Showing posts with label Tamil Blogs. Show all posts
Showing posts with label Tamil Blogs. Show all posts

Thursday, July 29, 2010

தமிழ் மணமே பதில் சொல் !

அண்ணே வணக்கம்ணே,
இந்த பதிவை மட்டும் படிச்சுட்டு போயிராதிங்க. சரஸ்வதி சபதம் தொடருது. அதையும் படிங்க. உங்க கருத்துக்கள், யோசனைகளையும் சொல்லுங்க. இன்னும் சில திரட்டிகளால் கவிதை07 தடை செய்யப்பட 100 சதவீதம் வாய்ப்பிருக்கு. உடனே மெம்பராயிருங்க அ சப்ஸ்க்ரைப் பண்ணிருங்க‌

போஃபர்ஸ் ஊழல் வெடிச்சப்ப ராம்ஜெத்மலானி  ராஜீவை தினசரி 10 கேள்வி கேட்டு குடைஞ்சாரு. அப்போ ராஜீவ் குலைக்கிற நாய்க்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்னாரு. அப்போ ரா.ஜெ " நாய் திருடனை பார்த்துதான் குலைக்கும்"னு போட்டாரு ஒரு போடு.

தினசரி 100 கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலைல ரா.ஜெ.இருக்காரு .அது வேற மேட்டர். இந்த சீக்வென்ஸ்ல தமிழ் மணம் நிர்வாகிங்களுக்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன்.என்னதான் பதில் சொல்றாய்ங்கனு  பாப்போம். பதில் வரலைன்னா என் கேள்விகள்ள நெருப்பு இருக்குனு அர்த்தம். (அதாங்க நெஜம்)

2000 ஜூலை முதல் பதிவுகள் போட்டுக்கிட்டு இருக்கிற நான் டச் பண்ணாத மேட்டரே கிடையாது. எதையும் ஒளிச்சு வச்சு பதிவு போட்டதும் கிடையாது. இன்னம் சொல்லப்போனா யோகம், தியானம்,பக்தி,சமூக அக்கறை ,பெண்ணியம் தொடர்பான பதிவுகளுக்கு கூட  ஆபாச தலைப்பு வச்சி தான் பதிவு போட்டேன். அப்பல்லாம் தடை வரலை.

பத்துவருஷமா நான் டச் பண்ணாம இருந்து புதுசா டச் பண்ண மேட்டர் பிராபகனோட ஜாதக ஆராய்ச்சிதான். பிரபாகரன் மேல எனக்கு  வை.கோ மாதிரி, திருமா மாதிரி ஹீரோ ஒர்ஷிப் எல்லாம் கிடையாது.  என்னைக்கும் நான் விடுதலைப்புலிகளோட வீரத்தை(?) போற்றிப்பாடினதும் கிடையாது.எழுதினதும் கிடையாது.

ஜோதிட விதிகளின் படி  பிரபாகரன் சாக வாய்ப்பில்லேனு எழுதினதுதான் உங்க டர்ருக்கு காரணம்னு குற்றம் சாட்டறேன். என் வாதம் என்னன்னா பத்துவருசமா டச் பண்ணாத,புதுசா போட்ட  மேட்டர் இது ஒன்னுதான். இதை உங்களால மறுக்க முடியுமா?

உதிரி கேள்விகள்:

1.என் கடைசியா உங்க வலைதளத்துல வெளியான பதிவுல  ஆபாசம் இருக்கிறதா சொல்லி தடை பண்ணிங்க.ஓகே. அதுக்கு மின்னாடி வெளியான என் பதிவுகள் எல்லாம் யு சர்ட்டிஃபிகேட் தானு கியாரண்டி தரமுடியுமா?

2.நீங்க இப்போ தடை பண்ணாம வச்சிருக்கிற ப்ளாக்,பதிவுகள் எதுலயும் ஆபாசமில்லேன்னு உறுதி சொல்ல முடியுமா?

3.ஆபாசத்துக்கான  உங்க அளவுகோல்தான்  என்ன? அதை நீங்க வெளியிட்டா உங்க திரட்டிலருந்து தினசரி 10  பதிவுகள் உங்க அளவுகோல் படி ஆபாசம்னு நான் நிரூபிக்கிறேன். அதெல்லாத்தயும் தடை பண்ண நீங்க தயாரா?

4.கலைஞர் எழுதின பலான கதைனு ஒரு பதிவை போட்டிருக்கேன். படிச்சு பாருங்க. இந்த பலான கதைல இருகிறதை விட பலான மேட்டர் என் பதிவுல இருந்ததா ப்ரூஃப் பண்ண முடியுமா?

5.நான் என் பதிவுகள்ள பல பெரிய மனிதர்களோட முகத்திரையை கிழிச்சேன். அவிகளை பத்தின நிர்வாண உண்மைகளை  வெளிச்சம் போட்டேன். அவிகளோட ப்ரஷரை தாங்க முடியாமத்தான் நீங்க என் ப்ளாகை தடை பண்ணிங்கனு குற்றம் சாட்டறேன். உங்களால மறுக்க முடியுமா?

6.ஜோதிஷம்ங்கறது தெய்வீகமானது கலைஞருக்கும்,அவரோட வாரிசுகளுக்கும் ஜூலை 13 முதல் செப் 5 வரை கண்டமிருக்குனு நான் எழுதினதால தான் பயந்துக்கினு என் ப்ளாகை தடைபண்ணிங்கனு குற்றம் சாட்டறேன். மறுக்க முடியுமா? எங்க ஸ்டேட்ல என்.டி.ஆர் உயிரோட இருந்தப்பயே ஒரு முன்னாள் ஐ.ஏ,எஸ் பலான தேதில என்.டி.ஆர் செத்துப்போவாருனு தன் பத்திரிக்கைல எழுதினாரு. உடனே ரெஜிஸ்ட் ரார் ஆஃப் நியூஸ் பேப்பர்ஸ் அதை தடை பண்ணலியே (அதும்படியே நடந்தது)

7.என் பதிவுகள்ள ஆபாசமிருந்ததா குற்றம் சாட்டி தடை பண்ணிங்க. ஓகே  உண்மையிலயே நீங்க கலாசார காவலர்களாயிருந்தால்  ஆபாசத்தை வெளியிடற எல்லா வலைதளங்கள், பத்திரிக்கைகளையும்  தடை செய்ய ஒரு இயக்கத்தை ஏன் ஆரம்பிக்ககூடாது.

(அரசியல், சமூக,பொருளாதார,மீடியா  தளங்களிலான ஆபாசத்தை ஜஸ்ட் 300 டு 400 பேர் பார்க்கிற தம்மாத்தூண்டு ப்ளாக்ல எழுதினதுக்கே என்னை தடை பண்ண வச்சுட்டாய்ங்க பாஸு.  நீ உ.வ பட்டு என் சவாலை ஏத்துக்கிட்டு வேட்டி வரிஞ்சு கட்டுனு புறப்பட்டிங்கனு வைங்க தமிழ் மணத்துக்கு சங்குதான்.வாணாம் ராசா. போர்த்திக்கினு படுத்துக்க. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் -குறள்)

Thursday, June 10, 2010

வலையுலக அகராதி

யாராச்சும் வில்லங்கம் பண்ணா அகராதி பிடிச்ச பயங்கறாய்ங்க. ஏன்? அகராதின்னாலே அகராதி பிடிச்சதுதான். பகம்  என்ற சொல்லுக்கு யோனி என்றும் ஒரு பொருள் உண்டாம். அப்போ பகவான் என்றால் என்ன பொருள்? பொருள் விளங்காத சொற்களுக்கு பொருள் தர்ரதே அகராதியோட வேலைன்னா பொருள் விளங்காத சொற்களையெல்லாம் இவிக ஏன் உபயோகிச்சாய்ங்கன்னு ஒரு சந்தேகம் வருது. எந்த மொழிய வேணம்னா பாருங்க அதுல ரெடு பிரிவு இருக்கு. ஒன்னு பண்டிதர்களுக்கானது. அடுத்தது  பாமரர்களுக்கானது.  பச்சையா சொன்னா உயர்சாதிக்காரவுகளுது ஒரு மொழி. அவர்களால ஒடுக்கப்பட்டவுகளோடது ஒரு மொழி. பண்டித மொழி எப்பயுமே நிலத்தில கால் பாவாத சமாசாரங்களை பேசும். ஒடுக்கப்பட்டவுகளோட மொழி மண், மனிதனோட பிரச்சினைகளை பேசும்.

சரி வெடி வச்சாச்சு. வெடி சிரிப்புக்கு வழி பண்ணவேணாமா அதான்  நம்ம பங்குக்கு வலையுலக அகராதி
ப்ளாக் :
பத்திரிக்கை என்ற காதலியின் மடியில் இடம் கிடைக்காதவர்கள் அனுபவிக்கும் சுய இன்பம்
ப்ளாகர்:
பல  நேரம் தன் சொந்த ப்ளாகிலும் சில நேரம் அடுத்தவர் ப்ளாகிலும் அசிங்கம் பண்ணுபவர்
பதிவு:
கூட்டம் சேர்க்க காட்டப்படும்  செப்படி வித்தை (ஓவரா போனா செருப்படியும் கிடைக்கும்)
மறுமொழி இடுவோர்:
ப்ளாகரின் உழைப்பில் பெயர் தேடுவோர்
பார்ப்பனீயம்:
கடந்த காலத்தை மறைத்து நிகழ்காலத்தை மட்டும் பூதக்கண்ணாடியில் காட்டுவது
பெரியாரியம்:
நிகழ்கால வாய்ப்புகளை பயன்படுத்தி எதிர்காலத்தை பேசாது கடந்த காலத்தை மட்டுமே பேசி மாய்வது
பிரபல பதிவர்:
தனக்கென்று ஒரு கூட்டத்தை வைத்திருப்பவர்
ஈழம்:
புதுப்பட விமர்சனம் போல் பதிவுக்கு விஷயம் கிடைக்காத போதெல்லாம் கை கொடுப்பது
ராஜ பக்ஸே:
தமிழின துரோகங்களை , புலிகளின் தவறுகளை அழிக்க உதவும் ரப்பர் கட்டி

வலைப்பக்கத்தை பார்க்க அழைப்பு:
எத்தனை நாள் தான் என்னுத நானே பார்த்து இம்சை படறது நீங்களும் வந்து பாருங்களேன்

பதிவுக்கு ஓட்டு:
பரஸ்பர ஒப்பந்தம். எனக்கு நீ போடு உனக்கு நான் போடறேன்

Wednesday, May 19, 2010

XXX கமெண்ட்ஸ் போடற‌ பிகில் ரவுடிகளுக்கு

என் பதிவுகள் மீதான திருத்தங்கள், எதிர்வினைகள், விமர்சனங்களை எப்போதும் வரவேற்பவன் நான். ஜன்ய பாகங்களை பிரஸ்தாபித்தல், குடும்பத்திலான பெண்களின் கற்பை சந்தேகப்படுதல் போன்ற அம்சங்கள் நிறைந்த மறுமொழிகளை இடும் மண்டூகங்களுக்கு ஒரு சொல்.

கவிதை07 955 பதிவுகளை தாண்டி  10 மாதங்களில் ஒரு லட்சம் , இரண்டே மாதங்களில் 50 ஆயிரம் வருகைகளை பெற்று தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்திலிருந்து சரோஜா தேவி நாவல்  தனமான மறுமொழிகளை போட்ட பார்ட்டிகள் இருக்கவே இருக்கின்றனர்.

ஆனால்  நம்ம வலைபூவுல ஒரு சீசன்ல அலப்பறை பண்ண பார்ட்டி அந்த சீசனுக்கு அப்புறம் தலையே காட்டாம போனதை  கவனிங்க. அவிகளுக்கு என்ன ஆச்சு?

கை போச்சா, கால் போச்சா, பேச்சு விழுந்து போச்சா, என்னமோ ஆயிருச்சு. அதான் இந்த பக்கம் தலைய காட்டறதில்லை. இப்ப மேற்படி விதமான மறுமொழி போடற பிகில் ரவுடிகளுக்கு அவர்களின் வராகை (வருகைக்கு எதிபதம்னா) ஒரு பாடமானால் சந்தோஷம்.

நான் சொல்றதெல்லாம் தப்பாவே கூட இருக்கட்டும். (ஒரு பேச்சுக்குண்ணா) ஆனால் என் நோக்கத்துல ஒரு புனிதம் இருக்கு. மனிதகுல  நலத்தின் மேல் ஒரு அக்கறை இருக்கிறது. மலத்தின் மீது மட்டும் அக்கறை உள்ள அலப்பறை பார்ட்டிகள் த்த்தமது உடல் உறுப்புகளை பத்திரமாக பார்த்துக்கொள்வது நல்லது.

அனுபவம்ணா .. நம்ம வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டு எவனும் உருப்பட்டதே இல்லைண்ணா. அதுக கெட்டு நொந்து  நாசமா போயி  அதை பார்த்து நமக்கே மனசு கேட்காம அய்யோ பாவம்னு கடவுளுக்கு ப்ரே பண்ணா  கூட நோ சேஞ்ஜ்.

அதனாலதான் சொல்றேன். மரு மொழி வேண்டாம். மறுமொழி போடுங்க..

குறிப்பு:
பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவு  குறித்து என்னை வானளவு புகழ்ந்து எனக்கு வந்த பத்துக்கும் மேலான மெயில்களை ப்ளாகில் பிரசுரிக்க அவற்றை அனுப்பியவர்களின் அனுமதியை கேட்டிருக்கிறேன்.  

Monday, May 17, 2010

டாப் 10 பதிவுகள்

அண்ணே வணக்கம்ணே,


இன்னைக்கு முப்பெரும் விழா தான். டாப் டன் பதிவுகள் என்ற இந்த தனிப்பதிவோட பெண்களில் 9 வகை தொடர் பதிவோட இரண்டாவது அத்யாயம், பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி தொடரோட 9 ஆவது அத்யாயத்தையும் இன்னைக்கு போட்டிருக்கேன் .(ப)அடிச்சு தூள் கிளப்புங்க ..
 
சமீபத்தில் கமெண்ட்ஸ் குறைந்து போய் ( சுத்தமா இல்லாத போய்) விட்டதால் எனது நெட் ப்ரவுசிங் கோட்டாவில் பதினைந்து நிமிடம் மிச்சப்பட்டுவிட்டது. கமெண்ட்ஸ் எல்லாம் (ஒரு பத்து பனிரண்டு பேருடையது தவிர) ஜஸ்ட் எக்ஸிபிஷனிஸம் .அவரவர் மேதாவிலாசத்தை வெளிச்சமிடவோ அ மட்டம் தட்டவோ அ பாஸ் டைமுக்கு போடப்படுவதோதான். இதுக்கெல்லாம் பதில் சுட சுட அப்பத்திக்கப்பவே கொடுத்துரலாம்.




ஆனால் சமீப காலமா மெயில்களோட எண்ணிக்கை அதிகமாயிருச்சு. மெயிலுங்கறது பர்சனல் மேட்டர். இதுல ஈகோ இருக்காது, உண்மை இருக்கும். என் மேலயோ ,என் எழுத்து மேலயோ சனத்துக்கு ஏற்பட்டிருக்கிற ட்ரஸ்டை காட்டுது. இதுக்கெல்லாம் பதில் தரப்ப ரொம்ப சாக்கிரதையா பொறுப்பா தர வேண்டியிருக்கிறதால பென் ட்ரைவுக்கு காப்பி பண்ணிக்கிட்டு வீட்ல வந்துதான் ஆன்சர் பண்றது வழக்கம்.



ஆங் என்ன சொல்ல வந்தேன் நெட் ப்ரவுசிங் கோட்டால பதினைஞ்சு நிமிஷம் மிச்சமாயிருச்சு. இந்த நேரத்துலதான் கண்ட சைட்டையும் குடைய ஆரம்பிச்சேன். ஏதோ ஒரு சைட் என்னோட ஆயிரம் பதிவுகள்ள டாப் டென் பதிவு எதெதுன்னு ஒரு லிஸ்டை வச்சிருந்தது. அதை பார்த்ததுலருந்து ஒரு துடிப்பு. அதே சாதில ஏன் பதிவை போட்டு ஹிட்ஸை கூட்டக்கூடாது.



ஹிட்ஸ் கூடினா எனக்கு கிடைக்க போறது ஒன்னுமில்லை. கூகுல் ஆட் சென்ஸ் அன் சப்போர்ட்டட் லேங்குவேஜுங்கற பதிலையே தான் கொடுத்து க்கிட்டிருக்கு.என் வாழ்க்கைய தொலைச்சு தெரிஞ்சுக்கிட்டு நான் எழுதற விஷயங்களை (உலகத்துல வேற எங்கனயும் கிடைக்காதுங்கண்ணா) ஒரு நூறு இரு நூறு பேர் கூடுதலா படிக்க ஆரம்பிப்பாங்க.



என் டாப் டென் பதிவுகள் வருமாறு:



1.சாரு நிவேதிதா அவர்களே

2.அதல பாதாளத்துக்கு செக்ஸ் பவர்

3.எனது கண்டு பிடிப்புகள்

4.முன் பின் பிறவிகள்

5.என் ஐடியாவை சுட்ட ஆ.வி

6. பனிரண்டு ராசியினரின் குணங்கள்

7.ஒய்.எஸ்.ஆர் கொலை பின்னணியில் ஈ நாடு

8.பிராமணீயத்தால் அவாளுக்கே நஷ்டம்

9.பாலகுமாரன் எங்கே



என் விளக்கம்:

1.சாரு நிவேதிதா அவர்களே 5.என் ஐடியாவை சுட்ட ஆ.வி 9.பாலகுமாரன் எங்கே 7.ஒய்.எஸ்.ஆர் கொலை பின்னணியில் ஈ நாடு



இந்த 4 பதிவும் பிரபலமாக டாப் டென்னில் நிற்க ஒரே காரணம் பிரபலங்கள் பற்றி எழுதப்பட்ட பதிவுகள் என்பதே. சாரு நிவேதிதா அவர்களே பதிவு கொய்ட் பாசிட்டிவ். மத்த பதிவுகள் விமர்சன பூர்வமானவை.ஆக காய்ச்ச மரத்து மேல கல்லு போட்டா படிக்க ஆளிருக்கு.



எதிர்கால திட்டம்:

வெற்றிதான் முக்கியம். பதிவுகள் பிரபலமாகிறதுதான் முக்கியம்னா தன் ரசனையை வளர்த்துக் கொள்ளாமலே இருந்து என் பிற்கால கதைகளை பிரசுரத்துக்கு தேர்வு செய்யாத கே.பாக்யராஜ்,

என் கதைகளை பற்றிய முடிவுகளை அறிவிக்க தபால் செலவுக்கு அனுப்பிய ரூ.10 ஐ பெற்றுக்கொண்டும் முடிவு சொல்லாத ஆனந்த விகடன் ஆசிரியர்.

என் படைப்புகளை சுவற்றிலடித்த பந்தாக திருப்பியனுப்பிய கல்கி ஆசிரியர் பிற பிரபலங்களின் பெயர்கள் மட்டும் இங்கே...விள‌க்க‌ம் அவ்வப்போது தொடர உள்ள பதிவுகளில்.

ப்ரைம் பாயின்ட் சீனிவாசன்,எண்டமூரி வீரேந்திர நாத், ரஜினி காந்த், அவர் மனைவி லதா ரஜினிகாந்த்,ஆர்னிகா நாசர்,வாணியம்பாடி டாக்டர்(?) அக்பர் கௌசர்,எங்கள் முன்னாள் முதல்வர் சந்திரபாபு, இன்னாள் முதல்வர் , உங்கள் 'ஜெ' ,கலைஞர்,நக்கீரன் ஆசிரியர்,பா.ம.க. ராமதாசு,வாழைப்பாடி ,லோக் சபா சபாநாயகர்,திருமலை திருப்பதி தேவத்தானத்தார்,மதுரை மீனாட்சி கோவில் நிர்வாக அலுவலர், சென்னை வானொலி நிலையம், திருப்பதி எப்.எம்,கலியுக நாரதா,சைக்காலஜி டுடே ஆசிரியர்கள், நடிகர் கிருஷ்ணா, ஜனாதிபதிகள்,தலைமை நீதிபதிகள்,மானில முதல்வர்கள்,கவர்னர்கள்,பல நாட்டு பிரதமர்கள்,ஜனாதிபதிகள், என்.டி.ஆர் மகன் அரிகிருஷ்ணா,அவர் மகன் சின்ன என்.டி,ஆர்,லோக்கல் சாக்லெட்டு கம்பெனி,மணிமேகலை பிரசுரம்,லிப்கோ பதிப்பகம், ராஜமன்ட்ரி கொல்லப்பூடி வீராசாமி அன்ட் சன், வேதவியாசர் (புராண பார்ட்டி இல்லிங்கோவ்!) இவிக பத்தியெல்லாம் எழுதினா போதும். இவிக எப்படி ஆப்பு வச்சாய்ங்கனு விஸ்தாரமா எழுதலாம் அஃதாவது திட்டித்தீர்க்கலாம்.



"பனிரண்டு ராசியினரின் குணங்கள்" பதிவு சனங்களோட சோதிட நம்பிக்கையை மட்டும் காட்டலை. சக மனிதன் மேல இருக்கிற நம்பிக்கையின்மையையும் காட்டுது. எதிராளியை கணக்கு போட நிறைய ஃபார்முலா கைவசமிருக்கு அதையும் ஒரு கை பார்க்கலாம்ணா.



3.எனது கண்டு பிடிப்புகள் 4.முன் பின் பிறவிகள் இந்த 2 பதிவுகளும் சனத்துக்கு கடந்த காலம் கசந்து போச்சு. நிகழ்காலம் தீர்ந்து போச்சு. மாற்றத்தை விரும்பறாய்ங்கங்கற சங்கதியை காட்டுது. என் கண்டுபிடிப்புகளோட பட்டியல் ரொம்ப பெரிசு. நீங்க கடந்த பிறவில எந்த சாமிய வணங்கினிங்கனு கண்டுபிடிச்சு இந்த ஜன்மத்துல அதே சாமிய வணங்க வச்சு தூள் கிளப்ப வைக்கிற ஃபார்முலா ஒன்னு கைவசமிருக்குங்கண்ணா . இது நம்ம கண்டு பிடிப்பில்லை. ஒளிச்சு வைக்கப்பட்ட சமாசாரம்.



சரிங்கண்ணா கூடிய விரைவுல மேற்படி பதிவுகளையெல்லாம் நீங்க கவிதை07ல எதிர்பார்க்கலாம். எதை எழுத சொல்லி நிறைய பேர் கமெண்ட் மூலமா டிமாண்ட் பண்றிங்களோ அதையே எழுதறதா இருக்கேன். (அப்பாடா கமெண்ட் வர ஒரு வழி பண்ணியாச்சு)

Wednesday, February 17, 2010

பதிவர்களுக்கு ஒரு Super ஐடியா

"அது இருக்கும்போது இது இருக்காது இது இருக்கும்போது அது இருக்காது"ங்கற தியரி என் வாழ்வில் உடலுறவு விசயத்தில் உண்மையாகாவிட்டாலும் கம்ப்யூட்டர் விசயத்தில் உண்மையாகிவிட்டது. ஆம் பேப்பர் பேனா வைத்து எழுதிக்கொண்டிருந்த பொதிருந்த க்ரியேட்டிவிட்டி இப்போது ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். தற்போது நான் இந்த பதிவை தட்டச்சி கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் மூன்றாவது கம்ப்யூட்டர்.

இன்டர் நெட் சென்டரில் மணிக்கு பத்து ரூபாய் கொடுத்து தட்டச்சிய போதெல்லாம் கற்பனை ஊற்றாய் பெருகியது. இப்பவும் பெருகுது ட்ராஃபிக் ஜாம் கணக்கா எல்லா ஐடியாவும் ஒரே நேரத்துல வந்து முண்டியடிக்குது.

அதுக்கு ஒரு டெக்னிக் வச்சிருக்கேன். ப்ரபோசல்ஸ்னு தனியா ஒரு ஃபைல் போட்டுவச்சிருக்கேன்.உதிரியா வர்ர ஐடியாவை எல்லாம் அதுல லோட் பண்ணிருவன். அப்புறம் ஒன்னொண்ணா தட்டச்ச முயற்சி செய்வேன் .அப்படியும் புத்தி அலைபாயும். என்னடா இது நமக்கே சவ சவனு தோணூது. சனம் எங்கே படிக்க போவுதுனு தோணூம். படக்குனு அதை க்ளோஸ் பண்ணிட்டு அடுத்த ப்ரபோசலுக்கு போயிருவன். ( நாற்பதுல நாய் புத்தின்னா இதான் போலும்)

முதல் இரண்டு கம்ப்யூட்டர்களும் வந்து போன கதையையும், இந்த கம்ப்யூட்டர் வந்த கதையையும் சொன்னால் ஏறக்குறைய என் கதையை அதிலேயே அடக்கிவிடலாம். என் கதை என்பது பார்வையின் மறுபக்கம் சினிமாவோட ஸ்க்ரீன் ப்ளே மாதிரி ஒரு கோணத்தில் பார்த்தால் ஒரு சாதனையாளனின் கதை. மற்றொரு கோணத்தில் பார்த்தால் தோற்றுப்போனவனின் கதை.

சைக்காலஜி படி சொன்னால் 1987 வரை சேஃப்டி ஜோன்லயே காலத்தை கழிச்சேன். இடையிடையே சின்ன சின்ன வேலை நிறுத்தம், போராட்டம் இருந்திருக்கலாம். இருந்தாலும் சேஃப்டி ஜோன்லதான் இருந்தேன்.

1987 ல் ரெகுலர் லைஃபை சேஃப்டி ஜோனை விட்டவன் 2007 வரை ப்ரெட் ஹண்டர். நெம்பர் ஒன் என்ற அந்தஸ்து எனக்கேதும் புதிதல்ல. ஏற்கெனவே எனக்கு எந்த தகுதியும் இல்லாத போதே அதை இருபது வருடம் வரை அனுபவித்தவன் நான். பல காலத்துக்கு பின் டமிலர்ஸ் டாட்காம் தரும் ரேங்க் பட்டியலில் நெம்பர் ஒன் ஆனேன். இடைக்கால சொல்ல ஆரம்பித்தால் ஓடியே போவீர்கள் என்று தெரியும்.

எனவே மூன்று கம்ப்யூட்டர்களை பற்றி மட்டும் ஒரு தொடர் பதிவை போட உத்தேசம்.