Sunday, December 30, 2012

செவ்வாய் தோஷம்: ஆண் பெண் வித்யாசம்

நான்: வணக்கம் தலை !

செவ்:
வணக்கம் . தலைக்கு சூரியன் காரகம். நான் எல்லாம் ரத்தம் , எலும்புக்குள்ள இருக்கிற மஜ்ஜைக்கு காரகம்

நான்: ஐம் சாரி பாஸூ.. ஒரு ஃப்ளோல வந்துருச்சு..

செவ்:
நான் பாஸ் இல்லை. பாஸ் ஆகனும்னா சூரியபலம் தேவை. நான் ஜஸ்ட் கமாண்டர் தான்.

நான்:
அடடா.. என்னங்ணா இன்னைக்கு இப்படி கேட்டை போடறிங்க?

செவ்:
இது கரெக்டு .. ஏன்னா நான் சகோதர காரகன்

நான்:
சார்..  நீங்க ஒரு ஜாதகத்துல கெட்டிருந்தா தோஷ ஜாதகம்னு ஓரங்கட்டிர்ராய்ங்களே.. இந்த தோஷம் ஆண் பெண் விஷயத்துல ஒரே மாதிரியா வேலை செய்யுமா? இதுல வித்யாசம் எதுனா இருக்குமா?

செவ்: நிச்சயமா இருக்கும். அதுலயும் இந்திய பெண்ணுக்கும் -அமெரிக்க பெண்ணுக்கும் இடையில கூட வித்யாசம் இருக்கலாம்.

நான்: மொதல்ல ஆண் பெண் வித்யாசத்தை சொல்லுங்க

செவ்:
ரத்தம்ங்கறது ஆண் பெண் ரெண்டு பேருக்கும் பொதுன்னு நினைக்கிறிங்க. பெண் உடலில் ரத்தம் கொஞ்சம் "தின்" ஆ இருக்கும். கிரகண சமயத்துல ஆண் ரத்தமும் பெண் ரத்தம் போல மாறுதாம். ஜெனரலாவே பெண் ரத்தத்துல ஹீமீக்ளோபின் குறைவா இருக்கும். மேலும் பெண்ணின் உடலில் மென்ஸ்ட் ருவல் சைக்கிள்னு ஒன்னிருக்கில்லை.  அதனால பெண்ணோட பாடிக்கு எஃபெக்ட் சாஸ்தி.

நான்:
புரியுது புரியுது.. அப்போ ஆண் ஜாதகத்துல நீங்க கெட்டிருந்தாலும் எஃபெக்ட் குறைவுங்கறிங்க?

செவ்:
ஒடனே மேல் சேவனிசம் ! பெண்ணுக்கு அந்த மேட்டர்ல பிரச்சினை அதிகம்னா ஆணுக்கு கோபம் கோபம்னு ஒன்னிருக்கில்லை. அந்த ரூட்ல ஆப்படிச்சுருவன்ல

நான்:
கிளிஞ்சுது ..எந்த ஆண் கோபத்திய ரோட்ல காட்டறான். காட்டினா கிளிஞ்சுரும்ல..முக்காவாசி ஆம்பளை ஊட்டு பொம்பள மேலதானே கோவத்தை காட்டறான்.

செவ்:
அது கூட கரெக்டுதான்..அதுக்கு தானே கரண்டு, நெருப்பு,கூர்மையான ஆயுதங்கள்,கொம்புள்ள பிராணிகள்னு ஆப்ஷன்ஸ்  வச்சிருக்கன். அதை வச்சு பல்பு கொடுத்துருவனே..

நான்:
அண்ணா ! ஒரு மேட்டர் ஸ்பார்க் ஆகுது. தாய்குலம் எப்பயும் நெருப்போடயே விளையாடறாய்ங்கல்ல..இதனால தோஷம் குறையுமோ?

செவ்:
நிச்சயமா குறையும். அடுப்புல ஒவ்வொரு தாட்டி ஏத்தி இறக்கறப்பயும் சூடுபட்டுக்கிறது, கொதிக்கிறது தெறிச்சு விழுகுறதுன்னு தோஷம் இன்ஸ்டால்மென்ட்ல தீரும். அதே சமயம் அவிக சூப்பரா சமைச்சு பேர் வாங்கினா தோஷம் கூடும்.

நான்:
அப்போ ..இதே ரூட்ல இன்னொரு பாய்ண்டும் ஸ்பார்க் ஆகுது..ஆண்கள் உங்க காரகத்துல வேலை செய்துக்கிட்டிருந்தாலும் தோஷம் குறையும் அப்டித்தானே..

செவ்:
குறையலாம்.ஆனால் அந்த தொழில்,உத்யோகம்,வியாபாரத்துல லாபம் சம்பாதிச்சாலும், பேர் புகழ் பெற்றாலும் தோஷம் அதிகரிக்கும்.

நான்:
மொத்தத்துல கணக்கு கணக்கு தான்..
செவ்:
இல்லையா பின்னே..

நான்:
சார்.. உங்களை ஒரு கேள்வி கேட்கறேன்..வேற எதுனா கேளுன்னு நசிகேதனை டைல்யூட் பண்ண எமன் மாதிரி டைல்யூட் பண்ணப்படாது..

செவ்:
ச்சொம்மா கேளு கண்ணா..

நான்:
உங்களோட பலம் இல்லாத ஜாதகத்துல பிறந்து அவதிபடனும்னு ஆரு எளுதி வச்சாய்ங்க?

செவ்:
நீங்க தான் கண்ணா.. கடந்த பிறவியில என் (செவ்)  காரகமுள்ள சனத்தை டார்ச்சர் பண்ணி ,சட்டம் நியாயத்துக்கு புறம்பா என் (செவ்) காரகமுள்ள பொருட்களை லவட்டிக்கிட்டவுக அந்த கருமத்தை தொலைக்க நான் பலமிழந்த ஜாதகத்துல பிறந்து அவதி படறிங்க..

நான்:
அடடா.. இப்பத்தேன் கணக்கு டாலி ஆகுது. நம்ம ஜாதகத்துல நாலமிடத்துல நின்னுருக்கிங்க. போன ஜன்மத்துல அம்மாவோட அருமை தெரியாம அவமதிச்சிருக்கனும். அடுத்தவன் வீட்டை ,வாகனத்தை கொளுத்தியிருக்கனும்.இந்த காலத்து அரசியல் வாதிங்களை போல நில ஆக்கிரமிப்பெல்லாம் செய்திருக்கனும். அண்ணன் தம்பிகளுக்கு உரிய பங்கை கொடுக்காம ஆப்படிச்சிருக்கனும். அதனாலதேன் இந்த ஜன்மத்துல இப்படி ஒரு ஜாதகத்துல பிறந்து நாயடி பட்டேன்னு நினைக்கிறேன்.

செவ்:
கரெக்டு..

நான்:
இதுக்கு பரிகாரம்?

செவ்:
என்  காரகமுள்ள சனத்துக்கு  என் காரகமுள்ள பொருட்களை ஃப்ரீயா கொடுத்துட்டிரு .. ஒரு கட்டத்துல கணக்கு டாலி ஆனதும் மேட்டர் ஓகே ஆயிரும்.

நான்:
ரெம்ப நன்றிங்ணா.. இன்னம் நிறைய கேள்விகள்ளாம் இருக்கு. நாளைக்கு கேட்கிறேன்.
செவ்:
அப்படியே ஆகட்டும்.

Thursday, December 27, 2012

செவ்வாயுடன் பேட்டி: 2

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டி வரிசையில செவ்வாயுடனான பேட்டி இந்த பதிவிலும் தொடர்கிறது.

நான்: வணக்கம் செவ்வாய் சார் ! பேட்டியை தொடரலாமா?

செவ்: கேள்விகளை கேள் !

நான்:
பாஸ் ! ஒரு ஜாதகத்துல மத்த கிரகங்கள் கெட்டிருந்தா அந்த கிரகம் கெட்டுப்போச்சு –இந்த கிரகம் கெட்டுப்போச்சுன்னு தான் சொல்றாய்ங்க. நீங்க கெட்டிருந்தா மட்டும் தோஷ ஜாதகம்னு தனியா எடுத்து வச்சுர்ராய்ங்க - அதே மாதிரி தோ.ஜாதகத்துக்குத்தான் இதை கண்ணாலம் பண்ணனும்னு சொல்றாய்ங்களே ஏன்?

செவ்:
நைனா! என்னோட காரகங்கள்ள முக்கியமானது எலும்புக்குள்ள இருக்கிற மஜ்ஜை. அங்கன தான் வெள்ளையணுக்கள் உருவாகுது. இந்த வெள்ளை அணுக்கள் தான் நோய் கிருமிகளை எதிர்த்து போராடி மன்சனை நோய்லருந்து காப்பாத்துது. ஒரு ஜாதகத்துல  நானே  பல்பு வாங்கியிருந்தேன்னு வை. அப்பம் அவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியிலயே தகராறு இருக்கும்.  சின்ன நோய் கூட சீக்கிரத்துல குணமாகாது. மறுபடி மறுபடி வரும். உசுருக்கே கூட உலை வச்சுரலாம். அதனாலதேன் தோஷ ஜாதகம்னு சொல்லி பக்கத்துல எடுத்து வச்சுர்ராய்ங்க.

நான்:
இது ஓகே பாஸூ.. தோஷ ஜாதகத்தை தோஷ ஜாதகத்துக்கு கட்டி வச்சுட்டா தோஷத்தை காக்கா தூக்கிட்டு போயிருமா?

செவ்:
9 விதமான விஷங்களை போகர் கலந்து நவபாஷாணம் தயாரித்து அதுல பழனி முருகன் சிலையை செய்து வச்சிருக்காரு.அது எல்லா நோயையும் குணமாக்குதுன்னு சொல்றாய்ங்களே அதே ஃபார்முலா தான் இங்கனயும் ஒர்க் அவுட் ஆகும். ரெண்டு தோஷம் சேரும்போது தோஷம் யோகமா மாறிருதுன்னு சொன்னா துள்ளி குதிக்க இங்கன சனம் காத்திருக்காய்ங்க.ஆனா அஸ்கு புஸ்கு .. அந்த பப்பெல்லாம் வேகாது.

நான்:
பின்னே என்ன ம னாவுக்கு தோஷத்தை தோஷத்தோட சேர்க்கிறாய்ங்க.

செவ்:
ரெண்டும் அல்ப்பாயுசு .முன்னே பின்னே போய் சேரட்டும்னுதேன். மேலும் சுத்த ஜாதகம் தோஷ ஜாதகத்தோட சேர்ந்தா ஒருத்தர் டிக்கெட் போட்டுர இன்னொருத்தரு விதவனாவோ/விதவையாவோ இருக்க வேண்டி வரும். இதனால கள்ளத்தொடர்பு அது இதுன்னு ரூட்டு மாறிரும் இல்லியா.. அதனாலதேன் இந்த ஏற்பாடு. மேலும் பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னுங்கறாப்ல தோஷ ஜாதகத்தை கட்டிக்கிட்ட பார்ட்டியும் தோஷத்தை அனுபவிக்க வேண்டி வந்துருமில்லியா அதை அவாய்ட் பண்ணத்தேன் இந்த ஏற்பாடு

நான்:
அது சரி பாஸூ..இப்பத்தேன் சகட்டுமேனிக்கு ஆன்டிபயாடிக்ஸ் தயாரிச்சு வச்சுருக்கமில்லை ..அதெப்படி சாக விட்டுருவம்?
   
செவ்:
உங்காளுங்க தயாரிச்சு ஏத்தற ஆன்டிபயாடிக்ஸுதேன் ஹ்யூமன் பாடியில இயற்கையா உள்ள இம்யூன் சிஸ்டத்தையே ஒழிச்சுட்டு இருக்குன்னு தெரியாதா உனக்கு . மேலும்  நான் கெட்டா ஜஸ்ட் இம்யூன் பவர் தான் குறையும்னு நினைச்சா எப்படி?

நான்:
இன்னம் என்னெல்லாம் பல்பு வாங்கும் பாஸூ..

செவ்:
நான் ரத்தத்துக்கு காரகன். ஒரு ஜாதகத்துல நான் கெட்டா ரத்தம் கெடும். ரத்தம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையும் வரலாம். ரத்தததோட வேலை என்ன? செல்களுக்கு ஆக்சிஜன் சப்ளை பண்றது.  நான் கெட்டா ரத்தம் சரியா பம்ப் ஆகாம போகலாம். அடைப்புகள் ஏற்படலாம். இதனால செல்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்கலின்னா என்னாகும்? முக்கியமா மூளைக்கு கிடைக்கலின்னா என்னாகும்?

நான்:
இதுவும் மெடிக்கல் ப்ராப்ளம் தான். நாங்க தான் என்னெனமோ தகிடுதத்தம்லாம் செய்து மேனேஜ் பண்றோமே.

செவ்:
இங்கதான் பரிகாரம்ங்கற பாய்ண்டு வருது. நான் 3,6,10,11 தவிர எங்கருந்தாலும் தோஷம்னு சொல்றாய்ங்க.அதே நேரம் இன்னின்ன அமைப்பு இருந்தா தோஷம் பரிகாரம் ஆகும்னு சொல்றாய்ங்கல்ல .. உ.ம் நான் குருவோட சேர்ந்தா தோஷம் பரிகாரம்னு சொல்றாய்ங்க. குரு = தனகாரகன். பைசா இருக்கிறவனுக்கு மெடிக்கல் ரெமிடி கிடைக்கும்.

நான்:
அப்போ ஒரு ஜாதகத்துல நீங்க கெட்டா ஆவிசுக்கு கியாரண்டி இல்லேங்கறிங்க.

செவ்:
ஆமா நைனா.. நானு கோபத்துக்கு காரகன். நெருப்பு,மின்சாரம் , ஃப்யூயல்ஸுக்கு நான் தான் காரகன்.

ரத்தம் கெட்டவனுக்கு இயலாமை இருக்கும்.இயலாமைதான் கோபத்துக்கு காரணம்.கோபம் வந்தா மன்சன் என்னா பண்றான்னு அவனுக்கே தெரியாது. அவன் கொலை பண்ணுவானோ -தற்கொலை பண்ணிக்குவானோ இதர கிரகங்களோட பலத்தை பொருத்து டிசைட் ஆயிருது.

நெருப்புங்கறியா? என்னதான் தீயணைப்பு படை இருந்தாலும் தீப்பிடிச்ச வீட்டுக்காரனோட ஜாதகத்துல சந்திரன் நெல்ல இடத்துல இருந்து என்னை பார்த்தாலோ அ என்னோட சேர்ந்தாலோதான் தீ-அ.படை வந்து சேரும். இல்லாட்டி சாம்பல்தான்.

இதையே மின்சாரம் ,ஃப்யூயல்ஸுக்கும் பொருத்திப்பார்த்துக்க

நான்: பாஸூ.. ஷ்ரீராஜன்ங்கறவரு சில கேள்விகள் கேட்டிருக்காரு .உங்க பதிலை எதிர்ப்பார்க்கிறாரு .

செவ்: ச்சொம்மா கேளு கண்ணா ..காசா பணமா..? இல்லை சனந்தான் இதை எல்லாம் படிச்சுட்டு தெளிஞ்சுரப்போறாய்ங்களா.. கேளு

நான்: logic உள்ள இடங்கள் -உங்களுக்கு சொந்தம் என்றால் தர்க்க சாத்திரம் புதனுக்கு எப்படி சொந்தமாகும்?

செவ்: புதன் வித்யாகாரகன் .வியாபாரகாரகன்,கணிதத்துக்கு காரகன்.வித்தை,வியாபாரம்,கணிதத்துக்கு தேவையான அளவு லாஜிக்கல் நாலெட்ஜை அவரு கொடுக்கலாம். ஆனால் வாழ்க்கை ஒரு போர்களம். நான் யுத்தகாரகன். யுத்தத்துல தேவைப்படற லாஜிக்கல் நாலெட்ஜுக்கும் வித்தை,வியாபாரம்,கணிதத்துல தேவைப்படற லாஜிக்குக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.

நான்:
மலைக்கு அதிபதி சூரியன் குறிஞ்சி கடவுள் முருகன் எப்படி உங்கள் தெய்வம் ஆனாரு?

செவ்:
கண்ணா நான் நெருப்புக்கு காரகன் .முருகன் மொதல்ல 6 தீப்பொறிகளா வெளிப்பட்டவரு. நான் யுத்தகாரகன்.அவரு தேவ சேனாதிபதி. இப்படி பல காரணம் இருக்கு. அதனாலதேன் எனக்குரிய கடவுளா முருகனை வச்சுருக்காய்ங்க

நான்:
logic+mech செவ்+சனி எஞ்சினீயர் logic+computer செவ்+ராகு- ப்ரோகிராம் -எஞ்சினீயர் செவ்+ராகு+சுக்- சினிமா டைக்டரர் logic+தரகர்-செவ்+புதனுக்கு ஷேர் மார்கெட் புரோக்கர் செவ்+கேது-மருத்துவர்? செவ்+சூரி-? செவ்+சந்_

செவ்:
இது ஒன்னோட வேலை .செவ்வாயோடு கிரகங்கள் சேரும்பலன்னு தலைப்பு கொடுத்து தீர்பபட்டா எளுதிக்க.  நிறைய வேலை இருக்கு. நாளைக்கு பார்ப்போம்.

நான்:
ஓகே பாஸ்..

Tuesday, December 25, 2012

நவகிரகங்களுடன் பேட்டி: செவ்வாய்

அண்ணே வணக்கம்ணே !

நவகிரகங்களுடன் பேட்டி தொடர்ல சூ,சந்  ஓவர். இன்னைக்கு செவ்வாய். தினசரி ஒருத்தருக்கு அவிகளோட எதிர்காலம் குறித்த 10 கேள்விகளுக்கு இலவசமா பதில் தரப்போறோம். இது ஜனவரி  1 முதல் 100 நாளைக்கு அமல்ல இருக்கும். இதுக்கு என்ன பண்றது ஏது பண்றது தெரியனும்னா பக்கத்துல உள்ள விட்ஜெட்டை க்ளிக் பண்ணுங்க. விட்ஜெட்னா என்னானு தெரியலியா? இங்கே க்ளிக் பண்ணுங்க.

பதிவுக்கு போயிரலாமா?

செவ்வாய் 2012 டிசம்பர் 19 முதல் 2013  ஜனவரி 25 வரைக்கும்  மகரத்துல தன் உச்ச ராசியில உட்கார்ந்திருப்பாரு. இவரை பேட்டி எடுக்கனும்னா  நாமளும் மகரத்துக்கு போக வேண்டியதுதான்.

நான்:வணக்கம் சார் !
செவ்: வணக்கம்.  வாய்யா ! என்னடா இன்னம் ஆளை காணோமேன்னு நினைச்சேன் வந்துட்ட. திங்க் ஆப் எ டெவில் மாதிரி ..

நான்:
பாஸூ .. நமக்கு அன்னதாதாவே நீங்க தானே .. உங்களை விட்டுர முடியுமா என்ன?

செவ்:
ஓஹோ ..ஜீவனாதிபதின்னு சொல்றியா? சரி நான் கொடுக்கிற தொழில் அமைப்பை சொல்லு பார்க்கலாம்.ஒரே வார்த்தையில சொல்லனும்.

நான்:
தர்கத்துக்கு இடமுள்ள எல்லா தொழிலுக்கு உங்க பலம் தேவையாச்சே தலை.. இந்த முட்டாள் உலகம் எல்லாத்துலயும் தர்கத்தை தானே தேடுது ஷேர் மார்க்கெட் உள்பட.

செவ்:
அப்போ தர்கம் தேவைப்படாத இடத்துல என் பலம் உதவாதுங்கறியா?

நான்:
இல்லையா பின்னே..

செவ்:
செல்லம் ! வாளை தூக்கி வீச தெரிஞ்சவனுக்கு  அதை தூக்கி வீசவும் தெரியுமில்லை. தர்கத்தை முழுக்க அறிஞ்சவனுக்கு அதை தூக்கி வீசறதும் ஈஸிதானே .  அரை குறைங்கதான் நடுக்கத்துல  கக்கா போறச்ச கூட கத்தி வச்சுக்கிட்டிருக்கும்.

நான்:
அப்போ .. நீங்க ஆல் இன் ஆல் அழகுராஜாங்கறிங்க..

செவ்:
லேசா மாத்தி சொல்லு. என்னோட பலம் உள்ளவன் ஆல் இன் ஆல் அழகுராஜா..

நான்:
நம்முது கடகலக்னம். ஜாதகத்துல  நாலாமிடத்துல நின்னிருக்கிங்க.  ஜீவனாதிபதி 4 ல் நின்று 4 க்கு அதிபதி 2 ல  நின்னா நிட்சேப யோகம்னு எங்கயோ படிச்சன். அதாவது  புதையல் எடுக்கனுமாம். அங்கங்கே புதையல் எடுக்க க்ரூப்பா அலையறானுவ . எனக்கு மட்டும் அந்த எண்ணமே அருவறுப்பா இருக்கே ஏன் பாஸூ..

செவ்:
என்னை கிண்டி விட்டு மேட்டர் வரவழைக்க பார்க்கிறே..நடக்கட்டும் நடக்கட்டும்.  ஜீவனம்ங்கறது பொளப்பை காட்டற இடம் . 4ங்கறது வித்யாஸ்தானம் . அதாவது உன் பொளப்பே லெர்னிங். ச்சொம்மா படிச்சுக்கிட்டே இருந்தா கண்ணு தான்  டப்ஸாகும். முதுகு வலிக்கும். பைல்ஸ் வரும். படிச்சதை செரிச்சுக்கிட்டு வாயா வார்த்தையா நாலு பேருக்கு சொன்னா தானே நாலு காசு பார்க்கலாம்.  அதனாலதேன் 10 க்கு அதிபதி 4 ல நின்னு  அதுக்கு அதிபதி  2 ல நின்னா புதையல் யோகம்னு சொல்லியிருக்காய்ங்க.

நான்:
அது சரி 4 ங்கறது தாய்,வீடு,வாகனம் இத்யாதிய கூட காட்டுதில்லியா?  அந்த மேட்டர்ல ஏன் ஒர்க் அவுட் ஆகலை?

செவ்:
கொய்யால ஒங்க வீடே உன் அம்மா பேர்ல தானே இருந்தது. அதை வித்து உன் ஷேரா கொடுத்த லட்சத்து ரெண்டாயிரத்தை நாசமாக்கினதை மறந்துட்டியா?

நான்:
ஓ இப்படி வரிங்களா? வந்தது ஓகே.அது ஏன் நாசமா போச்சு?

செவ்:
நான் 4 ஆமிடத்துல நின்னா தரித்திரயோகம்னு ஒரு விதி இருக்குல்ல. அதான்

நான்:
என்ன பாஸூ .. 4 ஆமிடத்துல செவ் இருந்தா (விஷய ஞான) புதையல் எடுக்கனுங்கறிங்க.அப்பாறம் பார்த்தா தரித்திர யோகம்ங்கறிங்க? குழப்பமா இருக்கே.

செவ்:
கண்ணா .. 4ங்கறது வித்யாஸ்தானம். நான் தர்க்கத்துக்கு அதிபதி . எல்லா வித்தைகளுக்கும் தர்கம் தான் அடிப்படை . அதனால  விஷய ஞானத்துல புலி ஆயிட்டே. பையில பைசா இருக்கிறச்ச நீ எத்தீனி மேட்டரை தெரிஞ்சுக்கிட்டே. வவுத்துல பசி இருக்கிறச்ச எத்தீனி மேட்டரை தெரிஞ்சுக்கிட்டே கணக்கு போட்டு பாரு.. கும்பி காஞ்சாதான் மேட்டர் உள்ள போகும் அம்பீ !

நான்:
இப்படி வர்ரிங்க .ஓகே ஓகே.. உலக ஞான விஷயங்கள்ள தர்க்கம் ஓகே. 120 வயசு கிழவாடில்லாம் ஆன்மீகத்தோட சில்லி வேரை பிடிச்சு சிங்கியடிச்சுக்கிட்டிருக்காய்ங்க.ஆனால் நமக்கு மட்டும் அசால்ட்டா ஆணிவேரே மாட்டிக்கிச்சே .ஆன்மீகத்துல தர்க்கமே கிடையாதில்லியா? இது எப்படி சாத்தியமாச்சு?

செவ்:
நாலாமிடத்துல நான் மட்டுமா இருக்கேன். என்னோட கேதுவும் இருக்காரில்லை. கேதுதானே ஞானகாரகம் -மோட்ச காரகன்.

நான்:
அது சரி நீங்க 3,6,10,11 தவிர எங்கன இருந்தாலும் தோஷம்ங்கறாய்ங்க. அப்போ நாலாமிடத்துல நீங்க இருந்தா  தோஷத்தை தானே தரனும். அது எப்படி ஆன்மீகம் -லௌகீகம்னு ரெண்டு மேட்டர்லயும் நன்மைய தந்திருக்கிங்க?

செவ்:
நைனா ..சினிமா ஷூட்டிங்ல லைட்ஸ் ஆன் பண்ணதும் வெறும் வெளிச்சம் மட்டுமா வருது. சூடு கூட பரவுதில்லை.  அப்படித்தேன் இதுவும். 4ங்கறது தாயை காட்டற பாவம். அம்மாவுக்கு உன்னோட 17 வயசுலயே டிக்கெட் போட்டுட்டம்.

4 ங்கறது வித்யா ஸ்தானம் 20 வயசுல படிப்பு க்ளோஸு. ஒடம்பெல்லாம் ப்ரெய்னனை வச்சிருந்தாலும் ஹால் டிக்கெட்டை காணாம போக்கி ஆப்படிச்சமா இல்லியா?

4ங்கறது வீட்டை காட்டற இடம் . 24 வயசுலயே ஒன்னை வீட்டை விட்டு வெளியேத்தி அங்காடி நாயா அலைய விட்டமில்லை. வாடகை வீடுகள்ள அல்லாடினியா இல்லியா?  3 நாள்லயெல்லாம் வீட்டை மாத்தியிருக்க இல்லியா? 30 வயசுல ஏகமா வீட்டை ஆட்டைய போட்டுட்டம். அதை வித்து வந்த பணத்தை கூட எரிச்சுட்டமில்லை. மேசை நாற்காலில்லாம் கூட வித்து தின்னிருக்கல்லியா? இதான் தோஷம்.

நான்:
அது சரி.. அப்பம் செவ்வாயோட கேது சேர்ந்தா தோஷம் பரிகாரங்கறாய்ங்களே..

செவ்:
கண்ணா .. நீ மட்டுமில்லை. நாட்ல நிறைய பேரு தோஷ பரிகாரம்னா தோஷத்தை காக்கா தூக்கிட்டு போயிரும்னு நினைக்கிறாய்ங்க. தோஷம்னா டேமேஜஸ். பரிகாரம்னா டெமரேஜஸ். தமிழ்ல சொன்னா தோஷம்ங்கறது நஷ்டம். பரிகாரம்ங்கறது நஷ்ட ஈடு. ஒன்னையே எடுத்துக்க அம்மாவுக்கு டிக்கெட் போட்டம் . ஆனால் ஆத்தா அந்த இடத்தை ஃபில் அப் பண்றாள். வீட்டை காலி பண்ணிட்டம். இந்திய நாடு என் வீடுங்கற ரேஞ்சுக்கு ஒன்னை  கொண்டு வந்துட்டம் . அடுத்து வாகனம்னா பாரதி சொன்னாப்ல ஞான ரதத்தோட ஸ்டீரிங்கையே கையில கொடுத்துட்டம் .  கூட கேது மட்டுமில்லாம இருந்திருந்தா போனதை நினைச்சே நாறியிருப்பே. கூட கேது இருந்ததால எது போனாலும் - இதை பாலன்ஸ் பண்ண  எதுவரும்னு கெஸ் பண்ண ஆரம்பிச்சுட்ட.

சுந்தர சைதன்யானந்தா சொல்றாப்ல கடவுள் எதையாச்சும் கொடுத்தா பிரசாதம் -எடுத்துக்கிட்டா காணிக்கைங்கற மன நிலைக்கு வந்துட்ட. இதுக்கு மிஞ்சின பரிகாரம் என்னா வேணம்ங்கறே..

(செவ்வாயுடன் பேட்டி தொடரும்)

Sunday, December 23, 2012

சந்திரனுடன் பேட்டி : இறுதி பகுதி



அண்ணே வணக்கம்ணே !
சந்திரனுடன் பேட்டிங்கற தலைப்புல சில பதிவுகள் போட்டுக்கிட்டு வந்தம். சந்திரன்னாலே அன்செர்ட்டெனிட்டி தானே. (நிச்சயமற்ற தன்மை)

நம்முது கலப்பு திருமணம்ங்கறது ஞா இருக்கலாம். என்னைக்கு நடந்ததுன்னு கேளுங்களேன். அட சொம்மா கேளுங்களேன்

தேதி 29 ,மாசம் 11 (நவம்பர்) .வருசம் 1991. தேதி,மாசம்,வருசம் இந்த 3 ஐயும் தனித்தனியே கூட்டி சிங்கிள் நெம்பராக்கினா 2 வரும். இது சந்திர காரகம் கொண்ட எண்.

ஒரு 14 வருசம் .. லைஃப் எந்த ரூட்ல போகுதுன்னே சுதாரிச்சுக்க  முடியாத அளவுக்கு திடீர் தன்மை.

எல்லாத்தையும் கூட்டி சிங்கிள் நெம்பராக்கினா 6 வரும் .இது சுக்கிர காரகம்ங்கறதால தப்பிச்சம்.

  துவங்கும்போது முடியும் –முடியும் போது துவங்கும். அதனாலதேன் இந்த இழுபறி. எப்படியோ இந்த மேட்டர் இந்த பதிவோட முடியுது.  அடுத்தது செவ்வாய் தான். பேட்டிக்கு போயிரலாமா?

நான்:

பாஸ் ! இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கோ ஆப்பரேட் பண்ணிருங்க. ஜஸ்ட் சில கேள்விகள் மட்டும் தான்.

சந்திரன்:  கேளுப்பா

நான்:

ஜாதகத்துல உங்களோட பலம் இல்லேன்னு வைங்க .என்ன ஆகும்?

சந்திரன்:

விருச்சிக ராசிக்காரன் பொளப்பாயிரும்.

நான்:
அதென்ன பாஸ் இப்டி சொல்ட்டிங்க..அப்பம் சனத்தொகையில ஒன் பை ட்வல்வ்  பொளப்பு நாறிப் போன பொளப்பு  தானா?

சந்திரன்:
நாற பொளப்புன்னு சொன்னேனா?  அவிக ஜாதகத்துல நான் நீசமாறதால - மத்த கிரகங்களோட பலத்தால அந்த கிரகங்களோட காரகத்வம் கொண்ட மத்த எல்லாமே இருந்தாலும் . அவிக மனசு மட்டும்  இல்லாததுக்கே ஏங்கிக்கிட்டிருக்கும்.

நான்:

இல்லாததுக்கு ஏங்கறது சகஜம் தானே பாஸூ..ஹ்யூமன் சைக்காலஜி இதானே

சந்திரன்:

இல்லாததுக்கு ஏங்கறது வேற .. ஆனால் இவிக இல்லாததை நினைச்சு இருக்கிறதை எல்லாம் மறந்துட்டு எல்லாரையும் கடுப்படிச்சுக்கிட்டிருப்பாய்ங்க.


நான்:
அது எப்படி?

சந்திரன்:
எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு  பப்பா மாதிரி கேள்வி கேட்டா எனக்கு கடுப்பாயிரும். உன்னை சுத்தி எத்தீனி விருச்சிக ராசி காரவுக இருக்காய்ங்க. அவிகளை கன்வின்ஸ் பண்ண முடியாம எத்தீனி தாட்டி நீ கடுப்பாகியிருப்பே.

நான்:
ஓ நீங்க அப்படி வர்ரிங்களா? செரி செரி..இந்த விருச்சிக ராசிக்காரவுக லைஃப்ல முக்கியமா நான் கவனிச்சது என்னடான்னா எப்பவும் அதிருப்தியிலயே இருப்பாய்ங்க. அசந்தர்ப்ப ப்ரலாபணம் சாஸ்தி . எப்பம் என்ன பேசறதுங்கற விவஸ்தையே இருக்காது. செய்றதென்னமோ நல்லதாவே கூட இருக்கும்.ஆனால்   ஒவ்வொரு பேச்சும் தேள் கொட்டறாப்ல இருக்கும். பஜார்ல விஜாரிச்சா ஒருத்தங்கூட இவிகளை நெல்லவன்னு சொல்லமாட்டாய்ங்க. அதே போல இவனும் எவனையும் நெல்லவன்னு சொல்லமாட்டான். உங்க பலம் இல்லின்னா சனம் நிலைமை இப்படி ஆயிரும். அதானே ?

சந்திரன்:  ஆமாப்பா..

நான்:
இட்ஸ் ஓகே .. நெக்ஸ்ட் க்வஸ்டியன். உங்க பலம் இல்லின்னா இன்னம் என்னெல்லாம் நடக்கும் சொல்லுங்க

சந்திரன்:
இவிக போர் போட்டா தண்ணி வராது -வந்து தொலைச்சா இவிகளுக்கு நுரையீரல் -சிறு நீரகம் தொடர்பான வியாதி வரும். புகை , தூசு, நெடி இருக்கிற தொழில்ல இருப்பாய்ங்க. அது தொடர்பான வியாதிகள் வரும்.
எப்பயும் சண்டைக்கு காலை பிறாண்டிக்கிட்டே இருப்பாய்ங்க. சைக்கியாட் ரிஸ்டுகளை வாழ வைக்கிறதே இவிக தான். ஒன்னு தண்ணியை பயங்கரமா வீணாக்குவாய்ங்க .இல்லின்னா குளிக்க கூட மாட்டாய்ங்க. நாறும்.

ஓவர் டு மீ:
பாஸ் ! சந்திரனை பத்தி எழுதனும்னா 365 நாள் தொடர்ந்து ஒவ்வொரு பதிவு போடலாம். ஆனால் இந்த விடியல் நேரத்துலயாவது –எந்த இமிசையும் இல்லாம -  சில ஜாதகங்களுக்காவது பலன் பதிவு பண்ணிட்டாதேன் அடுத்து ரெப் அவதாரம் எடுக்க முடியும். அதனால அம்பேல்

சந்திரனுடன் இன்ன பிற கிரகங்கள் சேர்வதை வைத்து உங்க ஐக்யூவை சாஸ்தி பண்ணிக்க சில க்ளூஸ் தரேன். ஆக்சுவல் பலன் என்னவா இருக்கும்னு கெஸ் பண்ணி கமெண்ட் போடுங்க.



சந்திரன்+சூரியன்: 
சந்திரன்னா மனம்+ சூரியன்னா அறிவு , சந்திரன்னா அடித்தட்டு மக்கள் ,சூரியன்னா தானகுணம்

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+செவ்வாய்:
சந்திரன்னா நிலையற்ற தன்மை ,செவ்வாய்னா ரியல் எஸ்டேட் சந்திரன் = நீர், செவ் = நெருப்பு

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+ராகு
சந்திரன்னா  நுரையீரல்,சிறு நீரகம்,  ராகுன்னா கிருமிகள், சந்திரன்னா சிறு நீரகம் ராகுன்னா லிக்கர் , சந்திரன்னா நுரையீரல் , ராகுன்னா டொபேக்கோ புகையிலை
சந்திரன்னா மனசு , ராகுன்னா சதிகள், ரகசிய எதிரிகள்

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+ குரு
சந்திரன்னா  நிச்சயமற்ற தன்மை குருன்னா பணம், சந்திரன்னா மனசு ,குருன்னா தெய்வீக சிந்தனைகள், சந்திரன்னா மனசு ,குருன்னா ஞா சக்தி,திட்டமிடல்,குருன்னா புத்திரகாரகன், சந்திரன் ரெண்டேகால் நாள்ள ஓடிப்போற கிரகம்.

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+சனி
சந்திரன்னா இன்ஸ்டெபிலிட்டி ,சனின்னா நெவஸ் செட் அப், சந்திரன்னா திரவம் ,எதிர்பாராத்தன்மை ,சனின்னா ஆசனம், சந்திரன்னா மனசு , அப் அண்ட் டவுன்ஸ் சனின்னா லாங் டெர்ம் ப்ராஜக்ட்ஸ் ,

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+புதன்
சந்திரன்னா இன்ஸ்டெபிலிட்டி  புதன்னா வியாபாரம், சந்திரன்னா மனசு புதன்னா கல்வி , சந்திரன்னா மனசு  புதன்னா வைத்தியம்

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+கேது
சந்திரன்+ராகுவுக்கான க்ளூஸையே ரிப்பீட் பண்ணிக்கங்க. கூடுதலா  சந்திரன்னா மனசு கேதுன்னா விரக்தி.

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+சுக்கிரன்
சந்திரன்னா மனசு ,சுக்கிரன்னா கில்மா,  சந்திரன் ரெண்டே கால் நாள்ள ராசி மாறிரக்கூடிய கிரகம், 14 நாட்கள்ள தன் நேச்சரை மாத்திக்கக்கூடிய கிரகம்.
செக்ஸ்ங்கறது ? ஆசை 60 மோகம் 30 ன்னு வச்சுக்கிட்டாலும் 90 நாள் ஒரே மாதிரி மெயின்டெய்ன் பண்ணவேண்டிய மேட்டர்.

 இதனோட விளைவு என்னவா இருக்கும்?

எல்லாத்தையும் ரோசிச்சு கமெண்டா போடுங்க… நாளைக்கு நம்ம வெர்சனை கொடுத்துட்டு செவ்வாயை பேட்டி எடுக்க போயிரலாம். ஓகேவா? உடுங்க ஜூட்டு.

ப்ளாகர்ல தோழமைகளையும் -அவிக பக்கங்களையும் குறிப்பிடற வசதி வந்துருக்காமே.. நாம குறிப்பிட வேண்டிய மொத பார்ட்டி @கோவி.கண்ணன்

Wednesday, December 19, 2012

இன்று போய் நாளை வா!

அண்ணே வணக்கம்ணே !

ராவணன் தேர், ஆயுதம் இழந்து கைய பிசிஞ்சப்போ ராமர் விட்ட வசனம் இது. இதே டைட்டில்ல பாக்கியராஜூ படம் கூட பண்ணாப்ல ஞா. நம்ம ஊரு கல்வித்தந்தை ஒருத்தரு 50 வயசுல இந்த கதைய படமாக்கி நடிச்சாப்ல கூட ஒரு டேட்டா மைண்டுல இருக்கு. ஒழியட்டும்.மேட்டருக்கு வ்ரேன்.

நவகிரகங்களுடன் பேட்டி தொடர் வந்துக்கிட்டிருந்தது. இடையில காணாம போயிட்டம். சந்திரனோட பேட்டி தொடரவே இல்லை.

சூரியனோட பேட்டி எழுதிட்டிருந்தப்போ எப்டி சஞ்சாரியா மாறிட்டமோ.. அப்படியே சந்திரனை பத்தி எழுத ஆரம்பிச்சதும்..

இன்ஸ்டெபிலிட்டி,அன்சர்ட்டெனிட்டி,அப் அண்ட் டவுன்ஸ்.ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு.  நம்ம சிஸ்டம் 6 மாசத்துக்கு கட்டின பசுவா இருக்கும். திடீர்னு புரட்சி பண்ணும். எப்டியோ அஜீஸ் ஆயிரும்.நாமளே செட் ரைட் பண்ணிருவம். இந்த தபா ரெண்டு தாட்டி ஜேம்ஸை டிஸ்டர்ப் பண்ணவேண்டியதாயிருச்சு. (இது கொசுறு). டிசம்பர் 23 ஆம் தேதி லக்னாத் அஞ்சுல இருந்து விலகப்போற ராகு கடேசியா லொள்ளு பண்ணிட்டாரு.

ஏன்? ஏன் ?

ஏனிந்த இடைவெளி ?

ஏன் பதிவுகள் போடறதில்லை?

ஏன் நோ அப்டேட்ஸ்னு நிறைய பேரு ஃபோன் பண்றாய்ங்க.

எனக்கு கடந்த 6 மாதங்களா ஸ்கின் ப்ராப்ளம்ங்கற மேட்டரு உங்களுக்கு தெரியும்.பாட்டி வைத்தியம் ,ஆன்ட்டி வைத்தியம் எல்லாம் கை விட்டுருச்சு. ஸ்பெஷலிஸ்டு கிட்டே சரண்ட ர் ஆயிட்டம்.

தினசரி பெத்தடின் கணக்கா மாத்திரை போட்டாகனும். போடலின்னா சீன் ரிவர்ஸ். ஹிட்சிங் ஆரம்பிச்சுரும். போட்டா வயித்துல எரிச்சல், தூக்கம் வரமாதிரியே ஒரு ஃபீலிங் ,படுத்தா தூக்கம்வராது.

இதெல்லாம் ஒரு பக்கம்னா இன்னொரு பக்கம் நாம நடத்திக்கிட்டிருக்கிற  ஆட் பேஸ்ட்  லோக்கல் மேகசின் சார்பில் ரெண்டு வித காலண்டர் ப்ளான் செய்து ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்கம்.

டோட்டல் பட்ஜெட் ரூ.2 லட்சம். நாம கையில இருந்து வைக்கவேண்டியது இல்லின்னாலும் நூத்துக்கணக்கான பேரை சந்திக்கனும் - ஸ்பான்சர் பண்ண சொல்லி கேட்கனும்.

ஃபாலோ அப் பண்ணனும். காசுக்கு ரிமைண்ட் பண்ணனும். கொஞ்சம் கோட்டை விட்டாலும் காலண்டர் ரிலீஸ் லேட் ஆயிரும். வாயிதா போயிரும்.

ஆன்லைன் ஜோதிட ஆலோசனை வேற நொண்டியடிக்குது. பதிவாச்சும் பரவால்லை ச்சொம்மா சொந்த கதைய எடுத்து விட்டுட்டாலும் மொக்கைய்யானுட்டு போயிருவிக. ஜாதக பலன்ல சொதப்பிட்டா நாறிரும்.

பகல் எல்லாம் அலைச்சல். அதுலயும் இந்த காசு பணத்தை டீல் பண்ணி பலகாலம் ஆச்சா தடுமாற்றமா இருக்கு.  நான் யாரு? என் வேலை என்ன? நான் என்ன செய்துக்கிட்டிருக்கேங்கற கேள்வி வரும்போது மனசு அப்படியே இந்த பக்கம் ஃபோக்கஸ் ஆகுது.ஆனால்  சிஸ்டம் ஷெட். ப்ரவுசிங் சென்டருக்கு போகலாம்னா அது பெரிய நரகம். டச் விட்டுப்போச்சு.

இப்பவும் எட்டுமணிக்கு மொதல் அப்பாய்ண்ட்மென்ட் (காலண்டர் மேட்டரு) பார்ட்டி கன்வின்ஸ் ஆனா ஒரே தாட்டியா ரூ.10,400 ஜெனரேட் ஆயிரும். அதுக்குள்ற ப்ரிண்ட் ஆயிட்ட காலண்டருக்கு பின்னாடி ஒட்ட டிஃப்ரண்டா ஒரு பேஜ் டிசைன் பண்ணியாகனும்.

ராகு,குளிகன்,எமகண்டம்னு நெகட்டிவா போடாம ஒவ்வொரு நாளும் நல்ல நேரம் எதுன்னு தந்துரனும். மேலும் இந்த காலண்டர்கள் வெளியாக முக்கிய காரணம் நம்ம தொகுதி எம்.எல்.ஏவுக்கு இருக்கிற சரிஸ்மா. அவிக சீடகோடிகள் தான் ஸ்பான்சரர்ஸ். எனவே அவரை பத்தி ஒரு அரைப்பக்கம் மேட்டர் கொடுக்கனும்.

ஜாதகங்கள் வேற நிலுவையில இருக்கு. வாய்தா சொல்லிக்கினு கழண்டுக்கத்தேன் பதிவு. எனவே மொக்கை தாங்கலை இன்று போய் நாளை வான்னு நீங்க சொல்றதுக்கு மிந்தி நானே இன்று போய் நாளை வருகிறேன்.

ரெடியா இருங்க..

குறிப்பு:
பதிவுக்கும் பெரியாருக்கும் என்னய்யா சம்பந்தமுன்னு கேப்பிக.சொல்றேன் எல்லா சாமியும் கை விட்டுருச்சோங்கற டவுட்டு வரும்போது பெரியாரை டெஸ்க் டாப்ல கொண்டு வந்துர்ரது வழக்கம். ஹி ஹி..

Friday, December 14, 2012

சந்திரன் பேட்டி : சஞ்சலம்

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டி இந்த பதிவுலயும் தொடருது. சந்திரன் 11 முதல் 16 கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவுல தராரு. சொந்த கதை இல்லாம பதிவுக்கு போயிட்டா எப்டி? 15'X12" மல்ட்டி கலர் டேட் காலண்டர்  2 ரகம், 15"X20" கம்பி காலண்டர் 1 ரகம் தயாராயிட்டிருக்கு.

டேட் காலண்டர்ல ஒன்னு கூட்டுறவே நாட்டுயர்வு பாணியில  40 பேர் சேர்ந்து போடறோம். இன்னொன்னை தனியார்மயம் ரேஞ்சுல அஞ்சு பேர் சேர்ந்து போடறாய்ங்க. கம்பி காலண்டர் 12 பேர் ஸ்பான்சரர்ஸ். சனம் தற்சமயம் கையில கொடுத்திருக்கிற காசையும் - ஒட்டு மொத்த முதலீடையும் மேட்ச் பண்ணி பார்த்தா கண்ணு சுத்துது. பட்ஜெட்ல துண்டு இல்லை வேட்டியே விழுது .  ஆனால் ஒன்னு ஆத்தா நம்ம பின்னாடி இருக்கிறதால ஒர்க் அவுட் ஆயிரும். அப்படி ஆத்தா கைய விட்டுட்டான்னு வைங்களேன் நம்ம கிரிமினல் நாலட்ஜை உபயோகிச்சு டிவைட் அண்ட்  ரூல் பாலிசி மாதிரி - எல்லா ப்ராஜக்டும் வந்திருக்கிற அட்வான்ஸை திரட்டி ஒவ்வொரு ப்ராஜக்டா முடிக்கிறது. கடைசி ப்ராஜக்டு ஜனவரி 1 ஆம் தேதி வந்தா போதும். இது எப்படி இருக்கு?

சரிங்ணா சந்திரனோட பதில்களுக்கு போயிருவமா?

11. சஞ்சலத்துக்கு நீங்கதேன் காரகமாம். சஞ்சலத்தால நன்மையா தீமையா?
சஞ்சலம்னா என்ன? டைலமா. செய்யலாமா வேணாமா? போகலாமா  வேணாமா?ன்னு தொட்டதுக்கெல்லாம் தயங்கறதுதான் டைலமா. தாத்தா மொதல்ல சில்லறை வணிகத்துல அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்புன்னாரு,அப்பாறம் சஸ்பென்ஸுன்னாரு,அப்பாறம் பார்த்தா மானங்கெட்டு போயி ஆதரவா ஓட்டு கூட போட்டுட்டாய்ங்க. சஞ்சலத்துக்கு இதை விட உதாரணம் என்ன வேணம்?
ராத்திரி நேரத்துல - மொட்டை மாடியில - நாடா கட்டில்ல படுத்துக்கிட்டு என்னை அப்சர்வ் பண்ற பார்ட்டியா இருந்தா என்னை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிருக்கலாம். ஏற்கெனவே சொன்ன படி 14 நாள் வளர்ச்சி -14 நாள் தேய்வு தெரிஞ்ச கதை. ரெண்டேகால் நாள்ள ராசி மார்ரது , ஒரே நாள்ள நட்சத்திரம் மார்ரது , 6 மணி நேரத்துல பாதம் மார்ரதும் தெரிஞ்ச கதைதான். இந்த 6 மணி நேரத்துலயாச்சும்  ஒரே நிலை இருக்குமான்னா இருக்காது.
என் மேல மேகங்கள் நகர்ந்து போயிட்டே இருக்கும். இந்த காட்சியை  பார்க்க  நான் தான் சிட்டி பஸ் பிடிக்க ஓடிக்கிட்டிருக்கிறாப்ல தோனும். கரிய மேகங்கள் என்னை மூடறதும் - விலகறதுமா இருக்கும். இதனால நிமிஷ நிமிஷத்துக்கு என்னோட பிரகாசம் கூடும் குறையும்.
மனித மனமும் இப்படி தான். என் மேல மேகங்கள் நகர்ந்து போறாப்ல உங்க மனதில் அ  மனதினூடே பல விசயங்கள்  நல்லதும் கெட்டதுமா  வரும் போகும். மேகங்களால நான் பாதிக்கப்படறதில்லை.ஆனால் நீங்க மேகங்கள் போல வந்து போற எண்ணங்களால  பாதிக்கப்பட்டுர்ரிங்க.
இலங்கை தமிழர்கள் மேட்டர்ல கலைஞர் ரெம்பவே அடக்கி வாசிச்சு தமிழின துரோகியா மாறினதுக்கு காரணம் எண்ணங்கள். என்னங்கடா இது ஏற்கெனவே   இதே மேட்டர்ல ஆட்சிய கலைச்சுட்டாய்ங்க .மறுபடி கலைச்சுருவாய்ங்களோங்கற எண்ணம்.
எண்ணத்தால தாத்தா பாதிக்கப்பட்டுட்டாரு. அதே நேரம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் - ஒரு ஃபோன் மேசேஜ் வந்ததுமே நிறுத்தம். காரணம் சஞ்சலம். இந்த சஞ்சலத்தால எவ்ளோ பெரிய நஷ்டம் நடந்துருச்சுன்னு அல்லாருக்கும் தெரியும். இந்த வகை சஞ்சலத்தால தீமை தேன்.
இதுவே புர்ச்சி தலைவரு மந்திரிங்க சொத்துக்கணக்கை வெளியிடனும்னு அறிக்கை விட்டாரு. தாத்தா கல்தா கொடுத்துட்டாரு. வாத்யாருக்கு சஞ்சலம். சத்யா ஸ்டுடியோவுல முடங்கிட்டாரு. ரைட்டா லெஃப்டா.. புர்ச்சி தலைவர் கட்சி தலைமை கிட்டே  மன்னிப்பு கேட்டு லெட்டர் கொடுத்தா போதும்னு ட்ராஃப்ட் எல்லாம் அனுப்பிட்டாய்ங்களாம்.
இங்கன ரசிகர்களோட நிலை வேறயா இருக்கு. கொந்தளிச்சு போயி கூட்டம் கூட்டமா வாத்யாரை தேடி வர்ராய்ங்க. வண்டி கட்டிக்கிட்டு வர்ராய்ங்க.வேன்ல வராய்ங்க. கூட்டம் நாளுக்கு நாள் எகிறிக்கிட்டே போச்சு. வாத்யாரு சஞ்சலத்துக்கு டாட்டா சொல்ட்டு தாளி தனிக்கட்சிதான்யான்னுட்டாரு.
இதே  முடிவை மொதல்லயே எடுத்திருந்தா கட்சிக்காரங்க,ரசிகர்ங்களே என்னருந்தாலும்  சின்னவரு கொஞ்சம் ஓவரா போயிட்டாரு - மன்னிப்பு கேட்டிருக்கலாம்னு பேசியிருப்பாய்ங்க. இதுவும் சஞ்சலம் தான் . ஆனால் இந்த சஞ்சலத்தால நன்மை தான்.
சோதிடப்படி சொன்னா ஜாதகப்படி என்னோட பலம் உள்ளவுகளுக்கு கோசாரத்துல என்னோட  பலம் இல்லாத நாட்கள்ள வர்ர சஞ்சலம் நன்மையில முடியும். ஒரு நாள் -ரெண்டு நாள்ள கோசாரத்துல  நான் அனுகூல நிலைக்கு வந்துட்டன்னு வையேன் சரியான முடிவு அவிக மேல திணிக்கப்பட்டுரும்.
இதுவே ஜாதகப்படி என்னோட பலம் இல்லாதவுகளுக்கு - கோசாரத்துல  என்னோட பலம் உள்ள நாட்கள்ள வர்ர சஞ்சலம் தீமையில முடியும். ஒரு நாள் ரெண்டு நாள்ள  கோசாரத்துல நான் பிரதிகூல நிலைக்கு வந்துன்னு வையேன் அவிக எடுத்த சரியான முடிவே தப்பான முடிவா மாறிரும்.



Thursday, December 13, 2012

சந்திரனுடன் பேட்டி: 3

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டி தொடர்கிறது. சந்திரன் 6 முதல் 10 வரையிலான கேள்விகளுக்கு இன்னைக்கு பதில் சொல்லப்போறாரு

6.உங்களுக்கு எந்த கிரகமும் பகையில்லைங்கறாய்ங்களே அது இன்னா கணக்கு?

எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட்னு ஒரு விதியிருக்கு தெரியுமோ? உ.ம்  அக்னி முக தொழில் செய்வோர் செவ்வாய்.  எந்த தொழில் எப்படிப்பட்டதுன்னு "அறிவால்" யோசித்தால் இது நல்லது -இது கெட்டதுன்னு சொல்லிரலாம் .அதே போல  "அறிவால்" யோசித்தால் இவன் நெல்லவன் -இவன் கெட்டவன்னு கரீட்டா சொல்லிரலாம்.

ஆனால்   மனசால ரோசிச்சா விபச்சாரத்தை கூட தப்பான தொழில்னு சொல்லிர முடியாது. ஒரு பாலியல் தொழிலாளியை கூட  கெட்டவள்னு சொல்ல முடியாது.

நான் மனோகாரகன். எப்படியா கொத்த மொள்ளமாரி,முடிச்சவிக்கிக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கும்.இந்த ஓலகத்துலாஆரோ ஒருத்தர் மேலயாச்சும் - துக்கிளியூன்டு பாசமாச்சும் வச்சுருப்பான்.

ஆக மனசால ரோசிக்கிற மன்சன் சந்திரன். அதாவது நான்.   நான் ஆரையாவது குற்றம் சொல்ல முடியுமா? அல்லது பகைக்க முடியுமா?

நான் ஜலகாரகன்(தண்ணீர்) . நான் எதனோட வேணம்னா கலந்துருவன். நான் எதோட கலக்கிறேனோ அதனோட குணம் எனக்கு வந்துரும். அப்புறம் பகையேது?

சூரியனோட சேர்ரேன்னு வை அவர் அறிவு (செல்ஃப்) நான் மனசு . இந்த ரெண்டும் ஒரே பாய்ண்ட்ல நிக்கிறது ரெம்ப கஷ்டம் . நின்னா சாதிக்க முடியாதது எதுவுமில்லை.

செவ்வாயோட சேர்ரேனு வை. அவர் நெருப்பு நான் தண்ணி. அவரோட உஷ்ணத்தை தண்ணிப்பேன். ராகுவோட சேர்ரேன்னு வை. அவரு இல்லீகல் ஆக்டிவ்விட்டீஸுக்கு காரகம். நான் ராத்திரி வேளையில பலவான். மேற்படி வேலைகளுக்கு ராப்போதுதானே வசதி. இப்படி சொல்லிட்டே போகலாம்.அதனாலதான் எனக்கு ஆரோடவும் பகையில்லைன்னு ஒரு விதிவச்சிருக்காய்ங்க.

7.பிரமுகர்களின் மனைவிகளுக்கு நீங்க தான் அதிபதியாம் இதுக்கு என்ன காரணம்?
என்னோட நேச்சர் என்ன? எனக்கு சொந்த ஒளி கிடையாது. சூரியனோட ஒளியை பிரதிபலிக்கிறேன். பிரமுகர்களோட மனைவியருக்கு சொந்த புகழ் ஏது? கணவர்களோட புகழை வச்சு வண்டி ஓடும். அதனாலதேன் பிரமுகர்களின் மனைவியருக்கு நான் காரகம்.
மேலும் எல்லா விஐபியும் எவன் எப்ப கவுத்துருவானோன்னு அறிவுப்பூர்வமாவே ரோசிச்சு ரெம்ப ட்ரையா இருப்பான். பெண் பேசிக்கலி கொஞ்சம் சென்டிமென்ட் பார்ட்டி. இதுல புருசங்காரன் இப்படி சதா சர்வ காலம் அறிவுப்பூர்வமாவே இருக்கிறதால - எக்கனாமிக்கல் பொட்டன்ஷியாலிட்டி இருக்கிறதால அவள் கொஞ்சம் ஈவு இரக்கம்லாம் உள்ளவளா இருக்க வாய்ப்புண்டு.
சந்திரபலம் இருந்தாதான் ஈவு இரக்கம்லாம் இருக்கும் . ஆகவே ஒரு பிரமுகரின் மனைவிக்கு இந்த மாதிரி கேரக்டர் மீது ஈர்ப்பு வர வசதியிருக்கு.

8. தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவுக்கெல்லாம் உங்க பலம் அத்யாவசியம்ங்கறாய்ங்க. இதன் பின்னான தர்க்கம் என்ன?
ஏதோ சினிமால ஒரு வசனம் உண்டு "கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்"  தாய்ங்கறவள் மனசால ரோசிப்பா. அப்பன் அறிவால. என்னோட பலம் உள்ள ஜாதகன்மனசாலதான் ரோசிப்பான். இப்படியா கொத்தவனை அப்பன் பெருசா லைக் பண்ண மாட்டான்.ஆனால் தாய்? நிச்சயம் விரும்புவாள்.
சந்திர பலம் உள்ளவன் மனசால யோசிப்பான். தாயும் மனசால யோசிக்கிறவள். அதனால ஒரு ஜாதகத்துல சந்திரபலம் இருந்தா அவன் மனசால ரோசிப்பதோடு - தாயின்  அன்பையும் பெறுகிறான். தாயையும் நேசிக்கிறான். இதனாலதேன் தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவுக்கெல்லாம் சந்திர பலம் தேவைன்னு ஒரு விதி இருக்கு.
9.மனம் , நுரையீரல், சிறு நீரகம் இந்த மூன்றுக்கும்  உங்களூக்கும் இடையிலான தொடர்பு என்ன?
வீசிங் - நுரையீரல் தொடர்பான பிரச்சினை . இது வர மன அழுத்தமும் ஒரு காரணம் ( சந்திரன்= மனோகாரகன்) வீசிங் வர்ர நேரத்துல சிறு நீர் வெளியேறாது. (இதை பெரியார் சொல்லிவைக்க நாமும் அனுபவத்துல உணர்ந்திருக்கம்) .
குழந்தைகள் -வெகு சில டீன் ஏஜர்ஸுக்கு கூட படுக்கைய நனைக்கும் பழக்கம் இருக்கும். ( தூக்கத்துல படுக்கையிலயே  ஒன் பாத்ரூம் போயிர்ரது). அதிகம் உணர்வு வயப்பட கூடிய குழந்தைகளுக்கு - இவிக தூக்கத்துலயே பேசிட்டு இருப்பாய்ங்க  -ரெம்ப சென்சிட்டிவ் ஆக இருப்பாய்ங்க.
மேலும்  சிறு நீர்பை பலவீனமாக உள்ளவர்களுக்கும்  இது நடக்கலாம்.  மனம்,நுரையீரல்,சிறு நீரகம் இது மூன்றும் சிறப்பாக இருக்க சந்திர பலம் தேவை. சந்திர பலம் இல்லின்னா மூன்றுமே பிரச்சினை கொடுக்கும்.
கொளந்தைங்களை தூக்கி போட்டு விளையாடும் போது  உங்க முகம் நாறிரும்.ஏன்னா பயம் -மன உணர்வு. மூச்சுக்கும் -யோசனைகளுக்கும் உள்ள தொடர்பை ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.
10.காதல்ல உங்க ரோல் என்ன?
காதல் பிறப்பது கண்களில்னா ஆண்களில் வலது கண்,பெண்களில் இடது கண்ணுக்கு நான் தான் காரகம். மனசுல பிறக்குதுன்னா நான் தான் மனோகாரகன். காதல்ங்கறது எதிர்பாராவிதமா ஏற்படக்கூடிய ஒரு விபத்து. இதுல ஊடல் -கூடல் , உறவு -பிரிவு எல்லாமே எதிர்பாராவிதமாத்தான்  நடக்கும். எந்த விஷயத்துல எல்லாம்    நிச்சயமற்ற தன்மை ,எதிர்பாராத்தன்மை இருக்கோ அதுக்கெல்லாம் நான் தான் காரகம்.
11 முதலான 16 கேள்விகளுக்கு பதில்  நாளை

Wednesday, December 12, 2012

சந்திரனுடன் பேட்டி : 2

அண்ணே வணக்கம்ணே !
நேத்தே சொன்னாப்ல இந்த காலண்டர் ப்ரிண்டிங் வேலை காரணமா சந்திரன் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்ள மொத 5 கேள்விகளுக்கு மட்டும் பதில் கொடுத்திருக்காரு. மத்த கேள்விகளுக்கான பதில் நாளைக்கு. இந்த நிலை டிசம்பர் 15 வரைக்கும்  (இன்னம் 3 நாள் தேன்) . புரிஞ்சுக்கோங்க.

இப்பம் சந்திரனோட பதில்கள் :

1.கடலுக்கும் உங்களுக்கும் என்ன லிங்க்?
செரி.. செரி.. நீ பேட்டி எடுப்பது எப்படிங்கற புஸ்தவம் எதையோ படிச்சுட்டு கேள்வி கேட்கிறாப்ல இருக்கு. என்ன ரிலாக்ஸ்டா வைக்க இப்படி சாதா கேள்வி கேட்கிறேன்னு நினைக்கிறேன்.
 நதி எங்கே போகிறது கடலைத்தேடின்னு ஒரு பாட்டு இருக்குல்ல. அது கிராவிட்டிய பொருத்த விஷயம்.  அப்படி நதி கடலை சேரும் இடத்துல போய் நின்னுக்க.  நான் தேஞ்சுக்கிட்டு வர்ர காலம்னா அது இயல்பான கூடல் போல இயல்பா நடக்கும். அமாவாசைன்னா அரைத்தூக்கத்துல நடக்கிற கூடல் போலன்னு வச்சுக்க.

இதுவே பவுர்ணமி தினம் போய் நில்லு. ஊடலுக்கு பின்னான கூடல் போல இருக்கும்.கடலோட அலைகள் நதியை புறந்தள்ளிக்கிட்டிருக்கும்.  நதி நீர் கடலில் கலக்க ரெம்பவே மெனக்கெடனும். இதான்  கடல் நீர் மேல எனக்குள்ள கட்டுப்பாடு. இதுதான் கடலுக்கு என் பால் உள்ள கவர்ச்சி.

கடல் நீர் - ஹ்யூமன் பாடியில உள்ள வாட்டர் கன்டென்ட் - பனிக்குட நீர் இந்த 3 க்கும் உள்ள கெமிக்கல் காம்பினேஷன்3 ம் ஒன்னுதானாம்

இதனாலதேன் கடலை -கடலலையை நான்  பாதிக்கிறாப்லயே மனித உடலையும் என்னால பாதிக்க முடியுது. மனித உடலில் வாட்டர் கன்டென்ட் 90 சதவீதம்னா நம்ப முடியுதா?

2.ஹ்யூமன் பாடியில உள்ள நுரையீரலுக்கும் உங்களுக்கும் இருக்கிற கனெக்சனுக்கு அடிப்படை என்ன?
 நுரையீரல் -சுவாசிக்கும் உறுப்பு . சுவாசத்துக்கும் எண்ணங்களும் தொடர்பு உண்டு. எண்ணம் வேகமா இருந்தா சுவாசமும் வேகமா இருக்கும். எண்ணம் விவேகத்தோட இருந்தாசுவாசம் மெதுவா இருக்கும். மெதுவான சுவாசம் தீர்காயுளை கொடு்க்கும். நாய்க்கு 14 வருசங்கறாய்ங்க. அதனோட சுவாசத்தை கவனி.  ஆமையோட ஆயுள் சாஸ்திங்கறாய்ங்க.அதனோட ஆயுளையும் கவனி. எண்ணம் -மனம் - நுரையீரலுக்கு இடையில் உள்ள தொடர்பு இது. நான் மனோகாரகன்ங்கறதால இந்த 3 ஐயும் நான் பாதிக்கிறேன்.

3.உங்களுக்கு மனோகாரகன்னு ஏன் பேர் வந்தது?
பகல்ல சூரியனோட இம்பாக்ட் இருக்கும். சூரியன் என்றால் சுயம். ஈகோ. பகல் எல்லாம் மனிதனை ஈகோ வழி நடத்தும். எனக்கென்னடா கிங்குன்னு - நான் எல்லாம் ரிஷ்ய ஸ்ருங்கன் மாதிரி எவளுக்கும் மயங்கமாட்டேன்னு அலப்பறை பண்ணிக்கிட்டிருப்பிங்க . சூரியன் மறைஞ்சு நான் உதிச்சு உதிக்காததுக்கு மின்னயே மனசுல கொஞ்சம் கொஞ்சமா சஞ்சலம் -சபலம் ஆரம்பிச்சுரும். அந்த ஃபைலை கொடுக்கிறப்போ கொஞ்சம் கைய தொட்டிருக்கலாமோ மாதிரி எண்ணங்கள் வர ஆரம்பிச்சுரும்.

வளர்பிறை நாட்கள்ள எந்த பேச்சு வியாபாரியும் வந்து மோட்டிவேட் செய்யாமயே எல்லாரும் கொஞ்சம் பாசிட்டிவாவே இருப்பாய்ங்க.

மேலும் இந்த நாட்களில் தண்ணீர் பஞ்சம் இருக்காது.வேளைக்கு குளிச்சு ஃப்ரெஷ்ஷா இருக்க முடியும். எப்படியா கொத்த டென்ஷன்ல இருந்தாலும் ஒரு குளியல் போட்டா தெளிஞ்சுர்ரதை பார்க்கலாம். நானே ஜலகாரகன் .நானே மனோகாரன்ங்கறதால இந்த எஃபெக்ட். கொசுறு: வளர்பிறை நாட்களில்  நீச்சலடிக்க போயி சாவுன்னு செய்தி வராது.

ஏன்னா வளர்பிறை நாட்களில் மனிதனோட பாடியில வாட்டர் கன்டென்ட் புஷ்கலமா இருக்கும். வெளியிலிருந்து ஈரப்பதம் தேவைப்படாது.

இதுவே தேய்பிறை நாட்கள்ள  பாசிட்டிவ் அப்ரோச் கொஞ்சம் போல குறையும். தண்ணி பஞ்சம், மோட்டர் எரிஞ்சு போயிர்ரது.தண்ணி லாரி வராம போறது. இதனால் கடுப்பு,எரிச்சல் ,மனக்கசப்பு எல்லாம் தொடரும்.

மேலும் இந்த நாட்களில் நதியில் மூழ்கி சாவு செய்திகள் வர்ரத பார்க்கலாம். ஹ்யூமன் பாடியில வாட்டர் கன்டென்ட் குறையறதால வெளியிலிருந்து ஈரப்பதம் பெறும் முயற்சியே குளியல்,நீச்சல்லாம்.

அதுவும்  நான் சனியோட  சேரும்போது அடுத்தவுகளுக்கு விருப்பமில்லாத வேலைய கட்டாயப்படுத்தி செய்யவைக்கிறது ,செவ்வாயோட சேரும்போது கோப தாபம், ராகு/கேதுக்களோட சேரும் போது மனக்குழப்பம் நெகட்டிவ் தாட்ஸ் அதிகரிக்கிறது - நுரையீரல் -சிறு நீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவுகளுக்கு பிரச்சினை அதிகமாறதுல்லாம் சகஜமா நடக்கும்.

மனம் போன போக்கிலே கால் போகலாமான்னு பாட்டு இருக்குல்ல. இந்த நிலை  இரவு நேரங்களில் அதிகமா இருக்கும். என்னோட பலம் இல்லாத ஜாதகர்களுக்கே நடக்கும். மத்தவுகளுக்கும் நடக்கலாம். கோசாரத்துல என்னோட பலம் குறையும் போது.

4.பப்ளிக் சப்போர்ட்டுக்கு உங்க பலம் தேவைங்கறாய்ங்களே  அது ஏன்?
நான் ஜலகாரகன் -மனோகாரகன்னு சொன்னேன். ஜலத்தோட இயல்பு என்ன பள்ளம் நோக்கி பாய்வது.  நான் ஒரு ஜாதகத்துல பலம் பெற்றிருந்தா அந்த ஜாதகனோட மனசு ஆட்டோ மெட்டிக்கா அடித்தட்டு மக்கள் பற்றி யோசிக்கும். அவிகளோட நெருங்கி பழகுவான். எந்த காலத்துலயும் -எந்த சமுதாயத்துலயும் இவிக தானே மெஜாரிட்டி அதனால பப்ளிக் சப்போர்ட்டு நிச்சயம்.

5.சந்தையிலருந்து - மேரேஜ் ஹால் வரை ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் உள்ள இடங்களுக்கு நீங்கதேன் இன்சார்ஜாம்? இதுல உள்ள லாஜிக் என்ன?

என்னோட இயல்பு என்ன? வளர்ந்துக்கிட்டே போவேன் - பவுர்ணமி தினம் ஜாஜ்வல்யமா பிரகாசிப்பேன் -பிறகு தேய ஆரம்பிச்சுருவன்.

ஒவ்வொரு ராசியிலயும் பிரவேசிக்கும் போதும் மொத ஆறு மணி நேரம் கொஞ்சம் சுஸ்தா இருப்பேன். கடைசி ஆறுமணி நேரமும் இதே கதைதான். மத்தியில உள்ள 12 மணி நேரம் உங்க மனசை சகட்டு மேனிக்கு மாத்தி விட்டுக்கிட்டிருப்பேன்.

இதே நிலைய நீங்க மேற்படி ஃப்ளொட்டட் பாப்புலேஷன் உள்ள இடங்கள்ளயும் பார்க்கலாம். அதனால இந்த இடங்களுக்கு நான் இன்சார்ஜா இருக்கன்.

அடுத்து நான் பரபரன்னு ராசி மாறி போயிக்கிட்டே இருக்கிறாப்ல  மேற்படி இடங்களுக்கு வர்ரவன் கூட சந்தைன்னா விற்பனை முடிஞ்சதும் அல்லது பர்ச்சேஸ் முடிஞ்சதும் வீட்டை பார்க்க கழண்டுக்கறதுலயே இருப்பான். கண்ணால மண்டபம்னா வந்தவன் தாலிகட்டியாகட்டும் கிளம்பிரலாம்னே காத்திருப்பான்.  நான் எப்படி குறுகிய காலத்துல புது புது ராசிய பார்த்துர்ரனோ அப்படியே இந்த இடங்கள்ளயும் நீங்க புதுப்புது முகங்களை பார்க்கலாம்.



Tuesday, December 11, 2012

நவகிரகங்களுடன் பேட்டி: சந்திரன்

அண்ணே வணக்கம்ணே !

நீங்க நம்ம கிட்டே என்ன எதிர்ப்பார்க்கிறிங்க? நமக்கு புவ்வாவுக்கு வழி பண்றது எது ? எல்லாமே நெல்லா தெரியும்.

ஆனாலும் இன்னைக்கு நாம ரசினி காந்தை கேட்டாப்ல  நாளைக்கு நம்மை ஒரு பார்ட்டி கேள்வி கேட்டுரக்கூடாதேங்கற பயத்துல - அட கேட்டாலும் சால்ஜாப்பு சொல்லிக்கலாம்னு வைங்க. இந்த மனசாட்சி மனசாட்சின்னு ஒன்னு இருக்கே . இது பொஞ்சாதியை விட மோசம்.

ஒரு டிடிஹெச் ஐ வச்சு பொஞ்சாதி வாயை அடைச்சுரலாம்.ஆனால் இந்த மனசாட்சி? ஊஹூம்.. நாம தூங்கப்போறதே விடியல்லதேன்.அப்பமும் தூங்க விடமாட்டேங்குதுண்ணே.

அதனாலதேன்  அப்பப்போ ட்ராக் மாறி ரஜினி,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றியெல்லாம் எழுத வேண்டியதா இருக்கு.

அதே சமயம் நாம ஏதோ சனங்க மேல அக்கறையோட இதெல்லாம் பண்றோம்னு நினைச்சா அதுவும் தப்பு. ஆத்தாளுக்கும் நமக்கும் ஒரு அக்ரிமென்ட் "ஆத்தா .. நீ என்னை பார்த்துக்க - நான் இவிக மேட்டரை பைசல் பண்றேன்"

அடுத்து இம்மாம் அறிவையும் சுய நலத்துக்கு பயன்படுத்தினம்னு வைங்க கருமம் தேன் வந்து சேரும் . போன சன்மத்துல என்னா கருமம் பண்ணமோ இந்த சன்மத்துல 14 வருச வனவாசம் மாட்டிக்கிச்சு. ஊர் வேலை செய்தம்னு வைங்களேன் கருமம் தொலையும்.

அவ்ளதானே தவிர சனங்க மேல நமுக்கு அக்கறைல்லாம் கிடையவே கிடையாது. அதுவும் தன்னை தனக்கு மேல உள்ளவன் சுரண்ட சுரண்ட -  தனக்கு கீழே உள்ளவனை தான் சுரண்டற சனம்னா நமுக்கு எந்தவித சாஃப்ட் கார்னரும் கிடையாது.

மொக்கை ஓவராயிருச்சுல்ல . இதோ  மெயின் ட்ராக்குக்கு வந்துட்டன். நவகிரகங்களுடன் பேட்டி இந்த பதிவில்  தொடருது. சூரியன் ஓவர். இன்னைக்கு சந்திரன். சந்திரன்னு அடிச்சதுமே கவிதை பொங்குது.

சந்திரனோ நீ மந்திரனோ
மந்திரமே போல்
எம் மனம் மாற்றும் மாயாவி

எண்ணம் போல் மனம் என்றார் சான்றோர்
மனம் ஒரு குரங்கென்றார் ஆன்றோர்

எண்ணம் ஒரு விதையானால்
மனம் அதை ஏற்கும் நிலமாமே

நின் பலம் பொருத்தே மனம்
மனதின் வலு பொருத்தே கிளை விடும்  எண்ணம்

எண்ணங்கள் விரிந்திடில் மனம் அது  மாறும்
அதற்கும் தேவை நின் பலம்.

மனம் ஒரு குரங்கென்றார்.
எம் மனமாளும் மன்னவன் நீ ..

ஒரு  நாளில் சாரம் மாறி -அதற்குள்
இரு சோடி பாதம் மாறி

எம் மனதை மாற்றி மாற்றி
அதற்கே குரங்கெனும் பெயர் தந்தாய்.

இதே ரேஞ்சுல நாற்பது பக்கம் அடிச்சுரலாம் போல ஊற்று பொங்குது. கவிதை பிறப்பது மனதில் . சந்திரன் தான் மனோகாரனாச்சே.

இருந்தாலும்  இந்த சேதி அல்லாரையும் ரீச் ஆவுறதுக்காவ நம்ம நடைக்கே திரும்பிர்ரன்.

சந்திரன் பெண் கிரகம் என்பதை மனதில் வைக்கவும். ஆனால் நாம பாட்டுக்கு கலாய்க்க மாதர் சங்கம் காரவுக எதுனா புகார் பண்ணிட்டா வம்பு.அதனால சந்திரனை ஆணாகவே ட்ரீட் பண்ணி இன்டர்வ்யூவை முடிச்சுர உத்தேசம்.

நான்:
குட் மார்னிங் தாத்தா !
 சந்திரன்:
மானுடனே.. நாங்க அமுதம் சீப்பி குடிக்கிறவுக. சீப்பா தாத்தாங்கறே..

நான்:
கொஞ்சம் பொறுமையா இருந்தா உறவு முறையை விளக்கமா சொல்றேன்.

சந்திரன்:
சொல்லித்தொலை

நான்:
தாத்தா.. லெச்சுமிக்கு பிரம்ம தேவர் மகன் முறை. விஷ்ணுவோட ஹிப்லருந்து தான் பிரம்மா வந்தாராம்ல.  நான் கலைமகளோட மவன். கலைமகளுக்கு மாமி லெச்சுமி.  மம்மிக்கு மாமியார் எனக்கு பாட்டி முறை. . லெச்சுமிக்கு நீ எல்டர் ப்ரதர். அப்ப நீங்க  தாத்தா  இல்லாம வேற என்னவாம்?

சந்திரன்:
அடங்கொய்யால .. 45 வருச குப்பைய மண்டையில சேர்த்து வச்சிருக்கிற நீ யூத்து .  ரெண்டே கால் நாளைக்கு ஒரு தடவை ஓ.எஸ் ஐ அப்கிரேட் பண்ணி - 14 நாளைக்கு ஒரு தடவை  ஹார்ட் டிஸ்கை ஃபார்மட் அடிச்சுக்கிற  நான் கிழவாடி .ஒனக்கு தாத்தாவா?

நான்:
ஹார்ட் டிஸ்கு ஒன்னுதானே தாத்தா ..

சந்திரன்:
த பாரு . உன் வழிக்கே வந்துர்ரன் .அப்பன் மவனுக்கு இடையில வேணம்னா ஈகோ ப்ராப்ளம் இருக்கலாம். தாத்தா பேரனுக்கு இடையில ஃப்ரெண்ட்ஷிப் தான் இருக்கும். என்னை ஃப்ரெண்டா ட்ரீட் பண்ணி பேசறாப்ல இருந்தா பேட்டி இல்லின்னா சர்தான் போடீ..

நான்:
தாத்.. சாரி.. ஃப்ரெண்ட் !  .. இதுக்கே கோவிச்சுக்கிட்டா எப்டி.. பேட்டி நிச்சயம் தேவை. கேள்விகளளை கேட்கட்டுமா?

சந்திரன்:
கேள்.ஆனால் ஒரு நிபந்தனை பதில்  நாளைக்குத்தேன்.

நான்:
என்னைக்கோ எப்படியோ  பதில் தருவிங்கல்ல.. கேட்டுர்ரன்

1.கடலுக்கும் உங்களுக்கும் என்ன லிங்க்?

2.ஹ்யூமன் பாடியில உள்ள நுரையீரலுக்கும் உங்களுக்கும் இருக்கிற கனெக்சனுக்கு அடிப்படை என்ன?

3.உங்களுக்கு மனோகாரகன்னு ஏன் பேர் வந்தது?

4.பப்ளிக் சப்போர்ட்டுக்கு உங்க பலம் தேவைங்கறாய்ங்களே  அது ஏன்?

5.சந்தையிலருந்து - மேரேஜ் ஹால் வரை ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் உள்ள இடங்களுக்கு நீங்கதேன் இன்சார்ஜாம்? இதுல உள்ள லாஜிக் என்ன?

6.உங்களுக்கு எந்த கிரகமும் பகையில்லைங்கறாய்ங்களே அது இன்னா கணக்கு?

7.பிரமுகர்களின் மனைவிகளுக்கு நீங்க தான் அதிபதியாம் இதுக்கு என்ன காரணம்?
8. தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவுக்கெல்லாம் உங்க பலம் அத்யாவசியம்ங்கறாய்ங்க. இதன் பின்னான தர்க்கம் என்ன?
9.மனம் , நுரையீரல், சிறு நீரகம் இந்த மூன்றுக்கும்  உங்களூக்கும் இடையிலான தொடர்பு என்ன?
10.காதல்ல உங்க ரோல் என்ன?
11. சஞ்சலத்துக்கு நீங்கதேன் காரகமாம். சஞ்சலத்தால நன்மையா தீமையா?
12. படகு, கப்பல்,கடல்  பயணம் இதுக்கும் உங்களுக்கும் என்ன லிங்கு?
13.அழுகும் பொருட்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?
14.சந்திர பலம் உள்ளவன் எப்படி இருப்பான்?
15.இல்லாதவன் எப்படி இருப்பான்?
16.சந்திர காரகம் கொண்ட பெண் எப்படி இருப்பாள்?

குறிப்பு:
கேள்வி நான் மட்டும் கேட்கனம்னு  இல்லை. நீங்களும் கேட்கலாம். அடிச்சு விடுங்க.

எச்சரிக்கை:
அண்ணே ..நம்ம லோக்கல் ஆட் மேகசின் சார்பில் டெய்லி காலண்டர் போடப்போறோம். அதுவும் 1+1 .கமர்ஷியல் ஒன்னு ,பொலிட்டிக்கல் ஒன்னு. இது இல்லாம காண்ட் ராக்ட்  அடிப்படையில யாவாரிங்களுக்கு தனியே போட்டு தரப்போறோம். முன்னது இரண்டும்  நேரடி இலவச வினியோகம்.பின்னதை பார்ட்டிக்கு கொடுத்துர அவிக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துருவாய்ங்க./
இந்த டீட்டெய்ல் எல்லாம் தந்தது  டிசம்பர் 15 வரை இப்படி அரைகுறை பதிவா தான் வரும்னு சொல்லத்தேன். உடுங்க ஜூட்டு.கடமை அழைக்குது..

Friday, December 7, 2012

நவகிரகங்களுடன் பேட்டி: சூரியன் 4



சூரியன்:
என்னப்பா இடையில கொஞ்ச நாளா காணோம்.

நான்:
என்ன பாஸ் பண்றது ? நம்முது கடக லக்னமாச்சா நம்ம மைண்டு எப்பவும் மக்களை சுத்தி சுத்தி வருது. இந்த மக்களாட்சியில மக்களுக்கு ஆப்படிக்கிறதே ஆட்சியாளர்களுக்கு வேலையா போச்சு.சில்லறை வர்த்தகத்துல அன்னிய முதலீடுன்னு ஒரு மேட்டர், இடையில மக்கள் சந்தைக்காரவுக கேட்ட சுய அறிமுகம் பதிவு ஒன்னு போடவேண்டியதா போச்சு.அதான் உங்களை டீல்ல விட்டுட்டன்.

சூரியன்:

ஆக நீ சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸுல போயிட்டேன்னு சொல்றே.

நான்:

யெஸ் பாஸ் !

சூரியன்:

கண்ணா ! சில்லறை வர்த்தகத்துக்கு காரகனே நான் தான் தெரியுமா? சுயம்ங்கறதுக்கும் காரகம் நான் தான். அதனால நீ என்னை பேட்டி காண ஆரம்பிச்சதுலருந்து என்னோட இன்ஃப்ளுயன்ஸ்ல தான் இருக்கே

நான்:
அதெப்படி பாஸ் ! புதன் தானே வியாபார காரகன்?

சூரியன்:
இல்லப்பா .. எசன்ஷியல் கமாடிட்டீஸ்கெல்லாம் நான் தான் இன் சார்ஜூ.

நான்:
அடடா இந்த ஆங்கிள்ள நான் ரோசிக்கவே இல்லியே.. நாளைக்கு வால் மார்ட் திறந்துர்ராய்ங்கன்னு வைங்க.அது ஆரோட காரகம்? ஜெகஜ்ஜோதியா இருக்கும்ங்கறதால சுக்கிர காரகமா?

சூரியன்:
இல்லேப்பா அது ஃபாரின் கொலாபரேஷனுங்கறதால ராகு காரகம்

நான்:
ஓகே தலை !. சனம் தூங்கி வழிஞ்சா ஒரு கணக்கு. தலீவர்ங்க கூட .தூங்கி வழியறாய்ங்களே? ஏன் ? உலகத்தை தட்டி எழுப்பற நீங்க அவிகளையும் கொஞ்சம் எழுப்பலாம்ல? தூங்கி வழிஞ்சுக்கிட்டே எஃப்.டி.ஐக்கு ஆதரவா ஓட்டு போட்டு - வாக் அவுட் பண்ணியிருக்காய்ங்களே..  தொகுதி பக்கம் தலை வச்சு படுக்க முடியுமான்னு கூட ரோசிக்க மாட்டேங்கிறாய்ங்களே

சூரியன்:
தம்பீ ! நான் என்ன அந்தகாலத்து பால்காரனா ? விடியல்ல போயி கதவை தட்டி - காலிங் பெல் அடிச்சு எழுப்பி விடறதுக்கு. நான் பாட்டுக்கு உதிக்கிறேன். கண்ணுள்ளவர்கள் காணக்கடவர்.

நான்:
என்னா தலீவா! இப்டி கழட்டி உட்டுட்டிங்க. ஒரு ஆசாமி தலைவரானாருன்னா அவரு ஜாதகத்துல நீங்க ஓரளவுக்கு பெட்டர் பொசிஷன்ல இருக்கிங்கன்னு தானே அருத்தம். அப்பாறம் ஏன் இந்த மயக்கம்?

சூரியன்:
ஒனக்கு புரியறாப்ல - உன் மொழியிலயே சொல்றேன். உனக்கு பத்து பக்கம் டைப் பண்ற கப்பாசிட்டி - நேரம் தான்  இருக்கு.

தமிழ் ப்ளாக்ல 4 ,தெலுங்கு ப்ளாக்ல  4 பக்கம் அடிச்சு தள்ளிட்டேன்னு வை .மிச்சமிருக்கிறது 2 பக்கம்.இதை ஃபேஸ்புக்ல விரயமாக்கிட்டேன்னு வை. ஆன்லைன் ஜோதிட ஆலோசனை ஊத்திக்கும்.

அதனால நீ என்ன பண்றே.. தமிழ்ல ரெண்டு பக்கம் அடிச்சு போட்டு தெலுங்கை டீல்ல விட்டுட்டு , 7 பக்கம் அடிக்கிற நேரத்துல ஜாதக பலன் பதிவு பண்ணிட்டு ஒரு பக்கம் அடிக்கிற நேரத்தை ஃபேஸ்புக்குக்கு செலவழிக்கிறே.

கிரக பலம் கூட இப்படித்தான். மேற்படி தலைவன் எல்லாம் சொந்த ஊரை பிடியில வச்சுக்க (கிராமாதிபத்யம் =சூரிய காரகம்) , இருக்கிற மலைகளை குவாரி பேர்ல மொட்டையடிக்க  - சிட்டி அவுட்ஸ்கர்ட்ஸ்ல கஸ்ட் ஹவுஸ் மெயின்டெய்ன் பண்ண (இவையும் சூரிய காரகமே) என் பலத்தை விரயமாக்கிர்ரான்.

மேலும் இன்னொரு பாய்ண்டும் இருக்கு. நான் பெட்டர் பொசிஷன்ல இருந்தா கள்ள ஓட்டு,ஓட்டுக்கு பணம் கொடுக்கிறது, கட்சி தாவல் , தொண்டர்களுக்கும் -குண்டர்களுக்கும் செலவழிக்கிறதுக்கெல்லாம் தேவையே  இருக்காது.

நான் பெட்டர் பொசிஷன்ல இல்லாததாலதானே இந்த இழவெல்லாம் செய்யவேண்டியிருக்கு. மிச்ச சொச்ச பலத்தை விரயமாக்கிர்ராய்ங்க.

அப்பாறம் எப்படி தலைமைகுணம் ,விழிப்புல்லாம் வாழும்?


நான்:

அதெப்படி பாஸ்.. நீங்க சொல்றதை பார்த்தா நீங்க பெட்டர் பொசிஷன்ல இல்லின்னாலும் தலீவனாயிரலாம் போல இருக்கே


சூரியன்:
நைனா ஜாதகம் டூ இன் ஒன். அதுவே டெபிட் கார்டு .அதுவே கிரெடிட் கார்டு. கிரக பலங்களை அளவோட எக்ஸாஸ்ட் பண்ணா அதான் டெபிட் கார்டு. அன்லிமிட்டடா எக்ஸாஸ்ட் பண்ணா அதுவே கிரெடிட் கார்டு.
டெபிட் கார்டுல செலவழிச்சா பிரச்சினை இல்லை. கிரெடிட் கார்டுல செலவழிச்சா வரி,வட்டி,கிஸ்தில்லாம் குஸ்தி போடும்ல.

நான்:
தலீவருங்களுக்கு சாலை விபத்துல ஹெட் ஓப்பன் ஆயிர்ரது, பாத் ரூம்ல வழுக்கி விழுந்து கைகால் முறியறதுக்கெல்லாம் காரணம் உங்க  பலமில்லாமயே தலீவராயிட்டதுதானா?

சூரியன்:
அதுமட்டுமில்லை ஜாய்ன்ட் பெய்ன்,பேக் பெய்ன், கண் பார்வை டப்ஸாயிர்ரது, இன்சோம்னியா, சதா சர்வ காலம் படபடப்பா இருக்கிறது மாதிரி சைட் எஃபெக்ட்ஸுக்கும் இதான் காரணம்.  நான் ராஜ கிரகம். ராஜ உறுப்புகளுக்கெல்லாம் நான் தான் காரகம். அரசியல் வாதிகளுக்கு ராஜ உறுப்புகள் ஃபெய்ல் ஆறதுக்கும் இதான் காரணம்.

நான்:
இதெல்லாம் அவிகளுக்கு தெரியாதே பாஸூ..பாவம் !

சூரியன்:
சாம,பேத,தான,தண்ட உபயங்கள்ள நம்முது தண்ட உபாயம் கண்ணா..நோ வார்னிங் .டைரக்ட் வார் தான்.

நான்:
தலீவருங்க எக்கேடும் கெட்டுப்போகட்டும். சாமானியருங்களாகிய நாங்க எப்டி நடந்துக்கிட்டா பெட்டர் சொல்லுங்க தலைவா!

சூரியன்:
தன்னை தான் தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுவான்.

(தொடரும்)

எச்சரிக்கை:
சூரியனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கமெண்ட்டில் தெரிவிக்கவும். இல்லின்னா ஸ்டுடியோவுக்கு  சந்திரனை  வரவழைச்சுர்ரதா உத்தேசம்

Thursday, December 6, 2012

சுய அறிமுகம்: சித்தூர் முருகேசன்

வலைப்பூ: நிர்வாண உண்மைகள்
வலைதளம்: அனுபவஜோதிடம்
என்னைப்பற்றி:
"என்னை" என்று ஒருமையில் ஆரம்பிக்கவே தயக்கமா இருக்கு.  நம்ம எழுத்துல எதுனா மேட்டர் இருந்தா அது  "அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்" .மொக்கையெல்லாம் நம்ம ஈகோவோட லீலை.

1967 ல பிறந்த நாம 20 வருசம் க்ளீன் ஸ்லேட். சனங்க என்னென்னமோ எழுதி நாறடிச்சாய்ங்க. 1987 லருந்து 20 வருசம் நிருத்யோகம்,வறுமை,அவமானங்கள் எல்லாம் ஆணியால கிர் கிர்ருன்னு கிறுக்கியாச்சு. ஆளவந்தான் கமல் மாதிரி நமக்குள்ள ரெண்டு கேரக்டர் இருக்கு.

நெகட்டிவ் கேரக்டரை  முடிஞ்சவரை தர்மயுத்தம் ரஜினி மாதிரி சங்கிலியில கட்டி வச்சுருக்கம். சனம் சங்கிலியை அவுத்து விட்டுட்டுத்தேன் மறுவேலைன்னு செயல்பட்டாலும் கடுப்புல @ தேர் ஆப்சென்ஸ்  கெட்ட வார்த்தையா கொட்டினாலும் அவிக நேர வந்தாலோ - செயல்னு வந்தாலோ பாசிட்டிவ் அப்ரோச் தேன்.

அம்புலிமாமா காலத்துலருந்து நம்மை ஹீரோ கேரக்டரோட இணைச்சுத்தான் கற்பனை. விபத்து போல இடையில 20 வருசம் தவிர்த்து நமக்கு ஹீரோ ரோலே கிடைச்சுது.

இருவது வருசம் நாறின சமயம் தான் நாம ரியல் ஹீரோவா இருந்தம்னு இடையிலயே புரிஞ்சிக்கிட்டதால தற்கொலையிலருந்து தப்பிச்சம். ஹீரோ குறித்த புரிதல் ஏற்பட்டதும் விபத்து தான். ஒரு காலத்துல ஹீரோன்னா முழங்கால் வரை ஷூ ,  ஜெர்க்கின் போட்டு ,லியோ டாய் மிஷின் கன்னோட டப டப டபன்னு சுடறவன்னு நினைச்சிருந்தம்.

சீக்கிரமே "HERO IS ONE WHO LAY DOWN HIS LIFE FOR HIS PEOPLE. "ங்கற மேட்டர் ஸ்பார்க் ஆயிருச்சு. தப்பிச்சம்.

இந்தியாவின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வா நாம வடிவமைச்ச ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டமும் -அதுக்காவ நாம கொடுத்த உழைப்பும் இந்தியாவோட பிரச்சினையை தீர்த்ததோ இல்லையோ  நமக்கு மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் வராம காப்பாத்திருச்சு.

"வெற்றி பெற்ற மனிதரெல்லாம் என்னுள்ளே அடக்கம்
வழி காட்டி நிற்கும் முந்தையோர்க்கு சிந்தைகுளிர் வணக்கம்"

என்று கவிதைல்லாம் எழுதியிருக்கம். ஆனால் இப்பம் " நான் தான்டா என் மனசுக்கு ராஜா"ன்னு வாழ்ந்துக்கிட்டிருக்கம். நல்ல வேளையா நம்ம வாழ்க்கையில வெளிச்சம் கண்ட பிறகே நம்ம எழுத்துக்களும் வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சது.

கமல் சொல்வாரு " நாங்க யாருன்னு எங்களுக்கு தெரியும்" - பேசிக்கலா நாம எப்படியா கொத்த குழப்ப கேஸு, பேதி கேஸுன்னு தெரியும்.   நமக்கு தில்லை கொடுக்கிறது  நம்ம கொள்கை. கொள்கை இல்லைன்னா நம்ம பொளப்பே பரம தக்கை. ட்ராஃபிக் கான்ஸ்டபிளை ஃபேஸ் பண்ற சாலாக்கு கூட இல்லாத பார்ட்டி நாம.

கொள்கைன்னு வந்தா தூக்குக்கயித்துக்கும் ரெடி. அதுசரி கொள்கை கொள்கைன்னு மொக்கை போடறே. உன் கொள்கைதான் என்னன்னு கேப்பிக சொல்றேன்.

இந்த நாடும் -நாட்டு மக்களும் கொஞ்சமே மாத்தி யோசிச்சா இன்னம் கொஞ்சம் பெட்டரா மாறலாம். உலக வாழ்க்கையிலயே ஆயிரம் சிக்கல் - புவ்வாவுக்கே லாட்டரி -இதுல தேடல் எல்லாம் லக்சரி. அதனால மொதல்ல அல்லாருக்கும் உசுருக்கு பாதுகாப்பு -  உணவு -உடை -இருப்பிடம் -செக்ஸ் கிடைக்கனும். இதெல்லாம் கிடைக்க கவுரதையான வேலை -வெட்டி. இதுக்காவ எதையாவது செய்யனும்.

ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் போட்டாலும் -அதன் அமலுக்காவ சி.எம் மேலயே கேஸை போட்டாலும் பணம் பணம் பணம் தொடர் எழுதினாலும் -கில்மா பதிவுகளே போட்டாலும் -சோசிய பரிகாரங்கள் அடிச்சாலும் எல்லாத்துக்கும் அடிப்படை இந்த மக்கள் இன்னம் கொஞ்சம் பெட்டரா வாழனும்ங்கறதுதேன்.

தாங்கள் இந்த தமிழ் இணையத்தில் எப்போது வந்தீர்கள்:

சரிய்யா சொன்னா 2000,ஜூலை ,31 ஆம் தேதி வந்தேன்.

யார் உங்களுக்கு தமிழ் இணையத்தை அறிமுகம் செய்து வைத்தார்கள்?
ஏதோ தமிழ் பத்திரிக்கையில படிச்சதுதான். கல்கியில தான்னு ஞா.

எப்போது நீங்கள் தனியாக ஒரு வலைதளம் தொடங்குனீர்கள்?
2011,பிப்ரவரியில துவங்கினேன்.

அந்த வலைதள பெயருக்கு பின்னால் உள்ள சுவராசியமான விசயங்கள்:

வலைப்பூ:

மொதல்ல கவிதைங்கற பேர்ல வலைப்பூ துவங்க ட்ரை பண்ணேன். நாட் அவெய்லபிள். நாம பிறந்த தேதி 07. அதனால கவிதை07 ங்கற பேர்ல வலைப்பூ துவங்கியாச்சு.

கிராம ஊழியன் என்ற பெயரில் பத்திரிக்கை வாங்கி இலக்கிய புரட்சியை அரங்கேற்றியதை போல கவிதைங்கற பேர்ல வலைப்பூ துவங்கி  சகட்டுமேனிக்கு  எல்லாத்தையும் காய்ச்ச ஆரம்பிச்சோம். ஹிட்ஸ் புட்டுக்கிற சமயத்துல அதை தூக்கி நிறுத்த அப்பப்போ கில்மா மேட்டரை ஊறுகாய் கணக்கா தொட்டுக்கறதும் உண்டு.

இதெல்லாத்துக்கும்  பொதுவா ஒரு பேர் வேணமேன்னு ரோசிச்சதுல ஸ்பார்க் ஆனதுதேன் நிர்வாண உண்மைகள்.

பேர் வைக்கும் போது நம்ம மைண்ட்ல  ஒன்னம் கிடையாது. ப்ளாக் பத்திக்கிட்ட பிறவு அனலைஸ் பண்ணதுல கவி = கபி - குரங்கு ( நாம ஆஞ்சனேயரோட கடைசி பெஞ்ச்  சிஷ்யனாச்சே) ஆங்கிலத்துல "தை"ங்கறதை THAI னுட்டு எழுதறோம்.ஆத்தா போட்டுக்கொடுத்த ரூட்டுன்னு கேட்ச் பண்ணியாச்சு.

வலைதளம்: அனுபவஜோதிடம்

நமக்கு ஆயிரம் வேலை தெரியும். எதுக்கும் தயார்.ஆனால் சனம் உள்ளூரைப்போலவே நம்ம ஜோதிட கட்டுரைகளுக்கு பெருசா ரெஸ்பாண்ட் ஆக ஆரம்பிச்சாய்ங்க.

சென்னையை சேர்ந்த திரு சரண் இலவசமா சைட் வச்சு தரேன்னாரு. இல்லையில்லை டொமைனுக்கு மட்டுமாவது காசு வாங்கிக்கிட்டே ஆகனும்னு அடம்பிடிச்சு ஆரம்பிச்சோம்.

ஜோதிடத்துல எத்தனையோ கிளைகள் ,முறைகள் இருக்கு.ஆனால் அனுபவத்துல எது ஒர்க் அவுட் ஆகுதோ அதான் ஃபைனல்ங்கறது நம்ம அனுபவம். ஜோதிட விதிகளை நம்ம அனுபவத்துல புடம் போட்டே தர்ரது வழக்கம்.

அதனால அனுபவஜோதிடம்னு பேரை வச்சோம்.

தங்கள் பார்வையில் தமிழ் இணையம் எப்படி இருந்தது?:

நாம வெளியூரு. மெயின் ஸ்ட்ரீம்ல போறதில்லை. ஒரே ஒரு தாட்டி ஓம்கார் சுவாமிகள் மரம் சிடியை ரீட் பண்ணி கன்டென்டுக்கு ஏத்தாப்ல ரெஸ்பாண்ட் ஆகும்னு எழுத - நாம ஒரு கமெண்டை போட -அதை அவர் நீக்க  அப்பத்தேன் கொஞ்ச நாளு மெயின் ஸ்ட்ரீம்ல வந்தோம்.

அதனால எப்படி இருந்ததுன்னு நாம சொல்றது நியாயமா இருக்காது.

இப்போது எப்படி இருக்கின்றது?:

இதை பற்றி வேணம்னா குத்துமதிப்பா சொல்லலாம். சிலர் ஒரே ஒரு மேட்டர்ல ரெம்ப ஆத்தன்டிக்கேட்டடா தீசிஸ் மாதிரி எழுதறாய்ங்க. வசதி இருந்தா அவிகளுக்கு ஃபெல்லோஷிப்பே கொடுப்பேன்.

இன்னும் சிலர் மேம்போக்கா எழுதினாலும் பொறுப்பா எழுதறாய்ங்க. ஆனால் பலரும் கேப் ஃபில்லிங் மாதிரி செய்திகளை ரீ ப்ரொட்யூஸ் பண்றது - சினிமா -கில்மான்னு தேங்கிப்போயிருக்காய்ங்க. சோசிய பதிவுகளை பத்தி நாம  எதுவும் சொல்லப்படாது.ஏன்னா நாமளும்  ஆட்டத்துல இருக்கம்ல.

நாம என்ட்ரி கொடுத்த புதுசுல திரட்டிகள்ள  தமிழ்மணம் தேன் மோனோப்பலி. தமிழ்மணம் பத்தி மொதல்ல நமக்கு சொன்னது கோவி.கண்ணன் தேன்.

இடையில பிரபாகரன் சாகவில்லைன்னு  ஒரு  பதிவு போட்டு தொலைச்சம்.  அப்பம் கலைஞர் ரெம்ப " நலல பிள்ளை"யா இருந்தாரு.எதுக்கு வில்லங்கம்னு த.ம வுல  கழட்டி விட்டுட்டாய்ங்க.

2009 ல ரீ என்ட்ரி கொடுத்தப்ப கச்சா முச்சான்னு திரட்டிகள். தமிழ்மணம் காரவுக தாங்களே நம்ம வலைப்பூவை இணைச்சுக்கிட்டாய்ங்க. திரட்டிகளில்  பல வந்த வேகத்திலயே மறைஞ்சு போயிட்டாலும் நமக்கு ஹிட்ஸ் கொடுக்கிறது தமிழ்வெளி,தமிழ்10,உலவு தேன்.

மறுபடி தமிழ்மணம் ஜோதிட பதிவுகள் எழுதக்கூடாதுன்னு நிபந்தனை விதிக்க நாம அதை மீற தடை பண்ணிட்டாய்ங்க. இருந்தாலும் மேற்படி திரட்டிகள் உபயத்துல வண்டி அதே வேகத்துல ஓடிக்கிட்டே இருக்கு.

தமிழ் இணையம் எதிர்காலத்தில்எப்படி இருக்கப் போகின்றது?

தமிழ் இணையத்துல ஆரெல்லாம் காசுபார்க்கிறாய்ங்கன்னு நமுக்கு தெரியாது. வெறுமனே ஹிட்ஸுக்காகவே நிறைய இறங்கி எழுதறாய்ங்க. எதிர்காலத்துல காசு பணம் புரண்டா சொல்லவே தேவையில்லை.

நம்மை பொருத்தவரை ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மூலமா  ஹானரோரியம் கணக்கா ஒரு தொகை வந்துருது. இதனால இன்னம் கொஞ்சம் பொறுப்பு கூடுது. நெருப்பா எழுதலின்னாலும் பொறுப்பா எழுதறதா ஒரு கருத்தும் இருக்கு.

எழுதும் போதும் எழுதிய பின்பும் உங்கள் மனோநிலை எப்படி உள்ளது?
எழுதும் போது ஒரு இனிய உடலுறவு போலும் -எழுதிய பின்பு கன்னிகழிந்த  குமரி போலும் உணர்கிறேன்.

பதிவுலகின் மூலம் தாங்கள் அடைந்த உறவுகள், தகவல்கள், மேன்மைகள்:
உண்மைய சொன்னா  இணையம் தான் நமக்கு அன்ன தாதா. தினத்தந்தியில ரூ... ஆயிரம் சம்பளத்துல இருந்தும் அதை விட்டுப்போட்டுட்டம்னா புரிஞ்சுக்கலாம்.

உறவுகள்னா நூத்துக்கணக்கா சொல்லலாம். வயசு வேற 40+ ஆயிருச்சா படக்குன்னு ஞா வந்து தொலைக்கிறதில்லை. தகவல்கள் ? நம்ம வலைப்பூவையும் ,தளத்தையும் நம்ம எழுத்தையும் ப்ரவுஸ் பண்ணா லட்சம் தகவல்கள் .எல்லாத்தையும் இல்லின்னாலும் பேர்பாதிக்கு தந்தது இணையமும்  இணையவழி உறவுகளும் தான்.

மேன்மைகள்:
ஃபிசசிக்கலா சொன்னா நம்ம பொளப்பு ஏறினா ரயிலு  இறங்கினா ஜெயிலுன்னு தேன் இருந்தது. நம்ம லைஃபுக்கு மினிமம் கியாரண்டியே இணையம் தான். ஆரம்பத்துல  நிலா சாரல்,அந்திமழை, முத்துக்கமலம்
இணைய தளங்களில் நம்ம எழுத்து வெளியானது முதல் நாம வெளியடறதா அறிவிச்சதும் நம்ம ஜோதிடம் 360 புஸ்தவத்துக்கு 419 பேர் முன் பதிவு செய்தது வரை பல மேன்மைகளை சொல்லனும்.

அம்மன் சத நாமாவளி கையடக்க பதிப்பை இலவசமாக வினியோகிக்க தெலுங்குல வெளியிட உள்ளதாய் முக நூலில்  சொல்ல அது தமிழ்லயா தெலுங்குலயான்னு பார்க்காம  இன்று ஆயிரம் மறு நாள் ரூ.10 ஆயிரம் நன்கொடை  கிடைக்கப்பெற்றது மேன்மைன்னா இதையும் கணக்குல வச்சுக்கங்க.

Wednesday, December 5, 2012

சில்லறை வர்த்தக கொள்ளையில் அன்னிய முதலீடு

அண்ணே வணக்கம்ணே !

நேத்திக்குத்தேன் பழைய ஃபார்முக்கு வந்து நவகிரகங்களுடன் பேட்டியை தொடர முடிஞ்சது. அதுக்குள்ளயே இந்த வில்லங்க பதிவு.

சில்லறை வர்த்தகத்துல அன்னிய முதலீட்டை கண்டிக்கிற எல்லாருமே ரீட்டெய்லர்ஸை சமூக சேவகர்கள் ரேஞ்சுக்கு பேசறாய்ங்க.

இன்னைக்கு அரிசி விக்கிற விலையில பாதி ஜஸ்ட் 50 சதவீதம் நெல்லை விளைவிச்ச விவசாயிக்கு போயிருந்தா விவசாயிகள் தற்கொலை செய்துக்கற நிலை ஏன் வரப்போகுது? மத்த சரக்குகளோட  மேட்டர்லயும் இதேதான் நிலைமை.

இதுக்கு என்ன தீர்வு? விவசாயிகள் கூட்டுறவு பண்ணை விவசாய முறைக்கு மாறனும். அவிகளே அறுத்து -அவிகளே போரடிச்சு -அவிகளே அரிசியாக்கி அவிகளே விக்கனும். ( இதெல்லாம் நடக்கிற விஷயமா?)

தனியொரு நாடாரோ,பாயோ,செட்டியாரோ தன் ஒரு குடும்பத்தை போஷிக்க ரவுண்ட் தி க்ளாக் உழைச்சா அதையாவது புரிஞ்சுக்கலாம். (இதுக்கான லைசென்ஸையே  பத்துவருசத்துக்கு மட்டும் தரனுங்கறது நம்ம கொள்கை. ஒழுங்கு மரியாதையா பொளப்பை மட்டும் பார்த்தா பத்து வருசத்துல குடும்பத்தை தூக்கி நிறுத்தி - நிம்மதியா ரிட்டையர்ட் லைஃப் லீட் பண்ணலாம்)

ஆனால் நாளுக்கு நாள் பெருகி வரும் கன்ஸ்யூமரிசம் காரணமா தேவைகள் பெருகிக்கிட்டே போகுது. வெறுமனே நாற்காலியை  தேய்க்கிற ஐஏஎஸ் ரேஞ்சுல லைஃபை எஞ்ஜாய் பண்ணனும்னு நினைக்கிறாய்ங்க. அந்த ரேஞ்சுலயே ஹவுசிங் லோன் போட்டு வீடு கட்டறாய்ங்க. அந்த ரேஞ்சுலயே கார் வாங்கறாய்ங்க. அந்த ரேஞ்சுலயே நோய் வாய்படறாய்ங்க. ஈசி மணி மேலான கவர்ச்சியில தலைமுறை தலைமுறையா வியாபாரத்தை தொடர்ராய்ங்க.

சோல் ட்ரேடர் முறையிலயே இதான் நிலை. இதுல  நாலு பேரா சேர்ந்து பத்து பேரை வச்சு வேலை வாங்கற யாவாரம் எந்த ரேஞ்சுல இருக்கும்னு பார்த்துக்கங்க. சூப்பர் பஜார் கதையெல்லாம் உங்களுக்கே கொஞ்சமாச்சும் உறைச்சிருக்கும்.

சனத்துக்கு உள்ள இன்னொரு பிரமை என்னன்னா வால் மார்ட் வந்தா ஹை குவாலிட்டி கிடைக்கும்ங்கறது. ஸ்டார் ஹோட்டல்ல ஒரு நா வேலை செய்த அனுபவத்துல பார்த்தது. லைம்ல உப்பு சரியா போச்சா பார்க்க சுட்டுவிரலை விட்டு நக்கி பார்க்கிறதைதான். உப்பு பத்தலின்னா இன்னொரு தாட்டி உப்பு போட்டு நக்கறான். சீல்ட் குளிர் பான  பாட்டில்ல கரப்பான் பூச்சி வரலியா என்ன?

விலை வாசி ஏறுது விலை வாசி ஏறுதுன்னா உற்பத்தியாளனுக்கு நாலணா உற்பத்தி செலவு ஏறினா அவன் எட்டணா கூட்டறான். டீலர் ஒரு எட்டணா, ஹோல் சேல் காரன் ஒரு எட்டணா ஏத்த ரீட்டெய்ல் காரன் ஒரு ரூவா -ரெண்டு ரூவான்னு  கூட்டிர்ரான்

ரீடெய்லரோட லாபமே அவன் எந்தளவுக்கு அடிமாட்டு விலைக்கு சரக்கு பிடிக்கிறாங்கறதை பொருத்துதான் நிர்ணயிக்கப்படுது. இங்கன நஷ்டபடறது உற்பத்தியாளன்.லாபப்படறது ரீடெய்லன். பேக்கு மாதிரி முழிக்கிறது ? நாமதேன்.

விவசாயி விவசாயத்தை கடன்ல தான் ஆரம்பிக்கிறான். தான் விளைவிச்சதை டவுனுக்கு கொண்டு வர்ரதுக்குள்ளயே தாவு தீர்ந்துருது. அவன் அன்னைக்கே வித்தாகனும். ஆனால் யாவாரிக்கு அப்படியில்லை. வச்சு வித்துக்கலாம். விவசாயி மாலையே காசு பார்த்து (ஊரு) வீடு திரும்பனும். இந்த சின்ன வீக் பாய்ண்டை வச்சுக்கிட்டு பகல் கொள்ளை அடிக்கிறாய்ங்க.

சரி ஒளியட்டும் வரியையாச்சும் ஒழுங்கா கட்டறானா ? இல்லை. இவனுக்கு வரி ஏய்க்க கத்துக்கொடுக்க ஒரு பெரிய நெட் ஒர்க்கே இருக்கு.

இதுவாச்சும் பரவால்லை. மேற்படி சில்லறை வர்த்தகன் இந்தியாவுலயே வாழறான்.  வாழ்வான்.அவனுக்கு சமூகத்தோட தயவு   தேவைப்படுது. சம்பளக்காரனுக்கு அக்கவுண்ட்ல  தரான்.   பெரிய நோட்டுக்கு சில்லறை இல்லின்னா வரப்போ தாங்கங்கறான். பிள்ளை,குட்டிக்கு காது குத்து,கல்யாணம்,பிள்ளை பேறு வந்தா இங்கயே செலவழிக்கிறான்.

அவனண்டை போன பணம் இன்னொரு சந்தர்ப்பத்துல சமூகத்துக்குள்ள பாயுது. மேலும் அவன் இந்திய வங்கிகள்ளயே சேமிக்கிறான். இந்தியாவுலயே வீடு,வாசல் வாங்கறான்.  இவன் சிதறிக்கிடக்கிறான்.

யூனியன்லாம் ச்சொம்மா . யூனியன்ல பந்த அறிவிச்சா ஷட்டரை சின்னதா திறந்து யாவாரம் செய்துர்ரான். உற்பத்தி பொருளை விக்கிறவனுக்கு ஆயிரம் சாய்ஸ். வாங்கறவனுக்கும் ஆயிரம் சாய்ஸ்.

இவனால ரெம்ப நாளைக்கு ஸ்டாக் வைக்க முடியாது. எலிதொல்லை,பூச்சித்தொல்லையிலருந்து  -முதலீட்டு மீதான வட்டி உசந்துருங்கறது வரை ஆயிரம் பிரச்சினை.

அன்னிய முதலீடு வந்தா என்ன ஆகும்? நாம புதுசா கற்பனை பண்ணவேண்டியதோ? ஊகிக்க வேண்டியதோ ஒன்னுமே இல்லை. வால்மார்ட்டோட சரித்திரத்தை பார்த்தா போதும்.உலக நாடுகள்ள வால்மார்ட்டோட லீலைகளை பார்த்த நாடு எதுவா இருந்தாலும் மூடு - ஓடுங்கறான். அதுல வேலை பார்த்தவன்லாம் ஊர்வலம் போறான்.

வால் மார்ட் தன் சுயரூபத்தை காட்ட ஆரம்பிச்ச பிறவு காந்தி தாத்தா கணக்கா யாராவது ஒரு தாத்தா வந்து "ஆரும் வால் மார்ட்ல வாங்காதிங்க"ன்னு ரவுசு பண்ணாலும் கு.பட்சம் 3 மாசம் அதிக பட்சம் 1 வருசம் கடை திறந்து காத்து வாங்குவான். நம்ம ஊரு மீடியாவுக்கு ஒரே வாரத்துல போரடிச்சுரும். போராட்டம் சைடு வாங்கிரும்.

செட்டியார், நாடார் ,பாய் எல்லாம் ஒரு நோட்டீஸுக்கே பயந்துக்குவாய்ங்க.கன்ஸ்யூமரையோ -கன்ஸ்யூமர் கோர்ட்டையோ, கமர்ஷியல் டாக்ஸ் ஆஃபீசையோ தேடி சரணடைஞ்சுருவாய்ங்க.

வால்மார்ட் காரன் கிட்டே இதுக்குன்னே லீகல் செல் இருக்கும். சிதம்பரம் சாரோட வொய்ஃப் மாதிரி ஆயிரம் பேரை சம்பளத்துக்கு வச்சுக்குவான். ஒங்கப்பனுக்கும் பேப்பே ..ஒங்க தாத்தனுக்கும் பேபே தான்.

சொந்த கட்டடத்துல செமை கெத்தா ஆரம்பிப்பான். கடைக்கு பக்கத்துல மூச்சா போனா கூட
என்கவுண்டர் பண்ண வச்சிருவான். இதுல குடிசை பகுதி, பொதுக்கழிப்பிடம்லாம் இருந்தா என்னாகும்னு இமேஜின் பண்ணிக்கங்க.

பிலிடிங்,பெய்ன்டிங்,கார்ப்பென்டரிங்,இன்டீரியர் எல்லாத்துக்கும் காண்ட்ராக்ட் விட்டுருவான். ( நம்மாளு ஒருத்தன்னா ஒருத்தன் கூட நேரடியா காலணா வேலை வாங்க முடியாது) சப் காண்ட் ராக்டர் கிட்டெ சப் காண்ட்ராக்ட் எடுத்து அடிமாட்டு விலைக்கு செய்ய வேண்டியதுதான். ஒரு அண்ணாச்சியையோ,ஒரு பாயையோ, ஒரு செட்டியாரையோ ஏமாத்தற மாதிரில்லாம் ஏமாத்த முடியாது.

வேலைக்கு ஆள் எடுப்பான். எம்.பி.ஏ ,சாஃப்ட் வேர் இஞ்சினீர் எல்லாம் வால்மார்ட் பள  பளப்பை பார்த்து அப்ளை பண்ணி கொத்தடிமை கணக்கா நாயடி பட வேண்டியதுதான்.

அடுத்தது கொள் முதல். கம்பெனி ஆளு ஜாமொரின் கிட்டே வந்து கிடங்கு கட்ட அனுமதி கேட்ட கணக்கா பதவிசா விவசாயி கிட்டே விலை பேசுவான். வாங்குவான்.அடுத்த வருச கொள்முதலுக்கு அக்ரிமென்ட் போடுவான்.

மக்காசோளம்னா  கோயம்பேடு மார்க்கெட் போல பொடிசு ,சிறுசு,பெருசுன்னு கிரேடிங்  இருக்காது. தங்கம் நிறுத்த கணக்கா இருக்கோனம். இல்லேன்னா விலை பாதியா குறையும். குறைஞ்சாலும் பரவால்லை. ஒரு வேளை வானம் பொய்ச்சு போச்சுன்னா ?

நம்ம ஊருல எல்லாம் இந்த மேரி மேட்டர்ல   விவசாயி கிட்டே போடற அக்ரிமென்ட்ல சாஸ்தி கம்மி ஆயிருச்சுன்னா  அடுத்த வெள்ளாமையில அஜீஸ் பண்ணிக்குவாய்ங்க. வால்மார்ட் என்னா பண்ணுவான் ஆருக்கு  தெரியும்?

ஒரம் தரேன், விதை தரேன்னு ஆரம்பிக்கலாம். ஒரு கட்டத்துல என் கிட்டதான் ஒரம் வாங்கனும்னு கட்டாயப்படுத்தலாம். நம்ம விவசாயி ப்ரீச் ஆஃப் அக்ரிமென்ட்டுன்னா அவன் கிட்டே லாயர்கள் கூட்டமே இருக்கும். அவன் ப்ரீச் ஆஃப் அக்ரிமென்டுன்னா விவசாயி எங்கன போறது?

நம்ம மக்களுக்கு உள்ளூர் சரக்குன்னா எட்டி , வெளியூர் சரக்குன்னா சர்க்கரை கட்டியாச்சே. இந்த வீக் பாய்ண்டை அவன் கெட்டியா பிடிச்சு கொண்டு வந்து குமிச்சுட்டான்னா உள்ளூர் சரக்கையெல்லாம் குப்பையில கொட்டறதா? அதை விளைவிச்சவன் கதி என்ன?

லார்ஜ் ஸ்கேல்ல பண்றதால குறைஞ்ச விலையில தருவாங்கறாங்க. இது ஒன்னு மட்டும் நிச்சயம். தேன் நிலவு முடியறவரை - மத்த கடைக்காரன்லாம் சிட்டியில உள்ளவன் டவுனுக்கு,டவுன்ல உள்ளவன் கிராமத்துக்கு ஊரு நாட்டை பார்க்க ஓடிப்போயிர்ர வரை தருவான்.

அதுக்கப்பாறம் ? கொய்யால .. சந்து முனையில டூ வீலர்ல நின்னுக்கிட்டே கொத்து மல்லி வாங்கறதெல்லாம் கனவாயிரும்.பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு சப்போட்டா வாங்கறதெல்லாம் மலயேறிரும்.

அங்காடடித்தெரு கணக்கா கடை தான் ஜொலிக்கும். உள்ளாற வேலை பார்க்கிறவன் வாழ்க்கையெல்லாம் இருண்டுக்கும்.

அந்த கடுப்புல - அவசரத்துக்கு வாங்கப்போன நம்மை கொழுப்பெடுத்து வர்ரானுவடாங்கற ஃபீலிங் அவிகளுக்கு வர - நாம தேய்க்க கொடுக்கிற டெபிட் கார்ட்,கிரெடிட் கார்ட்ல வேலை கொடுத்துட்டா என்னாவும்?

லோக்கல்ல ஒரு கார்ப்பரேட்டர், ஒரு லோக்கல் எம்.எல்.ஏவை சரி பண்ணிக்கிட்டே அவனவன் என்னென்னமோ ஆட்டம் போடறான். என்னென்னமோ அழிச்சாடியம் பண்றான்.

தாளி ..மூலஸ்தானத்தையே கைக்குள்ள வச்சிருக்கிற வால்மார்ட் காரன் என்ன பண்ண மாட்டான்? ரோசிங்க நைனா..

# டவுட்டு

இதை எதிர்க்கிறோம்னுட்டு பம்மாத்து காட்டிட்டு வாக் அவுட் பண்ணவுகளுக்கும், ஆதரிக்கிறோம்னு ஆதரிச்சவுகளுக்கு என்னா தகிரியங்கறிங்க? ஒரு வேளை அடுத்த தேர்தல்ல வால்மார்ட் ஷேர் ஹோல்டர்ஸ் மட்டும் ஓட்டுப்போடுவாய்ங்களோ?