Showing posts with label சோதிடம். Show all posts
Showing posts with label சோதிடம். Show all posts

Friday, February 9, 2018

பலான ஜோக் முன்னுரை


பலான ஜோக்குகள் என்பவை எங்கே தோன்றின. எப்படி பரவின? இதை சொல்பவர்களின் சைக்காலஜி என்ன ? கேட்பவனின் சைக்காலஜி என்ன? கேட்டு சிரிப்பவனின் சைக்காலஜி என்ன? அருவறுப்படைபவனின் சைக்காலஜி என்ன? பெண்கள் இது போன்று பலான ஜோக்குகள் சொல்லிக்கொள்வதுண்டா? அவர்கள் சொல்லி மகிழும் ஜோக்குகள் எப்படிப்பட்டவை ? இதற்கெல்லாம் விடை காண ரொம்பவே மெனக்கெட வேண்டும் .

செக்ஸ் கிடைக்காதவன் "சீ சீ இந்த பழம் புளிக்கும் " என்ற ரீதியில் செய்த நக்கல்களா ? (அ ) காமக்கடலில் முத்துக்குளித்தவன் எறிந்த ( முத்துக்களோடு கிடைத்த) சிப்பிகளா ? உடலுறவுக்கு முன்பாக இணையை சூடேற்ற மேற்கொண்ட முயற்சிகளா? ஆணும்,பெண்ணும் உடலுறவுக்கு வாய்ப்பில்லாத போது மேற்கொண்ட ஓரல் (வாயளவுனு அர்த்தப்படுத்திக்கங்கனா) செக்ஸ் முயற்சிகளா? புரியவில்லை.

ஆனால் அதிக பட்சம் ஆணாதிக்கக உணர்வுகள் நிறைந்தவையாகவும், பெண்ணை சிறுமைப்படுத்துவனவாகவுமே உள்ளன.

சரி உங்கள் பொறுமையை சோதிப்பானேன். முதலில் ஒரு ஜோக்கை பார்ப்போம். உலகிலேயே நீண்ட உறுப்பை கொண்ட ஆணையும் , ஆழமான உறுப்பை கொண்ட பெண்ணையும் தேர்வு செய்தனர். அவர்களிருவரும் மேடை ஏறி உடைகளை உதிர்த்து உறவுக்கு முனைந்தனர். அப்போது அவன் அவள் வாயை பொத்தினான். அவளோ அவன் தலை முடியை பிடித்துக்கொண்டாள். ஏன்?

வாயை பொத்தினது : வாய் வழியே வெளியே வந்துவிடக்கூடாது என்றாம்
தலை முடியை பிடித்தது: அவன் காணாமல் போய்விடப்போகிறானே என்றாம்


முதலில் செக்ஸ்+மனோதத்துவம்:
மனிதனின் இதர செயல்பாடுகளை போலவே செக்ஸ் மீதும் மனோதத்துவம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதர செயல்பாடுகளேனும் பகிரங்க பிரதேசங்களில் நடைபெறுவதால் கு.ப.முகமூடி அணிந்து இரட்டை வேடமெனும் போடுகிறான். ஆனால் செக்ஸில் ?

மனிதன் மிருகம். அவன் (அந்த மிருகத்தை ) தன்னை ஆடைக்குள் மறைத்து வைத்துள்ளான். அது வெளிப்படுவது ஒரு சில சந்தர்பங்களில் மட்டுமே. உ.ம்.தனிமையில்/கழிவறை/குளியலறை மனைவி வாய் செத்தவளாய் இருந்தால் பெட் ரூமில்/பசியில்/உயிர்பயத்தின் போது

மனிதன் மிருகமாகவே வாழ்ந்திருந்தால் பிரச்சினை இல்லை. அவன் மனிதனாக வேடமிட துவங்கிய பிறகுதான் மனோதத்துவ பிரச்சினைகள் & மனோதத்துவ சாஸ்திரம் தோன்றியது. சிக்மன் ஃப்ராய்டு சொன்ன தியரியை நான் புரிந்து கொண்ட வகையில் இங்கு கூறுகிறேன். மனிதனின் கேரக்டர் 3 கேரக்டர்களின் கூட்டு கலவையாக உள்ளது. 1.மிருகம் 2. ஆதர்ஸமனிதன் 3. மிருக+ ஆதர்ஸ மனிதனின் குணக்கலவை

சமுதாயத்தில் நடமாடுவது 3 ஆவது கேரக்டர்தான். பூகம்பம் வெள்ளம் இத்யாதி உத்பாதங்களின் போது மனித மனதிலான ஆதர்ஸ மனிதன் வெளிப்படுகிறான். குழந்தை தொழிலாளி, வாய் செத்த மனைவி விஷயங்களில் மட்டும் மிருகம் வெளிப்படுகிறது. பகவத்கீதை தமோ ,ரஜோ,சத்வ குணங்களை குறிப்பிட்டாலும் ,ஃப்ராய்டு 3 வித குணாம்சங்களை விவரித்தாலும் இவை யாவும் குழந்தைக்கு ஜீன்களின் வழி கிடைக்கின்றன இவற்றை ரஸ்னா பவுடர் என்று சொன்னால் சுற்றுப்புறச்சூழலை தண்ணீர் மற்றும் சர்க்கரை எனலாம். இதில் கிரகபாதிப்பின் பங்கு என்ன ? என்ற கேள்வி எழுகிறதல்லவா ? ஜோதிடம் என்பது ஆன்மீக பயணத்தின் முதல் படி.. ஆன்மீகம் என்பது ஜோதிடப்பயணத்தின் இறுதி இலக்கு.

உங்களில் பலபேர் புலம்புவதுண்டு " ஏன் தான் கடவுள் என் தலைல இப்படி எழுதிட்டானோ"

இது தவறு. ஆம் ஒவ்வொரு ஆன்மாவும் உடலை பிரிந்த நிலையில் சுதந்திரமாக இயங்குகிறது. அவரவர் பாவ புண்ணியங்களுக்கேற்றபடியே சுலோகங்கள் கூறினாலும் ஆன்மா தன் கடந்த பிறவிகளின் கருமங்களை தொலைக்க/கருமம் கூடாதிருக்க/புண்ணியபலனை சேர்க்க/இறைவழி நாட ஏதுவான பிறப்பை தானே நிர்ணயிக்கிறது. அதனால் தான் கடந்த பிறவிகளில் நம் முக்திக்கு தடையாக இருந்த அம்சங்களையெல்லாம் லிஸ்ட் அவுட் செய்து அவற்றையெல்லாம் தவிர்க்கும் வகையிலான பிறப்பை, குடும்ப சுற்று சூழலை தரும் கிரக நிலையை ஜாதகத்தை தேர்ந்தெடுக்கிறோம். ஏனெனில் ஆன்ம வடிவில் இருக்கும்போது நம் நோக்கம் முக்தி. உடலுடன் பிணைக்கப்பட்டுவிட்டபோது ? புக்தி. அதாவது இகலோக வாழ்விலான வெற்றி. அதனால் தான் இந்த புலம்பல்.


வம்ச விருட்சம்:
சில குடும்பங்களில் பார்க்கும்போது எல்லா ஆண் பெண்களும் நல்ல ஆரோக்கியம், தக்க வயதில் திருமணம், நல்ல ஆண்மை, சந்தானம்பெற்று வாழ்வதை காணலாம். ஆனால் வேறு சிலகுடும்பங்களில் நிலைமை வேறாக இருக்கிறது. இதற்கு காரணம் என்ன ? புண்ணிய பலன்களை அனுபவிக்க பிறவியெடுத்த ஆன்மாக்கள் முதல் வகை குடும்பங்களை தேர்வு செய்கின்றன. கருமங்களை தொலைக்க எண்ணும் ஆத்மாக்கள் இரண்டாம் வகை குடும்பங்களை தேர்வு செய்கின்றன. எப்படி ஒரு மரத்தின் கிளைகளில் ஒரேவிதமான மலர்கள் பூத்து ,ஒரேவிதமான காய்கள் காய்க்கின்றனவோ அதே போல் தான் இதுவும் நிகழ்கிறது. அதனால்தான் வம்சாவழியை வம்ச விருட்சம் என்று குறிப்பிடுகிறார்களோ என்னவோ?

செக்ஸ் லைஃப்:

செக்ஸ் லைஃபையும் இதே போலத்தான் ஆன்மாக்கள் தேர்வு செய்கின்றன. ஆனால் இந்த பிறவியில் இது தம் செலக்ஷன் தான் என்பதை மறந்து தவிக்கின்றன. செக்ஸ் என்பது மனித உடலில் இருக்கும் ஒரே பவரான மிஸ்டிக் பவரை உணர வைக்கும் ஒரு தூண்டுதல் மட்டுமே. அதை விடுத்து அதிலேயே மூழ்கிவிட்டால் ஷெட் தான்.
செக்ஸில் கச்சா முச்சானு இறங்கிவிட்டால் அதையும் மறந்து விடவேண்டியதுதான். செக்ஸை ஒரு தூண்டுதலாக கொண்டு அளவோடு, ஆழமாக அனுபவித்தால் டூ இன் ஒன் என்பது போல் ஒரே சக்தி செக்ஸ் பவராகவும், யோகிக் பவராகவும் வேலை செய்யும்.

முதலில் இந்த பலான ஜோக்குகளை பதிவிடும் முயற்சியை ஆரம்ப நாட்களிலேயே செய்து பார்த்துவிட்டேன். ஞானி ஆனந்த விகடனில் பாலியல் கல்வி தொடர் ஒன்றை எழுதி வந்த சமயம் கல்கியில் கண்டனம் (தலையங்கத்தில்) வெளிவந்தது. அதை நக்கலடித்து பல் ஜோக்கை வெளியிட்டேன். ஆனால் அந்த காலத்தில் திரட்டிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் அது நிறைய பேரை சென்றடையவில்லை. இன்று நிலைமை வெகுவாக மாறிவிட்டதது ( நேற்று மட்டும் 600 பேர் என் பதிவுக்கு வருகை தந்தனர்)

எனக்கு வெற்றி மட்டும் முக்கியமில்லை. வெற்றிக்கான காரணமும் தேவை. 13 நாட்கள் செக்ச் ஜோக் + சைக்காலஜி என்று தொடர்பதிவுகள் போட்டபடி இதில் நிறையவே ஆராய்ச்சி செய்தேன். ஒரு பதிவில் ஜோக்கை மட்டும் போட்டு விளக்கம் அடுத்த பதிவில் என்றேன் ஹிட்ஸ் வெகுவாக குறைந்தது. பின்பு விளக்கத்தை மட்டும் போட்டேன் ஹிட்ஸ் குறைவுதான். என்னங்கடா இது என்று 3 ஜோக்குகளை ஒரே சமயத்தில் வெளியிட்டேன். அடிச்சு தூக்கிருச்சு.

வருகைகள் ஏறவும்,இறங்கவும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மேலும் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். மறுமொழிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம்.
இதை நான் சரியாகவே புரிந்து கொண்டேன். அதாவது இந்த பதிவுகளை தொடர்ந்து படித்தவர்களில் அதிக சதவீதம் புதிய பார்ட்டிகளே.

இதுவும் ஒருவகையில் நல்லதே. காமக்கதைகள் , ஜன்யபாகங்கள் என்று தேடி நீலப்படத்தனமான பதிவுகளை வாசித்து வீட்டுக்கு போனதும் இரண்டாவதா என்ன செய்யலாம் என்று யோசிப்பதைவிட கவிதை07 ல் ஒரு ஜோக்கை படித்தாற்போலவும் இருக்கும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை தெரிந்து கொண்டாற்போலவுமிருக்கும் .மை டியர் யங்க் ஃப்ரெண்ட்ஸ் ! உங்களுக்காகவும் நான் எழுதுகிறேன். டோண்ட் ஒர்ரி !

உடலுறவு என்பது என்ன ? ஜஸ்ட் ஒரு ஆணும் பெண்ணும் ஒரு டெஸ்ட் ட்யூபாகவும், குடுவையாகவும் மாறுகிறார்கள் அவ்வளவே. இந்த செயலின் நோக்கம் இனப்பெருக்கம். தட்ஸ் ஆல்.

இதற்காகத்தான் உயிர்கள் படைக்கப்பட்டுள்ளன. அந்த உயிர் கூன்,குருடு, ஊமை,செவிடு,பேடாக இருந்தாலும் சரி. காம உணர்வு கட்டாயம் இருக்கிறது. முதுமையின் உச்சத்தில் கட்ட கடைசியாக மறையும் உணர்வும் இதுவே. கருப்பையிலான சிசுவுக்கும் (ஆண்) குறி விரைக்கிறது . சிலருக்கு மரணத்தின் போதும் வீரியம் ஸ்கலிதமாகிறதாம்.

பறவை கூடு கட்டினாலும் சரி, நண்டு வளை தோண்டினாலும் சரி, மரம் ஒன்று பூத்தாலும் சரி, நீ டை கட்டினாலும் சரி அதற்கு பின்னுள்ள ஒரே நோக்கம் இனபபெருக்கம் தான் . அது இயற்கை அன்னையின் ஆணை. அதை எந்த கொம்பனாலும் மீற முடியாது. அணை நிரம்பிவிட்டால் தண்ணீரை திறந்து விட வேண்டியதுதான். சேர்த்து வைக்கப்பார்த்தால் ஒரேயடியாய் திறந்து விட வேண்டிவரும். அதுவாய் உடைந்தால் ஊரை அழிக்கும்.

உங்களில் (அதாவது பலான ஜோக்குகளை படிப்பவர்களில் )அதிக சதவீதம் திருமணமாகாதவர்களாகத்தான் இருப்பீர்கள். இதில் அதிக சதவீதம் பேர் சுய இன்பம் அனுபவிப்பவராக இருப்பீர்கள். சுய இன்பத்துக்கு மட்டுமே அல்ல உடலுறவுக்கும் ஒரு விதி இருக்கிறது.
1.எவ்வித குற்ற உணர்வோ , பதட்டமோ , அச்சமோ இன்றி ஆற அமர , நிதானமாய் ஆழமாய் அனுபவித்தால் எண்ணிக்கை குறையும். அவ்வாறன்றி அவசர அடி அடித்தால் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகும். பிறகு குறி ஃப்ளவர் ப்ராக்கெட் மாதிரி ஆகிவிடும். குறி கையளவு ஆகி, கை குறியளவு ஆகிவிடுமாம் எச்சரிக்கை !
2.இன்றைய காலகட்டத்தில் உடலுறவுக்கோ, சுய இன்பத்துக்கோ கிடைக்கும் உந்துதல் 99 சதவீதம் செயற்கையானது. வெளியிலிருந்து வருவதாகும். இதற்கெல்லாம் ரெஸ்பாண்ட் ஆக ஆரம்பித்தால் நாஸ்தி தான். ஆனால் வெளிப்புறத்திலிருந்து அல்லாது உடலிலிருந்தே வரும் தூண்டுதல் ஆரோக்கியமானது. அதற்கு செவி சாய்க்கலாம். என்னைக்கேட்டால் சுய இன்பம் என்பதே தேவையற்றது. அணை நிரம்பிவிட்டால் அதிகப்படி தண்ணீர் தானே வழிவது போல் ஸ்வப்ன ஸ்கலிதமாகிவிடும்.

உடலுறவுக்கும் ,சுய இன்பத்துக்கும் உள்ள வேறுபாடு:

(அடுத்த பதிவில் பார்ப்போம்)

Wednesday, September 14, 2016

ஆசைகளின் மூலம்

அண்ணே வணக்கம்ணே !

உலக துன்பங்களுக்கு ஆசையே காரணம்னு புத்தர் சொன்னார். எந்த பிரச்சினையா இருந்தாலும் அதனோட மூலம் என்னன்னு தெரியாம தீர்த்து வைக்கவே முடியாது .இந்த பதிவுல ஆசைகளின் மூலம் என்னனு சொல்லப்போறேன்.

ஆசை  வெட்கமறியாது ! காமாதுரானாம் நா பயம் நா லஜ்ஜானு சொல்லியிருக்காங்க. அதாவது காம வயப்பட்டவனுக்கு பயமோ வெட்கமோ இருக்காதாம். காமம்ங்கறது உயிரின் அடிப்படை -அடி நாதம். அதை நாம என்னைக்குமே எதிர்த்ததில்லை. இன்னம் சொல்லப்போனா பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதியே வழங்கிரனுங்கறதுதான் நம்ம ஸ்டாண்ட். அதை விடுங்க..

காமம்ங்கற வார்த்தைக்கு வெறுமனே செக்ஸ் மட்டும் பொருளில்லை . ஆசைகளும் தான். ஆசைன்னா ஸ்பைஸ் வச்சுக்கறதுலருந்து - ஏரியாவுக்கு ஒரு ஃப்ளாட் வாங்கறது வரை ஆசைதான். "அந்த"ஆசை தீராத சன்மங்க தான் /அதுக்கு குவாலிஃபைடா இல்லாத சனம் தான்/ அதுக்கான வேலிட்டிட்டி தீர்ந்து போன சன்மங்க தான் இப்படி அலையுதுங்கறதுதான் என் ஹஞ்ச்.

நம்ம ஆசைகளை எல்லாம் 3 கேட்டகிரியா பிரிச்சுக்கலாம் மொத கேட்டகிரி  "அதுக்கு" ப்ரிப்பேர் ஆறதுக்குண்டா ஏற்பாடுகள் (கல்வி/வேலை /சம்பளம்/ஃப்ளாட்/க்யாஸ் சிலிண்டர்) . அடுத்தது அது கிடைச்ச பிறவு பலகீனமடையும் உடலுக்கு/மனசுக்கு  ஒத்தாசையா /இதம்மா சில ஏற்பாடுகள். அடுத்த கேட்டகிரியில தான் அவலை நினைச்சு உரலை இடிக்கிற காரியங்கள்ளாம் வருது .

இதுல உள்ள சோகம் என்னடான்னா எந்தவித ப்ரிப்பிரேஷனும் இல்லாம இயற்கை ஒரு கொடை போல /பம்பர் பரிசு போல செக்ஸ் பவரை கொடுத்திருக்கு .அது பொங்கி சீறும் போது வடிகால் கிடையாது . காளை மாட்டுக்கு புல்லை காட்டி ரேக்கி விட்டே வேலை வாங்கறாப்ல படிப்பை முடிச்சாச்சுன்னா வேலை -வேலை கிடைச்சதுமே பலாந்து பலாந்துனு குடும்பம்/சமூகம் எல்லாமே ட்ரில் வாங்குது .

எப்ப இவன் குவாலிஃபைட் ஆகிறானோ அதுக்குள்ளயே இயற்கை தன் கொடையை அளந்து கொடுக்க ஆரம்பிச்சிருது . இவன் எதுக்கு குவாலிஃபைடாகனும்னு ஒர்க் அவுட் பண்ணானோ அந்த ஒர்க் அவுட்லாம் சேர்ந்து அந்த அசலான மேட்டருக்கே ஆப்பு வச்சிருது .

இப்ப அந்த அசலான மேட்டர்ல உள்ள டெஃப்சிட்டை ஈடு கட்ட என்னென்ன இழவையோ இட்டு கட்ட வேண்டியதாயிருது. ஒரு கட்டத்துல ஈடு கட்டவே முடியாதுங்கற தெளிவு வந்தோன்ன இவரு வேட்டைக்கு புறப்படுறாரு. தங்க வேட்டை /பண வேட்டை .ஜஸ்ட் எஸ்கேப்பிசம்.

யதார்த்தம் என்னன்னா பலான மேட்டரு மட்டும் பக்காவா இருந்தா எந்த டெக்கரெஷனும் தேவையில்லை. பலான மேட்டரு புட்டுக்குச்சின்னா எந்த டெக்கரேஷனும் ஒர்க் அவுட் ஆகாது.

பொஞ்சாதிக்கு செக்ஸ் கொடுக்க முடியாதவன் அவ பெத்ததுக்கு சொத்து சேர்க்கறதா பம்மாத்து பண்றான். என்னா லாஜிக்கு?

ஆசைகளின் சில்லி வேரை பிடிச்சுக்கிட்டு சில்லியா ஜல்லியடிச்சுக்கிட்டிருந்தா ஆசைகளுக்கு முடிவே இல்லை .
ஆசையோட ஆணி வேரை கெல்லி எடுத்து பார்த்தாச்சுன்னா ஆசைகளுக்கு அர்த்தமே இல்லை ..


Monday, June 23, 2014

மோடிக்கு சில ரோசனைகள்

அண்ணே வணக்கம்ணே !
முக நூல்ல சில நாட்களுக்கு மிந்தி நான் பிரதமராகியிருந்தாங்கற தலைப்புல சில ஐடியாக்களை அள்ளி விட்டிருந்தம்.

அந்தத பட்டியலை கீழே தந்திருக்கன். கொஞ்சம் போல அப்டேட் பண்ணியிருக்கன். ஆருனா இதை இங்கிலீஷ்ல டப்பிங் பண்ணி போட்டா புண்ணியமா போகும்.

இதை எல்லாம் படிச்சுட்டு அட இதெல்லாம் நமக்கு தோனலியேன்னு சிலருக்கு தோனும்.பலர் அட நாம கூட இப்படி எல்லாம் ஒரு சந்தர்ப்பத்துல நினைச்சிருக்கமேன்னு தோனும்.

நான் கொடுத்திருக்கிற ஐடியா எல்லாம் ஒன்னும் கம்ப சூத்திரம் இல்லை.  இந்த மாதிரி ஐடியால்லாம் வரனும் -தொகுத்து எழுதனும்னா மனசு இருக்கனும். எல்லாரும் நல்லாருக்கனும்ங்கற மனசு இருக்கனும் .அவ்ளதான்.

க்ளோபல் வில்லேஜுங்கறாய்ங்க. உலகமே தெப்பக்குளம் மாதிரி ஆயிருச்சு. எவனோ ஒரு பன்னாடை ஒரு கூழாங்கல்லை தூக்கி போட்டா அலை உங்க படித்துறைக்கும் வரும். டீசல் விலை ஏறினா எனக்கென்ன? ரயில் கட்டணம் ஏறினா எனக்கென்னனு இருக்க முடியாது.

ஒரு முட்டாள் அரசாங்கத்தோட முட்டாள் தனமான முடிவு  நம்ம எல்லாரையும்  நேரிடையா -உடனடியா பாதிக்கும். பெட் ரூம் வரை -கழிவறை வரை வந்து பாதிக்கும்.

இந்த ரோசனைகளை ஆருனா ட்ரான்ஸ்லேட் பண்ணா அதை மோதிஜிக்கு அனுப்பலாம்னு ஒரு கெட்ட எண்ணம்.

பெரீ மன்சங்களுக்கு லெட்டர் போட்டா பதில் வரும்ங்கற தவறான நம்பிக்கையை கொடுத்தது என்.டி.ஆர். ஆப்புமேல ஆப்படிச்சா பதில் வந்தே தீரும்ங்கற நம்பிக்கைய கொடுத்தது சந்திரபாபு.

நீ தலைகீழ நின்னு ரசத்துல மூஞ்சி கழுவினாலும் வராதுன்னு சொல்லாம சொன்னது மம்மி . மோடி என்ன சொல்லப்போறாரு? என்னமாதிரி அனுபவத்தை கொடுக்கப்போறாருன்னு பார்க்கத்தானே போறேன்.

நிர்வாகம்னா அது ஒன்னும் மோடி மஸ்தான் வேலை இல்லை.  கொஞ்சம் தில் வேணம். தில்லுன்னா தகிரியம்னு தெரியும். தில்லுன்னா மனசுன்னு கூட ஒரு அருத்தம் இருக்கு.

சீர் திருத்தம்னு இறங்கிட்டா ஒவ்வொரு அடியையும் சாக்கிரதையா எடுத்து வைக்கனும்.இருக்கிற ஊழியர்களை ஒரு ரேஞ்சுக்கு கொண்டு வரனும்னா மொதல்ல ஆல்ட்டர்னேட்டிவ் அரேஞ்ச் பண்ணிக்கனும்.

காலி இடத்தை எல்லாம் போர்கால அடிப்படையில நிரப்பனும். அவிகளுக்கு உரிய பயிற்சி கொடுக்கனும். புதுசா சேர்ந்தவன் புதுசா இருக்கும் போதே பழைய ஒட்டடைய எல்லாம் தட்டனும்.வேலை நிறுத்தம் அது இதுன்னு இறங்கினாலும் புது வெள்ளத்தை வச்சு சமாளிக்கனும்.

நிர்வாகம்னா பாராளுமன்றமோ -தலைமை செயலகமோ -அங்கன குப்பை தொட்டி வைக்கிறதோ இல்லை. நிர்வாகம்னா மக்கள் பார்வையில  எது நிர்வாகம்னு தெரிஞ்சுக்கனும்.

மக்கள்னா வங்கிக்கடன் வாங்கி லக்சரி டீசல் கார் வச்சிருக்கிறவனும் மக்கள் தான்.ஆனால் அவனை கொஞ்சம் தீர்ப்பாட்டா கவனிக்கலாம்.

டாப் ப்ரியாரிட்டி நடை பாதி வாசி. குடிசை வாசி, ஒண்டு குடித்தனவாசி,

விசிட்டிங் கார்டோ ,பெரீ மன்சங்க லெட்டர் பேடோ ,கார்ப்பரேட் கம்பெனி ஐடியோ இல்லாத அவனை பொருத்தவரை அரசாங்கம்னா லட்டியில தட்டி "யார்ரா நீ"ங்கற போலீஸ் காரர் தான்.

சனத்தை பொருத்தவரை அவன் தினசரி புழங்கற இடம் , வாரம் ஒரு தாட்டி அல்லது மாசம் ஒரு தாட்டி விசிட் அடிக்கிற இடம் பர்ஃபெக்டா இருந்தா போதும் .

அது போலீஸ் ஸ்டேஷனா இருந்தாலும் சரி . தாலுக்காஃபீஸ், கரண்டாஃபீஸ், போஸ்டாஃபீஸ், காய்கறி மார்க்கெட்,அவன் பிள்ளை படிக்கிற ஸ்கூலு .இப்பிடி ஒரு லிஸ்டை போட்டா மொத்தமே இருபது இருபத்தஞ்சு தான் வரும். அந்த இடங்களை ஆசிட் ஊத்தி கழுவி சென்டட் ஃபெனாயில் போட்டு வச்சுட்டா போதும் "சீமான்யா.. என்னமா ஆட்சி நடத்தறான்"னு சொல்ட்டு போயிக்கினே இருப்பாய்ங்க.

இப்பம் " நான் பிரதமாராகியிருந்தா"ங்கற  தலைப்புல கொடுத்திருந்த ஐடியாக்களை பாருங்க.

பாராளுமன்றம்,ஜனாதிபதி மாளிகை,பிரதமர் இல்லம் மூன்றையும் க்ளோபல் டென்டர் மூலம் 99 வருடங்களுக்கு லீசுக்கு விட்டிருப்பன்.
தற்போதைய கரன்சி ரத்து -புதிய கரன்சி அறிமுகம் (கருப்பு பணத்துக்கு காயடிப்பு)

10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் சிறப்பு ராணுவம் கொண்டு நதிகள் இணைப்பு -கூட்டுறவு பண்ணை விவசாயம்

நம் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை ஐ.நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்கி அதன் பாதுகாப்பை சர்வதேச ராணுவத்துக்கு ஒப்படைப்பு.( சீனா விஷயத்திலும் இதே ஃபார்முலா) அவர்கள் வசம் உள்ள நிலப்பகுதியையும் ஐ. நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்க சொல்லி அழுத்தம்.
வழிக்கு வரலின்னா சீனா,பாக்கிஸ்தான்,இலங்கை மீது பொருளாதார தடை,ராஜீய உறவுகள் கட்

ராணுவத்துக்கு நதி நீர் இணைப்பில் பங்கு .நதி நீர் இணைப்பில் முதலீடு செய்யும் அன்னிய நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி.

இந்த நாட்டின் தொழில் விவசாயம்-நாட்டின் அனைத்து சக்தியும் விவசாய மேம்பாட்டிற்கு திருப்பி விடப்படும்.அடுத்த முக்கியத்துவம் விவசாயம் சார்ந்த தொழில்கள்,விவசாய உற்பத்திகள் ஏற்றுமதி

ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர் பாதுகாப்பு,உணவு,உடை,இருப்பிடம் செக்ஸுக்கு உத்திரவாதம்.பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி

அனைத்து மானிலங்களிலும் தலா ஒரு மாதம் பிரதமர்,தலைமை செயலகம் செயல்படும் (டிஜிட்டல் மயமாக்கி விடுவதால் மனிதர்கள் மட்டும் ரயிலை பிடிச்சு போனா போதும்.

பூரண மதுவிலக்கு -போதை பொருட்களுக்கு தடை
ஒரு வருடத்துக்கு மேற்படிப்புகள்,தொழிற்கல்விக்கு தடை - ஆஃப்டர் அப்டேஷன் ஒன்லி ரீ ஸ்டார்ட்.

படிச்சவனுக்கு அவன் படிச்ச நிறுவனமே வேலை கொடுக்க சட்டம்

ஆறுகள் எத்தனை சின்னதாய் இருந்தாலும் ராணுவம் கொண்டு மீட்பு , கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டால் அன்றி நதியில் விட தடை. சட்டத்தை மீறினால் கொலை வழக்கு பதிவு

பள்ளிகள், கல்லூரிகள்,ஹாஸ்டல்கள்,பிரார்த்தனை ஸ்தலங்கள்,அரசு அலுவலகங்களுக்கு தேவையான மின்சாரத்தை அவிகளே ஜெனரேட் பண்ணிக்கனும் . (சோலார்,பயோ கியாஸ்,காற்றாலை)

பெட்ரோலுடன் எத்தனால் கலந்து உபயோகிக்க அனுமதி.லக்சரி கார்களுக்கு மானிய விலை டீசல் கட்.

பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டுக்கு டாப் ப்ரியாரிட்டி.வாரத்துல ஒரு நாள் மாசு எதிர்ப்பு தினம். அன்று பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் தவிர்த்து அனைத்து  வாகனங்களுக்கும் தடை .

அரசு அலுவலகங்களில் காகிதங்களுக்கு தடை. நிருபர்கள்,பொதுமக்களுக்கு தகவல் தர மட்டுமே காகிதம்.மற்றபடி அனைத்தும் டிஜிட்டல் மயம்
பீக் ஹவர்ஸில் ஃபோர் வீலர்களுக்கு தடை .18+ வயதுள்ள வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அனைவருக்கும் இலவச சைக்கிள்.சைக்கிள்களுக்கு மெயின் ட்ராக்

மத,ஆன்மீக நடவடிக்கைகளுக்கு உடலுறவு போன்று சாத்திய கதவுகளுக்குள் மட்டுமே அனுமதி .

கிராமங்கள் உற்பத்தி மையங்களாய்,நகரங்கள் விற்பனை மையங்களாய்
காவலர் பணியிடங்கள் நிரப்புதல் - அப்டேட்டட் ட்ரெய்னிங். 3 மாதங்களில் மொத்த பணியிடங்கள் போல் மேலும் இரண்டு மடங்கு ஆளெடுப்பு. ஷிஃப்ட் சிஸ்டம். காவல் நிலையங்களில் சிசி கேமரா.

அனைத்து மத்திய,மானில அரசு ஊழியர்களுக்கும் மெடிக்கல் டெஸ்ட். ஃபெய்ல் ஆனவுக வீட்டுக்கு. காலியிடங்கள் அனைத்தும் நிரப்புதல்.
ஒவ்வொரு அரசு ஊழியனையும் அரசே தத்தெடுக்கும். A to Z அரசே வழங்கும். பார்த்துக்கொள்ளும்.

லஞ்சம் வாங்கினால் ரிமூவ்ட் ஃப்ரம் சர்வீஸ்

வருடத்தின் 11 மாதங்கள் உழைத்தவர்களுக்கு மட்டும் 1 மாதம் சுற்றுலா அனுமதி .(ஆன்மீக சுற்றுலாவுக்கும் இதுவே விதி)

நோய் தடுப்பு,குற்ற தடுப்பு,விபத்து தடுப்புக்கு டாப் ப்ரியாரிட்டி .
ஸ்விஸ் வங்கி கணக்காய் வங்கி துவங்கி நாட்டின் கடனை எல்லாம் செட்டில் பண்ணிர்ரது. பஞ்சாயத்து பேசி வட்டில்லாம் எகிறடிச்சுட்டு ஒன் டைம் செட்டில்மென்ட்.

காய்கறி மார்க்கெட்,சந்தையில எல்லாம் எஸ்.டி.டி பூத் கணக்கா வங்கி கவுண்டர்கள். காலையில கடன் கொடுத்து மாலையில வசூல்.

ஒருரெண்டு வருசத்துல எல்லாத்துக்கும் வேலைவெட்டி கொடுத்து அவிகளாகவே எங்களுக்கு நல திட்டங்கள் வேணாம்னு கழண்டுக்கனும் .பிறவு நல திட்டங்கள் கை விடப்பட்ட முதியோர்,பெண்கள்,குழந்தைகள்,உடல் ஊனமுற்றோர்,வயதான திரு நங்கைகளுக்கு மட்டுமேங்கற நிலைய கொண்டு வருவம்

ச்சும்மா பாய்லா காட்டாம -ஹார்ட் ஃபுல்லா -பத்து வருடங்கள் இட ஒதுக்கீடு அமல் செய்தால் போதும். இனி எம் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று அவர்களே எழுதிக் கொடுத்துவிடுவார்கள்

எந்த குடிமகன் எந்த மானிலத்துக்கு பெயர்ந்தாலும் அங்கு அவனுக்கு வேலை தங்குமிடம் தயாராக இருக்கவேண்டும்.

100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்கும் வரை ஆளில்லா வாக்கு பதிவு மையங்கள் தொடரவேண்டும் .

ஆறு,ஏரி,குளம்,வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியவர்கள் தம் சொந்த செலவில் அவற்றை தம் கட்டிடங்களின் கீழ் புனரமைக்க வேண்டும்.

கடலில் கலக்கும் ஒவ்வொரு டி.எம்.சி தண்ணீரும் அரசின் அனுமதியின் பேரில் மட்டுமே கலக்கவேண்டும்.

தடுப்பணைகள் கல்லணை ஃபார்முலா கொண்டு அமைக்க வேண்டும்.
கம்ப்யூட்டருக்கு புரியும் வகையில் ஒவ்வொரு குடிமகன் குறித்த டேட்டாவையும் அவனே தரும்படி செய்து -அதை அடிப்படையாக வைத்து மைக்ரோ ப்ளானிங்.தவறான தகவல் தந்திருந்தால் ஏழரை வருட கடுங்காவல்    
தண்ணீர் ,ரயில் போக்குவரத்துக்கு டாப் ப்ரியாரிட்டி. ஏற்கெனவே போட்டு தொலைச்ச சாலைகளை அவை பாழ்பட்டு போன பின் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலைகள்
365 நாளும் 16 மணி நேரம் கோர்ட் வேலை செய்யனும். எவனும் 8 மணி நேரத்துக்கு மேல வேலை செய்யக்கூடாது. நிலுவையில் உள்ள கேஸ் எல்லாம் பைசல் ஆயிட்டா படிப்படியா குறைச்சுர்ரது

படிப்படியாக மத நிறுவனங்கள் அனைத்தும் மதம் சார்ந்த நடவடிக்கைகளை சுருக்கி கொண்டு நாட்டு வளர்ச்சியில், எதிர்கால சந்ததிகளின் உடல்,மன,புத்தி நலனுக்கு செயலாற்றும் வகையில் மாற்றப்படும்

இதை எல்லாம் ஒரு ரெண்டு வருசத்துல பைசல் பண்ணிட்டு நேரிடை ஜன நாயகத்துக்காக அரசியல் சாசன திருத்தம். பிரதமருக்கு வீட்டோ பவர். பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க விகிதாச்சார முறை தேர்தல் . நோ இடை தேர்தல் .ஒரு உறுப்பினர் டிக்கெட் போட்டா பட்டியல்ல உள்ள அடுத்த நபர் தேர்வு

படிப்படியாக அதிகாரங்கள் மானிலங்களுக்கு,மானிலங்களிடமிருந்து மாவட்டங்களுக்கு இறுதியில் கிராம சபைகளுக்கு கை மாற்றப்படும்
மத்திய மானில தனியார் நிறுவனங்களில் 52 சதவீதம் இட ஒதுக்கீடு. நாடு சுபிட்சமான பிறவு (என்ன ஒரு 4 வருசத்துல பைசல் ஆயிரும்) இன்னம் என்னெல்லாம் பண்ணலாம்ங்கறதை நாலு வருசத்துக்கு பிறவு சொல்றன்.
   

Sunday, April 27, 2014

நவீன பரிகாரங்கள்: பாய்ண்ட் டு பாய்ண்ட்







நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்களுக்கு பெரிய சரித்திரமே இருக்கிறது. முருகன் என்ற இயற்பெயருக்கிணங்க வள்ளிக்குறத்தி ஒருத்தியை காதலித்ததும் , அவளுடன் ஓடிப்போய் கல்யாணம் கட்டும் முன் ஒரு மரத்தடி ஜோதிடரை சந்தித்ததும், என் காதல் கதை அவர் சொன்னபடியே முடிந்ததும் சின்ன ஆரம்பம் தான். அதற்கு பிறகு தான் ஒரிஜினல் கதையே ஆரம்பம்.



நான் ஜோதிடம் கற்க ஆரம்பித்தபோது சம்மர் லீவுக்கு மாமா ஊருக்கு போய் வந்த சிறுவன் மீண்டும் தன் பெட்டியை குடைந்தது போலிருந்ததே தவிர புதிதாக கற்றேன் என்று கூறமுடியாது. 1989 ,பிப்ரவரியில் முதல் ஜோதிடரை சந்திப்பதென்ன 1990 மார்ச் மாதத்திலேயே ஆஃபீஸ் போட்டு ஜோதிடம் சொல்ல ஆரம்பிப்பதென்ன?



பலன் சொன்ன பிரதாபங்கள் ஒருபக்கம் என்றால்..சம்பிரதாய பரிகாரங்களின் அடிப்படையை பிடித்ததும் அவை கால ஓட்டத்தில் அடிப்படையை விட்டு விலகி ஓடிவிட்டிருப்பதையும் அறிந்து நவீன பரிகாரங்களை கண்டு பிடித்ததும் பெரிய கதை.



பாகாலாவில் இருக்கும்போது நண்பன் ஒருவனை வைத்து தெலுங்கில் எழுத ஆரம்பித்ததும், அப்போது வாழ்வில் வீசிய புயலும் இந்த நவீன பரிகாரங்கள் படைப்பின் ரகசியங்கள் என்ற உண்மையை பறை சாற்றின.



பின்பு ராஜரிஷி என்ற அற்பாயுசு பத்திரிக்கையில் வெளிவ‌ந்ததும், ஆன்மீகம் மாத இதழில் பந்தாவாய் தொடராக ஆரம்பித்து படக்கென்று நிறுத்தப்பட்டதும் தனிக்கதை.

பின்பு ராஜமண்ட்ரி (தமிழில் எழுதப்படுவது போல் ராஜ முந்திரியுமில்லை திராட்சையுமில்லை) கொல்லபூடி வீராசாமி அண்ட் சன்ஸ் இதை பிரசுரிக்க முன் வந்ததும், அதை ஒரு தரம் அவர்களே தட்டச்சி ப்ரூஃப் ரீடிங்கிற்கு அனுப்பியதும், அதை சரிபார்க்க வேண்டிய ஆசாமியே போய் சேர்ந்ததும் மற்றொரு கிளைக்கதை.



2007 ஏப்ரலில் தினத்தந்தியில் சேர்ந்தேன். ஆசிரியர் தொடராவே போட்ருவம் என்று கொம்பு சீவ , சம்பள தைரியத்தில் அநியாய ரேட்டுக்கு வேலூரில் தட்டச்ச செய்து அது ஜோதிட பூமி மாத இதழில் முழுமையாக வெளிவந்தது ஒரு துணைக்கதை. பிரிண்டிங் டெக்னாலஜி வளர்ச்சி காரணமாய் புத்தகம் அச்சிட பெண்டாட்டி தாலியை அடகு வைக்கவேண்டிய‌அவசியமில்லாத காரணத்தாலும்...



சித்தூர் கிருஷ்ணா ஜ்வெல்லர்ஸ், தேஜா ஸ்வீட்ஸ், துர்கா ஸ்வீட்ஸ், ஆற்காடு ஸ்வீட்ஸ், துர்கா மோட்டார் டிரைவிங் ஸ்கூல்



போன்ற விளம்பரதாரர்களின் பெரியமனதாலும் லோக்கல் மாதமிருமுறை நடத்திய அனுபவம் கை கொடுக்க, தினத்த‌தந்தியின் அபயக்கரம் ரொட்டி வேட்டைக்கு தள்ளாதிருக்க இந்த சிறு நூல் வெளிவருகிறது.



"விருந்துண்ணப் போகும்போது விருந்து குறித்த விளக்கம் ஏதுக்கு" என்பது தெலுங்கு



பழமொழி. எனவே குதியுங்கள் புதிய வெள்ளத்தில். அடித்து செல்லட்டும் ஜோதிடம் குறித்த தவறான நம்பிக்கைகள்.



தங்கள்,



சித்தூர்.எஸ்.முருகேசன்,

ஜோதிட ஆய்வாளர்





நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள்



ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு பரிகாரங்கள் கூற ஆரம்பிக்கிறேன்.



ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.



உதாரணமாக:தங்கம்: குரு,இரும்பு:சனி



உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.



ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான‌ முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:



ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க‌ வேண்டுமானால் வ‌ருட‌க்க‌ண‌க்கில் இழுக்கும். என‌வே நான் குறிப்பிட்ட‌ ஜாத‌ருக்கு செவ்வாய் தொட‌ர்பான‌ வியாதிக‌ள் உள்ள‌தா (பி.பி,ப்ள‌ட் ஷுக‌ர்,க‌ட்டிக‌ள்,க‌ண்க‌ள் சிவ‌த்த‌ல்,அதீத‌ சூட்டால் வ‌ரும் வ‌யிற்று வ‌லி), செவ்வாய் கெட்டால் இருக்க‌க்கூடிய‌ குண‌ந‌ல‌ன் க‌ள் உள்ள‌ன‌வா?(கோப‌ம்,அடி த‌டி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வ‌கையில் ஆர்வ‌ம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்ப‌டுத்த‌ கூடிய‌ விப‌த்துக‌ள்,தீ விப‌த்துக‌ள்,அங்க‌ ஹீன‌ம் ஏற்ப‌ட்டுள்ள‌தா என்று கேட்ட‌றிகிறேன். இவை ந‌ட‌ந்திருந்தால் செவ்வாய் தோஷ‌ம் இருப்ப‌தாக‌ நிர்ண‌யிக்கிறேன்.



மேற்ப‌டி தொல்லைக‌ள் க‌ட்டுக்குள் இருந்தால் தோஷ‌ ப‌ரிகார‌த்துக்கு கார‌ண‌மான‌ கிர‌க‌ம் ப‌ல‌மாய் உள்ள‌தாய் முடிவு செய்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் தொட‌ர்ந்து ந‌ட‌ந்து வ‌ருவ‌தாய் ஜாத‌க‌ர் கூறினால் அவ‌ர் ஜாத‌க‌ம் க‌டுமையான‌ செவ்வாய் தோஷ‌ ஜாத‌க‌ம் என்று நிர்ண‌யிக்கிறேன். இத‌னால் தான் என் ஜோதிட முறைக்கு அனுப‌வ‌ ஜோதிட‌ம் என்று பெய‌ர் சூட்டியுள்ளேன்.



நவக்கிரகத் தோஷங்கள்:



நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.



நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம்.



ஒன்று:



எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.



இரண்டு:

குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது.



மூன்று:

தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).



1. தேவதைகளுக்கு யாகங்கள்:



யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.



லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப்பாருங்கள்!



செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.



2. கிரகத்தலங்களைத் தரிசிப்பது:



மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள்! சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்?



3. தானம் வழங்குதல்:

நீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும்.



யோசியுங்கள்!

அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள்! இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா? என்று யோசியுங்கள்!



விபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவா?சம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன.



இப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம்? ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது.



நாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.



நான் இந்தக் கட்டுரையில் விளக்கப்போகும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனைக் குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும். வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும்.



ஹோமியோபதி, அலோபதி, சித்தவைத்தியம் இப்படி எத்தனையோ வைத்திய முறைகளை கேள்விப் பட்டிருப்பீர்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆராய்ச்சியும், தொடர்ப் பரிசோதனைகளும்தான். ஆனால் நபி மருத்துவம் என்று ஒரு வைத்திய முறை இருப்பதை நீங்கள் அறிவீர்களா? இறைத்தூதர் முகமது நபி (சல்) அவர்கள் தம் கண்களில் படும் புதிய மூலிகைகளைப் பரிவுடன் தடவிக்கொடுத்து "நீ எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறாய்” என்று கேட்பாராம். அந்த மூலிகைகளும் சூட்சுமமான முறையில் தம் ஆற்றல்களை விளக்குமாம், இதுவே நபி மருத்துவத்திற்கு அடிப்படை. அந்த மூலிகைகளைப்போலவே நவக்கிரகங்களும் முன்வந்து, நம்மிடம் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இந்த கட்டுரைத் தொடரில் நிஜமாகியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இனி கிரகங்கள் பேசட்டும்.





1. சூரியன் பேசுகிறேன்

உங்களில் பலருக்கு ஜாதகமேயிருக்காது. உங்களுக்கு ஜாதகம் இல்லாவிட்டலும் பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் தெரியாவிட்டாலும் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேனா? இல்லையா? என்று தெரிந்து கொண்டு தகுந்த பரிகாரங்களையும் செய்து கொள்ளலாம்.



கடவுள் பிரதமர்! நவக்கிரகங்களே மந்திரிகள்!!ஒரு பிரதமர் எப்படி மந்திரிகளுக்கு இலாகாக்களைப் பிரித்துக் கொடுக்கிறாரோ அதேபோல் கடவுளும் எங்களுக்கு (நவகிரகங்களுக்கு) இலாக்காக்களைப் பிரித்துக் கொடுத்துள்ளார். நாங்கள் எங்கள் இலாகாவின் கீழ் வரும் விஷயங்கள், விவகாரங்களில் அதிகாரம் செலுத்துகிறோம். நாங்கள் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையிலிருந்தால் நன்மை செய்கிறோம், தீமை செய்யும் நிலையிலிருந்தால் தீமை செய்கிறோம்.



நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் உட்கார்ந்து நன்மை செய்யும் நிலையிலிருந்தால், அதிகாரம் செலுத்தும் விஷயங்களையெல்லாம் வாரி வழங்கிடுவேன். கிழக்குத்திசை, மாணிக்கக்கல், தானம்-கடிகாரம், ஆத்மா-தந்தை, தந்தையுடன் உறவு, தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இதற்கெல்லாம் நானே அதிகாரி. பல், எலும்பு, முதுகெலும்பு, வலதுகண், மலைப் பிரதேசங்கள், தலைமைப் பண்புகள், மேற்பார்வை, தாமரைமலர், விளம்பரங்கள், நாளிதழ்கள் இவை யாவும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே! பித்தளை, திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்கள், உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்கள், ஒளிவு மறைவற்ற பேச்சு, ஒல்லியானவர்கள், கோரைப்புல் போன்ற தலை முடியுடையவர்கள், கூரையில்லாத வீடு, ஏகபுத்திரன், ஒற்றைத்தலைவலி, எலும்பு முறிவு, தூக்கமின்மை இவையாவும் என் அதிகாரத்தின் கீழ்வருபவையே.



ஆதர்ச புருஷரான தந்தை, அவருடன் நல்லஉறவு, தன்னம்பிக்கை, நாலு பேரை வைத்து வேலைவாங்கும் தொழில், இப்படி உங்கள் வாழ்க்கை இருந்தால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.



மாறாகப் பல்நோய், எலும்பு முறிவு, தாழ்வு மனப்பான்மை, தந்தையுடன் விரோதம், அடிமைத் தொழில் இப்படியாக உங்கள் வாழ்க்கை நகர்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால், நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம்.





நான் மட்டுமே அல்ல. வேறு எந்தக் கிரகம் அளிக்கும் தீயபலனிலிருந்தும் யாரும் தப்பவே முடியாது. எங்கள் தீயபலன் என்பது சீறிக்கிளம்பிவிட்ட துப்பாக்கிக் குண்டு போன்றதாகும். இதை இதயத்தில் வாங்கிக்கொள்வதா? தோளில் தாங்கிக் கொள்வதா என்பது உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம்.



இறைவன் பேரருளாளன். எந்த ஜாதகத்தை எடுத்தாலும் எந்தக் கிரகமும் 100% தீயபலனைத் தரும் நிலையில் இருக்காது. அதே நேரம் எந்தக் கிரகமும் 100% நல்ல பலனைத் தரும் நிலையிலும் இருக்காது. எனவே ஒவ்வொரு ஜாதகரும், நான் ஆதிக்கம் செலுத்தும் விஷயங்களில் ஒரு சிலவற்றிலாவது, கொஞ்சமாவது நற்பலனைப் பெற்றே தீருபவர்கள்.



என் கட்டுப்பாட்டிலிருக்கும் விஷயங்களை முன்பே சொல்லியுள்ளேன். அவற்றில் உங்கள் நிலைக்கு இன்றியமையாதவை எவையோ! அவற்றை மட்டும் தனியே குறித்துக் கொள்ளுங்கள். அவை தவிர மற்ற விஷயங்களை விட்டு விலகியிருங்கள். என்னுடைய தீயபலன் குறைந்து நற்பலன்கள் அதிகரித்துவிடும்.நீங்கள் எதையாவது பெறவேண்டும் என்றால் எதையாவது இழந்துதான் ஆகவேண்டும்.



கால்படி சோறு வேகும் பாத்திரத்தில் அரைப்படி அரிசி வேகவைத்தால் என்ன ஆகுமோ, அதுவேதான் குறைந்த அளவு கிரக பலத்தை வைத்துக்கொண்டு அந்தக் கிரகம் ஆளுமை செய்யும் எல்லா விஷயங்களிலும் பலன் பெற நினைத்தாலும் நிகழும் பாத்திரத்தை (கிரகபலத்தை) மாற்ற முடியாது, என்றாலும் அரிசியைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லவா! அகல உழுவதைக்காட்டிலும் ஆழ உழுவது நன்றல்லவா?



இதுவரை நான் சொன்னதை வைத்து நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் உள்ளேன் என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களை நீங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக் கூடிய தீயபலன்கள் குறையும். நல்ல பலன்கள் அதிகரிக்கும்.



பரிகாரங்கள்:

1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க

2. காயத்ரி மந்திரம் படிக்கவும்

3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.

4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.

5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத் தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு) மாறிவிடவும்.

6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.



2. சந்திரன் பேசுகிறேன்



வடமேற்குத் திசை, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவு, நுரையீரல், சிறு நீரகம், மனம், இரவு நேரம், முழுநிலா நாள், சஞ்சலம், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. படகு, கப்பல் பயணம், 15 நாட்கள் துள்ளல், 15 நாட்கள் துவளல், திடீர்ப் பயணம், கண்டதும் காதல், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள், நதி, நதிக்கரை, கடற்கரை, தாய் வயது பெண்கள், இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய வணிகங்கள் இவற்றிற்கெல்லாம் சந்திரனாகிய நானே அதிபதி.



நீங்கள் புதுமை, என்றும் இளமை, பொதுமக்கள் ஆதரவு, நீண்ட சுவாசம், திடீர் நன்மைகள், திடீர் பணவரவுகளுடன் வெற்றிமேல் வெற்றி பெறுபவரா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.



இதற்கு மாறாக நிலையில்லாத வாழ்க்கை, அடிக்கடி தொழில் மாற்றம், வேதனையுடனான ஊர் மாற்றம், மனச்சோர்வு, நோயாளியான தாய், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சனைகளுடன் நீங்கள் அவதிப் படுகிறீர்கள் என்றால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.



நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.



பரிகாரங்கள்:

1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).

2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.

4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.

5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.

6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.

7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.

8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்" “பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.

9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது



3. செவ்வாய் பேசுகிறேன்



இதுவரை உங்களிடம் பேசினார்களே சூரியன், சந்திரன், இவர்களுக்கு மட்டுமில்லை, மற்றுமுள்ள ராகு, குரு, சனி, புத, கேது, சுக்ரன் எல்லோருக்குமே சேனாதிபதி நான் தான். மற்ற கிரகங்கள் தீமை செய்யும் நிலையிலிருந்தால் "சூரியன் பலமிழந்துட்டாரு", "கேது கெட்டிருக்காரு" என்று தான் ஜோதிடர்கள் சொல்வார்கள். நான் தீமை செய்யும் நிலையில் இருந்தால் மட்டும் ஜாதகத்தையே தோஷ ஜாதகம் என்று ஓரமாய் வைத்து விடுவார்கள்!



ஏன் தெரியுமா? என் இலாகா அப்படி! நான் அதிகாரம் செலுத்தும் விஷயங்கள் அப்படி!

வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.



நீங்கள் ஹை, லோ பிபி, ரத்தசோகை, அல்ஸர் போன்ற வியாதிகளால் அவதிப்படுபவரா?



சகோதரர்களே எதிரிகளாகி, பிற எதிரிகளுடன் சேர்ந்து உங்களைத் தொல்லைப்படுத்துகிறார்களா?



ஏற்கனவே விபத்து, தீவிபத்து எதிலாவது சிக்கியுள்ளீர்களா?



அறுவை சிகிச்சை நடந்துள்ளதா? காதல் திருமண விசயங்களில் பின்னடைவால் வருந்துபவரா?



"ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.மேற்சொன்ன உபாதைகள் ஏதுமின்றி நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் எந்தப் பிரச்சினையுமின்றி தொழில், வியாபாரம் செய்து வருகிறீர்களா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.



நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள், என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.



பரிகாரங்கள்

1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?

2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).

3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.

4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.

5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.

6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.

7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.

8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்





4. ராகுபேசுகிறேன்



சமீப காலமாய்த் திரைத்துறைப் பிரமுகர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, தாதாக்களுடன் ரகசியத் தொடர்பு கொண்டிருப்பது, மாயமாய் மறைவது, பின் திடீர் என வெளிப்படுவது, விஷமருந்திச் செத்துப்போவது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவருவதைப் பர்த்திருப்பீர்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?நான் அவர்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருந்திருப்பேன்.



இருந்தாலும் அவர்கள் வேறு கிரகங்களின் பலத்தால் (சுக்ரன்–அழகு, கலை, நாட்டியம். புதன்–எழுத்து, கம்யூனிகேஷன். செவ்–சண்டைத்திறமை. குரு-பணம்) என் ஆதிக்கத்திற்குட்பட்ட சினிமாத்துறையில் ஓரளவு சாதித்தார்கள். தரை டிக்கட் வாங்கிவிட்டு கேபினில் உட்கார்ந்து படம் பார்த்தால் தியேட்டர்க்காரர்கள் விடுவார்களா என்ன?



கடவுளின் படைப்பான நான் தியேட்டர்க்காரர்களை விட ஏமாளியா? அதனால் தான் நான் காரகத்வம் வகிக்கும் மது, போதைப்பொருள், மாபியா போன்றவற்றின் மூலம் அவர்கள் கதையை முடித்து விட்டேன்.



நவக்கிரகங்களான எங்கள் செயல் முறையைச் சற்று கூறுகிறேன் கேளுங்கள். நாங்கள் டப்பிங் சினிமாவில் வில்லன் கூட்டம் போல் செயல் படுவோம். அதில் மாநில முதல்வர் ஏர்போர்ட்டில் இறங்கி, ரௌண்டானாவில் திரும்பி, மீட்டிங்கில் பேசி, விருந்தினர் விடுதிக்குப் போய் ஓய்வெடுப்பதாக நிகழ்ச்சி நிரல் இருக்கும். வில்லன்கள் முதல்வரை ஏர்போர்ட்டிலேயே கொல்லத் திட்டமிட்டிருப்பார்கள். எப்படியோ ஹீரோ முதல்வரைக் காப்பாற்றி விடுவார். அடுத்தடுத்து வரும் இடங்களில் முதல்வரைக் கொல்ல வில்லன்கள் கூட்டம் ஏற்பாடுகள் செய்து முடித்திருக்கும்.



சினிமாவில் என்றால் ஹீரோ வென்றுதான் ஆக வேண்டும். எனவே முதல்வர் காப்பாற்றப் பட்டுவிடுவார். மனித வாழ்க்கை என்ன சினிமாவா? கடவுளின் படைப்பான நாங்கள் வெறும் டப்பிங் சினிமா வில்லன் கூட்டமா? இப்போது என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன்!



நான் 7-ல் நின்றுள்ளேன் என்று வையுங்கள். நான் முதலில் அழகற்ற பெண்ணை அந்த ஜாதகருக்கு மனைவியாக்கப் பார்ப்பேன், ஜாதகரின் பெற்றோர் இதை நடக்க விடுவார்களா? விட மாட்டார்கள். சல்லடை போட்டு சலித்து, எடுத்து மகாலட்சுமி மாதிரிப் பெண்ணை மனைவியாக்குவர்கள்.



இனி நான் விடுவேனா அந்தப் பெண்ணின் மனதையோ, குணத்தையோ, உடல்நலத்தையோ கெடுத்துத்தான் தீருவேன். ஒருவேளை இதரக் கிரகங்களின் பலத்தால் மேற்படித் தீமைகளை என்னால் செய்ய முடியாவிட்டால் அந்தத் தம்பதிகளைப் பிரித்துவிடுவேன். (நானும் கேதுவும் 3, 6, 10, 11, 4, 12 தவிர இதர இடங்களிலிருந்தால் அது சர்ப்பதோஷம்). இப்போது ஓரளவு எங்கள் செயல்முறை உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.



சரி! சூரியனைப் போலவே நானும் அதிகம் பேசி விட்டேன் என்று எண்ணுகிறேன், விஷயத்துக்கு வருகிறேன்., என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன.



பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே. இதுவரை உங்களை விஷ ஜந்துகள் கடித்ததில்லையா? மெடிக்கல் ரியாக்ஷன் நடந்ததில்லையா? எதைச் செய்தாலும் சட்டப்படிப் பகலில், பத்துப் பேருக்குச் சொல்லிச் செய்தே சக்ஸஸ் ஆகியிருக்கிறீர்களா? உங்களுக்கு மொழிவெறி கிடையாதா? சினிமா பைத்தியம் (அ) சினிமா மீது வெறுப்பு இல்லையா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.



நீங்கள் ஏற்கனவே மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சூது, முறையற்ற வருமானங்கள், அதிலும் அவ்வப்போது சட்டத்துக்குள் சிக்கி மீண்டவராய் இருந்தால், நிச்சயம் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம். என்னால் விளைந்த கெடுபலன்கள் குறையப் பரிகாரங்கள் சொல்கிறேன். முடிந்தவற்றை உடனே செய்யுங்கள். முடியாதவற்றை முடிந்தபோது செய்யுங்கள்.



பரிகாரங்கள் :

1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.

2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.

3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.

4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.

5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்

6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.

7. பரமபதம் ஆடுங்கள்.

8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.

9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.

10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள்.

11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.



5. குருபேசுகிறேன்



"புனரபிமரணம், புனரபிஜனனம்" "உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இதற்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா? மனிதன் மறுபடி மறுபடிப் பிறந்து கொண்டே இருப்பான் என்பதாகும். போன பிறவிகளில் சான்றோரை, அந்தணரைப் பணிந்து, அவர் மனம் குளிர நடந்தவர்கள் மறுபடி பிறக்கும் போது, நான் நல்ல நிலைகளில் நிற்கும் ஜாதகத்தில் பிறக்கிறீர்கள். உங்கள் கடந்த பிறவி முன் சொன்னதற்கு மாறாக இருந்தால் நான் தீமை செய்யும் நிலையில் உள்ள ஜாதகத்தில் பிறப்பீர்கள்.



கடந்த பிறவியில் உங்கள் சிரமபலனை அனுபவித்த என் கட்டுப்பாட்டில் இருக்கும் சான்றோர், அந்தணர் இந்தப் பிறவியில் உங்களை நல்வழிப்படுத்தித் தம் கடன் தீர்த்துக் கொள்வார்கள் என்பது இதன் உட்பொருளாகும்.இதையே நீங்கள் மற்ற கிரகங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம்.



பிறவி எடுப்பதே கடன் தீர்க்கத்தான். ஆனால் கடன் தீர்க்க வரும் நீங்கள் அதை மறந்து எல்லாவற்றையும் பெறத்துடிக்கிறீர்கள். கடவுளோ உலகப் பொருட்களை 9-ஆகப் பிரித்து நவக்கிரகங்களான எங்கள் பொறுப்பில் விட்டு வைத்துள்ளார்.



சூரியன்-மலைச்சாதியினரையு,ம் சந்திரன்-பிரமுகர்களின் மனைவியர், வைசியரையும், செவ்வாய்–வீரர்கள், சகோதரர்கள், சத்ரியர்களையும், ராகு–பிறமொழியினரை, கேது–பிறமதத்தினரை, சுக்கிரன்–எதிர்பாலினரை, பிராமணக் கர்ப்பிணிப் பெண்கள், சனி–தலித்துக்கள், வேலைக்காரர்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.



அதே போல் நான் பிராமணர்கள், மந்திரிகள், சான்றோரை என் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். இந்தப் பிறவியில் எந்தக்கிரகம் தொடர்பான தீமைகள் ஏற்படுகின்றனவோ கடந்த பிறவியில் அந்தக் கிரகம் தொடர்பான மனிதர்களுக்கு நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.



சரி! சரி! நிறையவே விசயங்களைப் போட்டு உடைத்துவிட்டேன். பிறகு மந்திரி சபைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளை எப்படி தன்னிச்சையாக அறிவிக்கலாம் என்று பிரதமர் (கடவுள்) கோபித்துக் கொள்ளப் போகிறார். கடந்த பிறவிகளில் பட்ட கடனைத் தீர்ப்பது முக்கியம். மொத்தமாகத் தீர்ப்பதோ! தவணையில் தீர்ப்பதோ! அவரவரது விருப்பம். தீர்க்கிறேன்-தீர்க்கிறேன் என்று காலம் கழித்தால் கொடுத்தவன் கழுத்தில் துண்டு போட்டு வசூலித்து விடுவதைப் போலவே நாங்களும் கண்டபடி தீய பலன்களைக்கொடுத்து விடுவோம்.



எங்கள் தீய பலன்களிலிருந்து தப்ப ஒரே வழி நாங்கள் கண்டதையும் பறித்துவிடுமுன்பு நீங்களாகவே 'உங்கள் சாய்ஸ்' படி எங்கள் ஆளுகைக்குட்பட்ட விசயங்களை விட்டுக் கொடுத்து விடுவதே! என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.



நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!



உங்கள் கதை எப்படி? என் அதிகாரத்துக்குட்பட்ட தங்கம், முன்யோசனை, செல்வாக்கு (அரசியல்), காலாகாலத்தில் கல்யாணம், குழந்தைப்பாக்கியம் யாவும் ஏற்பட்டுள்ளதா? ஆம் என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில், நன்மை செய்யும் நிலையில் நின்றிருக்கிறேன் என்று அர்த்தம்.



கோர்ட்டு வழக்கு, வட்டிக்குக் கடன் வாங்குதல், லேசான இதயப் படபடப்பு, மறதி, வயிற்றுக்கோளாறுகள், அடிக்கடித் தங்க நகைகள் திருடு போதல், அடகில் முழுகிப்போதல் இவை உங்கள் வாழ்வில் நடந்திருக்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்றுஅர்த்தம். பரிகாரங்கள்நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி. கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக்கூடிய தீமைகள் குறையும்.



ப‌ரிகார‌ங்க‌ள்:

1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.

2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள்.

3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.

4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.

5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.

6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.

7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.

8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.

9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.

10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள்.

11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.



6. சனிபேசுகிறேன்



செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.



மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய்.



19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன். கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும்.



ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன்.1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும். எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள்.



சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்-அந்த 4-ல் 2-வது = 10 வருடங்களில் தான் நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன்.



இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன். நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன்.



ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி.



சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன்.



இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.



நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.



பரிகாரங்கள்:

1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.

2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.

3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.

4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.

5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.

6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.

7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள்.

8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.

9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.

10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.

11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள்.

12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.

13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.



7. புதன்பேசுகிறேன்:



"பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்குமா" என்பார்கள். இதிலிருந்தே என் பெருமையை அறியலாம். இறைவன் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரங்களை கீழே தருகிறேன்.



புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே.



விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கு

ம்.

புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.மேற்சொன்ன பட்டியலைப் பார்த்தீர்கள் அல்லவா? இதில் உள்ள விசயங்களில் நீங்கள் வெற்றி, லாபம் அடைந்தவரா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாக நீங்கள் மேற்படி விசயங்களில் தோல்வி, நஷ்டம் அடைந்தவரானால், உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம்.



சரி! உங்கள் ஜாதகத்தில் நான் எந்த நிலையில் இருந்தாலும் கீழ் காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையக் கூடிய நன்மைகள் அதிகரிக்கும். தீமைகள் குறையும்.



பரிகாரங்கள்

1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.

2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.

3. வியாபாரம் வேண்டாம்.

4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.

5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.

6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.

7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.

8. கள்ள உறவு உதவாது.

9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள்.

10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்

8. கேதுபேசுகிறேன்:



கேது போல் கெடுப்பவனில்லை என்பது ஜோதிட பொன்மொழி. ஆம்! நட்பு, உறவு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் நான் கெடுக்கிறேன். ஏன் தெரியுமா? நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் 'நம்மவர்' என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். இப்போது தமிழக முதல்வருக்கு எனது திசை நடந்து வருகிறது.



இனி என் அதிகார எல்லையைப் பார்ப்போம். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம்.



ப‌ரிகார‌ங்க‌ள்:

1. எளிமையான வாழ்வு.

2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.

3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.

4. யோகம் பயிலுதல்.

5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.

6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.

7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.

8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.



குறிப்பு:

ராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 1800-ல் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.



9. சுக்கிரன்பேசுகிறேன்



யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் "அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது" என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை.



சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி.



தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே.



ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை, செக்ஸ்வெறி, செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும்.



நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.



பரிகாரங்கள்

1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும்.

2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.

3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.

4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.

5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும்.

6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.

7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல).

8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும்.

9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.

10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும்.



முடிவுரை



எதெல்லாம் உங்கள் முயற்சியில்லாமலே உங்களைத் தேடி வந்ததோ அதெல்லாம் ஆண்டவன் பரிசு. எதையெல்லாம் போராடி அடைந்தீர்களோ! அதுவே உங்கள் வாழ்வின் துன்பங்களுக்கு மூலம். எனவே விட்டுக் கொடுங்கள்.ஆபத்துகள் தட்டிப்போகும் கை நழுவிப் போவதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். அது உங்களையும் படுகுழியில் தள்ளிவிடும்.

Friday, April 19, 2013

காவல்துறை மேம்பாட்டுக்கு யோசனைகள்

1.காவலர் தேர்வு என்பது போட்டியற்றதாகி விட வேண்டும். அதற்கு இப்போதுள்ள காவல் துறை அதிகாரிகள்,காவலர் எண்ணிக்கையை 3 மடங்காக்கி விடவேண்டும்.

2.காவலர் தேர்வு என்பது இயந்திரங்களால்,கணிணிகளால் ந்டத்தப்படவேண்டும்.

3.தேர்வான காவலர்களுக்கு விலை வாசியே தெரியவராத வகையில் அவர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தாருக்கும் தேவையான உயிர் பாதுகாப்பு,உணவு,உடை,இருப்பிடம்,செக்ஸ்,காப்பீடு,சேமிப்பு எல்லாவற்றுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு தரப்படும் சம்பளம் என்பது அத்தியாவசிய,விபரீத சூழல்களில் மட்டுமே பயன் படவேண்டும்.(கிட்னாப்புக்குள்ளாதல் Etc.,)

4.காவலர்களின் உடல் நிலை,மன நிலை,பொருளாதார நிலை,(தாம்பத்திய வாழ்க்கை உட்பட) 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது அன்னிய நாட்டு சேவை நிறுவனங்களால் பரிசீலிக்கப் படவேண்டும்

5.காவலர்களுக்கான பதவி உயர்வு,இடமாற்றம்,பணிமாற்றம்,விடுப்பு,சகலமும் கணிணிகளால் நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலதிகாரிகளின் தயவை எதிர்ப்பார்க்கும் துரதிர்ஷ்டமான நிலை மாறவேண்டும்.(இவர்கள் மேலதிகாரிகளின் இம்சையால் மசாக்கிஸ்டுகளாகி, மக்கள் விஷயத்தில் வரும்போது சாடிஸ்டுகளாகி விடுகிறார்கள்.

6.எந்த அதிகாரியும்,எந்த காவலரும் எக்காரணம் கொண்டும் 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக்கூடாது.

7.அனைத்து மானில போலீஸ் துறையையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.((IAS & IPs, மாதிரி) நாடெங்கிலும் உலகத்தரத்தில் போலீஸ் குவார்ட்டர்ஸ் ,அவர்களின் பிள்ளைகள் படிப்புக்கான கல்வி நிலையங்கள்,ஹாஸ்டல்கள் கட்டப்பட வேண்டும்.பணிமாற்றம் என்பது அகில இந்திய அளவில் நடைபெறவேண்டும். பணிமாற்றம் என்பது காவலரை பாதிக்காத வண்ணம் நாடெங்கிலும் ஒரே பணிச்சூழல்,ஒரே விதி ஏற்படுத்த வேண்டும்

8.காவலன் என்பவன் மக்களுக்கு காவலனாக இருக்கும் வரை நாடு அவனுக்கு காவலாக இருக்க வேண்டும். அவன் அரசியல் விபச்சாரிகளின் தரகனாய் மாறிவிட்டால்............வேணாம் பாஸ் கெட்ட வார்த்தையெல்லாம் வருது நான் அம்பேல்

Tuesday, January 8, 2013

பாலியல் தொழிலாளியுடன் ஓரிரவு

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டி தொடரை தொடரலாம்னு பார்த்தா ஊஹூம் .. ஒன்னும் வேலைக்காகற மாதிரியில்லை.
ஏன்னா சனத்தொகையில பாதியா இருந்து அடுத்த பாதியை இன்ஸ்பைர் பண்ற -டாமினேட் பண்ற -கண்ட் ரோல் பண்ற ரேஞ்சுல உள்ள பெண்ணினத்தை உடனடியா  நேரடியா பாதிக்கக்கூடிய சமாசாரத்தை அலசாம செவ் தோஷத்தை பத்தி எழுதிக்கிட்டே போறது துரோகம். அதனால இன்னிக்கு ஒரு நா விட்டுருங்க. நாளையிலருந்து நூல் பிடிச்சாப்ல செவ் தோஷம் ஓகேவா?

தில்லி வன்புணர்வு நிகழ்ச்சிக்கு அப்புறம் ஒட்டு மொத்த இந்தியாவும் ப்ளேடோட அலையறாப்ல இருக்கு. ஆளுக்கு ஆள் இந்த மாதிரி சம்பவங்களை தடுக்க ஐடியா  மேல ஐடியாஅள்ளி விட்டுக்கிட்டிருக்காய்ங்க. எங்கப்பக்கத்துல குண்டூர் எஸ்.பி மாணவிகளுக்கு மிளகாய் தூள் பாக்கெட் கூட சப்ளை பண்ணியிருக்காரு..

வன்புணர்வுகளுக்கு பின்னான மனோதத்துவத்தை இந்த பதிவுல அலசலாம்னு  நினைக்கிறேன்.   இந்த பதிவுக்கு இன்ஸ்பிரேஷனே கேள்வியும் நானே பதிலும் நானே  வலைப்பூவில் வெளியாகியிருக்கிற ஒரு பதிவுதான். அதில் உள்ள சில பாராக்களை இங்கன கோட் பண்ணப்போறேன்.
( நன்றி:புரட்சிமணி)

//வன்புணர்வுகள் சமீபகாலமாக அதிகரிப்பதாக தெரிந்தாலும் அது உண்மையல்ல. ஊடகத்துறை வளர்ச்சி பெற்றுள்ளதால் நமக்கு அவ்வாறு தெரிகின்றது.//

இது 100 சதம் அட்சர சத்தியம். வன்புணர்வுகள் குறித்த புகார்கள் எதேனும் ஒரு நிலையில் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடுகின்றன. ஸ்டேஷன் வரை போன புகார்கள் தான்  மீடியாவில் பல்லை இளிக்குது.

//காலம் காலமாக வன்புணர்வுகள் என்பது நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதற்க்கு என்ன காரணம் என்று பார்த்தால் மனிதர்கள் மிருகங்கள் என்ற ஒரு விடைதான் கிடைக்கும். மிருகத்திலிருந்து பரிணமித்த மனிதர்களுக்கு இன்னும் மிருகக்குணம் குறையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். //

புரட்சிமணி ரெம்ப பெரிய மனசு பண்ணி "மிருக குணம் குறையவில்லை"ங்கறாரு. நம்மை பொருத்தவரை மிருகம் தான்.மிருகம் தான்.மிருகம் தான். மன்சனை மன்சனா நினைச்சு சட்டம் போடறதாலதேன் சட்டம்லாம் தோத்துப்போகுது. மன்சனை மிருகமா நினைச்சு சட்டம் போட்டா தான் வேலைக்காகும்.

பதிவர் வயிற்றுப்பசியையும் -உடல் பசியையும் ஒரே தராசில் நிறுத்து உழைச்சு திங்கறதை  - முறையான திருமண உறவுக்கும், திருடி திங்கறதை காதல்/கள்ளக்காதல் இத்யாதிக்கும் - பிடுங்கி தின்றதை   வன்புணர்வுக்கும் ஒப்பிடறாரு.

//ஒரு மனிதனின் உணவு,உடை, உறைவிட தேவைகளை நிறைவேற்றுவது எப்படி அரசாங்கத்தின் கடமையோ அவ்வாறே ஒரு மனிதனின் உடலுறவு தேவைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.//னு புரட்சிகரமா ஆரம்பிக்கிற புரட்சிமணி படக்குன்னு யுடர்ன் எடுத்து // அனைவருக்கும் குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறுமாறு அரசாங்கம் பார்த்துக்கொள வேண்டும்.//னு முடிக்கிறாரு.

// மனிதனின் உடலுறவு தேவைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்//ங்கறதுதேன் நம்ம ஸ்டாண்டு. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் ஆசைகளே வன்முறையாக வெடிக்கின்றனங்கறது சைக்காலஜி. வன்முறைய தடுக்க வேண்டியது அரசின் கடமை.

காளை மாட்டை அடக்கனும்னா அதனோட மூக்கணாங்கயிறை பிடிச்சு நிப்பாட்டனும்.அதை விட்டுட்டு வாலை பிடிச்சுக்கிட்டு ஓடறது முட்டாத்தனம். அரசு எப்படி பொறுப்பேத்துக்க  முடியும்னு கேப்பிக. சொல்றேன்.

அதுக்கு மிந்தி புரட்சிமணி என்ன சொல்றாருன்னு பார்ப்போம்:
//எனவே திருமண வயதை அரசாங்கம் குறைக்க வேண்டும்.தற்ப்பொழுதைய சூழ்நிலையில் 16 என்பது சரியான வயதாக இருக்கும் என எண்ணுகிறேன். //

மேம்போக்கா பார்த்தா ..ஆஹா இதுதாண்டா தீர்வுன்னு தோனும். அந்தகாலத்துல மருத்துவத்துறை செரியா வளராததால குழந்தை மரணம் அதிகமா இருந்தது. இப்ப என்ன கேடுன்னு கூட தோனும்.

திருமணங்கற  ஏற்பாடே ஆணின் செக்ஸ் பவருக்கு அடிக்கப்பட்ட ஆணி. பழகப்பழக பாலும் புளிக்கும்னு பழமொழியா சொன்னாலும் - தி லா ஆஃப் டிமினிஷிங் மாரிஜினல் யுட்டிலிட்டின்னு எக்கனாமிக்ஸ்ல சொன்னாலும் மேட்டர் ஒன்னுதான். திருமணம் என்பது ஆணின் காமத்தை தின்று விடுகிறது.

மன்சன்ல இருக்கிறது ஒரே சக்தி.அதன் நோக்கம் படைத்தல் - இருத்தல்- பரவுதல்.இதெல்லாம் செக்ஸ்ல பாரிஷியலா அச்சீவ் ஆறதாலதான் மன்சனுக்கு செக்ஸ் மேல ஒரு இது. திருமணம் காரணமா -அவனுக்குள்ள இருந்து பொங்கும் சக்தி ஓய ஆரம்பிச்சுட்டா நாஸ்தி.

அந்த சமயத்துல நம்ம மாதிரி பார்ட்டி யாராவது கிராஸ் ஆகி "  நைனா! படைத்தல் - இருத்தல்- பரவுதலுக்கெல்லாம் இன்னம் நிறைய வழி இருக்கு.. கார்ல்  மார்க்ஸ் டாஸ் காப்பிட்டல் படைச்சாரு .இன்னம் இருக்காரு. உலகமெல்லாம் பரவியிருக்காரு. ஒரு தமிழன் இ மெயில் கண்டுபிடிச்சான். இன்னம் இருக்கான். இருப்பான்.உலகமெல்லாம் பரவியிருக்கான்"னு  கைட் பண்ணா மேட்டர் ஓகே.

இல்லாட்டி மன்சன் பணம் பின்னாடி ஓட ஆரம்பிச்சுருவான்.உலகத்துல முக்கியமா இந்தியாவுல 60 சதவீதம் பேரு பணத்தை துரத்த ஆரம்பிச்சுட்டாய்ங்க. மிச்சம் மீதி உள்ள 40 சதவீதம் தான் பணம் பக்கமா டைவர்ட் ஆகாம இன்னம் செக்ஸையே சுத்தி வந்துக்கிட்டிருக்காய்ங்க. அதனாலதேன் அவிக ஏழைகளா இருக்காய்ங்களோ என்னமோ?

புரட்சிமணி சொல்றாப்ல திருமண வயதை குறைச்சு தொலைச்சா நாறிரும். படைத்தல் - இருத்தல்- பரவுதலுக்கெல்லாம் செக்ஸ் ஒன்றே போதுமானதல்லங்கற யதார்த்தம் புரிஞ்சுரும். அடுத்து பணம் ஒன்றே இதுக்கெல்லாம் வழின்னு ஆயிரும். பணத்துல செயிச்சுட்டா கொய்யால இதுலயும் ஒன்னுமில்லடான்னு தெளிஞ்சுரும்.மறுபடி செக்ஸுக்கு யு டர்ன் எடுப்பாய்ங்க.

இப்பமே லைஃப் டோட்டலா கமர்ஷியலைஸ் ஆயிருச்சு. பின்னே என்னதான் வழின்னா பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம். பாஸ் போர்ட் விசாவுக்கு போனா எப்படி அம்மை குத்தியிருக்கான்னா பார்க்கிறாய்ங்களோ அப்படி ட்ராஃபிக்ல ஓவர் ஸ்பீட்ல மாட்டினா கூட  பாலியல் தொழிலாளியை சந்திச்சிங்களான்னு கேட்கிற நிலை வரனும்.

வெகு சிலர் இந்த வாய்ப்பை கூட பயன்படுத்திக்காம "மடியா' இருக்கலாம். அவிகளுக்காவ எஜாக்குலேட்டர்ஸ் அமைக்கலாம். இதெல்லாம் ஃபிசிக்கல். உடனடியா ஓரளவு பலன் தரலாம்.ஆனால் இங்கே தேவை சைக்கலாஜிக்கல் ரெமிடி.

ஹ்யூமன் பாடி ஒரு கம்ப்யூட்டர் சிபியுன்னா மைண்டுதான் ஹார்ட் டிஸ்க்.  ஹார்ட் டிஸ்கை காப்பாத்தா கம்ப்யூட்டருக்கோ - கீ பேடுக்கோ -மவுசுக்கோ பூட்டுப்போட நினைக்கிற முட்டாத்தனம். கம்ப்யூட்டருன்னு இருந்தா
கண்டவன் கண்டதை செருகுவான் (கார்ட் ரீடரு - பென் ட்ரைவ் -டேட்டா கார்டு  எட்ஸெட்ரா) கண்ட டேட்டா உள்ளாற வரும். ஹார்ட் டிஸ்க் டேட்டா கரப்ட் ஆகும்.  இதுக்கு என்னதான் தீர்வு?

ஹார்ட் டிஸ்க்ல உள்ள ஓ.எஸ் கரீட்டா இன்ஸ்டால் ஆகியிருக்கனும். ஐ மீன் பெண் குறித்த புரிதல் இருக்கனும்.  ஒரு பவர் ஃபுல்  ஒரு ஆன்டிவைரஸ் இருக்கனும். டிஃப்ரீஸ் மூலமா ஓ.எஸ் போட்டிருக்கிற ட்ரைவ் லாக் பண்ணப்பட்டிருக்கனும்.

இது இல்லாத பட்சத்துல எல்லாமே தப்பாத்தான் போகும்.  மீண்டும் புரட்சிமணி:

//உடல்தேவைக்கு மனைவி இருந்தாலும் சிலர் தகாத உறவுகளிலும்,வன்புணர்விலும்  ஈடுபடத்தான் செய்கின்றனர்.
இவர்களை கொலை கொள்ளை செய்பவர்களோடு ஒப்பிடலாம். அதாவது தேவைக்கு  அதிகமான பணம் இருந்தாலும் அதீத ஆசையால் ஊழல், கொள்ளைகளில் ஈடுபடுபவனும் உடல் தேவைக்கு மனைவி இருந்தும் தகாத உறவில், வன்புணர்வில் ஈடுபடுபவன் மனநிலையும் ஒன்றுதான்//

ஏற்கெனவே நான் சொன்னாப்ல திருமணங்கறதே ஆணின் செக்ஸ் பவர் மீது அறையப்படும் ஆணி. இதை கண்டறிந்து கொள்ளும்  அவன் உள்ளுணர்வு வேலி தாண்டச்சொல்கிறது.  "நிழலின் அருமை வெயிலில்". ஒரு பாலியல் தொழிலாளியுடன் ஒரு இரவையாவது கழித்தவனுக்குத்தான் குடித்தனக்காரியின் அருமை புரியும்.  ஒரு ஆண் பாதுகாப்பான திருமண உறவில் சீக்கிரமே சலிப்படைகிறான்.அலுப்படைகிறான்.அவனுக்கு மாற்றம் தேவைப்படுகிறது. பாலியல் தொழிலாளியை அணுகுபவன் திரும்பிவர வாய்ப்பிருக்கிறது. கள்ளக்காதல் இத்யாதிக்கு டைவர்ட் ஆறவன் கதை கோவிந்தா கோவிந்தா..

ஏன்? ஏன்? ஏன் அவன் டைவர்ட் ஆகனும்னு கேப்பிக .. சொல்றேன்.

எல்லா உயிருக்கும் மூலம் அமீபா. ஒரு செல் அங்கஜீவி - அது கொழுத்து செல் காப்பிமூலமா ரெண்டாச்சு - செல் காப்பியிங்ல நடந்த எதிர்பாராத - விபத்து மாதிரியான -தவறு காரணமா புது ஜீவராசிகள் உருவாச்சு - குரங்கு வந்தது - குரங்குலருந்து மனிதன் வந்தான் .

ஒரே உடல் ஒரே உயிரா இருந்த காலத்துல உயிர்களுக்கு தூரம் ,கம்யூனிகேஷன் ட்ரபுள், இன்செக்யூரிட்டி இப்படி எந்த பிரச்சினையும் கிடையாது - ரெண்டாவது உயிர் உருவானதுமே இதெல்லாம் ஸ்டார்ட் ஆயிருச்சு.

ஆனால் ஓருயிர் ஓருடலா இருந்த நினைவுகள் மட்டும் செல் டு செல் காப்பியிங் மூலமா ஒவ்வொரு மனித மூளைலயும் ஃபீட் ஆயிருக்கு. மறுபடி ஓருயிர் ஓருடலாகனும்ங்கற துடிப்பு இருக்கு.

ஆனால் இந்த ஓருயிர் ஓருடலா மாற இந்த உடல்தான் தடைங்கற ஒரு தவறான நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கு. இன்னொரு பக்கம் இன்னொரு உயிரோட கலக்கனும்னா மறுபடி ஓருயிரா மாறனும்னா அந்த உயிரோட செக்ஸ் வச்சுக்கனும் .அதான் ஒரே வழிங்கற மிக மிக தவறான நம்பிக்கை இன்னொரு பக்கம் இருக்கு.

இந்த உடலை உதிர்க்க கொல்றது ரெண்டு கொல்லப்படறதுங்கற ரெண்டே ரெண்டு வேலைகளை வித விதமான காரிங்கோட செய்றாய்ங்க.

மன்சங்க இன்னா நெல்ல வேலை பண்ணாலும், என்னா கேப்மாரி வேலை பண்ணாலும் அதும்பின்னாடி இருக்கிறது ரெண்டே ரெண்டு ஆசை தானாம்.

ஒன்னு கொல்றது ரெண்டு கொல்லப்படறது. இதை நான் சொல்லலை . சைக்காலஜி சொல்லுது. இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம். அதனால தான் சனங்க செக்ஸுக்கு சரண்டர். மனைவியுடனான செக்ஸில் கொல்லுதல் -கொல்லப்படுதல்ங்கறதெல்லாம் படிப்படியா குறைஞ்சு போயிருது.அதனாலதேன் அலுப்பு -சலிப்பு.

இதனாலதேன் ஆண் -பெண் வேலி தாண்டுகிறார்கள்.

ஒரு பெண் வேண்டுவது தந்தையை . ஒரு ஆண் வேண்டுவது தாயை.  ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் மறுக்கப்பட்டா - ஒடைச்சு சொன்னா முலைக்காம்பு மறுக்கப்பட்டா அவன் செயின் ஸ்மோக்கராகிறான்.  குடிகாரனாகிறான். நிப்பிள் காம்ப்ளெக்ஸ். ஒரு பெண்ணுக்கு தந்தைப்பாசம் மறுக்கப்பட்டால் அவள் காதலிக்கிறாள். அவன் தந்தை அவளது தாயை துன்புறுத்தியிருந்தா இவள் சக ஆண்களை தன் பின்னால் அலைய விட்டு பழிவாங்கறா.

ஓருடல் ஓருயிர் நிலை மாறி பல்லுடல் பல்லுயிரா மாறினாலும் நம்ம உயிர்களெல்லாம் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. (செல் ஃபோன்கள் டவர்களால் இணைக்கப்பட்ட மாதிரி) ஆனால் அகந்தை காரணமா பிரிஞ்சிருக்கம். நோக்கமென்னவோ சக உயிர்களோட இணையறது. ஆனால் நாம செய்றதென்ன.. நம்ம இளைஞர்கள் இளைஞியர் செய்வதென்ன?

ஒரே ஒரு நபரோடு இலக்கில்லாம்  அலைய மத்த அனைவரோட உறவுகளையும் நாஸ்தி பண்ணிக்கிறதுதேன். ஏற்கெனவே  தங்களோடு இணைஞ்சிருக்கிற ஒரு சில உயிர்களிடமிருந்தும் பிரிஞ்சுர்ரதுதான். பை.தனமா இல்லே?

இந்த ஒரே ஒரு யதார்த்தத்தை புரிஞ்சிக்கிட்டா போதும். மனிதன் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவோ (சர்வைவல்) - படைக்கவோ - பரவவோ ( குழந்தை பேறு)  செக்ஸ் ஒன்னு மட்டுமே வழியல்ல.

ஓருயிர் ஓருடலாய் இருந்த நிலையை மீண்டும் அடைய உடல்களை உதிர்ப்பதோ - அதற்காக கொல்வதோ கொல்லப்படுவதோ வழியல்ல -

ஓருயிர் ஓருடலாய் இருந்த நிலையை மீண்டும் அடைய உடல்களால் கலப்பது வழியல்ல. அதற்காக உடலுறவின் ஈடுபடுவது மட்டும் வழியல்ல.  ஏற்கெனவே நம் உயிர்கள் இணைக்கப்பட்டிருப்பதை உணரவேண்டும்.

வன்புணர்வுகளை தவிர்க்க புரட்சிமணி தரும் ஆலோசனைகளை பாருங்க:

//மனிதத்தை பற்றிய கல்வியும் அதில் ஒழுக்கத்தின் அவசியத்தையும் மக்களுக்கு எடுத்து கூற  வேண்டும்.பிறந்ததிலிருந்து இவற்றை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே உண்மை,நேர்மை,ஒழுக்கம்,மனித நேயம் போன்றவற்றை பின்பற்றும்படி கலை,கல்வியை அமைக்க வேண்டும்.//

தன் உயிர் உலகின் அனைத்து உயிர்களோடும் பிணைக்கப்பட்டிருப்பதை ஒரு குழந்தை தெ(பு)ரிந்து கொண்டு - அதை அனுபவத்தில் உணர்ந்து கொள்ளவேண்டும்.

ஏற்கெனவே இணைக்கப்பட்டிருக்கும் தான் இன்னொரு உயிருடன் இணைய உடல் உதவாது என்பதையும்  - உடல்களை உதிர்ப்பது தன்னை இவ்வுலகின் பல்லுயிரோடு இணைக்காது என்பதையும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இது மட்டும் சாத்தியமானால்  கவைக்குதவாத சாகசங்கள் , காதல்,கத்திரிக்காய், பணப்பித்து அதிகார பித்து வன்முறை ஆகியவற்றை அக்குழந்தை கனவிலும் விரும்பாது. புரட்சிமணி எதையெல்லாம் குழந்தைகளின் மனதில் செயற்கையாய் விதைக்கவேண்டும் என்று பட்டியலிடுகிறாரோ அவையெல்லாம் இயற்கையாய் முளைத்து - பூத்து குலுங்கி மணம் வீசும்.

புரட்சிமணியாரின் வலைப்பூவில் அவ்வப்போது இந்துத்வா வாடை மூக்கை துளைக்கும். இந்த மேட்டர்லயும்
// ஆபாசமான உடைகளை தவிர்த்தல் நல்லது//ங்கறாரு.

இன்னைக்கு கர்ச்சீஃப் மட்டும் கட்டிக்கிட்டு போடற ஆட்டத்தை எல்லாம் பார்த்தா நமக்கு ஒன்னும் ஆறதில்லை.ஆனால் இந்த முரசு டிவியில 16 முழ புடவைய சுத்திக்கிட்டு வர்ர கருப்பு வெள்ளை சமாசாரங்கதான் பயங்கரமா கலக்குது .இதுக்கு என்ன பண்றதுன்னு புரட்சிமணியார் சொல்லனும்.

வன்புணர்வுங்கறது ஒரு வக்கிர  மனதின் - வக்கிர கணத்து  வெடிப்பு. இதுல ஆடை ,அணிகலன்லாம் ஒரு பொருட்டே இல்லை.  நல்லவேளையா புரட்சிமணியார் அடுத்த பத்தியிலயே ஜகா வாங்கறாரு.

//.மூன்று வயது குழந்தை  முதல் அறுபது வயது கிழவி வரை கற்ப்பழிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு எந்த ஆடை கொடுப்பது?  காம கொடூரர்களுக்கு ஆடை ஒரு தடை அல்ல.//

மன்னிக்கவும்:
இந்த வன்புணர்வு பின்னான மனோதத்துவத்தை அலசவே இந்த பதிவை ஆரம்பித்தேன்.ஆனால் அலசல் காதல்,கல்யாணம் ,கள்ள உறவுகளோடே நிற்கிறது.இன்னொரு சந்தர்ப்பத்துல அலசலை தொடர்வோம்.

Sunday, December 23, 2012

சந்திரனுடன் பேட்டி : இறுதி பகுதி



அண்ணே வணக்கம்ணே !
சந்திரனுடன் பேட்டிங்கற தலைப்புல சில பதிவுகள் போட்டுக்கிட்டு வந்தம். சந்திரன்னாலே அன்செர்ட்டெனிட்டி தானே. (நிச்சயமற்ற தன்மை)

நம்முது கலப்பு திருமணம்ங்கறது ஞா இருக்கலாம். என்னைக்கு நடந்ததுன்னு கேளுங்களேன். அட சொம்மா கேளுங்களேன்

தேதி 29 ,மாசம் 11 (நவம்பர்) .வருசம் 1991. தேதி,மாசம்,வருசம் இந்த 3 ஐயும் தனித்தனியே கூட்டி சிங்கிள் நெம்பராக்கினா 2 வரும். இது சந்திர காரகம் கொண்ட எண்.

ஒரு 14 வருசம் .. லைஃப் எந்த ரூட்ல போகுதுன்னே சுதாரிச்சுக்க  முடியாத அளவுக்கு திடீர் தன்மை.

எல்லாத்தையும் கூட்டி சிங்கிள் நெம்பராக்கினா 6 வரும் .இது சுக்கிர காரகம்ங்கறதால தப்பிச்சம்.

  துவங்கும்போது முடியும் –முடியும் போது துவங்கும். அதனாலதேன் இந்த இழுபறி. எப்படியோ இந்த மேட்டர் இந்த பதிவோட முடியுது.  அடுத்தது செவ்வாய் தான். பேட்டிக்கு போயிரலாமா?

நான்:

பாஸ் ! இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கோ ஆப்பரேட் பண்ணிருங்க. ஜஸ்ட் சில கேள்விகள் மட்டும் தான்.

சந்திரன்:  கேளுப்பா

நான்:

ஜாதகத்துல உங்களோட பலம் இல்லேன்னு வைங்க .என்ன ஆகும்?

சந்திரன்:

விருச்சிக ராசிக்காரன் பொளப்பாயிரும்.

நான்:
அதென்ன பாஸ் இப்டி சொல்ட்டிங்க..அப்பம் சனத்தொகையில ஒன் பை ட்வல்வ்  பொளப்பு நாறிப் போன பொளப்பு  தானா?

சந்திரன்:
நாற பொளப்புன்னு சொன்னேனா?  அவிக ஜாதகத்துல நான் நீசமாறதால - மத்த கிரகங்களோட பலத்தால அந்த கிரகங்களோட காரகத்வம் கொண்ட மத்த எல்லாமே இருந்தாலும் . அவிக மனசு மட்டும்  இல்லாததுக்கே ஏங்கிக்கிட்டிருக்கும்.

நான்:

இல்லாததுக்கு ஏங்கறது சகஜம் தானே பாஸூ..ஹ்யூமன் சைக்காலஜி இதானே

சந்திரன்:

இல்லாததுக்கு ஏங்கறது வேற .. ஆனால் இவிக இல்லாததை நினைச்சு இருக்கிறதை எல்லாம் மறந்துட்டு எல்லாரையும் கடுப்படிச்சுக்கிட்டிருப்பாய்ங்க.


நான்:
அது எப்படி?

சந்திரன்:
எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு  பப்பா மாதிரி கேள்வி கேட்டா எனக்கு கடுப்பாயிரும். உன்னை சுத்தி எத்தீனி விருச்சிக ராசி காரவுக இருக்காய்ங்க. அவிகளை கன்வின்ஸ் பண்ண முடியாம எத்தீனி தாட்டி நீ கடுப்பாகியிருப்பே.

நான்:
ஓ நீங்க அப்படி வர்ரிங்களா? செரி செரி..இந்த விருச்சிக ராசிக்காரவுக லைஃப்ல முக்கியமா நான் கவனிச்சது என்னடான்னா எப்பவும் அதிருப்தியிலயே இருப்பாய்ங்க. அசந்தர்ப்ப ப்ரலாபணம் சாஸ்தி . எப்பம் என்ன பேசறதுங்கற விவஸ்தையே இருக்காது. செய்றதென்னமோ நல்லதாவே கூட இருக்கும்.ஆனால்   ஒவ்வொரு பேச்சும் தேள் கொட்டறாப்ல இருக்கும். பஜார்ல விஜாரிச்சா ஒருத்தங்கூட இவிகளை நெல்லவன்னு சொல்லமாட்டாய்ங்க. அதே போல இவனும் எவனையும் நெல்லவன்னு சொல்லமாட்டான். உங்க பலம் இல்லின்னா சனம் நிலைமை இப்படி ஆயிரும். அதானே ?

சந்திரன்:  ஆமாப்பா..

நான்:
இட்ஸ் ஓகே .. நெக்ஸ்ட் க்வஸ்டியன். உங்க பலம் இல்லின்னா இன்னம் என்னெல்லாம் நடக்கும் சொல்லுங்க

சந்திரன்:
இவிக போர் போட்டா தண்ணி வராது -வந்து தொலைச்சா இவிகளுக்கு நுரையீரல் -சிறு நீரகம் தொடர்பான வியாதி வரும். புகை , தூசு, நெடி இருக்கிற தொழில்ல இருப்பாய்ங்க. அது தொடர்பான வியாதிகள் வரும்.
எப்பயும் சண்டைக்கு காலை பிறாண்டிக்கிட்டே இருப்பாய்ங்க. சைக்கியாட் ரிஸ்டுகளை வாழ வைக்கிறதே இவிக தான். ஒன்னு தண்ணியை பயங்கரமா வீணாக்குவாய்ங்க .இல்லின்னா குளிக்க கூட மாட்டாய்ங்க. நாறும்.

ஓவர் டு மீ:
பாஸ் ! சந்திரனை பத்தி எழுதனும்னா 365 நாள் தொடர்ந்து ஒவ்வொரு பதிவு போடலாம். ஆனால் இந்த விடியல் நேரத்துலயாவது –எந்த இமிசையும் இல்லாம -  சில ஜாதகங்களுக்காவது பலன் பதிவு பண்ணிட்டாதேன் அடுத்து ரெப் அவதாரம் எடுக்க முடியும். அதனால அம்பேல்

சந்திரனுடன் இன்ன பிற கிரகங்கள் சேர்வதை வைத்து உங்க ஐக்யூவை சாஸ்தி பண்ணிக்க சில க்ளூஸ் தரேன். ஆக்சுவல் பலன் என்னவா இருக்கும்னு கெஸ் பண்ணி கமெண்ட் போடுங்க.



சந்திரன்+சூரியன்: 
சந்திரன்னா மனம்+ சூரியன்னா அறிவு , சந்திரன்னா அடித்தட்டு மக்கள் ,சூரியன்னா தானகுணம்

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+செவ்வாய்:
சந்திரன்னா நிலையற்ற தன்மை ,செவ்வாய்னா ரியல் எஸ்டேட் சந்திரன் = நீர், செவ் = நெருப்பு

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+ராகு
சந்திரன்னா  நுரையீரல்,சிறு நீரகம்,  ராகுன்னா கிருமிகள், சந்திரன்னா சிறு நீரகம் ராகுன்னா லிக்கர் , சந்திரன்னா நுரையீரல் , ராகுன்னா டொபேக்கோ புகையிலை
சந்திரன்னா மனசு , ராகுன்னா சதிகள், ரகசிய எதிரிகள்

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+ குரு
சந்திரன்னா  நிச்சயமற்ற தன்மை குருன்னா பணம், சந்திரன்னா மனசு ,குருன்னா தெய்வீக சிந்தனைகள், சந்திரன்னா மனசு ,குருன்னா ஞா சக்தி,திட்டமிடல்,குருன்னா புத்திரகாரகன், சந்திரன் ரெண்டேகால் நாள்ள ஓடிப்போற கிரகம்.

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+சனி
சந்திரன்னா இன்ஸ்டெபிலிட்டி ,சனின்னா நெவஸ் செட் அப், சந்திரன்னா திரவம் ,எதிர்பாராத்தன்மை ,சனின்னா ஆசனம், சந்திரன்னா மனசு , அப் அண்ட் டவுன்ஸ் சனின்னா லாங் டெர்ம் ப்ராஜக்ட்ஸ் ,

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+புதன்
சந்திரன்னா இன்ஸ்டெபிலிட்டி  புதன்னா வியாபாரம், சந்திரன்னா மனசு புதன்னா கல்வி , சந்திரன்னா மனசு  புதன்னா வைத்தியம்

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+கேது
சந்திரன்+ராகுவுக்கான க்ளூஸையே ரிப்பீட் பண்ணிக்கங்க. கூடுதலா  சந்திரன்னா மனசு கேதுன்னா விரக்தி.

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+சுக்கிரன்
சந்திரன்னா மனசு ,சுக்கிரன்னா கில்மா,  சந்திரன் ரெண்டே கால் நாள்ள ராசி மாறிரக்கூடிய கிரகம், 14 நாட்கள்ள தன் நேச்சரை மாத்திக்கக்கூடிய கிரகம்.
செக்ஸ்ங்கறது ? ஆசை 60 மோகம் 30 ன்னு வச்சுக்கிட்டாலும் 90 நாள் ஒரே மாதிரி மெயின்டெய்ன் பண்ணவேண்டிய மேட்டர்.

 இதனோட விளைவு என்னவா இருக்கும்?

எல்லாத்தையும் ரோசிச்சு கமெண்டா போடுங்க… நாளைக்கு நம்ம வெர்சனை கொடுத்துட்டு செவ்வாயை பேட்டி எடுக்க போயிரலாம். ஓகேவா? உடுங்க ஜூட்டு.

ப்ளாகர்ல தோழமைகளையும் -அவிக பக்கங்களையும் குறிப்பிடற வசதி வந்துருக்காமே.. நாம குறிப்பிட வேண்டிய மொத பார்ட்டி @கோவி.கண்ணன்