Showing posts with label woman. Show all posts
Showing posts with label woman. Show all posts

Tuesday, September 21, 2010

ரசனை பெண்ணிலிருந்து தான் துவங்குது

ரசிக்க தெரிஞ்சாதான் வாழ்க்கை
ஆமாங்கண்ணா ரசிக்க தெரிஞ்சாதான் வாழ்க்கை. இல்லைன்னா அது மரணத்தை விட வேதனையதான் தரும். ஏன்னா வாழ்க்கைங்கறதே சினிமா ஸ்க்ரீன் மாதிரி. இது மேல என்னென்னமோ ஓடும். கடைசியில மிஞ்சறது பளிச்சிடும் சூப்பர் ரின்னின் வெண்மைதான்.

ரசிக்க தெரியனும், ரசிக்கனும், ரசிச்சதை பகிர்ந்துக்கனும் அப்பத்தான் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம். ரசிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டா எதை வேணம்னா ரசிக்கலாம்.  கோகுலத்துல கிருஷ்ணர் வீட்டு திண்ணைலருந்து ஒன்னுக்கடிக்கிறாராம். அப்ப கடைசி ட்ராப் அவரோட லுல்லாவுலயே நின்னுருச்சாம். அது கூட கவிஞர் கற்பனைல கவிதையா மலருது.

கமல் சினி ஃபீல்டுக்கு  போறேன்னப்ப அவிக அப்பா 3 கண்டிஷன் போட்டாராம். தம்மடிக்காதே ,தண்ணியடிக்காதே ,பொம்பளை கிட்டே போகாதே . மொத ரெண்டு கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்ட கமல் 3 ஆவது கண்டிஷனுக்கு மட்டும் ஒத்துக்கலியாம். அது இயற்கை அதை கட்டுப்படுத்த முடியாதுன்னாராம்.

அதுக்கு அவிக அப்பா ஒரு பெண் மலம் கழிக்க உட்கார்ந்திருக்கிற மாதிரி கற்பனை பண்ணிக்க பொம்பளை ஆசைய கண்ட்ரோல் பண்ணலாம்னாராம். அதுக்கு கமல் ஒரு செகண்ட் கண்ணை மூடி திறந்து "இல்லேப்பா அந்த ஆங்கிள்ள கூட என்னால ரசிக்க முடியுது" ன்னாராம்.

இன்னைக்கு ஒரு நண்பர் கிட்டே ஆத்மார்த்தமா பேசிட்டிருந்தப்ப ரசனைய பத்தி பேச்சு வந்து அதை ரெண்டா பிரிச்சேன். காம வயப்பட்டவனோட ரசனை வேறே. காமம் தீர்ந்தவன் ரசனை வேறே. காம வயப்பட்டவனை ஒரு கலைஞன் ரொம்ப ஈஸியா திருப்தி படுத்திரலாம். காமம் தீர்ந்தவனோட ரசனை உச்சத்துல இருக்கும் அவனை திருப்தி படுத்தறது கஷ்டம்னேன்.

ரெண்டு வகை மட்டுமென்னா ரெண்டு லட்சம் வகையா பிரிக்கலாம். லோகோபின்ன ருசி. ஆனால் ருசிங்கறது இருக்கனும். ( உடுப்பி ஹோட்டல் இட்லி,சாம்பாருக்கு நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலையற ருசியில்லிங்கண்ணா) . அப்பத்தான் ரசனை வரும்.

ரசனை இருந்தாதான் வாழ்க்கை ருசிக்கும். ரசனையில்லாத வாழ்க்கை மனிதனை மனிதனா தொடர அனுமதிக்காது. மேலும்  அவன் உடைக்குள்ள மறைஞ்சிருக்கிற மிருகம் எப்பவேணா தன்னை வெளிப்படுத்திக்கும்.

உயிர்களோட முழு முதற்கடமை உயிர் வாழ்தல். நுட்பமான அறிவிருக்கிறவனுக்கு பத்து பதினைஞ்சு வருசத்துலயே வாழ்க்கையோட அர்த்தமற்ற தன்மை புரிஞ்சு போயிரும்.

அவன் மரணத்தை பத்தி, செத்துப்போறத பத்தி யோசிக்க ஆரம்பிச்சுருவான். முட்டாள்கள்  கல்ப கோடி காலங்கள் வாழ்ந்தாலும் மரணத்தை பத்தி யோசிக்க மாட்டாய்ங்க.

மரணத்தை பத்தி யோசிக்காதவன் சரியான வாழ்க்கையை வாழவே முடியாது.

ரசனையில்லாத வாழ்க்கை மரணத்துக்கு சமம். மரணத்தை பத்தி சிந்திக்க கூட கொஞ்சம் புத்தி சாலித்தனம் வேணம். வாழ்க்கையை அரைகுறையாவாச்சும் வாழ்ந்திருக்கனும். அப்பத்தான் வாழ்க்கையோட அர்த்தமற்ற தன்மை அவனுக்கு உறைச்சிருக்கும்.

உயிர்களோட அடுத்த கடமை பரவுதல்,படைத்தல். ( இது ஆரம்ப நிலையில ,  ஸ்தூல நிலையில இருக்கும்போது அது செக்ஸாவும்  குழந்தை பிறப்பாவும் தான் முடியுது)  இந்த பரவுதல்,படைத்தலுக்கான துடிப்பும், இயற்கையின் கொடையும் செக்ஸுல தீர்ந்துபோகாம, குழந்தை பிறப்பால நீர்த்துப்போகாம இருந்தாத்தான் அது  படைப்பா வெளிப்படுது.

நீங்க ஒன்னை படைக்கும்போது நீங்க பரவுறிங்க. உங்க படைப்பு உங்களோட நீட்சித்தான்.  அது பரவும் போது நீங்களும் பரவுறிங்க. படைப்புக்கு அதிக சக்தி தேவை. அந்த சக்தி போதாத போது ரசனை பிறக்குது. நீங்க ஒரு கலையை ரசிக்கிறச்ச அந்த கலையில, படைப்புல  நீங்களும் ஒரு பார்ட் அண்ட் பார்ஷலாயிர்ரிங்க.

மகா வெடிப்பு காரணமா ஏற்பட்ட உஷ்ணத்தால இந்த கேலக்ஸியே  ஒரு பக்கம் விரிவடைஞ்சிக்கிட்டும், மறுபக்கம் அந்த உஷ்ணம் குறைஞ்சிக்கிட்டிருக்கிறதால  சுருங்கிக்கிட்டும் இருக்குனு சொல்றாய்ங்க.

இந்த இயற்கையின் மீனியேச்சரான  நீங்க  படைக்கும்போது  விரிவடையறிங்க. உங்களுக்குள்ள இருக்கிற ஈகோ சுருங்குது. ஒரு கலையை ,படைப்பை ரசிக்கும்போது அந்த படைப்புல பங்கெடுத்துக்கறிங்க. படைக்கிறதை விட ரசிக்கிறதுல உங்க ஈகோ பல மடங்கு சுருங்குது.  ஈகோ சுருங்க சுருங்க உங்களுக்கு படைப்போட இணைப்பு ஏற்படுது.

வாழ்க்கைய பத்தி பேசாம ரசனைய பத்தி பேசறிங்களேனு முணுமுணுக்கலாம். வாழ்க்கைங்கறதே ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி எதையுமே பிடிக்காத போயிர்ரதான்னு எங்கயோ படிச்சேன்.

வாழ்க்கைன்னா என்ன? பிறக்கறோம். சாகிறவரை இம்சைய அனுபவிக்கிறோம். ஸ்கூல்ல வாத்தியா இம்சை. வீட்ல அப்பன்,ஆயி, அண்ணனுங்க இம்சை, காலேஜ் போனா காதல் இம்சை.படிச்சு முடிச்சா வேலையில்லேனு இம்சை. வேலை கிடைச்சா  கண்ணாலம் ஆகலேனு இம்சை. ஆனால் பொஞ்சாதி இம்சை. பசங்க இம்சை  ,கிழவாடியாயிட்டா வாழ்க்கையே இம்சை.

ஒவ்வொரு இன்பமும் ஒரு துன்பத்துக்கான முன்னுரை தான்.  வாழ்க்கைங்கற ரயில் தாளி சாவுங்கற டெஸினேஷனை நோக்கித்தான் பயணிக்குது.

வாத்தியாரை ஒரு படத்துல போட்டு கழட்ட ஜீப்ல கூட்டிப்போவாய்ங்க. வாத்தியார் சிரிப்பாரு. வில்லன் கேட்பான் " சாக போறோமேனு பயமில்லையா?" அதுக்கு வாத்தியார் சொல்வாரு.  " நானிருக்கும் வரை மரணம் வருவதில்லை. மரணம் வந்த பின் நான் இருக்கப்போவதில்லை"இதானே நெஜம்.

ஆனால் நாம என்ன பண்றோம் எந்தெந்த இழவுக்கோ சாவோட முடிச்சு போட்ட வாழ்க்கையை மவுன ஊர்வலம் மாதிரி, இறுதி ஊர்வலம் மாதிரி  மாத்திர்ரம். தனிமை,ஏழ்மை, இருட்டு,அவமானம், தூரம்,காலம், நிராகரிப்பு இப்படி கண்டதையும் மரணத்தோட முடிச்சு போட்டு வாழ்க்கைய தொலைச்சுர்ரம். இதெல்லாம் மரணத்தோட நிழல்கள். நிழல் கூட பயமுறுத்துதுன்னா கேவலமா இல்லியா?

அட ..உங்களுக்கு புலின்னா பயம்னு வைங்க. அது ப்ராக்டிக்கல். ஒத்துக்க வேண்டிய விஷயம். அதைவிட்டுட்டு பூனைய பார்த்தா புலி ஞா வருது, எலிய பார்த்தா பூனை ஞா வருது. பூனைய நினைச்சா புலி ஞா வருதுன்னு இப்படி கண்டதுக்கும் பயப்பட ஆரம்பிச்சா இதை மனவியாதின்னுதானே சொல்லனும்.

இந்தமரண பயத்துலயும், மரணத்தோட நிழல்கள் குறித்த பயத்துலயும் வாழ்க்கைய தொலைச்சுர்ரம். மரணத்தோட மோதறதா நினைச்சுக்கிட்டு மரணத்தோட நிழல்களோட மோதறோம். இது ஒன்னுதான் வாழ்க்கையா?

தெலுங்குல வேட்டூரியோட பாட்டுவரி ஒன்னு ஞா வருது. " நோ கோக்க நச்சிந்தி.. நீ ரைக்க நச்சிந்தி .. கோக்கா ரைக்கா கலவனி சோட்டா சோக்கு நச்சிந்தி" இதுக்கு என்ன அர்த்தம்னா..........

உன் புடவை பிடிச்சிருக்கு, ரவிக்கை பிடிச்சிருக்கு. புடவையும் ரவிக்கையும் சேராத இடத்துல அழகு பிடிச்சிருக்கு.

நம்ம வாழ்க்கையை ரெண்டு பாகமா பிரிக்கலாம். ஒன்னு மரணத்தோட நிழல்கள் கிட்டே ஜெயிச்சுட்டாப்ல ஒரு ஃபீலிங் .அதனால சந்தோசம். ( மொத மொதலா ஹேர் டை போட்டப்ப கூட இந்த ஃபீலிங் வந்திருக்கும். முதுமைங்கறது மரணத்தோட நிழல் தானே)

ரெண்டு : மரணத்தோட நிழல்களோட மோதி தோத்து போயிர்ரது.  ஹேர் டை போட்டா முடி கொட்டுதுன்னு டை போடறத விட்டுர்ரது

இது ரெண்டையும் புடவை,ரவிக்கைன்னு வைங்க. இது ரெண்டுமல்லாதது கூட வாழ்க்கைல இருக்குங்கன்னா அதான் அழகு..அதான் ரசனை. அந்த ரசனையை ஸ்மெல் பண்ணலன்னா உயிரில்லாத புடவையையும் ,ரவிக்கையையும் மட்டும் ரசிச்சிக்கிட்டிருந்தா  அந்த குட்டியே இவன் ஏதோ சரவணா ஸ்டோர்ஸ்ல சேல்ஸ் மேன் மாதிரியிருக்குனு நினைச்சுருவா. புடவையும்,ரவிக்கையும் சேராத இடத்தை அதாவது  நிழல் யுத்தங்களுக்கு இடையிலான இடை வெளியை ரசிக்க கத்துக்கிடனும்னா.


மனிதன் மிருக நிலைக்கும், தேவ நிலைக்கும் இடையில இருக்கிறான். அவன் தேவனாகாட்டா ம..ரே போச்சு மிருக நிலைக்கு தாழ்ந்துராம இருக்கனும்.அதுக்கு ரசனை உதவுது. நீங்க எதை ரசிக்கிறிங்கங்கறது முக்கியம் இல்லை. ரசனை இருக்காங்கறது தான் முக்கியம். நான் கூட ஒரு காலத்துல ரஜினி ரசிகன் தான். கமலை தயிர் வடைன்னு கிண்டலடிச்சவன் தான். ஆனால்  நேத்து புஷ்பகவிமானம் ( பேசும் படத்தோட தெலுங்கு வெர்ஷன்) பார்த்துட்டு " நடிகண்டா"ன்னு கூவாத குறை.

ரசனையோட ஸ்பெஷாலிட்டியே என்னன்னா போக போக டெவலப் ஆயிட்டே இருக்கும். அதுக்காக நான் யதார்த்தத்தை தவற விட்டுர சொல்லலை. பெண்ணோட தொப்புளை பாற்கடல்ல ஏற்பட்ட சுழியா 1987ல  ஒரு நண்பர் வருணிச்சாரு. அதை பயாலஜிக்கலா பார்த்தா நாறும். அதுக்குன்னு பயாலஜிக்கலாவே பார்த்துக்கிட்டிருந்தா வாழ்க்கையே மீனிங்லெஸ் ஆயிரும்.

யாதார்த்தம் பாட்டுக்கு யதார்த்தம். அதையும் மீறியதா  ரசனை இருக்கனும். ரசனைன்னா வெறும் பெண்ணை ரசிக்கிறதில்லை. பெண் என்பவள் ஒரு ஸ்டார்ட்டிங் பாய்ண்ட். அதனோட தொடர்ச்சி இயற்கை மீதான ரசனை.

எத்தனாம் பெரிய கலைஞனுக்கும் ரசனை  பெண்லருந்து தான் துவங்குது. எத்தனை அடிமட்ட ரசனை கொண்ட கலைஞனுக்கும் அவன் ரசனை தீட்டப்பட்டு , ஒரு தினம் அவனுக்குள்ள இயற்கை மீதான  காதல் கருக்கொள்ளுது.  தேடல் துவங்குது.  தாளி அடையறமோ இல்லியோ அது வேற சமாசாரம் தேடலே இல்லேன்னா கிரிமினல் வேஸ்டு.

ரசனைக்கும் இதர ஃபேக்டர்ஸுக்கும் லின்க் இருக்கு. இல்லேங்கலை.ஆனால் ரசனைங்கறது  உங்க மைண்ட்ல என்டர் ஆயிட்டா உங்க சமூக நிலை,வயசு, பொருளாதார நிலை இப்படி எதுவும் உங்க ரசனையோட வளர்ச்சியை பாதிக்கவே முடியாது.

ரசனை எந்த அளவுக்கு வளருதோ அந்த அளவுக்கு இந்த வாழ்க்கை அர்த்தமுள்ளதா மாறும். பிறர் எதையெல்லாம் ( பணம்,பேர்,புகழ்,செக்ஸ்)  தங்கள் வாழ்க்கையா நினைச்சு அதையெல்லாம் பெற பதைச்சு,பதறி, துடிச்சு சாகிறாய்ங்களோ வாழ்க்கையையே தொலைச்சுர்ராய்ங்களோ இதையெல்லாம் உங்க ரசனைப்பூர்வமான வாழ்க்கைக்கு  தடைகள்னு உணர்ந்துக்குவிங்க.

அதுகளுக்காக பதைக்க மாட்டிங்க. வந்தா சரி இதுகளும் இவிகளுக்கு தேவைப்படுதேன்னு  பிறருக்காக  வச்சுக்கவும், வராட்டா விட்டது பீடைன்னு  நிம்மதியா இருக்கவும் உங்களால முடியும்.

நமக்கும் முன் வாழ்ந்த ஆண்டான்,அடிமைகளின் எண்ணங்கள் ஆகாய வெளியில் மிதந்து கொண்டிருக்கின்றன.

அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்திலிருந்து  அமுதமும் ஆலகால விஷமும்  நாளும் பொழிந்து கொண்டே இருக்கின்றன..

விஷம் எதையும் அரித்து,  துளைத்து  உட்புக  வல்லது. ஆனால் அமுதம் ?

உங்கள் மண்டை ஓட்டின் கனத்தால்  அல்ல மண்டை கனத்தால் அது  நிலத்தில் வழிந்து போகிறது.

ரசனை அதை லேசாக்குகிறது.

ரசிக்க கற்றுக்கொண்டால் மரணத்தை வெல்ல முடியா விட்டாலும் அதற்கு சொல்லலாம் ஹலோ !

Wednesday, June 16, 2010

மனைவியையே சுற்றி சுற்றி

அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு இந்த பதிவை கேள்வி பதில்வடிவத்துல தந்திருக்கேன். கூடவே செக்ஸ் பவர் அதிகரிக்கங்கற  வில்லங்க தலைப்புல வில்லங்கமில்லாம பொறுப்பா ஒரு பதிவையும் போட்டிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்கண்ணா

பாடாவதி பத்திரிக்கைகள்ல கூட "கேள்வி பதில்"னு ஒரு  பகுதி நிச்சயம் உண்டு. வாசகனுக்கு தெரியாததை ஆசிரியன் சொல்லிரப்போறது ஒன்னுமில்லை. பத்திரிக்கை தலையங்கத்துல ஹோல்சேலா சொல்ற மேட்டரை உடைச்சி உடைச்சி ரிடெய்லா சொல்ல கேள்வி  பதில் ஒரு சாக்கு. நம்ம ப்ளாக்ல என்னென்னமோ குரங்கு வேலையெல்லாம் பண்ணியாச்சு. கேள்வி பதில் இல்லன்னா எப்படி? அதனால நீங்க மென்டலா ப்ரிப்பேர் ஆற மாதிரி முதல்ல லேசான கேள்விகளுக்கும் பொறவு கனமான கேள்விகளுக்கும் பதில் கொடுத்திருக்கேன். இதுக்கான வரவேற்பை பார்த்து தொடர்ரதா ,விட்டுர்ரதா பார்க்கலாம்.

1.முதலிரவு?
கவிதை தொகுப்புகள் கழுதைகளுக்கு தின்னக்கொடுக்கப்படும் வேளை

2.கல்யாணம்?
இதுவரை கண்ணாலம் கட்டிக்கிட்டவங்க அவிக பெண்டாட்டிங்களை சேஃப் பண்ணிக்க பண்ற ஏற்பாடு.

3.மனைவி?
தெனாலிராமன் பூனைக்கு வச்ச கொதிக்கற பாலு. மேரீட் மென்னெல்லாம் பெண்கள்னாலே அலர்ராப்ல செய்துர்ர தெரஃபி

4..பெண்ணோட தொப்புளுக்கு சினிமால ஏன் இத்தனை ப்ராமினன்ஸ்?
இவன் தன் அம்மாவோட வயித்துல இருந்தப்ப ஃபுட் சப்ளை கொடுத்ததுல்லிங்களா? அந்த ஞா. பெண்ணோட மார்பு, தொப்புள், யோனி மேல இருந்து கவனத்தை திருப்ப முடியாதவனுக்கெல்லாம் மானசிக வயசு நாலு அஞ்சுக்கு மேல இருக்காது. ஹி இஸ் ஜஸ்ட் சைல்டிஷ். இம்மெச்சூர்ட்.  என்ன ஒரு வம்புன்னா இவன் உடம்பு வள்ர்ந்துட்டதால இவனோட செயல்பாடு அதுக்கடுத்த   ஸ்டேஜை கற்பனை பண்ணிக்குது வாய்ப்பு கிடைச்சா தக்ஜம். தட்ஸால்

6.என் நண்பன் மனைவியையே சுற்றி சுற்றி வருகிறான்?
உங்க மனைவிய  சுத்தி வராத வரை சேஃப். ( பெண்ணுக்கு ஆண் ஏன் தன்னை சுத்தி வரான்னு தெரியும். வாய்ப்பே கிடைச்சாலும் அவன் ஒரு ம..ரும் கிழிக்க போறதில்லன்னும் தெரியும். அவரு எந்தளவுக்கு சப்பை பார்ட்டியோ அந்த அளவுக்கு அவளுக்கு எரிச்சல்தான் வரும்.  நீங்க ஸ்தூலமா பார்க்கிற  பெண்ணோட கேரக்டரே பொய்.வெளி வேஷம். மேம்போக்கானது. அவளுக்குள்ள ஒரு தேவதையும் இருக்கிறா. ஒரு சாத்தானும் இருக்குது. அதுல எதை நீங்க தட்டி எழுப்பறிங்கங்கறதுலதான் உங்க வாழ்க்கையோட வெற்றி தோல்வியெல்லாம் அடங்கியிருக்கு) 

இனி கொஞ்சம் விரிவான பதில்களுடன் கூடிய கேள்விகள்:


1.கே: உனக்கு  22 எனக்கு 32 ன்னு ஒரு தொடரை ஆரம்பிச்சிங்க அதை அப்டியே டீல்ல விட்டுட்டிங்களே

ப: அதுவா அண்ணாத்த.. அது ஆரம்பத்துல நல்லாதான் டேக் ஆஃப் ஆச்சு. தேவையில்லாம அதுல அரசியலை கொண்டு வந்து டப்பிங் சினிமா ரேஞ்சுக்கு போயிருச்சு. எப்படியோ அதை ஒடைச்சி மாயாவுக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக்கெல்லாம் வரவச்சு பெண்டிங்ல வச்சிருக்கேன். சீக்கிரத்துல தொடரும்

2.கே: அது ஏங்க அதுக்குள்ள மைல்ட் ஹார்ட் அட்டாக் ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டிங்க

ப:நம்ம கேரக்டரும் வடிவேலு மாதிரி தான் எல்லாம் நல்லா போயிட்டிருக்கும் போது  எதையும் கண்டுக்க மாட்டோம். எதுனா நடக்க கூடாதது நடந்தாதான் " நல்லாத்தானே போயிக்கிட்டிருந்தது"ன்னு யோசிக்க ஆரம்பிப்போம். மாயா  நல்ல ஆரோக்கியத்தோட இருந்தப்ப முகேஷு அரசியல் சதுரங்கத்துலயும், கேங் வார்லயும் பிசி. மாயாவுக்கு அட்டாக் வந்த பொறவு முழிச்சுக்கறான்.

3.கே:சரிங்கண்ணா மேற்படி கதைய சனம் இத்தனை நாளு சகிச்சி படிக்க காரணம் என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்?

ப:வேறென்ன ஆண் பெண் உறவை பிரிச்சு மேஞ்சோமில்லை அதான்..

4.கே: நாட்ல எத்தனையோ பிரச்சினை சனங்க கழுத்தை நெறிக்கறச்ச இப்படி ஒரு  தொடர் எழுதிக்கிட்டிருக்கமேன்னு தோணலிங்களா?
ப: தோணினதாலதான் ப்ரேக் போட்டு வச்சிருக்கம்

5. கே: அப்ப ஏன் எழுத ஆரம்பிச்சிங்க?
உலக சனத்தொகைல சரி பாதி பெண்கள் சரி பாதி ஆண்கள். இவிக மத்தில சரியான புரிதல் ஏற்பட்டுப்போச்சுன்னா அப்பாறம் ஆத்திகம், நாத்திகம், கம்யூனிசம்,கேப்பிடலிசத்துலருந்து சாதி,மாதம், ஏரியா  மாதிரி எந்த பிரச்சினையும் ஒன்னும் செய்ய முடியாதுங்கண்ணா.. நீங்க எந்த பிரச்சினைய வேணம்னா எடுங்க அதுக்கு மூலம் ஆண் பெண் உறவுல இருக்கிற சிக்கலாதான்  இருக்கும். இந்திரா காந்தி  ஃபெரோஸ் காந்தியோட தாம்பத்ய வாழ்க்கை சரியா அமைஞ்சிருந்தா இந்தியாவோட வரலாறே மாறியிருக்கும்.

6.கே: அது சரி திடீர்னு ஏன் பாபா புராணத்தை ஆரம்பிச்சிங்க?
ப: அது வந்துங்கண்ணா திடீர்னு 16 பக்கத்துல பாபா ஸ்தோத்திர புஸ்தவம் 1 லட்சம் காப்பி போட்டு வினியோகிச்சா என்னன்னு ஒரு எண்ணம் வந்தது. பரபரன்னு வாண்டட் ஸ்பான்சரர்ஸுன்னு ஒரு பாம்லெட் போட்டு  வினியோகம் பண்ணிட்டோம். ( பாபா பக்தரான எங்கள் எம்.எல்.ஏ சி.கே பாபு 4 ஆவது முறையா எம்.எல்.ஏ ஆகி ஒரு வருஷம் நிறைஞ்சதை முன்னிட்டு) 1000 காப்பீஸுக்கு ரூ. 816 /-ந்னு ஃபிக்ஸ் பண்ணினேன்.  படபடன்னு  ஸ்பான்சரர்ஸ் முன் வர ஆரம்பிச்சுட்டாய்ங்க. முதல் 1000 காப்பீஸ் போட பக்கத்துக்கு 8  பேஜுன்னு ரெண்டு பக்கம்  மாஸ்டர் எடுத்து ப்ரஸ்ஸுக்கு அனுப்பறேன். மொதல் பக்கம் ப்ரிண்ட் ஆனபிறகு ஃபோன் வருது பக்கங்கள் சேரமாட்டேங்குதுன்னு .அங்கே கொஞ்சம் டர்ராயிட்டன். (பேப்பர்,பிரிண்டிங் காஸ்ட் எல்லாம் லாஸுதான்) பாபாவுக்கும் நமக்கும் என்ன டீலிங் ஏன் இப்படி ஆயிருச்சுன்னு ரோசிக்க ஆரம்பிச்சேன். சிந்தனை எழுத்தாச்சு

7.கே: அதுசரி.. ஆன்மீக அனுபவங்கள்ங்கற பேர்ல என்னென்னவோ பீலா விடறிங்களே நம்பற மாதிரியே இல்லையே..

ப:  நம்ப முடியாம நீங்க மட்டுமா தவிக்கிறிங்க.. நானும் தான் தவிக்கிறேன். என்னங்கடா இது அப்போ நடந்தது என்ன? இப்போ நடக்காம போறதென்னன்னு

8.கே:இந்த தொடராவது தொடருமா?

ப: நீங்கல்லாம் என்னைப்பத்தி என்ன நினைக்கிறிங்கன்னா நம்ம முருகேசுக்குள்ள  ஒரு பிசாசு இருக்கு அதான் பக்கம் பக்கமா தட்டிக்கொடுத்துருது.இவரு நோகாம பென் ட்ரைவ்ல போட்டுக்கிட்டு வந்து அப்லோட் பண்ணிர்ராருன்னு நினைக்கிறிங்க.
ஆனா மனசுல ஒரு ஸ்பார்க் வர்ரதும், அதுக்கு ஒரு ஃபார்ம் அமையறதும், கம்ப்யூட்டர்ல எழுத்தா மார்ரதும் ஒவ்வொரு நாளும் ஒரு அற்புதம் மாதிரிதான் நடக்குது.பல கண்டங்களை தாண்டி,பாலகிரக தோஷங்களையெல்லாம் தாண்டித்தான் ஒவ்வொரு பதிவும் வலையேறுது. இந்த ப்ராசஸையெல்லாம் முத ஆளா பார்க்கிறதால  இதையெல்லாம் ஒரு சாதனைன்னு சொல்லிக்கவோ  பெருமை பட்டுக்கவோ ரொம்ப தயக்கமா இருக்கு. தொடர்  அங்கே (ரஜினி ஆகாயத்தை காட்டற ஷாட்) தொடர்ந்தா இங்கனயும் தொடருங்கண்ணா

9.கே:ரெம்ப ப்ரோக்ரசிவா யோசிக்கிறிங்க ஆனா ஒய்.எஸ்.ஆர் ஜகனுன்னு சால்ரா போடறிங்களே

ப: ரோசிக்கிறது ஆரு வேணம்னா ரோசிச்சுரலாங்க. நான் கூட டாஸ்மாக்கை நம்பாம அரசுகள் சில்லறை தேற்றன்னு 40க்கு மேல யோசனை தெரிவிச்சு கலைஞர் ஸ்டாலினுக்கு லெட்டர் அனுப்பியிருக்கேன். எங்க ஊர்ல ஜெயபிரகாஷ் நாராயணன்னு ஒரு முன்னாள் ஐ.ஏ,.எஸ் லோக் சத்தான்னு ஒரு அமைப்பை நடத்திக்கிட்டிருந்தார். (அவர் சர்வீஸ்ல இருக்கிறச்ச அவரோட டிப்பார்ட்மெண்ட்ல எத்தனை அரி புரி நடந்திருக்கும் .அப்பல்லாம் ஆகே பீச்சே மூடிக்கிட்டு குப்பைய கொட்டிட்டு வெளிய வந்த பிறகு பீசு பீசுன்னு பீசனாரு.) அதை அரசியல் கட்சியாக்கினாரு. என்ன ஆச்சு? அவரு மட்டும் ஜெயிச்சாரு.

ராஜசேகர் ரெட்டி 100% உத்தமர்னு சொல்லல. ஆனால் அவரு ரொட்டீன் கஸ்டம்ஸ், கான்ட்ரா டிக்ஷன்ஸையெல்லாம்  சமாளிச்சுக்கிட்டும் எத்தனையோ செய்தாரு.  நான் லட்சிய வாதியா இருக்கலாம். ஆனால் லட்சியம்  யதார்த்தத்துல ரியலைஸ் ஆகனுமே. அது நடக்கறதெப்போ சனத்துக்கு நல்லது   நடக்கறது எப்போ? ஒரு ஜகன் சி.எம்மா வந்தா புதுசா ஒன்னத்தையும் கிழிக்கலன்னாலும் ஒய்.எஸ்.ஆரோட நல திட்டங்களை தொடர்வாரில்லையா?

ரோசய்யா எதுக்கெடுத்தாலும் கைய பிசைஞ்சிக்கிட்டு தில்லி பக்கம் கைய காட்டிக்கிட்டு பன்னாடை மாதிரி கண்டதுக்கும் வெட்டு விதிச்சுக்கிட்டிருக்காரு.. வென் தேர் ஈஸ் நோ பெஸ்ட் சாய்ஸ் ஐ ஹேவ் டு ஆப்ட் பெட்டர் சாய்ஸ் இல்லையா? சந்திரபாபுவோட 9 ஆண்டுகால ஆட்சியை நேர்ல பார்த்தவன் நானு. பதவி இழந்து 6 வருஷம் நிறைய போகுது இப்ப கூட அவர்ல எந்தவித மாற்றமும் கிடையாது. என்னை என்ன பண்ன சொல்றிங்க?

10.கே: மீடியாவே அவாள் கையில இருக்குன்னு சொல்றிங்க.. அவிகளையும் மீடியாவையும் கிழி கிழின்னு கிழிக்கறிங்க. ஒரு எழுத்தாளரா உங்க வளர்ச்சிக்கு இது தடை ஆயிராதா?

ப:ஆயிராதான்னு ஃப்யூச்சர் டென்ஸ்ல கேட்கிறிங்க. பாஸ்டும் இதான்.ப்ரசண்டும் இதான் .ஃப்யூச்சர்ல எதுனா  ஒரு  அற்புதம்  நடக்காமயா போயிரும். இசையே எங்க பஞ்ச கச்சத்துலயும், மடிசார்லயும்தான் இருக்குன்னு அவாள் அலட்டிக்கிட்டாய்ங்க. என்ன ஆச்சு? ஒரு தலித் மேஸ்ட்ரோ ஆகலையா ஒரு இசைவேளாள குல மங்கை சங்கீத சரஸ்வதியா கோலோச்சலியா ( எம்.எஸ் அம்மாவ சொல்றேன். நிறையா பேரு அவிகளும் ப்ராமின் தான்னு நினைச்சிட்டிருப்பிங்க. இதாங்க அவாளோட சதி)


மீடியா எத்த தின்னா பித்தம் தெளியுங்கற ஸ்டேஜுக்கு வந்துருச்சு ஒரு பத்திரிக்கைல என்ன வரனும்ங்கறத எடிட்டோரியலோ, நிர்வாகமோ தீர்மானிக்கிற காலம் போயிருச்சு. விளம்பரத்துறைதான் அந்த வேலைய செய்யுது. சனத்துக்கு படிக்கிற வழக்கமே காலாவதியாயிருச்சு. இருக்கிற கொஞ்ச நஞ்சம் ரீடர்ஷிப்புக்கும் கண் டப்ஸாயிட்டாலோ அல்லது அவிக ரிட்டையர் ஆகி கிம்பளம், சம்பளம் எல்லாம் நின்னு போயிட்டாலோ மீடியா ஃபணாலாயிரும். குதிரைய அடக்க ஒரு டெக்னிக் உண்டு. அதை ஓட விட்டு களைச்சு போன நேரத்துல கடிவாளத்தை இழுத்து பிடிக்கனும். நம்ம எழுத்து ஒரு புதுவெள்ளம். இதுல பிராமணீயம்லாம் அடிச்சுட்டு போயிரும். ( என்ன? எனக்கும் ஒரு பார்ப்பாத்திய கட்டிக்கொடுக்க பார்ப்பாய்ங்க. நாமதான் ஏற்கெனவே வீரவன்னிய மங்கைய மண முடிச்சாச்சே) அட்லீஸ் என்னையும் ஒரு பார்ப்பானாக்கிர முயற்சி பண்ணுவாய்ங்க. நமக்குத்தான் அவிக வித்தை மொத்தம் மனப்பாடமாச்சே. மாட்ட மாட்டேனே.. அவிக சர்க்குலேஷனை உயர்த்திக்க என் எழுத்து தேவைப்படற ஒரு காலம் வரும். அதுவரை .. ஜஸ்ட் வெயிட் அண்ட் சீ தான்.

11.கே: ஒரு அரசாங்கம்  நாட்டு நிர்வாகத்துல எதுக்கு ப்ரியாரிட்டி தரணும்னு நினைக்கிறிங்க?

ப:
அ) மக்கள் உயிர் காத்தல் (விபத்து,கொலை, தற்கொலை,தீவிர வாதம்)
ஆ) அவிகளோட பேசிக்கல் நீட்ஸை கவுரவமான முறைல (வேலை வெட்டி) தீர்த்துக்க வழி வகுத்தல் ஒவ்வொரு குழந்தையும் 18 வயசு முடிஞ்சதும் தன் பிழைப்பை தானே பார்த்துக்கறாப்ல அவிக மைண்ட், பாடிய ட்யூன் பண்ணனும். அட்லீஸ்ட் காலேஜ்லருந்து ஸ்கில்ட் லேபரா வெளிய வராப்ல செய்யனும்
இ) இதுக்கு விவசாயம் தான் பெஸ்ட் சாய்ஸ். 70% மக்கள் விவசாயத்தை சார்ந்து வாழறாய்ங்க.ஸோ பட்ஜெட்ல 70 சதவீதம் நிதிய நீர்பாசனத்துக்கு செலவழிக்கனும்
ஈ)மக்களை நேரிடையா பாதிக்க கூடிய விஷயங்கள்ளயாவது அரசியல் பார்க்காம துரித நடவடிக்கை சட்டம் ஒழுங்கு,குடி நீர்,வேலை வாய்ப்பு

12.
கே: ஆமா நாடு நாடுன்னு பினாத்தறிங்களே.. நெஜம்மா சொல்லுங்க.. நாட்டுமேல உங்களுக்கு என்ன அக்கறை?
ப: என் மேல மட்டும் அக்கறை காட்டி வாழ்ந்த வாழ்க்கை (1967 முதல் 1987 வரை)  எனக்கு கற்றுத்தந்த எதுவும்  1987 முதல் 2007 வரை நான் சந்தித்த வாழ்க்கை போராட்டத்துல உதவலை. அப்பப்போ அவசர அடியா நானா உருக்கி ஊத்தி எடுத்த ஆயுதங்கள் தான் உதவுச்சு. அந்த மன உறுதிய தந்தது என் செயல்கள்ள சுய நலம் இல்லேங்கற எண்ணம் தான்.  முதல் 20 ல வாழ்ந்த வாழ்க்கைய பிடிவாதமா  தொடர நினைச்சிருந்தா செத்துப்போயிருப்பேன். (கு.ப தற்கொலை) . புதுசா எதிர்பட்ட வாழ்க்கைய ஏத்துக்கிட்டேன் உசுரோட இருக்கேன். இந்த உசுரு பொது நலம் போட்ட பிச்சை. எங்க என் மேல அக்கறை காட்டி என் வாழ்க்கைய சீரழிச்சுருவனோங்கற பயத்துல என் ஒட்டு மொத்த கவனத்தையும் நாட்டு மேல திருப்பிட்டேன். இதுவும் ஒரு சுய நலம்தான். என்ன பண்ண?

Wednesday, May 26, 2010

குட்டிகளை மடக்க டிப்

யாரை நம்பி நான் பிறந்தேன்

அந்த காலத்து தமிழ் படங்களுக்கு வச்சது மாதிரி பதிவுகளுக்கு கூட 2 தலைப்பு வைக்கிற வசதியிருந்தா இந்த பதிவுக்கு எதிர்வினைகள் மீதான எதிர்வினைனு ரெண்டாவது தலைப்பு வச்சிருக்கலாம்.

நுள்ளானென்ற பார்ட்டி வெட்டித்தனமா எழுதி பொன்னான நேரத்தை வீணாக்கிறதா குற்றம் சாட்டி தண்டனை கூட இருக்கும்னு டகுலு காட்டறார். என்ன பண்ணுவிக ஜன்ய பாகத்தை க்ளோசப் ஷாட்ல வச்சி இந்த லின்கை  க்ளிக் பண்ணும்பிங்க. அது மர்ம ஸ்தானம் மட்டும் இல்லே கண்ணா நம்ம ஜன்மஸ்தானம்.(பொன்னான நேரத்தை லலிதா ஜுவெல்லர்ஸ்ல எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்குவாங்களா) கேட்டுப்பாருங்கண்ணா. உங்களை மாதிரி பார்ட்டிங்களை ஸ்பெஷலா  நான் வெ.பா. வச்சி கூப்டேனா? வந்தால் வரவில் போனால் செலவில். ரெம்ப அலட்டிக்காத நைனா


ஸ்வாமிங்கறவரு  மரணங்கறது இயற்கை தானே. அதை ஏன் தள்ளிப்போடனும்னு அயனான கேள்வி கேட்டிருக்கார்.  அதுக்கான பதில்:

ஸ்வாமி  அவர்களே!
 மனிதன் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்திருந்தால் மரணமும் மிக இயல்பாக நாடகத்தின் கடைசி  காட்சி போல  இயல்பாக அரங்கேறும். ஆனால் மனிதன் ஜஸ்ட் தன்னோட ஈகோ காரணமா இயற்கை மேல போர் தொடுத்துட்டான். இதனால் மரணம் எந்த கணமாகிலும் என்ட்ரி கொடுக்கிற கேரக்டர் மாதிரி ஆயிருச்சு. இயற்கையோட இருந்த செயின் லின்க் அறுந்து போனவுக வாழ நினைக்கும்போது செத்து ப்போயிர்ராய்ங்க. அவிகளுக்காக தான் அந்த டிப்ஸ். வாழ்க்கை கையில் தம்மை ஒப்படைச்சுட்டு இயற்கையோட இயைந்து வாழற மனிதனுக்கு மரணமே ஒரு வரமாயிரும்.

ஸ்மார்டு சொல்றாரு:
//உங்க நடை நல்லா காமெடியாயிருக்கு//

ஒரு காலத்துல ஒரு பார்ட்டி நம்ம நடைய கூட உடையல் விட்டுது. ஃபார்வோர்டட் டு தட் பார்ட்டி. நன்றி ஸ்மார்ட் கண்ணா ,

//உங்க எதிரிகள் எல்லாம் புத்திசாலிகள்//
அப்படிங்கறிங்க.. எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை. பல பேரு கீதைய திட்டியிருக்கலாம். நான் ஒருத்தன் தான் அக்கக்கா பிரிச்சு துவைச்சு காயபோட்டுட்டேன்.இப்போ இருக்கிற ஜெனரேசனுக்கு   27 நட்சத்திரங்களோட பேரே வரிசையா தெரியாதுங்கண்ணா. இவிக தலைமுறை தலைமுறையா வந்த வித்தைய  தூக்கி குப்பைல போட்டுட்டு வந்தேறிங்க கிட்டயும், அன்னிய படையெடுப்பாளர்கள் கிட்டயும், அரசாங்கத்துக்கிட்டேயும் சரண்டர் ஆயிட்டாய்ங்க.  என்னோட தொடர் பதிவை விமர்சிக்கிற அளவு ஸ்டஃப் இவிகளுக்கு கிடையாது. ஸ்டஃப் இருக்கிறவனுக்கு நேரம் கிடையாது.

// அதான் துஷ்டனைக் கண்டு தூர விலகிவிட்டனர்.//
நான் துஷ்டனா இருந்திருந்தா கு.ப டி.எஸ்பி ஆஃபீஸ்லயாவது பேசி மிரட்ட வச்சிருப்பாய்ங்க. நாம தான் ஓப்பன் புக்கா இருக்கோமே. வெட்டறியா வெட்டுனு கட்டின பசுவா நிக்கறமே. வேணம்னா என்ல அந்த கிஷ்டன் காட்சி கொடுத்திருக்கலாம்.(பலான ஜோக்கும் போட்டோம், செக்ஸ்கல்வியும் கொடுத்தோம், சமீபத்துல நவீன பகவத் கீதையையும் கொடுத்தோம்.  அய்யய்யோ இந்த ப்ரஷ்டன் மேல கிஷ்டன் ஆவாஹனம் ஆனாப்ல இருக்குடோய்னிட்டு சைட் ஆயிட்டிருப்பாங்க//

//நம்ம ப்ளாக் வந்து பண்ண ரவுசு மாதிரி ஏதாவது பண்ணிருப்பீங்க அதான் ஆப்படுச்சிட்டாரு நம்ம பாக்கியராஜ்.//

ஸ்மார்ட் அண்ணா, நான் இருந்தது சித்தூர். பாக்ய ராஜ் இருந்தது சென்னை. அதுவும் அப்போ அவரு டாப் டென்ல இருக்காரு. அவர்கிட்டே ரவுசு பண்றது ஆன மேல போறவன் கிட்ட சுண்ணாம்பு கேட்ட கதையாயிரும்னு தெரியாதா? ( காதுல விழாது). அவிக ஒரு ஃப்ரேம் கட்டிக்கிட்டு அதுக்குள்ள இயங்குனாங்க. நான் காட்டாறா கரை புரண்டு ஓடினேன். இதான் உண்மை. உங்க ப்ளாகுல வந்து அப்படி என்ன ரவுசு பண்ணேன். ( என் ரவுசு எப்படியிருக்கும்னு ஓம்கார்ஸ்வாமிகளை கேட்டுப்பாருங்க)

ஷிவா சார் அன்பின் மிகுதியால நான் உங்களை சொஸ்தப்படுத்தறேன் . ரிசல்ட் எப்படி இருக்குனு சொல்லுங்கனு கேட்டிருக்கார்.

நமக்கு வில் பவர் அதிகம். என்னை ஹிப்னடைஸ் பண்ண முடியாது. புது விஷயங்களை என் மூளை சீக்கிரமா ஏத்துக்கிடாது (வயசாகுதே) . ஷிவா சொல்ற ட்ரீட்மெண்ட் எல்லாம் பாதிக்கப்பட்டவரோ முழு ஒத்துழைப்பிருந்தாதான் ஒர்க் அவுட் ஆகும்.

எனக்கேதாச்சும் நன்மை செய்யனும்னு ஆத்தா முடிவு கட்டிட்டா இப்படி ஏதாச்சும் செய்து லந்து பண்ணுவா.( வருசத்துக்கு ஒன்னு/ இந்த கணக்கு கூட 1999ல இருந்து 10 வருஷம் கேப் ) அதை சகிச்சிக்கிட்டா அடுத்த காட்சி வந்துரும்.  நான் அதை டிஸ்டர்ப் பண்றதில்லை. முடிஞ்ச வரை சகிச்சுப்பேன். நமக்கு இந்த அல்லாப்பதி மெடிசினோட பேசிக் கொஞ்சம் தெரியும். அதனால கடைசி பட்சமாதான் மாத்திரை ஜோலிக்கே போவேன். ( ஊசி எட்ஸெட்ரால்லாம்  நை நை)

இந்த பிரச்சினைய கொடுத்தவ ஆத்தா. இதை வாபஸ் வாங்க வேண்டியவளும் அவதான். கேஸு சுப்ரீம் கோர்ட்ல இருக்கிறச்ச செஷன்ஸ் கோர்ட்டெல்லாம் வேலை செய்றதில்லை சார். உங்க அன்புக்கும், முயற்சிக்கும் நன்றி.நன்றி. நன்றி.


நான் கீதையிலான சில அம்சங்களை பின்பற்றுவதை உணர்வதாக  நண்பர் ...............சொல்லியிருந்தார். நான் பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி தொடரிலேயே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா  (ஏக் மார் தோ துக்கடா) சொல்லியிருந்தேன். ஒட்டு மொத்தமாக கண்ணனையோ, கீதையையோ இல்லேங்கலை. விமர்சிக்கலை. அதிலான பார்ப்பன கலப்படங்களை மட்டும் அடையாளம் காட்டறேன்.இந்த கலப்படங்களை பொறுக்கி தூரப்போட்டுட்டு மிச்சமிருக்கிற  கீதை காட்டும் பாதையை ஃபாலோபண்றதுல தப்பில்லே. ஆனால் மேற்படி நண்பர் நீங்க என்னதான் வேஷம் கட்டி ஆடினாலும்  பெரியாரிஸ்டுகள் உங்களை ஆதரிக்கமாட்டாய்ங்க. அதனால இந்த பக்கம் வ் வந்துருங்கன்னிருக்கார்.

எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை வரி (தெலுங்கு)

"எந்துக்கு ராஸ்தார்ரா கவித்வம் நிஷேதிஞ்சடானிகி அர்ஹத லேனி கவித்வம்"

இதற்கு அர்த்தம்:
ஏனடா எழுதுகிறீர்கள் கவிதை.. தடை செய்ய தகுதியற்ற கவிதை

நம்ம எழுத்தை ஏதோ ஒரு பிரிவு ஆதரிக்க முன் வருதுன்னா நாம அந்த பிரிவை சரியா விமர்சிக்கலை. எங்கயோ விட்டுக்கொடுத்துட்டம்னு அர்த்தம். நான் பெரியாரோட மனிதம் தோய்ந்த  நாத்திகவாதத்தை, பெண்ணுரிமை வாதத்தை, பிராமண எதிர்ப்பை ஆதரிக்கிறேனே தவிர அவர் குறித்தும் சில விமர்சங்கள் உண்டு. 

இன்னைக்கும் இனவாதம் தலைவிரித்தாடும் நாட்களில்  அதையெல்லாம்  லிஸ்ட் அவுட் பண்றது -  காட்டிக்கொடுக்கிறதாயிரும்.  குறிப்பாக  அவரை,அவர் பெயரை,  அவர் எழுத்தை  முதலீடாக வைத்து இதர கழகங்களை காட்டிலும் கமுக்கமாக பணம் குவிக்கும்  வீரமணி இத்யாதியினரை ஆதரித்ததே இல்லை. இன்னம் சொல்லப்போனா விமர்சித்தும் இருக்கேன்.

பெரியார் ஜீஸஸ் க்ரைஸ்டுன்னா இவிக எல்லாம் ஜஸ்ட் கிறிஸ்தவர்கள் அவ்ளதான். இவிகள்ள யாரும் பெரியார் ஆகமுடியாது.

(போச்சு போச்சு...... ஏதோ அதிகாலை டாட் காம்ல இருந்து புட்டபர்த்தியின் புருடாக்களை எடுத்து விடுதலைல வச்சாங்க. அந்த கதவும் க்ளோஸூ)

பெரியாரிஸ்டுகளின் ஆதரவை பெற விரும்புபவனாக இருந்தால் வேறு பெயர், வேறு மெயில் ஐடியுடன் ஜோதிடக் கடை விரித்திருக்கலாமே. பெரியாருக்கு கூட ஜாதகம் இருக்குங்க. யாராச்சும் அவரோட டைம் ஆஃப் பர்த் இருந்தா கொடுங்க. அவர் வாழ்க்கை அவர் ஜாதகப்படியேதான் நடந்ததுன்னு ப்ரூவ் பண்றேன்.

பகிரங்கமா செய்ய முடியாததை ரகசியமா  கூட செய்யாதேங்கறார் மகாத்மா காந்தி. முன்னொரு பதிவுல நான் முஸ்லீமாக மாறவும் தயங்க மாட்டேன் என்று எழுதியிருந்தேன். உடனே ஒரு அன்பர்"அது முடியாது.. அதுக்கு நீங்க ஜோசியத்தை விட்டுரனும்"னாரு.

இஸ்லாம் மீதான என் ஐயங்கள் தீர்ந்த பிறகு ஜோதிஷமாவது வெறொன்னாவது தலைமுழுக ரொம்ப நேரம் பிடிக்காது. ஆனால் நபி(சல்) அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை ராணில படிச்சேன். இவர் சந்தைக்கு போறச்ச யாரோ ஒருத்தர்  முதுகுல ஒரு மச்சமிருக்கானு செக் பண்ணி  பார்த்து இவரை ரொம்ப சாக்கிரதையா பார்த்துக்கங்க. யூதர்களால இவருக்கு ஆபத்துவரலாம்னு சொல்றாரு.

நாம நம்பறோம், நம்பலைங்கறதெல்லாம் கணக்கே இல்லே. அந்தந்த ஃபேக்டர்ஸோட இம்பாக்ட் நம்ம மேல இருந்துக்கிட்டே இருக்கும்.

பெரியாரிஸ்டுகளோட ஆதரவு எப்படியும் கிடைக்கபோறதில்லை. ஒரு யு டர்ன் அடிச்சு இந்த பக்கம் வந்துருனு மேற்படி அன்பர் சொல்றார்.

சிலரோட ஆதரவுக்காக ப்ளான் பண்ணி எழுதினா அவிக ஆதரவு கூட கிட்டாம போயிரலாம்.யாருடைய ஆதரவும் தேவையில்லேன்னு எழுதிக்கிட்டிருந்தா ஒரு நாளில்லை ஒரு நாள் எல்லாருமே " அடடே இவன் எந்த கல்மிஷமும் இல்லாம ஹிடன் அஜெண்டா எதுவும் இல்லாம ஸ்பாண்டேனியசா எழுதறான்பா"ன்னிட்டு ஆதரவு தர முன் வரலாம்.

உங்க லட்சியத்தை அடைய நீங்க செய்ற முயற்சியே நீங்க லட்சியத்தை சென்றடைய தடையா மாறிருது. நான் எல்லாம் லவ் பண்ற காலத்துல எல்லா குட்டிகளுக்கும் ஒரே ரேஞ்சு  தெரஃபி தான் கொடுப்பேன். சூப்பர் ஃபிகருங்க கண்ணாலம் கட்டிக்கிட்டு லண்டன், கோயமுத்தூர்னு போய் செட்டிலாயிட்டாலும் சப்பை ஃபிகருங்க இன்னைக்கும் நின்னு நலம் விசாரிச்சுட்டு தான் போகுது.  அவிக கழண்டுக்கிட்டதுக்கு வருத்தப்படறதுமில்லே. இவிக கண்டுக்கிடறதுக்கு சந்தோசப்படறதுமில்லை.

ஒரு குட்டியை மடக்கனும்னா " மடக்கனுங்கற  அந்த எண்ணத்தையே கழட்டி வச்சுரனும்" ரொட்டீனா டீல் பண்ணனும்.

அப்படி வெகுஜன ஆதரவு வேணம்னு நினைக்கிறவன் மனக் கணக்கு போட்டு வேலை செய்தான்னா மெட்டாஷாயிருவான்.

சாட்ல ஒரு பார்ட்டி குட்டிகளை மடக்கறதுக்கு எதுனா டிப்ஸ் கொடுக்க கூடாதான்னு கேட்டுது. இதோ இப்படி ஆரம்பிச்சிருக்கேன்.

பார்ப்போம்.   ஓகேவா உடுங்க  ஜூட்.

(இந்தில ஜூட் ன்னா பொய்னு அர்த்தம். நான் அம்பேலுக்கு எதிர்பதமா தான் ஜூட்டுன்னிருக்கேன். நோட் திஸ் பாயிண்ட் யுவரானர்.)

Friday, May 21, 2010

ஒரு கோக் மூடியும் கொக்கோகமும்

அண்ணே வணக்கம்ணே !
கொக்கோகமும் கோக் மூடியும்ங்கற இந்த பதிவோட

கிரகமும் கிளுகிளுப்பும்  
பெண்ணுக்குள்ளே பூதம் 
மானங்கெட்ட செயல்    
ங்கற மூணு தனிப்பதிவுகளும் போட்டிருக்கேண்ணா . அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்கண்ணா

கொக்கோகம் என்பது வாத்ஸாயன முனிவர் எழுதிய காமசூத்திரம் போன்று  அதிவீரராம பாண்டியர் எழுதிய  பழம்பெரும்  செக்ஸ் நூலாகும்.அவர் காலத்தில் கொக்கோ கோலா ஏது என்று மதி மயங்காதீர்கள்.நம் காலத்தில் இருக்கிறதல்லவா.இந்த பதிவை படிக்கப்போவது நீங்கள். உங்கள் காலத்தில் கோக்கும்  உண்டு கோக் மூடியும் உண்டு. ஏன் ஒரு கோக் சாப்பிட்டுக்கிட்டே கொக்கோகம்ங்கற இந்த பதிவை படிக்கலாம்  அல்லவா?  அப்பாடா எப்படியோ பதிவோட தலைப்பை ஜஸ்டிஃபை பண்ணியாச்சு.

கொக்கோகத்தை பத்தி சொல்றதுக்கு முன்னாடி கோக் முடிய பத்தி கொஞ்சம் சொல்லிருவம்.

கோக் மூடி என்ன மெட்டல் என்று பார்த்ததுண்டோ? 99.99 சதவீதம் தகரம். மேலே மட்டும் பள பள கோட்டிங்க். 

கோக்கே இல்லை எந்த கம்பேனி ட்ரிங்க்ஸ் சாப்பிட்டாலும்  ஷுகர் வருமாம், கேஸ் ட்ரபிள் வருமாம். பல் எனாமல் போயிருமாம். ( கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில்ல ஒரு பல்லை போட்டுவச்சா ஒரு வாரத்துல கரைஞ்சே போயிருமாம்) இந்த உபத்திரவங்கள் இல்லாமே அப்பப்போ கூல் ட்ரிங்க் பாட்டில்ல கரப்பான் பூச்சி , வண்டுல்லாம் வருதாம்.  (ஒர் ரகசியம் இதுல ஆல்க்கஹால் கூட இருக்காம் அதனாலதான் அடிக்சன் ஆகுதாம்.)

என்னய்யா நாங்க ட்ரிங்க் மட்டும்தானே கேட்டோம் , இதெல்லாம் ஃப்ரீனு ஆஃபர் கூட இல்லையே பின்னே ஏன்யா இந்த ஜீவ ராசிகளை  பாட்டில்ல போட்டுத் தர்ரிங்கனு கேட்டா  பாட்டில் எல்லாம் கழுவப்பட்டு  கன்வேயர் பெல்ட்ல சுத்தமா போறச்ச இந்த பறப்பன,ஊர்வனவெல்லாம் உள்ளாற புகுந்துருதாம் . பாவம் அவிக என்ன பண்ணுவாங்க.

சின்ன வயசுல டீ,காஃபில எறும்பு இருக்கிறதை காட்டி கம்ப்ளெயிண்ட் பண்ணா எங்கம்மா " அடச்சீ சொம்மா குடிங்கடா எறும்பு உள்ளாற போனா கண்ணு நல்லா தெரியும்னுவாய்ங்க. அந்த மாதிரி இந்த கூல்ட்ரிங்கோட வண்டு, சிலந்தி, கரப்பான் எல்லாம் போனா பலான பவர் ஜாஸ்தியாகும்னு நினைச்சு குடிங்க.

சரி கோக் மூடிய பார்ப்போம்.  ஒரு கோக் மூடிய எடுத்து சட்டை பாக்கெட்ல வை ராசா. இதோ பார் என் கைல மேக்னெட் இருக்கு. நான் என்ன பண்றேன் மேக்னெட்டை  உங்க சட்டை பாக்கெட் கிட்டே கொண்டார்ரேன். இப்போ உன் சட்டைப்பைக்குள்ள இருக்கற கோக் மூடி  சட்டை  துணிய தள்ளிக்கிட்டு மின்னே வருது.

பொம்பளை உடம்புல ஏதோ இருக்குது ( நான் மேடு பள்ளம் போன்ற ஸ்தூல விஷயங்களை  சொல்லவில்லை. , உன் உடம்புல வேற ஏதோ இருக்குது.  நான் கோன்,குல்ஃபி மாதிரி ஸ்தூலமான விஷயங்களை சொல்லலை. இதெல்லாம் மேம்போக்கான சங்கதி. ஏதோ சூட்சுமம் இருக்கு.

ஒரு பையனை எடுத்துக்க. அவன் வம்ச விருட்சத்துல, ரிலேட்டிவ் சர்க்கிள்ள, ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ள , தினத்தந்தில, சினிமால ,டிவில  எத்தனை கதைய பார்க்கிறான். அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல கணக்கு பண்ணவ, அப்பன்,பிள்ளைய ஒரே நேரத்துல வச்சிக்கிட்டவ,  கள்ளக்காதலனோட வாழ்வாங்கு வாழ கணவனுக்கு விஷம் வச்சு கொன்னவ,  மச்சினனோட இல்லறத்தை பேண கணவன் தூங்கும்போது அம்மிக்கல்லை எடுத்து போட்டவள் இப்படி எத்தனையோ கதைய கேட்கிறான். பார்க்கிறான். ஏன் சில சமயம் சுயமாவே மேற்படி அனுபவங்களுக்கு கூட இலக்காகிறான் . இருந்தும் அவன் ஏன் காதலிக்கனும்?

சரீர தர்மங்கள் தான் காரணம்னா அதுக்கு எத்தனையோ வழி இருக்கு. என்ன மயித்துக்கு லவ் பண்றான்?

ஒரு பெண்ணை எடுத்துக்க (ஒரு உதாரணமா மட்டும் தலை) அவளோட வம்ச விருட்சத்துல, ரிலேட்டிவ் சர்க்கிள்ள, ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ள , தினத்தந்தில, சினிமால ,டிவில  எத்தனை கதைய பார்க்கிறாள். அக்கா தங்கச்சி  ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல கணக்கு பண்ணவன், அம்மா பெண்ணை  ஒரே நேரத்துல வச்சிக்கிட்டவன்,  கள்ளக்காதலியோட கவிதாமயமான வாழ்க்கைய வாழ மனைவிக்கு  விஷம் வச்சு கொன்னவன்,  மச்சினியோட வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறை தெய்வத்துள் வைக்கப்பட  மனைவி தூங்கும்போது அம்மிக்கல்லை எடுத்து போட்டவன். இப்படி எத்தனையோ கதைய கேட்கிறான். பார்க்கிறான். ஏன் சில சமயம் சுயமாவே மேற்படி அனுபவங்களுக்கு கூட இலக்காகிறான் . இருந்தும் அவள் ஏன் காதலிக்கனும்?

சரீர தர்மங்கள் தான் காரணம்னா அதுக்கு எத்தனையோ உத்தமமான மார்கங்கள் இருக்கு. என்ன மயித்துக்கு லவ் பண்றாள்?

இல்லை தலை ஸ்தூலமான விஷயங்கள் மட்டுமில்லாம ஆண் பெண்களுக்குள்ளே  வேற ஏதோ பிரத்யேகமான  கெமிஸ்ட்ரி இருக்கு.  இயற்கையோட ஹிடன் அஜெண்டா இருக்கு.
இது அதை ,அது இதை கவருது. இதனோட க்ளைமேக்ஸ் என்ன அந்த அஞ்சு நிமிஷ விவகாரம் தானா?  நான் பல பதிவுகள்ள சொன்ன படி இயற்கை மனிதனுக்கு கொடுத்திருக்கிற அஜெண்டா உயிர் வாழ்தல், இனப்பெருக்கம் செய்தல் மட்டும்  தானா ?

இல்லே. இயற்கை அந்த அளவுக்கு முட்டாளில்லே. இன்னைக்கு ஒரு டெஸ்ட் ட்யூப், பெண்ணின் முட்டைக்கரு, ஆணின் விந்தனு இருந்தால் குவா குவா சத்தம் வந்துருமே.

சரி உடலுறவு(னா)ல என்னதான் நட(கிடை)க்குது ?

பாயிண்ட் நெம்ப்ர்: 1

ஆணில் பாதி ஆண்,பாதி பெண் இருக்க, பெண்ணில் பாதி பெண்,பாதி ஆண் இருக்க இருவருமே அரை குறையாக உணர்கிறார்கள் உடலுறவின் போது சற்று நேரமாவது இருவரும் தம்மை முழுமையாக உணர்கிறார்கள். ஓகே.

பாயிண்ட் நெம்பர் 2

மனிதர்கள் பல்வேறு முகமூடிகளில் /போர்வையில் செய்யறது ரெண்டே வேலைதான். ஒன்னு கொல்றது, அடுத்தது கொல்லப்படறது. எல்லா உயிரும் ஆதி உயிரான அமீபால இருந்து செல்காப்பியிங், காப்பியிங் எர்ரர் மூலமா வந்த உயிர்தான். ஒரே உயிரா இருந்தப்ப காலம் ,தூரம், இன் செக்யூரிட்டி, கம்யூனிகேஷன் ட்ரபுள்,போட்டி,ஒப்பீடு எதுவுமில்லாம இருந்தாய்ங்க. பல்லுயிரா பெருகிப்போனபிறகு சகலமும் வந்துருச்சு.  அதனால ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரோட இணைய துடிக்குது. அந்த இணைப்புக்கு இந்த உடல் தான் தடைனு நினைக்குது (சப் கான்ஷியஸ்) . அதனால இந்த உடலை உதிர்க்க கொலை/தற்கொலை எண்ணங்களை வளர்த்துக்குது. இது தான் மேற்படி கொல்றது,கொல்லப்படறதுங்கற இச்சைகளுக்கு  அடிப்படை 

இந்த ரெண்டு வேலையுமே உடலுறவுல அசால்ட்டா முடியுது. ஆணப்பொருத்தவரை வீரியஸ்கலிதமாகிற வரை கொல்லும் இச்சை  நிறைவேறுது. வீரிய ஸ்கலிதம்  ஆன பிறகு கொல்லப்படற இச்சை நிறைவேறுது.

இது பெண்ணை பொருத்தவரை ஆணுக்கு எஜாகுலேஷன் நடக்கிற வரை  கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. அவனுக்கு எஜாகுலேஷன் நடந்த பிறகு கொல்லும் இச்சை   நிறைவேறுது

பாயிண்ட் நெம்பர்: 3
உயிர்கள் இணைய உடல்களை உதிர்க்கிறது ஒரு வழி ( மனித மனங்களின்அடியாழத்தில்  இருக்கிற வழிங்க)  இன்னொரு உடலை  தன் உடலோடு  சேர்த்துக்கறது இன்னொரு வழி.  இது உடலுறவுல தற்காலிகமா கொஞ்ச நேரத்துக்கு சாத்தியமாகுது அப்பறம் ? "தள்ளிப்படு தான்" இதை ஜஸ்ட் ஒரு பத்து மாசத்துக்கு எக்ஸ்டெண்ட் பண்ற ப்ராசஸ்தான் கர்பம். ஒரு உடல் ரெண்டு உயிர். இதனாலதான் பெண்டாட்டி கர்பம்னா அவனவன் டீலாயிர்ரான். ஆனால் மனைவிக  மட்டும் செம குஜிலியாயிருவாங்க. ஏன்னா இன்னொரு உயிர் தன் உடல்ல இணைஞ்சிருக்குதுங்கற எண்ணம்தான். ( அதே நேரத்துல பிரசவ கால ரிஸ்க் காரணமா கொல்லப்படற இச்சையும் நிறைவேறுது.) இதனாலதான் கர்பம்னு தெரிஞ்சவுடனே  தாய்குலம்  முகத்துல அத்தனை பூரிப்பு. வெட்கம் எதுக்குன்னா ( இருட்ல நடந்த சமாசாரம் வெளிச்சத்துக்கு வந்துருச்சேங்கறதாலதான்)

பாயிண்ட் நெம்பர் :4
இன உறுப்பும் கேரக்டரும் என்ற பழைய பதிவை படிக்காதவங்க  மட்டும்  இதை படிங்க. ஆணோட இன உறுப்பு எதையோ ஆக்கிரமிக்க துடிச்சு ஆக்கிரமிப்புக்குள்ளாகிபோகுது. பெண்ணுறுப்பு ஆக்கிரமிக்கப்பட தவிச்சு ஆணுறுப்பை ஆக்கிரமிச்சுக்குது. ஆண் ,பெண்ணோட கேரக்டரும் இதுதான். ஆண் தான்  பெரிய பிஸ்தானுதான் எல்லாத்தயும் ஆரம்பிக்கிறான். ஆனால் முடிவு வேற விதமா அமையுது. உடலுறவுல மட்டுமில்லை வாழ்க்கையிலயும் இதுதான் நடக்குது. பெண் என்பவள் இயற்கையின் மீனியேச்சர் வடிவம்.

பாயிண்ட் நெம்பர் :5

இது எல்லாருக்கும் தெரிஞ்ச பாயிண்டு தான். ஆண் தன்னை செக்யூர்டா உணர்ந்தது ஒரு பெண்ணின்  (தன் தாயின்) கருப்பையில்தான் . ஸோ கருப்பைக்குள்ள மறுபடி புகுந்துக்கற ஒரு முயற்சிதான் உடலுறவு. ( ஹோமோக்களை பத்தி ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இவிக சைக்காலஜி சொல்ற  ஆசனப்பருவத்துலருந்து வெளிய வராதவுக. இவிக மட்டுமில்லை எவன் வெறும் பேச்சுக்கும், (எழுத்துக்கும்- இது கூட ஒரு வகை பேச்சுத்தான்) தீனிக்கும் பரிமிதமா இருக்கானோ அவன் கூட ஹோமோதான். வாய்ல ஏற்படற அசைவுகள் அதன் முடிவான ஆசன வாயை அடையுது. அப்போ இவன் சப்கான்ஷியஸா ஒரு வித இன்பத்தை அடையறான். நிறைவேறாத செக்ஸ் எண்ணங்கள் கூட இதுக்கு ஒரு காரணம்.)

பாயிண்ட் நெம்பர்:6
இ.ப.மு.சொ (இப்போதைக்கே பல முறை சொன்னபடி) மனிதன் அடிப்படையில் ஒரு மிருகம். ஆடைகள் அவனை சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. ஆடைக்கு விடைகொடுக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அந்த மிருகம் வெளியே வந்து உலாவி  ரிலாக்ஸ் ஆகிறது.

(இன்னம் 16 பாயிண்ட் இருக்குங்கண்ணா இதையெல்லாம் ப்ளாக்ல பகிரங்கமா எழுதற அளவுக்கு நம்ம சமுதாயம் இன்னம் முன்னேறலை)

பெண்ணுக்குள்ளே பூதம்

ஒவ்வொரு ஆணின் மனதிலும் வாழ்விலும் விடை காணப்படாத ஒரு கேள்வி இருக்கு. யார் இந்த பெண்? அது தாயா இருக்கட்டும், சகோதிரியா இருக்கட்டும், மனைவியா இருக்கட்டும். ஆனால் பெண்ணை இவனால புரிஞ்சிக்கிடவே முடியலை.

காதலி,மனைவி விஷயத்துல இவனோட ஜட்ஜிங் ஃபெயில் ஆறதுக்காச்சும் ஒரு லாஜிக் இருக்குது. இவன் "எதையோ"எதிர்பார்த்து டீலாகிறான். தாய்,சகோதிரிகள் விஷயத்துல கூட இவனால தன் கேள்விக்கான  பதிலை ட்ரேஸ் பண்ணவே முடியலை.

அதனாலதான் பெண் இவனை அட்ராக்ட் பண்ணிக்கிட்டே இருக்கா. அக்காவா, தங்கையா, ஃப்ரெண்டா, லவரா, மனைவியா அட லேடி கண்டக்டரை சொல்லுங்க.  இதுக்கெல்லாம் காரணம் என்ன?

ஒரு ஆண்குழந்தை பிறந்ததுமே அந்த குழந்தைக்கு ஒரு பெண்ணோட ஸ்பரிசம் (தாய்)உடனடியா கிடைச்சுருது. அவன் அதை தொடர்ந்து பெற விரும்பறான்.

பெண் குழந்தை பிறந்ததுமே அந்த குழந்தைக்கு ஒரு ஆணோட ஸ்பரிசம் (தந்தை) கிடைக்க நிறைய நேரம் பிடிக்குது.

இங்கே உறவு முக்கியமில்லே . ஆணா பெண்ணாங்கறது முக்கியமில்லை. ஆண் குழந்தைக்கு பெண்ணோட (தாயோட)  ஸ்பரிசம் முக்கியம். பெண் குழந்தைக்கு ஆணோட (தந்தையோட) ஸ்பரிசம்  முக்கியம்.

இந்த விஷயத்துல பெண் குழந்தைக்கு இன் ஜஸ்டிஸ் நடக்குது. நிறைய தகப்பனுங்களுக்கு குழந்தைன்னாலே "ஃபேமிலி லைஃப்ல"  ஒரு இன்டரப்ஷனாதான் தோணும். இதுல  பெண்குழந்தைன்னா   ஒரு நெக்லெஜென்ஸே  வந்துருது. அதுகளை தூக்கறச்சயே ஒரு வித வேண்டா வெறுப்பு தன்மை  பேட் வைபரேஷன்ஸா குழந்தையோட உடலுக்கும், மனசுக்கும் அஞ்சலாயிருது. இதுல குழந்தைக்கு கழுவி, துடைச்சு விடற தகப்பனுங்க நெம்பர் கம்மிதான்.

இதனால ஆட்டோ மேட்டிக்கா குழந்தைகள் மனசுல அப்பான்னாலே ஒரு வித அலர்ஜி வந்துருது. இதனாலதான் டீன் ஏஜ் வாரிசுகள் விஷயத்துல அம்மாவுக்காச்சும் ஓரளவு இன்ஃபர்மேஷன் இருக்கும். அப்பனுங்களுக்கு ? ஒரு ..ரும் தெரியாது.  மோதல் வரும்போது அம்மாவுங்கதான் சமாதானத்துக்கு முயற்சி பண்ற கண்டிஷன்ல இருப்பாய்ங்க. இதுக்கெல்லாம் காரணம் ? ஜஸ்ட் காலத்தே  கிடைக்காத ஸ்பரிசம் தான்.

பெண்களை போலவே ஆண்களோட உடலும் பஞ்ச பூதங்களோட கலவைதான். ( ஜெயேந்திர சரஸ்வதி காணாம போயி தரிசனம் கொடுத்தாரே அந்த கலவை இல்லிங்கண்ணா). ஆணா ஆணோட உடலுக்கு காலத்தே கிடைக்கிற பெண் ஸ்பரிசத்தால அவன் க்யூரிங்க் ஆன சிமெண்ட் ஸ்லாப் மாதிரி ஆயிர்ரான். பஞ்ச பூதங்கள்ள ஏதோ ஒரு அம்சம் கம்ப்ளீட்டா அவனை டாமினெட் பண்ண ஆரம்பிச்சுருது. காலத்தே கிடைக்காத எதிர்பால் ஸ்பரிசம் காரணமா  பெண் ஃபிசிக்கலா/சைக்கலாஜிக்கலா பூஞ்சையா மாறிர்ரா. பஞ்ச பூதங்களோட அம்சங்களும் சமமா அவளை  டாமினேட் பண்ண ஆரம்பிக்குது.

இதனால  ஆணோட  மனசு  அவனவன் ஜாதகம், ஜீன்ஸ், என்விரான்மென்ட்டை பொருத்து  ஒரே பூதத்தோட தத்துவத்தை தான் கொண்டதாயிருது. சிலர் பூமி. சிலர் ஆகாயம்
, சிலர் ஜலம் ( என்ன ஓய் ! உம்மை திட்டி திட்டி இடையில உம்ம பாஷை வந்துடுத்து ) தட்ஸால்.

ஆனால் பெண் மனம் ? அது க்ய்ரிங் ஆகாத சிமெண்ட் ஸ்லாபா இருக்கிறதால  பஞ்ச பூதங்களும் அவளை டாமினேட் பண்ணுது . இதனால தான் பெண் மனம்  பஞ்ச பூதங்களின் மறுவடிவமா செயல்படுது

பெண் நெருப்பா தகிச்சிக்கிட்டிருப்பா( நான் வெறுமனே காமத்தை மட்டும் மென்ஷன் பண்ணலை), அவளை குளிரச்செய்யற மழையா ஆணிருந்தா தணிஞ்சு போவாள். சொம்மா சொம்மா தூண்டி விட்டுக்கிட்டிருந்தா எரிச்சு போட்டுருவா. ரொம்பவே கிட்டே போய் உரசிக்கிட்டே இருந்தா சுட்டுருவா. வேண்டாண்டா சாமினு விலகிப்போயிட்டா தனிமை குளிர்ல நடுங்க வைப்பாள். அவளை காதலால கட்டி வைக்கிற வரை அவள் வீட்டு விளக்கு.  அடக்கியாள நினைச்சா காட்டுத்தீ.  அவளுக்குள்ள இருக்கிற காமம் எரிமலைய விட வேகமானதுதான். ஆனால் பாவம் இந்த பயலுவ  பொழச்சு போகட்டும்னு தனக்குள்ள இருக்கிற காமத்தை தீக்குச்சியாக்கி கற்புங்கற தீப்பெட்டில அடுக்கி வச்சிருக்கா. ஆனால் பாருங்க ஆணினம் தீக்குச்சியை கூட கிழிக்க தெரியாம கைய கொளுத்திக்கிடுது


பெண் ஒரு விசித்திரமான நீர் நிலை. மேலே பார்க்க இதமான சூடு தெரியும், இதமாத்தானே இருக்குனு அசால்ட்டா இறங்கினா மவனே நீ  உறிச்ச கோழிதான் நீ. உள்ளாற எரிமலை குழம்பு இருக்கு. அப்பன்,ஆயி,உறவு, பள்ளி,கல்லூரி, சமூகம் எல்லாருமா சேர்ந்து அவள் மனசுல வச்ச தீயோட ஒப்பிட்டா காமத்தீ எல்லாம் ஜுஜுபி.  இந்த மனத்தீயோட தகிப்பு எல்லை மீறும்போதுதான், அந்த தீயிலருந்து தன் நினைவை டைவர்ட் பண்ணத்தான் காமத்தீயை கவனிக்க ஆரம்பிக்கிறாளோங்கற சம்சயம் கூட எனக்குண்டு. ப்ரோக்கன் ஃபேமிலின்னு கேள்விப்பட்டிருக்கிங்களா? அந்த ப்ரோக்கன் ஃபேமிலீஸ்ல பிறந்த பெண் குழந்தைங்க தான் சீக்கிரம் காதல் வயப்படுது, காமவயப்படுது.

இப்படியே ஒவ்வொரு பூதமா மேச் பண்ணிப்  பாருங்க. நான் அடுத்த பதிவுல  சொல்லப்போற   விஷயங்கள்  மொத்தமும் உங்களுக்கே க்ளிக் ஆகும். 

Monday, May 17, 2010

பெண்கள் 9 வகை : 2

பெண்கள் 9 வகை என்ற தலைப்பில் ஒரு தொடர் பதிவை திராட்டில் விட்டாச்சு. ஆக்சுவலா அதை எழுத ஆரம்பிச்சதே மேற்படி 9 வகை பெண்களை ரோட்டில்,வீட்டில் மட்டுமல்ல பெட்டில் ( படுக்கையில்) எப்படி சமாளிக்கிறதுங்கறதையும் சேர்த்து எழுதனுங்கற எண்ணத்துலதான் . ரோட்டில்,வீட்டில் ஃபால்ஸ் ப்ரஸ்டிஜ் காரணமாவோ, சொசைட்டி மேல பயத்தாலயோ,இன் செக்யூரிட்டி காரணமாவோ ஓரளவுக்கு வேஷமாவது போடற பெண்கள் தங்கள் சுய ரூபத்தை காட்டறது பெட்டில்தான்.




கணவன் சிகரட்டால பலான இடத்துல சுட்டதை எப்படி பெண் காட்ட முடியாதோ

( காரியம் கை மீறிப்போன பிறகு காட்டவேண்டிய இடத்துல காட்டிர்ராங்க அது வேற விஷயம்) . அப்படியே உடலுறவு விஷயத்துல ஒரு ஆண் அவமதிக்கப்படறதை இந்த மேல் சேவனிஸ்ட் சொஸைட்டில கூட பகிரங்கமா சொல்ல முடியாத நிலை இருக்கு.



ஆண்மை குறைவை பத்தி நான் கூட விஸ்தாரமா எழுதியிருக்கேன்.ஆனால் இதுக்கு பெண்களும் பெருமளவு காரணம்னா ஆச்சரியப்படுவிங்க.மனித உடலுக்கும், மனதுக்கும் வித்திரமான உறவு இருக்கு. இது ஏறக்குறைய நம்ம திமுக , காங்கிரஸ் கூட்டணி மாதிரி. யார் வலுவா இருந்தா அவிக அடுத்தவுகளை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாங்க. ( தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மந்திரி பதவி வாங்க கலைஞர் தில்லிக்கே போக வேண்டிவந்ததை ஞா படுத்திக்கங்க) மகளிர் மசோதா வரச்ச சோனியா அம்மா தாத்தாவுக்கு சோப் போடுவாய்ங்க.



அதே மாதிரி மைண்ட் ஆர் பாடி எது ஸ்ட் ராங்கா இருந்தா அது அடுத்ததை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். ஒரு பக்கத்து வீட்டு அக்காவோ,ஆன்டியோ தன் வக்கிரத்தை தீர்த்துக்க ஒரு ஒரு பத்து வயசு பையன உபயோகிக்கிறானு வைங்க. என்னடா இது கொண்டை ஊசி மாதிரி இருக்குன்னு ஒரு கமெண்ட் அடிச்சுர்ரானு வைங்க. அந்த ஒரு கமெண்ட் அவனை இம்பொடென்ட் ஆக்க வாய்ப்பிருக்கு.



அதே மாதிரி நேத்தைய ஆட்டத்துல கணவன் கொஞ்சம் சீக்கிரம் அவுட் ஆயிட்டான். இன்னைக்கு சமையலறைல பாத்திரம் கழுவிக்கிட்டிருக்கிற மனைவிய ஏதோ கோட் சொல்லி சீக்கிரம் ஆகட்டும்னு சொல்றப்ப " அதான் எல்லாம் சீக்கிரமாவே முடிஞ்சு போவுதே இன்னம் என்ன"னு ஒரு வெட்டு வெட்டினா போதும். பார்ட்டியோட ஆண்மை,எழுச்சி எல்லாம் ஃபணால்.



நிறைய மனைவிகளுக்கு கணவனோட பர்ஸு தெரியுதே தவிர அவன் வயிறோ,உடலோ தெரியறதில்லை.அடிப்படை ஆரோக்கிய சூத்திரங்கள், சைக்காலஜி கூட தெரியறதில்லை. இதனால தவறான உணவு, உடலுறவு (உ.ம் உணவு உண்டவுடன்) பழக்கங்கள் அவனை நோயாளி ஆக்கிவிடுகின்றன.



சரி சரி விஷயத்துக்கு வாய்யானு நீங்க முணுமுணுக்கிறது கேட்குது. தோ வந்துட்டேங்கண்ணா



அப்படி நம்ம கிட்டே என்னதான் விசேஷம் இருக்கோ தெரியல. தங்கள் மனசுக்குள்ள புதைச்சுக்கிட்ட சாக்கடைகள, கொட்டப்பட்ட கழிவுகளை கூட திறந்து காட்டிர்ராய்ங்க. (பெண்கள் உள்பட).



செக்ஸாலஜில புத்தக ஞானம், அனுபவ ஞானம்லாம் மினிமம் கியாரண்டி தான். அப்டேஷன் தான் முக்கியம். அதுக்கு சொசைட்டியோட லேட்டஸ்ட் பொசிஷன் தெரியனும். அதுக்கு டேட்டா முக்கியம். டேட்டா நமக்கு கிடைக்கனும்னா நாம ஆட்டத்துல இருக்க கூடாது. (அதாவது இந்த சமாசாரத்தை சொன்னா இவன் நம்ம சம்சாரத்தை பிக் அப் பண்ணிருவானோனு எந்த ஆணும் நினைச்சுரக்கூடாது. இந்த சமாசாரத்தை சொன்னா இவன் நம்மை அலைஞ்சானா நினைச்சு நூல் விட்டுருவானோனு எந்த பெண்ணும் நினைச்சுரக்கூடாது.



ஒரு காலத்துல 1987 வரை 45 வயசு பொம்பளை கூட நம்மை பார்த்ததுமே முந்தாணையை சரி செய்துக்கற கண்டிஷன் இருந்தது. இந்த இமேஜ் எப்படித்தான் மாறிபோச்சோ தெரியாது. இத்தனைக்கும் நாம வேஷம் கட்டறதெல்லாம் கிடையாது. ஏக் மார் தோ துக்கடா. நிஜத்தை தூக்கி போட்டு உடைக்கறதுதான் நம்ம ஸ்டைல்.



பொம்பளைக்கு மறு பெயர் ஹிப்பாக்ரசி. பட்டி தே...யா கூட பத்தினி தங்கமா பில்டப் தர்ரதான் வழக்கம்.ஆனால் நம்ம விஷயத்துல ஊரறிஞ்ச பத்தினி கூட பாதிரியார் கிட்ட பாவமன்னிப்பு கேட்ட கதையா தான் வழுக்கி விழுந்த கதைய போட்டு உடைக்கிறதை ஒரு வரம்னு நினைக்கிறதா அ சாபம்னு நினைக்கிறதா?



உதாரணத்துக்கு ஒரே ஒரு சம்பவம். சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு வாத்தியார் வேலைல இருந்த சொந்த மாமனை கல்யாணம் கட்டிக்கிட்டாள். ரெண்டு வருஷமாச்சு. குழந்தை குட்டி ஏதுமில்லே. சுதா உணர்ச்சி வசப்பட்டு புருஷன் காரனை ரெண்டாந்தாரம் பண்ணிக்க சொல்லி ப்ரஷர் பண்ணி கண்ணாலம் கட்ட வச்சுட்டா. சக்களத்தி வந்த யோகம் சுதா தாயாகிட்டா. இன்னம் கேட்கனுமா வாத்தியார் பாடு பெரும்பாடாயிருச்சு. ( ஆக்சுவலா பெரும்பாடுங்கற வார்த்தைக்கு நிற்காத மாதவிலக்குனு அர்த்தம்.ஆனால் நான் இம்சைங்கற அர்த்தத்துல தான் யூஸ் பண்ணியிருக்கேன்)



அவனை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டா. ரெண்டாவதா கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்த பொம்பள கிட்டே போக கூடாது. அவளை பார்க்க கூடாதுனு ஒரே மாய்மாலம்.வாத்தியார் என்ன பண்ணுவார். ரெண்டாம் கல்யாணம் கட்டிக்கிட்டதே இல்லீகல் .இதுல அந்த பொம்பளை போலீஸ் கீலீஸ்னு போனா இவருக்கு ஆப்புதான்.இங்கன பார்த்தா பெண்டாட்டி டார்ச்சர்.



சரி அன்னைக்கும் இதே விஷயமா தகராறு வந்திருக்கு. எப்படியோ சமாதானமாகி கோவிலுக்குனு புறப்பட்டிருக்காய்ங்க. போற வழில வாத்தியாரு பெண்டாட்டிக்கு ரிஸ்ட் வாட்ச் ஒன்னு வாங்கி பிரசண்ட் பண்ணியிருக்காரு. சாமி தரிசனம்லாம் முடிஞ்சு குளத்துப்படிக்கட்டில உட்கார்ந்து தேங்காயை உடைச்சு சாப்பிட்டுக்கிட்டே ஏதோ பேசிக்கிட்டிருந்திருக்காங்க. வாத்தியார் மெல்ல டாப்பிக்கை ஸ்டார்ட் பண்ணியிருக்கார். அவளை கட்டி வச்சது நீதானே .. அவளும் ஒரு பொம்பளதானே இங்கன 20 நாள் இருந்தா அங்கன பத்து நாள்னா இருக்கனுமில்லயான்னிருக்காரு.அவ்ளதான் வாத்தியார் வாங்கி கொடுத்த ரிஸ்ட் வாட்சை கழட்டி பட்டைய கையில பிடிச்சிக்கிட்டு சிதறு தேங்காயை உடைக்கிற மாதிரி குளத்து படில அடிச்சு உடைச்சிருக்கா. ( சம்பவம் நடக்கிறது 1994ல/ரிஸ்ட் வாட்சுக்கு எவ்ள மதிப்பு, விலை இருந்திருக்கும் கணக்கு போடுங்க)



சம்பவம் காலைல நடக்க உதா மதியம்/மாலை நாலு மணியளவுல என் கிட்டே வந்தா . நடந்ததையெல்லாம் சொல்லிக்கிட்டே வந்தா. ரிஸ்ட் வாடை உடைச்சதையும் சொன்னாள். நான் இதெல்லாம் இன்செக்யூரிட்டி, பொசசிவ் நெஸ் அது இதுன்னு விளக்க ஆரம்பிச்சேன்.



அவள் என்ன சொன்னா தெரியுமா? அவள் சொன்ன சில அப்பட்டமான வார்த்தைகளை தவிர்த்து தரேன்.



" அட சொம்மா கிடப்பிங்களா ..அவன் ஒரு ஆம்பளை சிங்கம். 20 நாள் எனக்கு சுகம் கொடுத்து கிழிப்பானாம். அவளுக்கு 10 நாள் சுகம் கொடுத்து கிழிச்சுருவானாம் . அவன் பாடை மூஞ்சுல கொள்ளி எடுத்து வைக்க சீவல் பாக்கு மசியற நேரம் கூட தாக்கு பிடிக்க முடியாத ஜொள்ளான். எனக்கு இந்த டார்ச்சர் பழகி போச்சு. அவனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணதே குழந்தைக்காக இல்லே. என்னால அந்த டார்ச்சரை அனுபவிக்க முடியாம , என்னைக்கோ ஒரு நாள் எனக்குள்ள இருக்கிற சகலத்தையும் விழிக்க வச்சுட்டு அலுத்து போயி பிணமா தூங்கறயாங்கற ஆத்திரத்துல எங்கே அவனை கழுத்தை நெறிச்சு கொன்னுருவனோங்கற பயத்துல அவனை கழட்டிவிடத்தான் ரெண்டாம் கல்யாணத்தை பண்ணேன். என் தரித்திரம் அந்த வருஷமே எனக்கு குழந்தை உண்டாயிருச்சு.



பாவம் அந்த பொண்ணு இந்த நாயி அந்த பக்கம் போகாம இருந்தா எவனா சரிய்யான ஆம்பளையா பார்த்து பிக்கப் பண்ணிக்கட்டும்னுதான் இவனை அங்கே போக கூடாதுனு மடக்கி போட்டேன். இவன் 20 நாள் பத்து நாள்னதும் இவன் பவிசு ஞா வந்துருச்சி .ஆத்திரம் தாங்க முடியலை. பெட் ரூம்ல இருந்திருந்தா அவனோட .....ஐ வெட்டிப்போட்டிருப்பேன். பப்ளிக் ப்ளேசா போச்சு அதை செய்ய முடியாத குறைக்கு ரிஸ்ட் வாட்சை உடைச்சேன்"



"அவளே விஷயத்தை போட்டு உடைச்சதால அயனான டிப்ஸ் எல்லாம் கொடுத்து அனுப்பிச்சேன். பத்து வருஷம் கழிச்சு வந்தாள். இப்போ நிலைமை எப்படினு விசாரிக்க பெரிசா பெருமூச்சு விட்டு " சமாளிக்க முடியல சாமி.. என்னருந்தாலும் கடவுளுக்கு கூட பார்ஷியாலிட்டி இருக்கு. ஆம்பளைக்கு ஒரு வயசுக்கப்புறம் வயசாறதே இல்லே. பொம்பளைக்கு மட்டும் வயசாகிட்டே போகுது. அதை குறைக்கறதுக்கு எதுனா டிப்ஸ் இருந்தா சொல்லேன்" னு கேட்டாள். சொல்லி அனுப்பிச்சேன்.



இந்த மாதிரி கதைகளை எல்லாம் கேட்டு கேட்டு நான் புரிஞ்சிக்கிட்ட விஷயம் என்னன்னா..



என்னதான் பம்பாடு கலாசாரம்னு கதைச்சாலும் ஒரு பெண்ணுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய உடலின்பம் கிடைக்கலன்னா அவள் அப் நார்மலாயிர்ரா.



சிலர் மேல பெயாடுது. சிலர் மேல சாமியாடுது, சிலர் நான் அடிக்கடி சொல்ற மாதிரி உன்னால "அது" முடியலை.. உங்கப்பன் ஆத்தாளையாவது ஓல்டேஜ் ஹோம்ல சேர்த்துருங்கற ஸ்டேஜுக்கு போயிர்ராங்க. இப்படி நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ். பொது சேவை, அரசியல், ஆசிரமம், சேலஞ்சிங் ஜாப்ஸுனு வர்ர பெண்கள் கூட இந்த கேட்டகிரில வர்ராய்ங்க.



நூத்துக்கு 99 சதவீதம் ஏதோ ஒரு ரீ சேனலைஸேஷன் மூலமா, டைவர்ஷன் மூலமா அட்ஜஸ்ட் ஆயிர்ராங்க. ஒரே ஒரு சதவீதம்தான் தினத்தந்தில கள்ளக்காதல் எதிரொலியா கேட்கிறாய்ங்க.



ஆயிரம்தான் சொன்னாலும் (பல்லாயிரம் ஆண்டுகால அடிமைத்தனம் காரணமா பெண் தன் உரிமைகளை உணரவேயில்லை. உரிமைக்காக போராட கத்துக்கவே இல்லை. இதர உரிமைகள் விஷயத்துல கொஞ்சமா முன்னேற்றம் தெரிஞ்சாலும் செக்ஸ் தொடர்பான உரிமைகள் குறிப்பா சொன்னா "ஆர்காசம்"விஷயத்துல விழிப்புணர்ச்சியே இல்லே. ரொம்பவே தயங்கறாங்க.ஏதோ இந்த சாஃப்ட் வேர் யுகம் ஆரம்பிச்சதால அங்கொன்னும் இங்கொன்னுமா புரட்சி கீதம் ஒலிக்குது. ஆனா இது சிம்ஃபனியா மாறனும்.



இதை நான் ஒரு ஃபெமினிஸ்டுங்கற பட்டத்துக்கு ஆசைப்பட்டு சொல்லலே. ஒரு பார்ன் ஹ்யுமேனிஸ்டா இதை வலியுறுத்தறேன். மனித உடலுக்கு, மனசுக்கு,புத்திக்கு மையம் செக்ஸ். இதை அலட்சியப்படுத்திட்டு, மறுக்கப்படறதை ஏத்துக்கிட்டு, ஒன்னத்தையும் சாதிக்க முடியாது. அதுக்கு முன்னாடியே அப் நார்மலா மாற ஆரம்பிச்சுர்ராங்க.



ஒரு ஆண் அப் நார்மலா மாறினா சொசைட்டி மேல அவனோட இம்பாக்ட் ரொம்ப குறைவு. ஒரு பெண் மாறினா? அதனோட விளைவுகள் கொடூரமா இருக்கும். ஒரு ஆம்பளை வாத்தியார் மாணவி கிட்டே சில்மிஷம் பண்ணான்னா ஹும் ஆம்பள புத்தியே அவ்ளதான்னு பெண்கள் கூட ஜஸ்டிஃபை பண்ணிக்கிறாங்க. ஆனால் ஒரு ஆசிரியை ஒரு மாணவன் கிட்டே அப்படி நடந்துக்கிட்டானு தெரிஞ்சா ? ஆணினமே அதிர்ந்து போயிருது. காதலிக்கவே ஆரம்பிக்காத டீன் ஏஜன் கூட கேர்ள்ஸ் ஆர் பேட் னு சொல்ல ஆரம்பிச்சுர்ரான். அந்த ஒரு பெண் ( டீச்சரை சொல்றேன்) அந்த செயலில் விரும்பி இறங்கியிருப்பாள்னு சொல்லலை. பல காரணங்கள் அவளை அந்த செயலுக்கு உந்தி தள்ளியிருக்கு. அதுல முதன்மையானது ஒரு மனித பிரகிருதியா அவளுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய செக்ஸ் கிடைக்கலே.



ஆண்கள் விஷயத்துல எந்த அளவுக்கு உருவேத்தனுமோ ஏத்தியாச்சு. பெண்கள் விஷயத்துல நம்ம ப்ளாக்ல வாயை திறக்கனும்னா கொஞ்சம் பயம். ஏன்னா இங்கே சனத்துக்கு தெரிஞ்சதெல்லாம் என்னோட டை அடிச்ச தலை, சேப்பு தோல், டிவி ஆர்ட்டிஸ்ட் தனமான பர்சனாலிட்டிதான்.



ப்ராக்டிக்கல் லைஃப்ல இதெல்லாம் தடையா நிக்கறதுல்ல. நம்ம கடந்த காலம், நிகழ்காலம்லாம் தாய்குலத்துக்கு சப்ஜாடா தெரிஞ்சிருக்கிறதால யாரும் தப்பா புரிஞ்சிக்கிறதில்ல.



பெண்கள் 9 வகைங்கர இந்த தொடர் பதிவை ஆரம்பிக்க காரணம் ஆண்களுக்கு பெண்களை பத்தி புரிஞ்சிக்க உதவறதோட பெண்களுக்கும் தங்களை பத்தி பெட்டரா புரிஞ்சிக்க உதவும்ங்கற நம்பிக்கை. ப்ளஸ் இதுல மேற்படி 9 வகை பெண்களோட உடலுறவு விருப்பங்கள், எண்ணங்கள், கனவுகளையும் அவற்றாய் நிறைவேத்துற மார்க்கங்களை விளக்கலாம்னு நினைச்சிருந்தேன். ஆனால் எங்கே என்னோட டை அடிச்ச தலை, சேப்பு தோல், டிவி ஆர்ட்டிஸ்ட் தனமான பர்சனாலிட்டி எல்லாம் சேர்ந்து என்னோட உண்மையான அக்கறையை / அப்பாத்தனமான மென்டாலிட்டிய புரிஞ்சிக்கவிடாம செய்துருமோங்கற தயக்கத்துல



இந்த தொடரோட முதல் அத்யாயம் யு சர்ட்டிஃபிகேட்டா அமைஞ்சுருச்சு.. பாதில உடைச்சு திருப்பவும் முடியாம தொடர்வதற்கான வேக்குவம் இல்லாம நின்னுப்போச்சு.



சரி சம்திங் ஈஸ் பெட்டர் தென் நத்திங்குனு இந்த இரண்டாவது அத்யாயத்தை துவக்கறேன்.



சூரியன்,சந்திரன்,செவ்வாய், ராகு,குரு தொடர்பான பெண்களோட டீட்டெயில்ஸை கடந்த பதிவுல கொடுத்தாச்சு. இப்போ பதிவு தொடருது.



சனி தொடர்பான பெண்கள்:

நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். சனி தொடர்பான ஆட்கள் ,தொழில்கள், சனித்தொழில் செய்வோர் அனுகூலம்.இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க. எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.

இவங்க வாழற வீடு முதல் யூஸ் பண்ற வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். தீர்காயுள் இருக்கும். பிரயாணங்களை வாய்தா போட்டுக்கிட்டே இருப்பாங்க.



சனி அசுபபலமானால்:

கருப்பாக இருக்கலாம். சுத்தம் சுகாதாரத்தில் ஈடுபாடு இராது. ஆறிய உணவுகளையும் விருப்புடன் உண்பர். கால் , நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். வரலாம். கஞ்சத்தனமா இருப்பார்கள். திடீர்னு எக்ஸ்ட் ரா வேகண்டா செலவழிச்சுருவாங்க படிப்பு ஃபணால். சனி தொடர்பான மனிதர்கள்,தொழில்கள்,.மேற்கு திசை பிரதி கூலம். கணவன் , தந்தை,சகோதரர்கள் சனி தொடர்பான தொழிலில் இருக்கலாம். தம்மை விட பல படி தாழ்ந்த குடும்பத்தில் வாழ வேண்டி வரலாம். வெகண்டையா பேசுவாங்க. இவிக பேச்சே பிரிவுக்கு விடற அழைப்பா இருக்கும் பகல்ல தூங்கி வழிவாங்க. ராத்திரில சுறு சுறுப்பா இருப்பாங்க. அம்மா தீர்க நோய் உள்ளவரா இருக்கலாம். பல காலம் குழந்தை குட்டி இல்லாம இருந்து அப்புறம் பிறக்கலாம். போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் வாசலை மிதிக்க வேண்டி வரலாம்.



அடுத்த பதிவுல மொக்கையெல்லாம் இல்லாம புதன், கேது,சுக்கிரன் தொடர்பான பெண்கள் அவிக குணங்களை பார்ப்போம்.



கேள்வி:

இந்த தொடர்பதிவுல மேற்படி வகை பெண்களின் உடலுறவு கனவுகள்,எண்ணங்களை இவிகளை சமாளிப்பதற்கான டிப்ஸை தர உத்தேசம். ஒரு வேளை திரட்டிகள் கவிதை07 ஐ தடை பண்ணிட்டா டைரக்டா கூகுல்ல தேடி பிடிச்சு படிக்க உங்கள்ள எத்தனை பேர் தயாராயிருக்கிங்க அட்டெண்டென்ஸ் ப்ளீஸ்