Showing posts with label license to sex workers. Show all posts
Showing posts with label license to sex workers. Show all posts

Friday, June 11, 2010

இரவு ராணி Vs ஆன்ட்டி

 கலகலக்கும் குடும்ப அமைப்பு
விவாகரத்து நிபந்தனைகளில் தளர்வு, ஹோமோ செக்ஸுவல் லீகல் தான் என்ற கருத்து, திருமணத்துக்கு முந்தி செக்ஸு இம்மாரல் தான் இல்லீகல்னு சொல்ல முடியாது இதெல்லாம்  சமீப காலத்துல கோர்ட்டுகள் உதிர்த்த முத்து. குடும்ப அமைப்புங்கறது ஏன் ஏற்பட்டுது? சஞ்சாரிகளா இருந்த மனித கூட்டம்  ஸ்திரவாசம் ஏற்படுத்திக்கிட்டப்ப ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி ஏற்பட்டுது. தான் செத்து சுண்ணாம்பு ஆகி சீர்திருத்திய நிலம் தன் வாரிசுக்கே சேரணுங்கற எண்ணத்துல மனிதன் குடும்ப அமைப்பை கண்டு பிடிச்சான். இப்போதைக்கும் இந்தியாவுல 70 சதம் மக்கள் விவசாயத்தை சார்ந்துதான் வாழறாய்ங்க.இதுல எத்தனை சதவீதம் பேருக்கு நிலமிருக்கு? ( 70 சதம் பேருக்கும் நிச்சயமா கடன் உண்டு)

குடும்ப அமைப்புக்கு சொத்து ஒன்னுதானா காரணம்? இல்லே. தன் மரணத்துக்கப்புறமும் தன்னோட சாயல் இந்த பூமி மேல இருக்கனும்னு மனுஷன் உள்ளூற விரும்பறான். அதுக்குத்தான் குடும்பம்.

அது சரி குடும்ப அமைப்பை ஏற்படுத்திக்கிட்ட பிறகு சில  மனுசங்களே ஏன் அதை குலைக்கிறாய்ங்க ( நாய் மாதிரியில்லிங்கண்ணா. அவிக அலையல் வேணம்னா அப்படி இருக்கலாம்)   நல்ல கேள்வி.

செக்ஸ்ல பிறக்கிறான். மனுஷனுக்கு மூலம் ரெண்டு செக்ஸ் க்ரோமோசோம்தான். செக்ஸை  நிர்ணயிக்கிற ஜீன் தான் மனுஷனோட குணங்களையும் நிர்ணயிக்குது . மனுஷ உடலுக்கு மனசுக்கு எல்லாம் மையம் செக்ஸ் தான். மனுஷனுக்கு மறுக்கப்படறதும் செக்ஸுதான்.

குழந்தை மரணங்கள், யங் விடோஸை தவிர்க்க சைல்ட் மேரேஜஸை தடைபண்ணினாங்க. சைல்ட் மேரேஜ் போய் ஓல்டேஜ் மேரேஜ் வந்துருச்சு. திருமணத்துக்கு ஏற்ற வயசு ஆணுக்கு அறுவது, பெண்ணுக்கு அம்பதுங்கற ஸ்லோகன் வர நாள் ரொம்ப தொலைவுல இல்லை.

தனிமை, சகட்டு மேனிக்கு கிளப்பி விடற வெஸ்டர்ன் கல்ச்சர் ,உள்ளடக்கி வச்ச செக்ஸ் எண்ணங்கள்,பாஸ்கலின் விதிப்படி அது  வன்முறையா சீறிக்கிளம்பறது     கன்ஸ்யூமரிசம், தேவைகளின் பெருக்கம், கமர்ஷியலைசேஷன் (தண்ணிய கூட காசு கொடுத்துத்தானே வாங்கறோம்), போட்டிகள் நிறைஞ்ச உலகம், கியாரண்டி இல்லாத லைஃப், என்னைக்கு புட்டுக்கும்னு தெரியாத வேலை இந்த என்விரான்மென்ட்ல காமம் எரிச்சுப்போட்ட சாம்பல் கூடுகள் தான் மண மேடைக்கு போகுது.

பெண்கள் விஷயத்துலன்னா அவிக ஜஸ்ட் ரிசீவர்தான். என்ன சில உணர்வுகள்  பழகிப்போயிரலாம், மங்கி போயிரலாம். ஆனால் ஆண்கள் விஷயத்துல? மடி வத்திப்போன மாடு மாதிரி அடிமாடா கிடக்க வேண்டியதுதான்.

இந்த குடும்ப அமைப்பை குலைக்க அக்கம்பக்கம் மேயற பார்ட்டியெல்லாம்  வத்த மாடுங்க. அங்கேன்னா நல்லா கறக்கும், இங்கேன்னா நல்லா கறக்கும்னு நக்கிக்கிட்டு திரியும்.சாப்பாட்டுக்கு ருசிய கொடுக்கிறது நாக்கும் இல்லே உணவும் இல்லே. பசி. அந்த பசியே மந்தமாயிட்ட பிறகு எந்த தீனியா இருந்தாலும் தண்டம்தான். ஆடத்தெரியாதவ கூடம் கோணல் என்ற கதைதான்.

 பசியில்லாதவன் தான் அந்த ஓட்டல் இந்த ஓட்டல்னு அலைவான். பசி செத்துப்போனவனுக்கு என்னத்த பரிமாறினாலும் அது சவண்டி சோறுதான். நீங்க என்னதான் மறுத்தாலும் இயற்கை மனிதனுக்கு கொடுத்திருக்கிற முழு முதல் ட்யூட்டி செக்ஸும், இனப்பெருக்கமும்தான். எப்போ இனப்பெருக்கத்துக்கு தடை விதிச்சோமே (இயற்கையென்ன முட்டாளா) அங்கன இருந்தே இந்த பிரச்சினை ஆரம்பிச்சுருச்சு. இதுக்கு முந்தியிருக்கிற பிரச்சினை என்னன்னா சாதீயம்  காரணமா குறுகிய வட்டத்துல கண்ணாலம் கட்டிக்கிட்டே போனதுதான்.

அதுக்கு பின்னாடி கொஞ்ச நஞ்சமிருந்த ஆண்மையையும்  வெஸ்டர்ன் கல்ச்சர், சக்கை அரிசி சோறு, ஜங்க் ஃபுட், டின் ஃபுட் எல்லாம் சாப்பிட்டாச்சு. ஒரு ஆண் பெண்ணுக்கிடையில் பாசம், நேசம்,காதல்லாம் முக்கியம்னு  ஜல்லியடிச்சாலும்  இதையெல்லாம் தாண்டி சரீர தர்மம்னு ஒன்னிருக்கு.

பெண் தன் கணவன் கிட்டேருந்து "அந்த" ஒரே ஒரு அம்சத்தை தான் எதிர்பார்க்கிறாள்னு சொல்ல வரலை. அதுக்காக அந்த உயிர் தன்னோட பேசிக்கல் இன்ஸ்டிங்டை தியாகம் பண்ணனும்னு எதிர்பார்க்கிறது அமானுஷம்.  சரி சம்பந்தா சம்பந்தமில்லாத திடீர்னு இந்த மேட்டரையெல்லாம் எதுக்கு போட்டு தாக்கறிங்கனு கேட்கப்போறிங்க அப்படித்தானே. இதெல்லாத்துக்கும் காரணம் ஒரு மெயில்.


நான் ஏதோ ஒரு பதிவுல கணவனை இழந்த பெண்ணோட/டிவோர்சி/ஆர் செப்பரேட்டட் விமனோட  உடலுறவு வச்சிக்கிட்டா அந்த கணவன் எப்படி செத்தானோ அதே மாதிரி சாக வாய்ப்பிருக்கு/ அவனோட நிலை உங்களுக்கு வந்துர வாய்ப்பிருக்குன்னு  ஒரு பாயிண்ட் சொல்லியிருந்தேன்.

இது தொடர்பா ஒருத்தர் மெயில் அனுப்பியிருந்தார்

செக்ஸ் ஒர்க்கர்ஸோட விஷயத்துல இந்த விதி எப்படி வேலை செய்யும் அவிக தினசரி ஒரு விடோயரோடவாச்சும்  படுக்கைய பகிர்ந்துக்க வேண்டி வருமே?ன்னு கேட்டிருந்தார். நான் சொன்னது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை .  அவர் கேட்கிறது செக்ஸ் ஒர்க்கர்ஸை பத்தி.

ஆமா செ.ஒ. ஜாதகம் தான் என்ன? அதுல உள்ள சாதகம்தான் என்னனு பார்த்தா ?

விபசாரம்ங்கறது சட்டத்துக்கு அப்பாற்பட்டதுதான். ஆனால் இங்கே பணம் தரப்படுது. காஞ்சனம்னா பணம். காஞ்சனம் கர்ம விமோச்சனம்.  நீங்க அவிகளுக்கு காசு கொடுத்ததுமே கர்ம பந்தம் தெறிச்சுரப்போவுது. போலீஸ் வந்தா மூஞ்சி பல்லு கூட தெறிச்சுரலாம் அது வேற கதை. மேலும் ஒரு செக்ஸ் ஒர்க்கர் கிட்டே போறவனை அவ ஜாதகத்துல இருக்கிற லாபஸ்தானம்தான் காட்டுது. ஸோ அவ ஜாதகத்துல  1,2,4,7,8,12 பாவங்களில் உள்ள தோசங்கள் அவனை பாதிக்க வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி. (ஒரு வேளை இவன் தேடி தேடி போறதாவோ அல்லது அட்டாச் மெண்டோட போறதாவோ இருந்தா இவனை அவள் ஜாதகத்துல இருக்கிற 7 ஆமிடம் தான் பாதிக்கும்)

செ.ஒ கதை  பத்திரிக்கைங்க நடத்தற அறிவுப்போட்டி மாதிரி தான். ஒருத்தருக்கு மேல சரியான பதில் கொடுத்தா பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்ங்கற மாதிரி அந்த செ.ஒ ஜாதகத்துல உள்ள தோஷம் ( 1,2,4,7,8,12 பாவங்களில் உள்ள) அவளை உபயோகிக்கிறவுங்களுக்கெல்லாம் சமமா பகிர்ந்தளிக்கப்பட்டுரும். ஸோ இறப்பு இருக்காதே தவிர தோசம் வேலை செய்யத்தான் செய்யும்.

அடுத்து அவரோட கேள்வி "ஒரு விதவை/டிவோர்சி/பிரிந்து வாழ்பவரோட ரெண்டு பேரும் மனமொப்பி படுத்துக்கிட்டா தப்பென்ன?" இங்கே பணம் தரப்படுவதுமில்லே. பெறப்படுவதுமில்லே. பை தி பை ஒரு அட்டாச் மெண்டும் ஏற்பட்டுருது.

ஏழாம் இடம் ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃபை காட்டற இடம். அந்த இடத்துல தோஷம் இருந்ததால தான் அவிகளுக்கு அப்படி ஆச்சு ( வைதவ்யம், டைவோர்ஸ் அ பிரிவு)  இப்ப  நீங்க புதுசா கோர்த்துக்கிட்டா ஒரு ஃப்ரெண்டாவோ, ஒரு காதலனாவோ அவிக ஜாதகத்துல 7 ஆவது இடத்துல இருக்கிற தோசத்தை அனுபவிக்க வேண்டியதுதான்.

நான் என்ன சொல்லவர்ரேன்னா ..ஆங்  அதான் அதே தான் வெறுமனே செக்ஸை மட்டும் வேண்டி கண்ணாலம் கட்டிக்கிற பார்ட்டிக்கெல்லாம் நாலஞ்சு வருஷத்துலயே பேட்டரி ஃபணாலாயிருது. அதனால அவிகளுக்கு அந்த நாலஞ்சு வருஷத்துக்கு ஒரு ஏற்பாடா பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கிரனும். அதுவரை என்ன பண்ண?

அதான் கோர்ட்டே சொல்லிருச்சுல்ல..

பி.கு: கோர்ட்டே சொன்னாலும் அடாது செய்தால் படாது படவேண்டி வந்துரும். இயற்கை தன் வேலைய காட்டாம விடாது. இயற்கையின் உந்துதல் இயற்கை. அதுக்காக   நடைபாதைலயும், அடுத்தவன் வீட்டு கழிவறைலயும் கழியறது தப்புல்லிங்களா? குறைஞ்ச பட்சம் அரசாவது கட்டண கழிப்பறைகளை ஏற்படுத்தலாமே (சாரி ..இருக்கிற கழிவறைகளுக்கு லைசென்ஸ் கொடுத்து தொலைக்கலாமே)

காஞ்சனம் கர்ம விமோச்சனம்.

Thursday, April 15, 2010

காம நோய் தீர்க்க‌

இந்த பதிவு உடலளவில் செக்ஸே தேவைப்படாத பெண்ணின் தயவே தேவைப்படாத  ஆண்மையற்ற பால் மாற்றத்துக்கு ஏங்கும் பிரக்ருதிகள் பற்றியோ அல்லது 40 ஐ நெருங்கும் வரை , தனக்கென்று ஒரு மனைவி வரும்வரை ஈர கோவணம் கட்டியோ அ தன் கையே தனக்குதவி என்றோ வாழ்ந்துவிட கூடிய கேஸ்களை பற்றியதுமல்ல. பின்னே யாரைப்பற்றியது என்றால் .........

ஆண் பிள்ளை சிங்கங்கள்.  கோழைத்தனம் ,எஸ்கேப்பிசம், ஹிப்பாக்ரசி ஆகியவற்றை குறைவாய் பெற்றுள்ளவர்கள். சுய இன்பம் துணையுடனேயே  பேச்சலர் லைஃபை வாழ்ந்து விட முடியாதவர்கள். சாகச யாத்திரைக்கு துடிப்பதும், யாத்திரைக்கு பின் குற்றமனப்பான்மையில் குமைவதுமாய் இருப்பவர்கள்.,சில நாட்கள் அ சில வாரங்களில் வீரியம் புரண்டதும் பழைய குருடி கதவை திறடி ரேஞ்சில் ரீ என்ட்ரி தருவதும், மறுபடி குற்றமனப்பான்மையில் உழலுவதுமாய்  கிடக்கு ஆணினத்து பிரதி நிதிகளுக்காகவே இந்த பதிவை போடுகிறேன்.

திருமணமாகாத ஆண்களையெல்லாம் இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று சுய இன்பம் அனுபவித்தவர்கள் இரண்டு அனுபவித்ததே இல்லை என்று சொல்பவர்கள். ( சொல்பவர்கள் போல்ட் அண்ட் அண்டர்லைன்)

இது குறித்து ஏற்கெனவே ஒரு பதிவில் விஸ்தாரமாய் எழுதிவிட்டதால் சுய இன்பம் குறித்து இதில் ப்ரஸ்தாபிப்பதாய் இல்லை.

இனி அடுத்த ஆப்ஷன் என்ன? விலை மாது , காதலி, கணவனை இழந்த பெண், பிரிந்த பெண், தற்காலிக தனிமையில் வாடும் திருமணமான பெண், அல்லது செக்ஸ் தேவைகளுக்காக அணுகும் திருமணமான கணவனுடன் வாழும் பெண்.

விலை மாது:
விலை மாதுவை அணுக நினைச்சா எதிர்படக்கூடிய பிரச்சினைகள் அவமான உணர்ச்சி,இவன் அன் எம்ப்ளாய்டா இருந்தா பண பிரச்சினை ,பணம் இருந்தாலும்  அவளே ஏமாத்தி ,மிரட்டி காசு பிடுங்கலாம். அவள் நல்லவளா இருந்தாலும் அவளை சேர்ந்தவங்க பிடுங்கலாம் ,வியாதி வந்துரலாம், போலீஸ் ரெயிட்ல மாட்டலாம். 

காதலி:
பழந்தமிழ் இலக்கியங்கள்,திரைப்பாடல்கள் தான் பெண்களை மானினம் என்று குறிப்பிடுகின்றன. தற்போதுள்ள சட்டங்களை வைத்து பார்க்கும் போது காதல் என்பது  புலி வேட்டைக்கு மான் புறப்பட்ட கதையாகிவிட்டது.

மக்கள் தொகை பெருக்கத்தால் சகமனிதர்கள் மீதான நம்பிக்கை/ஈர்ப்பு/ அக்கறை/ஆர்வமே புஸ்வானமாகிவிட்டுள்ளது. வாழ்க்கை முறை நகரமயமாகிவிட்டமையால்  விவசாயம் சீரழிந்து கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு  மைக்ரேஷன் அதிகரித்து,  நகர வாழ்க்கையால் தேவைகள் அதிகரித்து,  தொழில் மயம்,  இயந்திரமயத்தால் பணம் இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் வாங்கிவிடமுடியும், பணம் இல்லாமல் வாழவே முடியாதுங்கற  என்ற நிலை வந்திருக்கிறது.

ஒரு பக்கம் அந்த பணத்துக்கான பரிதவிப்பு சமூகத்தை சீரழிச்சு க்ரைம் நிழல் படியாத குடும்பமே இல்லேங்கற ஸ்டேஜ் வந்துருச்சு. எந்த குடும்பத்தை எடுத்துக்கிட்டாலும் கொலை,கொள்ளை, வங்கி கடன் எகிறடிப்பு, லஞ்சம்,ஊழல், நில ஆக்கிரமிப்புலருந்து அட்லீஸ்ட்  வரதட்சிணை கொடுமை, ஈவ் டீசிங் குற்றவாளியாவது இருக்கான்.

பழி பாவத்துக்கு அஞ்சற நடுத்தர வர்கமே இந்த கதில இருக்குன்னா. மத்த க்ரூப்ஸை பத்தி தனியே சொல்லனுமா?

ஒரு வேலை.அது என்னால முடியாதுங்கறப்போ ,பெண்டாட்டியால  முடியுங்கறப்போ அவளை "வச்சு" அந்த வேலைய செய்துக்கிட்டா என்ன தப்புங்கற ஸ்டேஜுக்கு ஆம்பளைங்க வந்தாச்சு. கடன் காரனுக்கு வாய்தா சொல்றதுலருந்து, டிஷ் காரனை நாளைக்கு வானு சொல்ற வரை மனைவியரை உபயோகிக்கிறது ஒரு வழமையாகி போச்சு.

இந்த யதார்த்தத்தை சில காலம் இளமையின் ஊற்று மறைத்துவிடுகிறது . காதல், கடலை பர்ஃபினு மனசு அலையுது. இது ரொம்ப லிமிட்டட் பீரியட். வெறுமனே காதல் கடிதம் எழுதிக்கிட்டிருந்தா கூட ப்ரீச் ஆஃப் அக்ரிமென்ட் அவளை மணந்தே தீரனும்னு சட்டம் சொல்லுது. இதுல அவளோட செக்ஸ் வச்சிக்கிட்டு, வயித்துல கியித்துல கொடுத்துட்டா கதை கந்தல்தான்.

இது சக்ஸஸாற காதல்களுக்கு தான் பொருந்தும். இவன் வடிவேலு மாதிரி இருந்து அவள் ஸ்ரேயா மாதிரி இருந்துட்டா நாஸ்தி தான். உடனே ஈவ் டீசிங்ல புக் பண்ணிக்கிட்டு மஹிளா எஸ்.ஐ தன் உள் மன வக்கிரங்களுக்கெல்லாம் இவனை வடிகாலா மாத்திக்குவாங்க.

பை மிஸ்டேக் காதல் ஒர்க் அவுட் ஆகி அவளோட அண்ணனோ,அப்பனோ,ஒன்னுவிட்ட மாமனோ வட்டம்,சதுரம்னு செயலாளரா இருந்தா போதும் இவன் குடும்பமே அதோ கதி.

ஆக காதலிக்கிறதே ஆபத்து.இதுல காதலியோட செக்ஸு பேராபத்து. திவாரி கதை தெரியுமில்லே. எந்த காலத்துலயோ விதைச்சது இன்னைக்கு ஆறடிக்கு வளர்ந்து வந்து ஜெனட்டிக் டெஸ்டு அது இதுனு அல்லாட்டம்.

கணவனை இழந்த பெண், பிரிந்த பெண், தற்காலிக தனிமையில் வாடும் திருமணமான பெண், அல்லது செக்ஸ் தேவைகளுக்காக அணுகும் திருமணமான கணவனுடன் வாழும் பெண்:

இந்த க்ரூப்புக்காக அந்த ஏரியால ,அவிக ரிலேட்டிவ் சர்க்கிள்ள பெரிய கூட்டமே ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்கும். இவனெல்லாம் சிங்கம்னு நினைச்சா அது மிஸ்டேக். ஊசில நூலை கோர்க்க கூட முடியாத கேஸு கூட மேற்படி பெண்களுக்காக நாக்கை தொங்க போட்டுக்கிட்டு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கும். இதென்னா சைக்காலஜினு கடுப்பாயிராதிங்க.

சரிய்யான தாக்கத் இருக்கிற பார்ட்டி பெண்டாட்டிய போட்டு புரட்டி எடுத்துட்டு அடுத்த அலாரம் வர்ர வரை (பயாலஜிக்கல் க்ளாக்லருந்து தலைவா) ஒழுங்கா வேலை வெட்டிய பார்த்துக்கிட்டு கிடக்கும்.

இந்த மதில் மேல் பூனைங்க, பெப்சி மூடிய கூட திறக்கற கெப்பாசிட்டி இல்லாத பார்ட்டிங்க தான் " எனக்கு வீட்ல சரியில்ல மாமூ..பக்கத்து தெருவுல ஒரு கேரளா குட்டி இறங்கியிருக்கூஊஊஊஊ" என்று டீக்கடையிலும், சலூனிலும், அலம்பல் பண்ணிக்கிட்டிருக்கும். "ஆட தெரியாத தே..யா கூடம் கோணம்னாளே" அதே கதைதான் இதுகளூம்.

சாதாரணமா பார்த்திங்கன்னா மேற்படி பார்ட்டியெல்லாம் கைமாறிக்கிட்டே இருக்கும். தினத்தந்தில செய்தியா வரும். குடும்ப டாக்டரையே மாத்தாதிங்கனு சொல்றாங்க.ஆனால் இவிக ஆக்டரையே மாத்திருவாங்க,. என்னடா சமாசாரம்னா இவனும் டம்மி பீஸாயிருப்பான். டம்மி பீஸுதான் இந்த மாதிரி எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டுக்கிட்டிருக்கும்.

இதென்னடா தலையெழுத்துன்னு அவள் ஆள் மாத்தினா உடனே இவருக்கு தன்மானம் பொத்துக்கும். பெண்டாட்டி எவனோட படுத்துக்கறானு தெரியாது இவிகளுக்கு. ஆனால் கள்ளக்காதலி மட்டும் கற்போட (?) இருக்கனும்னு அப்படி ஒரு பிடிவாதம்.

இதுல எந்த கேஸ டச் பண்ணாலும் தந்தில செய்தியா வர்ரது கியாரண்டி. ஓகே இப்போ உட்பிரிவுகளையும் பார்த்துருவம்.

கணவனை இழந்த பெண்(விதவை):
இந்த கேஸை எக்ஸ்ப்ளெயின் பண்ண ஜோதிஷத்தை கொஞ்சம் துணைக்கு கூப்டுக்கறேன்னா. பெண்கள் ஜாதகத்துல ஏழாவது ,எட்டாவது,ஒன்பதாவது பாவங்கள் , இந்த பாவங்களுக்கு அதிபதியான கிரகங்கள்தான் கணவனோட ஆயுளை காட்டும். இந்த விஷயங்கள்ள தகராறு இருந்தாதான் அவள் விதவையாவாள். இதெல்லாம் லேண்ட் மைன் மாதிரி. நானோ கார்னா அதே செகண்ட்ல டமால். கவச வாகனம்னா கொஞ்சம் நாள் பிடிக்கும் அவ்ளதான். நீங்க இந்த மாதிரி பார்ட்டிய பிடிச்சா அவள் கணவனுக்கு என்னா கதியாச்சோ அதே கதிதான் உங்களுக்கும். அப்ப இவிக வாழ் நாள் எல்லாம் வைபரேட்டரை உபயோகிச்சு வாழ வேண்டியதுதானானு நீங்க கேட்கலாம். நோ.. அவள் ஜாதகத்துல இருக்கிற சவால்களை சமாளிக்கிற கெப்பாசிட்டி இருக்கிற ஜாதகனை, விதவைய மணந்தாதான் பத்து வருஷமாவது குப்பை கொட்டமுடியுங்கற ஜாதகனை இவளுக்கு கட்டி வைக்கலாம்.

கணவனை  பிரிந்த பெண்,

ஒருபெண் ஜாதகத்துல அவள் விதவையாகனும்னு இருக்கு. ஆனால் அவளை கட்டிக்கிட்டவனுது தீர்க்காயுசு ஜாதகம்னு வைங்க. இந்த மாதிரி கண்டிஷன்ல அவன் ஜாதகத்துல இருக்கிற கிரகங்கள் அவனை காப்பாத்த அவனுக்கு தீர்காயுசை தர விவாகரத்து வாங்க வச்சிருது. இது மாதிரி கேஸை கோர்த்துக்கிட்டவன் தீர்காயுசு ஜாதகத்துல பிறந்திருந்தா பிரிஞ்சுருவான். அல்பாயுசா இருந்தா பட்டுனு போயிருவான்.

தற்காலிக தனிமையில் வாடும் திருமணமான பெண்:
ஒரு பெண் இருக்கா. அவளுக்கு கோசாரத்துல (தற்காலிகமா)  விதவையாகிற நேரம் வந்திருக்குனு வைங்க. அவள் கணவனோட சேர்ந்திருந்தா அவன் செத்துருவான். இவள் விதவையாயிருவாள். ஆனால் ஆக்சுவலா இவளுது தீர்க சுமங்கலி ஜாதகம். அவனுது தீர்காயுசு ஜாதகம். இந்த பிரச்சினைய கிரகம் எப்படி சால்வ் பண்ணுதுன்னா
ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சுருது. ஜோதிஷத்தை பொருத்தவரை வியோகம்னா செத்து போறது மட்டும் வியோகமில்லை. விவாகரத்து வாங்கிக்கிட்டாலும் வியோகம்தான். அம்மா வீட்ல வந்து டேரா போட்டாலும் வியோகம்தான்.  நாளைக்கு நல்ல நேரம் வந்ததுமே இவள் போய் அவனோட சேர்ந்துக்குவா. இவள் அம்மா வீட்ல கேம்ப் போட்ட நேரம் அவள் விதவையாற நேரம். அந்த நேரம் பார்த்து நீங்க அவளுக்கு லைன் விட்டிங்கனு வைங்க. அவள் கணவனை கை குலுக்க வேண்டிய மரண தேவன் உங்களை குலுக்கிருவான். டேக் கேர்.

செக்ஸ் தேவைகளுக்காக அணுகும் திருமணமான கணவனுடன் வாழும் பெண்:
ஆண் இயற்கையின் வேலைக்காரன். வேலைக்காரன் வேலை செய்யனும்னா அவனுக்கு கூலி தருவாய்ங்க. வேலைக்கு கூலி போலத்தான்  ஆணுக்கு செக்ஸில் உச்சம் கிடைக்குது.  

ஆனால் பெண் இயற்கையின் பிரதி. இயற்கையின் நிதி. இயற்கையின் பிரதி நிதி.
அவளோட ஒரே  நோக்கம் ஆண் கிட்டருந்து வீரியத்தை சேகரிக்கனும், கருவை தாங்கனும். ,தாயாகனும். இதுக்கு அவள் எந்த கூலியையும் எதிர்பார்க்கிறதில்லை. அவள் இந்த படைப்புல ஒரு சின்ன பாகமா இருந்தாலும் தன்னையே இயற்கையா உணர்ரா.

ஆண் ஒன்னை பெத்த பிறகுதான் தந்தையாகிறான். பெண்ணோ பிறக்கும் போதே தாயாக பிறக்கிறாள்.

செக்ஸில் உச்சம் அடைவதற்கான எதிர்பார்ப்பு அவளோட சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கறதில்லை.

( பெண்களில் வெகு  சிலர் ஆர்காசம் குறித்த எதிர்பார்ப்புகளை தம் கான்ஷியஸ்  மைண்டில் வைத்திருக்கலாம்.ஆனால் இது ஜஸ்ட் மேம்போக்கானது. அது கிடைக்காத பட்சம் அதை குறித்து பெரிதாய் சிந்திப்பது கூட இல்லை.அவ்வாறு சிந்திக்க ஆரம்பித்திருந்தால்  திருமணம் என்ற ஏற்பாடே காலாவதியாகியிருக்கும். ஏன் என்றால் இன்செர்ஷனுக்கு பிறகு 7 அசைவுகள்ள ஆணுக்கு உச்சம் ஏற்பட்டுருதாம். பெண்ணுக்கு 23 அசைவுகள் தேவைப்படுதாம் . மேலும் ஒரு இரவில் ஆணுக்கு ஓரிரண்டு உச்சங்கள் ஏற்பட்டாலே சுஸ்தாயிருவான். ஆனால் பெண் பல தடவை உச்சம் பெறும்/அந்த மின் புயலை  தாங்கிக்கொள்ளும் சக்தியை பெற்றிருக்கிறாள்)

கணவன் தன் மேல இயங்கும் போது ஏதோ குழந்தை தன் மார்பில் முட்டி பால் குடிப்பதாய் உணர்கிறாளே தவிர,  இந்த செயலின் பின் விளைவாய் தனக்கு கிட்ட்டப்போகும்  பாக்கியத்தை ( ஓருடலில் இரண்டு உயிர்கள் தங்கும்) கனவு காண்கிறாளே தவிர வேறில்லை.

ஆக பெண் என்பவள் செக்ஸுக்காக செக்ஸில் ஈடுபடுவதில்லை. ஒன்று குழந்தையை பெற அல்லது தன் கணவனையே குழந்தையாக்கிக்கொள்ள தான் செக்ஸில் ஈடுபடுகிறாள்.

பெண்ணியவாதிகள் ஆகா ..இவன் பிற்போக்கு வாதி, பெண்ணுக்கான சம உரிமையை, செக்ஸில் உச்சம் பெறும் உரிமையை சுற்றி வளைத்து  மறுக்கிறான்  என்று கோஷமிடலாம். ஆனால் பல நூறு பெண்களிடம் அந்தரங்கமாய் கலந்துரையாடி, பல்லாயிரம் தம்பதிகளின் வாழ்க்கை போக்கை கவனித்தே மேற்படி பத்தியை எழுதினேன்.வசதி வாய்ப்புள்ளவர்கள் ஒரு  நாடு தழுவிய சர்வே நடத்திப்பார்க்கட்டும்.

பெண் மட்டும் செக்ஸில் உச்சத்தை எதிர்ப்பார்க்க ஆரம்பித்திருந்தால் திருமண அமைப்பில்லை,குடும்பமில்லை,தனியார் சொத்துக்களில்லை,  சுரண்டலில்லை,
சனத்தொகை பெருக்கமில்லை, ஜஸ்ட் வைபரேட்டர்கள்  இத்தனை பிரச்சினைகளையும் தீர்த்து வைத்துவிட்டிருக்கும்.

ஒரு பெண் வெறுமனே செக்ஸ் தேவைகளுக்காக கணவனல்லாத இன்னொரு ஆணை தேடுவாள் என்பதே தர்கத்திற்கொவ்வாத ஒன்று. அவளுக்கு செக்ஸ் ஒன்றே தேவையென்றால் அதற்கு எத்தனையோ விஞ்ஞான சாதனங்கள் உள்ளன. அவளுக்கு செக்ஸ் மட்டும் தேவையில்லை. வேறு எதையோ எதிர்பார்க்கிறாள். அதற்காக, அது கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பில் செக்ஸை சகித்துக்கொள்கிறாள்.

உண்மை நிலை இப்படியிருக்க செக்ஸுக்காக ஒரு பெண்/அதுவும் திருமணமாகி கணவனுடன் வாழும் பெண்  உங்களை நாடிவந்தாள் என்றால் அவள் அப் நார்மல் என்று அர்த்தம்.

இன்னாபா என்னமோ விஸ்தாரமா பத்தி பத்தியா எழுதிக்கிட்டு வந்து இப்படி அம்போனு விட்டுட்டியே என்று நொந்து கொள்ளாதீர்கள்.திருமணமாகாத ஆணுக்கு
 செக்ஸுக்கான பாதுகாப்பான  ஆப்ஷன்ஸ் இரண்டே ஒன்று சுய இன்பம் .இரண்டாவது ?

சொல்லித்தான் ஆகனுமா?  பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம். மனிதன் பல்வேறு தளங்களில் இயங்குகிறான். உடல்,மனம்,புத்தி ,ஆத்மா. மனிதர்கள் யாவரும் உடல் என்ற தளத்தை தாண்டி வந்தாலன்றி  ப்ரக்ஞை வளராது. உடல் தாண்டிய வளர்ச்சிக்கு உடலளவு தேவைகள் நிறைவேற்றப்பட்டே ஆகவேண்டும். இல்லாவிடில் மனிதன் மாமிச இச்சைகளுக்கே இரையாகிவிடுவான்.

மாமிச இச்சைகளை கடந்து வந்தவன் முறையாகிறான், மறையாகிறான். ஏன் இறையுமாகிறான்.

Wednesday, January 13, 2010

அதை லீகலைஸ் பண்றது பத்தி யோசிங்க - சுப்ரீம் கோர்ட்

கே:உங்கள் வலைப்பூ ஒரு லட்சம் ஹிட்ஸை நெருங்கும் இந்த வேளையில் நீங்கள்
என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: என்னங்க நீங்க ஏதோ இப்பத்தான் 75 ஆயிரத்தை தாண்டியிருக்கு அதுக்குள்ளாற இந்த பில்டப்பு ஏன் ?
கே: சரி 75 ஆயிரமே கூட வச்சுக்கங்க இதை பத்தி என்ன நினைக்கிறிங்க?
ப: எப்படியோ என்னை உசுப்பேத்தி வாய பிடுங்கறதுனு முடிவு பண்ணிட்டிங்க அப்படிதானே. செப்பு மொழி பதினெட்டுடையாள்னு பாரதியார் சொன்னாரு. அந்த பதினெட்டுல தமிழ் ஒரு மொழி. என் செய்தி இந்த உலகத்துக்கானது. கு.ப. இந்தியாவுக்கானது. இந்திய ஜனத்தொகை 120 கோடிய தாண்டி ஓடுது இதுல எழ்த்தறிவில்லாதவுகளை விட்டுட்டாலும் 55 சதவீதம் பேரை நானும் என் செய்தியும் சென்றடையனும். இன்டர்னெட்டை பார்க்கிறவுக வெறும் 2 சதம்தானு கேள்விப்பட்டேன். இதுல தமிழ் எவ்ளோ ? தமிழ் வலை தளங்கள்ள ப்ளாகர் டாட் காம் எவ்ளோ அதுல கவிதை07 க்கு வர்ரவங்க சதவீதம் எவ்ளோ. 75 ஆயிரம்லாம் யானைப்பசிக்கு சோளப்பொறிங்க ...சோளப்பொறி . இன்னும் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டியது இருக்கு

கே: அப்படி ஏன் ஃபீல் பண்றிங்க உங்க எழுத்துக்களை அந்திமழை டாட்காம், நிலாச்சாரல் டாட் காம்னு அனுப்பிச்சது ஒரு காலம் அதிகாலை டாட்காம் அழைத்து அணைத்துக்கொண்டது. முத்து கமலம் டாட் காம் "எடுத்து போட்டுக்கோங்க" என்ற உங்கள் மெயிலுக்கு ரெஸ்பாண்ட் ஆகி எடுத்து போட்டுக்கொண்டது. எத்தனையோ அக்ரகேட்டர்ஸ் உங்களுக்கே தெரியாம தங்களோட வலை தளத்துல உங்க பதிவுகளை காட்டறாங்க. பெரியார் எழுத்துக்கள் எங்களுக்கே சொந்தம்னு கோர்ட்டுக்கு போய் ஸ்டே வாங்கின விடுதலை கூட உங்க பதிவை அதிகாலை டாட்காமுக்கு நன்றியோட வெளியிட்டிருக்காங்க. டமில் குறிஞ்சி உங்க ஏ ஜோக்ஸை பப்ளிஷ் பண்ணி கவிதை07 க்கான சுட்டிய கொடுத்திருக்காங்க. கவிதை07க்கு இதுவரை 75 ஆயிரம் ஹிட்ஸ் மட்டுமே வந்திருக்கலாம். பிற வலை தளங்கள் மூலமா உங்க எழுத்துக்களை பெரிய வாசகர் கூட்டம் படிச்சிருக்கலாமே.

ப: என்னவோ ஆறுதல் சொல்றிங்க .சொல்லுங்க. நான் ஏதும் பெரிசா வெட்டி முறிக்கல. 2009 மே முதல் தினசரி ஒரு 4 மணி நேரத்தையும் 40 ரூபாயையும் இதுக்காக ஒதுக்கினேன். அந்த ரூபாய் கூட ஜோதிடக்கலை ஆர்வலர்கள் மூலமா ஆலோசனை கட்டணமா ரீ எம்பர்ஸ்மென்ட் ஆகிட்டு இருக்கு.

கே: குருஜி டாட்காம் கூட ஏதோ ஆஃபர் அனுப்பினாப்ல இருக்கு .
ப: ஏற்கெனவே அப்ளை பண்ணியிருந்தேங்க எல்லாம் இந்த விளம்பர விஷயமாதான். கூகுல் ஆட்சென்ஸ் எட்டாக்கனி. ஐஸ்வர்யா கிடைக்கலன்னா அயித்த மகளை பொண்ணு கேட்க போவலியா அது மாதிரி

கே:வாழ்த்துக்கள். சரி இப்ப சொல்லுங்க . ஒரு எளிய முயற்சில 75 ஆயிரம் வாசகர்களை சென்றடைந்திருக்கிங்க. இதை பத்தி உங்கள் கருத்தென்ன ?
ப: கேள்வியே தப்புங்க. 75 ஆயிரம் டிவைடட் பை 210 போட்டுக்கங்க. ஒரே வாசகர்/பதிவர் கூட்டம் மட்டுமே 210 நாட்கள்ள 210 தடவை பார்த்திருக்கலாமே..
ப: பாரதியார் கூட கணக்கு,பிணக்குன்னாரு கவிஞரா இருந்துக்கிட்டு கணக்குல கெட்டியா இருக்கிங்களே
கே: நான் கூட கணக்குல வீக்குதாங்க. மொத்தமா கோட்டை விட்டுரபோறோம்னு ஒரு முன்னெச்சரிக்கை. அந்த கணக்குப்படி சொல்றேன் நீங்க சொல்ற 75 ஆயிரம் ஹிட்ஸ் எல்லாம் பெரிய சாதனை ஒன்னுமில்லிங்க. . " நெஞ்சினிலே உறுதி வேண்டும். வாக்கினிலே தெளிவும் வேண்டும்"னாரு பாரதி. நெஞ்சுல உறுதி இருந்தாதான் வாக்குல தெளிவு வரும். தப்போ சரியோ எனக்குனு ஒரு கருத்தை வச்சிருக்கேன். இதுல இரட்டை வேடம், தசாவதாரமெல்லாம் கிடையாது. பரஸ்பரம் முரண்பாடுள்ள எத்தனையோ விஷயங்களை நான் என் வலைப்பூல விவாதிச்சிருக்கேன். இதுக்கு காரணம் எனக்குள்ளாற குழப்பம் கிடையாது. சுய நலம் கிடையாது. ஹிப்பாக்ரசி கிடையாது . நான் எதுக்கும் கமிட் ஆகலை. எதுலயும் ஃபிக்ஸ் ஆகலை . ஸோ ஹார்ட் வேர் கணக்கா ஆணித்தரமா என் கருத்துக்களை சொல்ல முடியுது.

கே: உங்கள் வாசகர்களை பத்தி என்ன நினைக்கிறிங்க?

ப: இதுல என் வாசகர் , உங்க வாசகர்னு முத்திரையெல்லாம் கிடையாதுங்க. இது மேய்ச்சல் காடு.புல் மணம் வீசினா நெருங்குவாங்க. ருசியா இருந்தா கொறிச்சு பார்த்துட்டு போயிருவாங்க. என் ப்ளாகை ஃபாலோ பண்ற 54 பேரை கூட நான் என் வாசகர்கள்னு சொல்லமாட்டேன். அவிக இன்னம் பத்து பதினாறு ப்ளாக்ஸையாவது ஃபாலோ பண்ணுவாங்கல்லயா?

கே: நீங்க ஒருபதிவுல சொல்லியிருந்திங்க . 2006 ஜூலைல இருந்து 2009 மே வரை என் ப்ளாகை பார்த்தவக 2006 பேர்தானு. 3 வருசத்துல 2006 பேர் ஏழரை மாதத்துல 80 ஆயிரம் பேரு எப்படி இந்த வித்யாசம் ?
ப: ப்ராக்டிக்கலா சொன்னா அப்போ தமிழ் மணம், தேன் கூடு விட்டா வேற அக்ரகேட்டர் கிடையாது. இப்போ அக்ரகேட்டர்ஸ் அதிகம். இன்னம் ட்விட்டர்,ஃபேஸ் புக், கூகுல் புக்மார்க்ஸ் இப்படி கச்சா முச்சானு இருக்கு.

கே: இருக்கு தலை ! அப்போ எல்லா வலைப்பூவுக்கும் ஏழரை மாசத்துல 80 ஆயிரம் ஹிட்ஸ் வந்திருக்கனுமே ! ஏன் வரலை

ப:அடப்பாவிங்களே ! வாயை பிடுங்கறிங்களேப்பா ! கொஞ்சம் மசாலா சேர்த்துக்கிட்டேன் தட்ஸால் . தெலுங்கானா பத்தி எழுத நினைச்சா வெறும் தெலுங்கானானு எழுதாம தெலுங்கானாவும் ஒரு பலான ஜோக்கும்னு எழுத ஆரம்பிச்சேன்.
கே: இது நம்ம கலாச்சாரம், பண்பாட்டுக்கு விரோதமான செயலில்லயா ?

ப: படுக்கையறைலருந்து வெளிய வரப்ப அறுத்து வச்சுட்டா வெளியே வரோம்

கே: எதை சொல்றிங்க?
ப: நீங்க எதை நினைச்சிங்களோ அதையேதான்
கே: அப்போ அவிழுத்து போட்டுட்டு வரலாம்ன்றிங்களா?
ப: அதுல ஒரு சிக்கல் இருக்கு. விறைச்சது, வீங்கினது எல்லாம் தெரிஞ்சுருமே
கே: உங்க கான்செப்ட்தான் என்ன?
ப: காம சூத்திரம் பிறந்த இந்த நாட்ல செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டு 90 சதவீதம் பேர் மனப்பிளவுக்கு ஆளாகி அவங்க கண்ணதாசன் சொன்னாப்ல (ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது என்பதடா) அவஸ்தை படறாங்க. நான் ஓஷோ உட்பட என் முன்னோடிகள் சொன்ன விசயங்களை ஞா படுத்திக்கிட்டிருக்கேன் தட்ஸால். கொஞ்சம் மசாலா சேர்த்து வியாக்யானம் பண்ணிக்கிட்டிருக்கேன்.
கே: உங்க எழுத்துக்களோட நோக்கம் ?
ப: எண்ணம் போல் மனம் . மனம் போல் வாழ்வுன்னாங்க. எண்ணம் பிளவு பட்டு, மக்களின் மனோசக்தி சிதறி நினைக்கிறது ஒன்னு, சொல்றது ஒன்னு, செய்யறது ஒன்னு, செய்ததா சொல்லிக்கிறது வேறொன்னு இந்த நிலை மாறனும். இதுக்கு ஆதி காரணம் செக்ஸ் செக்ஸ் குறித்த பிரமைகளை அகற்றி, விழிப்புணர்ச்சி ஊட்டனும். முதற்கண் எண்ணம் சீராகனும். அப்போ ஆட்டோ மெட்டிக்கா செயலும் சீர்படும்
கே: நீங்க புதுசா என்ன சொல்ல விரும்பறிங்க?
ப: என் முன்னோடிகள் சொல்லிவச்சதை மறந்து தொலைச்சுராதிங்கப்பானு சொல்ல விரும்பறேன்.
கே: நீங்க கனவு காணும் நவ இந்தியா பற்றி சொல்லுங்க
ப: நான் மட்டுமில்லிங்க. மனிதாபிமானம் கொண்ட எவனாச்சும் தன் தாய் நாட்டை பத்தி கனவு கண்டா அந்த தேசத்துல மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இருக்கும், உணவு,உடை,இருப்பிடம் ஆகிய மூன்றையும் தரத்தக்க கவுரவமான வேலை/தொழில் வாய்ப்பு இருக்கும் நான் இந்த லிஸ்ட்ல நான் அடிஷ்னலா செக்ஸையும் ஒரு அடிப்படை உரிமையா சேர்க்கனும்னு விரும்பறேன்.
கே: ஏன் நீங்க செக்ஸுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் தர்ரிங்க?
ப: முக்கியத்துவம் தர்ரது நானில்லிங்க இயற்கை. அது உயிர்களுக்கு கொடுத்துள்ள கடமைகள் ரெண்டு. ஒன்னு உயிர் வாழறது .ரெண்டு இனப்பெருக்கம் செய்யறது.
மேற்படி ரெண்டு கடமைகள்ள இருந்து மனித இனம் இயற்கை மனித இனத்தை கைவிட்டுவிடப்போவது ஷ்யூர் ! இப்போ பெருகி வரும் தற்கொலைகள், ஆண்மை குறைபாடுகள், மலட்டுத்தன்மை எல்லாம் இதுக்கு ஒரு அறிகுறி மட்டுமே

அதை நம்ம சனம் அதை மறக்கனும்/மறுக்கனும்னு முயற்சி செய்து மறந்துட்டதா பிரமிச்சு 24 மணி நேரம் அதே நினைப்போட கிடக்காங்க. ராட்சர்களை சாமி வதம் பண்றதுக்கு முன்னாடி அவிக வித விதமான ரூபத்துல வந்து யுத்தம் பண்றாப்ல உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் பண வெறியா,வன்முறையா, அதிகார வெறியா கிளம்பி ஹ்யூமானிட்டிய வதம் பண்ணிக்கிட்டே இருக்கு. செக்ஸ் ஒன்னும் ஐ.பி.சி படி கூட குற்றம் கிடையாது.

ப: எப்படி சொல்றிங்க ?
கே: சமீபத்துல ஒரு வழக்குல சுப்ரீம் கோர்ட் கேட்டிருக்கு "பாலியல் தொழிலை சட்டத்தோட துணையோட தடை பண்ண முடியலன்னா அதை லீகலைஸ் பண்றது பத்தி யோசிக்கக்கூடாது"னு. ஆனா ஜஸ்ட் ட்யூ டு ஹிப்பாக்ரசி மெஜாரிட்டி ஆஃப் தி பீப்புல் வாய் வார்த்தையா இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டே , குற்ற உணர்ச்சியோட அனுபவிச்சிக்கிட்டோ , இல்லை வாய்ப்பு கிடைக்குமானு ஜொள் விட்டுக்கிட்டோ வித விதமான காம்ப்ளெக்ஸுகளோட நாறிக்கிட்டு கிடக்காங்க . இதனால நாட்டு வளர்ச்சி பாதிக்கப்படறதோட , அரசாங்கத்தோட,மக்களோட ரெவின்யூ, நேரம், சக்தி வீணா போகுது.
கே: அதுக்காக விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கறது நம்ம பாரத பண்பாடுக்கு விரோதமா தோணலியா?
ப:ஏங்க பெண் குழந்தைகளை படிக்க வைக்கிறது கூட நம்ம பாரத பண்பாடுக்கு விரோதமாதான் இருந்தது. வயசுக்கு வந்த பிறகு கல்யாணம் பண்றதும், அவ தாலியறுத்தா உடன் கட்டையேறாம இருக்கிறதும் ,மறுமணம் பண்றதும் கூட நம்ம பாரத பண்பாடுக்கு விரோதமாதான் இருந்தது . இன்னும் சொல்லப்போனா விபச்சாரத்துக்கு ஒரு வித சமூக,அரசியல் அங்கீகாரம் கூட நம்ம பாரத பண்பாட்ல இருந்திருக்கு. அதை அந்த காலத்துல மிஸ்யூஸ் பண்ணது உண்மைதான். அதை வமிசா வழியாக்கினதும் உண்மைதான். ஆனால் இப்போ இன்னி தேதிக்கு நம்ம ஜன நாயக அமைப்பு, முக்கியமா மீடியா பவர் ஃபுல்லா இருக்கு. இப்போ விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் தரப்பட்டால் அது மிஸ் யூஸ் ஆக வாய்ப்பே இல்லை. ஒரு வேளை எங்கனாச்சும் பீகார், உ.பி மாதிரி இடத்துல நடந்தாலும் மீடியா வெளிச்சத்துக்கு கொண்டு வந்துரும். ரெக்டிஃபை பண்றது சுலபம்.
கே:சரிங்க முருகேசன் வெறுமனே விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வந்துட்டா நவ இந்தியா பிறந்துருமா என்ன?
ப:அதுக்குதானே ஆப்பரேஷன் இந்தியா 2000 வச்சிருக்கேன். பிரதமர் மக்களால் நேரடியா தேர்ந்தெடுக்கப்படுவார். மும்முனை போட்டி வந்தால் மக்கள் தொகைல 52 சதமா இருக்குற பி.சி,,எஸ்.சி, எஸ்.டி. மைனாரிட்டி வகுப்புகள்ள பாதி பேர் ஒத்துமையா வாக்களிச்சா கூட இந்த 52 சதத்துக்கு அநுகூலமான பார்ட்டி பி.எம். ஆக வாய்ப்புண்டு. அப்புறம் 10 கோடி அன் எம்ப்ளாயிடை வச்சு ஸ்பெஷல் ஆர்மி ஃபார்ம் பண்ணனும். நதிகள் இணைப்பு நடக்கனும். விவசாயிகள் கூட்டுறவு சங்கம் ஏற்படனும். விவசாய நிலங்கள் லீஸ் அடிப்படையில வி.கூ.சங்கத்துக்கு தரப்பட்டு கூட்டுறவு பண்ணை விவசாயம். தற்போதைய கரன்சி ரத்து.. இப்படி நிறைய இருக்குங்க..

கே: இதெல்லாம் நல்லாதான் இருக்கு .இந்த விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம்தான் சரியில்லே
ப: இது எப்படியிருக்குன்னா வீடெல்லாம் நல்லாதான் இருக்கு இந்த கக்கூஸுதான் சரியில்லேங்கிறமாதிரி இருக்கு. வீடு சுத்தமா இருக்கனும்னா அதுவும் இருக்கனுங்க
கே:எப்படியோ ..உங்க லட்சியபாதைல தொடர வாழ்த்துக்கள்

Friday, December 25, 2009

கவர்னர் பவனில் காமக்களியாட்டம்



எந்த காரணத்துக்காக நான் விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு குரல் கொடுத்து வந்தேனோ அது நடந்தே விட்டது. ஆந்திர கவர்னர் நாராயண் தத் திவாரியின் காமக்களியாட்டங்களும், அதன் பின்னான பேரங்கள், பேரங்களுக்கு பின்னான எம்.பிக்கள் என்று எல்லா விவகாரங்களும் வெளிவந்துவிட்டன.

கவர்னர் பவனுக்கு தினசரி கில்மா பார்ட்டிகள் வந்து , தங்கி தாத்தா கழுத்தில் தொங்கி போயுள்ளன. கீழே வி.ஐ.பி விசிட்டர்கள் மேலே ஓடி விளையாடு தாத்தா பாணியில் 83 வயதுள்ள சுதந்திர போராட்ட வீரரான என்.டி.திவாரி கில்மா பார்ட்டிகளுடன் ஜல்சா. உத்தாரஞ்சலில் இருந்து தில்லி ஆந்திரா பவனுக்கு பலான பார்ட்டிகளை அனுப்பி வைக்க ஒரு நெட் வொர்க் . ஆந்திராபவ‌னிலிருந்து கிளிகளை கவர்னர் பவனுக்கு அனுப்பி வைக்க ஒரு நெட் வொர்க்.

இங்கே கவர்னர் பவன் வளாகத்தில் பி.எம், ப்ரசிடென்ட் வந்தால் தங்கக்கூடிய கஸ்ட் ஹவுசில் சரோஜா தேவி கதை தனமான பஜனைகள்.விஷயங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. பட்சிகளை கஸ்டடிக்கு கொண்டு வந்து மசாஜில் ஆரம்பித்து கண்ட கருமங்களை அரங்கேற்றி அந்த கருமங்களை வீடியோவில் பதித்து பார்த்தும் மகிழ்ந்துள்ளனர்.

இவை தான் ஒரு தனியார் சேனலுக்கு கிடைத்து நேற்று டமால் ஆகிவிட்டது. மேற்படி வீடியோக்களை வைத்து ப்ளாக் மெயிலும் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்ப‌ட்ட ஒரு 7 மாத கர்பிணியும், 18 வயது பெண்ணும் மேற்படி தனியார் சேனலை அணுகி தங்கள் "வயிற்றெரிச்சலை" கொட்டி ஃபோட்டோஸ் & வீடியோக்களை கொடுத்துள்ளனர்இந்த ஸ்டோரி வெள்ளிக்கிழமையன்று ஒளிபரப்பாகும் என்று (மங்களகரமான நாள்) அதே சேனலுக்கு சொந்தமான தினசரியில் பேனர் செய்தி வெளியானது. ஸ்டோரியும் ஒளிபரப்பாகி ஆந்திர மானிலத்தின் மானம் விர்ரென்று பறந்து தற்போது சந்திர மண்டலத்தில் பறப்பதாக கேள்வி.

கேள்விகள்:
பி.எம், ப்ரசிடென்ட் தங்க வாய்ப்பிருக்கும் கஸ்ட் ஹவுசில் இந்த கருமாந்திரங்களை அரங்கேற்றியுள்ள நிலையில் , ஹைதராபாத் டெர்ரரிஸ்டுகளின் ஹிட்லிஸ்டில் உள்ள நிலையில் இவர்கள் பிக் அப் செய்து வரும் குட்டிகள் ஒரு டைம் பாமை ஹேண்ட் பாகில் கொண்டுவர எத்தனை நேரமாகும், அவற்றை பி.எம், ப்ரசிடென்ட் தங்கும் நேரம் பார்த்து ரிமோட்டில் வெடிக்க வைக்க எத்தனை செகண்டாகும்.

ஏற்கெனவே ஒரு இளைஞர் திவாரிதான் என் அப்பா என்று கோர்ட்டு படியேறிய போதே ஒரு டி.என்.ஏ டெஸ்டுக்கு இந்த பாடாவதி கோர்ட்டுகள் ஒரு உத்தரவு கொடுத்திருந்தால் கதை அப்போதே கந்தலாகியிருக்குமே.

இப்போதும் கூட மேற்படி ஸ்டோரி டெலிகாஸ்ட் ஆகிக்கொண்டே இருக்கும்போதே ஹவுஸ் மோஷன் கமிட்டி மூலம் இன்டிரியம் ஆர்டர் கொடுத்து டெலிகாஸ்டை தடுத்து நிறுத்தியுள்ளது கோர்ட்டு.

செக்ஸ் பவர் குறைந்தால் கேரக்டர் டமால் !
இதென்னடா புது கரடி என்று தலை மயிரை பிய்த்துக்கொள்ளாதீர்கள். இது அக்மார்க் சத்தியம். குழந்தையின் பால் நிர்ணய ஜீனும், கேரக்டரை நிர்ணயிக்கும் ஜீனும் ஒன்றேவாம். இது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. மனிதனில் இருப்பது ஒரே பவர் அது செக்ஸ் பவர். நீங்கள் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டாலும், உடலுறவை கற்பனை செய்தாலும், ஓவியம் வரைந்தாலும் ஒரு பதிவை தட்டச்சினாலும் அதற்கு துணை புரிவது செக்ஸ் பவர் ஒன்றே.

அதன் உத்தேசம் தன் இருப்பை உறுதி செய்தல் (கொல்லுதல் ,கொல்லப்படுதல் மூலமும் இருப்பை உறுதி செய்யலாம். நிறைய முன்னாள் மந்திரிகள் செத்தால் தான் அவர்கள் இத்தனை நாள் உயிருடன் இருந்ததையே அறிகிறோம்) அல்லவா சக உயிருடன் தொடர்பு கொள்ளுதல், அவ்வுயிருடன் இரண்டற கலத்தல் , படைத்தல், (இனப்பெருக்கம்) எக்ஸ்பேண்ட் ஆதல் (விரிவாக்கம், பரவுதல் ) மேலும் இப்படைப்பின் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான அமீபா. அன்று ஓருயிர் ஓருடலாக இருந்த உயிர் சக்திதான் குரங்கானது, மனிதனானது , ஆணானதுபெண்ணானது. ஓருடல் ஓருயிராக இருந்த போது இன்செக்யூரிட்டி இல்லை, க‌ம்யூனிகேஷன் ப்ராப்ளமில்லை, தூரமில்லை, காலமில்லை.

அந்த நி..ம்...மதியான சூழல் ஒவ்வொரு உயிரின் அடிமனதிலும் பத்திரமாக இருக்கிறது. அதை மீண்டும் அடைய ஒரே வழி இந்த உடலை உதிர்த்தல் (அதற்காக தான் கொலை எண்ணம், தற்கொலை எண்ணம்) அல்லது செக்ஸ். செக்ஸில் என்னதால் இணைப்பு சில நிமிடங்களே ஆனாலும் உச்சம் பெறும்போது குட்டி மரணம் சம்பவிக்கிறது. காலச்சக்கரம் நின்று போகிறது. அதுவும் ஒரு மரணமே. ஒரே எலக்ட்ரானிக் பொருளில் ஆன் ஆஃப் ஸ்விட்ச் இருப்பது போல் மனிதனிலும் வாழ வேண்டும் என்ற துடிப்பு இருப்பது போலவே சாக வேண்டும் என்ற துடிப்பும் இருக்கிறது.இதெல்லாம் ஜஸ்ட் செக்ஸ் மூலமே நிறைவேறி விடுகின்றன‌

மேற்படி காரணங்களால் ஒரு மனிதன் செக்ஸில் ஈடுபடுகிறான். எப்போது செக்ஸ் தடை செய்யப்படுகிறதோ ? எப்போது செக்ஸ் பவர் குறைகிறதோ டோட்டலாக அவனது/அவளது கேரக்டரே டமால் ஆகி கோழை வீரனாகிறான், வீரன் கோழையாகிறான், சுதந்திர போராட்ட வீரன் காமாந்தனாகிறான்.

கவர்னருக்கு தெரியாதா? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற ரீதியில் தன் அந்தரங்கம் வெளிச்சத்துக்கு வந்தே தீரும் என்று தெரியாதா? இது தற்கொலை முயற்சிதானே.

செக்ஸில் செலவழிந்து முடிந்துவிடாத க்ரியேட்டிவிட்டி இருப்பவர்களுக்கு எக்ஸ்பேண்ட் ஆகும் வெறி இருக்கும் . அவரை முதல்வராகவே விட்டிருந்தால் இந்த அளவுக்கு போயிருக்க மாட்டார் என்பது என் கணிப்பு. இப்படி பார்த்தால் ஓவர் பவர் ஃப்ளோ. அதை செலவழிக்க வழியில்லை. ( தீவிர அரசியிலில், வியாபார போட்டியில் இருப்பவர்களுக்கு செக்ஸ் பவர் நாளாவட்டத்தில் குறைந்தே போகும் தெரியுமோ?)

இந்தியாவில் விபசாரத்துக்கு சட்ட அங்கீகாரம் இருந்திருந்தால் மானிலத்தின் மானம் மரியாதை, தனது மரியாதைக்குரிய கடந்த கால சரித்திரம் (சுதந்திர போரில் பங்கு) ஆகியவற்றை பணயம் வைத்து, பி.எம், ப்ரசிடென்ட் ஆகியோரின் உயிரை பணயம் வைத்து திவாரி இந்த கேவலமான செயலுக்கு இறங்கியிருக்க வேண்டாமே.

வெறுமனே இப்படிப்பட்ட பெண்களை சப்ளை செய்து சாதிக்கப்பட்ட காரியங்கள் எத்தனை? இந்த நெட் வொர்க்கில் இருக்கும் கிழவாடிகள்,
மக்கள் தலைவர்கள் எத்தனை பேர்? இதெல்லாம் வெளியே வருமா ?

அல்லது இதெல்லாம் மலச்சிக்கல் உள்ளவன் வெளியேற்றிய வாயுதானா?

ஷிட்.










Monday, December 7, 2009

பாலியல் தொழிலுக்கு அனுமதியால் கிட்டும் பயன்கள்

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதலால் நன்மைகள்
1. நாளிதுவரை பாலியல் தொழிலில் உள்ளோரின் இழி நிலை மாறும். அவரை நாடுவோர் நிலையும் மாறும். க்வாலிட்டி சர்வீஸ் !

2.அவர்கள் ஈட்டும்  பணம் அவர்களையே சேரும். இப்போது நடப்பது போல் போலீஸ் மாமாக்கள், போலி டாக்டர்கள் ,வாய்தா வக்கீல்கள் , மாமாப்பயல்களை சேரா.

3.அவர்தம் உடல் நலம் காக்கப்படும். ( நாடுவோர் நலமும் நாடப்படும்) இன்ஷியூரன்ஸ் துறையும் செழிக்கும். அவர் தம் சேமிப்பு பெருகும். மறைமுகமாக அரசின் நலதிட்டங்களுக்கும் நிதி கிடைக்கும். (குடலை அரிக்கும் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் நிதியை விட மக்களிலான மிருகத்தை விலங்கிடும் இந்த தொழில் மூலம் கிட்டும் பணம் நாணயமானதே

4.சிறப்புபயிற்சி அளிக்கப்பட்டால் நோய் தடுப்பு, எய்ட்ஸ் கண்ட்ரோல் சாத்தியம். மேலும் செக்ஸ் கல்வியும் (ப்ராக்டிக்கல்ஸ்) சாத்தியமே

5.ஆண் பெண் நட்பிலான பெரும் தடைக்கல்லாக இருக்கும் உடலியல் ஈர்ப்பு மாயமாகும். ( மூத்திரம் முட்டும்போது எப்படி இயல்பாக பழக மூடியாதோ அதைவிட வீரியம் புரளும்போது பெண் நட்பு சாத்தியமே அல்ல. சாத்தியமானால் அது இரட்டை வேடம். மன நோய்க்கே வழி வகுக்கும்)

6. திருமணங்கள் மேலும் தாமதிக்கும். சனத்தொகை குறையும்.

7. அதே சமயத்தில் சுய இன்பம் (கொரில்லாவிடமிருந்து வந்த பழக்கம் இது) ஓரினப்புணர்ச்சி, கள்ள உறவுகள்  இத்யாதி குறையும்

8.உடலுறவு சாத்தியமில்லை என்ற ஒரே காரணத்தால் சிதறிவிடக்கூடிய திருமண உறவுகள் தொடரும்

9.வெறுமனே உடலுறவுக்காக மணமுடிக்கும் பேர்வழிகள் திருமண நிறுவனத்துக்குள் வாரார்

10.வன் முறை குறையும் (உள்ளடக்கிய காமமே வன்முறையாகிறது)

11. நாடு கடந்த தீவிரவாதத்துக்கும், உள் நாட்டு தீவிரவாதம், கள்ளக்கடத்தல் இத்யாதிக்கு ஆள் பிடிப்பது கஷ்டமாகிவிடும். ( மனிதன் என்ன செய்தாலும் அதற்கு அவனை ஊக்குவது கொல்லனும், கொல்லப்படனும் என்ற 2 கோரிக்கைகளே. அவை செக்ஸில் நிறைவேற கூடியவை. எனவே அவன் செக்ஸிலேயே சாவான் (!), கொல்லுவான்

12. குற்றவாளிகள், தீவிரவாதிகள் பாலியல் தொழிலாளர்களை நாடும்போது அவர்கள் குறித்த தகவல்கள் அரசை எட்ட வாய்ப்பு. ( வாராந்திர மருத்துவ பரிசோதனை, இலவச சிகிச்சையின் போது )
13.வரதட்சிணை கொடுமை ஒழியும் ( உனக்கு வ.தட்சிணை வேணம்னா ஒரு வருசம் ஒர்க் பண்ணா போதும் என்று மிரட்ட முடியும்)

14.ஆண் பெண் சமம் என்ற நிலை ஏற்படும். ஆண்கள் மடி வற்றிய மாடுகளாய், காயடிக்கப்பட்ட நாய்களாய் திரிவர். பெண் அச்சமின்றி சாலையில் நடக்க முடியும்
15.லாக்கப் டெத், என் கவுண்டர் கூட குறையும் ( போலீசாரும் அவர்களை நாட வாய்ப்பிருப்பதால்)
16. திருமணத்துக்கு பின் நட்புகள் முறியா ( வந்தவன் என்னை ஏன் பார்க்கனும் என்ற மனைவியரின் புகார்கள் காரணமாய்)
17.
மக்கள் முக்கியமாய் இளைஞர்கள் இன்னும் ஒரு சுகத்தையும் காணலை எதிர்காலத்லயாவது எதுனா கிடைக்குமோ என்னவோ என்று அடங்கி வாழும் நிலை மாறும். "அது " இவ்ளதானா என்ற எண்ணம் துணிச்சலை தரும்.


17. மனதின் இரட்டை வேடம் முடிவுக்கு வந்து சுதந்திர பாவம் பெருகும், மனம் குவிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்

18.கூட்டுக்குடும்பங்கள் சிதறாது. உடலுறவுக்கான வாய்ப்புகள் / அதன் தரம்/ அதன் ஆழம் பாதிக்கப்படும்போது குடும்பங்கள். சிதறுகின்றன‌

19. கட்சிகள் உடையா .. (கர்னாடகாவில் போல்)

20 ஆட்சிகள் கவிழா ( ஆந்திரத்தில் போல்)

21.அரசியலி அந்தப்புற  பெண்களின்  என்ட்ரி தடுக்கப்படும் உம்; ஜெயலலிதா, மாயாவதி

Friday, November 20, 2009

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம்

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வ‌ழ‌ங்குவ‌தால் ஏற்ப‌ட‌க்கூடிய‌ ந‌ன்மைக‌ளை பார்ப்போம்.
1.உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்களே வ‌ன்முறையாக,அதிகார வெறியாக, பண பித்தாக வெடிக்கின்ற‌ன. எனவே இவை யாவும்குறையும்.

2.ம‌னித‌ர்க‌ள் ப‌ல்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டு வேலைக‌ளைத்தான்.1.சாத‌ல் 2.சாகசடித்தல் .இவை இர‌ண்டுமே செக்ஸில் சாத்திய‌மாவ‌தால் ஸ்தூலமான கொலைகள், தற்கொலைகள், மறைமுக, தவணை முறை கொலை, தற்கொலைகள் குறையும்

3.செக்ஸை மீண்டும் மீண்டும் அடைய மனிதர்கள் எதற்கும் துணிகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் அதை குற்ற உணர்ச்சியுடன் அணுகி, அரைகுறையாக ஈடுபட்டு, ஆழத்துக்கு செல்லாது பாதி வழியில் திரும்புகிறார்கள். கவிஞனின் மனம் தான் முடிக்காத‌ கவிதையையே எண்ணி மருகுவது போல் மனித மனம் மீண்டும் மீண்டும் அதையே வட்டமிடுகிறது
இதனால் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் பங்களிப்புகள் குறைகின்றன.

4.மனிதனை நீ மிருகம் என்று ருசுப் படுத்துவது உயிர்பயமும்,பசியும்,
செக்ஸும் தான். மனிதன் மிருகமாகிவிட்டால் அவனை அரசு, சமுதாயம் ,மதம் இத்யாதி எதுவும் கட்டுப் படுத்த முடியாது.


5.ம‌னித‌ருக்குள் இருப்ப‌து ஒரே ச‌க்தி. அது பாலிய‌ல் ச‌க்தி. பாலிய‌ல் ச‌க்தியே ப‌டைப்பு ச‌க்தியாக‌வும்,வ‌ன்முறையாக‌வும், ப‌ண‌,அதிகார வெறியாக‌வும்,யோக‌ச‌க்தியாக‌வும் வெளிப்ப‌டுகிற‌து. அது மேனோக்கி பாய்ந்தால் (ஸ்தூலமாக அல்ல உன்னதங்கள் நோக்கி என்று புரிந்துகொள்ளுங்கள்) அது யோகிக் பவர். கீழ் நோக்கி பாய்ந்தால் அது செக்ஸ் பவர்.

6.மேனோக்கியா, கீழ் நோக்கியா (எல்.ஜி. இல்லையா) என்பது கேள்வியல்ல. முதற்கண் அந்த சக்தி அசைய வேண்டும் எதையோ நோக்கி பாய வேண்டும். அது அசையவோ,பாயவோ துடித்துக்கொண்டே இருக்கும். தண்ணீரை அழுத்தி சுருக்க முடியாதென்ற பாஸ்கலின் விதி தெரியுமல்லவா? அதை அழுத்தி வைத்தால் வெடிக்கிறது. சிலர் ரேப்புகிறார்கள், சிலர் பணத்தை துரத்துகிறார்கள்

6.ம‌னித‌ர்க‌ள் எது செய்தாலும் அதை தூண்டுவ‌து செக்ஸ்தான். அத‌ன் பின் இருப்ப‌து செக்ஸ்தான். ப‌ண‌ம்,புக‌ழ்,ஒழுக்க‌ம்,துற‌வு,தியாக‌ம் எத‌ன் பின்னும் இருப்ப‌து செக்ஸ்தான். பொத்தி பொத்தி வைத்து அவனவன்/அவளவள் ஆய் போக ஒதுங்கறச்ச கூட தப்பு பண்ணிட்டு கண்ட நோயை வாங்கி/கொடுத்து நாறிப்போனது ஒரு பக்கம், அதால கொலை/தற்கொலை மறு புறம் , இன்னொரு பக்கம் பார்த்தா அடுத்த தலைமுறை ? அதன் ஆரோக்கியம் (உடல் மனம் ) .

உதவாத விசயங்கள், பிரிலிமினரி ஃபேக்ட்ஸ்...

1.பெண்களுக்கு தாயே மாதாந்திர விலக்கின் போது சுத்தப்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதால் தேவையற்ற ரோமங்களை நீக்கிவிடு என்று எந்த தாயாவது கூறியிருக்கிறாளா ? இல்லை .

2.இரவில், தூக்கத்தில் கண்ட கனாவின் பலனாய் தான் தன் ஜட்டியில் போட்ட மேப் காரணமாய் அரண்டு போன பையனை " தம்பி அதெல்லாம் ஒன்னுமில்லடா அணை நிரம்பி வழியறமாதிரி தான் என்ரு எந்த தகப்பனாவது கூறியிருக்கிறானா ? இல்லை

காரணம் என்ன ஹிப்பாக்ரசி .அவள் வயிற்றில் வாங்கி கொண்டு வந்துவிட்டாலோ ? இவன் கொனேரியா, சிஃபிலிஸ் வாங்கிக்கொண்டு விட்டாலோ வாயிலும் வயிற்றிலும் அடித்து புலம்புவது . தேவையா /


ஆணுறை க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌ இந்த‌ யுக‌த்தில் கூட இளைஞர்களும்,யுவதியரும் தாம் பருவமடைந்த பிறகும் ஏறக்குறைய இருபது வருடங்கள் தங்கள் உறுப்புகளை சிறு நீர் கழிக்க மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று நினைப்பது ம‌டிச‌ஞ்சிதனம் மட்டுமல்ல. முட்டாள் தனம். ப‌த்தாம்ப‌ச‌லித்த‌ன‌ம்.

இது அவர்களை மன நோய்களுக்கு ஆளாக்குமே தவிர, தகாத உறவு, கள்ள உறவு, சுய இன்பம் இத்யாதிக்கு துரத்துமே தவிர ஒரு இழவும் நடக்காது.

என‌வே பாலிய‌ல் தொழிலுக்கு ச‌ட்ட‌ அங்கீகார‌ம் வ‌ழ‌ங்கிவிட்டால் செக்ஸ் என்ப‌தை மிக எளிதாக மாண‌வ‌,மாண‌விய‌ர் க‌ட‌ந்துவ‌ந்துவிடுவார்க‌ள்.

அதில் ஈடுபட்டால் வரும் தீமைகளை விட ( வித் அவுட் காண்டோம்) அதை நினைப்பதால், அதை பேசுவதால் / பேச முடியாததால் வரும் தீமைகள் அதிகம்.

பெரியவர்கள் ஹிப்பாக்ர‌ட்டுக‌ளாய் வாழ்ந்து இளைய‌த‌லைமுறையை ப‌லி கொண்ட‌து போதும்.

இப்போதாவ‌து ய‌தார்த்த‌வாதிக‌ளாகி நேர்மையுடன் சிந்திப்போம். 40 வ‌ய‌துவ‌ரை இளைய‌ த‌லைமுறையை செக்ஸ் த‌விர‌ ம‌ற்ற‌ ச‌ங்க‌திக‌ளை யோசிக்க‌விடாம‌ல் செய்த‌து போதும். இனியாவ‌து புதிய‌ இளைய‌ பார‌த‌த்தை ப‌டைப்போம்

மேலும் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதால். நிறைவான செக்ஸுக்கு வாய்ப்பில்லாத போலீசார்,ரவுடிகள், குட்டித்தலைவர்கள் கூட பலன் பெறுவார்கள். லாக்கப் டெத் குறையும், குற்றமும் குறையும் . அரசியலில் ஊழல் கூட குறையும்

மனிதன் பணம் சம்பாதிப்பதே உள்ளூற அதை பலான விசயத்துக்கு பயன்படுத்தலாம் என்ற ஊமை எண்ணமே என்று மனோதத்துவம் கூறுகிறது

Thursday, November 19, 2009

ஆழமான உடலுறவு மூலம் உலக அமைதி

உலகம் இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. துருவபிரதேச பனி உருகி வருகிறது. க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் காரணத்தால் உஷ்ண நிலை பெருகிவருகிறது. போர் மேகங்கள் தலைக்கு மேலே சூழ்ந்திருக்கின்றன. இதற்கெல்லாம் தீர்வு ஆழமான உடலுறவே என்றால் சிலர் அடிக்கவே வருவீர்கள் என்று தெரியும் . இருந்தாலும் " நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று துணிவுடன் இந்த பதிவை இடுகிறேன். பெண் இந்த இயற்கையின் பிரதி. பெண்ணை புரிந்து கொண்டவன் நிச்சயம் அவளை பூசித்தே தீருவான். பெண்ணை புரிந்து ,பூசிப்பவன் அவளது மூல வடிவான உண்மை வடிவான இயற்கையை நிச்சயம் நேசிப்பான் பூசிப்பான்.

பெண்ணை புரிந்து கொள்வதை தடுப்பது உடலுறவிலான அதீத நாட்டமே. அந்த அதீத நாட்டத்துக்கு காரணம் அவன் உடலுறவில் ஆழமாக ஈடுபடாமையே. உடலுறவில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். இயல்பான பிரம்மச்சரியம் கைவரும். மனிதன் மிருகம். அவனிலான மிருகம் அமைதி பெற்றாலன்றி அவன் மனிதனாக தொடரமுடியாது. அது அமைதி பெறுவது ஆழமான உடலுறவில் மட்டுமே.


அவனிலான மிருகம் அடி மனதில் கை ,கால் கட்டப்பட்டிருகிறது. அந்த கட்டுக்கள் சட்டம், நாகரீகம் , இத்யாதியாக இருந்தால் அது டுபாகூர் கட்டு. எந்த கணமேனும் கட்டுக்கள் சிதறி மிருகம் பதறி வெளிவரும்.


இயற்கை மனிதனுக்கு இட்டுள்ள கட்டளை உயிரை காப்பாற்றிக்கொள்வதும், இனப்பெருக்கம் செய்வதுமே. இனப்பெருக்கம் கு.க. இத்யாதியால் கட்டுப்படுத்தப்படுவதால் அந்த சேதி ஜீன்களில் பதிவாகி தலைமுறைக்கு தலைமுறை ஆண்மை குறைந்து வருவது ஒரு புறம். நாற்பதில் திருமணம், மென்ஃபஸ் ஆரம்பித்த பிறகே திருமணம் இத்யாதி நிலைகளால் இயற்கையின் முதல் கட்டளையான உயிர் வாழ்வதையே உயிர்கள் மீறும் நிலை ஏற்படுகிறது. தற்கொலைகளில் அதிக சதவீதம் டீன் ஏஜர்ஸ், மற்றும் செக்ஸை அனுபவிக்கும் நிலையிலிருப்போரே.


இவை இரண்டும் இரட்டை மாதிரி செக்ஸுக்கு வாய்ப்பிருந்தால் தான் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் உணர்வு வலுப்படும். செக்ஸுக்கே வாய்ப்பில்லாத நிலையில்தான் தற்கொலை உணர்வுகள் ஏற்படுகின்றன. சுய இன்பம் கூட மனோதத்துவ அடிப்படையில் ஒரு தற்கொலை முயற்சியே. தன் சக்தியை, உயிரை தன் இன உறுப்பின் வழி வெளியேற்ற (அவனறியாதே) முயற்சிக்கிறான். தைரியமுள்ளவன் ஒரே தடவையில் சாகிறான். அது குறைவாய் இருப்பவன் தவணையில் தற்கொலை செய்கிறான். (ஸ்மோக்கிங், மது, போதை ஊசி,கஞ்சா , ஒரு தலை காதல், விலை மாதர் (சட்ட அங்கீகாரம், பயிற்சியற்ற) சகவாசம், தகாத உறவு கள்ள உறவு இதெல்லாம் தற்கொலை முயற்சிதான்)

சந்தோசத்தில் இருப்பவன் அடுத்தவரையும் சந்தோசப்படுத்தப்பார்ப்பான்.
துக்கத்தில் இருப்பவன் ? அடுத்தவரையும் துக்கப்படுத்திதான் பார்ப்பான்.
சிம்பிள் தர்க்கம் இது.

மனிதன் உடலுறவை ஆழமாய் அனுபவிக்கும்போது அவனுள்ளான காம்ப்ளெக்ஸுகள் தவிடு பொடியாகின்றன. மிருகம் அமைதி பெறுகிறது. பெண்ணின்பால்/ இயற்கையின் பால் நன்றி பொங்குகிறது. அவனால் சமுதாயமே பலன் பெறுகிறது.

இன்னொரு அதிர்ச்சி தரும் உண்மை என்னவென்றால் செக்ஸை ஆழமாக அனுபவிப்பவன் அதை பற்றி சிந்திப்பதே இல்லை. அது கிடைக்காதவன்/அதில் தோற்றவன் அதை சிந்திக்காமல் இருப்பதே இல்லை. மனித உடலில் இரண்டு மண்டலங்கள் உள்ளன. இனப்பெருக்க மண்டலம், ஜீரண மண்டலம் ஒன்று வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்வதில்லை.

"பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது" ஏனென்றால் அப்போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்துகொண்டிருக்கும். சப்போஸ் ஒருவன் செக்ஸ் இல்லை/செக்ஸில் தோற்றுவிட்டான் (எழுச்சி இன்மை, துரிதஸ்கலிதம் ) அவன் 24 மணி நேரம் செக்ஸை பற்றி சிந்திப்பான். அதே நேரம் சாப்பிடுவதை நிறுத்தமாட்டான். வயிற்றுக்கு போன உணவு செரிக்க ஜீரண மண்டலம் வேலை செய்யவேண்டும். இனப்பெருக்க மண்டலம்/அது குறித்த யோசனைகள் வேலை செய்யும்போது ஜீரண மண்டலம் வேலை செய்யாது. அப்போ என்ன ஆகும்?

உணவு செரிக்காது. அழுகும். கேஸ் ஃபார்ம் ஆகும்,அசிடிட்டி வரும் மலச்சிக்கல் வரும்,டோட்டல் பாடி காட் பாடி ஆகிவிடும்.(Ref: Sound Mind in Sound Body ) ஏற்கெனவே இருந்த ஓரளவு ஆண்மை கூட ஃபணால் ஆகிவிடும். உள்ளடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே / நிறைவேறாத செக்ஸ் எண்ணங்களே, செக்ஸ் வக்கிரமாக, கற்பழிப்பாக, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையாக,அதிகார வெறியாக, சேடிசமாக,மசாக்கிசமாக‌ ,மனோ வியாதியாக வெளிப்படுகிறது.

பெண்ணின் மீதான கோபம் ( இதுக்கு காரணம் இவன் இயலாமை) இயற்கையின் மீதான கோபமாக வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட நிலை பெண்ணுக்கு வரும்போது ? முன்னெல்லாம் அது பேய்,பிசாசு தொல்லையாக வெளிப்படும். இப்போது ? மாறிவிட்ட சமூக சூழலாம் வேசியாகிறாள், ஃப்ளிர்ட் ஆகிறாள் . ஒரே நேரத்தில் பத்து பேருக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து எவனோ ஆசிட் அடித்து விடுகிறான்.

இந்த லொள்ளெல்லாம் எதுக்குன்னுதான் நான் உடலுறவை பற்றி இவ்ள தூரம் எழுதறேன். "உருள் பெருந்தேருக்கு அச்சாணி அண்ணாருடைத்துனு வள்ளுவர் சொன்னாப்ல இந்த சின்ன விசயத்தால பெரிய பெரிய பிரச்சினைகளை ஏன் வரவிடனும்.

என்னைக்கேட்டால் ஒவ்வொரு தம்பதிக்கு கவுன்சிலிங் கொடுத்து ஆழமான உடலுறவுக்கு வழி செய்வது ரொம்ப கஷ்டம். எனவே செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு
(ஆண்,பெண் இரு பாலாருக்கும்) உயர்தரபயிற்சி கொடுத்து பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்கி விடலாம் .

இதனால் குற்றம்/செக்ஸுவல் குற்றங்கள்/ லஞ்சம் ஊழல்/அதிகார வெறி/வன்முறை/பிரிவினை வாதம்/தீவிர வாதம்/பிராந்திய வாதம்/ ஈவ் டீசிங் இத்யாதி எல்லாமே கட்டுப்படுத்தப்படும்.

செக்ஸ் ஒர்க்கர்ஸுடன் தொடர்பு கொள்ளும் ஆண் பெண்கள் ஆழமான உடலுறவு குறித்து விழ்ப்புணர்வை பெற்றால் ஆட்டோ மேட்டிக்கா தம்பதிகள் அனைவருமே ஆழமான உடலுறவை பெற வழி ஏற்படும்

ஒவ்வொரு நாடும் தன்னளவி இவ்வாறு அமைதி காணும்போது உள் நாட்டு பிரச்சினைகளில் இருந்து மக்கள் கருத்தை திசை திருப்ப போர்களை தூண்டும் அவசியமோ/ அவற்றில் ஈடுபடும் அவசியமோ இருக்காது.

உலக அமைதியே சாத்தியமாகிவிடும். என்ன சொல்றிங்க ?