு.ரவி தமிழ்வாணன் எனக்களித்த இந்த வாய்ப்பை நான் பயன் படுத்திக் கொள்ளவில்லை. இதற்கு காரணம் என் வறுமை

பிரம்மங்காரு,காலஞானம் பற்றி நான் எழுதிய கட்டுரையின் ஸ்கான்


மிஸ்டிக் இந்தியா ஆங்கில மாத இதழில் பிரம்மங்காரு,காலஞானம் பற்றி நான் எழுதிய ஆங்கில கட்டுரையின் ஸ்கான்

முதல்வர் அலுவலகம் ஆப்பரேஷன் இந்தியாவை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்வதாய் எனக்கு எழுதிய கடிதம் தான் இது.


அகில உலகமே தலையில் வைத்து கொண்டாடிய அன்றைய ஆந்திர முதல்வர் (ச)தந்திர பாபு நாயுடுவுக்கு ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை 1997 முதல் தொடர்ந்து அனுப்பி வந்தேன். 2002 ஏப்ரல் வரை பதிலே இல்லை. கடுப்பாகி மக்கள் எழுதும் கடிதங்களுக்கு பதில் எழுத ஸ்டாம்புக்கு கூட பதில் இல்லாத திவாலா அரசு உங்கள் அரசு என்று தெரியும். எனவே இந்த 10 ரூ எம்.ஓ வை வாங்கிக்கொண்டாவது பதில் தாருங்கள் என்று எம்.ஓ அனுப்பினேன். அதை வாங்கிகொண்டும் முதல்வர் அலுவலகம் மவுனத்தையே பதிலாக்கியது.

இந்த விஷயத்தை அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்தவரும் ,இன்று முதல்வராக இருப்பவருமான ஒய்.எஸ் .ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். ஜனாதிபதிக்கும் புகார் செய்து அதன் பிரதியை முதல்வர் அலுவலகத்துக்கு ஃபாக்ஸ் மூலம் அனுப்பினேன். அதன் மீது முதல்வரின் செயலாளர் எழுதிய ஃபுட்நோட் இது. செயலாளர் கோரியபடியே மீண்டும் என் திட்டத்தை ஆந்திர முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பினேன். மீண்டும் மவுனம் தொடர்ந்தது. இதனால் மேலும் கடுப்பாகி பதில் தர போஸ்டல் ஸ்டாம்புக்காக அனுப்பிய எம்.ஓ வை வாங்கிக்கொண்டதால் இது பெய்டட் சர்வீஸ் ஆகிவிட்ட காரணத்தால் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் முதல்வர் அலுவலகம் மீது புகார் செய்தேன். இந்த செய்தி எல்லா செய்தித்தாள்களிலும் பிரசுரமாகிவிட்டது.

பத்திரிக்கைகள் மூலம் விஷயமறிந்த முதல்வர் அலுவலகம் ஆப்பரேஷன் இந்தியாவை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்வதாய் எனக்கு எழுதிய கடிதம் தான் இது.

மக்கள் எழுதும் கடிதங்களுக்கு பதில் எழுத postal ஸ்டாம்புக்கு கூட revenue இல்லாத திவாலா அரசு


அகில உலகமே தலையில் வைத்து கொண்டாடிய அன்றைய ஆந்திர முதல்வர் (ச)தந்திர பாபு நாயுடுவுக்கு ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை 1997 முதல் தொடர்ந்து அனுப்பி வந்தேன். 2002 ஏப்ரல் வரை பதிலே இல்லை. கடுப்பாகி மக்கள் எழுதும் கடிதங்களுக்கு பதில் எழுத postal ஸ்டாம்புக்கு கூட revenue இல்லாத திவாலா அரசு உங்கள் அரசு என்று தெரியும். எனவே இந்த 10 ரூ எம்.ஓ வை வாங்கிக்கொண்டாவது பதில் தாருங்கள் என்று எம்.ஓ அனுப்பினேன். அதை வாங்கிகொண்டும் முதல்வர் அலுவலகம் மவுனத்தையே பதிலாக்கியது.

இந்த விஷயத்தை அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்தவரும் ,இன்று முதல்வராக இருப்பவருமான ஒய்.எஸ் .ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். ஜனாதிபதிக்கும் புகார் செய்து அதன் பிரதியை முதல்வர் அலுவலகத்துக்கு ஃபாக்ஸ் மூலம் அனுப்பினேன். அதன் மீது முதல்வரின் செயலாளர் எழுதிய ஃபுட்நோட் இது.

ஐ.நா.சபை எழுதிய கடிதம்


எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை பாராட்டி ஐ.நா.சபை எழுதிய கடிதம். த‌ம‌க்கு தொட‌ர்ப‌ற்ற‌ விஷ‌ய‌த்தில் கூட‌ பொருத்த‌மான‌ பதில் த‌ரும் மேனாட்டின‌ரின் நாக‌ரிக‌த்தையும், 9 வ‌ருட‌ங்க‌ள் தொட‌ர்ந்து திட்ட‌த்தை அனுப்பியும் எவ‌னோ செத்தான் என‌க்கென்ன‌ போச்சு என்றிருக்கும் ஆந்திர‌ முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ம்,லோக்ச‌பா ஸ்பீக்க‌ர் அலுவ‌ல‌க‌ங்க‌ளின் அநாக‌ரிக‌த்தையும் ஒப்பிட்டு பாருங்க‌ள்.

ஆன்மீகம் மாத இதழில் தேர்வாகி பிரசுரிக்கப்பட்டு முன் கூட்டிய தகவல் ஏதுமின்றி பாதியில் நிறுத்தப்பட்ட சீரியல்களில் இரண்டாவது சீரியலின் ஒரு அத்தியாயம் இது . பரிகாரங்கள் சீரியல் ஜோதிட பூமி மாத இதழிலும், நிலாச்சாரல் இணைய இதழிலும் பிரசுரமாகிவிட்டது. ஸ்ரீ பிரம்மங்காரு சீரியல் எதில் பிரசுரமாகுமோ அது ஆண்டவன் விருப்பம்.

ஜெ. எதிர்காலம் குறித்து நான் எழுதி சரித்திர நாயகியில் பிரசுரமான கட்டுரை


தமிழக முன்னாள் ஜெயலலிதாவுக்கு நீங்கள் முதல்வராவது உறுதி என்று கூரியர் மூலம் தெரிவித்தேன். என் கணிப்பு நிஜமாகி அவர் தேங்க்ஸ் கார்டு அனுப்பினார். இந்த விவரங்களை சரித்திர நாயகி ஆசிரியருக்கு நான் கடிதம் மூலம் தெரிவித்தேன். அதற்கு அவர் ஜெயலலிதா மீதான (அப்போதைய) வழக்குகள் என்னாகும் என்று கணித்து எழுதச்சொன்னார் .அவர் வேண்டுகோளின் படி ஜெ. எதிர்காலம் குறித்து நான் எழுதி சரித்திர நாயகியில் பிரசுரமான கட்டுரையின் ஸ்கான் இது.

சரித்திர நாயகி ஆசிரியர் எனக்கு எழுதிய கடிதம்



தமிழக முன்னாள் ஜெயலலிதாவுக்கு நீங்கள் முதல்வராவது உறுதி என்று கூரியர் மூலம் தெரிவித்தேன். என் கணிப்பு நிஜமாகி அவர் தேங்க்ஸ் கார்டு அனுப்பினார். இந்த விவரங்களை சரித்திர நாயகி ஆசிரியருக்கு நான் கடிதம் மூலம் தெரிவித்தேன். அதற்கு அவர் ஜெயலலிதா மீதான (அப்போதைய) வழக்குகள் என்னாகும் என்று கணித்து எழுதச்சொன்னார் .அவர் வேண்டுகோளின் படி ஜெ. எதிர்காலம் குறித்து கட்டுரை ஒன்று எழுதி அனுப்பினேன். அது சரித்திர நாயகியில் பிரசுரமானது. அதன் பிரதியை ஜெயலலிதாவுக்கு அனுப்பும்படி அவரை கோரினேன். அதற்கு எதிர்வினையாக ஆசிரியர் எழுதிய கடிதம்தான் இது

கிரக பலம்:



கிரகங்கள் தாம் உச்சம் பெறும் ராசிக்கு 7 ஆவது ராசியில் நீசம் பெறும் என்பது விதி.
எந்த கிரகம் எந்த ராசியில் உச்சம் பெறும் என்பதை பார்ப்போம்!

சூரியன்‍‍:மேஷம்
சந்திரன்: ரிஷபம்
செவ்வாய்:மகரம்
குரு:கடகம்
சனி:துலா
புதன்:கன்னி
சுக்கிரன்:மீனம்

எந்த கிரகம் பலம் பெற்றால் நல்லது:
லக்னத்திலிருந்து 1,5,9 ஆவது அதிபதிகள் உச்ச பட்சபலம் பெறவேண்டும்.
4,7,10 அதிபதிகள் மத்தியதர பலம் பெற்றால் போதுமானது.
6,8,12 அதிபதிகள் முழுமையாக பலவீனப்பட வேண்டும்

எந்த கிரகம்,எந்த கிரகத்தோடு சேர்ந்தால் நல்லது:

1,5,9 அதிப‌திக‌ள் ப‌ர‌ஸ்ப‌ர‌ம் க‌ல‌ந்தால் 100 ச‌த‌வீத‌ம் ந‌ல்ல‌து
இவ‌ர்க‌ள் 4,7,10 அதிப‌திக‌ளோடு சேர்ந்தால் 75 ச‌த‌வீத‌ம் ந‌ன்மை.
4,7,10 அதிப‌திக‌ளே ப‌ர‌ஸ்ப‌ர‌ம் க‌ல‌ந்திருந்தால் 50 ச‌த‌வீத‌ம் ந‌ல‌ம்.
1,5,9,4,7,10 அதிப‌திக‌ள் 2,11அதிப‌திக‌ளுட‌ன் சேர்ந்தால் 35 ச‌த‌வீத‌ம் ந‌ல்ல‌து. ஆனால் இவ‌ர்க‌ளுக்கு 6,8,12 அதிப‌திக‌ளுட‌ன் எவ்வித‌ தொட‌ர்பும் இருக்க‌ கூடாது. மேற்கூறிய‌ விதியை த‌ங்க‌ள் ஜாத‌க‌ ச‌க்க‌ர‌த்துக்கு ம‌ட்டுமே அல்லாது த‌ற்போதுள்ள‌ கிர‌க‌ நிலைக்கும் அப்ளை செய்து ப‌ல‌னைய‌றிய‌லாம்.

துவாத‌ச‌(10+2=12)பாவ‌ கார‌க‌த்துவ‌ம்:
ஜாத‌க‌ ச‌க்க‌ர‌ம் 12 க‌ட்ட‌ங்க‌ளாக‌ பிரிக்க‌ப்ப‌டும் என்று ஏற்கென‌வே கூறினோம். இந்த‌ 12 க‌ட்ட‌ங்க‌ளும் உங்க‌ள் வாழ்க்கை என்னும் போர்ட்ட‌பிள் டி.வி.யில் ஒளிப‌ர‌ப்பாகும் 12 சேன‌ல்க‌ளை காட்டுவ‌ன‌வாகும். இந்த‌ பாவ‌ங்க‌ளுக்கு,பாவாதிப‌திக‌ளுக்கு மேற்சொன்ன‌ விதிக‌ளை அப்ளை செய்து பாருங்க‌ள். இவை எந்த‌ அள‌வுக்கு ப‌ல‌ம் பெற்றிருந்தால் அந்த‌ அள‌வுக்கு இவை காட்டும் விஷ‌ய‌ங்க‌ளில் நீங்க‌ள் வெற்றிய‌டைய‌லாம்.
முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)
உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ந‌ல‌ம்,நிற‌ம்,குணம்

2ஆவது சேன‌ல்:
(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்

3 ஆவது சேனல்:
சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில் பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்

4ஆவது சேனல்:
தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்

5.ஆவது சேனல்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு

6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு

7.ஆவது சேனல்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்

8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்

9.ஆவ‌து சேன‌ல்:
த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.

10ஆவ‌து சேன‌ல்:
வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்

11.ஆவ‌து சேன‌ல்:
மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம்.


12ஆவ‌து சேன‌ல்:
தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.

ஏழுமலையான் மீது பாடப்பட்ட பாடல்களின் அச்சு,எழுத்து பிரதிகள் மீது ஆராய்ச்சி


திருப்பதி திருமலை தேவஸ்தானத்தார் சப்தகிரி என்று ஒரு பத்திரிக்கை வெளியிடுகிறார்கள். அதில் ஒரு அறிவிப்பை கண்டேன். ஏழுமலையான் மீது பாடப்பட்ட பாடல்களின் அச்சு,எழுத்து பிரதிகள் மீது ஆராய்ச்சி நடக்கிறது. அவற்றை வைத்திருப்பவர்கள் அனுப்பினால் ஆராய்ச்சிக்கு பிறகு ஜாக்கிரதையாக திருப்பி அனுப்பப்படும். என்பது அதன் சாராம்சம். நான் எனது படிஐப்புகளை அனுப்பினேன். அந்த பிராஜக்டின் தலைவர் டாக்டர்.Raghavachari என்பவர் பாடல்கள் அற்புதமாக இருப்பதாகவும் தேவஸ்தானம் நிதி உதவியுடன் அச்சிட முயற்சி செய்யும்படியும் கடிதம் எழுதினார். அதற்கான படிவத்தை கூட அனுப்பினார். நானும் விண்ணப்பித்தேன் . அதற்கு வந்த பதிலைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.

Sunday, February 3, 2008

ரஜினி பெட்டர். காரணம் ரஜினி தம் மகளை நடிகையாக்கவில்லை.


அந்த நாள் முதல் இந்த நாள் வரை நான் ஒரே விதமாகத்தான் யோசிக்கிறேன், முடிவெடுக்கிறேன்,செயல் படுத்துகிறேன். அன்று அவை யாவும் படு தோல்வியுற்றன. இன்றோ வெற்றி என் வீட்டுக் கதவை தட்டியபடியே இருக்கிறது. ஒரு நாளில்லை ஒரு நாள் நானும் லைம் லைட்டுக்கு வருவேன்.இன்றைய பெரிய மனிதர்களை சந்திக்கு இழுப்பேன்.

அது ரஜினியாகட்டும்,சிரஞ்சீவியாகட்டும். சுஜாதாவாகட்டும்,பாலகுமாரனாகட்டும். வி.ஐ.பி.க்களை விமர்சிப்பது ஒரு மனவியாதி,பிரபலமாக ஒரு குறுக்கு வழி என்றெல்லாம் ஆர்குட்டில் கூட பலர் என்னை விமர்சித்தார்கள்.

என்னை பொருத்தவரை என் கையில் இன்றிருப்பது கப்பறையாகவேகூட இருக்கலாம். அவர்கள் தலைகளில் இருப்பது கிரீடங்களாகவே கூட இருக்கலாம். இந்த கப்பறைக்கான காரணம் என் கடந்த காலத்தில் இருக்கிறது. இவர்களின் கிரீடங்களுக்கான காரணமும் கடந்தகாலத்தில் தான் இருக்கிறது. என் இருண்ட காலத்தில் என்னை நானே வெளுத்து சுத்திகரித்துக்கொண்டுவிட்டேன். இவர்களோ லைம் லைட்டின் வெளிச்சத்தில் அழுக்காகிவிட்டார்கள்.

என் அளவு கோல் ரொம்ப சிம்பிள். வெற்றிக்கும் திறமைக்கும் தொடர்பு கிடையாது. இந்த நவீனயுகத்தில் வெற்றி என்பது ஒரு விபத்து மாதிரி. நம்மை விட தகுதி படைத்தவர்கள் ஆயிரக்கணக்கில் ஒரு துண்டு பீடிக்கு கூட கதியில்லாமல் இருப்பார்கள். இதை மறந்து என் வெற்றிக்கு காரணம் என் தகுதி,உழைப்பு என்று ஜல்லியடிப்பது மதியீனம்.

ரஜினியை மக்கள் அங்கீகரித்துவிட்டார்கள். இதற்கு நன்றி தெரிவிக்க ரஜினி செய்ய வேண்டியது என்ன? எந்த கட்சிக்கு ஓட்டு போடவேண்டும் என்று சொல்வதா ? நிச்சயமாக இல்லை. ரஜினியை ரஜினியாக்கி உய்ரத்தியது சினிமா. ஆனால் அந்த சினிமாத்துறைக்கு ரஜினியால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அவர் நினைத்தால்

சினிமாவுக்கு ஏதோ செய்யவேண்டும் என்ற தவிப்பில் இருப்பவர்களுக்கு உதவலாம். இதுஒன்றுதான் ரஜினி செய்யக் கூடியது. ஆனால் அவரோ மீண்டும் மீண்டும் மற்றொரு சிவாஜிக்கு முயற்சி செய்தபடி சர்வைவல் பிரச்சினைகளிலேயே மூழ்கியிருக்கிறார்.

சிரஞ்சீவி பிழைப்பும் இதுதான். அவருக்கு வாழ்வு தந்த சினிமாவுக்கு அவரால் ஒரு இழவும் செய்ய முடியாது. அவர் தகுதி அப்படிப்பட்டது. வென்றவன் அதிர்ஷ்டத்தால் வெல்கிறான். திறமையால் வெல்ல முடியாதவர்களுக்கு அவன் வழி காட்ட வேண்டும் அதுதான் அவன் அவனை வாழவைத்த‌ துறைக்கு காட்டும் நன்றி.

இதை என் வாழ்வில் சிறுவயதிலிருந்தே கடைபிடித்து வருகிறேண். கடை பிடிப்பேன். இதனால் என் கையில் உள்ள கப்பறை கிரீடமாக மாறும். இவர்கள் அதை கடை பிடிப்பதில்லை. எனவே இவர்களின் கிரீடங்கள் கப்பறையாக மாறுவது உறுதி. ரஜினியுடன் சிரஞ்சீவியை ஒப்பிட்டால் ரஜினி பெட்டர். காரணம் ரஜினி தம் மகளை நடிகையாக்கவில்லை. அவரது காதலை அங்கீகரித்து சைடு கொடுத்து பெரியமனிதராகிவிட்டார். ஆனால் சிரஞ்சீவி தன் மகனை திணித்துவிட்டார். அதுவும் தன் ஜிராக்ஸ் பிரதியாக. மகள் விஷயத்தில் தலைப்பு செய்தியாகிவிட்டார்.

Friday, February 1, 2008

ஆப்பரேஷன் இந்தியா 2000 ம்னா என்னண்ணே?



இது ஒரு திட்டம் இந்தியாவை பணக்கார நாடாக்குறதுக்காக நான் போட்ட திட்டம். இதுல அஞ்சு பார்ட் இருக்கு.

ஒன்னொன்னா சொல்லுண்ணே கேக்கலாம்

சொல்றம்பா.. இப்போ நம்ம நாட்டு தலையெழுத்தை நிர்ணயிக்கிறது யாரு?


பிரதம மந்திரி.


இப்போ இருக்கிற பிரதம‌ மந்திரிய‌ ம‌க்க‌ள் விரும்பி தேர்ந்தெடுத்தாங்க‌ளா ? இல்லே . ம‌க்க‌ள் சோனியா பிர‌த‌ம‌ராக‌னும்னு ஓட்டு போட்டாங்க‌ . சோனியா மேல் நாட்டு ம‌ரும‌க‌ள்னு எதிரி க‌ட்சிக‌ள் கூப்பாடு போட்ட‌தால‌ அந்த‌ம்மா ந‌ம்ம‌ ம‌ன்மோக‌னை கை காட்டிட்டாங்க‌ ..இதுக்கு கார‌ண‌ம் ந‌ம்ம‌ நாட்டுல‌ ம‌றைமுக‌ ஜ‌ன‌நாய‌க‌ம் அம‌ல்ல‌ இருக்கு. அதாவ‌து ம‌க்க‌ள் எம்.பி க்க‌ளை தேர்ந்தெடுக்குறாங்க‌, எம்.பி க்க‌ள் பிர‌த‌ம‌ரை தேர்ந்தெடுக்குறாங்க‌. ம‌க்க‌ளே பிர‌த‌ம‌ரை நேர‌டியா தேர்ந்தெடுக்க‌னும்கிற‌து ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துல‌ முத‌ல் பார்ட்டு

இத‌னால‌ என்ன‌ண்ணே லாப‌ம்?

நிறைய‌ இருக்கு த‌ம்பி. எம்.பி க்க‌ளால் தேர்வாகும் பிர‌த‌ம‌ருக்கு எம்.பி க்க‌ளோட‌ த‌ய‌வு இருந்தாதான் அவ‌ர் பிர‌த‌மரா தொட‌ர‌ முடியும். எம்பி க்கள் நினைச்சா ஒரு ந‌ம்பிக்கையில்லா தீர்மான‌ம் கொண்டு வ‌ந்து க‌ல்தா கொடுக்க‌ முடியும். இத‌னால் பிர‌த‌ம‌ருக்கு ம‌க்க‌ளை விட‌ எம்.பி.க்க‌ளோட‌ த‌ய‌வு அதிக‌மா தேவை ப‌டுது.அத‌னால‌

அர‌சாங்க‌த்தோட‌ ஸ்திர‌த்த‌ன்மை பாதிக்க‌ப்ப‌டுது. பிர‌த‌ம‌ர் த‌ன் நேர‌த்தை அதிக‌மா எம்.பி.க்க‌ளை திருப்தி ப‌டுத்த‌ற‌துல‌ செல‌வ‌ழிக்க‌ வேண்டி வ‌ருது.. இன்னும் ஒரு லாப‌ம் இருக்கு காதை கிட்டே கொண்டா சொல்றேன். இன்னைக்கு நாட்ல‌ பி.சி,எஸ்.சி,எஸ்.டி,மைனாரிட்டிக‌ள் 53 ச‌த‌வீத‌ம் இருக்காங்க‌. நேரிடை ஜ‌ன‌நாய‌க‌ம் அமுலாகி மும்முனை போட்டி ஏற்ப‌ட்டால் இந்த‌ 53ல‌ பாதி பேர் ச‌ப்போர்ட் ப‌ண்ணா போதும் மேற்ப‌டி ம‌க்க‌ளுக்கு ந‌ன்மை செய்ற‌ அர‌சு ஏற்ப‌ட‌ வாய்ப்புண்டு.

அர‌சிய‌ல் ஆர்வ‌ம் இல்லாத‌வ‌ங்க‌, ஆனால் மேதைக‌ள் இருப்பாங்க‌ இவ‌ங்க‌ளோட‌ ஆலோச‌னை அரசாங்க‌த்துக்கு தேவைப்ப‌டும். ஆனால் இவ‌ங்க‌ தேர்த‌ல்ல‌ நிக்க‌ பிரிய‌ப்ப‌ட‌மாட்டாங்க‌ . இப்ப‌டிப் ப‌ட்ட‌ பார்ட்டிக‌ளை பாராளும‌ன்ற‌த்துக்கு கொண்டுவ‌ர‌த்தான் அந்த‌ கால‌த்துல‌ ராஜ்ய‌ ச‌பா ஏற்ப‌டுத்தினாங்க‌. ஆனால் கால‌த்தின் கொடுமையால‌ ம‌க்க‌ளால் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌ அர‌சிய‌ல்வாதிக‌ளை திருப்பி கொண்டுவ‌ர்ர‌ கொல்லைப்புற‌ வ‌ழியாக‌ இன்றைய‌ ராஜ்ய‌ ச‌பா மாறியிருக்கு.


நேரிடை ஜ‌ன‌நாய‌க‌ம் அம‌லாகி,ம‌க்க‌ளால் நேரிடையாக‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ பிர‌த‌ம‌ர் தான் விரும்பிய‌ மேதைக‌ளை ராஜ்ய‌ச‌பாவுக்கு நாமினேட் ப‌ண்ணிக்கிற‌ வாய்ப்பு ஏற்ப‌டும்.


இன்னைக்கு ஒரு எம்.எல்.ஏ ,எம்.எல்.ஏ வா ஜெயிக்க‌னும்னா 1 கோடி ரூபா செல‌வ‌ழிக்க‌ வேண்டியிருக்கு. 4 எம்.எல்.ஏ தொகுதி சேர்ந்த‌து ஒரு எம்.பி., தொகுதி. ஆக‌ ஒரு ஆசாமி எம்.பி யா தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட‌னும்னா அவ‌ர் கு.ப‌.4 கோடி ரூ. செல‌வ‌ழிக்க‌னும். ஜெயிச்சு வ‌ந்த‌ பிறகு அவ‌ர் விட்ட‌தை பிடிக்க‌ பார்ப்பாரா ம‌க்க‌ளுக்கு சேவை செய்ய‌ பார்ப்பாரா?

நேரிடை தேர்த‌ல் வ‌ரும்போது எம்.பி ப‌த‌விக்கான‌ முக்கிய‌த்துவ‌ம் குறைஞ்சு போயிரும். போட்டி குறையும். செல‌வும் குறையும். அர‌சாங்க‌ம் செய்யும் தேர்த‌ல் செல‌வும் குறையும். எங்க‌யோ தில்லில‌ இருக்கிற‌ அத்வானியோ,சோனியாவோ ஜெய‌க்க‌னுங்க‌ற‌துக்காக‌ இங்க‌ இருக்கிற‌ ரெட்டி,நாயுடு ல‌ட்ச‌ங்க‌ளை வாரியிறைக்க‌ வாய்ப்பு இல்லை. முக்கிய‌மா வ‌ன்முறையும் குறையும். க‌ட்சிக‌ள் வெற்றிக்குதிரைக‌ளை க‌ண்டு பிடித்து க‌ள‌ம் இற‌க்கியாக‌னும். இத‌னால் உட் க‌ட்சி ஜ‌ன‌நாய‌க‌ம் கூட‌ பிக் அப் ஆக‌லாம்.


(தொட‌ரும்)

இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து.

உலக வரலாற்றை அறியாதவனுக்கு தாய்நாட்டின் பெருமை தெரியாது. கு.ப.வெளி வெளிநாட்டிலாவது சில காலம் வாழ்ந்தாலன்றி தாய்நாடு நமக்கு தந்துள்ள உரிமைகள் பற்றி புரியாது. பாஸ்போர்ட் விசா கையில் இல்லாது வெளிநாட்டு போலீசிடம் சிக்கினால் நம் நிலை லைசென்ஸ் இல்லாத நாயை விட கேவலமாகிவிடும். இங்கும் தான் நடக்கிறது வழிப்பறி. ஆனால் அங்கு போல் ஒரு டாலருக்கு மண்டை பிளப்பதெல்லாம் அசகஜம்.இவ்வளவு ஏன் பக்கத்து நாடான பாக்கிஸ்தானை பாருங்கள். எத்தனை முறை ராணுவ ஆட்சி வந்து விட்டது. அட இலங்கையை பாருங்கள் பற்றி எரிகிறது. வாழ்க்கையில் எதையேனும் இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காதாம். அது போல் இந்தியனுக்கும் இந்தியாவை இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காது போலும்.

இந்தியா சுதந்திர நாடாக விளங்கும் போதே, ஜனநாயகம் நிலவும் போதே சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பெயரால் நில பறிப்பு, நம் நதிகளின் நீரை நமக்கே பாட்டிலில் அடைத்து விற்கும் கொடுமை,என் கவுண்டர்,லாக்கப் சாவு,துப்பாக்கி சூடு யாவும் நடக்கின்றன. இதில் நிலைமை மாறிவிட்டால்? கேட்கவே வேண்டாம்.


எனவே நண்பர்களே! இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து. ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..