Showing posts with label Spiritula Experience. Show all posts
Showing posts with label Spiritula Experience. Show all posts

Friday, August 26, 2011

நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சுங்கோ..


அவன் -அவள்-அது : 22
அண்ணே !
இந்த தொடரை எழுதும்போது என்னடா இது எல்லாம் பழைய சம்பவமா எழுதிக்கிட்டிருக்கம். சனம் ஆருன்னா ஒன்னோட ஆத்தா இப்பம் என்னடா கிழிச்சான்னு கேட்டுரப்போறாய்ங்கன்னு ஒரு குறுகுறு இருந்துக்கிட்டே இருந்தது. ஆனால் ஆத்தாவோட திருவிளையாடல் ஆரம்பமாயிருச்சுங்கோ... நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சு..

என்னடா இது எல்லாம் புலம்பலா இருக்குமோன்னு பக்கத்தை மூடிராதிங்க. பால பாடம் இன்னைக்கும் தொடருது. இங்கே அழுத்தி படிங்க.

கருத்து கந்தசாமி கணக்கா சமகால நேஷ்னல் டெவலப்மெண்ட்ஸ் பத்தியும் ஒரு ஐட்டம் தட்டி விட்டிருக்கேன். அதை இங்கே அழுத்தி படிங்க

இனி அவன் அவள் அது ..................


கடந்த பதிவு ஒன்றில் ஆத்தாளுக்காவ தெலுங்குல நான் எழுதின தெலுங்கு கவிதைகளை வலையேற்ற ஒரு ஜகத் சோம்பேறிக்கு பிளாக் அண்ட் வைட் மானிட்டரோட ஒரு கம்ப்யூட்டரை கொடுத்துட்டு வந்தது ஞா இருக்கலாம்.

இன் கம் சர்ட்டிஃபிகேட் வைக்காததால காலேஜ்ல அவன் பையனுக்கு ரூ.31 ஆயிரம் அடிஷ்னலா கட்டவேண்டி வந்துருச்சு. அதை சாக்கா வச்சு வலையேற்றத்தை அவாய்ட் பண்ணிக்கிட்டு வந்தான். ஆத்தா அருளால காலேஜ் கண்டம் மலையேறிப்போச்சு.

இது நடந்து ஒரு வாரம் போல ஆனாலும் பார்ட்டி வலையேற்றத்தை கண்டுக்கற மாதிரி இல்லை. இத்தனைக்கும் அவனுக்கு எத்தனையோ ஆசையெல்லாம் காட்டினேன். மாசத்துக்கு இவ்ளன்னு காசுதரேன். எலக்ட்ரிசிட்டி போர்ட் ஆஃபீஸுக்கு போற வழியில தான் அவனோட மருந்து கடை . தாளி ஒரு டாட் மேட்ரிக்ஸ் ப்ரிண்டர் வாங்கித்தரேன். ஒரு மனு அடிச்சு கொடுத்தாலும் இருபது ரூபா வரும் இப்படி நிறைய.

ஆனால் பார்ட்டி எதையும் கண்டு்க்கலை. நேத்து ராத்திரி கடை பூட்டை உடைச்சு எல்லாத்தையும் வாரிக்கினு பூட்டானுங்களாம் ( நம்ம கம்ப்யூட்டர் உட்பட)

இதை எப்படி புரிஞ்சிக்கிறது புரியலை. காலையில 7 மணி அளவுல ஃபோன் வந்தது. இப்பம் 11.10 இதுவரை நாம என்ன ஏதுன்னு கண்டுக்கலை. இந்த சம்பவம் ஏன் நடந்தது? வலையேற்றத்தை நிரந்தரமா முடக்கவா? அது ஆத்தாளால கூட முடியாத வேலை.

வாழ்க்கையில லட்சியம்னு ஒன்னை வச்சுக்கிட்டு அதை தவிர மத்த எல்லாத்தையும் திராட்டுல விட்டுட்டு ஃபைட் பண்றவுக மேட்டர்ல கிரகங்கள் தோத்துப்போயிரனும்னு ஆத்தாளே ஒரு சாபம் விட்டு வச்சிருக்காளாமே தெரிமா?

இந்த சம்பவத்தால அசமஞ்சமா இருந்தா நம்மாளோட மைண்ட் உசுப்பப்பட்டு / இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் / கில்ட்டியால முழு வேகத்துல வலையேற்றம் நடக்குமோ?

அல்லது இதையே ஒரு சாக்கா வச்சு திராட்டுல விட்டுருவானோ? நமக்கு கம்ப்யூட்டர் திருடு போனதை பற்றி எள்ளளவும் கவலையில்லை.

எதுனா பூட்சின்னா கர்மம் தொலைஞ்சதுனு நினைக்கிற சாடிஸ்ட் நாம. எதுனா வந்தாதேன் பயப்படுவோம். இதும்பின்னாடி எந்த கருமம் வந்திருக்கோன்னு சிந்திப்பம்.


Monday, July 11, 2011

என் டெஸ்க் டாப்பில் பெரியார்!




பெரியாரை உங்களுக்கெல்லாம் ஒரு நாத்திகராத்தான் தெரியும். ஆனால் எனக்கு அவர் ஒரு குப்த யோகி என்பது என்னைக்கோ ஸ்பார்க் ஆயிருச்சு. பெரியார் ஒரு சித்த புருஷர்னு என்னைக்கோ பதிவு கூட போட்டுட்டன்.
நம்ம டெஸ்க் டாப்ல பெரியாருக்கு என்ன வேலைனு கேப்பிக .சொல்றேன். நம்முது கடகலக்னம்ங்கற மேட்டரு ஜகத் ப்ரசித்தம். ஏற்ற இறக்கம்ங்கறது உடன் பிறந்தது. இது ஆன்மீகத்துலயும் As it is ..தொடருது.
ஒரு கட்டத்துல " நானே அதுவோ?.. மாறுவேஷத்துல இங்கன வந்து -இவிக பண்ற லொள்ளுல நான் யாருங்கறதையே மறந்துட்டனோ"ங்கற சந்தேகம்லாம் வந்துரும்.
படிப்படியா ஷீர்டி பாபாவோட மறுபிறவி போலனு நினைக்கிறது - இன்னொரு கட்டத்துல அய்யய்யோ பாபா ரேஞ்சு என்ன நம்ம கேரக்டர் என்ன.. ஆளைவிடு.. நாம ஏதோ சம்மத்துல ஆத்தாளுக்காக தலை-கிலை வெட்டி கொடுத்திருப்போம் போலனு நினைப்பு ஓடும்.
ஒரு கட்டத்துல எல்லா சாமியும் வெறும் சாமிதேன். இதுகளுக்கு பக்தனோட " நாற பொழப்பு தெரியாது" நம்ம பாஸ் தான் டூ இன் ஒன் (ஆஞ்சனேயர்). இந்த கட்டத்துல நெத்தியில சந்தனம் - குங்குமம் - விபூதி எதையும் வைக்கமாட்டேன்.
ஆஞ்சனேயருக்கு வச்ச ஊதுவத்தி சாம்பலை மட்டும் நெத்திக்கு இட்டுக்குவன்.இந்த வரிசையில கிராஃப் படிப்படியா விழுந்துக்கிட்டே வந்து "தாளி.. பார்ப்பானுவ விட்டதெல்லாம் ரீலுதான் போல. நாமதான் பைத்தாரத்தனமா அதுல முத்துக்களை தேடி நாறிக்கிட்டிருக்கம். இஸ்லாம் - கிறிஸ்தவம் தான் உண்மையான மதம் போலங்கற ஸ்டாண்ட் வந்துரும்.
இந்த ரேஞ்சுல ஒரு கட்டத்துல தாளி தெய்வம் கிய்வம்லாம் ச்சொம்மா பீலா. சத்தியம் தேன் தெய்வம்னுட்டு ஆயிரும். அப்பம் "சத்யமேவ ஜெயதேங்கற ஸ்லோகனை மந்திரம் போல சொல்லிக்கிட்டு கிடப்பேன்.
இந்த மாற்றங்கள் லாங் ரன்னிலும் வரும்.ஷார்ட் ரன்லயும் வரும். பூமி தன்னை தானே சுத்திக்கிறது ஒரு வித சுழற்சி - சூரியனை சுத்திவர்ரது இன்னொரு விதமான சுழற்சி.
இப்படி ஒரு லாங் ரன் சுழற்சியில சத்தியத்தை உபாசிச்சிட்டிருந்தப்பதேன் சாமி,பூதம்,ஊரு உலகம்லாம் கைவிட்டுட்ட பிற்பாடு சத்யாங்கற நண்பன் காட் ஃபாதரா இருந்தான். ( இன்னைக்கும் சத்யாவுக்கு 108 நாமதேன்)
இடையில "தம்ம பதா" படிச்சுட்டு புத்தரை ஆதர்சமா கொண்டிருந்த காலகட்டத்துல அஷோக்ங்கற யங் ஃப்ரெண்ட் கொஞ்ச காலம் சகாயமா இருந்தான்.
இதெல்லாமே கை விட்டு ஆப்படிக்கிற சந்தர்ப்பத்துல நம்ம சகா / குரு/தெய்வம்/வழிகாட்டி எல்லாமே நம்ம பெரியார் தேன்.
ஆன்மீகம் தன் உச்சத்துக்கு போனா அங்கன தெய்வம் கிடையாதுங்கோ..அதுமாதிரி ஒரு சீக்வன்ஸ் நேத்து வந்துருச்சு.
ஸ் .. அப்பாடா ஒரு ரவுண்டு முடிஞ்சதுங்கற நிம்மதி மனசுல உருவாகிருச்சு. "ஆண் பெண் வித்யாசங்கள் " தொடர்ல என்னையும் அறியாம பல சாஸ்வத உண்மைகளை போட்டு உடைச்சுட்டாப்ல இருக்கு..
மன்சன் சாமியோட தயவை எதிர்பார்க்கிற பிச்சைக்காரனா இல்லாம சுயமரியாதையோட - தன் வாழ்க்கையை புரிஞ்சிக்கிட்டு -வாழ்க்கை துணையை சக போராளியா சேர்த்துக்கிட்டு வாழ்வின் மர்மங்களை ப்ரேக் பண்ணி வாழ்வாங்கு வாழ்வதற்கான டிப் ஏதோ இந்த தொடர்ல மாட்டிக்கிச்சு போல.
ஆத்தா மட்டும் "ஆங்காரி"இல்லிங்ணா. எல்லா ஜேஜிக்கும் அந்த அகங்காரம் சாஸ்தி. இவன் நம்மை மீறி போறதானு கட்டைய போட்டுரும். ( இது நம்ம நன்மைக்காகவே கூட இருக்கலாம்.அது வேற கதை)
இந்த தொடரை தொடர முடியாம இடையில சின்ன சின்னதா டிசைன் டிசைனா எத்தனையோ ஆப்பு.
சரி பதுங்கித்தான் ஆகனும்னு டீல்ல விட்டுட்டன். ( நாம புலினு ஒரு நெனப்புண்ணே) சிச்சுவேஷன் ஓரளவு கூல் ஆன பிற்பாடு இந்த தொடரை மறுபடி ஸ்டார்ட் பண்ணேன்.
அஷ்டம சனி+கேது புக்தி காம்பினேஷன்லாம் பிச்சை வாங்கற ரேஞ்சுக்கு லொள்ளு ஆரம்பிச்சுருச்சு.
நல்லவேளையா நமக்கோ - நம்மை சேர்ந்தவுகளுக்கோ ஆபத்து ஒன்னுமில்லைன்னாலும் நம்ம கம்ப்யூட்டருக்கு ஆப்பு வந்துருச்சு.
இந்த 3 நாள்ள 6 ஃபார்மட் - 12 அப்டேஷன். எல்லாம் ஓகேங்கற ஸ்டேஜ்ல ஆன்டி வைரஸ் போட்டா மறுபடி பல்பு.
இதெல்லாம் தாளி 2007 க்கு முந்தி நடந்திருந்தா எறும்பு கடிச்சாப்ல கூட இருந்திருக்காது. "ங்கோத்தா இவ்ளதானே"னு துடைச்சு விட்டிருப்பேன். அப்ப நாம காஞ்ச திராட்சை மாதிரி. ஈரம்தேன் ஆகாது. எத்தீனி கோடை வந்தாலும் - ஜுஜுபி.
ஆனா பாருங்க இப்பம் 2007 முதல் தந்தி - 2009 முதல் ஆன் லைன் ஜோதிட ஆர்வலர்கள் தயவுல நிலைமை மாறிப்போச்சு.
தோல்விகள் - அல்லாட்டங்களோட டச் விட்டு போச்சா பீதியில பேதியாயிருச்சு. கடுப்புல ங்கொய்யால இந்த சாமிங்களோட பேச்சே வேணாம். இதுகளுக்கு ஆசாமியோட கஷ்டம்னா என்னன்னே தெரியாது.
இதைவிட ராமசாமியே அதாங்க ராமசாமி நாயக்கரே பெட்டர் ஆஃபருன்னு டிசைட் பண்ணேன்.
"தாளி என்னடா இது நாற பொழப்பு.. இன்னைக்காச்சும் ஆருனா மனசுக்கு பிடிச்ச பார்ட்டியோட கண்ணன் காலேஜ் கிரவுண்டுல ஒரு மரத்தடியில மனசுக்கு பிடிச்ச விஷயங்களை பேசிக்கிட்டிருந்தா நல்லாருக்குமே.. இதுக்கு பெரியார்தான் வழி பண்ணனும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.
ஆச்சரியம் என்னடான்னா அதே செகண்டு மனசுக்கு பிடிச்ச ஃப்ரெண்டுகிட்டேருந்து ஃபோன்.
கண்ணன் காலேஜ் கிரவுண்ட்ல வெய்ட் பண்றேன் வா..
இதுக்கு இன்னா சொல்றிங்கணா? ஒப்பீனியன் ப்ளீஸ்..

Tuesday, June 29, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 10

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் என்ற தொடரை யார் படிக்கிறாய்ங்க, அவிக என்ன நினைக்கிறாய்ங்கன்னு ஒன்னும் தெரியாத நிலைல இதை தொடர்ந்து எழுதிக்கிட்டிருக்கேன். பல தடவை சொல்லியிருக்கேன். என்னுது கடகலக்னம் ரெண்டே கால் நாளைக்கு மிஞ்சி ஒரே வேலைய தொடர்ந்து செய்ய முடியாதுன்னு. இருந்தாலும் இதை தொடர உங்கள்ள யாரோ ஒருத்தரோட வில் பவர் தான் காரணமா இருக்கும். அந்த யாரோ நீங்களா கூட இருக்கலாம்.

1997  ல டச் ஆன பாபா  1999ல ஷீர்டி வரவச்சதையும் பிரதி வியாழன் பிரச்சினைகளால பாதிக்கப்பட்ட  தன் பக்தர்களை எனக்கு எண்டார்ஸ் பண்ணிக்கிட்டிருந்தாருங்கற விசயத்தையும் கடந்த பதிவுகள்ள சொல்லியிருக்கன். இந்த லிஸ்ட்ல எங்க தொகுதி எம்.எல்.ஏ வையும் எண்டார்ஸ் பண்ணாருன்னும் சொல்லியிருந்தன்.

படக்குனு 2004க்கு தாவி 2004 முதல் 6 வருஷத்துல நடந்த சம்பவங்களை விவரிக்கிறேன்னு கடந்த பதிவை முடிச்சிருந்தேன். ஆனா  இன்னைக்கு  நடந்த மேட்டரால 1998ல நடந்த ஒரு சம்பவமும்,1999ல  நடந்த இன்னொரு சம்பவமும் ஞா வந்தது. அந்த 2 சம்பவங்களை இப்ப பார்ப்போம்.

முதல்ல இன்னைக்கு நடந்த சம்பவம்:
உஞ்ச விருத்தி பிராமணன் போல பவித்திரமா வாழ்ந்த காலம் ஒன்றுண்டுன்னு பெருமையா சொன்னாலும் அது அந்த காலம்னு தான் சொல்ல முடியுது. இப்ப நானேதும் சந்தனக்கட்டை ஓட்டறதில்ல, நில ஆக்கிரமிப்பு பண்றதில்லன்னாலும் யோக சித்திக்கு தேவையான முக்கிய அம்சமான பிரத்யாஹாரத்தை ( பிறர் தரும் பொருளை ஏற்பது) பின்பற்ற முடியாத நிலை. அதனால எனக்குள்ள கொழுந்து விட்டு எரிஞ்சிட்டிருந்த  அக்னி சிம்னிக்குள்ள விளக்கு மாதிரி ஆயிருச்சு.

எனக்குள்ள கனன்றுக்கிட்டிருந்த சத்தியாக்ரஹம் (ஆக்கிரஹம்னா கோவம்னு அர்த்தம்) இன்னைக்கு கேவலம் குண்டூசி/சின்ன குத்தூசி  கணக்கா கட்டுரை எழுதற ரேஞ்சுக்கு வந்துருச்சு. ஒரு வார்த்தைல சொல்லனும்னா நீர்த்து போயிட்டன். லைஃபோட காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டேனு தான் சொல்லனும். அதே நேரத்துல இந்த காம்ப்ரமைஸ் நிரந்தரம் கிடையாது.

எனக்குள்ள ஒரு  நம்பிக்கை இருக்கு ஒரு நாளில்லை ஒரு நாள் விடியும். இந்த ப்ருஹன்னளை வேடம் முடியும். எதிர்காலத்துல  இன்றைய லஞ்ச லாவணியங்கள், ஜன நாயகப்படுகொலைகளுக்கு எதிரா  நடக்கப்போற தர்ம  யுத்தத்துல  அபிமன்யு போல பத்மவ்யூகத்துல சிக்கி சாவேனோ, அர்ச்சுனன் மாதிரி ஜெயிச்சு வருவேனோ தெரியாது.  ஆனால் யுத்தம் நிச்சயம். அதுல எனக்கொரு பங்கு நிச்சயம்.

என்னங்கண்ணா மொக்கை அதிகமாயிருச்சா மேட்டருக்கு வந்துர்ரன்.

ஸ்ரீ சாயி சத நாமாவளி ஒரு லட்சம் பிரதி போடறதா அறிவிச்சாச்சே தவிர வேலைகள் என்னமோ அரசு அலுவலகம் கணக்கா தான் நகருது. ஒரு டெம்போ வரணும், வேகம் வரணும்னா பாபா தொடர்பான பாடல்களை கேட்கனும்னு ஒரு துடிப்பு. ( தளர்ந்து போன காலத்துல வாயாக்ரா மாதிரி).

சங்கராபரணம் படத்துல ஓங்கார நாதானுசந்தான மவுகானமேன்னு  பாட்டு வரும்.
அதுல ஒரு வரி  "அத்வைத சித்திக்கி அமரத்வ லப்திக்கி கானமே சோபானமு"

ஓங்கார நாதானுசந்தான மவுகானமேங்கற வரியை பார்த்து இது ஏதோ சந்தானம் சம்பந்தப்பட்டதுன்னு நினைச்சுராதிங்க தம்பி.. ஓங்கார நாதத்துடன் இணைக்க கூடியது கானம் ஒன்றேன்னு இதுக்கு அர்த்தம். (அனு சந்தானம்னா இணைத்தல்னு அர்த்தம் சொல்லலாம்)

"அத்வைத சித்திக்கி அமரத்வ லப்திக்கி கானமே சோபானமு" ங்கற வரியை பாருங்க. அத்வைதம்னா அல்ஜீப்ரானு நினைச்சு பயந்துக்காதிங்க. த்வைதம்னா ரெண்டுனு அர்த்தம். அத்வைதம்னா ரெண்டல்லாத நிலைனு அர்த்தம். த்வைதம்னா கடவுள்+பக்தன்னு ரெண்டு கிராக்கியிருப்பாய்ங்க. அத்வைதத்துல பக்தன் கடவுளோட போய் ஜிங்குனு ஒட்டிக்கிட்டு ஏகமாயிருவான். அதான் அத்வைதம். ஓகே.

இந்த அத்வைத ஸ்டேஜுக்கும், அமரத்வ லப்திக்கும் ( கடவுளா மார்ரது) கானம் தான் வழிங்கறார் கவிஞர்.(வேற யாரு வேட்டூரி சுந்தர ராமமூர்த்திதான்)

இந்த காரணங்களால ஷீர்டி சாயி மஹத்யம்ங்கற படத்தோட பாடல்களை இன்டர் நெட்ல் டவுன் லோட் பண்ணி கேட்கலாம். அப்படியாச்சும் சார்ஜ் ஏறுதா பார்க்கலாம்னு  ஒரு எண்ணம் வந்தது.

ஆன்மீகத்துல ஒரு விதியிருக்கு. உங்க ஆன்மீக கிராஃப் சன் க்ரூப்ஸ் ஷேர் விலை மாதிரி எப்பவும்  ஏறிக்கிட்டே போகாது.  கொஞ்ச நாள் ஏறும் படக்குனு விழுந்துரும். விழுந்த ஒவ்வொரு தரமும் ரெண்டு மடங்கு ஏறும். ( நன்றி: ஓஷோ)

இதை ஆன்மீக மெனோஃபஸ்னு கூட சொல்லலாம்.

ஏறக்குறைய ஒரு வாரமா அப்ப்பப்போ ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தேன். வேலைக்காகலே.இன்னைக்கு ஒரே பிடியா  ஒரு மணி நேரம் உட்கார்ந்தும் மண்டை காஞ்சதுதான் மிச்சம்.

நெட்ல எல்லாம் கிடைக்கும்ங்கறது மிகை. கடைசில கடுப்பா போய் ஃப்ரெண்டோட சி.டி சென்டர்ல நோண்டி நுங்கெடுத்து சி.டியை பிக் அப் பண்ணிக்கிட்டு  வீட்டுக்கு வந்தேன்.

அதுக்கு முன்னாடி ஒரு உபகதை.ராம ராவண யுத்தம் முடிஞ்சுருச்சு.  ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடக்குது. ராமர் அனுமாரை கூப்டு ஒரு ரத்தினமாலையை ப்ரசண்ட் பண்றாரு. உடனே அனுமாரு அதை பிச்சி ஒவ்வொரு மணியா கடிச்சு பார்க்க ஆரம்பிச்சாரு. சீதைக்கு கோவம் வந்துருச்சு . குரங்குனு காட்டிட்ட பார்த்தியானு நினைச்சோ என்னமோ " வாட் ஈஸ் திஸ்?"னிட்டு சீறினாய்ங்க.

ஆஞ்சனேயர் இந்த மணிகள்ள என்  ராமனோட அதிர்வுகள்,ருசி இருக்கானு பார்க்கிறேன். அப்படி இருந்தாதான் இதை அணிவேன்னாராம். சீதைக்கு கடுப்பாகி ஆமா பொல்லாத அதிர்வு உன் நெஞ்சத்துல அது இருக்கோ இல்லையோ செக் பண்ணிக்கலயானு கேட்டாங்க. உடனே அனுமாரு ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணி தன் இதயத்துல ராமன் சீதா,லட்சுமணர்கள் இருக்கிறதை காட்டினாராம்.

நாம ஆஞ்சனேயர் ரேஞ்சுல்லயா?

கடந்த காலத்துல அம்மவாரி சத நாமாவளின்னு ஒரு பாக்கெட் புக் போட்டிருக்கேன். சரி மேட்சிங்கா இருக்கட்டும்னு ஸ்ரீ சாய் சத நாமாவளினு அறிவிச்சாச்சு. அப்புறம் பார்த்தா  ஸ்ரீ சாயி நாமாவளின்னு ஒரு ஐட்டம் செலாவணில இருக்கு. அதுல மொத்தம் 108 உருப்படி இருக்கு.

ஆன்மீகத்துல நாமம் - நாமி ( பெயர் - பெயருக்குடையவர்) ரெண்டுக்கும் வித்யாசம் கிடையாது. ரெண்டுமே சமம். அதாவது ராமனால் முடியற வேலை எல்லாமே ராம நாமத்தாலயும் முடியும். (ஒரு சந்தர்ப்பத்துல ராமனையே ஜெயிச்சதாவும் சொல்றாய்ங்க)

நாம ஜபத்துக்கு நான் விரோதி இல்லை. ஆனால் நாமங்களை அவற்றிற்குரிய அர்த்தங்களோடு , தாத்பரியங்களோடு, ரெஃபரென்ஸ் டு தி கான்டெக்ஸ்டோடு சொல்ல வேண்டும் என்பது என் கருத்து, அனுபவம்.

(சில சந்தர்ப்பங்கள்ள அர்த்தம் தெரியாம சொல்லிக்கிட்டிருந்த நாமங்கள் கூட பலன் தர்ரதுண்டு. உதாரணமா ஆஞ்சனெயருக்கு லட்சுமி ப்ரதாயானு ஒரு பேர் உண்டு. ( செல்வத்தை வழங்குபவனேனு அர்த்தம் அதை படிக்கிறப்பல்லாம் லட்சுமிக்கும் அனுமாருக்கும் என்னப்பா சம்பந்தம்னு நினைச்சிட்டே படிக்கிறது வழக்கம்.  சோத்துக்கு லாட்டரி அடிச்சிட்டிருந்த எனக்கு ஓரளவு மினிமம் கியாரண்டி கிடைச்சு இன்னைக்கு தினசரி யோசனை பண்ணாம  அம்பது அறுபது ரூபா என் திருப்திக்காக செலவழிக்கிறதுக்கு திருமகள் அருள் புரிய காரணம் ஆஞ்சனேயர் தான்னு சில வருஷங்களுக்கு முன்னாடிதான் ஸ்ட்ரைக் ஆச்சு. சீதை செல்வத்துக்கு அதி தேவதையான லட்சுமியோட அம்சம். ராமர் சீதைய தொலைச்சுட்டு அவதிப்பட்டப்போ சீதைய மறுபடி அடைய  ஆஞ்சனேயர் தானே உதவினார். ஆக அனுமார் செல்வத்தை வழங்குபவர்னுதானே அர்த்தமாகுது . அனுபவமாகுது)

ஈதிப்படி இருக்க சாயி சத நாமாவளில சிலது ரெம்ப சாதாரணமா இருந்தது. அதையெல்லாம் அவாய்ட் பண்ணிட்டன் ..ஆக சாயி நாமாவளிய எடிட் பண்ணிட்டன். இன்னைக்கு 2,000 காப்பி வெளிய போயிருக்கு .ஒரே ஒரு பார்ட்டி மட்டும் ஃபோன் பண்ணி கம்ப்ளெயிண்ட் பண்ணாப்ல.

என்னைக்கேட்டா எந்த ஒரு நூதன அனுபவமும் போக போக இயந்திரத்தனமா ஆயிரும். உங்க காதலி முதல் முதலா உங்க காதலிய அங்கீகரிச்சப்ப உங்களுக்கு ஏற்பட்ட புல்லரிப்பு, புள்ங்காகிதம், மயிர் கூச்செறிதலையெல்லாம் இப்ப உங்களால ஞா படுத்திக்க கூட முடியாது.

இந்த நாமாவளிகளும் அப்படித்தான்.  நாமாவளிகளை இயந்திரத்தனமா  சொல்லிக்கிட்டிருக்கிறதால ஒரு புண்ணியமும் கிடையாது. ஏற்கெனவே சொன்னபடி அந்த நாமங்களை, அவற்றின் பொருளை, உட் பொருளை, தாத்பர்யத்தை அறிந்து சொல்லனும். வெறுமனே சொல்லிட்டு மறந்துர்ரதுல்ல. அவற்றை அடிக்கடி சிந்திக்கனும்.

கம்ப்ளெயிண்ட் பண்ண பார்ட்டி நாமாவளிய பல வருஷமா சொல்லியிருக்கலாம் . ஆன்மீகம் தொடர்பான அவரோட நுன்னிய அதிர்வுகள், உணர்வுகள் மங்கியும் போயிருக்கலாம்ஆனால் நம்ம பாக்கெட் புக் அவரோட சிந்தனைகளை  நடராஜ் பென்சில் ரேஞ்சுல சீவி விட்டிருக்கும்.

இத்தனாம்பெரிய வியாக்யாணத்தை கொடுத்தது எதுக்குன்னா இன்னைக்கு நான் வாங்கின சி.டில மேற்படி ஸ்ரீ சாயி நாமாவளியோட ஒலி வடிவமும் இருக்கு. ஒவ்வொரு ஆயிரம் பிரதிக்கு  புது மாஸ்டர் தான் எடுக்கறோம். நீங்க சொல்லுங்கண்ணா 108 ஆ போட்டுரலாமா? சதமே தொடரட்டுமா?

இந்த மேட்டர்ல பாபா என்ன சொல்றாரு? ஒலிவடிவத்தை கொடுத்து " அட பன்னாடை!  என் நாமாவளியென்ன ஆரம்ப எழுத்தாளர் எழுதின நாவலா எடிட் பண்ணி ஒரு பக்க கதையா போட.. மரியாதையா அடுத்த ஆயிரத்துல திருத்தி போடு"ங்கறாரா?

அல்லது

நீ என்னமோ பெரிய்ய ரேஷனலிஸ்ட் மாதிரி உன் வில் பவரை நம்பி நாமாவளிய எடிட் பண்ணி போட்டே. வேலையா ஆமையா நகருது. இப்போ ஒரிஜினலோட ஒலிவடிவம் உன் முன்னாடி இருக்கு. இப்ப நீ  யாருன்னு நான் தெரிஞ்சிக்க போறேன். திருத்தி போட்டா என்னை கன்சர்வேட்டிவ்னு நினைக்கிற  உன்னை கன்சர்வேட்டிவ் லிஸ்ட்ல சேர்ப்பேன்.  திருத்தாம விட்டா என்னை ரேஷ்னலிஸ்டுனு நினைக்கிற ரேஷ்னலிஸ்ட் லிஸ்ட்ல சேர்ப்பேங்கறாரா?

அப்படி வரச்சத்தான் மேற்படி 2 சம்பவங்கள் ஞா வந்தது . அதை இப்போ பார்ப்போம்.


சாரிங்கண்ணா இந்த பதிவுல சொல்றதா சொன்ன ரெண்டு சம்பவங்களை அடுத்த பதிவுல சொல்றேங்கண்ணா

Sunday, June 20, 2010

கடவுள் ஒரு ட்ராகுலா

அண்ணே வணக்கம்ணே கடவுள் ஒரு ட்ராகுலான்னு தலைப்பு வச்சிருந்தாலும் இது பாபாவும் பா பா ப்ளாக் ஷீப்பும் தொடர்பதிவோட 7 ஆவது அத்யாயம். கூடவே சிரிக்க சிரிக்கங்கற தலைப்புல ஒரு நகைச்சுவை பதிவுக்கு ட்ரை பண்ணியிருக்கேன் .படிச்சுப்பாருங்க. உங்க கருத்தை தெரிவிக்க மறந்துராதிங்க‌

ஷிர்டி பாபா  மாதிரி அனேக  சாதுக்கள், சத்திய புருஷர்கள்  புண்ணிய புருஷர்களோட சரித்திரங்களை மானாவாரியா படிச்சிருந்த எனக்கு பாபா சரித்திரம் படிச்சதும் கன்ஃபார்ம் ஆனது என்னன்னா.. அவிக பித்தா இருந்திருக்காய்ங்க. இறையருள் ஒன்னே சொத்தா இருந்திருக்காய்ங்க. பணம்,காசுல்லாம் துச்சம்னு வாழ்ந்திருகாய்ங்க. பாபாவோட வாழ்க்கை வரலாறு என்னை ரொம்பவே இம்ப்ரெஸ் பண்ணுச்சு. இந்த சரித்திரத்தோட பவர் என்னன்னா.. அதுக்கு ஒரு உபகதை தேவையா இருக்கு.

நாலு பேருங்கற என்னோட பழைய பதிவு ஒன்னுல பரமேச்சுன்னு ஒரு கேரக்டரை பத்தி படிச்சிருப்பிங்க. அவிக குடும்பம் ரெம்ப நொந்து போயிருந்தப்பயே ஒரு ஜோசியனா நான் அவிகளுக்கு அறிமுகமாயிட்டன். சொல்லியுமிருக்கேன். ஆனா அந்த காலத்துலயே அவிக நினைக்கிறத நாம சொல்லனும்னு எதிர்பார்க்கிற பார்ட்டிங்க அவிக. அதனால நமக்கு செட் ஆகலை.

அவங்க எதிர் வீட்ல ஒரு சி.ஐ குடியிருந்தார். அவருக்கு ஜோசியம் சொல்லனும்னு பரமேச்சுவோட மூத்த பையன் என்னை கூட்டிட்டு போனான். நம்ம கிட்ட ஆர்டினரி,டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸு, உல்வா மாதிரி தர வாரியான ஜோசியம்லாம் கிடையாது. ரேஷன் ஷாப் க்யூல கேட்டாலும் அதே ஜோசியம் தான்.ஆயிரத்து ஒன்னு கொடுத்தாலும் அதே ஜோசியம்தான்.

அதென்னமோ சி.ஐக்கு சொன்ன ஜோசியம் அவிகளுக்கு ரெம்ப பிடிச்சிப்போனாப்ல இருக்கு பரமேச்சு அண்ட் கோ மறுபடி மறுபடி என்னை காண்டாக்ட் பண்ண ஆரம்பிச்சாய்ங்க.

முதல்ல மூத்த பையன் ஹோம் கார்டா அப்பாயிண்ட் ஆனான். (சி.ஐ. புண்ணியத்துல) .ஆட்டோகாரங்களுக்கு கிரோசின் ஆயில் விக்கிற ஸ்டோர் வச்சாய்ங்க. இவிக வண்டி மெல்ல பிக் அப் ஆச்சு.  வழக்கப்படி நான் கழண்டு கிட்டேன்.

ஓரளவுக்கு நல்லாவே முன்னுக்கு வந்து தலைகனத்துல ஆடிக்கிட்டிருந்த காலத்துல
மூத்தவன் வேற ஒரு சமாசாரத்துல நெருக்கமானான். மொதல்ல குடும்ப ஜோசியனா இருந்த  நான் மூத்தவனோட பர்சனல் ஜோசியனா அவதாரமெடுத்தேன்.

கெட்டு கீரை வழியா போக இருக்கிறவனுக்கு நம்மை வார்த்தை ருசுக்குமா என்ன? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். என்னென்னமோ ஆட்டம் போட்டு நாய் மேல ஏறி கோலம் வந்த் நொந்து   நூடுல்ஸா போயிட்டாய்ங்க. சபிக்கப்பட்ட குடும்பங்கள்ங்கற என்னோட பதிவை படிச்சிங்கன்னா ஒரு ஐடியா வரும். அந்த கண்டிஷனுக்கு அவிக குடும்பம் வந்துருச்சு. எத்தை தின்னா பித்தம் தெளியும்ங்கற ஸ்டேஜு. ஜோசியம்,பரிகாரம்லாம் வேலை செய்யாத நிலை.  அப்போ நான் பாபாவோட சரித்திரத்தை கொடுத்து இதை படிங்க நிலைமை மாறும்னு கொடுத்தேன். இதை கொடுத்த வருசம் 2003ன்னு  நினைக்கிறேன். அந்த விஷயத்தை நானே மறந்துட்டன்.

இந்த தொடரை எழுத ஆரம்பிச்ச பிறகுதான் பாபா சரித்திரத்தை அவிகளுக்கு கொடுத்ததே ஞா வந்தது. கொடுத்ததென்னவோ கொடுத்துட்டன். படிக்க வேண்டியது அவிக தானே. வர வர மாமி கழுதைப்போலானாள்ங்கற மாதிரி நாயடி பேயடி. மேற்படி பந்தா ,கிந்தால்லாம் போய் சகலத்தையும் வித்து தொலைச்சு இப்ப அடியை பிடிடா பரதப்பட்டான்னு காலம் ஓடுது.

அந்த திமிர் பிடிச்ச சனம் நிச்சயம் படிச்சிருக்காது. அதுக்குண்டான பலன் 7 வருஷமா பூலோக நரகம். அதுக்கொரு விடிவுகாலம் பிறக்கத்தான் எனக்குள்ள இந்த ஞா வந்திருக்கு. கூடிய சீக்கிரம் இதை அந்த சனத்துக்கு கன்வே பண்றேன். பாபா சரித்திரத்தை படிக்க சொல்றேன். அதுக்கு பின்னாடி என்ன நடந்துச்சுன்னும் சொல்றேன். இது பாபா பவர் நெகட்டிவ்ல வேலை செய்த அனுபவம்.

பாசிட்டிவா வேலை செய்த அனுபவத்தை கூட சொல்லனும்லியா?

நான் வெறும் விளம்பரங்கள் மேல டிப்பெண்ட் ஆகி ஒரு ஃபோர்ட் நைட்லி நடத்திக்கிட்டிருக்கிற விஷயம் உங்களுக்கு தெரியும். சித்தம் போக்கு சிவன் போக்கு மாதிரி ஒரு தாட்டி டபுள் டெமி, ஒரு தாட்டி சிங்கிள் டெமி, ஒரு தாட்டி ஏ3 ன்னு வித விதமான சைஸ்ல பேப்பரை போடறது வழக்கம்.

அப்பப்போ பேப்பரையே பாக்கெட் புக்காக்கி போடறதும் உண்டு. அப்படி  ஒரு தாட்டி "மினி ஜோதிட போதினின்னு ஒரு புக் போட்டோம். இதுல பாபாவோட கணக்கில்லாத அற்புதங்கள்ள ஒரே ஒரு அற்புதத்தை அதுவும் உதாரணம் காட்ட உபயோகிச் சிருந்தேன். அது வருமாறு:

பாபாவோட பக்தர் ஒருத்தருக்கு திடீர்னு வயித்து போக்கு ஆரம்பமாயிருது. உடனே பாபா வேர்கடலைய வறுத்து பொடி செய்து  கொடுக்கச்சொல்றாரு. வயித்துப்போக்கு நின்னுருது.

இன்னொருதரம் அதே பக்தருக்கு அதே பிரச்சினை வந்துருது. உடனே அவர் பாபா தான் சொல்லியிருக்காரேன்னு வேர்கடலைய வறுத்து பொடி செய்து  சாப்பிடறார். வ.போக்கு அதிகரிச்சு சாக பிழைக்க  ஆயிர்ராரு.  அப்புறம் விஷயம் தெரிஞ்சு பாபா காப்பாத்தறாரு.

இந்த சம்பவத்துல வேர்கடலைய பஞ்சாங்கம்+ ஜோதிட கிரந்த விதிகளுக்கும், நல்ல ஜோதிடரை பாபாவுக்கு ஒப்பிட்டு எழுதியிருந்தேன்.  வழக்கமா நாம போடற பேப்பர்/பாக்கெட் புக் எல்லாமே ஒன்னு அ ரெண்டாயிரம் போடுவம். தட்ஸால். இதை 2000 பிரதி போட்டதா ஞா.

ஆனால் ஒரே பார்ட்டி மினி ஜோதிட போதினிய 5000 காப்பீஸ் ஸ்பான்சர் பண்றதா ப்ரப்போஸ் பண்ணி ஸ்பான்சர் பண்ணதோட நியூஸ்  பேப்பர்ஸ்லயும் வச்சு விட்டாரு. இன்னைக்கு நாளைக்கு கூட அந்த பாக்கெட் புக்கை பார்த்துட்டு வர்ர க்ளையண்ட்ஸ் அதிகம்னா பார்த்துக்கங்க.

பாபாவோட சரித்திரத்துல ஒரு துணுக்கை எடுத்து போட்டதுக்கே இந்த பலன். இப்போ பாபா சத நாமாவளியை  ஒரு லட்சம் காப்பீஸ் போடறதா கமிட் பண்ணி செய்துக்கிட்டிருக்கேன். என்ன ஆகப்போகுதோ தெரியலை.

அது சரிப்பா எப்பயோ 1999ல ஷீர்டி போனே.. 20010ல சத நாமாவளி ஒரு லட்சம் பிரதி  போடப்போறே. இதுக்கு பிரதியா என்னமோ அற்புதம் நடக்கப்போவுதுன்னும் ஜொள் விடறே.  இந்த ப்ராசஸ்க்கு ஏன் இவ்ள காலம் பிடிச்சதுன்னு நீங்க  கேட்கலாம்

இந்த ஆன்மீக விஷயத்துல ஆரும் சொல்லாத மேட்டர் ஒன்னு சொல்றேன். உங்க அனுபவத்தை மறுமொழில சொல்லுங்க.

கடவுளை உண்மையா வணங்கறவங்களுக்கு என்னென்னமோ கிடைக்கும்னு சொல்றாய்ங்க. உண்மைதான் கிடைக்கும்தான். ஆனால் இதுக்கெல்லாம் பயங்கர விதிகள் இருக்கு.

உங்க பிரார்த்தனைக்கு உடனடி லாட்டரித்தனமா பலன் கிடைச்சா நீங்க வணங்கின சாமி உங்களுக்கு போன ஜன்மத்துல ஏதோ சில்லறை பாக்கி வச்சிருந்ததுன்னு அர்த்தம். படக்குனு எதையோ ஒன்னை கொடுத்து ருணத்தை தீர்த்துக்கிருச்சுன்னு அர்த்தம். இது மறுபடி மறுபடி நடக்காது.

ஆனால் நீங்க வணங்கற தெய்வம் உங்களுக்கு நிறையவே கடன் பட்டிருக்குன்னு வைங்க. பெருந்தொகைய நமக்கு பாக்கி வச்சிருக்கிற கடன் காரன்ங்கறவன் எப்பவும் கடனை எகிற அடிக்கத்தான் பார்ப்பான். அப்படி சாமி கூட உங்களுக்கு நிறைய்ய போக்கு காட்டும்.

அய்யயோ இந்த சாமிய கும்பிட ஆரம்பிச்ச பிறகுதாம்பா எனக்கு கஷ்டமே ஆரம்பிச்சுச்சுன்னு கூட சொல்ல வைக்கும்.

அப்படியும் விடாப்பிடியா கும்பிடற பார்ட்டிக்கு சாமியால என்ன கொடுக்க முடியும்? தன் கிட்டே இருக்கிறதை தான் கொடுக்க முடியும். சாமி கிட்டே என்ன இருக்கு?

சாமிக்கு பேர் கிடையாது . எனவே உங்க பேர் நாசமாகும். சாமிக்கு அப்பா,அம்மா கிடையாது. அதனால் உங்களுக்கும் அப்பா அம்மா இல்லாம போயிருவாங்க. ஸ்தூலமாவோ அ சைக்கலாஜிக்கலாவோ. சாமிக்கு உருவம் கிடையாது. அதனால உங்க ரூபமே குரூபமாயிரும்.

மேலும் சாமிங்கறது எங்கனயோ ஆகாசத்துல, சொர்கத்துல இல்லை. நீங்க பண்ற ஜபம் தபம் இத்யாதியால உங்க சங்கல்பத்தால தனக்குத்தானே உருவெடுத்து வருது.
ஒரு தாய் ஸ்தூல உடம்புல  சாதாரண குழந்தைய தாங்கும்போதே  நரக வேதனைய அனுபவிக்கிறா.

ஒரு சாதகன் தன் சூக்கும கருப்பைல தெய்வத்தை கருக்கொள்ளனும்னா என்னமா அவதிபடனும்னு பாருங்க. மேலும் கடவுளோட இருப்பை அங்கீகரிச்சு , இன்வைட் பணிட்டா அவரு சட்டமா வந்து உட்கார்ந்துருவாரு. அவருக்கு உண்டானதை நீங்க செய்தே ஆகனும்.(ஜபம்,தபம்,பூசை,புனஸ்காரம்) அவரு சகட்டுமேனிக்கு கண்ட கண்ட வேஷத்துல வருவாரு.என்னென்னமோ கோரிக்கையையெல்லாம் முன் வைப்பாரு எல்லாத்தயும் நிறைவேத்தனும். ஆடி மாசம் போவட்டும், அம்மாவுக்கு ஒடம்பு பெட்டராகட்டும்னெல்லாம் பெண்டிங்ல வச்சா பல்பு தான்.

உண்மையான நம்பிக்கையோட சாதனைல இறங்கிறவனோட உடல்,உள்ளம், புத்தி, செல்வம், நற்பெயர்,  நட்பு, உறவு, சகலத்தையும் தின்னுதான் கடவுள் அவனுக்குள்ள கருக்கொள்றார்.

அந்த சக்தியோட இயல்பு ஏறக்குறைய ட்ராகுலா மாதிரி இருக்கும். ட்ராகுலா ரத்தத்தை குடிக்கும். இந்த சக்தி உங்க சாதனையை இன்னும் இன்னும்னு தீவிரப்படுத்த தோதா சூழலை மாத்திக்கிட்டே இருக்கும்.

உ.ம் பணம் தான் உங்க சாதனையை மந்தப்படுத்துதுன்னா பணமெல்லாம் காலி. பெண்டாட்டி மோகம் தான் உங்க சாதனையை மந்தப்படுத்துதுன்னா பெண்டாட்டி காலி அ டைவர்ஸு

விவேகானந்தரு ஒரு பாயிண்ட் சொல்லியிருக்காரு. நீ ஒரு கொள்கைய நம்பி சொல்றியா ? சொல்லு ! சொல்லிக்கிட்டே இரு .. 14 வருஷம் அதையே சொல்லிக்கிட்டிருந்தா அந்த வார்த்தைகளுக்கு மந்திர சக்தி  வரும். பேச்சு செயலாகும்.

ஆன்மீகத்துல எந்த விதையும் வீணாப்போறதில்லை. நீ போடற உரம், பாய்ச்சற தண்ணியோட அளவுக்கு முளைச்சே தீரும். யத்பாவம் தத்பவதி.. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறுகிறாய்.

பாபா எப்படி பிச்சையெடுத்து,தனக்கு  பிச்சை கொடுத்தவங்களோட கருமத்தை எல்லாம் வாங்கி அனுபவிச்சபடி   ஒரு சமஸ்தானத்தை நிர்வகிச்சாரோ அப்படி நானும் வாழ்ந்திருக்கேன்.

உஞ்ச விருத்தி பண்ணி வயித்த கழுவின (வயலோரத்தில் சிதறிக்கிடக்கும் தானியங்களை சேகரித்து அதை மட்டும் உண்ணுதல்) அந்த  காலத்து  பிராமணனை விட புனிதமா   நான் வாழ்ந்த காலம் ஒன்றுண்டு.

அதுக்கெல்லாம் காரண பூதர்கள் எத்தனையோ மகான்கள். "எந்தரோ மகானுபாவுலு.. அந்தரிக்கி வந்தனமு" . அந்த மகான்கள்ள ஷீரடி பாபாவும் ஒருத்தர்.

(தொடரும்

Saturday, June 19, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 6

எங்க ஊரு எம்.எல்.ஏ வோட ஆதரவாளர்கள் உதவியோட பாபா ஸ்தோத்ர நாமாவளிய லட்சம் பிரதி அச்சிட்டு சனத்துக்கு ஃப்ரீ ஆஃப் காஸ்ட் கொடுக்கனும்னு நினைச்சு கோதாவுல இறங்கினேன்.முதல் ஆயிரம் ப்ரிண்ட் ஆகறப்பயே சீன் ரிவர்ஸ் ஆகி பேப்பர் காஸ்ட் ப்ரிண்டிங் காஸ்ட் எல்லாம் ஊத்திக்கிச்சு. டர்ராயிட்டு மண்டைய பிடிச்சிக்கிட்டேன். பாபாவுக்கும் நமக்கும் ஒரு ட்ராக்ல  நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்துச்சே எங்க தப்பு பண்ணிட்டோம்னு யோசிச்சிட்டிருந்தப்ப மறந்தே போயிருந்த பல சமாசாரங்க ஞா வந்தது.

அட.. இதையெல்லாம் வச்சி ஒரு தொடர்பதிவு போட்டா என்னனு ஆரம்பிச்சதுதான் இந்த பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும். இந்த தலைப்புல பாபா எல்லாருக்கும் தெரிஞ்சவரு. சப் கா மாலிக் ஏக் னிட்டு சொன்ன பார்ட்டி. வெட்டி மடிஞ்சிக்கிட்டிருந்த இந்து முஸ்லீம்கள் பரஸ்பர வேறுபாடுகளை துறந்து கை கோர்த்து நிக்க ஒரு களம் அமைச்சுக்கொடுத்து தானே அந்த களமான  ஆளு.

இதுலயும் வில்லங்கம் பண்ற பார்ட்டிங்க இருக்கத்தான் செய்றாய்ங்க. சமீபத்துல ஒரு ஐயரு பாபா கடவுளா?ன்னு ஒரு புஸ்தவம் போட்டு சமஸ்கிருதம் எல்லாம் கலந்து சிக்கலா பேட்டியெல்லாம் கொடுத்துக்கிட்டிருந்தாரு. முஸ்லீம்கள் சிலர் பாபா வழி தவறிப்போன முஸ்லீம்னு சொல்றவங்களும் இருக்காய்ங்க. அது வேற கதை.

பதிவோட தலைப்புல இருக்கிற பாபா ஓகே. அதென்னா பாபா ப்ளாக் ஷீப்புன்னு ஆரும் கேட்கலை. நானே சொல்றேன். ப்ளாக் ஷீப்புன்னா கருப்பு ஆடுன்னு அர்த்தம். ஒரு சினிமால சிவாஜி சம்சாரம் நம்ம குழந்தைகள்ள ஒன்னு உங்களுக்கு பிறந்ததில்லைன்னு சொல்ட்டு செத்துருவாய்ங்க. சிவாஜி ஹூ ஈஸ் தி ப்ளாக் ஷீப்புன்னு பாடுவார். ப்ளாக் ஷீப்னா தப்பான ஆளுன்னு அர்த்தம் வச்சிக்கலாம்.

ஆனால் நான் தலைப்புல வேறுமனே ப்ளாக் ஷீப்புன்னு வைக்கலை. பா ஸ்பேஸ் பா ப்ளாக் ஷீப்புன்னு வச்சேன். இது குழந்தைங்க பாடற ரைமோட முத வரி. பாபாவை புரிஞ்சிக்கனும்னா நீங்க குழந்தையா மாறனும். நீங்க அதிர்ஷ்ட சாலியா இருந்தா பாபா உங்களுக்கு கடந்த பிறவில உங்களுக்கு கடன் பட்டிருந்தா குழந்தையா மாறுவிங்க.

ஆன்மீகத்துல நாம பண்ற ஜபம், தியானம்,யோகம் எல்லாத்துக்கும் முடிவு என்னன்னா மறுபடி குழந்தையா மார்ரதுதான் (குழந்தைத்தனமா இல்லே). ஒரு குழந்தை குடிகாரன்,கூத்திக்கள்ளன், நித்ய தரித்திரனான தன் அப்பா சாயங்காலம் வரச்சே ஒனக்கு லேப் டாப் வாங்கிட்டு வரேன்னு சொன்னா அந்த குழந்தை எப்படி கேள்வியே கேட்காம நம்பி காத்திருக்கோ அப்படி ஒரு நம்பிக்கை, காத்திருத்தலை பெறுவதுதான் ஆன்மீகத்தின் இலக்கு. புரிஞ்சுதுங்களா (நன்றி: ஓஷோ).

சரி கடந்த பதிவுல சீட்டுக்கச்சேரில பாபா செய்த அற்புதத்துக்கு வருவோம். ஷீர்டி போன க்ரூப்ல தசரதன்னு ஒரு ஃப்ரெண்டு. டபுள் பி.ஜி. ப்ரைவேட் காலேஜ்ல லெக்சரர்.அன் மேரீட் .எதிர்காலத்துல சகலமும் கைவிட்ட சந்தர்ப்பங்களில் எனக்கு புத்துயிர் கொடுக்கப்போற பார்ட்டி. சீட்டுக்கச்சேரில பாவம் தசரதன் தொடர்தோல்வியடைஞ்சு வேகமா பணத்தை இழந்துக்கிட்டிருந்தார். (பெரும்பணமெல்லாம் இல்லை. பணமா பிரச்சினை? ஈகோ,பிறருடைய பரிதாப பார்வை எட்ஸெட்ரா)

நம்ம ஜாதகமே பலவீனர்கள் பக்கம் நின்னு போராடறதுதானே. உடனே அருள் வாக்கு கொடுத்தேன். (கணக்கு போடாம)இதுவரை எத்தனை தடவை தசரதன் தோத்திருந்தாலும் சரி  நான் வந்துட்டனில்லை. இந்த ஆட்டத்துல தசரதன் வின்.

இந்த ட்ரிப்புக்கு மூலகாரணமான பார்ட்டிக்கும் எனக்கும் மத்தில இருக்கிற உறவு. ஃப்ரெண்ட் ஆர் எ ஃபோம்பாங்களே அந்த மாதிரி .அவரு ஒரு வேளை வின் ஆகலன்னா? ன்னிட்டு ரேக்க ஆரம்பிச்சாரு .

நான் "ரயிலிறங்கினதும் பத்து பேருக்கு நான் சொன்னது நடக்கலன்னு நான் சொல்வேன். ஒரு வேளை வின் ஆயிட்டா?"ன்னு கொக்கி போட்டேன்.

"எங்க சாமி ( நம்ம நிக் நேம் இது) பவர் ஃபுல் அவர் சொன்னது நடந்ததுன்னு பத்து பேருக்கு சொல்றோம்."னு அவரு கமிட் ஆனாரு.

தசரதனுக்கு பர்ஸுலருந்து விபூதி எடுத்து வச்சு விட்டேன். தசரதன் வின். ( தசரதன் வின் ஆறவரை நான் அனுபவிச்ச அன் செர்ட்டனிட்டியயும் பாபாவோட நான் வச்சிக்கிட்ட டீலையும் வார்த்தைல சொல்ல முடியாது. )

எனி ஹவ் ட்ரெயின் இறங்கி வேனை பிடிச்சு ஷீர்டி போனோம் . அவரோ சமாதிய தரிசிச்சோம். பாபாவோட சரித்திரம் காலிகோ பைண்ட் புஸ்தவம் வாங்கினேன்.  சித்தூர் வரதுக்குள்ள முழுக்க படிச்சுட்டன்.

இந்த மாதிரி சாதுக்கள், சத்திய புருஷர்கள்  புண்ணிய புருஷர்களோட சரித்திரங்களை மானாவாரியா படிச்சிருந்த எனக்கு பாபா சரித்திரம் படிச்சதும் கன்ஃபார்ம் ஆனது என்னன்னா..

(மீதி அடுத்த பதிவில்)

Saturday, June 12, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்

பாபான்னா ஏர்ல  மோதிரம் வரவச்சு  இயர்ல பூ வைக்கிற  புட்டப்பர்த்தி பார்ட்டி கிடையாதுங்கோ.  ஷீரடி பாபா. ஆரம்பத்துல நான் கூட என்னாத்த மனுசனை போய் கும்ப்டுக்கினுன்னு நக்கல் பண்ணவன் தான். ஞானம்ங்கறதே மயிர் எல்லாம் உதிர்ந்து போன பிறகு கிடைக்கிற சீப்புமாதிரிதானே.

( நல்ல காலம் இந்த 43 வயசுக்கு ஹேர் டை, ஹென்னா,நாலணா அம்பது பைசா ஷாம்பூக்கள மீறி இவ்ள மாத்திரம் முடி இருக்கிறச்சயே சீப்பு கிடைச்ச மாதிரி ஞானமும் டபுள் ப்ரமோஷன் மாதிரி கொஞ்சம் முன்னாடியே கிடைச்சுருச்சு. வாழ்க வளர்க. மனிதன் என்பவன் தெய்வமாகலாம். ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா யத்பாவம் தத்பவதி )

எங்க ஊர்ல வேற இருக்கிற கொலைகாரன், பிக்பாக்கெட் எல்லாம் பாபா பக்தன். வியாழ கிழமையானா கசாய் ( மீன் மார்க்கெட்டுங்கண்ணா) மார்க்ட் ஷேர் மார்க்கெட் மாதிரி  விழுந்துரும். நிலைமை இப்படி இருக்க நான் எப்படி பாபாவை சீண்டறது?

ஃப்ளாஷ் பேக்: 1

பொருளாதார ரீதியா எத்தை தின்னா பித்தம் தெளியும்னு இருந்த காலம் அது.  கேப்மாரியா இருந்த நானு சம்சாரியாகி என்னங்கடா இது தே. க்களுக்கெல்லாம் பிரியாணி வாங்கி கொடுத்தோம், பெண்டாட்டிக்கு வெஜிட்டபுள் பிரியாணி கூட வாங்கித்தரமுடியலியேனு சல்க் பண்ணிக்கிற  ஸ்டேஜ் அது. சின்ன ப்ரேக் கிடைக்காதா அட்லீஸ்ட் பைசா புரளாதான்னு கண்ட கதவையும் தட்டிக்கிட்டிருந்த  நேரம் அது.

அப்போ வேதவியாஸ்ங்கறவர் எழுதின கலியுக முடிவு 1999லயாங்கற புஸ்தவத்தை படிச்சேன்.(தெலுங்கு கண்ணா தெலுங்கு) பார்ட்டி நேரு காலத்து ஐ.ஏ.எஸ். "அந்த" இனம் தான். வேதிக் யூனிவர்சிட்டினு வச்சி வேதத்துல டிகிரி கொடுத்துக்கிட்டிருந்த ஆசாமி.

மேற்படி புஸ்தவத்தை படிச்சுட்டு வியாசருக்கு ஒரு லெட்டர் போட்டேன். புஸ்தவம் நல்லாதான் இருக்குது.ஆனால் சொல்ல வந்ததை நேரடியா சொல்லாம வக்கீலின் வாதம் போல எழுதியிருக்கிங்க. நம்பாதவுகளை நம்ப வைக்கிற முயற்சிதான் அதிகமா இருக்கே தவிர விஷயம் குறைவுதான். இதெல்லாம் கரெக்டா இல்லையான்னு முடிவு பண்ண வேண்டியது 1999 தான். இதை எடிட்  பண்ணி தமிழ்ல விட்டா நல்லாருக்கும். வேணம்னா நானே பெயர்த்து தரேன்னு எழுதியிருந்தேன்.

அதுக்கு அவரு பலான தேதில திருமலை வர்ரதாவும்  நேர்ல சந்திக்கனும்னும் பதில் போட்டதோட வழிச்செலவுக்கு எம்.ஓ கூட பண்ணியிருந்தார். சரி இதையும் பார்த்துருவம்னு போனேன். சித்தூர் டு திருப்பதி போயாச்சு. திருமலா போகனும்னா ப்ரைவேட் வெயிக்கிள் தான் கதி. அரசு பேருந்தெல்லாம் புளி மூட்டை கணக்கா சனம். கையில இருந்த  நூறு ரூ நோட்டை ட்ரைவர் கிட்ட கொடுத்தா சில்லறை கேட்கிறான். அந்த  நேரம் பார்த்து மார்ல மூங்கில் தட்டுல  ஃப்ரேம் போட்ட படங்களை வச்சிக்கிட்டு ஒருத்தன் வந்தான். இருந்த படங்கள்ளயே நம்ம டேஸ்டுக்கு ஏத்தமாதிரி இருந்தது ஷீரடி பாபாவோட படம் தான். அந்த சமயம் நாம ஏழுமலையானோட ஃபேன்.

இருந்தாலும் மனசுல ஒரு எண்ணம் ஃப்ளாஷ் அடிச்சது

"எல்லா பார்ட்டியும் ஒன்னுதானோ என்னமோ  ஜஸ்ட் ஈகோ காரணமா நம்மால இதை உணர முடியலியோ என்னவோ எந்த ரூபத்துல என்னை வணங்கினா அந்த ரூபத்துல அருள் புரிவேன்னு  கீதையில   கிட்ண பரமாத்மா கூட சொல்லியிருக்காரே ."

இந்த மாதிரி ஒரு எண்ணம் வந்ததுமே படக்கு பாபா படத்தை வாங்கி பைல வச்சிக்கிட்டு திருமலைக்கு ஜீப் ஏறிட்டன். மேற்சொன்ன வேதவியாஸ் கம்மியான ஆளில்லே. பொதுவாவே அரசு அதிகாரின்னா ஒரு கெத்து இருக்கும். சர்வீஸ்ல இருக்கிற வரை ஒரு விதமான இம்பார்ட்டென்ஸை அனுபவிச்சு பழக்கப்பட்டுருவாய்ங்க. அந்த  நேரத்துல குல தெய்வம்,குல வழக்கம்லாம்  டோன்ட் கேர். ( எல்லா இனத்துக்கும் இது பொருந்தும்.பொதுவான விதி)


ஒரு நா கவர்மென்டோ, தனியார் கம்பெனியோ நீ கிழவாடியாயிட்ட வீட்டைப்போய் சேருன்னிரும். அப்பத்தான் இந்த கிராக்கிக்கெல்லாம் ஆன்மீகம் சொம்மா பொத்துக்கினு வரும். ப்யூட்டி என்னடான்னா தாங்க சர்வீஸ்ல இருந்தப்ப கெவுர்மென்டு, கம்பெனி வேலைகளை எப்படி அலட்டலா பண்ணிட்டிருந்தாய்ங்களோ அப்படியே இந்த வேலைகளையும் செய்வாய்ங்க.

அஞ்சு ரூ நோட்டு திருச்சிலயும் அஞ்சு ரூபா தான் திருச்சூர்லயும் அஞ்சு ரூபாதான்.
மேலும் அவர் அய்யரு.  (இந்த நோய் அவாள்ள ரெம்ப அதிகம்) இந்த சைக்காலஜியெல்லாம் நமக்கும் தெரியுங்கறதால ஒரு மாதிரியா போட்டு வாங்கி "ராமானுஜ வைபவம்"னு அவரே எழுதின ஒரு புஸ்தவத்தை (பல பாகம்ணே..பொழப்பையே நடத்திரலாம்) டப் பண்ற ப்ராஜெக்டை வாங்கிக்கிட்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

அய்யரு டெப்ளாய்  பண்ண ப்ரோக்கர் இடையில வேலை காட்டினதால ப்ராஜெக்டை பாதில விட்டுட்டம்னு வைங்க. இருந்தாலும் கஷ்ட காலத்துல  பொளப்பு ஓடிச்சுல்லா.  முதல்ல பக்தவத்ஸலனான பெருமாள் தான் தன்னோட  க்ஷேத்திரத்துல பாபா ரூபத்துல வந்து அருள் புரிஞ்சதாதான் நினைச்சுக்கிட்டேன்.அதுக்கப்புறமா நடந்த சீனெல்லாம் பாபா பக்தவத்ஸலன் எல்லாம் ஒரே க்ரூப்பு, க்ரூப்பு என்னங்கண்ணா க்ரூப்பு இவிகல்லாரு ஒரே பார்ட்டி கெட்டப் தான் வேற வேறன்னு கொஞ்சம் லேட்டா புரிஞ்சிக்கிட்டேன்.

இத்தனைக்கும் வேதவியாசரு மேற்படி ப்ராஜக்டை கொடுக்க  முக்கியமான காரணம் என்ன தெரியுமா பேசிக்கலா அவரே ஒரு ஜோசியர், ஜோதிஷ பரிசோதகர்  ( அவருக்குனு ஒரு சொந்த பத்திரிக்கை இருக்கு அதுல என்.டி.ஆரோட டெத் டேட்டை கொடுத்திருந்தார்). சந்திச்சப்ப அவர்  கேட்ட முத கேள்வி நீங்க என்ன பண்றிங்க? பாரதியார் "எமக்கு தொழில் கவிதை" ன்னு சொன்னாப்ல ஜோசியம்னு சொன்னேன். ஒடனே ஒரு பேப்பரை கொடுத்து போட்டுக்க ராசி சக்கரம், சொல்லு பார்க்கலாம் பலனைன்னாரு.

நான் என்னதான் சொன்னேன்னு தெரியாது (ஞா இல்லை). பார்ட்டி தொபுக்கடீர். இங்க ஷாட்டை கட் பண்ணுவோம். பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர் பதிவுங்கறதால அடுத்த பதிவுல மத்த ஃப்ளாஷ் பேக்ஸ பார்ப்போம்.